Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

"சமத்துவக் கல்வி இலங்கையில் வழங்கப்படவில்லை" - பி.பி.சி

யுனெஸ்கோ அமைப்பு உலகளவில் பல நாடுகளில் தொடக்கக் கல்வியின் நிலை குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தெற்காசியாவில், இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இது மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ளது.

தெற்காசியாவில் ஒப்பீட்டளவில் இலங்கையில் கல்வியின் நிலை மேம்பட்டுள்ளது என்று அரசு அவ்வப்போது தெரிவித்து வரும் சூழலில், மலையகப் பகுதிகளில் தொடக்கப்பள்ளிகள் மற்றும் தொடக்கக் கல்வியின் நிலை மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது என்று பல்தரப்பினர் கூறுகின்றனர்.

நாட்டின் மற்ற பகுதிகளுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது, பெருந்தோட்டத்துறையைச் சார்ந்த மக்கள் வசிக்க்கும் மலையகப் பகுதிகளில் கல்வியின் தரம் ஐம்பது, அறுபது வருடங்கள் பின்தங்கியுள்ளது என்று கூறுகிறார், மலையகத்தின் சமூக விஷயங்கள் குறித்து தொடர்ந்து எழுதி வருபவரும் ஓய்வுபெற்ற உயரதிகாரியுமான தர்மலிங்கம் மனோகரன்.
'பள்ளிகள் உண்டு ஆனால் தரமில்லை'

மலையகத்திலுள்ள ஒரு ஆரம்பப் பள்ளி
மலையகப் பகுதிகளில் 800க்கும் மேலான பள்ளிக்கூடங்கள் இருந்தாலும், ஐந்து அல்லது ஆறு பள்ளிக்கூடங்களே தரம் வாய்ந்ததாக உள்ளன என்றும் அவர் பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
தேசிய மட்டத்தில் சமத்துவக் கல்வி இலங்கையில் வழங்கப்படவில்லை என்றும், குறிப்பாக மலையகப்பகுதியில் இது முற்றாக இல்லை எனும் சூழலே பல தசாப்தங்களாக தொடர்ந்து வருகிறது என்றும் அவர் கூறுகிறார்.

இலங்கை நகர்புறத்தில் இருக்கும் ஒரு பள்ளி
மலையகப் பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்கு பல வளங்கள் வழங்கப்படுவது இல்லை என்றும் சுட்டிக்காட்டும் அவர், தோட்டப்பகுதிகளில் ஆசிரியர் நியமனங்கள் தொழிலுக்காக வழங்கப்படுகிறதே தவிர, பிள்ளைகளின் கல்வித்தரத்தை மேம்படுத்துவதற்காக கொடுக்கப்படவில்லை என்பதே யதார்த்தம் என்றும் மேலும் கூறுகிறார்.
பெருந்தோட்டத்துறையைச் சார்ந்திருக்கும் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் கட்சிகள் கூட இதில் கவனம் செலுத்துவது இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டுகிறார்.

மேலதிக தகவல்களுக்கு பி.பி.சி

பெரி.சந்திரசேகரன் நூல்வெளியீட்டு விழாவில்....!


மலையக மக்களின் அடிப்படை உரிமைகளுக்காக போராடிய தலைவர் அமரர் பெரி.சந்திரசேகரன் இளைய தலைமுறையின் நம்பிக்கை நாயகனா கத்திகழ்ந்தார்.

அவர்களின் இருண்ட லயத்துவாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து புதிய வீடமைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் அவர் அளப்பரிய அக்கறை கொண்டிருந்தார். கொள்கையளவில் அரசு இத்திட்டத்தை ஏற்றுச் செயற்படுத்துவதற்கான தளத்தை உருவாக்கியவர் அமைச்சர் சந்திரசேகரன் ஆவார்.

தலவாக்கலையில் காடையர்களை எதிர்க்கும் போர்க்குணத்தை, தொண்டமானை எதிர்த்துக்களம் நின்ற துணிச்சலை, பிந்துனுவெவ படுகொலைக்கு எதிராகப் போராட்டம் நடத்திய வீரத்தை, சிறைப்பட்டுப்போனாலும் துவண்டுபோகாத மனவலிமையை, அமைச்சர் பதவிவகித்தபோதும் பணிவு காட்டப்பழகிய உயர்பண்பை, உதவி கேட்டுவந்தவர்களுக்கு எந்தத்தருணத்திலும் உதவிடமுனையும் உயர் குணத்தை அமைச்சர் சந்திரசேகரன் தனது அரசியல் வாழ்வில் வெளிப்படுத்தியுள்ளார்.

மலையகத் தமிழர்களின் நலனில் மட்டுமல்ல வட கிழக்குத் தமிழர்களின் பிரச்சினையிலும் உரிமையோடு கூடிய தீர்வை எட்டுவதிலும் அவர் தீவிர ஈடுபாடு காட்டினார். சிறுபான்மை இனங்களின் உரிமைக்காவலனாகவே அவர் திகழ்ந்தார்.

அவருடன் அயராது இணைந்து பணியாற்றிய எச்.எச்.விக்ரமசிங்க, அமைச்சர் சந்திரசேகரனின் மறைவைத்தொடர்ந்து இலங்கை பாராளுமன்றத்தில் நிகழ்த்தப்பட்ட அஞ்சலி உரைகளைத்தொகுத்து மலையகத்தின் எழுச்சித்தலைவர் பெ.சந்திரசேகரன் என்ற மகுடத்தில் ஒரு முக்கிய அரசியல் ஆவணத்தை வெளியிட்டிருப்பதை லண்டனில் வாழும் மலையகத்தமிழர்கள் மிகப்பெரிய செயற்பாடாகவே கருதுகின்றனர் என்று யாழ் பல்கலைக்கழக முன்னாள் விரிவுரையாளர் மு.நித்தியானந்தன் லண்டனில் சென்ற ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற மலையகத்தின் எழுச்சித்தலைவர் பெரி.சந்திரசேகரன் நூல்வெளியீட்டு விழாவில் தலைமை வகித்துப்பேசுகையில் தெரிவித்தார்.

இ.தொ.கா கொழும்பு மாவட்ட முன்னாள் அமைப்பாளர் கரு.ரட்ணம் விழாவில் வரவேற்புரை நிகழ்த்தினார். அமைச்சர் பெரி.சந்திரசேகரன் அவர்களின் மறைவிற்கு கூட்ட ஆரம்பத்தில் இரு நிமிஷ மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. விழா நிகழ்வுகளை நா.நவநீதன் நடத்திச் சென்றார்.

தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் வீ.ராம்ராஜ் பேசுகையில்:

ஏககாலத்தில் நான்காம் மாடியில் சிறைவைக்கப்பட்ட நிலையில் தனிப்பட்ட முறையில் அறிமுகமான தலைவர் பெரி.சந்திரசேகரன் இறுதிக்காலம் வரையில் என்னுடன் நல்லுறவு பேணி வந்தவர் ஆவார். இலங்கையின் இன்றைய சூழலில் மலையகம் எதிர்நோக்கும் பிரத்தியேக பிரச்சினைகளின் மத்தியில் மலையகத்தை வழி நடத்திச் செல்லவல்ல ஒரு பெரும் தலைவன் மறைந்துவிட்டமை நமது பெரும் துரதிர்ஷ்டமாகும்.

அவரது அரசியல் வாழ்வின் சகல பரிமாணங்களையும் இணைத்துத் தொகுத்து எச்.எச்.விக்ரமசிங்க வெளியிட்டிருக்கும் இந்த நூல் மலையகம் பேணிப்பாதுகாத்து வைத்திருக்கவேண்டிய பொக்கிஷமாகும்´ என்று தமிழ் ஒலிபரப்புக்கூட்டுத்தாபனத்தின் இயக்குநர் வீ.ராம்ராஜ் கருத்துத் தெரிவிக்கையில் குறிப்பிட்டார்.

ஆர்.நடராஜா பேசுகையில்,

அமைச்சர் பெரி சந்திரசேகரனின் பிறப்பிடத்தைச் சேர்ந்தவன் என்ற வகையில் அவரின் வாழ்வின் வளர்ச்சியை நான் நேரில் பார்த்தவன். அவருடைய அரசியல் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் மலையகத்தின் எழுச்சித்தலைவர் பெ.சந்திரசேகரன் என்ற இந்த நூல் இந்தியாவில் உயர்மட்ட அரசியல்வாதிகள் மத்தியில் வெளியிட்டு வைக்கப்பட்டமை மகிழ்ச்சி தருவதாகும்.

இந்த நூல் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படுவது மிக முக்கியமானதாகும். அந்தப்பணியில் என்னாலான சகல உதவிகளையும் செய்யத்தயாராக உள்ளேன் என்று சமூகசேவையாளர் ஆர்.நடராஜா உரையாற்றுகையில் தெரிவித்தார்.

அமைச்சர் பெரி.சந்திரசேகரனின் நெருங்கிய நண்பராகத்திகழ்ந்த யோகன் அமைச்சரின் உருவப்படத்திற்கு மலர்மாலை சூடி அஞ்சலி செய்தார். லண்டனின் மலையக மக்கள் ஒன்றியத்தின் சார்பில் உபதலைவர் மகேந்திரன் அமைச்சருக்கு மலரஞ்சலி நிகழ்த்தினார்.

மலையக மக்களின் கல்விக்கான அக்கறையும் அரசியல் தலையீடுகளும்


எமது நாட்டில் கல்வி உரிமையைப் பற்றி மேடைகளில் பேசாத அரசியல்வாதிகளை காண்பது அரிது. இது அரசியல்வாதிகள் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றார்கள் என்பதை வெளிப்படுத்தும் தோற்றப்பாட்டை வழங்கினாலும், மக்கள் கல்விக்கு வழங்கும் முக்கியத்துவத்தின் காரணமாக அதற்கு ஏற்றப்படி அரசியல்வாதிகள் தம்மை தகவமைத்திருக்கின்றமையின் வெளிப்பாடாகும். மலையக அரசியல்வாதிகள் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல. மலையக மக்களுக்கான கல்வி உரிமை வரலாற்று ரீதியாக மறுக்கப்பபட்டு வந்த நிலையில் இன்று முறைசார் கல்வியைப் பெற்றுக்கொள்வதில் மலையக சமூகத்தவரிடையே அதிக அக்கறைக் காணப்படுகிறது. கல்வி மீதான மலையக மக்களின் அக்கறை அவர்களின் அரசியல் வரலாற்றின் அடிப்படையிலான வெளிப்பாடாகும். அந்நியர்கள் என்றும் உழைப்பதற்கு மட்டுமே உரிமையுடையவர்கள் என்றும் அங்கீகாரம் அற்றவர்களாக ஒடுக்கப்பட்டு வாழும் நிலையில் இருந்து மீளுவதற்கான ஒரே ஒரு மாற்று வழியாக கல்வியின் முன்னேற்றத்தை மலையக மக்கள் காணுவதே இந்த அக்கறை வெளிப்படுத்தி நிற்கிறது.

மலையக மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கிய, வழங்கி வருகின்ற சக்திகள் மலையக மக்களின் அரசியல் உரிமைகளை வென்றெடுத்து அவர்களை இலங்கையின் சம பிரஜைகளாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள தவறியமையும், இம்மக்களின் உழைப்பின் மீதான தீவிர சுரண்டலுக்கு எதிராக போராட்டம் தொடர்ந்து வலுவிழந்த நிலையில் உள்ளமையும் இம் மக்கள் கல்வியை மட்டுமே தமது விமோசனத்துக்கான வழிகாட்டியாக காணும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. இச் சூழலுக்கு வரலாறு முழுவதும் இலங்கை அரசாங்கங்கள் மலையக மக்கள் மீது மேற்கொண்ட பேரினவாத அடக்குமுறைகளின் பங்கும் குறிப்பிட்டுச் செல்லத்தக்கதே.

எனவே, கல்வியை மட்டும் தமது விமோசனமாக மலையக மக்கள் இன்று நோக்குவதற்கும் மலையக அரசியல் சக்திகளின் இயலாமைக்கும் நேரடியான உறவுண்டு. ஒடுக்கப்பட்ட இனம் என்ற நிலையில் அவர்களின் அடிப்படை அரசியல் பொருளாதார உரிமை பிரச்சினைகளை ஒதுக்கி விட்டு, கல்வியினூடாக தனித்தனியாக விமோசனம் காணுதல் என்பது ஒரு குறுகிய வட்டத்துக்குள் தம்மை உட்படுத்திக்கொள்ளும் போக்காகும். இப்போக்கானது கல்வியை பெறுவதன் ஊடாக தமது சமூக அடையாளங்களை விமர்சனங்களுக்கு உட்படுத்தி நிலைநிறுத்துவதிலும் பார்க்க அதனை மறைக்கும் முயற்சிகள் கற்றவர்களிடத்தில் அதிகமாக இருக்கின்றமை கவனிக்கத்தக்கது. இது கல்வி மலையகத்தில் ஏற்படுத்தி வரும் ஒரு எதிரிடையான மாற்றமாகும். இந்த மாற்றமானது முடிவில் மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதனையும் தீர்க்க எத்தனங்கள் எதுவுமின்றி இருக்கும் அரசியல் சக்திகள் தொடர்ந்து கோலோச்சுவற்கும் வழிவகுக்கிறது.

மேற்குறித்த காரணங்களினால் மலையக மக்கள் இன்று கல்வி தொடர்பாக கொண்டுள்ள அக்கறையை சாதகமில்லாத அல்லது அவசியமற்ற ஒரு அம்சமாக நோக்க வேண்டுமா? நிச்சயமாக இல்லை. மேலே குறிப்பிட்டுள்ள அம்சங்கள் வெளிப்பட்டுள்ள போதும் தொடர்ந்தும் அதேவிதமான போக்கே நிலவும் வாய்ப்பு உள்ளது என்று கூறமுடியாது. இன்றைய கல்வி முறை வளர்க்கும் சுய ஈடேற்றத்தின் மீதான நாட்டம் சமூக பிரக்ஞை அக்கறையின் மீதான விரோதங்கள் மீதான கேள்விகளைக் கேட்பதற்கான அரசியல் பொருளாதார சூழ்நிலைகள் பொதுவில் நாட்டிலும் மலையகத்தில் இடம்பெற்றே வருகின்றன. அதன் வெளிப்பாடுகளை மலையகத்தில் வரலாற்றிலும் இன்றும் காணக்கூடியதாக உள்ளது. எனவே மலையக சமூகத்தின் கல்வி மீதான அக்கறையானது இறுதி பகுப்பாய்வில் சாதமகமான ஒரு அம்சமே.

மலையக மக்களின் கல்வி உரிமை தொடர்பாக ஆதிக்க அரசியல் தலைமைகள் உதட்டளவில் பேசினாலும், “அவர்களுக்கு கல்வி வழங்கினால் அது தமது ஆதிக்க அரசியலுக்கு அச்சுறுத்தல்களை கொண்டு வந்துவிடும்” என்ற எண்ணம் அவர்களிடம் உள்ளூர உண்டு. மலையக மக்களுக்கு வாக்குரிமை வழங்கினால் தமது ஆதிக்கத்துக்கு பாதிப்பு என்று சிங்கள பேரினவாத அரசியல்வாதிகள் வாக்குரிமையை மறுத்தமைக்கும் இவர்களின் கல்வி உரிமை மறுப்பிற்கும் இடையே வேறுபாடு இல்லை. எனினும் மக்கள் கல்விக்கு வழங்கம் முக்கியத்துவம் காரணமாக அப்பியாசக்கொப்பிகளையேனும் பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் “அரசியல் பணியை” மலையக புதுத்தலைமைகளும் செய்து வருகின்றனர். தனது பிள்ளைக்கு அப்பியாசக்கொப்பி வாங்கி கொடுக்க முடியாத நிலையில் பெற்றோர்கள் இருப்பது இவர்களுக்கு ஒரு அரசியல் பிரச்சினையாக தெரிவதில்லை. இவற்றுக்கு அப்பால் எமது கவனத்துக்குட்பட வேண்டிய முக்கிய அம்சமாக இருப்பது இவர்கள் பாடசாலைக் கல்வியில் செலுத்தும் தாக்கமாகும்.

மலையகத்தில் கற்றவர்களுல் அதிகமானவர்கள் ஆசிரியர் சேவையில் இருக்கின்றமையால் ஏனைய சமூகங்களை விட மலையகத்தில் பாடசாலை முக்கிய இடமாக நோக்கத்தக்கதாகும். சமூகத்தில் கருத்துக்களின் ஊடாக வழிநடாத்தக்கூடியவர்கள் இங்குதான் உள்ளனர். இதனை உணர்ந்துள்ள அரசியல் தலைமைகள் பாடசாலைகளில் தமது அரசியல் செல்வாக்கை வெவ்வேறு வழிகளில் நிலைநிறுத்தி பாடசாலையை தமது ஆதிக்கதில் நிலைநிறுத்த முயற்சிக்கின்றனர். இதற்கு எதிர்வினையாற்றும் ஆசிரியர்கள் குறைவே. அதிபர்களில் ஏக பெரும்பான்மையானவர்கள் தமது அதிபர் பதவியை அரசியல் செல்வாக்கின் அடிப்படையில் பெற்றுக் கொள்கின்றமையினால் குறித்த அரசியல் கட்சிகளுக்கும் தலைவர்களுக்கும் முழு விசுவாசத்தை வெளிப்படுத்தக் கடமைப்பட்டுள்ளனர்.

பாடசாலைகளையின் நிர்வாகம் அதன் அபிவிருத்தி என்பது அவர்களுக்கு இரண்டாம் பட்ச பணிகளாகவே இருந்து வருகின்றன. இதனால் இன்று மலையகத்தின் பல பாடசாலைகள் சீரழிக்கப்பட்டுள்ளன. மலையகத்தில் சில அதிபர்களினால் தமது கடமைகள் மேற்கொள்ளப்படாமை தொடர்பாக பெற்றோர்கள் சுட்டிக்காட்டும் போது அதிபர்கள் சொல்லும் பதில் நீங்கள் இது தொடர்பாக யாரிடமும் முறையிடலாம். நான் பயம் இல்லை என்பதே. இவ்வாறு கூறுவதற்கு அவர்களின் அரசியல் செல்வாக்கே காரணம் என மக்கள் அறிவர். இந்த நிலை இலங்கை முழுவதற்கும் ஏற்புடைய அம்சமாகும். எனினும் இந்நிலையானது ஏனைய சமூகங்களை விட கல்வி அடைவுகளில் பின்தங்கியுள்ள மலையக மாணவர்கள்; கல்வியை பெற்றுக் கொள்வதில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

தலவாக்கலை தமிழ் மகா வித்தியாலயம் மேல் கொத்மலை திட்டத்தின் கீழ் வழங்கப்பட இருந்த கட்டிடங்களில் மூன்று மாடி கட்டிடம் ஒன்றை பாடசாலைக்கு வழங்க விடாது தடுத்து அதனை தமது அரசியல் அதிகார விஸ்தரிப்புக்கு பயன்படுத்திக்கொள்ள மலையகத்தில் பலம்பெரும் தொழிற்சங்கமும் அதன் தலைமைகளும் முயன்றமை பலரும் அறிந்ததே. மலையக மக்களின் கல்வியில் மலையக தலைமைகள் கொண்டிருக்கும் அக்கறையின் இயல்பு வெளிப்பட முதலாவது சந்தர்ப்பம் இது அல்ல என்ற போதும், தலவாக்கலை பாடசாலையின் பழைய மாணவர்களும் பெற்றோர்களும் இதனை நேரடியாக உணர வாய்ப்பளித்தது. பாடசாலை மாணவர்கள், பழைய மாணவர்கள், பெற்றோரின் போராட்டங்களும் அதன் பின் மேற்கொள்ளப்பட்ட சட்ட நடவடிக்கைகளாலுமே அக் கட்டிடத்தை பாடசாலைக்கு பெற்றுக்கொள்ள முடிந்தது.

மேல் கொத்மலைத் திட்டம் என்ற மலையக மக்களின் இருப்பை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட திட்டத்துக்கு ஆதரவு வழங்கிய நிலமைகள் அந்த அழிவில் இருந்து கிடைத்த சில சலுகைகளையும் மக்களுக்கு வழங்க மறுப்பதில் இருந்து அவர்களின் மக்கள் சார்புத் தன்மையை அறியலாம். கல்வி உரிமையைப் பொறுத்தவரை யாரெல்லாம் இன்றைய கல்வி முறையின் குறைபாடுகளையும் அதன் அழிவுசார் அம்சங்களையும் வெளிப்படுத்தி விமர்சிப்பவர் அனைவரும் இருக்கும் கல்வி அனைவருக்கும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென்பதை வலியுறுத்தி போராடி வருகின்றனர். எனினும் இந்தக் கல்வி முறையை மெச்சுகின்ற அரசியல் தலைமைகள், கல்வியியலாளர்களும் கூட இக் கல்வி முறையின் பெறுபேறுகள் அனைவருக்கும் சமமாக எட்ட வேண்டும் என்று எண்ணுவதில்லை.

எனவே மலையகத்தில் கல்வியை வளர்க்க வேண்டும். கல்வியே மலையக மக்களின் வாழ்வை மாற்ற ஒரே வழி என்று அரசியல்வாதிகள் கூறும்போது, அவர்களிடம் திருப்பிக் கேட்பதற்கு பல கேள்விகள் மலையக மக்களுக்கும் மலையகத்தின் கல்வி முன்னேற்றத்தின் அக்கறை கொண்டவர்களுக்கும் உண்டு.

நன்றி - ndp

சிங்கள அரசு மீது போர்க்குற்ற விசாரணை: மலையகத் தமிழர்களும் ஆதரிக்க வேண்டும்: திருமாவளவன்


”வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றியது போலவே கிழக்கு மாகாண சபையிலும் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும், இந்தக் கோரிக்கையை மலையகத் தமிழர் அமைப்புகளும் முஸ்லிம் அமைப்புகளும் ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்கிறோம் என தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்”.

தொல்.திருமாவளவனின் இக்கூற்று சாதாரணமானதுதான்.ஆனால் நியாயமானதா என நோக்கின் அதில் நெருடல்கள் உள்ளன. இலங்கையில் நடைபெற்ற இனப்படுகொலை தொடர்பாக பன்னாட்டுப் போர்க் குற்ற விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று இலங்கையின் வடக்கு மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், அதை மலையகத் தமிழர் அமைப்புகளும் முஸ்லிம் அமைப்புகளும் ஆதரிக்க வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ள தொல்.திருமாவளவனுக்கு அவசியம் இருந்தாலும் அதனை நிறைவேற்ற மலையகத் தமிழர் அமைப்புகளுக்கு போதிய வாய்ப்புகள் இல்லை. 
தமிழர் பிரச்சினை வட கிழக்கிலும் அதனை சார்ந்து மலையக பிரதேசங்களிளும் இன வண்முறைகளாக உருவெடுத்து ஆயிரக்கணக்கான உயிர்களும், கோடிக்கணக்கான சொத்துகளும் அழிந்தன என்பது மறுப்பதற்கில்லை. ஆயினும் தமிழர்கள் என்ற பொதுமைக்கு அப்பால் வடகிழக்கு தமிழர்களுக்கும் மலையக தமிழர்களுக்கும் இடையில் பிரச்சினைகளின் தன்மையிலும்,வடிவத்திலும் போராட்ட முறைமைகளிலும் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. இலங்கையில் இனங்களுக்கிடையில் இடம்பெற்ற வண்முறைகளை சற்று பின்னோக்கி பார்த்தால்;

இலங்கையில் இரு இனங்களுக்கிடையில் இடம்பெற்ற முதலாவது மோதலாக
1883ம் ஆண்டு கொழும்பு நகரில்கொட்டாஞ்சேனைத் தெருக்களில் பௌத்தரும், கத்தோலிக்கரும் ஒருவரோடொருவர் சண்டையிட்டுக் கொண்ட நிகழ்வு ஆகும். 
1896 சிலாபம் கலவரம் இலங்கையின் வடமேல் மாகாணம், சிலாபம் நகரில் வாழ்ந்த முஸ்லிம்வியாபாரிகளுக்கும், கத்தோலிக்க மீனவர்களுக்குமிடையில் 1896 ஆம் ஆண்டில் இடம்பெற்ற கலவரம் ஆகும். அப்போது வடமேல் மாகாணத்தில் நிலவிய அரிசித்தட்டுப்பாடு சிலாபம் நகரை அதிகளவில் பாதித்திருந்தது. இதனால் ஏற்பட்ட அரிசி விலை ஏற்றத்திலிருந்து கத்தோலிக்கருக்கும், முஸ்லிம் வியாபாரிகளுக்குமிடையில் ஏற்பட்ட சச்சரவு கலவரம் வரை வளர்ந்தது.இதற்கு வேறுகாரணங்களும் இருந்தன.
1915 இல் இலங்கையில் சிங்களவர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையேயான கலவரம், இலங்கை வரலாற்றில் முதன் முறையாக அரசியல் ரீதியாக ஒழுங்கமைக்கப்பட்ட முதல் இனக்கலவரமாக 1915 சிங்கள-முஸ்லிம் இனக்கலவரமே கருதப்படுகிறது. 
1948 இல் நாடு விடுதலை பெற்ற பின்னர் சிறுபான்மையாக வாழும் தமிழருக்கு எதிராக 1958ல் நடத்தப்பட்ட முதலாவது நாடு தழுவிய இனக்கலவரம் ஆகும்.
1977 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்தப் பின்னர் தமிழர்களை இலக்கு வைத்து இக்கலவரம் நடத்தப்பட்டது
1983 கறுப்பு ஜூலை அல்லது ஆடிக்கலவரம் என பரவலாக அறியப்பட்டது. இதுவே தமிழருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பெரிய கலவரமாக கருதப்படுகிறது
2000 பிந்துனுவெவை கலவரம் பிந்துனுவெவையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 25 தமிழ் கைதிகள் கிராமத்தவர்களாலும் இராணுவத்தினராலும் கொலைச் செய்யப்பட்டனர் பிந்துனுவெவை தடுப்பு முகாமில் கொலைச் செய்யப்பட்ட தலவாக்கலை,வட்டகொடைப் பகுதியைச் சேர்ந்த ஒருவரது உடல் அடக்கத்திற்காக கொண்டுவரப்பட்டப் போது. தலவாக்கலை, கொட்டகலை,அட்டன், கினிகத்தனை நகரங்களில் தமிழர்களுக்கு எதிராக கலவரங்கள் மேற்கொள்ளப்பட்டன 

இலங்கையில் எந்தப்பகுதிலிருந்தும், எந்த வடிவத்திலும் இன வன்முறைகள் ஏற்பட்டால் அதில் நேரடியாக பாதிக்கப்படுபவர்கள் மலையகத்தமிழர்களாய் தான் இருப்பார்கள்.
மலையகத்தமிழர்களின் போராட்டவடிவம் வேறுபட்டது. அது வாழ்வதற்கான போராட்டம். சொந்த காணிக்காக, குடியிருப்புக்காக, கல்விக்காக, சமூக அபிவிருத்திக்காக, தொழில் வாய்ப்புக்காக போராடுகின்ற அடிப்படை போராட்டமாக இருக்கின்றது. இருந்தப்போதும் பொதுவான தமிழின உணர்வின்பால் உந்தப்பட்டு ஈழ போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மலையக இளைஞர்களின் நிலை என்ன? அவர்களைப்பற்றி பேசுவோர் யார்? அவர்களின் தியாகங்களின் பெறுமதி என்ன? நமக்கென்ன என்று இருக்காமல் ஈழத்தின்விடிவுக்காய் ஓடிய நம் இளைஞர்களையும், குரல் கொடுத்த அரசியல் கட்சி களையும் ஈழ வாதிகள் எவ்வாறு அணுகினார்கள்?
நமது பிரச்சினைகளப்பற்றியும்,போராட்டங்களை பற்றியும் நாம் மட்டுமே பேசவேண்டிய நிலையிலிருக்கிறோம். தமிழகத்தின் தலைவர்களுக்கு தம் சமுகம் சார்ந்த, சிறுபாண்மைக்குள் சிறுபாண்மை இனமொன்று இலங்கையில் இருக்கிறது என்பதை கண்டுக்கொள்ளாமலேயே சுயநல அரசியல் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.
வடகிழக்கு பிரச்சினைகளுக்கு, தமிழர் என்ற வகையில் குரல் கொடுக்க வேண்டிய தார்மீக பொறுப்பு எமக்கிருந்தாலும். எமது பிரச்சினைகளின் தன்மைகளை சம்பந்தப்பட்டவர்கள் உணர்ந்துக்கொள்ள வேண்டும் என்பதே எமது அவா.

நன்றி -Tamilwin

மலையகத் தலைவர் பெ.சந்திரசேகரன் அவர்களின் நூல் வெளியீட்டு விழா

மலையகத் தலைவர் பெ.சந்திரசேகரன் அவர்களின் 
  நூல் வெளியீட்டு விழா லண்டன் ஹரோவில்( La Masala, 436 Alexandra Avenue,Harrow HA2 9TW)  26.01.2014 ஞாயிறு மாலை 4.00 -6.00 மணிக்கு மு.நித்தியானந்தன் தலைமையில் நடைபெறும். அமைச்சர் பெ.சந்திரசேகரன் மறைவைத்தொடர்ந்து இலங்கைப் பாராளுமன்றத்தில் அமைச்சர்கள் ,பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆற்றிய உரைகளைத்தொகுத்து ப்பதிப்பித்திருக்கிறார் அவரது ஊடகச்செயலாளர் எச்.எச் விக்ரமசிங்க.
வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் நலன்துறை அமைச்சர் ஸ்ரீ .வயலார் ரவி அவர்கள் புதுடில்லியில் இந்நூலை வெளியிட்டு வைத்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
 
                                                       விபரங்களுக்கு: நவநீதன்  07956967044  

சுய பொருளாதாரமொன்றின் அவசியமும் - சட்டத்தரணி இரா. சடகோபன் பி.ஏ.

 மலையக மக்கள் என்போர் யார்?

வரலாற்றுப் பின்னணி

இலங்கையில் இந்திய வம்சாவழி மலையக மக்கள் என்போரின் தோற்றம் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து ஆரம்பிக்கின்றது. சிலர் இவர்களின் தோற்றத்தினை கோப்பிப் பயிர்ச்செய்கையின் ஆரம்பத்துடன் ஆரம்பிக்கின்றனர். எனினும் இலங்கையில் இந்திய வம்சாவழித் தமிழரின் பிரசன்னம் முதலாம் ராஜசிங்கன் காலத்திலும் (சீதாவாக்கை மன்னன்) அதன் பின்னர் ஒல்லாந்தர் காலத்திலும் (1638 1796) இருந்துள்ளது. பின்னர் 2ஆம் ராஜசிங்கன் மன்னன் காலத்தில் மதுரை நாயக்க அரச வம்சத்தில் இருந்து மணப் பெண்களை அழைத்து கண்டி மன்னர்கள் திருமணம் செய்து கொள்ளும் வழக்கம் ஆரம்ம்பமாயிற்று. பல காலங்களில் பரிவாரமாக இலங்கை வந்த இந்திய வம்சாவழியினர் மீண்டும் இந்தியாவுக்குச் சென்றுவிட்டதற்கு ஆதாரமில்லை. இக்காலத்தில் இலங்கையின் கரையோரப் பகுதியில் கொழும்பு முதல் களுத்துறை வரையில் காணப்பட்ட கறுவாப்பயிர்ச் செய்கையில் இந்தியத் தமிழர் பெருந்தொகையில் அழைத்து வரப்பட்டு ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் பின்னர் முற்றிலும் சிங்களவர்களாக மாறிப் போய்விட்டனர்.

அடுத்த கட்டத்தில் பிரித்தானிய கவனித்துவ அரசு காலத்தில் நிர்வாகக் கட்டமைப்புக்கள் பலப்படுத்தப்பட்டபோது கொழும்பை மையமாகக் கொண்டு இந்திய வம்சாவழி மக்களின் சனத்தொகை அதிகரித்தது. இதன் முதற்கட்டமாக இலங்கையின் பிரித்தானிய ஆளுனராக பிரடரிக் நோர்த் என்பவர் கடமையாற்றிய போது 1804 ஆண்டு முதன் முறையாக தென்னிந்திய தொழிலாளர்களை உள்ளடக்கியதான முன்னோடிப் படைப்பிரிவு (கடிணிணஞுஞுணூ இணிணூணீண்) ஒன்றை அமைத்தார். இலங்கையின் கடைசி சிங்கள அரசான கண்டி ராச்சியத்தை 1815ஆம் ஆண்டு கைப்பற்றும் போதும் அதன் பின்னர் 1818ஆம் ஆண்டு கண்டிக் கிளர்ச்சியை அடக்கும் போதும் இராணுவத் துணைப் படையில் 5000 இந்தியத் தொழிலாளர் தொழில் புரிந்தனர் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. இந்த அரை இராணுவ துணைப்படைப்பிரிவு பின்பு மேலும் விஸ்தரிக்கப்பட்டு பொது வேலைப் படைப்பிரிவாக மாற்றப்பட்டது. பின்னர் இவர்களே கொழும்பு கண்டிப் பாதை, கொழும்பு காலி பாதை, கொழும்பு திருகோணமலைப் பாதைகளையும் அவற்றில் காணப்படுகின்ற பாலங்களையும் (களனி ஆற்றின் மேல் அமைக்கப்பட்ட விக்டோரியா பாலம் முதலாவது பாலம்) சுரங்கங்களையும் அமைத்தனர்.மேலும் ஒரு தொகையினர் பட்டிண, நகரசபை சுத்திகரிப்பு தொழிலாளர்களாக அமர்த்தப்பட்டனர்.

இலங்கையில் பெருந்தோட்டத்துக்கென அழைத்து வரப்பட்ட முதலாவது தொழிலாளர் பிரிவில் 1800 பேர் இருந்தனர். 1818ஆம் ஆண்டு பிரித்தானிய தேசாதிபதியாக இருந்த எட்வர்ட் பார்ண்ஸ் (உஞீதீச்ணூஞீ ஆச்ணூணண்) என்பவரும் கோப்பிப் பெருந்தோட்டம் அமைக்கும் முதல் முயற்சியில் கம்பளை சின்னப்பட்டி என்ற இடத்தில் (தற்போது சிங்ஹபிட்டி) இவர்களைக் கொண்டு கோப்பித் தோட்டம் அமைத்தனர். அதன் பின்னரான கோப்பிப் பெருந்தோட்டத்தையும் அது வீழ்ச்சியடைந்தமையும் பின்னர் தேயிலை பெருந்தோட்டமும், றப்பர் நடுகையும், கொக்கோ பற்றியம் நமக்குத் தெரியும். இப் பெருந்தோட்டங்கள் நன்கு வளர்ச்சி பெற்று இலங்கையின் பொருளாதாரத்தில் பிரிக்க முடியாத அளவு இணைந்து போய்விட்டன.

இலங்கையின் கோப்பி மற்றும் தேயிலைப் பெருந்தோட்ட பொருளாதார வளர்ச்சியுடன் கொழும்புத் துறைமுக வளர்ச்சிக்கும் இலங்கையின் ரெயில்வே மற்றும் பெருந்தெருக்கள் போக்குவரத்து வலைபின்னல் அமைப்பு வளர்ச்சிக்கும் தென்னிந்தி தமிழ்த் தொழிலாளர்களே அடிமரமும் ஆணிவேருமாக இருந்தனர்.

சனத்தொகையும் பரம்பலும்

மலையக இந்திய வம்சாவழித் தமிழ் மக்களின் சனத் தொகைக் கணிப்பீடுக்ள இவர்களின் உண்மையான சனத்தொகையை பிரதிபலிக்கவில்லை என்பது மிக வெளிப்படையான உண்மையாகும். பல்வேறு சமூக, பொருளாதார, அரசியல் காரணிகளின் நிமித்தம் இவர்கள் தம்மை இந்திய வம்சாவழித் தமிழர்கள் என்று சனத்தொகை கணிப்பீடுகளின் போது பதியத் தவறியதால் இம் மக்களின் மொத்த சனத்தொகையை சரியாக அறிய முடியாதுள்ளது. உத்தியோகபூர்வமற்ற தகவல்களின்படி இவர்களின் மொத்த சனத்தொகை சுமார் 1,500,000 (பதினைந்து இலட்சம்)மாக இருக்கும் என்று கருதப்பட்ட போதும் 2001 ஆண்டின் உத்தியோகபூர்வமான சனத்தொகை புள்ளிவிபரக் கணக்கெடுப்பின் படி இவர்களின் மொத்த சனத்தொகை 855,891 மட்டுமே. (கணக்கெடுப்பு இடம்பெற்ற 18 மாவட்டங்களில் மட்டும்) 1981 ஆண்டின் சனத்தொகை புள்ளிவிபரக் கணக்கெடுப்புகளின் பிரகாரம் இவர்களின் சனத்தொகை 818,665 ஆக இருந்தது. இதன்படி பார்த்தால் உத்தியோகபூர்வ புள்ளி விபரங்கள் வெறும் 37,235 பேர்களிலான (20 வருடங்களில்) அதிகரிப்பையே காட்டுகிறது.

இது இப்படி இருக்க தனிப்பட்ட ஆய்வாளர்களின் கணிப்பீட்டின்படி இலங்கை முழுவதுக்குமான மொத்த இந்திய வம்சாவழி மலையகத் தமிழரின் சனத்தொகை 1,202,349 ஆகும். இலங்கையின் எல்லா மாவட்டங்களிலும் இவர்களது சனத்தொகை பரவலாக சிதறிக் காணப்பட்டாலும் மதிப்பிடப்பட்ட புள்ளிவிபரங்களின்படி கொழும்பு மாவட்டத்திலும் (155,411), நுவரெலியா (370,747), கண்டி (132,214), பதுளை (164,016), இரத்தினபுரி (101,624), கம்பஹா (63,878), மாத்தளை (40,214), கேகாலை (53,329) முதலான மாவட்டங்களிலும் கணிசமான அளவு செறிந்து காணப்படுகின்றனர்.

தனியான தேசிய இனம்

கிடைக்கப்பெற்றுள்ள புள்ளிவிபரங்களின் படி இலங்கையின் இரண்டாவது பெரிய மக்கள் கூட்டத்தினராக மலையக தமிழ் மக்கள் இருக்கின்றனர். பெருந்தோட்டத் துறையில் தொழிலாளர்களாக வேலை செய்வதற்கென அழைப்பு வரப்பட்ட இம்மக்கள் இன்று அத்துறையின் நெகிழ்ச்சியற்ற சமூக உயர்ச்சி காரணமாக மிக மிக மெதுவாக அத்துறையில் இருந்து படிப்படியாக வெளியேறி இலங்கையின் ஏனைய சமூக பொருளாதார அரசியல் துறைகளில் இணைந்து கொண்டுள்ளனர். இன்று இம் மக்களின் 50% மாணவர்கள் மட்டுமே பெருந்தோட்டத்துறையில் தங்கி இருக்கின்றனர். 1995ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி பெருந்தோட்டத்துறையில் மொத்தம் 750,000 பேர் வதிவிடத் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்களையே மலையக பெருந்தோட்ட வதிவிடத் தொழிலாளர்கள் என்ற நிலையில் இருந்து தம்மை விடுவித்துக் கொண்டு இப்பிரதேசங்களுக்கு அண்டிய பகுதிகளில் குடிபெயர்ந்து சொந்தமான நிலத்திலோ அல்லது வாடகைக்கு வசிப்பவர்களாகவோ இருந்து கொண்டு வேறு தொழில் பார்ப்பவர்களாக உள்ளனர். எனினும் இவர்கள் அனைவருமே 1000 சமவுயரக் கோட்டுக்கு மேலான மலையகப் பிரதேசத்தில் வாழ்கின்றவர்கள் என்ற அடிப்படையில் மலையக மக்கள் என்ற வரையறைக்குள் வருபவர்கள். ஏனையோர் கொழும்பு போன்ற ஓர் இடத்தில் வசித்தாலும் மலையகத்தை தமது மூலவேராகக் கொண்டவர்கள் (கீணிணிt) என்ற அடிப்படையில் மலையக தமிழ் மக்கள் என்றே பார்க்கப்பட வேண்டும். எனவே இம்மக்கள் கூட்டத்தினரின் பெரும்பான்மையினமானவர்கள் மலையக மக்கள் என்ற வரையறைக்குள் வருவதால் இம் மக்களை மலையகத் தமிழ் தேசிய இனம் என்ற வரையறைக்குள் கொண்டு வரலாம். ஏனையோர் தம்மையும் இம்மக்களுடன் இணைத்துக் கொண்டு இவ்வரையறைக்குள் வர வேண்டும். 

இம் மக்கள் தம்மை இத்தகைய தேசிய இனம் என்ற ஒரு வரையறைக்குள் கொண்டு வர விரும்புகிறார்களா? என்ற கருத்தே இங்கு முக்கியம் பெறுகிறது. தேசிய இனக் கோட்பாட்டின் அண்மைக்கால அபிவிருத்தியின் படி ஒரு தேசிய இனம் தம்மை அவ்வாறு அழைத்துக் கொள்ள விரும்புகின்றது என்ற ஒரு அம்சமே அவ்வினத்தை தேசிய இனமாக அங்கீகரிக்கப் போதுமானதாகும் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆதலினால் மலையக தமிழ் மக்களின் எதிர்கால நலன் கருதி அவர்கள் ஒரு தனியான தேசிய இனம் என்ற கருத்தை தொடர்ச்சியாக வலியுறுத்த வேண்டியதன் தேவை அவசியமாக எழுந்துள்ளது. எனவே இவர்கள் தொடர்பான பொருளாதார கட்டமைப்புக்களும் இக்கருத்தை அபிவிருத்தி செய்யும் விதத்திலேயே அமைய வேண்டும்.

மலையகத்தின் இட அமைவும் புவியியல் அம்சங்களும்

இட அமைவு

மலைநாட்டின் புவியியல் இட அமைவை பின்வருமாறு வரையறுக்கலாம். இலங்கையின் பல்வேறு புவியியல் பிரதேசங்களும் அவற்றுக்கேயுரிய சிறப்பம்சங்களின் அடிப்படையில் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் மலைநாட்டுக்கேயுரிய தனியான சிறப்பம்சங்கள் உண்டு. அவற்றைப் பின்வருமாறு குறிப்பிடலாம்.

1. கடல் மட்டத்தில் இருந்து 1000 அடி அல்லது 300 மீற்றர் சம உயரக் கோட்டுக்கு மேல் உயரத்தில் அமைந்துள்ள பிரதேசம்.

2. புல்கொடை இறக்வானை குன்று தனியாகக் காணப்படுகின்றது

3. சிவனொளிபாதமலை, அப்புத்தளை, நமுனுகுல, நக்கிள்ஸ் மலைத்தொடர் ஆகிய நான்கு மலைத் தொடர்கள்.

4. மகாவலி, களுகங்கை, களனி, வளவை முதலான பெரிய ஆறுகள் இங்கு உற்பத்தியாவதுடன் பெரும் பள்ளத்தாக்குகளும், நீர்வீழ்ச்சிகளும் இங்குள்ளன.

5. சீரான வெப்பநிலையையும் (25 பாகை செல்சியஸ் 17 பாகை செல்சியஸ்) அதிக ஈரலிப்பான மழைக்கால நிலையையும் கொண்டு செழிப்பான பிரதேசமாக இது உள்ளது.

இலங்கையின் பொருளாதாரமும் தேயிலைப் பெருந்தோட்டக் கைத்தொழிலும்

தேயிலைப் பொருளாதாரத்தின் முக்கியத்துவம்

இலங்கையின் பொருளாதாரத்தில் தேயிலை பெருந்தோட்டக் கைத்தொழில் எந்தளவுக்கு முக்கியத்துவம் வகிக்கின்றது என்பதனை விளங்கப்படுத்தத் தேவையில்லை. மத்திய மலைநாட்டின் பயன்படுத்தத்தக்க அனைத்து நிலமும் தேயிலைப் பெருந்தோட்டங்களே காணப்படுகின்றன. இத் தோட்டங்களில் 99% தினர் இந்திய வம்சாவழி தமிழ் மக்களே தொழிலாளர்களாக தொழில் செய்த போதும் இவர்கள் இன்றும் இத்தோட்டங்களில் வெறுமனே வதிவிடத் தொழிலாளர் என்ற நிலையிலேயே உள்ளனர். முழு நாட்டினதும் தேசிய வருமானத்துக்கும் அந்நிய செலாவணி உழைப்புக்கும் பெரும் பங்காற்றும் இவர்களுக்கு இன்று சுதந்திரமாக குடியிருக்கும் ஒரு சிறு துண்டு நிலம் தானும் இல்லை என்பது தொடர்பில் நாம் எந்தளவுக்கு குரல் கொடுத்து உள்ளோம்.

இன்று தேயிலை பயிரிடப்படும் மொத்த நிலப்பரப்பு 188,000 ஹெக்டேயர்கள் ஆகும். இது 1981ஆம் ஆண்டு 245,000 ஹெக்டேயராக இருந்தது. இவ்விதம் தேயிலை நிலப்பரப்பு வீழ்ச்சியடைந்தமைக்கான காரணம் பல்வேறு காரணிகளுக்காக (வீடமைப்புக் கொலனியாக்கம், பல பயிராக்கல்) இவை கையளிக்கப்பட்டமைவாகும். எனினும் தேயிலையால் பெறப்படும் மொத்த உற்பத்தி வருமானம் தேசிய வருமானத்துக்கான பங்களிப்பு, அந்நிய செலாவணி உழைப்பு என்பன அதிகரித்துள்ளனவே தவிர குறையவில்லை. எனினும் நாடு சுதந்திரமடைந்த போது இலங்கையின் தேசிய வருமானத்திலும் மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் அந்நிய செலாவணி உழைப்பு ஆகியவற்றில் தேயிலை, றப்பர், தெங்கு, கொக்கோ மற்றும் வாசனைத் திரவிங்களே முதன்மை ஸ்தானத்தில் இருந்தன. எனினும் 1948ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மலையக இந்திய வம்சாவழி மக்கள் தேர்தல் வெற்றியாலும் அவர்கள் ஒரு ஸ்தாபனப்படுத்தப்பட்ட தொழிற்சங்க சக்தியாக உருவாகி இருந்தமையாலும் அவர்கள் எதிர்காலத்தில் இலங்கையின் பொருளாதாரத்தில் பாரிய சக்தியாக உருவாகக் கூடும் என்ற பயத்தால் தேசிய முதலாளித்துவ கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சி, கு.ஙி.கீ.ஈ. பண்டாரநாயக்க தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணி, பின்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி என்பன இலங்கையின் தேயிலைப் பொருளாதாரத்தை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டன. இதன் காரணமாக மலையகத் தமிழரின் பிரஜா உரிமையும் வாக்குரிமையும் கூட பறிக்கப்பட்டது. இதனைப் புரிந்து கொண்டு 1948ஆம் ஆண்டு சாத்வீகப் போராட்டத்தைக் கைவிட்டு தொடர்ச்சியான வேலை நிறுத்தப் போராட்டத்திலும் வீதிமறியல் மற்றும் ஏனைய பகிஷ்கரிப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டிருந்தால் இலங்கையின் பொருளாதாரத்தையே ஸ்தம்பிதமடையச் செய்து பிரஜா உரிமை கோரிக்கையில் வெற்றிபெற்றிருக்கலாம். இப்படிச் செய்யாமல் விட்டமை அன்றைய இலங்கை இந்திய காங்கிரஸின் மாபெரும் அரசியல் தவறாகும். இதன் காரணமாக நாம் 50 ஆண்டுகால சமூகப் பின்னடைவை அடைந்துவிட்டோம்.

1948ஆம் ஆண்டு 136 மில். கிராமாக இருந்த இலங்கையின் தேயிலை உற்பத்தி 1996ஆம் ஆண்டு 258 மில்.கி. அதிகரித்துள்ளது.

1950ஆம் ஆண்டு தேயிலை மொத்த விளை நிலப்பரப்பு 225,000 ஹெக்டேயரில் இருந்து 1996ஆம் ஆண்டில் 188,000 ஹெக்டேயராக வீழ்ச்சியடைந்தது.

1996ஆம் ஆண்டு பெருந்தோட்ட மீள் கட்டமைப்பு அபிவிருத்திக்கென 100 மில். யு.எஸ். டொலர் நிதியுதவி தனியார் மயமாக்கப்பட்ட தோட்டக் கம்பனிகளின் நிருவாகத்துக்கு வழங்கப்பட்டன. இதன் பலன் தொழிலாளரை சென்றடையவில்லை.

தேயிலையின் உற்பத்தித்திறன் 1950ஆம் ஆண்டு ஹெக்டேயருக்கு 650 கி.கி. மாத்திரமே இருந்தது. இது 1996ஆம் ஆண்டு 1500 கி.கி. ஆக அதிகரித்திருந்தது.

1948ஆம் ஆண்டின் மொத்த தேயிலை உற்பத்தியான 136 மில். கி. கிராமில் 134 மில்.கி.கி. ஏற்றுமதி செய்யப்பட்டது. இது மொத்த உற்பத்தியின் 99%மாகும். 1996ஆம் ஆண்டு மொத்த உற்பத்தியான 258 மில்.கி.கிராம்களில் 244 மில்.கி.கி. ஏற்றுமதி செய்யப்பட்டது. இது மொத்த உற்பத்தியின் 96% ஆகும். (எனவே வேறு உற்பத்திப் பொருட்களின் ஏற்றுமதி முக்கியத்துவம் அதிகரித்திருந்தனவே தவிர தேயிலை உற்பத்தியின் முக்கியத்துவம் அதன் முதன்மை ஸ்தானத்தில் இருந்து குறையவில்லை. மாறாக அதன் உற்பத்தி அளவும் ஏற்றுமதி அளவும் படிப்படியாக அதிகரித்து வந்துள்ளது)

தேயிலைத் தொழிலின் ஏற்றுமதி முக்கியத்துவம் கருதி அதன் மீதான வரிவிதிப்பு பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. எனினும் 1970களில் இருந்து அது வரிவிதிப்புக்குட்பட்டது. 1978ஆம் ஆண்டு இத் தொழிலின் மீதான மறைமுக வரிவிதிப்புக்களில் இருந்து ரூபா 3,462 மில். அரசிறையாக (மொத்த வரி வருமானத்தின் 29%) பெறப்பட்டது. அதன் பின் இது மட்டுப்படுத்தப்பட்டதுடன் அறவிடப்பட்ட வரி அத்துறையின் அபிவிருத்திக்கே செலவிடப்பட்டது. 1996ஆம் ஆண்டு இவ்விதம் வரிவிதிப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட தொகை ரூபா 492 மில். ஆகும். ஆனால் தொழிலாளரை இந்நலன் சென்றடைந்ததா? என்பது கேள்விக்குறி.

தேயிலையின் விலை 1948 1950 காலத்தில் 1.13 யு.எல். டொலராக இருந்தது. 1992 1996 காலத்தில் இது 2.04ஆக இருந்தது. இது வருடாந்தம் சராசரி 1.6% தால் அதிகரித்து வந்துள்ளது.

தொழிலாளரின் சம்பளம் (கூலி) 1948ஆம் ஆண்டு ரூபா 1.44 ஆகவும் 1970ஆம் ஆண்டு ரூபா 3.10 ஆகவும் 1996ஆம் ஆண்டு ரூபா 83 ஆகவும் 2003ஆம் ஆண்டு ரூபா 121 ஆகவும் மட்டுமே அதிகரித்துள்ளது.

சுதந்திரத்துக்குப் பின் அரசுகளின் மலையக  தமிழ் மக்கள் விரோத பொருளாதாரக்கொள்கைகள்

1948ஆம் ஆண்டுக்குப் பின்னரான சுதந்திர இலங்கையின் அரசுகள் மலையகத் தமிழ் மக்களுக்கெதிரான பொருளாதாரக் கொள்கைகளையே கடைப்பிடித்து வந்துள்ளன. பிரஜா உரிமை பறிப்புச் சட்டத்தையும் வாக்குரிமை பறிப்புச் சட்டத்தையும் கொண்டு வந்து அரசியல் சக்தியாக இவர்கள் உருவாவதை வெற்றிகரமாகத் தடுத்துவிட்ட இவ்வரசுகள் இவர்கள் தொடர்ந்தும் தொழிற்சங்க ரீதியில் இணைந்து தொழிற் சங்க போராட்டங்கள் வாயிலாக நாட்டின் பொருளாதாரத்துக்கு அச்சுறுத்தலாக உருவாவதாகக் கருதினர்.

மறுபுறத்தில் ஏனைய பிரஜைகள் அனுபவித்த உரிமைகள் இவர்களுக்கு மறுக்கப்பட்டு இந்நாட்டுக்குரிய மக்கள் அல்லாத விதத்திலேயே நடத்தப்பட்டனர். குறிப்பாக நிலங்கள், வீடமைப்புக்கள் நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட போது இம்மக்களுக்கு அவை மறுக்கப்பட்டன. கொலனிகள் உருவாக்கப்பட்டபோது அவற்றில் இம்மக்களுக்கு இடம் வழங்கப்படவில்லை. இம்மக்கள் 200 ஆண்டுகளுக்குப் பின்னரும் தோட்டங்களில் தற்காலிக குடியிருப்பாளர்களாகவும் நிலமற்றவர்களாகவும் வீடற்றவர்களாகவும் உள்ளனர்.

இன்று தேயிலை ஏற்றுமதி 4ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. இதன் இடத்தை ஆடை உற்பத்தித் தொழில், ஏனைய கைத்தொழில் உற்பத்திப் பொருட்கள், வெளிநாடுகளில் தொழில் புரிவோர் அனுப்பும் பணம் என்பன பிடித்துக் கொண்டுள்ளன.

எனினும் ஏற்றுமதி வருமானத்தைப் பொறுத்தவரையில் தேயிலை 4ஆவது இடத்தில் உள்ளது என்பதனை பொருளாதார ரீதியில் ஏற்றுக்கொள்ள முடியாது. இவர்கள் வெறுமனே மேலோட்டமான புள்ளிவிபரங்களைக் காட்டி சகலரையும் ஏமாற்றப் பார்க்கிறார்கள். இதனை பின்வரும் புள்ளிவிபரங்களை உண்ணிப்பாக அவதானித்தால் தெரிய வரும்.

இப்புள்ளிவிபரங்களின் பின்னிணைப்பு இக்கட்டுரையில் இணைக்கப்பட்டுள்ளது. 1995ஆம் ஆண்டின் இப்புள்ளி விபரங்களை இலங்கை வர்த்தக சங்கம் வெளியிட்டுள்ளது.

1995ஆம் ஆண்டின் மொத்த ஏற்றுமதி 195,258 ரூ. மில்

ஆடை உற்பத்தி ஏற்றுமதி 84,806 ரூ. மில்

வெளிநாட்டில் பணிபுரிவோர் அனுப்பும் நிதி 40,806 ரூ. மில்

ஏனைய கைத்தொழில் உற்பத்திகள்

(றப்பர், இயந்திராதிகள், பெற்றோலியம், தோற்பொருள், மற்பாண்டங்கள், ஆபரணம், மரப்பொருட்கள், பிளாஸ்டிக் முதலான கைத்தொழில் பொருட்கள்) 36,181 ரூ. மில்.

தேயிலை 24,638 ரூ. மில்.

இப்புள்ளிவிபரங்களின் படி 
தேயிலை நான்காவது ஏற்றுமதிப் பொருளாகவே உள்ளது. இவ்வுற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் பெருமானங்களைப் பார்ப்போம்.

பருத்தி, வெற்றுத்துணி, அச்சிடப்பட்ட துணி, இயந்திரங்கள், மின்சாரம் சம்பந்தப்பட்டது 63,777

இயந்திராதிகள் 32,186

பெற்றோலியம் 19,830

பிளாஸ்டிக் மூலப்பொருள் 7,886

இரசாயணங்கள் 7,329

உரம் 4,436

இதனை ஏற்றுமதிகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தோமாயின் ஆடை உற்பத்தித் தொழிலுக்கு அதன் 70% உள்ளீடுகள் இறக்குமதி செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது. எனவே அதன் ஏற்றுமதிப் பெறுமானத்தில் 30% மட்டுமே உண்மையான ஏற்றுமதி வருமானமாகும். அதேபோல் ஏனைய கைத்தொழில் ஏற்றுமதிகளிலும் (உதாரணம் பெற்றோலிய உற்பத்தி, தோற்பொருள், பிளாஸ்டிக்) அதிக அளவில் வெளிநாட்டு இறக்குமதி செய்யப்பட்ட மூலப் பொருட்களே பயன்படுத்தப்படுகின்றன. எனவே ஆடை உற்பத்தித் தொழில் உற்பத்தி ஏற்றுமதி வருமானமும், கைத்தொழில் உற்பத்திப் பொருள் வருமானமும் தேயிலை ஏற்றுமதி வருமானத்துக்கு பின்னரே வைத்துப் பார்க்கப்பட வேண்டும். ஆதலால் வெளிநாட்டில் பணிபுரிவோர் அனுப்பும் பணத்துக்கு அடுத்ததாக இப்போதும் அதிக அந்நிய செலாவணி பெற்றுத் தரும் துறையாக தேயிலையே உள்ளது. இந்த நிலைமை அண்மைய எதிர்காலங்களில் மாற்றப்படுவதற்கான சூழ்நிலை இல்லை. இதனை வைத்துப் பார்க்கும் போது இப்போதும் மலையகத் தமிழர்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தவர்களாக உள்ளனர் என்பது புலனாகும்.

எனினும் இந்த உபாயத்துவ முக்கியத்துவம் வாய்ந்த பொருளாதார நிலைமையினை மலையக அரசியல் தலைவர்களும், தொழிற் சங்கத் தலைவர்களும் பயன்படுத்தத் தவறுவதால் அரசாங்கத்துடனும், தொழில் கொள்வோருடனும் சம்பளம் மற்றும் அரசியல் பிரச்சினைகளின் போது பேரம் பேசுவதில் தோல்வியடைகின்றனர். இந்த மக்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தால் அதனால் எத்தனை கிலோ தேயிலை இழக்கப்படுகின்றது. எத்தனை மில்லியன் டொலர் அந்நிய செலாவணி இழக்கப்படுகின்றது? என்பதனை சுட்டிக்காட்டும் திராணி ஏன் நம் மக்கள் தலைவர்களுக்கில்லை? இதனை ஒரு கேள்வியாகவே முன்வைக்கிறேன்.

ஏனெனில் தேயிலைத் தோட்டங்கள் தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்ட பின்னர் தமக்கு தொழிலாளர் பிரச்சினைகளுக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை எனவும் அவற்றை தனியார் நிறுவனங்களும் தொழிலாளர்களுமே தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றும் பெருந்தோட்ட அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஆனால் தேசிய வருமானத்திலும் அந்நிய செலாவணி உழைப்பிலும் இத்தகைய பங்கு வகிக்கும் ஒருதுறை மீது அரசுக்கு எந்தவித பொறுப்பும் இல்லை என்று கூறுவது மிகவும் போலித்தனமானதும் இம்மக்களை ஏமாற்றுவதும் ஆகும். தகுந்த புள்ளி விபரங்களுடன் இப்பாரிய பொறுப்பினை அரசுக்கு சுட்டிக்காட்டி இம் மக்களின் பிரச்சினைகளின் போது அரசாங்கத்தின் பொறுப்பை உணர்த்த வேண்டிய பணியையும் மலையக மக்களின் தலைவர்கள் செய்கிறார்கள் இல்லை.
மலையக மக்களுக்கான வாழிடக் கொள்கையும்
பொருளாதார முக்கியத்துவமும்

நிரந்தர வாழிடம் இல்லாமை

மலையக மக்களின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகப் பெரிய பாதகமாக இருப்பது இவர்கள் தொடர்ந்து நிலமற்றவர்களாக இருப்பதும் தற்காலிக வதிவிடக் கூலிகளாக இருப்பதும், நிரந்தரமான வாழிடங்களைக் கொண்டிராமல் இருப்பதுமாகும். இவர்களுக்கான ஒரு சுயபொருளாதாரம் வளர்த்தெடுக்கப்பட வேண்டுமாயின் அதற்கான முதல் நிபந்தனையாக இம்மக்கள் இந்நாட்டின் நிரந்தரக் குடிமக்களாகவும் அவர்களுக்கென நிரந்தரக் குடியிருப்புக்களும் நிரந்தரமான வாழிடமும் இருக்க வேண்டியதவசியம். அப்போதுதான் இம்மக்கள் இந்நாட்டின் ஏனைய குடிமக்களுக்கு சமமானவர்களாக இருப்பார்கள். சொந்த நிலத்திலும் சொந்த வீட்டிலும் சொந்த வாழிடத்திலும் குடியிருக்கும் போதுதான் “இந்த மண் நமக்குச் சொந்தமானது’ என்ற சுயசிந்தனையும் நாம் சுதந்திரமானவர்கள் என்ற சிந்தனையும் தோன்றும். அப்போதுதான் நமக்கு சொந்த மண்ணில் அவர்கள் சுய பொருளாதார முயற்சிகளில் ஈடுபடுவார்கள். இன்று இவர்கள் இவ்வித தற்காலிக கூலிகள் என்று நிராகரிக்கப்பட்டு தோட்டங்களில் வேலை இழக்கும் போதும் தோட்டங்கள் மூடப்படும்போதும் வீதிக்கு வர வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர். இன்றைய பத்திரிகை செய்திகளின்படி 35 ஆயிரம் தொழிலாளர் இத்தகைய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

1995ஆம் ஆண்டின் ஆய்வொன்றின்படி தேயிலைப் பெருந்தோட்டங்களில் மாத்திரம் 750,000 தொழிலாளர்கள் தற்காலிக வதிவிடங்களான “லைன்’ காம்புறாக்களில் குடியிருந்து வந்தனர். இவர்கள் அனைவரும் தோட்டத்தின் பிடியில் அகப்பட்டு கொத்தடிமைகளாக இருக்கின்றனரே தவிர தமது நாளாந்த வாழ்க்கைத் தேவைப்பாடுகளை தாமே சுதந்திரமாக தீர்மானிக்க அனுமதிக்கப்படவில்லை. இதற்கு முக்கிய காரணம் இவர்கள் அரசின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வராமையாகும். இந்த நிலைமையில் இருந்து இவர்கள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.

மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கான பெருந்தோட்ட குடியிருப்புக்கள்

மலையகப் பெருந்தோட்டங்களின் கைத்தொழில் தன்மை கருதியும், அதன் உற்பத்திகளை ஏற்றுமதிக்கென கொழும்புத் துறைமுகத்துக்கு இலகுவாக கொண்டு செல்ல வேண்டிய தேவை கருதியும் இப்பிரதேசம் எங்கும் பெருந்தெருக்களும் புகையிரதப் போக்குவரத்தும் அமைக்கப்பட்டன. அநேகமான தேயிலைத் தோட்டங்களும், தொழிலாளர் குடியிருப்புகளும் பெருந்தெருக்களுக்கு அருகாமையிலோ அல்லது பிரதான பாதைகளுக்கு அண்மியதாகவோ உள்ளன. மற்றும் பல தோட்டங்களின் எல்லைகளாக இத்தகைய தெருக்களே உள்ளன. எனவே இத்தகைய பெருந்தெருக்களை இணைத்து சுதந்திரமான பெருந்தோட்ட குடியிருப்புக்கள் (கடூச்ணtச்tடிணிண கூணிதீண குடடிணீண்) அமைத்துக் கொடுக்கப்பட வேண்டும்.

இத்தகைய குடியிருப்புக்களுக்கும் தோட்ட நிர்வாகத்துக்கும் எதுவித தொடர்புகளோ தலையீடுகளோ இருக்கக் கூடாது. இவை தொடர்பான அபிவிருத்தி நடவடிக்கைகளும் பொது வசதிகளும், கிராமசபையூடாகவோ, பிரதேச சபையூடாகவோ நடைபெற வேண்டும். இவை தமக்கென போக்குவரத்து, குடிநீர், மின்சாரம், தொலைத்தொடர்பு முதலான உள்ளகக் கட்டமைப்புக்கள் மற்றும் பொது வசதிகளான பாடசாலை, வணக்கத் தளங்கள், தபாற்கந்தோர், கடைத்தெருக்கள், பஸ் நிலையம், மருத்துவமனை, கூட்டுறவு விற்பனை நிலையம், பொதுச் சந்தை, நூல்நிலையம், கலாசார நிலையம், விளையாட்டு மைதானம், பொது ஒன்று கூட்டலுக்கான பிரதேசம் முதலானவையும் அமைந்திருத்தல் வேண்டும். சிலவேளை இத்தகைய ஒரு திட்டத்தை மலையகமெங்கும் ஒன்றுசேர ஏற்படுத்துவது கடினமானதாக இருக்கலாம். எனினும் எங்காவது ஒரு பொருத்தமான இடம் இனம் காணப்பட்டு மிகச் சிறிய அளவிலாவது ஆரம்பிக்கப்பட வேண்டும். உதாரணமாக மலையகத்தமிழ் மக்கள் பெரும்பான்மைச் சமூகமாக இருக்கும். நுவரெலியா மாவட்டத்தில் இது ஆரம்பிக்கப்படலாம்.

மலையக மக்களுக்கான சுய பொருளாதாரம்

தேயிலைப் பொருளாதாரமும் மலையக மக்களும்

கடந்த 2 நூற்றாண்டு காலமாக மலையகத் தமிழ்மக்கள் இந்த நாட்டு பெருந்தோட்ட பொருளாதாரத்துடன் மிகக் கலந்து போய்விட்டார்கள். இந்த நாட்டில் பொருளாதாரத்தின் முகுகெலும்பாக இருந்து நாட்டு மக்கள் அனைவருக்கும் சுகவாழ்வு அளித்தது அவர்ளக் தான். மிக அண்மைக் காலம் வரை அவர்கள் உழைத்த அந்நியச் செலாவணியில் இருந்துதான் நாட்டின் இறக்குமதித் தேவைகள் பூர்த்தி செய்யப்பட்டன என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும். ஏற்றுமதியில்லாமல் வெளிநாடுகளில் இருந்து எந்த பொருளையும் இறக்குமதி செய்ய முடியாது. அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த அந்நிய செலாவணியை உழைத்துத் தந்த இவர்களுக்கு அதன் மூலம் நாட்டுக்கு கிடைத்த நலனில் சிறிதளவுகூட போய்ச் சேரவில்லை.

(அ) ஆதலால் இந்த நாடு அவர்களுக்கு பாரிய கடன்பட்டிருக்கின்றது. அதன் ஒரு அங்கமாக தற்போது இலாபமீட்டாமல் செயற்படும் அரசுக்கு சொந்தமான பெருந்தோட்டங்கள் தொழிலாளர் மத்தியில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அதனை அவர்கள் தனித்தனியாகவோ கூட்டுறவு முறையிலோ பயிர் செய்யலாம். இத்தகைய கோரிக்கை ஒன்று ஏற்கனவே விடுவிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலும் அழுத்தங்கள் கொண்டு வரப்பட வேண்டும். (ஆ) அண்மைக் காலத்தில் செயற்கை உணவுப் பொருட்கள் மீதும் பானங்கள் மீதும் மக்களின் அக்கறை குறைந்து வருகின்றது என்றும் மூலிகை பானங்கள் மீதான (ஏஞுணூஞச்டூ ஈணூடிணடுண்) அக்கறை அதிகரித்து வருவதாகவும் ஒரு ஆய்வு கூறுகிறது. எனவே எதிர்காலத்தில் தேயிலை பானத்தின் முக்கியத்துவம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆதலால் வெறுமனே “பெருந்தோட்ட கூலிகள்’ என்ற நிலைமை மாற்றப்பட்டு சிறுசிறு தோட்ட உரிமையாளர்களாக இவர்கள் மாற்றப்பட ÷வ்டும். மொத்த தேயிலை நில உடமையின் கணிசமான பங்கு இப்போதும் சிற்றுடைமையாளர்களிடமே உள்ளது. 1975ஆம் ஆண்டின் நிலச் சீர்திருத்த சட்ட அமுலாக்கலை அடுத்து 366,184 ஏக்கர் நிலம் (61.6 வீதம்) அரசுடமையாகவும் 228,277 ஏக்கர் நிலம் (38.4 வீதம்) தனியாருக்கும் சொந்தமாக இருந்தது. இந்த நிலங்கள் இன்று நூற்றுக்கணக்கான தனியார் உடமைகளாக உள்ளன. இத்தகைய தேயிலைத் தோட்டங்கள் விலைக்கு விற்கப்படும் போது அவற்றை கொள்வனவு செய்து லி, லீ, 1 ஏக்கர் என இம் மக்களிடையே பகிரப்படுவது வாயிலாக அவர்களை நில உடமையாளர்களாக்கலாம். இதற்கென மலையக மக்கள் அபிவிருத்தி நிதி ஒன்று உருவாக்கப்பட்டு உலகளாவிய பங்களிப்பினை பெற வேண்டும்.

ஏனைய சுயபொருளாதார முயற்சிகள்

மலையக இந்திய வம்சாவழித் தமிழர்கள் பூர்வீகத்தில் விவசாயிகளே. எனவே இவர்கள் தோட்டத் தொழிலாளி என்ற கொத்தடிமைச் சிறையில் இருந்து படிப்படியாக வெளியேறி தாம் வாழ்கின்ற பிரதேசத்திலேயே காணித்துண்டொன்றை பெற்று அதில் சுதந்திரமாக வாழவும் தம்மால் இயன்ற அளவு சிங்கள நாட்டுக் கிராமத்தவர்கள் போல வாழப் பழகிக் கொள்ளவும் வேண்டும். அதற்கு இவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும்.

1975ஆம் ஆண்டுகளை அடுத்து வந்த காலப்பகுதியில் தேயிலை உடமை தேசிய மயமாக்களின் பொது ஜனவசம, உசவசம, அ.பெ.தோ.யா. ஆகிய நிறுவனங்களுக்கு மேலதிகமாக நாட்சா (பல் பயிராக்கல் அமைப்பு) என்ற அமைப்பு ஒன்றும் தோற்றுவிக்கப்பட்டது. இவ்வமைப்பு இலாபம் பெறாத பெருந்தோட்டங்களை கையேற்று அவற்றை பல பயிராக்கல் திட்டத்தின் கீழ் சிறு ஏற்றுமதிப் பயிர்களை ஊக்குவிப்பதற்காகவும் கிராமத்தவரிடையே குடியிருக்கவும் பகிர்ந்தளித்தது. இத்திட்டத்தின் கீழும் மலையகத் தமிழர்கள் ஒதுக்கப்பட்டனர். இத்திட்டத்தின் கீழ் காணிகள் பகிர்ந்தளிக்கும் போது மலையகத் தமிழர்களுக்கு அவை பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும்.

இவற்றைத்தவிர நுவரெலியா, வெளிமடை முதலான இடங்களில் மரக்கறி, கிழங்கு மற்றும் சிறுவியாபார பண்னைச் செய்கை, பாற்பண்ணை, கோழிப்பண்ணை போன்ற வியாபார முயற்சிகளும் இம் மக்களிடை ஊக்குவிக்கப்பட வேண்டும்.

முடிவுரை

மலையக தமிழ் தேசிய இனத்தினை ஒரு தனியான தேசிய இனம் என்று வலுவுடன் வரையறை செய்து கொள்வதற்கு தடையாக முதலாளித்துவ பொருளாதார சிந்தனைவாதிகள் சுட்டிக்காட்டும் முதன்மைக் காரணிகள் இம் மக்களுக்கு ஒரு உறுதியான பொருளாதாரம் இல்லாதிருப்பதும் அவர்கள் புவியியல் ரீதியில் ஒரு தொடர்ச்சியான நிலப்பரப்பில் நிரந்தரமாக வதியாதிருப்பதும் ஆகும் என்று கூறுகின்றனர். ஒரு தேசிய இனம் என்று இவர்களை அழைக்க இத்தகைய காரணிகளை அவர்கள் கொண்டிருக்க வேண்டிய அவசியமற்றது என்று மார்க்ஸிய சிந்தனைவாதிகள் வலியுறுத்துகின்றனர். இதனைத் தீர்மானிப்பதற்கு இவர்கள் சுயமான மனப் பிரக்ஞைகளுடன் தம்மை ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்குமாறு கோருவதனை அடிப்படையாகக் கொண்டு மாத்திரம் இவர்கள் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்குமாறு கோருவதனை அடிப்படையாகக் கொண்டு மாத்திரம் இவர்கள் ஒரு தேசிய இனமா? இல்லையா? என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். அப்படியாயின் இப்போது அவ்வித ஒரு கோரிக்கை இம் மக்களிடம் இருந்து வலுவாக எழுந்துள்ளது என்று கூறலாம். இக்கோரிக்கைகளுக்கு மேலும் அழுத்தம் கொடுக்கப்பட வேண்டியதன் தேவை இப்போது அவசியமாக எழுந்துள்ளது.

எனினும் இம்மக்கள் தம்மை மேலும் வலுவுடையவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டுமாயின் சுயமான பொருளாதாரத்தையும், மலையகத்தில் தொடர்ச்சியான பூமிப்பிரதேசத்தில் நிரந்தரமான வதிவிடங்களையும், வாழிடங்களையும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இவர்கள் மத்தியில் இருந்து ஒரு சக்திவாய்ந்த படித்த மத்திய தர வர்க்கம் ஒன்று உருவாக வேண்டும். அப்போதுதான் மலையக தமிழ் மக்களின் எதிர்கால அரசியல் செல்நெறிகள் சரியான திசைநோக்கி நகருதல் சாத்தியமாகும்.

மலையக பெண்களும் அரசியலும்


மார்ச் 8ம் திகதியானது பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட தினமாக உலகம் முழுவதும் பெண்கள் தமது விடுதலைக்காகவும் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும் போராடிய தினமாகும் இப்போராட்டத்திற்கான வெற்றிகள் மிகக்குறைவாகவே கிடைத்துள்ளது.

ஏனெனில் வளர்ந்த நாடுகளும் சரி வளர்முக நாடுகளும் சரி பெண்கள் தீர்மானம் எடுக்கும் இடத்திற்கு வருவதை அச்சமூகங்கள் தடுக்கின்றனர் அல்லது தடையாக இருக்கின்றனர் என்றே கூறவேண்டும். இது இவ்வாறாக இருக்க எமது நாட்டுப் பெண்களை சற்று நோக்குவோம்.

இன்றும் பெண் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் அரசியலில் 30% இட ஓதுக்கீடு தேவை என்று அல்லது சட்டமாக்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்து வருகின்றனர். ஏனெனில் எமது அண்மைய நாடுகளான இந்தியா, நேபாலம் வங்காளதேசம், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சட்டமாக்கப்பட்டுள்ளது. இவையெல்லா நாடுகளும் இலங்கையோடு ஓப்பிடுகையில் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய நாடுகளாக காணப்பகின்றன. ஆனால் அங்கு பெண்களுக்கான சமத்துவம், அங்கீகாரம் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நாட்டு பெண்கள் தமக்கு அரசியலில் 50மூ ஒதுக்கீடு தேவையென குரல் கொடுத்து வருகின்றனர். 

இலங்கை கல்வியறிவில் 93மூ காணப்பட்டாலும் பெண்களுக்கான அரசில் பிரதிநிதித்துவத்துக்கான ஓதுக்கிடு இன்று வரையுமே எட்டாக்கணியாக காணப்படுகின்றது. ஆனால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு அல்லது மொத்த வரவு செலவு திட்டத்திற்கு வருமானத்தை இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் பெண்களும், தோட்டத் தொழிலாள பெண்களும், புலம் பெயர் தொழிலாள பெண்களுமே 50மூற்கும் அதிகமான உழைப்பினை அல்லது வருமானத்தினை வழங்குகின்றனர். ஆனால் இலங்கை வரவு செலவு திட்டத்தில் இப்பெண்களின் அபிவிருத்திக்கான ஒதுக்கீடு என்ன? இவ்வாறு உழைக்கும் பெண்களின் வருமானத்திலேயே அரசியலில் ஈடுப்பட்டுள்ள அனைத்து ஆண் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் சம்பளம் பெறுகின்றனர். பெண்கள் உழைப்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு தன்மானம் இருக்கின்றதா? இல்லையா? என எண்ணத்தோன்றுகின்றது.   

இவ்வாறான பிரச்சினைகள் இருப்பினும் சில பெண்கள் அரசியலில் ஈடுப்படுகின்றனர். அவர்களுக்கு ஆணாதிக்க தலைமைகளினால் ஏற்படும் தடைகளும் பிரச்சினைகளும் எண்ணிலடக்காதவை. அரசியல் கட்சிகளில் பெண்கள் எவ்வளவு உழைத்தாலும் அக்கட்சிகளின் இரண்டாம் நிலைப் பதவிகளுக்கு கூட எந்த அரசியல் கட்சியிலும் வழங்கப்படவில்லை. இதற்கு எமது சமூகத்தில் பெண்கள் சம்பந்தமான பால் நிலை சார் மனபாங்கும், பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுப்படுவதற்கான, தடைகள் இலங்கை அரசியல் ஆணாதிக்க அதிகார தன்மைகொண்ட கட்சி அமைப்புக்கள் போன்ற பிரதான விடயங்கள் பெண்கள் அரசியலில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கோ தலைமைத்துவ பொறுப்பை ஏற்பதற்கோ தடைக்கற்களாக காலம் காலமாக தொடர்கின்றன. 

இனி நமது பார்வையை மலையக பக்கம் திருப்பினால் தேசிய அரசியலிலும் சரி பிரதேச அரசியலிலும் சரி 'இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?' என்ற போக்கோடு மக்கள் காணப்படுகின்றனர். மலையகத்தில் அரசியல் தொழிற்சங்களில் பெண் தலைமைத்துவமோ அல்லது அரசியல் கட்சிகளில் பெண் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவமோ மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு அல்லது தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ளவோ அவர்கள் வாழும் சூழல், கலாசாரம், ஆணாதிக்கம், வாழ்வாதாரம் போன்ற அனைத்துமே பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு மட்டுமன்றி அதைப்பற்றி சிந்திப்பதற்கு சுதந்திரமோ உரிமையோ அற்று காணப்படுகின்றனர்.

ஒரு நாட்டில் மக்களுக்கான அடிப்படை உரிமை அரசியல் உரிமையாகும். அதில் பிரதானமானது வாக்குரிமையாகும். ஆனால் மலையக மக்களைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவ்வுரிமையை அனுபவிக்ககூடிய சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். தோட்டத் தலைவர்கள் யாருக்கு வாக்களிக் சொல்கின்றார்களோ அவர்களுக்கே பெண்கள் வாக்களிக்க வேண்டும். பெண்கள் தாம் விரும்பும் ஒருவரை தெரிவுசெய்வதற்கு அல்லது வாக்களிப்பதற்கு ஆணாதிக்க அரசியல் கலாசார கட்டமைப்பு தடைவிதிக்கின்றது. மலையக பெண்கள், அரசியல் என்பது ஆண்களுக்குரியது என்ற மரபு வழி மனபாங்குடனேயே இன்றும் காணப்படுகின்றனர். மற்றும் அடிப்படை ஆவணங்கள் பிரச்சினையால் வாக்குபதிவு, தேர்தல் நடக்கும் போது தம்மை உறுதிப்படுத்துவதற்கான அடையாள அட்டை அல்லது வேறு ஆவணங்கள் இன்மையும் அவர்கள் வாக்களிப்பதற்கும் அல்லது அவர்களது வாக்குரிமை மீறப்படுவதற்கும் சந்தர்ப்பங்களாக அமைகின்றது. இவ்விடயத்தில் மலையக அரசியல்வாதிளோ, தொழிற்சங்கவாதிகளோ அக்கறைக் காட்டவதாக தென்ப்படவில்லை.

மலையக தோட்டத் தொழிலாளர்களிலும் 50மூற்கு மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கின்றனர். வாக்காளர் தொகையிலும் 50மூற்கு மேற்பட்டவர்கள் பெண்களே. மேலதிகமான பெண்களின் வாக்குகளைப் பெற்று அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகள் தமக்கு வாக்களித்த பெண்களின் அபிவிருத்திபற்றியோ உரிமைகள் பற்றியோ எவ்வித கரிசனையும் காட்டுவதில்லை. 

பெற்றோர்களேஇ மலையகப் பெண்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு தடையாக விளங்குகின்றனர். பெற்றோர்கள் தமது குழந்தைகளை வளர்க்கும் போது ஆண் குழந்தைகளுக்கு வழங்கும் சுதந்திரங்களை பெண்களுக்கு வழங்குவதில்லை. மரபுகள், மூடநம்பிக்கைகள் என்பவற்றை காரணம் காட்டி ஒரு பெட்டிப்பாம்மபாகவே வளர்த்தெடுக்கின்றனர். காலங்காலமாக திருமணமான பெண்கள் தனது கணவனுக்கு அடிபணிபவர்களாக இருப்பதற்கு பழக்கியுள்ளனர்.  இத்தகைய நிலையில் இருந்து விடுப்பட்டு மலையக பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தை பெற வேண்டும் எனில் ஒவ்வொரு பெற்றோர்களும் சிறு வயதுமுதற்கொண்டு தமது பெண்குழந்தைகளை நல்ல தலைமத்துவப்பண்புடையவர்களாக, கல்வியறிவுடையவர்களாக, துணிவுடையவர்களாக மற்றும் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் திறனுடையவர்களாக வளர்க்க வேண்டும்.

மலையக் பெண்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்தது போதும். மூடநம்பிக்கைகளை தாழ்வு மனபான்மையை தகர்த்தெரிந்து மலையகத்தில் ஆற்றல் உள்ள பெண்கள் இருக்கின்றனர் என்பதை நாம் ஏனைய சமூகத்திற்கும் மலையக அரசியல்வாதிகளுக்கம் உணர்த்த வேண்டும். நமது உழைப்பில் தம்மை வளர்த்துக் கொண்டிருக்கும் ஆணாதிக்க அரசியல் போக்கை முறியடிக்க வேண்டும். பெண்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலை ஏற்படுத்துவதற்கும் மலையக தோட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறவும் அவர்களின் சுகாதாரம் தேசிய நீரோட்டத்துடன் இணைக்கப்படுவதற்கு சக்தியும், ஆற்றலும், அறிவும், ஆர்வமும் நல்ல தலைமைத்துவ பண்புகளும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். 

ஏனெனில் மலையகம் இன்று மாலுமி இல்லாத கப்பல் போன்று இருக்கின்றது. அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எண்ணிலடங்காத அளவிற்கு உருவாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றுக்கிடையில் பிரிவுகளும் பிரச்சினைகளும் யார் பெரியவர் என்ற ஆணவமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. தமக்கு வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டு தாம் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் பணத்திற்கும் விலை போய்க்கொண்டிருக்கின்றனர். எனவே திராணிபிரக்ஞை உள்ள தலைமைத்துவத்தை உருவாக்கவதற்கும் மலையக பெண்களின் வாக்கு பெண்களுக்கே என்ற தூரநோக்கோடு செயற்பட ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்க வேண்டும்.

பெண்கள் அரசியலில் தலைமைத்துவத்தினை பெறுவதென்பது இலகுவான ஒரு விடயயம் அல்ல. அதனைப் படிபடியாயகவே ஏற்படுத்த வேண்டும். முதலில் குடும்பத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். தான் சார்ந்த சமூகத்தில் தலைமைத்துவ பண்புடையயவர்களாக மாற வேண்டும். பின்னர் நாட்டின் அரசியலில் தலைமைத்துவத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மலையகப் பெண்கள் பல கடமைப்பொறுப்புக்களளை செய்ய வேண்டியுள்ளது. அவையாவன,

பெண்கள் பல்வேறு துறைசார் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டும்.
சுயமாகவே தலைமைத்துவப்பண்பை, ஆளுமையை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
பெண்களுக்கு ஒரு விடயத்தை சிறப்பாக செய்ய முடியும் என்பதை பல்வேறு துறைகளிலும் நிரூபித்துக் காட்ட வேண்டும். 
தீர்மானம் எடுக்கும் சக்தியை வளர்க்க வேண்டும். 
எதிர்காலத்தில் மலையகப் பெண்கள் யாருடைய தலையீட்டினையும் கவனத்திற் கொள்ளாது சுயயமாக சிந்தித்து தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும்.
வாக்களிப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல் பெண்கள் வேட்பாளர்களாகவும் போட்டியிடுவதற்கு முன்வரவேண்டும்.
தேர்தல் களத்தில் தமது கொள்கை பிரசாரங்களை அச்சமின்றி வெளியிடுவதற்கு முன்வர வேண்டும்.
  
இவ்வாறு மலையகப் பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு பெற்றோர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும் வழிசமைத்துக் கொடுக்க வெண்டும். அதற்கு ஆண்கள் சமூதாயம் சரியான அங்கிகாரத்தினை வழங்க வேண்டும்.

மலையகத்தில் புறக்கணிக்கப்படும் விசேட தேவையாளர்கள் - துரைசாமி நடராஜா


நாட்டில் விசேட தேவை கொண்டவர்களின் தொகை அதிகரித்து காணப்படுகின்றது. எனினுமஇ் இவர்களை தேசிய நீரோட்டத்தில் இணைத்துக் கொள்வதற்கான முன்னெடுப்புகள் போதுமானதாக இல்லை. மலையகத்தைப் பொறுத்தவரையில் விசேட தேவை கொண்டவர்களின் நிலைமை மேலும் மோசமடைதுள்ளது. விசேட தேவை கொண்டவர்கள் பலர் இனம் காணப்படாத நிலையில் இலைமறை காயாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் மலையகத்தில் இனம் காணப்பட்டுள்ள விசேட தேவை கொண்டவர்களின் நலனோம்பு நடவடிக்கைகளும் கேள்விக்குறியாகியுள்ளதனையே அவதானிக்கக்கூடியதாக உள்ளது.

விசேட தேவை என்பது யாருக்கும் எப்போதும் ஏற்படலாம். பிறப்பின் காரணமாக ஒருவர் விசேட தேவை கொண்டவராக உருப்பெறலாம். அல்லது நோய்இ விபத்து போன்றவற்றின் காரணமாகவும் விசேட தேவை கொண்டோராக ஒருவர் மாற்றம் பெறும் வாய்ப்புள்ளது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இவ்வகையில் நிலவிய கொடிய யுத்தம் விசேட தேவை கொண்ட பலரை உருவாக்கி விட்டிருக்கின்றது. யுத்தத்தின் காரணமாக உடல் மற்றும் உள ரீதியாக பலர் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளமையும் தெரிந்த விடயமாகும்.
இலங்கையின் சனத்தொகையில் சுமார் 14 இலட்சத்துக்கும் அதிகமானோர் வலது குறைந்தவர்களாக அதாவது விசேட தேவையுடையவர்களாக இருப்பதாக கடந்த வருடம் வெளியான ஒரு தகவல் வலியுறுத்துகின்றது. இவர்களில் 55 ஆயிரத்து 582 மாணவர்கள் கல்வி வாய்ப்பினை பெற்றுக் கொண்டிருந்தனர். உலக மக்களில் சுமார் இரண்டு சதவீதமானவர்கள் மூளை வளர்ச்சி குறைந்தவர்களாக உள்ளனர். இலங்கையில் இருபத்தைந்தாயிரத்துக்கும் அதிகமானவர்கள் இந்நிலைமைக்கு உள்ளாகியுள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் வாகன விபத்துகளின் தொகை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இவ்விபத்துகளின் விளைவாக வருடாந்தம் பலர் உயிரிழப்பதும் மேலும் பலர் விசேட தேவை கொண்டவர்களாவதும் யாவரும் அறிந்த விடயமாகும். இலங்கையில் நாளொன்றுக்கு 100 தொடக்கம் 103 வரையான விபத்துகள் இடம் பெறுவதாக 2011 ஆம் ஆண்டு செபடெம்பர் மாதம் வெளியான அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது.

இவ்விபத்துகளில் 45 சதவீதமானவை பாரதூரமானவையாக இருந்தன. இவ்வாறு இடம்பெறும் விபத்துகளில் நாள்தோறும் நான்கு தொடக்கம் ஆறு பேர் வரையில் பலியாகின்றனர். 2007 ஆம் ஆண்டு தகவல் ஒன்றின்படி நாட்டில் ஆறு இலட்சத்து 69 ஆயிரத்து 52 பேர் அரசாங்க வைத்தியசாலைகளின் திடீர் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்றுள்ளனர். இவர்களில் 1இ389 பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த வருடம் ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரை நாடளாவிய ரீதியில் இடம் பெற்ற வாகன விபத்துகளில் 595 பேர் பலியாகினர். மேலும் பலர் காயமடைந்தும் அங்கவீனர்களாகியும் உள்ளனர். வாகன விபத்துகளின் தொகை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. 1977 இல் அமெரிக்க ஐக்கிய குடியரசில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி அந்த நாட்டிலே பார்வைக் குறைபாடுள்ள மக்களின் தொகை 11.4 மில்லியன்கள் என்று தெரியவந்தது. அவர்களுள் 1.4 மில்லியன் அளவினர் மூக்குக்கண்ணாடி அணிவதன் மூலம் சரியான பார்வையை பெற்றுக்கொள்ள முடியாதவர்களாக இருந்தனர். ஐரோப்பாவில் ஜேர்மன் மொழி பேசப்படுகின்ற நாடுகளில் 1983 இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றின்படி அந்த நாடுகளில் மொத்த மாணவர் தொகையில் 0.17 சதவீதமானவர்கள் பார்வைக் குறைபாடு உடையவர்கள் என்று கண்டறியப்பட்டது. இவர்களுள் 0.008 வீதமானோர் முழுப்பார்வையற்றோர் 0.159 சதவீதமானோர் அற்ப பார்வை உடையவர்களாவர்.

1991 இல் இலங்கை பாடசாலை ஆட்கணக்கெடுப்பு அறிக்கையின்படி இலங்கையின் மொத்த பாடசாலை மாணவர் தொகையில் 0.45 சதவீதமானோர் பார்வைக் குறைபாடு உள்ளவர்களாவர். இவர்களுள் 0.14 சதவீதமானோர் விசேட கல்வி வசதிகளைப் பெற்று வந்தனர். மீதி 0.31 சதவீதமான மாணவர்கள் சாதாரண பாடசாலைகளிலேயே கல்வி கற்று வந்தனர்.

மீத்திறன் உடையோர் கற்றல் இயலாமையைக் கொண்டவர்கள், பேச்சுக் குறைபாடுடையோர்இ பார்வை மற்றும் செவிப்புல குறைபாடுடையோர் மெதுவான உளவளர்ச்சி கொண்டவர்கள், உக்கிர மனவெழுச்சியுடையவர்கள், பல விதமான இயலாமை உடையவர்கள், உளக்குறைபாடுடையோர, தற்சிந்தனை  கொண்டவர்கள். நெறி பிறழ்ந்த இளம் குற்றவாளிகள் உள்ளிட்ட மேலும் பல தரப்பினருக்கும் விசேட உதவி தேவைப்படுகின்றது.

விசேட உதவி தேவைப்படுவோரின் உரிமைகளை பல்வேறு பிரகடனங்களும் மனித உரிமைச் சாசனங்களும் வலியுறுத்துகின்றன. மனித உரிமைகள் பிரகடனம் சகலருக்கும் கல்விப் பிரகடனம் வலது குறைந்தவர்களுக்கான செயற்றிட்டம் சலமன்கள் அறிக்கை என்பன அவற்றுள் சிலவாகும்.

விசேட தேவை உடைய மாணவர்கள் கல்வி பயிலும் விசேட பாடசாலைகளுக்கு எதிராக கடந்த காலங்களில் பல்வேறு கண்டனங்கள் முன்வைக்கப்பட்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும். விசேட பாடசாலை பிள்ளைகள் சாதாரண பிள்ளைகளுடன் தொடர்புகொள்ளவும் இடைவினை புரியவும் சந்தர்ப்பம் மறுக்கப்படுகின்றனர். சாதாரண பிள்ளைகளும் விசேட பிள்ளைகளுடன் இடைவினையாற்றும் சந்தர்ப்பத்தினை இழக்கின்றனர். விசேட பாடசாலை கல்விக்கென்று பெரும்பாலும் பிள்ளைகள் வெளிப் பிரதேசங்களுக்குச் செல்வதால் தமது சுற்றாடல் மற்றும் சம வயதுக் குழுக்கள் உடனான சமூகத் தொடர்புகளை இழக்கின்றனர். விசேட பள்ளிகளின் பருமன் அவற்றின் நிறுவனப்படுத்திய தன்மை என்பன மிகவும் குறுகியது. கலைத்திட்டம் மிகவும் வரையறைக்குட்பட்டது. இதன் காரணமாக பிள்ளைகளின் பரந்த கல்வி வளர்ச்சிக்கான சந்தர்ப்பம் மிகக் குறைந்ததாகும் என்றெல்லாம் பல்வேறு விமர்சனங்கள் விசேட பாடசாலைக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருந்தன.

விசேட பாடசாலை பொருத்தப்பாடற்றது என்ற நிலையில் விசேட தேவை கொண்ட மாணவர்கள் சாதாரண மாணவர்களுடன் ஒரே வகுப்பறையில் இணைந்து கற்கும் உட்படுத்தல் கல்விமுறை (ஐnஉடரளiஎந நுனரஉயவழைn) தொடர்பாக கருத்துரைக்கப்பட்டது. உட்படுத்தல் கல்வி என்பது விசேட கல்வி என்பதற்கான மற்றுமொரு பெயரல்ல. பிள்ளைகளின் கற்றலுக்கு தடை ஏற்படுத்தும் காரணிகளை இனம் காணல்இ அவற்றை இயன்றளவு குறைத்தல்இ பிள்ளைகளினது பங்கேற்பையும் கற்றலையும் உயர்மட்டமாக்கல்இ வளங்களை பயனுறுதிமிக்கதாக உபயோகித்தல் ஆகிய அனைத்து விடயங்களையும் உறுதி செய்யும் ஒரு புதிய கல்வி எண்ணக்கருவே உட்படுத்தற் கல்வியாகும் என்று தேசிய கல்வி நிறுவனத்தின் கையேடு ஒன்று உட்படுத்தற் கல்வியை வரைவிலக்கணப் படுத்துகின்றது.

உட்படுத்தற் கல்வி பயனுறுதிமிக்க கல்வி முறையாகும். பிள்ளைகள் ஒருங்கு சேர்ந்து இருப்பதே மிகவும் சிறந்தது என்று ஆய்வுகள் நிரூபித்துள்ளன. சிறந்த கல்வியைப் பெறுவதற்கு சாதாரண பாடசாலையைக் காட்டிலும் பொருத்தமான இடம் வேறில்லை. கல்வி வளங்களை உபயோகிப்பதற்கான சிறந்த முறையே உட்படுத்தற் கல்வியாகும். ஏற்றுக்கொள்ளல் சினேக மனப்பான்மைஇ கூடுதல் விளக்கம் பெறல்இ பயம் நீங்குதல் போன்ற பல திறன்கள் உட்படுத்தற் கல்வியில் மாத்திரமே காணப்படுகின்றன என்று பலவாறாக உட்படுத்தற் கல்வியின் முக்கியத்துவம் குறித்து கல்விமான்கள் எடுத்துக் கூறியுள்ளனர்.

உட்படுத்தற் கல்வியின் அடிப்படையில் திறமையின்மைஇ பால் நிலைஇ பேசும் மொழி, இனம் மற்றும் கலாசாரம் போன்ற வேறுபாடுகளை கருத்திற் கொள்ளாது சகலரையும் சமமாக மதிப்பதன் மூலமாக பங்களிப்போரின் எண்ணிக்கையை அதிகரித்தலே பாடசாலைகளின் கடமையாகும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

விசேட தேவை கொண்டவர்கள் தொடர்பாக நாம் பார்க்கின்றபோது மலையகப் பகுதிகளில் கணிசமான விசேட தேவை கொண்டவர்கள் இருந்து வருவதனை காணக்கூடியதாக உள்ளது. பேச்சுக் குறைபாடு, கேட்டல் குறைபாடு, பார்வைக் குறைபாடு, கற்றல் தொடர்பான பிரச்சினைகள் இவற்றோடு வேறு உடல் மற்றும் உளரீதியான குறைபாடுகளை கொண்டவர்கள் மலையகப் பகுதிகளில் காணப்படுகின்றார்கள். இத்தகையோரை இனம் காணும் அல்லது இனம் காணப்பட்டோரின் நலன்களைப் பேணும் நடவடிக்கைகள் மலையகத்தில் எவ்வாறுள்ளன என்பது குறித்து ஆழ் நோக்க வேண்டியுள்ளது.

விசேட தேவை கொண்டவர்களின் நிலைமைகள் மலையகத்தில் எவ்வாறுள்ளன என்பது தொடர்பாக ஹட்டன் கல்வி வலயத்தின் விசேட கல்வி உதவிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சாந்தமலர ்போசனுடன் தொடர்பு கொண்டு கருத்து வினவினேன். இதன்போது திருமதி டோசன் கருத்துத் தெரிவிக்கையில்,

மலையகத்தின் ஹட்டன் பகுதியில் விசேட கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக முன்னேடுக்கப்பட்டு வருகின்றன. இப்பகுதியில் ஆசிரியர ஆலோசகர்கள் விசேட கல்வி ஆசிரியர்கள் என்பவர்களின் அர்ப்பணிப்பான சேவை காரணமாக விசேட தேவை கொண்டவர்கள் தேசிய நீரோட்டத்தில் இணைந்துகொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கல்வி அதிகாரிகள்இ அதிபர்கள் என்போர் விசேட கல்வி அபிவிருத்தி கருதி தம்மாலான உச்சகட்ட பங்களிப்பினை நல்கி வருகின்றனர்.

எனினும் முழு மலையகம் என்ற ரீதியில் நோக்குகின்றபோது திருப்திகொள்ள முடியவில்லை. பெரும்பாலான கல்வி வலயங்களில் ஆசிரிய ஆலோசகர்கள் மற்றும் விசேட கல்வி உதவிப் பணிப்பாளர்கள் என்போர் இல்லாதுள்ளனர். பல பாடசாலைகளில் விசேட தேவை உடைய மாணவர்கள் இருக்கின்றபோதும் விசேட கல்வி ஆசிரியர் ஒருவர் இல்லாமையானது பெரும் குறையாக உள்ளது. இன்னும் சில பாடசாலைகளில் உள்ள விசேட கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் வேறு பாடங்களை கற்பிப்பதற்கென்று பயன்படுத்தப்படும் மோசமான நிலைமைகளும் காணப்படுகின்றன. இது ஒரு பிழையான செயலாகும். இதனால் விசேட தேவை கொண்ட மாணவர்களின் கல்வி வாய்ப்புகள் பாதிக்கப்படுகின்றன. இந்நிலைமை மாற்றியமைக்கப்பட்டு விசேட கல்வி ஆசிரியர்கள் விசேட கல்வி நடவடிக்கைகளுக்கே பயன்படுத்தப்படுதல் வேண்டும்.

2015 ஆம் ஆண்டில் சகலருக்கும் கல்வியை பெற்றுக் கொடுக்கும் முனைப்புகள் இடம் பெற்று வருகின்றன. எனினும, விசேட கல்வியைப் பொறுத்தவரையில் நிலைமை கேள்விக்குறியாகியுள்ளது என்பதனையும் குறிப்பிட்டாக வேண்டும். உட்படுத்தற் கல்வி நடவடிக்கைகள் பொறுத்தவரையில் ஹட்டன் பகுதிகளில் சிறப்பான முன்னெடுப்புகள் காணப்படுகின்றன. எனினும், மலையகத்தின் அநேகமான கல்வி வலயங்களில் உட்படுத்தற் கல்வி இன்னும் சாத்தியமாகவில்லை. பெரும்பான்மை சமூகத்தினரிடையே நகர்ப்புறங்களில் விசேட கல்வி நிலைமைகள் விருத்தி பெற்றுள்ளதை அவதானிக்க முடிகின்றது. எனினும், கிராமப்புறங்களில் விருத்தி ஏற்படவில்லை என்று திருமதி. டோசன் தெரிவித்தார்.

திருமதி டோசன் தேசிய கல்வி நிறுவனம் இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பவற்றில் விசேட கல்வி வளவாளராக கடமையாற்றி வருகின்றார்.
மலையக கல்வி வலயங்களில் விசேட கல்வி ஆசிரிய ஆலோசகர் பற்றாக்குறை காரணமாக விசேட கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பதிலும் விசேட தேவையுள்ளவர்களை இனங்கண்டு உதவுவதிலும் சிக்கல்கள் எதிர்நோக்கப் படுகின்றன. பெருந்தோட்டப் புறங்களில் விசேட தேவை கொண்டவர்கள் பாடசாலை வயதை அடைந்துள்ள போதும் பாடசாலைக்குச் செல்லாத நிலை காணப்படுகின்றது. இதனால், இவர்களின் கல்வி வாய்ப்புகள் இழக்கப்படுகின்றன. பல பாடசாலை அதிபர்கள் விசேட கல்வி குறித்த எதுவித அனுபவமோ அல்லது போதிய விளக்கமோ இல்லாதுள்ளனர். இதன் காரணமாகவே திருமதி. டோசன் கூறியதைப் போன்று விசேட கல்வி ஆசிரியரை வேறு பாடங்களை கற்பிப்பதற்கு பயன்படுத்தும் நிலை உருவாகியுள்ளது. விசேட கல்வி குறித்தும் விசேட தேவை கொண்டோர் குறித்தும் மலையக அதிபர்கள்பூரண விளக்கத்தை பெற்றுக்கொள்ளல் வேண்டும்.

மலையகத்தின் சில கல்வி வலயங்களில் விசேட கல்வி ஆலோசனையும் வழிகாட்டலும் பிரிவுடன் இணைக்கப்பட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. விசேட கல்வி பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இருந்தும் பல இடங்களில் விசேட கல்வி ஆசிரியர்களுக்கான செயலமர்வுகள் சிங்கள மொழியில் இடம் பெற்று வருவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் அரச கரும மொழி என்ற போதும் சில விஷமிகளின் இனவாத சிந்தனைப் போக்கின் காரணமாக மொழி உரிமை மழுங்கடிப்பு செய்யப்பட்டு வருகின்றமை கண்டிக்கத்தக்கதாகும்.

விசேட தேவையுடையோரின் கல்வி அபிவிருத்தியில் பெற்றோரின் வகி பங்கு அதிகமாகும். 1970 க்கு முன்னர் விசேட தேவை உடைய பிள்ளைகளின் அபிவருத்தி கருதி பெற்றோருக்கான முன்னெடுப்புகள் குறைவாகவே இருந்தன. இத்தகைய பிள்ளைகளை பெற்றோர் சுமையாக கருதுவதும் அவர்களை வைத்து பிழைப்பு நடத்துவதும் வழக்கமாக இருந்தது என்றும் 1970 இன் இறுதிப் பகுதியில் வலது குறைந்தோரின் நலன் கருதி பெற்றோரை பயிற்றுவிக்கும் திட்டம் மேற்கொள்ளப்பட்டமை விசேட கல்வித்துறை வரலாற்றில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது. பெற்றோரை பயிற்றுவிக்கும் திட்டம் மிகவும் சிறப்பானதாகும். இதன் மூலம் வலது குறைந்தவர்களை சமூகத்துடன் இணைத்து வாழப் பழக்குதல், நேசிக்க கற்றுக் கொடுத்தல், குடும்ப உறுப்பினர்களை மதித்தல் போன்ற அடிப்படைப் பண்புகளை கட்டியெழுப்ப முடியும் என்று ஆய்வாளர் கனிஸ்கெம் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தி இருக்கின்றார்.

பெற்றோர் சிறந்த பங்காளர்களாக இருப்பதற்கு வேண்டிய ஆலோசனைகளை மிட்லர் 1976 இல் முன் வைத்தார்.

இதன்படி பிள்ளைகளின் தேவைகள் சமூக இயைபாக்க மட்டம் மற்றும் கல்வித் தேவைகள் குறித்த விளக்கத்தை பெற்றோர் கொண்டிருக்க வேண்டும். பிள்ளையின் திறன்கள்இ சிந்தனை மட்டம் என்பவற்றை பெற்றோரும் ஆசிரியரும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சாதாரண மாணவர்களின் புத்தி மட்டத்தை காட்டிலும் விசேட தேவையுடையோரின் புத்தி மட்டம் மாறுபட்டது. எனவேஇ உரிய அடைவு மட்டத்தை நோக்காகக் கொண்டு பெற்றோரும் ஆசிரியரும் புரிந்துணர்வின் அடிப்படையில் கட்டியெழுப்புதல் வேண்டும் போன்ற பல விடயங்களை மிட்லர் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையிலஇ் விசேட தேவை கொண்டோரின் மலையக பெற்றோர்கள் இது குறித்து உரிய விழிப்புணர்வு இல்லாத நிலையிலேயே காணப்படுகின்றனர். விசேட தேவை கொண்டோரை சுமையாகக் கருதும் நடவடிக்கைகளே தொடர்ந்தும் இடம் பெற்று வருகிறன. விசேட தேவை கொண்டோரை தனிமைப்படுத்தி வைத்தல், புறக்கணித்தல், அவர்களுக்குரிய உரிமைகளை மழுங்கடிக்கச் செய்தல் என்பன இடம்பெற்று வருகின்றன. பெரும்பாலான ஆசிரியர்களிடம் கூட விசேட கல்வி என்றால் ஒரு மாற்றாந்தாய் மனப்பான்மையே காணப்படுகின்றது. இந்நிலை மாற்றியமைக்கப்பட வேண்டும்.
தேசிய கல்வி நிறுவகம் விசேட தேவை கொண்டவர்களின் நலன் கருதி பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக விரிவுரையாளர் திருமதி பி.வினிதாஜினி தெரிவிக்கின்றார். இதனடிப்படையில் விசேட தேவை கொண்டோரின் கற்பித்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களின் திறமை முன்னேற்றம் கருதி விசேட கல்வி டிப்ளோமா பாட நெறி தேசிய கல்வி நிறுவகத்தால் நடத்தப்பட்டு வருகின்றது. இது பகுதி நேர ஒரு வருட கால எல்லை கொண்ட பாடநெறியாகும். தமிழ் மற்றும் சிங்கள மொழி மூலம் இப்பாடநெறி இடம் பெறுகின்றது. விசேட தேவை கொண்டோரின் பெற்றோர்கள் சிலரும் இப்பாடநெறிக்கென சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். விசேட தேவை கொண்டோர் தொடர்பாக காலத்துக்கு காலம் ஆய்வுகள் நடத்தப்பட்டு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

விசேட தேவை கொண்ட பிள்ளைகளை மதிப்பிடுதல் பெற்றோர்களுக்கான ஆலோசனை மற்றும் வழிகாட்டல்களை வழங்கும் நடவடிக்கைகள் வாரம் தோறும் தேசிய கல்வி நிறுவகத்தில் இடம்பெற்று வருகின்றது. ஏற்கெனவே விசேட தேவை கொண்டோருக்கு வழிகாட்டும் புூரண என்ற பெயரிலான சஞ்சிகை வெளியிடப்பட்டது. எனினும், தற்போது இது இடை நிறுத்தப்பட்டுள்ளதோடு உட்படுத்தல் தொடர்பான சஞ்சிகை வெளியிடப்படுகின்றது. விசேட கல்வி வளநூல் தயாரிப்பு வேலைத்திட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுகின்றது. சைகை மொழி டிப்ளோமா பயிற்சிநெறியும் நடைமுறையில் உள்ளது. நாடெங்கிலும் உள்ள பல ஆசிரியர்கள் இப்பயிற்சி நெறியை ஆர்வத்துடன் தொடர்கின்றனர் என்று விரிவுரையாளர் பி.வினிதாஜினி தெரிவிக்கின்றார். மலையக ஆசிரியர்களும் இப்பயிற்சி நெறியில் ஆர்வத்துடன் பங்கு கொண்டு திறமைகளை மேம்படுத்திக் கொள்ள வேண்டும்.

எவ்வாறாயினும் மலையகத்தில் விசேட தேவை கொண்டவர்களி்ன் நிலைமைகள் இன்னும் குழந்தை மட்டத்திலேயே காணப்படுகின்றது. விசேட தேவை கொண்டோரின் அபிவிருத்திக்கு பல மட்டங்களிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படல் வேண்டும் பெற்றோர் மற்றும் ஆசிரியர் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேலும் விஸ்தரிக்கப்பட வேண்டும்.

ஆசிரிய ஆலோசகர்கள் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள் நியமனங்கள் விசேட கல்வி தொடர்பாக அதிகரிக்கப்பட வேண்டும். பல வள நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு விசேட தேவை கொண்டோருக்கான சேவைகள் மேம்படுத்தப்பட வேண்டும் அரசஇ அரச சார்பற்ற நிறுவனங்கள் பொது மக்கள் என்று சகல தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்கி விசேட தேவை கொண்டோரின் அபிவிருத்திக்கு கை கொடுக்க வேண்டும்.

விஷ்ணுபுரம் விருதுவிழாவில் எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி


நமது தமிழகத்துக்கு மிக அண்மையில் வாழும் இலங்கை மலையக மக்கள் பற்றி நாம் அறியாமல் இருந்திருக்கிறோம். தெளிவத்தை ஜோசப் போன்ற மிக காத்திரமான ஒரு தமிழ் படைப்பாளியை இத்தனை வருடகாலம் அடையாளம் காணாமல் இருந்திருக்கிறோம் என்பது மனவருத்தத்திற்குரிய செய்தி. தன் வாழ்நாள் முழுவதும் அந்த ஒடுக்கப்பட்ட மலையக மக்களைப்பற்றியே ஓயாது எழுதி வந்திருக்கும் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு விஷ்ணுபுரம் விருது வழங்குவதன் மூலம் நாம்தான் பெருமைபட்டுக்கொள்ள வேண்டும். இலங்கை மலையக மக்களின் அடையாளமாக இன்று தெளிவத்தை ஜோசப்பை  தமிழகத்தில் காணுகிறோம் என எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி புகழாரம் சூடினார்.
‘காலத்தால் மறக்கப்பட முடியாத ஆனால் சமகாலத்தில் மறக்கப்பட்ட இலக்கிய ஆளுமைகளை கெளரவித்தல்’ எனும் நோக்கத்தோடு விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தினரால் உயர் இலக்கிய ஆளுமைகளுக்கு வழங்கப்பட்டு வரும் ‘விஷ்ணுபுரம்’ விருது இம்முறை ஈழத்தின் முக்கிய இலக்கிய படைப்பாளியும் மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தலைவருமான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்பட்டது. 

2013 டிசம்பர் 22 ஆம் திகதி தமிழகம் கோயம்புத்து}ரில் நடைபெற்ற விழாவுக்கு மூத்த எழுத்தாளர் இந்திரா பாரத்தசாரதி தலைமை வகித்தார். பிரபல எழுத்தாளர் ஜெயமோகனின் வாசகர்கள் ஒருங்கிணைத்திருக்கும் ‘விஷ்ணுபுரம்’ வாசகர் வட்டம் நிகழ்ச்சியை ஒழுங்கமைத்திருந்தது. உலகெங்கும் வாழும் குறித்த வாசகர் வட்ட நண்பர்கள் கோவையில் ஒரு திருவிழாபோல் ஒன்றுகூடியிருந்தார்கள். காலத்தால் மறக்கப்படமுடியாத படைப்புகளைத் தந்தும் சமகாலத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருக்கும் இலக்கியகர்த்தாக்களை கெளரவிப்பது இந்த இலக்கிய வட்டத்தாரின் நோக்கம். விருது வழங்குதல் என்பதை> இரண்டுமணி நேரம் கூடி எழுத்தாளருக்கு பொன்னாடை போர்த்தி ஒரு நினைவுசிற்பத்தை கையில் கொடுத்து அனுப்பும் சம்பிரதாய நிகழ்வாக அல்லாமல் விருதுக்கு தெரிவு செய்யப்பட்ட எழுத்தாளரை இரண்டு நாட்களுக்கு கொண்டாடும்> அவருடன் உரையாடும்> அவரைது படைப்புகள் பற்றி சம்பாஷிக்கும் அவருடன் வாழும் ஒரு திருநாளாக மாற்றிக்கொண்டுள்ளார்கள்.

 ஒரு படைப்பாளிக்கு கிடைக்கின்ற கெளரவம் என்பது அவனது படைப்புகளை வாசித்து அதன் மூலம் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதை புரிந்துகொள்வதுதுதான். அந்தப்புரிதலை பெற்றுக்கொள்ளவும் அந்த எழுத்தாளரை வாழ்த்தவும் வருடத்தில் இரண்டு நாட்களை ஒதுக்கி ஒரு மண்டபத்தை ஒதுக்கி ஒன்றுகூடிவிடுகிறார்கள். படைப்பாளியை நடுவிலே அமரவைத்து சுற்றி வாசகர்கள் வட்டமாக சுமார் நூறு முதல் நூற்றியைம்பதுவரை அமர்ந்துகொள்கிறார்கள். இப்படித்தான் தெளிவத்தையைச் சுற்றி அமர்ந்துகொண்டு அவரது படைப்புகள் பற்றி ஒவ்வொரு வாசகரும் தமது அனுபவத்தையும்> சந்தேகங்களையும் கேள்விகளையும் பாராட்டுக்களையும் பகிரந்துகொண்டார்கள். சுவாரஷ்யமாக சம்பாஷிப்பதுபற்றிய தெளிவத்தை ஜோசப்பின் ஆளுமை இலக்கிய உலகம் நன்கறியும். அவருடன் மணிக்கணக்காக இலக்கியம் பேசலாம். ஒரு ஆக்கம் வெளிவந்த காலம்> இதழ்> பத்திரிகை அதன் கருத்துகள் என குறித்துகாட்டி பேசும் நல்லதோர் ‘கதை சொல்லி’ தெளிவத்தை ஜோசப். துல்லியமாகவும் துணிவுடனும் கருத்துக்களை பகிர்பவர். அவரது எளிமையான ‘பேச்சுநடை’ தமிழக வாசகர்களை கட்டிப்போட்டு உட்கார வைத்துவிட்டது. 

 ‘தெனாலி’ திரைப்படத்தில் கமலஹாசன் பேசுவதுதான் இலங்கைத்தமிழ் என நினைத்துக் கொண்டிருந்தவர்களுக்கு தெளிவத்தையின் இதயத்திலிருந்துவரும் வரும் இயல்பான வார்த்தைகள் ‘ஐயா…எங்கள மாதிரி பேசுறீங்களே..’ என வாசகர்களை கேட்கவைத்தது. ‘கோயம்பத்து}ருக்கும் கும்பகோணத்துக்கும்..எவ்வளவு து}ரம் …கும்பகோணத்தில் இருந்து பதுளைக்கு வாத்தியார் வேலைக்குபோனவர்தான் எங்க ஆஞ்ஞா… அந்த மாதிரி தேயிலை தோட்டத்துல பஞ்சம் பொழைக்கப் போன பதினைஞ்சு லட்சம் பேரு ..அங்க கெடக்குறோம்.. நீங்கதான எங்கள கண்டுக்கவே மாட்டேங்கிறீங்க’ என ஒரே மூச்சில் ‘மலையகத்தை’ அறிமுகப்படுத்திவைத்தார் தெளிவத்தை. கலகலப்பாக பேசத் தொடங்கிவிட்ட வாசகர்கள் இரண்டு நாளாக அவரை சுற்றிக்கொண்டார்கள். 

தெளிவத்தையின் படைப்புகள் பற்றி வாசகர்கள் கேட்கும் நுணுக்கமான கேள்விகள் ‘வாசகர் வட்டம்’ எப்படி செயற்பட வேண்டும் என்பதற்கு கட்டியம் கூறியது. இந்த கலந்துரையாடல்பற்றி தனியான ஒரு கட்டுரையில் பதிவு செய்வதே பொருந்தும். அதே நேரம் ஒரேயொரு சம்பவத்தை மாத்திரம் இங்கு கூறிச்செல்வது பொருந்தும். இரண்டு இளம் பெண் வாசகர்கள். இருவரும் மாற்றுத்திறனாளிகள். சக்கர நாற்காலியில்தான் வாழ்கிறார்கள். தெளித்தை ஜோசப் அவர்களும் இந்திரா பார்த்தசாரதி அவர்களும் நடுவில் அமர்ந்திருக்க சுற்றியிருந்த வட்டத்தினர் தங்களது கேள்விகளைக் கேட்டுக்கொண்டுள்ளனர். அந்த இரண்டு மாற்றுத்திறனாளி சகோதரிகளும் அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். இடையில் ஒரு நண்பர் அந்த இரண்டு சகோதரிகளையும் அறிமுகப்படுத்தினார். அவர்களிடம் இந்திரா பாரத்தசாரதி> தெளிவத்தை ஆகியோரைப் படித்திருக்கிறீர்களா? என இன்னுமொரு நண்பர் கேட்டார். மிக எளிமையாக ஒரு சகோதரி…. இந்திரா பார்த்தசாரதியின் ‘ஒரு’ கதை பற்றியும் தெளிவத்தை ஜோசப்பின் ‘ஒன்பது’ கதைகள் பற்றியும் கூறினார். குடைநிழல் நாவலில் ‘மீனுக்கும் விரல் இருந்த’ ஒரு விளக்கமே அங்கு நடப்பதை காட்டிவிடுகிறது என நயவுரை வழங்கினார். அடுத்த நாள் விழாவில் முதல் வரிசைக்கு முன்பாகவே இந்த இரண்டு சகோதரிகளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டிருந்ததுது. எல்லோரும் தெளிவத்தையிடம் வந்து படம் எடுத்துக்கொண்டார்கள். தெளிவத்தை> இவர்களிடம் போய் படம் எடுத்துக்கொண்டார்.

கோவையில் உள்ள  இடைநிலைப்பள்ளியின் விழா மண்டபம் மாலை ஆறுமணிக்கு மக்களால் நிறைந்திருந்து. தேயிலை வெளியில் தெளிவத்தை ஜோசப்பின் நிழற்படம் பதித்த பதாகை மேடையின் பின்புறத்தையும் மலையக மக்களின் பின்புலத்தையும் தமிழகத்தில் காட்டி நின்றது. இரவி சுப்பிரமணியம் எனும் இசைக்கலைஞனின் இரு புதல்விகளின் இறைவணக்கப்பாடலோடும் விஷ்ணுபுரம் வாசகர் வட்ட இணைப்பாளர்களில் ஒருவரான அரங்கசாமி அவரகளின் வரவேற்புரையுடனும் விழா ஆரம்பமாகியது. 

நம்மில் இருந்து பிரித்துச் செல்லப்பட்ட ஒரு சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தி அவர்களை அடையாளப்படுத்துவதே தனது எழுத்தின் பணியாக ஐம்பது வருடமாக எழுதிக்கொண்டிருந்கும் தமிழ் எழுத்தாளரை நான் கூட அறியாமல் இருந்திருக்கிறேன் என்பதற்காக வருந்துகிறேன். எங்கு தவறு நடந்தது என்பது எனக்குப் புரியவில்லை. காலம் தாழ்த்தியேனும் இந்த மக்கள் பற்றி புரிந்துகொள்ள ‘விஷ்ணுபுரம்’ வாசகர் வட்டம் வழியேற்படுத்திக் கொடுத்துள்ளது. அதே நேரம் வாசிப்புப் பழக்கம் அருகி வருவதாகச் சொல்லப்படும் இந்த நாளில் ஒரு வாசகர் வட்டம் நல்ல வாசிப்பையும் அதேநேரம் இலக்கிய கர்த்தாக்களை கெளரவிப்பதையும் பார்க்க வயது போன எங்களுக்கு நம்பிக்கையும் மகிழ்ச்சியும் ஏற்படுகிறது என தலைமையுரையில் தனது கருத்துக்களைப் பதிவு செய்தார் இந்திரா பார்த்தசாரதி.

தலைமையுரையினைத் தொடர்ந்து தெளிவத்தையின் இரண்டு நூல்கள் வெளியிடப்பட்டன. நற்றிணைப் பதிப்பாக ‘மீன்கள்’ எனும் தலைப்பில் ஜெயமோகன் தொகுத்திருக்கும் தெளிவத்தையின் ஒன்பது சிறுகதைகள் அடங்கிய சிறுகதைத் தொகுதியை ஒளிப்பதிவாளர் செழியன் வெளியிட்டு வைத்தார். ‘எழுத்து’ பதிப்பித்துள்ள குடைநிழல் நாவலின் மறுபதிப்பை திரைப்பட இயக்குனர் பாலா வெளியிட்டு வைக்க எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் பெற்றுக்கொண்டார். எழுத்தாளர் நாஞ்சில்நாடன் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு பொன்னாடையிட்டு கெளரவித்தார். திருமதி. தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு திருமதி சுதா ஃநவாசன் பொன்னாடையிட்டு கெளரவித்தார். தெளிவத்தை ஜோசப் அவர்கள் நீண்டகாலமாக பணியாற்றிய ‘ஸ்டார்’ (மொடன் கன்பக்ஸனரி

) நிறுவனத்தின் சார்பாக ஈழத்தின் எழுத்தாளர் அல்அஸுமத் அவர்கள் பொன்னாடையிட்டு கெளரவித்தார். இதற்கான ஏற்பாடுகளை தமிழகத்தில் வாழும் எழுத்தாளர் சொர்ணராஜ் விக்கேடாரியா மேற்கொண்டிருந்தார். ‘விஷ்ணுபுரம்’ விருதினை எழுத்தாளர் இந்திரா பார்த்தசாரதி அவர்களும் இயக்குனர் பாலா அவர்களும் தெளிவத்தைக்கு வழங்கிவைத்தனர். இந்திய மதிப்பு ஒரு லட்சம் பரிசு வழங்கி தெளிவத்தை கெளரவிக்கப்பட்டார்.

எனது திரைப்படங்கள் எல்லாமே ஒரு சிறுகதையையோ அல்லது ஒரு நாவலையோ மையமாகக் கொண்டே உருவாக்கப்பட்டுள்ளன. முழுமையாக அந்த இலக்கியத்தை திரையில் கொண்டுவர முடியாது போனாலும் என்னால் இயன்றவரை முயற்சித்துள்ளேன். தெளிவத்தை ஜோசப் அவர்களின் நாவல்கள்> சிறுகதைகளை வாசித்துள்ளேன். இன்று அவரை நேரடியாக சந்திக்கும் வாய்ப்பினைப் பெற்றுக்கொண்டுள்ளேன். நல்ல திரைப்படங்களை உருவாக்க நல்ல கதைகள் வேண்டும். அதனை இலக்கியவாதிகள்> எழுத்தாளர்களே தர வேண்டும். சினிமா தீண்டத்தகாத தொழில் அல்ல. எழுத்தாளர்களே சினிமாவுக்கு வாருங்கள். தமிழ் சினிமா கொஞ்சம் உருப்படும் என அழைப்புவிடுத்தார் இயக்குனர் பாலா.

எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் ‘தெளித்தை ஜோசப் காட்டும் மலையகத்தின் வாழ்வியல்’ எனும் தலைப்பில் தெளிவத்தை ஜோசப்பின் நான்கு சிறுகதைகளைக் கொண்டு நயப்புரை ஆற்றினார். மலையக மக்கள் எந்தெந்த காலங்களில் இலங்கைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்கள் அங்கு எவ்வாறெல்லாம் அவர்கள் மீது சட்டங்கள் பாய்ந்தன. எப்படி ஃமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் இந்தியாவுக்கு திருப்பிப்பெறப்பட்டார்கள் போன்ற விடயங்களை வாசித்துக்காட்ட முயற்சித்தார் சுரேஷ்குமார இந்திரஜித்.

மலையாளக்கவிஞர் பாலச்சந்திரன் சுள்ளிக்காடு சுகயீனம் காரணமாக விழாவுக்கு வருகை தரமுடியாதபோதும் அவரது கவிதையொன்றை இசைப்பாடலாக வழங்கி அவையைக் கவர்ந்தார் கலைஞர் இரவி சுப்பிரமணியம். 

வி.சுரேஷ் எனும் வாசகன் தனது கண்ணியுரையின் மூலம் தெளிவத்தையின் படைப்புகள் குறித்து பேசினார். ஒரு படைபாளியின் படைப்பை இன்னுமொரு படைப்பாளியோ அல்லது ஆய்வாளனோ அல்லாது ஒரு வாசகனின் கண்ணோட்டத்திலும் அது பற்றி மேடையில் பேசவேண்டும் என்பதற்கு ஆதாரமாக அமைந்தது சிரேஷின் உரை. கண்ணியுரை என்று சொல்ல முடியாத அளவுக்கு ஒரு தேர்ந்த ஆய்வாளனாக மேடையில் நின்றார் வி.சுரோஷ். 

மெற்கிந்திய தீவுகள் முதல் நியுசிலாந்து வரை தமிழர்கள் அடிமைகளாக அழைத்துச் செல்லப்பட்ட வரலாற்றைச் சுட்டிக்காட்டினார். அண்மையில் மேற்கிந்திய தீவுகிளின் கிரிக்கெட் அணி இந்தியா வந்தபோது அதில் ‘வீராசாமி பெருமாள்’ எனும் அசல் தமிழன் விளையாடினான். அவரை நேர்கண்டு அவரது பூர்விகம் பற்றிய தமிழக ஊடகங்கள் செய்திதரும் என ஆவலாக இருந்தேன். ஆனால் சச்சின் டெண்டுல்கர் விடைபெறும் காய்ச்சலிலேயே நமது தமிழன் வீராசாமி பெருமாள் கண்டுகொள்ளப்படாமல் போய்விட்டான் என நினைக்கிறேன். இவ்வாறு நாம் கண்டுகொள்ளமால் விட்டவர்கள்தான்  நமக்கு மிகமிக அண்மையில் வாழும் எமது இரத்த உறவுகளான இலங்கை மலையக மக்கள் என்பது வேதனைக்குரியது. 

அவர்களது வாழ்வின் கொடுமைகளை நம் கண்முன் கொண்டுவந்து நிறுத்தம் தெளிவத்தையின் ஒவ்வொரு படைப்புகளையும் நான் படித்திருக்கிறேன். ‘தெளிவத்தை மலையகச் சிறுகதைகளின் தந்தை’ தெளிவத்தை ஜோசப் அவர்களை கெளரவிப்பதன் ஊடாக இலங்கை மலையக மக்கள் மீதான நமது பார்வையும் கவனமும் விசாலப்படவேண்டும். அதுவே நாம் அவருக்கு வழங்கும் கெளரவமாகும். என வாழ்த்தினார் சுரேஸ்.

‘விஷ்ணுபுரம்’ எனும் படைப்பின் மூலமும் இலக்கிய சர்ச்சைகள் மூலமும் பிரபலம் பெற்றவர் எழுத்தாளர் ஜெயமோகன்.; அவரது இணையத்தளத்தினூடா தினம் பத்தாயிரம் வாசகர்கள ஜெயமோகனை வாசிப்பதாகத் தகவல்கள் சொல்கின்றன. அவரது வாசகர்களின் வட்டமே ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்’. இந்த நிகழ்வுகளின் ஏற்பாட்டாளர்> வழிநடாத்துனர்> ஜெயமோகன். தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு ஏன் இந்த விருது வழங்கப்படுகிறது என்பதை விளக்குவதாக அவரது வாழ்த்துரை அமைந்திருந்தது.

 நமது இலக்கிய ஒழுங்குகள் சில நேரம் வெவ்வேறு அதிகார மையங்களிடம் மாட்டிக்கொள்கிறது. படைப்புகளை  படைப்புலகம் சாராதவர்களால் எடைபோடப்படும் சூழல் காணப்படுகிறது. இதனால் காலத்தால் மறுக்கப்படமுடியாத> மறக்கப்படமுடியாத பல படைப்பாளிகள் சம காலத்தில் கண்டுகொள்ளப்படாமல் இருக்கின்றனர். அவர்களை இனம் கண்டு கெளரவம் செய்யும் முயற்சியே ‘விஷ்ணுபுரம்’ இலக்கிய விருது. இது வரை அ.மாதவன்> பூமணி> தேவதேவன் ஆகிறோருக்கு வழங்கப்பட்டுள்ள இந்த விருது இம்முறை இரட்டிப்பு பரிசுடன் இலங்கை மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கு வழங்கப்படுகிறது. 

சமகாலத்தில் கண்டுகொள்ளப்படாமல் விட்டாலும் காலத்தால் மறுக்கப்படமுடியாத எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப். அவரது ‘மீன்கள்’ எனும் சிறுகதையை தமிழில் வெளியான நூறு சிறந்த சிறுகதைகளில் ஒன்றாக நான் பட்டியிலிட்டுள்ளேன். மலையக மக்களது வாழ்விடக் கொடுமைகளைச் சித்திரிப்பதன் மூலம் அவர்களின் அரசியல் இருப்பை சூசகமாகச் சொல்லும் படைப்பு அது. அந்நிய மண்ணில் அர்த்தமில்லாது அழியும் தலைமுறையின் உழைப்பை> கண்ணீரை> எதிர்ப்பார்பை கனவைச் சொல்லக்கூடிய தெளிவத்தையின் எழுத்துக்கள் நம்மிடமிருந்து விலகிச் சென்ற ஒரு தமைுறையினரின் கதைகளைச் சொல்பவை. நாம் நம் குருதியால் அறிந்துகொள்ளவேண்டிய மக்களின் வாழ்க்கை அது. 

குடை நிழல் நாவலின் ஆசிரியரும் சரி அவர் குரலாக ஒலிக்கும் மையக்கதாபாத்திரமும் சரி புரட்சியாளர்கள் அல்ல. சிந்தனையாளர்கள் அல்ல. வெறும் எளிய மனிதர்கள். ஆனால் நீதியுணர்ச்சியுடன் உரிமை  வேட்கையுடன் ஆதிக்கத்துக்கு எதிராக நிலைகொள்ளும் எளிய மனிதனின் உறுதியை நாவலெங்கும் காண முடிகின்றது. நாவலை நான் முதன்மை படைப்பாகக் கருதுவது இதனால்தான். 

தெளிவத்தையின் சிறப்பே அவர் சார்ந்த மலையக மக்களை அடையாளப்படுத்துவதை குறிக்கோளாகக் கொண்டே எவ்வித வருமான நோக்கமும் இல்லாது ஐம்பது வரடத்திற்கு மேலாக எழுதிக்கொணடிருப்பதுதான். தான் மலையகத் தோட்டத்தைச் சார்ந்தவன் என்பதைக் காட்டுவதற்காகவே ‘தெளிவத்தை’ எனும் தேயிலைத் தோட்டத்தின் பெயரை அவரது ஜோசப் எனும் இயற்பெயருக்கு முன் இட்டுள்ள நேர்மை போற்றுதற்குரியது. அவரது நோக்கத்தின்படியே இன்று மலையக மக்களின் அடையாளமாக தெளிவத்தை ஜோசப் அவர்களை காணுகின்றோம். தெளிவத்தை ஜோசப்  இலங்கை மண்ணில் ‘புதுமைப்பித்தனுக்கு’ விழா எடுத்து பெருமை சேர்த்தவர். உண்மையில் இந்த விருதினை அவருக்கு வழங்குவதன் மூலம்  விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் கெளரவம் பெறகிறது.  என வாழ்த்துரையில் தெரிவத்தார் எழுத்தாளர் ஜெயமோகன்.

தெளிவத்தை ஜோசப் அவர்கள் தனது ஏற்புரையில்: விஷ்ணுபுரம் விருது எனக்கு வழங்கப்படுவதாக தொலைபேசியில் அறிவித்த போது எனக்கு ஒருவித பூரிப்பு எழுந்தது. உண்மையான தொப்புள்கொடி உறவை தமிழக மக்கள் அறிந்துகொள்ள தமிழக மக்களுக்கு ஒரு வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என நினைத்தேன். தெளிவத்தை ஜோசப் என்கிறவன் யார்? அவனுக்கு ஏன் இந்த விருது கொடுக்கப்படுகிறது போன்றவற்றை நண்பர் ஜெயமோகனின் உரை உறுதி செய்தது என நினைக்கிறேன்.

இலக்கிய  வாசகர் சுரேஷ்; அருமையான அவரது உரையின் மூலம் என்னை ‘மலையகச் சிறுகதையின் தந்தை’ என வாழ்த்தினார். அவருக்கு நன்றி. என்னைப் பொறுத்தவரை எனது சமகாலத்தில் எழுதிய எனக்கு வழிகாட்டியாக இருந்த என்.எஸ்.எம் ராமையா அவர்களையே ‘மலையகச் சிறுகதையின் தந்தை’ என்பேன். ‘மஞ்சரி’ இதழ் தமிழ்ச சிறுகதைகளின் தொகுப்பு ஒன்றை வெளியிட்ட பொது என்னுடைய ‘மீன்கள்’ கதையையும் என்.எஸ்.எம் இராமையாவின் ‘வேட்கை’ கதையையும் அதில் சேரத்துக்கொண்டு ஒரு குறிப்பையும் எழுதியிருந்தது.  தமிழச் சிறுகதைகள்  என்றால் நாம்தான் என நினைத்துக்கொண்டுள்ள தமிழக எழுத்தாளர்கள் மத்தியில் சிறுகதையின் பல்வேறு நுட்பங்கள் தெரிந்தவர்கள் தமிழகத்துக்க வெளியேயும் இருக்கிறார்கள் என்பதற்கு சான்றாக் இந்த கதைகள் அமைந்துள்ளன என அந்தக் குறிப்பில் எழுதியுள்ளமையை நினைவுப்படுத்த விரும்புகிறேன். 

எனது நண்பர் என்.எஸ்.எம் ராமையா ஒரு முறை பார்த்தசாரதியின் ‘தந்திரபூமி’ வாசித்துள்ளீர்களா தெளிவத்தை என்ககேட்டார். அதற்கு ‘பாரத்தசாரதிகளையெல்லாம் நான் வாசிப்பதில்லை’ என பதில் சொன்னவன் நான். அது நா.பார்த்தசாரதி தொடர்பாக கொண்டிருந்த விமர்சனம் காரணமாக. அவர் சிறந்த பத்திரிகையாளர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. அவர் சுற்றுலாவில் இலங்கைக்கு வந்துவிட்டு எழுதிய ‘மேகம் மூடிய மலைகளின் பின்னால்’ எனும் மலையக மக்கள் பற்றிய நாவல் தொடர்பாக எங்களுக்கு இருந்த விமர்சனமே என்னை அவ்வாறு சொல்லத்து}ண்டியது. ஆனால் என்.எஸ்.எம் ராமையா அவர்கள் ‘நீங்கள் சொல்வது நா.பா. நான் சொல்வது இ.பா -இந்திரா பார்த்தசாரதி என தந்திரபூமியை எனக்கு வாசிக்கத்தந்தார். அதன்பிறகு என்னை ஆகர்ஷித்த பார்த்தசாரதி இந்த இந்திரா பார்த்தசாரதி. இன்று அவர் அருகே என்னை அமரச் செய்து எனக்கு இந்த விருதினை வழங்குவது எனக்கு பெருமையாக இருக்கிறது. 

எங்கள் மலையக மக்கள் வாழ்வு என்பது போராட்டம் நிறைந்தது. எங்கள் இலக்கியங்கள் அந்தப் போராட்டங்களை பதிவு செய்துவந்துள்ளன> வருகின்றன. நாங்கள் ‘தமிழ்க்கூலிகள்’  என வெள்ளையர்களால் அடையாளப்படுத்தப்பட்டவர்கள். எங்களை ஒரு காலத்தில் ‘தோவன்னா காவன்னா’ என்றார்கள். அப்படியென்றால் ‘தோட்டக்காட்டானுகள்’ என்பது பொருள். பல இடங்களில் தோட்டத்தை எடுத்துவிட்டு ‘காட்டானுகள்’  என்றும் சொல்லக் கேட்டிருக்கிறோம். அதே போல் ஃமா –சாஸ்திரி ஒப்பந்தம் மூலம் எங்களை கிழங்கு> வெங்காயப் பண்டங்களைப் போன்று பங்குபோட்டுக் கொண்டன இலங்கை- இந்திய அரசாங்ககங்கள். அப்போது ‘தோவன்னா காவன்னாவாக’ இருந்த எங்களை ‘காணா தோவன்னா’ என்றார்கள். இதற்கு கள்ளத்தொணி என்று பொருள். போர் உச்சம் பெற்றிருந்த காலத்தில் பக்கத்து வீட்டுக்காரனுடன் தனிப்பட்ட சண்டையென்றாலும் கூட எங்களைத் தவறாகப் போட்டுக்கொடுத்து புலியென உள்ளே தள்ளிவிடுவார்கள். அதேபோல் ஒரு காலகட்டத்தில் கள்ளத்தோணி எனக் காரணம் காட்டி கைது செய்து கப்பேலேற்றிவிடுவார்கள். எங்கள் கவிஞரும் எழுத்தாளருமான மாத்தளை மலரன்பன் ‘கடலையே காணாத எங்களை கள்ளத் தோணி என்கிறார்கள்’ என ஒரு கவிதையிலே குறிப்பிட்டுள்ளார். என குறிப்பிட்டுள்ளார். 

அவ்வாறு கப்பலேற்றிய மலையகத் தமிழர்கள் இன்றும் தமிழநாட்டில் சிலோன்காரர்களாக வாழ்ந்து கொண்டிருந்கிறார்கள். அவர்களது மறுவாழ்வுக்காக இங்க வந்து மலையக மக்கள் மறுவாழ்வு மன்றம் அமைத்து செயற்பட்டவர்கள் இர.சிவலிங்கம் மற்றும் செந்து}ரன் போன்றோர். செந்து}ரனின் ‘உரிமை எங்கே’ சிறுகதை எமது மக்களின் பிரஜைகள் அந்தஸ்தின் அவலத்தை கோடிட்டுக்காட்டும் முக்கியமாகன சிறுகதை. அந்தக்கதைக்கு கல்கி சூன்றாவது பரிசையே கொடுத்தது. லட்சத்தில் அழியும் கல்கி போன்ற பத்திரிகைகள் அந்த கதையைக் கண்டுகொண்டதே பெரிய விஷயம்தான். சிவலிங்கம் செந்து}ரன் எனும் அந்த இரண்டு செயற்பாட்டாளர்களின் கல்லறையை ஒரு நிமிடமாவது கோத்தகிரியில் தரிசிக்ககிடைத்த வாய்ப்புக்காகவேனும் நான் விஷ்ணுபுரம் எற்பாட்டாளர்களுக்கு நன்றியுடையவனாகிறேன். 

இந்த விருது எனக்கு அறிவிக்கப்படாத போது நான் தமிழகத்திற்கு இலக்கிய பயணம் செய்யும் வாய்ப்பு இந்த 80 வயதில் எனக்குக் கிடைத்திருக்காது. நீங்கள் எனக்கு விருதினை அறிவித்து அம்மாவையும் அழைத்து வாருங்கள் என சொல்லிவிட்டீர்கள். அது சாத்தியமா என யோசித்திருந்தபொது அதனை சாத்தியமாக்கிக்காட்டியவர் என்னுடன் இந்த விழாவுக்கு வருகை தந்திருக்கும் எங்கள் இளைய எழுத்தாளர் மல்லியப்புசந்தி திலகர். அவர் விஷ்ணுபுரம் ஏற்பாட்டாளர்களுக்கு ஒரு தகவலை நேற்றுச்சொன்னார். ‘உங்களுக்கு வேண்டுமானால் பிரபல படைப்பாளியை அழைத்து கெளரவிக்கும் நிகழ்வாக இது இருக்கலாம். ஆனால் நான் இரண்டு குழந்தைகளை கூட்டிவந்திருப்பதாகவே உணர்கிறேன். அந்த பொறுப்பு எனக்குண்டு’ என கூறினார். அந்தப் பொறுப்பினை ஏற்று செய்து முடித்த திலகருக்கு நன்றி சொல்வது எனது கடமை. அதேபோல இந்த விழாவுக்காக இலங்கையிலுருந்து எந்திருக்கும் எங்கள் எழுத்தாளர் அல்-அஸுமத் அவர்களும் நன்றிக்குரியவர். எனது குடும்பத்தார் கும்பகோணத்தில் இருந்து வருகைதந்திருக்கிறாரகள்;. எனது தம்பி எழுத்தாளர் குடந்தை பரிபூரணின் மகள் ‘தெளிவத்தை ஜோசப்பின் சிறுகதைகள்’ பற்றி தமிழகத்தில் பட்டப்படிப்புக்கு ஆய்வு செய்துள்ளார். அவரும் வருகை தந்துள்ளார். இலங்கை மலையகத்தில் எங்களுடன்  வாழ்ந்து தாயகம் திரும்பிய சகோதரர்கள் இந்த விழாவுக்கு வருகை தந்துள்ளார்கள் அவர்களுக்கும் நன்றிகள். ‘பரதேசி’ திரைப்படம் தொடர்பான விமர்சனப்பார்வை என்னிடத்தில் இருந்தாலும் தேயிலையின் வாழ்வியலை திரையில் காட்டியமைக்காக பாலாவுக்கு நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். விழா ஏற்பாட்டாளர்கள் மிகச்சிறப்பாக ஒழுங்கமைப்புகளைச் செய்துள்ளீர்கள் அதற்காகவும் பாராட்டுக்கள். இந்த விருதின் மூலமாக இலங்கை மலையகத்தில் வாழும் உண்மையான உங்கள் தொப்பூள்கொடி உறவுகளை அடையாளம் காணுவீர்கள் என எண்ணுகிறேன் என குறிப்பிட்டார்.

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் உறுப்பினர் செல்வேந்திரன் நிகழ்ச்சிகளை நேர்த்தியாக தொகுத்து வழங்கினார். தெளிவத்தையின் இலங்கை நண்பர்கள்> குடும்பத்தினர் சார்பாக அவருக்கு பொன்னாடையிட்டு கெளரவித்தனர். பார்வையாளர்கள் வரிசையில் மூத்த எழுத்தாளர் கோவை ஞானி> கவிஞர் தேவதேவன்> நாஞ்சில்நாடன்> எழுத்து பதிப்பகத்தின் வே.அலெக்ஸ் போன்றோர் அமர்ந்திருந்தனர். விழா நிறைவில் எழுத்தாளர் கோவை ஞானி தெளிவத்தையை ஆரத்தழுவி வாழ்த்தினார். தெளிவத்தையின் இரண்டு நூல்களும் மண்டப வாயிலில் விற்றுத் தீர்ந்திருந்தன. கையில் கிடைத்த ஏதாவது ஒரு நூலில் வாசகர்கள்; தெளிவத்தையாரிடம் கையெழுத்துப் பெற்றுக்கொண்டனர். இந்த முயற்சியின் ஊடாக மலையக மக்களுக்கு தமிழகத்தில் ஒரு அடையாளத்தை ஏற்படுத்தித்தந்த விழாவின் ஏற்பாட்டாளரான எழுத்தாளர் ஜெயமோகன் விமர்சனங்கள் - சர்ச்சைகளுக்கு அப்பால்  நின்று மலையக மக்களின் நன்றிக்கும் பாராட்டுதற்கும் உரியவராகின்றார்.

படங்களும் தொகுப்பும் : மல்லியப்புசந்தி திலகர் 

 

இணைந்திருங்கள்


Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates