Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

இலங்கையில் 'தேயிலைக்கு' வயது 150 'எமக்கு' வயது 200 (தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் 3) - திலக்


இந்த தொடர் பத்தியின் 3வது பாகத்தை ஆரம்பிக்கையில் வாசகர்கள் பகிர்ந்துக்கொண்டவை பற்றி சில விடயங்களை சொல்லியாக வேண்டியுள்ளது. அவர்கள் முநூலில் கருத்துச் சொல்லியிருந்தால் அதனை அப்படியே கடந்த வாரம் போல் இணைத்து விட்டிருப்பேன். 'ஜல்லிக்கட்டு' கவனயீர்ப்புபோல் 'இலங்கையில்  தேயிலைக்கு வயது 150 எமக்கு வயது 200' எனும் கவனயீர்ப்பைச் செய்வோமா எனக் கேட்டதனால் என்னவோ ஒரு சத்தத்தையும் காணவில்லை. இதுதானே நமது அரசியல் நிலை. யாராவது எங்காவது முன்னெடுக்கும் அலையில் நாமும் முண்டியடிப்போமே  தவிர நமக்கான ஒன்றை முன்னெடுக்க முன்வருவதில்லை. இல்லாவிட்டால் ஒட்டுமொத்த நுவரெலியா மாவட்ட மந்தபோஷாக்காக எழுந்த ஜனாதிபதியின் குரல் 'ஒரு அம்புலன்ஸ்' வண்டியில் அடங்கிவிடுவதை கொண்டாட தயங்காமல் இருப்போமா. இந்த அரசியல்தான் எமது அரசியலாகிக் கிடக்கிறது.

இப்போது மலையகத்தில் மந்தபோஷணத்தை இல்லாமல் ஆக்க ஒரு அம்புலன்ஸ் வண்டி போதும் என கொள்ள முடியுமா? அதுபோலத்தான் ஜல்லிக்கட்டுக்கான 'நமது' போராட்டமும். தேயிலைக்கான வயது இலங்கையில் 150 எனில் நமக்கு வயது இருநூறு. இருநூறு வருடத்திற்கு முன்னர் இலங்கைக் கடற்கரையில் வந்திறங்கியபோது கொடுத்த தொற்றுநோய் பரவாது சொட்டு மருந்து கொடுத்த மருத்துவ முறையில் இருந்து நாம் மாற்றம் பெற்றிருக்கிறோமா? அந்த சொட்டுமருந்தைக் கொடுத்தது இந்தியாவில் இருந்து இந்த நோய் இலங்கைக்குப் போய்விடக்கூடாது இந்திய அரசாங்கமாக அல்லது இலங்கைக்குள் வந்துவிடக்கூடாது என இலங்கை அரசாங்கமோ பொறுப்புடன் செய்த வேலையில்லை. எமது உழைப்பைப் இறப்பினால் இழந்துவிடக்கூடாது என 'பிரிட்டிஷ் கம்பனிகள்' பயன்படுத்திய மருத்துவ முறைதான் அது. இன்றைக்கு இருநூறு ஆண்டுகள் கடந்தும் பிரிட்டிஷ் கம்பனிகளுக்குப் பதிலாக 'பிராந்திய கம்பனிகள்' (RPC) செய்துகொண்டிருக்கின்றன. முன் னூறுக்கும் மேற்பட்ட தோட்ட வைத்திய நிலையங்களில் 30 மாத்திரம் தான் அரச பொறுப்பில் உள்ளது . அதுவும் முறையாக நடத்தப்படுவதில்லை. வருடத்திற்கு 300 மில்லியன் ஒதுக்கப்பட்டு 'நகர மற்றும் தோட்டத்துறை' வைத்தியசாலைகளுக்கு செலவிடப்படுவதாக சொன்னாலும் தோட்ட வைத்தியசாலைக்கு அரசாங்கத்தினால் ஒதுக்கப்பட்டது பூஜ்ஜியத்தை தாண்டவில்லை. முற்றுமுழுதாக தோட்ட கம்பனிகள் நடாத்தும் மருத்துவ முறைமைக்குள் ஒரு மில்லியன் பெருந்தோட்ட மக்களை வைத்துக்கொண்டு எப்படி மந்தபோஷனத்தை இல்லாமல் ஆக்குவது.  ஒரு அம்புலன்ஸ் வண்டியூடாகவா?

 ஒட்டுமொத்த தோட்டப்பகுதி வைத்தியமுறைமை அரசாங்க தேசிய வைத்திய முறைமையில் இருந்து ஓரம்கட்டப்பட்ட ஒன்றாகவே இந்த இருநூறு ஆண்டுகாலமாக இருந்து வருகின்றது. அது பரிணாம வளர்ச்சியில்  தோட்ட மருத்­துவ உத­வி­யா­ளர் (Estate Medical Assistant  - EMA )எனப்படும் ஒரு முறைமைக்குள் கொண்டு நடாத்தப்படுகின்றது. இந்த மருத்துவர்களுக்கு சம்பளம் கொடுப்பது ஒன்றும் அரசாங்கம் இல்லை. தோட்ட முகாமையாளர். எனவே தோட்டக் கம்பனிகளின் மருத்துவ நிகழ்ச்சி நிரலே இங்கு முன்னெடுக்கப்படுகின்றது. அதற்குள் அரச சார்பற்ற நிறுவனங்களின் நிக்ழ்ச்சி நிரல் இலகுவாக உள்வாங்கப்படுகின்றது. இப்படி தனியாருக்கும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கும். கட்டுப்பாட்டுக்குள் கிடக்கும் மருத்துவ முறைமையில் இருந்து மந்தபோஷணம் இல்லாத குழந்தைகளை எப்படி ஜனாதிபதி அடையாளம் காண முடியும். எனவே நோயுற்ற பின்னர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல 'அம்புலன்ஸ்' அவசியமாகியிருப்பது போல் மந்தபோஷணமில்லா மலையக சிறுவர்களை உருவாக்க தோட்ட மருத்துவ முறை மாற்றப்படல் வேண்டும். தோட்ட முகாமையாளருக்கு அல்லாது மாவட்ட வைத்திய அதிகாரிக்கு பொறுப்புக் கூறும் மத்திய அல்லது மாகாண அரசுக்கு கீழ் மலையக மக்களின் மருத்துவ துறை அமைதல் வேண்டும். இதற்கான கோரிக்கை மக்களிடத்தில் இருந்து எழவேண்டும். இப்படித்தான் தோட்டப்பாடசாலை முறைமையில் இருந்து இப்போது மத்திய மற்றும் மாகாண அரசாங்கத்தினால் நிர்வகிக்கப்படும் கல்வித்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படுவதுபோல் 'சுகாதாரத்திணைக்களம்' தோட்டப்பகுதி  சுகாதாரத்தைப் பொறுப்பேற்கும் காலம் கனியும்போதுதான் நாம் இப்போது கல்வித்துறையில் மறுமலர்ச்சி காணுவதுபோல் சுகாதார துறையிலும் ஒரு மறுமலர்ச்சிக்கான தேவை இருந்துகொண்டே இருக்கிறது.

 இந்தப்பின்னணியிலேயே தேயிலையின் நூற்றியைம்­பது  கால வரலாற்றில் அதனை ஆதாரமாகக் கொண்டு நாம் எங்கு நிற்கிறோம் என நினைந்து எழ வேண்டியிருக்கிறது. இலங்கையின் பணப் பயிர்கள் எவையென கேட்டால் ' தேயிலை, இரப்பர், தெங்கு' என மனப்பாடம் செய்வித்து ஒப்புவித்த காலம் காணாமல் போய்விட்டது. இன்று உலக சந்தையில் இலங்கைத் தேயிலை நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டுவிட்டது. இனி முதலாம் இடத்தைப் பெற கென்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகளை முறையே பின்தள்ள வேண்டியிருக்கிறது. இது நடைமுறைச் சாத்தியமாகுமா? அத்தகையதொரு தேயிலைப் பயிர்ச்செய்கை இப்போது நடைமுறையில் உள்ளதா? மறுபுறத்தில் இலங்கையின் ஏற்றுமதி வருமானத்தில் முதலாம் இடத்தில் இருந்த தேயிலை ஏற்றுமதியும் இப்போது மூன்றாம் நான்காம் நிலைக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. அதேநேரம் முதலாம் இடத்தைப் பிடித்திருக்கும் துறை பற்றியும் நாம் கவனம் செலுத்த வேண்டியுள்ளது. வெளிநாட்டுக்கு வேலைக்குச் செல்வோர் அங்கிருந்து அனுப்பும் அந்நிய செலாவணிதான் இன்றைய இலங்கையின் முதலாவது 'ஏற்றுமதி' வருமானம். இலங்கை யாரை ஏற்றுமதி செய்து இந்த வருமானத்தை ஈட்டுகிறது. 'பணிப்பெண்களே' அதிகம். பணிப்பெண்களில் எத்தனை மலையக தாய்மார், சகோதரிகள் இருக்கின்றார்கள் ஏன்அவர்கள் இந்தத் துறையைத் தெரிவு செய்ய வேண்டும். தங்களைச் சுற்றித் தேயிலைத்தோட்டம் அமைந்திருக்க அது இலங்கையின் ஏற்றுமதி பயிராக இருக்க தான் ஏன் 'ஏற்றுமதி' பண்டமாக்கி நிற்க வேண்டும். தான் ஏன் தந்தையை, தாயை, சகோதர, சகோதரிகளை கணவனை, பிள்ளைகளைப் பிரிந்து வெளிநாடு சென்று வீட்டுவேலைகளை கூலிக்காக செய்ய வேண்டும்.இந்த இருநூறு ஆண்டுகால வரலாற்றில் நாம் ஈட்டிக்கொண்டது என்ன? தேயிலை ஏற்றுமதியில் கீழிறங்கி தேயிலை கொய்த நமது தாயையும் சகோதரிகளையும் ஏற்றுமதி செய்வதா? இந்தியாவில் இருந்து தொழிலுக்காக இறக்குமதியான நாம் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் தொழிலுக்காக ஏற்றுமதியாகப்போகிறோமா?


இப்படியான கேள்விகள் எழும்போதுதான் தேயிலைக்குப்பதிலாக நம்மை நோக்கி வரும் 'பாம் ஒயில்' உற்பத்தி பற்றியும் பேச நேர்கிறது. 'பாம் ஒயில்' என்றவுடன் எவ்வளவு அழகாக இருக்கிறது. நானாக மொழிபெயர்க்கும் வரை எனக்கு 'பாம் ஒயில்' என்பதற்கு தமிழில் என்ன சொல்வதென்று தெரியாது. ஆனால், அந்த உற்பத்தியில் ஈடுபட்டிருக்கும் நமது மக்கள் அதற்கு பொருத்தமான காரணத்தோடு பெயரிட்டிருந்தார்கள். 'கட்டுப்பொல்'. அதனையே "முள்ளுத்தேங்காய்' என மொழிப் பெயர்த்திருந்தேன். ஏற்கனவே தேங்காய் எண்ணை நம்மிடையே பிரபலமாகவுள்ள நிலையில் இந்த முள்ளுத்தேங்காய் எண்ணை பற்றி தெரிந்துக்கொள்வதில் அதிகமானோர் ஆர்வமாகவே உள்ளனர். தவிரவும் தேங்காய் எண்ணையை 'தேங்காண்ணை' என உச்சரிக்கும் நம்மவர்கள் "உங்கள் 'முள்ளுத் தேங்காண்ணை' தொடர் வாசிக்கிறேன். புதிய தகவல்களைத் தருவதாகவுள்ளது. ஏன் இப்படி ஒரு தொடர் எழுத தோன்றியது' எனவும் கேட்கிறார்கள் . அவர்களுக்காக அல்-அஸுமத் தின் அறுவடைக்கனவுகள் நாவலுக்கு எழுதிய குறிப்பின் முதல் பந்தி இங்கே.

எந்தவொரு எழுத்தாளனுக்கும் அவனது பிறப்பும், அந்த பிறப்புசார் பிரதேசமும் அந்த பிரதேசம் சார்ந்து அவன் கொண்டிருக்கும் பிரக்ஞையும், அந்த பிரதேசம் சார் மக்களும், அந்த மக்களின் சமூகம்சார் வாழ்க்கையும் அவர்தம் மொழியும் கலையும்,பண்பாடும் படைப்பாற்றலுக்கான பின்புலத்தை கொடுக்கின்றன. அந்த பின்புலத்தோடு அவனது வாசிப்பு அனுபவங்களும், சமூகம் நோக்கிய பார்வையும் (Perception)தேடலும் இரண்டரக்கலக்கும்போது அவனே ஒரு சமூக விஞ்ஞானியாகி அவன் ஆய்ந்தறிந்தவற்றை புனைவுகளாகவும் அபுனைவுகளாகவும் வெளிப்படுத்தி நிற்கும் தன்மை கலை, இலக்கியச் செயற்பாட்டுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. அவை எழுத்துச் செயற்பாடாகவும், கலைச் செயற்பாடுகளாகவும் அளிக்கைகளாகவும் இந்த சமூகத்திற்கு நிரம்பல் செய்யப்பட்டுக்கொண்டிருக்கிறது. (Supply). இதில் உள்ள சுவாரஸ்யமான அம்சம் என்னவெனில் இந்த நிரம்பல் கேள்வியினால் (Demand) எழும்புகின்ற நிரம்பல் இல்லை என்பதுதான். யாரையும் எழுதச்சொல்லியோ ஆடச்சொல்லியோ சமூகத்தில் எவரும் கேள்வி (Demand) விடுப்பதில்லை. ஆனால், ஒரு கலைஞனோ அல்லது எழுத்தாளனோ தன்னுடைய வெளிப்படுத்தலை செய்வதற்கு அதிக பிரயத்தனம் எடுத்துக்கொள்கிறான். இதற்குள் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்களும் ஏராளம். தனது தனிப்பட்ட வாழ்க்கையை தனது கலை, இலக்கிய செயற்பாடுகளினால் செழுமையாக்கிக் கொண்டவர்கள் பத்து வீதம் ஆனோர் என்றால் எஞ்சிய தொன்னூறு வீதமும் வறுமையாக்கிக் கொண்டவர்கள் என்பதுதான் யதார்த்தம்.இந்த யதார்த்த நிலை தொடரும்போதும் இந்த சமூகத்தில் கலை,இலக்கிய, எழுத்துச் செயற்பாடுகளில் ஈடுபாடு குறைவதுமில்லை,ஈடுபடுவோர் குறைவதுமில்லை. எனவேதான் எழுதத் தோனுவனவற்றை எழுதிக்கொண்டிருக்கிறோம்.

இப்போதைக்கு அது என்னவென்று தெரிந்து கொள்ள தலைப்பை மீண்டும் வாசிக்க...

நன்றி - சூரியகாந்தி

99 வருடகால நம்பிக்கை துரோகத்தின் வரலாறு : 1 - என்.சரவணன்

சேர் பொன் அருணாச்சலம் - ஜேம்ஸ் பீரிஸ்
பெப்ரவரி 4ஆம் திகதி ஒவ்வொரு வருடமும் சுதந்திரம் நமக்கு கிடைத்த நாளென திருப்பி திருப்பி புனையப் படுகின்ற ஒரு மிகப் பெரிய கும்பமேளா சிறிலங்காவில் நடப்பதுண்டு. இந்த நாளன்று நாட்டில் அனைத்து மக்களும் தங்களின் வீடுகளில் தேசியக் கொடியை பறக்க விடும் படி பணிக்கப் படுவார்கள். அவ்வாறு தேசியக்கொடி பறக்கவிடாதவர்கள் சந்தேகத்திற்குள்ளாவார்கள். நாட்டில் கடுமையான பாதுகாப்பு விதிகள் இந்த நாளில் அமுலுக்கு வரும். இந்த நிலைமை இப்போது சற்று தளர்ந்திருக்கின்ற போதும் பல்லாண்டு காலமாக தமிழ் மக்கள் அனுபவித்து வந்த கொடுமை இது.

ஏனைய நாளை விட சுதந்திரம் பறிக்கப்பட்ட நாளாகவும்,  அனைத்து மக்களும் பாதுகாப்பு என்கிற பேரில் இம்சைப் படுத்தப்படும் நாளாகவும் கடந்துபோன யுத்த காலங்களில் இருந்தது அது. சுதந்திரதினம் இந்தளவு வேடிக்கையாகிப் போனதன் பின்னணியின் வரலாற்றுப் பின்புலம் பலரால் மறக்கப்படுகின்ற ஒன்றாகியும் விடுகிறது.

தமிழ் மக்களைப் பொறுத்தளவில் உரிமைகள் இழக்கப்பட்டு, உரிமைக்கோரிக்கைகள் நசுக்கப்பட்டு,  அகதிகளாக, அனாதரவாளர்களாக, சீரழிக்கப்பட்டவர்களாக இருப்பதும், ஈற்றில் இருந்தவற்றையும் இழந்தவர்களாக, அகதிகளாக, கைதிகளாக, நாடோடிகளாக, ஆகியிருக்கும் நிலை. இன்று அரசியல் அதிகாரத்தைவிட யுத்தத்தால் இழந்துபோன அடிப்படைகளை மீட்பதில் படாதுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சுதந்திரம் ஒரு கேடா என்கிற நிலை. 

இதே சுதந்திர தினத்தை தமிழ் மக்கள் தங்கள் பிரதேசங்களில் கரிநாளாக அனுஷ்டித்து வந்த ஒரு காலமும் இருந்தது. கறுப்புக் கொடி ஏற்றி தமது மறுப்பையும், எதிர்ப்பையும் தெரிவித்து வந்த காலம் இருந்தது.

ஆங்கிலேயர்கள் தமிழர்களின் சுதந்திரத்தையும் பறித்து சிங்கள பேரினவாதத்திடம் ஒப்படைத்து இந்த வருடத்துடன் 69 ஆண்டுகளாக ஆகியிருக்கலாம். ஆனால் தமிழர்கள் அதற்கு முன்னரே சிங்கள தரப்பிடமிருந்து ஏமாற்றப்பட்டு 99 வருடங்கள் ஆகின்றன. இந்த 99 வருடங்களுக்குள் கண்ட வாக்குறுதிகள், உடன்பாடுகள், ஒப்பந்தங்கள், என்பவற்றை சுருக்கமாக மீட்டுப் பார்ப்பதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

வட கிழக்கெங்கும் இது வரைகாலம் பெப்ரவரி 4 என்பது ஒரு கரிநாளாகத் தான் அனுட்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. இந்த தினத்தில் அங்கு கறுப்புக் கொடிகள் பறக்கவிட்டு, சிங்கள பௌத்த அடக்குமுறையின் சின்னமான தேசியக்கொடி (சிங்கக்கொடி) தவிர்க்கப்பட்டு, எரிக்கப்பட்டு, தேசிய கீதத்துக்குப் பதிலாக தமிழ் கீதம் இசைக்கப்பட்டு வந்திருக்கிறது.

“சுதந்திரம்” என்பது தமிழர்களுக்கு “சு” நீக்கப்பட்ட “தந்திரம்” என்றால் அது மிகையில்லை. அது யாரால் யாருக்கு வழங்கப்பட்ட சுதந்திரம்? எவருக்கு கிடைத்திருக்கிற சுதந்திரம்? நிச்சயமாக தமிழ் மக்களுக்கோ அல்லது இங்கு வாழும் ஏனைய சிறுபான்மை இனக் குழுமங்களுக்கோ அல்ல.

அதிகாரம் கைமாற்றப்பட்ட பின் சிங்கள பௌத்த அதிகார சக்திகள், கொடுக்கும் தரப்பாகவும் ஏனைய தரப்பினர் கையேந்தி தமதுரிமைகளைக் பிச்சை கேட்கும் தரப்பினராகவும் மாறியது. தொடர்ச்சியாக இரங்கிப் போய் கோரினர். தமது சந்தர்ப்பவாத நலன்களின் போது மட்டும் (அதாவது தமிழ் தலைமைகளினால் அரசியல் லாபம் கிடைக்கக்கூடிய நிலைகளில் மட்டும்) தமிழ்த் தலைமைகளுடன் பேச முற்படுவது, வாக்குறுதிகள் வழங்குவது, ஒப்பந்தம் செய்து கொள்வது, தங்கள் நலன்கள் முடிந்ததும் தூக்கியெறிந்து விட்டு தமது வேலையைப் பார்ப்பது என்பதே வரலாறாக பதியப்பட்டுள்ளது. 

இவை ஒன்றும் வரலாற்றில் ஒரு முறை ஏற்பட்டதல்ல. அந்த நம்பிக்கைத் துரோகங்களின் வரலாறு நீண்டது. தமக்கான உரிமைகள் சிங்கள பௌத்த அதிகாரத் தரப்பினால் ஒருபோதும் கிடைக்கப் போவதில்லை என்பது ஸ்தூலமாக நிரூபிக்கப்பட்டு வந்திருக்கிறது. தமிழ் மக்கள் தமது விடுதலை என்பது கேட்டுக் கெஞ்சிப் பெறுவது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டு வந்திருக்கிறது. சிங்கள அதிகாரத் தரப்பினால் அடுத்தடுத்து வழங்கப்படும் எந்த உத்தரவாதத்தையும் சந்தேகிக்க, மறுக்க, எதிர்க்க, எச்சரிக்கை கொள்ள வைத்து விட்டிருக்கிறது.

இந்த 99 ஆண்டு கால வரலாறு என்பது சிங்கள பொளத்த சக்திகளினால் தமிழ் மக்கள் ஏமாற்றப்பட்ட வரலாறு தான். அது இந்த அதிகாரம் கைமாறப்பட்ட 69 வருடங்களுக்குள் மட்டுப்பட்டதல்ல. சுதந்திரத்திற்கு முற்பட்ட காலந்தொட்டு சென்ற நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து தொடக்கப்பட்டாகி விட்டது. அதனை இங்கு பார்ப்போம்...


முதலாவது நம்பிக்கைத் துரோகம்
1915ஆம் ஆண்டு இனக்கலவரம் மற்றும் அன்றைய ஆங்கிலேய அரசு அறிமுகப்படுத்த விளைந்த இலங்கைக்கான புதிய அரசியல் யாப்பு என்பவற்றைத் தொடர்ந்து சிங்கள தமிழ் முஸ்லிம் தலைவர்கள் ஒரு இயக்கத்தை அமைக்க முனைந்தனர்.

அதன்படி இலங்கை சீர்திருத்தக் கழகம் என்கிற அமைப்பை 1917 இல் உருவாக்கியபோது அதன் ஸ்தாபகர்களில் ஒருவரான சேர் பொன் அருணாச்சலத்தை தலைவராக நியமித்தனர். இலங்கை சட்ட நூல்நிலையத்தில் 19 உறுப்பினர்களால் (அதாவது 19 வழக்கறிஞர்களைக் கொண்ட) சீர்திருத்தக் கழகம் ஆரம்பிக்கப்பட்டது. “எமது அரசியல் தேவை” என்கிற தலைப்பில் அருணாசலம் ஆற்றிய உரையில்..

“இலங்கை பிச்சை கேட்கும் வரிய நாடல்ல எமது பாரம்பரிய சொத்தைத் தான் கேட்கிறோம்” என்றார் (02.04.1917)

வெகு விரைவில் அப்போது இலங்கையில் இயங்கிய ஏனைய சங்கங்களான இலங்கை தேசிய சங்கம், சிலாபம் சங்கம், யாழ்ப்பான சங்கம் ஆகிய சங்கங்களையும் இணைத்து இந்தியாவில் சுதந்திரப் போராட்டத்தை முன்னெடுத்து வந்த இந்திய தேசிய காங்கிரஸ் போலவே இலங்கையிலும் இலங்கை தேசிய காங்கிரஸ் (Ceylon National Congress - CNC) எனும் இயக்கத்தை அமைத்துக் கொண்டனர். இதனை ஆரம்பிப்பதில் முன்னின்ற எப்,ஆர்,சேனநாயக்க, ஜேம்ஸ் பீரிஸ் போன்றோர் இனரீதியிலான பிரதிநிதித்துவத்தை நீக்குவதையும் தமது நிகழ்ச்சிநிரலில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். தம்முடன் இணைந்த யாழ்ப்பாண சங்கம் மாத்திரம் இந்த விடயத்தில் மாறுபட்ட கருத்தைக் கொண்டிருந்தது. யாழ்ப்பாண சங்கம் அதற்கு சில மாதங்களுக்கு முன்னர் தான் குடியேற்ற நாடுகளின் மந்திரிக்கு “எந்த சந்தர்ப்பத்திலும் இன ரீதியிலான பிரதிநிதித்துவம் நீக்கப்படலாகாது” என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.

15.12.1917 இல் தேசிய காங்கிரசை உருவாக்குவதற்காக கூடிய முதாலாவது ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட 144 பேரில் 17 பேர் மட்டுமே தமிழர்கள். அதுவும் யாழ்ப்பாண சங்கத்தின் பிரதிநிதிகள் இருவர் மாத்திரமே. இன ரீதியான பிரதிநிதித்துவம் நீக்கப்படக் கூடாது என்கிற அவர்களின் கோரிக்கையை  பெரும்பாலான பெரும்பான்மை சிங்களவர்கள் எதிர்த்தனர். இந்த நிலைமையை சரி கட்டுவதற்கு அருணாசலத்தை அணுகினார்கள். 

இலங்கை தேசிய சங்கத்தின் தலைவர் ஜேம்ஸ் பீரிஸ், இலங்கை சீர்திருத்தக் கழகத தலைவர் ஈ.ஜே.சமரவிக்கிரம, யாழ்பாண சங்கத் தலைவர் ஏ.சபாபதி ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்றை ஏற்படுத்தினார் அருணாசலம். அந்த பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்படாத நிலையில் அருணாசலம் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைக்குள் தமிழர்களின் பிரதிநிதித்துவத்தை பேணுவது எப்படி என்று ஆராய்ந்தார். அத விளைவாக மேல் மாகாணத்தில் தமிழர்களுக்கு ஒரு தொகுதியை ஒதுக்க சிங்களத் தலைவர்கள் ஒப்புக் கொண்டார்கள்.

08.12.1918 அருணாசலத்துக்கு எழுதிய கடிதத்தின் மூலம் ஜேம்ஸ் பீரிசும், சமரவிக்கிரமவும் அந்த வாக்குறுதியை அளித்தார்கள்.

“மேல் மாகாணத்தில் தமிழருக்கு ஒரு தொகுதியை ஒதுக்குவதற்கு எமது ஆதரவை தருவோம் என்று வாக்குறுதியளிக்கிறோம்” என்றார்கள்.

அன்றே அருணாசலம் அச்செய்தியை சபாபதிக்கு அறிவித்தார். அந்த உறுதிமொழியின் பேரில் யாழ்பாண சங்கமும் இன ரீதி பிரதிநிதித்துவத்தைக் கைவிட்டு 11.12.1919 இல் நடந்த இலங்கை தேசிய காங்கிரஸ் கூட்டத்தில் கலந்துகொண்டது. அதன் தலைவராக அருணாசலம் நியமிக்கப்பட்டார். தமிழர்களை சமரசத்துக்கு அழைத்து தமது தேவை கைகூடியபின், கைவிடுவது என்பது இங்கிருந்து தான் தொடங்குகிறது.

எப்.ஆர்.சேனநாயக்க
மனிங் சீர்திருத்தத்திற்கான முயற்சிகளை ஆங்கிலேய அரசு மேற்கொண்டிருந்தபோது தமிழ் பிரதிதிநிதித்துவம் குறைக்கப்படுவது குறித்து இலங்கை தேசிய காங்கிரஸிலிருந்த தலைவர்கள் கண்மூடித்தனமாக இருப்பதைக் கண்ட அருணாசலம் முரண்படத்தொடங்கினார். தேர்தல் கிட்டிய நேரத்தில் கொழும்பு தொகுதிக்கான வேட்பு மனுவை அருணாசலம் அவர்கள் தயார் செய்துகொண்டிருந்தபோது அவரை தலைவர் பதவியிலிருந்து நீக்கி விட்டு ஜேம்ஸ் பீரிசை அப்பதவிக்கு நியமித்தார்கள். இந்த சதியின் சூத்திரதாரியாக செயல்பட்டவர்கள் எப்.ஆர்.சேனநாயக்கா, டீ.எஸ்.சேனநாயக்கா ஆகிய இரு சகோதரர்களுமே. இவர்கள் இருவரும் அப்போது அநகாரிக தர்மபாலாவின் சிங்கள பௌத்த செயற்பாடுகளுடன் இணைந்து பணிபுரிய ஆரம்பித்திருந்தார்கள்.

1921சட்டசபைத் தேர்தல் நெருங்கிய வேளை கொழும்பு நகர் ஆசனம் ஏற்கெனவே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்படி தமக்கு வழங்கப்படவேண்டும் என்பதை நினைவுருத்திய வேளை 

“இலங்கை சீர்திருத்த சங்கத்தின் தலைவராக இருந்த போது நான் கொடுத்த வாக்குறுதி இலங்கை தேசிய காங்கிரஸ் தலைவராக உள்ள என்னைக் கட்டுப்படுத்தாது”  என்று ஜேம்ஸ் பீரிஸ் அறிவித்தார்.

எப்.ஆர்.சேனநாயக்கா இந்த சதியின் பின்னணியில் இருந்தார். இந்த ஆசனம் ஒரு தூய சிங்களவருக்கே வழங்கப்படவேண்டும் என்று தனது சகாக்களுக்கு கூறினார். இறுதியில் அந்த தொகுதிக்கு ஜேம்ஸ் பீரிசை தெரிவு செய்தார்கள். அதுவே சிங்களத் தரப்பினரால் நம்பி மோசம் போன முதலாவது நிகழ்வாக பதியப்படுகிறது.

இந்த துரோகத்தை எதிர்கொண்ட வேளை அருணாசலம் 70 வயதை எட்டிக்கொண்டிருந்தார்.  ஏமாற்றத்தால் துவண்டு போன அருணாசலம் இலங்கை தேசிய காங்கிரசில் இருந்து விலகி யாழ்ப்பாணத்துக்கு சென்றுவிட்டார். கனகசபை, சபாபதி உள்ளிட்ட சகல தமிழ் உறுப்பினர்களும் காங்கிரசிலிருந்து விலகினர். இலங்கை தேசிய காங்கிரஸ் அதன் பின்னர் ஒரு தூய சிங்கள அமைப்பாகவே மிஞ்சியது. சிங்கள தரப்பு தமிழர்களுக்கு செய்த துரோக ஒப்பந்த வரலாறு அங்கிருந்து தான் தொடங்கிற்று. முதல் ஒப்பந்த மீறல் அங்கிருந்து தான் ஆரம்பமானது. சிங்கள தலைவர்களிடம் முதலில் நம்பிக்கை இழந்துபோன சந்தர்ப்பமும் அது தான்.


முதற்தடவையாக தமிழீழம்
அதுவரை கொழும்பை மையமாகக் கொண்டு அரசியல் பணியாற்றி வந்த அருணாச்சலம் யாழ்ப்பாணம் சென்று இலங்கை தமிழ் மக்கள் சங்கம் (Ceylon Tamil League) என்கிற அமைப்பை அங்கு 1923 இல் உருவாக்கினார். அதன் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் வைத்துத் தான் தமிழ் ஈழம் என்ற சொற்றொடரை முதன் முதலில் உபயோகித்தார். அவரின் உரையில்...

“அரசியல் தேவையின் விளைவாக இச்சங்கம் உருவாக்கப்படுகிறது. இதை உருவாக்குவதற்கு அரசியல் மட்டும் காரணமல்ல. "தமிழ் ஈழம்" என நாங்கள் பெருமையுடன் கூறும் லட்சியத்தை அடைவதற்கு உழைப்பதே இச் சங்கத்தை உருவாக்கியதன் நோக்கம்.” (16.09.1923) என்றார். ஒரு சில மாதங்களில்  அவர் இந்தியாவுக்கு யாத்திரை சென்ற வேளை நோயுற்று இறந்து போனார் (09.01.1924).

இந்த முதலாவது துரோகத்தனத்தைத் தொடர்ந்து இ.தே.கா.வினர் சமரசத்துக்கு முயற்சி செய்தாலும் கூட தமிழர்களின் நியாயமான கோரிக்கையை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. எனவே இந்த சமரச முயற்சிகள் யாவும் தோல்வியடைந்தன.

கண்டி சிங்களவர்களும் இதே காலப்பகுதியில் தம்மை தனித்துவமான மக்கள் பிரிவினராக அங்கீகரித்து தமது உரிமைகளை பாதுகாக்கக்கப்பட வேண்டும் என்று கோரினார்கள். கண்டியிலுள்ள 7 தொகுதிகளிலும் கண்டியைச் சேர்ந்தவர்களே போட்டியிடவேண்டும் என்று கோரினார்கள். தேசிய காங்கிரஸ் ஆரம்பத்தில் ஒப்புக்கொண்டிருந்த போதும் நான்கு தொகுதிகளில் கீழ் நாட்டு சிங்களவர்களை கடியில் போட்டியிடச் செய்து நான்கு தொகுதிகளைக் கைப்பற்றினார்கள். கீழ் நாட்டு சிங்களவர்கள் மீது நம்பிக்கையிழந்த கண்டியச் சிங்களவர்கள் இதன் போது தான் சமஷ்டி கோரிக்கையை முவைத்தார்கள். அதனை ஆதரித்த எஸ்.டபிள்யு.பண்டாரநாயக்க இந்தக் காலப்பகுதியில் தான் சமஷ்டி பற்றிய தனது உறுதியான கொள்கையை முன்வைத்து பிரச்சாரம் செய்தார்.  (பிற்குறிப்பை காண்க)

கண்டியச் சிங்களவர், கீழ்நாட்டு சிங்களவர், தமிழர்களுக்குமாக இந்த சமஷ்டி அமைப்பு பிரிக்கப்பட்டு ஆளப்பட வேண்டும் என்றும் “சமஸ்டியே இலங்கைக்கு உகந்த ஒரேயொரு தீர்வு” என்று யாழ்ப்பாணத்தில் வைத்து 1926 இல் உரையாற்றியிருந்தார். வடக்கு கிழக்கு இணைந்த தமிழ் பிரதேசத்தை அவர் அதில் முன்மொழிந்தார். அந்த உரை விரிவான கட்டுரையாக  “த சிலோன் மோர்னிங் லீடர்” பத்திரிகையில் 17.07.1926 அன்று வெளியானது.

சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி - சி.ஈ.கொறயா

"மகேந்திரா" ஒப்பந்தம்
1921இல் தமிழ் தலைவர்களின் வெளியேற்றத்தைத் தொடர்ந்து கண்டியச் சிங்களவர்களும் (இ.தே.கா.வினரால்) ஏமாற்றப்பட்டதைத் தொடர்ந்து 1924இல் வெளியேறினர். இ.தே.கா இந்த நிலைமைகளை சரி செய்தால் மாத்திரமே ஆங்கிலேயர்களுடன் ஒருமித்து குரல் கொடுத்து கோரிக்கைகளை நிறைவேற்ற எண்ணினார்கள்.

இவ்விரு தரப்பினருடனும் ஒரு பொது உடன்பாட்டைக் காண வட்டமேசை மாநாடொன்றைக் கூட்டுவதற்கான யோசனை இ.தே.கா வின் நிறைவேற்றுக் குழு உறுப்பினரான கொரயா அவர்களால் 1924 டிசம்பர் 9ஆம் திகதி முன்வைக்கப்பட்ட போதும் இ.தே.கா.வினருக்கும் கண்டியச் சிங்களத் தலைமைகளுக்குமிடையில் இருந்த முறுகல் நிலை காரணமாக இது உடனடியாகச் சாத்தியப்படவில்லை. அனால் அதன் பின்னர் 1925 யூன் 28ஆம் திகதியன்று தமிழர் மகா சபைக்கும் இ.தே.கா.வினருக்குமிடையில் யாழ்ப்பாணத்தில் வைத்து ஒரு வட்டமேசை மாநாடு நடத்தப்பட்டது.

இந்த மாநாடு சேர் வைத்திலிங்கம் துரைசுவாமியின் இல்லத்தில் நடந்தது. அவரது இல்லத்திற்கு அவர் வைத்திருந்த பெயர் தான் “மகேந்திரா இல்லம்” எனவே மகேந்திரா ஒப்பந்தம் என்கிற பெயரிலேயே இந்த ஒப்பந்தத்தை அழைப்பார்கள். இதன் போது சி.ஈ.கொறயா, அவரது சகோதரர் விக்டர் கொறயா, ஜோர்ஜ் ஈ டி சில்வா, என்.எச்.ஜயதிலக்க, டி.பீ.ஜாயா, எம், ஏ. அருளானந்தம், பீ.டீ.எஸ்.குலரத்ன, ஆர்,எஸ்,எஸ்.குணவர்தன, எஸ் முத்தையா ஆகியோர் இ.தே.கா சார்பிலும், துரைசாமி, ஏ.கனகரத்தினம், எஸ். ராஜரத்தினம், ஏ.ஆர்.சுப்பிரமணியம், எல்.ஆர்.ஸ்பென்செர், எப்.பெய்லி மயில்வாகனம், டீ.ஆர். நல்லையா, எஸ்.சீ.தம்பையா, எஸ்.ஆர்.இராசரத்தினம் ஆகியோர் இதில் கலந்து கொண்டிருந்தார்கள்.

இதன் போது தான் “மகேந்திரா ஒப்பந்தம்” (Mahendra Pact) அல்லது ”சிங்கள-தமிழ் ஒப்பந்தம்” எனப்படும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அதன்படி தமிழர் தரப்பில் தமிழர் மகா சபையில் சார்பில் சேர் வைத்திலிங்கம் துரைசாமியும் இ.தே.கா சார்பில் கொரயாவும் கையெழுத்திட்டனர். துரைசாமி வட மாகாணத்தில் தேர்தலின் மூலம் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதிநிதி.

இந்த ஒப்பந்தத்தில் வடக்கும் கிழக்கும் ஒன்றிணைந்த தமிழ் பிரதேசமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

மொத்தம் 7 விடயங்களில் உடன்பாடு காணப்பட்டது. பெரும்பாலும் அவை இலங்கை தேசிய காங்கிரசின் நடைமுறையில் இனத்துவ அணுகுமுறை குறித்ததாக இருந்தன. 

  1. அரசாங்க சபைக்கான பிரதிநிதித்துவமானது வடக்கு கிழக்கு மற்றும் மேல் மாகாணம் ஆகியவை எவ்வாறு விகிதாசார முறைப்படி இருக்கக் கூடியவகையில் எதிர்கால அரசியல் யாப்பு அமைய வேண்டும் என்பது குறித்து முதல் பந்தி விளக்குகிறது.
  1. இலங்கை தேசிய காங்கிரசின் விடயதான குழுவானது 35 பேருக்கு மேல் இருக்கக் கூடாது என்றும் அந்த 35 பேரும் பிரதேசவாரியாகவும், இனவாரியாகவும் எப்படி நியமிக்கப்பட வேண்டும் என்பது குறித்து இரண்டாவது கோரிக்கை விளக்குகிறது.
  1. எந்தவொரு தீர்மானமும், திருத்தங்களும் காங்கிரசில் தீர்மாணிக்கப்படுவதற்கு முன்னர் விடயதான கமிட்டியில் பெரும்பான்மையாக நிறைவேற்றப்பட வேண்டும்.
  1. விடயதான குழுவில் அவை நான்கில் மூன்று பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்படல் வேண்டும்.
  1. பெரும்பான்மை என்பது அக்கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் பெரும்பான்மை என்று அர்த்தம் கொள்ளப்படும்
  1. வடக்கு கிழக்கு பற்றிய விடயங்களில் இலங்கை தமிழர் மகா சபையைச் சேர்ந்தவர்களே பிரதிநித்தித்துவப் படுத்துவார்கள்.
  1. தென் பிரதேசம் மேல் மாகாணம் என்றும், சிலாபம், புத்தளம் மாவட்டங்கள் வடமேற்கு மாகாணம் என்றும் (தமிழ் பிரதேச “அத்பத்து” தவிர்ந்தவை), மத்திய பிரதேசம் மத்திய மாகாணம் என்றும், வாடா மத்திய மாகாணம், ஊவா மாகாணம், சபரகமுவா மாகாணம, குருநாகல் மாவட்டம் “தமிழ் ரத்பத்து” சேர்ந்து வட மேல்மாகாணம் என்றம், வடக்கு பிரதேசம் வடக்கு கிழக்கு மாகாணம் என்றும் அர்த்தப்படுத்தலாம்.

ஆனால் இந்த உடன்பாடுகள் ஒன்றாக கூடி ஒப்புக்கொண்டு கைச்சாத்திட்ட போதும் அவர்கள் கொழும்பு திரும்பியதும் இந்த வாக்குறுதிகள் காற்றில் பறக்க விடப்பட்டன.

இக்கோரிக்கை 1925ஆம் ஆண்டு வருடாந்த மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் 3வதாக இருந்தது. ஆனாலும் இவ் ஒப்பந்த விடயங்கள் அடுத்த வருடாந்த மாநாட்டுக்கு ஒத்தி போடப்பட்டது. கட்டாயமாக 1926ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் மாநாட்டில் இது முன்வைக்கப்படுமென பிரான்ஸிஸ் டி.சொய்ஸாவால் கொரயாவுக்கு உறுதியளிக்கப்பட்டபோதும் அம் மாநாட்டின் நிகழ்ச்சி நிரலில் கூட இது சேர்த்துக் கொள்ளப்பட்டிருக்கவில்லை. தேசிய காங்கிரசினர் நம்பிக்கைத் துரோகிகள் என தமிழ் மக்கள் கருதுவார்கள் என அப்போது 'கொரயா' வால் சொல்லப்பட்டது. அதன்படியே நடந்தது. தமிழ் தலைமை இரண்டாவது முறையும் ஏமாற்றப்பட்டார்கள். இதன் விளைவு தமிழ் அரசியல் தேசிய அரசியலிலிருந்து தனித்துச் செல்லத் தொடங்கியது.
துரோகங்கள் தொடரும்...

உசாத்துணை

  • “The Ceylon National Nongress in disarray, 1920-1; sir Ponnambalam Arunachalam leaves the congress” - K. M. DE Silva - The Ceylon Journal of Historical and Social studies, 1972, Vol. 2 No. 2 pp. 97-117
  • “The Ceylon National Congress in Disarray 11: the triumph of Sir William Manning, 1921-1924” - K. M. DE Silva, The Ceylon Journal of Historical and Social studies, 1973, Vol. 3 No. 1 pp. 16-39
  • “Communal Conflict and the Formation of the Ceylon National Congress - Ariyaratne, R. A, Ceylon Historical and Social Studies Publication Board. The Ceylon Journal of Historical and Social Studies, 1977 Vol. VII No. 1 , pp. 57-82
  • "Elite conflict and the Ceylon national congress 1921-1928" a history of Sri Lanka by K. M. De Silva - 1981, c. Hurst & Company - London University of California press.
  • Broken promises of Sinhala leaders - M.Thirunavukkarasu 2012, Tamil Marumalarchi Sangam
  • “පොන්නම්බලම්-කුමාරස්වාමි පවුල සහ වෙල්ලාල දේශපාලනය” (பொன்னம்பலம் – குமாரசுவாமி குடும்பமும் வெள்ளாள அரசியலும் – நளின் சுபசிங்க 30.01.2014) http://www.yuthukama.com/2015/09/WellalaDeshapalanaya.html
பிற்குறிப்பு:
இலங்கைக்கு சிறந்த  அரசியல் முறைமை சமஷ்டி தான் என்று பண்டாரநாயக்க தீவிரமாக கருத்து வெளியிட்ட காலம் அது. சிலோன் மோர்னிங் லீடர் பத்திரிகையில் அவர் 1926 மே மாதம் ஒரு தொடர் கட்டுரைகளை (மொத்தம் 6 கட்டுரைகள்) எழுதி அதற்கான காரணங்களை நிறுவினார். அது மட்டுமன்றி இந்தியாவின் சேர்ந்து கூட்டாட்சியாகக் கூட இருப்பது இலங்கைக்கு பாதுகாப்பானது என்றார். ஆனால் இந்த கருத்தை தமிழர் தரப்பில் இருந்து ஜேம்ஸ் டீ ரத்னம் கடுமையாக எதிர்த்து வாதிட்டார். ஜேம்ஸ் டீ ரத்னம் இலங்கையின் தேர்ந்த அரசியல், வரலாற்று புலமையாளர். தொழிற்சங்கவாதி. பண்டாரநாயக்கவின் நெருங்கிய நண்பரும் கூட பண்டாரநாயக்கவுடன் சேர்ந்து  அரசியல்  முற்போக்கு தேசியவாதிகள் கட்சி (Progressive Nationalist Party) என்ற கட்சியை ஆரம்பித்தார். சமஷ்டி விடயத்தில் அக் கட்சியின் அங்கீகாரம் கூட கிடைத்தது ரத்னம் போன்ற தமிழ் தலைவர்கள் தவிர.  அப்பேர்பட்ட இருவரும் இந்த விடயத்தில் முரண்பட்டு நின்றார்கள். 


"அரசியலமைப்பு சீர்திருத்தத்தில் முன்முடிவுகளை எடுத்துக்கொண்டு எவ்வாறு திறந்த மனதுடன் பேசமுடியும்? திலகராஜ் எம்.பி


"ஓற்றை ஆட்சிதான், பௌத்தத்திற்க முன்னுரிமைதான. ஏன முன்முடிவுகள் எடுத்துக்கொண்டு எவ்வாறு பதிய அரசியலமைப்பு குறித்து திறந்த மனதுடன் பேசமுடியும்" என கேள்வி எழுப்பும் நுவரேலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், "இந்த முறைசாரா முறைமைக்குள் ஜனாதிபதி இயல்பாகவே உள்வாங்கப்பட்டுவிட்டார். அதேநேரம் அவர் தான் தெரிவு செய்யப்பட் நிலைமை, மக்களின் நடத்தை என்பதை புரிந்துகொண்டவராக நேர்மையுடன் செயற்படவும் எத்தணிக்கின்றார். ஆனால் ஒரு சமநிலையில் இயங்கும் நிலைமையில் இங்கிக்கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது. குறிப்பாக சிறுபான்மை சமூகம் அவர் மீது வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றவேண்டிய பொறுப்பு இருக்கிறது" எனவும் வலியுறுத்துகின்றார்.
அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகளில் உருவாகியிருக்கும் நெருக்கடிகள் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து ஞாயிறு தினக்குரலுக்கு அளித்துள்ள நோர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். அவரது நோர்காணலின் முழுவிபரம்:
இலங்கை அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் போக்கு குறித்து நேரடி வானொலி நிகழ்ச்சி ஒன்றில் திலகர் எம்பி தெரிவித்த கருத்துக்களின் முக்கியத்துவம் கருதி அவருடன் இடம்பெற்ற விரிவான நேர்காணல் தினக்குரல் வாகர்களுக்காக….

தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து புதிய ஆட்சியை அமைக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்துகள் பற்றி ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

எதிர்கட்சியில் இருக்கும் போது எவரும் சொல்லக்கூடிய ஒரு கருத்தைத்தான் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார் என நினைக்கிறேன். தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சித் தலைவராக இருக்கும்போது பல தடவை இவ்வாறு சொன்னார். ஆனால் 2015 ல் நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என தூரநோக்கான ஓர் இலக்கினை அவர் முன்வைத்தார். அது சாத்தியமுமம் ஆனது. ஆனால் மகிந்த ராஜபக்ஷ தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார திகில் நிலை (ஊசளைளை) அடிப்படையில் தோன்றியிருக்கக் கூடிய அரசியல் தளம்பல் அடிப்படையில் குழம்பிய குட்டையில் மீனைப்பிடிக்கலாம் என சொல்வது போலவே தோன்றுகிறது. 

காரணம், அவரின் ஆட்சி நிறைவுறுத்தப்பட்டு இப்போதுதான் இரண்டு வருடங்கள் ஆகியிருக்கின்றன. அதற்குள் மக்களின் தேர்தல் நடத்தையில் மாற்றம் ஒன்று வருமா என்கின்ற கேள்வியை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது. உண்மையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை மைத்திரிபால சிரிசேனவோ அல்லது மக்களோ கூட கோரவில்லை.அதனை முன்வைத்தது மகிந்த ராஜபக்ஷவேதான். அவரே முன்வைத்த தேர்தலில் அவரே தோல்வி கண்டார். அதற்கு மைத்தரி தரப்பினர் முன்வைத்த ‘நல்லாட்சி’ வரவேண்டும் என்பதை விட நடைபெற்றுக்கொண்டிருந்த சர்வாதிகார குடும்ப ஆட்சி முடிவக்கு கொண்டு வரப்படல் வேண்டும் என்ற மனஎண்ணம் தான் காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே அந்த மக்களின் மன எண்ணத்தை புரிந்துகொண்டு செய்ற்பட்ட சிவில் சமூக அமைப்புகள் முன்வைத்த நல்லாட்சி பிரசாரம் உருவானதே தவிர நல்லாட்சியை உருவாக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி தேர்தல் மக்கள் முன்னிடத்தில் வைக்கப்படவில்லை. 

உண்மையில் நடந்ததது என்னவெனில் ஏற்கனவே இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்தவர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி தான் தவணை நிபந்தனைகள் அற்றவகையில் நிரந்தரமாக ஜனாதிபதியாக இருந்து ஆட்சி நடத்திவிடவேண்டும் எனும் எண்ணத்தில்  தான் இந்த தேர்தல் முன்வைக்கப்படுகின்றது. என்னதான் பாராளுமன்ற அனுமதி பெற்று 18 வது திருத்ததின் ஊடாக அரசியல் அமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வந்து தான் தேர்தலை நடாத்த முன்வந்தபோதும் கூட மக்கள் அந்த ஜனாதிபதி தேர்தலை ஒரு சர்வஜன வாக்கெடுப்பு போல மாற்றிக் காட்டினார்கள். இதுதான் மக்கள் சக்தி. அதாவது மகிந்தவை மாத்திரம் அவர்கள் நிராகரிக்கவில்லை. இரண்டு தடவைக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் ஒருவரே ஜனாதிபதியாக இருந்துவிட வேண்டும் எனும் பாராளுமன்ற தீர்மானத்தையே மக்கள் தமது வாக்கு பலத்தால் மாற்றிபோட்டார்கள். இதுதான் மக்களின் தேர்தல் (நுடநஉவழைn டீநாயஎழைச) நடத்தை என்கிறேன். தேர்தல் முறை எத்தகைய விஞ்ஞான பூர்வமானது என்றாலும் மக்களின் நடத்தையிலும் ஒர் உளவியலும் சமூக விஞ்ஞானமும் இருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே மகிந்த அறிவித்துவிட்டார் என்பதற்காக ஆட்சி மாற்றம் ஒன்றிற்கான சூழல் உடனடியாக இல்லை. 

அப்படியெனில் இப்போதைய திகில் நிலை யின் ஊடாக மக்கள் மன எண்ணம் எவ்வாறானது என கணிக்கின்றீர்கள்?

நல்ல கேள்வி. இப்போது மக்களின் மன் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அவர்களது முதலாவது மண எண்ணத்தை தேர்தல் நடத்தையின் ஊடாக வெளிப்படுத்தி ஆட்சியை மாற்றிவிட்டார்கள். மக்கள் வெற்றியும் பெற்றுவிட்டார்கள். எனவே மக்கள் தொடர்ந்தும் அதே மனநிலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது அவர்களது மன எண்ணம் மாற்றப்பட்ட அரசாங்கத்தில் அதாவது தாங்கள் விரும்பாத ஆட்சியை மாற்றுவதற்கு முன்வைக்கப்பட்ட ‘நல்லாட்சி’ எனும் கோஷத்துக்கு கீழான அரசாங்கத்தில் எத்தகைய அபிவிருத்தி தங்களை நோக்கி வருகின்றது என்பதான எததிர்பார்ப்பினை மக்கள் இப்போது வெளிப்படுத்துகின்றார்கள். அது அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமையாத விடத்;;திலேயே இப்போதைய திகில் நிலை ஒன்று தோற்றம் பெறுகின்றது. இதனை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் தனது தோல்வி தாக்கத்தில் இருந்து மீளாத மகிந்த ராஜப்கஷ இந்த திகில் நிலையை தனக்கு சாதகமாக்கி ஆட்சியை மாற்றுவோம் என்கிறார். இப்போது மக்களின் மனஎண்ணம் ஆட்சி மாற்றத்துக்கானதல்ல. அபிவிருத்தியினை எதிர்பார்ப்பாகக் கொண்டது. எனவே அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை முன்வைத்து, முதலீடுகளை உள்வாங்கி விலை குறைப்புகளைச் செய்து பணப்புழக்கத்தை அதிகரிக்கும் திட்டங்களைச் செய்யும் போது மக்களின் மனநிலை சரி செய்யப்படலாம். இதற்கு பொதுத்தேர்தல் ஒனறின் அவசியம் இல்லை. பொதுத் தேர்தல் ஒன்றிற்கு செல்லாமல் மகிந்தவுக்கு ஆட்சியை மாற்றவும் முடியாது. 

அப்படியானால் கடந்த இரண்டு வருட காலத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் அபிவிருத்தி நடவடிக்கைககள் இடமபெறவில்லை என்ற கருத்து மக்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்டுகின்றது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?

நிச்சயமாக. இது வெளிப்படையாக மக்கள் பேசிக்கொள்கின்ற விடயமாக மாறியிருக்கின்றது என்பதை மறைக்காமல் சொல்லவேண்டும். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கான மனநிலையை மக்கள் இப்போது சிந்த்திக்க வேண்டியவர்களாகவும் உள்ளார்கள். காரணம் , நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை கையில் வத்துக்கொண்டு எதேச்சதிகாரமாக செயற்பட்ட ஆட்சி 19 வது அரசியலமைப்பின் ஊடாக மாற்றப்பட்டு;ளளது. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் 17வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதனை நடைமுறைப்படுத்தாத முன்னைய ஆட்சி 18வது திருதத்ததை கொண்டு வந்து தனது தனிப்பட்ட அதிகாரங்களை அதிகரித்துக்கொண்டமையையே செய்திருந்தது என்பதையும் மக்கள் மற்நதுவிடக்கூடாது. ஆனால் இந்த இரண்டும் இப்போது மாற்றம் கண்டிருக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் தளர்வுகள் செய்யப்பட்டு பாராளுமன்றத்துக்க அதிகாரம் பகிரப்பட்டிருக்கின்றது. அதேபோல 17 வது திருத்ததின்படி சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமக்கப்பட்டு இப்போது பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை அரசாங்கம் மேற்கொண்ட ‘பண்புசார்’ (ஞரயடவையவiஎந ) மாற்றம். 

ஆனால் மக்கள் இந்த பண்புசார் மாற்றங்களை கட்புலன் ரீதியாக உணர முடியாத நிலையிலேயே அபிவிருத்தி எனும் எதிர்பார்ப்பைக் கொண்டு இன்றைய அதிரு;பதி நிலையை வெளிப்படுத்திநிற்கிறார்கள். அவர்களுக்கு இப்Nபோது கண்ணுக்கு புலப்படக்கூடியதான (ஏளைiடிடந) அபிவிருத்திப்பணிகளைக் காணக்கிடைக்கவில்லை. பாதைகள் போடுவது பாலங்கள் கட்டுவது விமான நிலையம் அமைப்பது என கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்றதுபோன்ற ஓர் எதிர்பார்ப்பு மக்களிடத்தில் தோன்றியுள்ளது. வெள்ளைவேன் கலாசாரத்திற்கு உட்பட்ட அல்லது அந்த அச்சத்தை எதிர்கொண்ட மக்கள் கூட்டம் உண்மையில் இந்த அபிவிருத்தி மாற்றங்களைக் காட்டிலும் அந்த பண்புசார் மாற்றங்களை அவதானித்து திருப்தி கொண்டுள்ளனர். ஆனால் அபிவிருத்தியை எதிர்பார்ப்போர் மகிந்த ஆட்சியின் காலத்தில் அதாவது 2005 முதல் 2014 வரை மேற்கொள்ளப்பட்டது போன்ற 9 வருடகால அபிவிருத்தியை 2 வருடகாலத்தில் எதிர்பாரப்பதும் தவறாகிவிடும். ஆனால் அத்தகைய அபிவிருத்தி நோக்கிய அறிகுறிகளை அரசாங்கம்  வழங்காதிருப்பதும் அரசாங்கத்தின் மீதான அதிருப்திக்கு காரணம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.  

அப்படியெனில் இந்த கண்ணுக்கு புலனாகும் அபிவருத்தியை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்கள் என்னவென நினைக்கிறீர்கள்?

தேசிய அரசாங்கம் தான். உண்மையில் ஜனாதிபதி தேர்தலில் மக்களின் மன எண்ணம் என்பது ஆட்சியை மாற்றுவது. பொதுத் தேரதலில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மன எண்ணம் என்பது ‘நல்லாட்சியை’ அமைப்பது. இந்த இரண்டாவது தொடர்பில் மக்களுக்கு பாரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டு அவற்றை நடைமுறைப்படுத்த விழையும்போது அதற்க தடையாக தேசிய அரசாங்க உறவில் நிலவும் சுமூகமற்ற தன்மை குழப்பகரமான தோற்றப்பட்டை வெளியே காட்டுகின்றது. ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அணியில் நின்ற பலர் பொதுத் தேர்தல் முடிந்த அடுத்த நாளே மைத்திரி அணியினர் ஆகின்றனர். அதேநேரம் பொதுத் தேர்தலில் போது மைத்திரி அணியில் சேர்ந்துகொண்டே மகிந்தவடன் இணைந்து வாக்கு கேட்டு வெற்றிபெற்று ஆட்சியில் பங்காளி ஆகின்றனர். எனவே இத்தகைய  தேசிய அரசாங்க இணைவு மக்கள் எதிர்பாராத இணைவு. இதுதான் இப்போது உள்ள பிரச்சினை. மகிந்த மாற்றணியாக தோன்றினாலும் மகிந்தவின் அணியினர் மாறவில்லை. அவர்கள் கூட்டு எதிர்கட்சியில் மாத்திரம் இல்லை என்பதை பரிந்துகொள்ள வேண்டும். இதுதான் இன்றைய சிக்கலான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது. 

இந்த நிலை வராமல் தடுத்திருக்க என்ன செய்திருக்கலாம்?

மீண்டும் மக்களின் நடத்தை பற்றியே பேசியாகவே;ணடியிருக்கின்றது. மைத்திரிபால சிரிசேன பொதுவேட்பாளராக களமிறங்கியபோது அவர் மகிந்தவின் கொள்கையையும் அதனை ஆதரிக்கும் கூட்டத்தினரையும் முழுமையாக எதிர்ப்பவராகவம் எண்ணி பொது வேட்பாளராக நினைத்து வாக்களித்தார்களே அன்றி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைவராக வருவார் என்ற எதிர்பார்ப்பு வாக்களித்த எவருக்கும் இருக்கவில்லை. ஆனால் வெற்றிபெற்றவுடன் அவர் ஒரு கட்சியின் தலைவரானதும் அவருக்கு இரட்டைச்சுமை தாங்கவேண்டிய கட்டாயம் வந்தது. எனவே குருவித் தலையில் பாரங்கல்லாக புதிய பொறுப்பு பதிய சூழல் பழமையான அழுத்தங்கள் என அவரில் ஒரு தடுமாற்றத்தை உருவாக்கியது. இந்த சமநிலையை பேணுவதற்கு எடுக்கின்ற பிரயத்தனங்களில் அவர் அதிக நேரத்தை செலவிட வேண்டி ஏற்பட்டதால் குழுமனப்பான்மை கொண்ட ஒரு அரசாங்த்துக்கு அவர் தலைமை ஏற்கவேண்டி வந்தது. உண்மையில் அவர் எடுத்திருக்க வேண்டிய நிலைப்பாடு என மக்கள் எதிர்பார்த்தது வேறு. இவர் பொது ஜனாதிபதியாகவே இருப்பார். பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களை உறுதிப்படுத்தும் கட்சியை ஆட்சியமைக்க சபாநாயகர் கோரியிருப்பார். ஜனாதிபதி நடு நிலையில் இருந்து ‘நல்லாட்சியை’ உருவாக்கும் நோக்கிலான பண்புசார் மாற்றங்களை செய்வதில் மாத்திரம் கவனம் செலுத்தி தனது பதவி கால முடிவின்போது ஜனாநாயகத்தை உறுதிப்படுத்தும் ஆட்சி முறை ஒன்றை இலங்கைக்கு விட்டுச்செல்வார். அது இந்த ஐந்து ஆண்டுகளில் இடம்பெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு இப்போது அவ்வாறானதாக இல்லை.

ஒரு கட்சியின் தலைவர் என பொறுப்பேற்றதுமே அது சார்ந்தும் சிந்திக்க வேண்டிய நிலை அவருக்கு உருவாகியிருக்கிறது. சில நேரம் தேர்தலுக்கு முன்பே இத்தகைய கருத்து மக்களுக்கு தெரிந்திருந்தால் மக்களின் நடத்தை மாறி அமைந்திருக்கலாம். குறிப்பாக சிறுபான்மை மக்களின் தேர்தல் நடத்தை குறித்து வந்திருந்த ஒரு திரட்சியில் மாற்றம் வந்திருக்கும். ஆனால் சிறுபான்மை மக்களின் மனதில் எவ்வாறு மகிந்தவை ஜனாதிபதி பதவியில் இருந்து மாற்றிவிட வேண்டும் என எண்ணம் இருந்ததோ அதுபோலN ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி யின் சில முக்கிய ஆளுமைகளின் நிகழ்ச்சி நிரலில் மகிந்தவை ஜனாதிபதி பதவியில் இருந்து மாத்திரமல்ல கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் நீ;க்கிவிட வேண்டும் எனும் உள்கட்சி நிகழ்ச்சிநிரல் இருந்திருப்பது மக்களுக்கு தெரியாது. 

எனவே இன்றைய திகில் நிலை தோன்றாமல் இருந்திருக்க மைத்திரிபால ‘பொது ஜனாதிபதி’ ஒருவராகவே இருந்திருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அப்படி இருந்திருந்தால் யார் எந்த முன்மொழிவைச் செய்தாலும் அது அபிவிருத்தி மாற்றமாக இருக்கட்டும் அல்லது அரசியலமைப்பு மாற்றமாக இருக்கட்டும் மக்கள் வழங்கிய ஆணைப்படி ஒரு பொதுநிலையில் அவரால் செயற்பட்டிருக்க முடியும். ஆனால் இப்போது மறைமுகமாக இயங்கும் கொள்கைவகுப்பாளர்களின் பிடியில் இருந்து நழுவிச்செல்ல முடியாதவராக அவர் கட்டுண்டு நிற்கிறார்போல தெரிகிறது. 

யார் அந்த கொள்கை வகுப்பாளர்கள் என நினைக்கின்றீர்கள்?

மேலைத்தேய நாடுகளில் குறிப்பாக அமெரிக்க போன்ற நாடுகளில் ‘முறைசார்ந்த’ வகையிலான நிரந்தர கொள்கை வகுப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் ஆள் மாற்றம் ஏற்பட்டாலும் அந்த கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடுகளில் இருந்து பாரிய மாற்றத்துடன் அரசாங்கமோ ஜனாபதியோ இயங்க முடியாது என்பதாக பரவலாக பேசப்படுவதுண்டு. அது போன்ற முறைமைகள் தென்னாசிய நாடுகளில் இல்லை என்பாக கூறப்படுவதுண்டு. என்னைப் பொறுத்தவரை இங்கும் அப்படியான கொள்கை வகுப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ‘முறைசாராத’ வகையில் இயங்குகிறார்கள் என்பதாகவே நான் பார்க்கிறேன். 

பொது சனாதிபதியாக தெரிவுசெய்யபபட்டவர் கட்சி தலைவர் ஆவதும், புதிய அரசியலமைப்பு மாற்றத்ததை மேற்கொள்ள குறித்த ஒரு மதம் சார்ந்த பெரியவர்களிடம் அனுமதிபெறவேண்டும் என்பதோ, பௌத்தர் ஒருவரே ஜனாதிபதியாக அல்லது நாட்டை ஆள்பவராக இருக்க வேண்டும் என்பதோ எங்கும் முறைசார்ந்து எழுதப்படாத போதும் அத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுவதை தவிர்க்க முடியாது உள்ளது. இது முறைசாராத வகையில் முறைமைப்படுத்தப்பட்டுள்ளது. பதிய அரசியலமைப்பு மாற்றம் என சொல்லிவிட்டு பழையதில் இன்ன..இன்ன விடயங்களை மாற்ற முடியாது என அறிவிப்பதே ஏதோ ஒரு முறைமை இருக்க வேண்டும் என்று முறைசாரா தீர்மானம் ஒன்று இருப்பதால் தானே. ஓற்றை ஆட்சிதான், பௌத்தத்திற்க முன்னுரிமைதான. ஏன முன்முடிவுகள் எடுத்துக்கொண்டு எவ்வாறு பதிய அரசியலமைப்பு குறித்து திறந்த மனதுடன் பேசமுடியும். இந்த முறைசாரா முறைமைக்குள் ஜனாதிபதி இயல்பாகவே உள்வாங்கப்பட்டுவிட்டார் அதேநேரம் அவர் தான் தெரிவு செய்யப்பட் நிலைமை, மக்களின் நடத்தை என்பதை புரிந்துகொண்டவராக நேர்மையுடன் செயற்படவும் எத்தணிக்கின்றார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு சமநிலையில் இயங்கும் நிலைமையில் இங்கிக்கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது. குறிப்பாக சிறுபான்மை சமூகம் அவர் மீது வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றவேண்டிய பொறுப்பு இருக்கிறது. 

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூடடணியும் முஸ்லிம் கட்சிகளும் அரசாங்க மீது சில அதிருப்திகளை வெளிப்படுத்தியிருக்கின்றன. அதேநேரம் எதிர்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக அரசுக்கு ஆதரவாக வாக்கு அளித்து வருகின்றது. உண்மையில் சிறுபான்மை கட்சிகளின் இன்றைய நிலைமைதான் என்ன?

இந்த சிறுபான்மை கட்சிகள் ஒவ்வொரு விடயத்தில் ஒவ்வnhரு மாதிரி இயங்குகின்றன. அது அவரவர்களின் அரசியல் செயற்பாட்டு எல்லையடன் தொடர்படையாதாக இருக்கின்றது. இது பற்றி விரிவாக தனியாகவே பேச நேரிடும். பொதுவாக சொன்னால் இந்த நாட்டில் ஆட்சியாளர்களாக சிறுபான்மை சமூகத்தினர் அமரும் சாத்தியம் மிகமிக குறைவு. ஆதற்கு அவர்களுக்கு திறமையோ அர்ப்பணிப்போ இல்லாமலில்லை. மக்களின் மன எண்ணம் மாறி அத்தகைய ஒரு சூழ்நிலை வந்தாலும் கூட நான் மேலே சொன்ன அந்த முiறாசாராத முறைமை அதனை செய்ய விடாது. அதனால்தான் ஆளுகின்ற எந்த தரப்ப ஆயினும் சிறுபான்மை கட்சிகள் அமைகின்ற ஆட்சிக்கு தமது ஆதரவை நேரடியாகவோ மறைமுகமாகவே வழங்கி தமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் ஒரு அரசியல் கலாசாரத்தை பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றார்கள். இது காலாகாலமாக நடைபெற்று வந்துள்ளது. ஆரம்ப கால்களில் வடகிழக்கு தமிழ் தரப்பினரின் பிரதான பகுதியினர் அமைச்சுப்பதவிகளை வகித்த வரலாறு இருக்கிறது. பின்னர் அதுவே அங்குள்ள சிறு கட்சிகளின் தந்திரோபாயமாக மாத்திரம் மட்டுப்பட்டது. ஆனால் தேர்தல் காலங்களில் வாக்களிப்பதன் மூலமும் வாக்களிக்காமல் விடுவதன் மூலமும் கூட ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் அரசிலை அவர்கள் செய்திருக்கிறார்கள். 2005 ல் வாக்களிக்காமல் மகிந்தவை ஜனாதிபதி ஆக்கியதும், 2009 ல் மகிந்தவின் தளபதியாக இருந்த சரத் பொன் சேக்காவுக்க ஆதரவாக வாக்களித்து மகிந்தவை மாற்ற முயற்சித்து தோல்வி அடைந்தாலும் மீண்டும் பொறுமையாக விருந்து மகிந்தவை தலைவராகக் கொண்ட கட்சியின் செயலாருக்கு வாக்களித்து மகிந்தவை வீழ்த்தி அவரது கட்சி செயலாளரான மைத்திரியை ஆட்சியல் அமர்த்துவதிலும அவர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள்.  அதேபோல தற்போது பாராளுமன்றிலே வரவு செலவுதிட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து பிரதமருக்கும் தமது அதரவ கரத்தை நீட்டுகின்றனர்.

மலையகக் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் இந்த மாறுதல் நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றன. அதனை தெளிவாக விளக்கும் தேவை இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த சிறுபான்மை சமூகத்தின் மன எண்ண வெளிப்படுத்துகையை ஆளும் பெருந்தேசிய அரசாங்கங்கள் சரியாக புரிந்துகொள்கிறார்கள் இல்லை என்பதுதான் (அது எந்த கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆயினும் ) இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் தொடர்பில் நிலவுகின்ற பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. சிறுபான்மைச் சமூகம் செய்யும் கொடைமுனைவை (ழுககநச) ஏற்பு செய்யும் (யுஉஉநிவயnஉந) மனப்பக்குவம் பெரும்பான்மை சமூகத்திலும் கட்சிகளிடத்திலும் சரியாக வரவில்லை. இந்த நாடு இன்னோரன்ன விளைவுகளைச் சந்தித்தும் பெரும்பாம்யிடத்தில் இந்த மனமாற்றம் ஏற்படாதது பெரும் மனக்குறையே.

நேர்காணல்:பி.பார்த்திபன்

நன்றி - தினக்குரல்

குடும்பச் சொத்தின் கைமாறலாக இருந்து விடக்கூடாது அனுஷாவின் வருகை


மறைந்த முன்னால் அமைச்சரும், மலையக மக்கள் முன்னணியின் தலைவருமான சந்திரசேகரனின் புதல்வி அனுஷா சந்திரசேகரன் அக் கட்சியின் உயர் பீடத்துக்கு நியமிக்கப்பட்டிருக்கிறார்.

மலையகத்தில் பெண்களின் அரசியல் பாத்திரம் பெறும் பற்றாக்குறைக்குரியது. அந்த வகையில் அனுஷா போன்ற இளம் சந்ததினரின் வருகை மலையக அரசியலுக்கு பலமூட்டக்கூடியது.

அதே வேளை மலையகம் ஏற்கெனவே வாரிசு அரசியலாலும், குடும்ப அரசியலாலும் பட்ட துன்பங்களும், பின்னடைவுகளும் மறப்பதற்கில்லை.

சந்திரசேகரனின் மறைவின் பின்னர் மலையக மக்கள் முன்னணி ஒரு வகையில் குடும்ப சொத்தாகவே ஆக்கப்பட்டது. சந்திரசேகரனின் மனைவி சாந்தி சந்திரசேகரனின் பூரண கட்டுப்பாட்டில் அது இருந்தது. முக்கிய அரசியல் முடிவுகள் கூட எடுக்க முடியாதபடி மூத்த உறுப்பினர்கள் திண்டாடிக் கொண்டிருந்தனர். இராதாகிருஸ்ணன் போன்ற பணம் படைத்த வியாபாரிகளிடம் கட்சி சிக்கியபோது அரசியல் ஞானமுள்ள மூத்த உறுப்பினர்கள் பின் நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். அவர்களின் முடிவுகள் எடுக்கும் அதிகாரமும் அவர்களிடம் இருந்து பறிபோனது.

இந்த நிலையில் தான் ஓய்வு பெறுவதாகவும் தனது இடத்தை தனது மகளுக்கு கொடுப்பதாகக் கூறி அனுஷாவிடம் உயர்பீட பொறுப்பு கொடுக்கப்படுவது குடும்பச் சொத்தை கைமாற்றும் ஒரு நடவடிக்கையா என்கிற சந்தேகம் எழுவதை தவிர்க்க முடியாது.

சாந்தி போன்றே அவரின் மகள் அனுஷாவும் அரசியல் பணிகளில் ஈடுபட்ட அனுபவங்களில் இருந்து உயர் பீடத்தை அடையவில்லை. மாறாக அவர்களின் ஒரே தகுதி சந்திரசேகரனின் குடும்பம் என்பது மட்டுமே.

இப்போது அனுஷாவுக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது.  கல்விகற்ற, இளம், பெண்ணின் அரசியல் பிரவேசம் என்கிற ரீதியில் அனுஷாவின் வருகை முக்கியம் என்பதை பதிவு செய்துகொள்கிற அதேநேரம் நேரடியாக மேலே வந்த அவர் கட்சியின் வளர்ச்சியிலும், மலையக அடிமட்ட அரசியலிலும் பணியாற்றி தன்னை நிரூபிக்கும் தார்மீக பொறுப்புக்கு உரியவர்.

இதுவரை அடிமட்டத்திலிருந்து கிடைக்காத அரசியல் பயிற்சி "உயர் பீடத்திலிருந்தாவது" கிட்டட்டும்.

மலையக மக்கள் முன்னணியும் அதன் தலைவராக இருந்த மறைந்த சந்திரசேகரனும் ஒரு காலத்தின் உச்ச நாயகத்துவமாக இருந்ததை மறுக்க முடியாது. அதேவேளை அரசியல் ஒர்மமிழந்து சராசரி சாக்கடை அரசியலில் சிக்கி அரசியல் இலக்குகளையும், கொள்கைகளையும் இழந்து போன சம்பவங்களை மறந்து விட முடியாது. சந்திரசேகரனுக்கு இன்றளவிலும் இருக்கும் மரியாதை அவரின் தொடக்க அரசியலுக்கு இருந்த மரியாதையே ஒழிய அவர் இறந்த போது இருந்த மரியாதை அல்ல என்பதையும் நினைவு கொள்ள வேண்டியிருக்கிறது.

மலையகத்துக்கு இன்றுவரை ஒரு உறுதியான மாற்று அரசியல் கிடையாது. மலையக மக்கள் முன்னணி அந்த பாத்திரத்தை 90 களின் நடுப்பகுதி வரை வகித்தது. அந்த உறுதிமிக்க அரசியல் சுலோகங்களை இந்த புதிய இரத்தம் பாய்ச்சுவதன் ஊடாக வெற்றி கொள்ள முடிந்தால் மலையகத்துக்கு மீண்டும் ஒரு அரசியல் வெளிச்சம் கிடைத்திருப்பதாக நம்பிக்கை கொள்ளலாம்.

அந்த நிலைமைகளையும் கருத்தில் கொண்டே அனுஷாவின் வருகையையும் நாம் கணிக்க வேண்டியிருக்கிறது.



பெண்களின் அரசியல் முன்வருகையின் தேவையும்: மலையகமும் - தனுஷன் ஆறுமுகம்


சமகால உலகில் அதிகம் பேசப்படும் விடயங்களுள், பால் சமத்துவம் என்பது மிக முக்கியமான அம்சமாக காணப்படுகின்றது. குறிப்பாக, ஐக்கிய நாடுகள் தாபனத்தின் நிலை பேண் அபிவிருத்தியை ஏற்படுத்தும் திட்டத்திற்கான முன்மொழிவுகளில் பால் சமத்துவம் என்ற விடயம் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது. பால் சமத்துவம் எனும் பரந்த பரப்பில் ஒரு சிறு துளியை கொண்டு இந்த கட்டுரை எழுதப்படுகின்றது. அதிலும் பெண்களின் அரசியல் சமத்துவம் மற்றும் அரசியல் ஈடுபாடு எனும் பரப்பினுள் மலையக பெண்களின் அரசியல் ஈடுபாட்டை மையப்படுத்தி இக்கட்டுரை நகர்த்திச் செல்லப்பட இருக்கின்றது.

வரலாற்றுக் காலம் முதலே அரசியலில் பெண்களின் ஈடுபாடு என்பது மிகக் குறைவாகவே காணப்பட்டு வந்தது. உண்மையில் பெண்களின் ஈடுபாடு குறைந்துக் காணப்பட்டதா? அல்லது ஆணாதிக்க சமூகத்தில் பெண்களின் அரசியல் ஈடுபாடு என்பது குறைக்கப்பட்டதா? என்பது விவாதிக்கப்பட வேண்டிய ஒன்றே. அந்த ஆழ்ந்த விவாதத்திற்குள் செல்வதில் நாட்டமின்றி நகர்த்துவோம் நமது கருத்தாடலை. வரலாற்றுக் காலம் முதல் சம காலம் வரை பெண்களின் அரசியல் ஈடுபாட்டை நாம் எடுத்து நோக்கினால் பெயர் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வெகுசிலரே மிளிர்ந்திருக்கின்றனர். அதிலும் ஒப்பிட்டளவில் ஆண்களை விட மிகவும் குறைந்த அளவிலேயே அரசியலில் பெண்கள் பங்குப் பற்றி இருக்கின்றார்கள்.

அரசியல் நிர்ணயங்களாகட்டும், சமுதாய சட்டங்களாகட்டும் அவை அதிகமாக ஆண்களால் வடிவமைக்கப்பட்டவைகளாகவே காணப்படுகின்றன. பிற்பட்ட காலங்களில் ஆண்களின் ஆதிக்கம் கொண்டு உருவாக்கப்பட்ட அல்லது புனையப்பட்ட மதங்களும் கூட ஒப்பீட்டளவில் பெண்களின் உரிமைகளை மந்த கதிக்குள்ளாக்கி பெண் தலைமைத்துவத்தை மறைமுகமாக மழுங்கடித்திருக்கின்றன. காமப் பொருளாகவும், பலம் குறைந்தவளாகவும், அடுப்பறைக்குள் முடக்கப்பட வேண்டியவளாகவும், ஆணின் பார்வையால் கூட மானப்பங்கப்படுத்தக் கூடியவளாகவும் என குறுகிய வட்டத்திற்குள் நோக்கப்பட்ட இப் பெண்கள் தங்களை சமுதாயத்தில் தங்களது தனி மனித சுதந்திரத்தையும் ஆளுமையையும் வெளிகாட்ட பாரிய சவால்களை சந்தித்திருக்கின்றார்கள்.
கால ஓட்டம், வரலாறு எனும் திரையில் பெண்களின் திறன்களையும், ஆளுமையையும் தேவைக்கு அதிகமாகவே பறைசாற்றி இருக்கின்றது. அரசியல் துறையிலும் இதன் வெளிப்பாடு இருக்கவே செய்கின்றது. அரசி ன்கியுசிங்கா (1582–1663), எலிசபத் மகாராணி எனத் தொடங்கி பெனாசீர் பூட்டோ, சந்திரிக்கா பண்டாரநாயக்க, சிறிமாவோ பண்டாரநாயக்க, ஆங்சாங் சுகி, ஏஞ்சலா மார்கெல், ஜெயலலி;தா என இந்த திரையில் வெளிப்பட்ட மற்றும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கும் சகாப்தங்கள் பல. உதாரணங்களாக கூறி விட பலர் இருந்தாலும் உண்மையில் ஆண்களின் விகிதாசாரத்தோடு ஒப்பிடும் போது மிகக் குறைந்தளவான பெண்களே இந்த அரசியலில் முத்திரை பதித்துள்ளனர். அதிலும் பலர் தமது ஆண் துணையின் மறைவின் பின்னர் அந்த இடத்தைப் பிடித்துக் கொண்டவர்களாகவும், அதிலிருந்து வெளிப்பட்டவர்களாகவுமே காணப்படுகின்றனர். எனினும் தனித்து சாதித்த பலரும் இல்லாமல் இல்லை.

பெரும்பாலான உலக நாடுகளின் சனத்தொகையில் 50 வீதத்திற்கு அதிகமான எண்ணிக்கையில் இருக்கும் பெண்கள் அரசியலில் பங்குப்பற்றுவது எண்ணவோ மிகக் குறைவே. சில நாடுகள் பாரம்பரிய ரீதியாகவும், மதவாதங்களினூடாகவும் பெண்களின் அரசியல் பிரவேசத்தை தடுத்திருக்கின்றன. உதாரணமாக சவுதி அரேபியா இந்த தசாப்தம் வரை பெண்களுக்கு வாக்களிக்கவேனும் வாய்ப்பினை வழங்கியிருக்கவில்லை. அதேபோலவே வத்திக்கானிலும் பெண் தலைமைத்துவமொன்று உருவாகுவதற்கோ, மதம் வேறு அரசு வேறென்ற நிலைதோன்றவோ வாய்ப்பில்லை. இதனை விரும்பியேற்கும் பெண்களும் இருக்கத்தான் செய்கின்றனர்.

இலங்கையை பொறுத்த வரையில் 1931 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரையில் வெகுசில பெண்களே அரசியலில் முக்கிய பாத்திரத்தை வகித்திருக்கின்றார்கள். அதிலும் பலர் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்திருக்கின்றார்களே தவிர அரசியலில் மிளிரவில்லை. அதிலும் குறிப்பாக அதிகமானோர் தேர்தல் ஒன்றினூடாக தெரியப்படாது பாராளுமன்றம் சென்றவர்களாகவே இருக்கின்றனர். அட்லைன் மொலமுறே அம்மையார் தொடக்கும் இறுதியாக ரோஹினி குமாரி வரை சுமார் 114 பெண்கள் இலங்கை பாராளுமன்றிற்கு தெரிவாகியிருக்கின்றனர். இவற்றில் அதிகமானோர் பெரும்பான்மை இனத்தை சார்ந்தவர்களாக இருக்கின்றார்கள். உயர் வகுப்பினைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். சிறுபான்மை இனத்தவரை பொறுத்த வரையில் திருமதி புலேந்திரன், திருமதி பேரியல் அஸ்ரப், திருமதி தங்கேஸ்வரி, திருமதி விஜயகலா மகேஸ்வரன் உள்ளிட்ட வெகுசில சிறுபான்மையின மக்களே இந்த குறுகிய பட்டியலில் இடம்பெற்றிருக்கின்றனர். இவை தவிர விளைவுகளை அதிகம் ஏற்படுத்தாத மாகாண சபைகளிலோ. உள்ளுராட்சி சபைகளிலோ ஆசனங்களை நிரப்பியவர்களின் விபரங்களை விட்டு நான் விலகி நகர்கின்றேன். இந்த எண்கள் அரசியல் அமைப்பு சொல்லும் சமத்துவம், இலங்கை தேசம் ஏற்றுள்ள பெண்களுக்கெதிரான பாகுபாடு காட்டாமை தொடர்பான சமவாயம் (CEDAW) உள்ளிட்ட பல சர்வதேச மற்றும் உள்நாட்டு தராதரங்களை கேள்விக்குட்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உண்மையில் மனதளவில் உறுதியோடு சில பெண்களே தங்களை அரசியலுக்குள்  ஈடுப்படுத்திக் கொள்ள விரும்புகின்றனர். மேலும் சிலர் மனதளவில் உறுதியோடிருந்தும் குடும்பத்தினரின் மனப்பாங்கின் விளைவாக அரசியலில் தம்மை உள்வாங்கிக் கொள்வதில் சிக்கல் நிலையில் இருக்கின்றார். அரசியல் கட்சிகள் பெண் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவத்தை வழங்காத நிலைமையும் முக்கிய காரணமாக அமைகின்றது. மேலும் அரசியல் அரங்கிலே பெண் ஒருவருக்கு தமது வாக்கினை அளிப்பதற்கு பலர் விருப்பமின்றியிருக்கின்றார்கள். இவ்வாறு பெண்களின் மனநிலை (சுய நிலை) தொடக்கம், சமூகம் வரையில் பல சிக்கல்கள் இருக்கத்தான் செய்கின்றன. சிக்கல்கள் இன்றி சாதனைகள் ஏது என்ற வினாவைக் தமக்குள் கேட்டுக் கொண்டாலே இந்நிலை மாறாக்கூடும். ஆனால் பெண்களுக்கு தலைமையேற்று நடாத்த திறமையில்லை என நினைத்துக் கொண்டு இன்னும் வரலாற்றிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்துக் கொண்டிருப்போரும் எம் மத்தியில் இல்லாமல் இல்லை. குறிப்பாக சில பெண்களோ பல உதாரண பெண்மணிகளை கண்ட பின்பும் கூட தமக்கு அந்த தகுதியில்லை (தலைமைத்துவம்) நினைத்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

இலங்கையில் சிறுபான்மையின பாரளுமன்ற பிரதிநிதிகளின் பெயர்களை மேலே குறிப்பிட்டுள்ளேன். அந்த ஒவ்வொரு பெயரும் வன்னி, அம்பாறை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து தெரிவான பிரதிநிதிகளாவர். அவர்களின் அரசியல் பிரவேசம் நேரடியானதா?, நிர்ப்பந்திக்கப்பட்டதா? என்பது உங்களுக்கும் எனக்கும் தெரிந்த விடயமே. எது எப்படியோ அவர்களின் அரசியல் பிரவேசம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது.

வடக்கு கிழக்கை தாண்டி இலங்கையில் தமிழ் மக்கள் அதிகம் செறிந்து வாழக்கூடிய மலையகத்திலிருந்து இத்தனை காலமும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகக் கூடிய ஆளுமைமிக்க ஒரு பெண் தலைமைத்துவம் உதயமாகவில்லையா? என்பது வியப்பான கேள்விக்குறியே. இன்றளவும் வளர்ச்சியடைந்துக் கொண்டிருக்கும், அல்லது வளத்திற்கும் வளர்ச்சிக்குமாக போராடும் ஒரு சமுதாயகமாகவே மலையக சமுதாயம் காணப்படுகின்றது. வரலாற்றில் பெயர் குறிப்பிடக்கூடிய வெகு சில தலைமைகளையே மலையகம் வெளிகாட்டியிருக்கின்றது. உதயமான பலர் வெளிப்படாமலேயே புதைக்கப்பட்டதன் பிம்பங்களே இந்த “வெகு சிலர்”. சி.வி.வேலுப்பிள்ளை, சௌமியமூர்த்தி தொண்டமான், சந்திரசேகரன் என்ற இந்த ஆளுமைகள் ஏற்படுத்தி தாக்கங்களையும், கொண்ட பலத்தினையும் இன்று பெற்ற தலைமைகளை காண முடியாதுள்ளது.
ஏனைய சமூகங்கள் சிறந்த பல ஆண் தலைமைகளைக் கொண்டு காணப்படுகின்ற நிலையில் பெண் தலைமைத்துவம் தொடர்பில் பேசுவது நன்றே. நல்லதொரு ஆண் தலைமைத்துவத்தையே இன்று நிலைநாட்டிக் கொள்ளாத மலையக சமுதாயத்தினராகிய நாம் எவ்வாறு பெண் தலைமைத்துவம் பற்றி பேச முடியும் என நண்பர் ஒருவர் பகிர்ந்த கருத்தை இங்கே கூறிக் கொள்ள விரும்புகின்றேன். சிறந்த அரசியல் விமர்சகரான அவரது கருத்து என்னை வியப்புக்குள்ளாக்கியது. “ஆண் தலைமைத்துவமே சரியாக இல்லை, பின்னர் எப்படி பெண் தலைமைத்துவம்” என்ற அந்த வரிகளின் சுருக்கம் ஆண்களால் முடியாத ஒன்று பெண்களால் எப்படி சாத்தியப்படும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடாகவே அமைகின்றது. இதனை ஆணாதிக்கம் என்பதா?, மனதளவில் முதிர்ச்சி நிலை போதவில்லை என்பதா? என புரியவில்லை. எண்ணங்கள் பல விதம் என எண்ணிக் கொண்டு நகர்ந்திடுவோம் நாம்.

இலங்கை இன்றளவும் வளர்ச்சியடைந்துக் கொண்டிருக்கும் மூன்றாம் உலக நாடு என்பதாலும், அரசியல் ரீதியாகவும், மக்கள் மனதளவிலும் பக்குவப்பட வேண்டிய நிலை அதிகமாக உள்ளதாலும் பெண்களின் அரசியல் ஈடுபாடு நாடாளாவிய ரீதியில் குன்றியே காணப்படுகின்றது. ஒப்பீட்டு ரீதியில் வளர்ச்சிக் கட்டத்தில் இலங்கையின் ஏனைய சமூகங்களிலிருந்து சற்று பின் தங்கி காணப்படும் மலையகச் சமூகத்தில் பெண்களின் ஈடுபாட்டை பெறுவதென்பது இலகுவான காரியமல்ல.

கடந்த காலங்களில் மத்திய மாகாண சபைகளிலே சில தமிழ் பெண் பிரதிநிதிகள் தெரிவாகியிருந்தனர். தற்சமயமும் இருக்கின்றனர். இந்த எண்ணிக்கையும் விரல் விட்டு எண்ணக்கூடியளவே காணப்படுகின்றது. கடந்த காலங்களில் தெரிவானவர்களும் சரி, சமகாலத்தில் தெரிவாகியிருப்பவர்களும் சரி தத்தமது கட்சி தலைமைகளின் கைப்பாவைகளாக செயற்பாட்டார்களே தவிர பெயர் குறிப்பிடும் படியான செயற்பாடுகள் எதனையும் முன்னெடுக்கவில்லை. ஆகக் குறைந்தது எதிர்காலத்தில் பெண்களின் அரசியல் பிரவேசங்களை அதிகப்படுத்துவதற்கான விழிப்புணர்வு செயற்பாடுகளையேனும் முன்னெடுக்கவில்லை.

இங்ஙனம் பெண்களின் பிரவேசம் தொடர்பில் பல்வேறுப்பட்ட ஆய்வுகளும், ஆய்வுக் கட்டுரைகளும் இலங்கையில் வெளியிடப்பட்டுள்ள போதும் அவை அனைத்தும் அதிகமாக ஆங்கிலத்தில் அமைந்திருப்பதால் அது ஆங்கிலும் கற்றோரோடு நின்று விடுகின்றது. தமிழ், சிங்கள மொழிகளில் வெகு சில பதிவுகளே காணப்படுகின்றன. அதிலும் மக்கள் பெற்று வாசிக்கும் நிலையில் வெகு சிலவே காணப்படுகின்றன.

உண்மையில் மலையகத்தைப் பொறுத்த வரையில் தோட்டப்புறங்களில் வேலை செய்யும் பெண்கள் சொல்லெனா துயரங்களை அனுபவித்து வருகின்றார்கள். இவர்களின் பிரதிநிதிகள் எனக் கூறிக் கொள்வோர் இந்த துயரங்களை தாண்டிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்துக் கொண்டிருப்போரே. ஆக மலையகம் என்ற போதும் பிரதிநிதிகளும் அவர்கள் பிரநிதித்துவப்படுத்தும் மக்களும் இருவேறு துருவங்களை சார்ந்தோராகவே இருக்கின்றனர். நிறைய தருணங்கள் இந்த பிரதிநிதிகள் தோட்டப்புற மக்களின் துயரங்களை ஆள உணராதவர்கள் என்பதை படம் பிடித்துக் காட்டியுள்ளது.

“உண்மையில் தோட்டப்புற தொழிலாளிகளின் நிலை அரசியல் அரங்கில் பிரதிபலிக்கப்பட அத் தோட்டப்புறம் சார்ந்தோர் அரசியலுக்குள் உள்வாங்கப்பட வேண்டும். அதிலும் குறிப்பாக அதிகமான துயரங்களை சந்திக்கும் தோட்டப்புற பெண்கள் அரசியலில் பிரவேசிக்க வேண்டும்”. என உணர்ச்சிப் பொங்க பேசிக் கொண்டே போக முடியும். ஆனால் யதார்த்தம் ஜனநாயகத்தையும் மக்களாட்சியையும் தாங்கிப்பிடிக்கும் தூண்களாக தேர்தல்கள் காணப்படும் அதேவேளை, அந்தத் தேர்தல்களை தாங்கி நடாத்தும் தூணாக பணம் காணப்படுகின்றது. பிரச்சாரக் கூட்டங்கள், சுவரொட்டிகள், துண்டுப்பிரசுரங்கள், சோற்று பார்சல்கள், மது என செலவழித்து மாயை நிலையை காட்டி வாக்குகளை பெறும் ஒரு கலப்பட அரசியலுக்கு மத்தியில் சாமான்ய மக்கள் அரசியலுக்குள் பிரவேசிப்பது என்பது எட்டாக்கணியாகிக் கொண்டே போகின்றது. ஐந்து வருடங்களில் செய்ய வேண்டிய ஒன்றையும் செய்யாது, மீண்டும் தாம் தெரியப்பட  வேண்டும் என்பதற்காக தேர்தல் அறிவித்தவுடன் செய்யும் ஏமாற்று நடவடிக்கைகளுக்கு பணத்தை வாரி இரைக்கும் அந்த நாடகத்தில் ஏமாறும் மக்களும் அந்த ஏமாற்றுக்காரர்களிடம் சோடை போகின்றனர்.

இவ்வாறு பணம் முதலிடம் வகிக்கின்ற ஒரு தேர்தலில் ஒரு தேயிலை தோட்டத்தில் தொழிலாளியாக வேலை செய்யும் ஒரு பெண் அரசியலுக்குள் வருவது என்பது எங்ஙனம் சாத்தியப்படும். கோடி கோடியாய் சேர்த்துக் கொண்டிருக்கும் அரசியல் கட்சிகள் உண்மையில் தோட்டப்புற மக்களை பிரதிநிதித்துவப்படுத்த விரும்பின் அவர்களிலிருந்து வேட்பாளர்களை தெரிந்து அவர்களுக்கு வாய்ப்பும், தேர்தலுக்கான வசதிகளையும் செய்துக் கொடுக்க வேண்டும். அல்லது நுவரெலியா போன்ற  மாவட்டத்தில் தேசிய பட்டியலை வாங்கிக் கொடுக்க திராணியுள்ள கட்சிகள் தங்களின் கைக்கூலிகளுக்கு அதனை வழங்காது தோட்டப்புற மக்களுக்கு அவ்வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். தோட்டப்புற மக்கள் எனும் போது தோட்டத்தில் அன்றாடம் வேலை செய்யும் மக்களையோ, பெண்களையோ மட்டும் நான் மட்டுப்படுத்தவில்லை;. தினமும் அட்டைகளுக்கும், அரக்கர்களுக்கும் மத்தியில் மலையிலும் ரப்பர் போர்வையுடனும், வெயிலில் வியர்வை சிந்தியும், உழைத்து கறுத்த கரங்களைக் கொண்ட தன் தாயின் கஷ்டத்தையும், தந்தையின் கஷ்டத்தையும் பார்த்து வளர்ந்து படித்து பட்டம் பெற்றிருக்கும் ஒருவருக்குக் கூட இவ்வாய்;ப்பினை வழங்க முடியும். குறிப்பாக இவ்வாறான இடங்களில் இருந்து வந்த பெண்களுக்கு இவ்வாய்;ப்பினை வழங்குவது மலையகத்தைப் பொறுத்த வரையில் ஒரு மாற்றத்திற்கு வழி சமைக்கும்.

பெண் உரிமைகள் எனும் விடயத்திலும் ஏனைய சமுதாயங்களோடு ஒப்பிடுமளவிற்கு நாம் இன்னும் வளரவில்லை. 18 வயதானதும் தோட்டத்தில் பெயர் பதிவதற்கு எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையும், வீட்டு வேலைகளை செய்வதற்காகவே பெண் என்ற நிலையும் எம் சமூகத்தில் இருந்து இன்னும் முற்றாக நீங்கவில்லை.  இவ்வாறான நிலைகளைத் தாண்டி  எமது சமுதாயத்தை அடுத்தக் கட்டம் நோக்கி நகர்த்திச் செல்ல இந்த துயரங்களைத் தாண்டி வந்த சாதனைப் பெண்களின் அரசியல் பிரவேசம் அதிகமாகும். இந்த அரசியல் என்பதொன்றும் ஆபத்தான விடயமல்ல. ஆனால் ஆபத்தான விடயமாக்கப்பட்டுள்ளது. மக்களின் நிலையறிந்த தரப்பினர் அரசியலுக்குள் உள்வாங்கப்பட இந்த நிலை குறையும் என்பது எனது எதிர்பார்ப்பாகும்.

மலையகத்தைப் பொறுத்த வரையில் வாக்காளர்களும், பலம் பொருந்திய மற்றும் பழைமையான கட்சிகளை குறித்து நின்று அவர்கள் எத்தனை தடைவ வாக்கு தவறியிருந்தாலும், எத்தனை தடவை துரோகமிழைத்திருந்தாலும் அவற்றை மறந்து,  தேர்தல் கால கண்துடைப்புக்களில் ஏமார்ந்து அவர்களுக்கு விலை போய் விடுகின்றனர். தன் குடும்பத்திலிந்து ஒரு நல்ல அரசியல்வாதியை உருவாக்க என்னாத இவர்கள், அத்தகைய நல்ல நோக்கம் கொண்டு வரும் தோட்டப்புற தரப்பினர்களையும் புறந்தள்ளி விடுகின்றனர்.

கடந்த காலங்களில் தொலைக்காட்சியில் தோன்றி ஏமாற்றிக்கொண்டு மலையகத்தில் வாக்குப்பெற்ற பிரதிநிதி தனது ஏமாற்று வித்தை பழிக்காது என்று தெரிந்த சந்தர்ப்பத்தில் மலையகத்தில் தனது கட்சி சார்பில் பெண்களை வேட்பாளர்களாக இறக்கியிருந்தார். குறிப்பாக இவ்வணியில் தோட்டப்புற பெண்கள் அதிகமாக இருந்தனர். தனது ஏமாற்று நாடகத்தின் ஒரு பாகமாக இதனை அவர் செய்திருந்தாலும் அந்த முயற்சி வரவேற்கத்தக்கதே. எனினும் மலையக முதலைகளின் வாக்கு வேட்டைக்கு முன்பதாக இவர்கள் தாக்குப்பிடிக்க மாட்டார்கள் என்பது தெரிந்தும் இத்தனை பெண்களை களமிறக்கி படுதோல்விக் கண்டமை பல பெண்களின் மனதில் நம்மால் அரசியல் வெற்றி என்பது முடியாது என்ற மாயை உருவாக காரணமாக அமைந்திருந்தமை நாம் அறியாத பக்கங்களே. கடந்த முறை பாராளுமன்ற தேர்தலில் இ.தொ.காங்கிரஸ் சார்பில் ஒரு பெண் வேட்பாளர் பாராளுமன்ற தேர்தலில் நிறுத்தப்பட்டிருந்தாலும் அவர் தோல்வி; கண்டிருந்தார். பெண் பிரதிநிதிகள் மீது மக்கள் மத்தியில் காணப்படும் பாராபட்ச நிலைமையின் விளைவு இதுவெனினும் அவர் மத்தியமாகாண அமைச்சராக இருந்த சந்தரப்பங்களில் அவரின் செயற்பாடுகளில் காணப்பட்ட திருப்தியின்மையும் ஒரு காரணமாக அமைகின்றது.

இவ்வாறு பல சிக்கல்கள் பெண்கள் அரசியலுக்குள் வருவதற்கான நிலைப்பாட்டிற்கான தடுப்புச் சுவர்களாக காணபப்படுகின்ற அதேவேளை மலையக பெண்களைப் பொறுத்த வரையில் அந்த தடுப்பு என்பது மிக அதிகமாகவே காணப்படுகின்றது. குறிப்பாக தோட்டப்புறங்களிலே வேலை செய்யும் பெண்கள் நாட்டு நடப்புக்கள், அரசியல் போக்குகள்; என்பன தொடர்பில் போதிய விளக்கமற்றவர்களாகவே காணப்படுகின்றனர். தொழிநுட்ப வளர்ச்சியாலும் உலகமயமாக்கலாலும் உலகத்தை சுருக்கியிருந்தாலும் பொருளதாரம் எனும் சாத்தானாலும், போதிய கல்வி அறிவின்மையாலும் தோட்டப்புற மக்கள் இன்னும் பூரணமாக உலகமயமாக்கலுக்கு உட்படமாலேயே இருக்கின்றனர். இதுவும் மலையக தோட்டப்புற மக்களின் அரசியல் பிரவேசங்களுக்கு பாரிய முட்டுக்கட்டைகளை இடுகின்றது.

பெண்களின் அரசியல் பிரவேசங்களை அதிகரிக்கவும் பாராளுமன்றில் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் பல்வேறு வேலைத்திட்டங்கள் நாடு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் அவற்றில் எத்தனை மலையக தோட்டப்புற பெண்கள் பலன் பெற்றார்கள் என்பது கேள்விக்குறியே. குறிப்பாக 2005 – 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுமார் 5000 யிற்கு அதிகமான பெண்களுக்கு இவ்விடயம் தொடர்பிலான கருத்தரங்குகளும், செயலமர்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடாத்தப்பட்டன. இவை பல்வேறுப்பட்ட தன்னார்வ தொண்டர் அமைப்புக்களால் மேற்கொள்ளப்பட்டன. இந்த காலப்பகுதியாகட்டும் அதற்கு பிற்பட்ட காலப்பகுதியாகட்டும், இவற்றில் பயன்பெற்ற பெண்கள் அதிகமாக பெரும்பான்மையினத்தை சேர்ந்த பெண்களாவர். அவர்களை விட வடக்கு கிழக்கைச் சேர்ந்த சில தமிழ் - முஸ்லிம் பெண்களும் நன்மை பெற்றிருந்தனர். ஆனால் மலையத்தை சேர்ந்த தோட்டப்புற பெண்களை குறிவைத்து எந்த செயற்பாடுகளும் இடம் பெறவில்லை. ஏனைய அரசியல் ரீதியான திட்டங்களைப் போன்று இவ் விழிப்புணர்வு செயற்பாடுகளிலும் எம்மக்கள் புறக்கணிக்கப்படுகின்ற நிலைப்பாடே காணப்படுகின்றது.

இவ்வாறு பல திட்டமிடப்பட்ட திட்டங்களிலும் சரி, மலையக தலைமைகளால் திட்டமிடப்பட்ட முறையிலும் சரி மலையகப் பெண்களை அரசியலுக்குள் உள்வாங்கும் செயற்பாடானது முடக்கப்பட்டுக் கொண்டே வருகின்றது. மலையகத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களும் சரி ஏனைய அமைப்புக்களும் சரி இந்த சிக்கல் நிலைக்கு ஒரு முடிவுக்கட்டி பெண்கள் சார்பில் ஒருவரையேனும் மலையத்திலிருந்து பாராளுமன்றத்திற்கு அனுப்பும் செயற்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிக்காத நிலைமையே காணப்படுகின்றது.

பிரச்சினைகள் இவ்வாறு காணப்படும் அதே வேளை இவற்றிற்கான தீர்வு என்பது குறுகிய காலத்தில் எட்டப்பட முடியாத ஒன்றாகும். மலையகத்தின் மக்களுக்கு அரசியல் தலைமைத்துவம், அரசியல் உரிமைகள் தொடர்பில் விழிப்புணர்வை ஊட்ட வேண்டிய அதேவேளை பெண் தலைமைத்துவத்தின் முக்கியத்துவம் தொடர்பிலும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். அது மாத்திரமன்றி மக்களுக்காகவே கட்சி வளர்க்கின்றோம் என வயிறு வளர்த்து திரியும் கூட்டமும் தங்களது வாக்கு வங்கிகளை கொண்டு சிறந்த பெண் தலைமைகளை உருவாக்க வேண்டும் அல்லது அதற்கான முயற்சிகளையேனும் மேற்கொள்ள வேண்டும். நாடளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படும் பெண் தலைமைத்துவம், பெண்களின் அரசியல் உள்வாங்கல் தொடர்பான செயற்பாடு மலையகத்தை மேலும் அதிகப்படுத்தப்பட வேண்டும். மலையகப் பெண்கள் எனும் போது படித்த மலையகப் பெண்கள், தோட்டப்புற தொழிலாளிகள் என இரு பிரதான தரப்பினர் உள்ளனர். இவர்களில் யார் பிரதிநிதியாக வந்தாலும் நன்றுதான். ஆனாலும் அந்த தோட்ட தொழிலாளியின் கஸ்டத்தை உணர்ந்த ஒரு படித்த பெண் அல்லது அந்தக் கஸ்டத்தை அனுபவ ரீதியில் உணர்ந்து அதனை போக்க வேண்டும் என துணிந்த ஒரு பெண் பிரிதிநிதியாக வருவது மேலும் சிறப்பாக அமையும்.

மேலும் அரசியல் கட்சிகள் வேட்பு மணு தாக்கல் செய்கின்ற சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டளவான வாய்ப்பினை பெண்களுக்கு வழங்க வேண்டும் என்ற சட்ட ஏற்பாடு கொண்டுவரப்பட வேண்டும். உதாரணமாக இந்தியாவில் 2008 ஆம் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற சட்டமூலம் கொண்டுவரப்பட முயற்சிக்கப்பட்டும் தோல்வியை தழுவியிருந்தது. அத்தகையதோர் சட்ட ஏற்பாட்டினை இலங்கையில் கொண்டு வந்து ஏகமனதாக நிறைவேற்றுவது இப்பிரச்சினைகளுக்கு தீர்வினை பெற்றுத்தரும். எது எவ்வாறாயினும் அரசியல் முன்வருகைக்கு பெண்ணும் துணிந்திடத்தான் வேண்டும்.

பெண்கள் தலைமையேற்க தகுதியற்றவர்கள், மென்மையானவர்கள், பிற சவால்களுக்கு இலகுவாக உட்படக் கூடியவர்கள் என்பன போன்ற 14ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட மன சிந்தனையுடன் இருப்போர் தத்தமது சிந்தனைகளை மாற்றிக் கொள்ள வேண்டும். ஆண்களுமே இவ்வாறான சிக்கலுக்கு முகங் கொடுத்து நாட்டினையும் மக்களையும் வரலாற்றையும் சீரழித்த வரலாறுகள் அதிகம். தலைமைத்துவம் மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் என்பது பால் சம்பந்தப்பட்ட விடயமல்ல. அது மனம் சார்ந்த விடயம். மாற்றத்தை நோக்கிய மன எண்ணமும் மக்கள் நலன் பேணும் உயிர் துடிப்புள்ள எவரும் தலைமையேற்க தகுதியானவர்களே. மீண்டும் நூற்றாண்டுகளுக்கு பின்னே பயணிக்க முயலாது மனங்களை மாற்றி சமுதாய மாற்றத்திற்கு வழிகோல முயற்சிப்போம்.

நன்றி - http://adndhanushan5.wixsite.com/

தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு 2 - திலக்



'எங்கள் கடைகளில் பாம் ஒயிலில் தயாரித்த பொருட்கள் எதுவும் விற்பனைக்கு இல்லை'

கடந்த வாரம் முதல் 'பாம் ஒயில்' உற்பத்தி சம்பந்தமான தகவல்கள் அடங்கியதாக ஒரு புதிய தொடரை ஆரம்பித்ததே மலையக மக்களின் வாழ்வாதார தொழில்களான 'பெருந்தோட்டக் கைத்தொழில்' நிலைமைகள் நமது நாட்டில் தளம்பலுடன் வீழ்ச்சிப் போக்கில் சென்று கொண்டிருப்பது தொடர்பாகவும் கவனத்தை ஈர்ப்பதும்இ அதனூடாகப் இப்போதைக்கு நமது கைவசம் உள்ள தேயிலை றப்பர் கைத்தொழில்களைப் பாதுகாப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்தல் மற்றும் தேயிலைக்கு மாற்றீடாக முள்ளுத்தேங்காய் எண்ணெய் (பாம் ஒயில் ) உற்பத்தி நடைபெறும் நாடுகளில் அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது அங்கு வாழும் தொழிலாளர்களின் நிலை என்னவாக இருக்கின்றது என்பது தொடர்பாகவும் நாம் முன்கூட்டிய படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே இந்த தொடர் தனியே வாசகர்களுக்குத் தகவல் தரும் இரசணைக் குறிப்பாக மாத்திரம் கொள்ளத்தக்கது அல்ல. இந்த கட்டுரைத் தொடர் நோக்கி வரும் பதிற்குறிகளையும் இணைத்துக்கொண்டு ஒரு விவாத தொடராக அமைவது பொருந்தமானது.

இந்த தொடர் குறித்த புதிர் ஒன்றை நான் முநூலில் ஆரம்பித்ததும் அதற்கு 'நமதுமலையகம்.கொம்' இணையத்தள ஆசிரியர் என்.சரவணன் எழுதியிருந்த குறிப்பை முதலாவது கவனகுவிப்பைக் குவிப்பாக நாம் கொள்ளவேண்டியுள்ளது.


'பாம் ஒயில் குறித்து என்ன கூறப்போகிறீர்கள் என்று அறிவதில் ஆவல். குறிப்பாக பாம் ஒயிலுக்கு எதிரான வெகுஜன செயற்பாட்டு இயக்கங்கள் உலக அளவில் தோன்றியிருக்கின்றன. நோர்வேயில் பிரபல கடைகளில் 'எங்கள் கடைகளில் பாம் ஒயிலில் தயாரித்த பொருட்கள் எதுவும் விற்பனைக்கு இல்லை' என்பதை தமது விழிப்புணர்வைக் வெளிக்காட்டும் விளம்பரமாகவே வைத்துள்ளார்கள். இது குறித்த விழிப்புணர்வு இலங்கை மக்களிடம் இல்லை. மக்களின் அந்த அறியாமை தான் முதலாளிகளின் பெரு முதலீடு. உங்கள் அரசியல் நிகழ்ச்சிநிரலில் இது குறித்த அரசியல் பிரக்ஞையும் உள்ளடக்கிக் கொண்டால் மகிழ்ச்சியளிக்கும்' (முகநூல் - 4 · January 17).
சரவணன் கொழும்பைப்பிறப்பிடமாகக் கொண்ட மலையக வம்சாவளியினரான அனுபவமிக்க ஊடகவியலாளர். 2000ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 'தமிழ் இனி' மாநாட்டுக்கு இவர் சம்ர்ப்பித்த  கட்டுரை மிகுந்த முக்கியத்துவமுடையது. இப்போது நோர்வேயை தளமாக்க் கொண்டு செயற்பட்டாலும் மலையகம் குறித்த தொடர் கவனத்தையும் பதிவுகளையும் செய்துவருபவர். சர்வதேச தளத்தில் ஊடகத் தொடர்புகளையும் கொண்டிருப்பவர். நமது இலங்கையில் பாம் உற்பத்தி தொடர்பாக நான் ஆராய முற்பட்டிருக்கும் வேளை 'நோர்வே' யில் கடைகளில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறும் அந்த விளம்பரம் உணர்த்தும் பின்னணிக்குரல் என்ன என்பது தொடர்பாக ஆராயவேண்டியுள்ளது.


இந்த 'பாம் ஒயில்' உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதாலா அல்லது இந்த பாம் ஒயில் உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டு அடிமைகள் போல் நாடாத்தப்படுவதனை எதிர்க்கும் முகமாக அந்த விளம்பரம் அமைந்திருந்தது என்று கொள்ளலாமா என்பதுதான் இங்கிருக்கின்ற கேள்வி. இங்கு உற்பத்தி செய்யப்படும் பெருந்தோட்ட உற்பத்திப் பொருட்கள் எல்லாமே வெளிநாட்டு சந்தையை இலக்காக கொண்டவை. எனவே வெளிநாடுகள் இந்த மனித உரிமைக் கண்ணோட்டத்தில் பொருட்களை இறக்குமதி செய்யவோ விற்பனை செய்யவோ தயங்கினால் நமது ஏற்றுமதிகளுக்கு என்ன நடக்கும். இதனை பாம் ஒயிலுடன் மாத்திரமல்லாது தேயிலையுடனும் ஒப்பிட்டுக் பார்த்தால்இ தேயிலை ஏற்றுமதி குறைந்து செல்லுவதற்கு உள்நாட்டு 'அரசியல்' நிகழ்ச்சி  நிரலுக்கு அப்பால் வெளிநாடுகளும் மனித உரிமைக் கண்ணோட்டத்தில் செயற்பட  தொடங்கினால் நமது மக்களின் வாழ்வாதார நிலை என்ன? எனும் பெரும் கேள்வியை நாம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது.

இந்த கட்டத்தில் மஸ்கெலியாவை பிறப்பிடமாகக் கொண்ட வேலு சந்திரசேகரன் எனும் விவசாய விஞ்ஞான பட்டதாரியான நம்மவர் இது குறித்து இட்டிருக்கும் பதிவையும் வாசிப்போம்.

Veloo Chandrasegaran - இலங்கையில் தேயிலைக்கான மாற்று பொருளாதார பயிர் விளைச்சல் எனும் பதம் பல்வேறு கோணங்களில் நோக்கப்படவேண்டும். சூழல்இ வர்த்தகம்இ மண்வளக்குறைவுஇ முகாமைத்துவமின்மைஇ இதற்கும் அப்பால் நாம் அறியாமல் ஊடுருவும் சில அரசியல் நாய் நகர்த்தல்கள். சர்வதேச ரீதியில் பேசப்படுகின்ற காலநிலை மாற்றம்இ பூலோக வெப்பமுயர்வுஇ நீர்வளப் பற்றாக்குறைஇ காபன் வர்த்தகம் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு ஐ.நா வின் செயற்றிட்டங்களும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமாக இலங்கையின் காடு போர்வையை அடுத்த 5 - 10 வருடங்களில் 32 சதவீதமாக உயர்த்தும் பிரதான இலக்கும் காணப்படுகின்றது. அவ்வகையில் அதற்ககான ஒரு வழிமுறையாக இறப்பர் தோட்டங்கள் மலையகத்தில் ஊடுருவதை இப்போது பார்க்கின்றோம். அத்துடன் உயர்நிலத் தேயிலை உற்பத்தி படிப்படியாக தாழ்நிலத்திற்கு மாற்றப்பட்டு வருவதையும் தேயிலை சபையின் ஒட்டுமொத்த கவனமும் அணுசரணையும் இப்பிரதேசங்களை நோக்கி நகர்ந்து சென்று பெருந்தோட்டங்களுக்கு பதிலாக சிறு தோட்ட தேயிலை பயிர்ச்செய்கை உரிமையாளர்கள் எனும் எண்ணக்கரு முன்னெடுக்கப்படுவது பெரும்பாலானவர்கள் அறியாதது. சில கசியும் தகவல்கள் உயர்நில தேயிலை தாழ்நில பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விளைவிக்கப்பட்டதாக சந்தைப்படுத்தப்படுவதன் மூலம் உயர்நில தேயிலை உற்பத்தியின் வீழ்ச்சியை காட்டவும் முனைவதாக தெரிகின்றது. உங்களுடைய ஆய்வுக்கு இச்சிறிய துளிகளும் உதவும் என நினைக்கின்றேன். புதிய முயற்சி வெற்றியடைவீர்கள் என்பதாக எழுதிச் செல்கிறார்.

இவர் கூறும் 'உயர் நிலத்தில் இருந்து தான் நிலம் நோக்கி தேயிலை உற்பத்தியைக் கடத்திச்' சென்று கால்நூற்றாண்டுகள் கடந்துவிட்டது. இப்போது இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் 72 சதவீதத்தை  தாழ்நில சிறுதேயிலை உற்பத்தியாளர்களிடம் இருந்தே பெறப்படுகின்றது. இதனை 'ஹிரு' தொலைக்காட்சியில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் இ தொழில் ராஜாங்க அமைச்சரும் கலந்து கொண்டிருந்த நேரலை விவாத நிகழ்ச்சியில்  நான் போட்டுடைத்திருந்தேன். அந்த நிகழ்ச்சியை  நடாத்திய சிங்கள மொழி ஊடகவியலாளரான சுதேவ என்னுடைய இந்த கருத்தின் முக்கியத்துவம் குறித்தே நாம் இனிவரும் காலங்களில் அவதானமும் செலுத்த வேண்டியுள்ளது என்பதை நினைவுறுத்தியே நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இந்த கட்டத்தில் வேலு சந்திரசேகர் முன்வைக்கும் மேலதிக விடயங்கள் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.

ஆக நமது நாட்டிற்கு நாம் வந்து 200 வருடங்களில் பூர்த்தியாகியுள்ள நிலையில் தேயிலை வந்து 150 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அதனைக் கொண்டாட நாட்டின் ஜனாதிபதி தலவாக்கலைக்கு வந்து சென்றுள்ள நிலையில் அந்த தேயிலை ஆராய்ச்சி நிலைய ஆய்வுகளும்இ அபிவிருத்திகளும் எந்த தேயிலையை முன்னேற்றிக் கொண்டிருக்கின்றனஇ நிலைபேண் அபிவிருத்தி இலக்கு நிகழ்ச்சி  நிரலில் நாம் வகிக்கும் வகிபாகம் என்ன என்பது பற்றியெல்லாம் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற (Sustainable Development Goals) நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகள் சம்பந்தமான செயலமர்விலும் கலந்துகொண்டு மலையகப் பகுதிகளில் காடாக்கல் குறித்த செயற்பாடுகளில் எமது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என எனது வாத்த்தை முன்வைத்திருந்தேன் (சிங்கள மொழியில்). எனது அருகில் இருந்தவர் சிரேஷ்ட அரசியல்வாதி தினேஷ் குணவர்தன. வருகை தந்திருந்த நாடு தழுவிய உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளில் பதுளையைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான சச்சிதானந்தன்  சுரேன்கண்ணாவை மாத்திரமே என்னால் நம்மவராக அடையாளம் காண முடிந்தது. ஏனையோர் இந்த உரையாடல் குறித்து கவனம் பெற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

'ஜல்லிக்கட்டு' அலை போராட்டத்தில் அள்ளுண்டு போய்கிடக்கும் இளைஞர் கூட்டத்திடையே நாம் அள்ளுண்டு போகும் அபாயத்தை முன்வைக்கிறேன். இதற்காகவும் போராடவும் சிந்திக்கவும் தலைப்படுங்கள். தமிழன் என விரைப்போடு 'மல்லியப்புசந்தியில்' எழுவதில் வியப்பில்லை. ஆனால் அந்த வீரத்தைக் கொண்டாட அதே தமிழனின் 'இருப்பு' முக்கியமல்லவா?. எனவே நமது இருப்பு கேள்விக்குள்ளாகிவரும் நிலையில் நாம் நமது வரலாறுகளை மீட்டிப்பார்க்கும் தேவையுள்ளது...

அதற்கு தலைப்பை மீண்டும் வாசிக்க

நன்றி - சூரியகாந்தி

மலைநாட்டு தமிழ் மக்கள் தலைவர்கள்- கோ. நடேச ஐயரின் சாதனைகள் - ஸி. வி. வேலுப்பிள்ளை


நடேச ஐயர் அவர்களின் வாழ்க்கையே ஒரு சகாப்தத்தின் தொடக்கமாகும். காட்சிக்குரியவராக இருப்பதற்கு இணையற்ற ஆற்றல் படைத்தவர். நூற்றுக்கணக்கான செயற்கரிய செயல்களை ஆற்றிய பெரியார். பல சூழ்நிலைகளைச் சாமர்த்தியமாக வென்றவர். நிகழ்ச்சிகள் அவரைச் சுற்றி வட்டமிட்டன. நிகரற்ற தலைவராய் விளங்கினார். அவர் பல துறைகளிலும் ஈடுபட்டார்.

தோட்டத்தில் விழிப்புற்றார்
அவர் ஒரு பத்திரிகை எழுத்தாளர்; நூலாசிரியர்; துண்டுப் பிரசுரம் எழுதுபவர்; தொழிற்சங்கவாதி; அரசியல் கிளர்ச்சியாளர் இவற்றிற்கெல்லாம் மேலாக அவர் ஒரு அரசியல் அறிஞராகவும் விளங்கினார்.

1920ஆம் ஆண்டின் முற்பகுதியில்தான் நடேசஐயர் ஈழத்திற்கு வந்தார். அப்பொழுது அவரை யாரும் அறியார். அன்று அவரைக் கேள்விபட்டவரும் இலர் எனலாம்.

உடுபுடைவைக் கடை முதலியார் ஒருவர், ஒருமுறை இவரைத் தோட்டப் பகுதிக்கு அழைத்துச் சென்றார். ஐயர் தோட்டத் தொழிலாளர்களின் துன்பத்தைக் கண்ணாக் கண்டார். ஐயரவர்கள் விழிப்புற்றுச் செயலாற்றமுன் அறிவும் சிந்தனையும் வேண்டும் என்று எண்ணினார்.

தன்னை அறிமுகப்படுத்தி மக்களோடு நெருங்கிப் பழகுவதற்காக வெற்றி உங்களுடையதே என்ற நூலை எழுதினார். இது அவர் எழுதிய முதல் நூல். அந்த நூல் நன்றாக விலைப்பட்டது. 'தேசபக்தன'; என்ற சஞ்சிகையை வெளியிடலானார். அந்தச் சஞ்சிகை தனிப்பட்ட ஒரு இனத்திற்காக என்று எழுந்ததல்ல@ ஆயினும் அது நீண்டகாலம் வாழவில்லை. சஞ்சிகை தோன்றியதன் அடிப்படைக் குறிக்கோள் நிறைவேறியது ஐயரவர்களுக்கு வெற்றி!

தொழிற்கட்சி தோற்றம்
பின், ஐயரவர்கள் திரு. ஈ. குணசிங்காவோடு சேர்ந்து முதன் முதலாகத் துறைமுகத் தொழிலாளர் சங்கத்தை நிறுவினார். இலங்கைத் தேசிய காங்கிரஸை எதிர்பார்த்து இலங்கைத் தொழிற் கட்சியைத் துவக்கினார். இந்த இரண்டு இயக்கங்களும் மக்களின் எழுச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் தொண்டு புரிந்தன.

கருத்துவேறுபாடு காரணமாகத் திரு. குணசிங்காவைவிட்டு ஐயரவர்கள் விலகினார். பின் லேக் ஹவுசில் சேர்ந்து பணியாற்றினார். ஆனால் ஐயரவர்கள் பெரும் அபிலாஷை படைத்தவர். என்றும் உதவி ஆசிரியராகவே கடைமையாற்ற அவரால் முடியாவில்லை.

லேக்ஹவுஸை விட்டு விலகினார். தோட்டத் தொழிலாளர் அவர் உள்ளத்தைக் கவர்ந்தனர். தமது செயற்களமாகத் தொப்பித்தோட்டத்தைத் தேர்ந்தெடுத்தார். அங்கிருந்துதான் இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனம் தோன்றியது.

அது தொழிலாளர்களுக்கு ஒரு பெரிய தொல்லையாகவே இருந்தது. சர்.பொன்னம்பலம் அருணாசலம் திரு. தியாகராஜன் செட்டியார் ஆகியோர் காலத்திலிருந்து ஐயரவர்களைப் போலத் தொழிலாளர் சங்கத் தலைவர் எவரும் தொழிலாளர் முறையில் இருந்த அநீதிகளை அச்சமின்றியும் ஊக்கத்துடனும் எடுத்துக்காட்டவில்லை. இதற்காகத் தமது அச்சுக்கூடத்தையும் மேடையையும் கைவந்த ஆயுதமாகிய துண்டுப்பிரசுரத்தையும் பயன்படுத்தினார். இவற்றோடு தோட்ட முதலாளிகள் இராச்சியம் என்ற நூலையும் எழுதி வெளியிட்டார். நூல் பரவாமல் தடுப்பதற்காகத் தோட்டத் துரைமார் நூற்றுக்கணக்கான பிரதிகளை வாங்கி, எரித்தார்கள். ஆயினும் நூல் பரவாமல் இருக்கவில்லை. வெள்ளைமாளிகையும் இந்திய அரசாங்கமும் திடுக்கிட்டன.

1927ம் ஆண்டில் ஐயரவர்கள் சட்டசபைக்குத் தெரிவுசெய்யப்பட்டார். திரு.சுல்தானின் இடத்திற்கு. ஐயரவர்கள் நாட்டின் கனிப் பொருள்வளங்களை அபிவிருத்தி செய்யவேண்டுமென்று சட்டசபையை வற்புறுத்தினார். அவருடைய விடாமுயற்சியால் மின்னரம், இல்மனைட் சுரங்க வேலைகள் தொடங்கின.

வாழ்க்கையில் ஒரு திருப்பம்
அந்தக் காலத்திலே கரையோரப் பிரதேசத்தில் சைவசமய வளர்ச்சி குன்றியிருந்தது. நீர்கொழும்பில் உள்ள சைவ மக்கள் சுவாமியைத் தேரில் வைத்து ஊர்வலமாகக் கொண்டு செல்ல முடியாதிருந்தது. அவர்களுக்கு இந்த உரிமையை ஐயரவர்களே பெற்றுக் கொடுத்தார். நீர்கொழும்புத் தமிழர் ஊர்வலத்தில் ஐயரவர்களையும் சிறப்பாகச்செய்த ஒரு இரதத்தில் கொண்டு சென்றனர். இது ஐயரவர்களின் வாழ்க்கையில் ஒரு திருப்பத்தைக் குறித்தது.

சர். இராமநாதன் வயதுவந்தோர் வாக்குரிமையை எதிர்த்தார். இதனைத் தடைசெய்ய வெள்ளை மாளிகைக்கும் சென்றார். ஆனால் ஐயரவர்கள் சர்வஜன வாக்குரிமையை ஆதரித்து டொனமூர் கமிஷன் முன்பு தீரத்துடன் போராடினார்@ வெற்றியையும் கண்டார்.
ஐயரவர்கள் 1931ம் ஆண்டில் முதலாவது அரசாங்க சபைக்குச் செல்வதற்குச் சூழ்நிலைகள் தடை செய்தன. அவருக்குக் கெட்டகாலம் தொடங்கியது.

பொருளாதார மந்தத்தின் விளைவாகத் தோட்டங்களிலே ஆள்குறைப்பு நடைபெற்றது@ தொழிலாளர் பலர் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள். அன்று தொழில் மந்திரியாக இருந்த திரு பெரிசுந்தரம் தொழிலற்றவர்களை இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பும் திட்டம் ஒன்றினைக் கொண்டு வந்தார். ஐயரவர்கள் இதனை நல்ல வாய்ப்பாகக் கொண்டு, ஆள்குறைப்புக்கெதிரான ஆட்சேபனைகளைக் கிளப்பிவிட்டு தோட்டங்களில் இருந்து விலகும்படி தொழிலாளர்களை வற்புறுத்தினார். தொழிலாளர்கள் பலர், ஆணும் பெண்ணுமாக, தொப்பித் தோட்டப் புகைவண்டி நிலையத்தில் கூடினர். தோட்டங்கள் காலியாக இருந்தன@ புகைவண்டிச்சேவை சீர்குலைந்தது. புகைவண்டிப்பகுதி அதிகாரிகளும் அரசாங்க அதிகாரிகளும் தொப்பித் தோட்டத்திற்கு விரைந்தனர். ஐயரிடம் சென்றார்கள். ஒரு சமரச ஒப்பந்தம் ஏற்பட்டது. தொழிலாளர்களும் வேலைக்குத் திரும்பினர்.

நினைவுச் சின்னம் ஆக விளங்கும் நூல்
ஐயரவர்கள் 1935ம் ஆண்டுத் தேர்தலின் பொழுது திரு. பெரிசுந்தரத்திற்கு மாறாகத் தொப்பித்தோட்டத்தில் பெரும் இயக்கம் ஒன்றை நடத்தினார். அந்த இடத்தை ஐயருக்கு விட்டு விட்டுத் திரு. பெரிசுந்தரம் ஓடவேண்டியிருந்தது.
திரு.வள்ளியப்ப செட்டியார், திரு.சங்கரலிங்கம்பிள்ளை ஆகியோரின் துணைக்கொண்டு ஐயரவர்கள் இந்திய சேவா சங்கத்தை அமைத்தார். இது இந்திய மத்திய சங்கத்துக்கு எதிராகத் தோன்றியதெனலாம். 1939ம் ஆண்டில் இந்த இரண்டு ஸ்தாபனங்களையும் பண்டிட் நேரு ஒன்றாக்கினார்@ இலங்கை இந்திய காங்கிரஸ் பிறந்தது.

ஐயரவர்கள் காங்கிரஸில் பலகாலம் இருக்கவில்லை. அவர் தமது சம்மேளனத்தைக் கலைக்கவுமில்லை. தம்முடைய அரசியல் நண்பராகிய திரு. சத்தியவாகீஸ்வர ஐயரோடு சேர்ந்து உழைக்கலானார்.

ஐயரவர்களின் நாடகங்கள், நாவல்கள், வருமானவரி வழிகாட்டி ஆகிய புத்தகங்கள் இலக்கியப் படைப்புகளாக இல்லாமல் மறைந்துவிட்டன. ஆனால் இலங்கை இந்தியர் பிரச்சினை பற்றிய அவருடைய பெரும் நூல் அவர் நினைவிற்கு ஒரு சின்னமாக விளங்குகிறது. அது ஓர் அருமையான நூல். அந்தத் துறையில் அது நமக்கு வழிகாட்டியாகப் பயன்படவேண்டிய நூல்.

பிழையால் உற்ற தோல்வி
பெரும் அபிலாஷை உடையவர்கள் செய்யும் பெரும் பிழையை அவர் செய்தார். மக்கள் வளர்ந்து, வயதடைந்து இறப்பவர்கள்@ மக்களுடைய கருத்துக்கள் மாறும் என்பதனை உணரத் தவறினார். அவருக்கு நல்ல ஆலோசனை கூறுவோர் இருக்கவில்லை. ஆமாம் போடுபவர்கள் மட்டுமே இருந்தார்கள். அவருடைய ஸ்தாபனம் ஒரு திட்டவட்டமான கொள்கையுடையதல்ல ஆனால் தான் மட்டும் தனியாய் நின்று நாடகத்தை நடத்தினார். அவருடைய சம்மேளனம் - அவர் ஏறிச்சென்ற அந்த இரதம் 1947ம் ஆண்டில் நொறுங்கிச் சிதைந்தது.

தொழிலாளர் எழுச்சியுற்று, உரிமையுடைய மக்களைப்போல் தன் மானத்தோடு நடக்க ஐயரவர்கள் கற்பித்தார் என்பதனை ஒருபொழுதும் அலட்சியம்செய்ய முடியாது.

அரசியல் எதிரிகள்மீது வசைமாரி பொழிவதற்காகப் பாம்பாட்டிக்கதைக் கேலிச் சித்திரங்களை நுண்ணிய திறமையுடன் பயன்படுத்தினார். குறித்த இச்சித்திரங்கள் அவருக்கே பொருத்திவிட்டன. முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பொது மக்களைத் தம் இனிய குரலின்படி ஆட்டினார். 1947ம் ஆண்டில் அவர் குரல்கெட்டது மஸ்கேலியாத் தொகுதிப் பாராளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தார்.

எம்மக்களுக்காகத் தம் வாழ்க்கையின் சிறந்த பகுதியைத் தியாகம் செய்தாரோ அவர்களே பின் ஐயரவர்களை வேண்டாம் என்று நிராகரித்துவிட்டனர். இது அவருடைய உள்ளத்தைப் பிளந்தது. 1948ம் ஆண்டில் மாரடைப்பால் அவர் இறந்தார்.


(தினகரனில்- 1958, வெளியான இக்கட்டுரை லெனின் மதிவானத்தால் சேகரிக்கப்பட்டது)

தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு... - திலக்


கபாலி என்றொரு திரைப்படம் வந்ததுதானே. நான் இன்னும் அதனைப் பார்க்கவில்லை. வழமையான ரஜினி படங்கள் மீதான ஆர்வமின்மை முதல் காரணம். ஆனாலும் அந்த படம் குறித்த சர்ச்சைகளால் அந்த திரைப்பட இயக்குனரான பா.ரஞ்சித் இன் நேர்காணல்கள் பலவற்றைப் பார்த்தேன். கபாலியில் அவர் பேசிய அரசியல் என்னவென இன்றுவரை பார்க்காத நிலையில் கபாலி எனும் திரைப்படத்தை வைத்துக் கொண்டு பா.ரஞ்சித் 'பேசும்'அரசியல் பிடித்திருந்தது. நேரம் வாய்க்காத்தால் இன்னும் கபாலியை பார்க்கவில்லை. ஆனாலும் பொங்கல் நாளன்று வசந்தம் தொலைக்காட்சி கபாலியை ஒளிபரப்ப எதேட்சையாக கொஞ்சம் பார்த்தேன். அதில் ஒரு காட்சியில் நிழல் போன்று பயன்படுத்திய 'கத்தி' காட்சிகள் கபாலியைப் பார்க்கவும், கடந்தவாரம் நேர்ந்த என்னுடைய அனுபவம் ஒன்றை பகிர்வும் தூண்டுதலாகியது.

கடந்த மாதம் அழைப்பெடுத்த  ஒரு தருணத்தில் தங்கை லுணுகலை ஶ்ரீ, அல் அஸ்மத் எழுதிய அறுவடைக் கனவுகள் நாவலை முன்வைத்து நான் எழுதிய கட்டுரையில் தேயிலை தொழில் துறை  வீழ்ச்சி குறித்த பதிவுகளின் எனது விபரிப்பு குறித்து பேசிவிட்டு, அதில் 'ரப்பர்' தொழில் குறித்தும் அங்கு வாழும் மலையக மக்கள் குறித்தும் இலக்கியங்கள் அதிகளவில் வராமை குறித்த எனது அவதானம் முக்கியமானது என விவரித்தார். (இப்போது மாத்தளை மலரன்பன் இரப்பர் வாழ்வு குறித்த நாவல் ஒன்றை எழுதிக்கொண்டிருப்பதாகவும் ..விரைவில் வெளிவரவுள்ளதாகவும் அறியக்கிடைக்கிறது. வாசிக்க ஆவலாக உள்ளேன்) கூடவே ஶ்ரீ கூறிய இன்னுமொரு விடயம் எனது கவனத்தைப் பெற்றது. பாம் ஒயில் தொழிலுடன் தொடர்புடையதான சிறுகதை ஒன்றை தன்னுடைய தோழி ஒருவர் எழுத விழைவதாகவும் அது அவருக்கு அந்த துறை சார்ந்தவர்களிடம் இருந்து அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடியதா எனவும் ஆலோசனைகள் கேட்டார். கட்டாயமாக பதிவு செய்யச் சொல்லுங்கள்.இந்த பாம் ஒயில் குறித்த தேடல் அவசியம் என்றேன். 'ஒரு பூ முப்பது கிலோ கிட்ட வருமாம் அண்ணா... தவிர இன்னும் பல அண்ணாவிடம் நான் சொல்ல முடியாத்தெல்லாம் நடக்குதாம் அண்ணா' என்ற ஶ்ரீ யின் ஆதங்கத்தின் பின்னையதை புரிந்து கொண்டு, முன்னையதின் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினேன்...."என்னது... பூ ஒன்னு முப்பது கிலோவா....."

தென்னைத் தொழிலில் இருந்து நம் மக்கள் முற்றாக ஓரம் கட்டப்பட்டு குருநாகல், சிலாபம் பகுதிகளில் கரைந்து விட்டார்கள். குளியாபிட்டிய - புத்தளம் எல்லையில் ஒரு தனியார் தென்னந்தோட்டத்துக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அந்த சிறிய தோட்டத்தை பார்த்துக்கொள்ளும் ஏழைக்குடும்பம் ஒன்றுதான் அங்கு இருந்தது. தண்ணீர் வாங்கிக் குடித்துவிட்டு 'அக்கா வின் ஊர் இதேதானா' என்று சிங்களத்தில் கேட்டேன். 'ஒவ் மாத்தியா' என்றவரிடம் 'தனியாக ஒரு குடும்பம் மாத்திரம் இருக்கிறீர்களே... சிரம்மாக இல்லையா என்றேன்.' சிரமந்தான் மாத்தியா ... முந்தி நிறைய பேர் இருந்தாங்க .. தென்னந்தோட்டம் குறைஞ்சதும் வேற..வேற பக்கம். போயிட்டாங்க என்று அழகான சிங்களத்தில் பேசினார். ஏதோ நினைத்தவனாக 'அக்காகே நம் மொனவத' என்றேன் . 'முத்துலெட்சமி' மாத்தியா என்றார்.

இந்த நிலை இப்போது இரப்பரிலும் உண்டு. மெனராகலையில் பாலகிருஷ்ணன் என்பவரின் மக்களிடம் உன் பெயர் என்னும்மா என்றேன். 'வாசனா' என்றது. கம்பளை , வட்டதெனியா வில் மாசிக்கொம்பரை எனும் ஒரு தோட்டம் இருந்தது. என் அம்மாவின் தாய்மாமாமன் அங்கு வாழ்ந்த காலத்தில் மிக சிறுவயதில் சென்ற ஞாபகம் உண்டு. பலாப்பழம் அந்த ஊரில் பிரசித்தம். இரண்டொரு வருடங்களுக்கு முன்னர் அந்த வழியாக போக நேர்ந்த போது மாசிக்கொம்பரை மக்களின் சில பெயர்களை அங்குள்ள கடை ஒன்றில் இளநீர் குடித்தவாறு கேட்டேன். 'நீங்க... எந்த காலத்துல இங்கஆல வந்தீங்க மவன்.. இப்போ இங்கே எல்லாம் இப்போ இஸ்லாமானவுங்கதான் இரிக்க' என்றார் கடை முதலாளி. 

ஶ்ரீ, சொன்ன அந்த சிறுகதைக் கதை நினைவுக்கு வரவும் களுத்துறை மாவட்டத்தில் பள்ளேகம தோட்டத்து வீடமைப்பு திறப்பு விழாவும் வந்தது. மூன்று மணித்தியாலயத்துக்கு முன்பதாகவே களுத்துறைக்கு சென்று களத்தில் இறங்கினேன். பாம் ஒயில் தோட்டத்துக்குள் இறங்கி அந்த பூவை தேடினேன். அப்புறம் மக்களைத் தேடினேன்.சிறுகதைக்குள் வரும் என நான் எதிர்பார்த்த அத்தனை ஊகங்களையும் அங்கு அகப்பட்ட பெரியவரிடம் பேசி தெரிந்து கொண்டேன். 'அண்ணாவிடம் சொல்ல முடியாத' அந்த விடயங்கள் பற்றியெல்லாம் கூட அந்த பெரியவர் தயக்கத்துடன் சொன்னார்.மனது பாரமாகிக்கொண்டு வர... சற்று முன்னர் நான் தோட்டத்தில் தூக்கிப்பார்த்து தோற்றுப்போன 'பூவின் பாரம்' குறித்து கேட்டேன்.பெரியவர் சிரித்தார் ... 'அது பூ இல்லீங்க சேர்.... க(ட்)டுப் பொல் என்றார். அவரது சிரிப்பிற்குள் நின்று கட்டுப்பல் வேறு என்னைப் பார்த்து தனியாக சிரித்துக்கொண்டு நின்றது. மொழிபெயர்க்கச் சொல்லி மூளைக்கு உத்தரவிட்டு விட்டு அடுத்த. கேள்வியைப் போட்டேன் . ' ஆமா ... இந்த உயரமான மரத்துல இருந்து எப்பிடி கட்டுப்பொல்ல எறக்குவீங்க?'. மீண்டும் சிரித்தார், இப்போது பொக்கை வாயாக இருந்தார். நான் இன்னும் அலட்சியப்படுத்தப்பட்டதாக உணர்ந்தேன். 'எறக்கறதெல்லாம் இல்லீங்க ... முப்பது அடி நீட்ட 'மலேசிய' கத்தி கொடுத்து இருக்காங்க ... நாங்க ஆம்பளைங்க எட்டி வெட்டுவோம். தொபுக்கட்டீனு உழுகும். காய்எல்லாம் செதறும். அப்பிடி செதறுனது எல்லாத்தையும் பொறுக்குறதுக்கு பொம்பளை ஆளுக ரெடியா இருப்பாங்க... அப்படி சிதறாம நெறய காய்ஒட்டிக்கிட்டு அப்படியே கிடக்க கட்டுப்பொல்ல தூக்கி மத்த பொம்பளை ஆளுக ரோட்டில கொண்டு வைக்கனும். லொறி வந்து ஏத்மிக்கிட்டு போயிடும்.நீங்க சொன்ன மாதிரி அது பூ இல்லீங்க... (மீண்டும் சிரித்தார்.... என்க்கு கூச்சமாக இருந்தது ) ஒரே முள்ளுங்க. அதுனால தாங் க கட்டுப்பொல்னு பேரு. அதான் தூக்கி பார்த்தேன்னு சொன்னீங்களே.... எப்படி நீட்டி ... நீட்டிக்கிட்டு இருக்கு பார்த்தீங்களா...? 'ஆமாம் ... தூக்கி பார்த்தேன்... முடியல்ல ... முள்ளும் குத்துனுச்சே ...' என்றேன். ஐயையோ, கவனங்க எங்க தோட்டத்தில முள்ளு குத்துன வெசம் ஏறி ரெண்டு பேரு செத்து இருக்காங்க. 

என் விரலில் குத்திய சின்ன காய்த்தை சின்னதாக கடித்து உறிஞ்சு துப்பியபடி கேட்டேன்.."அப்ப சம்பளம்லா எப்பிடி"....   

ஹி.... ஹி... என இப்போது என்னைப் பார்த்து ஏளனமாக வந்தது ... 'கூட்டு ஒப்பந்ததந்தான்' . 

பெரியவர் போய்க் கொண்டிருந்தார்... தேவ.முகுந்தனின் 'கண்ணீர் ஊடே தெரியும் வீதி' நினைவுக்கு வந்தது. கபாலி படத்தில் அந்த நிழலாகத் தெரிந்த கத்தியைப் பார்த்ததும் அந்த கண்ணீர் ஊடே சென்ற பெரியவர் நினைவுக்கு வந்தார். என் மூளை மொழிபெயர்ப்பு பணியை முடித்து இருந்தது. க(ட்)டு - முள், பொல் - தேங்காய். கட்டுப்பொல் - முள்ளுத்தேங்காய். இதில் இருந்து வரும் எண்ணைக்குப் பெயர் "பாம் ஒயில்'. 

ஆமாம், அந்த சிறுகதையை எழுத ஏன் அந்த சகோதரி 'அச்சுறுத்தல்' வருமா என அச்சப்படுகிறார்?????. மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டிருப்பது கத்தி மட்டும்தானா?.. வாழ்க்கை மட்டுமல்ல எங்கள் வரலாறும் ஒரு வட்டம் தான் போலிருக்கிறது ... அதற்கு மீண்டும் தலைப்பை வாசிக்க ..



(வளரும்) 
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates