Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மலையக பெண்களும் அரசியலும்



மார்ச் 8ம் திகதியானது பெண்களுக்கு என ஒதுக்கப்பட்ட தினமாக உலகம் முழுவதும் பெண்கள் தமது விடுதலைக்காகவும் ஆணாதிக்கத்திற்கு எதிராகவும் போராடிய தினமாகும் இப்போராட்டத்திற்கான வெற்றிகள் மிகக்குறைவாகவே கிடைத்துள்ளது.

ஏனெனில் வளர்ந்த நாடுகளும் சரி வளர்முக நாடுகளும் சரி பெண்கள் தீர்மானம் எடுக்கும் இடத்திற்கு வருவதை அச்சமூகங்கள் தடுக்கின்றனர் அல்லது தடையாக இருக்கின்றனர் என்றே கூறவேண்டும். இது இவ்வாறாக இருக்க எமது நாட்டுப் பெண்களை சற்று நோக்குவோம்.

இன்றும் பெண் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் அரசியலில் 30% இட ஓதுக்கீடு தேவை என்று அல்லது சட்டமாக்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்து வருகின்றனர். ஏனெனில் எமது அண்மைய நாடுகளான இந்தியா, நேபாலம் வங்காளதேசம், பாக்கிஸ்தான் போன்ற நாடுகளில் பெண்களின் அரசியல் பிரதிநிதித்துவம் சட்டமாக்கப்பட்டுள்ளது. இவையெல்லா நாடுகளும் இலங்கையோடு ஓப்பிடுகையில் கல்வி அறிவில் மிகவும் பின்தங்கிய நாடுகளாக காணப்பகின்றன. ஆனால் அங்கு பெண்களுக்கான சமத்துவம், அங்கீகாரம் கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. அதனால் அந்த நாட்டு பெண்கள் தமக்கு அரசியலில் 50மூ ஒதுக்கீடு தேவையென குரல் கொடுத்து வருகின்றனர். 

இலங்கை கல்வியறிவில் 93% காணப்பட்டாலும் பெண்களுக்கான அரசில் பிரதிநிதித்துவத்துக்கான ஓதுக்கிடு இன்று வரையுமே எட்டாக்கணியாக காணப்படுகின்றது. ஆனால் இலங்கையின் பொருளாதாரத்திற்கு அல்லது மொத்த வரவு செலவு திட்டத்திற்கு வருமானத்தை இலங்கை சுதந்திர வர்த்தக வலயத்தில் தொழில் புரியும் பெண்களும், தோட்டத் தொழிலாள பெண்களும், புலம் பெயர் தொழிலாள பெண்களுமே 50%ற்கும் அதிகமான உழைப்பினை அல்லது வருமானத்தினை வழங்குகின்றனர். ஆனால் இலங்கை வரவு செலவு திட்டத்தில் இப்பெண்களின் அபிவிருத்திக்கான ஒதுக்கீடு என்ன? இவ்வாறு உழைக்கும் பெண்களின் வருமானத்திலேயே அரசியலில் ஈடுப்பட்டுள்ள அனைத்து ஆண் அரசியல்வாதிகளும் அரச அதிகாரிகளும் சம்பளம் பெறுகின்றனர். பெண்கள் உழைப்பில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு தன்மானம் இருக்கின்றதா? இல்லையா? என எண்ணத்தோன்றுகின்றது.   

இவ்வாறான பிரச்சினைகள் இருப்பினும் சில பெண்கள் அரசியலில் ஈடுப்படுகின்றனர். அவர்களுக்கு ஆணாதிக்க தலைமைகளினால் ஏற்படும் தடைகளும் பிரச்சினைகளும் எண்ணிலடக்காதவை. அரசியல் கட்சிகளில் பெண்கள் எவ்வளவு உழைத்தாலும் அக்கட்சிகளின் இரண்டாம் நிலைப் பதவிகளுக்கு கூட எந்த அரசியல் கட்சியிலும் வழங்கப்படவில்லை. இதற்கு எமது சமூகத்தில் பெண்கள் சம்பந்தமான பால் நிலை சார் மனபாங்கும், பிரதிநிதித்துவ அரசியலில் ஈடுப்படுவதற்கான, தடைகள் இலங்கை அரசியல் ஆணாதிக்க அதிகார தன்மைகொண்ட கட்சி அமைப்புக்கள் போன்ற பிரதான விடயங்கள் பெண்கள் அரசியலில் சுதந்திரமாக ஈடுபடுவதற்கோ தலைமைத்துவ பொறுப்பை ஏற்பதற்கோ தடைக்கற்களாக காலம் காலமாக தொடர்கின்றன. 

இனி நமது பார்வையை மலையக பக்கம் திருப்பினால் தேசிய அரசியலிலும் சரி பிரதேச அரசியலிலும் சரி 'இராமன் ஆண்டால் என்ன? இராவணன் ஆண்டால் என்ன?' என்ற போக்கோடு மக்கள் காணப்படுகின்றனர். மலையகத்தில் அரசியல் தொழிற்சங்களில் பெண் தலைமைத்துவமோ அல்லது அரசியல் கட்சிகளில் பெண் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவமோ மிகக் குறைவாகவே காணப்படுகின்றது. இவர்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு அல்லது தலைமைத்துவத்தை பெற்றுக்கொள்ளவோ அவர்கள் வாழும் சூழல், கலாசாரம், ஆணாதிக்கம், வாழ்வாதாரம் போன்ற அனைத்துமே பெண்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு மட்டுமன்றி அதைப்பற்றி சிந்திப்பதற்கு சுதந்திரமோ உரிமையோ அற்று காணப்படுகின்றனர்.

ஒரு நாட்டில் மக்களுக்கான அடிப்படை உரிமை அரசியல் உரிமையாகும். அதில் பிரதானமானது வாக்குரிமையாகும். ஆனால் மலையக மக்களைப் பொறுத்தவரை ஆயிரக்கணக்கானவர்களுக்கு அவ்வுரிமையை அனுபவிக்ககூடிய சந்தர்ப்பம் அல்லது சூழ்நிலை இல்லாதவர்களாக காணப்படுகின்றனர். தோட்டத் தலைவர்கள் யாருக்கு வாக்களிக் சொல்கின்றார்களோ அவர்களுக்கே பெண்கள் வாக்களிக்க வேண்டும். பெண்கள் தாம் விரும்பும் ஒருவரை தெரிவுசெய்வதற்கு அல்லது வாக்களிப்பதற்கு ஆணாதிக்க அரசியல் கலாசார கட்டமைப்பு தடைவிதிக்கின்றது. மலையக பெண்கள், அரசியல் என்பது ஆண்களுக்குரியது என்ற மரபு வழி மனபாங்குடனேயே இன்றும் காணப்படுகின்றனர். மற்றும் அடிப்படை ஆவணங்கள் பிரச்சினையால் வாக்குபதிவு, தேர்தல் நடக்கும் போது தம்மை உறுதிப்படுத்துவதற்கான அடையாள அட்டை அல்லது வேறு ஆவணங்கள் இன்மையும் அவர்கள் வாக்களிப்பதற்கும் அல்லது அவர்களது வாக்குரிமை மீறப்படுவதற்கும் சந்தர்ப்பங்களாக அமைகின்றது. இவ்விடயத்தில் மலையக அரசியல்வாதிளோ, தொழிற்சங்கவாதிகளோ அக்கறைக் காட்டவதாக தென்ப்படவில்லை.

மலையக தோட்டத் தொழிலாளர்களிலும் 50%ற்கு மேற்பட்டவர்கள் பெண்களாக இருக்கின்றனர். வாக்காளர் தொகையிலும் 50%ற்கு மேற்பட்டவர்கள் பெண்களே. மேலதிகமான பெண்களின் வாக்குகளைப் பெற்று அரசியலுக்கு வரும் அரசியல்வாதிகள் தமக்கு வாக்களித்த பெண்களின் அபிவிருத்திபற்றியோ உரிமைகள் பற்றியோ எவ்வித கரிசனையும் காட்டுவதில்லை. 

பெற்றோர்களேஇ மலையகப் பெண்களின் அரசியல் தலைமைத்துவத்திற்கு தடையாக விளங்குகின்றனர். பெற்றோர்கள் தமது குழந்தைகளை வளர்க்கும் போது ஆண் குழந்தைகளுக்கு வழங்கும் சுதந்திரங்களை பெண்களுக்கு வழங்குவதில்லை. மரபுகள், மூடநம்பிக்கைகள் என்பவற்றை காரணம் காட்டி ஒரு பெட்டிப்பாம்மபாகவே வளர்த்தெடுக்கின்றனர். காலங்காலமாக திருமணமான பெண்கள் தனது கணவனுக்கு அடிபணிபவர்களாக இருப்பதற்கு பழக்கியுள்ளனர்.  இத்தகைய நிலையில் இருந்து விடுப்பட்டு மலையக பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தை பெற வேண்டும் எனில் ஒவ்வொரு பெற்றோர்களும் சிறு வயதுமுதற்கொண்டு தமது பெண்குழந்தைகளை நல்ல தலைமத்துவப்பண்புடையவர்களாக, கல்வியறிவுடையவர்களாக, துணிவுடையவர்களாக மற்றும் தன்னைத்தானே பாதுகாத்துக்கொள்ளும் திறனுடையவர்களாக வளர்க்க வேண்டும்.

மலையக் பெண்கள் வாய்மூடி மௌனிகளாக இருந்தது போதும். மூடநம்பிக்கைகளை தாழ்வு மனபான்மையை தகர்த்தெரிந்து மலையகத்தில் ஆற்றல் உள்ள பெண்கள் இருக்கின்றனர் என்பதை நாம் ஏனைய சமூகத்திற்கும் மலையக அரசியல்வாதிகளுக்கம் உணர்த்த வேண்டும். நமது உழைப்பில் தம்மை வளர்த்துக் கொண்டிருக்கும் ஆணாதிக்க அரசியல் போக்கை முறியடிக்க வேண்டும். பெண்கள் அரசியலுக்கு வந்தால் மக்கள் மயப்படுத்தப்பட்ட அரசியலை ஏற்படுத்துவதற்கும் மலையக தோட்ட தொழில் செய்யும் பெண்களுக்கு உழைப்பிற்கேற்ற ஊதியம் பெறவும் அவர்களின் சுகாதாரம் தேசிய நீரோட்டத்துடன் இணைக்கப்படுவதற்கு சக்தியும், ஆற்றலும், அறிவும், ஆர்வமும் நல்ல தலைமைத்துவ பண்புகளும் இருக்கின்றது என்பதை எடுத்துக்காட்ட வேண்டும். 

ஏனெனில் மலையகம் இன்று மாலுமி இல்லாத கப்பல் போன்று இருக்கின்றது. அரசியல் கட்சிகளும் தொழிற்சங்கங்களும் எண்ணிலடங்காத அளவிற்கு உருவாகிக்கொண்டிருக்கின்றன. ஆனால் இவற்றுக்கிடையில் பிரிவுகளும் பிரச்சினைகளும் யார் பெரியவர் என்ற ஆணவமும் தலைவிரித்தாடிக் கொண்டிருக்கின்றன. தமக்கு வாக்களித்த மக்களை நட்டாற்றில் விட்டு தாம் சந்தர்ப்பவாத அரசியலுக்கும் பணத்திற்கும் விலை போய்க்கொண்டிருக்கின்றனர். எனவே திராணிபிரக்ஞை உள்ள தலைமைத்துவத்தை உருவாக்கவதற்கும் மலையக பெண்களின் வாக்கு பெண்களுக்கே என்ற தூரநோக்கோடு செயற்பட ஒவ்வொரு பெண்ணும் சிந்திக்க வேண்டும்.

பெண்கள் அரசியலில் தலைமைத்துவத்தினை பெறுவதென்பது இலகுவான ஒரு விடயயம் அல்ல. அதனைப் படிபடியாயகவே ஏற்படுத்த வேண்டும். முதலில் குடும்பத்தில் பெண்கள் தலைமைப் பொறுப்பை ஏற்க வேண்டும். தான் சார்ந்த சமூகத்தில் தலைமைத்துவ பண்புடையயவர்களாக மாற வேண்டும். பின்னர் நாட்டின் அரசியலில் தலைமைத்துவத்தினை பெற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு மலையகப் பெண்கள் பல கடமைப்பொறுப்புக்களளை செய்ய வேண்டியுள்ளது. அவையாவன,

பெண்கள் பல்வேறு துறைசார் கல்வியில் தேர்ச்சி பெற வேண்டும்.
சுயமாகவே தலைமைத்துவப்பண்பை, ஆளுமையை தங்களுக்குள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.

பெண்களுக்கு ஒரு விடயத்தை சிறப்பாக செய்ய முடியும் என்பதை பல்வேறு துறைகளிலும் நிரூபித்துக் காட்ட வேண்டும். 

தீர்மானம் எடுக்கும் சக்தியை வளர்க்க வேண்டும். 
எதிர்காலத்தில் மலையகப் பெண்கள் யாருடைய தலையீட்டினையும் கவனத்திற் கொள்ளாது சுயயமாக சிந்தித்து தேர்தல்களில் வாக்களிக்க வேண்டும்.

வாக்களிப்பதோடு மாத்திரம் நின்றுவிடாமல் பெண்கள் வேட்பாளர்களாகவும் போட்டியிடுவதற்கு முன்வரவேண்டும்.
தேர்தல் களத்தில் தமது கொள்கை பிரசாரங்களை அச்சமின்றி வெளியிடுவதற்கு முன்வர வேண்டும்.
  
இவ்வாறு மலையகப் பெண்கள் அரசியல் தலைமைத்துவத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு பெற்றோர்களும் அவர்கள் சார்ந்த சமூகமும் வழிசமைத்துக் கொடுக்க வெண்டும். அதற்கு ஆண்கள் சமூதாயம் சரியான அங்கிகாரத்தினை வழங்க வேண்டும்.


மலையகத் தமிழ் தேசிய இனத்தின் வளர்ச்சியும் அவர்களுக்கான எதிர்கால அரசியல் நிலைப்பாடுகளும் - இரா. சடகோபன்


மலையக மக்கள் வரலாற்றில் இன்று நாம் மிகப் பிரதான சந்தியொன்றில் வந்து நின்றிருக்கின்றோம். இன்று ஏற்பட்டிருக்கின்ற அரசியல் சூழ்நிலைகளை வைத்து நோக்கும் போது மலையக மக்களின் எதிர்காலம் எந்த திசை நோக்கிச் செல்ல இருக்கின்றது என்பது மிகக் குழப்பமானதாகவே உள்ளது. முன்னெப்பொழுதும் இல்லாத விதத்தில் மலையகம் மிகப் பெரிய தலைமைத்துவ நெருக்கடியினை எதிர்நோக்கியுள்ளது. இப்போது காணப்படுகின்ற மலையகத் தலைமைகள் நேர்மையற்றதும் மக்கள் நலனில் அக்கறை கொள்ளாத, பணத்துக்கும் பதவிக்கும் விலை போகத்தக்க தலைமைகளாகவே உள்ளன. இந்த நிலைமையானது மலையகத்துக்கு மட்டுமன்றி பொதுவான நாட்டின் நிலைமையாகவும் உள்ளது.

இத்தகைய நிலையில் மலையக மக்கள் தாம் யார்? தமது பிரச்சினைகள் யாவை? தமது எதிர்கால இலக்குகள் யாவை? இன்றுவரை தாம் விட்ட தவறுகள் என்ன? தமது அரசியல் நிலைப்பாடு எதிர்வரும் காலங்களில் என்னவாக இருக்க வேண்டும்? என்பன தொடர்பில் உரத்துச் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளனர். குறிப்பாக தமக்கென இவர்கள் அரசியல் வேலைத் திட்டம் ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியவர்களாக உள்ளனர். அந்த வகையிலேயே இன்றைய இக் கருத்தரங்கு முக்கியத்துவம் பெறுகின்றது.

இன்றைய வரலாற்றுத் தேவை

மலையக புத்திஜீவிகள், கல்விமான்கள், எழுத்தாளர்கள், கொழும்பில் இருக்கும் வர்த்தகப் பிரமுகர்கள், சட்டத்தரணிகள், டாக்டர்கள், எஞ்சினியர்கள், கணக்கறிஞர்கள் முதலான தொழிற்சார் நிபுணர்கள் தாம் சார்ந்திருக்கும் சமுதாயத்துக்கு எந்தவிதத்திலும் பங்களிப்புச் செய்வதில்லையென்றும் அவர்கள் இந்தச் சமூகத்திலிருந்து பிரிந்து போய்விட்ட அந்நியர்கள் போல் நடந்துகொள்கின்றனர் என்றும் பொதுவான குற்றச்சாட்டு ஒன்று ஏற்கனவே உள்ளது. ஒரு பிரிவினர் இவர்கள் கொழும்பில் கலியாணம் கட்டிக் கொண்டு சொந்த அபிவிருத்தியில் மட்டுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர் என்று கூறுகின்றனர். வேறு சிலர் இவர்கள் தம்மை இந்த சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்று இனங்காட்டிக் கொள்ளவே வெட்கப்படுகின்றனர் என்றும் அபிப்பிராயம் வைத்துக் கொண்டுள்ளனர். இக்கூற்றுக்களில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது என்பதனை அவர்களே மதிப்பிட்டுக் கொள்ள வேண்டும். அண்மைக் காலத்தில் பல மலையக எழுத்தாளர்கள் இவ் அம்சங்களைக் கதைப் பொருட்களாகக் கொண்டு கதைகள் எழுதியிருப்பதனையும் காணக்கூடியதாக உள்ளது.

இத்தகைய நிலையில் “”நாம் சார்ந்திருக்கும் மலையக சமுதாயத்தில் இருந்து சற்றே சில அடிகள் முன்னோக்கி வந்துவிட்ட நமக்கு இச் சமுதாயத்தின் முன்னேற்றத்தில் எந்த அளவுக்கு பொறுப்பு உள்ளது” என்று சிந்திக்க வேண்டிய காலகட்டத்தில் இப்போது நாம் இருக்கின்றோம். உண்மையில் அப்படி ஒரு பொறுப்பு எம் மீது சுமத்தப்பட்டுள்ளதா? என்பதில் பலருக்கும் பலவித கருத்து முரண்பாடுகள் இருக்கலாம். ஆனால் எமக்கு அப்படி ஒரு கடப்பாடும் இல்லை என்று கருதுபவர்கள் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்க மாட்டார்கள் என்றே கருதுகின்றேன். ஆதலால் நாமெல்லாம் நாம் சார்ந்திருக்கும் மலையக சமூகத்தின் மேம்பாட்டுக்கு ஏதாவது பங்களிப்பு செய்ய வேண்டும் என்ற கருத்துடையவர்கள் என்பதில் முரண்பாடுகள் இருக்க முடியாது.

அப்படியானால் நம்மால் என்ன செய்ய முடியும்? என்பது அடுத்த கேள்வி. அந்த கேள்வியில் இருந்தே இன்றைய கருத்தரங்கின் தேவை எழுகின்றது. இன்றைய சூழ்நிலையில் இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது அரசியல், சமூக, பொருளாதார ரீதியில் நாம் எவ்விடத்தில் இருக்கின்றோம் என்பது தொடர்ந்தும் வெட்கக் கேடான விடயமாகவே இருக்கின்றது. ஆதலினால் அடுத்து வரும் தசாப்தங்களில் நாம் அரசியல், சமூக, பொருளாதார, கல்வி, கலை, கலாசார வளர்ச்சி கருதி நமக்கென ஸ்திரமான கொள்கைகள், நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்துக் கொண்டு செயற்பட வேண்டியதன் அவசியம் மிகப் பூதாகரமான தோற்றம் பெற்றுள்ளது. இந்த அவசியத்தைப் புறக்கணித்தால் நாம் முன்னெப்போதும் இல்லாத விதத்தில் மிகப் பின்னோக்கித் தள்ளப்படும் அபாயம் உள்ளது. தற்போதைய நமது அரசியல் தலைமைகளின் பொறுப்பற்ற சுயநலப்போக்குகளால் மிக விரைவில் நாம் அரசியல் அநாதைகளாகி விடுவோம் என்ற நிலை தோன்றியுள்ளது. இதனை இப்போதே நாம் அனுபவித்துக் கொண்டிருக்கின்றோம் என்றுதான் கூற வேண்டும்.

எவ்வித உணர்வுபூர்வமான சிந்தனைகளும், கொள்கை வேறுபாடுகளுமின்றி எந்தக் கட்சிக்காரன் டிக்கட் தருவான், எந்தக் கட்சியில் சேர்ந்தால் அமைச்சர் பதவி கிடைக்கும், எந்தக் கட்சியில் சேர்ந்தால் அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று இவர்கள் நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு அலைந்து திரிகிறார்கள். சிலர் பாராளுமன்றத்தில் நுழைந்து விட்டாலே பெரும்பேறு கிடைத்துவிடும் என்ற பேராசையால் எந்தக் கட்சியுடனும் சேர்ந்து கொள்ளத் தயாராகவுள்ளனர். ஆதலால் உண்மையான தலைமைகளை இனங்காண வேண்டும் என்ற அவசியமும், உண்மையான தலைமைகளை உருவாக்க வேண்டிய அவசியமும், போலித் தலைமைகளை அம்பலப்படுத்த வேண்டும் என்ற பாரிய பொறுப்பும் கூட நமக்குண்டு.

இன்று நாம் இங்கு கூடியிருப்பதும் கூட அத்தகைய பொறுப்பின் ஒரு அங்கம் தான் என்று நான் கருதுகிறேன். எதிர்காலத்தில் மலையகம் கடைப்பிடிக்க வேண்டிய அல்லது எவ்வித கொள்கைகளை முன்னெடுத்துச் செல்வது பொருத்தமானதாக அமையும், என்பதனை ஆராய்ந்து பார்க்கவே இங்கு நாம் கூடியிருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரையில் அண்மையில் ஒரு ஆய்வின் பொருட்டு மலையகத் தமிழரின் வரலாற்று ஆவணங்களைத் தேடும் முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது கிடைத்த சில ஆவணங்களில் இருந்து பெற்ற தகவல்களில் இருந்து பொறுக்கிய சில தகவல்களை, இன்றைய கருத்தரங்குக்கு பொருத்தமான விதத்தில் உங்கள் முன்வைக்கலாம் என்று கருதுகின்றேன்.

மலையகத் தமிழ்த் தேசியத்துவத்தின் தோற்றம்

இலங்கை வாழ் தென்னிந்தியத் தமிழரின் வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பிருந்தே ஆரம்பமாகின்றது. எனினும் பிரித்தானியர் ஆட்சியின் கீழ் 1804ஆம் ஆண்டில் இருந்தே மலையகத் தமிழ் மக்களின் வரலாறு இலங்கையில் ஆரம்பமாகின்றது என்று கருதலாம். இந்த ஆண்டில் இருந்துதான் யுத்த மற்றும் சிவில் நிர்மாண வேலைகளின் நிமித்தம் தென்னிந்தியத் தொழிலாளர்களை இராணுவக் கட்டுப்பாட்டுடன் பயன்படுத்துவது ஆரம்பமாகின்றது. நோர்த் என்பவர் ஆளுநராக இருந்தபோது 1804ஆம் ஆண்டில் இந்தியத் தொழிலாளர்களைக் கொண்டு முன்னோடிப் படை அமைப்பொன்றை (கடிணிணஞுஞுணூ இணிணூணீண்) அமைத்தார். 1818ஆம் ஆண்டு பிறவுன்றிக் என்ற ஆளுநர் கண்டிக் கிளர்ச்சியை அடக்குவதற்காகப் படை நகர்த்திய போது அதில் 5,000 தென்னிந்தியர் தொழிலாளர்களாக வேலை செய்தனர். 1821ஆம் ஆண்டு எட்வர்ட் பார்ன்ஸ் என்பவர் ஆளுநராக இருந்தபோது மேற்படி பயணியர் படைப் பிரிவை அரை இராணுவத் தன்மை கொண்டதாக மாற்றி பெருந்தொகையான இந்தியத் தொழிலாளர்களை வீதி, பாலங்கள் அமைப்பதற்கு பயன்படுத்தினார். அவர்கள் கொழும்பு கண்டி பாதை, கொழும்பு காலி பாதை, கொழும்பு திருகோணமலைப் பாதைகளை அமைத்தனர். இவர்கள் விக்டோரியாப் பாலம், களுத்துறை கட்டுகஸ்தோட்டைப் பாலங்கள் முதலானவற்றையும் அமைத்தனர். எனினும் மலையகப் பெருந்தோட்டங்களில் தொழில் செய்யவென முதன் முதலில் 1818ஆம் ஆண்டு தொழிலாளர்களைத் திரட்டியவர் பார்ன்ஸ் என்ற ஆளுநரும் ஜோர்ஜ் பர்ட்ஸ் என்ற கோப்பித் தோட்டச் சொந்தக் காரருமாவார்கள். இவர்கள் முதன் முதலில் 1800 இந்தியத் தொழிலாளர்களை அழைத்து வந்து கம்பளைக்கருகில் சின்னப்பிட்டிய என்னும் இடத்தில் கோப்பிச் செய்கையில் ஈடுபடுத்தினர்.

எனினும் முன்பு சீதாவாக்கை முதலாம் ராஜசிங்க மன்னன் காலத்திலேயே, அவன் இந்திய மலபார் பிரதேசத்தில் இருந்து நெசவுத் தொழிலில் ஈடுபட்டிருந்த “சாலிய’ குலத்தினர் பெருந் தொகையானோரை இலங்கைக்கு அழைத்து வந்து கருவாப்பட்டை உரிக்கும் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளான். இவர்களின் சந்ததியினர் களுத்துறை மாவட்டத்தில் “தெமழகம’ என்ற கிராமத்தில் இப்போதும் வாழ்வதாகத் தெரிகிறது.

இவ்விதம் ஆரம்பித்த இலங்கையில் இந்திய வம்சாவளித் தமிழரான மலையகத் தமிழரின் வரலாறு 200 ஆண்டுகளாக கருவாத் தோட்டம், கோப்பித் தோட்டம், கரும்புத் தோட்டம், தென்னந் தோட்டம், கொக்கோத் தோட்டம், சிங்கோனாத் தோட்டம், றப்பர்த் தோட்டம், தேயிலைத் தோட்டம் என்று தோட்டம் தோட்டமாக தொடர ஆரம்பித்தமை நாம் அறிந்த வரலாறாகும்.

சமூக வரலாற்றை அவ்விடத்தில் வைத்து விட்டு அரசியல் ரீதியிலான சிந்தனை வரலாற்றை சற்று நோக்குவது இன்றைய தலைப்புக்கு சற்று பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகின்றேன்.

அதன் அடிப்படையில் நமது அரசியல் வரலாற்றை ஆய்வுத் தேவை கருதி 2 கால கட்டங்களுக்குரியதாகப் பிரிக்கின்றேன். ஒன்று,

1. 1804 முதல் 1920 வரையிலான காலத்தின் வரலாறு, மற்றது
2. 1920 முதல் இன்று வரையிலான வரலாறு.

இங்கு இரு வேறான சிந்தனை மாற்றங்கள் நிகழ்ந்துள்ளதனை வரலாற்று நிகழ்வுகளை கூர்ந்து அவதானிப்போர் தெரிந்துக் கொள்ளக் கூடியதாகவுள்ளது.

1. 1804 முதல் 1920 வரையுள்ள காலப் பகுதியில் இந்திய வம்சாவழித் தமிழர்கள் இலங்கையின் “கண்டிச் சீமை’யிலே “மாசியும் தேங்காயும் விளைவதாகக் கருதி’ அவற்றையும் பொன்னையும் பொருளையும் சேர்த்துக் கொண்டு தம் நாட்டுக்குத் திரும்பி விட வேண்டும் என்ற சிந்தனையிலேயே செயற்பட்டுள்ளனர். மறுபுறத்தில் அவர்கள் பொன்னையும் பொருளையும் சேர்த்தனரா என்பதிலும் பார்க்க தமது சொந்த நாட்டில் நிலவிய வறட்சியும், பசியும், பட்டினியுமே அவர்களை இலங்கை நோக்கித் தள்ளின எனலாம். எனினும் அவர்கள் 1920 காலப்பகுதி வரையில் இலங்கையை தமது நிரந்தர இருப்பிடமாகக் கருதிச் செயற்படவில்லை. அதற்கு அவர்களை அப்போது கட்டிப்போட்டு வைத்திருந்த கங்காணி முறைமையும் கொத்தடிமை முறையும் மேலும் பல காரணிகளும் பங்களிப்புச் செய்தன.

2. ஆனால் இரண்டாவது காலப் பகுதியான 1920ஆம் ஆண்டுக்குப் பின்னரான இவர்களின் சிந்தனையில் மாற்றம் காணப்படுகின்றது. கோப்பியைப் போலன்றி தேயிலைச் செய்கைக்கு நிரந்தரமான தொழிலாளர் தேவைப்பட்டதால் இவர்கள் நிரந்தரமாக தங்க வேண்டுமென உற்சாகப்படுத்தப்பட்டனர். உள்நாட்டில் தேசிய எழுச்சியுடன் கூடிய தொழிலாளர் அமைப்புக்கள் தோன்றவாரம்பித்திருந்தன. ஆரம்பத்தில் கொழும்பை மையமாகக் கொண்டிருந்த இத்தகைய தொழிலாளர் வர்க்க இயக்க எழுச்சி பின்னர் கோ. நடேச ஐயர் போன்றோரின் முயற்சியால் மலைநாட்டுக்கும் விஸ்தரிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலங்கையில் பெருந்தொகையான இந்தியத் தொழிலாளர்கள் நிரந்தரமாகத் தங்கிவிட்டனர். அவர்கள் படிப்படியாக இந்தியத் தொடர்புகளை விட்டு விட்டதுடன் அடுத்த தலைமுறையினரையும் உருவாக்கி தாம் இலங்கைக்குரியவர்கள் என்ற சிந்தனையையும் படிப்படியாக வளர்த்துக் கொண்டனர்.

இச் சிந்தனையின் வரலாற்று ரீதியிலான பரிமாணத்தைப் பார்ப்பது மூலம் மலையகத் தேசிய இனத்தின் வளர்ச்சியையும் அதனை இல்லாமல் செய்ய எத்தனித்த பிற்போக்குவாத இனவாத எதிர்ச் சக்திகளின் செயற்பாட்டையும் புரிந்து கொள்ளலாம்.

இதே காலப்பகுதியில் இந்தியாவில் மகாத்மா காந்தியின் தலைமையில் ஏற்பட்ட பிரித்தானிய ஏகாதிபத்திய எதிர்ப்பு எழுச்சியுடன் இலங்கையிலும் அதே விதத்தில் தேசிய எழுச்சி ஒன்று ஏற்பட்டமை நாம் அறிந்ததே. அதே சமயத்தில் பலம் வாய்ந்த தொழிலாளர் இயக்கத்தின் எழுச்சி ஒன்றும் ஏற்பட்டது. எனினும், இந்த இரண்டு விதமான தேசிய எழுச்சியும், தொழிலாளர் இயக்க எழுச்சியும் முற்றிலும் பௌத்த, சிங்கள இனவாதத்தையும், இந்தியத் தொழிலாளருக்கு எதிரான போக்கையும் கொண்டிருந்தது. ஒரு புறம் இந்திய வம்சாவளியினர் இலங்கையில் தமது இருப்பைப் பலப்படுத்திக் கொள்வதற்காகவும் மறுபுறம் இனவாத சக்திகளுக்கெதிராகவும் போராட வேண்டியிருந்தது.

1920களில் இலங்கையில் இந்தியத் தமிழர்கள் காலடி எடுத்து வைத்து ஒரு நூற்றாண்டுக்கும் மேல் கழிந்துவிட்ட நேரத்தில் மற்றுமொரு புதிய பரம்பரையினர் உருவாகியிருந்தனர். இந்த நிலையில் தொடர்ந்தும் இந்தியத் தமிழர்கள் இரண்டுங் கெட்டான் நிலையில் இருந்து வருவதனை மகாத்மா காந்தி, ஜவகர்லால் நேரு போன்ற இந்தியத் தலைவர்களே கூட விரும்பவில்லை. இலங்கையில் வசிக்கும் இந்தியத் தமிழர்கள் தாம் வாழும் நாட்டுக்கு விசுவாசமுள்ளவர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர்கள் இலங்கையைத் தாயகமாகக் கொள்ள வேண்டுமெனவும் அவர்கள் வலியுறுத்தினார்கள். ஆதலினால் 1920 முதல் 1950 வரையுள்ள காலம் இலங்கையில் இந்தியத் தமிழர்கள் தமது உரிமைகளை நிலைநாட்ட முற்படும் காலமாகவே இருந்தது. அத்துடன் வளர்ந்து வரும் சனத் தொகையுடன் இலங்கைத் தமிழரிலிருந்து வேறுபட்ட, வித்தியாசமான குணவியல்புகளைக் கொண்ட ஒரு சமூகமாகவும் வளர்ந்து வந்தது. இலங்கைத் தமிழர்கள் இப் பிரிவினரை இணைந்த பிரிவினர் என்று இனங்காட்டிக் கொள்ளாமையும் அதற்கு ஒரு காரணியாக அமைந்தது.

1920களை அடுத்தும், 1930களிலும் ஏ.ஈ. குணசிங்கவை தலைமையாகக் கொண்டு எழுச்சி பெற்ற கொழும்பை மையமாகக் கொண்ட தொழிலாளர் இயக்கம் முதலாளித்துவத்துக்கெதிராக போராடுவதற்குப் பதிலாக மலையாளிகளுக்கெதிராகவும் இந்தியத் தமிழர்களுக்கெதிராகவுமே போராட்டங்கள் நிகழ்த்தியது. இந்தப் போராட்டத்தின் போது மலையாளி மக்களுக்கெதிராக வன்முறைகளும் இடம்பெற்றன. இதனால் ஆயிரக்கணக்கான மலையாளி மக்கள் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி விட்டனர். அநேகமான மலையாளிகள் சிங்களப் பெண்களை மணந்து கொண்டு சிங்கள இனத்துவ அடையாளத்தைப் பெற்றுக் கொண்டனர். ஆரம்பத்தில் கறுவாத் தோட்டங்களில் தொழிலாளர்களாக வேலை செய்ய வந்தவர்களும், ரெயில்வே தொழிலாளர்களாக வந்தவர்களும் சிங்கள இனத்துடன் கலந்து விட்டனர். கண்டி, கடுகண்ணாவைக்கருகில் பலன என்ற இடத்தில் காணப்படும் ரெயில்வே கொலனி முற்றிலும் இந்தியத் தமிழர்கள் வசித்த குடியேற்றமாகும். இவர்களில் அநேகம் பேர் சிங்களத்துவம் பெற்று விட்டனர்.

1930களின் இறுதியில் ஏற்பட்ட சில அரசியல் நிகழ்வுகள் மலையகத் தமிழ்த் தேசிய இனத்தின் வளர்ச்சியை வடிவமைப்பதில் பெரிதும் காரணமாகின. இக் காலமே இந்தியத் தமிழர்களுக்கெதிரான இனத்துவேசத்தின் உச்சக்கட்டமாக இருந்தது. கொழும்பில் வாழ்ந்த வர்த்தகர்கள், அரச உத்தியோகத்தர்கள், ரெயில்வேத் திணைக்கள ஊழியர்கள், துறைமுக ஊழியர்கள், ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத் துறையைச் சேர்ந்தவர்கள் அனைவருக்கெதிராகவும் இனத் துவேசம் கிளப்பி
விடப்பட்டது. அரசாங்கம் இந்தியர்களை வெளியேற்ற பல சட்டங்கள் தயாரிப்பதிலும் ஈடுபட்டது. சில சட்டங்கள் அரச சபையில் நிறைவேற்றப்பட்டன. 15 ஆயிரம் இந்தியரை இலங்கையிலிருந்து வெளியேற்றவும் முடிவெடுக்கப்பட்டது. இத்தகைய அபிவிருத்திகள் தொடர்பில் அப்போதைய இந்தியத் தலைவர் மகாத்மா காந்திக்கும் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இலங்கைப் பிரச்சினை தொடர்பில் ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கும் பொருட்டு விசேட தூதுவராக ஜவகர்லால் நேரு இலங்கைக்கு வந்தார்.

1939ஆம் ஆண்டு ஜூலை மாதம் இடம்பெற்ற நேருஜியின் இலங்கை விஜயம் இலங்கை இந்தியர் வரலாற்றில் மிக முக்கிய நிகழ்வு எனலாம். இலங்கை வாழ் இந்திய மக்கள் ஒரு குடையின் கீழ் ஸ்தாபன மயப்படுத்தப்பட இது காரணமாயிற்று. அப்போது கொழும்பில் இயங்கி வந்த பல்வேறு ஸ்தாபனங்கள் ஒரு குடையின் கீழ் இணைந்து மலையகத் தோட்டத் தொழிலாளர்களும் அதில் இணைக்கப்பட்டு இலங்கை இந்திய காங்கிரஸ் உருவாக்கப்பட்டது. எனினும், இத் தாபனத்தில் காணப்பட்ட இந்திய வர்த்தகர்களின் செல்வாக்கு காரணமாக தொடர்ந்தும் இலங்கை வாழ் இந்தியத் தமிழர்கள் இந்திய செல்வாக்கில் இருந்து விடுபடாமலேயே இருக்க வேண்டிய நிலையும் இதனால் தோற்றுவிக்கப்பட்டது. மறு புறத்தில் இலங்கையின் ஏனைய உள்நாட்டு அரசியல் அமைப்புகள், இலங்கைத் தமிழர்களின் அமைப்புகள் மற்றும் சிங்களவரின் அமைப்புகள் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் ஸ்தாபன ரீதியான அமைப்புகளைத் தோற்றுவிப்பதில் பின்னின்றன. கோ. நடேச ஐயரின் அகில இலங்கைத் தொழிலாளர் சம்மேளனம் மட்டுமே இவர்கள் மத்தியில் இயங்கிய ஒரே ஒரு பிரதான அமைப்பாகும். பிற்காலத்தில் இலங்கை இந்திய காங்கிரஸ் தொழிலாளர் சங்கம் ஒன்றும் தாபிக்கப்பட்டு தொழிலாளர் மத்தியில் இயங்கத் தொடங்கியது.

தொடர்ந்தும் இலங்கை சிங்களப் பேரினவாதக் கட்சிகள் இந்திய மலையகத் தமிழ் மக்களை ஒதுக்கி, அவர்களுக்கு கொச்சையான பல்வேறு நாம கரணங்கள் சூட்டி இந்தியாவுக்கு விரட்டி விடுவதிலேயே கண்ணும் கருத்துமாக இருந்தன. ஆதலால் அநேகமான சந்தர்ப்பங்களில் தமது பிரச்சினைகளுக்கு தாமே குரல் கொடுப்பவர்களாகவே மலையக மக்கள் இருந்தனர். நெருக்கடியான சந்தர்ப்பங்களில் அரசியலில் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் மீண்டும் மீண்டும் இந்தியாவையே நாடும்படி அநாதரவாக்கப்பட்டனர்.

1940 1950 காலப் பகுதியில் சோல்பரி ஆணைக்குழுவால் நிவாரணம் கிடைக்காத நிலையிலும் வாக்குரிமையையும் பிரஜாவுரிமையையும் இழந்த நிலையிலும் முற்றிலும் தொழிற்சங்க சக்தியிலேயே தங்கியிருக்க வேண்டியவர்களாயினர். 1945 அளவில் இலங்கை இந்திய காங்கிரஸில் 146,819 அங்கத்தவர்கள் அங்கம் வகித்தனர். தொடர்ந்தும் உரிமைகள் பறிக்கப்பட்ட நிலையிலும் மேலும் மேலும் பலமான ஸ்தாபனப்படுத்தல் இவர்கள் மத்தியில் நிகழ்ந்தது என்பது முக்கிய அம்சம். சேர். பொன்னம்பலம் அருணாசலம், சேர். பொன்னம்பலம் இராமநாதன் மற்றும் இடதுசாரித் தலைவர்கள் இவர்களுக்காக குரல் கொடுத்தாலும் அவர்களால் இம் மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதனைத் தடுக்க முடியவில்லை. டி.எஸ். சேனநாயக்கா, டட்லி சேனாநாயக்கா, ஜே.ஆர். ஜெயவர்த்தன முதலான தலைவர்கள் விடாப்பிடியாக இம் மக்களின் உரிமைகளை முற்றாகப் பறித்து விடும் நோக்கில் செயற்பட்டமையை வரலாறெங்கும் காணக் கூடியதாகவுள்ளது. அதன் காரணமாக பிரஜா உரிமை பறிக்கப்பட்டு 1947 முதல் 1977 வரையில் இலங்கைப் பாராளுமன்றத்தில் மலையகத் தமிழர்களால் ஒரு பிரதிநிதியையும் அனுப்ப முடியாமல் போய்விட்டது. 1964ஆம் ஆண்டு ஸ்ரீமா சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலம் இந்தியாவையே பார்த்தறிந்திராத சுமார் 1லீ நூற்றாண்டுகளாக இலங்கையையே தமது தாய்நாடாகக் கொண்டிருந்த 6 லட்சம் இந்தியத் தமிழரை இந்தியாவுக்கு அனுப்புவதென்ற ஜனநாயக விரோத தீர்மானமொன்றும் மேற்கொள்ளப்பட்டது. எனினும், இன்று சுமார் 15 லட்சம் சனத்தொகையைக் கொண்டு இம் மக்கள் ஒரு தனியான தேசிய இனமாக வளர்ச்சியடைந்துள்ளனர் என்பதனை மறுக்க முடியாது.

இவ்வாறு சுமார் 200 வருட கால இலங்கை இந்திய வரலாறு முற்றிலும் போராட்ட வரலாறாகவே உள்ளது. இவர்களது அரசியல், சமூக, பொருளாதார, கலை, கலாசார காரணிகள் இலங்கைத் தமிழர்கள் உட்பட ஏனைய சமூகங்களுடன் வித்தியாசமானதாகவே இருந்துள்ளன. இந்த 200 வருட கால வரலாற்றில் இந்த மக்கள் கூட்டத்தினர் மிகக் குறைந்த அளவிலேயே ஏனைய சமூகங்களுடன் கலந்துள்ளதுடன் மிகக் குறைந்த சதவீதத்தினர் மட்டுமே தாம் இந்தியத் தமிழர் என்ற தன்னடையாளத்தை இழந்துள்ளனர். இக் காலத்தில் இம் மக்கள் தம் இனத்தின் விசேட இனத்துவ அடையாளங்களைப் பேணிப் பாதுகாத்து இன்று ஒரு தனியான தேசிய இனம் என்ற அளவுக்கு தம்மைப் பலப்படுத்திக் கொண்டுள்ளனர்.

இந்திய அடையாளம் அல்லது இந்திய விஸ்தரிப்பு வாதத்தில் இருந்து
விடுபட வேண்டியதன் அவசியம்
இந்தியாவில் இருந்து இறுதியாக வந்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக இந்தியர்கள், அந்நியர்கள் என்று முத்திரை குத்தப்பட்டு சுமார் 200 வருடங்களாக இந் நாட்டின் தேசிய நீரோட்டத்தில் சேர விடாமல் தடுக்கப்பட்டிருந்த மலையகத் தமிழர்கள் 1977ஆம் ஆண்டுக்குப் பின்னர் தான் தேசிய அரசியல் தீர்மானங்களை மேற்கொள்ளுதலில் பங்கு கொள்ளத் தொடங்கினர். சுமார் 16 பிரதிநிதிகளை நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்து அனுப்பும் அளவுக்கு தமது உரிமைகளை மீண்டும் நிலைநிறுத்திக் கொண்டனர். இந் நிலையில் தொடர்ந்தும் இந்திய அடையாளங்களை தம்முடன் எடுத்துச் செல்வதானது பாரந்தூக்கிக் கொண்டு ஓடுவதற்குச் சமமானதாகவே இருக்கும். வரலாற்றுக் காலம் முழுவதும் இந் நாட்டு பேரினவாதிகள் நம் மீது “இந்தியர்கள்’ வந்தேறு குடிகள் என்று முத்திரை குத்தியதற்குக் காரணம் நாம் இந் நாட்டுக்குரியவர்கள் அல்ல, நாம் நாட்டின் நலன் மீது அக்கறை கொண்டவர்கள் அல்ல, நாட்டைச் சுரண்டுபவர்கள் என்று காட்டத்தான்.

இச் சந்தர்ப்பத்தில் நான், பிரஜாவுரிமை சட்டத்திற்கெதிராக கடுமையான விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது 1948 1949ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இலங்கை இந்திய காங்கிரஸ் அறிக்கையில் இருந்து மேற்கோள் ஒன்றைக் காட்ட விரும்புகிறேன். அதில் 13ஆம் பக்கத்தில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

தலைப்பு நமது முத்திரை :
“நாம் இலங்கை மக்களுடன் கலந்து வாழாமல் ஒதுங்கி வாழ்வதாகச் சில இலங்கை அரசியல் தலைவர்களும் பத்திரிகைகளும் அடிக்கடி புகார் செய்கின்றன. நாட்டு மக்களுடன் தோட்டத் தொழிலாளர் கலந்து பழக முடியாதபடி துருப்பிடித்த பழங்கால தொழிலாளர் சட்டங்கள் நிர்ப்பந்திப்பதோடு துவேஷ மனோபாவம் கொண்ட முந்திய மந்திரி சபையின் போக்கும் தற்போதைய சர்க்காரின் போக்கும் கூட இதற்குக் காரணமாகும். அவர்களுடைய போக்கினாலேயே காங்கிரஸ் ஸ்தாபனம் வகுப்புவாத முத்திரையைத் தாங்கி நிற்க நேரிட்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான இந்தியத் தோட்டத் தொழிலாளர்களுக்கு பிரஜா உரிமையைப் பெற்றுக் கொடுக்கும் வரை நாம் இந்த முத்திரையைத் தாங்கி இருந்தே தீர வேண்டும். உரிமைகளைப் பெறும் போராட்டத்தில் மற்ற வகுப்புத் தொழிலாளருடன் தோளோடு தோள் சேர்ந்து ஒத்துழைக்க வேண்டிய அவசியத்தையும் நாம் உணர்ந்திருக்கிறோம். இலங்கைத் தொழிலாளர், இந்தியத் தொழிலாளர் ஆகிய இருவருடைய உரித்துகளும் ஒரே மாதிரியானவை தான். நல்ல வேளையாக நமக்கும் இலங்கைத் தொழிலாளருக்கும் அவர்களது தலைவர்களுக்குமிடையில் சௌஜன்யமான உறவு இருந்து வருகிறது. இந்த உறவையும் ஒத்துழைப்பையும் கொண்டு நாம் இந் நாட்டு மக்களுடன் ஒன்றி வாழவில்லையென்ற கூற்றை அடுத்த ஆண்டில் பொய்ப்பித்துக் காட்டுவோம்.”

இதே விதத்தில் 1949 1950ஆம் ஆண்டுக்கான இலங்கை இந்திய காங்கிரஸ் அறிக்கையில் பின்வருமாறு காணப்படுகின்றது.

அதன் தலைப்பு செலாவணிக் கட்டுப்பாட்டுச் சட்டங்கள் :
“மற்ற நாடுகளில் செலாவணியை சேமித்து மிச்சப்படுத்துவதற்காக அனுஷ்டிக்கப்படும் செலாவணிக் கட்டுப்பாடு இலங்கை அரசாங்கத்தினால் இந்தியர்களின் வாழ்க்கையைக் கஷ்டத்துக்கு உட்படுத்தி அவர்களை இலங்கையை விட்டு “விரட்டியடிக்கும்’ ஓர் அரசியல் ஆயுதமாக உபயோகிக்கப்படுகிறது.

இலங்கையிலிருக்கும் ஐரோப்பியர்களுக்கும் இந்தியர்களுக்குமிடையில் செலாவணிக் கட்டுப்பாட்டிலாக்கா வேற்றுமை காட்டி வேற்றுமையை ஊர்ஜிதப்படுத்தியும் வருகின்றது. பிரிட்டனுக்கு ரூபா 80 கோடி அனுப்பப்படுகின்றதென்றும் இந்தியாவுக்கு 75கோடி அனுப்பப்படுகின்றதென்றும் மந்திரியே ஒப்புக் கொண்டிருக்கிறார். வருடந்தோறும் பிரிட்டனுக்கு ரூபா 8 கோடி அனுப்பப்படுவதைப் பற்றி மந்திரி சிறிதும் கவலைப்படவில்லை. இந்தத் தொகை இலங்கையரல்லாதவர்களின் உற்பத்தித் துறைகளிலே முடக்கப்பட்டிருக்கும் மூலதனத்தின் லாபம், வட்டி, பங்குப் பணம் என்று மந்திரி கூறுகிறார். ஆனால், இந்தியாவுக்கு அனுப்பப்படும் பணத்தில் பெரும் பகுதி இங்கு இறக்குமதி செய்யப்பட்ட தொழிலாளர்களுக்காகவே தவிர இங்கு இறக்குமதி செய்யப்பட்ட மூலதனத்துக்காகவல்லவென்று அவர் சொல்கிறார். இந்த அரசாங்கம் முதலாளிகளைப் பாதுகாப்பதில்தான் சிரத்தை கொண்டிருக்கிறதே தவிர தொழிலாளர்களிடம் அதற்குச் சிறிதும் அக்கறையில்லையென்பதற்கு இந்த வெளிப்படையான துவேஷப் போக்கு தெளிவான ருசுவாகும். ஒரு மாநாட்டில் ஸ்ரீ.ஜே.ஆர். ஜெயவர்த்தன விடுத்த அறிக்கை இங்கு குடியேறியுள்ள இந்தியர்களை இலங்கைத் தீவை விட்டு வெளியேற்றும் ஓர் உபாயம்தான் செலாவணிக் கட்டுப்பாடு என்ற நமது அச்சத்தை ஊர்ஜிதப்படுத்தவே செய்கிறது”

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்து அரை நூற்றாண்டு கடந்துவிட்ட பின்னரும் இதே குற்றச்சாட்டுகளும் போக்குகளும் இன்றும் உள்ளன. ஆதலால் நாம் நம்மை இந்த நாட்டுக்குரியவர்களாக ஆக்கிக் கொள்ள வேண்டியதன் அவசியம் எதிர்கால நமது சமூக வளர்ச்சிக்கு மிக அவசியமானதாகும்.

மலையகத் தமிழ் மக்கள் என்ற எண்ணக்கரு
1960களைத் தொடர்ந்து மலையகத்தின் புத்திஜீவிகள், கல்விமான்கள், எழுத்தாளர்கள் மத்தியில் இத்தகைய விழிப்புணர்வுகள் தோன்றியுள்ளன. இந்திய வம்சாவளித் தமிழர்களை மலையகத் தமிழர்கள் என்று அழைத்துக் கொள்ளும் போக்கு கொள்கையாக உருவாகா விட்டாலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. மறைந்த மலையகப் புத்திஜீவிகளில் குறிப்பிடத்தக்கவர்களான இர. சிவலிங்கம், திருச்செந்தூரன் போன்றவர்கள் மலையகம், மலையக மக்கள் என்ற சொற்பதங்களை வலிந்து பயன்படுத்தியுள்ளனர். எனினும், 1970களின் பின்னரான அரசியல் நிலைவரம் இலங்கைத் தேசிய இனப் பிரச்சினையாலும் இனவாத அரசியலாலும் மேலும் சிக்கலுக்குட்பட்டதால் எதிலும் குழப்ப நிலை நீடிக்கத் தொடங்கியது. 1978, 1980, 1983 ஆண்டுகளில் நிகழ்ந்த இன வன்முறைச் சம்பவங்கள் சகலரதும் கொள்கைகளை மீண்டும் ஒருமுறை மீளப் பரிசீலனை செய்ய வைத்தன. இந்த நாட்டில் மலையக மக்கள் தொடர்ந்தும் வாழ்க்கை நடத்த முடியுமா? என்ற நிலைக்குப் பலரும் தள்ளப்பட்டனர். “”இந்த நாடு உனக்குரியதல்ல” என்று சிங்களப் பேரினவாதிகள் தலையில் ஓங்கி அடித்துக் கூறினார்கள். இவை அனைத்தையும் கடந்த நிலையில் மீண்டும் நாம் மற்றுமொரு சந்தியில் வந்து நிற்கின்றோம். இப்போது இங்கிருந்து எந்தத் திசை நோக்கிச் செல்வது என்பதுதான் கேள்வி? இந்தக் கேள்விக்கு மிகச் சரியான பதில் ஒன்றை நாம் தேடிக் கண்டுபிடிக்கா விட்டால் மீண்டும் ஆற்றுடன் அடித்துச் செல்லப்படும் மரக் கட்டைகள் போலவே திசை தெரியாமல் செல்ல வேண்டியிருக்கும்.

இன்று இங்கு முன்வைக்கப்படும் கருத்துக்கள் முக்கியத்துவம் வாய்ந்தனவாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நாட்டின் ஏனைய சமூகங்களின் பிரச்சினைகளிலிருந்து நமது பிரச்சினைகள் முற்றிலும் வேறுபட்ட பிரச்சினைகளாகவே இருக்கின்றன. இன்னமும் நாம் மிக அடிப்படையான அரசியல், சமூக, பொருளாதார பிரச்சினைகளிலிருந்து விடுபடவில்லை. கல்வியில் நாம் பின்தங்கியிருப்பதானது பல விதங்களிலும் நம்மைப் பின்தள்ளுவதாகவே அமைகின்றது. ஆதலால் எதிர்காலத்தை நோக்கி நாம் காலடி எடுத்து வைக்கும் போது நமது கொள்கைகளில் மிகத் தெளிவானவர்களாக இருக்க வேண்டுமென்பது அவசியமாகின்றது. நாம் இந்த நாட்டின் சமூகப் பிரிவுகளில் ஒன்றாக உருவாகியுள்ளதுடன் தேசிய வளங்கள், தேசிய ஆட்சி நிர்வாகம், திட்டமிடல் வாயிலாகப் பகிரப்படும் போது அவை எந்த அளவுக்கு நம் மக்களையும் வந்தடைகின்றன என்பதனை உறுதி செய்து கொள்ள வேண்டியவர்களாக நாம் உள்ளோம். அப்படி அவை நம்மை வந்தடையாது புறக்கணிக்கப்படும் போது அரசுக்கு அழுத்தம் கொடுத்து அவற்றை நாம் பெற்றுக் கொள்ள வேண்டும். இத்தகைய இலக்கொன்றை நாம் அடைய மலையக மக்களும் ஒரு தேசிய இனமாக இந் நாட்டில் அங்கீகரிக்கப்பட்டிருத்தல் வேண்டும். புதிய அரசியலமைப்பு ஒன்று உருவாக்கப்பட்டால் அதில் இது தொடர்பான ஏற்பாடுகள் இடம்பெறுவதற்கு நாம் இன்றிலிருந்தே செயற்பட வேண்டும்.

மற்றுமொரு விடயமும் இங்கு குறிப்பிடப்பட வேண்டும். இந்த நாட்டின் இந்திய வர்த்தகப் பிரமுகர்கள் ஆரம்பத்திலிருந்தே இந்த நாட்டு மலையகத் தோட்டத் தொழிலாளர்களுடன் இணைந்து செயற்பட மறுத்து வருகின்றனர். அவர்கள் மலையக தொழிலாள மக்களின் ஆட்பலத்திலேயே பெரிதும் தங்கியிருக்கின்றனர் என்பதை ஏற்க மறுக்கின்றனர். அதே சமயம் இவ் வர்த்தக சமூகத்தின் நிதிப் பலமும் மலையகத் தொழிலாள மக்களின் ஆட் பலமும் சேர்ந்தால் பல காரியங்களை இலகுவாக சாதிக்க முடியுமென்றும் சுட்டிக் காட்ட விரும்புகின்றேன்.

Referances:
1). Kuruppu NSG, A history of working class movement in Ceylon – Ceylon Historical Journal Vol. 1-P.P. 130

2). Ibid – Page 134

3). Moldrich, Donovan – Bitter Berry Bondage

4). Kumari Jayawardena. V-Ethnic and class conflicts in Sri Lanka

5). S.D. Sivanayagam, Thalaivar thondaman P.P. 142, 143

6). Ceylon Indian Congress Report 1945

7). Ibid – 1948 – 1949

8). Ibid – 1949 – 1950

நன்றி - சடகோபன்

தோழர் இளஞ்செழியன் - லெனின் மதிவானம்-


“எனது வாழ்நாள் முழுவதும், தந்தை நாட்டிற்காகவும் புரட்சிக்காகவும் உள்ளத்தாலும் உடலாலும் சேவை செய்துள்ளேன். இந்த உலகத்திலிருந்து நான் மறையும் போது, இன்னும் நீண்ட நாள் இருந்து மேலும் அதிக சேவை செய்ய முடியாமல் போய் விட்டதே என்பதற்hககவே அல்லாமல் வேறு எதற்காகவும் வருந்த மாட்டேன். நான் இறந்த பின், எனது இறுதி சடங்குகளைப் பெரியளவில் செய்வது தவிர்க்கப்பட வேண்டும். முக்களின் நேரமும் பொருளும் விரையமாக்கப்படாமல் இருப்பதற்காகவே இதைக் கூறுகின்றேன். “
என ஹோ சி மின் தம் உயில் எழுதி வைத்துவிட்டு சென்றுள்ளார். தோழர் இளஞ்செழியன் பற்றி எழுத நினைக்கின்ற போது மேற்குறித்த நினைவுகள் நெஞ்ஞை நெருடுகின்றது. அவர் வாழ்ந்த காலம், காலத்தின் சூழ்நிலை, அச்சூழ்நிலையில் அவர் இயங்கியமுறை எளிமையான வாழ்க்கை, மக்களை நேசிக்கின்ற பண்பு என்பன ஹோ சி மின்னுடைய வாழ்வின் சில பகுதிகளோடு பொருத்திப் பார்க்க கூடியதாக உள்ளது. எவர்ரொருவருடைய வாழ்வும் பணிகளும் மனித வாழ்வின்  சிறந்த இலக்கணமாக திகழ்கின்றதோ அத்தகையோரின் வாழ்வு சமூக முக்கியத்துவம் உடையவையாகின்றது. இளம்செழியன் இத்தகையோரில் ஒருவராவார். அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தன்வாழ் நாள் ப+ராவும் ஓய்வு ஒழிச்சல் இன்றி உழைத்தவர்.  
மலையக சமூகம் காலணித்துவவாதிகளாலும், இனவாதிகளாலும் மிக கொடுரமாக நசுக்கப்பட்டது.  இளஞ்செழியன் தன்னளவில் ஒரு ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பிரதநிதி என்ற வகையிலும் தன்னுடைய தொடர்ச்சியான தேடல் வேட்கையும் இத்தோழரில் ஆழமாக மனிதநேயமாக மாறுவதையும்  அந்த மனிதநேயம் அரசியல் பண்பாட்டுத்துறையில் அவரை செயலூக்கத்துடன் செயற்படத் தூண்டுவதையும் அவருடைய வாழ்க்கை வரலாறு எமக்கு உணர்த்தி நிற்கின்றது.
 இளஞ்செழியன் பற்றிய ஆய்வுகளும் மதிப்பீடுகளும் அவ்வப்போது வெளிவந்துக் கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவ்வகையில் திரு. பெ. முத்துலிங்கம் எழுதிய ’எழுதப்படாத வரலாறு” (இரண்டாவது பதிப்பு இலங்கை தி..மு.க. வரலாறு எனத்லைப்பிடப்பட்டு :நாளந்தா பதிப்பகம்- சென்னை,) என்ற இவர் பொறுத்து வெளிவந்த நூலாகும். இந்நூலையொட்டி இளஞ்செழியனை பல்துறைநோக்கில் ஆணுகி ஆராயும் மதிப்பீடுகளும் விமர்சனங்களும் வெளிவந்திருப்பதாக தெரியவில்லை.  கொழுந்து இதழில்களில் இவர் பற்றிய பல செய்திகள் வெளியாகியிருக்கின்றன. அவ்வாறே திரு. அந்தனி ஜீவா சூரியகாந்திப பத்திரிகையில் இஞஞ்செழியன் பற்றி எழுதிய நினைவுக் குறிப்புகளும் பல செய்திகளை கூறுவதாக அமைந்திருந்தன.  ஆந்தவகையில் இளஞ்செழியன் பற்றி உருப்படியான விமர்சனங்கள் ஏதும் வந்ததாக தெரியவில்லை. மறுப்புறத்தில் அவர் இயங்கி காலத்தில் தோழர்களுக்கு எழுதிய கடிதங்கள், வெளியிட்ட அறிக்கைகள், நூல்கள் யாவும் தொகுக்கப்பட்டதாக தெரியவில்லை. இந்நிலையில் கிடைக்கப்பெற்ற சில ஆதாரங்களை கொண்டே அவர் பற்றி எழுத வேண்டியுள்ளது. அதேசமயத்தில் அவை அனைத்தும் கிடைத்தால் தான் தொகுக்கப்பட வேண்டும் என்ற முயற்சியில் ஒரே கருத்தை திரும்ப திரும்ப கூறிக்கொண்டு இருப்பதோ அல்லது இது பற்றிய மதிப்பீடுகளை புறக்கணிப்பதோ அபத்தமான செயலாகும்.
இளம்செழியன் தமது ஆரம்பகால செயற்பாடுகளை கொழும்பில் வாழ்ந்த  தொழிலாளர்களிடையே: முன்னெடுத்தவர்.  வர்க்க ரீதியாகவும் சாதிய ரீதியாகவும்  தாழ்த்தப்பட்டிருந்த கடைசிப்பந்திகள், வீட்டு லேலையாட்கள், நகர சுத்தி தொழிலாளர்கள், சலவை, சிகையளங்கார தொழில்களில் ஈடுப்பட்டிருந்தவர்கள் இன்னும் இது போன்ற இதர வர்க்கத்தினர் மத்தியில் தான் அவரது இயங்து தளம் வேர் கொள்கின்றது. இந்தப் பின்புலத்தில் அத்தகையோரின்  சுயமரியாதையை காத்துக் கொள்வதற்காக தோற்றம் கொண்ட ஸ்தாபனமே இலங்கை சுயமரியதை இயக்கம்(இ.சு.ம-1932). இவ்வியக்கம் தழிழகத்தில் பெரியாரின் செல்வாக்கிற்கு உட்பட்டிருந்தது. “ஈழத்தில் தலைநகரான கொழும்பு கொள்ளுபிட்டியில் 1932 ஆம் ஆண்டு இலங்கை சுயமரியாதை இயக்கம் என்ற ஒரு இயக்கத்தை தோழர்களான நா. பழனியப்பன், எஸ்.கே. மாயகிருஸ்ணன், எஸ்.டி. சுப்பையா, எம். ஏ ஹமீது, சிங்காரம் ஆகியோரின் முயச்சியால் தொடங்கப்பட்டது. இதே ஆண்டு ஈ. வெ.ரா பிரச்சார கழகமொன்று தொடங்கப்பட்டது. இக்கழகத்திற்கு தலைவராக ந. முத்துப்பரியர், செயலாளராக வீரையா, பொருளாளராக நெ.க. காளிமுத்து, ஆகியோர் பொறுப்பேற்றிருந்தனர். இக்கழகத்தில் தோழர்கள், ஆறுமுகம், டி. எஸ் சுப்பையா, கு.யா. திராவிடகழல்,  காத்தமுத்து இளம்செழியன், சிங்காரம், டீ. எம் குரே, ஏ. டி. சுப்பையா ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக இருந்தனர்( இளஞ்செழிpயன். அ. 2000, ஈழத்தில் பெரியார் முதல் அண்ணா வரை, நாவலர இளஞ்செழியன் அரசியல் பொன் விழாக் குழு, கண்டி, ப.2).
இவ்வகையில் தோற்றம் கொண்ட இவ்வியக்கத்தின் கூட்டங்கள் பெரும் பாலும்;இரவு பத்து மணியளவில் தான் ஆரம்பிக்கும் என இளஞ்செழியன் தமது நூலில் பதிவு செய்திருக்கின்றார். காரணம் அந்த தொழிலாளர்களுக்கான  ஓய்வு நேரம் என்பது அதுவாகவே இருந்தது. இவ்வியக்கத்தில் பங்கு பற்றிய பல தோழர்கள் மிகுந்த உணர்வுடனும் அர்பணிப்புடனும் செயற்பட்டமையினாலேயே  குறித்த காலம் வரை நின்று நிலைக்க கூடியதாக இருந்தது.  மூடநம்பிக்கிகைகளுக்கும் மத நம்பிகைகளுக்கும் எதிராக தீவிர கருத்து பிரச்சாரத்தை முன்னெடுத்தனர்.   சாதியமைப்பை தீவிரமாக சாடிய இவ்வியக்கம் உழைக்கும் மக்கள் மீதான சுரண்டலுக்கு எதிராகவும்  செயற்பட்டது.
1932ஆம் ஆண்டு ரஷ்ய பயணத்தை மேற்கொண்டிருந்த பெரியார் அதனை முடித்துக் கொண்டு வரும் வழியில்  இலங்கைக்கும் வருகை தந்தார். அவர் இவ்வியக்கத்தின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு நீண்ட உரையாற்றியுள்ளமை இவ்வியக்கத்தினருக்கு ஆதர்சனமாக அமைந்திருக்கின்றது. இதன் தாக்கத்தால் இவர்கள் இந்தி மேலாதிக்கத்திற்கு எதிராகவும் குரல் கொடுத்தனர். இவ்வகையில் ஒரு ஓடுக்குமுறைக்குட்பட்ட சமூகம் பிறிதோரு சமூகம் ஒடுக்கப்கபடுகின்ற போது அது பற்றிய கரிசனைக் கொள்வது தார்மீகமாகும். இ.சு.ம த்தில் அங்கம் வகித்தவர்கள் பெரும்பாலோனோர் சாதிய ரீதியாகவும் மொழி ரீதியாகவும் ஒடுக்கப்பட்டவர்கள் என்ற உணர்வும் கோபாவேசமும் இந்தி மொழி திணிப்பிற்கும் அதன் பின்னணியில் இருந்த பிராமண ஆதிக்கத்திற்கும் எதிராக குரல் கொடுத்தனர். 
இவ்விடத்தில் பிறிதொரு விடயம் பற்றியும் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது. பெரியார் தனது 68ஆவது வயதில் 26 வயது நிரம்பிய மணியம்மையை திருமணம் செய்து கொண்டமை இயக்க தோழர்களிடையே பல அதிருப்திகளை எற்படுத்தியிருந்தது. அதன்வெளிப்பாடாகவே திரு அண்ணாத்துரை பிரிந்து சென்று திராவிட முன்னேற்றக் கழகம் என்ற மாற்று அமைப்பை நிறுவிக் கொண்டார் எனக் பொதுவாக கூறப்படுகின்றது. இருப்பினும் பெரியார் பண்பாட்டுத் தளத்தில் இயங்க அண்ணாத்துரை அரசியல் தளத்தில் இயங்க முனைந்தமைமே இதற்கான பின்னணியாக அமைந்திருந்தது. பார்பன ஆதிக்கத்தை அரசு அதிகாரத்தை கைப்பற்றி தகர்த்த முனையலாம் என்பதை விட தாம் ஒரு அழுத்த சக்தியாக நின்று கொண்டு அரசை நிர்பந்திப்பதன் மூலமே பார்பன ஆதிக்கத்தை தகர்த்தலாம் என்ற அடிப்படையில் பண்பாட்டுத்தளத்தில் செயற்பட்டவர் பெரியார். அண்ணாத்துரை அரசியலதிகாரத்தை கைப்பற்றி சீர்த்திருத்த நடவடிக்கைள் மூலமாக மாற்றத்தை கொண்டு வரலாம் என நம்பி செயற்பட்டார். இதுவே பெரியார் அண்ணாத்துரை முரண்பாட்டிற்கான பிரதான காரணமாக அமைந்திருந்து எனலாம்.  இது பற்றிய ஆழமான ஆய்வுகள் வெளிவர வேண்டியது அவசியமானதாகும். இது அதற்கு ஏற்ற இடமல்ல.  இதன் தாக்கத்தை நாம் இலங்கையிலும் காணக் கூடியதாக உள்ளது. அதன் பின்னணியில் உருவானதே இலங்கை திராவிட முன்னேற்றக் கழகமாகும். புதிய பெயர் மாற்றம் பெற்ற இக்கழகத்தின் அ.ம. அந்தோனிமுத்து பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார். பின் 1949 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் தோழர் இளஞ்செழியன் அதன் பொதுச் செயலாளராக தெரிவு செய்யப்பட்டார்.
இத்தகைய பின்னணியில் தமது சமூக அரசியல் செயற்பாடுகளுக்கு விய+கம் அமைத்துக் கொண்ட இளஞ்செழியன் அவர்களுடைய பார்வை மலையகத்தை நோக்கி நகர்கின்றது. சுயமரியாதை திருமணம் ஒன்றிற்காகவே அவர் மலையகத்திற்கு (கடுகண்ணாவில் உள்ள கிரிமெட்டியா தோட்டத்திற்கு) வருகின்றார். பொரும்பாண்மையாக உழைக்கு மக்களை தளமாக கொண்டிருக்கின்ற மலையக சமூகம் சார் வாழ்நிலை இ.தி.ம.க. த்தினதும் தோழர் இளஞ்செழியனதும் சமூக செயற்பாடுகளுக்கான பரந்து விரிந்த தளமாக விளங்குகின்றது. இக்காலச் சூழலில்  இ.தி.ம.க. த்தின் நோக்குகளும் போக்குகளும் இலங்கையை(குறிப்பாக மலையகம்) தழுவியதாக மாறியது. இளஞ்செழியன் வெளியிட்ட துண்டுப் பிரசுரத்தில் இவ்வம்சம் தெளிவாகவே சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.
“இலங்கை திராவிட முன்னேற்றக் கழகம்;, இலங்கை மக்களுடையது என்பதே அதன் லட்சியமும் வாழ்வும் ஆகும என்பதை புரிந்துக் கொண்டு ஒரே இன மக்கள் என்ற திராரவிட இனத்தவர்களுக்கான தன்னால் ஆன மட்டும் ஒத்துழைப்பு கொடுப்பவர்களாக இருக்க வேண்டுமே தவிர, பாரத நாட்டு காந்தியார், நேருஜி போன்ற தலைவர்களின் பெயர்களை கூறி நாம் இந்தியர்கள் நமது தலைவர்கள் காந்தி நேரு என காங்கிரஸ் பக்கம் மலைநாட்டு மக்களை இழுத்து மக்கள் மீது இந்நாட்டுப் பற்றும், இந்நாட்டு நம்பிக்கையை கொள்ளாத வண்ணம் பல லட்சம் மக்களது வாழ்விலே மண்ணைத் தூவி அவர்களை நாடற்றவர், நாதியற்றவர், என்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளனர். முலைநாட்டு மக்களே! அஞ்ஞாதீர்! அஞ்ஞாதீர்! உங்களது பிரஜா உரிமை இதோ பாரோர் புகழும் பாரதப் பிரதமர் நேருவிடமிருந்து வருகிறது தபாலில் என்ற நம்பிக்கையை ஊட்டி... இன்னுமொரு பிரிவினர் சென்னையை காட்டி அங்கிருந்துதான் உங்கள் விடுதலை நிச்சயமாக வரும் என்ற ஆகாத ஊட்டி “…வருகின்றனர் என இ.தி.மு.க சார்பில் தோழர் இளஞ்செழியன் வெயிட்ட அறிக்கையில் குறிப்பிருகின்றார்.  (மேற்கோள், முத்துலிங்கம். பெ. மே.கு.நூ. ப.40)
இளஞ்செழியன் தாம் சார்ந்த ஸ்தாபனங்களை உருவாக்குகின்ற போது அவை உழைக்கும் மக்களையே  ஆன்மாவாக கொண்டிருந்தார். அவர் தமது பண்பாட்டு செயற்பாடுகளை தோட்டத் தொழிலாளர்களிடையே  முன்னெடுத்து செல்கின்ற போது பல தொழிற்சங்க அரசியல் அமைப்புகளை சார்ந்தவர்களை அவ்வமைப்புகளில் அங்கம் வகித்தனர்.  ஒரு பொது பணிக்காக அவர்களை வெகுசனமாக திரட்டியிருந்தார். எடுத்துக்காட்டாக தோழர் இளஞ்செழியனாலும் அவரது தோழர்களாலும்  உருவாக்கப்பட்ட இ.தி.மு.க, இளம் சோஷலிச முன்னணி(இ.சோ.மு.) ஆகிய அமைப்புகளின் கோட்டையாக ஹட்டன் பகுதியை சார்ந்த காசல்றி தோட்டம் விளங்கியது. அத்தோட்டத்தில் வாழ்ந்த பெரும்பாலான தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளர் காங்கிரஸினதும், தொழிலாளர் தேசிய சங்கத்தினதும் அங்கத்தவர்களாக இருந்தனர்;. தோழர் இளஞ்செழியனின் கூட்டங்களை கூட்டங்களை ஒழுங்கமைத்த கோ. ஆறுமுகம் தொழிலாளர் தேசிய சங்கத்தில் முக்கிய பதவியை வகித்தவராவார். அதே போன்று திரு. வே. மணிபாலன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸை சேர்ந்தவராவர். ஆத் தோட்டத்திலும் அதனை அண்டிய தோட்டங்களிலும் வாழ்ந்த மக்களில் 75 வீதத்திற்கு மேற்பட்டவர்கள் இளஞ்செழியனின் கூட்டங்களிலும் வகுப்புகளிலும் பங்குப்பட்டியுள்ளனர். தொழிற்சங்கங்களுக்கு அப்பால் ஒரு பண்பாட்டுத்தளத்தில் பொது மக்களை அணித்திரட்ட முடியும் என்பதை மலையகத்திலே சாத்தியமாக்கியவர் தோழர் இளஞ்செழியன். இவ்வாறு அணித்திரட்டிய மக்களிடையே தி.மு.கா, மார்க்ஸிய கருத்துக்களை முன்னெடுத்து சென்றார். இருப்பினும் பெரியாரின் கருத்துக்களே இவரில் முனைப்புற்றிருந்தது. மக்களிடையே பகுத்தறிவு சார்ந்த கருத்துக்களை அம்மக்களின் உழைப்பு   சுரண்டலோடும் அதற்கு துணைப்போகின்ற பிற்போக்கு தொழிற்சங்கள் குறித்தும் தீவீரமான கருத்துப் பிரச்சாரத்தை முன்னெடுத்துச் சென்றார்.  இத்தகைய பிரச்சாரங்களின் மூலமாக தோட்டத் தொழிலாளர்கிடையே விழிப்புணர்வு ஏற்பட்டதுடன் அவர்கள் தாம் அங்கம் வகித்த தொழிற்சங்க அமைப்புகளிலும் கேள்விகளை எழுப்பினர். இளஞ்செழியனைக் கடந்தும் திராவிட கருத்துக்கள் மலையகத்திலே பரவியிருந்தன என்பதும் உண்மை. தமிழ் நாட்டு பத்திரிகைகள் மற்றும் திரைப்படங்களின் தாக்கத்தினால் அத்தகைய கருத்துக்கள் பரவியிருந்தன. ஆனால் அவை இளஞ்செழியனால் முன்னெடுக்கப்பட்டது போனறு மலையக சமூகம் சார் சிந்தனையாக அவை அமைந்திருக்கவில்லை. அவை வாழ்க்கைக்கும் நடைமுறைக்கும் பொருத்தமற்றதாக காணப்பட்டது. 
இந்த பின்புலத்தில் மலையக மக்கள் இம்மண்ணுக்குரியவர் என்ற என்ற சிந்தனைப் போக்கு இளஞ்செழியனில் முனைப்புருகின்றது. மலையக மக்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு அவர்களை அரசியல் அநாதை ஆக்கியதற்கு  எதிராக தீவீர குரல் கொடுத்தவர் இளஞ்செழியன். அவர் ஆரம்ப கால முதலாகவே தமிழ் மக்களின் மொழியுரிமை, மலையக மக்களின் வாக்குரிமை தொடர்பில் எதிர்ப்பு ஆர்பாட்டங்களிலும், எழுச்சி கூட்டங்களை நாடாத்துவதிலும் கவனமெடுத்திருந்hர்.  1963 ஆம் ஆண்டு பண்டாரவளையில் ஆயிரக் கணக்கான தொழிலாளர்களை ஒன்றுத்திரட்டி நாடற்றவர் மறுப்பு மாநாட்டை கூட்டியமை இதற்கு தக்க எடுத்துக்காட்டாகும். கூட்டம் நடைப்பெற்றுக் கொண்டிருக்கையில் காடையர் கூட்டத்தால் இவர்கள் தாக்கப்பட்டும் உள்ளனர். இவ்வாறான சந்தர்ப்பத்தில் இவருடன் உறவுக் கொண்டிருந்த இடதுசாரி சிங்களத் தோழர்கள் இவர்களை காப்பாற்றியதுடன் அதரவும் அளித்துள்ளனர் என்பதும் கவனத்தில் கொள்ளத்தக்கது.  மலையக மக்களிடையே வீரியமிக்க உணர்வை ஏற்படுத்துவதில் இம் மாநாடு பெரும் தாக்கம் செலுத்தியிருக்கின்றது. 
அவ்வாறே இளஞ்செழியனின் முக்கியமான பங்களிப்புகளில் ஒன்று மக்கள் விடுதலை முன்னணியிரின் இந்தியவிஸ்தரிப்பு வாதம் தொடர்பான நிலைப்பாட்டை அம்பலப்படுத்தியதுடன் அது குறித்து தெளிவை அவர்களுக்கு ஏற்படுத்த முனைந்தமையாகும். 
இலங்கையில் மூலவளத்தை கொள்ளையடித்து அதனை இந்தியாவிலே கொண்டு சேர்த்து நம்நாட்டில்; வாழ்கின்ற இந்திய முதலாளிகளுக்கு எதிரான இனவாத பார்வை மலையக மக்களுக்கு எதிராகவே திருப்பட்ட்டிருந்தன. இலங்கை வாழ் இந்திய முதலாளிகள் பேரினவாதிகளிடையே தமக்கான எதிர்ப்பு தோன்றுகின்ற போது அதற்கு ஆதரவு தேடி மலையக மக்களை அணித்திரட்டும் முயற்சியில் ஈடுப்பட்டிருந்தனர். இந்தப்பின்னணியில்  மலையக  சமூகத்தின் இருப்பை சிதைக்க் வேண்டிய தேவை பேரினவாதிகளுக்கு இருந்தது. 1970களின் இறுதிப்பகுதியில் நோர்வ+ட் பிரதேசத்தில்  இளம் சோஷலிச முன்னணியினரின் ஏற்பாட்டில் திரு ரோஹன விஜயவீராவுடனான கூட்டம் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. கூட்டத்தை ஒழுங்கமைத்தவர்களில் திருவாளர்கள் கருப்பையா, ஜெகதீஸ்வரன், பி.எம். லிங்கம், இரா ஜெயராமன், முதலானோர் முக்கியமானவர்கள். தோழர் சி. மாசிலாமணி கூட்டத்திற்கு தலைமை தாங்கினார்.  இளஞ்செழியன் சிறப்புரையாற்றியுள்ளார். இக்கூட்டத்தில் திரு. திரு ரோஹன விஜயவீர இந்திய விஸ்தரிப்பு வாதம் குறித்து பேச மறுத்து விட்ட அதே சமயம் அதனை அவர் சார்ந்த கட்சியுடனான தனிப்பட்ட கலந்துரையாடல்களின் போது விவாதிக்கலாம் தட்டிக்கழித்தமைக் குறித்து இளஞ்செழியன் தமது நூலில் பதிவு செய்திருக்கின்றார்.   இது தவறானது என்பதை திரு. ரோஹகண விஜயவீரவுக்கு சுட்டிக்காட்டியதிலும் அதனை மக்கள் மத்தியில் வெளிக்கொணர்ந்ததிலும்  இளம் செழியனுக்கும் இ.தி.மு.க  அமைப்பாக்க செயற்பாட்டின் பின்னணியில் தோற்றம் கொண்ட இளம் சோஷலிச முன்னணிக்கும் முக்கிய பங்குண்டு. இக்கூட்டத்தின் பின் இவ்வியக்கத்தினர் பொலிஸாரின் தேடுதலுக்குட்பட்டனர்.; இளஞ்செழியன், இரா. ஜெயராமன் முதலானோர் தலைமறைவாகியிருந்த சந்தர்ப்பத்தில்; கருப்பையா, ஜெகதீஸ்வரன், பி.எம். லிங்கம் முதலானோர்கள் பொலிசாரின் விசாரனைக்கும் சித்திரவதைக்கும் உள்ளானார்கள் என்பதும் இவ்விடத்தில் சுட்டிக் காட்டத்தக்கது.
மலையக சமூகத்தின் மீதாக தொடந்து nமுற் கொள்ளப்பட்டு வந்த காட்டுமிராண்டி தனமாக  இன வன்முறைகள் இம்மக்களை பாரதூரமாக பாதித்தது.  உயிர் ஆபத்துகள் - ஈவிரக்க மற்ற நிலையில் இடம்பெற்ற கொலைகள், கற்பழிப்பு சம்பவங்கள்.  அவர்கள் சேர்த்து வைத்திருந்த பொருட்கள் கொள்ளையடித்ததுடன் சிலவற்றை அழித்தும் நொருக்கிய நிகழ்வுகள்- தாம் வாழ்ந்த மண்ணிலிருந்து அந்நியமாக்கப்ட்ட கொடுமைகள் இன்னும் இது போன்ற நிகழ்வுகள் யாவும் இம்மக்களின் வாழ்வை பல்லேறுவிதங்களில் சிதைவுக்குள்hக்கியது. இவ்வானதோர் சூழலில் மக்கள் தமக்கான பாதுக்காப்பு தேடி  வடக்கு பகுதிக்கும் இந்தியாவிற்கும் சென்றனர். சிறு வியாபரிகளும் மற்றும் இதர மத்திய தர வர்க்கத்தினரும் பெரும்பாலும்  இந்தியாவிற்கு சென்றனர். ஒரு சமூகம் என்ற வகையில் இவர்களின் புலம்பெயர்வு அவர்களின் இருப்பில் தாக்கம் செலுத்தக் கூடியதாக இருந்தது. இவ்வகையில் இலங்கையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட பேரிவாதத்திற்கு எதிராக தோழர் இளஞ்செழியன்  செயற்பட்டுள்ளார். அவரது இரத்த ஜூலை (இளம் சோஷலிச முன்னணி வெளியீடு, கொழும்பு) என்ற நூலில் இம்மக்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட சட்டங்கள், மேற்கொள்ளப்பட்ட இனவன்முறைகள், அதன் பின்னணியில் மலையக தலைமைகளில் நிலைப்பாடுகள் என்பன பற்றியெல்லாம் தயவு தாட்சண்யமின்றி விமர்சனத்திற்குட்படுத்துகின்றார்.
இவ்விடத்தில் மிக முக்கியமாக கவனத்தில் கொள்ளவேண்டிய அம்சம் ஒன்றுள்ளது. அதாவது சுதந்திரத்திற்கு பின்னர் இலங்கையில் அரசியல் அதிகாரத்தை கையேற்ற தலைவர்கள் சிங்கள பௌத்த நிலபிரபுத்த வர்க்கத்தை சார்ந்தவர்களாகவே இருந்தனர். இதே போன்று வடக்கிழக்கு சார்ந்த வெளிபட்ட மிதவாத தலைமைகளும் இலங்கை தேசியத்தின் பின்னணியில் ஏகாதிபத்திய காட்டிக்கொடுப்பு குணாதிசியத்துடன் தம்மை இனங்காட்டிக் கொண்ட போது அதற்கு எதிராக விட்டுக் கொடுக்காத போராட்டத்தை தமிழ் இடது சாரிகள் முன்னெடுத்தனர்;. “ ஒடுக்கப்பட்ட மக்களின் சாதி தகர்ப்புக்கான கோரிக்கைகளை உள்ளடக்கியதான பண்ணயைடிமைத் தகர்ப்புத் தேசியக் கடமையை நிறைவுசெய்யும் வரலாற்று பணி கையேற்கப்பட்டது. அதேவேளை தேசிய இனங்களின் நியாயமான கோரிக்கைகளுக்காகவும் போராடி இருக்க வேண்டும் தான். அவ்வாறு போராடவில்லை என்பதாற்றான் தமிழ் தேசியம் பிற்போக்கு நிலையில் வளர்ந்தது என்பதற்கில்லை. ஒடுக்கப்பட்ட மக்களின் தேசியப் போராட்டத்திற்கு எதிராகத் தமிழ் தேசியம் வளர்ந்ததால் அதற்கு எதிரான, தவிர்க்கவியலாத  நிலைபாடு எடுக்க நிர்ப்பந்திக்கப்பட்ட நிலைமை காரணமாகவே சுயநிர்ணய உரிமைக் குறித்த அவசியமான போராட்டங்களை கைவிட்டனர் தமிழ் இடதுசாரிகள்”(;இரவீந்திரன்.ந. 2012 பின்னுரை, ஊற்றுக்களும்  ஓட்டங்களும்- லெனின் மதிவானம், பாக்கியா பதிப்பகம், கொழும்பு).
இந்நிலையில் ஒடுக்கப்பட்டமக்களின் சாதி தகர்ப்பு போராட்டத்தில் கவனம் செலுத்திய இடதுசாரிகள் தமிழ் மக்கள் மீதான இனவொடுக்கு முறைக்கு எதிரான போராட்டத்தை முன் வைக்க தவறியமை ஒரு இடைவெளியை ஏற்படுத்துவதாகவே அமைந்திருந்தது. தமிழின ஒடுக்கு முறைக்கு எதிரான பார்வையை தமிழரசுக் கட்சியினர் கொண்டிருந்தனர். ஆனால் அவர்களின் வர்க்க நிலைப்பாட்டின் காரணமாக சாதி தகர்ப்பு போராட்டத்தை நிராகரித்தனர். இங்கு சாதி தகர்ப்பு போராட்டமும் தமிழ் இனவொடுக்கு முறைக்கு எதிரான போராட்டங்களும் பிளவுப்பட்ட தேசியப் போராட்டங்களாக அமைந்திருந்தன. சிங்கள இடதுசாரிகளும் தமிழ் தேசியத்தின் ஏகாதிபத்திய சார்பை தமக்கு சாதகமாக தூக்கிப் பிடித்துக் கொண்டு ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தை முன்வைத்தனர். மேற்கிளம்பி வந்த பேரிவாதத்திற்கு எதிராக உருப்படியான விமர்சனத்தையும் செயற்பாடுகளையும் முன்னெடுப்பதில்  சிங்கள இடதுசாரிகள் போதிய கவனமெடுக்கவில்லை என்பது கவனத்திலெடுக்கப்பட வேண்டியதொன்றாகும்.
இவ்வாறானதோர் சூழலில் இலங்கை வரலாற்றில் பேரினவாததை அரசியல் அரங்கில் இனங்கண்டு அதற்கு எதிரான போராட்டத்தை முன்வைத்தவர்கள் நடேசய்யர் மீனாட்சியம்மாள் தம்பதிகளாவார். அதன் தொடர்ச்சியான ஆளுமையாக வெளிப்பட்டவரே  இளஞ்செழினாவார். பேரிவாத ஒடுக்கு முறைக்கு எதிரான விட்டுக் கொடுக்காத போராட்டத்தை முன்னெடுத்த இளஞ்செழியன் இனவாதியல்ல. இந்நிலையில் தான் அவரது தமிழரசுக் கட்சியினுடனான தொடர்புகள் ஏற்படுகின்றது. இருப்பினும் காலப்போக்கில் தழிரசுக் கட்சிக்குள் காணப்பட்ட முற்போக்குணர்வுகள் மழுங்கடிக்கப்பட்டு வலதுசாரி சந்தர்ப்பவாதங்கள் மேலோங்குகின்ற போது அவர்களுடன் இளஞ்செழியன் முரண்படுவது அவரது தெளிவான  பார்வையை எடுத்துக் காட்டுவதாக அமைந்துள்ளது.
பண்பாட்டுத்தளத்தில் மொழியுரிமை வாக்குரிமை தொடர்பில் தொடர்ந்து முன்னெடுத்த அவரது செயற்பாடுகள் சிங்கள பேரினவாதிகளை மட்டுமல்ல தமிழ் மிதவாத சக்திகளையும் கூட அச்சம் கொள்ள செய்திருந்தது. இ.தி.மு.க பேரிவாதிகளின் தூண்டுதலினால் தடைசெய்யப்பட்ட போது தமிழ் மிதவாதிகளின் மௌனம் இந்தப் பின்னணியிலானதாகும்.   அதேசமயம்; சிங்கள இடதுசாரி தோழர்கள் அவருக்கு இளஞசெழியனுக்கு ஆதரவளித்திருந்தனர். இந்திய விஸ்தரிப்புவாதத்துடன் இளஞ்செழியனை இணைத்துப் பார்த்தமைக்கு இ.தி.ம.க என்ற பெயரும் ஒரு காரணமாக சுட்டிக்காட்டப்பட்டது. தொடந்து வந்த காலங்களில் புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரியே அவ்வமைப்பு செயற்படத் தொடங்கியது.
யாழ்பாண சாதி அமைப்பு முறையை மலையக சாதி அமைப்பு முறையை ஒப்பு நோக்குகின்ற போது அத்தகைய இருக்கம் கொண்டதாக காணப்படவில்லை. பண்பாட்டுத்தளத்தில் சாதிய அபை;பு தகர்ப்புத் தொடர்பில் இளஞ்செழியன் தொடர்ந்து இயங்கினார். ஆதிக்கம் சார்ந்த சடங்கு முறைகளை நிராகரித்து சுயமரியாதையிலான சடங்குகளை அறிமுகம் செய்திருந்தார். பூப்புனித நீராட்டு விழாவின் போதும் திருமண சடங்குகளின் போது சமூக சீர்திருத்த முறையில் நிகழ்வுகளை ஒருங்கமைத்ததுடன் நீண்ட உரைகளையும் ஆற்றியுள்ளார். பல கலப்பு திருமணங்களையும் செய்து வைத்துள்ளார். சாதியத்pற்கு மூலமான இந்து சமயத்திலிருந்து வேறு சமயங்களுக்கு மாறுவதால் தமது சாதிய அடையாளத்தை மாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் பெரியாரும் அம்பேத்கரும் முன்வைத்த கோட்பாட்டை தழுவி தாழ்த்தப்பட்ட மக்களை பௌத்த மதத்திற்கு மாற்றுவதற்கான முயற்சிகளை இளஞ்செழியனும் மேற்கொண்டுள்ளார். இந்தப் பின்னணியில் இளஞ்செழியன் இலங்கையில் தோற்றுவித்த அமைப்பே தமிழ் பௌத்த சங்கம் ஆகும்;. வடக்கிலும் திரு. வைரமுத்து தலித் மக்களை சாதிய ஒடுக்கு முறையிலிருந்து விடுபடவும் தமக்கான உரிமைகளை பெறுவதற்காகவும் சிங்கள மொழியை கற்பதுடன் பௌத்த மதத்திற்கு மாறுவதே சரியான திசை மார்க்கம் என்ற அடிப்படையில் செயற்பட்டுள்ளார். அது நடைமுறை சாத்தியமற்ற செயற்பாடுகளுக்கே இட்டு சென்றது என்பதை திரு. யோகரட்ணம் எழுதிய தீண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் என்ற நூலில் தெளிப்படுத்தியிருக்கின்றார். இதற்கு அப்hல் பரந்துப்பட்ட வெகுசன போராட்டங்களின் ஊடாக தலித் மக்களின் உரிமைகள் எவ்வாறு வென்n;றடுக்கப்பட்டன என்பதை வரலாறு எண்பித்திருக்கின்றது. இளஞ்செழியனின் பௌத்த மதமாற்றமும் இந்தப் பின்னணியில் நோக்கத் தக்கதே.   இவரது இயக்கம் வேகமாக பரவிய காலத்தில் தான் அதிகமான கலப்பு திருமணங்கள் மலையகத்தில் நடந்துள்ளன. அத்துடன் பிள்ளைகளுக்கு பெயர் சூட்டும் போதும் திராவிட இயக்க சார்ந்த மார்க்சிய மூலவர்கள் சார்ந்த பெயர்களே இக்காலத்தில் தான் பெருமளவில் வைக்கப்பட்டுள்ளன.
தோழர் இளஞ்செழியன் ட்ரொட்ஸ்கிய சிந்தாந்ததில் ஈடுபாடு காட்டியதால் வடக்கிலும் மலையகத்திலும் இயங்கிய ஸ்டாலினிச மாஓ சார்ந்த இடது சாரிகளுடன் ஐக்கிய பட முடியாமல் போயிருக்கலாம். அதே சமயம் அவ்விடதுசாரிகளும் தமிழ் தேசிய போராட்டம் பற்றியும் இ.தி.மு.க பற்றியும் கொண்டிருந்த நிலைபாடு- அவற்றில் காணப்பட்ட இடைவெளிகள் காரணமாக இளஞ்செழியளை அரசியல் பண்பாட்டுத் துறையில் இனங்காண முடியாமல் போனமை துரதிஸ்வரமாதொன்றாகும்.
இவ்வகையான புரிதலுடன் ஒரு வெகுசன அமைப்பை கட்டியெழப்பட வேண்டிய சூழ்நிலையில், இ. தி. மு. க. பற்றி சி. சிவசேகரம் இவ்வாறு குறிப்பிடுகின்றார்:
“தமது சமூகத்தின் பின்தங்கிய நிலை, பரவலான மூடநம்பிக்கைகள், மக்களது அறியாமையைப் பயன்படுத்தி அவர்களைச் சுரண்டும் இ.தொ.கா. தொழிசங்க தலைமை போன்றவற்றைக் கண்டு மனம் வெதும்பியவர்களுக்கு திராவிட இயக்கத்தின் மீது கவர்ச்சி ஏற்பட்டது அந்தச் சூழலில் இயல்பு என்றாலும், தமிழகத்தில் பகுத்தறிவு சுயமரியாதை இயக்கங்களது வளர்ச்சிக்கு வசதியாக இருந்த பிராமண விரோத உணர்வு, இந்தி எதிர்ப்பு போன்றவை இலங்கையில் இருக்கவில்லை. எனவே பகுத்தறிவு சுயமர்யாதைச் சிந்தனைகளில் கவர்ச்சி ஒரு சமுதாய இயக்கமாக வளர மடியாது போனது. என்றாலும் புதிய சமுதாயத்துக்கான தேவையும் மனித சமத்துவம் என்ற இலட்சியத்தையும் சாதி மதங்களின் பேரால் மக்கள்  ஏமாற்றப்படுவதை நிறுத்தப்படுவதையும் ஏற்றுச் செயற்படக் கூடிய சக்திகளின் முக்கியமான தோற்றுவாயிகளில் பகுத்தறிவு சுயமரியாதை சிந்தனையும் ஒன்று.” (அறிவாஞ்சலி ,2000, தம்பு இளையதம்பி நினைவுக்குழு, கொழும்பு, ப. 15)
இதுவரை பார்த்த விடயங்களை கொண்டே மேற் குறித்த கருத்து தவறானது என்பதை காட்ட போதுமானவை என நம்புகின்றேன். தமது முன்னூகங்களுக்கு மாறாக ஆதாரங்கள் தென்படும் போது அதனை எதிர்கொள்வதற்கு நிரம்ப துணிச்சலும் நேர்மையும் தேவை. அத்தகைய பண்புகள் இல்லாத போதே மேற்குறித்த புலம்பல்கள் வெளிப்படுகின்றன.
இளஞ்செழியன் பண்பாட்டு தளத்தில் இனவாதத்திற்கும் குறுகிய பிரதேசவாதத்திற்கும் அப்பால் ஓர் உழைக்கும் மக்கள் நலனில் அக்கறைக் கொண்டு அவர் ஆற்றிய பங்கு முக்கியமானது. மலையத்தின் ஆன்மாவாக திகழ்கின்ற தொழிலாள வர்க்க போரட்டத்தின் பின்னணியில் மலையகம் விடுதலை பெறுவதே காலத்தின் தேவையாகும். இந்நிலையில் மலையகத்தின் முன்னோடிகளின் எத்தனங்களை- முயற்சிகளை- செயற்பாடுகளை இன்னொரு தலைமுறையினரிடம்- புறப்பாட்டிடம் கையளிக்கின்ற போது இளஞ்செழியன் போன்ற ஆளுமைகள் குறித்த ஆய்வுகள் காய்த்தல் உவத்தலின்றி வெளிக்கொணரப்படல் வேண்டும். முற்போக்கு மார்சிய ஆய்வுகளின் ஊடாகவே அத்தகைய ஆய்வுகளை வெளிக் கொணர முடியும்.

நன்றி- ஜீவநதி மலையகச் சிறப்பிதழ் (2013)


'இங்கிருந்து' மலையக மக்களின் திரைப்படம்: சுமதி சிவமோகன்

சுமதி சிவமோகன்

'மர்மம் நிறைந்த காட்சிகள், மலையகத்தை சுற்றி நடக்கும் வன்முறைகள் மற்றும் ஆவணமாக பிரதிபலிப்பது போன்ற நுட்பங்களை நான் இந்த திரைப்படத்தில் கையாண்டுள்ளேன். இவ்வாறான நுட்பங்களை கையாளும்போதுதான் மலையக மக்களின் குரல்கள் வெளியில் வரும். 
'இங்கிருந்து' மலையக மக்களின் திரைப்படம். இதில் அவர்களின் குரலே மேலோங்கி உள்ளது' என்று கூறுகிறார் இங்கிருந்து திரைப்படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கலாநிதி சுமதி சிவமோகன்.

நாடகவியளாலரும் கவிஞரும் எழுத்தாளருமான கலாநிதி சுமதி சிவமோகன் எழுதி, தயாரித்து, இயக்கியிருக்கும் முழுநீளத் திரைப்படம் 'இங்கிருந்து'.

நாடகவியளாலர்,  நாடக நெறியாளர், சிறுகதை எழுத்தாளர், கவிஞர், ஆசிரியர் என பல பரிமாணங்களில் தன்னை தக்க வைத்துகொண்டு இருக்கும் இவர், பேராதனைப் பல்கலைக்கழகத்தில் ஆங்கிலத்துறைத் தலைவராக செயற்பட்டு வருகின்றார்.

இவர் ஏற்கனவே, 'பிரளயம்', 'ஒரேஞ்சஸ்' ஆகிய இரு குறுந்திரைப்படங்களை எழுதி, இயக்கியுள்ளார். இதில் 'பிரளயம்' குறுந்திரைப்படத்திற்கு பார்சிலோனாவில் விருது கிடைத்தது. அதேபோல், 'இன்சேர்ச் ஒஃப் த ரோட்' ஆவணப்படத்தின் பிரதியாளராகவும் அவர் கடமையாற்றியுள்ளார். 

க்ரிஷ் கர்ணாட்டின் 'நாக மண்டலம்' நாடகத்தை தமிழில் மொழிபெயர்த்து நெறிப்படுத்தியவர். 'மௌனத்தின் நிழல்', 'பயணங்கள்' உள்ளிட்ட பல நாடகங்களை எழுதி, நடித்து, நெறிப்படுத்தியிருக்கிறார்.  

திரைப்படத்துறையில் பெண்களின் பங்களிப்பு (இயக்கம், தயாரிப்பு, திரைக்கதை வசனம், ஒளிப்பதிவு...) என்பது இன்னும் 50 வீதத்தை எட்டாத ஒரு கட்டத்தில் உலக சினிமா இயங்கிக்கொண்டிருக்கும் நிலையில் ஆங்காங்கே பெண்கள் பலர் தங்களது இருப்பையும் அவ்வப்போது காட்டிச் செல்ல தவறிவில்லை. அவர்களில் ஒருவராக தன்னையும் இணைத்துகொண்டுள்ளார் சுமதி சிவமோகன். 

மாற்று சினிமாவின் அவசியத்தை வலியுறுத்தும் இவர் நமக்கேயான (இலங்கை தமிழ் சினிமா) சினிமா கலாசாரம் ஒன்று உருவாக வேண்டும் என்பதையும் வலியுறுத்த தவறவில்லை. 

இவரை தமிழ்மிரர் இணையத்தளத்தின் கலைஞர்களுக்கான நேர்காணல் பகுதிக்காக நேர்கண்டபோது அவர் கூறியவை,

கேள்வி:- எதனை அடிப்படையாக  கொண்டு இங்கிருந்து திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது?

பதில்:- இத்திரைப்படத்தில் கதாநாயகியாக ஓர் ஊமைப் பெண் நடித்திருக்கின்றார். வறுமைக்குட்பட்ட ஒரு பெண்ணும், வாய் பேச முடியாத கதாநாயகியும் கொழும்பிலிருந்து செல்லும் ஆய்வாளர் ஒருவரும் தேயிலைத் தோட்டத்தில் சந்திக்கின்றனர். இவர்களை சுற்றி மலையகத்தின் வாழ்க்கை நிலையை பிரதிபலிக்கும்வகையில் திரைப்படத்தின் கதை அமைந்துள்ளது. 

மர்மம் நிறைந்த காட்சிகள்;, மலையகத்தை சுற்றி நடக்கும் வன்முறைகள் மற்றும் ஆவணம் போன்ற நுட்பங்களை நான் இந்த திரைப்படத்தில் கையாண்டுள்ளேன். இவ்வாறான நுட்பங்களை கையாளும்போதுதான் மலையக மக்களின் குரல்கள் வெளியில் வரும். 'இங்கிருந்து' மலையக மக்களின் திரைப்படம். இதில் அவர்களின் குரலே மேலோங்கி உள்ளது. 

இந்த திரைப்படம் குறுகிய கால செயற்திட்டமல்ல. கடந்த 2007ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு நீண்டகால செயற்திட்டம். அது 2013ஆம் ஆண்டே நிறைவு பெற்றுள்ளது.

கேள்வி:- மலையகத்தை அடிப்படையாகக்கொண்டு திரைப்படமொன்றை எடுக்க வேண்டும் என உந்துதல் அளித்தது எது?

பதில்:- மலையகம் என்று கூறும்போது ஒரு பிரத்தியேக சமூகமாக இயங்கி வருகின்றது. பொருளாதார ரீதியாகவும்சரி, கலாசார நிலையிலும்சரி அது ஒரு தனித்துவத்தை கொண்டு இயங்குகின்றது. எனவே மலையகத்தின் ஒட்டுமொத்த சாரத்தையும் வெளிக்கொணர வேண்டுமென்பதே இத்திரைப்படத்தின் பிரதான நோக்கமாகக் காணப்படுகின்றது.

எனவே மலையகத்தின் முழு சாரத்தையும் ஒரு திரைப்படமாக எடுத்திருக்கிறேன். வெறுமனே மலையகம் என்ற பெயரில் வெறும் காதலை மட்டுமே கூறிச்செல்லாது, ஒட்டுமொத்த மலையக சமூகத்தையும் இத்திரைப்படத்தினூடாக கொண்டு வந்திருக்கிறேன்.

மலையக மக்களின் வாழ்க்கை நிலையை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் இதுவரை இலங்கையில் வெளிவரவில்லை. மலையகத்தினை பின்னணியாக கொண்டு பல காதல் திரைப்படங்கள் உருவாகியுள்ளன. அந்த திரைப்படங்களில் கொழும்பில் அல்லது வேறு பிரதேசங்களில் இருந்து சென்றவர்;களே பாத்திரங்களாகியுள்ளனர். மலையகத்தை பிரதிபலிப்பதற்காக தேயிலை மலையில் தொழில்புரியும் ஒரு பெண் அழகாக சித்தரிக்கப்பட்டிருப்பார். மற்றும் நீர்வீழ்ச்சிகள் உள்வாங்கப்பட்டிருக்கும். 

மலையகத்தின் யதார்த்தத்தை, அடையாளங்களை, மக்களின் வாழ்க்கை நிலையை எடுத்துக்கூறிய திரைப்படங்கள் இதுவரை வெளிவரவில்லை. அது எனக்கு ஒரு குறையாகவே பட்டது. 

மலையகம், வடக்கு, கிழக்கு உட்பட்ட பல பிரதேசங்களில் வாழும் தமிழ் மக்கள் இந்திய திரைப்படங்களை பார்த்து மகிழ்ச்சியடைந்தவர்களாகவே உள்ளனர். தென்னிந்திய திரைப்படங்களை பார்வையிடும் நாங்கள் இதுவரை ஒரு பார்வையாளர்களாகவே இருந்து வந்துள்ளோம். இதனை நான் பிழையென்று கூறவில்லை. 

ஆனால், எவ்வளவு காலத்திற்கு நாங்கள் தென்னிந்திய திரைப்படங்களை பார்த்து பார்த்து அதுதான் எமது கலையென்று கூறமுடியும்?. ஏதோ ஒரு கட்டத்தில் இதற்கு ஒரு முற்றுப்புள்ளியிட வேண்டிய தேவை ஏற்படுகின்றது.

எமது தமிழ்ச் சமூகத்திற்கேயான ஒரு கலைவடிவம் உருவாகவேண்டியது அவசியம். ஏனைய கலைகளில் எமக்கே உரிய பாணி காணப்படுகின்றது. ஆனால், திரைப்படத்துறையை எடுத்துகொண்டால் அது பெரிய இடைவெளியாகவே காணப்படுகின்றது. ஆரம்பக்காலத்தில் இலங்கை தமிழ் சினிமாவிற்கான ஒரு வடிவம் காணப்பட்டது. ஆனால், தற்போது அந்த நிலை இல்லை என்றே கூறவேண்டும்.   

கேள்வி:- இந்த திரைப்படத்தை இயக்கும்போது எவ்வாறான சவால்களை எதிர்கொண்டீர்கள்?

பதில்:- இந்த திரைப்படத்திற்கு 80 வீதமான செலவு எனது கைகளிலிருந்தே போயுள்ளது. அதுவே ஒரு பெரிய சவால்தான். அதனைவிட பெரிய சவால் என்று எதுவும் இல்லை.

இத்திரைப்படத்திற்கு நடிகர்களை தேர்வு செய்வதற்காக அதிகமான செயலமர்வுகளை நடத்தியுள்ளேன். அந்தச் செயலமர்வினூடாகவே நான் நடிகர்களை தேர்வு செய்தேன். நடிகர்களை தேர்வு செய்ததுடன் எனது கடமை முடிந்துவிடவில்லை. 

தேர்வு செய்த நடிகர்களுக்கு நடிப்பு சார்ந்த பயிற்சிப்பட்டறைகளை வைத்தேன். மலையகத்தில் நடிப்புத் திறமைகொண்ட கலைஞர்கள் அதிகமாகவே இருக்கின்றனர். எவ்வித குடும்பப் பின்னணியும் இல்லாத சாதரண ஒரு கலைஞர்களே இங்கிருந்து திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

திரைப்படத்தில் அவர்களது நடிப்பை பார்த்தால் அது விளங்கும். புகழ்பெற்ற நடிகர், நடிகைகள் இத்திரைப்படத்தில் நடித்திருந்தால்கூட இந்தளவு நடித்திருப்பார்களோ என்பது சந்தேகமே. 

அந்தளவு தமது நடிப்புத்திறமைகளை இங்கிருந்து திரைப்படத்தில் நடித்த நடிகர்கள் பறைசாற்றியுள்ளனர்.

திரைப்படத்தின் ஆரம்ப நடவடிக்கைகளுக்காக மலையகத்திற்கு செல்லும்போது ஹோட்டல்களில் தனி பெண்ணாகவே தங்க வேண்டி ஏற்பட்டது. பெண்ணொருவர் தனியாக இருந்து தேநீர் குடிக்கின்றாள் என பார்த்தவர்கள் எண்ணியிருக்கக் கூடும். பிறகு அவர்களாகவே நான் திரைப்படம் எடுப்பதற்காகவே வந்திருக்கிறேன் என்பதனை உணர்ந்துகொண்டார்கள்.

கேள்வி:- இங்கிருந்து திரைப்படத்திற்கு சிங்கள மொழிக் கலைஞர்களிடமிருந்து கிடைத்த வரவேற்பு குறித்து கூறுங்கள்?

பதில்:- இங்கிருந்து திரைப்படத்திற்கு சகோதர மொழி கலைஞர்களின் வரவேற்பு அதிகமாகவே இருந்தது. அவர்கள் நன்கு ஒத்துழைப்பு தந்தார்கள். நான் சகோதர மொழிக் கலைஞர்களுடன் ஒரு சில படங்களில் பணியாற்றியுள்ளேன்;. எனவே எனது திரைப்படம் என்று வந்தபோது அக்கலைஞர்கள் எனக்கு நன்கு ஒத்துழைப்பு தந்தார்கள்.

புகைப்பட கலைஞர், எடிட்டர் உட்பட பலர் இந்த திரைப்படத்திற்காக பணியாற்றியுள்ளார். அவர்கள் கேட்ட தொகையை நான் வழங்கவில்லை. ஆனாலும், இந்திரைப்படத்தில் பணிபுரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் தமது பூரண ஒத்துழைப்பை வழங்கியமை இங்கு கூறியே ஆகவேண்டும்.

அதேபோல், இந்த இடத்தில் நான் ஒருவரை குறிப்பிட்டு சொல்லியே ஆகவேண்டும். மலையகத்தில் 'சசிக்குமார்' என்ற ஒருவர், இந்த திரைப்படத்தை எடுத்து முடியும்வரை எனக்கு பூரண ஒத்துழைப்பை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. 

சரியான நேரத்திற்கு செயலமர்வுகளை ஒழுங்கமைத்தது முதல் திரைப்படம்சார்ந்து அனைத்து வேலைகளுக்காகவும் அவர் கடுமையாக உழைத்திருந்தார். அவரில்லாமல் இந்தளவு இந்த திரைப்படத்தை எடுக்க முடிந்திருக்குமா என்பது சந்தேகமே.

கேள்வி:- திரைப்படத்தில் இசையமைப்புக் குறித்து கூறுங்கள்?

பதில்:- மலையகத்தில் மிகவும் புகழ்பெற்ற மீனாக்ஷp அம்மாவின் 'பாய்க்கப்பல் ஏறியே வந்தோம்..' பாடல் இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. திரைப்படம் முழுதும் காட்சிகளுக்கு ஏற்பட அதன் குறியிசைகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கு இசையமைத்தவர் இசைக்கலைஞர் வி.சதானந்தன். பாடியிருப்பவர் நிர்மலா ராஜசிங்கம். 

திரைப்படத்திற்கான இசையை இலங்கையின் நவீன இசையமைப்பாளர்களுள் ஒருவரான அன்ரனி சுரேந்திரா வழங்கியுள்ளார்.  அவர் தனக்கு வழங்கிய பொறுப்பை மிகவும் சிறப்பாகவே செய்து முடித்திருக்கிறார்.

கேள்வி:- இத்திரைப்படத்திற்கு கிடைத்த சர்வதேச விருதுகள் குறித்து கூற முடியுமா?

இங்கிருந்து திரைப்படம் 'ஐக்கிய அமெரிக்காவின் க்ளோபல் பில்ம் இனிசியேற்றிவ்வின் 'விதந்து குறிப்பிடத்தக்க திரைப்படத்திற்கான விருதை'  பெற்றுக்கொண்டுள்ளது.

'புதுமையான கதை சொல்லும் பாணி, சினிமா தளத்தில் எவ்வாறு வெளிவருகிறது' என்பதனை அடிப்படையாக கொண்டு அவர்கள் இந்த திரைப்படத்திற்கு விருதினை பரிந்துரை செய்துள்ளனர். இதனைவிட 2014ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள 10ஆவது ஆசிய பெண்கள் மாநாட்டில் இத்திரைப்படத்தை திரையிடவுள்ளனர். 

இந்தியாவில் சென்னையில் இந்த திரைப்படத்தை போட்டுக்காட்டும்படி எனக்கு மின்னஞ்சல் ஒன்றும் வந்துள்ளது. 'தி ஹிந்து' பத்திரிகையில் ஒருவர் இதற்கான ஏற்பாடுகளை செய்ய முடியுமென கூறியுள்ளார். அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றேன்.

இந்த திரைப்படத்திற்கு பண உதவி கேட்டு இலங்கையில் உள்ள இந்திய தூதரகத்தையும் நான் ஆரம்பத்தில் தொடர்பு கொண்டேன். ஆனால், அவர்கள் அதனை கருத்தில் கொள்ளவில்லை.

கேள்வி:- இந்த திரைப்படம் இலங்கையில் வெளியிடப்படுவதற்கான ஏற்பாடுகள் யாரால் முன்னெடுக்கப்பட்டன?

பதில்:- இலங்கைத்திரைப்படக் கூட்டுத்தாபனத்தின் ஏற்பாட்டில்தான் இங்கிருந்து திரைப்படம் வெளியிடப்பட்டது. 

கேள்வி:- திரைப்படத்துறைக்கு நீங்கள் பிரவேசிக்க காரணமாய் இருந்தது எது?

பதில்:- எனக்கு நாடகத்துறை என்றால் அதிக ஈடுபாடு. பல்வேறு நாடகங்களை எழுதி நெறிப்படுத்தியும் இருக்கின்றேன். நாகமண்டலம், அடுப்படி அரட்டை, மௌனத்தின் நிழல்கள் உட்பட பல நாடகங்கள் நெறியாள்கை செயப்பட்டுளன.

இதுவே, திரைப்படத்துறையிலும் என்னை பிரவேசிப்பதற்கான உந்துதலை தந்தது.

நேர்காணல்:- க.கோகிலவாணி

தொடர்புடைய  தகவல்கள்....

'இங்கிருந்து' திரைப்படம் ஹட்டனில் வெளியீடு

சுமதியின் 'இங்கிருந்து': இலங்கையின் முதலாவது பரிசோதனைத் திரைப்படம்


கே.ஏ. சுப்பிரமணியம்- சில பதிவுகள் லெனின் மதிவானம்


தோழர் கே. ஏ. சுப்பிரமணியம் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் தனக்கென தனித்துவமான பங்களிப்பை வழங்கியர். மூத்த இடதுசாரி தோழர்களான ந. சண்முகதாசன்,  மு கார்த்திகேசன்  என்ற வரிசையில் வைத்து நோக்கப்பட வேண்டியவர்.  ஒருவகையில் முன்னவர்களின் தொடர்ச்சியாகவும் அதன் அடுத்த பரிமாணமாகவும் இருந்தவர் கே.ஏ. சுப்பிரமணியம்.  ஆதிக்க வர்க்கத்தினருக்கும் ஒடுக்குமுறையாளர்களுக்கும் எதிராக ஓர் உழைக்கும் மக்களின் பக்கத்தில் நின்று பேராடிய இத்தேழரின் கருத்துக்கள் சிந்தனைகள் செயற்பாடுகள் என்பன இன்று வரை பல விதங்களில் தாக்கம் செலுத்தி வருகின்றன. அவர் மறைந்து 25 ஆண்டு நிறைவை அடையும் இத்தருணத்தில், இந்த இருபத்தைந்து வருடங்களில் நமது நாட்டிலும் உலகின் ஏனைய பாகங்களிலும் பாரிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றிலே விரல்விட்டு எண்ணிவிடக் கூடிய முக்கிய புருஷர்களில் ஒருவராகிய  மணியம் பொறுத்து வெளிவந்த நினைவு மலரைத்(.( தோழர் கே.ஏ. சுப்பிரமணியம் நினைவு மலர்,  நினைவுக் குழு வெளியீடு, யாழ்பாணம், 1989).  தவிர வேறு உருப்படியான  ஆய்வுகள் ஏதும் வந்ததாக தெரியவில்லை.

தோழர் மணியத்தை ஆராயவும் மதிப்பிடவும் அண்ணாரின் சிறப்பியல்புகளையும் பங்களிப்பையும் புறவய நிலையில் சீர்தூக்கி பார்ப்பதும் காலத்தின் தேவையாகும்.  வரலாற்றுப் பின்னணியில் இவரை முன்னிறுத்தி மதிப்பீடு செய்யும் முயற்சிகள் வெளிக் கொணரப்படவேண்டும். அவை முக்கியமாக மூன்று நிலைகளில் நடைப்பெற வேண்டும்.  முதலாவது அண்ணாரை பல்துறை நோக்கில் அணுகி ஆராயும் மதிப்பீடுகள், ஆய்வுகள் வெளிவர வேண்டியுள்ளது. இரண்டாவதாக அவர் வழி வந்த தலைமுறையும் அவர்களின் சிறப்புகளும் மணியத்தாரின் மரபு மாறியும் மாறாமலும் செயற்பட்டு வந்துள்ளது குறித்த ஆய்வும் மிக அவசியமானதாகும். முன்றாவதாக அவர் தொடர்பில் வெளிவந்த மதீப்பீடுகள் ஓப்பிட்டளவில் மிக குறைவான காணப்பட்ட போதினும் அவைக் குறித்த விமர்சனங்களும் அவசியமாவையாகின்றன. இவ்வடிப்படையில் நோக்குகின்ற போது இவர் பொறுத்த நினைவுரைகள் மற்றும் நூல் சமர்பணங்கள் என்பன அவசியமானவையாக இருந்த போதினும் அதற்கு அப்பால் இவ்வாளுமைக் குறித்த ஆய்வுகளும் மதீப்பீடுகளுமே காலத்தின் தேவையாக உள்ளது. பிரபல்யங்களுக்கு அப்பால் மக்கள் மத்தியில் இவர் முன்னெடுத்த விலைமதிப்பற்ற செயற்பாடுகளை அவர்கள் எந்தளவு மதித்திருந்தார்கள் என்பதை அவரது விடைப்பெறுகின்றேன் என்ற ஒலி ஒளி நாடா( ‘சத்தியமனை’ இணையதளம் - திருமதி. வள்ளியமை சுப்பிரமணியத்தால்- மனைவி- வழங்கப்பட்டது)சாட்சியமாக அமைகின்றது. இடதுசாரி இயக்க வளர்சிக்கு குறிப்பாக பொது மக்கள் மத்தியில் இவ்வாளுமைகள் கொடுத்த நம்பிக்கை குரல் ஒரு பலமாகும்.   அவர் செயலாற்றி நன்மதிப்பை பெற்றிருந்த பொது மக்கள் தொழிலாளர்கள், விவசாயிகளாக இருந்தமையால் அவர்களால் தமது உணர்வுகளை எழுத்தில் பதிய முடியாமமல் போயிவிட்டமை துரதிஸ்டவசமானதொன்றாகும். பொது மக்கள் மத்தியில் செயற்பட்ட பல ஆளுமைகள் இவ்வாறு மறைக்கப்பட்டமைக்கு மேற்குறித்த காரணி முக்கியமானதாக காணப்படுகின்றது.         என்னைப் பொறுத்த மட்டில் அத் தோழரோடு நேரடியாக பழக கூடிய சந்தர்ப்பங்கள் ஏதும் கிடைக்காத போதினும் அவரால் வளத்தெடுக்கப்பட்ட இடதுசாரி தோழர்கள் அவரது குடும்பத்தினர் மற்றும் அவரது ஆளுமையின் செல்வாக்குட்பட்டவர்கள் என்போரின் கருத்துக்களை கொண்டு அவரை அறிய முடிந்தது.

இத்தோழரின் அரசியல் தெளிவுக்கும் வெற்றிக்கும் அடிப்படையான காரணம்,  விஞ்ஞானபூர்வமான இயக்கவியல் பார்வையைக் கொண்ட அவரது செயற்பாடு ஆகும். அவருடைய ஆளுமை பல்துறைசார்பானது. அவரில் வெளிப்பட்ட அரசியல்   பார்வையும் நடைமுறைசார்ந்த போராட்டமும்  சிரமப்படாமல் எளிதானதொரு இயல்பாகக் காணப்படுகின்றது. இது சாத்தியப்படுவதற்கு முக்கிய காரணம் அவரது மார்க்சிய சார்புநிலையாகும். அவ்வகையில் மார்க்சியத்தை ஏற்றுக் கொண்ட அவர் அதனை மாறிவருகின்ற எமது சூழலுக்கு ஏற்றவகையில் பிரயோகித்து அதற்கான நடைமுறையை முன் வைத்தார். குறிப்பாக இலங்கை இந்திய இடதுசாரிகள் பலர்,  தமிழ்ச் சூழலில் ஐரோப்பிய வர்க்க சிந்தனை மரபை அப்படியே பிரயோகித்து கண்ட முடிவுகள் நமது சூழலில் விரக்திக்கும் பின்னடைவிற்குமே இட்டுச் சென்றது. தமிழ்ச் சமூகத்தில்  சாதி, மதம், இனம், மொழி அடையாளங்கள் எல்லாம் இருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வதன் மூலமே அம்மக்களை அணிதிரட்டுவதற்கான மார்க்கத்தைக் கண்டடைய முடியும். தோழர் மணியம் இதனைப் புரிந்து கொண்டு தமது ஸ்தாபன செயற்பாடுகளை முன்னெடுத்தவர்.

அந்தவகையில் அவர் முன்னின்று முன்னெடுத்த போராட்டங்களில் மிக முக்கியமானது தீண்டாமைக்கும் சாதிக்கும் எதிரான போராட்டமாகும். இந்தியாவிலே ஏ. கே. கோபாலன்  முதலானோர் தாழ்த்தப்பட்ட மக்கள் சார்பில் முன்னெடுத்த கோயில் நுழைவுப் போராட்டத்தை தமக்கு ஆதர்சனமாக கொண்டு நமது சூழலுக்கு ஏற்றவகையில் அவ்வனுபவங்களை முன் வைத்து  தமது போராட்டங்களை முன்னெடுத்தார்.  

தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கம் போரட்டம் நடந்த காலத்தில் ஒடுக்கப்பட்ட மக்கள்மீது நிலப்பிரபுத்துவ சக்திகள் பல்வேறு தாக்குதல்களை மேற்கொண்டனர். தேனீர்க்கடைகளில் சமத்துவம் கோரினால் துப்பாக்கிச் சூடு, கைக்குண்டு வீச்சு,  சம்பந்தப்பட்டவர்களது வீடுகளைத் தீயிட்டு எரித்தல், ஒடுக்கப்பட்டோர் தமது வாழிடத்தில் இருந்து அடிப்படைத் தேவைகளின் பொருட்டும் வேறிடம் செல்லவிடாது தடுத்தல், அவர்களது விவசாயப் பயிர்களை நாசம் செய்தல், பிரேத ஊர்வலங்களின் மீது துப்பாக்கித் தாக்குதல்- பிரேதங்களை மயானங்களில் எரிக்கவிடாது இடையூறு விளைத்தல் போன்ற அநாகரிக நடவடிக்கைகளில் சாதிவெறியர்கள் ஈடுபட்ட காலகட்டம் அது. அத்தகைய அடக்குமுறைகளை எதிர்கொள்வதற்கு ஒடுக்கப்பட்ட மக்களும் ஆயுதம் ஏந்திப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். 1966 ஒக்டோபர் எழுச்சியோடு ஆரம்பமான ஒடுக்கப்பட்ட மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டம் 1969 இன் இறுதிப்பகுதிவரை நீடித்தது. இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து மாவிட்டபுரம் கந்தசாமி கோவில், மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் கோவில் உட்படப் பல ஆலயங்களும் வட பகுதியிலுள்ள சகல தேனீர்க்கடைகளும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக திறந்துவிடப்பட்டு, சமத்துவம் பேணப்பட்டது. ஒடுக்கப்பட்ட மக்கள் எழுச்சிபெற்று போராடிய காலத்தில் அந்த மக்களுக்கு சரியான திசை வழியைக் காட்டி, போராட்டத்தை நெறிப்படுத்திய கொம்யூனிஸ்ட் கட்சியும், தோழர் கே.ஏ.சுப்பிரமணியமும் என்றென்றும் ஒடுக்கப்பட்ட மக்களால் நினைவுகூரப்படுவார்.((எஸ்.சுப்பையா http://www.sooddram.com/Articles/otherbooks/Nov2012/Nov262012_Suppaiya.htm)

மணியத்தாரின் காலத்திலும் அதற்கு சிறிது முன்பின்னாகவும் சாதிப்பிரச்சனைகள் குறித்து இருவேறு போக்குளை பிரதிப்பலித்தோரைக் காணக் கூடியதாக இருந்தது. ஒருப் பிரிவினர், சாதியவாதக் கண்ணோட்டத்தில் பார்த்தவர்கள். இவர்களே பெரும்பாண்மையினர். வழி வழி வரும்  சம்பிரதாயங்களையும் சடங்குகளையும் இறுகப் பற்றிக் கொண்டு அதனடியாக எழுந்த சாதிய அடக்கு முறைகளின் பின்னணியில் எழுந்த கோபாவேசம் வெறுமனே ஸ்தாபன மற்றக் கலகக் குரலாக எரிந்து அனைவதாக அமைந்திருந்தது. மேலும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே மேழுந்த மத்தியதர வர்க்கத்தினர் தமது வர்க்க நலனைப் பாதுகாத்துக் கொள்வதற்காகவே உழைக்கும் மக்களிலிருந்து அந்நியப்பட்ட கலாசாரப் போராட்டத்தை முன் வைத்தனர்.  இவர்களின் போராட்டம் என்பது தலித் மத்தியதர வர்க்கம் சாந்த விடுதலையாகவே அமைந்திருந்தது.

இன்னொரு பிரிவினர் சாதிப் பிச்சனையை வர்க்கப் பிரச்சனையிலிருந்து பிரித்து நோக்கினர். இவர்கள் கொண்டிருந்த வரட்டுத்தனமான வர்க்கப் பார்வை ஒரு விதமான சமரசத்திற்கே இட்டு சென்றது. இவர்களின் பார்வையிலும் சிந்தனையிலும் இயக்கவியலின் சாயல் கூட இருக்கவில்லை. முரண்பாட்டின் அடிப்படைகளை நோக்காது ஒன்றை மட்டும் பற்றுக்கோடாக கொண்டவர்கள் இருசாராரும். இவ்வாறான சூழலில் சாதிய போராட்டத்தை வர்க்கப் போராட்டத்தின் அங்கமாக பார்த்தவர் மணியம். சாதியத்தின் 
பரிமாணங்களையும் கொடுமைகளையும் ஒரு சேர நோக்கி புரணவிடுதலைக்கான மார்க்கத்தை தெளிவுப்படுத்திமையே அவரது முக்கிய பங்களிப்பாக விளங்குகின்றது. சாதியத்திற்கும் தீண்டாமைக்கும் எதிரான போரட்டத்தில் அனைத்து ஜனநாயக சக்திகளையும் வெகுசன அமைப்பாக திரட்டியிருந்தமையே இவரது காத்திரமான பங்களிப்பாகும்.  இவ்வகையில் இலங்கையின் இடதுசாரிகள் எமது சூழலுக்கு அமைவாக மார்க்சியத்தை வளத்தெடுக்க முனைந்ததன் விளைவே தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்க போராட்டமாகும். தமிழர் பண்பாட்டு சூழலில் சாதிய முரண்பாடுகள் வர்க்கப் பிரச்சனையாக உருமாறியிருக்கின்றது என்பதை இயங்கியல் பார்வையில் அடையாளம் கண்டு கொண்டமை மணியத்தாரின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகும்.  அரசியல் அரங்கில் இந்த முரண்பாட்டை விளங்கிக் கொண்டு அமைப்பாக்க செயற்பாட்டில் ஈடுப்பட்டமை இவரது முக்கிய பங்களிப்பாகும். அவர் சீர்திருத்தங்களையும் மாற்றங்களையும் மற்றவர்களை விட அதிக ஆர்வத்துடன் விரும்பி செயற்பட முனைந்தமையினாலேயே அவரது அதனையொட்டியே அமைந்திருந்தது.. 

இவரது தன்னலமற்ற பங்களிப்பு பற்றி அன்னைய காலச் சூழலில் அவரோடு தொடர்பு கொண்டிருந்த போரசிரியர் தில்லைநாதன் அவர்களின் பின்வரும் கூற்று அவதானத்திற்குரியது.

"அதிகாரத்திற்கும் பதவிக்கும் பிரசித்திக்கும் அரசியலைப் பலர் பிரயோகித்த ஒரு சூழ்நிலையிலும், அவற்றில் நாட்டமின்றி, சாதாரண தொழிலாளர்கள், விவசாயிகள் ஏழைகளுக்கு விடிவு காண விழைந்த ஓர் அரசியலுக்கு தன்னை அர்பணித்துக் கொண்டவர் அவர். அந்த அரசியல் நெறி பலமடைய வேண்டிக் கடுமையாக உழைத்தமையும், தொல்லைகள் நோய்களை உதாசீனஞ் செய்தமையும், ஏனையவர்களை நேசக் கரம் நீட்டி அணைத்துக் கொண்டமையும், ஏற்ற முயற்சிகளை உற்சாகப்படுத்தியமையும் திரு. சுப்பிமணியத்தின் சிறப்புகளாயின. மரணம் நெருங்கிவருவது பற்றிய உணர்வு தோன்றிய நிலையிலும் எடுத்தக் காரியங்களைச் செவ்வனே முடிக்க வேண்டுமென்ற துடிப்பே அவரிடம் மேலோங்கியது"(மே.கு.நூ).
               
  இது போன்று சத்கியமணைபுளோக்ஸ்பொட். கொம் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ள  தோழர் மணியத்தின் விடைப்பெறுகின்றேன் என்ற ஒளி நாடா இவர் பற்றிய மேலும் பல தகவல்களை தருவதாக அமந்திருக்கின்றது.
 இலங்கையில் தமிழர் சார்ந்த விடுதலை இயக்கங்களை தோற்று வித்து அவற்றை தவறான திசையில் இட்டுச் சென்றதில் இந்தியாவிற்கு முக்கிய இடமுண்டு. இந்திய விஸ்தரிப்பு வாத்தின் ஒரு பகுதியாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. இந்தியா இலங்கை தொடர்பில் மேற்கொண்டு செயற்பாடுகள் அனைத்தும் இலங்கையை இந்தியாவின் மநாநிலங்களில் ஒன்றாக்கும் பிராந்திய மேலாதிக்க தன்மையின் அடிப்படையிலேயே அமைந்து இருந்தது.

          கம்யூனிஸ்ட் கட்சி  இடதுஇ 1977 இல் நடைபெற்ற தேர்தல்கள் வரை அவற்றை   பகிஸ்கரித்தே  வந்தது. 1989 இல்,  இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பிரதிபலிப்பாய், இந்திய இராணுவம், எம் தேசத்தினுள் செங்கம்பளம் விரித்து , அரசாலும், தமிழ் பாஸிச சக்கிகளாலும் வரவேற்க்கப்பட்டது.  அதன் பயனாய் மக்கள் பட்ட அவஸ்தை, அழிவு, இழப்பு  நாம் அறிந்ததே .அந்தநிலையில் 1989 இல் யாழ் - பண்டத்தெருப்பு இந்துக்கல்லூரி மைதானத்தில் நடைப்பெற்ற கூட்டத்திற்கு   சிறிமாவோ பண்டரநயக்காவை  வரவேற்றதுக்கு ஒரே காரணம் இஇந்திய விஸ்தரிப்புவாதமே ஆகும். . மணியத்தார் தலைமையில் நடைப்பெற்ற இக் கூட்டத்தில் குமார் பொண்ணம்பலம், மோதிலால் நேரு, வினோதன் முதலானோரும் கலந்துக் கொண்டுள்ளனர். பெரும் தொகையான மக்கள் இக்கூட்டத்தில் கலந்துக் கொண்டுள்ளார்கள். இக் கூட்டத்தில்  மணியத்தார் 

"தமிழ் மக்களின் பிரச்சனை எது? எப்படி தீர்வு காணவேண்டும் கேள்விகளை எழுப்பியுள்ளதுடன், இன்று நாம் போராடும் அனைத்து சக்திகளுடனும் ஒன்றுபட்டு நிற்கிறோம் . தவிர சொந்த அபிலாசைகளுக்காகவோ , வேறு எதற்காவோ நாம்  இங்கு நிற்கவில்லை.. சிறிமாவோ இந்த ஒப்பந்தத்தை , இந்திய இராணுவத்தை அகற்ற முயல்வார் என்று நம்புகிறோம் " எனக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் இன முண்பாட்டுக்கான தீர்வு என்பது இந்திய மேலாதிக்க நலனுக்கு அப்பால் அது இலங்iகை மக்களின் நலனை பிரதிப்பலிக்க வேண்டும் என்பதல் உறுதியாக இருந்துள்ளார். இக்கூட்டத்தில் விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தலுக்கும்,  இந்திய இராணுவத்தின் கெடுபிடிக்கும் மத்தியில் உரையாற்றி விட்டு தலைமறைவு வாழ்வை மேற்கொண்டார்  என தோழர்களும் அவரது மனைவியும் சொல்லக் கேட்டிருக்கின்றேன். 

         பின்னர் கடும் சுகவீனமுற்று , மருத்துவ மனையில் இருந்து வெளிவந்து யாழ் - ஸ்டான்லி வீதியில் 1989-05-01  அன்று நடைப்பெற்ற  மே தினகூட்டத்தில்  "அரசு விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு வந்திருக்கிறதென்றால்,  நாம் ஏற்கனவே கூறிய உண்மை "உண்மைதான்' என்பதை அதன்  விளங்கிக் கொள்ள முடியும் .நாம் பேச்சுவார்த்தையை ஏற்றுக்கொள்கிறோம் .அதேநேரம் அது பூச்சண்டியாக அமையக்கூடும். அது உண்மையாக இரு இனங்களும்,  எமது நாட்டில்  சுதந்திரத்துடனும்,  இறையான்மையுடனும் வாழக்கூடியதான ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கும், பாதுகாப்பதற்கும்  ஏற்ற வழி அமைக்கப்படவேண்டும். அதற்க்கு முன்பாகவே, வெலியோயா தனி மாவட்டமாக அமைப்பதைக் கைவிடவேண்டும். அத்தோடு கிழக்கு மாகாணத்தில் சர்வஜன வாக்கெடுப்பை தற்காலிகமாக நிறுத்தி , ஏன் முற்றாகவே கைவிடவேண்டும் என்று இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி இடது வலியுறுத்தி நிற்கிறது . இதன் மூலம் தான் பேச்சுவார்த்தைக்கு போகக் கூடிய ஸ்தாபனங்களுக்கும் மக்களுக்கும் நம்பிக்கையைத் தரும். பரஸ்பரம் விடுக்கொடுத்து பேச்சுவார்த்தையை   நடத்தக்கூடிய சூழ்நிலையும் உருவாகமுடியும் . இதனைவிடுத்து இலங்கை அரசின் விருப்பத்தின் பேரிலோ, இந்திய அரசின் பேரிலோ ,ஒருதலைப்பட்ச முடிவுகளின் பேரிலோ ஏற்படுத்தப்படக்கூடிய தீர்மானங்களும், முடிவுகளும், ஆயுதங்களும் எமது தேசத்தில் அமைதியை நிலை நிறுத்த முடியாது . இதுவே எமது நிலைப்பாடாகும் ". எனக் குறிபிட்டுள்ளமை அவரது தன் முனைப்பறற நாகரிகத்தை எடுத்துக் காட்டுவதாக அமைந்திருக்கின்றது.

இந்தப் பேச்சுவார்த்தை இலங்கை அரசு, இந்திய அரசு, ஏனைய விடுதலை அமைப்புகள் மூன்றும் ஒன்றுகதைத்து ஒரு முடிவுக்கு வரக்கூடிய வெற்றிகானக் கூடிய முயற்ச்சிக்கு ஒத்துழைக்க வேண்டும், அதைவிட்டு ஒன்றிற்கொன்று கழுத்தறுப்பு வேலைகளை செய்வதாக அமையும்.  எமது நாட்டிற்கும். மக்களுக்கும் பெரிய ஆபத்தை விளைவிக்கும். ஆரம்பக் காலந் தொட்டு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி பீட்டர் கெனமன்,  விக்கிரமசிங்க போன்றோர் தலைமையிலும் சரி, பின்னர் கருத்துவேறுபாட்டு பிரிந்த பின்னரும் சரி 'அந்திய தலையீடு ' பற்றி எச்சரித்தே வந்துள்ளனர்.  .இதனை இலங்கையிலுள்ள அரசியல் கட்சிகள்,   விடுதலை இயக்கங்கள் கவனத்தில் கொள்ள தவறிவிட்டன. 1983 இனக் கலவரத்தை சாதகமாக்கி இந்திய தன்னுடைய விஸ்தரிப்பை ஆரம்பித்தது. அதனை இலங்கை அரசும் ஆதரிப்பது போன்றே நடந்துகொண்டது. இந்தப் பின்னணியில் ஒப்பந்தம்  உருவாகினது. இது பல வகையிலும் குழப்பமான ஒன்றாகவே காணப்பட்டது. சில விஷயங்கள் தமிழ் மக்களின் விடுதலைக்கும் எதிர்காலத்திற்கும் உதவக்கூடிய அம்சங்கள் உள்ளன. ஆனால் ஒப்ந்தத்தில் காணப்படும் பெரும்பான்மையான விடயங்கள் தமிழ் மக்களுக்கு மட்டுமல்ல சகல இலங்கை மக்களையும் பாதிக்கக் கூடியதே . எனவே இவ்வகையான பாதகங்களை எதிர்க்க வேண்டும் அல்லது மாற்றியமைக்க வேண்டும் என்பதில் மணியத்தார் உறுதியாகவே நின்றுள்ளார்.

         இந்தியாவின் தலையீட்டை  இடதுசாரிகள் ஆரம்ப கால முதலாகவே எதிர்த்து வந்திருந்த போதினும்  இலங்கை அரசு செய்துகொண்ட ஒப்ந்தம் என்ற காரணத்தினால்,  சில  விட்டுக் கொடுப்பை இலங்கை மக்கள் செய்யவேண்டியிருந்தது. அந்த விட்டுக்கொடுப்பும் .முத்தரப்புப் பேச்சுவார்த்தையுமே  தீர்வாக அமைய முடியும் என்பதை வலியுறுத்திய பின் மணியம் மீண்டும் தலைமறைவு வாழ்வை மேற்கொண்டு கண்டியில் இருந்த காலத்தில் விடைபெற்றுக்கொண்டார்.   

         அரசியலில் மட்டுமன்றி இலக்கியத்திலும் அத்தகைய ஈடுபாட்டினையே  கொண்டிருந்தார். தாயகம் சஞ்சிகையின் தொடர் வெளியீடுக்கும் காரணமாயிருந்துள்ளார். தாயகம்  சஞ்சிகையில் இதழ்களுக்கு இறக்கும் வரை தொடர்ந்து அவர் ஆசிரியர் தலையங்கம் எழுதியுள்ளார்(http://ta.wikipedia.org/wiki/) என திருமதி.வள்ளியமை சுப்பிரமணியம், திருமதி. இரவீந்திரன் (மகள்) ஆகியோரும்  சொல்லக் கேட்டிருக்கின்றேன். அப்படியாயின் அவையாவும் தொகுக்கப்பட்டு அவரது 25 நினைவையொட்டியாவது வெளியிட வேண்டியது காலத்தின் தேவையாகும். மேலும் தேசிய கலை இலக்கிய பேரவை என்ற கலை இலக்கிய பண்பாட்டமைப்பை உருவாக்கி அதனூடே சமூகம் சார்ந்த பல செயற்பாடுகளை முன்னெடுத்து வந்துள்ளார். இவ்மைப்பின் ஊடாக பல தமது சமூகம் சார்ந்த அறிவை பட்டைத்தீட்டிக் கொண்டதுடன் பல புதிய தலைமுறைகள் இலக்கியத்தில் பிரவேசம் கொள்ளவும் காரணமாக அமைந்திருக்கின்றார். விடுதலை சார்ந்த இலக்கியங்களை தாம் ரசித்து கற்றதாகவும் பின் அவற்றை ஏனையோர் கற்கும் படியும் வழ்காட்டி நின்றமைக் குறித்து பலர் பதிவாக்கியுள்ளனர்.   அரசியல் வாதிகள் தவிர்ந்து கலை இலக்கிய வாதிகளுடனும் நேசப்பூர்வமான உறவினை பேணிவந்துள்ளார் என்பதை கைலாசபதி, கவிஞர். இ. முருகையன், சி. தில்லைநாதன், மௌனகுரு, பெ.சு.மணி,  கே. கணேஷ் முதலானருடனான உறவுகள் எடுத்துக் காட்டுகின்றன.  இது பற்றிய பதிவுகளை , முருகையன், கே. கணேஷ்,  சி. தில்லைநாதன், சி. சிவசேகரம், அ. சண்முகதாஸ்இ,திருமதி. சர்வமங்களம் கைலாசபதி,சி. பற்குணம், ஏ. ஜே. கனகரட்ணா, ந. இரவீந்திரன் முதலானோரின் அஞ்சலிக் குறிப்புகள் வெளிக்கொணர்கின்றன. 

     அந்தவகையில் ஒருநாட்டின் அரசியல் வளர்ச்சிக்கு இலக்கியம் உயிர் நாடி என்பதை அடிக்கடி கே. ஏ. சுப்பிமணியம் எடுத்துரைத்தார். சீனாவின் அயல் மொழிப்பதிப்பகத்தால் 1976 தொடங்கி தமிழ் நூல்களை வெளியிடாமைக் குறித்து வருந்தியதுடன் அவர்கள் மீண்டும் அவற்றை வெளிவரச் செய்வதில் ஆரவங்காட்டினார். மறைவிற்கு இரு கிழமைகளுக்கு முன்னால் கொழும்பில் நடந்த நூற்களின் பொருட்காட்சியிற் கலந்துக் கொண்துடன், மீண்டும் தமிழில் சீன நூற்கள் வெளிவர வேண்டும் என்பதனையும் சீனத்தினின்று வந்திருந்த குழுவினரிடம் வற்புறுத்தியதாகத் தெரிகின்றது(கே. கணேஷ் ,மே.கு.நூ).

இவ்வாறே அவர் வாழ்ந்த காலத்தில் தேசிய கலை இலக்கிய பேரவையின் மூலம் சி. சிவசேகரம், இ. முருகையன்இ ந. இரவீந்திரன், க. தணிக்காசலம் முதலானோரின் நூல்கள் வெளிவருவதற்கும் மணியத்தார் காரணமாக இருந்துள்ளதை  இ. முருகையன் பதிவாக்கியிருக்கின்றார். இவ்வாறு இலக்கிய நேர்மையும் திறமையும் கொண்டு செயற்பட்ட அண்ணாரின் இழப்பு இலக்கிய துறையிலும் பாதிப்பை செலுத்தியது எனக் கூறின் தவறாகாது. 

         யாழ்பாணத்தை பிறப்பிடமாகக் கொண்ட அவர் தமது அறிவு-ஆற்றல்-செயற்பாட்டால் அவர் பிறந்த மண்ணை கடந்து தெலைத்தூரங்களிலும் செல்வாக்கு செலுத்த கூடியவராக இருந்தார். அவரது அரசியல் தத்துவம் நடைமுறை என்பன மலையகத்தில் வேர் கொண்டு கிளைப்பரப்பியது. ந. இரவீந்திரன் ஊடாக மலையககத்திலே மார்க்சிய அரசியல் சார்ந்த அணியொன்றினைக் கட்டியெழுப்பியிருந்தார்.  இது பற்றி அவரது இறப்பையொட்டி இலங்கை ஜனநாயக வாலிப முன்னணியின் மலையக கமிட்டி வெளியிட்ட செய்தியில் பின்வரும் பந்தி கவனத்தில் கொள்ளத்தக்கது:  
"1980 ஆம் ஆண்டு வாலிபர் இயக்கம் தலவாக்கொல்லையில் தமது மாநாட்டை நடத்திய போது அதில் கலந்துக் கொண்டு முக்கிய உரையாற்றினார். மநாட்டின் தயாரிப்புக் கூட்டங்களை வாலிப இயக்கம் மலையகத்தின் பல்வேறு பாகங்களிலும் நடத்திய போது அப்பகுதிகளுக்கெல்லாம் சென்று தோட்டத் தொழிலாளர்களோடு உறவாடிஇ உரமிட்டவர் தோழர் மணியம். பிரச்சனைகளைச் சுட்டிக் காட்டி மக்களின் அடிப்படை ஜீவாதார உரிமைகளை  வாலிபர் இயக்கம் முன் வைத்த போது  அதற்கான சரியான ஆலோசணைகளை வழங்கி பல பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள வழி காட்டியவர் மணியம்.
        இவ்வகையில் மலையகத்தில் பின்னாட்களில் அரசியலில் பிரவேசம் கொண்ட  திருவாளர்கள். இ. தம்பையா  , ஜோன்சன், வ.விஜயரட்ணம் இன்னும் இது போன்ற பலர் இவரின் செல்வாக்கிற்கு உட்பட்டுள்ளதை அவதானிக்கலாம். அத்துடன் மலையகத்தில் அரசியல் தொழிசங்க முரண்பாடுகளை கடந்து ஒரு வெகுசன மார்க்கத்தில் மக்களை ஒன்றினைக்கும் பணியும் கட்டியெழுப்பட்டிருந்தது.  1964 இன் முற்பகுதியில் நடைபெற்ற ‘பதுளை மாநாட்டிற்காக நடந்த ஊர்வலத்தில் தலைமைத் தோழர்களான தோழர் -பீர்ட்டர் கெனமன், தோழர் சரத் முத்தட்டுவேகம, தோழர் தர்மதாச இவர்களுடன் வடபிரதேச வாலிபர் சங்க செயலாள்ராக இருந்த தோழர் மணியம் அவர்களும் முன்னணியில் சென்று உரை நிகழ்தினார்(தகவல் .திருமதி சுப்பிரமணியம் வள்ளியம்மை). 
      இலங்கையில் இடதுசாரி இயக்க வளர்ச்சியிலே மணியத்தருக்கு ஓர் உயர்ந்த இடமுண்டு என்பதில் ஐயமில்லை. ஆயினும் அவர் பற்றிய நினைவுக் குறிப்புகள்இ மதிப்பீடுகள்இ ஆய்வுகள் மிகக் குறைவாகவே உள்ளன. அவரது எழுத்துக்கள் எல்லாம் நூல் உருப்பறெ வேண்டும். அவர் பற்றிய தேடல்களும் ஆய்வுகளும் பெருக வேண்டும். அப்போது தான் தோழர் மணியத்தின் முக்கியத்துவம் பரவலாக உணரப்பட வழி ஏற்படும். 

இலக்கிய- சமூக தளம்: படைப்புகளும் செயற்பாட்டாளர்களும்(அச்சில்) என்ற நூலிருந்து

பெ.இராதாகிருஷ்ணனின் கட்சித்தாவல் : மகிந்த அரசின் சூழ்ச்சியின் தொடர்ச்சியே - என்.சரவணன்


பெ.இராதாகிருஷ்ணன் போன்றோர் மலையக மக்கள் முன்னணியின் சிதைவுக்கான முக்கிய பாத்திரங்களில் ஒருவர். ம.ம.மு வை பலப்படுத்த 90களில் சந்திரசேகரன், காதர், தர்மலிங்கம், லோறன்ஸ் போன்றோருடன் கணிசமான பணிகளை ஆற்றியிருந்தோம். ம.ம.மு மலையகத்தின் விடிவுக்கு  கணிசமான எதிர்பார்ப்பையும் கொண்டிருந்தோம்.

மலையகத்தில் தனக்கெதிரான சக்திகளை அழிப்பதற்கு முன்னர் அவற்றை நுணுக்கமாக சிதைவடையச்செய்வதை முன்நிபந்தனையாக கொண்டியங்குகிறது மகிந்த அரசு. அதனை நிறைவேற்றும் நேரடி கருவி தான் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ். இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கும் இதே நிலையை அரசு உருவாக்கிவிடும் காலமும் தொலைவில் இல்லை என்பதை அரசின் போக்கை அவதானித்து  வருபவர்கள் இலகுவாக உணர முடியும்.

பிரித்தாழும் சூழ்ச்சியில் கண்ட வெற்றி
மகிந்த அரசமைத்தது தொடக்கம் புலிகளை உடைத்தது, பிரதான எதிகட்சி என்கிற ஒன்றே இல்லை என்கிற நிலைமையை உருவாக்கியது, பலமாக வந்துகொண்டிருந்த ஜே.வி.பி.யை உள்வாங்கி பின்னர் சுக்குநூறாக்கியது, முஸ்லிம் தலைமைகளை துண்டு துண்டாக பிரித்தது, இப்பேற்பட்ட உடைவுகளுக்குள்ளும் உடைவுகளை உறுதிசெய்தது என வரலாற்றில் பிரித்தாழும் சூழ்ச்சியில் மிகக் கைதேர்ந்த சக்தியாக மகிந்த அரசு தன்னை நிலை நிறுத்திக்கொண்டது ஒன்றும் தற்செயல் அல்ல.

அதற்கூடாக தன்னை பலம்பொருந்திய சக்தியாக ஆக்கிக்கொண்டது. இன்று மகிந்த அரசின் பலம், மகிந்த அரசின் பலமே அல்ல, மாறாக எதிர்கட்சிகளின் பவவீனம். இந்த போக்கில் அரசு தொடர் வெற்றியை நிலைநாட்டியிருக்கிறது. இதற்கொரு சமீபத்திய சிறந்த உதாரணம் தான் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்கட்சிகளின் பொது வேட்பாளராக பிரேரிக்கப்பட்டவர்கள் யார் என்பது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா, முன்னாள் நீதியரசர் ஷிராணி, முன்னாள் இராணுவத்தளபதியின் மனைவி அனோமா பொன்சேகா ஆகியோர் முன்மொழியப்பட்டிருந்தார்கள். இவர்கள் எவருமே சமகால அரசியல் தளத்தில் இல்லாதவர்கள். அரசியல் தளத்திலேயே இல்லாதவர்களை தேடிச்செல்லும் அளவுக்கு எப்பேற்பட்ட அரசியல் பஞ்சம் நிலவுகிறது என்பது கவனிக்கத்தக்கது. ஆக மகிந்த அரசு பிரித்தாழும் சூழ்ச்சியில் ருசிகண்டு வெற்றிகண்ட நரி என்பதும், அத்தோடு அது முடியவில்லை என்பதும் நாம் அனைவரும் கவனிக்கவேண்டிய புள்ளி. அப்போக்கின் தொடர்ச்சியே ம.ம.முயின் இன்றைய பிளவு.

ம.ம.முவின் சரிவு
90 களில் வேகமாக தொடங்கி வேகமாக செல்வாக்கு சரிந்த கட்சியாக ஆகியது ம.ம.மு. அதன் அடிப்படை காரணங்களில் ஒன்று 94இல் சந்திரிகா அரசுடன் இணைந்தது. அடிப்படை அரசியல் விடுதலைக்கான கொள்கைகளைக் கொண்டிருந்த கட்சி பின்னர் வெறும் "தேர்தல் அரசியலுக்காக" தன்னை தயார் படுத்தும் குறுகிய நிலைக்கு தள்ளப்பட்டது.

அமைச்சுப்பதவி அதன் கண்களை இருட்டாக்கியது. புதிய வேடதாரிகளினதும், கொள்ளையர்களினதும், சந்தர்ப்பவாதிகளினதும் புகலிடமாகியது. அப்படிப்பட்டவர்களில் ஒருவர் இந்த பெ.இராதாகிருஷ்ணன். கட்சியை அரச சார்பு கட்சியாக இழுத்துச்செல்வதிலும் பாரிய பங்காற்றியவர்கள். கட்சிக்குள் இன்னமும் இப்படியானவர்கள் உள்ளார்கள் அவர்கள் அனைவரும் களையெடுக்கப்பட்டால் மட்டும் தேறிவிடும் என்று நான் கருதவில்லை.

கட்சி முற்றிலும் புனருத்தாபனம் செய்யப்படவேண்டும். கட்சியில் இன்னும் மிஞ்சியுள்ள மலையக விடுதலையில் பிரக்ஞையுள்ள தோழர்கள் தேர்தல் அரசியலிலிருந்து வெளியில் வருவது முதலில் முன்னிபந்தனயானது என்றே நான் கருதுகிறேன். “தேர்தல் அரசியல்”, “அரசியல் அதிகாரம்” என்பன மலையக அரசியலைப் பொறுத்தளவில் மக்களை நெருங்க முக்கியமான காரணி என்கிற வாதம் எப்போதும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. 

மலையகத்தின் சாபக்கேடான இலங்கை தொழிலாளர் காங்கிரசை எதிர்கொள்வதென்றால் “தேர்தல் அரசியல்”, “தொண்டு அரசியல்”, “அதிகார அரசியல்”, “நிவாரண அரசியல்” என்பன தவிர்க்க இயலாத ஒன்றென்கிற வாதமும் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது.

ம.ம.மு ஒரு புரட்சிகர கட்சியாக பார்க்கவில்லை ஆனால் மலையகம் பற்றிய மிகத் தெளிவான பார்வை அவர்களிடம் அன்று இருந்தது. இன்றும் மலையக அதிகார அலகு, மலையக தேசியம் குறித்த கோஷத்தை முன்வைக்கக்கூடிய தலைவர்கள் அதில் மட்டுமே உள்ளார்கள்.

கட்சியை பாதுகாப்பதற்கு நிதிப் பலத்தை நாடுவதற்காக ஒருகட்டத்தில் மிக மோசமான சக்திகளை உள்ளே நுழையவிட்டது மட்டுமல்ல, அவர்களுக்கு தேர்தலில் இடம்கொடுத்து, பிரதிநிதித்துவத்தையும் கிடைக்கச்செய்து ஈற்றில் தலைமையை கைப்பற்றும் நிலைக்கு கொண்டுசென்றது.

ம.ம.மு மீது இது போன்ற விமர்சனங்கள் பலவற்றை அடுக்கிக்கொண்டு போகலாம். அதற்க்கான சுயவிமர்சனத்துக்கான தேவை கட்சிக்குள்ள்ளிருப்பவர்கள் செய்வதன் மூலம் மட்டுமே சரி செய்ய முடியுமென்று நம்புகிறேன்.

சமூக விடுதலை, சமூக மாற்றம் குறித்த அலங்காரமான கோஷங்களுடன் வெளிவந்த ஒரு கட்சியின் அழிவுப்பாதை எப்படிப்பட்ட காரணிகளால் சிதைவடைய இயலும் என்பதற்கு ம.ம.மு ஓர் சிறந்த உதாரணம்.

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates