Headlines News :
முகப்பு » , » தோட்டத்தொழிலாளரின் உயர்வுக்காக உண்மையாக உழைத்த அமரர் ஓ.ஏ.ராமையா இன்று அவரது நினைவு தினம் - மு. நேசமணி

தோட்டத்தொழிலாளரின் உயர்வுக்காக உண்மையாக உழைத்த அமரர் ஓ.ஏ.ராமையா இன்று அவரது நினைவு தினம் - மு. நேசமணி


தொழிற்சங்க அரசியல் சமூகத் தலை வர்கள் மக்களுக்காக வாழ்வதுடன் அவர் களில் எளிமையாகவும் நேர்மையாகவும் உண்மையாகவும் வாழ்வோரே மக்கள் மனதில் நிலைத்திருக்கின்றனர். ஆடம் பரமாகவும் உல்லாசமாகவும் வாழும் தொழிற்சங்கத் தலைவர்கள் மத்தியில் மிகவும் வித்தியாசமானவர் அமரர் ஓ.ஏ.ராமையா. 

தோட்டத்தொழிலாளர்களுக்காக இறுதி மூச்சுவரை உழைத்தவர் அமரர் ராமையா என்றால் அது உண்மையானதென்பதை அனைவருமே ஏற்றுக் கொள்வர். 

தனது இறுதி நாட்களில் மருத்துவ மனையில் படுக்கையில் இருந்தவாறே தொழிலாளர்களின் சம்பள உயர்வு சம்பந்தமாக ெவளிநாட்டு வானொலி ஒன்றுக்கு பேட்டி கொடுத்தவர் மறைந்த தோழர் ஓ.ஏ. ராமையா. அனைத்துத் தரப்பினருடனும் சுமுகமான உறவைப் பேணி பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக முடிவுக்கு கொண்டு வருவதில் வல்லவர். சம்பளப் பிரச்சினை இரண்டு வருடங்க ளாக இழுத்தடிப்புக்கு ஆளாகிக் கொண்டி ருக்கும் நிலையில் தோழரின் நினைவு இயல்பாகவே எழுகிறது. 

ஹட்டனில் இயங்கி வந்த செங்கொடிச் சங்க அலுவலகம் எந்நேரமும் தொழிற் சங்க அரசியல் பேதமில்லாது கலகலப்பாக இருக்கும். இலக்கிய வாதிகளும் புத்திஜீ விகளும் தொழிலாளர்களும் அங்கே நிறைந்து காணப்படு வார்கள். மிக நீண்ட கால அரசியல் தொழிற்சங்க மற்றும் இல க்கிய அனுபவமிக்கவராக இராமையா விளங்கினார். விரல் நுனியில் புள்ளி விபரங்களை வைத்திருப்பார். எந்த ஒரு துறையிலும் விபரமாக விவாதம் செய்ய க்கூடியவர். 

2008ஆம் ஆண்டு அரை நூற்றாண்டு களுக்கும் மேலாக தொழிற்சங்கத் துறை யில் உன்னத சேவையாற்றிய மூத்த தொழிற்சங்க வாதிகளுக்கு முன்னாள் ஜனாதிபதி ராஜபக் ஷ விருது வழங்கி கெளரவம் அளித்தார். ராமையாவும் அவர் களில் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

அகில இலங்கை கள்ளிறக்கும் தொழி லாளர் சங்கம் ஊதிய உயர்வு கோரி கண்டி 

யில் மாபெரும் ஆர்ப்பாட்ட பொதுக் கூட்டம் ஒன்று 1957இல் நடந்தது. அப் போது சாராயம் பிரசித்தி பெற்றிருக் கவில்லை. கேரளாவின் மலையாளிகளே நாடு முழுவதும் இத் தொழிலில் ஈடு பட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் இணைச் சங்கமாக இந்தச் சங்கம் இருந் தது. பொதுக்கூட்டத்தில் தமிழில் பேசும் சந்தர்ப்பம் முதல் முதலில் ஓ.ஏ.ராமை யாவுக்கு கிடைத்தது. தோழர் எம்.ஜி. மென்டிஸ் தலைமையில் பேசியது பின் 

னாளில் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி யின் தலைவர்களில் ஒருவராக இவரை முன்னிறுத்தியது. 

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் அஸீஸ் தலைமையில் ஜனநாயகத் தொழி 

லாளர் காங்கிரஸ் என்ற பெயரில் பிளவுபட்டது. கம்யூனிஸ்ட் கட்சியினர் பலர் அப்போது அதில் இணைந்தனர். சி.வி.வேலுப்பிள்ளை, ரொசாரியோ பெர் ணான்டோ, பிபி. தேவராஜ், எஸ். நடேசன் போன்றோருடன் ஒரு தொண்டனாக ராமையாவும் இணைந்தார். 1960இல் 

சீனாவில் நடைபெற்ற மேதின விழாவில் கலந்து கொண்டார். 1961, 1962, 1963 ஆம் ஆண்டுகளில் ஜெர்மன் பெர்லின் சமூக, அரசியல் மற்றும் விஞ்ஞானத்துறையில் டிப்ளோமா பட்டம் பெற்றார். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் உலகில் பல்வேறு நாடுகளுக்கும் சென்று வந்தார். 

1971 ஆம் ஆண்டு என். சண்முகதாசன், ரொசாரியோ பெர்ணான்டோ போன்றோ ருடன் ராமையாவும் இரண்டு ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்தார். 1989 இல் செங்கொடி சங்க ஹட்டன் அலுவலகத்தில் வைத்து தலைவர் சுந்தரம் பிரான்ஸிஸ், மோகன் சுப்பிரமணியம், முனுசாமி மற்றும் சிவசுந்தரம் போன்றோர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட் டனர். ராமையா அச்சமயம் வெளியில் இருந்ததால் கைதாகவில்லை. 

இடது சாரி இயக்கங்கள் பேரினவாத த்தை எதிர்க்க முடியாததனால் மார்க்ஸிய லெனினிஸ கொள்கைகளை ஒரு கால கட்டத்திற்கு ஏற்ப நடைமுறைப்படுத்த தவறியதாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யோடு இணைந்த பாதையை பின்பற்றிய தாலும் திசை மாறிவிட்டது. செங்கடலை நோக்கிய பயணம் நீலக்கடலில் நங்கூர மிட்டு விட்டது என இடதுசாரிகளின் வீழ்ச்சி பற்றி இவரது கருத்து இருந்தது. 

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates