Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

அரங்கம் சஞ்சிகை வெளியீடு

அரங்கம் சஞ்சிகை வெளியீடு


" கண்டிச்சீமையிலே" Microstudy நுணுக்கமாக நோக்கும் ஓர் ஆய்வு - கே.எஸ்.சிவகுமாரன்


இராசடகோபன் தந்துள்ள கண்டிச்சீமையிலே (கோப்பிக்கால வரலாறு-1823-1839) என்ற அருமை யான348 பக்க படங்களுடன் கூடிய ஆய்வுநூலுக்கு 2013இல் அணிந்துரை எழுதிய பேராசிரியர் சோ.சந் திரசேகரன் பதித்துள்ள சில விளக்கங்கள் இங்கே தரப்படுகின்றன.

19ஆம் நூற்றாண்டில் இத்தாலிய மார்க்சியவாதி ULUMTGOT ANTONIO GARMSCI (1891-1937) என்பார் ஒடுக்கப்பட்ட மக்களின் (SUBALTERN) வரலாறு அடையாளம் என்பன பற்றிய சிந்தனைகளை வெளியிட்டார். இவை பின்னர் ஆங்கில அறிஞர்களால் கருத்தில்கொள்ளப்பட்டது. 1970களில் சமூக வரலாற்றை கீழிருந்து நோக்கும் ஒரு புதிய பார்வை ஆரம்பமாயிற்று. இதில் கிராம்சியின் செல்வாக்கு மிகுந்து காணப்பட்டது. வரலாற்றை உருவாக்குவது உயர் குழாத்தினர் (ELTE) மட்டுமன்றி, இதில் சாதாரண மக்களும் ஒரு முக்கிய பங்களிப்பு உண்டு என வெளிக்காட்டப்பட்டது.

மக்களுடைய வாழ்க்கை நிலையையும் பங்களிப்பையும் கருத்திற்கொள்ளாது வரலாறு முழுமையானதாகாது என்று கூறிய இவ்வாய் வாளர்கள் ஒடுக்கப்பட்ட மக்கள் என்பதற்கு பதிலாக பொதுமக்கள், கீழ் மட்ட மக்கள், சலுகை குறைந்த மக்கள், பலவீனமான சமூகப் பிரிவினர் போன்ற சொற்களைக் கையாண்டனர். கிராம்சியின் நோக் கில் இருக்கப்பட்டவர்கள் என்பது கவனிக்கப்படாத வர்கள் அல்லது அலட்சியப்படுத்தப்பட்டவர்கள் என்ற பொருளில் வரும்.

ஊடகவியலாளரும், கவிஞரும், நாடகத்துறை யில் ஈடுபட்டவரும், சட்டத்தரணியுமான இரா.சடகோபன் பற்றிய சோ.சந்திரசேகரனின் கணிப்பு இதுவாகும்.

நூலாசிரியர் இந்நூலில் (கண்டிச் சீமையிலே) தமது இரு பிரதான ஆளுமைகளை பிரதிபலிக் கின்றார். ஒருபுறம், ஓர் ஆய்வாளருக்குரிய தகவல் தேட்டத்திறன், பகுப்பாய்வுப் பாங்கு தர்க்க ரீதியான சிந்தனை என்பவற்றுடன் கூடிய எழுத்தாற்றல், ஒரு சட்டத்தரணிக்குரிய வாதத்திறன் மறுபுறம் கவிஞர் இலக்கியவாதி, பத்திரிகையாளர் என்போருக்குரிய கலையம்சத்துடனும், சமூக நேயத்துடனும் கண்ட றிந்தவற்றை தெள்ளிய அழகியல் உணர்வுடன் வாசகர் படிக்கும் படியான தமிழ்நடை ஆகிய இவைய னைத்தும் தன்னகத்தே கொண்ட அத்தியாயங்களாக கோப்பிகால மக்களின் அவலங்களும் இன்னல்களும் அவரது கை வண்ணத்தில் வரலாற்று வடிவம் பெறுகின்றன.

சோ.சந்திரசேகரன் திறனாய்வு தொடர்பாகவும் பிரயோகிக்கத் தக்க ஒரு முக்கியமான விளக்கத்தை தந்திருப்பதற்கு நன்றி. அவரது விளக்கம்-முறை யான ஆய்வாளர்களின் எழுத்து நடைக்கும், ஆய்வேட்டுப் பணிக்கும் சில வரையறைகள் உண்டு.

இங்கு உணர்வுகளுக்கு இடமிருக்காது. நிகழ்வுக்கு வியாக்கியானமளித்தல், மற்றும் அவ்வியாக்கியானங்களில் சொந்த முற்கோடல்கள், உணர்வுகள் படியாத மொழி நடையைப் (Dispassionate Language) பயன்படுத்துதல் என்பன இவற்றில் முக்கியமானவை. இவ்வியாக்கியானங்கள் முற்றி லும் விஞ்ஞானப் பாங்குடன் அமைதல் பெரிதும் வேண்டப்படுகிறது.

கலையம்சத்துடன் கூடிய இலக்கியப் பாங்கான மொழிநடை ஆய்வேடுகளில் தேவைப்படுவதில்லை. அது வலியுறுத்தப்படுவதுமில்லை. இதனால் ஆய்வேட்டுக் கட்டுரைகள் கட்டுரை இலக்கியம் என்ற வகைப்பாட்டுக்குள் உள்ளடங்கா.

ஆய்வேடுகள் இலக்கிய ஏடுகள் என்று எடுத்துக் கொண்டால் இலக்கியப்படைப்பாளிகளின் பெயர் மற்றவர்களை விட சமூகத்தின் கவ னத்தைக் கவர விசேட காரணம் உண்டு.

இலக்கிய ஏடுகளின் உள்ள டக்கம் சமூகத்துடன் நெருங்கி இருப்பதனாலும் அவற்றின் கலைத்தன்மையுடன் சமூகம் ஒன்றிப் போவதாலும் அவை சமூகத்தின் ஆழமாக நிலைபெற்று விடுகின்றன. தொடர்ந்து நினைவுகூரப்படுகின்றன.

இவ்வகையில் சடகோபனின் இவ்வெழுத்துக்களில் ஆய்வுப்பண்பும் சமூகப் பண்பும், கலைப்பண்பும் ஒருங்கே காணப்படுவது இந்நூலின் தனிச்சிறப்பாகும்.

பேராசிரியர் சோ.சந்திரசேகரன் ஓர் ஆய்வறிவாளர் என்பதை நாம் அறிவோம். அவர் திறனாய்வாளர்களுள் ஒருவர் என்பது பலர் அறியார்.

*(ELITE: மே நிலைப்பட்டோர்)

நன்றி - தினக்குரல் -27.11.2016

"வெகுஜன இயக்கங்களின் பாத்திரமே இனி கோலோச்சும்" - பீ.ஏ.காதர் (நேர்காணல்)


1. நீண்ட இடைவெளிக்குப் பின்னரான உங்கள் இலங்கைப் பயணத்தின் நோக்கம் என்ன?

இது ஒரு தனிப்பட்ட விஜயம். எனது குடும்பத்தில் நடைபெற்ற ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காகவே இங்கு வந்தேன். அத்துடன் நண்பர்களையும் உறவினர்களையும் சந்திப்பது எனது நோக்கமாக இருந்தது.

2. தனிப்பட்ட பயணமாக வந்திருக்கும் நீங்கள் மலையக அரசியல் செயற்பாட்டாளர்களையும் சந்தித்திருக்கிறீர்கள். அவர்களுடனான அனுபவ பகிர்வு எத்தகையது?

தனிப்பட்ட நண்பர்களை விட குடும்ப அங்கத்தவர்களை விட எனக்கு அரசியல் செயற்பாட்டார்களுடனான நெருக்கமும் உறவும் அதிகம்.; உயிரையும் சொந்த நலன்களையும் துச்சமாக மதித்த போராட்ட அரசியலில் வளர்ந்த தோழமை உறவு அது. அவர்களில் சிலரையாவது சந்திக்க வேண்டும் என விரும்பினேன். அத்தகைய சந்திப்பை விரிவுரையாளர் விஜயசந்திரன் அவர்கள் மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் லோறன்ஸ் அதன் சிரேஷ்ட துணைத்தலைவர் சரத் அத்து கோரளை ஆகியோரது துணையோடு ஹட்டனில் ஏற்பாடு செய்திருந்தார். அச்சந்திப்பிற்கு எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையில் மலையக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர். அமைச்சர் இராதாகிருஷ்ணன் மாகாணசபை உறுப்பினர் இராஜாராம் ஆகியோரும் வருகைதந்திருந்தனா;. அதில் பாராளுமன்ற உறுப்பினர் திலகா; கலந்து கொண்டமை அச்சந்திப்புக்கு பொது தன்மையை ஏற்படுத்தியது. அச்சந்திப்பின் போது அவர்கள் காட்டிய அன்பு என்னை நெகிழ வைத்தது. 

அவர்கள்  நான் மீண்டும் அரசியலில் ஈடுபடவேண்டும் என உரிமையோடும் உணர்ச்சியோடும் கோரியபோது நான் திணறிப்போனேன். ஆயினும் எனக்கு மீண்டும் அரசியலில் பிரவேசிக்கும் எண்ணம் கிடையாது என்பதையும் எந்த ஒரு கட்சிக்கும் உரியவனாக அல்லமல் பொதுவான ஒருவனாக இருந்து சமூகத்திற்கு பங்காற்ற விரும்பும் எனது நிலைப்பாட்டையும் வெளிப்படையாக கூறினேன். அந்த சந்திப்பின் போதும் அதனையடுத்து நடைபெற்ற பல சந்திப்புகளின் போதும் நான் நேசிக்கும் மலையகம் என்னை நேசிக்கிறது என்பi உணர்த்தி நான் இம்மக்களுக்கு தொடர்ந்து ஆற்ற வேண்டிய கடமைகளை நினைவு படுத்தியது.
3. மலையக அரசியல் களத்தில் செயற்பட்டவர் என்ற வகையில் தற்கால மலையக அரசியல் நிலைமைகள் குறித்த உங்கள் பார்வை எத்தகையது?

வடக்கு கிழக்கு மக்கள் தமது முப்பது வருட உரிமைப் போராட்டம் நசுக்கப்பட்டதன் பேரழிவிலிருந்து மீள்வதற்கான பிரயத்தனத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். அன்று அவர்களது உரிமை போராட்டம் தொடங்கப்படுவதற்கு ஏதுவாக இருந்த காரணங்களை விடவும் மலையக மக்களைப் பொருத்தளவில் வலுவான காரணங்கள் இருந்தன. நாடற்றர் பிரச்சினைக்கு முகங்கொடுத்த அதே சமயம் மிக மோசமாக சுரண்டப்படும் மக்களாகவும் அவர்கள் திகழ்ந்தனர். ஆயினும் பெருந்தோட்டதுறையில் அவர்களது அன்றாட வாழ்வாதராம் உத்திரவாதப்படுத்ப்பட்டிருந்தது. அன்று சுமார் 94 சதவீதமான மலையக மக்கள் பெருந்தோட்ட துறையில் சார்ந்திருந்தனர். தினமும் வேலை - தினமும் உணவு நிச்சயம் என்ற நிலைமை காணப்பட்டது. அவர்கள் தமது உரிமை சார்ந்த பிரச்சினையில் அதிக கரிசனை காட்டாததற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் அன்று காணப்பட்ட ‘உறுதிபடுத்தப்பட்ட வாழ்க்கை’ முறைமை ஒரு முக்கிய காரணமாக இருந்தது. இன்று அந்த நிலைமை கூட இல்லாமற் போயிருக்கிறது.

மலையக மக்களைச் சிதைப்பதற்கான பேரினவாத அரசுகள் கடந்த காலங்களில் நான்கு பாரிய தாக்குதல்களை இனவாத சட்டவாக்கம் மூலமும் அரசியல் அதிகார துஷ்பிரயோகத்தின் மூலமும் மேற்கொண்டன. இவை யுத்தரீதியிலான தாக்குதல்களை விடவும் வெற்றிகரமானதாக இருந்தன. அவற்றில் முதலாவது தாக்குதல் 1948ல் கொண்டுவரப்பட் பிரஜாவுரிமை சட்டத்தின் மூலம் மேற்கொள்ளப்ட்டது. பெரும்பாலான மலையக தமிழர் நாடற்றவராயினர். வாக்குரிமையற்ற அரசியல் அகதிகளாயினர். 

இரண்டாவது தாக்குதல் 1964 ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தமாகும். இதனால் சுமார் 60 சதவீதமான மலையக தமிழர் இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டனர். அதுவரை இலங்கையில் சிங்களவருக்கு அடுத்தபடியான எண்ணிக்கையில் அதிகமான மக்கள் கூட்டமாக இருந்த மலையக தமிழர் படிப்படியாக நான்காம் இடத்திற்கு தள்ளப்பட்டனர். மலையக சமூகம் எண்ணிக்கை ரீதியில் பலவீனப்பட்டது.

மூன்றாவது தாக்குதல் 1972 ல் நில-சீர்திருத்தம் என்ன பெயரில் மேற்கொள்ளப்பட்டது.  முதற்தடவையாக தோட்ட தொழிலாளர்கள் தாம் உருவாக்கிய தோட்டங்களில் இருந்து விரட்டியடிககப்பட்டனர். சிவனுலட்சுமணனின் வீர சாவும் டெவன் தோட்ட தொழிலார்களது போராட்டமும் இதனை தடுத்து நிறுத்திய போது பாரிய நில இழப்பு ஏற்கனவே நடந்தேறிவிட்டது. முதற்தடவையாக மலையக தமிழர் வடக்கிற்கு இடம் பெயர்ந்தனர்.

நான்காவாது தாக்குதல் 1977 தொடக்கம் 1983 வரை இன வன்முறையை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் மேற்கொள்ளப்பட்டது. மலையக தமிழர் வடக்கிற்கு மேலும் இடம் பெயர்ந்தனர்.

தற்போது இத்தாக்குதல் வேறுவடிவில் மிக நாசுக்கான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அவற்றுள் பிரதானமானது தோட்ட தொழிலளருக்கு குறிப்பிட்ட காலத்திற்கு தேயிலைக் கன்றுகளை பகிர்ந்தளித்து அவர்களுக்குரிய ஊழியர் சகாய நிதி  (நுPகுஇ பசயவரவைல) போன்ற தொழிலாளர் தமது போராட்டங்களால் வெற்றி கொண்ட பல சலுகைளை இல்லாமற் செய்து அவர்களை உபரி தொழிலாளர்களாக மாற்றி பெருந்தோட்டத்துறையை நிர்மூலப்படுத்தும் சதிதிட்டமாகும். அடுத்ததுஇ அபிவிருத்தி என்ற பெயரில் மாற்று ஜீவாதார வழி முறைகளை வழங்காமல் தோட்டக் காணிகளில் இருந்து தொழிலாளரை வெளியேற்றும் முறையாகும்;. 

அதைவிட தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் அரசியல் யாப்பு திருத்தத்திலே மலையக மக்களுக்கு எதுவித அதிகார பரவலாக்களும் வழங்கப்படுவதற்கான அறிகுறி தென்படவில்லை. இவற்றிற்கு சிகரம் வைத்தாற்போல தற்போது அரசாங்கத்தால் முன்வைக்கப்;படும் தேர்தல் சீர்திருத்தத்தில் மலையக பிரதிநிதித்துவம் முற்றாக இல்லாமல் செய்யப்படும் அபாயம் காணப்படுகிறது. இவை யாவும் மலையக தமிழ் மக்களின் இருப்பையும் எதிர்காலத்தையும் கேள்விக்குறிக்குள்ளாக்கியுள்ளன. 

4. உங்கள் வருகையோடு இணைந்ததாக ஜனநாயகத்திற்கான மலையக அமைப்பு எனும் அமைப்பு உருவாகியுள்ளது. அத்தகைய அமைப்பொன்றிற்கான தேவையாதென கருதுகிறீர்கள்?

ஏன்னுடனான உரையாடலின் போது மேற்கூறிய இருப்பு பற்றிய அச்சம் பலராலும் முன்வைக்கப்பட்டது. அதனைத் தடுத்து நிறுத்துவதற்கு சகல சமூக சக்திகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய வரலாற்று தேவை வெகுவாக உணரப்பட்டது. அவற்றில் தேர்தல் முறை மாற்றத்தில் மலையக பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்துவது மலையக மக்களின் இருப்பை பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கையில் ஒன்று என இணக்கம் காணப்பட்டது. எனவே அரசியல் யாப்புக்கான மக்கள் கருத்தறியும் குழுவுக்கு மலையக தமிழ் மக்கள் சார்பில் சிபாரிசுகளை முன்வைத்த சமூக நிருவனங்கள் பலவற்றை அழைத்து இது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. இதற்கான கலந்துரையாடலை பிரிடோ அமைப்பின் அணுசரணையுடன் விரிவுரையாளர் விஜயசந்திரன் ஏற்பாடு செய்திருந்;தார். அச்சந்திப்பின் போதே இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. மலையக மக்களின் இனவிகிதாச்சாரத்திற் கேட்ப பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தும் விதத்தில் விஞ்ஞான பு+ர்வாமாக தேர்தல் தொகுதிகளைவரைந்தும் திட்டவட்டமான வழிமுறைகளை கண்டறிந்தும் அவற்றை ஏற்கும் வரை அரசுக்கு நிர்ப்பந்தத்தை கொடுப்பதையும் உடனடி கடமையாக தீர்மானிக்கப்பட்டது. இந்த அமைப்பு உரியமுறையில் செயற்பட்டால் மாத்திரமே மலையகம் காப்பாற்றப்படும் என திடமாகக் நம்புகிறேன். இனி ஒரு தொண்டமானோ சந்திரசேகரனோ மலையகத்தில் உருவாக முடியாது. தனி ஒரு தலைவரின் தலைமைக்கு இனி அங்கு இடமில்லை. எனவே சமூக அமைப்புகளின் பாத்திரம் இனிவரும் காலங்களில் முக்கியத்துவம் பெறப்போகிறது என நம்புகிறேன். 

5. ஆரசியலமைப்பு மாற்றம் மற்றும் தேர்தல் முறைமை மாற்ற விடயங்கள மலையக மக்கள் எதிர்கொள்ளும் அச்ச நிலைமைகள் யாவை? அவற்றை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என நினைக்கிறீர்கள்?

தற்போதைய அரசாங்கம் முன்வைத்துள்ள கலப்பு தேர்தல் முறையின் கீ;ழ் 140 ஆசனங்கள் தொகுதிவாரியாகவும் 100 ஆசனங்கள் விகிதாச்சார அடிப்படையிலும் உருவாக்கப்படவுள்ளன. பின்கூறிய விகிதாச்சார ஆசனங்களில் 5 சுடுதலான ஆசனங்களைப் பெற்ற கட்சிக்கு கிடைக்கும். இதன்படி தற்போதுள்ள 160 தேர்தல் தொகுதிகள் 140 ஆக குறையப்போகிறது. இதனால் தமிழ் - முஸ்லிம் கட்சிகளுக்கு கிடைக்கக் கூடிய ஆசங்கள் குறையப் போகின்றன. மலையகத்தைப் பொருத்தளவில் நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் 3 தமிழ் தொகுதிகள் அமையும். அதிலும் மலையக தமிழ் கட்சிகள் வெற்றிபெறுமா என்பது சந்தேகமே. ஏனெனில் இதொகாவும் முற்போக்கு தமிழ் கூட்டமைப்பும் தனித்தனியாக போட்டியிடும்போது தமிழ் வாக்குகள் பிரியும். ஐக்கிய தேசிய கட்சியில் போட்டியிடும் ஒருவர் வெற்றிபெறக் கூடிய நிலைமை இருக்கிறது. - அவர் தமிழராக இருக்க வேண்டியதில்லை. 1977 இல் நுவரெலிய மஸ்கெலிய மூவங்கத்தவர் தொகுதியில் காமினி திசாநாயவுக்கு மலையக தமிழர் வாக்களித்தும் அவர் அதிகபடியான வாக்குகளைப் பெற்று முதலாவது எம் பியாக தெரிவு செய்யப்பட்டதும் தொண்டமான் மூன்றாவது எம்பியாக தொpவு செய்யப்பட்டதும் வரலாறு. அன்று தொண்டமான் மூன்றாவது ஆசனத்தை வென்றது அத்தொகுதியில் வாழ்ந்த வடக்கு கிழக்கு தமிழர்களின் வாக்கினால் தான் என்பது கசப்பான உண்மையாகும். தற்போது விவாதத்திலுள்ள விகிதாச்சார ஆசனங்களில் ஒன்றைத்தானும் மலையக தமிழ் கட்சிகள் பெறமுடியாது. அவர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தயவில் அதன் பட்டியலில் இடம்பெற்றால் மாத்திரமே தெரிவுசெய்யப் படுவர். இது ஒரு ஆபத்தான நிலைமையாகும். 

இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு மலையக சமூக அமைப்புகள் ஒன்றுதிரண்டு மலையக பாராளுமன்ற பிரதிநிதிகளின் ஊடாக பாராளுமன்றத்தில் தமது கோரிக்கையை வெறுமனே சுலோகமாக அன்றி விஞ்ஞானபூர்வமாக தெட்டத் தெளிவாக முன்வைப்பதோடு மலையக மக்களுக்கு இவ்வனர்த்தத்தைப் புரியவைத்து அவர்களை அணிதிரட்டி பாராளுமன்றத்திற்கு வெளியே கவன ஈர்ப்பு போராட்டங்களை நடத்த வேண்டும். அதே சமயம் ஏனைய தமிழ் - முஸ்லிம் கட்சிகளினதும் தெற்கிலுள்ள சமூக அமைப்புகளினதும் ஆதரவைப் பெற வேண்டும்.

நியு+சிவாந்தில் வாழும் மாவோரி மக்களின் பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தும் நடைமுறை மெய்ம்மைப்பாடு (ஏசைவரயட) முறையும் லெபனானில் இனவிகிதாச்சார அடிப்படையில் தேர்தல் தொகுதிகளை உறுதிபடுத்தும் இணக்க அடிப்படையிலான பிரதிநிதித்துவமுறையும் (உழகெநளளழையெட சநிசநளநவெயவழைn);  சிறிய தேசயங்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்தும் பிரத்தியேக ஆசன ஒதிக்கீட்டு முறை (சுநளநசஎநன ளுநயவள). இந்தியாவிலும் ஜோர்தானிலும் சோல்வீனியாவிலும் தாய்வானிலும் நைகரிலும் மேற்கு சாமோவா விலும் காணப்படுகிறது. இத்தகைய ஒரு பொறிமுறையை இனங்கண்டு மலையக மக்கள் திட்டவட்டமான கோரிக்கையை முன்வைத்து அதனை அடையும் வரைக்கும் ஒயாது அரசியல்ரீதியாக செயற்பட வேண்டும்.

இல்லையேல் தமது தனித்துவ அடையாளத்துக்காவும் பராhளுமன்றத்தில் ஒரே ஒரு ஆசனத்தை உறுதிபடுத்தக் கோரியும் இயக்கம் நடத்திவருகின்ற உலகினால் மறக்கப்பட்ட ஜப்பானிலுள்ள ஐனு (யுஐNரு) என்ற ஆதிக் குடிகளைப் போல மலையக தமிழரின் நிலைமை ஆகிவிடும்.

6. செயற்பாட்ட அரசியலாளர் என்பதற்கு அப்பால் ஒரு ஆய்வாளராக மலையகம் குறித்த உங்களது நூல்கள் கவனத்தைப் பெற்றன. அவற்ளை இற்றைப்படுத்தி மலையக வராலற்றாவணமாக ஒரு நூலை வெளியிடும் உத்தேசம் ஏதும் உள்ளதா?

நிச்சயமாக இருக்கிறது. தொடர்ச்சியாக திரட்டிவரும் தகவல்களையும் ஆய்வுகளைத் ஆதாரமாகக் கொண்டு மலையக மக்களின் வரலாற்றை விரிவாக எழுதி நூலாக வெளியிடும் எண்ணம் எனக்குண்டு.  கணணி அச்சு செய்து உதவக் கூடிய ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கிறேன். அத்தகைய ஒருவர் கிடைத்ததும் அப்பணி நிறைவேறும். நான் எழுதிய “இருபதாம் நூற்றாண்டின் நவீன அடிமைத்தனம்” என்ற நூலை மறு பதிப்பு செய்ய வேண்டும் என்ற வேண்டுகோள் நான் செல்லும் இடமெல்லாம் கேட்கிறது. அதனை மறுபதிப்பு செய்ய இலங்கையில் எவராவது முன்வந்தால் அதற்கான சம்மதத்தை வழங்க தயாராக இருக்கிறேன்.

7. மலையக அரசியலில் இன்று முன்னுரிமை கொடுக்க வேண்டிய விடயங்கள் எவை என தாங்கள் கருதுகிறீர்கள்?

ஏற்கெனவே கூறியதைப் போல மலையக மக்களின் இருப்பே கேள்விக்குறிக்குள்ளாகி இருக்கிறது. எனவே இன்றைய அடிப்படை பிரச்சினை அவர்களது இருப்பை பாதுகாப்பதாகும். எனவே மிகவும் தந்திரமான முறையில் மலையக மக்களை நிர்மூலப்படுத்துவதற்காக அரசினால் கொண்டுவரப்படும் அனைத்து திட்டங்களையும் குறிப்பாக தேயிலைக் கன்றுகளை பகிர்ந்தளிக்கும் திட்டத்தினையும் காணி சுவீகரிப்பையும் தடுத்து நிறுத்த வேண்டும். ஆனால் அரசியல் யாப்பு சீர்திருத்தம் தற்போது அரசினால் முன்னெடுக்கப்படுவதனால் எமது உடனடி கவனம் அதில் எமது உரிமைகள் உத்திரவாதப்படுத்தப்படுவதில் குறிப்பாக புதிய தேர்தல் முறையில் எமது பிரதிநிதித்துவத்தை உறுதிபடுத்திக் கொள்வததிலும் அதிகாரப்பகிர்வில் எமக்கு கிடைக்கவேண்டியதைப் பெறுவதிலும் இருக்க வேண்டும். எமது பராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினையில் காட்டும் அக்கறையை மலையக மக்களின் அதிகாரப் பகிர்வு விடயத்தில் காட்டாமலிருப்பது கவலையளிக்கிறது.

நன்றி - தினக்குரல்

புத்த சாசனமும் - அரசின் ஆசீர்வாதமும்! சில வரலாற்றுக் குறிப்புகள் - என்.சரவணன்


இலங்கையில் சிங்கள பௌத்தர்கள் அல்லாதோர் மீது ஏவப்பட்டுவரும் கொடுமைகள் பல “பௌத்தசானத்தைப் பாதுகாப்பது” என்கிற பெயரில் தான் நிகழ்ந்து வருவதை அவதானித்து இருப்பீர்கள். இலங்கையின் அரசியலமைப்பின் 9வது பிரிவிலும் கூட “புத்த மதத்துக்கு முன்னுரிமை, “புத்த சாசனத்தை” பாதுகாத்தலும், பேணி வளர்ப்பதும் அரசின் கடமை” என்கிறது.

“புத்த சாசனத்தைப் பாதுகாக்க வேண்டும்”, “புத்த சாசனத்துக்கு இழுக்கு”, “புத்த சாசனத்தைக் காட்டிக் கொடுத்து விட்டார்கள்...” போன்ற புலம்பல்களை நாம் நாளாந்தம் கடந்து வந்திருப்போம். இப்போது புதிதாக “சாசன பாதுகாப்பு சபை” என்கிற பெரயரில் ஒரு அமைப்பும் பொதுபல சேனா வின் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டிக்கிறது. “சாசனம்” என்கிற சொல் சிங்கள பௌத்தர்கள் மத்தியில் ஒரு இனவாத மந்திரச் சொல்லாக ஆகியிருக்கிறது என்றால் அது மிகையில்லை.

அதிகரித்துவரும் காவிச் சீருடை சண்டித்தனதனத்தை எதிர்த்தல், கண்டித்தால், சட்ட நடவடிக்கை எடுத்தாலும் கூட அது சாசனத்துக்கு எதிரான சதி என்றே பிரச்சாரம் செய்யப்படுகிறது.

இலங்கையில் பௌத்த பிக்குகளுக்கு இருக்கும் செல்வாக்கு அரசியலமைப்பாலும், அரச இயந்திரத்தாலும் பாதுகாக்கப்படுகிறது. அவர்களை எதிர்த்து நிற்கும் பலம் ஆட்சியாளர்களுக்கு கூட கிடையாது. சிங்கள பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் சக்திகள் இந்த பிக்குகளையே தமது முன்னரண் படையாக பிரயோகித்து வருகிறது. அதுபோல பிக்குமாரும் இந்த பேரினவாதமயப்பட்ட மக்களின் செல்வாக்கின் மீதிருந்துகொண்டு பேரினவாத சித்தாந்தத்துக்கு தலைமை கொடுத்து வருகின்றனர். பிக்குமார் நிக்காயக்களாக பிரிந்து இருந்தாலும் பேரினவாத நிகழ்ச்சிநிரலுக்கு தமது அனுசரணையை வழங்கத் தயங்குவதில்லை. அஸ்கிரிய, மல்வத்து, கோட்டே, அமரபுர போன்ற நிக்காயக்களுக்கு மகா நாயக்கர்கள் உள்ளனர். அதுவும் அமரபுர நிக்காயவுக்கு 20க்கும் மேற்பட்ட மகா நாயக்கர்கள் இருக்கின்றார்கள்.


“சாசனாரக்ஷ” வின் கண்டி யாத்திரை
இந்த நிக்காயக்கள் அனைத்தும் ஒரே தலைமையின் கீழ் இல்லையே என்கிற ஆதங்கத்தை சிங்கள பௌத்த தரப்பு தொடர்ச்சியாக வெளிப்படுத்தி வருகிறது. கடந்த வாரம் ஞானசார தேரோ நடத்திய ஊடக மாநாட்டில் நம்மெல்லோருக்கும் ஒரு பௌத்த தலைமை இல்லாதது தான் பௌத்தர்களின் தலையாய பிரச்சினை என்றார். அதேவேளை யுத்த காலப்பகுதியில் இந்த அனைத்து நிக்காயக்களும் யுத்தத்தை ஆதரித்து ஆக்கிரமிப்புக்கும், அடக்குமுறைக்கும், அழிவுக்கும் ஆசி வழங்கின என்பதை மறக்கமுடியாது.

இதுவரை அரசுக்கும், அரசியல் கட்சிகளுக்கும், சிவில் அமைப்புகளுக்கும் நிர்ப்பந்தம் கொடுக்கும் அழுத்தக் குழுக்களாக செயற்பட்டுவந்த பேரினவாத சக்திகள் இன்று நேரடியாக மகாசங்கத்தினருக்கு அழுத்தம் கொடுக்கும் புதிய வடிவிலான போராட்டத்தை ஆரம்பித்து இருக்கின்றன.

ஆட்சியாளர்களுக்கு நிர்ப்பந்தம் கொடுக்க அனைத்து நிக்காயக்களும் ஒன்று சேர்ந்து முன்வராவிட்டால் தாம் புதிய நிக்காயவை ஆரம்பிக்கப் போவதாக கடந்த 19 அன்று கண்டிக்கு யாத்திரை சென்று கூட்டம் நடத்திய ஞானசார தேரர் எச்சரித்திருந்தது கவனிக்கத்தக்கது. இந்த எச்சரிக்கையால் சகல நிக்காயக்களின் மகாநாயக்கர்களும் சற்று தடுமாறிப் போயுள்ளார்கள். இப்படிப்பட்ட ஒரு அழுத்தத்தை அவர்கள் எதிர்பார்க்கவில்லை.

"5000 பேராவது குறைந்தது வந்து விட்டால் நான் அரசியலிலிருந்து ஒதுங்கிக் கொள்வேன்" என்று ரிசாத் பதியுதீன் கூறியதாக பிரச்சாரம் செய்து தான் இந்த கூட்டத்தையும் நடத்த முடிந்தது.


இந்த கூட்டத்தின் வெற்றி "சைபர் - சமூக ஊடகங்கைக்” கொண்டு வெற்றிகரமாக ஒன்று கூட்டப்பட்டது என்று கண்டியில் அறிவிக்கப்பட்டமை கவனிக்கத்தக்கது. அடுத்தடுத்து செய்யப்போகும் காரியங்களையும் பட்டியலிட்டு அங்கே எச்சரித்திருந்தார்கள்.

இன்று எந்த ஊடகங்களும் அவர்களுக்கு போதிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. பொது பல சேனாவின் ஊடக மாநாடுகளுக்கு முன்னெரெல்லாம் பல ஊடகங்கள் சமூகமளிக்கும். ஞானசார தேரரின் முன்னால் பல மைக்குக்குகள் இருக்கும். இப்போதெல்லாம் அவை வெகுவாக குறைந்துவிட்டன. ஊடகங்கள் தமது கருத்துக்களை வெளியிடுவதில்லை என்று பகிரங்கமாகவே ஞானசார தேரர் உட்பட பல பிக்குமார் குற்றம்சாட்டிவருகின்றனர். ஆக அவர்கள் அதிகளவு நம்பியிருப்பது சமூக ஊடகங்களைத் தான்.

யுத்த காலத்தில் விடுதலைப் புலிகளின் வளர்ச்சியில் அதிக பங்களிப்பை வழங்கியது அவர்கள் உலகளவில் கொண்டிருந்த ஊடக பரப்புரை வலைபின்னல் தான். இன்று சிங்கள பௌத்த பேரினவாத சக்திகள் தமது தமது நிகழ்ச்சிநிரலை வெற்றிபெறச் செய்வதற்கு பெருமளவு நம்பியிருப்பது சமூக ஊடகங்களைத் தான். இன்று வலைத்தளங்களும், சமூக ஊடக பக்கங்களையும் லட்சக்கணக்கில் நடத்தி வருகின்றன.

இனவாதத்தைப் பரப்ப வேண்டுமா, பொய்களையும், புனைவுகளையும், வதந்திகளையும் வேகமாக கொண்டு சேர்க்க வேண்டுமா, கூட்டங்களுக்கோ, ஆர்ப்பாட்டங்களுக்கோ, ஊர்வலங்களுக்கோ ஆட்களை ஒன்று சேர்க்க வேண்டுமா அனைத்துக்கும் அவர்களுக்கு இந்த சமூக வலைத்தளங்கள் இன்று போதுமானவை. குறிப்பாக பல்லாயிரக்கணக்கான முகநூல் கணக்குகள் அவர்களுக்கு பெரிதும் பயன்படுகிறது. உண்மையைச் சொல்லப்போனால் அவர்களை எதிர்த்து நிற்கும் சிறுபான்மை இனக் குழுமங்களுக்கோ, ஜனநாயக சக்திகளுக்கோ கூட அத்தனை கூட்டுப்பலம் இல்லை என்பதே கசப்பான உண்மை.
அடுத்ததாக டிச.03 மட்டக்களப்புக்கு விரைகிறது சாசன பாதுகாப்புச் சபை

இந்த புதிய வடிவிலான போராட்டத்தை முன்னெடுப்பதற்காக பொதுபல சேனாவுடன், சிஹல ராவய, ராவணா பழைய, சிங்ஹலே போன்ற அமைப்புகள் ஒன்று சேர்ந்து “சாசனாரக்ஷக சபாவ” (சாசன பாதுகாப்புச் சபை) என்கிற அமைப்பை உருவாக்கியிருந்தன. அதுமட்டுமன்றி சமகாலத்தில் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி சுமண தேரரும் முதற் தடவையாக இவர்களுடன் கைகோர்த்து இருக்கிறார். இந்த அமைப்புகளுக்கும் அவருக்கும் இடையில் இதுவரை நிலவிய விரிசல் இந்த புதிய வடிவ போராட்டத்தின் மூலம் சரி செய்யப்பட்டிருப்பதுடன் பரஸ்பர ஆதரவை பலமாக வழங்கத் தொடங்கியுள்ளன. அந்த கண்டி ஊர்வலத்தில் சுமண தேரர் ஆக்ரோஷமாக இனவாத கோஷங்களை எழுப்பிக்கொண்டு சென்ற வீடியோக்கள் வெளியாகியிருந்தன.

சுமணராம தேரருக்கு பிரதியுபகாரமாக மட்டக்களப்பில் அவரது அராஜங்களுக்கு எதிராக போராடி வரும் தமிழ் முஸ்லிம் மக்களுக்கு பௌத்த தரப்பு எதிர்ப்பையும், பலத்தையும் காண்பிப்பதற்காக எதிர்வரும் டிசம்பர் 3 அன்று மட்டக்களப்புக்கு இந்த “சாசனாரக்ஷக சபாவ” போகப் போவதாக போஸ்டர்கள், விளம்பரங்கள், அறிவித்தல்கள் வெளியிடப்பட்டுள்ளன. அன்றைய தினம் நாடெங்கிலும் இருந்து அனைவரையும் கலந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்துள்ளனர் இந்த இனவாத கோஷ்டி.

இந்தப் பாசிச கூட்டுக்கள் காலத்துக்குக் காலம் புதிய புதிய அமைப்புகளையும், புதிய புதிய சுலோகங்களை உருவாக்கிக் கொள்வதும் அவற்றுக்கிடையே புதிய கூட்டுக்களை உருவாக்கிக் கொள்வதும் வரலாற்றில் புதியதல்ல. அவற்றின் சுலோகங்களின் தீவிரம் கொஞ்சமும் குறைந்ததில்லை. மேலும் மேலும் அந்த சுலோகங்களும், கோரிக்கைகளும், தீவிரமும் புதிய வடிவமெடுத்து வளர்ந்து வந்துள்ளதை நாம் கவனிக்க வேண்டும்.

அரசும் புத்த சாசனமும்
1947 சோல்பரி யாப்பில் 29(2) சரத்தின் மூலம் வழங்கப்பட்ட சிறுபான்மையோரின் உரிமைகளுக்கான உத்தரவாதத்தை 1972 யாப்பு நீக்கியது, அதையே 1978 ஆம் ஆண்டு யாப்பு தொடர்ந்தது மட்டுமன்றி அந்த இரு குடியரசு அரசியலமைப்புகளும் தான் பௌத்தத்துக்கு சிறப்புரிமையை வழங்கி ஏனைய மதங்களுக்கு இருந்த பாதுகாப்பை மறைமுகமாக அழித்தது. இந்த இரண்டு யாப்புகளுமே சாசனத்தைப் பேணிப் பாதுகாத்து வளர்ப்பது குறித்து உத்தரவாதமளிக்கின்றன. புத்த சாசனத்தை அமுல்படுத்துவதற்கென்று “புத்த சாசன சட்டம்” என்கிற ஒன்று கூட இருக்கிறது.

1956 அரசியல் மாற்றத்துக்கான போராட்டத்தை “தர்ம யுத்தம்” என்றே சிங்கள பௌத்த தரப்பு பெயர் சூட்டியிருந்தது. பிரபல வரலாற்றாசிரியர் கே.எம்.டீ.சில்வா அந்த ஆட்சி மாற்றத்தை “மொழித் தேசியவாதத்தின் விளைவு”  என்று அழைப்பார். மைக்கல் ரொபர்ட்ஸ் அதையே “கலாச்சார தேசியவாதம்”  என்றே அழைக்கிறார்.

பண்டாரநாயக்க தனது ரோஸ்மீட் பிளேஸ் வீட்டு வாசலில் பிக்குவை வரவேற்கிறார். இதே வீட்டில் வைத்துத் தான் பிக்குவால் 1959இல் அவர் கொல்லப்பட்டார்.
1956 மாற்றம் இலங்கை அரசியலில் மிகப் பெரிய திருப்புமுனை என்பதை சகலரும் ஏற்றுக்கொள்வர். அதே 56 மாற்றத்தின் போது தான் முதல் தடவையாக கலாசார விவகாரங்களுக்கு என்று தனி அமைச்சு முதற் தடவையாக தொடக்கப்பட்டது. அது பொத்தம்போதுவாக கலாசார அமைச்சு என்று கூறப்பட்டபோதும் சிங்கள பௌத்த நிகழ்ச்சிநிரலை நிறைவேற்றுவது தான் அதன் தலையாயப் பணியாக இருந்தது. அகில இலங்கை பௌத்த காங்கிரஸ் உருவாக்கிய “பௌத்த தகவல் அறியும் ஆணைக்குழு” கொடுத்த அழுத்தத்தினால் பல மாற்றங்கள் நிகழ்ந்தன. பின்னர் அரசாங்கமே பௌத்த ஆணைக்குழுவொன்றை அமைக்கும் நிலை ஏற்ப்பட்டது. அவ் ஆணைக்குழுவின் முடிவுகள் பலவற்றை நிறைவேற்றும் பணியை செவ்வனே செய்தார் பண்டாரநாயக்க. பௌர்ணமி தினத்தை விடுமுறையாக ஆக்கியது. கலாசார அமைச்சைத் தொடக்கி அதன் மூலம் பௌத்த பிரிவெனாக்களை உருவாக்கியமை வித்தியோதய, வித்தியாலங்கார என்பவற்றை பல்கலைக்கழகங்களாக ஆக்கியமை, அனுராதபுர, பொலன்னறுவை, களனி போன்ற விகாரைப் பிரதேசங்களை புனித நகரங்களாக பிரகடனப்படுத்தியமை போன்றவற்றை அடுக்கிக்கொண்டே போகலாம். பண்டாரநாயக்கவின் சிங்கள வேலைத்திட்டம் தனியாக பேச வேண்டிய ஒன்று.

பௌத்த விவகாரத்துக்கென ஒரு திணைக்களத்தை 1981 இல் முதலில் உருவாக்கியவர் ஜே.ஆர். ஜெயவர்த்தனா. இலங்கையில் பௌத்த சமய விவகாரத்துக்கென்று ஒரு அமைச்சை உருவாக்கியவர் முன்னாள் ஜனாதிபதி பிரேமதாச. 16.06.1988 இல் உருவாக்கப்பட்ட அந்த அமைச்சு பின்னர் புத்த சாசன அமைச்சு என்று மாற்றப்பட்டத்துடன் அந்த அமைச்சை ஜனாதிபதியின் கீழ் நேரடி அமைச்சாக நிர்வகிக்கப்பட்டது. பௌத்த விவகார அமைச்சராக ஜனாதிபதியே இருந்தார். வரலாற்றில் முதற் தடவையாக கொவிகம அல்லாத சாதியைச் சேர்ந்த ஒரு ஜனாதிபதியாக அவர் தெரிவானதும்; தான் ஏனையோரைவிட தீவிர சிங்கள பௌத்தர் என்பதை வெளிக்காட்டுவதில் அவர் எடுத்த பிரயத்தனத்தின் விளைவு அது. எப்போதும் வெள்ளை தேசிய உடையில் ஏதாவது ஒரு பௌத்த விகாரையில் மலர்களுடன் சென்று வணங்குவதை அப்போதைய அரசாங்க தொலைகாட்சிகள் தினசரி காட்டிக் கொண்டே இருக்கும். பௌத்த மதத்துக்கும் அரசுக்கும் உள்ள தொடர்பை நடைமுறை ரீதியில் நேரடியாக பலப்படுத்தியவர் பிரேமதாச என்றால் அது மிகையாகாது.

ஜே.ஆர்.ஜெயவர்த்தன, பிரேமதாச, சந்திரிகா

பிரேமதாச, விஜேதுங்க, சந்திரிகா, அனைவருமே புத்த சாசன அமைச்சை தமது நேரடி கட்டுப்பாட்டுக்குள் நிர்வகித்து வந்தார்கள். சந்திரிகாவும் முன்னையவர்களைத் தொடர்ந்து அந்த அமைச்சை தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் வைத்திருந்த போதும் பதவிக்கு வந்து மூன்றே ஆண்டுகளில் 1997 ஆம் ஆண்டு அந்த அமைச்சை தன்னிலிருந்து பிரித்தெடுத்து லக்ஷ்மன் ஜெயக்கொடியை புதிய அமைச்சராக நியமித்தார். ஒரு பெண்ணாக மகா சங்கத்தினருடன் விவாகாரங்களைக் கையாள்வது சரிவராது என்று சந்திரிகா அப்போது கூறியதாக லக்ஷ்மன் ஜயக்கொடி அப்போது அளித்த பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார் (11.08.1997)

சுமனராம தேரருடன் மகிந்த - கடந்த ஒக்டோபர் மாதம் 
சந்திரிகா காலத்தில் பேசப்பட்ட அரசியல் தீர்வுப் பொதியில் பௌத்த மதத்தை நீக்காமல் “புத்த சாசனத்தை பேணிப் பாதுகாத்து வளர்ப்பது குறித்த விடயங்களின் போது அரசின் உயர் சபையோடு ஆலோசிக்க வேண்டும்” என்கிற பதத்தை சேர்த்ததற்காக பிக்குமார் அனைவரும் கிளர்ந்தெழுந்து பெரும் போராட்டங்களை முன்னெடுத்தார்கள். அதற்கு தலைமை தாங்கியவர்களில் ஒருவர் மறைந்த மாதுலுவாவே சோபித்த தேரர்.

இந்த பௌத்த சக்திகளை திருப்திபடுத்துவதற்காக சந்திரிகா அரசாங்கம் புத்த சாசனமும், பௌத்தர்களும் முகம் கொடுக்கும் பிரச்சினைகளை கண்டறிவதற்கான “புத்த சாசன ஜனாதிபதி ஆணைக்குழு” ஒன்றை நியமித்தது. 17.09.2002 அன்று ஆணைக்குழு அந்த அறிக்கையை ஜனாதிபதி சந்திரிகாவிடம் சமர்ப்பித்தது. பௌத்தத்துக்கு மேலும் அதிக சலுகைகளை வழங்கவேண்டும் என்கிற பல யோசனைகளுடன், மதமாற்றத்தைத் தடுக்கும் சட்டமும் நிறைவேற்றப்பட வேண்டும் என்கிற யோசனையும் அதில் முன்வைக்கப்பட்டது. காலா காலமாக இப்படித்தான் அரசாங்கங்களை பௌத்த தரப்பு பணிய வைத்து வந்திருக்கிறது.

மகிந்த 2005 இல் பதவியேற்றபோது தனி அமைச்சாக இல்லாமல் “சமய விவகார” அமைச்சின் கீழ் மும்மதங்களுக்கான திணைக்களங்களுக்கூடாக இவற்றை செயற்படுத்திய போதும் பௌத்த விவகாரத்துக்குரிய அதி முக்கியத்துவ சலுகைகளை குறைத்ததில்லை. அந்த சமய விவகார அமைச்சும் நேரடியாக ஜனாதிபதியின் கீழேயே இயங்கியது கவனிக்கத்தக்கது.

பௌத்தத்துக்கு இத்தனை முக்கியத்துவம் வழங்கியும் கூட 2004ஆம் ஆண்டு ஜாதிக ஹெல உறுமயவைச் சேர்ந்த பிக்குகள் இது போதாது பௌத்தத்தை அரசியலமைப்பின் மூலம் அரச மதமாக மாற்றும்படி பாராளுமன்றத்தில் யோசனை முன்வைத்தார்கள். பாராளுமன்றத்தில் அந்த யோசனையை கொண்டு வந்தவர் ஓமல்பே தேரர். வரலாற்றில் முதல் தடவையாக 2004ஆம் ஆண்டு தேர்தலில் ஜாதிக ஹெல உறுமய மூலம் 200க்கும் மேற்பட்ட பௌத்த பிக்குகள் போட்டியிட்டு 9 பிக்குமார் தெரிவானதும் இந்த இடத்தில் நினைவு கொள்ளத்தக்கது.

மகிந்தவின் போக்கிலும் பௌத்த மதத் தலைவர்கள் திருப்தியுறவில்லை. குறிப்பாக யுத்தம் முடிவுக்கு கொண்டு வந்ததன் பின்னர் புத்துணர்வு பெற்ற சிங்கள பௌத்த சக்திகள் “மத விவகார” அமைச்சிலிருந்து பௌத்த விவகாரத்தைப் பிரித்தெடுத்து மீண்டும் புத்த சாசன அமைச்சு உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன.

2009ஆம் ஆண்டு சியம் நிகாய, அமரபுர நிகாய, ராமன்னன்நிகாய ஆகிய மூன்று நிகாயக்களின் மகாநாயக்க தேரர்கள் ஒன்றிணைந்து இந்த கூட்டுக் கோரிக்கையை வைத்தார்கள். புத்த சாசன அமைச்சு இல்லாமல் ஆக்கப்பட்டதன் விளைவே பௌத்த பாடநூல்களில் விரும்பத்தகாத பல விடயங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாகவும் அவர்கள் குறிப்பிட்டார்கள். 2010ஆம் ஆண்டு தேர்தலின் மூலம் மகிந்த மீண்டும் ஆட்சியமைத்ததும். மகாநாயக்கர்களின் கோரிக்கையை நிறைவேற்றினார். அதன்படி மீண்டும் தனியாக  உருவாக்கப்பட்ட புத்த சாசன அமைச்சு பிரதம மந்திரி டீ.எம்.ஜயரத்னவின் கீழ் கொண்டுவரப்பட்டது.

2013ஆம் ஆண்டு பொதுபல சேனாவும், சிஹல ராவய அமைப்பும் இணைந்து புத்த சாசன அமைச்சை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் வரம்புக்குள் கொண்டு வரும்படி பத்திரிகையாளர் மாநாடு நடத்தி கூட்டுக்கோரிக்கை விடுத்தனர். (26.05.2013 dailymirror)

மைத்திரிபால சிறிசேன 2015இல் ஆட்சியமைத்துடன் பௌத்த விவகார அமைச்சு முழு அமைச்சாக மீண்டும் ஆரம்பிக்கப்பட்டு அது முதற் தடவையாக ஜனாதிபதி/பிரதமரிடமிருந்து பிரித்தெடுக்கப்பட்டு தனி அமைச்சாக இப்போது இயங்குகிறது.

புத்த சாசன விவகாரத்தை அரசியலமைப்பிலிருந்தும், அரச இயந்திரத்தின் ஆதரவிலிருந்தும் இலகுவாக பிரித்தெடுக்க முடியாத ஒரு அம்சமாக ஆகியிருக்கிறது. எதிர்வரும் அரசியலமைப்பின் மூலம் மதச் சார்பற்ற நாடாக ஆக்க முடியுமா என்கிற கேள்வியை ஒரு பேசு பொருளாக கூட ஆகக் கூடாது என்பதில் விழிப்பாகவும், உறுதியாகவும், ஆக்ரோஷமாகவும் இருக்கின்றன இனவாத சக்திகள். அரசுக்கு புத்த சாசனம் ஆசீர்வதிக்கிறதா, அல்லது புத்த சாசனத்துக்கு அரசு அசீர்வதிக்கிறதா என்பதற்கு உங்களுக்கு பதில் தெரியும்.

புத்தர் கூறிய சாசனத்துக்கும், இன்றைய சாசன எடுப்புக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பேரினவாதம் நிருவனமயப்படுவதற்கும், அதனை தக்கவைப்பதற்கும் பௌத்த மதமும், சாசனமும் அதி தேவையாக இன்று இருக்கிறது என்பதை வரலாற்று நீட்சிக்கு ஊடாக கண்டிருப்பீர்கள்.

நன்றி - தினக்குரல்





PRRA: யார் இவர்கள்? என்ன செய்தார்கள்? - என்.சரவணன்

இந்தக் கட்டுரையை நான் சரிநிகரில் எழுதி (ஆனந்தன் என்கிற
பெயரில்) 20 வருடங்கள் ஆகிறது. "PRRA" என்கிற கொலைக்குழு பற்றி விரிவாக அதில் சொல்லப்பட்ட பல விடயங்கள் மீண்டும் இப்போது வெளிக்கிளர ஆரம்பித்துள்ளன. முன்னாள் ஹம்பாந்தோட்டை மேயரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பெலிஅத்த தொகுதி அமைப்பாளருமான ரவீந்திர பெர்னாண்டோ "பிரா" இயக்கம் தனது தான் என்றும், ஜேவிபியினர் பலரை அப்போது கொலை செய்ததாகவும் பகிரங்கமாக கூறியிருக்கிறார். ஏற்கெனவே இந்த PRRA அமைப்பை இயக்கியவர்களில் தற்போதைய அமைச்சர் ராஜித்த சேனாரத்னவும் ஒருவர் என்கிற ஒரு செய்தி பரவியபடி இருக்கிறது. இந்த ரவீந்திர பெர்னாண்டோ 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மக்கள் நடத்திய வீதிப் போராட்டத்தை தனது அடியாட்களைக் கொன்று நசுக்கியதும், அப்போது கைத்துப்பாக்கியொன்றை தூக்கிக் கொண்டு ஓடிய காட்சியும் பலருக்கும் நினைவிருக்கலாம். சட்டத்திலிருந்து தப்ப அந்த துப்பாக்கி வெறும் பொம்மை துப்பாக்கி என்று அவர் கூறித்திரிந்ததும்  நினைவிருக்கலாம். காலப்பொருத்தம் கருதி மீண்டும் முன்னைய கட்டுரை இங்கு வெளியிடப்படுகிறது.
-என்.சரவணன் 
'பிரா” தலைவரின் இருப்பிடம் கண்டுபிடிப்பு!
பல ஆவணங்கள் கண்டு பிடிப்பு!
இப்போதைய கொலைப் பட்டியலும், பல ஆயுதங்களும் கண்டெடுப்பு!
'பிரா” தலைவர் தலைமறைவு.
'பிரா” தலைவருக்கு டக்ளஸ் தேவானந்தா புகலிடம்!

1500 கொலைகளுக்கு தானே பொறுப்பு என பிரா தலைவர் வாக்குமூலம்!
இவ்வாறான பரபரப்பூட்டும் செய்திகள் தற்போது பத்திரிகைகளில் தினம் தினம் வெளிவந்து கொண்டிருப்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.  உங்களில் பெரும்பாலானோர் இந்தச் செய்திகளை ஆவலுடன் அவதானித்து வரவும் கூடும். அதே வேளை இச்செய்திகள் பலரை அல்லோல கல்லோலப் படுத்தியும் வருகின்றன. ஜே.வி.பி., ஐ.தே.க.வின் முக்கியஸ்தர்கள், இடது  சாரி அமைப்புகள், தமிழ் இயக்கங்கள் உட்பட 1987-1989 பயங்கர யுகத்தின் போது காணாமல் போனவர்களின் தாய்மார், மனைவிமார்களை இச்செய்திகள்  பெரிதும் ஈர்த்துள்ளன.

ஏன் இத்தனை பரபரப்பு?
கடந்த மே 29ம் திகதியன்று பிரா என்றழைக்கப்படும் மக்கள் புரட்சிகர செஞ்சேனையின் (P.R.R.A- Peoples Revalutionary Red Army ) தலைவர் சரத் டி சில்வாவின் இருப்பிடம் என்று கூறப்படும் சிலாபக் களப்பிலுள்ள ஒரு தீவொன்றில் கண்டு பிடிக்கப்பட்டதுடன் அதிலிருந்து பல ஆவணங்களும், ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டது தான் இத்தனை பரபரப்புக்கும் காரணம். இதைத் தொடர்ந்து பல தகவல்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன. சரத் டி சில்வாவை பொலிஸாரால் கைது செய்ய முடியவில்லை. அவர் அங்கிருந்து தப்பி விட்டார். தப்பிய கையோடு ராவய பத்திரிகையாளர் ஒருவரை சந்தித்து வாக்குமூலமொன்றையும் கொடுத்துள்ளார். அந்த வாக்குமூலத்திலே அவர் பல தகவல்களை வெளியிட்டுள்ளார். அவை கடந்த வார ராவய பத்திரிகையிலிருந்து வெளிவரத் தொடங்கியுள்ளன. கடந்த ஜே.வி.பி. கால பயங்கர யுகத்தின் போது பல இளைஞர்கள் கொலை செய்யப்பட்டதற்குப் பின்னணியில் இருந்த பல கொலைக்குழுக்களில் முக்கியமானது இந்த ”பிரா” அமைப்பு.
ரவீந்திர பெர்னாண்டோ (21.12.2014)
இந்த அமைப்பினை தோற்றுவித்தவர்களின் நோக்கமானது ஆரம்பத்தில் சோஷலிச இலக்கைச் சார்ந்ததாகவே  தெரிகிறது. என்ற போதும் அதன் பிற்காலப் போக்கானது எங்கு வந்து முடிந்தது என்பது கவனத்திற் கொள்ளத்தக்கது. பிராவின் தோற்றம், நோக்கம், அது இறுதியில் வந்தடைந்த நிலை என்பன வரலாற்றில் ஒவ்வொருவரும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய பாடங்களாகும். அவற்றை இங்கு மீள தொகுத்து தருவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

ஏன் இத்தனை பரபரப்பு?
1983ம் ஆண்டு அப்போது ஆட்சியிலிருந்த ஐ.தே.க அரசாங்கத்தினரால் திட்டமிட்டு நடத்தப்பட்ட இனப்படு கொலையை மூடி மறைப்பதற்காக அக்கலவரத்துக்கான பழி முழுதையும் இடது சாரி அமைப்புகளான ஜே.வி.பி., ந.ச.ச.க, கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய மூன்று கட்சிகளின் மீதும் அன்றைய அரசு சுமத்தியதுடன் அம்மூன்று அமைப்புகளையும் தடை செய்தது. இச்சம்பவத்துடன் எவ்வித தொடர்புமில்லாத இவ்வமைப்புகளின் முக்கியஸ்தர்கள் கைது செய்யப்பட்டு வேட்டையாடப்பட்டபோது பலர் தலைமறைவுக்கு உள்ளாக நேரிட்டது. சில காலத்தின் பின் ஏனைய கட்சிகள் மீதான தடை நீக்கப்பட்டபோதும் ஜே.வி.பி. மீதான தடை நீக்கப்படவில்லை. 1983 ஒக்டோபரில் ஜே.வி.பி.யின் தலைவர் விஜேவீரவினால் ஜே ஆருக்கு எழுதப்பட்ட கடிதத்தில் தாம் ஆயுதவழிமுறையை கைவிட்டு ஜனநாயக வழிமுறையை நாடியிருந்த வேளையில் குற்றமிழைக்காத தம்மை தடை செய்தது நியாயமற்றதென்றும் தடையை நீக்கும்படியும் கோரப்பட்டிருந்தது.
ஆனாலும் ஜே.வி.பியின் வளர்ச்சி ஐ.தே.கவுக்கு சவாலாக இருந்து வந்ததனால் இந்த தடையின் மூலம் ஜே.வி.பி தனது பலத்தை படிப்படியாக இழந்து இல்லாமலே போய்விடும் என்று ஜே.ஆர். அரசாங்கம் நம்பியது. ஆனால் மாறாக இந்தத் தடை ஜே.வி.பியை பகிரங்க அரசியலிலிருந்து தலை மறைவு அரசியலுக்கு தள்ளியது. அவர்கள் தலைமறைவாகவே நிறுவனமயமாகினர். தலைமறைவாக இருந்து கொண்டே தடை நீக்கத்துக்கான முயற்சிகளை செய்து வந்தனர். தலைமறைவு வேலைமுறைக்காக வேண்டி தமது நிதி நிலைமையை சீர்செய்ய ஆயுத வழிமுறையின் மூலம் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபடத் தொடங்கினர். இதற்கெதிரான அரசின் அடக்குமுறையும் இதே வேளை கட்டவிழ்த்து விடப்பட்டது.

சுதந்திர மாணவர் இயக்கம்
ஜே.வி.பியின் செல்வாக்குள்ள மாணவர் அமைப்புகள் பல பல்கலைக்கழகங்களில் இயங்கின. சோஷலிச மாணவர் இயக்கம் எனும் பேரிலும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் எனும் பேரிலும் இந்த மாணவர் அமைப்புகள் இயங்கின.

இதே காலப்பகுதியில் ஜே.வி.பி இனப்பிரச்சினை தொடர்பாக இனவாத சார்புக் கொள்கையை தூக்கிப் பிடிக்கவும் செய்தது. விஜேவீரவால் ”ஈழப் போராட்டத்துக்கு தீர்வு என்ன?” எனும் நூலும் உற்சுற்றுக்காக எழுதி வெளியிடப்பட்டிருந்தது. 250 பக்கத்துக்கும் மேற்பட்ட இந்நூலில் இனவாத போராட்டமே ஈழப்போராட்டமென்றும் அது முதலாளித்துவ ஏகாதிபத்திய நலனுக்காக நடத்தப்படும் யுத்தமென்றும் அதனை தோல்வியுறச் செய்ய வேண்டுமென்றும் கூறப்பட்டிருந்தது. இந்நூல் மிகப்பரவலாக அதன் உறுப்பினர்களை சென்றடைந்தது. பல்கலைக்கழகங்களில் இது குறித்து பல விவாதங்கள் நடந்தன. கொழும்பு பல்கலைக்கழகத்தில் இயங்கிய ”சுதந்திர மாணவர் இயக்க”த்தில் அரச எதிர்ப்பு முற்போக்கு மாணவர்கள் பலர் அடங்கியிருந்தபோதும் ஜே.வி.பியின் கொள்கையிலிருந்து மாறுபட்டு இருந்தனர். கொள்கை ரிதியாக ஜே.வி.பியிலிருந்து மாறுபட்டிருந்த இந்த தரப்பினரே கொழும்பு பல்கலைக்கழகத்தில் பலம் வாய்ந்த மாணவர் அமைப்பாகவும் இருந்தனர். இந்த போக்கு ஜே.வி.பிக்கு பெரும் சவாலாக இருந்தது.

1986 செப்டம்பர் மாதமளவில் ஜே.வி.பி தனது மாணவர் அமைப்புகளை ”தேசாபிமான மாணவர் இயக்கம்” என அழைத்துக்கொண்டது. இப்பெயரில் பல துண்டுப்பிரசுரங்களை வெளியிட்டது.
15.12.1986 அன்று பின்னேரம் 8.30 அளவில் பண்டாரகமயில் கழுத்து வெட்டிக் கொல்லப்பட்ட தோழர் தயா பத்திரன
தயா பத்திரன கொலை
இப்படியிருக்க திடீரென 1986 டிசம்பர் 15ம் திகதியன்று ”சுதந்திர மாணவர் இயக்க”த்தின் தலைவராக (ISU-Independent Students Union ) செயற்பட்டு வந்த தயா பத்திரனவைப் படுகொலை செய்ததுடன் ஜே.வி.பியின் படுகொலைகள் ஆரம்பமாயின. தயா பத்திரன அரசாங்கத்துக்கு எதிராக பல மாணவர் போராட்டங்களை நடத்தி வந்தவர் அத்துடன் சிங்கள இனவாத
அரசாங்கத்தினால் வடகிழக்கு மக்கள் மீது கட்டவிழ்க்கப்பட்டிருந்த அடக்கு முறைக்கு எதிரான போராட்டத்துக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்குமாறு கோரியது. அத்துடன் பிரிந்து தனி நாடமைக்கக்கூடிய வகையிலான சுயநிர்ணய உரிமை அவர்களுக்கு உண்டென பிரச்சாரமும் மேற்கொண்டவர். பல தடவைகள் அரசாங்கத்தின் படையினராலும் குண்டர்களாலும் தாக்குதலுக்கும் உள்ளாகி வந்தவர். தயா பத்திரனவுக்கு இருந்த ஆதரவு காரணமாக அவரை கைது செய்யவும் அரசாங்கம் பின்வாங்கியது.

ஜே.வி.பி இக்காலப்பகுதியில் இனவாத கட்சிகளான மக்கள் ஐக்கிய முன்னணி, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உட்பட  இனவாத சக்திகள் சிலவற்றுடன் கூட்டணி அமைத்திருந்தது. இக்கூட்டு சுதந்திர மாணவர் அமைப்புக்கு எதிராக செயற்படத் தொடங்கியிருந்தது.

ஆட்சியாளர்கள் தயா பத்திரனவை பல்கலைக் கழகத்திலிருந்து இடை நீக்கம் செய்திருந்ததைப் பயன்படுத்தி தயா பத்திரனவுடன் கலந்துரையாடுவதற்கென்று அழைத்துச் சென்ற ஜே.வி.பியின் மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் பத்திரனவின் கழுத்தை வெட்டிக்கொன்று போட்டனர். மேலாடைகள் கழற்றப்பட்ட நிலையில், கழுத்து வெட்டப்பட்ட கண்விழிகள் திறந்தபடி பண்டாரகம குளமொன்றினருகில் அவரது உடல் பிறகு கண்டெடுக்கப்பட்டது.

இந்த சம்பவத்தை ஜே.வி.பி பொறுப்பேற்கவில்லை. இச்சம்பவம் மாணவர்களுக்கெதிரான அரசாங்கத்தின் நடவடிக்கையே என பிரச்சாரம் செய்த அதே வேளை தயா பத்திரனவின் படுகொலையை நியாயப்படுத்தவும் செய்தனர். ஐ.தே.க. அரசாங்கத்தின் உளவுப்பிரிவென்றும் ஈழம்வாதிகளென்றும் பல மாணவர்கள் அரசாங்கத்தினால் கடத்தப்பட காரணமானவர்களே சுதந்திர மாணவர் இயக்கமென்றும் துண்டுப்பிரசுரம் வெளியிடப்பட்டது.

இந்த சம்பவமானது ஜே.வி.பி.யுடன் ஏலவே கொள்கை ரிதியாக முரண்பட்டிருந்த பல மாணவர்களை ஜே.வி.பிக்கு எதிராக தொழிற்பட வைத்தது.

ஜே.வி.பி. ஆயுதபாணியாதல்
1987ம் ஆண்டு மார்ச் மாதம் ஜே.வி.பி ஒரு தீர்மானத்தை எடுத்தது. அத்தீர்மானத்தில் வகுப்புகள், விரிவுரைகள், கல்வி முகாம்கள் எல்லாவற்றின் நடவடிக்கைகளையும் நிறுத்தும்படியும், சகலரையும் முழுசக்தியையும் பயன்படுத்தி ஆயுதப்பயிற்சி பெறுமாறும் கூறப்பட்டிருந்தது. ஏப்ரல் மாதம் விஜேவீரவால் பேசப்பட்ட ஒரு உரை, ஒலி நாடாவில் வெளியிடப்பட்டிருந்தது. அதில் உலகில் சனநாயக அலையொன்று உருவாகி வருவதாகவும் கூறப்பட்டிருந்தது. அதே மாதம் ” தேசாபிமான மக்கள் இயக்கம்” எனும் பேரில் ஆயுதப் பிரிவு உருவாக்கப்பட்டது. ஜே.வி.பிக்கு எதிரான அரச அடக்குமுறையிலிருந்து தற்காத்துக் கொள்ளவே இவ்இராணுவப் பிரிவு தொடக்கப்பட்டது என்று கூறப்பட்ட போதும் ”தாய் நாட்டின் சகல எதிரிகளுக்கும் தண்டனை அளிக்கும் படைப்பிரிவு” என்ற பெயரில் துண்டுப் பிரசுரங்கள் சுவரொட்டிகள் வெளியிடப்பட்டதுடன் மாற்றுக் கருத்துக்களையுடைய பலர் தேசாபிமான மக்கள் இயக்கத்தினால் கொல்லப்பட்டனர்.

சுதந்திர மாணவர் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அரசாங்கத்தினால் மட்டுமல்லாமல் ஜே.வி.பியினாலும் அடக்குமுறைகளுக்கு உள்ளாக நேரிட்டது.

சுதந்திர மாணவர் இயக்கமும் பலவீனமடைந்தது.
இந்த நிலையில் தான் சு.மா.இ.வுக்கு ஈ.பி.ஆர்.எல்.எப் அதரவு வழங்கத் தொடங்கியது. ஜே.வி.பி எதிர்ப்பு தரப்பினர் பலர் ஓரணி திரண்டனர். அவர்களில் முக்கியமானவர்கள் 1985ம் ஆண்டு அரச கவிழ்ப்புச் சதி செய்தார்கள் என்ற குற்றஞ்சாட்டப்பட்டு தடுப்புக்காகவலில் வைக்கப்பட்டு விடுதலையானவர்கள்.

1985 சதி முயற்சி
1985ஆம் ஆண்டு அரச கவிழ்ப்புச் சதி முயற்சி செய்த குற்றச்சாட்டின் பேரில் 20க்கும் மேற்பட்ட இடதுசாரித்தலைவர்கள் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தனர். இவர்கள் அதுவரைகாலம் :மாற்று குழு” (விகல்ப கந்தாயம) எனும் பெயரில் செயல்பட்டு வந்தனர். இவர்களில் ஜோ.செனவிரத்ன, தயான் ஜயதிலக்க (இவர்கள் இருவரும் பின்னர் வடகிழக்கு மாகாணசபையில் ஈ.பி.ஆர்.எல்.எப் மந்திரி சபையில் அங்கம் வகித்தனர்.) ராம் மாணிக்கலிங்கம், பத்மநாபா, குமாரசிங்க, தயாபால திராணகம (ராஜினியின் கணவர்) உட்பட தற்போது தேடப்பட்டுவரும் சரத் டி சில்வாவும் அடங்குவர். தயான் ஜயதிலக்க இந்தியாவுக்கு தப்பிச் சென்றார். 1987 இந்து-லங்கா ஒப்பந்தத்துடன் பல அரசியல் கைதிகள் விடுதலையான போது மேற்படி குற்றச்சாட்டின் பேரில் கைதாகியிருந்தவர்களும் 1988 தொடக்கத்தில் விடுதலையானார்கள்.

இந்த இடைக்காலத்தில் நாட்டில் பல அரசியற் தலைவர்கள் அரசாங்கத்தின் கூலிப்படையினரால் (உத்தியோக பு+ர்வமற்ற இராணுவம்) கொலை செய்யப்பட்டிருந்தனர். ஸ்ரீ லங்கா மக்கள் கட்சியின் தலைவர் விஜய குமாரணதுங்கவும் 1988 பெப்ரவரி 16இல் கொலை செய்யப்பட்டிருந்தார். (5வது நாள் நடந்த இறுதிச் சடங்கில் கம்யு+னிஸ்ட் கட்சி, ஸ்ரீ லங்கா மக்கள் கட்சி, லங்கா சம சமாஜக் கட்சி ஆகிய கட்சிகள் விஜயகுமாரணதுங்கவின் மனைவியும் இன்றைய ஜனாதிபதியுமான சந்திரிகாவோடு சேர்ந்து ஐக்கிய சோஷலிச முன்னணியை அமைக்க உறுதி பூண்டனர்.) இந்த கொலையையும் ஜே.வி.பியே செய்தது என பிரச்சாரம் செய்து மக்களை நம்பவைப்பதில் அரசாங்கத்துக்கு சிரமமாக இருக்கவில்லை. உண்மையில் அந்த கொலைக்கு பின்னணியில் இருந்த ஐ.தே.க. தலைவர்கள் குறித்து ஆணைக்குழு விசாரணைகளில் இப்போது அம்பலமாகியுள்ள தகவல்களே உண்மையை விளக்குகின்றன.

விஜய குமாரணதுங்கவையும் கூட ஜே.வி.பியே கொலை செய்தது என ”அரச கவிழ்ப்பு சதி”யில் கைதாகி விடுதலையாகியிருந்தவர்களும் சு.மா.இ.வினரும் கூட நம்பியிருந்தனர். அரசாங்கத்துக்கு எதிராக தொழிற்பட இருந்த இந்த தரப்பினர் ஜே.வி.பியினரை உடனடி எதிரிகளாக கொள்ளத் தொடங்கியதுடன் ஜே.வி.பிக்கு எதிராக நடவடிக்கைகளில் ஈடுபடவும் தீர்மானித்தனர்.

உடனடி எதிரிகள் ஜே.வி.பி?
இவர்கள் சு.மா.இ.வின் அன்றைய தலைவராக இருந்த கே.எல்.தர்மசிறி குழுவினருடன் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர் இப்பேச்சுவார்த்தையில் 15 பேர் கலந்து கொண்டனர். ”ராம் மாணிக்கலிங்கம் தான் தமிழரென்பதால் அதில் கலந்து கொள்ள முடியாதென்பதை தெரிவித்திருந்தார். ஜோ செனவிரத்ன ஜே.வி.பியை தாக்குவது முடியாத காரியம் என்றார். ஆனால் நாங்கள் ஜே.வி.பியை தாக்கவேண்டும் என்ற முடிவில் இருந்தோம். நாங்கள் ”மக்கள் புரட்சிகர செம்படை” எனும் அமைப்பை உருவாக்கிக் கொண்டோம் அதற்கான கொள்கைகளையும் பிரகடனப்படுத்தினோம் எங்களுக்கான ஆயதங்களை ஐ.சோ.மு தலைவராகவிருந்த ஒஸி அபேகுணசேகர தந்தார்...” என சரத் டி சில்வா ராவய பத்திரிகைக்கு அளித்த வாக்குமூலத்தில் தெரிவித்திருக்கிறார்.

உண்மைதான் ஜே.வி.பியிடமிருந்து இடதுசாரிகளைத் தற்காக்கவென ஐ.சோ.முவினருக்கு ஆயுதங்கள் வழங்கப்பட்டிருந்தன. அவற்றை ஐ.சோ.முவினர் பயன்படுத்தத் தொடங்கவில்லை. ஜோர்ஜ் ரத்னாயக்க எனும் இடதுசாரி ஒருவர் தனது பாதுகாப்புக்கென வைத்திருந்த பிஸ்டலை வேறாகவும் தோட்டக்களை வேறாகவும் வைத்திருந்தபடியால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டபோது எதுவும் செய்யமுடியாதவராகவிருந்தார்.

”பிரா”வினர் தமது பிரச்சாரத்துக்கென ”ஜனசதிய” எனும் பத்திரிகையை வெளியிட்டனர். கம்யூனிஸ்ட் கட்சியின் ”எத்த” பத்திரிகையும் பிரா இயக்கத்துக்கு ஆதரவாக கட்டுரைகளையும் செய்திகளையும் வெளியிட்டது. மாகாணசபை உறுப்பினர்கள் பலரது அலுவலகங்கள் பிராவின் அலுவலகங்களாக பயன்படுத்தப்பட்டன. எனவே ஜே.வி.பி எதிர்ப்புணர்வுடைய பலர் வந்து பிராவுடன் இணைய கடினமாக இருக்கவில்லை.

படுகொலையை நிறுத்த படுகொலை
ஜே.வி.பியினரை அழிக்க இவர்கள் கையாண்ட வழிமுறை சுவரொட்டி ஒட்டவென கீழ்மட்ட உறுப்பினர்கள் வந்தால் அவர்களை கொலை செய்வதன் மூலம் மேல் உள்ளவர்கள் கீழ் மட்ட பணிகளையும் செய்ய வெளியே வருவார்கள். அதனை பயன்படுத்தி நசுக்கிவிடலாம் என கருதினர். ”நாய்க்கு உதைத்தால் அதன் சொந்தக்காரர் தேடித் தேடி வருவார்” என்பதே அவர்களின் வாய்ப்பாடு.

பிராவின் கொள்கை விளக்கத்தில் ” கொலைகார ஜே.வி.பியின் ஜனநாயக விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்கள் ஜனநாயகத்தை காப்பதற்காகவே ஆயதத்தை ஏந்த வேண்டியுள்ளது. இன்றைய  ஐ.சோ.மு.வையும் ஏனைய தொழிற்சங்கங்களையும் பாதுகாப்பதற்காகவே ஆயுத இயக்கத்தை தொடக்க வேண்டியுள்ளது...” என்றுள்ளது.

அரசின் கைக்கூலிகளாகிப் போன ”பிரா”
ஆரம்பத்தில் உடனடி எதிரி ஜே.வி.பி என்றும் அரசு அதற்கடுத்த எதிரி என்றும் கூறிய ”பிரா”, அரசு பிராவினரை கைது செய்த வேளை அன்றைய பாதுகாப்பு அமைச்சர் லலித்துடன் பேச்சுவார்த்தை நடத்தச் சென்றது. சரத் சில்வாவும், கே.எல்.தர்மசிறியும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதுடன் சமரசமும் செய்து கொண்டனர். ”உங்களது நடவடிக்கைகளை கண்டு கொள்ளமாட்டோம்” என லலித்தினால் உறுதி கூறப்பட்டது. பிரா இயக்கத்தினர் படையினரால் கைது செய்யப்படும் போதெல்லாம் ”பிரா” என கூறினால் விடுவித்து விடுவர் பின்னர் அரசாங்கமே ஆயதங்களையும் வழங்கியது. போகப் போக அவர்களுக்கான வாகனங்கள் பணம் என்பனவும் வழங்கப்பட்டதுடன் மொத்த அரச கூலிப் படைகளாக மாறியது. வெறுமனே ஜே.வி.பியினரை மாத்திரமன்றி ஐ.தே.க. அரசியல்வாதிகள் பலரின் தனிப்பட்ட விரோதிகளை தீர்த்துக்கட்டும் பணிகளையும் இவர்கள் செய்து வந்தனர். ஈ.பி.ஆர்.எல்.எப். ஆரம்பத்தில் இவர்களுக்கான ஆயுதப் பயிற்சியையும் வழங்கியது. பிராவுடன் இருந்த பலர் ஈ.பி.ஆர்.எல்.எப்பினராகவே மாறினர். இதே வேளை ஜே.வி.பிக்கு புளொட் இயக்கத்தினர் ஆயதப்பயிற்சி வழங்கியதுடன் ஆயுதங்களையும் வழங்கினர். சில அயுதங்களை உற்பத்தி செய்யும் பயிற்சியையும் புளொட் அளித்தது. கண்ணி வெடிகள் செய்யும் பயிற்சியும் அளித்ததன் பின் தென்னிலங்கையில் பொலிஸாருக்கு எதிராக பல கண்ணிவெடிகள் பயன்படுத்தப்பட்டன.

படையினரால் கைது செய்யப்படும் ஜே.வி.பியினரை விசாரணை செய்யும் அதிகாரமும் அவர்களைத் தண்டிக்கும் அதிகாரமும் பிராவிடம் இருந்தது. ஜே.வி.பியினர் மாத்திரமல்ல அவர்களை அறிந்த நன்பர்கள் கூட தேடித்தேடி வேட்டையாடப்பட்டனர். தலையை துண்டித்தும், டயருக்கு இரையாக்கியும், சுட்டு ஆற்றில் எறிந்தும் ஈவிரக்கமின்றி கொலைகளைப் புரிந்தனர்.

ஈழப்போருக்கும் பொருந்தும்
பிரேமதாச ஆட்சிக்கு வந்தவுடன் ஒட்டுமொத்தமாகவே பிரேமதாசவின் கைக்கூலிகளாக மாறினர். ஈ.பி.ஆர்.எல்.எப். மந்திரி சபையில் சுகாதார அமைச்சராகவும் பிராவின் முக்கிய தலைவர்களில் ஒருவராகவுமிருந்த தயான் ஜயதிலக்க பிரேமதாசவின் தனிப்பட்ட ஆலோசகராக நியமிக்கப்பட்டதுடன் ஜே.வி.பி அழிப்புக்கான முழுத்திட்டமிடலும் அவரின் பொறுப்பிலேயே நடத்தப்பட்டது. பிரேமதாசவுக்கு ஒரு 'மாக்கியவெல்லி' என தயான் ஜயதிலக்கவை விமர்சகர்கள் குறிப்பிடுவது வழக்கம்.

ஜே.வி.பி இயக்கத்தின் தலைமை அணியினரை அழித்த பின் அது மிகப்பலவீனமடைந்தது. இதன்பின் ”பிரா”வினருக்கு அவ்வளவாக வேலை இருக்கவில்லை. அதில் பலர் வெளிநாடுகளுக்கு ஓடிவிட்டனர். சிலர் இன்றும் ஒழிந்து ஒழிந்து திரிகின்றனர். (தயான் உட்பட) அவர்களில் ஒருவர் தான் தற்போது கைது செய்யப்பட்டுள்ள பொடி சில்வா என்றழைக்கப்படும் சரத் டி சில்வா.

ஒடுக்குமுறை அரசை பிரதான எதிரியாக கருதி செயற்பட ஆரம்பித்த சக்திகள் தமக்குள்ளேயே முரண்பட்டு ஒன்றையொன்று அழிக்கும் முயற்சியில், ஒரு தரப்பை அரசே பயன்படுத்த விளைவதும் , பின்னர் அரசின் ஒட்டுமொத்த கைக்கூலிகளாக மாறி தமது பிரதான இலக்குக்கே எதிரிகளாகவும் துரோகிகளாகவும் மாறிய அனுபவங்கள் தென்னிலங்கைக்கு மாத்திரமல்ல ஈழப்போராட்டத்துக்கும் பொருந்தும்.

யார் இந்த பொடி சில்வா?
பொடி சில்வா என்றழைக்கப்படும் சரத் டி சில்வாவுக்கு அரசாங்கத்தில் பிரச்சினை வரலாம் என்று எதிர்பார்த்திருக்க மாட்டார். கடந்த காலத்தில் காணாமல் போனோர் குறித்து தற்போது விசாரிக்கப்பட்டுவரும் ஆணைக்குழுக்களின் முன் தான் குற்றவாளியென நிரூபிக்கப்பட்டாலும் ஏனைய படையினரைப் போலவே பொடி சில்வாவையும் கண்டும் காணாது விடுவர் என அவர் நம்பியிருக்கக்கூடும். தற்போதைய ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தில் உள்ள முக்கியஸ்தர்கள் பலருடன் சில்வாவுக்கு ஆரம்பத்தில் தொடர்பிருந்தது. ஐக்கிய சோஷலிச முன்னணியினரில் பலர் இன்றும் அரசாங்கத்துடன் உள்ளனர். பிரா இயக்கத்துக்கும் ஐ.சோ.முவுக்கும் ஆயுதங்களை விளங்கியவர் தற்போதைய அரசாங்கத்தில் அமைச்சராக இருப்பவரான லொக்கு அத்துல எனப்படும் நிமலசிறி ஜயசிங்க. இவர் 1971 ஜே.வி.பி. கிளர்ச்சி தொடர்பான வழக்கில் முக்கிய சந்தேக நபர்களில் ஒருவர்.
ஆனால்  ”பிரா” பிரச்சினையை கிளப்பிவிடுவதன் மூலம் ஐ.தே.க.வை சிக்கலில் மாட்டிவிடலாம் என்று கருதியதோ என்னவோ பொடி சில்வாவை தேடும் முயற்சியில் அரசாங்கம் தீவிரமாக இறங்கியுள்ளது.

கடந்த மே மாதம் 31ம் திகதி பொடி சில்வாவின் இருப்பிடத்தை சுற்றி வளைத்து தேடினர். சிலாபத்தில் வட்டக்குளிய எனும் இடத்தில் உள்ள களப்பில் இருக்கின்ற தீவொன்றே இவரது இருப்பிடம். இந்த தீவை பொடி சில்வா 60,000 ரூபாவுக்கு 1994இல் வாங்கியுள்ளார். 3 ஏக்கர் விஸ்தீரணமுள்ளது இது. இந்த தீவின் பெயர் ஷரிம்ஸ் அய்லண்ட் என்பதாகும்.

இந்தத் தீவை சுற்றி வளைத்த போது அங்கு பொடி சில்வா இருக்கவில்லை. அதனை காவல் காத்து வந்த மல்லி என்பவரையே பொலிஸாரால் பிடிக்க முடிந்ததுடன் அவருக்கு உதை கொடுத்தே தகவல்களையும் பெற்றுக்கொண்டனர்.

அங்கிருந்து எஸ்.எம்.ஜி. துப்பாக்கி, மகஸீன்கள்-2, 9 எம்.எம் தோட்டாக்கள்-74, 380 வர்க்க தோட்டாக்கள் தொகை, ஜே.ஆர். வர்க்க கைக்குண்டுகள்-3, ”பிரா” ரப்பர் ஸ்டாம்புக்கள், டயரிகள், ஒலி நாடாக்கள், அல்பம்கள் என்பனவற்றுடன் சேகுவரா, கார்ல் மார்க்ஸ், லெனின், விஜயகுமாரணதுங்க, ஒஸி அபே குணசேகர ஆகியோரின் புகைப்படங்கள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளன.

டயரிக் குறிப்பில் ”கடத்திக் கொண்டு வந்தோம்”, ”அடித்தோம்”,”பணத்தை எல்லோருக்கும் பகிர்ந்தோம்”, கொடுக்கல் வாங்கலை தீர்த்தோம்”, ”5 லட்சத்தை வாங்கிக்கொண்டு விடுவித்தோம்” என்று காணப்பட்டுள்ளது.
”5000 ரூபாவுக்கு கொலை செய்தது, 50,000 ரூபாவை வாங்கிக்கொண்டு விடுதலை செய்தது என்பன எல்லாம் டயரிக் குறிப்புகளில் இருந்துள்ளதாக விசாரணை அதிகாரி தெரிவித்துள்ளார்.

பொடி சில்வாவுக்கு டக்ளஸ் தேவானந்தா புகலிடம் அளித்துள்ளதாக  சிங்களப் பத்திரிகைகள் பிரச்சாரம் செய்திருந்தன. பொலிஸாரும் ஈ.பி.டி.பி. காரியாலயத்தை சோதனையிட்டனர். ஆனால் அங்கு சில்வா கிடைக்கவில்லை. புகலிடம் அளிக்கப்பட்டதா இல்லையா என்பது ஒரு புறமிருக்க சில்வாவுக்கு  புகலிடம் அளித்ததாக சிங்களப் பத்திரிகைகளின் செய்தியிடலில் இனவாதமே மிஞ்சியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. டக்ளசும் வேகமாக ”அவருக்கும் எமக்கும் எவ்வித தொடர்புமில்லை. பிராவுக்கு பயிற்சியளித்தது ஈ.பி.ஆர்.எல்.எப். தான் என்று அறிக்கை வெளியிட வேண்டி வந்துள்ளது.

இதற்கிடையில் ஜே.வி.பி. வெளியிட்டுள்ள இது குறித்த அறிக்கையில் ”ஐ.தே.க. அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட படுகொலைக்கு பயன்படுத்திய கூலிப் படையினரை அம்பலப்படுத்த கிடைத்திருக்கின்ற சாட்சிகளை சரியான முறையில் விசாரிக்க வேண்டுமென்று கோரியுள்ளது.
-ஆனந்தன்





தொழில் ஆணையாளர் கூட்டு ஒப்பந்தத்தை திருத்த நடவடிக்கை எடுக்காவிட்டால் சட்ட நடவடிக்கை


மக்கள் தொழிலாளர் சங்கம் ஆணையாளருக்கு அறிவிப்பு 

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா அச் சங்கத்தின் சார்பாக தொழில் ஆணையாளருக்கு அனுப்பியுள்ள 2016.11.18ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் மூலம், 18 மாதங்கள் கழிந்த பின்னர் 500/= அடிப்படை சம்பளம் உட்பட 730/= சம்பள உயர்வுடன் கைச்சாத்திடப்பட்ட சம்பள கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நெறிமுறையான எதிர்பார்ப்பு (legitimate expectation), இயற்கை நீதி (Natural Justice) மற்றும் ஏற்கனவே நிலைபெற்ற உரிமைகள் (Acquired or existed rights) என்பற்றுக்கு எதிராக இருக்கின்றமையை சுட்டிக்காட்டியுள்ளார். எனவே, குறித்த சம்பள கூட்டு ஒப்பந்தத்தை வர்த்தமானி அறிவித்தலில் வெளியிட்டு சட்ட அந்தஸ்த்தினை வழங்க வேண்டாம் என அக்கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு, ஒப்பந்தத்தின் தர்ப்புகளான கம்பனிகள் சார்பான இலங்கை முதலாளிமார் சம்மேளனம், தொழிலாளர்களின் தரப்பான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட கூட்டு தொழிற்சங்கங்களின் நிலையம் என்பவற்றுக்கு அறிவித்து தொழிலாளர்களுக்கு எதிராக உள்ள சரத்துக்களை நீக்கி சட்ட பூர்வமானதும், நியாயமானதும் ஒப்புறவானதுமானதுமான சம்பள கூட்டு ஒப்பந்தத்தை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுள்ளார். அதனை இரு வார காலத்தினுள் செய்ய தவறுமிடத்து கூட்டு ஒப்பந்தத்திற்கான சட்ட பாதுகாவலனாக இருக்கும் தொழில் ஆணையாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார். 

மேலும், குறித்த கடிதத்தில் 2015 பெபரவரி மாதம் மக்கள் தொழிலாளர் சங்கம் தொழில் ஆணையாளருக்கு வழங்கிய மகஜரில் உள்ள விடயங்களுக்கு ஆணையாளரின் கவனத்தைக் கோரியுள்ளதுடன் அது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கம்பனிகள் சார்பான இலங்கை முதலாளிமார் சம்மேளனம், தொழிலாளர்களின் தரப்பான இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட கூட்டு தொழிற்சங்கங்களின் நிலையம் என்ற தரப்புகள் 2016.10.18ஆம் திகதி கைச்சாத்திட்ட புதிய சம்பள கூட்டு ஒப்பந்தம் பின்வரும் மூன்று அடிப்படையில் சட்ட ரீதியற்றவை என அக்கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

1) முன்னைய சம்பள கூட்டு ஒப்பந்தம் 2015 மார்ச் 31ஆம் திகதியுடன் காலாவதியாகிய போதும், புதிய கூட்டு ஒப்பந்தத்தில் 2வது வாசகம் 2016 ஒக்டோபர் 15ஆம் திகதியில் இருந்து ஆரம்பித்து குறைந்தது இரண்டு வருடங்களுக்கு அமுலில் இருக்கும் என குறிப்பிட்டுள்ளது. முன்பு காலம் தாழ்த்தி கைச்சாத்திடப்பட்ட எல்லா கூட்டு ஒப்பந்தத்தங்களிலும் முன்னைய கூட்டு ஒப்பந்தம் காலாவதியான திகதியில் இருந்து அடுத்து வரும் நாளில் இருந்தே அமுலுக்கு வந்துள்ளன. எனவே, புதிய சம்பள கூட்டு ஒப்பந்தத்தின் வாசகம் 02 ஆனது இதுவரையான நடைமுறைக்கு முரணாயுள்ளது. 

குறித்த 2வது வாசகமானது புதிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு புதிய கூட்டு ஒப்பந்தம் அமுலுக்கு வரவேண்டிய தினத்தில் இருந்து தொழிலாளர்கள் பெற உரித்துடைய 18 மாத நிலுவை சம்பள கொடுப்பனவு பெற்றுக் கொள்வதற்கான உரிமையை (நிலைபெற்றிருந்த உரிமை) மறுத்துள்ளது. 

புதிய சம்பள கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருக்க வேண்டிய குறைந்த பட்ச காலமாக 2 வருடங்கள் என குறிப்பிட்டிருக்கின்றமையினால் சம்பள உயர்வை அக்காலத்திற்கு பின்னரும் நீடிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொழிலாளர்களுக்கு குறித்த காலத்தில் சம்பள உயர்வுக்கான உரிமையையும் மறுத்துள்ளது. 

2) புதிய கூட்டு ஒப்பந்தத்தின் வாசகமானது 2003ஆம் ஆண்டு 13ஆம் இலக்க முதன்மை கூட்டு ஒப்பந்தத்தின் வாசகம் 8(1)ற்கு (30 நாட்கள் வேலை வழங்கப்பட வேண்டும்) எதிரானதாகும். 

3) வாசகம் 1 (A) (V) மற்றும் 1 (B)(V) என்பன ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகிய சட்டங்களின் ஏற்பாடுக்கு முரணானதாகும். 

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் குறித்த கூட்டு ஒப்பந்தத்தின் ஊடாக ஆளப்படுவதனாலும், ஏறத்தாள 250000 தொழிலார்களை பாதிக்கும் என்றவித்தில் பொது மக்களின் அக்கறைக்குரிய விடயமாகவும் (matter is public interest concern) தற்போதும் நாட்டின் வருமானத்திற்கு குறிப்பிடத்தக்களவில் பங்களிக்கும் துறையாக காணப்படுவதாலும் தாம் இந்த விடயங்களை ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டுவருவதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இக்கடிதம் தொடர்பாக மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இளையதம்பி தம்பையா குறிப்பிட்டுகையில் இரு வாரங்களில் தொழில் ஆணையாளர் பதிலளிக்காவிடின் அல்லது வழங்கும் பதில் புதிய சம்பள கூட்டு ஒப்பந்த வாசகங்களை நாம் சுட்டிக்காட்டியதற்கமைய திருத்த நடவடிக்கை எடுப்பதை உறுதிப்படுத்துவதாக அமையாவிடின் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு எமது சங்கத்தின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாகவும் அதனடிப்படையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார். 

நன்றி - சூரியகாந்தி

நமது நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் "ஊடக மாபியா" - என்.சரவணன்

“சுடர் ஒளி” பத்திரிகையின் 15 ஆண்டு நிறைவை முன்னிட்டு வெளியிடப்பட்ட விசேட பதிப்புக்கு “ஊடகம்” குறித்த ஒரு கட்டுரையொன்று கேட்டுக்கொண்டதற்கிணங்க எழுதிய கட்டுரை. மனதில் குடைந்துகொண்டிருந்த விடயங்கள் பலவற்றை எழுத ஒரு வாய்ப்பாக இந்தக் கட்டுரையை பயன்படுத்திக்கொண்டேன். ஆனால் அக்கட்டுரையின் உயிர் பிரித்தெடுக்கப்பட்டு சிறிதாக்கி வெறும் ஜடத்தை பிரசுரித்து விட்டார்கள் (எழுதியவற்றில் மூன்றில் ஒருபகுதி). என்னிடம் கட்டுரையைக் கேட்ட நண்பர்களுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. அதேவேளை இந்தக் கட்டுரையை எதற்காக எழுதினேனோ அந்த கார்பரேட் மாபியாத்தனமே இதனை கொத்தி வெட்டியதிலும் நிகழ்ந்திருகிறது என்பதை வெட்டிய பகுதிகளைப் பார்த்தால் நீங்களே புரிந்துகொள்வீர்கள்.

“தெரிவிப்பது நாங்கள்...!
தீர்மானிப்பது நீங்கள்!”
இப்படியான ஊடக விளம்பரங்களை நாங்கள் பார்த்திருப்போம். மேம்போக்கில் ஆஹா நமது தெரிவுக்காக அக்கறையுடன் செய்தி தருபவர்களா இவர்கள் என்கிற பூரிப்பு வரும் அளவுக்கு அந்த விளம்பரங்களை நாம் கடந்திருப்போம்.

இதில் எந்தளவு உண்மை இருக்கிறது? தெரிவிக்கப்பட்டவற்றைக் கொண்டு தீர்மானிக்கிறோமா அல்லது தீர்மானிக்கப்பட்டவற்றைத் தான் பெறுகிறோமா? உண்மையைச் சொல்லப்போனால் தீர்மானிக்கப்பட்டவற்றைத் தான் பின்னர் நுகர்வோர் பெற்றுகொள்ளுகின்றனர் என்பதே கசப்பான உண்மை. மேம்போக்கில் இந்த கருத்தை எவராலும் மறுக்கவும் இயலும். ஆனால் இதன் பின்னால் உள்ள ஆழ்ந்த நுண்ணரசியலை நாம் ஆராய வேண்டும்.

இன்று உலகிலுள்ள பெரும்போக்கு (mainstream) ஊடகங்கள் பல ஊடகவியலாளர்களிடம் இல்லை. அது கார்ப்பரேட்டுகளிடமும், வியாபார, அரசியல், அதிகாரத்துவ சக்திகளிடமே உள்ளது. ஆக தீர்மானிக்கும் சக்திகளாக ஊடகவியலாளர்கள் இல்லை. அதற்கு அன்றாட உதாரணங்கள் எத்தனையோ ஊடகவியலாளர்களால் கூற முடியும். ஆக தகவலும், கருத்தும் நம்மிடம் எங்கே இருக்கிறது. அது கட்டுபடுத்தப்பட்டது. ஆதிக்க தரப்பிடம் சிக்கியுள்ள ஊடகத்துறையை அந்த ஆதிக்கத தரப்பு நேரடியாக தணிக்கை செய்ய வேண்டுமென்பதில்லை அவர்களின் தேவையை உணர்ந்து தாமே ஒரு வகை சுயதணிக்கைகளுக்கு உடபடுத்தித் தான் இன்று ஊடகவியலாளர்கள் இயங்கும் நிலை. அவர்களின் இருப்புக்கு வேறு வழி இல்லை என்றே கூறினால் அது மிக இல்லை.

ஊடகவியலாளர்கள் ஊடக நெறிக்கு மாத்திரம் கட்டுப்பட்டவர்கள் அல்லர். தாம் சம்பளம் வாங்கும் எஜமானர்களின் விதிக்கும் நெறிகளுக்கும் தவிர்க்கமுடியாதபடி கட்டுபட்டவர்களே.

இன்று எது மக்களுக்குத தேவையோ, எதை மக்களுக்கு வழங்கவேண்டுமோ அதைக் கொடுப்பதிலும் பார்க்க, “எதைத் தம்மால் கொடுக்க முடியுமோ” அதைக் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. லட்சிய ஊடக படைப்புகளுக்கு பதிலாக, தமது இயலுமைக்கு உட்பட்ட விடயங்களுடன் மட்டுபடுத்திக்கொண்ட ஊடகவியலாளர்கள் உருவாக்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இலங்கையில் உள்ள ஊடக அமைப்புகள் கூட தமது உரிமைகளுக்காக அரச அதிகாரத்திற்கு எதிராக போராடும் அளவுக்கு ஊடக நிறுவனங்களில் தமது கருத்துச் சுதந்திரத்துக்காகப் போராடும் நிலை இல்லையே ஏன் என்கிற கேள்வியை இங்கு எழுப்ப வேண்டியிருக்கிறது. தாம் சுயதணிக்கையுடன் பணி புரிகிறார்களா இல்லையா என்பதை இதய சுத்தியுடன் சுய விசாரணை செய்துகொள்ளவேண்டும்.

தகவல்கள், தரவுகள் என்பன செய்தியாகி அவை கருத்துருவாகி சித்தாந்த உருவாக்கத்துக்கும், சிந்தனையுருவாக்கத்துக்கும் வித்திடுகிறது. இந்த போக்கில் தகவல்களும் தரவுகளும் மிகவும் அடிப்படையானவை. ஆக முதல் கோணல் முற்றிலும் கோணலுமாக ஆகின்றதென்றால் தகவல் உறுதியானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும் என்பது முன்நிபந்தனை.

எந்த தகவல் வழங்கப்படவேண்டும், எது தவிர்க்கப்படவேண்டும், எது எப்படி திரிக்கப்படவேண்டும், எது மட்டுறுத்தபடவேண்டும் போன்றவற்றை தீர்மானிப்பதில் செல்வாக்கு செலுத்தும் காரணிகளையும், காரணகர்த்தாக்களையும் நாம் பகுத்தறிய வேண்டியிருக்கிறது.

சராசரி நாளாந்த செய்திப் பத்திரிகைகளை மக்கள் அந்த தகவல்களுக்காகவே காத்திருக்கிறார்கள். ஆக சிந்தனாவுருவாக்கத்துக்கும், பகுப்பாய்வுகளுக்கும், மதிப்பீடுகளுக்கும் தலையாய இந்த தகவல்கள் யாரிடம் இருக்கிறது? யார் கட்டுபடுத்துகிறார்கள்? யார் தீர்மானிக்கிறார்கள்? எதை வெளியிடுவது எதைத் தவிர்ப்பது எவரிடம் சேர்ப்பிப்பது (விற்பது) என்பதை தீர்மானிப்பது யார்? இதில் ஊடகவியலாளர்களின் பாத்திரமென்ன, ஊடக நிறுவனங்களின் நிர்வாகத்தின் (எஜமானர்களின் ஏவலாளர்கள்) பாத்திரமென்ன? போன்ற கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது.

ஒரு காலத்தில் தேசியவாதம் ஊடகங்களில் விலைபோகக்கூடிய சிறந்த சரக்காக இருப்பதும் இன்னொரு சீசனில் தேசியவாதத்தை மறுப்பதே விலைபோகின்ற சரக்காகவும் ஆகிவிடுகிறது. இங்கு செய்தி, தகவல், கருத்து என்பன பல சந்தர்ப்பங்களில் சந்தையில் உள்ள கேள்வியை நிறைவு செய்யும் சரக்காக ஆக்கப்பட்டு விடுகிறது. இது அச்சு ஊடககங்களுக்கு மாத்திரமல்ல, இலத்திரனியல் மற்றும் இணைய ஊடகங்களுக்கும் அதிகம் பொருந்தும்.

தமது நலன்களுக்குட்பட்ட விடயங்களையும் வாசகர்களின் ஜனரஞ்சக அலைவரிசையையும் ஒருங்கிணைத்து (syncronize) அதற்கொப்ப இயங்கும் ஊடகத்துறையே இன்று உள்ளது. வாசகர்களின் ஜனரஞ்சக தேவை என்பது ஏற்கெனவே இதே ஊடகங்களால் புனையப்பெற்றவை என்பதிலிருந்து இதனை நாம் விளங்கிக்கொள்வது அவசியம்.

இன்றைய மக்களின் சுதந்திரமான சிந்தனைக்கு அச்சுறுத்தலாக ஆகியிருக்கிறது இந்தப் போக்கு. இந்தபோக்கைத் தான் நாம் ஒரு வகையில் ஊடக பயங்கரவாதம் என்கிறோம். வலுவான மாற்று ஊடகங்கள் உருவாக்கப்படாத வரை, பலப்படுத்தப்படாத வரையில், இந்த ஊடக பயங்கரவாதம் ஒரு போதும் முடிவுக்கு வரப்போவதில்லை.

நம்மை வழிநடத்தும் ஊடகம்
ஊடகங்களால் தாம் எவ்வாறு வழிநடத்தப்படுகிறோம் என்கிற  நுண்ணரசியலைப் பற்றி ஊடகங்களை நுகர்வோர் கூட போதிய புரிதலை உணர முடியாதளவுக்கு வைத்திருப்பது தான் இன்றைய ஊடக உலகம் கண்டுள்ள மகத்தான வெற்றி. 

ஊடகம் இன்று நம்மையெல்லாம் வழிநடத்துகிறது. நம்மை வழிநடத்துகிறது என்று கூறப்படுவதன் அர்த்தம் இன்றைய எமது சிந்தனைகளை தீர்மானிப்பதாக அது ஆகிவிட்டிருக்கிறது. இன்றைய பெரும்போக்கு (mainstream) எது என்று தீர்மானிக்கும் சக்தியாக அது ஆகிவிட்டிருக்கிறது. பிற்போக்கு ஆதிக்க சித்தாந்தங்களை பெருங்கதையாடல்களாக ஆக்கி அவற்றை நிலை­நிறுத்தும் கருவியாக இது ஆகிவிட்டிருக்கிறது.

ஊடகத்தை யார் கொண்டிருக்கிறாரோ அவரிடம் - அச்சக்தியிடம் மனித நடத்தையை கட்டுப்படுத்தும் அதிகாரம் இருக்கிறதென்று கூறலாம். ஊடகத்தை கொண்டிருப்பவர் அல்லது கொண்டிருக்கும் சக்தியிடமே சிந்தனையை மட்டுப்படுத்தும், கட்டுப்படுத்தும், வழிநடத்தும் சக்தி உண்டு. இவ்வாதத்துக்கு மறுப்பு கூறும் சாரார் இதனை, இன்னும் ஊடகம் சென்றடையாத பின்தங்கிய நாடுகளில்’ பின்தங்கிய கிராமங்கள் அதிகமுள்ள உலக சமுதாயத்தில் இக்கருத்து எப்படி சரியாகும் என வினவுவர். ஆனால் பின்தங்கச் செய்யப்பட்ட சமுதாயங்களில் நிச்சயம் ஊடகம் நேரடியாக சென்றடைய வேண்டுமென்பதில்லை. அந்த சமுதாயங்களை அதிகாரம் செலுத்துகின்ற சமூக, பொருளாதார, அரசியல், பண்பாட்டம்சங்கள் இந்த ஊடகங்களால் ஏலவே வழிநடத்தப்பட்டிருக்கும். ஆக, இன்று இந்த ஊடகம் வழிநடத்தாத எந்த சமூகமும் உலகில் இல்லை. ஊடகம் இன்று சகலவற்றையும் தீர்மானிக்கின்ற முக்கிய கருவியாக ஆகிவிட்டிருக்கிறது. இன்றைய ஊடகங்களை தன்னகத்தே கொண்டிருக்கும் அதிகாரத்துவ சக்திகள், தமது அதிகாரத்தை நிலைநாட்ட ஊடகங்களை மிகவும் தந்திரமாகவும் நுட்பமாகவும் கையாண்டு வருகின்றன. ஏற்கெனவே புரையோடிப் போயிருக்கின்ற அதிகாரத்துவ சிந்தனைகளை, ஆதிக்க சிந்தனைகளை, உறுதியாக பலப்படுத்துவதில் இந்த கைதேர்ந்த ஊடகங்களைக் கையாள்கின்றன.

ஆதிக்க பிற்போக்கு சிந்தனைகளையும், மரபார்ந்த அதிகார ஐதீகங்களையும் மீளுறுதி செய்கின்ற வகையில் அதன் சித்தாந்த மேலாதிக்கத்தை இந்த ஊடகங்களைக் கொண்டே இன்று உலகம் முழுவதுமாக அதிகார சக்திகள் செய்து வருகின்றன. ஆதிக்க சித்தாந்தங்களை ஜனரஞ்சகமாக நிலைநாட்டுவதிலும் மூளைச்சலவை செய்து அடிபணிய வைக்கும் முயற்சியிலும் இந்த ஊடகங்களை மிகவும் நுட்பமாக பயன்படுத்தி வருகின்றன.

நோம் சொம்ஸ்கி இதனை தொடர்பூடக பயங்கரவாதம் (Media Terrorism) என்கிறார். இந்தப் போக்கை ஆராய்கின்ற இன்னும் சில சமூகவியலாளர்கள் இதனை தொடர்பூடாக மாபியா (Media Mafia) என்றும் ஊடக வன்முறை (Media Violation) என்றும் குறிப்பிடுகின்றனர். ஒட்டுமொத்தத்தில் இந்த ஊடகங்கள் இன்று ”அதிகாரத்துவத்தின் கருவிகளாக” (Media as a Weapon of power ) பயன்படுத்தப்படுகின்றன.


போர்க்கருவியாக ஊடகம்
வர்க்கம், பால்வாதம், இனவாதம், வயதுத்துவம், பதவி, சாதியம், நிறவாதம் என பல்வேறு வடிவங்களிலும் நிலவுகின்ற ஆதிக்க உறவுகள், அதிகாரத்துவமாக தொடர்ந்தும் நிலைபெற அவற்றிற்கு நியாயம் கற்பிக்கப்பட வேண்டும். “மதத்தின்” பெயரால், ”தூய்மை”யின் பெயரால் இந்த கற்பிதங்கள் குறித்து மூலைச்சலவை மிகுந்த சித்தாந்த மோதிக்கத்தை நிலைநாட்டியே ஆகவேண்டும்.

இப்படி கருத்தேற்றம் செய்யப்பட்ட கற்பிதங்களை நிலைநாட்டுவதில் ஊடகம் முக்கிய பங்காற்றி வருகின்றன. இந்த வகையில் ஊடகம் பற்றிய நமது பார்வை எளிமைப்படுத்தப்பட்டே இருக்கின்றன. குறைத்து மதிப்பிடப்படுகின்றன. ஊடகம் நம்மை ஒன்றும் செய்து விடமுடியாது என்கின்ற மாயையில் இருத்தப்பட்டுள்ளோம். எனவே தான் ஊடகத்தின் வடிவம், பண்பு, அதன் திசைவழி என்பன குறித்து அவ்வளவாக எம்மத்தியில் அக்கறை கிடையாது.

ஒரு தொலைக்காட்சி நிறுவனம் 30 வினாடிகள் கொண்ட ஒரு விளம்பரத்துக்கு சராசரியாக எவ்வளவு அறவிடப்படுகிறது என்பதைத் தெரிந்தால் அசந்து போவோம். ஒரு தடவைக்கு இவ்வளவு அறவிடப்படுகிறதென்றால் எத்தனை முறை குறிப்பிட்ட விளம்பரம் வருகின்றது? அப்படியெனில் எவ்வளவு தொகை ஆகிறது? நம்மீது அது எந்த விளைவையும் ஏற்படுத்தப் போவதில்லையென்றால் ஒரு நிறுவனம் ஏன் இவ்வளவு தொகையை அவ்விளம்பரத்துக்கென ஒதுக்குகிறது? அவ்வாறெனில் விளம்பரம் எவ்வாறு எம்மில் பிரதிபலிக்கின்றது? என்ன விளைவை ஏற்படுத்துகிறது? 

இன்று சகல தளங்களிலும் தகவல்களுக்கும், தரவுகளுக்கும் பெரும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. அது போலவே தகவல்களை களஞ்சியப்படுத்துவதற்கும் அவற்றைத் சந்தைப்படுத்துவதற்காவும் உலக அளவில் பாரிய பல்தேசிய கம்பனிகள் இயங்குகின்றன. தரவுகள், தகவல்கள் பரப்பப்படுவதற்கு - சந்தைபடுத்துவதற்கு முன்னரே அதன் நுகர்வோர் யார் என்பது இந்த தகவல் முதலாளிகளால் தீர்மானிக்கப்பட்டு விடுகின்றது. ஆக, தகவல் தொழில்நுட்பத்தின் மீது மூலதனம் பாரிய அளவு ஆதிக்கம் செலுத்திக்கொண்டிருக்கிறது.

தரவுகளையும், தகவல்களையும் சித்தாந்த சுமையேற்றி பரப்புகின்ற பணியை சகல ஆதிக்க சக்திகளும் மேற்கொண்டுவருகின்றன. அதற்கேற்றபடி அதன் வடிவம், வரிசை, உள்ளடக்கம், பண்பு என்பன கட்டமைக்கப்பட்டுவிடுகின்றன. இத்தகவல்களை வழங்குகின்ற சாதனமாக, சகலவற்றையும் தீர்மானிக்கும் சக்தியாக இந்த ஊடகங்கள் தோன்றி, வளர்ந்து, ஊடுருவி, வியாபித்திருக்கின்றது. ஆதிக்க சக்திகள் தமது அதிகாரத்துவத்தை தக்கவைக்க, அதனை விரிவுபடுத்த மிகக் கனமாக தகவல்களை உற்பத்தி செய்து, உற்பத்தி செய்யப்பட்ட அத்தகவலை அரசியல்மயப்படுத்தி’ கருத்தேற்றம் செய்து அல்லது புனைந்து, திரிபுபடுத்தி, பெருப்பித்து, சிறுப்பித்து சந்தைக்கு விடுகின்றன.

இதற்காக இரண்டு வகை பிரதான தந்திரோபாயங்களை அது அணுகும். முதலாவது, சந்தையில் ஏற்கெனவே கேள்வி அதிகம் (ஏற்கெனவே புரையோடிப்போயுள்ள ஆதிக்கக் கருத்துக்கள்) எதற்குண்டு என பார்த்து அந்த இடைவெளியை நிரப்புவது. இரண்டாவது, தம்மால் சந்தைப்படுத்த விரும்புகின்ற புதிய செய்திகளை கருத்தாக்கங்களை, புனைவுகளை சந்தைக்கு விட்டு சமூகத்தை அதற்கு பழக்கப்படுத்துவது, போதைகொள்ளச் செய்வது.

இந்த நூற்றாண்டின் அறிவைக் கட்டுப்படுத்தும் மிகப்பெரும் தீர்மானிக்கும் சக்தியாக ஊடகம் (media) மாறியிருக்கிறது. சமீப காலமாக சமூக ஊடகங்களின் செல்வாக்கு பாரம்பரிய ஊடக போக்கை புரட்டிப்போடத் தொடங்கியிருக்கிறது. ஒரு வகையில் கட்டற்ற கருத்துப் பரிமாறலுக்கான வெளியையும், பஞ்சமற்ற தகவல் வெளியை ஏற்படுத்தியதாக ஒரு மாயத்தோற்றத்தை அது தருகிறது. அதேவேளை ஆதிக்க தரப்பிடமே அதன் நெம்புகோல் தொடர்ந்தும் இருக்கிறது. தகவல்களையும், தரவுகளையும் கருத்தாக்கமாக மாற்றித்தரும் செயன்முறை ஆதிக்க மற்றும் அடக்குமுறைகுள்ளாகும் சக்திகளுக்கிடையேயான ஒரு போராக தொடர்ந்தும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.


கூகிள் ஒரு முன்னுதாரணம்
இன்று உலகளாவிய ரீதியில் தகவல் ஏகபோகத்தையும், கருத்து ஏகபோகத்தையும் படிப்படியாக பறித்து, அறிவுத்துறை ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது கூகிள். இலவச சேவைகளை பலவற்றை வழங்கிவருதற்கூடாக உலகின் பெருவாரியோனரை கூகிளின் அடிமையாக ஆக்கி வைத்திருக்கிறது. தாம் அடிமைப்பட்டு இருக்கிறோம் என்பதை விளங்கியவர்கள் கூட தன் சேவைகளிலிருந்து விலக முடியாதபடி ஒரு உலகத்தை உருவாக்கி ஆக்கிரமித்து வருகிறது. அதன் வளர்ச்சிப்போக்கு ஒருபுறம் இலவசங்களுக்கு அடிமையான அப்பாவி நுகர்வோருக்கு வசதியாக இருந்தாலும் மறுபுறம் வோட்டு கேட்காமலேயே உலகை கட்டுபடுத்துகின்ற அதிகாரியாக தம்மை ஆக்கியுள்ளது கூகிள் என்றால் அது மிகையில்லை.

இது குறித்து சிவா சத்தியநாதன் என்கிற அமெரிக்கர் எழுதிய “The Googlization of Everything” நூல் மிகவும் பரபரப்பாக பேசப்படுகிறது. அனைத்தும் கூகிள்மயமாகிவருவதன் ஆபத்தை அவர் நான்கு வருடங்களுக்கு எழுதிய நூல் நவீன ஊடகத்துறை குறித்த ஆய்வுகளுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. கூடவே கூகிள் தேடிபொறி இயந்திரத்தின் ( search engine) எகபோகத்தையும் தன்வசமாக்கியுள்ள கூகிள் உலகில் வலைத்தளங்களை வைத்திருப்போருக்கு கொடுத்திருக்கும் SEO (search engine optimization) நிபந்தனைகளின் மூலம் அவற்றின் எல்லைகளையும் வரையறுக்கிறது. அந்த நிபந்தனைகளை எற்பவர்களையே தமது தேடுபொறி இயந்திரத்தில் உரிய இடத்தை வழங்கமுடியும் என்கிற ஆணை கூர்ந்து கவனிக்கத்தக்கது.

அதிகாரம், பணம் போன்ற ஆதிக்க, அதிகார வர்க்க, ஏகபோக, முதலாளித்துவ சக்திகளின் கூட்டுத் தேவையை நிறைவு செய்வதன் மூலம் இலாபம் சம்பாதிப்பதே கூகிளின் அடிப்படை நெறி. இதில் மக்கள் நலன் என்பது வெறும் கண்துடைப்பே.

ஊடக முதலாளிகளின் நலன்களுக்குட்பட்ட விடயங்களையும் வாசகர்களின் ஜனரஞ்சக அலைவரிசையையும் ஒருங்கிணைத்து (syncronize) அதற்கொப்ப இயங்கும் ஊடகத்துறையே இன்று உள்ளது. வாசகர்களின் ஜனரஞ்சக தேவை என்பது ஏற்கெனவே இதே ஊடகங்களின் புனைவுகளுக்கு ஆட்பட்டவை என்பதிலிருந்து இதனை நாம் விளங்கிக்கொள்வது அவசியம்.

இன்றைய மக்களின் சுதந்திரமான சிந்தனைக்கு அச்சுறுத்தலாக ஆகியிருக்கிறது இந்தப் போக்கு. இந்தபோக்கைத் தான் நாம் ஒரு வகையில் ஊடக பயங்கரவாதம் என்கிறோம். வலுவான மாற்று ஊடகங்கள் உருவாக்கப்படாத வரை, பலப்படுத்தப்படாத வரையில், இந்த ஊடக பயங்கரவாதம் ஒரு போதும் முடிவுக்கு வரப்போவதில்லை.

நன்றி - சுடரொளி
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates