Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மலையக மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர் – முதலமைச்சர் சி.வி


இந்திய வீட்டுத்திட்டத்தை வழங்குவதில் வன்னியிலுள்ள மலையக மக்கள், அரசாங்க அலுவலர்களால் புறக்கணிக்கப்படுவதாக பாதிகப்பட்ட மக்கள் தன்னிடம் தெரிவித்ததாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை (16) தெரிவித்தார்.
தேசிய அபிவிருத்திக்காக உள்ளூராட்சியை வலுப்படுத்தல் என்ற தொனிப்பொருளிலான வடமாகாண உள்ளுராட்சி மன்றங்களுக்கான விழிப்பூட்டல் நிகழ்வு, யாழ். ரில்கோ சிற்றிக் ஹோட்டலில் இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றது.

பொதுநலவாய உள்ளூராட்சி மன்ற இணையத்தின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய விக்னேஸ்வரன், ‘நாங்கள் மலையகத்தில் இருந்து வந்து குடியேறியதால் இந்திய வீட்டுத் திட்டங்களில் இருந்த அரச அலுவலர்கள் எங்களைப் புறக்கணிக்கின்றார்கள் என்று வன்னியைச் சேர்ந்த மக்கள் பலர் என்னிடம் முறையிட்டார்கள்.

இந்தக் கூற்று, எனக்கு முதலில் விந்தையாக இருந்தது. காரணம், இந்திய வீட்டுத் திட்டத்திற்குப் பணம் தருபவர்கள் இந்திய அரசாங்கத்தினர். மலையக மக்கள் இந்தியாவில் இருந்து வந்து இலங்கையின் மத்திய மாகாணத்தில் குடியேறியவர்கள் அல்லது வெள்ளைக்காரர்களால் குடியேற்றப்பட்டவர்கள். அவர்களுக்கு இந்திய அரசாங்கம் வழங்கும் வீட்டுத் திட்டத்தில் இடமில்லை என்றால் விந்தையாகத்தானே இருக்கும்.

எவ்வாறாயினும், இது தொடர்பில் விசாரித்துப் பார்த்ததில் அதன் உண்மை விளங்கியது. எமது மலையக சகோதர, சகோதரிகளை எமது அலுவலர்கள் மிகக் கேவலமான விதத்தில் நடத்துவதாக அறிந்தேன். அதாவது பொது நிகழ்ச்சித் திட்டங்களில் சமூகப் புறந்தள்ளல் நிகழுவதை நான் அவதானித்தேன்’ என்று அவர் கூறினார்.

‘போரினால் நாம் பாதிக்கப்பட்ட காலத்தில் ஒரு வித்தியாசமான கலாசாரம் எம்மைப் பீடித்திருந்தது. அந்த காலகட்டத்தில் கட்டாயப்படுத்திய அந்தந்த நலவுரித்தலகுகளுக்கு ஏற்றவாறு சட்டத்தை மறந்து சக நல்லாட்சி விழுமியங்களை மறந்து கடமையாற்ற வேண்டிய கலாசாரம் இருந்தது. போரின் பின்னரும் இந்த கலாசாரம் தொடர வேண்டிய அவசியமில்லை. உண்மையில் எமது நடவடிக்கைகள் இன்றைய காலகட்டத்தில் கட்டுக்கோப்புக்குள் வர வேண்டும்’ என்று முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

‘திணைக்களங்களில் மின்குமிழ்களும் மின்விசிறிகளும் அலுவலர்கள் எவரும் இல்லாத நேரத்தில்கூட இயங்கிக்கொண்டிருப்பதை அவதானித்துள்ளேன். வெள்ளைக்காரன் காலத்தில் எங்களுக்கு ஒரு குணமிருந்தது. எல்லாம் வெள்ளைக்காரன் சொத்து அதை எப்படி வேண்டுமானாலும் பாவிக்கலாம் என்ற எண்ணம் அப்போது எமக்கிருந்தது. அக்காலத்தில், அரசாங்கம் வேறு நாம் வேறு என்ற ஒரு பாகுபாடு எம்முள் வளர்ந்திருந்தது. ஆனால் சுதந்திரம் அடைந்த பின்னரும் அதேவிதமான ஒரு மனோநிலை தொடர்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

இந்நிலைமை மாற வேண்டும். பொதுச் சொத்துக்கள் எம்மக்களின் சொத்து என்ற எண்ணம் எம்முள் வளர வேண்டும். இது எமது சொத்து. அவற்றைப் பேணிப் பாதுகாப்பது எமது கடமை என்ற எண்ணம் எம்முள் வளர்க்கப்பட வேண்டும்.

இந்த உளப்பாங்கை மக்களிடையே விருத்தி செய்ய உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் முன்வர வேண்டும். பலவித சூறையாடல்களுக்குள் அகப்பட்டிருக்கும் வடமாகாண மக்களாகிய நாம், எமது சொத்துக்களை நாமே பாதுகாக்க முன்வர வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

‘எமது சமூகத்தில் இருக்கக் கூடிய பாதிக்கப்பட்ட பெண்கள், பலன் குறைந்து போன முதியோர்கள், மாற்றுவலுவுடைவர்கள் உள்ளிட்டோர், உள்ளூர் அபிவிருத்தி முயற்சிகளில் ஈடுபடுவதற்கு ஏதுவாக வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு ஓர் கருவியாக இந்த செயற்பாட்டை மாற்றுங்கள்.

எம்முள் வலுக்குறைந்தவர்களை வலுப்பெற உதவுவதில் தான் எமது கலாசாரப் பண்புகள் உறைந்து கிடக்கின்றன. சட்டவாட்சியை இறுகப் பற்றுங்கள். குற்றமற்ற மேம்பட்ட சமூகமொன்றைத் தோற்றுவிப்பதற்கு இதை விடச் சிறந்த வரைமுறை இருக்கமுடியாது.

மனித விழுமியங்களை மதிப்பதற்குரிய சேவைகளை வழங்கத் தலைப்படுவோம். பிறப்பிலிருந்து இறப்பு வரை மனிதன் நுகரும் சகல தேவைகளையும் வழங்கும் உள்ளூராட்சியின் நற்பண்புகளை நாற்திசையும் அறியும் வண்ணம் உங்கள் செயற்பாடுகள் அமையப்பெற வேண்டும்.

அபிவிருத்திக்குச் செலவிடப்படும் ஒவ்வொரு ரூபா பணமும் மக்கள் செலுத்திய வரி அல்லது மக்கள் திருப்பிக் கட்ட வேண்டிய கடன் என்பதை மனதில் நிறுத்துவதுடன் ஒவ்வொரு ரூபாவும் வழங்கக்கூடிய அதிஉச்சப் பயனை மக்கள் பெறும் வண்ணம் ஊழலற்றதான நல்லாட்சியை வழங்கப் பாடுபடுங்கள்.

இதற்கான சமூகக் கணக்காய்வை மக்களே செயற்படுத்தும் வகையிலான வழியையும் அடையக்கூடிய தன்மையையும் ஏற்படுத்திக் கொடுப்பது உங்கள் ஒவ்வொருவரின் முதன்மைப் பணியாக இருக்கட்டும்.

இவை யாவும் ஒரே நாளில் விதைத்து அறுவடை செய்யக்கூடியவை அல்ல. இருப்பினும் இது தொடர்பிலான விடய ஸ்தானங்கள் மக்களிடையே பரவிவிடப்பட வேண்டும். ஒவ்வொரு உள்ளூராட்சியாளனது உள்ளத்தையும் அவை அடைய வேண்டும்’ என முதலமைச்சர் மேலும் தெரிவித்தார்.

நன்றி - e-jaffna

"தோட்டப் பாடசாலை" - சு.இராஜசேகரனின் Old is Gold


இப்புகைப்படம், ஆரம்பகால, 1910களில் பதிவு செய்ய ப்பட்டதாக கருதப்படுகிறது. தோட்ட நிர்வாகங்கள், லயக்காம்புராக்களை சூழவுள்ள தேயிலைச்செடிகளு க்கு இந்த பிள்ளைகளால் எந்தவித சேதமும் ஏற்படக் கூடாது என எண்ணிய தோட்டநிர்வாகம் இக்குழந் தைகளுக்கான சிறைகூடங்கள் அமைக்கப்பட்டன.

அநேக ஆண்டுகளாக இந்த சிறைப் பாடசாலைகளாக உரக்காம்புரா அல்லது கொழுநது மடுவம் ஆகயவற் றை ஒட்டிய உள்ள அறைகளிலே இயங்கின. இத னை பலர் எதிர்க்கவே 1904ல் 'எஸ்.எம்.பரோஸ்' தோட்டபாடசாலை நிலை பாட்டை ஆராய்ந்து அறிக் கை சமர்பிக்கும்படி பணிக்கப்பட்டார்.

இதன்பின் 'வாஷ் கமிஷனும் ஆய்வுகளை 1907ல் தொடங்கியது. சடடவரையரை "6வயது முதல் 10வயதுவரை அனைத்து பிள்ளைகளுகககும் தோட் டத்துரைமார் கல்வி வழங்கவேண்டும் எனகுறிப்பி்ட் டது.
1920ல் இல.1 கல்விச்சட்டமும், 1939 வருட இல.31 கல்விச்சட்டமும், 1947ம் வருட,1951ம் வருடத்திய கல்வித் திருத்தவிதிகள்.வெளியாகின.இதில் பாடசாலை தளபாடங்கள் எதனையும் நிர்வாகம் ஏற்பாடுகள் எதனையும் செய்யவில்லை.

1939ல் கல்விசட்டத்தின்டி இல.31 பாகம் 6(vi), 1947ம் வருட,1951ம் வருட கல்வித்திட்டங்கள் தோட்டபாட சாலைக்கு சமத்துவம் அளிககப்பட வேணடும் என வலியுறுத்தியது. 1951 வருடத்திய கல்வித் திருத்தச் சடடம் 5,வலியுறுத்துகிறது. 5வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு முறையான கல்வி தர ப்படவேண்டும் என்பது அப்போது தோட்டப்பிள்ளை களுக்கில்லை.
இதுவே எமது தோட்டபடசாலையின் ஆரம்பத்தின் ஒரு சிலத்துளிகள் பின்னர் தொடர்வேன்.

சு.இராஜசேகரனின் Old is Gold - முகநூலிலிருந்து

எதிர்கால மலையகம் பற்றி வெள்ளைக்கார தோட்டத்துரை ஒருவரின் கற்பனைச் சித்திரம் - சாரல் நாடன்

சாரல் நாடன்
மலையகத்தின் பிரபல எழுத்தாளரும் மலையக இலக்கிய ஆய்வாளருமான சாரல் நாடன் (க.நல்லையா) கடந்த வாரம் காலமானார். மலையக இலக்கியத்துறைக்கு பாரியளவு பங்களிப்பு செய்துள்ள அவரின் மறைவு மலையகத்துக்கு மட்டுமன்றி முழு நாட்டுக்கும் பேரிழப்பாகும். அவர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகள் தொடர்ந்து வீரகேசரி வார வெளியீட்டில் வெளிவந்துள்ளன.

அவர் மறைவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னர் வீரகேசரிக்காக எழுதியனுப்பிய கட்டுரை ஒன்று இங்கு பிரசுரிக்கப்படுகின்றது.

சி.வி. என்ற மலையகக் கவிஞனின் நூற்றா ண்டு விழாவிற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெறத் தொடங்கியிருக்கும் இவ்வேளையில், வெள்ளைக்காரத்துரையொருவர் மலையகத்தின் எதிர்காலம் குறித்து எழுத்தில் வடித்திருக்கும் கற்பனை சித்திரம் குறித்து நமது பார்வையை செலுத்தலாம்.

இக்கற்பனை கே.எல். முர்ரே என்பவரால் 1936ஆம் ஆண்டு எழுதி அக்காலப்பகுதியில் பிரசித்தமானதாக இருந்த டைம்ஸ் பத்திரிகையால் வெளியிடப்பட்டது. டைம்ஸ் பத்தி ரிகை வெள்ளைக்காரர்களின் வேதப்புத்தகமாக எண்ணப்பட்ட காலம் ஆண்டுக்கு ஒரு முறை தான் வெளியிடும் கிறிஸ்மஸ் மலர்களை நினைவில் வைத்திருக்க வேண்டிய அரும்பெரும் சிருஷ்டிகளை கொண்டு அலங்கரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தது. சிவியின் அமரத்துவம் பெறும் பல ஆக்கங்களை வெளியிட்டு புகழ் சேர்த்தது. முர்ரெயின் கற்பனை சித்திரமும் இத்தகையதே.

முர்ரே புகழ் வாய்ந்த ஒரு தோட்டத்துரையாவார். துரைமார் சங்கத்தின் நடவடிக்கைகளில் இவர்களின் பணிகள் இணைந்து காணப்படுகின்றன. அதன் தொழிலாளர் குறி த்து பல நடவடிக்கைகளுக்கு இவரின் சிந்தனைகள் தூண்டு கோலாய் இருந்தன. பூண்டுலோயா பகுதியில் உள்ள கைப்புக்கலை தோட்டத்தின் உருவாக்கத்தில் இவரின் பணிகள் பளிச்சிடுகின்றன.

சுற்றிவர 18 சிறு தோட்டங்களை அணிக ளாகக் கொண்டு 'கட்டுத்தொரபட்டி' என்றறியப்பட்ட நகரத்தில் புகழ்மிக்க ஒரு தோட்ட மாக விளங்கிய கைப்புக்கலை தோட்டத் தில் முர்ரேயின் நிர்வாகம் 1940களிலும் தொடர்ந்திருந்ததை ஆவணங்கள் மெய்ப்பிக்கின்றன. சிங்கள விவசாய கிராமங்களைச் சுற்றியும் கொண்டிருந்த தோட்டப்பகுதியில் துரையாக இருந்த ஒருவர் நுற்றாண்டு கற்பனை சித்திரம் வரைந்திருப்பது பாராட்டுக்குரியதாகும்.

பிளாண்டிங் இன் 2036எனும் மகுடத்தில் இக்கட்டுரை 1936 கிறிஸ்மஸ் மலரில் வெளியாகியுள்ளது. இப்போதிருப்பதை விட இன்னும் நூற்றாண்டு கடந்து தோட்டத் தொழில் காண இருக்கும் முன்னேற்றங்கள் குறித்து அங்கு இடம்பெற இருக்கும் மாற்றங்கள் குறித்து ஆரோக்கியமான சிந்தனையை அக்கட்டுரை வெளிப்படுத்துகிறது.

தோட்டப்புறத் தொழிலாளர்கள் பரம்பரை பரம்பரையாக ஒரே லயக்காம்பராவில் வாழ்வதை இன்றும் காணலாம். தாத்தா; பாட் டன், முப்பாட்டன் என்று மூன்று தலைமுறையினர் அதே லயக்காம்பராவில் அடுப்புச்சூடு காம்பராவின் உள்ளே இதமாக இருக்கும்படி அமைக்கப்பட்ட சுகவாசத்திற்கு ஏற்றதாக 1877இல் கட்டப்பட்ட பழைய மோஸ்தரில் ஒரே வரிசையில் அமைந்த இருபது லயக்காம்பராக்களில் வாழ்வதை முர்ரே விரும்பவில்லை. அவர்களுக்கென்று வீடு கள் அமைப்பதற்கு தோட்டக்காணிகள் புதி தாக இல்லாத நிலையில் இருக்கும் லயக் காம்பராக்களை வரிசையில் அமைத்து மாடி க்கட்டமாக மாற்ற நினைத்தார். 2036இல் லயக்காம்பராக்கள் இல்லாது ஒழிந்து மாடிக்கட்டமாக அவை எழுந்து நிற்பதை கண் டார்.

அவர் காலத்தில் அது முற்போக்கான சிந்தனையாக இருந்தது. பெருகி வரும் தோட்ட சனத்தொகையை இருக்கும் இடத்துக்குள்ளாகவே, வசதியோடு வாழ அதைவிட சிறந்த வழி வேறொன்றுமில்லை. தோட்ட த்து சனங்கள் பிறரைப் போல காற்றோட்ட மான, விசாலமான மாடிக்கட்டிடத்தில் வாழுகிறார்கள் என்பது எத்தனை சுகமான கற்பனை.

அவர்கள் கல்வி அறிவு பெற்று சமூக அந்தஸ்துடன் வாழும் போது, தோட்டத்துரை மார்கள் ஒன்றுகூடும் கிளப்களில் அவர்களு க்கு இடம் அளிக்கப்படுகின்றது. அந்த நாள் வரை தேயிலைத்தளிர் ஆயும் தொழில் ஒன்றுக்கே லாயக்கானவர்களாக கருதப்பட்ட பெண்கள், கிளப்களில் அனுமதிக்கப்படுகிறார்கள். தோட்டத்துரைமார்களுடன் இணைந்து அவர்கள் நடனமாடுகிறார்கள். அது நாள் வரை அவர்களை வெறும் அடிமைகளாக எண்ணி, ஏசிப்பேசி எள்ளி நகையாடி வந்தவர்கள் அவர்களை தம்முடன் சமமாகப் பாவிக்கும் நிலைமை உருவாகிறது. அவர்களிடையே அதுநாள் வரை நிலவிய வர்க்க வேறுபாடு, முதலாளி, தொழிலாளி உணர்வு மறைந்து விடுகிறது. தோட்டத்துப்பெண்கள் ஆங்கிலம் பேசுகிறார்கள்.

அங்கு தொழில்புரிய வரும் ஆண்கள் அத்தனை பேரும் மோட்டார் சைக்கிளில் தான் வருகிறார்கள். தோட்டம் என்பது சுற்று வட்டமான ஒரு பொது நிலப்பரப்பை கொண்டிருந்தாலும், அதற்குள் ஏற்றம் இரக்கம் என்று விரிந்து, இடையில் ஆறுகள், அதை கடக்க பாலங்கள் என்று அமைத்து பத்து மைல் காத தூரம் பாதைகள் அமைந்து விடுவது ண்டு. பாதைகள் பெரும்பாலும் குதிரைகள் செல்ல வசதியாக அமைந்த பாதைகள் தாம். இவைகளை கருத்தில் கொண்டு தான் தோட்டங்கள் எங்கும் மனிதர்கள் நடக்கும் குறுக்குப்பாதைகள் அமைந்தன. குறுக்குப்பாதைகளை பின்னாட்களில் விசாலமாக்கி பாதைகள் அமைத்ததுண்டு. ஆனால் ஆரம்பத்தில் இப்பாதைகளில் மோட்டார் சைக்கிள் போக முடியும் என்பதை ஆங்கிலேய துரைமார்கள் நடைமுறைப்படுத்தினர். அவைகளை கண்டு வந்த முர்ரே, தொழிலாளர்கள் மோட்டார் சைக்கிளில் தமது வீடுகளில் இருந்து காலையில் பிரட்டுக்களம் சென்று பின்னர் தொழிலுக்கு போவதாக கற்பனை பண்ணினார்கள். மோட்டார் சைக் கிள்கள் அத்தனையும் ஓரிடத்தில் தரித்து வைப்பதற்கு பொதுவான ஒரு கராஜும் கட் டப்படுகிறது.

இவை எல்லாவற்றுக்கும் மேலாக இப் போது ஒவ்வொரு லயக்காம்பராவிலும் கொழுந்து கூடைகள் வீட்டு வாசலில் தொங் குகின்றன. முர்ரேயின் கற்பனை உலகில் எழுபதேக்கர் பரப்பளவில் கட்டப்பட்டி ருக் கும் கரேஜில் அவற்றுக்கான இடம் ஒதுக் கப்பட்டிருக்கிறது. நடைமுறைக்கு சாத்தி யமான ஒரு கற்பனையில் முர்ரே போன்ற ஆங்கிலேய துரைமார்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதற்கு இக்கட்டுரை ஓர் உதாரணமாகும்.

நன்றி - வீரகேசரி

கண்டிச்சீமையிலே' கோப்பிக்கால வரலாறு 1823 - 1893


இரா. சடகோபனின் ‘கண்டிச்சீமையிலே’ கோப்பிக்கால வரலாற்று நூல் வெளிவந்துள்ளது. 1820களில் தமிழ் நாட்டின் பல கிராமங்களில் இருந்து பஞ்சம் பிழைப்பதற்காக இலட்சக்கணக்காக கூலிகள் சுமார் 130 மைல் தூரம் கால்நடையாகவே கண்டியை சென்றடைந்த இம்மக்கள் சென்ற வழியிலும், கண்டிச்சீமையிலும், சொல்லொணாத் துயரங்களை அனு பவித்து இலட்சக்கணக்கில் செத்து மடிந்து இந்நாட்டின் மலைச்சாரல்களில் மண்ணோடு மண்ணாகி கோப்பிச் செடிகளுக் கடியில் புதைந்து போன கண்ணீர்க் கதையைக் கூறுகிறது இந்நூல்.

அக்காலத்தில் (1823-1893) இயற்கை மரணங்களுக்கு அப்பால், வயிற்றோட்டம், பசி, பட்டினி, கொடிய மிருகங்கள் மற்றும் பாம்புக்கடி கடுங்குளிர் போன்றவற்றுக்கு சுமார் இரண்டு இலட்சம் பேர் பழியாகியதாக வரலாற்றாசிரியர் ஐ. எச். வண்டன் டிரைசன் (யி.சி. Vதினிளிரினி ளிஞியிஷிஷிலினி) கூறுகிறார்.

இந்நாட்டின் பொருளாதாரத்தை கட்டியமைத்து கஷ்டப்பட்டு உருவாக்கிய இம்மக்கள் கூட்டத்தினர் இன்றுவரை இந்நாட்டின் மக்களும், மக்கள் தலைவர்களும் “நன்றி” என்ற அந்த மூன்றெழுத்து வார்த்தையைக்கூட மனமுவந்து கூறியதில்லை. வெள்ளைக்காரன் கட்டிய சிறிய இருட்டறைகளான லயக் காம்பராக்களிலேயே இன்றும் அவர்கள் கூனிக்குறுகி வாழ்ந்து வருகின்றார்கள்.

அவர்களின் இந்த அவல வரலாற்றைச் சித்தரிக்கும் ‘கண்டிச்சீமையிலே’ என்ற இந்த வரலாற்று ஆவணத்தை கட்டாயம் ஒவ்வொரு தமிழ்க்குடிமகனும் இந்தியத் தமிழனும் வாசித்து தெரிந்து கொள்ளக்கடமைப்பட்டுள்ளான்.

352பக்கங்களில் தி4 வடிவத்தில் 190 வரலாற்றுக்கால படங்களை உள்ளடக்கி எல்லாப் பக்கங்களும் 2 வர்ணங்களில் மின்னும் காகிதத்தில் அச்சுப்பதிக்கப்பட்டுள்ள துன்பியல் காவியமான இந்நூலின் விலை ரூ 1800/= ஆகும். R.Shadagopan 152/1 Hulfsdrop street, Colombo-12 இந்நூலைப் பெற்றுக் கொள்ளலாம். அத்துடன் இந்நூலின் வெளியீட்டு விழா விரைவில் கொழும்பில் இடம்பெறவுள்ளது. மின்னஞ்சல் shadagopan@hotmail.com தொ.பே 0777679231.

"Plantation Community Action Group" என்ற பொது அமைப்பு உதயம்


மலையக மக்களின் காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுக்க ‘பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு’ (Plantation Community Action Group) என்ற பொது அமைப்பு உதயம்

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் ஏற்பாட்டில் பண்டாரவளை லியோ மார்கா ஆஸ்ரமத்தில் கடந்த 16ஆம் திகதி, மலையக மக்களின் காணி, வீட்டு உரிமை தொடர்பாக இடம்பெற்ற பொதுக் கலந்துரையாடலில் குறித்த உரிமைகளை வென்றெடுப்பதற்காக அனைத்து அமைப்புகளையும் தனி நபர்களையும் இணைத்துக் கொண்டு பொதுவான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக ‘பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழு’ எனும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டதுடன் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையில் அக்கறையுடைய அனைத்து அமைப்புகளும் தனிநபர்களும் இவ்வமைப்பில் இணைந்து செயற்பட அழைப்பு விடுக்கப்பட்டது.

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். நெல்சன் மோகன்ராஜ், அச்சங்கத்தின் நுவரெலிய பிராந்திய செயலாளர் எஸ். சிவகுமார், இலங்கை கொம்யூனிஸ்ட் ஐக்கிய கேந்திரத்தின் இடையேற்பாட்டுக் குழுவின் உறுப்பினர் சு. விஜயகுமார் ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் மேற்படி நடவடிக்கை குழு தாபிக்கப்பட்டது.

ஹட்டனில் நடைபெற்ற முதலாவது கலந்துரையாடலிலும் பண்டாரவளையில் இடம்பெற்ற இரண்டாவது கலந்துரையாடலிலும் கலந்து கொண்ட அமைப்புகள், தனிநபர்கள் மத்தியிலிருந்து இவ்வமைப்பிற்கு அங்குரார்ப்பண அங்கத்தவர்களை சேர்த்துக் கொள்ளப்பட்டது.

அங்கத்தவர்கள் மத்தியிலிருந்து அமைப்பின் ஒருங்கிணைப்பு குழு தெரிவு செய்யப்பட்டது. இதனை மேலும் விரிவுபடுத்தி மேலும் புதியவர்களை ஒருங்கிணை குழுவில் இணைத்துக் கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன் இந்த பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பு செயலாளர்களாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, பாராளுமன்ற உறுப்பினர் ஆர். யோகராஜா, லியோ மார்கா ஆஸ்ரம தலைவர் பிதா கை டி பொன்ட்காலன்ட் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.

அத்தோடு எதிர்வரும் செப்டெம்பர் மாதம் தொடக்கம் மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையை வலியுறுத்தி கவனஈர்ப்பு நடவடிக்கைகளை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடவடிக்கை குழு பின்வரும் விடயங்களில் உடன்பாடுகள் எட்டப்பட்டன.
• காணி, வீட்டு உரிமையை வென்றெடுப்பதற்கான பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழுவானது காணி, வீட்டு உரிமையை வென்றெடுப்பதற்கான பொதுவான கோரிக்கையை முன்வைத்து, பொதுவான நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நடவடிக்கை அமைப்பாக இயங்கும். அமைப்புகளும் தனி நபர்களும் தனித் தனியாக சுதந்திரமாக அவரவரது நிலைப்பாட்டிலிருந்து கொண்டு காணி, வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு எவ்வித இடையூறும் ஏற்படாத வகையில் பொது இணக்கப்பாட்டுடன் ஐக்கியப்பட்ட நடவடிக்கைகளை இந்த நடவடிக்கை குழுவினூடாக முன்னெடுக்கலாம்.

• ஒவ்வொரு அமைப்பிலிருந்து குறைந்தது ஒருவரும், தனிநபர்கள் ஒவ்வொருவரும் இந்நடவடிக்கைக்குழுவின் அங்கத்தவராகலாம். அங்கத்தவர்களில் இருந்து ஒருங்கிணைப்பு குழு தெரிவு செய்யப்பட்டு விரிவுப்படுத்தப்படும்.

• குழுவுக்கு தேவையான நிதியை அங்கத்துவ அமைப்புகளிடமிருந்தும் தனிநபர்களிடமிருந்தும் சுய விருப்பின் பேரில் கிரமமாகவும் பொது மக்களிடம் இருந்தும் நலன்விரும்பிகளிடமிந்தும் பெற்றுக்கொள்வது.

மலையக மக்களின் காணி வீட்டு உரிமைகளை வென்றெடுப்பதற்கான பொதுவான கோரிக்கைகள் தொடர்பாக பின்வருவன தொடர்பாகவும் இணக்கம் காணப்பட்டன.

• மலையக மக்களின் காணி, வீட்டு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படும் வரை தோட்டக் குடியிருப்புகளில் இருந்து தொழிலாளர்கள், சேவையாளர்கள், அவர்களின் வழித்தோன்றல்கள் எந்த காரணத்திற்காகவும் எந்த வித அடிப்படையிலும் வெளியேற்றப்படுதல் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

• பெருந்தோட்டங்களில் உள்ள லயன் முறை ஒழிக்கப்பட்டு அவற்றில் வசிக்கும் குடும்பங்களுக்கும் வீடில்லா ஏனைய குடும்பங்களுக்கும் வீடுகளை கட்டுவதற்கு உகந்த பெருந்தோட்டக் காணிகளில் இருந்து ஒரு குடும்பம் ஒன்றுக்கு 20 பேர்ச்சஸ் காணியை வழங்க வேண்டும்.

• வீடுகளை கட்டிக் கொள்வதற்கு தேவையான நிதி, கட்டுமான பொருட்களையும் வீடமைப்பு அதிகார சபை போன்ற அரசாங்க நிறுவனங்களினூடாக பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும். தேவையினை கருத்தில் கொண்டு வீடு கட்டுவதற்கென சாதாரண, இலகு கடன் வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.

• வீடுகளை கட்டிக் கொள்வதற்கான மேற்படி காணிகள் குறித்த ஒரு தோட்டத்தினுள் அல்லது பல தோட்டங்களின் எல்லைகளில் ஓரிடத்தில் வழங்கப்படலாம்.

• பெருந்தோட்டங்களில் தற்போதிருக்கும் தனி வீடுகள், இரட்டை வீடுகளில் வசிப்போருக்கு அவர்களின் வீடுகள் அமைந்திருக்கும் காணியின் பரப்பளவு உள்ளடங்களாக ஒவ்வொரு வீட்டுக்கும் 20 பேர்ச்சஸ் காணி வழங்கப்பட்டு உறுதிகள் வழங்கப்பட வேண்டும்.

• வீடமைப்பு அதிகார சபையின் பொறுப்பில் இருக்கும் காணிகளில் கட்டப்பட்டுள்ள தோட்ட வீடுகளுக்கு உறுதிகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.

• ஏற்படுத்தப்படும் குடியிருப்புகள் உள்ளூராட்சி சபைகளுக்கு கீழான அங்கீகரிக்கப்பட்ட குடியிருப்புகளாக்கப்பட்டு, வீதி, நீர், மின் சக்தி, வைத்தியசாலை, மைதானம், வாசிகசாலை, சனசமூக நிலையம், வழிபாட்டு இடங்கள் உட்பட வசிப்பதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

• வீடுகளைக் கட்டிக் கொள்வதறகான 20 பேர்ச்சஸ் காணியை விட பயிர் செய்கை, பண்ணை போன்றவற்றை செய்யவென ஒவ்வொரு குடும்பத்திற்கும் காணிகள் வழங்கப்பட வேண்டும்.

மலையக மக்களின் காணி, வீட்டு உரிமையை வென்றெடுப்பதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள பெருந்தோட்ட சமூக நடவடிக்கை குழுவுடன் கலந்துரையாடுவதற்கு இணைந்து பணியாற்றுவதற்கு இல. 152-1/4, புதுக்கடை வீதி, கொழும்பு 12 என்ற முகவரியுடன் அல்லது plantationcagroup@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியுடன் அல்லது 0714302909, 0772739211, 0776485411 என்ற தொலைபேசி இலக்கங்களை பயன்டுத்த முடியும்.

நன்றி - இனியொரு

கலை இலக்கியத்தில் அக்கறையில்லாத மலையக அரசியல் கட்சிகள்


கலை இலக்கியத்தில் அக்கறையில்லாத மலையக அரசியல் கட்சிகள்
இ.தொ.கா. என்றில்லை எந்த மலையக அரசியல் தொழிற்சங்கக் கட்சியானாலும் சரி அவை அனைத்தும் ஒரே ஒரு விஷயத்தில் ஒன்றுபடுகின்றன. அதுதான், மலையக இலக்கியத் துறைக்கு எந்த பங்களிப்பும் செய்யாமல், அந்தத் துறையை முற்றிலும் கண்டு கொள்ளாதிருப்பதில் பயங்கர ஒற்றுமை பேணுதல்.

மலையகத்தைச் சேர்ந்த ஓர் இலக்கிய பிரமுகர் அல்லது  ஒரு கலைஞர் மறைந்தால் அல்லது அவருக்கு உயர் கௌரவம் கிடைத்தால், இக்கட்சிகள் அவர்களைக் கண்டு கொள்வதே இல்லை. இறுதி மரியாதை செலுத்துவதில் தலைமைகள் அக்கறை கொள்வதில்லை. சில சமயம் ஊடக அறிக்கையை தாமதமாக வெளியிட்டு திருப்தி அடைவார்கள். ஒரு மலையக கலைஞருக்கோ, படைப்பாளருக்கோ அவருக்கு வீடு வழங்க அல்லது நீதி வழங்க எந்தவொரு மலையகக் கட்சியாவது முன்வந்ததாக செய்தி இல்லை.

மலையகம் கொண்டாடக் கூடிய ஒரு பெரும் படைப்பாளன்தான் தெளிவத்தை ஜோசப். இன்றைக்கு 80 வயதில் இளைஞனைப் போல் உற்சாகத்துடன் இலக்கியப் பணியாற்றி வருகிறார். கடந்த வருடம் அவருக்கு கோவையில் விஷ்ணுபுரம் விருது வழங்கப்பட்டது. எழுத்தாளர் ஜெய் மோகன் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் இந்திரா பார்த்த சாரதி மற்றும் இயக்குநர் பாலா ஆகியோர் கலந்து கொண்டு தெளிவத்தை ஜோசப்புக்கு விஷ்ணுபுரம் விருதை வழங்கியதோடு இந்திய நாணய பெறுமதியில் ஒரு லட்சம் ரூபாவையும் கையளித்து மலையக படைப்பாளரை கண்ணியப்படுத்தினர்.

தெளிவத்தை ஜோசப்புக்கு இலங்கையில் ஏற்கனவே சாகித்திய அரச விருது, கொடகே சாதனையாளர் விருது உட்பட பல விருதுகளும் கௌரவங்களும் கிடைத்துள்ளன. இலங்கை அரசு வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதாகக் கருதப்படும் சாகித்திய ரத்னாவிருதும் இவருக்கு வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் தமிழ் இலக்கிய வட்டாரங்களில் எழுப்பப்பட்டு வருகிறது. கிடைக்குமானால் அது மிகப் பொருத்தமான விருதாகவே இருக்கும்.

ஜோசப்புக்கு விருதுகள், கௌரவங்கள் கிடைத்த போதெல்லாம் இலக்கிய வட்டாரமும் சிங்கள இலக்கிய பிரமுகர்களும்தான் குதூகலித்தார்களே தவிர மலையக அரசியல் தலைமைகள் அதைக் கண்டு கொள்ளவே இல்லை. இ.தொ.கா. மற்றும் ம.ம.மு. ஆகிய மலையகக் கட்சிகள் அவரை அழைத்து விழா நடத்தி கௌரவித்திருக்க வேண்டும். பரிசுகள் வழங்கியிருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் செய்யவிலலை. தகரம், குடிநீர் தாங்கி, சீமெந்து, சாராயம் என்றெல்லாம் கணக்கு வழக்கு இல்லாமல் தேர்தல் காலங்களில் மட்டும் பணத்தை விரயம் செய்யும் மலையகக் கட்சித் தலைமைகள், இலக்கியம் என்றதும் கப்சிப் ஆகிவிடுகின்றன.

சிங்கள, முஸ்லிம் கட்சிகளை எடுத்துக் கொண்டால் இந்த வரட்சி நிலை அங்கில்லை. அதனுடைய கட்சித் தலைவர்களே கலைஞர்களாகவும் இருக்கிறார்கள். ஜனாதிபதி திரைப்படங்களில் நடித்திருக்கிறார். விமல் வீரவன்ச, சஜித் பிரமதாச மற்றும் இன்னும் பல தலைவர்கள் மேடைகளில் பாடக் கூடியவர்கள். ரவூப் ஹக்கீம் நல்ல கவிஞர், பேச்சாற்றல் மிக்கவர். அமைச்சர் அதாவுல்லாஹ் பாடும் திறமை படைத்தவர். இப்படிப் பலர் முஸ்லிம் கடசிகளில் உள்ளனர்.

இ.தொ.கா, ம.ம.மு மற்றும் ஏனைய மலையகக் கட்சிகளில் இலக்கிய வாசனை கொண்டவர்கள் எருமே இல்லை. அப்படியே கலையார்வம் கொண்டவர்கள் கட்சியின் மூன்றாம் நான்காம் வட்டங்களில் இருந்தாலும் அவர்கள் கவனிக்கப்படுவதில்லை.

சமீபத்தில் மலையக எழுத்தாளரும் ஆய்வாளருமான சாரல் நாடன் தனது எழுபதாவது வயதில் கொட்டகலையில் காலமானார். மலையக இலக்கிய பரப்பில் அவர் பல பெருமை மிக்க பணிகளை ஆற்றியிருக்கிறார். மலையகத்தில் பலரும் படைப்பாளர்களாகத்தான் தடம் பதித்திருக்கிறார்கள் தவிர, மலையக சமூக மற்றும் இலக்கிய வரலாற்றை ஆய்வுக்குட்படுத்தியதில்லை. பேராசிரியர் அருணாசலம் போன்ற மிகச் சிலரே கை வைத்த இக்கஷ்டமான துறையில் அகலக் கால் பதித்து அடுத்தடுத்து பல நூல்களை வெளியிட்ட பெருமை சாரல் நாடனைச் சாரும். கோ. நடேசய்யர் நமது சங்கங்களினால் இருட்டடிப்பு செய்யப்பட்டிருந்த காலத்தில், நடேசய்யர் யார் என்பதை சாதாரண மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர் இந்த சாரல் நாடன். தன் சொந்தச் செலவில் ஆய்வுகளை மேற்கொண்டு தன் வெளியீட்டகம் மூலம் நூல்களையும் வெளியிட்டவர், இவர்.

தொழிற்சாலை அதிகாரியாக பணியாற்றிக் கொண்டே நூல்களை எழுதினார். ஓய்வு பெற்ற பின் மலையக மக்கள் வரலாறு, இதழாளர் நடேசய்யர் போன்ற பல நூல்களை வெளியிட்டார். மூன்று தடவைகள் சாகித்திய பரிசும் பெற்றார். தேசிய தொழிலாளர் சங்கம், இ.தொ.கா. ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். நுவரெலிய மாவட்டத்திலேயே இருந்தவர் என்பதால் அம்மாவட்டத்து அரசியல்வாதிகள் மற்றும் தொழிற்சங்கங்களுடன் தொடர்பு வைத்திருப்பது இயல்பானது.

ஆனால், இவர் மறைந்ததும் அதைக் கண்டு கொண்டது எத்தனை அரசியல் வாதிகள்? எத்தனை சங்கங்கள்? இதற்கான பதில் வெட்கக் கேடானது.

அவரது இறுதிக் கிரியைகளின் போது உடனிருந்தார் ஊர்க்காரரான புத்திரசிகாமணி. நேரில் வந்து அஞ்சலி செலுத்தியவர் நுவரெலியாவில் வசிக்கும் இராதா கிருஷ்ணன். இவர்களைத் தவிர, குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய தமிழ் மலையக அரசியல் வாதிகளோ, சங்கத் தலைவர்களோ அஞ்சலி செலுத்த வரவில்லை. இரங்கல் செய்தி கூட வெளியிடவில்லை. கண்டு கொள்ளவே இல்லை. என்ன பாவம் செய்தார் சாரல் நாடன்?

சி.வி. வேலுப்பிள்ளையும் வெள்ளையனும் உருவாக்கிய தொழிலாளர்களுக்கான மாற்றுச் சங்கமே தேசிய தொழிலாளர் சங்கம். இது, இன்று கொழும்பு முதலாளி திகாம்பரத்தினால் வாங்கப்பட்டு விட்டது. சாரல் நாடன் இதன் ஆரம்பகால உறுப்பினர். அச்சங்கத்துக்காக உழைத்தவர். ஆனால், அதன் தலைவரோ, அவரது பிரதிநிதியோ எட்டியும் பார்க்கவில்லை. கொட்டகலை இ.தொ.கா. வின் கோட்டை. ஆறுமுகன் தொண்டமானோ, அவரது பிரதிநிதியோ ஒரு மலையக ஆய்வாளரைக் கௌரவிக்கும் வகையில், உயிருடன் இருந்தபோதுதான் இல்லை என்றால், இறந்த பின்னராவது வந்து அஞ்சலி செலுத்தியிருக்கலாம் அல்லவா? முன்னர் எம்.எஸ். செல்லசாமி அஞ்சலி நிகழ்வுகளில் கலந்து கொள்வார் அனுதாப செய்தி வெளியிடுவார். இப்போது எவருமே கண்டு கொள்ளாத ஒரு முரட்டுப் போக்கை இச்சங்கங்கள் பின்பற்றி வருவதைப் பார்க்க முடிகிறது.

மலையக அரசியல் என்பது, எவர் தலையில் மிளகாய் அரைத்தாவது வாக்குகளை சுருட்டி பதவிகளில் அமர்ந்துவிட்டால் போதும் என்ற அளவுக்கு சுருங்கிப்போய் விட்டது என்பதையே இது காட்டுகிறது. இந்த சங்கங்களில் மகளிர் அணி என்பது பெயரளவில் உள்ளது. கொடி பிடிப்பது, டீ போடுவது போன்ற எடுபடி வேலைகளைச் செய்யவே இம்மகளிர் அணி உள்ளது என்பது பகிரங்க ரகசியம். ஆனால் இலக்கிய அணி என்பது பெயரளவிலேனும் இல்லை என்பது வருத்தத்துக்குரிய ஒரு தகவல். தமிழ்நாட்டில் பல அரசியல் இயக்கங்கள் இலக்கியத்தை ஆதாரமாகக் கொண்டே வளர்ந்தன.

திராவிடக் கட்சிகளின் பல பண்புகளை அப்படியே பின்பற்றத் தெரிந்திருக்கும் இக்கட்சிகள், இலக்கியத்தையும் கலைகளையும் தமிழகக் கட்சிகள் எவ்வகையில் பயன்படுத்தின என்பதை ஆராய்ந்து பார்க்க முனைவதேயில்லை. உதாரணத்துக்கு செந்தில் தொண்டமானை எடுத்துக் கொள்ளுங்கள்.

வெள்ளை வேட்டி, வெள்ளை ஷேர்ட், கறுப்புக் கண்ணாடி, அட்டகாசமான சிரிப்பு என்பதாகவே அவர் திராவிடக் கட்சி ஸ்டைலில் படங்களுக்கு போஸ் தருவார். ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடவுள்ள அவர் சமீபகாலமாக தமிழ்ப் பத்திரிகைகளில் தரும் விளம்பரங்கள் தமிழக அரசியல் பாணியைப் பின்பற்றியதாகவே இருப்பதைப் பார்க்கலாம்.

ஆனால் இவர் கலை, இலக்கியம் சார்ந்த விடயங்களில் எந்த ஆர்வமும் காட்டுவதாகத் தெரியவில்லை. இந்தச் சங்கங்களிலேயே காங்கிரஸ்என்ற பெயரில் இதழ் வெளியிடுவது இ.தொ.கா. மட்டுமே. முன்னர் ஒழுங்காக வந்து கொண்டிருந்த காங்கிரஸ் இதழ், இப்போது வருடத்துக்கு மூன்று நான்கு தடவைகளே வெளிவரும் இதழாக சுருங்கிவிட்டது. இ.தொ.கா. வின் இலக்கிய நாட்டத்தை இதிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

தமிழ்மொழி மீதான பற்றை மக்களிடையே பேணுவதற்கும் தமிழ் மொழி வழியாக அவர்கள் படிப்பதற்கும் இதன் மூலம் தமிழர்களாகவே உயிர்ப்புடன் வாழ்வதற்கும் இலக்கியம் வழி செய்கிறது. வெறுமனே தமிழ் மொழிக் கல்வி மட்டும் தமிழை மக்கள் மத்தியில் இருத்திவிடாது. தமிழ் இளைஞர்கள் பலர் சிங்களவர்களாக மாறிப் போவதற்கும் தமது பிள்ளைகளை சிங்கள மொழிப் பாடசாலைகளில் சேர்க்கவும் அவர்கள் இலக்கிய வாசனை அற்றவர்களாக இருப்பதே காரணம். மொழியை மக்களுடன் இணைக்கும் பாலமே இலக்கியம்.

எனவே, இனிமேலாவது நமது சங்கங்களும் சங்க அரசியல் வாதிகளும் தமிழ் இலக்கிய வாசனை கொண்டவர்களாக, குறைந்தபட்சம் அப்படிக் காட்டிக் கொள்வதற்காவது முயற்சிக்க வேண்டும்.

"இலங்கை இந்திய காங்கிரசாக" உருமாறிய அமைப்புகள்


"1908முதல் 1942வரையிலான இந்திய அமைப்புகள்"

இது இலங்கை சுதந்திரத்திற்கு முன் கொழுந்தெடுக்கு ம் பெண் பொறிக்கப்பட்ட முத்திரை. இதற்கும் நான் குறிப்பிடுவதற்கும் சம்பந்தமில்லை. என்றாலும் இம் மக்களைக் கொண்டுதானே அனைத்தையும் பார்க்க வேண்டும். 

இலங்கையில் தோன்றிய இந்திய அமைப்புகள்

1) கொழும்பில் கடைசிற்றூழியர், சிகையலங்காரக் கலைஞர்கள், அங்காடிகள், வேலையாட்கள் இணைந்து 'S.M.K'இது ஈ.வே.ராவின் திராவிட கட்சியை ஒத்து இருந்தது.

2) மத்திய இந்தியர் சங்கம்
இதில் பெரிய சுந்தரம், ஐ.எக்ஸ்.பெரைரா, ஜோர்ஜ்.ஆர். மோத்தா, எச்.எம்.தேசாய் போன்றோரும்,

3) இந்திய சேவா சங்கம்
இதில் வர்த்தக சமுகத்தைச் சார்ந்தவர்களான வள்ளியப்பச்செட்டியார், அப்துல் அஸீஸ், பி.டி.தானுப்பிள் ளை அவரளும்

4) மத்திய இநதியர் ங்கம்
இது பெரியசுந்தரத்தால் ஆரம்பிக்கப்பட்ட இதில் பெரிய கங்காணிளின் பிளளைகளும்.

5) பதுளை இந்ததியர் சமத்துவ சங்கம்
இதனை வி.ஞானபண்டிதன், வி.ராமநாதன் அவர்கள்

6) இந்து இளைஞர் சுபாஷ் சந்திரபோஸ் சங்கம்
இதனை சி..எஎஸ்.சிவனடியான், டீ.ராமானுஜமும்

7)பேராதனிய இளைஞர் சங்கம்
இனை கே.ராஜலிங்கம், எஸ்.சோமசுந்தரம், ஆர்.எம். செல்லையா, டீ.சாரநாதன் 

8) நாவலப்பெட்டி இந்து மாணவர் சங்கம்
இதனை எஸ்.எம்.சுப்பையாவும்

9) ஸ்டேசன் வட்டகொடையில் 'பாரதி சங்கம்'
10) பூண்டுலோயாவில் 'தாகூர் சமாஜம்'
ஆகிய இரண்டையும் எம்.பி.சின்னையா, கே.சுப்பையா, சி.வி.வேலுப்பிளளையும் நிறுவினார்கள்

இவைகளே பின்னாளில் 1939ம் ஜவகர்லால் நேரு மூலமாக "இலங்கை இந்திய காங்கிரசாக உருமாறியது.

முகநூலில் "சு.இராஜசேகரனின் Old is Gold" இலிருந்து

"தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லை" 1939 வீரகேசரி தலைப்பு


" 1939ம் ஆண்டு இலங்கை கிராமக் கமிட்டி"
இங்கு 1938ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் திகதி வெளி வந்த வீரகேசரி பத்திரிக்கை. இதன் தலையங்கமே தோட்டத் தொழிலாளர்களுக்கு வாக்குரிமை இல்லை

இதற்கு மன்னரான 6ம் ஜோர்ஜ் அங்கீகாரம் அளித்து விட்டார். என்பதாகும்.
இலங்கை கிராமக்கமிட்டி வாக்குரிமையானது, இனி தோட்டத் தொழிலாளர்களுக்கு அதாவது தோட்டத்து ரைமார்களினால் கொடுக்கப்பட்ட கட்டிடங்களில் (லயங்களில்) வசிக்கும் தொழிலாளர்க்கு அளிக்கப்படமாட்டாது. எனும் திருத்தச் சட்டத்தை மன்னரும் ஏற்றுக் கொண்டார். என்பதை இப்போது கூட நாம் பார்க்கும்போது பலத்த அதிர்ச்சியாக உள் ளது.
இது சம்பந்தமான மசோதா 1938ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரசாங்க சபையில் விவாதிக்கப் பட்டபோது, அப்போதைய அரசாங்க சபை அங்கத்தவர்களில் சிறு பானமைக கட்சியினரும் எதிர்த்தனர். அப்போதைய அரசாங்க சபையினில் அங்கம் வகித்த இந்திய சமூ கத்தின் பிரஜையாக இருந்த 'ஐ.எக்ஸ்.பெரைரா' தமது பலத்த எதிர்ப்பை காட்டினார். இந்திய பத்திரிக்கைகள் கூட இதனை விமர்சித்து எழுதியிருந்தன.
அக்காலத்தில் சிங்களத் தலைவர்கள் மத்தியில் இரு ந்து, இலங்கையில் ஜீவனோபாயத்திற்காக வந்த அப் பாவித் தொழிலாளர்கள் மீதே துவேசம் காணப்பட்ட து. முடிவில் மன்னரின் சம்மதம் பெற்று, தோட்டத் தொழிலாளர்க்கு கிராமிய கமிட்டி வாக்குரிமை இல் லாதே ஆக்கிவிட்டார்கள்

சு.இராஜசேகரனின் Old is Gold (முகநூல் வழியாக)

விண்ணப்பித்த அனைவருக்கும் ஆசிரியர் நியமனம் : கட்சிகளின் வாக்குறுதி சாத்தியமா - என்.நித்தியவாணி


அரச வர்த்தமானியில் மூவாயிரம் ஆசிரிய உதவியாளர்களை சேர்த்துக்கொள்வதற்கான அறிவித்தலையும் விண்ணப்பப்படிவத்தையும் கடந்த 8ஆம் திகதி கல்வியமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ளார். எதிர்வரும் ஆவணி ஐந்தாம் திகதிக்கு முன் விண்ணப்பதாரிகள் தமது விண்ணப்பங்களை பரீட்சை ஆணையாளர் நாயகத்துக்கு அனுப்பி வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆசிரிய உதவியாளர்களாக சேவையாற்ற விரும்பும் இளைஞர், யுவதிகளை பலரும் பல திசைகளில் அழைத்துச்செல்வதையும் காணக்கூடியதாக இருக்கின்றது. பதுளை மாவட்ட வேட்பாளர்களின் அலுவலகங்களில் அவர்களின் விண்ணப்ப பிரதிகள், அடையாள அட்டைப்பிரதிகள், தொலைபேசி இலக்கம் போன்றவற்றை வழங்கக் கோரிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அதாவது விண்ணப்பிக்கும் அனைவருக்கும் ஆசிரிய நியமனம் என்ற பொய்யான வாக்குறுதிகள் வழங்கப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதுளை மாவட்டத்தில் உள்ள 156 பாடசாலைகளுக்கு மொத்தமாக 866 ஆசிரிய உதவியாளர்கள் போட்டிப் பரீட்சை ஒன்றின் ஊடாக தெரிவு செய்யப்படவுள் ளனர். ஆங்கிலம், இரண்டாம்மொழி, கணி தம், விஞ்ஞானம் ஆகிய பாடங்களுக்கு சுமார் நானூறு வரையிலான வெற்றிடங் கள் காணப்படுவதாக தகவல்கள் தெரி விக்கின்றன. மேற்படி முக்கிய பாடங்களுக்கு தோட்டப்பகுதி இளைஞர், யுவதிகள் விண்ணப்பங்களை அனுப்புவதன் மூலமே தோட்டப்புற விண்ணப்பதாரிகள் முழுமையான பயனை அடைய முடியும். க.பொ.தசாதாரண தரத்தில் மேற்படி பாடங்களில் திறமை சித்தி உள்ளவர்கள் இப்பாடங்களுக்கே விண்ணப்பிக்க வேண்டிய நிலையும் அவசியமும் காணப்படுகின்றது. எதிர்காலத்தில் உரிய பாடங்களுக்கான பயிற்சிகளையும் உயர் தகைமைகளையும் திறந்த பல்கலைக்கழகங்கள், தொழில்நுட்ப கல்லூரிகள், பிராந்திய பயிற்சி நிலையங்கள் என்பவற்றில் பெற்றுக்கொள்ள வாய்ப்புக்கள் பல உள்ளன.

கடந்த காலங்களில் பதுளை மாவட்டத் தில் பல பிரபல தமிழ் பாடசாலைகள் நூற்றுக்கணக்கான மாணவர்களை உயர்தரத்தில் சித்தி பெறச் செய்துள்ளன. லுணுகலை இராம கிருஷ்ணா கல்லூரி, பத்கொட விபுலானந்த கல்லூரி, பதுளை மகளிர் கல்லூரி, அப்புத்தளை மத்திய கல்லூரி ,நிவ்பேர்க் நவோதயா பாடசாலை, மடுல்சீமை மகா வித்தியாலயம், பண்டாரவளை மத்திய கல்லூரி என்பன தமது பிரதேசத்தில் ஆயிரக்கணக்கான படித்த இளைஞர், யுவதிகளை உருவாக்கி உள்ளன. எனவே, சுமார் ஆறாயிரம் வரையிலான விண்ணப்பங்கள் பதுளை மாவட்டத்திலிருந்து அனுப்பப்படக்கூடும். அதிலிருந்து 866 பேர் தெரிவு என்பது எவ்வளவு போட்டி நிறைந்ததாகக் காணப்படும் என்பதை விண்ணப்பதாரிகள் உணர வேண்டும்.

இம்முறை பரீட்சை புள்ளிகள், நேர்முக பரீட்சை என்பன முறையாக சீரமைக்கப்பட்டு விசேட கவனத்துடன் கணினிமயமாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. பரீட்சை முடிவுகளை கூட இணையதளம் ஊடாகத் தெரிந்து கொள்ளவும் பரீட்சை திணைக்களம், கல்வி அமைச்சு, மாகாண கல்வி அமைச்சு என்பவற்றுக்கிடையில் வலையமைப்பு மூலம் பொருத்தமான தெரிவுகள் நடைபெறவும் கூடும். அதனால் எந்த மாகாண சபையோ எந்தப் பாராளுமன்ற உறுப்பினரோ இத்தெரிவுகளில் தலையீடு செய்ய முடியாது. எவருடைய சிபார்சையும் பரீட்சைத்திணைக்களம் ஏற்றுக்கொள்ளாது என்பதை முழு மலையக விண்ணப்பதாரிகளும் தெரிந்துகொள்ள வேண்டும். தமது திறமை, தகைமை ஒன்றே உறுதியாக அமைய வேண்டியது அவசியமாகும்.

கடந்த ஆசிரிய நியமனத்தின் போது பெரிதாகக் காணப்பட்ட குறைபாடுகளை இம்முறை விண்ணப்பிக்கும் போதே குறைத் துக் கொள்வது மூலம் கிடைக்கவுள்ள நியமனத்தை விரைவுபடுத்த முடியும்.

01) கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் மூன்று பாடங்களில் சித்தி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். கடந்த முறை உயர்தரம் படித்து முழுமையான சித்தி பெறாத பல விண்ணப்பதாரி கள் விண்ணப்பித்திருந்தனர்.

விண்ணப்பதாரியின் முழுமையான கல்வித்தகமையை பார்க்காமல் எவரும் அவரின் தகைமைகளை உறுதிப்படுத்தி இருப்பது நல்லது. பரீட்சை மண்டபம் அனுமதி அட்டை வினாப்பத்திரத்தொகை அதனை திருத்துவது என்ற பல்வேறு வேலைகள் பரீட்சை வகுதிக்கு இரட்டிப்பு சுமை ஏற்படாமல் இருக்க வேண்டும்.

02) பல்கலைக்கழக கல்வியியற்கல்லூரிகளுக்கு தகைமை பெற்றுள்ள மாணவர்கள் அவற்றை விடுத்து சுமார் ஆறாயிரம் பேர் முதற்படிவாக கொண்ட மேற்படி பதவிக்கு விண்ணப்பிப்பது பற்றி சிந்திக்க வேண்டும். சிலர் பொழுது போக்காக இப்பரீட்சைக்கு விண்ணப்பித்து பரீட்சை எழுதுவார்களானால் அது எமது இளைஞர் யுவதிகளின் நியமனங்களை பாதிப்படைய செய்வதுடன் எவருக்கும் இவ் நியமனம் கிடைக்காமல் காலதாமதமாகும்.

03) க.பொ.த. சாதாரண தர பரீட்சையில் திறமை சித்தி பெறாத பாடங்களுக்கு விண்ணப்பிக்கும் போது நியமனம் கிடைக்காமல் போவதுடன் நேர்முக பரீட்சையாளர்களின் அதிருப்திக்கும் உள்ளாக வேண்டிய நிலை ஏற்படக்கூடும்.

04) உயர்தரம் வரை கல்வி கற்றுள்ள இளைஞர் யுவதிகள் வர்த்தமானி அறிவித்தலை பலமுறை வாசித்து தெளிவு பெற வேண்டும். சந்தர்ப்பவாத நபர்களின் பிழையான தூண்டுதல்களுக்கு இரையாககூடாது. இல்லாத தகைமைகளை பிழையான பாடத்தெரிவுகளை செய்யாமல் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

05) வேறு நிறுவனங்களில் தொழில்புரிவோர் அதனை விட்டு விலகி இந்நியமனத்திற்கு விண்ணப்பிப்பதை தவிர்க்க வேண்டும். இதன் மூலம் போட்டி அதிகரிப்பை குறைக்க முடியும்.

06) விண்ணப்ப படிவத்தை அனுப்பியவுடன் அப்பரீட்சை விடயமாக உளச்சார்பு பொது அறிவு விடயங்களையும் அறிந்து கொள்வதிலும் பாட சம்பந்தமான வகுப்புகளுக்கும் செல்வது அவசியமாகும். கடந்த முறை பலர் நாற்பதிற்கும் குறைவான புள்ளிகளை மட்டுமே பெற்றிருந்தனர். இதற்கு அவர்கள் பரீட்சைக்கு உரிய முறையில் தயாராகவில்லை என்பதையும் பலர் தவறான விடைகளையே வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

07) தாம் ஏதாவது ஒரு பாடத்திற்கு தகுதியானவர் என நேர்முகத் தேர்வாளர்கள் தீர்மானித்து கூறும் போது அதே நியமனத்தை ஏற்றுக்கொள்வதுடன் அதனை எச்சந்தர்ப்பத்திலும் வெளிப்படுத்தி உரையாற்றும் நிலையை தவிர்க்க வேண்டும். அரச அதிகாரிகளின் அனுபவம் அறிவுத்திறன் உயர்கல்வித்தகைமை நேர்முக தேர்வாளியை விட பன்மடங்கு உயர்வானது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

8. நியமனம் ஒன்றை பெற்றுக்கொண்டவரின் திறமை நேர்முகத் தேர்வு குழுவின் முகாமைத்துவ அதிகாரியின் திருப்தியை வெளிப்படுத்துகின்றது. அதன்பின் சேற்றை வாரி வீசுவது எமது சமூகத்திற்கு தலை குனிவாகும். எனவே, திறமை உள்ளவர்களே தெரிவானார்கள். எவரின் சிபார்சும் நடைபெறவில்லை என்பதை அனைத்து தரப்பினரும் நம்பிக்கை ஊட்ட வேண்டும்.

09) நியமனம் ஒன்றின் போது இன, சமய பேதமோ கட்சி சங்க பேதமோ கருத்தில் எடுக்கப்பட முடியாது. கடந்த முறை நீதிமன்றம் கடுமையாக எதிர்ப்புக்களை தோட்டப்பகுதி நியமனங்களில் கண்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரிகளை அரசியல் வேலைகளுக்கு இழுக்கும் சக்திகளிடமிருந்து விலகி நிற்கச்சொல்வதும் கல்விச் சேவையாளர்களின் கடமையாகும்.

நன்றி - வீரகேசரி

மலையகத்தில் தமிழரின் பெயரில் பௌத்த விகாரை


இன்று நாட்டில் மதம் தொடர்பிலான பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் காணப்படுகின்றன. பிறமதங்களை தூற்றுவதனாலோ அல்லது அவமரியாதைக்கு உட்படுத்துவதாலோ யாருக்கும் எந்தவித நன்மையும் கிடைக்கப்போவதில்லை. மாறாக அவரவர் மதத்தின்மீது அவரவர்களுக்கு மதப்பற்று அதிகரிக்கவே செய்யும். அதுமட்டுமின்றி எல்லா மதங்களும் அன்பையும், ஒழுக்கத்தையும், சிறந்த பண்புகளையுமே போதிக்கின்றன. இவ்வாறான நிலையில் “எம்மதமும் சம்மதம்” என்று இருக்கும் இந்து ஆலயங்கள், இந்து தெய்வச் சிலைகள் என்பனவும் அண்மைக்காலங்களில் உடைக்கப்பட்டும் பொருட்கள் திருடப்பட்டும் வந்துள்ளதை பத்திரிகைகள் மூலம் அறிந்துகொள்ளக்கூடியதாக இருந்தது.

எமது முன்னோர்கள் மத சார்பான விட யங்களில் அனைவருக்கும் முன்மாதிரியாக வாழ்ந்து வந்து ள்ளனர். ஏனைய மத ங்களுக்கு மதிப்பளித்தும் வந்துள்ளனர். இன்றும் மதிப்பளித்து வருகின்றனர். அதற்கு சிறந்த உதாரணமாக கண்டி மாவட்டத்தின் கம்பளை, தொழுவ பிரதேச செயலகத்தி ற்கு உட்பட்ட புப்புரஸ்ஸ கிராம சேவகர் பிரிவில் அமைந்துள்ள விகாரையைக் குறிப்பிடலாம்.

மலையக தோட்டத் துறை வரலாற்றில் தோட்டங்கள் ஒருகாலத்தில் தனியாருக்குச் சொந்தமானதாகக் காணப்பட்டன. அவ் வாறு இந்திய வம்சாவளியை சேர்ந்த சுப்பிரமணியம் முதலாளி புப்புரஸ்ஸ தோட்டத்தை நிர்வகித்து வந்தார். அந்தக் காலப்பகுதியில் தமது தோட்டத்தில் ஒரு விகாரை அமைக்கப்படவேண்டும் என்ற சிந்தனை அவரது மனதில் உருவானது. அதற்கமைய தனது சொந்தக்காணியில் பௌத்த விகாரைக்கு என ஒரு பகுதியை வழங்கி 1958ஆம் ஆண்டு வேலைத்திட்டத்தை ஆர ம்பித்து வைத்தார். அதன் பயனாக அவரது தோட்டத்தில் பௌத்த விகாரை அமைந்ததோடு அந்தப் பிரதேசத்தில் சிங்கள குடியேற்றங்கள் ஏற்பட்டதுடன் ஒரு சிறிய நகரமும் உருவானது.

தற்போது இந்த பிரதேசத்தில் தமிழர்களும், சிங்களவர்களும் வாழ்ந்து வருகின் றனர். இந்த பௌத்த விகாரை உருவாவதற்குக் காரணமாக இருந்தவரின் பெயரே விகாரைக்கும் சூட்டப்பட்டது. இவரது பெயர் எம்.எம்.சுப்பிரமணியம் என்பதனால் “சுப்ரமணியராமய” என பெயர் பெற்று தற்போதும் அந்த பெயரிலேயே காணப்படுகின்றது. குறிப்பாக அந்தப் பிரதேசத்தில் பௌத்த மத சார்பான விடயங்களையும் தஹம்பாசல் என அழைக்கப்படும் அறநெறி பாடசாலையும் பௌத்த மக்களுக்கும் இந்து மக்களுக்கும் தேவையான விடயங்களை செய்து வருகின்றது. இதற்குக் காரணமாக இருந்தவர் அமரத்துவம் அடைந்த ஸ்ரீ விமலானந்த தேரர் ஆவார். இவர் இந்த விகாரையை பல வருடங்களாக நிர்வகித்து வந்ததுடன் பிரதேச மக்களுக்கு ஆன்மிக ரீதியில் பல சேவைகளை செய்து வந்துள்ளார். இடைக்காலப்பகுதியில் இந்த பெயரை மாற்றுவதற்கு பலர் முயற்சித்தபோதும் தேரர் அதனை செய்யவிடவில்லை.

இவ்வாறு நம் முன்னோர்கள் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக வாழ்ந்து வந்துள்ளமை சமூகத்திலுள்ள ஏனையோருக்கு ஒரு எடுத்துக்காட்டாகும். எனவே இதுபோன்ற செயற்பாடுகளைக் கவனத்தில் கொண்டு செயற்படுவோமானால் நாட் டில் சாந்தி, சமாதானம், சமத்துவம் நில வும் என்பதில் ஐயமில்லை. அதேவேளை தேரர் எந்த அளவுக்கு நன்றி உடையவராக இருந்துள்ளார் என்பதையும் நாம் கவனத் தில் கொள்ளவேண்டும். இது அனைவரை யும் சிந்திக்கவும், பெருமைப்படவும் வைக் கின்றது. தற்போது இந்த விகாரை புனர்நிர் மாணம் செய்யப்பட்டு வருகின்றது.
(இரட்டைப்பாதை நிருபர்)

நன்றி - வீரகேசரி

பேரம் பேசும் சந்தர்ப்பத்தை தவரவிட்டுவிட்டுள்ள மலையகத் தமிழ்க் கட்சிகள் - செழியன்


ஊவா மாகாண சபைத் தேர்த லில் மலையகத்தின் பிர தான தமிழ் கட்சிகள் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளுடன் இணைந்து போட்டியிடுகின்றன. குறிப்பாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி மற்றும் பெருந்தோட் டத் தொழிலாளர் காங்கிரஸ் என்பன அரசாங்கக் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுகின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் கே. வேலாயுதத்தின் மகனான வே.ருத்திரதீபன், முன்னாள் பிரதியமைச்சர் எம். சச்சிதானந்தன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்களான எம்.பி.லோகநாதன், பொன்னுசாமி பூமிநாதன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இது தவிர, ஊவா தமிழ்த் தேசிய முன்னணியும் போட்டியிடுகின்றது.
ஊவா மாகாணசபைத் தேர்தல் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கும் எதிர் க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சிக்கும் இடையில் சவால் நிறைந்ததாக மாறியுள்ளது. இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவ தன் மூலம் தமது பலத்தையும் மக்கள் செல்வாக்கையும் மீண்டும் நிலைநாட்டுவதற்கு அரசாங்கம் பாரிய முன்னடுப்பை மேற்கொண்டுள்ளது. அதற்காகத் தமது முழுமையான சக்தியை பயன்படுத்துகிறது. இந்த வெற்றியை பாரியளவினதாக காட்டுவதற்காக மலையகத் தமிழ்க் கட்சிகள் அனைத்தையும் தமது கூட்டமைப்புக்குள் இணைத்துக் கொண்டுள்ளது.

எனவே, இந்த மாகாண சபைத் தேர்தல் ஐ.ம.சு. கூட்டமைப்புக்கு சவால் நிறைந் தது மட்டுமல்ல, எதிர்காலத்தில் ஆட்சி யைத் தக்கவைத்துக் கொள்வது தொடர்பான மக்கள் அபிபிராயத்தை ஏற்படுத்துவ தாகவும் அமைந்துள்ளது.
மட்டுமின்றி, அடுத்ததாக பொதுத்தேர்தலை நடத்துவதா அல்லது ஜனாதிப தித் தேர்தலை நடத்துவதா என்பதை தீர் மானிக்கும் தேர்தலாகவும் அமையப் போகின்றது. அந்த வகையில் அரசாங்கக் கட்சிக்கு இது மிக முக்கியமான தேர்தலா கும்.

அதேவேளை, பல்வேறு தேர்தல்களி லும் தொடர்ச்சியாக தோல்விகளையே சந்தித்து வந்துள்ள ஐ.தே.க.வுக்கும் இது சவாலான தேர்தலாக அமைந்துள்ளது. தொடர்ச்சியான தேர்தல் தோல்விகள், தலைமைத்துவப் பிரச்சினை, உட்கட்சிப் போராட்டங்கள் எனப் பல சிக்கல்களில் சிக்கிக் கொண்டிருக்கும் நிலையில் நாட்டு மக்களுக்கு தமது இருப்பை உறதிப்படுத்த வேண்டிய கட்டாய தேவை ஐ.தே.க.வுக்கு உள்ளது.

ஊவா மாகாண சபைத் தேர்தலை ஆரம்பமாகக் கொண்டு நாட்டில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக ஐ.தே.க. கூறி வருகிறது. தமது கட்சிக்கு மக்களி டம் இருக்கும் செல்வாக்கை அறிந்து கொள்வதற்கும் எதிர்காலத்தில் நாட்டின் ஆட்சியைக் கைப்பற்றுவதையும் அடிப்படையாகக் கொண்டே ஐக்கிய தேசியக் கட்சி ஊவா மாகாணசபைத் தேர்தலில் முழு சக்தியையும் பயன்படுத்தி வெற்றிபெறத் துடிக்கின்றது.

எனவே, ஐ.ம.சு. கூட்டமைப்பும் ஐ.தே.கவும் தமது குறிக்கோள்களை ஊவா தேர்தலினூடாக நிறைவேற்றிக் கொள்ளும் முனைப்பில் உள்ளன என்பது பகிரங்க செய்தியாகும்.

ஆனால், ஊவா தேர்தலில் போட்டியி டும் தமிழ்க் கட்சிகளின் குறிக்கோள்கள் என்ன? எவ்வாறான கோரிக்கைகளை; எவ் வாறான மக்கள் நலன் திட்டங்களை முன்வைத்து தேர்தலில் போட்டியிடுகின்றன? அல்லது பிரதான கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன? எந்தவொரு கட்சியுமே இதுவரை தங்களது நிலைப்பாட்டை வெளியிடவில்லை.

ஊவா மாகாண சபைத் தேர்தலுக்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கின்றது. செப்டம்பர் மாதம் 20 ஆம் திகதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் தமி ழ்க் கட்சிகள் முக்கிய திட்டங்கள் எதனையாவது அறிவித்திருக்கின்றனவா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

ஊவா மாகாணத்தில் தற்போது சுமார் 9,60,000 சிங்கள  தமிழ் வாக்காளர்கள் உள்ளனர். அவர்களில் பதுளை மாவட்டத்தில் சுமார் 1,20,000 தமிழ் வாக்காளர்களும் மொனராகலை மாவட்டத்தில் சுமார் 15,000 தமிழ் வாக்காளர்களுமாக சுமார் 1,35,000 பேர் உள்ளனர். இந்தத் தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் வெற்றி – தோல்வியை நிர்ணயிக்கும் சக்தியாக உள்ளது.

இந்த நிலையில் ஊவா மாகாணசபைத் தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கும் ஆளும் ஐ.ம.சு. கூட்டமைப்பிடம் ஊவா தமிழர்க ளின் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து மலையகத் தமிழ்க் கட்சிகள் கூட்டணியில் இணைந்திருக்கலாம்.

*ஊவா மாகாணத்திற்கான தமிழ்க் கல்வி அமைச்சு, இந்து கலாசார அமைச்சு என்பவற்றை மீள ஏற்படுத்தித் தர வேண்டு மென்ற கோரிக்கையை முன்வைத்திருக்கலாம்.

*இரண்டு போனஸ் ஆசனங்களில் ஒன் றைத் தமிழருக்கு அல்லது கூட்டணியிலுள்ள தமிழ்க் கட்சிகளில் ஒன்றுக்கு வழங்குமாறு கோரியிருக்கலாம்.

*வீடமைப்பு, தோட்ட உட்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்துத் தருமாறு கேட்டிருக்கலாம்.

ஆனால், இவை எதையுமே மலையகத் தமிழ்க் கட்சிகள் கேட்டதாககத் தெரியவில்லை. வெறுமனே சில வசதிகளைப் பெற்றுக் கொள்வதற்காக இணைந்து கொண்டதாகவே தெரிகிறது.

இந்தத் தேர்தலைப் பொறுத்தவரையில் அரசாங்கத்துக்கும் சரி, எதிர்க்கட்சிக்கும் சரி சிறுபான்மைத் தோட்டத் தமிழ் மக்களின் ஒவ்வொரு வாக்கும் மிகவும் அத்தியாவசியமான தேவையாகும். தமிழ் மக்களின் வாக்குளைப் பெற்றுக் கொள்வதற்காக அவர்கள் கேட்பதைக் கொடுக்க வேண்டிய நிலையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி என்பன உள்ளன. இதனை அறிந்தும் அறியாதது போன்று எந்தவித கோரிக்கைகளையோ அல்லது நிபந்தனைகளையோ முன்வைக்காமல் தமிழ்க் கட்சிகள் கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளமை அக்கட்சிகளின் மெத்தனப்போக்கையே காட்டுகின்றது.

நாட்டில் பல தேர்தல்கள் வரலாம். ஆனால் அந்தத் தேர்தல்களை பயன்படுத் திக் கொள்ளும் பக்குவம் வேண்டும். இது ஒரு நல்ல சந்தர்ப்பம். இந்தத் தேர்தலில் பேரம் பேசும் சக்தி மலையகத் தமிழ்க் கட்சிகளுக்கு இருந்தும் அவை பயன்படுத்தப்படவில்லை. இந்த விடயத்தில் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான் கடைப்பிடித்த சாணக்கியம் மகத்தானது. அவரைப் போன்று சந்தர்ப்பங்களைப் பயன்படு த்தி உரிமைகளைப் பெற்றுக் கொடுக்க யாராளும் முடியாது என்பது மீண்டும் மீண்டும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

ஐ.ம.சு. கூட்டமைப்புடன் இணைந்திருக்கும் இ.தொ.கா., தொழிலாளர் தேசிய சங்கம், மலையக மக்கள் முன்னணி, பெருந்தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு இன்னும் கூட சந்தர்ப்பங்கள் உள்ளன. கட்சி பேத ங்களுக்கு அப்பால் சமூக நோக்கோடு பிரச்சினைகளை அணுகுவது மக்களின் நம்பிக்கைக்கு வழங்கும் மரியாதையாகும்.

இதேவேளை, ஊவா மாகாண சபையை ஐ.தே.க. கைப்பற்றினால் மீண்டும் தமி ழ்க் கல்வி அமைச்சு, இந்து கலாசார அமைச்சு என்பன ஏற்படுத்தப்படும் என்று பாராளுமன்றக் கூட்டம் ஒன்றில் உறுப்பினர் கே.வேலாயுதம் கடந்த வாரம் தெரிவித்திருந்தார். ஐ.தே.க. வெற்றி பெறுமானால் அவரது வாக்குறுதி நிறை வேற்றபடுமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

எவ்வாறெனினும், மலையகக் கட்சிகள் தமிழ் மக்களுக்கான உரிமைகள் தொடர் பில் பேரம் பேசும் சந்தர்ப்பங்களை தவற விட்டுள்ளன என்பதே யதார்த்தமே.

நன்றி - வீரகேசரி

கல்வி நிலையை உயர்த்துவதை குறிகோளாகக் கொண்டுள்ள மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் - ஜே.ஜி. ஸ்டீபன்

கே.சிவசுப்பிரமணியம்
கூலிகளாய் இந்நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட சமூ கம், தாம் நடக்கத் தாமே பாதை அமைத்த சமூகம் பற்றைக் காடுக ளையும் பள்ளம், மேடுகளையும் பயிர் நில ங்களாய் பட்டை தீட்டிய சமூகம். இன்று வரை நாட்டின் பொருளாதார சுமையை தன் தோளிலும் முதுகிலும் சுமந்து கேள்விக்குறியாய் வளைந்து 200 வருடங்களாக இன்னொரு வர்க்கத்துக்கென தன்னை வருத்தி உழைத்துக்கொண்டிருக்கும் மலையக சமூகத்தின் எதிர்காலம் இளம் சந்ததியினரின் கைகளிலேயே தங்கியுள் ளது. அதற்கு அவர்கள் கல்வியினால் பலம் பெற வேண்டிய தேவையை உண ர்ந்து தலைநகரில் செயற்பட்டு வரும் மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் எட்டு ஆண்டுகளைக் கடந்து ஒன்பதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கின்றது என்று மலையக கல்வி அபிவிருத்தி மன்றத்தின் தலைவர் கே. சிவசுப்பிரமணியம் மற்றும் மன்றச் செயலாளர் ஏ. பாஸ்கரன் ஆகியோர் தெரிவிக்கின்றனர்.

மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 7ஆம் திகதி ஒன்பதாம் ஆண்டில் அடியெடித்து வைக்கின்ற நிலையில் கேசரி வார இதழுக்கு மேற்படி இருவரும் இணைந்து வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு கூறினர். அதன் விபரம் வருமாறு,

கேள்வி: 8 ஆண்டுகளைக் கடந்து 9 ஆவது ஆண்டில் தடம் பதித்திருக்கும் இன்றைய நிலையில் உங்கள் மன்றத்தின் கனவு நனவாகி இருக்கின்றதா?

பதில்: நிச்சயமாக எமது கனவு நனவாகி வருகின்றது என்றுதான் கூற வேண்டும். 2006.08.26 அன்று மிகச்சிறிய அளவில் போதிய பொருளாதாரமோ ஏனைய வசதிகளோ இன்றி சுமார் 10 அங்கத்தவர்களுடன் கொழும்பு, செட்டியார் தெருவில் தொழில் புரியும் இளைஞர்களால் மலையக கல்வி அபிவிருத்தி மன்றம் ஆரம்பிக்கப்பட்டது. வறுமை காரணமாக இடை நடுவில் கைவிட்ட கல்வியை எமது சந்ததியினராவது கற்றுப் பயன்பெற வேண்டும் என்ற நோக்கத்து டன் கடைகளில் தொழில் புரிந்த நாம் எமது தொழில் தவிர்ந்த ஏனைய நேரங்களை இம் மன்றத்தின் வளர்ச்சிக்காக நேரத்தைச் செலவிட்டோம். எமக்குக் கிடைத்த வருமானத்தின் ஒரு பகுதியை மன்றத்தினூடாக சேவைகள் செய்வதற்கென்று ஒதுக்கினோம். எமது மன்றம் ஆரம்பிக்கப்பட்டு சுமார் 02 வருடங்க ளாக குறைவான உறுப்பினர்களையே கொண்டு இயங்கியது. உறுப்பினர்களின் சந்தா பணத்தினைக் கொண்டு முதல் உதவித்திட்டமாக இரத்தினபுரி மாவட்டத் தின் இதலென்ன தமிழ் வித்தியாலயத்தில் கற்றல் உபகரணங்களை வழங்கினோம். அதனைத் தொடர்ந்து எமது சேவையறிந்து பல உறுப்பினர்கள் எம்முடன் இணைந்து கொண்டனர். தாராள மனம் படைத்தவர்களின் உதவியுடன் இன்றுவரை கல்விக்குத் தேவையான சேவைகளை மலையகத்தைச் சார்ந்த, சாராத 650க்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு வழங்கி வருகின்றோம். நாம் மிகப்பெரிய தொகையினை மலையகக் கல்விக்காக செலவழித்து வருகின்றோம். அதேநேரம் எமது குறிக்கோளை உணர்ந்து நல்ல மனம் கொண்ட தொழில்தருநர்கள் நலன்விரும்பிகள் எனப் பலர் எம்முடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இவர்களின் உதவியால் எம்மால் பல்வேறு சேவைகளை சிறப்புற செயற்படு த்த முடிகின்றது.

இந்த சேவைகளை மெருகூட்டி முன்னெடுத்து வரும் எம்முன்னே எமது சமூ கம் பாரிய சுமை ஒன்றினை வைத்துள் ளது. அச்சுமையினை சுகமாக ஏற்று எங் கள் சமூகத்தின் விடிவுக்காக 2500க்கும் மேற்பட்ட மன்ற உறுப்பினர்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் நாம் எமது மன்றத்தின் கனவை நனவாக்கி வருகின்றோம் என்றே சொல்ல வேண்டும்.

கேள்வி: மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றம் கடந்து வந்த பாதையில் எந்த அளவு திருப்தியை அடைந்து இருக்கின்றது என்பதை கூற முடியுமா?

பதில்: தூரநோக்கு சிந்தனையோடு ஆரம்பிக்கப்பட்டு இயங்கிவரும் எமது மன்றம் இதுவரை 3 கோடி ரூபாக்களு க்கு மேற்பட்ட வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமையை நினை த்து பெருமிதம் கொள்கின்றோம். எமது வேலைத்திட்டங்களில் இதுவரை கால மும் 500ற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவ மாணவியருக்கான புலமைப்பரிசில்களை வழங்கி வந்துள்ளோம். இவ ர்களில் பலர் இன்று சமூகத்தில் உயர் பதவிகளில் உள்ளதுடன், அவர்களது வாழ்க்கை தரம் உயர்ந்த நிலையில் உள்ளதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அது எமது சேவைக்கு கிடைத்த வெற்றி என்று கருதுகின்றோம். அதேவேளை இவர்களில் கணிசமான தொகையினரே எம்முடன் இணைந்து உதவி வருகின்றதென்பதையும் கூற வேண்டும். இது ஒருபுறமிருக்க ஏனையோர் எமது சமூகத்துக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என்ற உத்வேகத்துடன் செயற்படுவதும் எம்மை மனங்குளிரச் செய்கின்றது.

மேலும் வருடந்தோறும் தரம் 05 புலமை ப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு விசேட முன்னோடிப்பரீட்சை செயலமர்வுகளை நடத்தி அவர்களின் பெறுபேறுகளில் மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றோம். அத்தோடு க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கான வேலைத்திட்டங்களின் பயனாக இம்மாணவர்களின் பெறுபேறுகளில் குறிப்பாக விஞ்ஞானம் கணிதம் மற்றும் ஆங்கிலப்பாடங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கின்றோம்.

அத்தோடு எமது சமூகத்தின் கல்வி தேவைகளில் முக்கிய இடம் வகிக்கும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்ய தொண்டர் ஆசிரியர்களை நியமித்து அவர்களூடாக ஆசிரியர் தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றோம். இத்தொண்டர் ஆசிரியர்களுக்கான வேதனமும் மன்றத்தால் வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மேலும் பாடசாலைகளுக்கான பெளதீக வளங்கள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் என்ப வற்றை நேரடியாகச் சென்று வழங்கி மாணவர்களை ஊக்குவிப்பதில் திருப்தி அடைகின்றோம். எனினும் கல்வித்துறைச் சார்ந்த சிலர் இவ்விடயங்களில் கவனம் செலுத்தாமையும் கவலைக்குரியதொன்றாகவும் இருக்கின்றது.

கேள்வி: உங்களது மன்றம் பெருந்தொகையான நிதியை மலையகச் சமூகத்துக்காக செலவிட்டு வருவதாகக்கூறும் நீங்கள் இதற்கான நிதி திரட்டல் ஒத்துழை ப்புகள், உடல் உழைப்புகள் என்பவை குறித்து விளக்க முடியுமா?

பதில்: எமது மன்றம் சேவைகளை முன்னெடுக்க தொகையான நிதியினை எம்முடன் இணைந்து எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சமூக அக்கறையோடு வாரிவழங்கி வரும் உறுப்பினர்களின் சந்தாப்பணமே உறுதுணையாக இருக்கின்றது. அத்தோடு எந்த நேரத்திலும் எமது தேவைகளை பூர்த்தி செய்யத் தயங்காத மன்றத்தின் போஷகர்களின் உதவியுடன் நிதியினை பெற்றுக் கொள்கின்றோம். நிதிச் சேகரிப்புக்கான பிரத்தியேக அணுகு முறைகளை கையாண்டு வருகின்றோம். உதாரணமாக விளையாட்டு, கலைத்துறையினூடாக நிதிதிரட்டலை மேற்கொள்கின்ற அதேவேளை அவை உறுப்பினர்களை ஊக்கப்படுத்துவதாகவும் அமைகின்றன. மேலும் ஆரம்ப காலத்திலிருந்தே குழுவாக செயற்படும் திறனைப் பெற்றிருப்பதால் அதனூடாகவே மக்களின் உடல் உழைப்பை பெற்றுக் கொள்ள முடிகிறது இதில் உறுப்பினர்களும் அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றனர்.

கேள்வி: மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்தின் சேவைகள் மலையக சமூகத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டிருக்கின்றதா?

பதில்: நிச்சயமாக இல்லை. மலையகக் கல்வி அபிவிருத்தி என்னும் தொனிப்பொருளில் நாம் இயங்கி வந்தாலும் எம்மை அணுகும் நாட்டின் சகல பகுதிகளுக்கும் எமது சேவை தொடர்ந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக வடக்கு, கிழக்கு, புத்தளம், நீர்கொழும்பு, கொழும்பு, சிலாபம், அநுராதபுரம் போன்ற பிரதேசங்களிலும் எமது சேவையை விஸ்தரித்தும் செயற்படுத்தி யும் வருகின்றோம்.

கேள்வி: மலையகக் கல்வி அபிவிருத்தி மன்றத்திற்கான அங்கீகாரம் எவ்வாறு இருக்கின்றது?

பதில்: எமது சேவையினை பலரும் அங்கீகரித்துள்ளனர். குறிப்பாக ஆசிரிய சமூகத்தினர், பல்கலைக்கழக பேராசிரியர் கள், புத்தி ஜீவிகள் மத்தியில் எமக்கென ஒரு நல்ல அங்கீகாரமும் கிடைத்துள்ளது. பெற்றோர்களும் எமக்கு உதவிக்கரம் நீட்டும் ஊடகங்களும் எமது அங்கீகாரத்தை உறுதிப்படுத்துகின்றன.

கேள்வி: மன்றத்தின் வளர்ச்சிக்கும் அதன் பயணத்திற்கும் உந்து சக்தியாக இருக்கும் காரணிகளை கூற முடியுமா?

பதில்: உண்மையில் ஒரு சாதாரண அமைப்பாக ஆரம்பிக்கப்பட்ட எமது மன்றம் இத்தகைய பாரிய வளர்ச்சி யை அடைவதற்கு உந்து சக்தியாயிருந்த காரணங்களையும் இப்போது நிச்சயம் நினைவுகூர வேண்டும். அந்த வகையில் எவ்வித பலனையும் எதிர் பார்க்காது தமது உழைப்பின் ஒரு பகு தியை அர்ப்பணிப்புடனும் சமூக அக்க றையுடனும் எமக்களித்து வரும் உறுப் பினர்களான கூலித்தொழிலாளர்கள் தம் மையும் பங்காளிகளாக இணைத்துக் கொண்டுள்ளமை முக்கிய அம்சமாகும். அத்தோடு நல்ல ஆலோசனைகளையும் உதவிகளையும் செய்து வரும் எமது போஷகர்கள் எம்மை அங்கீகரித்து ஊக்கப் படுத்தி வரும் கல்வித்துறை சார்ந்த வர்கள் என்றும் எமக்கு பக்க பலமாய் இருந்து வரும் ஊடகத்துறையும் அதனைச் சார்ந் தவர்களுமே எமக்கு உந்து சக்தியாய் உய ர்ந்து நிற்கின்றனர். இவர்கள் எம்மோடு இருக்கும் வரை எமது சேவைகள் என்றும் தொடரும்.

மேலும் எமது கல்விக்குக் கண்திறப் போம் என்ற பயணத்தில் இணைந்து கொள்ள விரும்பும் நல்ல உள்ளங்கள், முகப் புத்தகம்,ஸ்கைப் ஊடாகவும் தொட ர்பு கொள்ள முடியும் என்பதையும் தெரி வித்து கொள்கிறோம் என்றனர்.

நன்றி - வீரகேசரி

ஊவா மாகாண சபைத் தேர்தல் ஓர் பார்வை - முருகேசுப்பிள்ளை செல்வராசா


ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை மாவட்டம் சார்பாக பத்து (10) அரசியல் கட்சிகளும், (4) நான்கு சுயேச்சைக் குழுக்களும் தத்தமது வேட்பு மனுக்களை, தெரிவு அத்தாட்சி அலுவலர் ரோஹன கீர்த்தி திசாநாயக்கவிடம் கையளித்துள்ளன.

ஊவா மாகாண சபை பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களை உள்ளடக்கியதாகும். பதுளை மாவட்டத்திலிருந்து 18 பேரும், மொனராகலை மாவட்டத்தி லிருந்து 14 பேருமாக 32பேர் மக்கள் தெரிவாகவும் இருவர் போனஸ் ஆசனங்களுடன் 34 பேர் அங்கம் வகிக் கும் சபையாக, ஊவா மாகாண சபை இருந்து வருகின்றது.

பதுளை மாவட்டத்திலிருந்து 18 பேரைத் தெரிவு செய்ய பல்வேறு அரசியல் கட்சிகளிலும், சுயேட்சைக் குழுக்களிலு மிருந்து 294 வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர். இம் மாவட்டத்தின் ஒன்பது தேர்தல் தொகுதிகளிலும் 6,09,966 வாக்காளர்களை மையப்படுத்தியே, மேற்படி வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளனர்.

தமிழ் வாக்காளர்கள் 104702பேர் வாக்காளர்களாக பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களை மையப்படுத்தியே 64 தமிழ் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் 5 தமிழ் பெண்கள் உள்ளடங்கியுள்ளனர்.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, ஐக்கிய ஜனநாயக கூட்டமைப்பு, மவ்பிம ஜனதா கட்சி, ஜனசெத பெரமுன கட்சி, ஜனநாயகக்கட்சி, தேசிய சுதந்திர முன்னணி, ஸ்ரீலங்கா தொழிற்கட்சி, ஐக்கிய இலங்கை மகாசபா கட்சி ஆகிய 10 அரசியல் கட்சிகளும் நான்கு சுயேட்சைக் குழுக் களுமாக 14 கட்சிகளும் குழுக்களுமாக தலா 21 பேரடங் கிய வேட்பாளர்பட்டியல்கள், பதுளை மாவட்ட தெரிவு அத்தாட்சி அலுவலரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

சுமார் 48 ஆயிரம் முஸ்லிம் வாக்காளர்களை மையப் படுத்தி பல்வேறு அரசியல் கட்சிகள், சுயேட் சைக் குழுக்களிலிருந்தும் 23 முஸ்லிம் வேட்பாளர்கள் களம் இறங்கியுள்ளனர்.

பதுளை மாவட்டத்தில் மஹியங்கனை தேர்தல் தொகு தியில் 93387 பேரும், வியலுவை தொகுதியில் 50648 பேரும், பசறைத் தேர்தல் தொகுதியில் 61933 பேரும், பதுளை தேர்தல் தொகுதியில் 54,327 பேரும், ஹாலி எலை தேர்தல் தொகுதியில் 68278 பேரும், ஊவா - பரன கமை தேர்தல் தொகுதியில் 61,925 பேரும், வெலிமடை தேர்தல் தொகுதியில் 73308 பேரும், பண்டாரவளை தேர்தல் தொகுதியில் 82025பேரும், அப்புத்தளை தேர்தல் தொகுதியில் 64335 பேருமாக 609966 பேர் 9 தேர்தல் தொகுதிகளிலும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

இத்தேர்தலில் ஐ.தே.கவின் பதுளை மாவட்ட பாராளு மன்ற உறுப்பினரான ஹரின் பெர்னான்டோ தமது எம்.பி பதவியை இராஜிநாமாச் செய்து விட்டு முதலமைச்சர் வேட்பாளராக போட்டியிடுகின்றார். இவரின் பாராளுமன்ற வெற்றிடத்திற்கு, ஊவா மாகாண சபை உறுப்பினராக இருந்த, பசறை தேர்தல் தொகுதி அமைப்பாளர் கே. வேலாயுதம் நியமிக்கப்பட்டுள்ளார்.

லுணுகலை பிரதேச சபையின் இ. தொ. கா உறுப்பினராக இருந்த ஆறுமுகம் கணேசமூர்த்தி ஆளும் கட்சி சார்பாகவும், அச் சபையின் எதிர்க்கட்சி உறுப்பினரான வேலாயுதம் உருத்திரதீபன் ஐக்கிய தேசியக் கட்சி சார்பாகவும் போட்டியிடுகின்றனர்.

ஐக்கிய தேசியக்கட்சி பதுளை மாவட்டப்பட்டியவில் முன்னாள் பிரதிக்கல்வி அமைச்சர் எம். சச்சிதானந்தன், முன்னாள் ஊவாமாகாணசபை உறுப்பினர்களான எம். பி. லோகநாதன், மக்கள் விடுதலை முன்னணி பொன்னுசாமி பூமிநாதன், பாராளுமன்ற உறுப்பினர் கே. வேலாயுதத்தின் புதல்வர் உருத்திரதீபனும் போட்டியிடு கின்றனர்.

ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சார்பில் ஊவா மாகாண முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான், லுணுகலை பிரதேச சபை உறுப்பினரான ஆறுமுகம் கணேசமூர்த்தி, வெலிமடை மாவட்டத் தலைவர் ஆறுமுகம் சிவலிங்கம் ஆகியோர் இ. தொ. கா. சார்பாகவும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பசறைத் தொகுதி அமைப்பாளரும், ஜனாதிபதியின் இணைப்புச் செய லாளருமான வடிவேல் சுரேஷ் மலையக மக்கள் முன்னணி சார்பாக ஊவா மாகாண சபையின் முன்னாள் உறுப்பின ருமான அ. அரவிந்தகுமார், தொழிலாளர் தேசிய சங்கம் சார்பில் எஸ். இராசமாணிக்கம் ஆகியோரும் போட்டியிடு கின்றனர்.

ஊவா மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடும் தேசிய சுதந்திர முன்னணி பதுளை மாவட்டத்தில் தனியாகவும், மொனராகலை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்தும் போட்டியிடுகின்றது.

பெண் பிரதிநிதித்துவம்

ஊவா மாகாண சபைத் தேர்தலின் பதுளை மாவட்டம் சார்பாக அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் பட்டியல்களில் மொத்தம் 11 பெண்கள் போட்டியிடும் அதே வேளை 3 பெளத்த பிக்குகளும், இந்துமத குரு தலைமையில் 21 தமிழ் வேட்பாளர்களும் களம் இறங்கி யுள்ளனர். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு பட்டி யலில் எந்தவொரு முஸ்லிம் வேட்பாளரும் உள்ளடக்கப் படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் 2 தமிழர்களும், ஜனநாயகக்கட்சியில் ஒரு தமிழ்ப் பெண்ணும் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், சிவஸ்ரீ சுதாகர் சர்மாவின் புதல்வி மீரா தலைமையிலான சுயேட்சைக்குழுவும், பிறிதொரு தமிழ் வேட்பாளர்கள் அடங்கிய சுயேட்சைக் குழுவும் தேர்தல் களத்தில் குதித்துள்ளது.

பதுளை மாவட்ட தேர்தல் களத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பில் ஹேமா ரட்னாயக்க, மவ்பிம ஜனதா கட்சியில் சமீலா தில்ருக்சி த சில்வா, ஜனசெத பெரமுன கட்சியில் பி. ஆர். மல்லிகா, சித்ராணி டெடிகம, டி. எம். அனுலாவதி, ஜனநாயக கட்சியில் கோமளம் பிரியதர்சினி, தேசிய சுதந்திர முன்னணியில் பி. எம். யசோமெனிகா, சுயேட்சைக்குழு 1ல் வேலாயுதம் சுந்தரவதனி, சுயேட்சைக்குழு 2ல் சிஸ்ரீ சுதாகர சர்மா மீரா தலைமையில் சாமூவேல் செல்வமலர், சிவபாலன் வசந்த குமாரி, ஸ்ரீ லங்கா தொழில் கட்சியில் எஸ். எம். குசுமாவதி என 12 பெண்கள் போட்டியிடுகின்றனர். இவர்களில் ஐந்து பேர் தமிழ்ப் பெண்களர்.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் ஆறு தமிழர்க ளும், ஐக்கிய தேசியக் கட்சியில் நான்கு தமிழர்களும், இரு முஸ்லிம்களும், ஜனநாயகக் கட்சியில் ஒரு தமிழரும், ஸ்ரீலங்கா தொழில் கட்சியில் ஒரு தமிழரும், ஐக்கிய இலங்கை மஹாசபா கட்சியில் ஒரு தமிழரும், ஐக்கிய ஜனநாயக முஸ்லிம் கூட்டமைப்பில் மூன்று தமிழர்களும், பதினேழு முஸ்லிம்களும், சுயேட்சைக்குழுவில் 1 ல் 26தமிழர்களும், சிவஸ்ரீ சுதாகரசர்மா மீரா தலைமையிலான சுயேட்சைக்குழுவில் இருபத்தொரு தமிழர்களும், மாலிம்பட தலைமையிலான சுயேட்சைக்குழுவில் மூன்று தமிழர்களும், ஒரு முஸ்லிமும் ஜனசெத்த பெரமுன கட்சியில் ஒரு தமிழ ரும், ஒரு முஸ்லிம் என 64 தமிழர்களும் 23 முஸ்லிம்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

செப்டெம்பர் 20 ந்திகதி நடைபெறவுள்ள ஊவா மாகாண சபைத் தேர்தலில் பதுளை, மொனராகலை ஆகிய இரு மாவட்டங்களிலும் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பில் 617 வேட்பாளர்கள் மொத்தமாக களம் இறங்கியுள்ளனர். 9,42,390 பேர், இத் தேர்தலில் மொத்தமாக வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர். அரசியல் கட்சிகள் சார்பில் 414 வேட்பாளர்களும், சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 203 வேட்பாளர்களும் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

பதுளை மாவட்டத்தில் 18 உறுப்பினர்களும், மொன ராகலை மாவட்டத்தில் 14 உறுப்பினர்களும் வாக்காளர்களால் தெரிவு செய்யப்படுவதுடன் இருவருக்கு போனஸ் ஆசனங்களாக 34 பேர் நியமிக்கப்படுவர்.

அரசியல் கட்சிகளின் சார்பில் 33 வேட்பு மனுக்களும், சுயேட்சைக் குழுக்கள் சார்பாக 44 வேட்பு மனுக்களுமாக 44 வேட்பு மனுக்கள் இரு மாவட்டங்களிலும் சமர்ப்பிக் கப்பட் டுள்ளன. 2013ம் ஆண்டு வாக்களார் இடாப்பின் பிரகாரம் நடைபெறும் இத் தேர்தலில், பதுளை மாவட்டத் தில் 6,09966 வாக்காளர்கள் 516 வாக்களிப்பு நிலையங்களி லும் மொனராகலை மாவட்டத்தில் 3,32,764 வாக்காளர்கள் 318 நிலையங்களிலும் வாக்களிக்கவுள்ளனர்.

மொனராகலை மாவட்டத்தில், மொனராகலை, பிபிலை, வெல்லவாய ஆகிய மூன்று தேர்தல் தொகுதிகளேயுள்ளன. 25 ஆசனங்கள் இருந்த பதுளை மாவட்டத்திலிருந்து மூன்று ஆசனங்கள் மொனராகலை மாவட்டத்திற்கு வழங்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நன்றி - தினகரன்

தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் பற்றி கம்பனிகள் கவனம் செலுத்துமா - என்.நெடுஞ்செழியன்


தோட்டத் தொழிலாளர்களின் கடும் உழைப்பின் மூலம் பெரும் இலாபமீட்டும் தோட்டக்கம்பனிகள் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் மட்டும் பின்னிற்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தோட்ட உட்கட்டமைப்புப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பு தோட்டக் கம்பனிகளிடமே உள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருப்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

பெருந்தோட்டங்கள் அர சுடைமையாக்கப்படுவதற்கு முன்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு, சுகாதாரம், பொது வசதிகள், உணவுப்பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட அனைத்தையும் குறித்த தோட்டக் கம்பனிகளே மேற்கொண்டு வந்தன.
எனினும், 1972இல் தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டு மக்கள் பெருந்தோட்ட அபிவிருத்திச்சபை, அரச பெருந்தோட்டயாக்கம் போன்ற நிறுவனங்களின் கீழ் கொண்டு வரப்பட்டன. அப்போதும் கூட அந்த நிறுவனங்கள் தொழிலாளருக்கான அடிப்படை வசதிகளை ஓரளவே னும் செய்து கொடுத்தன.
மீண்டும் தோட்டங்கள் கம்பனிகளுக்கு நீண்ட காலக் குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னர் தோட்ட நிருவாகங்கள் தொழிலாளர்களின் குடியிருப்பு, சுகாதாரம், பொது வசதிகள் போன்றவை தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. தொழிலாளருக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் பொறுப்பு தமக்குரியதல்ல எனவும், அரசாங்கத்து க்கே உள்ளது எனவும் தெரிவித்து பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு வந்தன. ஆனால், தமது நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் தோட்டத்தொழிலாளரின் சேமநலன், பொது வசதிகள் என்பவற்றை கவனிப்பதில் தமக்கும் தார்மீக பொறுப்புக்கள் உள்ளன என்பதை தோட்டக்கம்பனிகள் மறந்துவிட்டன என்றே கூற வேண்டும்.
இது தொடர்பாக தோட்டத்தொழிற்சங்கங்கள் பல போராட்டங்கள் நடத்தியும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. அதேபோன்று அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எதுவும் நடைபெறவில்லை.
இன்று பெருந்தோட்டங்களில் வீடில்லாத பிரச்சினை பெரிதாக உள்ளது. அத்து டன் தோட்ட சுகாதாரம், பொது வசதிகள், குடிநீர் மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
மலையகத்தில் அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டு பாராளுமன்றம், மாகாண சபை கள், பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி மன்றங்களில் தற்போது மலையக பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் மூலமே ஓரளவேனும் பாதையமைப்பு, நீர்விநியோகம் போன்ற பொது வசதிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
தோட்டத் தொழிலாளர்களின் கடும் உழைப்பின் மூலம் பெரும் இலாபமீட் டும் தோட்டக் கம்பனிகள் அவர்களுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் மட்டும் பின்னிற்பதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில் தோட்ட உட்கட்டமை ப்புப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறு ப்பு தோட்டக் கம்பனிகளிடமே உள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருப்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
மாத்தளை மாவட்ட அபிவிருத்தி மீளா ய்வுக் குழுக்கூட்டம் மாத்தளை மாநகர சபைகேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச உதவிகள் தோட்டங்களைச் சென்றடைவதில் உள்ள குறைபாடுகள் பற்றி கவனம் செலுத்தியுள்ளதாகவும் அங்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தோட்டங்களில் தொழிற்றுறைக்குப்புறம்பாக உட்கட்டமைப்பு விடயங்களான பாதை, குடிநீர், சுகாதாரம் போன்ற விடயங்களைச் செய்து தரவேண்டிய பொறுப்பு தோட்ட நிர்வாகங்களினதும் தோட்டக்கம்பனிகளினதும் பொறுப்பா கும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நலிவடைந்து வரும் பெருந்தோட்டத் துறையை மீளக்கட்டியெழுப்பி அத் துறையை நம்பிவாழும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை மேம்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் இவ்விடயத் தில் நன்மையான தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் மிக வும் முக்கியமானவையும் தோட்டத்தொழிற்றுறையைச்சார்ந்த நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் அனைத்தும் கவனத் தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
முக்கியமாக தோட்டங்களை நிருவகிக் கும் கம்பனிகள் இது தொடர்பாக கவ னம் செலுத்த வேண்டியது மிகமிக அவ சியமாகும்.
அதேவேளை, இவ்வாறான பிரச்சினை களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்த மலையக மக்களின் பிர திநிதிகளையும் பாராட்ட வேண்டும். அத் துடன் இதனை ஒரு முன்னோடியாகக் கொண்டு மலையக தொழிற்சங்க, அரசி யல் தலைவர்கள் தோட்ட மக்களின் பிரச்சினை, தோட்ட அபிவிருத்தி என் பவை தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்தி தீர்வுகளை ப்பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.


நன்றி - வீரகேசரி

மாற்றமடைந்துவரும் மலையக தமிழ் மக்களுக்கு புதிய உத்வேகம் அவசியம் - பி.பி.தேவராஜ்

பி.பி.தேவராஜ்

ஹெராக்லிட்டஸ் (Heraclitus) என்ற கிரேக்க தத்துவ ஞானி மாற்றங்கள் பற்றி சிந்தனையைத் தூண்டும் விதத்தில் ஒரு கருத்தை தெரிவித்துள்ளார். “ஒரு மனிதன் ஒரே ஆற்றில் இரண்டு தடவை இறங்குவதில்லை. ஆறும் மாறிவிடுகிறது. மனிதனும் மாறி விடுகிறான்”

எது சாஸ்வதமாக இருக்கின்றதோ இல்லையோ மாற்றங்கள் மாத்திரம்தான் சாஸ்வதம் உடையதாய் உள்ளன. இதைத்தான் கார்ல் மார்க்ஸ் கூட கூறியிருக்கின்றார். சில சமயங்களில் மாற்றங்கள் துரிதமாக நடைபெறலாம். சில சமயங்களில் அது ஆமை வேகத்தில் இடம்பெறலாம். எப்படி இருந்தாலும் மாற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கின்றன.

பெருந்தோட்ட மக்கள் வாழ்விலே பெரும் மாற்றங்கள் ஏற்படுவதில்லை. இன்றும் அன்றுபோல் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற ஆதங்கம் உண்டு. பெருந்தோட்டங்கள் (Plantation system) என்பன பொருளாதார அமைப்பிலும் அங்கே வாழ்கின்ற மக்களின் தன்மையிலும் சில தனித்துவங்கள் உடையதாய் உள்ளன. இலங்கை போன்ற நாடுகளில் பெருந்தோட்டங்கள் அமைப்பதற்கு முன்னர் அமெரிக்காவின் சில இடங்களிலும் கரீபியன் தீவுகளிலும்தான் இது முதலில் ஆரம்பிக்கப்பட்டது. இந்த பெருந்தோட்டங்கள் ஆபிரிக்காவிலிருந்து அடிமைகளை கைப்பற்றி கப்பல் மூலமாக இந்த நாடுகளுக்கு கொண்டுவரப்பட்டு பெருந்தோட்டங்களிலே தொழில் செய்து அங்கேயே வாழ்ந்து வந்தார்கள். இவ்வாறு கட்டுண்டு வாழ்ந்த அடிமை தொழிலாளர்களைப் பற்றி விடாப்பிடியான /மீள முடியாத ஏழ்மையில் சிக்குண்டவர்கள் என்று சிந்தனையாளர்கள், அறிஞர்கள் வர்ணித்திருக்கிறார்கள்.

அடிமை வர்த்தகத்துக்கு எதிராக சட் டங்கள் இயற்றப்பட்டு அடிமை முறை முற்றாக ஒழிக்கப்பட்ட பின்னர் பெருந்தோட்டங்களை ஆரம்பிப்பதற்கு இந்தியா போன்ற நாடுகளில் இருந்து தொழிலாளர்கள் திரட்டப்பட்டனர். இலங்கை போன்ற நாடுகளிலே பெருந்தோட்டங் கள் அறிமுகப்படுத்தப்பட்ட போது இந்த தோட்டங்கள் அடிமை தொழிலாளர்களை நம்பி இருக்கவில்லை. ஒப்பந்தம் மூலமாக (ஐந்து ஆண்டுகள்) அல்லது கங்காணி முறையில் இவர்கள் பெருந்தோட்டங்களில் வேலை செய்ய சென்றார்கள். அதாவது அவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் மீண்டும் தாங்கள் தாய்நாடு திரும்பலாம் என்ற அடிப்படையில் தான் தொழிலாளர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டார்கள். இப்படி அமர்த்தப்பட்டவர் கள் புதிய நாடுகளில் குடியேறி அங்கேயே தங்கிவிட்டனர்.

ஆனாலும் ஆரம்ப காலத்தில் இவ்வாறு வேலைக்கு அமர்த்தப்பட்டவர்கள் தோட்டங்களில் இருந்து மாறி வேறு தோட்டங்களுக்கோ, வேறு இடங்களுக்கோ சென்றால் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடர்ந்து மீண்டும் அவர்களை அதே தோட்டத்திற்கு கொண்டுவரலாம் என்ற சட்டம் இருந்தது. ஆனால் அது இப்போது இல்லை. மாற்றப்பட்டுவிட்டது. இப்பொழுது தோட்டங்களில் இருந்து வெளியே சென்று வேலை செய்யலாம் என்ற நிலைமை உண்டு.

இலங்கையின் பெருந்தோட்ட தொழிலாளர்கள் கட்டுப்பாட்டுக்குள் சிக்குண்டு இருந்தாலும் இப்பொழுது மாற்றங்கள் நிகழ்ந்துவிட்டன. தோட்டத் தொழிலை மாத்திரம் நம்பி வாழ வேண்டிய நிர்ப்பந்தம் இப்பொழுது மாறி வருகின்றது. குறைந்த சம்பளத்திற்கு வேலை செய்து எந்நேரமும் ஏழ்மையிலே சிறைபட்டு இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற சிந்தனை எழுந்துள்ளது. ஒரு காலத்தில் சமூக அந்தஸ்தில் உயர்ந்தவர்கள், படித்தவர்கள் போன்ற தொகையினரை விரல் விட்டு எண்ணிவிட முடிந்தது. இன்று அன்றைய நிலையோடு ஒப்பிடும் பொழுது முன்னேற்றங்கள் ஏட்பட்டுள்ளன. ஒரு தோட்டத்திலே வாழ்ந்து கொண்டு வெளியே சென்று வேலை செய்வது இப்பொழுது அதிகரித்துள்ளது. நகர் புறம் நோக்கிய நகர்வு துரிதமடைந்துள்ளது. தோட்டங்களில் உள்ள தங்கள் தொடர்புகளை அடியோடு விட்டுவிடாமல் நகர்ப்புறத்தில் பல இளைஞர்கள், யுவதிகள் தொழில் புரிந்து கொண்டிருக்கிறார்கள். இவர்களில் பலர் தேர்ச்சியற்ற தொழிலாளர்களாக மட்டுமல்லாது திறமைவாய்ந்த, பயிற்சிபெற்ற உழைப்பாளிகளாகவும் உள்ளனர். பலர் தொழில்சார் நிறுவனங்களில் உயர் உத்தியோகஸ்தர்களாகவும் கடமை புரிகின்றனர்.

பாடசாலைகள், ஆசிரியர்கள் அதிகரிப்பினால் மாணவர் தொகையும் கூடியுள்ளது. தோட்டப் பகுதி பாடசாலைகள் வளர்ந்து வருகின்றன. தோட்டப் பகுதி மாணவர்களுக்காக ஆசிரிய பயிற்சி கலாசாலை கொட்டகலையிலே உள்ளது. ஒரு உத்தேச கணக்கீட்டின் படி ஏறத்தாழ 4,000 பட்டதாரி ஆசிரியர்கள் மலையக தமிழ் மக்கள் மத்தியில் இருந்து தோன்றியிருக்கிறார்கள். இப்பொழுது உயர் கல்வி பெற்றவர்கள் வைத்திய கலாநிதிகள், சட்டத்தரணிகள், பொறியியலாளர்கள், கணக்கியலாளர்கள் என்பவர்கள் பலர் தோட்ட தொழிலாளர் மத்தியிலும் தோன்றி பல இடங்களிலே வேலை செய்து வருகிறார்கள்.

ஒரு காலத்தில் வர்த்தகர்களாக இலங்கைக்கு வந்தவர்கள் குறிப்பிட்ட சில சமூகங்களை சார்ந்தவர்களாகவே இருந்தனர். ஆனால், இப்பொழுது தோட்ட தொழி லாளர் மத்தியில் இருந்து ஒரு வர்த்தக சமூகம் உருவாகியுள்ளது. கொழும்பு வந்த சில இளைஞர்கள், இன்று வர்த்தக பிரமுகர்களாகி கோடீஸ்வரர்களாகக் கூட உள்ளனர். மத்திய அல்லது உயர்தர வர்க்கத்தின் தோற்றமும், வளர்ச்சியும் மலையக தமிழ் சமுதாயத்தில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இப்பொழுது மலையக தமிழ் மக்களை தொழிலாளர்களாக மாத்திரம் கொண்ட சமூகமாக கருத முடியாது. இதர சமூகங்களைப் போலவே மலையக தமிழ் மக்கள் மத்தியிலே பல பிரிவுகள் உள்ளன. இன்று மத்திய கிழக்கு நாடுகளில் மட்டுமல்லாது அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஐரோப்பா, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளிலே சிறிய அளவில் என்றாலும் பல மலையக தமிழர்கள் திறமைசாலிகளாக உயர்தொழில் புரிந்து வருகின்றனர். இந்த போக்கு மென்மேலும் அதிகரித்துக்கொண்டிருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது.

கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக இந்திய வம்சாவளித் தமிழர்கள் எத்தனையோ சோதனைகளுக்காளாகி எண்ணற்ற இன்னல்களை சந்தித்திருந்த போதிலும் இவற்றை தாண்டி வந்துள்ளார்கள். கிரேக்க ஞானி ஹெராக்கிலிடஸ் (Heraclitus) கூறியுள்ளதை போல மாற்றங்கள் ஏற்படுவதை யாராலும் தடுக்க முடியாது.

மாற்றங்கள் இன்று ஆமை வேகத் தில் நடைபெறுகின்றன என்றாலும் ஒரு கற்றறிந்தோர் சமுதாய சிந்தனைகளு க்கு வழியமைக்க வேண்டிய காலகட் டத்தில் நாம், இப்போது கால் எடுத்து வைக்கிறோம். மலையக தமிழ் மக்க ளின் பின்னடைவு ஒரு தொடர்கதையா கவே உள்ளது என்ற சிந்தனையை மாற்றி இதுவரையும் ஏற்பட்டுள்ள மாற்ற ங்களில் நம்பிக்கை கொண்டு புதிய உத் வேகத்துடனும், தன்னம்பிக்கையுடனும் செயல்பட வேண்டிய கட்டத்தில் இன்று மலையக தமிழர் சமூகம் உள்ளது.

நன்றி - வீரகேசரி

மகப்பேற்று நிலையம் இருந்தும் பயன்படுத்தமுடியாத நிலையில் தோட்ட மக்கள் - பா. திருஞானம்


கண்டி மாவட்டத்தின் மெததும்பர பிரதேச சபைக்கும் பிரதேச காரியாலயத்திற்கும் பன்வில பிரதேச காரியாலயத்திற்கும் பாத்ததும்பர பிரதேச சபை க்கும் உட்பட்ட இறங்கலை போபிட்டிய தோட்ட மக்கள் போதிய வைத்திய சேவையின்றி பல இன்னல்களை அனுபவித்து வருகின்றனர். இந்தத் தோட்டம் அரச பெருந்தோட்ட யாக்கத்தினால் (SPC) நிருவகிக்கப்பட்டு வருகின்றது. கோமர கீழ்ப் பரிவு, கோமர மேற்பிரிவு போபிட்டிய, நீவ்துனுஸ்கல, துனுஸ்கல ஆகிய பிரிவுகளைக் கொண்ட இந்தத் தோட்டத்தில் சுமார் 241 தொழிலாளர்கள் தோட்டத் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இந்தத் தோட்டம் கோமர ஜனபதய (732), கலபொடவத்த (742) ஆகிய இரு கிராம சேகவர் பிரிவுகளை கொண்டது. சிறுவர் முதல் பெரியோர் வரை சுமார் 1000 பேர் இங்கு வசித்து வருகின்றனர்.

இந்தத் தோட்டத் தொழிலாளர்களுக்கு குறைந்தளவிலான நாட்களே வேலை வழங்கப்படுவதாகவும் இதனால் குறைந்தளவு சம்பளமே கிடைப்பதாகவும் கூறுகின்றனர். எனவே பெருங்கஷ்டங்களுக்கு மத்தியிலேயே வாழ்ந்து வருவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தத் தோட்டத்தில் இயங்கி வந்த வைத்தியசாலை சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் மூடப்பட்டது. ஆனால், வேறொரு தோட்டத்தைச் சேர்ந்த வைத்தியர் ஒருவர் வாரத்தில் இரண்டு தினங்களுக்கு மேற்படி தோட்ட வைத்தியசாலைக்கு வந்து நோயாளர்களுக்கு மருந்து கொடுக்கிறார். ஏனைய தினங்களில் தோட்ட வைத்தியசாலை இயங்குவதில்லை. எனவே அவசர வைத்திய தேவைகளுக்காக 25 கிலோமீட்டர்களுக்கு அப்பாலுள்ள மடுல்கலை வைத்தியசாலைக்கே செல்ல வேண்டியுள்ளது. அம்புலன்ஸ் வசதியும் இல்லை. இருந்தும் அம்புலன்ஸ் வண்டியும் பழுதடைந்த நிலையில் தோட்ட முகாமையாளரின் பங்களாவில் நிறுத்தப்பட்டுள்ளது.

திடீர் விபத்துக்குள்ளாகும் நோயாளர்களை முச்சக்கர வண்டியில்தான் நகர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லவேண்டியுள்ளது. இதற்கு சுமார் ஆயிரம் ரூபாவுக்கு மேல் செலவிட வேண்டியுள்ளது. வேலை நேரத்தில் திடீர் சுகவீனமுற்றால் தோட்ட நிர்வாகம் 750 ரூபா வழங்குகிறது. அத்துடன் முச்சக்கர வண்டியில் நோயாளர்களைக் கொண்டு செல்வதால் அவர்கள் மேலும் சுகவீனமடைகின்றனர். வீதி சீரற்றுக் காணப்படுவதால் முச்சக்கரவண்டியில் கொண்டு செல்லும் போது பெருங்கஷ்டங்களை எதிர்கொள்கின்றனர்.

இங்கு இயங்கி வந்த மகப்பேற்று நிலையமும் மூடப்பட்டு விட்டது. கட்டடங்கள் உடைந்து சேதமடைந்துள்ளன. உபகரணங்களும் கைவிடப்பட்ட நிலையில் காணப்படுகின்றன. கர்ப்பிணித் தாய்மார் சிகிச்சை பெறுவதற்கோ அல்லது மகப்பேற்றுக்கோ மடுல்கலை வைத்தியசாலைக்கே செல்ல வேண்டும். கர்ப்பிணித் தாய்மாரை கொண்டு செல்வதற்கும் போதுமான போக்குவரத்து வசதிகள் இல்லை. முச்சக்கரவண்டி அல்லது பஸ்ஸில்தான் செல்ல வேண்டும். பாதையும் சீரற்ற நிலையிலேயே காணப்படுகின்றது.

கர்ப்பிணித் தாய்மாரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே குழந்தைப் பேறு கிடைத்துள்ள சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர். குறித்த நேரத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாததினால் இடைவழியில் சிலர் இறந்து போயுள்ளதாகவும் கூறப்படுகிறது. சிலவேளைகளில் தனியார் மருந்தகங்களில் அதிக காசை கொடுத்து மருந்து வாங்க வேண்டியுள்ளதாகவும் கூறுகின்றனர். தோட்ட மகப்பேற்று நிலையத்தில் பல வசதிகள் காணப்பட்ட போதிலும் அவை கைவிடப்பட்டமை கவலைக்குரிய விடயமாகும்.

இங்குள்ள மருந்தகத்திற்கு கிழமைக்கு 02 முறை வைத்தியர் வருவார். இங்கு இல்லாத மருந்துகளை வெளியிடங்களில் காசு கொடுத்தே வாங்க வேண்டியுள்ளது. தங்களுக்கு கிடைக்கும் குறைந்தளவு வருமானத்தில் வைத்திய செலவுக்காக பெருந்தொகைப் பணத்தை செலவிட முடியாத நிலையில் இருப்பதாக மேற்படி தோட்டத் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தோட்டத்தில் மலசல கூடங்கள் குறைவாகவே காணப்படுகின்றன. பற்றைகளையே மலசல கூடங்களாகப் பாவித்து வருகின்றனர். இதனால் பல நோய்கள் பரவுகின்றன. சிறுவர்களுக்கும் பல பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன. இங்கு போதியளவு நீர் வசதிகள் இருந்த போதிலும் அவை முறையாக விநியோகிக்கப்படுவதில்லை. தேவையான நீரை நீரூற்றுக்களில் குழாய்கள் போட்டு நீரை சேமித்துக் கொள்கின்றனர். இதனால் பல சுகாதார சீர்கேடுகள் ஏற்படுகின்றன என்று மேற்படி தோட்ட மக்கள் கூறுகின்றனர்.

இங்குள்ள லயன் வீடுகளின் கூரைத் தகடுகள் மிகவும் பழைமையானவை. சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் போடப்பட்ட தகடுகள் இதுவரை மாற்றப்படாமல் உள்ளன. தற்போது இவை உக்கிய நிலையில் காணப்படுகின்றன. மழை காலங்களில் வீட்டில் இருக்க முடியாத நிலையே உள்ளது. அத்துடன் வீடு பற் றாக்குறையும் காணப்படுகின்றது. ஒரே வீட்டில் 2, 3 குடும்பங்கள் உள்ளன. இத் தோட்ட மக்கள் பல கஷ்டங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர். எனவே, தமது பிரச்சினைகளுக்கு உரிய தரப்பினர் தீர்வினை பெற்று கொடுக்க வேண்டு மென்பதே இம்மக்களின் கோரிக்கையா கும்.

நன்றி - வீரகேசரி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates