Headlines News :
முகப்பு » » அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள்: இந்திய வம்சாவளி தமிழர் ஒரு கண்ணோட்டம் - யசோதரா கதிர்காமத்தம்பி

அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள்: இந்திய வம்சாவளி தமிழர் ஒரு கண்ணோட்டம் - யசோதரா கதிர்காமத்தம்பி


சமூக நிலைமாற்று நிறுவனத்தின் தலைவர் பி.பி. தேவராஜ் இந்திய வம்சாவளித் தமிழர்களுக்கு அவசியமான 11 சீர்திருத்த விடயங்களை உள்ளடக்கிய பரிந்துரைகளை அரசியல் சீர்திருத்த ஆணைக்குழுவுக்கு கையளித்துள்ளார். மனித உரிமைகள் பட்டயம் (Bill of Rights) அந்த விடயங்களுள் ஒன்றாகும். இந்திய வம்சாவளி தமிழர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு இத்தகைய ஒரு ஆவணம் அரசியல் யாப்பிலே சேர்க்கப்பட வேண்டியது அவசியமாகும். சீர்திருத்த ஆலோசனைகள் இடம்பெறும்போது அரசியல் யாப்பிலே உள்ளடக்கவேண்டிய அடிப்படை உரிமைகளை பற்றி எடுத்துரைக்க இந்திய வம்சாவளி மக்கள் பிரதிநிதிகள் மிகவும் கரிசனையுடன் செயல்படுவார்கள் என்று நம்பலாம்.

இந்தக் கட்டுரை 1947, 1972 மற்றும் 1978 ஆம் ஆண்டு இலங்கை அரசியல் யாப்பின் கீழ் இந்திய வம்சாவளி தமிழர்களின் உரிமைகள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டன என்பதையும் இனிவரும் காலங்களில் Bill of Rights அவர்களின் உரிமைகளைப் பாதுகாக்க ஏன் அவசியம் என்பது பற்றியும் ஆராய்கிறது.

அறிமுகம்

பாராளுமன்றம் அரசியல் நிர்ணய சபையாக பிரகடனம் செய்யப்பட்டு அரசியல் யாப்பு சீர்திருத்தங்களை செய்வதற்கான ஏற்பாடுகள் இப்பொழுது நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இது பாராளுமன்றத்தினதும் மக்களினதும் பேராதரவைப் பெற்றுள்ளது.

தேர்தல் முறை சீர்திருத்தம் போன்ற சில அம்சங்களோடு மாத்திரம் நின்றுவிடாமல் அரசியல் யாப்பின் சகல உறுப்புரைகளையும் ஆராய்ந்து இன்றைய யாப்பிலுள்ள குறைகளைக் களைந்து நாட்டின் ஐக்கியத்தையும் அபிவிருத்தியையும் ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த சீர்திருத்த முயற்சி நடந்துகொண்டிருக்கிறது. சர்வதேச தரங்களுக்கேற்ப புதிய அரசியல் யாப்பு வரையப்படும் என்பது பெரிதும் வரவேற்கத்தக்கதாக உள்ளது. மூலாதார சட்டமாக விளங்கும் அரசியல் யாப்பின் அடிப்படை நோக்கம் தனி நபருடைய சுதந்திரத்தை உறுதிப்படுத்தி மனித மாண்பை பாதுகாப்பதாகும். அரசியல் யாப்பில் அடிப்படை உரிமைகளை போதுமான அளவில் உறுதிப்படுத்தினால்தான் இது சாத்தியமாகும்.

நாட்டின் பல்வேறுபட்ட பிரிவினர், இளைஞர், பெண்கள், சிறுவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் மற்றும் இனக்குழுக்கள் முகங்கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக பல ஆலோசனைகள் ஆணைக்குழு முன் முன்வைக்கப்பட்டுள்ளன. பல்வேறுபட்ட மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகள், தன்னார்வ நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புகள் மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் தங்கள் ஆலோசனைகளை முன்வைத்திருக்கிறார்கள்.

இப்போது உள்ள அரசியல் யாப்பின் 3ஆவது அத்தியாயமாக உள்ள அடிப்படை உரிமைகள் அத்தியாயத்தை விரிவாக்கம் செய்து சர்வதேச தரங்களுக்கு ஏற்ப உரிமைகள் சாசனம் (Bill of Rights) ஒன்று சேர்க்கப்பட வேண்டும் என்பதை பலரும் தமது பரிந்துரைகளில் சுட்டிக்காட்டியுள்ளார்கள்.

1972ஆம் ஆண்டில் சோல்பரி அரசியல் யாப்பு மாற்றப்பட்டு முதலாவது குடியரசு யாப்பு உருவாக்கப்பட்டது. சோல்பரி யாப்பிலிருந்த 29ஆவது உறுப்புரை இவ் யாப்பின் மூலம் நீக்கப்பட்டது. இதற்கு மாற்றீடாக அடிப்படை உரிமைகள் அத்தியாயம் ஒன்று புதிய குடியரசு யாப்பிலே சேர்க்கப்பட்டது. அந்த சமயத்தில் பெரும்பாலான இந்திய வம்சாவளி மக்கள் பிரஜாவுரிமை பெற்றிருக்கவில்லை. 1972ஆம் ஆண்டில் சேர்க்கப்பட்ட அடிப்படை உரிமைகள் என்பது பிரஜைகளுக்கு மாத்திரமே உரித்தானதாக இருந்தது. இதனால் பெரும்பான்மையான இந்திய வம்சாவளி மக்கள் அடிப்படை உரிமைகளுக்கு உரித்துடையவர்களாக இருக்கவில்லை. அடிப்படை உரிமைகள் சேர்க்கப்பட்டபோதிலும் கூட அவை மீறப்பட்டால் அதற்கெதிராக நீதிமன்றம் செல்வதற்கு வழிமுறைகள் 1972ஆம் யாப்பில் இருக்கவில்லை.

1978ஆம் ஆண்டு 2ஆவது குடியரசு யாப்பு அறிமுகமானபோது நாடற்றவர்களுக்கும் அடிப்படை உரிமைகள் 10 ஆண்டுகளுக்கு அளிக்கப்பட வேண்டும் என்ற உறுப்புரை சேர்த்துக்கொள்ளப்பட்டது. 10 ஆண்டுகளுக்குள் நாடற்றோர் பிரச்சினை தீர்க்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையை இது அளித்தது. மேலும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்றம் செல்லக்கூடியதற்கான ஏற்பாடு உறுப்புரை 126இல் உருவாக்கப்பட்டது, எனினும், இந்த அடிப்படை உரிமைகள் அத்தியாயம் ஒருசில உரிமைகளை மாத்திரமே கொண்டுள்ளது. இந்த குறையை நிவர்த்தி செய்யவேண்டும் என்று பலர் சுட்டிக்காட்டி Bill of Rights ஒன்று அரசியலமைப்பில் இருக்க வேண்டும் என தங்கள் ஆலோசனைகளைத் தெரிவித்திருக்கிறார்கள்.

சர்வதேச மனித உரிமைகள்

இலங்கை ஐ.நா. சபையில் அங்கம் வகிப்பதால் அதற்கு சில கடப்பாடுகள் உள்ளன. இந்தக் கடப்பாடுகளை உறுதிசெய்வதற்காக பிரதான சர்வதேச மனித உரிமைகள் சாசனங்களில் கைச்சாத்திட்டு கடப்பாடுகளை இலங்கை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. அவையாவன,

1. குடியியல், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம்  (ICCPR 1966)

2. குடியியல், அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்திற்கான விருப்புரிமை ஆவணம். (Optional Protocol)

3. பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான சர்வதேச சமவாயம் (Icescr 1966)

4. பொருளாதார, சமூக மற்றும் கலாசார உரிமைகளுக்கான சர்வதேச சமவாயத்திற்கான விருப்பத் தெரிவு ஆவணம். (Optional Protocol)

5. அனைத்து வகையான இன ரீதியான பாகுபாட்டை இல்லாதொழிக்கும் சமவாயம் (Cerd)

6. அனைத்து வகையான பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை இல்லாதொழிக்கும் சமவாயம் (Cedaw 1979)

7. அனைத்து வகையான பெண்களுக்கு எதிரான பாரபட்சங்களை இல்லாதொழிக்கும் சமவாயத்திற்கான விருப்பத் தெரிவு ஆவணம். (Optional Protocol)

8. சிறுவர் உரிமைகளுக்கான சமவாயம் (Crc 1989)

9. சிறுவர் உரிமைகளுக்கான சமவாயத்திற்கான முதலாவது விருப்பத் தெரிவு ஆவணம் (ஆயுத போராட்டத்தில் ஈடுபடும் சிறுவர்கள் தொடர்பானது.) (Optional Protocol)

10. சிறுவர் உரிமைகளுக்கான சமவாயத்திற்கான இரண்டாவது விருப்ப தெரிவு ஆவணம் (Optional Protocol) (சிறுவர்களை விற்பனை செய்தல், விபசாரத்தில் ஈடுபடுத்தல், சி;றுவர்களை பாலியல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபடுத்துதல் என்பவற்றைத் தடுப்பதற்கான ஆவணம்.

சித்திரவதை மற்றும் மனிதாபிமான கீழ்த்தரமான நடத்துகைக்கு எதிரான சமவாயம் (ஊயுவு1984).

சித்திரவதை மற்றும் மனிதாபிமான கீழ்த்தரமான நடத்துகைக்கு எதிரான சமவாயத்திற்கான விருப்பத் தெரிவு ஆவணம். (ழுpவழையெட Pசழவழஉழட)

1948ஆம் ஆண்டு மனித உரிமைகளுக்கான அனைத்துலகப் பிரகடனம் (ருனுர்சு) சர்வதேச வழக்காற்று சட்ட அந்தஸ்தை பெற்றுள்ளது. இப்பிரகடனத்திலுள்ள உரிமைகளுக்கு சட்ட வலு கொடுக்கக்கூடியதற்காக மேலே குறிப்பிடப்பட்ட மனித உரிமை; ஆவணங்கள் உருவாக்கப்பட்டன.

2.1 சர்வதேச கடப்பாடுகள்

இவ் ஆவணங்கள் அனைத்தும் உறுப்பு நாடுகளை மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கவேண்டும் என்பதன் அவசியத்தை வலியுறுத்துகின்றன. உதாரணமாக, 1966ஆம் ஆண்டு 1ஆவது மற்றும் 3ஆவது உரிமைச் சாசனங்கள் ஐ.நா சபையினால் ஏற்று அங்கீகரிக்கப்பட்டது. இவ்விரு சாசனங்களின் உறுப்புரை 2 இன் மூலம் சாசனங்களை ஏற்றுக்கொண்ட நாடுகள் தங்களது நாட்டின் சர்வதேச கடப்பாடுகளை ப+ர்த்திசெய்வதற்காக சட்ட, நிறுவன ரீதியாகவும் மற்றும் நிர்வாக ரீதியான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள உடன்பட்டன. அத்தகைய நடவடிக்கைகள் இன, மத, மொழி, தேசியம், பிறப்பிடம், பால் போன்ற வேறுபாடுகள் எதுவும் இன்றி அனைத்து மக்களையும் சமத்துவ அடிப்படையிலேயே அமைய வேண்டும் என சாசனங்கள் வலியுறுத்துகின்றன. இது போன்று மேலே உள்ள அட்டவணையில் பெண்கள். சிறுவர்கள் உட்பட ஏனைய அனைத்து மனித உரிமைகள் சாசனங்களும் இதேபோன்ற கடப்பாடுகளை உருவாக்குகின்றன.

சமவாயங்களின் கீழ் பொறுப்பேற்றுள்ள கடமைகளை நிறைவேற்ற சட்டங்களை ஆக்குவது முக்கியமாகும். இலங்கை சர்வதேச சட்டத்தை நேரடியாக உள்நாட்டில் அமுல்படுத்த முடியாது. விசேட சட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். உதாரணமாக, ஐஊஊPசு இல் உள்ள தகவல் பெறும் உரிமையை அமுல்படுத்த அரசியலமைப்பினால் உத்தரவாதம் (19 ஆம் திருத்தத்தின் கீழ் உறுப்புரை 14யு) செய்து தகவலறியும் சட்டத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்றல் வேண்டும்.

சர்வதேச மனித உரிமைகளின் சாசனங்களின் கடப்பாடுகளை இலங்கை ஏற்றுக்கொண்டபோதிலும் சர்வதேச தரத்தில் இது நாட்டில் உத்தரவாதப்படுத்தப்படவில்லை. அரசியல் அமைப்பு சீர்திருத்தத்திற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளில் ஒன்று இந்த விடயத்தை ஆதரிக்கின்றது. எனவே சர்வதேச தரத்தினை அடிப்படையாகக் கொண்ட உரிமைகள் பட்டயம் நாட்டிற்கு அவசியம் என்பதில் ஐயமில்லை.

2.3 காலாந்தர அறிக்கைகள்

ஐக்கிய நாடுகள் சபையினால் உருவாக்கப்படட மனித உரிமைகள் ஆவணங்களின் கீழ் உள்ள பொறுப்புகளை ப+ர்த்திசெய்வதற்கு உறுப்பு நாடுகள் காலத்துக்கு காலம் அறிக்கைகளை சமர்ப்பிக்க வேண்டும். இந்த அறிக்கைகளில் உறுப்பு நாடுகள் மனித உரிமைகள் மேம்பாடு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளையும் உள்ளடக்கவேண்டும் இந்த அறிக்கைகள் அந்தந்த சமவாயங்களின் கீழ் உருவாக்கப்பட்ட சமவாய அமைப்புகள் (வுசநயவல டீழனநைள) ஆராய்ந்து உறுப்பு நாடுகளுக்கு தேவையான பரிந்துரைகளையும் ஆலோசனைகளையும் வழங்கும்.

2.4 தனிப்பட்ட முறைப்பாடுகள்

இவ்வமைப்புகள் இன்னுமொரு பிரதான பணியை ஆற்றுகின்றது. அப்பணி என்னவெனில், உறுப்பு நாடுகளில் இருக்கின்ற மனித உரிமைகள் மீறலினால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் (சில சமவாயங்கங்களில் பாதிக்கப்பட்டவர்கள் சார்பாக தனிநபர்களை உள்ளடக்கிய குழு அல்லது அரச சார்பற்ற நிறுவனங்கள்) முறைப்பாடுகளை மேற்கொள்ளலாம். முறைப்பாடுகளை செய்ய முன்பு நாட்டில் இருக்கின்ற அனைத்து குறை நிவர்த்தி வழிவகைகளை அணுக வேண்டும். உதாரணமாக, சர்வதேச மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சித்திர வதையினால் பாதிக்கப்பட்ட தனிநபர் முறைப்பாட்டை செய்ய முன்பு உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல்செய்ய வேண்டும்.

சர்வதேச கடப்பாடுகளை உறுதிப்படுத்த நாட்டின் அடிப்படை சட்டமான அரசியல் யாப்பில் உரிமைகளை உறுதிப்படுத்தினால் அது நிச்சயமாக சாதகமான பெறுபேறுகளைப் பெற்றுத்தரும். எனவே அரசியல் யாப்பு சீர்திருத்தத்திற்காக முன்வைக்கப்பட்டுள்ள டீடைட ழக சுiபாவள என்பது இந்த சர்வதேச கடப்பாடுகளை இலங்கை முழுமையாக நிறைவேற்றுவதற்கு வழிவகுக்கும்.

3. இந்திய வம்சாவளி தமிழர்களும் மனித உரிமைகளும்

இலங்கைக்கான முதலாவது அரசியல் யாப்பு 1947ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்டது. இந்த யாப்பின் அடிப்படையில் 1947ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 7 இந்திய வம்சாவளிப் பிரதிநிநதிகள் தெரிவுசெய்யப்பட்டார்கள். 1931 ஆம் ஆண்டு அறிமுகமாகிய சர்வசன வாக்குரிமையின் கீழ் இந்திய வம்சாவளி மக்கள் வாக்காளர்களாக பதிவுசெய்யப்பட்டிருந்தனர். 1948ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை சுதந்திரம் பெற்றது. 1947ஆம் ஆண்டில் பிரகடனப்படுத்தப்பட்ட அதே அரசியல் யாப்பு சுதந்திரம் பெற்ற பின்பும் தொடர்ந்தது. எனினும் 1948ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றவுடன் இந்திய வம்சாவளி மக்கள் பிரஜாவுரிமை சட்டங்களின் மூலமாக பிரஜைகளாவதற்கு தடைகள் விதிக்கப்பட்டன. அதே சமயத்தில் பிரஜைகளாக இல்லாதவர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டார்கள். நீண்ட காலம் பிரஜா உரிமையை இழந்து வாக்குரிமையற்றவர்களாக அவர்கள் வாழ நேரிட்டது. ஏறத்தாழ 3 தசாப்தங்களுக்கு மேலாக இந்திய வம்சாவளி மக்கள் நாடற்றவர்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். இதுவே அச்சமூகத்தின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டமைக்கு பிரதானமான காரணமாகும். இத்தகைய உரிமை மீறல் மூலம் அவர்களுடைய கல்வி, பொருளாதார, சமூக, கலாசார வளர்ச்சியில் ஏற்பட்ட பின்னடைவை மீள நிலைநாட்டுவது நாட்டிற்குரிய பாரிய பொறுப்பாகும். உரிமைகள் பட்டயம் பற்றி சிந்திக்கும்போது இந்த விடயங்கள் சரிவர கவனத்திற்கு எடுக்கப்பட்டு நீண்ட கால பின்னடைவுக்கு பரிகாரம் காணும் வகையில் நடவடிக்கைகள் எடுத்தல் வேண்டும்.

அரசியல் யாப்பில் உரிமைகள் பட்டயம் (டீடைட ழக சுiபாவள) சேர்க்கப்பட்டால் இந்திய வம்சாவளி மக்கள்; அரசியல் நீரோட்டத்தில் உள்வாங்கப்பட்டு நாட்டின் ஏனைய சமூகங்களுக்கு நிகராக தமது உரிமைகளை கோரி நிற்க முடியும்.

புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்படும் “டீடைட ழக சுiபாவள” எத்தகைய வழிவகைகளில் இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளை பாதுகாக்கும் என்பதை ஆராய்வதற்கு இலங்கை சுதந்திரம் அடைந்த காலப்பகுதியில் இருந்து இந்திய வம்சாவளி மக்கள் எவ்வாறு அரசியல் அமைப்பு சீர்த்திருத்தங்களில் இருந்து புறந்தள்ளி வைக்கப்பட்டார்கள் என்பதையும், 1947ஆம் ஆண்டு சோல்பரி யாப்பு, 1772ஆம் ஆண்டு முதலாவது குடியரசு யாப்பு மற்றும் 1978ஆம் ஆண்டு யாப்பு உருவாக்கப்பட்ட காலப்பகுதியில் அடிப்படை உரிமைகள் சம்பந்தமான அவர்களுடைய நிலை எவ்வாறு இருந்தது என்ற வரலாறை ஆராய்வது எதிர்காலத்தில் அவர்களுடைய உரிமைகளை உறுதிப்படுத்துவதற்கு அவசியமாகும்.

3.1 1947 ஆம் ஆண்டு அரசியல் அமைப்பு

1947ஆம் ஆண்டு சோல்பரி யாப்பில் இந்தியா, மலேஷியா பாகிஸ்தானைப் போன்று அடிப்படை உரிமைகள் அத்தியாயம் உள்ளடக்கப்பட வேண்டும் என ஆலோசித்தபோதும் அரசியல் அமைப்பு வரைஞர்கள் அத்தகைய ஒரு அத்தியாத்தை உருவாக்குவதற்கு தயக்கம் காட்டினர். இதற்குப் பதிலாக உறுப்புரை 29(2) ஐ உள்ளடக்க முடிவுசெய்தனர். இவ்வுறுப்புரையின் சராம்சம் பின்வருமாறு:

பாராளுமன்றம் சட்டமாக்குகின்ற போது எந்தவொரு சமூகத்தையும் அல்லது மதத்தை சார்ந்த ஆட்களுக்கு இயலாமையை அல்லது மட்டுப்பாடுகளை ஏற்படுத்தக் கூடிய சட்டங்களையோ, ஏனைய சமூகங்களுக்கு வழங்காத சிறப்புரிமைகளை அல்லது நன்மைகளை இன்னுமொரு சமூகத்திற்கு வழங்கக்கூடியதாகவோ சட்டங்களை ஆக்கமுடியாது.

சோல்பரி ஆணைக்குழுவுக்கு தலைமைவகித்த சோல்பரி பிரபு 1947ஆம் ஆண்டு அரசியல் யாப்பில் அடிப்படை உரிமைகள் சேர்க்கப்படாதது பற்றி ஆணைக்குழு பாரிய தவறை இழைத்துவிட்டதாக ஏற்றுக்கொண்டுள்ளார். அவருடைய இந்நிலைமையை 1963ஆம் ஆண்டு டீ.ர். குயசஅநச உடைய (Ceylon A divided Nation) என்ற நூலுக்கு எழுதிய முன்னுரையில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.

‘....in the light of later happenings I now think it is a pity that the commission did not also recommend the entrenchment in the constitution of guarantees of fundamental rights on the lines enacted in the constitutions of India,Pakistan and Malaysia”

அதனுடைய தமிழாக்கம் பின்வருமாறு:

„பின்னர் நடைபெற்ற விடயங்களின் பின்னணியில் பார்க்கின்ற போது இந்தியா, பாகிஸ்தான் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளில் அரசியலமைப்பில் அடிப்படை உரிமைகளை உள்ளடக்கியதுபோல் இலங்கை அரசியலமைப்பிற்கு இத்தகைய சிபாரிசினை ஆணைக்குழு மேற்கொள்ளவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும் என நான் இப்போது உணர்கின்றேன்‟ என தெரிவித்துள்ளார்.

இந்த கருத்தை உற்றுநோக்குகின்றபோது ஒருவேளை அடிப்படை உரிமைகள் அரசியல் அமைப்பில் உள்ளடக்கியிருந்தால் இந்திய வம்சாவளி மக்களுடைய பிரஜாவுரிமையும் வாக்குரிமையும் பறிக்கப்பட முடியாததாக இருந்திருக்கும் என எண்ணத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப்போனால் அவ்வாறு அமைந்திருக்கலாம் என்ற வாதம் வலிதானதாகவும் இருக்கக்கூடியதாக இருக்கிறது. ஏனெனில் அடிப்படை உரிமைகள் அத்தியாயம் ஒன்றில் அனைவரும் சட்டத்தின் முன் சமம், சமமான பாதுகாப்புக்கு உரித்துடையவர்கள் என்பதும் எந்தவொரு நபருடைய உரிமையும் எதேச்சாதிகாரமாக மீறப்பட முடியாது என்பதும் எந்தவொரு மனித உரிமை சாசனத்திலும் பிரதான உரிமையாகும். இத்தகைய ஏற்பாடு ஒன்றினை சோல்பரி ஆணைக்குழு சிபரி;சு செய்து அது அரசியலமைப்பில் உள்வாங்கப்பட்டிருப்பின் இந்திய வம்சாவளி மக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கான 1948ஆம் ஆண்டு பிரஜாவுரிமை, வாக்குரிமை சட்டங்களை இயற்றி இருக்க முடியாது.

சோல்பரி ஆணைக்குழுவில் சேர் ஐவர் ஜெனிங்ஸின் (ளுசை ஐஎழச துநnniபௌ) அங்கம் வகித்தார். அந்த காலகட்டத்தில் பேராதனைப் பல்கலைக்கழக உபவேந்தராக இவர் கடமையாற்றினார். அவர் ஒரு அரசியல் யாப்பு சட்ட நிபுணர். 29(2) அவரால் சிபார்சு செய்யப்பட்ட ஏற்பாடாகும். இது 1920ஆம் ஆண்டு ரு.மு. அயர்லாந்து அரசாங்க சட்டத்தின் பின் பிரிவு 5 ஐ அடிப்படையாக கொண்டு வரையப்பட்டது. 29(2) இல் குறிப்பிடப்பட்ட “சமூகம்” என்பதற்கான வரைவிலக்கணம் என்னவென்று குறிப்பிடும்போது ஜெனிங்ஸ் பின்வரும் கருத்தினை தெரிவித்துள்ளார். “சமூகம்‟ என்பதற்கு அரசியல் அமைப்பில் வரைவிலக்கணம் ஒன்று இல்லை, எனவே 1946ஆம் ஆண்டு காலப்பகுதியில் வழக்கில் இருந்த சொற்றொடரின் பொதுவான விளக்கத்தின் அடிப்படையிலேயே விளங்கிக் கொள்ள வேண்டும். இந்த வரைவிலக்கணத்தின் படி சிங்களவர், இலங்கை தமிழர், முஸ்லீம்கள், மலாயர்கள், இந்தியர், பறங்கியர் மற்றும் ஐரோப்பியர் என அழைக்கப்படுகின்ற அதேநேரத்தில் சமூகங்களுக்குள்ளே உள்ள பல்வேறு சாதியினரையும் குறிப்பதாக இது பொருள்பட்டது. இது தெளிவற்ற ஒரு தன்மையை ஏற்படுத்தியது.

29(2) இன் பிரகாரம் எந்தவொரு இன அல்லது மத பிரிவினர் மீது ஏதேனும் பாரபட்சத்தை ஏற்படுத்துவதையோ அல்லது ஏதாவது ஒரு சிறப்புரிமையையோ வழங்குவதை தடுப்பதாக உள்ளது. இங்கு “சமூகம்” அல்லது “மத” பிரிவு என்ற இரண்டு சொற்களுக்கும் சரியான வரைவிலக்கணம் வழங்கப்படவில்லை. இவ்வாறு ஏதேனும் சமூகம் அல்லது மத பிரிவினருக்கு வழங்கப்படும் சிறப்புரிமை இயலாமை அல்லது பாரபட்சமாக நடாத்துவதற்கான ஒரு ஏற்பாடு பெரும்பான்மையால் பாராளுமன்ற சட்டம் ஒன்றின் மூலம் நிறைவேற்றப்பட்டு பாராளுமன்ற சபாநாயகர் உடைய ஒப்பம் இட்டால் மாத்திரம் தான் நடைமுறைக்கு வரும் என்று காணப்பட்டது.

29ஆவது சரத்தின் கீழ் பாராளுமன்றததிற்கு வழங்கப்பட்ட சட்டவாக்க அதிகாரம் பின் வருமாறு அமைந்திருந்தது. 29ஆவது சரத்து மூன்று பகுதிகளாக வடிவமைக்கப்பட்டது.

29(1)ஆவது அரசியலமைப்பு ஏற்பாடுகளுக்கு அமைவாக சட்டமாக்கப்பட வேண்டும்.

29(2)மற்றும் 29(3) ஆகிய இரண்டு பிரிவுகளும் பாரபட்சமான அல்லது வரையறைகளை ஏற்படுத்தும் அத்தகைய முரண்பாடான சட்டவாக்கத்தை இயற்றமுடியாது.

29(4) பாராளுமன்றத்தினுடைய மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடனும் சபாநாயகருக்கு சான்றுப்படுத்தலுடன் சட்டங்களை ஆக்கலாம் எனவும் எற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்திய வம்சாவளி மக்களுடைய பிரஜாவுரிமை மற்றும் வாக்குரிமைகள் தொடர்பாக னு.ளு. சேனாநாயக்க உடைய அன்றைய நிலைப்பாட்டிற்கு பிரித்தானிய அரசாங்கம் மறைமுகமான ஆதரவைக் காட்டியது. இங்கு பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்ட வகையில் ஒரு பாரிய அநீதிக்கு துணைபோயுள்ளது என்பதையே எடுத்துக்காட்டியுள்ளது. இலங்கைக்கு சுதந்திரம் வழங்குவதற்கு முன்பதாகவே சிங்களவர் மற்றும் தமிழர்கள் நியாயமான அடிப்படையில் பிரதிநித்துவம் பெறக்கூடிய வகையில் ஏற்பாடுகளை செய்திருக்கலாம். சுதந்திரத்துக்கு பின் எதிர்காலத்தில் வரும் அரசாங்கத்திடம் இந்த அதிகாரத்தை விட்டுச் சென்றமை இந்திய வம்சாவளி தமிழர்களுடைய உரிமைகளை புறந்தள்ளுவதற்கான வழிவகையை செய்துள்ளது.

இன்றுவரை நிலவிவருகின்ற நியாயமான அரசியல் பிரதிநிதித்துவம் இன்மைக்கு இவ்விடயம் மூலகாரணம் இது என குறிப்பிடலாம். இந்தியா மற்றும் பாகிஸ்தானிய (வதிவோர்) பிரஜாவுரிமை சட்டத்தினை அமுல் படுத்துகின்றபோது நடைமுறைப்படுத்திய நிர்வாக ரீதியான பராபட்சத்திற்கு எதிராகவும் அரசியல் யாப்பில் பாதுகாப்பு வழங்கப்படவில்லை.

சுதந்திரத்திற்கு பின்பு அரசாங்கம் உருவாக்கிய சட்டம் பிரஜாவுரிமைகளுக்கான தகுதிகளை வரையறை செய்தது. இச்சட்டம் பிரஜாவுரிமை வழங்குவதை தவிர்த்து பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளி மக்களின் பிரஜாவுரிமையை பறித்தது. அன்று நாட்டில் தலைதூக்கியிருந்த சிங்கள தேசிய வாதத்தை திருப்திபடுத்துவதற்கு இந்த செயல் மிகவும் உறுதுணையாக அமைந்தது. அரசியல் அமைப்பில் உறுப்புரை 29 இருந்த போதிலும் 1948ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிரஜாவுரிமை சட்டமும் வாக்குரிமையை ரத்துச்செய்யும் சட்டமும் உறுப்புரை 29 உண்மையில் சிறுபான்மை மக்களுடைய உரிமைகளை பாதுகாப்பதற்கு போதுமானதாக அமையவில்லை என்பதற்கு சான்றாகும்.

1948 ஆம் ஆண்டு பிரஜாவுரிமை சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட தகுதிகளை ஒரு சிறிய வீத இந்திய வம்சாவளி மக்களே ப+ர்த்தி செய்தனர். எனவே, கிட்டத்தட்ட 12மூ இந்திய வம்சாவளி தமிழர்கள் மாத்திரமே பிரஜாவுரிமை பெற்றுக்கொண்டனர். 88மூ மக்கள் நாடற்றவர்களாயினர்.

3.2 முதலாவது குடியரசு யாப்பு

1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் அடிப்படை உரிமைகள் அத்தியாயம் ஒன்று உள்ளடக்கப்பட்டது. இவ் அரசியலமைப்பில் உயிர் வாழ்வதற்கான உரிமை இருந்தமை குறிப்பிடத்தக்க ஒரு அம்சமாகும். மேலும், 1947 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் உறுப்புரை 29 நீக்கப்பட்டது. அத்துடன் 1972 ஆம் ஆண்டு அரசியலமைப்பின் கீழ் உரிமைகள் மீறப்படுகின்ற போது அதற்குரிய பரிகாரத்தை நீதிமன்றத்தில் பெற முடியாமல் இருந்தது.

10 வருட காலப்பகுதி முடிவின் போது நாடற்றவர் பிரச்சினை தீர்க்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும், 1978 ஆம் ஆண்டு அத்தியாயம் மூன்றில் உரிமைகள் மீறப்படும் போது உயர் நீதிமன்றத்தில் பரிகாரம் பெறக்கூடியதாகவும் இருந்தது.

கட்டுரையின் இரண்டாவது பகுதியில் குறிப்பிட்டவாறு, இலங்கையின் சர்வதேச கடப்பாடுகளின் பின்னணியில் பார்க்கின்ற போது, 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பில் சகலவிதமான மனித உரிமைகளும் உத்தரவாதப்படுத்தவில்லை. பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் அரச வழிகாட்டி தத்துவங்களின் (னுசைநஉவiஎநள Pசinஉipடநள ழக ளுவயவந Pழடiஉல) கீழேயே குறிப்பிடப்பட்டுள்ளன.

எனவே, சர்வதேச தரத்தையும், கடப்பாடுகளையும் வலுக்கொடுக்கும் வகையில் விரிவான உரிமைகள் பட்டயம் ஒன்று உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாகவுள்ளது.

முடிவுரை

உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை (சுiபாவ டியளநன யிpசழயஉh) கடமைகளை நிறைவேற்ற வேண்டியவர்கள் (னுரவல டீநயசநசள) தமது கடமைகளை நிறைவேற்றவும் உரிமைகளை கொண்டிருப்பவர்கள் (சுiபாவ ர்ழடனநசள) தமது உரிமைகள் மீறப்படுகின்றபோது அவற்றிற்கு பரிகாரம் பெற்றுக்கொள்ள சட்டம் மற்றும் ஏனைய வழிமுறைகளை அணுகுவதற்கு வழி சமைக்கும்.

பாரபட்சமான கொள்கைகள் சட்டங்கள், அதிகாரப் பகிர்வு, வளப்பங்கீடு என்பவற்றின் காரணமாக உரிமைகளை அடிப்படையாகக் கொண்ட அணுகுமுறை மனித உரிமைகளை சமத்துவமான வகையில் பெற்றுக்கொள்ள வழிகோலும்.

இந்திய வம்சாவளி மக்களுடைய உரிமைகளை எடுத்துப் பார்க்கின்ற போது, பிரஜாவுரிமை பிரச்சினை 2003 ஆம் ஆண்டு முற்றாகத் தீர்க்கப்பட்டது. இதனால் இச்சமூகம்; அபிவிருத்தி நீரோட்டத்தில் காலம் தாமதித்து இணைந்து கொண்டது. நாடற்றவர்களாக இருந்த காரணத்தினால் கல்வி, பொருளாதாரத் துறைகளில் பின்னடைவைச் சந்தித்திருந்தது. பல நாடுகளில் பின்னடைவைச் சந்தித்த சிறுபான்மை மக்களின் முன்னேற்றம் மற்றும் அபிவிருத்தி கருதி விசேட ஏற்பாடுகள் அரசியலமைப்பின் கீழ் உருவாக்கப்பட்டது. உதாரணமாக, இந்தியா, தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் யுககசைஅயவiஎந யஉவழைn மூலம் கல்வி மற்றும் தொழில் வாய்ப்புக்கள் வழங்கப்படுகின்றன. தென்னாபிரிக்க அரசியலமைப்பின் பிரிவு 9 இன் பிரகாரம் சமத்துவம் என்பது அனைத்து உரிமைகளையும் சுதந்திரங்களையும் உள்ளடக்கும் பின்தங்கிய நபர்கள் அல்லது சமூகங்களை முன்னேற்றுவதற்காக சட்ட ரீதியான மற்றும் ஏனைய நடவடிக்கைகள் எடுக்கவேண்டும். சர்வதேச மனித உரிமைகள் சட்டத்திலும் இத்தகைய பிற்பட்ட சமூகங்களுக்கு தற்காலிக விசேட நடவடிக்கைகள் (வுநஅpழசயசல ளுpநஉயைட அநயளரசநள) எடுப்பதற்கு இடம் உண்டு.

இலங்கையில் அரசியலமைப்பு சீர்திருத்தங்களில் பலராலுமமுன்வைக்கப்பட்ட உரிமைகள் சாசனத்தில் சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான விசேட ஏற்பாடுகள் உள்ளடக்கப்படுவது அத்தியாவசியமாகும். மேலும், மாகாண மேல நீதிமன்றங்களுக்கு அடிப்படை உரிமை வழக்குகளை விசாரிப்பதற்கு நியாயதிக்கம் வழங்கப்படுவது நீதியை நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள இலங்கைப் பிரஜைகள் அணுகுவதற்கு வழிவகை செய்யும்.

யசோதரா கதிர்காமத்தம்பி இலங்கை திறந்த பல்கலைக்கழகம், நாவல

நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates