Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

14 நாட்களுக்கான காலக்கெடு வீணடிக்கும் கால கேடா - ஜோர்ஜ் ஸடிபன்


போராட்டங்கள் வரவேற்கக்கூடியவை தான். இலக்கு ஒன்றினை எட்டுவதற்கு முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமானது இதய சுத்தியுடையதாகவும் அதே நேரம் உயிரோட்டம் உடையதாகவும் இருக்க வேண்டும். அதுவே நிலைபேரான வெற்றியும் திடமான நம்பிக்கையையும் உறுதிப்படுத்துவதாய் அமையும் எனினும்

தோட்டத் தொழிலாளர்களை பகடைக்காய்களாக வைத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சில்லறைத் தனமான சமகாலத்து செயற்பாடுகள், நடவடிக்கைகள் அனைத்தும் வரலாற்றில் இழிசொல்லுக்கு இடம் வைத்தே செல்கின்றன.

இன்றைய நிலையில் தோட்டத் தொழி லாளர்களின் பிரச்சினையானது அதி கார வர்க்கத்தின் கௌரவப் பிரச்சினையாகவே உருவெடுத்து நிற்கிறது. தொழிலாளர்கள் தமது விதியை நொந்து கொண்டு ஒருபுரம் ஒதுங்கியிருக்கையில் தொழிற்சங்க, அரசியல் தலைமைகளே அதிகாரப் போட்டியில் தூண்டிலில் மாட்டிக் கொண்டிருக்கின்றன.

கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து 14 மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த 14 மாதங்களில் மலையகத்தில் எந்தவொரு தொழிலாளியும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வாய்திறக்கவில்லை.

மலையகத் தலைமைகளின் மாய வலைக் குள் சிக்குண்டுள்ள அப்பாவித் தொழிலாளர்கள் இதைப்பற்றி சிந்திப்பதற்குக்கூட திராணியற்றவர்களாக இருந்து வருகின்றனர். நிலைமை இப்படியிருக்கையில் மலையகத்தில் எழுந்துள்ள அதிகாரப் போட்டி, அரசியல் இருப்பினை தக்கவைத்தலுக்கான தேவை, வரட்டுக் கௌரவம் என்று அனைத்து துர் மணங்களையும் சேமித்து வைத்திருக்கும் இத்தகைய தரப்பினரே தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.அது மாத்தி ரமின்றி 14 மாதங்கள் கடந்து விட்ட பின் னரும்கூட மேலும் 14 நாட்கள் கெடு விதிக் கப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி 14 நாட்களுக்கான காலக்கெடுவா அல்லது காலத்தை இழுத்தடித்து வீணடிக்கும் கால கேடா என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. ஏனெனில் 14 மாத கால மலையகத் தலை மைகளினதும் தொழிற்சங்களினதும் முன் னெடுப்புகள் அவ்வாறு சிந்திக்கின்றன. 1000 ரூபா சம்பளம் பெற்றுத் தரப்படும் என்று கூறியதும் அதற்குப் போட்டியாக 2500 ரூபாய் பெற்றுத்தருவோம் என்றும் அதாவது நாள் ஒன்றுக்கு 100 ரூபாவீதம் பெற்றுத் தருவோம் என்று கூறியதும் மலையகத்தின் அதிகார வர்க்கத்தினரேயாவர்.

1000 ருபா, 2000 ருபா என்ற கோரிக் கைகள் பாதகமில்லை என்கின்ற போதும் அதற்கான போராட்டங்கள் சாதகங்களை ஏற்படுத்தவில்லை. எல்லாமே மாயா மாயா என்றாகிவிட்டது. தோட்டத்தொழிலாளர்கள் தலைமைகள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்த போதி லும் மலையகத் அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளவில்லை.

1000 ரூபாவுக்கான நள்ளிரவுப் போராட்டத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடத்த பின்னர் மல்லியப்பு சந்தியில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் பதிலுக்கு போராட்டம் நடத்தியது. அதன் பின்னர் பாராளுமன்றத்தில் தீக்குளிப்பு என்று போராட்டம் கையொடிந்து போக இறுதியாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னாலும் சத்தியாக்கிரகம் என்றதொரு போராட்டம் நடத்தப்பட்டது. இப்படியான வரிசைக்கிரம அடிப்படையிலான போராட்டங்கள் சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில் எந்தளவு பேசப்பட்டதோ அதிலும் ஒருபடி மேலே சென்றுதான் கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணி யின் சத்தியாக்கிரகப் பேராட்டம் இன்று பேசப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கிறது.

தோட்டத் தொழிலாளருக்கு 100 ரூபா சம்பள அதிகரிப்பினைப் பெற்றுத் தருவதற்கென்ற வகையிலும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் என்ற ரீதியில் முன்னெடுக்கப்பட்டதான மேற்படி சத்தியாக்கிரகப் போரா ட்டம் கேளிக்கைப் போராட்டமாக மாற்றப்பட்டுவிட்டது.

உண்மையாகவே தோட்டத் தொழிலாளியின் நிலைமை உணரப்பட்டிருந்தால் உண்மையாகவே அவர்களுக்கு அதிகரித்த சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற இதய சுத்தியுடனான எண்ணம் இருந்திருந்தால் போராட்டமும் மெய்யானதாக இருந்திருக்கும்.

தோட்டத் தொழிலாளியின் வியர்வை மணம்கூட அறியாது தலை நகரிலே மையம் கொண்டிருப் போருக்கு போராட்டத்தின் தாற்பரியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அன்றைய தினம் ஒட்டு மொத்த மலையகமும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த விடயமானது தலைநகரிலே கூடுகின்ற தலைமைகள் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் எத்தகைய செய்தியைக் கொடுக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பே ஆகும்.

அதே போன்று தோட்டத் தொழிலாளர்க ளாகிய தமக்கு எத்தகைய ஆறுதலை இவர்கள் தரப்போகின்றனர் என்பதும் மக்களது எதிர்பார்ப்பாக இருந்தது. இருந்த போதிலும் அனைத்துக் கனவுகளையும் தவிடு பொடியாக்கிய போராட்டக்காரர்கள் தலை நகருக்கு சுற்றுலா வந்தது போன்று தங்களது கையடக்கத் தொலைபேசிகளினூடாக செல்பி எடுத்து அதாவது தனது கையடக்கத் தொலைபேசியில் தம்மையே படமெடுத்து அதனை முகப்புத்தகத்திலும் தரவிறக்கம் செய்து குதுகலம் கண்டதை காணமுடியும். செல்பி எடுப்பது உங்களது இஸ்டம் தான் அதனை மறுக்கவில்லை. ஆனால் உங்களுக்கு இஸ்டமானது மக்களுக்கு கஷ்டமாகி விட்டது.

தலைநகரில் முன்வைக்கப்பட்ட சம்பள அதிகரிப்புக்கான சத்தியாக்கிரகம் இறுதி யில் செல்பி கொண்டாட்டமாக தோற்றம் பெற்றது சகித்துக்கொள்ள முடியாததாகும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியைப் பொறு த்தவரை அதன் கடமை முடிந்து விட்டது. சொன்னபடி அதாவது திட்டமிட்டவாறு சத்தியாக்கிரகமும் நடந்து விட்டது. அதேபோன்று ஊடகங்களும் முன்னிலைப்படு த்தி செய்திகளாக பிரசுரித்து விட்டன. அந்த வகையில் அவர்களது கடமையும் பொறுப்பும் நிறைவேறி விட்டது என்ற ரீதியில் பெருமூச்சு விட்டவர்களாக சென்று விட்டனர்.

சத்தியாக்கிரகம் என்று கூறி செல்பி எடு த்து போராட்டத்தை கொச்சைப்படுத்திய தைப் போன்றல்லாது தோட்டத் தொழிலா ளர்களுக்கான சம்பள அதிகரிப்பினை விலியுறுத்துமாற்றையும் திருக்க முடியும்.

2500 ரூபா சம்பள அதிகரிப்பு என்பது தனியார் துறைக்கான அரசாங்கத்தின் பரிந்துரையாக இருந்து பின்னர் அது பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக தோற்றம் பெற்றது. தனியார் துறைக்கு 2500 ரூபாய் கொடுக்கப்பட்டதால் அவ்வாறு தோட்டத் தொழிலாளர்களுக்கும் 2500 ரூபா பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றே தமிழ் முற்போக்கு கூட்டணி கூறியது. இதனை தொழில் அமைச்சரும் ஏற்றுக் கொண்டவராக செயற்பட்டு எழுத்து மூலமல்லாத வாய்மொழி வழியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபா அதிகரித்த சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். எப்படி இருப்பினும் இது பாராளுமன்றத்தில் விடு க்கப்பட்ட அறிவிப்பு என்பதால் அது உத்தியோகபூர்வமானதாக ஏற்றுக் கொள்ள வேண்டியதொன்றாகி விட்டது.

எனினும் அமைச்சரால் அறிவிக்கப்பட்ட 100 ரூபா அதிகரித்த சம்பளம் இதுவரையிலும் தொழிலாளர்களை எட்டவில்லை.

இந்நிலையில்தான் பெப்ரவரி மாதத்தின் பிற்பகுதி அமர்வின் காலப்பகுதியில் தனி யார் துறைக்கான 2500 ரூபா அதிகரிப்பு சட்டமாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

நிலைமை இப்படியிருக்க இன்று பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன், பாராளு மன்ற உறுப்பினர்களான அறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், அரவிந்த குமார், வடிவேல் சுரேஷ், வேலுகுமார், திலகராஜ் ஆகியோர் இணைந்தோ அல்லது ஆலோசனைகளை மேற்கொண்டோ மேற்படி 2500 ரூபா சம்பள அதிகரிப்பு சட்டமாகியதில் திருத்தம் ஒன்றை மேற்கொண்டு அதில் தோட்டத் தொழிலாளர்களின் பங்கீட்டுத் தன்மையையும் வலியுறுத்தியிருக்க முடியும். இடையிட்டு மனுபிரேரணை ஒன்றை உட்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்க முடியாம் ஆனால் அது தவறவிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி நாட்டில் வாழ்க்கைச் செலவு யாவருக்கும் சமமானது என்ற காரணத்தை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றையோ அல்லது ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றையோ கொண்டு வந்திருக்க முடியும்.

இப்போது தான் பாராளுமன்றத்தில் மலையகம் பற்றி பேசப்படுவதாக அடிக்கடி ஞாபக மூட்டும் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ், வேலுகுமார் ஆகியோர் ஏன் இது பற்றி சிந்திக்கவில்லை என்பதற்று அவர்கள் பதில்கூற கடமைப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசை யும் ஆறுமுகன் தொண்டமானையும் வம்புக்கு இழுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் இதுபற்றி ஆலோசனை வழங்கியிருக்கலாமே.

அதிகமான அதேநேரம் போதுமான பாரா ளுமன்ற உறுப்பினர்களையும் மூன்று அமைச்சர்களையும் கொண்டிருக்கும் மலையகம் சார்பில் பாராளுமன்றத்துக்குள் சாதித்துக்கொள்வதற்கான சாதகத்தன்மைகள் காணப்படுகின்ற போதிலும் அதனை சாணக்கியமாகச் சாதித்துக் கொள்ளாது வெறுமனே ஊடகங்களுக்காக போராட்டம் என்று கூறி பேயாட்டம் காட்ட நினைப்பது அருவருக்கத் தக்கதானது.

அதிகமான அமைச்சுப்பதவிகள், உறுப்பினர்கள் என்பதெல்லாம் மக்களுக்காகவே ஆகும். இத்தகைய பதவிகளைக் கொண்டு மக்களின் குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும். மாறாக கையில் அதிகாரங்களை வைத்துக் கொண்டு சம்பந்தமே இல்லாதோரை ஆர்ப்பாட்டக் களத்தில் இறக்கிவிடுவதும் அப்பாவித் தொழிலாளர்களை வருமானம் இழக்கச் செய்து வீதிக்கு இழுப்பதும் கிடைக்கப்பெற்றிருக்கும் அதிகாரத்துக்கு நாகரிகமற்றது என்றே கூற வேண்டும்.

பாராளுமன்றம் அங்கீகரித்தால் தற்போதுள்ள தோட்டத் தொழிலாளர்களினதும் அவர்களது தொழிற் துறையினையும் மாற்றியமைக்க முடியும். இன்று தோட்டங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்ற கம்பனிகளையும் விரட்டியடிக்க முடி யும். அதற்கு மலையகத் தலைமைகளின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள், முன்னெடுப்புகள் அவசியமாகின்றன.

இன்று மலையகத்தைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியிலான வெட்டுக் குத்தும், சச்சரவுமே மலிந்து கிடக்கின்றன. இந்நிலைமை மாறவேண்டும். மிக விரைவிலேயே பெருந்தோட்டங்களை நிருவகிக் கும் கம்பனிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை அளிப்பதற்கு அரசாங்கம் தயாராகிக் கொண்டிருக்கின்றது.

மலையகத்தின் அனைத்து பெருந்தோட்ட ங்களையும் பொறுப்பேற்கும் அளவில் இரு செல்வந்த நாடுகள் முன்வந்திருப்பதாக அரசாங்கத்தின் பொறுப்பு மிக்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையானது இன்றைய பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு மாத்திரமின்றி மலையக அரசியல் வாதிகளுக்கும் வயிற் றில் புளியை கரைப்பது போலாகப்போவது உறுதிதான்.

மலையகத் தலைமைகளே! மலையக அரசியல் வாதிகளே! உங்களைப் போன்று உள்நாவில் ஒன்றும் வெளிநாவில் வெறொன்றும் என்று மாறிப்பேசும் வல்ல மையை அப்பாவித் தொழிலாளர்கள் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஏமாற்றமடைந்ததும் போதும். அவர்களை ஏமாற்றியதும் போதும். எனவே உங்களால் ஆனதை சொல்லுங்கள். முடிந்ததைச் செய்யுங்கள் வீம்புக்காக கதையளந்து பின்னர் திக்குமுக்காடிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

இதனூடாக இன்னொன்றையும் கூறி வைக்க வேண்டும். உங்களால் முடியாத ஒன்றைப் பெறுவதற்கு தோட்டத் தொழி லாளர்களை இழுத்து தெருவில் விடுவத ற்கு நினைக்க வேண்டாம்.

விபரித்துக் கூறுவதென்றால் தொட்ட தெற்கெல்லாம் மலையகத்தின் ஒட்டு மொத்த தொழிலாளர்களையும் அணிதிரட்டி வீதியில் இறக்கி போராட்டம் நடத்துவோம் என்ற அழகான பசப்பு வார்த்தையை இனி யேனும் பிரயோகிக்காதிருங்கள் ஏனெ னில் அவர்களை வீதிக்கு இழுப்பதால் உங்களுக்கு ஒன்றும் ஆகிவிடாது. மாறாக அவர்களின் வேலையும் இழந்து வருமா னமும் இழக்கப்படுகிறது. இது பாவச் செயலாகும்.

மலையகத்தின் இளைஞர்யுவதிகளே! சம காலத்து நிலைவரங்கள் தொடர்பில் விழி ப்பாக இருங்கள்.கண்மூடிகளாகவும் குருடர்களாகவும் ஊமைகளாகவும் இருக்கத் துணியாதீர்கள்.எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்ற வாக்கினைப் போல் நாளைய மலையகம் இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது. ஆக்கபூர்வமான காரியங்களில் தலையீடு செய்யுங்கள். வளமானதை பெருகச் செய்யுங்கள். நஞ் சானதை முளையிலேயே கிள்ளி எறியு ங்கள். சிந்தித்துச் செயலாற்றுங்கள்.


நன்றி - வீரகேசரி

கம்பனிகள் பிடிவாதம்; தொழிற்சங்கங்கள் போராட்டம் - என். நெடுஞ்செழியன் படம்: எம்.எஸ். சலீம்


தோட்டத்தொழிலாளர்களுக்கும் 2500 ரூபா கொடுப்பனவை வழங்க வேண்டுமென்று அரசாங்கம் அறிவித்தும் அதனை வழங்குவதற்கு பெருந்தோட்டக் கம்பனிகள் முன்வரவில்லை. இது அரசாங்க சார்பு மலையக அமைச்சர்களை இக்கட்டான நிலைக்குத்தள்ளியுள்ளது.


கடந்த வரவு செலவுத் திட்டத்தின் போது அரசாங்கத்தினால் தனியார்துறை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட 2500 ரூபா கொடுப்பனவை தோட்டத்தொழிலாளர்களுக்கும் வழங்க வேண்டுமென்று அறிவித்திருந்தது.
அத்துடன் 2500 ரூபாவை கட்டாயம் வழங்க வேண்டுமென்று வலியுறுத்தும் சட்டம் பாராளுமன்றத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தக் கொடுப்பனவு 2016 ஜனவரி முதல் வழங்கப்படுமெனக் கூறப்பட்டது. பின்னர் ஏப்ரல் மாத சம்பளத்துடன் தோட்டக்கம்பனிகள் வழங்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் இதுவரை வழங்கப்படவில்லை.

தோட்டத்தொழிலாளருக்கு கூட்டு ஒப்பந்தம் மூலம் வழங்கப்பட வேண்டிய சம்பள உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தை இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையிலேயே அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 2500 ரூபாவை இடைக்கால நிவாரணமாக நாளொன்றுக்கு 100 ரூபா வீதம் வழங்கப்பட வேண்டுமென்று கோரிக்கை முன்வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக பல்வேறு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றன. ஆனால் எதுவும் நடைபெறவில்லை.

இந்த நிலையில் கடந்த 20 ஆம் திகதி மாலை அலரி மாளிகையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. பிரதமர் ரணில் தலைமையில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில் தமிழ் முற்போக்கு கூட்டணித்தலைவர்களான மனோகணேசன், பி.திகாம்பரம், வே.இராதாகிருஷ்ணன், தொழில் அமைச்சர் ஜோன் செனவிரத்ன, கூட்டு ஒப்பந்த தொழிற்சங்க பிரதிநிதிகள், தோட்டக் கம்பனிகளின் பிரதிநிதிகள் மற்றும் தொழில் ஆணையாளர் ஆகியோர் கலந்து கொண்டனர். அந்தக்`கூட்டத்தில் எந்தவிதமான தீர்மானமும் எட்டப்படவில்லை. இதனைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை மற்றுமொரு கூட்டம் நடைபெற ஏற்பாடாகி இருந்தது.

2500 ரூபா கொடுப்பனவு வழங்கப்படா விட்டால் இம்மாதம் 25 ஆம் திகதி முதல் வேலைநிறுத்தப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தமிழ் முற்போக்கு கூட்டணி கடந்த முதலாம் திகதி தலவாக்கலையில் நடைபெற்ற மே தினக்கூட்டத்தில் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்தக்காலப்பகுதியில் பல பேச்சுவார்த்தைகளும் இடம்பெற்றன. அத்துடன் தமிழ் முற்போக்குக் கூட்டணியால் கடந்த 24 ஆம் திகதி வரை முதலாளிமார் சம்மேளனத்துக்கு காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது.

இதன் ஒரு கட்டமாகவே கடந்த செவ்வாய்க்கிழமை 24 ஆம் திகதி பிரதமர் தலைமையில் ஒரு பேச்சுவார்த்தை நடைபெறுவதற்கு ஏற்பாடாகி இருந்தது. இந்தப் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. முதலாளிமார் சம்மேளனம் தம்மிடம் போதிய நிதி இல்லையென்றும் எனவே 2500 ரூபா வழங்க முடியாத நிலையிலுள்ளதாகவும் தெரிவித்து வந்தது. எனினும் கடன் பெற்றாவது தொழிலாளருக்கு நாளொன்றுக்கு 100 ரூபா வீதம் மாதமொன்றுக்கு 2500 ரூபாவை வழங்குமாறு முதலாளிமார் சம்மேளனத்துக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளதாக தெரிய வருகிறது.

ஆனால் கம்பனிகள் பிடிவாதமாக உள்ளதுடன் அரசின் சிபாரிசை ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்தே தோட்டத்தொழிலாளர்களுக்கு நியாயமான முறையில் கிடைக்க வேண்டிய சம்பள அதிகரிப்பை வலியுறுத்தியும் முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் கடந்த வியாழனன்று கொழும்பு கோட்டை ரயில் நிலையம் முன்பாக சத்தியாக்கிர ஆர்ப்பாட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஏற்கனவே தோட்டத்தொழிலாளர்களின் வேலை நிறுத்தப்போட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

ஆனால் தோட்டத்தொழிலாளர்களின் பொருளாதார நிலையை கருத்திற்கொண்டு அவர்களை மேலும் பொருளாதார சிரமங்களுக்கு உள்ளாக்குவதை தவிர்ப்பதற்காகவுமே அந்த திட்டம் கைவிடப்பட்டதாக தமிழ் முற்போக்குக்கூட்டணியின் முக்கியஸ்தர் ஒருவர் கூறினார்.
வியாழனன்று கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர். எனினும், இந்த ஆர்ப்பாட்டம் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மற்றும் அரசாங்கத்திடம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பது ஒருபுறம் இருக்க, தொழிலாளருக்கு நியாயமான முறையில் வழங்கப்பட வேண்டிய 2500 ரூபா கொடுப்பனவை மேலும் தாமதம் செய்யாமல் உடனடியாக வழங்க வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

இதில் கலந்து கொண்ட தமிழ் முற்போக்குக் கூட்டணித் தலைவர்கள், தோட்டக்கம்பனிகளுக்கு மேலும் 14 நாட்கள் காலக்கெடு ஒன்றை விதித்துள்ளனர்.

இந்த 14 நாட்களுக்குள் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் 2500 ரூபா கொடுப்பனவை வழங்கவேண்டும்.

அவ்வாறு வழங்கப்படாவிட்டால் 14நாள் காலக்கெடுவின் இறுதியில் தோட்டத்தொழிலாளர்கள் பெரும் போராட்டத்தில் ஈடுபடுவர்.
இப்போராட்டத்தில் தோட்டத்தொழிலாளர்கள் மட்டுமன்றி நாட்டிலுள்ள ஏனைய அரச துறை, பொதுத்துறை ஊழியர்களும் இந்தப்போராட்டத்தில் கலந்துகொள்வர் என்று தெரிவித்தனர்.

வியாழனன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனத்திடம் எவ்வாறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஒருபுறமிருக்க மீண்டும் ஒரு காலக்கெடுவை தமிழ்முற்போக்கு கூட்டணி முதலாளிமார் சம்மேளனத்துக்கு விதித்துள்ளமை அதன் இயலாமையை வெளிப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.

2500ரூபாவை தோட்டத்தொழிலாளருக்கு கட்டாயம் வழங்க வேண்டுமென்று பாராளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டதுடன் வர்த்தமானியிலும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அதனை வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் பிடிவாதமாக மறுப்பதேன்?

முதலாளிமார் சம்மேளனத்திற்கு சட்டரீதியாக சாதகமாகவுள்ள பிடிமானம் என்ன? அரசாங்கத்தின் உத்தரவை மறுதலிக்கும் வகையிலான அந்த சட்ட அனுகூலத்தை ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க தமிழ்முற்போக்குக் கூட்டணி சிந்திக்காதது ஏன்?

தொடர்ந்தும் தோட்டத்தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டங்களில் ஈடுபடவேண்டுமா? தீர்வு எப்போது?

நன்றி - veerakesari

அணைந்த செந் நட்சத்திரம் தோழர் தயா வன்னியாராச்சி – என்.சரவணன்


மக்கள் விடுதலை முன்னணியின் (ஜே.வி.பி) மூத்த தலைவர்களில் ஒருவரான தோழர் தயா வன்னி ஆராச்சி அவரது 68 வது வயதில் இயற்கை எய்துள்ளார். 1978 இல் நடத்தப்பட்ட ஜே.வி.பியின் முதலாவது பொது மாநாட்டின் போது பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டவர் தோழர் தயா வன்னி ஆராச்சி அவர்கள். 

ஜே.வி.பியின் பொது மாநாட்டின் போது உறுப்பினர்களின் அனுமதியுடன் முதலாவது தடவையாக தெரிவுசெய்யப்பட்டவர் அவர். 1968 இல் வீரகெட்டிய மத்திய மகா வித்தியாலயத்தில் மாணவராக கல்வி கற்றுக்கொண்டிருக்கும் போதெ ஜே.வி.பியுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கிவிட்டார்.

காமினி பாஸ், விஜேதாச லியனாராச்சி, பேண்டிஸ் அபேகுணவர்த்தன, தஹநாயக்க போன்ற ஜே.வி.பி தலைவர்களுடன் நெருங்கி பணியாற்றத் தொடங்கிய காலம் அது. 1971 ஜே.வி.பி கிளர்ச்சி மோசமாக நசுக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டும், காதுக்கும் உள்ளானார்கள். தோழர் தயா லியனாராச்சி தவறை இறுதிவரை ஒத்துக்கொள்ளாததால் குற்ற விசாரணை ஆணைக்குழுவினால் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு தண்டனை அனுபவித்தார். அதுமட்டுமன்றி சிறைக்குள் நிகழ்ந்த அரசியல் தயாரிப்புப் பணிகளிலும் பங்காற்றியவர். 6 ஆண்டுகளுக்குப் பின்னர் 1977 நவம்பர் மாதம் அவர் விடுதலையானார். விடுதலையானதும் தனது குடும்பப் பொறுப்பின் காரணமாக கொழும்பு புறக்கோட்டையில் மூட்டை தூக்கும் தொழிலைச் செய்தார். அவரது இரு சகோதரர்கள் ஜே.வி.பிக்காக கிளர்ச்சியின் போது பலியானார்கள். மீண்டும் இரண்டாவது கிளர்ச்சியின் போது அடுத்த இரு சகோதரர்கள் இரண்டு ஆண்டுகால சிறையனுபவித்தார்கள். 1977இல் மீண்டும் ஜே.வி.பியை கட்டியெழுப்பும் பணியில் தலைமை தாங்கியவர்களும் தய வன்னியாராச்சியும் ஒருவர். அதன் தற்காலிக பொதுச்செயலாளராக பணியாற்றிய உபதிஸ்ஸ கமனாயக்கவிற்குப் பின்னர் தோழர் தயா 1978 இல் பொதுச்செயலாளராக தெரிவானார். பல சந்தர்ப்பங்களில் ஜே.வி.பி தமது செயலாளராக ஒருவரை வெளியில் அறிமுகபடுத்தி செயலாற்றுகின்ற போதும் இரகசிய செயலாளராக வேறொருவர் அக்கட்சிக்குள் செயல்படுவது பரகசியம். அப்படி இரகசிய செயலாளராகவும் தோழர் தயா வன்னியாராச்சி குறிப்பிட்ட காலம் இருந்து வந்தார் என்றும் தெரியவருகிறது.

1983 கலவரத்தைத் தொடர்ந்து ஜே.ஆர். அரசாங்கம் ஜே.வி.பி.யை தடை செய்தது. அந்தத் தடையோடு ஜே.வி.பி தலைமறைவு, இரகசிய அரசியலுக்கு தள்ளப்பட்டது. அத்தோடு தயா வன்னியாராச்சி முழுநேர அரசியலிலிருந்து ஒதுங்கி ஒரு ஆங்கில ஆசிரியராக கடமையாற்றத் தொடங்கினார். இறுதி வரை ஒரு ஆங்கில ஆசிரியராகவே பணியாற்றியபோதும், அவரது கடந்த கால அரசியலின் காரணமாக மாறி மாறி வந்த அரசாங்கங்கள் அவரை சந்தேகத்துடனே பார்த்ததுடன் அரசியல் பழிவாங்கலுக்கும் உள்ளானார். 1987-1989 ஜே.வி.பி கிளர்ச்சியின் போது அவரை கைது செய்து இரகசிய முகாமில் தடுத்து வைத்தது அரசாங்கம். ஆனால் எந்த குற்றச்சாட்டையும் பதிவு செய்ய முடியாத நிலையில் அவரை விடுவித்தது.

அவரது சகோதரர் வன்னிஆராச்சி பி.பி.சிக்கு அளித்த பேட்டியில் “சிறையில் இருந்த காலத்தில் அண்ணனுக்கும், சோமவன்சவுக்கும் விஜேவீர குழாய் வழியாக ஸ்பானிஸ் மொழி கற்றுகொடுத்ததாக கூறுவார். அவருக்கு 11 மொழிகள் தெரிந்திருந்தது.” என்கிறார்.

ராஜபக்ஷ அரசாங்கத்தை தூக்கியெறிவதற்கான அரசியல் பணியில் கடந்த காலங்களில் தனது முன்னாள் தோழர்களுடன் இணைந்து உழைத்திருந்தார். தனது இறுதிக் காலங்களில் முன்னிலை சோஷலிச கட்சியுடன் அவர் நெருக்கமாக இருந்தார்.

அன்றைய ஜே.வி.பி பல தடவைகள் பிளவுண்டு பல்வேறு இயக்கங்களாக ஆன போதிலும் அந்த சகல இயக்கங்களாலும் மதிக்கப்படும் ஒருவராக தோழர் தயா வன்னியாராச்சி திகழ்கிறார் என்றே கூற வேண்டும். ஜே.வி.பி மட்டுமன்றி ஏனைய இடதுசாரி இயக்கங்களாலும் மதிக்கப்படுபவர் அவர்.
 

நன்றி - தினக்குரல்

மலையகத் தமிழ் மக்கள் இலங்கையில் இரண்டாவது தேசியமாக திகழ்ந்தனர் - அ.லோரன்ஸ்


இன்று வடக்கு கிழக்குத் தமிழ் மக்களினதும் முஸ்லிம் மக்களினதும் பிரச்சினை முனைப்பாக காணப்படுகின்றது. தேசிய ரீதியில் மாத்திரமல்ல, சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது. இப்பிரச்சினையைத் தீர்க்கும்படி சர்வதேசச் சமூகங்கள் வலியுறுத்தும் அளவிற்கு நிலைமை வளர்ச்சியடைந்துள்ளது. பல தசாப்தங்களாக இழுபடும் இப்பிரச்சினை வடக்கு கிழக்கு மக்களினதும் தனித்துவம் அங்கீகரிக்கப்படுவதன் மூலம், அவர்களுக்கான அதிகாரப் பரவலாக்கல் அலகினை ஏற்படுத்துவதன் மூலம, அவர்களது சுய நிர்ணய உரிமை அங்கிகரீக்கப்பட்டு அம்மக்களின் அபிலாசைகளுக்கு ஏற்பத் தீர்த்து வைக்கப்பட வேண்டும். அதே நேரத்தில் மலையக மக்களின் பிரச்சினை தற்போது முனைப்பாக இல்லாதபடியால, அதனைப் புறக்கணிப்பது, நீண்ட கால நோக்கில் சிக்கலை ஏற்படுத்துவதாக அமையும்.

அவர்கள் அடிப்படை உரிமைகள் புறக்கணிக்கப்பட்ட நிலையிலேயே வாழ்கிறார்கள். அவர்களின் கைகளால் உருவாக்கப்பட்ட மலையகத்திலேயே அவர்கள் அந்நியமாக்கப்பட்டுள்ளார்கள். ஓரங்குல நிலம் தானும் வழங்கப்படாததன் மூலம் அவர்கள் உருவாக்கிய மலையகத்திலேயே ஒரு சிறுவிட் டைத் தானும் சொந்தமாக வைத்திருக்கும் அடிப்படை உரிமையை இலங்கையில் இதுவரை காலமும் மாறி மாறி வந்த அரசாங்கங்களும், அரசும் வழங்காதொழித்துள்ளது. அது மட்டுமன்றி 1948ஆம் ஆண்டு பிரஜாவுரிமைச் சட்டம் இந்நாட்டில் வாழ்வதற்கிருந்த உரிமையைப் பறித்துவிட்டது.

இந்த உரிமைப் பறிப்பு, இன்றுவரையில் நவீனபாணியில், இவர்களை ஒரு அடிமை நிலையில், அடிப்படையுரிமைகள் இழந்த நிலையில் வைத்துள்ளது. இலங்கையின் சனத்தொகைப் புள்ளி விபரங்களை எடுத்து நோக்கும் போது, மலையக மக்கள் இந்நாட்டின் ஏனைய தேசிய இனங்களைவிட, சனத்தொகை அடிப்படையில் இரண்டாம் நிலையில் இருந்துள்ளார்கள். இந்த நிலைமை திட்டமிட்ட குடியேற்றங் களாலும், மற்றும் பல்வேறு குடியுரிமை ஒப்பந்தங்களாலும் தேசிய இனங்களின் கடைசி ஸ்தாபனத்திற்கும் அவர்களை தள்ளிவிட்டது. இது அவர்களை இந்த நாட்டின் தேசிய இனமாக அங்கீகரிக்க வேண்டிவரும், என்று எதிர்பார்த்து திட்டமிட்ட தேசிய இனமாக வளராமல், தடுப்பதற்கான கபட நாடகமாகும்.

புள்ளி விபர அட்டவணை Il மலையகத் தமிழ் மக்கள் 1881 ஆம் ஆண்டிலிருந்து 1931 வரை பெரும்பான்மைத் தேசிய இனமாகிய சிங்கள மக்களுக்கு அடுத்து பெரும்பான்மையாக வாழ்வதைச் சுட்டிக் காட்டுகிறது. 1953இலிருந்து 1971ம் ஆண்டு வரை மலையக மக்கள், முஸ்லிம் மக்களை விட ஜனத்தொகையில் கூடுதலாக இருந்ததன் மூலம் இலங்கையின் மூன்றாவது தேசிய இனமாக வாழ்ந்துவந்தனர். 1981 புள்ளி விபரத்தின்படி பல திட்டமிட்ட ஆள் கடத்தல் ஒப்பந்தங்கள் மூலம் திட்டமிடப்பட்ட குடியேற்றங்கள் மூலம் 5.5 சதவீதம் என்ற அடிப்படையில் இலங்கையில் 4வது நிலையிலுள்ள தேசிய இனம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இது ஒரு வகையான திட்டமிடப்பட்ட இன ஒழிப்பு நடவடிக்கை என்றே கூறவேண்டும். இந்த மக்கள் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டதன் மூலமும், நாடு கடத்தல் மற்றும் பல்வேறு ஒப்பந்தங்கள் மூலமும் அரச முன்னின்று நடத்திய திட்டமிட்ட குடியேற்றங்கள் மூலமும் இனரீதியாகவும், பிரதேச ரீதியாகவும், இவர்களது பலம் குறைக்கப்பட்டுள்ளது.

"மலையகம் : சமகால அரசியல் - அரசியல்" தீர்வு நூலில் இருந்து நன்றியுடன்

"மலையகக் குருவி" இணையத்தளத்தின் புனைவின் நோக்கம்! - என்.சரவணன்

மலையகக் குருவி நண்பர்களே!
“ஷெல்பி எடுப்பது உங்கள் இஸ்டம் ஆனால் மக்களுக்கோ அது கஷ்டம்..ஊடகவியலாளர் சரவண நடராசா” என்கிற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருக்கிறீர்கள். இது மிகவும் தவறான ஊடக முன்னுதாரணம் நண்பர்களே.
அப்படி ஒரு கருத்தை நான் வெளியிட்டதில்லை. செய்தியிடுவதில் உள்ள அவசரத்தில் நீங்கள் பல தவறுகளை விட்டுள்ளீர்கள் என்பதை அடையாளம் காணக்கூடியதாக உள்ளது.


முகநூலில் இருந்து எடுக்கப்பட்டிருந்த மூலம்
 • -    அந்த தலைப்பிலான கட்டுரை வீரகேசரியில் வெளியாகியிருந்த ஒன்று. அதனை நமதுமலையகம் நன்றியுடன் வெளியிட்டிருந்தது. நமது மலையகத்திலிருந்து அந்த கட்டுரையை எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தேன். அக்கட்டுரையில் இருந்த ஒரு சில வரிகளை // என்கிற மேற்கோளுடனேயே பகிர்ந்தேருந்தேன். அப்படியிருக்க அந்த மேற்கோளோ, அந்த கட்டுரையின் தலைப்போ, கட்டுரையின் மூலத்தையோ, அதனை எழுதியவரையோ பற்றி அலட்டிக்கொள்ளாதது அதிர்ச்சியளிக்கிறது. ஊடகங்களுக்கோ ஊடகவியலாளர்களுக்கோ இருக்கக்கூடாத அலட்சியம் இது. பொறுப்புணர்ச்சி மீது சந்தேகம்கொள்ளவைக்கும் செயல் இது.

 • -    இன்னொருவர் வெளியிட்ட கருத்தை எனது கருத்தை நான் களவாடியதாக ஆகிவிடுவது மட்டுமல்ல. அந்த கருத்து என் கருத்தாகவும் அர்த்தப்படுத்திவிடும்.

 • -    கூடவே நான் கூறாத என் கருத்தை எனது படத்துடன் பகிர்ந்திருக்கிறீர்கள். என்ன நியாயம். (மேலும் எனது பெயர் "சரவண" இல்லை. "சரவணன்" )

 • -    அதையே உங்கள் முகநூல் பக்கத்திலும் பகிர்ந்திருக்கிறீர்கள். அதற்கு பலர் லைக் இட்டு சென்றுள்ளனர். சிலர் அதனை பகிர்ந்துள்ளனனர். இது அபத்தம் இல்லையா.

 • -    குறிப்பிட்ட அந்த “சம்பளப் போராட்டம்” குறித்து எனக்கு தனிப்பட்ட வேறு கருத்துக்களும் விமர்சனங்களும் உண்டு. அதனை நான் உடனடியாக வெளியாடததற்குக் காரணம் அது குறித்து நீண்ட விமர்சனம் எழுத வேண்டியிருக்கும். அதற்கு உரிய நேரம், உழைப்பு, சக்தியை செலவிட உடனடியாக தயாரில்லாதது தான். மேலும் அப்படி எழுதும் பட்சத்தில் வெளிவரும் வாதங்களுக்கு பொறுப்புடன் பதிலளிக்கும் கடப்பாடும் என் மீது விழுந்துவிடும். அதனை எதிர்கொள்வதற்கான நேரமும், சக்தியும் என்னிடம் இப்போது இல்லை. எனவே ஒதுங்கி நின்று அவதானித்து வந்தேன்.
சமகால ஊடககங்கள் தமது internet traffic, rank, rate என்பவற்றை அதிகரிப்பதர்காகப் படும் பாட்டை நான் அவதானித்தே வருகிறேன். பரபரப்பையும், கிளுகிளுப்பையும் ஏற்படுத்துவதற்காக எத்தகைய ஊடக விபச்சாரத்தையும் செய்யத் தயாராக பலர் இன்று இணையத்தள ஊடகங்களை தொடங்கியுள்ளனர். எந்த ஊடக தர்மமுமற்ற, போதிய ஊடக அனுபவமுமற்ற, சமூக பொறுப்பற்ற, வெறும் வர்த்தக நோக்கங்களுக்காக எதனையும் விற்கத் துணிந்த அற்ப இணையத்தளங்களை நாளாந்தம் கண்டு கடந்து வருகிறோம்.

நண்பர்களே “மலையகக் குருவி” யை ஒரு தோழமை இணையத்தளமாவே கருதி வருகிறேன். மலையகத்துக்கான பல நூற்றுக்கணக்கான இணையத்தளங்களின் தேவையை நான் வலியுறுத்தியே வருகிறேன். அவற்றில் பொறுப்பு மிகுந்த ஊடகங்களுடன் நான் தோழமை உணர்வுடன் ஒத்துழைத்தும் வருகிறேன். இப்படி ஒரு செய்தியை வெளியிட்டதன் பின்னணியில் ஏதும் காழ்ப்போ, சதியோ இருக்காது என்பது என் நம்பிக்கை. ஒரு ஊடகவியலாளனாக “மலையகக் குருவி” யில் காணப்பட்ட சில சிக்கல்களையும் உங்களில் ஒருவருடன் சுட்டிக்காட்டியுமுள்ளேன். ஆனால் நீங்களும் மூன்றாம்தர செய்தித் தளங்கள் என்கிற பெயரை எடுத்து விடாதபடி இருப்பது முக்கியம் என்பது எனது அவா. 

இந்த மறுப்பை "மலையகக் குருவி"யில் நீங்கள் வெளியிட்டு. குறித்த செய்தியையும் நீக்கும்படி தோழமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

-என்.சரவணன்

இராமநாதன் : விருப்பும் வெறுப்பும்! (1915 கண்டி கலகம் –35) - என்.சரவணன்

சேர் பொன் இராமநாதன் தனது இறுதிக் காலங்களில்

சேர் பொன்னம்பலம் இராமநாதன் குறித்த கருத்துருவாக்கம் மூன்று இலங்கையின் பிரதான மூன்று இனங்கள் மத்தியிலும் மூன்று வெவ்வேறு விதங்களிலேயே நிறுவப்பட்டுள்ளதை அவதானிக்க முடியும். ஒரு புறத்தில் “இலங்கை தேசியத்தை: கட்டியெழுப்புவதில் அவரது பாத்திரத்தை மெச்சுகின்ற போதும் மறுபுறம் அவரை சிங்களவர்களுக்கு எதிரானவராக நிறுவும் போக்கையும் காணக்கூடியதாக இருக்கிறது. முஸ்லிம் தரப்பிலும் அவரைத் தமக்கு எதிரானவராக நிறுவும் போக்கைப் பற்றிய கணிசமான காரணிகளைக் சென்ற வாரம் கவனித்தோம்.

இராமநாதனின் வர்க்க பின்புலம்
இராமநாதன் அவரது 23வது வயது காலங்களில் மிகவும் தாராளவாத கருத்துக்களைக் கொண்டிருந்தார் என்றும் நியாயமான மனிதராக இருந்தார் என்றும் அது பிற்காலத்தில் எவ்வாறு மாறியது என்பது குறித்தும் குமாரி ஜெயவர்தனா தனது “Nobodies to somebodies” என்கிற நூலில் விபரிக்கிறார். “அவரது முதிர்ச்சியான காலத்தில் அவர் ஒரு பழமைவாதியாக ஆனார். 20 ஆம் நூற்றாண்டின் ஜனநாயகப் போக்கோடு ஓட்டிச் செல்ல அவரால் இயலாது போனது.... ஆனால் அவரது சகோதரர் அருணாசலம் சிறந்த லிபரல்வாதியாக ஆரம்பித்து இருந்து இறுதியில் ஒரு ரெடிகல்வாதியாக ஆனார்” என்கிறார் அவர்.

1920-1930 காலப்பகுதியில் யாழ்ப்பாண பள்ளிக்கூடங்களில் சாதியமைப்பையும், படிநிலையையும் புறக்கணித்த மாணவர்களுக்கு சம ஆசனம், சம உணவு வழங்கப்படுவதை எதிர்த்தது மட்டுமன்றி இலங்கையின் தேசாதிபதியைக் கண்டு முறையிடும் அளவுக்கு ராமநாதனிடம் சாதியம் ஆட்கொண்டிருந்தது. அதுமட்டுமன்றி தாழ்த்தப்பட்டவர்கள் தமது சா ஊர்வலங்களில் பறையை பயன்படுத்திய போது அத்தகைய சடங்குகளைப் பயன்படுத்தும் உரிமை அவர்களுக்கு இல்லை என்று வாதிட்டார்.

அரசாங்க அதிகாரியாக அவர் உயர் மட்ட தொடர்புகளை வளர்த்துக்கொண்டு, உயர் கல்வியையும் வெளிநாட்டில் கற்றுக்கொண்டு உள்ளூர் – வெளியூர் நற்பெயரையும் பெற்றுக்கொண்ட போதும் அவர் போதிய வசதி படைத்தவராக இருக்கவில்லை. அவரது தந்தையார் கேட் முதலியார் தொழில் ரீதியில் பெரும் நட்டத்தை அடைந்திருந்தார். இராமநாதனின் விவாகத்தினூடாக அந்த  குறையும் தீர்ந்தது என்றே கூறலாம். செல்வந்தரான முதலியார் நன்னித்தம்பியின் புதல்வி செல்லாச்சி அம்மாளைத் திருமணம் செய்துகொண்டார். 1879 இல் இராமநாதனின் மாமனாரான சேர் முத்துக்குமாரசுவாமி ஓய்வு பெற்றபோது அவ்விடத்திற்கு தமிழ் உத்தியோக பற்றற்ற உறுப்பினராக தெரிவானார் இராமநாதன். 1892 வரை அந்தப் பதவியில் இருந்தார். 1893 இல் சொலிசிட்டர் ஜெனராலாக பதவி வகித்தார். 1905 இல் அப்பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். மீண்டும் 1911-1930  அவர் இறக்கும்வரை சட்டசபையில் அங்கம் வகித்தார்.

இராமநாதன் தனது பிற்காலத்தில் ஒரு செல்வந்தராக இருந்தார். 1994 இல் வெளியான சேர்.பொன்.இராமநாதன் உருவச் சிலைத் திறப்பு விழா (சுன்னாகம் இராமநாதன் கல்லூரி) சிறப்பு மலரில் வெளியிடப்பட்டுள்ள அவரது சொத்துக்கள்.

இந்தியாவில்
 • கொடைக்கானலிலும், இராமேஸ்வரத்திலும் 25 ஏக்கர் நிலப்பரப்பு
யாழ்ப்பாணத்தில்
 • முன்னாள் பரமேஸ்வராக் கல்லூரி அதனைச் சார்ந்த நிலப்பரப்பு 25 ஏக்கர்
 • சுன்னாகம் இராமநாதன் கல்லூரி, அதன் நிலப்பரப்பு 25 ஏக்கர்.
 • கோப்பாய் ஆசிரிய கலாசாலையருகில் உள்ள 20 ஏக்கர் தோட்ட நிலம்
 • உடுவில் கிராம சபைக் கட்டிடமறுகில் “கரவசிட்டி” என்கிற 1 ஏக்கர் காணி
கிளிநொச்சியில்
 • இராமநாதபுரம் பகுதியிலுள்ள 300 ஏக்கர்
தென்னிலங்கையில்
 • கொழும்பிலுள்ள “வில்லா பிறாங்கா” என்ற பங்களா
 • தென் பிருந்தாவனம் எனும் 147 ஏக்கர்  தோட்டம் 

1917இல் இராமநாதனுக்கு சொந்தமாக 571 ஏக்கர் தென்னங் காணிகள் இருந்ததாக மைக்கல் ரொபர்ட்ஸ் தொகுத்த “இலங்கை தேசிய காங்கிரஸ் ஆவணங்கள்” என்கிற நூலில் பட்டியலிட்டிருக்கிறார். (Documents of the Ceylon National Congress and Nationalist Politics in Ceylon, 1929-1950, ... Department of National Archives, 1977)

சேர் பொன் இராமநாதன் அவர்களால் ஸ்தாபிக்கப்பட்ட பரமேஸ்வர கல்லூரியிலேயே தற்போது யாழ் பல்கலைக்கழகம் இயங்கி வருகின்றது.

மகாத்மா காந்தி இலங்கை வந்திருந்தபோது 27.11.1927 இல் இராமநாதன் கல்லூரிக்கு வந்து உரையாற்றியிருந்தார்.
இராமநாதன் சமாதி - நினைவு மண்டபம் - மருதநார் மடம், யாழ்ப்பாணம்
“சேர் இராமநாதனின் பரோகாரதிற்கும் சிந்தனைச் சிறப்புக்கும் நினைவாலயமாக நிலைத்து நிற்கும் இந்நிறுவனத்திற்கு வராதிருந்திருப்பேனாயின் என் வாழ்வெல்லாம் கவலைப்பட்டிருப்பேன்”
 என்று அவர் கூறியதாக 1927இல் வெளியான “இலங்கையில் காந்தி” பேசியதாக (Gandhiji in Ceylon) என்கிற நூலில் காணப்படுகிறது.

அவரது சொத்துக்களில் கணிசமானவற்றை பொதுக்காரியங்களுக்காக செலவிட்டார். பௌத்த பாடசாலைகளை நிறுவ ஆரம்பத்தில் செலவிட்டார். பின்னர் தமிழ் பாடசாலைகளையும், சைவக் கோவில்களையும் அமைத்தார். 

முஸ்லிம்கள் குறித்து
1915 கலவரத்தில் இராமநாதன் முஸ்லிம்கள் குறித்து கொண்டிருந்த பார்வை இன்றும் சர்ச்சைக்குரியதாகவே உள்ளது.

நான்கு முக்கிய வரலாற்று நிகழ்வுகளை முஸ்லிம் தரப்பில் அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் போக்கைக் காணக்கூடியதாக இருக்கிறது.

•    1885 ஆம் ஆண்டு முஸ்லிம் விவாகச் சட்டம் குறித்த சட்டசபை விவாதத்தில் முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்களே என்று செய்த வாதம்.

•    1888இல் “இலங்கைச் சோனகர் இன வரலாறு” (Ethnology of the moors) என்கிற தலைப்பில் அவர் எழுதிய கட்டுரையும், அதில் முஸ்லிம்கள் இனத்தால் தமிழர்கள், மதத்தால் முஸ்லிம்கள் என்கிற வாதமும். இந்தக் கட்டுரைக்கு எதிரான கருத்துக்களை அன்றே அறிஞர் சித்திலெப்பை மற்றும் ஐ.எல்.எம்.அப்துல் அசீஸ் போன்றோர் தகுந்த அளவு எதிர்வினையாற்றியுள்ளனர்.

•    1905 இல் துருக்கி தொப்பி அணிந்துகொண்டு நீதிமன்றத்துக்கு வருவதற்கு ஏற்படுத்திய தடை பற்றிய சர்ச்சையில் இராமநாதன் தடைக்கு ஆதரவாக இருந்தமை.

•    1915 கலவரத்தின் போது அவர் சிங்களத் தலைவர்களை காத்ததும், மீட்டதும். (அவர் எந்த குற்றவாளிகளையும் மீட்பதற்காக அவர் வாதிடவில்லை, அநீதி இழைக்கப்பட்டவர்களுக்காகவே அவரது வாதங்கள் இருந்தன என்பது தெளிவு)

இந்தக் காரணிகளை மேலதிக இனவெறுப்பு சாயம் கலந்து திரித்து எழுதப்பட்டுள்ள கட்டுரைகளையும் ஆங்காங்கு காண முடிகிறது.
அறிஞர் சித்தி லெப்பை
இராமநாதன் முஸ்லிம் இனத்துவ அடையாளத்துக்கு சார்பாக இருக்கவில்லை என்கிற வாதம் வேறு, இராமநாதன் முஸ்லிம்களுக்கு எதிராக செயல்பட்டார் என்கிற வாதம் வேறு. இராமநாதனை முஸ்லிம்களுக்கு எதிரானவராக நிறுவும் போக்கிற்கு தகுந்த ஆதாரங்கள் இந்த தொடருக்காக தேடிய முயற்சியில் கிடைக்கவில்லை என்றே கூறவேண்டும்.

மேலும் இந்த திரிபுகளின் உச்சம் என்னவென்றால் இராமநாதன் லண்டனிலிருந்து திரும்பியபோது கொழும்பில் வரவேற்றவேளை அதே நாள் முஸ்லிம்களின் கடைகள் தாக்கப்பட்டதாகக் கூட தகவல்கள் திரிக்கப்பட்டிருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது. மிகச் சமீபத்திய இணையத்தள கட்டுரைகளிலேயே இந்த ஆதாரமற்ற திரிபுகள் புனையப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. இவற்றை “மூலமாகக்”  கொண்டு எழுதப்படும் வேறு கட்டுரைகளுக்கூடாக மீள, மீள அந்த புனைவுகளை மக்கள்மயப்படுத்திவிடும் ஆபத்து உண்டு. தமிழ் – முஸ்லிம் இன முறுகலை சிக்கலடையச் செய்வதற்கான வரலாற்று திரிபுகளாகவே இவற்றைக் காணமுடிகிறது.

முஸ்லிம் – தமிழ் இன விரிசல் குறித்து ஆராயும் முஸ்லிம் தரப்பு கட்டுரைகள் இராமனாதனிடமிருந்து தொடங்குவதைப் பரவலாக காணமுடியும். அவற்றில் இராமநாதனை ஒரு இனவாதியாக சித்திரிப்பதற்கு பிரயத்தனப்படுவத்தையும் காண முடிகிறது. மேற்படி நான் அடையாளம் கண்ட காரணிகள் முஸ்லிம்களுக்கு எதிரானவராக இராமநாதனை நிறுவுவதற்குப் போதுமானதாகத் தெரியவில்லை. அவரது எழுத்திலும் அவற்றைக் காண முடியவில்லை.

இராமநாதன் எழுதிய “1915: கலவரமும் இராணுவச்சட்டமும்” என்கிற நூலில் அவர் பதிவு செய்துள்ள கலவரம் குறித்த பதிவுகளில் சிங்கள - முஸ்லிம் இனத்தவர்களும் கலவரத்தில் சம்பந்தப்பட்ட தகவல்களை பதிவு செய்கிறார். அதில் கரையோர முஸ்லிம்கள் கலவரத்தில் ஆற்றிய பாத்திரம் கலவரத்திற்கு தூண்டுகோளாக இருந்ததை இராமநாதன் மட்டுமல்ல அன்றைய காலத்தில் ஆய்வுகளாக வெளியிட்ட பலரும் வெளியிட்ட தகவல்கள் தான் அவை. இந்த தொடர் கட்டுரை எழுதத் தொடங்கும் போதே ஏற்கெனவே இராமநாதன் முஸ்லிம்களுக்கு எதிரானவராக எம் மத்தியில் உள்ள நம்பிக்கையின் அடிப்படையில் இருந்தே தொடங்கினேன். ஆனால் எனது தேடல்களில் அப்படியொரு முடிவுக்கு வர முடியவில்லை என்றே கருதுகிறேன். உறுதியான வாதங்கள் முன்வைக்கப்பட்டால் எனது கருத்தை மாற்றிக்கொள்வதில் எந்தத் தயக்கமும் இல்லை.

அதேவேளை முஸ்லிம் இனத்துவ அடையாளத்தை மறுக்கும் இராமனாதனின் கருத்துக்கள் முஸ்லிம்களின் இனத்துவ அரசியல் இருப்புக்கு எதிரானதே. குறிப்பாக இனவாரி பிரதிநிதித்துவ அரசியல் கோரிக்கையின் போது இனத்துவ அடையாளத்தை நிறுவுவதற்கும், முஸ்லிம் அரசியல் அதிகாரத்தை உறுதிசெய்வதற்கும் இராமநாதனின் வாதம் தடையாகவே இருக்கும் என்பது உண்மை.

இலங்கையில் உள்ள இனக்குழுமங்களை  “சிங்கள இந்து”, “சிங்கள முஸ்லிம்”, “சிங்கள கத்தோலிக்கர்” போன்ற அடையாளங்களாகவே காணவேண்டும் என்கின்றது இன்றைய சிங்கள பேரினவாத தரப்பு. “சிங்கள பௌத்த தேசியம்” ஒன்றே இலங்கையில் இருக்கவேண்டும் என்றும் அதற்குள் அத்தனையும் அடங்க வேண்டும் என்கிறது அப்பேரினவாதம். அப்பேர்பட்ட “மண்ணின் மைந்தர்” சித்தாந்தத்திலிருந்து தொடங்கியதல்ல இராமநாதனின் கருத்தாக்கம் என்பதும் கவனிக்கத் தகுந்தது.

சரி பிழைக்கப்பால் தமிழர்களே இஸ்லாமியர்களாக ஆனார்கள் என்றும், அவர்களது பேச்சுமொழியும் தமிழாகவே இருக்கிறது என்றும் அவர்கள் மதத்தால் இஸ்லாமியர்களாக இருந்தபோதும் இனத்தால் தமிழர்கள் என்பது இராமநாதன் தரப்பு வாதம். எந்தவொரு இனத்துவ அடையாளத்தையும் இன்னொரு இனத்தின் மீது திணிக்க முடியாது. அதுபோல தனது இன அடையாளத்தை உறுதியாகவே முன்வைத்து தம்மை வேறுபடுத்திக் காட்டும் உரிமை எந்த இனக்குழுமத்தும் உண்டு என்கிற அடிப்படையில் இருந்து இராமனாதனின் வாதத்தை மறுக்க முடியும்.

சிங்கள – தமிழ் – முஸ்லிம் என்கிற ஒரு முக்கோணச் சமரைத் தொடக்கிவைத்ததில் பிரித்தானியரின் “பிரித்தாளும் தந்திரத்திற்கு” உரிய பாத்திரம் மறுப்பதற்கில்லை. ஆனால் வரலாற்றைப் பதிவு செய்பவர்கள் திரும்ப திரும்ப சில புனைவுகளை அடுத்ததடுத்தாக பரப்பிவிடுவதன் மூலம் மேலும் இந்த நிலைமையை சிக்கலாக்கியிருக்கிறார்கள் என்பதும் உண்மையே.

இராமநாதனுக்கு எதிரான சிங்களத் தரப்பு
இன்றைய சிங்களப் பேரினவாத தரப்பும் தமிழ் தேசியவாதத்தை எதிர்ப்பதற்கான கதையாடல்களில் இராமநாதனையும் சேர்த்துக்கொள்ளும் போக்கையும் காணக்கூடியதாக இருக்கிறது. முஸ்லிம்கள் குறித்த அவரது அணுகுமுறையையும் அவர்கள் துணைக்கு அழைத்துக்கொள்கின்றனர். இராமநாதனை தமிழ் இனவாதியாக நிறுவதில் அவர்கள் மேற்கொள்ளும் பிரயத்தனத்திற்கான காரணம் வேறொன்றும் இல்லை, “தமிழ் இனவாதம் அத்தனை பழமையானது, தொன்றுதொட்டு வருவது” என்று நிறுவதற்காகவே இராமநாதனை வலுக்கட்டாயமாக இழுக்கும் போக்கை காணமுடிகிறது.

இராமநாதனை அப்படித் திரிக்கும் சமகால முக்கிய “சிங்கள புலமைத்துவ” உதாரணங்களாக இருவரைக் கூறலாம் ஒருவர் குணதாச அமரசேகர மற்றையவர் நளின் டி சில்வா. இவர்கள் இருவரும் பெரும்பாலும் ஒத்த கருத்துடையவர்கள். ஒன்றாக அமைப்புகள் கட்டி பணிபுரிபவர்களும் கூட. இவர்கள் இருவரும் கடந்த மூன்று தசாப்தங்களாக இனவாத அரங்கில் முக்கிய சிங்கள பௌத்த கருத்துருவாக்க சக்திகளாகக் கொள்ளலாம். சிங்கள பௌத்த இனவாத கருத்துக்களை கோட்பாட்டாக்கம் செய்து பரப்பி வருபவர்களில் முக்கியமானவர்கள். இன்றைய இனவாத அரசியல் அரங்கில் தீவிர செயற்பாட்டாளர்களாக இருப்பவர்களுக்கு இவர்கள் முக்கிய தத்துவார்த்த ஆசான்கள்.

குணதாச அமரசசேகர எழுதிய இனவாதம் பரப்பும் நூல்கள் பல. அவற்றில் “அநகாரிக்க தர்மபால மார்க்ஸ்வாதியா” என்கிற அவரது பிரபல நூலிலும் ராமநாதனை ஒரு இனவாதியாக சித்திரிக்கிறார். இவரைவிட முக்கியமான நூல் நளின் டி சில்வா எழுதிய “பிரபாகரனும் அவரின் தாத்தா, சித்தப்பா, மச்சான்மாரும்” (ප්‍රබාකරන් ඔහුගේ සීයලා බාප්පලා හා මස්සිනාලා) என்கிற நூல். பல பதிப்புகளைக் கண்ட இந்த நூல் 1995 இல் முதல் தடவையாக வெளிவந்த வேளை அதன் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு பொது நூலக மண்டபத்தில் நடந்தபோது நானும் பங்குபற்றியிருந்தேன்.

சிங்கள சாமான்யர்கள் மத்தியில் தமிழர்கள் வந்தேறிகள், ஆக்கிரமிப்பாளர்கள், சிங்கள நாட்டை துண்டாடிச் செல்லப்போபவர்கள், சதி காரர்கள் போன்ற கருத்துக்களை பதிப்பதற்கான நூல் அது. அது குறித்து பரவலாக சாமான்யர்கள் மத்தியில் உள்ள கேள்விகளை தொகுத்து அக் கேள்விகளுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த நூல் தொகுக்கப்பட்டிருக்கும். இந்த நூலில் ஒரு கேள்வியும் பதிலும்.
கேள்வி :“ராமநாதன், அருணாசலம் போன்றோர் இலங்கையின் சுதந்திரத்திற்காக பணியாற்றியாற்றியிருக்கிறார்கள் அல்லவா?”
பதில் : “1915 கலவரத்தின் போது அடக்குமுறைக்கு எதிராக கதைத்திருக்கிறார்கள் தான். அவர்கள் சீர்திருத்தத்தையே கோரியிருந்தார்கள். ஒன்றை மறக்கக் கூடாது அவர்கள் காலனித்துவத்திற்கு எதிராகத் தான் கதைத்திருகிறார்கள். அதேவேளை உள்நாட்டில் அவர்கள்  சிங்களவர்கள் பெரும்பான்மையினர் என்பதை ஏற்க மறுத்தவர்கள். சிங்கள மொழி, கலாசாரம், வரலாறு பற்றி பேசினாலும் அதனோடு ஒன்றவில்லை. சிங்களவர்களை பெரும்பான்மையினர் ஏற்றுக்கொண்டால் அவர்களுக்கு கிடைக்கும் இனத்துவ சலுகைகள் கிடைக்காது போய்விடும் என்பதை அறிந்து வைத்திருந்தார்கள்.”

தமக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளை பிரித்தானியரிடம் இருந்து தட்டிப் பரித்துக்கொண்டவர்கள் அவர்கள் என்பதை அந்த நூலில் பல இடங்களில் நாளின் டி சில்வா கூறுகிறார்.
“சட்டசபையில் சிங்கள பிரதிநித்தித்துவத்தை 50 வீதத்துக்கும் குறைவாக பேணுவதற்கு ராமநாதன் சதி செய்தார்”
போன்ற கருத்துக்களையும் அந்த நூலில் விளக்குகிறார்.

பிற்காலங்களில் அநகாரிக தர்மபால இராமநாதனை வெறுத்தாலும் ஆரம்பத்தில் ஒரு முறை தனக்கு பிறகு பௌத்த மதத்தை பாதுகாப்பதற்கு ஒருவர் நியமிக்கப்படவேண்டும் என்று நினைத்தால் நான் ஹிந்து பக்தரான இராமநாதனையே நியமிப்பேன் என்றார்.

டீ.எஸ்.சேனநாயக்க ராமநாதனை “எல்லா காலத்திற்கும் சிறந்த இலங்கையர்” (‘the greatest Ceylonese of all times’) என்றார்.

தொடரும்...

நன்றி - தினக்குரல்


சம்பள போராட்டத்திற்குள் செல்பி புள்ள - ஜே.வி.ஸ்டீபன்


போராட்டங்கள் வரவேற்கக்கூடியவை தான். இலக்கு ஒன்றினை எட்டுவதற்கு முன்னெடுக்கப்படுகின்ற போராட்டமானது இதய சுத்தியுடையதாகவும் அதே நேரம் உயிரோட்டம் உடையதாகவும் இருக்க வேண்டும். அதுவே நிலைபேரான வெற்றியும் திடமான நம்பிக்கையையும் உறுதிப்படுத்துவதாய் அமையும் எனினும்

தோட்டத் தொழிலாளர்களை பகடைக்காய்களாக வைத்து முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சில்லறைத் தனமான சமகாலத்து செயற்பாடுகள், நடவடிக்கைகள் அனைத்தும் வரலாற்றில் இழிசொல்லுக்கு இடம் வைத்தே செல்கின்றன.

இன்றைய நிலையில் தோட்டத் தொழி லாளர்களின் பிரச்சினையானது அதி கார வர்க்கத்தின் கௌரவப் பிரச்சினையாகவே உருவெடுத்து நிற்கிறது. தொழிலாளர்கள் தமது விதியை நொந்து கொண்டு ஒருபுரம் ஒதுங்கியிருக்கையில் தொழிற்சங்க, அரசியல் தலைமைகளே அதிகாரப் போட்டியில் தூண்டிலில் மாட்டிக் கொண்டிருக்கின்றன.

கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து 14 மாதங்கள் நிறைவடைந்திருக்கின்றன. இந்த 14 மாதங்களில் மலையகத்தில் எந்தவொரு தொழிலாளியும் சம்பள அதிகரிப்பு தொடர்பில் வாய்திறக்கவில்லை.

மலையகத் தலைமைகளின் மாய வலைக் குள் சிக்குண்டுள்ள அப்பாவித் தொழிலாளர்கள் இதைப்பற்றி சிந்திப்பதற்குக்கூட திராணியற்றவர்களாக இருந்து வருகின்றனர். நிலைமை இப்படியிருக்கையில் மலையகத்தில் எழுந்துள்ள அதிகாரப் போட்டி, அரசியல் இருப்பினை தக்கவைத்தலுக்கான தேவை, வரட்டுக் கௌரவம் என்று அனைத்து துர் மணங்களையும் சேமித்து வைத்திருக்கும் இத்தகைய தரப்பினரே தோட்டத்தொழிலாளர்களுக்கான சம்பள அதிகரிப்பு தொடர்பில் முதலைக்கண்ணீர் வடிக்கின்றனர்.அது மாத்தி ரமின்றி 14 மாதங்கள் கடந்து விட்ட பின் னரும்கூட மேலும் 14 நாட்கள் கெடு விதிக் கப்பட்டுள்ளது.

சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி 14 நாட்களுக்கான காலக்கெடுவா அல்லது காலத்தை இழுத்தடித்து வீணடிக்கும் கால கேடா என்றும் சிந்திக்கத் தோன்றுகிறது. ஏனெனில் 14 மாத கால மலையகத் தலை மைகளினதும் தொழிற்சங்களினதும் முன் னெடுப்புகள் அவ்வாறு சிந்திக்கின்றன. 1000 ரூபா சம்பளம் பெற்றுத் தரப்படும் என்று கூறியதும் அதற்குப் போட்டியாக 2500 ரூபாய் பெற்றுத்தருவோம் என்றும் அதாவது நாள் ஒன்றுக்கு 100 ரூபாவீதம் பெற்றுத் தருவோம் என்று கூறியதும் மலையகத்தின் அதிகார வர்க்கத்தினரேயாவர்.

1000 ருபா, 2000 ருபா என்ற கோரிக் கைகள் பாதகமில்லை என்கின்ற போதும் அதற்கான போராட்டங்கள் சாதகங்களை ஏற்படுத்தவில்லை. எல்லாமே மாயா மாயா என்றாகிவிட்டது. தோட்டத்தொழிலாளர்கள் தலைமைகள் மீது முழுமையாக நம்பிக்கை வைத்த போதி லும் மலையகத் அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளவில்லை.

1000 ரூபாவுக்கான நள்ளிரவுப் போராட்டத்தை இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் நடத்த பின்னர் மல்லியப்பு சந்தியில் தமிழ் முற்போக்கு கூட்டணியும் பதிலுக்கு போராட்டம் நடத்தியது. அதன் பின்னர் பாராளுமன்றத்தில் தீக்குளிப்பு என்று போராட்டம் கையொடிந்து போக இறுதியாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்துக்கு முன்னாலும் சத்தியாக்கிரகம் என்றதொரு போராட்டம் நடத்தப்பட்டது. இப்படியான வரிசைக்கிரம அடிப்படையிலான போராட்டங்கள் சமூக வலைத்தளமான முகப்புத்தகத்தில் எந்தளவு பேசப்பட்டதோ அதிலும் ஒருபடி மேலே சென்றுதான் கோட்டை ரயில் நிலையத்தின் முன்னால் இடம்பெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணி யின் சத்தியாக்கிரகப் பேராட்டம் இன்று பேசப்பட்டு சீரழிந்து கொண்டிருக்கிறது.

தோட்டத் தொழிலாளருக்கு 100 ரூபா சம்பள அதிகரிப்பினைப் பெற்றுத் தருவதற்கென்ற வகையிலும் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலும் என்ற ரீதியில் முன்னெடுக்கப்பட்டதான மேற்படி சத்தியாக்கிரகப் போராட்டம் கேளிக்கைப் போராட்டமாக மாற்றப்பட்டுவிட்டது.

உண்மையாகவே தோட்டத் தொழிலாளியின் நிலைமை உணரப்பட்டிருந்தால் உண்மையாகவே அவர்களுக்கு அதிகரித்த சம்பளத்தைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற இதய சுத்தியுடனான எண்ணம் இருந்திருந்தால் போராட்டமும் மெய்யானதாக இருந்திருக்கும்.

தோட்டத் தொழிலாளியின் வியர்வை மணம்கூட அறியாது தலை நகரிலே மையம் கொண்டிருப் போருக்கு போராட்டத்தின் தாற்பரியம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அன்றைய தினம் ஒட்டு மொத்த மலையகமும் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த விடயமானது தலைநகரிலே கூடுகின்ற தலைமைகள் பெருந்தோட்டக் கம்பனிகளுக்கும் நாட்டு மக்களுக்கும் அரசாங்கத்துக்கும் எத்தகைய செய்தியைக் கொடுக்கப்போகின்றன என்ற எதிர்பார்ப்பே ஆகும்.

அதே போன்று தோட்டத் தொழிலாளர்க ளாகிய தமக்கு எத்தகைய ஆறுதலை இவர்கள் தரப்போகின்றனர் என்பதும் மக்களது எதிர்பார்ப்பாக இருந்தது. இருந்த போதிலும் அனைத்துக் கனவுகளையும் தவிடு பொடியாக்கிய போராட்டக்காரர்கள் தலை நகருக்கு சுற்றுலா வந்தது போன்று தங்களது கையடக்கத் தொலைபேசிகளினூடாக செல்பி எடுத்து அதாவது தனது கையடக்கத் தொலைபேசியில் தம்மையே படமெடுத்து அதனை முகப்புத்தகத்திலும் தரவிறக்கம் செய்து குதுகலம் கண்டதை காணமுடியும். செல்பி எடுப்பது உங்களது இஸ்டம் தான் அதனை மறுக்கவில்லை. ஆனால் உங்களுக்கு இஸ்டமானது மக்களுக்கு கஷ்டமாகி விட்டது.

தலைநகரில் முன்வைக்கப்பட்ட சம்பள அதிகரிப்புக்கான சத்தியாக்கிரகம் இறுதி யில் செல்பி கொண்டாட்டமாக தோற்றம் பெற்றது சகித்துக்கொள்ள முடியாததாகும்.

தமிழ் முற்போக்கு கூட்டணியைப் பொறு த்தவரை அதன் கடமை முடிந்து விட்டது. சொன்னபடி அதாவது திட்டமிட்டவாறு சத்தியாக்கிரகமும் நடந்து விட்டது. அதேபோன்று ஊடகங்களும் முன்னிலைப்படு த்தி செய்திகளாக பிரசுரித்து விட்டன. அந்த வகையில் அவர்களது கடமையும் பொறுப்பும் நிறைவேறி விட்டது என்ற ரீதியில் பெருமூச்சு விட்டவர்களாக சென்று விட்டனர்.

சத்தியாக்கிரகம் என்று கூறி செல்பி எடுத்து போராட்டத்தை கொச்சைப்படுத்திய தைப் போன்றல்லாது தோட்டத் தொழிலா ளர்களுக்கான சம்பள அதிகரிப்பினை விலியுறுத்துமாற்றையும் திருக்க முடியும்.

2500 ரூபா சம்பள அதிகரிப்பு என்பது தனியார் துறைக்கான அரசாங்கத்தின் பரிந்துரையாக இருந்து பின்னர் அது பாராளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாக தோற்றம் பெற்றது. தனியார் துறைக்கு 2500 ரூபாய் கொடுக்கப்பட்டதால் அவ்வாறு தோட்டத் தொழிலாளர்களுக்கும் 2500 ரூபா பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் என்றே தமிழ் முற்போக்கு கூட்டணி கூறியது. இதனை தொழில் அமைச்சரும் ஏற்றுக் கொண்டவராக செயற்பட்டு எழுத்து மூலமல்லாத வாய்மொழி வழியாக தோட்டத் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 100 ரூபா அதிகரித்த சம்பளமாக வழங்கப்படும் என்று அறிவித்தார். எப்படி இருப்பினும் இது பாராளுமன்றத்தில் விடுக்கப்பட்ட அறிவிப்பு என்பதால் அது உத்தியோகபூர்வமானதாக ஏற்றுக் கொள்ள வேண்டியதொன்றாகி விட்டது.

எனினும் அமைச்சரால் அறிவிக்கப்பட்ட 100 ரூபா அதிகரித்த சம்பளம் இதுவரையிலும் தொழிலாளர்களை எட்டவில்லை.

இந்நிலையில்தான் பெப்ரவரி மாதத்தின் பிற்பகுதி அமர்வின் காலப்பகுதியில் தனி யார் துறைக்கான 2500 ரூபா அதிகரிப்பு சட்டமாக்கப்பட்டு அங்கீகரிக்கப்பட்டது.

நிலைமை இப்படியிருக்க இன்று பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் மலையகத்தைச் சேர்ந்த அமைச்சர்களான திகாம்பரம், இராதாகிருஷ்ணன், பாராளு மன்ற உறுப்பினர்களான அறுமுகன் தொண்டமான், முத்து சிவலிங்கம், அரவிந்த குமார், வடிவேல் சுரேஷ், வேலுகுமார், திலகராஜ் ஆகியோர் இணைந்தோ அல்லது ஆலோசனைகளை மேற்கொண்டோ மேற்படி 2500 ரூபா சம்பள அதிகரிப்பு சட்டமாகியதில் திருத்தம் ஒன்றை மேற்கொண்டு அதில் தோட்டத் தொழிலாளர்களின் பங்கீட்டுத் தன்மையையும் வலியுறுத்தியிருக்க முடியும். இடையிட்டு மனுபிரேரணை ஒன்றை உட்படுத்துவதற்கு முயற்சிகளை மேற்கொண்டிருக்க முடியாம் ஆனால் அது தவறவிடப்பட்டுள்ளது.

அதுமாத்திரமின்றி நாட்டில் வாழ்க்கைச் செலவு யாவருக்கும் சமமானது என்ற காரணத்தை வலியுறுத்தி பாராளுமன்றத்தில் தனிநபர் பிரேரணை ஒன்றையோ அல்லது ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றையோ கொண்டு வந்திருக்க முடியும்.

இப்போது தான் பாராளுமன்றத்தில் மலையகம் பற்றி பேசப்படுவதாக அடிக்கடி ஞாபக மூட்டும் பாராளுமன்ற உறுப்பினர்களான மயில்வாகனம் திலகராஜ், வேலுகுமார் ஆகியோர் ஏன் இது பற்றி சிந்திக்கவில்லை என்பதற்று அவர்கள் பதில்கூற கடமைப்பட்டுள்ளனர்.

இலங்கைத் தொழிலாளர் காங்கிரசை யும் ஆறுமுகன் தொண்டமானையும் வம்புக்கு இழுக்கும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் இதுபற்றி ஆலோசனை வழங்கியிருக்கலாமே.

அதிகமான அதேநேரம் போதுமான பாரா ளுமன்ற உறுப்பினர்களையும் மூன்று அமைச்சர்களையும் கொண்டிருக்கும் மலையகம் சார்பில் பாராளுமன்றத்துக்குள் சாதித்துக்கொள்வதற்கான சாதகத்தன்மைகள் காணப்படுகின்ற போதிலும் அதனை சாணக்கியமாகச் சாதித்துக் கொள்ளாது வெறுமனே ஊடகங்களுக்காக போராட்டம் என்று கூறி பேயாட்டம் காட்ட நினைப்பது அருவருக்கத் தக்கதானது.

அதிகமான அமைச்சுப்பதவிகள், உறுப்பினர்கள் என்பதெல்லாம் மக்களுக்காகவே ஆகும். இத்தகைய பதவிகளைக் கொண்டு மக்களின் குறைகள் நிவர்த்திக்கப்பட வேண்டும். மாறாக கையில் அதிகாரங்களை வைத்துக் கொண்டு சம்பந்தமே இல்லாதோரை ஆர்ப்பாட்டக் களத்தில் இறக்கிவிடுவதும் அப்பாவித் தொழிலாளர்களை வருமானம் இழக்கச் செய்து வீதிக்கு இழுப்பதும் கிடைக்கப்பெற்றிருக்கும் அதிகாரத்துக்கு நாகரிகமற்றது என்றே கூற வேண்டும்.

பாராளுமன்றம் அங்கீகரித்தால் தற்போதுள்ள தோட்டத் தொழிலாளர்களினதும் அவர்களது தொழிற் துறையினையும் மாற்றியமைக்க முடியும். இன்று தோட்டங்களைக் கட்டிப்பிடித்துக் கொண்டிருக்கின்ற கம்பனிகளையும் விரட்டியடிக்க முடியும். அதற்கு மலையகத் தலைமைகளின் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள், முன்னெடுப்புகள் அவசியமாகின்றன.

இன்று மலையகத்தைப் பொறுத்தவரையில் அரசியல் ரீதியிலான வெட்டுக் குத்தும், சச்சரவுமே மலிந்து கிடக்கின்றன. இந்நிலைமை மாறவேண்டும். மிக விரைவிலேயே பெருந்தோட்டங்களை நிருவகிக் கும் கம்பனிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் ஒன்றை அளிப்பதற்கு அரசாங்கம் தயாராகிக் கொண்டிருக்கின்றது.

மலையகத்தின் அனைத்து பெருந்தோட்டங்களையும் பொறுப்பேற்கும் அளவில் இரு செல்வந்த நாடுகள் முன்வந்திருப்பதாக அரசாங்கத்தின் பொறுப்பு மிக்க அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலைமையானது இன்றைய பெருந்தோட்டக் கம்பனிகளுக்கு மாத்திரமின்றி மலையக அரசியல் வாதிகளுக்கும் வயிற்றில் புளியை கரைப்பது போலாகப்போவது உறுதிதான்.

மலையகத் தலைமைகளே! மலையக அரசியல் வாதிகளே! உங்களைப் போன்று உள்நாவில் ஒன்றும் வெளிநாவில் வெறொன்றும் என்று மாறிப்பேசும் வல்ல மையை அப்பாவித் தொழிலாளர்கள் கொண்டிருக்கவில்லை. அவர்கள் ஏமாற்றமடைந்ததும் போதும். அவர்களை ஏமாற்றியதும் போதும். எனவே உங்களால் ஆனதை சொல்லுங்கள். முடிந்ததைச் செய்யுங்கள் வீம்புக்காக கதையளந்து பின்னர் திக்குமுக்காடிக் கொண்டிருக்கத் தேவையில்லை.

இதனூடாக இன்னொன்றையும் கூறி வைக்க வேண்டும். உங்களால் முடியாத ஒன்றைப் பெறுவதற்கு தோட்டத் தொழி லாளர்களை இழுத்து தெருவில் விடுவதற்கு நினைக்க வேண்டாம்.

விபரித்துக் கூறுவதென்றால் தொட்ட தெற்கெல்லாம் மலையகத்தின் ஒட்டு மொத்த தொழிலாளர்களையும் அணிதிரட்டி வீதியில் இறக்கி போராட்டம் நடத்துவோம் என்ற அழகான பசப்பு வார்த்தையை இனி யேனும் பிரயோகிக்காதிருங்கள் ஏனெனில் அவர்களை வீதிக்கு இழுப்பதால் உங்களுக்கு ஒன்றும் ஆகிவிடாது. மாறாக அவர்களின் வேலையும் இழந்து வருமா னமும் இழக்கப்படுகிறது. இது பாவச் செய லாகும்.

மலையகத்தின் இளைஞர்யுவதிகளே! சம காலத்து நிலைவரங்கள் தொடர்பில் விழிப்பாக இருங்கள்.கண்மூடிகளாகவும் குருடர்களாகவும் ஊமைகளாகவும் இருக்கத் துணியாதீர்கள்.எதிர்காலம் இளைஞர்கள் கையில் என்ற வாக்கினைப் போல் நாளைய மலையகம் இன்றைய இளைஞர்களின் கைகளில்தான் உள்ளது. ஆக்கபூர்வமான காரியங்களில் தலையீடு செய்யுங்கள். வளமானதை பெருகச் செய்யுங்கள். நஞ்சானதை முளையிலேயே கிள்ளி எறியுங்கள். சிந்தித்துச் செயலாற்றுங்கள்.
நன்றி - வீரகேசரி

சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 3) - இரா.ஜெ. ட்ரொட்ஸ்கி


அரசியல் அமைப்பு சட்டங்களும் சமூக உருவாக்கமும்
1931 ம் ஆண்டு டொனமூர் அரசியலமைப்பின் மூலம் வழங்கப்பட்ட சர்வஜனவாக்குரிமை இலங்கையில் பொது ஜனங்கள் தொடர்பிலே பல்வேறு விதமான சட்டங்கள் தோன்றுவதற்கும் அரசியல் சமூக வாழ்விலே மாற்றங்கள் ஏற்றபடுவதற்கும் காரண மாகியுள்ளது. இந்தச் சட்டத்தினால் ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் முக்கியமானவை.

இலங்கையில் பிரஜா உரிமைச்சட்டங்கள் சமூக அசைவியக்கத்திலே மிகப்பெரிய தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது.1948 ம் ஆண்டின் 18 ம் இலக்க பிரஜா உரிமைகள் சட்டம். 1949 ம் ஆண்டின் 3 ம் இலக்க இந்திய பாகிஸ்தானியர் வதிவிட (பிரஜா உரிமை)சட்டம் என்பன் பிரதானமானவை.

பிரஜா உரிமைசட்டம் 1950, 1955, 1987, 1988, 1993, 2003, ஆகிய ஆண்டுகளில் பலவிதமான திருத்தங்களுக்கு உட்படுத்தப்பட்டது. 1948 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரஜா உரிமை பிரச்சினை 2003 ம் ஆண்டின் 16 ம் இலக்கச் சட்டத்தினால் பெருமளவில் தீர்க்கப்படும் வரை காலத்துக்கு காலம் இச்சட்டம் பல்வேறு அரசியல் காரணங்களின் அடிப்படையிலே திருத்தப்பட்டது. பிரஜா உரிமைச் சட்டத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் தொடர்பிலே முன்வைக்கப்பட்ட - ஒட்டுமொத்தமான கருத்துக்களை தொகுத்து நோக்கின் பின்வரும் விடயங்கள் பிரதானப்படுத்தப்பட்டுள்ளன:
 1. அரைநூற்றாண்டுக்கு மேலாக மலையக மக்கள் அரசியல் அநாதைகளாக்கப்பட்டனர்.
 2. பலம் பொருந்திய தொழிலாளவர்க்கத்தின் ஒரு பகுதியினர் பலமிழக்க செய்யப்பட்டனர்.
 3. கல்வி, தொழில் வாய்ப்புகளை இழந்தனர்.
 4. குறைந்த கூலிக்கு உழைக்கும் பட்டாளமாக மாற்றப்பட்டனர்.
 5. அரசியல், சமூக, பொருளாதார வாழ்வில் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் சென்று விட்டனர். 6. தேசிய அரசியலில் பங்குபற்றுவதில் இருந்து தவிர்க்கப்பட்டனர். அரசியலில் வலுவிழந்த அணியினராக மாற்றப்பட்டனர்.

இன்றைய நிலையில் மனித உரிமைகளுக்கும் 1978 ம் ஆண்டின் அரசியலமைப்புக்கும் முரணான பழைய தொழில் சட்டங்கள் பல இன்னும் நடைமுறையில் காணப்படுகின்றன. 1978 ம் ஆண்டின் அரசியல் அமைப்பின் உறுப்புரை 16 ஆனது இந்த அரசியலமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் நடைமுறையிலிருந்த சட்டவிதிகள் அவை அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தில் கூறப்பட்டவற்றிற்கு முரணாக இருப்பினும் அமுலில் இருக்க முடியும் என ஏற்பாடு செய்வதனால் இந்த சட்டங்களின் இருப்பு கேள்விக்குட் படுத்தப் படவில்லை. மேலும் இலங்கையில் ஒரு விடயம் சட்ட மாக்கப்பட்டதன் பின்னர் அதன் பெறுமதியினை கேள்விக்குட்படுத்தி செயலற்றதாக்கக் கூடிய சட்ட நிலைமைகள் காணப்படவில்லை.

இந்த வகையில் 1978 ம் ஆண்டின் அரசியல் அமைப்பு நடைமுறைக்கு வருவதற்கு முன்னர் இருந்த சட்டங்களை கேள்விக் குட்படுத்த முடியாது. சட்டமொன்று நடைமுறைக்கு வந்ததன் பின்னர் அதனால் ஏற்படக்கூடிய நடைமுறை தாக்கங்களுக்கு ஏற்றவகையிலே அச்சட்டத்தின் பெறுமதியினை நிர்ணயம் செய்யக் கூடிய நிலமை எதிர் காலத்தில் ஏற்படுத்தப்படல் வேண்டும். இந்திய சட்ட முறையினை பொறுத்தவரையிலே ஒரு விடயம் சட்டமாக்கப்பட்ட பின்னரும் கூட அரசியலமைப்புக்கு முரணானது என்ற வகையில் செல்லு படியற்றதாக்கப்படலாம். அமெரிக்காவிலும் நீதியான நடைமுறை (Due Process) என்ற சட்ட அடிப்படையில் இந்நடவடிக்கையினை மேற்கொள்கின்றனர்.

அமெரிக்க மெய்யியல் வாதிகள் புத்தகங்களில் இருக்கும் சட்டத்தினை விட அவை நடைமுறைப்படுத்தப்படும் விதத் தினைப் பற்றி ஆய்வு செய்கின்றனர். இந்த வகையில் பிரித்தானிய சட்டமரபுகளுக்கு அமைய இந்த நாட்டில் அறிமுகம் செய்யப்பட்ட சட்டங்கள் நீதிமன்ற முறைகள் என்பன இந்நாட்டின் சாதாரண மக்களை பொறுத்தவரையில் சில நடைமுறை சிக்கல்களை தோற்றுவித்துள்ளன. உதாரணமாக கிராமிய சூழ்நிலையில் அங்குள்ள மரபுகளுக்கு பழக்கப்பட்ட நபர் ஒருவர் நீதிமன்றத்துக்கு வந்து சாட்சியமளிக்கும் போது அங்குள்ள அமைப்பு முறையின் காரணமாக உதாரணமாக நீதிபதி, சட்டத்தரணிகள், பொலிசார் சிறைச்சாலை அதிகாரிகள் ஏனைய அரசாங்க உத்தியோகத்தர்கள் பலதரப்பட்ட மக்கள் முன்னிலையில் பொலிசார் மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் கேட்கின்ற கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவருடைய கல்வி, பொருளாதார மற்றும் சமூக நிலைமை என்பனவற்றின் காரணமாக பல சந்தர்ப்பங்களில் தடுமாற்றமான நிலைமைக்கு உள்ளாகின்றார். இந்நிலை அவருடைய உரிமை கோரிக்கை தொடர்பிலே மட்டும் அன்றி அவரைப் போன்ற சாதாரண மக்கள் நீதிமன்றத்திற்கு வந்து தமது உரிமை கோரிக்கைகளை முன்வைத்து நிவாரணம் கோருவதில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. இந்நிலை மாற்றப்படல் வேண்டும்.

இன்று நடைமுறையில் உள்ள தொழில் சட்ட நியதிகளின் படி வேலையாளர் ஒருவரின் சேவை முடிவுறுத்தப்பட்டால் அவர் தான் வேலைமுடிவுறுத்தப்படும் போது இறுதியாக வேலை செய்த இடத்தில் உள்ள தொழில் நீதிமன்றத்திலே வழக்கினை தொடர வேண்டும். ஆரம்ப காலத்தில் தொழில் நியாய சபைகளுக்கு அகில இலங்கை நியாயாதிக்கம் காணப்பட்டது. தற்போதைய சட்ட நிலைமை தொழிலாளர்களுக்கு பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இன்று இலங்கையின் பல இடங்களிலிருந்தும் பலர் கொழும்பில் தொழில் புரிகின்றனர். அம்பாந்தோட்டையில் அல்லது பதுளையில் உள்ள வேலையாளின் சேவை கொழும்பில் முடிவுறுத்தப்பட்டால் அவர் கொழும்பிலேயே வழக்கு தொடர்ந்து சட்டத்தரணியினை அமர்த்தி ஒவ்வொரு தவணையும் வழக்கிற்கு சமூகமளித்து தொழில் அற்ற நிலையில் தன்னுடைய கிராமிய சூழலுக்கு அப்பால் தொழில் நீதிமன்றில் வழக்கின் இறுதிவரை போராடுவது என்பது நடைமுறை சாத்தியமற்றது. இந்நிலையிலே பல சந்தர்ப்பங்களில் பல வேலையாட்கள் தொழில் தருனரின் நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு அல்லது சரணடைந்து செல்ல வேண்டிய நிலைமை தோன்றுகின்றது. இது தொழில் சட்டத்தில் இருக்க கூடிய ஒப்புரவு நீதி முறை கோட்பாடுகளுக்கு முரணாக அமைகின்றது.

சட்ட விரோதமான மதுபான விற்பனை, இரத்தினக்கல் அகழ்வு போன்ற விடயங்களில் சில முக்கியமான விடயங்கள் நீதிமன்றங்களின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. பொருளாதார ரீதியில் வசதிபடைத்த சிலர் மேற்கூறிய சட்டவிரோத செயலில் ஈடுபடுவதுடன் பல சந்தர்ப்பங்களிலே வழக்குகள் பதிவு செய்யப்படும் பொழுது சில அதிகாரிகளின் அனுசரணையுடன் சாதாரண நபருக்கு நாட் சம்பளத் தினை வழங்கி அவரது பெயரில் வழக்கை பதிவு செய்வதுடன், அக்குறிப் பிட்ட நபர் குற்றத்தை ஏற்றுக் கொண்டதன் பின்னர் தண்டப்பணத்தை செலுத்தி அவரை வெளியில் கொணர்வதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் குற்றவாளியாக்கப்பட்ட தண்டம் விதிக்கப்பட்டவரின் பிள்ளைகள் எதிர்காலத்திலே உயர் தொழில்களுக்கு விண்ணப்பிக்கும் பொழுது தந்தை நீதிமன்றில் குற்றச்செயலுக்காக தண்டம் விதிக்கப்பட்டவர் என்ற விடயம் தாக்கம் செலுத்துகின்றது. இவ்விடயமானது சமூகமொன்றின் வளர்ச்சி மற்றும் குற்றம் செய்தவரே தண்டிக்கப்படல் வேண்டும் என்ற குற்றவியல் தத்துவ கோட்பாடு என்பவற்றிற்கு முரணாக காணப்படுகின்றது.

இன்றைய சூழலிலே சட்டவிரோதமான மதுபான உற்பத்தி மற்றும் விற்பனை என்பனவற்றில் பெண்கள் அதிகம் ஈடுபடுவதனை அவதானிக்க முடிகின்றது. மூதுர் பிரதேசத்தில் பதிவு செய்யப்பட்ட 98 வீதமான வழக்குகளில் பெண்களே எதிராளிகளாக காணப்படுகின்றனர். வறுமை விதவைகளாக்கப்பட்டமை தொழில் வாய்ப்புகளின்மை என்பன சட்டத்தரணிகளால் காரணங்களாக கூறப்படுகின்றன. இவ் விடயத்தில் பின்வரும் கருத்து நடைமுறை பயன்மிக்கதாக காணப்படுகின்றது. "சரியான முறையில் புரிந்து கொள்ளப்பட்டால் நலன்களே எல்லா ஒழுக்கநெறிகளுக்கும் இலட்சியம் என்பதால், மனிதனின் தனிப்பட்ட நலன் மனித குடும்பத்தின் நலனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.... குற்றங்களுக்காக தனி மனிதனை தண்டிக்க கூடாது. குற்றங்களின் சமூக விரோத பிறப்பிடங்கள் அழிக்கப்படல் வேண்டும். ஒவ்வொரு மனிதனுக்கும் அவனுடைய உயிராற்றலின் இன்றியமையாத வெளிப்பாட்டிற்கு சமூக வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும். மனிதன் புறச்சூழலினால் உருவாக்கப் படுகின்றான் என்றால் அந்த புறச்சூழல் மனித பண்புடைய தாக்கப்படல் வேண்டும்.(20) எனவேதான் ரஷ்யாவில் நடைபெறும் குற்றவியல் வழக்கு விசாரணைகளின் போது மக்கள் மதிப்பீட்டாளர்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றார்கள்.

முடிவுரை
இதுவரை அவதானிக்கப்பட்ட விடயங்களின் படி நோக்குகின்ற போது சமூக அசைவியக்கத்தினை தடுக்கின்ற சட்டங்கள் இருந்துள்ளதனை ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவ்வாறான சட்டங்கள் பிற்காலத்தில் விமர்சிக்கப்படுகின்றன. எனினும் அவ்வாறான சட்டங்களினால் பின்னோக்கி இழுத்து செல்லப்பட்ட மக்களின் சமூக வாழ்க்கைக்கு சமகாலத்தில் வழங்கப்படும் நிவாரணம் என்ன அல்லது இவ்வாறான சட்ட செயற்பாடுகளினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு எதிர்காலம் வழங்கப்போகும் சட்ட நிவாரணம் என்ன, என்பதற்கு விடை தேடுதல் சமூகபயன் மிக்க விடயமாகும்.

உயர் நீதிமன்றங்களிலே தொடரப்படும் அடிப்படை மனித உரிமைகள் மீறல்கள் தொடர்பிலான வழக்குகளை அவதானிக்கும் போது அதிலே இந் நாட்டின் சாதாரண ஏழை தொழிலாளர் விவசாயிகளினால் தொடரப்படும் வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே காணப்படுகின்றது. சாதாரண மக்களின் உரிமைகள் அவ்வளவில் மீறப்படவில்லை என்பதாக இதனை கொள்ள கூடாது. அவர்கள் சுதந்திரமாகவும் தைரியமாகவும் நீதிமன்றங்களுக்கு வருவதனை தடுக்கும் சமூக, பொருளாதார அரசியல் காரணிகள் ஆழமாக ஆய்வு செய்யப்படல் வேண்டும்.

இறுதியாய்வுகளில் சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் மிக பலமானது. இவ் விடயத்தில் பின்வரும் கருத்தினை முடிவுரையாக இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.

“ ..... ... தனிநபர்களுடைய நலன்களை காட்டிலும் சமுதாயத்தின் நலன்களே தலைமையானவை. அவை இரண்டும் நியாயமான, இணக்கமான உறவுக்குள் கொண்டு வரப்பட வேண்டும். முன்னேற்றம் கடந்த காலவிதியாக இருந்ததை போல எதிர்காலத்தின் விதியாகவும் இருக்க வேண்டுமென்றால், வெறும் செல்வத்தை தேடும் வாழ்க்கை மனித குலத்தின் முடிவான தலைவிதி அல்ல. நாகரிகத்தின் தொடக்கத்துக்குப் பிறகு கழிந்திருக்கின்ற காலம் மனிதன் இதுவரை வாழ்ந்திருக்கின்ற காலத்தில் ஒரு சிறு துளியே ஆகும். அது இனி வரப்போகின்ற யுகங்களின் ஒரு துளியும் ஆகும். சமுதாயம் தகர்ந்து மறைதல் செல்வத்தை முடிவான நோக்கமாக கொண்டிருக்கும் வாழ்க்கையின் முடிவு நிலையாகி விடுமென்று தோன்றுகின்றது. ஏனெனில் அப்படிப்பட்ட வாழ்வு தனக்குள் சுய அழிவுக்குரிய அம்சங்களை கொண்டிருக்கின்றது. நிர்வாகத்தில் ஜனநாயகம், சமுதாயத்தில் சகோதரத்துவம், உரிமைகளில் சமத்துவம், எல்லோ ருக்கும் கல்வி ஆகியவை வரப்போகின்ற முன்னிலும் உயர்வான சமூகக் கட்டத்தை நோக்கியே முன்னேறிக்கொண்டிருக்கின்றன (21) (மார்க்ஸ்).


அடிக்குறிப்பு:
 1. மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் - கம்யூனிஸ்ட் சமூகம்’ முன்னேற்றப்பதிப்பகம் - மொஸ்கோ பக்கம் -10
 2. ஏங்கெல்ஸ்: குடும்பம், தனிச்சொத்து அரசு ஆகியவற்றின் தோற்றம் முன்னேற்ற பதிப்பகம் மாஸ்கோ-290

சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 2) - இரா.ஜெ. ட்ரொட்ஸ்கிபிரித்தானியர் ஆட்சியில் சட்டமும் பாதுகாப்புமும்

பிரித்தானியரின் ஆட்சிக்காலத்திலே இந்தியாவில் சிருஷ்டிக்கப்பட்ட வறுமை நிலைமை காரணமாக இந்தியத் தொழிலாளர்கள் இலங்கை வந்தனர். "தமது கிராம எல்லைக்குள்ளேயே தமது உலகத்தை தரிசித்துக்கொண்டு சலனமற்றிருந்த அந்த விவசாயிகள் காலனித்துவ கொள்ளையடித்தலுக்கு உட்பட்டு உணவு தேடி ஊர்ந்தனர். ரொட்டித்துண்டுக்கு முன்னே அவர்களின் கிராமிய உலகம் மண்டியிட்டது. அவர்கள் தமது உழைப்பு சக்தியை விற்பனை செய்வதற்கு தயாராகிக்கொண்டனர். வரலாறு புதிய அத்தியாயத்தினை தொடங்கியது. இந்திய விவசாயிகள் அந்நிய நாடுகளில் உழைப்பு சக்தியை விற்பதற்கு தமது கிராமிய எல்லைகளைக் கடந்தனர்(12) எனவும் 1866ல் ஒரிசா மாநிலத்தில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் பசியினால் இறந்தனர்'(13) எனவும் இந்நிலை விளக்கப்படுகின்றது.
'எண்ணி குழிவெட்டி இடுப்பொடஞ்சி நிற்கையிலே
வெட்டு வெட்டு என்கிறானே வேலையத்த கங்காணி”
"பாவி கணக்கபுள்ளே, பத்துராத்து போடுறானே"
"கோண கோண மலையேறி
கோப்பிப்பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சின்னு
உதைச்சானைய்யா சின்னதொர”
"ஒர மூட்ட தூக்கச் சொல்லி
ஒதைக்கிறானே கண்டாக்கையா"
போன்ற நாட்டார் பாடல்கள் தொழில் துறையில் இருந்த பாதுகாப் பற்ற நிலைமையினை தெளிவுபடுத்துகின்றன. இக்காலகட்டங்களிலே நிலவிய தொழில் சட்டங்கள் கூட முறையாக தொழில் தருனர்களினால் பின்பற்றப்படவில்லை என பிரெஸ்கெடிலின் வழக்கு விசாரணைகளின் போது தெரியவருகின்றது.

பிரெஸ்கெடில் (Bracegirdle) என்தோட்டத்துரை நாவலப்பிட்டிய நகரில் தொழிலாளர் மத்தியில் வெளியிட்ட கருத்துகளுக்காக அப்பொழுதிருந்த ஆளுனர் Edward stubbs, பிரெஸ் கெடிலை இலங்கையில் இருந்து வெளியேறும் படி கட்டளையிட்டார். பிரெஸ்கெடில் அதன்படி இலங்கையை விட்டு வெளியேறாமையினால் அவரை கைது செய்து வெளியேற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சில நாட்கள் தலைமறைவு வாழ்க்கையின் பின்னர் பிரெஸ் கெடில் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து ஆட்கொணர் எழுத்தாணை " கோரி இலங்கை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. Abrahams, C.) (பிரதம நீதியரசர்) Maartensz. SoertS J ஆகிய நீதியரசர்கள் அப்போதிருந்த சட்ட நிலைமைகளை கவனமாக ஆய்வு செய்ததன் பின்னர் பிரெஸ்கெடிலின் கைதும் அவரை நாட்டில் இருந்து வெளியேற்று வதற்கான கவர்னரின் கட்டளையும் சட்டமுரணானது எனத் தீர்ப்பளித்து பிரெஸ்கெடிலை விடுதலை செய்தனர். (14)
இந்த தீர்மானத்தின் பின்னர் 1937 ம் ஆண்டளவில் இலங்கையின் அரசியலில் ஜனநாயக பாரம்பரியங்கள், சட்டவாட்சி விழுமியங்கள், அரசியலமைப்பு மரபுகள், தொழிலாளர் சட்டங்கள், இலங்கையின் சுதந்திரம் என்பன தொடர்பிலே அரச சபையில் மிகவும் முக்கியமான விவாதங்கள் நடைபெற்றன. இலங்கையின் சட்டவரலாற்றிலும் அரசியல் வரலாற்றிலும் இவ்வழக்கு தீர்ப்பின் தாக்கங்கள் மிக ஆழமாகப் பதிந்துள்ளன. (15)

பிரெஸ்கெடிலின் உரையின் சாராம்சம் பின்வருமாறு அமைந்திருந்தது. "நீங்கள் அந்த வெள்ளை மலையினை பாருங்கள். அங்குள்ள வெள்ளை மாளிகையிலே வெள்ளையர்கள் சொகுசாக வாழ்கின்றார்கள். அவர்கள் உங்கள் இரத்தத்தினை உறிஞ்சுகின்றனர். நீங்கள் 9 மணித்தியாலங்கள் வேலை செய்ய வேண்டும் அதற்கு மேல் ஒரு நிமிடம் கூட நீங்கள் வேலை செய்யத்தேவையில்லை. அவ்வாறு நீங்கள் வேலை செய்தால் தோட்டம் அதற்கு மேலதிக நேர கொடுப்பனவினை வழங்க வேண்டும். ஆனால் உங்களுக்கு தெரியும் நீங்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு 12 மணித்தியாலம் வேலை செய்ய வேண்டும் என்ற விதியுள்ளது. உங்கள் மேலதிக நேர வேலைக்கு தோட்ட துரைமார் கொடுப்பனவு செய்வதில்லை. (16)

"தோழர்களே! சுதந்திரமும் நீதியும் நிறத்தினால் தீர்மானிக்கப்படக் கூடாது என நான் நம்புவதனால் உங்கள் பக்கத்தில் இருக்கின்றேன். என்னுடைய நண்பர்களே, நீங்கள் கறுப்பு நிறத்தோல் உடையவர்களாக இருந்தாலும் வெள்ளை இதயத்தினை கொண்டிருக்கின்றிர்கள். ஆனால் என்னுடைய நாட்டவர்களோ வெள்ளை நிறத் தோலை கொண்டிருந்தாலும் கறுப்பு சூழ்ச்சிகள் நிறைந்த உள்ளத்தினை கொண்டுள்ளனர். (17)

பிரெஸ்கெடில் தன் அனுபவத்தினை கூறும் பொழுது எச்.டி. தோமஸ் என்ற பெரிய துரையினைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார். "எச். டி. தோமஸ் தன்னுடைய வேலையாட்களை கடுமையாக நடத்தினார். தொழிலாளர்களின் லயக்காம்பிராக்களுக்கு சென்று அவர்களை வேலைக்கு செல்லும் படி வற்புறுத்தினார். பல தொழிலாளர்கள் மலேரியா நோயினால் வருந்திய போதும் அவர்களை தேயிலை பறிக்கும் படி கூறினார். மேலும் அவர் தோட்ட பாட சாலைக்குச் சென்று சிறுவர்களையும் தேயிலைபறிக்க செல்லும் படி கட்டாயப்படுத்தினர். அவர்கள் படிப்பதைவிட தேயிலை பறிப்பதே நல்லது என்றார். எழுத வாசிக்க அவர்கள் படிப்பது பின்னர் அவர்களுக்கு அவர்களுடைய வாழ்நிலையைப்பற்றிய சிந்தனையினை தந்துவிடும். (18) மேற்கூறிய கூற்று அந்தக்காலகட்டத்திலே இருந்து சட்டங்களினால் முறையான பாதுகாப்பினை வழங்க முடியாமற்போனமையினை சுட்டிக்காட்டுகின்றது.

பெருந் தொகையான தொழிலாளர்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்ட பெருந்தோட்ட தொழில் துறையின் காரணமாகவும் உற்பத்தி உறவுகளிடையே ஏற்பட்ட முரண்பாடுகளின் காரணமாகவும் பல தொழில்சட்டங்கள் உருவாக்கப்பட்டன. இச்சட்டங்கள் அனைத்தும் உழைப்பாளிகளின் போராட்டங்களை மந்தப்படுத்தி அவர்களின் உழைப்புச் சுரண்டலுக்கே வழிவகுத்தன என மனித உரிமை ஆய்வாளர்களினால் விமர்சிக்கப்படுகின்றன. மனித உரிமைகள் மற்றும் சமூகவியல் அபிவிருத்தி நோக்கில் இச்சட்டங்களில் காணப்பட்ட விமர்சனத்துக்குரிய சில விடயங்களை இங்கு சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

1865 ம் ஆண்டின் 11 ம் இலக்க இந்திய தோட்ட தொழிலாளர் கட்டளைச்சட்டம், 1889 ம் ஆண்டின் 13 ம் இலக்க தோட்டதொழிலாளர்கள் (இந்திய) கட்டளைச்சட்டம் (இச்சட்டம் 1890 ல் 7 ம் இலக்க சட்டத்தாலும் 1909 ம் ஆண்டின் 9 ம் இலக்க, 1921 ம் ஆண்டின் 43 ம் இலக்க, 1955 ஆண்டின் 22 ம் இலக்க சட்டங்களினாலும் திருத்தப்பட்டன. மேலும் 1921,1932,1941, 1943,1945,1978 ஆகிய ஆண்டுகளிலும் இச்சட்டத்திற்கு திருத்தங்கள் கொண்டு வரப்பட்டு ள்ளன.) ஆகியன சில பிரதானமான தொழில் சட்டங்களாகும். 1889 ஒக்டோபர் மாதம் 31 ம் திகதி நடைமுறைக்கு வந்த 1889 ம் ஆண்டின் 13 ம் இலக்க தோட்ட தொழிலாளர் (இந்திய) கட்டளைச்சட்டத்தின் முகப்புரையில் இலங்கை தோட்டங்களில் தொழில்புரியும் இந்திய தொழிலாளர்கள் தொடர்பான சட்டங்களை தொகுக்கும் சட்டம் எனக்குறிப்பிடப்பட்டுள்ளதுடன் அதன் பொருள்கோடல் பகுதியிலே 'labourer என்ற பதம் தொழிலாளி, கங்காணி (பொதுவில் இந்திய கூலிகள்) துலுக்கன் என்று அறியப்படும் முஸ்லீம்களையும் குறிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

இக்காலகட்டத்தில் தீர்க்கப்பட்ட வழக்குகளிலே நீதியரசர்களும் 'கூலிகள் என்ற பதத்தினையே பாவித்துள்ளனர். உதாரணமாக Scovel v Mootammah (9 NLR, Page – 83), Solamalay v Waitilingham (16 NLR- Page 353) Jacob v Velaian kangani (1 NLR, Page -42), Saunders v Sinniah kangani, Price v Suppan(15 NLR-Page 283) போன்ற வழக்குகளிலே இவ்வழக்கின் தீர்ப்பினை எழுதிய உயர் நீதிமன்ற நீதியரசர்கள் இந்தியன் கூலிகள் என்றே தொழிலாளர்களை குறிப்பிடுகின்றனர்.

Labourer, workmen,employee, servant போன்ற வார்த்தைப் பிரயோகங்கள் அக்காலத்தில் நடைமுறையில் இருந்த போதும் 'Cooly என குறிப்பிட்ட மக்கள் கூட்டத்தினை சுட்டிக்காட்டியிருப்பது அக்காலத்தில் இம்மக்களின் மீதான அப்போதைய சமூக கணிப்பீட்டினை காட்டுகின்றது. கூலிகள்'என்ற நிலையில் இருந்து 'பிரஜைகள் என்ற நிலையினை நோக்கி இந்த சமூகம் முன்னேறுவதற்கு சில நூற்றாண்டுகளை கடக்க வேண்டியிருந்தது.

இந்த மாற்றத்தினை Angamuthu v The Superintendent of Tangakele Estete (58 NLR Page 190) என்ற வழக்கில் அவதானிக்க முடிகின்றது. 1956 ம் ஆண்டு நீதியரசர் T.S Fernando தன்னுடைய வழக்கு தீர்ப்பிலே கூலிகள்'என்ற வார்த்தைக்கு பதிலாக Labourer என்ற பதத்தினையே பாவித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

1865 ம் ஆண்டின் 11 ம் இலக்க தோட்ட தொழிலாளர் (இந்திய) சட்டத்தின் பிரிவு 21 ன் படி தோட்ட நிர்வாகத்திடம் விடுமுறை பெறாது அல்லது நியாயமான காரணமின்றி தொழிலாளி ஒருவர் தோட்டத்தை விட்டு வெளியேறினால் அது தண்டிக்கப்படக்கூடிய குற்றமொன்றாகும்.

மேலே கூறப்பட்ட Scovell y Mootammah வழக்கில் பெண் தொழிலாளி ஒருவர் தோட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெறாமல் தோட்டத்தை விட்டு வெளியேறியமையினால் அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. இவ்வழக்கு அட்டன் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டதுடன் இப்பெண் தொழிலாளி கொட்டகலை DerryClare தோட்டத்தைத் சேர்ந்தவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலகட்டத்தில் இவ்வாறான ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன் பல தொழிலாளிகள் இவ்வாறான பிரச்சனைக ளுக்கும், தண்டனைகளுக்கும் முகங் கொடுத்தனர். இவ் விடயம் தொடர்பிலே அறிக்கையிடப்படாத பல வழக்குகளின் விபரங்கள் திரட்டப்பட வேண்டும். இன்றைய தொழிலாளர் உரிமை தொடர்பிலான சர்வதேச மனித உரிமை பிரகடனங்களின் அடிப்படையில் நோக்கும் போது மேற்கூறிய சட்டத்தின் தாக்கத்தினை தெளிவாக அளவிட முடியும்.

இச்சட்டங்களில் காணப்பட்ட இன்னுமொரு விமர்சனத்துக் குரிய அம்சத்தினை இவ் விடயத்தில் குறிப்பிடுவது பொருத்த மானதாகும். தொழிலாளி ஒருவரின் சேவை நிர்வாகத்தினால் முடிவு றுத்தப்படின் அவர் அந்த தோட்டத்தினை விட்டு வெளியேற வேண்டும். அவ்வாறு வெளியேறாத சந்தர்ப்பத்திலே அச்செயல் குற்றமுறையான அத்து மீறல் எனக் கருதப்பட்டு அத்தொழிலாளிதண்டிக்கப்பட்டுள்ளார். இவ்வாறான அடிப்படையிலேயே தொழிற்சங்க நடவடிக்கைகளுக்காக தொழிற்சங்கவாதிகள் தோட்டங்களுக்கு செல்வது தடை செய்யப்பட்டிருந்தது. இச்சட்டங்களை எதிர்த்து தொழிற்சங்கவாதிகள் போராடியமை மற்றும் அவர்கள் மீதான வழக்கு நடவடிக்கைகளின் தொடர்பில் தகவல்கள் அறியக்கிடக்கின்றன.

Marimuthu v Wright (NLR page 253) என்ற வழக்கில் அரசியல், நிறுவன ஸ்தாபனம் ஒன்றினால் பிரகடனப்படுத்தப் பட்ட வேலை நிறுத்த போராட்டமொன்றில் பங்குபற்றிய தொழிலாளி ஒருவரின் சேவைகள் தோட்ட நிர்வாகத்தினால் முடிவுறுத்தப்பட்டது. அதன் பின்னர் அவர் தோட்டத்தை விட்டு வெளியேறும் படி அறிவிக்கப்பட்டார். அதனை மீறி அவர் தோட்டத்தில் இருந்ததனால் 'குற்றமுறையான அத்துமீறல்புரிந்தார் என்ற அடிப்படையிலே 5 கிழமை கடுழிய சிறைத் தண்டனையும் 50 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டது.

இதே போல் மேலே கூறப்பட்ட Angamuthu v the Superintendent of Tangakele Estate என்ற வழக்கிலே தோட்ட வேலை முடிவுறுத்தப் பட்டதன் பின்னர் தோட்டத்தில் தங்கியிருந்தார் என்ற வகையிலே குறிப்பிட்ட தொழிலாளிக்கு 6 வார கடுழிய சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.

இன்றைய தொழில் சட்டத்தினதும் தொழிலாளர்களினதும் உரிமைகள் தொடர்பான கருத் தேற்புகளினதும் அடிப்படையில் நோக்கும் போது மேற்கூறிய சட்டத்தின் செயற்பாடு இலங்கை சட்டமுறையில் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தினை அவதானிக்க முடியும்.

தோட்ட தொழிலாளி ஒருவரின் சேவை தோட்ட நிர்வாகத்தினால் முடிவுறுத்தப்படும் பொழுது அவருடைய வாழ்க்கைத் துணையின் சேவையினையும் தோட்ட நிர்வாகம் முடிவுறுத்த முடியும் என மேற்கூறிய சட்டப்பிரிவுகளிலும், உயர்நீதிமன்ற தீர்ப்புகளிலும் குறிப்பிட்டுள்ளன. The Ceylon Workers Congress v The Superintendent of Gona.kelle Estate (73 NLR page 494) The Superintendent of Oakwell Estate Haldamulla v Lanka Estate Workers Union, The Superintendent of Walapane Estate v Walapane SriLanka Wathukamkaru Sangamaya ஆகிய வழக்குகளிலே வாழ்க்கைத் துணையின் சேவையினை முடிவுறுத்துவது சட்ட ரீதியானது எனத்தீர்க்கப்பட்டுள்ளது. எனினும் The Ceylon Workers Congress v The Superintendent of Kalabokka என்ற வழக்கிலே வாழ்க்கைத் துணையின் சேவையினையும் முடிவுறுத்துவது சட்ட முரணானது எனத் தீர்க்கப்பட்ட போதும் பின்வந்த வழக்குகளிலே இத்தீர்ப்பு பின்பற்றப்படவில்லை. இச்சட்டங்கள் இன்றுவரையும் நடை முறையில் இருந்து வருகின்றன என்பதுடன் அவை மாற்றப்பட்டு தேசிய ரீதியில் உருவாக்கப்படும் தொழில் சட்டங்களுக்குள் பெருந்தோட்ட தொழில் துறையும் உள்ளடக்கப்படல் வேண்டும் என சட்ட ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

1927 ம் ஆண்டு 27 ம் இலக்க சட்டத்தினால் 2 (561755 Ll il Minimum Wages Ordinance தொழிலாளர்களின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பிலே பிரதானமான சட்டமாக கருதப்படுகின்றது. சம்பள சபை ஒன்றினால் தொழில் துறைகளுக்கான ஆக குறைந்த சம்பளம் தர்மானிக்கப்படுகின்றது. அந்ததந்த காலங்களிலே நிலவுகின்ற சமூக, பொருளாதார அரசியல் நிலைமை களுக்கு ஏற்றவகையிலே தொழிலாளர்களின் சம்பளம் தீர்மானிக்கப் படின் ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு எதிரான பல சவால்களை வெற்றி கொள்ள கூடிய வாய்ப்பும் சமூக அபிவிருத்தியும் ஏற்படுகின்றன. தொழி லாளர்களின் சம்பள நிர்ணயம் தொடர்பிலே கையாளப்படுகின்ற அளவு கோல்கள் தொடர்பிலே வாதபிரதிவாதங்கள் காணப்படுகின்றன. 1980 கள் வரை ஆண் பெண் சம்பள பாகுபாடு காணப்பட்டது. பெண்ணு ரிமை நோக்கில் பெண்களின் மீதான உழைப்பு சுரண்டலாக இவ்விடயம் அடையாளம் காணப்படுகின்றது.

பெருந்தோட்ட தொழில் துறையில் நிலவிய துண்டு முறை ஒப்பந்த கூலி முறை நவீன அடிமைமுறையாக அடையாளம் காணப்பட்டது. ஆய்வாளர் திரு வ.செல்வராஜா இந்நிலையினை பின்வருமாறு விபரிக்கின்றார் "அடிமை முறை வாழ்நாள் முழுவதும் அடிமைத்துவம் காணப்பட ஒப்பந்த கூலி முறை குறிப்பிட்ட காலத்திற்கு அதாவது ஒப்பந்தகாலத்திற்கு மட்டுமே வரையறுக்கப்பட்டிருந்தது. எனினும் இந்திய வம்சாவளி தோட்டத் தொழிலாளர்கள் தலைமுறை தலைமுறையாக கடனாளிகளாகவே இருந்தைமையால் ஒப்பந்தம் என்பதும் காலவரையறையற்றதாகவும் இருந்தது. எனவேதான் இது நவீன அடிமைமுறைக்கு ஒப்பானதாக இனங்காணத்தக்கதாக அமைகின்றது. (19)

தொழிலாளர்களுக்கு கங்காணியினால் தோட்டத் துரை மார்களினால் கடனாக வழங்கப்பட்ட தொகை முழுமையாக செலுத்தப் படும் வரை தொழிலாளி தோட்டத்தை விட்டு வெளியேற முடியாது. தொழில் உறவினை முடிவுறுத்திக்கொள்ள முடியாது. இந்நிலையில் 1921 ம் ஆண்டின் 43 ம் இலக்க கட்டளைச்சட்டத்தின் மூலம் 'துண்டுமுறை” ஒழிக்கப்பட்டது. இச்சட்டம் இத்தொழிலா ளர்களின் சமூக வாழ்விலே அப்பொழுதிலிருந்த வெளிப்படையான அடிமை முறையினை தளர்த்தியது என்ற வகையிலே முக்கியமானதாக கருதப்படுகின்றது.

தொடரும்
அடிக்குறிப்பு :

12. எங்கெங்கும் அந்நியமாக்கப்பட்டவர்கள்
13. S.Nadesan ‘A History of The Upcountry Tamil People’Nandalala puplishers Note -
14. Wesley S.Muthiah and Sydney Wanasinghe ‘The Bracegirdle Affair” AYoung Socialist Publications, Colombo -1997 page 1998.
15. Ibid 454.
16. Ibid 524.
17. Ibid 289.
18. Ibid page 1
19. வ.செல்வராஜா "மலையக மக்களும் புத்தி ஜீவிகளும்-ஒரு மீள்
நோக்கு" இர.சிவலிங்கம் ஞாபகார்த்த குழு 2004 பக்கம் 4வெள்ளையர்களின் அடக்கு முறைக்கு மத்தியில் தொழிலாளருக்காக செயற்பட்ட - தமிழ் துரை

குமார் ரட்ணவேல்
இந்நாட்டில் பெருந்தோட்டக் கைத்தொழில் ஆரம்பிக்கப்பட்டதன் பின்னரே தென்னிந்திய தொழிலாளர்களின் வருகை பெருகியது. இவ்வாறு இந்நாட்டுக்கு வருகை தந்த தொழிலாளர்கள் வெள்ளை க்கார துரைமார்களின் அடக்கு முறைகளு க்கு உள்ளானார்கள்.

வெள்ளைக்காரர்களின் அடக்குமுறை 1950கள் வரை நீடித்தது. இவ்வாண்டின் பின்னரே பெருந்தோட்ட தொழிற்சங்கங்களின் அவசியம் உணரப்பட்டது. அதன் விளைவாக பல போராட்டங்கள் பாரியள வில் மலையகத்தில் இடம்பெற்றன. வெள்ளைக்கார முதலாளித்துவ அடக்கு முறைக்கு எதிராகவே தொழிலாளர் போராட்டங்கள் இடம்பெற்றன.

சகோதர சிங்கள விவசாயிகளின் மீது ஆங்கிலேய அரசாங்கம் விவசாய வரி, நெல் அறுவடை வரி என வரிகளை விதி த்து அட்டூழியம் செய்தது. இவ்வரி முறை க்கு எதிராகவும் சிங்கள மக்களுக்கு ஆதரவாகவும் 1860களில் ஆங்கிலேயரான ஜோர்ஜ் வோன் குரலெழுப்பினார். இதனால் இவர் சிங்கள, சகோதர இன மக்களால் சிங்கள சுத்தா என அழைக்கப்பட்டார்.

இவ்வாறே க. ரட்ணவேல் என்ற தமிழ் தோட்டத்துரை தமிழ் தோட்டத்தொழிலாளர்களுக்கு ஆதரவாக செயற்பட்டார்.

1955களுக்குப் பின்னர் பல தோட்டங் களின் ஐரோப்பிய துரைமார் இவரை TAMIL EUROPEAN SUPERIN (தமிழ் ஐரோ ப்பிய துரை) என அழைத்தனர்.

இந்திய வம்சாவளித் தோட்டத்தொழிலாளர்களோ இவரை வெள்ளைக்காரர் தமிழ் துரை என அழைத்தனர்.

குமார் ரட்ணவேல் இந்திய வம்சாவளித் தமிழராவார். இவரின் தகப்பனார் திருச்சி மாவட்டம் ஓக்கரை கிராமத்தைச்சேர்ந்தவர். அம்மா மீனாட்சி அம்மாள் ஆவார். 1900  1920ஆம் ஆண்டுகளிலே தென்னிந்திய தமிழர்கள் மாத்தளை, கண்டி மாவட்டங்களின் காணிகளை விலை கொ டுத்து பெற்று தேயிலை, மிளகு, இலவங்கப்பட்டை (CINNAMON), கொக்கோ பயிர்ச் செய்கை என்பனவற்றில் ஈடுபட்ட னர். 1930 களுக்குப் பின்னரே தென்னிந்தியத் தமிழர்கள் பெரியளவில் தேயிலை பெருந்தோட்டங்களை நிறுவினர்.

இவ்வாறான காலத்தில் ரட்ணவேலின் தகப்பனார் கருப்பையாபிள்ளை கண்டி தெல்தெனிய பிரதேசத்தில் மல்பான தோட்டத்தின் உரிமையாளரானார்.

ஐரோப்பிய தோட்டத்துரை குழந்தைகளின் கல்வி கற்றலுக்காக கண்டியில் புனித சின்னப்பர் கல்லூரி (ST.PAULS COLLEGE) தோற்றுவிக்கப்பட்டது. இக் கல்லூரியிலேயே ரட்ணவேல் கல்வி கற் றார்.

இது ஆங்கில மொழி மூலமான கல்லூரியாகும். இவ்வாறான மாற்று சூழலில் கல்வி கற்றமையால் இவரிடம் ஆங்கி லேயரின் கலாசார சூழல்கள் தொற்றிக் கொண்டன.

ரட்ணவேலின் 19ஆவது வயதில் தகப் பன் கருப்பையாபிள்ளை மரணத்தை தழுவ மல்பான தோட்ட நிர்வாகத்தை இவர் பொறுப்பேற்றார். தனது 19 வயதில் ரட்னவேல் தோட்டத்துரையானார்.

இவர் தோட்டத்தொழிலாளர்களை மதி த்து செயற்பட்டதால் தோட்டம் பெரும் வளர்ச்சியடைந்தது. மல்பான தோட்டத் தின் வளர்ச்சிகண்டு வெள்ளைக்கார துரை மார் பொறாமை கொண்டனர். வெள்ளை க்கார துரைமார்களுடன் பழகிய ரட்ண வேல் இத்தோட்டத்தை பொறுப்பெடுத் ததும் ஆரம்பத்தில் தொழிலாளர்கள் அச்சத்துடன் இருந்தனர். பின்னர் அவரது தந்தை கருப்பையாவின் பாதையில் இவரும் பயணிப்பதைக்கண்டு அவர்கள் அச்சம் நீங்கியது.

இவ்வாறான நிலையில் நியூ தம்புள்ள கம்பெனி லிமிடெட் நிறுவனத்துக்கு சொந்தமான ரவுன்பங்களாத் தோட்டத் தில் 18051956 பெரும் போராட்டம் வெடித்தது. அக்காலத்தில் இ.தொ.கா.வை விட்டு விலகி ஜனநாய தொழிலாளர் காங்கிரஸ் தொழிற்சங்கத்தை அமரர் அஸீஸ் ஸ்தாபித்தார்.

இத்தொழிற்சங்கத்தை இலங்கை தோட்ட முதலாளிமார் சங்கம் அங்கீகரிக்க மறுத்ததை தொடர்ந்தே இப்போராட்டம் இடம்பெற்றது. போராட்டத்தின்போது இத்தோட்டத்தில் தொழிலாளியாக இருந்த ஏப்ரஹாம் சிங்கோ என்ற சிங்கள தோழர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

இப்போராட்டத்தை தொடர்ந்து இக்கம் பெனிக்கு சொந்தமான 17 தோட்டங்க ளில் ஆங்கிலேய துரைமார்களின் அடக்கு முறை பெரியளவில் விஸ்தரிக்கப்பட்டது. தொழிலாளர்கள் அடக்கு முறைக்கு உள்ளானார்கள்.

இவ்வாறான நிலையில் இக்கம்பனியின் தோட்டமான ஆனைத் தோட்டத்தில் (Towysland Estate) தொழிலாளர்கள் வெள்ளைக்கார நிர்வாகத்துக்கு எதிராக செயற்பட்டனர். இத்தொழிலாளர்களை அடக்க இயலாது திண்டாடிய வெள்ளைக் கார நிர்வாகம் க.ரட்ணவேலின் உதவியை நாடியது. இதற்கு காரணமாக இருந்தவர்கள் இவரின் நண்பர்களான வி.அன்டர்சன். எம்.கெரி. ஜே.ராக்லிச் போன்றவர்களேயாவார்.

1959 இல் டயகம நகரத்துக்கு உச்சியில் காணப்படும் ஆனைத்தோட்டம் ரட்ணவேலிடம் திம்புல்ல கம்பெனியால் கையளிக்கப்பட்டது. தனது தகப்பனாரின் வழி நடத்தலில் தோட்டத் தொழிலாளர்களி டம் செயற்படும் முறைமையை தெரிந்து வைத்திருந்த ரட்ணவேல், ஆங்கிலேய நிர்வாகத்துடன் முரண்படக் காரணமான காரணிகளை இனங்கண்டு இத்தோட்ட நிர்வாகத்தினை அதிரடியாக மாற்றம் செய்தார்.

ஆங்கிலேயரின் கடுமையான கெடுபிடி க்குள் வதைபட்டு வாழ்ந்த ஆனைத்தோட்டத் தொழிலாளர்கள், தங்கள் பிரச்சினைகளை சுயமாக தோட்டத்துரையான ரட்ணவேலிடம் எடுத்துக்கூற வழிவகுத்தார். தொழிலாளர்களின் மொழிப்பிரச்சினையும் இல்லாது போயிற்று கங்காணி, கணக்குப்பிள்ளை போன்ற இடை தரகர்களின் செயற்பாடுகள் இல்லாமல்போயின.

தொழிலாளர்களை தனது அலுவலகத்திற்குள் வருகை தந்து முறைப்பாடுகளை தெரிவிக்கும் முறையை ஏற்படுத்தினார்.

ஆங்கிலேயரின் உடை, நடை, கலாசா ரம் இருந்தாலும் மது, சிகரட் பாவனை இல்லாது ஒரு உதாரண மனிதராக வாழ்ந்துள்ளார். இவ்வாறான ஒரு வித்தியாசமான நடைமுறையின் தாக்கத்தால் ஆனைத்தோட்ட மக்கள் இவரை வெள்ளைக்கார தமிழ் துரை என அழைத்துள் ளனர். இவ்வாறு பத்து வருடங்கள் ஆனைத்தோட்டத்தில் கடமையாற்றினார்.

திம்புல்ல தோட்டக் கம்பனிக்கு சொந்தமான சந்திரிகாமம் தோட்டத்தில் தோட்டத்துரையாக இருந்த ரஞ்சன் விஜேரத்ன இவரின் நெருங்கிய நண்பராவார்.

இவர் 15.02.1989 இல் பாராளுமன்றத் தேர்தலில் ஐ.தே.கட்சியின் தேசியப்பட்டி யல் மூலமாக அரசியலுக்குள கால்பதித்தவர். 18.02.1989 இல் ஐ.தே.கட்சி அமைச்சரவையில் வெளிவிவகார அமைச்சராக வும் பிரதி பாதுகாப்பு அமைச்சராகவும் நியமனமானார்.

குறுகிய காலத்தில் பேசப்படும் அரசியல்வாதியாக மாறிய இவர் 02.03.1999 கொழும்பில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் சிக்கி காலமானார். இவர் 1968இல் விட்டோல்ஸ் தேயிலை தோட்டக் கம்ப னியில் ரட்ணவேலுவை இணைத்து விட்டார்.

இதற்கு முக்கிய காரணம் பல தேயிலைத் தோட்டங்களை கொண்ட விட்டோ ல்ஸ் கம்பனியின் கீழிருந்த பல தோட்டங் கள் நஷ்டத்தில் இயங்கின. இதை வருமா னம் ஈட்டும் தோட்டங்களாக மாற்றவே ரஞ்சன் விஜேரத்ன மூலமாக இந்த ஏற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இக்கம்பெனிக்கு சொந்தமான ஓஸ் போன், மியனலிட்ட, ஓகியோ கிரேட் வெலி ஆகிய தோட்டங்களின் நிர்வாகத்தினை பொறுப்பேற்று தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகளை தீர்த்து பெரும் இலாபம் பெறும் தோட்டங்க ளாக மாற்றியமைத்தார்.

23.07.1977 இல் ஜே.ஆர் அரசில் விவசாய காணி அமைச்சராக தெரிவான ஈ.எல். சேனநாயக்க, ரட்ணவேலுவை கண்டி மாவட்டத்தின் ஜனவசம நிறுவனத்தின் பிராந்திய முகாமையாளராக செயற்பட வைத்தார்.

இவ்வாறான பின்புலத்தைக் கொண்ட ரட்ணவேல், ஆங்கிலேயரோடு வாழ்ந்தா லும் தனது இறுதிக்காலம் வரை இந்திய வம்சாவளி தமிழ் தோட்டத் தொழிலா ளர்களின் நலனுக்காகவே வாழ்ந்ததுடன் தொழிலாளர் துயர் கண்டு வருந்திய தோட்ட அதிகாரியாக செயற்பட்டார்.

தோட்டத் தொழிலாளருக்காக போரா டிய மாத்தளை ரெலுகஸ் தோட்ட வெள் ளைக்கார துரை எம்.எ.எல் பிரேஸ் கேடில் போன்று ரட்ணவேல் ஆனைத் தோட்டம் முதல் பல தோட்டங்களில் வாழ்ந்த தொழிலாளர்களின் மனதிலிருந்து என்றுமே மறக்க முடியாத ஒருவராக வாழ்கிறார்.

1993 இல் தமிழகம் சென்ற தருணத்தில் திடீர் சுகவீனமுற்று க.ரட்ணவேல் அங்கு காலமானார். தனது 78 ஆவது வயதில் காலமான இவரின் பூதவுடல் கொழும்பு க்கு கொண்டு வரப்பட்டு தகனம் செய்யப் பட்டது.

நன்றி - வீரகேசரி

சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 1) - இரா.ஜெ. ட்ரொட்ஸ்கிஇரா.ஜெயராமன் ட்ரொட்ஸ்கி ஆற்றிய அமரர் இரா.சிவலிங்கம் அவர்களின் பத்தாவது ஞாபகார்த்த நினைவுப் பேருரை இது. நூல் வடிவில் வெளியாகியிருக்கும் இந்த விரிவான ஆய்வுக் கட்டுரை இந்த நேரத்தில் மிகவும் அவசியமானதொரு பதிவு. பல ஆய்வுகளுக்கு திறந்துவிடும் கட்டுரையும் கூட. தொழில்நுட்ப காரணங்களால் இதனை "நமது மலையகம்: பகுதி பகுதியாக வெளியிடுகிறது.
பண்டாரவளை நீதிமன்றின் நீதவானாகவும் நுவரெலியா மேலதிக மாவட்ட நீதிபதியாகவும் தற்போது கடமையாற்றுகின்ற திரு.இரா.ஜெ. ட்ரொட்ஸ்கி அட்டன் பிரதேசத்தினை பிறப் பிடமாகக் கொண்டவராவார்.
அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி, ஹைலண்ஸ் கல்லூரி ஆகியவற்றின் பழைய மாணவரான இவர் கொழும்பு பல்கலைக் கழகத்தில் சட்டமாணி (விசேட) பட்டத்தை பெற்றுள்ளார். கொழும்பு பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சட்டபீடங் களில் வருகை தரு விரிவுரையாளராகவும் மனித உரிமைகள் சட்டத்தரணியாகவும் கடமையாற்றிய திரு.ட்ரொட்ஸ்கி பல்வேறு மனித உரிமை அமைப்புகளில் மனித உரிமைகள் தொடர்பாக விரிவுரைகளையும் நிகழ்த்தியுள்ளார். 

சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் :
ஒரு விமர்சன நோக்கு

அனைவருக்கும் வணக்கம்!

அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்த பத்தாவது நினைவுப்பேருரையை நிகழ்த்துவதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்தமை குறித்து நான் உண்மையில் மகிழ்ச்சியடைவதோடு இதனை எனக்கு கிடைத்த கெளரவமாகவும் கருதுகிறேன்.
அறுபதுகளில் ஹைலன்ஸ் கல்லூரியில் ஆசிரியராகவும் பின்னர் அதிபராகவும் கடமையாற்றிய அமரர் இர. சிவலிங்கம் மலையக சமூக மேம்பாட்டுக்கு தன்னை அர்ப்பணித்த ஒருவராவார். அவரோடு இணைந்து பணிபுரிந்த அவரது நண்பரான அமரர். எஸ். திருச்செந்துரனையும் நாம் இங்கு நினைவிற் கொள்ளவேண்டும். இந்த இருவரது தன்னலமற்ற சேவைகளின் காரணமாக மலையகத்தில் கல்வி, கலை இலக்கியம், சமூக மற்றும் அரசியல் தொடர்பான ஒரு விழிப்புணர்ச்சி ஏற்பட்டது. அத்துடன் மலையக இளைஞர்களையும் யுவதிகளையும் அமைப்பு ரீதியாக ஒன்று திரட்டுவதிலும் அமரர்கள் இருவரும் பெரும் பங்களிப்பு செய்தனர்.

எனவே அப் பெருமகனது பத்தாவது ஞாபகார்த்த நினைவுப் பேருரையை ஆற்றுமாறு ஞாபகார்த்த குழுவின் தலைவர் திரு.எம்.வாமதேவன் அவர்கள் என்னை தொலைபேசி மூலமாகக் கேட்டுக் கொண்டபோது நான் பெரிதும் மகிழ்ச்சியடைந்தேன்.

கடந்த பத்துவருடங்களாக அமரர் இர.சிவலிங்கம் ஞாபகார்த்தக் குழுவினர் பல உயரிய பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். நினைவுப் பேருரைகள், நூல்வெளியீடு, ஆய்வுகள், மற்றும் பல்வேறு போட்டிகள் என அவர்களது பணிகள் தொடர்கின்றன. அவர்கள் நடத்திய முதலாவது கட்டுரைப் போட்டியில் முதலாவது பரிசினைப் பெறும் சந்தர்ப்பமும் எனக்கு வாய்த்தது. அவர்களது சீரிய பணிகளுக்காக அவர்களைப் பாராட்டுவதோடு அப்பணிகள் தொடரவேண்டுமென்றும் வாழ்த்துகிறேன். -

இந்த ஞாபகார்த்த உரை அழகிய நூல் வடிவில் உங்களது கைகளில் தவழ்கிறது. இதன் கையெழுத்துப் பிரதியை வாசித்து நூலுருவாக்கிய ஞாபகார்த்த குழு உறுப்பினர் திரு.தை.தனராஜ் அவர்களுக்கும் நன்றி கூற நான் கடமைப்பட்டுள்ளேன்.

இனி எனது தலைப்பு தொடர்பான கருத்துக்களை உங்கள் முன் சமர்ப்பிக்க விரும்புகிறேன்.

சட்டமும் சமூகவியக்கமும் - ஒரு மேல் நோக்கு
" மனித குடும்பத்தினைச் சேர்ந்த சகலரினதும் உள்ளார்ந்த கெளரவத்தையும் அவர்கள் யாவரதும் சமமான பாராதினப்படுத்த முடியாத உரிமைகளையும் அங்கீகரித்தலே உலகத்தில் சுதந்திரம் நீதி சமாதானம் என்பவற்றிற்கு அடிப்படையாக அமைகின்றது."(1) மேலும் "மனித உரிமைகள் பற்றிய அசிரத்தையும் அவற்றினை அவமதித்தலும் மனித குலத்தின் மனச்சாட்சியினை அவமானப்படுத்தியுள்ள காட்டுமிராண்டித்தனமான செயல்களுக்கு" இடமளித்துள்ளதாகவும் "அச்சத்திலிருந்தும் வறுமையிலிருந்தும் விடுதலையினை மனிதன் பூரணமாக துய்க்கத்தக்க ஒரு உலகின் வருகையே சாதாரண மக்களின் உயர்ந்த குறிக்கோளாக இருப்பதாகவும், சட்டத்தின் ஆட்சியால் மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது அவசியம் எனவும் அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனத்தின் பாயிரம் குறிப்பிடுகின்றது. இக்கூற்று முழு மனித குலத்தின் மீதே சட்டம் செலுத்த கூடிய தாக்கத்தினை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றது.

சமுதாயத்தின் உள் முரண்பாடுகள், உற்பத்தி சக்திகளுக்கும் உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடுகள், பழமைக்கும் புதுமைக்கும் இடையிலான முரண்பாடுகள் என்பவற்றின் அபிவிருத்தியே சமுதாய மாற்றத்திற்கும் அதன் முன்னோக்கிய நகர்விற்கும் களம் அமைக்கின்றது. இந்த வகையில் சமூகமானது அது தற்போது இருக்கின்ற நிலையிலிருந்து சமூக, பொருளாதார, அரசியல், கலாசாரத்தில் முன்னேறிய கட்டம் ஒன்றிற்கு நகர்வதினையே இங்கு நான் "சமூக அசைவியக்கம்"என குறிப்பிடுகின்றேன். இந்த சமூக நகர்வினை விரைவுபடுத்துவதில், தடுப்பதில் அல்லது பின்னோக்கி இழுத்து செல்வதில் சட்டத்தின் தாக்கத்தினை அவதானிப்பது சம காலத்தில் அவசியமாகின்றது.
இன்றைய நிலையில் திருமணம், விவாகரத்து, பிள்ளைகள் மீதான பெற்றோரின் கட்டுப்பாடு, கல்வி, கலாசார அபிவிருத்தி, சுகாதாரம் போன்ற மனிதனின் தனிப்பட்ட விடயங்களில் தொடங்கி சமூக, பொருளாதார, அரசியல் விடயங்கள், உற்பத்தி உறவுகள், போக்குவரத்து, சமயம், இலக்கியம் ஆகிய பொது வாழ்வின் அனைத்து அம்சங்களின் மீதும் சட்டத்தின் தாக்கத்தினை தெளிவாக அவதானிக்க முடிகின்றது.

சமூக அசைவியக்கத்தின் மீது சட்டம் செலுத்தக் கூடிய தாக்கத்தின் சில தத்துவார்த்த விடயங்களை குறிப்பிட்ட வரையறைக்குள் நின்று சுட்டிக்காட்ட முனைகின்றேன்.

சட்டம் என்றால் என்ன? அது எங்கிருந்து வருகின்றது? எதற்காக வருகின்றது? யாருக்காக உருவாக்கப்படுகின்றது? அது என்ன செய்தது? என்ன செய்துகொண்டிருக்கின்றது? அதன் நோக்கம் என்ன? அதன் எதிர்காலம் என்ன? சட்டம் தன்னளவில் இயங்கக்கூடிய சுயாதீனமான விடயமா? இவை போன்ற வினாக்கள் சுவாரஸ்யமானவை.

பென்தம், ஜோன் ஒஸ்டின் ஆகியோர் சட்டம் என்பது இறையின் ஆணையெனவும் அதை மீறினால் தண்டிக்கப்படுவர் எனவும் இறை'என்பது அரசன், பாராளுமன்றம், நிறைவேற்றுதுறை போன்ற சட்டம் இயற்றும் நிறுவனங்களை உள்ளடக்குகின்றது எனவும் விளக்கினர்.(2)

ரோம சாம்ராஜியத்தின் அடிமைச் சட்டங்கள், அமெரிக்காவின் மற்றும் தென்னாபிரிக்காவின் நிறபாகுபாட்டு சட்டங்கள், ஹிட்லர், முசோலினி ஆகியோரின் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஜனநாயக விரோத சட்டங்கள், சித் திரவதை தொடர்பான சட்டங்கள் அனைத்துமே'இறையின் ஆணைகள் தான்' எனவே இறையே பிழையானதாக இருக்கும் போது என்ன செய்வது, சட்டம் தீமையானதாகவும் மனித உரிமைகளை மறுப்பதாகவும் இருக்கும் போது என்ன செய்வது, சட்டத்துக்கு அடிபணிவதா அல்லது அதனை மீறுவதா, போன்ற தத்துவார்த்த பிரச்சனைகள் மேற்பிளம்பின.

பொப்ஸ், ஜோன் லொக், ரூசோ, ஆகியோர் சமூக ஒப்பந்த கோட்பாட்டின் அடிப்படையிலே அரசு உருவாகியதனால் , அரசின் சட்டங்கள் மக்களின் பிரிக்கமுடியாத உரிமைகளை மதிக்கவும், சமாதானம், ஒழுங்கு, மக்களின் பொருளாதார அபிவிருத்தி, சொத்துரிமை போன்றவற்றினை பாதுகாப்பதாகவும் இருக்க வேண்டுமென கருதினர். (3)

இந்த வகையில் அவர்கள் சட்டம் எப்படி இருக்கின்றது என்பதை விட எப்படி இருக்க வேண்டும் என சிந்தித்தனர். ஹென்றி மெயின் பொது சித்தத்தின் வெளிப்பாடே சட்டம் " என கருதினார். இங்கு அரசினால் இயற்றப்படுகின்ற சட்டங்கள் சமூக உறுப்பினர்களில் ஒரு பகுதியினருக்கு நன்மையானதாகவும் இன்னொரு பகுதியினருக்கு தமையானதாகவும் அமையும் போது தீமையான பகுதியினை அனுபவிக்கும் மக்கள் அச்சட்டத்தை பின்பற்றுவதா, அல்லது மீறுவதா, மீறுவதற்கு அவர்களுக்கு சட்ட உரிமை இருக்கின்றதா, பின்பற்றுவதாக இருப்பின் சட்டத்தினால் அல்லது அரசினால் அந்த பிரிவினருக்கு ஏற்படக்கூடிய நன்மை என்ன, தீமை எனின் ஏன் அதனை பின்னபற்ற வேண்டும், என்ற பிரச்சனைகள் தோன்றின.

மேற்கூறப்பட்ட வகையிலான சட்டப்பிரச்சனை நெல்சன் மண்டேலா 1962 இல் தென்னாபிரிக்க நீதிமன்றத்தில் அவர் குற்றவாளியாக பிரகடனப்படுத்தப்பட்டபோது குற்றவாளிக் கூட்டில் இருந்து மேற்கொண்ட சமர்ப்பணத்தில் தெளிவாக பிரதிபலித்தது. அவருடைய உரையின் சாராம்சம் பின்வருமாறு அமைந்தது. "சிந்திக்கும் ஆற்றல் கொண்ட எந்தவொரு ஆப்பிரிக்கனும் தன்னுடைய மனச்சாட்சிக்கும் சட்டத்திற்கும் உள்ள முரண்பாட்டினை உணரமுடியும். இந்நிலை இந்த நாட்டிற்கு மட்டுமே உரித்தான ஒரு பிரச்சனையல்ல. மனச்சாட்சியுடன் சிந்திக்கும் எந்த ஒரு மனிதனும் இந்த சட்டத்தை எதிர்ப்பதை தவிர வேறொன்றையும் செய்ய முடியாது.(4)

நான்கு வருடங்களின் பின்னர் நெல்சன் மண்டேலாவின் சடட்த்தரணி Bram Fischer நிற பாகுபாட்டு சட்டத்தின் அஎப்படையில் குற்றம் சாட்டப்பட்டார். தனக்கு எதிரான அனைத்து குற்ற சாட்டுகளையும் ஏற்றுக்கொண்ட Fischer பின்வருமாறு நீதிமன்றத்திலே கருத்து வெளி யிட்டார்: “சமூகத்தின் பாதுகாப்பிற்காக சட்டத்திற்கு அடிபணிய வேண்டும் என்பதை பொதுவான விதியாக நான் ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் சட்டங்கள் தன்னளவில் முறை கேடானதாக இருக்கும் பொழுது உயர்ந்த கடமை எழுகின்றது. அக்கடமை ஒருவரை அச்சட்டத்தினை நிராகரிக்க நிர்ப்பந்திக்கின்றது. நிறப்பாகுபாடு சட்டங்கள் இந்த நாட்டின் பெருந் தொகையான பிரஜைகளை அவர்கள் அடிப்படை உரிமைகளை அனுபவிப்பதில் இருந்து நிற அடிப்படையிலே தடுப்பதோடு அவர்களுடைய எதிர்ப்பினை இல்லாதொழிப்பதனை (நசுக்குவதனை) நோக்கமாக கொண்டு இயற்றப்பட்டவை. எனவே என்னுடைய மனச்சாட்சி இந்த சட்டங்களுக்கு அடிபணிவை வழங்க என்னை அனுமதிக்க வில்லை.(5)

இக் கூற்று சமூக ஒப்பந்தக் கோட்பாடு, இயற்கைச் சட்ட கோட்பாடு ஆகியன சட்டம் தொடர்பில் வழங்கிய விளக்கத்தினை கேள்விக் குட்படுத்தியது.

பெண்ணிலைவாதிகள் சட்டம் என்பது சமூக அமைப்பிலே நிலவுகின்ற ஆண் பெண் சமத்துவமின்மையை பாதுகாத்து, ஆணாதிக்க சமூக அமைப்பினை பேணுவதோடு பொருளாதார ரீதியிலே பெண்களின் உழைப்பினை சுரண்டுவதற்கு பயன்படுத்தப்படுகின்ற ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது எனவும் ஆகவே சட்டங்கள் பெண்களின் சம உரிமையினை சுதந்திரத்தினை, சமூக, பொருளாதார, அரசியல், கலாசார மற்றும் ஆளுமைக்கான அபிவிருத்தியினை உத்தரவாதம் செய்ய கூடிய வகையிலே புதிதாக உருவாக்கப்படல் வேண்டும் எனவும் சமத்துவ உரிமைக்கு எதிரான சட்டங்கள் அனைத்தும் திருத்தப்பட அல்லது இல்லாதொழிக்கப்படல் வேண்டும் எனவும் குறிப்பிடப்படுகின்றது. (6) எனினும் மார்க்ஸிய பெண்ணிலை வாதிகள் சட்டங்கள் பெண்களின் உழைப்பு சுரண்டலை நிலை பெறச்செய்யும் தன்மை கொண்டிருப்பதினால் அவை இல்லா தொழிக்கப் படல் வேண்டும் என்ற நிலைப்பாட்டினை வெளிப் படுத்தியுள்ளனர். (7)

மார்க்சிய கோட்பாடு சட்டம் தொடர்பில் இயக்கவியல் பொருள்முதல்வாத நோக்கில் வேறுபட்ட கருத்தினை கூறுகின்றது. அதன் படி சட்டம் அரசியல், இலக்கியம் என்பன பொருளாதாரம் எனும் அடிக்கட்டுமானத்தின் மீது அமைக்கப்படுகின்ற மேல்கட்டுமானங் களாகும் எனவும் எனவே, சட்டம் என்பது பொருளாதார உற்பத்தி சாதனங்களின் மீது ஆதிக்கம் செலுத்துகின்ற சக்தி தன்னுடைய நலன்களுக்காக தன்னுடைய வர்க்க ஆதிக்கத்தினை நிலைநிறுத்திக் கொள்வதற்காக பயன்படுத்துகின்ற சாதனமாகும். எந்த ஒரு கட்டத்திலும் அது உற்பத்தி சாதனங்களின் மீது ஆதிக்கம் செலுத்தும் வர்க்கத்தின் நலனை பேணுவதாகவே அமையும் எனவும் மார்க்சியவாதிகள் வாதிடுகின்றனர். (8)

பூர்ஷுவா சமுக அமைப்பில் உருவாக்கப்படுகின்ற சட்டங்கள் அனைத்தும் உழைப்பாளரை குறிப்பிட்ட உற்பத்தி உறவுக்குள் கட்டுப்படுத்த ஆக்கப்பட்ட விதிகளே. அவை உழைப்பாளனின் நலனுக்காக ஆக்கப்பட்டவை அல்ல. சட்ட சீர்திருத்தங்கள் என்பன ஆதிக்க வர்க்கத்தின் பொருளாதார நலனை பாதுகாக்க அவ்வப்போது முன்வைக்கப்படுகின்ற ஏமாற்று நடவடிக்கைகளே. எனவே சட்டம் முதலாளிகளின் நலனுக்கு சேவை செய்கின்றது. சோசலிச சமூகமொன்றிலே அச்சமூகத்தை கம்யூனிசத்தை நோக்கி நகர்த்துவதற்கு சட்டம் சேவையாற்றுவதுடன் வர்க்கபேதமற்ற கம்யூனிச சமூகத்திலே அரசு உலர்ந்து உதிர்ந்து போவதால் அங்கு வர்க்கரீதியில் அமைந்த சட்டம் இருக்காது என மார்க்ஸியம் குறிப்பிடுகின்றது. (09)

விமர்சன சட்ட ஆய்வாளர்கள், சட்டம் என்பது தன்னளவில் தனித்தியங்கும் ஒரு விடயமல்ல என்பதுடன், அது ஒரு அரசியல் விடயம் எனவும் சட்டத்தின் வெளித்தோற்றம் வேறு, உள்நோக்கம் வேறு எனவும் கூறுகின்றனர்.(10)
சட்டத்தினை பொருளாதார ரீதியில் நோக்கும் அணியினர் சட்டத்தின் நோக்கம் உரிமைகளை பாதுகாப்பதாகவும் நீதியினை வழங்குவதாகவும் இருப்பினும் அதன் ஒரு பகுதி சந்தை பொருளாதாரத்தினை பாதுகாத்து அபிவிருத்தி செய்வதாக காணப்படுகின்றது. எனவே சட்டம் பொருளாதார சந்தையின் பாதுகாவலனாக செயல்படுகின்றது என்கின்றனர். (11)

உற்பத்தியின் பூகோளமயமாக்கல், பிரமாண்டமான வர்த்தக அமைப்புக்களின் செயற்பாடுகள் மனித உரிமைச் சிந்தனைகள உலகில் ஏற்பட்டுள்ள வளப்பற்றாக்குறை, வறுமை, யுத்தம், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் என்பன மரபுரீதியான சட்டக் கோட்பாடுகளை மீளாய்வு செய்ய நிர்ப்பந்தித்துள்ளதுடன் சட்டத்தின் செயற்பாடுகளை சிக்கலடையச் செய்துள்ளன.

இன்றைய நிலையில் சட்டம் தன்னளவில் தனித்தியங்கும் ஒரு காரணியாக இல்லாத போதும் சமூக முரண்பாடுகளின் உச்சக் கட்டத்திலே சட்டத்தின் செயற்பாடு சர்வதேச அக்கறை வாய்ந்ததாகவும் விமர்சனத்திற்குரியதாகவும் காணப்படுகின்றன. மேற்கூறிய பின்னணியில் சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கத்தினை தெளிவாக அவதானிக்க முடியும்.

தொடரும்...

சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 1)
சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 2
சமூக அசைவியக்கத்தில் சட்டங்களின் தாக்கம் : ஒரு விமர்சன நோக்கு (பாகம் - 3) 

அடிக்குறிப்புகள் :
 1. 1948 ம் ஆண்டின் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்ட "அனைத்துலக மனித உரிமைகள் பிரகடனம்”
 2. J. Bentham, Of Laws in General, H.L.A. Hart-Athlone press 1970, J. Austin-The Province of Jurisprudence Determined Weidenfeld and Nicolson 1955.
 3. Prof-Hilare McCoubrery and Dr.Nigel. D.White Jurisprudence’ Blackstone Press Limited Second Edition 1993 page -77,79,81
 4. Christopher Roederr & Darrel Moellendorf'Jurisprudence’JUTA
 5. Company Ltd 2004-p-25
 6. Ibid at page 26.
 7. Ibid Page 300
 8. Ibid 304 -
 9. Ibid page 138 and see Supra note 3 at page 113.
 10. Supra Note 3 page 113.
 11. Supra Note 4 page 246.

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates