அரசியல் யாப்பு திருத்தக்குழுவினரின் கருத்தறியும் செயலமர்வுகள் கடந்த பெப்ரவரி மாதத்தில் நுவரெலியாவில் இடம்பெற்றன.
பெப்ரவரி 19ஆம் திகதியன்று மலையக ஆர்வலர் ஒன்றியத்தின் சார்பில் மேற்படி குழுவினரிடம் ராகலை ஹல்கிரனோயாவைச்சேர்ந்த பி.மரியதாஸ் தலைமையில் திருமதி இ.துரைராஜ், வி.சண்முகராஜ், சிவநாதன் ஆகியோர் தமது முன்மொழிவுகளை சமர்ப்பித்ததுடன் அதற்கான விளக்கங்களை யும் வழங்கியிருந்தனர்.
மேற்படி முன்மொழிவுகளின் விபரம் வருமாறு:
01. முன்னுரை
அரசியல் யாப்பு ஆக்கத்திற்கான கோட்பாடு, கட்டமைப்பு காரணிகளால் முன்னுரை ஒன்று அவசியமாகின்றது. ஆனால் யாப்பு ஒன்று அமைக்கப்படும்போது பின்வரும் விடயங்கள் அவதானத்தில் கொள்ளப்பட வேண்டும்.
01. நாட்டின் பெயருக்கான நியாயப்பாடுகள்
இவ்விடயத்தில் ஜனநாயகம், சோசலிஸ்ட் குடியரசு ஆகிய சொற்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.
அ. மக்களின் அதிகாரத்தை ஜனநாயகம் குறிப்பிடுவதால் அரசின் எல்லா அதிகாரங்களும் மக்களிடமே இருக்க வேண் டும். மக்களின் வெளிப்படையான அங்கீகாரமின்றி முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படக் கூடாது. சாராம்சத் தின் இறைமை மக்களிடமே இருக்க வேண்டும்.
ஆ.சோசலிசம் என்பது வெறுமனே சம அடிப் படையிலான ஏற்பாடுகள் அல்ல. ஒவ்வொருவரின் தேவைக்கேற்பவும் ஒவ்வொ ருவரின் திறமைக்கேற்பவும் என்ற அடிப்படை கோட்பாடே சோசலிசமாகும்.
01. பொருளாதார கட்டமைப்பு மக்கள் மயப்படுத்தப்பட்டதாகவும் மக்களின் சொத்தாகவும் இருக்க வேண்டும்.
02. செல்வ பங்கீடு சமத்துவமாக இருப்பதோடு சுரண்டலும் பாரபட்சமும் எந்த வகையிலும் அனுமதிக்கப்படக்கூடாது.
இ. குடியரசின் உயிர் நாடி அதன் அங்கத்தவர்களிடையே சமத்துவமான சமூகமாக இருப்பதோடு மக்கள் அதி உயர் அதிகாரங்களை கொண்டோராக இருப்பதுமாகும்.
01. யாப்பு குடியரசு உயிர் நாடியையும் துடிப்பினையும் உத்தரவாதப்படுத்தப்படுவதோடு மக்களின் உச்ச அளவான பங்கேற்பையும் ஈடுபாட்டினையும் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
02. மக்கள் எனும் சொல் நாட்டின் பன்மை தன்மையுள்ள மக்களைக் குறிக்கின்றது.
அ. இங்கு பன்மைத்தன்மை என்பது மக்க ளின் இனத்துவ மொழி, சமய, சமூக, கலாசார பண்புகளை குறிக்கின்றது. இதன் விளைவாக காணப்படுவது சிங்கள, இலங்கைத்தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம்கள், மலாயர், பறங்கி யர், வேடர்கள் ஆகிய தேசிய இனங்களாகும். யதார்த்தத்தில் இலங்கை இத்தேசிய இனங்களின் தாயகமாகும்.
ஆ. இத்தேசிய இனங்களின் சமநிலையற்ற நிலையினையும் இருப்பினையும் அங்கீ கரித்து இவ்வினங்களின் உயர்ச்சிக்கான பொருத்தமான சாதகமான ஏற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும்.
இ. இச்சாதக செயற்பாடுகளை மலையக தமிழர் போன்ற இதுவரை காலவரை ஓரங்கட்டப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு, பாரபட்சம் காட்டப்பட்ட இனங்களின் துரித வளர்ச்சியை இலக்காக கொண்டிருக்க வேண்டும்.
03. யாப்பு அடிப்படையிலான காப்பீடுகள் நாட்டின் ஐக்கிய தன்மையை பாதுகாக்கும் வேளையில் ஒவ்வொரு தேசிய இனமும் அதனது உணர்வு, எதிர்பார்ப்புக்கள் வளர்ச்சி அடையத்தக்க ஏற்பாடுகளை கொடுக்க வேண்டும்.
04. இனத்துவ மொழி, சமயம், சமூக, பொருளாதார, கலாசார பண்புகளை கொண்ட பன்மைத்தன்மையுள்ள நாடொன்றின் ஐக்கியத்தையும் பாதுகாப்பதற்கு அதிகாரப்பரவலாக்கல் முன் நிபந்தனையாக இருக்கின்றது. இலங்கையின் தெரிவு இப்போக்கினையும் விதியினையும் மீறுவதாக அமைய முடியாது.
01. நாட்டின் ஐக்கிய தன்மைக்கு ஊறுவிளைவிக்காத வகையில் ஒவ்வோர் இனத்தினதும் முகாமைத்துவம், நிர்வாகம், வளர்ச்சி, உயர்வு ஆகியவற்றையும் உத்தரவாதப்படுத்தப்படும் அளவுக்கு அளவான சுயாதிபத்தியம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
02. மலையக தமிழ் தேசிய இனம் போன்ற வற்றிற்கு பின்வருவன சம்பந்தமாக யாப்பு ரீதியான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
03.அவர்களின் பிராந்திய சுயத்தன்மை; இதற்காக மலையக தமிழர் செறிவாக வாழும் மத்திய, ஊவா, சப்ரகமுவ மாகாணங்களை உள்ளடக்கிய பிராந்திய சபை உருவாக்கப்பட வேண்டும்.
04. மலையக தமிழர் செறிவற்ற களுத்துறை, காலி, மாத்தறை போன்ற பிற பிரதேசங்களில் போதுமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யக்கூடிய உள்ளூராட்சி சபைகள் அமைக்கப்பட வேண்டும்.
இ. இன வன்செயல்களால் வவுனியா, கிளி நொச்சி, முல்லைத்தீவு, புனானை போன்ற பகுதிகளுக்கு குடியகல நிர்ப்பந்திக்கப்பட்ட மலையகத்தமிழருக்காக இதே போன்ற ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.
ஈ. மலையக தமிழர் எங்கெங்கு குடியகலவும் குடியேறவும் நிர்ப்பந்திக்கப்பட்டனரோ அங்கெல்லாம் அவர்களின் தனித்துவம் அங்கீகரிக்கப்படவும் சுதந்திரம் உறுதிப்படுத்தப்படவும் ஏற்பாடு கள் செய்யப்பட வேண்டும்.
உ. மத்திய, ஊவா மாகாணத்தில் மலையக மக்களுக்கு நியாயமானதும் விகிதாசாரத்திற்கு ஏற்பவும் பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்ற, அவர்களின் செறிவுக்கேற்ப, தேர்தல் தொகுதிகளை உருவாக்க வேண்டுமிடத்து ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஊ. பிராந்திய சபைக்கு காணி முகாமைத்துவம் காணி சம்பந்தமான பிற விடயங் கள் உட்பட அதிகாரங்கள் கொடுக்கப்பட வேண்டும்.
01. இச்சபை அதன் பராமரிப்பின் கீழ் வருகின்ற மக்களின் பயனுள்ள நோக்குகளுக்கு நிலப்பங்கீடு அதிகாரத்தினை கொண்டிருக்க வேண்டும்.
02. தேயிலை, இறப்பர் தோட்டங்கள் பிராந்திய சபை பராமரிப்பின் கீழ் வருவதனால் அதற்கு தோட்ட தொழிலாளர்களுக்கும் அவர்களில் தங்கியிருப்போருக்கும் வீடுகள் அமைப்பதற்கும் பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்கும் நிலப்பங்கீட்டிற்கான அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும்.
03. தோட்ட தொழிலாளர்களையும் அவர்களில் தங்கியிருப்போரையும் வாழ்க்கை மேம்பாட்டிற்காகவும் ஒரு கிராமிய வாழ்க்கைக்கு இட்டு செல்லக்கூடிய நிலப்பயன்பாட்டிற்கான அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும். இத்தகைய ஏற்பாடுகள் பெருந்தோட்ட கொத்தடிமை முறையிலிருந்து விடுதலை பெற உதவியாக இருக்கும்.
எ. அரசாங்கம் எந்த ஒரு இனத்துவ குழுமத்தினையும் பாதிக்க கூடிய ஒரு பக்க இரு பக்க பல பக்க ஒப்பந்தங்களை ஏற்பாடுகளை மேற்கொள்ள முடியாது என யாப்பு வெளிப்படையாக பிரகடனப்படுத்த வேண்டும்.
04. நாட்டின் ஒவ்வொரு தேசிய இனத்தினதும் உணர்வுகளை வெளிப்படையாக பிரதிபலிக்க கூடிய முறையில் தேசியக்கொடி அமைக்கப்பட வேண்டும்.
அ.அ தனை மாற்றி அமைப்பது உருக்கலைப்பது போன்றவை தண்டனைக்குரிய குற்றவியல் குற்றமாக சட்டப்பிரகடனம் செய்யப்பட வேண்டும்.
05. தேசிய கீதம் சிங்கள தமிழ் மொழிகளில் பாடப்பட வேண்டும் என யாப்பு வெளிப்படையாக பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.
06. பௌத்த, இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ சமயங்கள் குறிப்பிட்ட சமய பிரிவினால் இடையூறின்றி பின்பற்றப்படவும் செயற்படுத்தப்படவும் யாப்பினால் உத்தரவாதமும் பிரகடனமும் செய்யப்பட வேண்டும்.
அ. மேற்குறிப்பிட்ட ஏற்பாடு ஏதாவது ஒரு மதத்தின் உயர்ச்சிக்கான ஏற்பாடுகளை கட்டுப்படுத்தும் என அர்த்தப்படலாகாது.
07. அடிப்படை உரிமைகளை மறைமுகமாக கட்டுப்படுத்தி மறுப்பதற்கான சூசகமான ஏற்பாடுகளற்ற உறுதிப்பாட்டினை யாப்பு கொடுக்க வேண்டும்.
அ. 2 ஆம் குடியரசு யாப்பில் காணப்படும் எல்லா உரிமைகளையும் ஐ.நா.மனித உரிமைகள் பிரகடனத்திலும் பிற சர்வதேச சமவாயங்களிலும் கூறப்படும் உரிமைகளையும் அடிப்படை உரிமைகள் என்பது அர்த்தப்படுத்துகின்றது.
08. சிங்கள மொழியும் தமிழ் மொழியும் தேசிய உத்தியோகபூர்வ மொழிகள் எனவும் ஆங்கிலம் தொடர்பு மொழி எனவும் யாப்பு வெளிப்படையாக பிரகடனப்படுத்த வேண்டும்.
09. அரசின் நெறிப்பாட்டு கோட்பாடுகளை யாப்பு உள்ளடக்கி இருக்க வேண்டும். அவை நாட்டின் ஐக்கிய தன்மை ஐனநாயக சோசலிச தன்மை நாட்டில் உள்ள இனங்களின் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்துவதாகவும் எந்த ஒரு இனத்துவ குழுமத்திற்கு பாதகமான ஏற்பாடுகளை தடை செய்வதற்குமான உத்தரவாதத்தினையும் கொடுக்க வேண்டும்.
10.நிறைவேற்று துறை ஜனாதிபதியினையும் மந்திரி சபையினையும் கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
அ. 5 ஆண்டு பதவிக்காலத்துக்கு மக்களால் ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். இப்பதவிக்காலம் பாராளுமன்றத்தின் பதவிக்காலத்தின் சமாந்திரமானதாகவும் இருக்க வேண்டும்.
ஆ.ஜனாதிபதி பிரதமரின் ஊடான மந்திரி சபையின் ஆலோசனை நெறியாண்மைக்கு ஏற்ப செயற்பட வேண்டும்.
இ.பாராளுமன்றத்தின் பெரும்பான்மையைக் கொண்ட அரசியல் கட்சி ஒன்றின் அங்கத்தவர்களை கொண்டதாக மந்திரி சபை அமைய வேண்டும்.
ஈ.மந்திரி சபையில் ஒவ்வோர் இன குழுமத்திற்கும் விகிதாசாரத்திற்கு ஏற்ப பிரதிநிதித்துவம் கொடுக்கப்பட வேண்டும்.
உ.தேர்தல் தொகுதி ஒன்றின் யதார்த்த நிலைமைக்களுக்கு ஏற்ப செயற்படக் கூடியவாறு பிராந்தியத்தின் சமூக பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப அமைச்சர்களுக்கான பொறுப்புகளும், செயற்பாடுகளும் கொடுக்கப்பட வேண்டும்.
ஊ.நாட்டின் சமூக பொருளாதார தேவைகளுக்கு ஏற்ப மந்திரி சபையின் அளவு தீர்மானிக்கப்பட வேண்டும்.
11.நாட்டின் இனத்துவம், மொழி, சமய, பன்மைத்தன்மையை பிரதிபலிக்கக்கூடியவாறு பொதுச்சேவை பொறிமுறை அமைக்க வேண்டும்.
அ.ஒவ்வொரு பிராந்தியத்தின் இனத்துவ குழுமத்திலிருந்து அப்பிராந்திய உயர் நிர்வாக அதிகாரிகள் நியமிக்கப்பட வேண்டும்.
ஆ.நாட்டின் இனத்துவ அமைப்பை பிரதிபலிக்க கூடிய பொருத்தமான அங்கத்தினரை உள்ளடக்கியதாக பொதுச்சேவை ஆணைக்குழு அமைய வேண்டும்.
12. 01.சட்டவாக்கத்துறை பாராளுமன்றத்தை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
02.இருநூற்றுக்கு மேற்படாத அங்கத்தவர்களை கொண்டதாக பாராளுமன்றம் இருக்க வேண்டும்.
03.பொதுத்தேர்தலில் வாக்காளர்களால் நேரடியாக அங்கத்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
04.தேர்தலில் போட்டியிடும் போட்டியாளரின் தகைமைகள் அவரது அரசியல் கட்சியின் மூலமாக தேர்தல் ஆணையாளருக்கும் அது சம்பந்தப்பட்ட பிற நிறுவனங்களுக்கு உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
05.வாக்காளர் தமது பிரதிநிதியொருவர் தமது நம்பிக்கைக்கு எதிராக நடப்பதாக உணரும் பட்சத்தில் அவரை பதவியிலிருந்து திருப்பியழைக்கும் ஏற்பாட்டினை யாப்பு கொண்டிருக்க வேண்டும்.
06.பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்தில் அவர்களது முன்மொழிவுகளையும் விதந்துரைகளையும் சமர்ப்பிப்பதற்கு முன்னர் வாக்காளர்களின் ஆலோசனைகளைப் பெறக்கூடிய பொறிமுறையொன்று ஏற்படுத்தப்பட வேண்டும்.
07.வாக்காளர்களுக்கும் வேட்பாளர்களுக்கும் வயதெல்லை 18 ஆக இருக்க வேண்டும்.
08.ஒரு அங்கத்தவர் இரண்டாவது தடவையாக தேர்தலில் போட்டியிடுவதனை தடுப்பதற்கேற்ப யாப்பு ஏற்பாடுகள் இருக்க வேண்டும்.
09.பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதிய ஏற்பாடுகள் அவசியமற்றது.
13.01.தற்போதைய மாவட்ட தேர்தல் முறைக்கு பதிலாக தனி தேர்தல் தொகுதி முறை ஏற்படுத்தப்படல்.
02.தொகுதி அமைக்கப்படும் போது அங்குள்ள சனத்தொகை பரிமாணம் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
அ.தேர்தல் தொகுதியின் இனத்துவ செறிவிற்கு ஏற்றதாக சனத்தொகை கொள்கை அமைய வேண்டும்.
நன்றி - veerakesari 24-04-2016
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...