Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

சம்பள கூட்டு ஒப்பந்தம் தொடர்பான ஒர் மீள்பார்வை இரா. ரமேஸ்

தொண்ணூறுகளின் அரம்பத்தில் பெருந்தோட்டங்கள் கம்பனிகளுக்குக் குத்தகைக்கு வழங்கப்பட்ட போது கூட்டு ஒப்பந்த அடிப்படையில் தோட்டத் தொழிலாளர்கள் நிர்வகிக்கப்பட வில்லை. அப்போது பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான நியதிச் சட்டங்கள் மற்றும் பொதுவாக காணப்பட்ட தொழிற்சட்டங்களின் அடிப்படையிலேயே பெருந்தோட்டங்கள் நிர்வகிக்கப்பட்டன. ஆகையால் சம்பளமானது சம்பள நிர்ணய சபையினூடாக தீர்மானிக்கப்பட்டன. 1998ம் ஆண்டு முதலாவது கூட்டு ஒப்பந்தம் பெருந்தோட்டத் தொழிலாளர்களைப் பிரதிநித்துவப்படுத்திய தொழிற்சங்கங்களுக்கும் பெருந்தோட்டக் கம்பனிகள் சார்பாக இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்றது. அதன் பின்;னர் இலங்கையில் பெருந்தோட்டத்துறையில் மேற்கொள்ளப்படும் கூட்டு ஒப்பந்தமானது ஒரு பெரும் எண்ணிக்கையான தொழிலாளர்களின் நலன்களோடு தொடர்புடைய ஒன்றாக மாறியது. ஒரு வகையில் அது முழு மலையக மக்களினது வாழ்வியலைத் தீர்மானிக்கும் அம்சம் என்றே கூறலாம். மறுபுறமாக கூட்டு ஒப்பந்தம் அரசியல் தொழிற்சங்க ரீதியில் மலையக்தில் மிகுந்த முக்கியத்தும் பெற்றுள்ளதுடன்,  தேசிய ரீதியாகவும் முக்கியத்துவம் பெறும் விடயமாகவும் மாறியுள்ளது. உண்மையில் பெருந்தோட்ட தொழிலாளர்களின் வேதன அதிகரிப்பு தொடர்பாக மிக நீண்ட காலமாகவே பேசப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும். இது விடயத்தில் வரலாற்றின் பல்வேறு சந்தர்ப்பங்களில் போராட்டங்களும், பணி பகிஸ்கரிப்பும் இடம்பெற்றுவந்துள்ளன. அந்தவகையில் இன்று தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிப்பதற்கான கூட்டு ஒப்பந்தம் இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் மூன்று தொழிற்சங்கங்களுக்கும் இடையில் இடம்பெறுகின்றன. இதனடிப்படையிலேயே கடைசியாக கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்தினை ஆராய வேண்டும்.
2013.03.31ம் திகதி 2011ம் ஆண்டு செய்த சம்பள கூட்டு ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில் 2013.04.04.ம் திகதி சம்பளம் தொடர்பாக பெருந்தோட்ட தொழிற் சங்கங்களுக்கும் இலங்கை முதலாளிமார் சம்மேளனத்துக்கும் இடையில் இடம்பெற்ற இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தையிலேயே சம்பளம் பற்றி பேசி முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தோட்டத் தொழிலாளர்கள் தங்களின் சம்பள உயர்வுக்காக போராடுவதற்கு இதுவரை வழங்கப்பட்டிருந்த வாய்பையும் வழங்க கூடாது என்ற எண்ணத்தில் இம்முறை ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
புதிய சம்பள கூட்டு ஒப்பந்தமானது தொழிலாளர்கள்  சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் புத்திஜீவிகள் மத்தியில் பல்வேறு விதமான கருத்து நிலைகளைத் தோற்றுவித்துள்ளது. அத்தகைய கருத்துக்களை ஆராய்வதே இக் கட்டுரையின் நோக்கமாகும். உண்மையில் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் வேதனத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தை நான் சம்பள கூட்டு ஒப்பந்தம் எனக் குறிப்பிடுவதற்கு காரணம், அது வெறுமனே சம்பளம் குறித்து மாத்திரம் பேசப்படுவதனாலாகும். கூட்டு ஒப்பந்தம் ஒன்றில் சம்பளம் என்பது ஒரு பகுதியேயாகும். அதற்கப்பால் தொழிலாளர் உரிமைகள், தொழில் நியமங்கள், தொழிலாளர் நலன்கள் எனப் பல விடயங்கள் அதனுள் அடங்கும். ஆயினும் பெருந்தோட்ட மக்களின் வேதனத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தமானது வெறும் சம்பளத்துடன் மட்டுப்படுத்தப்பட்டு, அவர்களுக்குள்ள ஏனைய உரிமைகள், நலன்கள், தேவைகள், தொழிலாளர் உரிமைகள் குறித்து பேசாமையானது ஓர் உண்மையான கூட்டு ஒப்பந்தத்துக்கான அந்தஸ்த்தினை இழந்த ஒன்றாகவே நோக்க வேண்டும்.
உண்மையில் இம்முறையாவது கூட்டு ஒப்பந்தம் சம்பள கூட்டு ஒப்பந்தமாக அன்றி தொழிலாளர்களின் ஒட்டு மொத்த நலன்கள் மற்றும் உரிமைகள் குறித்து பேசும் ஒன்றாக அமைய வேண்டும் என பெரியளவில் எதிர்பார்த்தோம். ஆயினும் அவை நிறைவேறாமல் அந்தரங்கமாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை தொழிலாளர் சமூகத்தையும்,  இம் மக்களின் நலன் தொடர்பாக செயற்படும் தரப்பினரிடத்திலும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது என்பதில் தவறில்லை. வேறும் வகையில் கூறின் இம்முறை கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுவதற்கு முன்னர் அது தொடர்பான எதிர்பார்ப்புக்கள் குறித்து தொழிலாளர்கள் மத்தியிலும் அவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வேறுபட்ட தொழிற் சங்கங்களிடமும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களிடமும் கருத்துக்களைப் பெற்றுக்கொள்வதற்கான ஓர் வாய்ப்பு  வழங்கப்படாமையானது மிக முக்கிய குறைபாடாகும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், லங்கா தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் (டுதுநுறுரு) மற்றும் ஒருங்கிணைந்த பெருந்தோட்டக் கூட்டமைப்பு ஆகிய தொழிற்சங்கங்கள் தன்னிச்சையாக கூட்டு ஒப்பந்தத்தை கைச்சாத்திடுவது ஏனைய தொழிற்சங்கங்கள் தொழிலாளர் நலனில் கொண்டுள்ள கடப்பாட்டினை மறுதலிப்பதுடன,; அத்தொழிற்சங்கங்களை சார்ந்துள்ள மக்களின் விருப்பு, வெறுப்புக்களையும் புறந்தள்ளுவதற்கு சமனாகும். எதிர்காலத்தில் இந் நிலை மாற்றமடைய வேண்டும். அதே வேளை தொழிலாளர் பலத்தின் அடிப்படையில் தொழிற்சங்கங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட வேண்டும். காலத்தின் தேவைக்கு ஏற்ப சர்வதேச தொழிலாளர் நியமங்களை அடிப்படையாகக் கொண்டு கூட்டு ஒப்பந்தம் மறுசீரமைப்புக்கு உள்ளாக வேண்டும்.
புதிய கூட்டு ஒப்பந்தப்படி சம்பளம் கட்டமைப்பினைப் பார்க்கும் போது அது வேறுப்பட்ட கருத்துக்களைக் தொழிலாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் நலன் சார்ந்து செயற்படும் அமைப்புகளிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. இன்று 620ஃஸ்ரீ சம்பளம் ஒரு தொழிலாளிக்கு கிடைக்கிறது என்பது ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள தொழிற்சங்கங்களின் வாதமாகும். அதன் உண்மையான விளக்கம் தெரியாதவர்கள் இந்த சம்பள அதிகரிப்பை பெரிய சாதனையாக பார்க்கின்றார்கள். அத்தகைய மனநிலையை கைச்சாத்திட்ட தொழிற்சங்கங்கள் உருவாக்கியுள்ளன என்பது பொருத்தமாகும். இந்த 620ரூபா சம்பளம் மொத்த தொழிலாளர்களில் 10விகிதத்துக்கு குறைவானவர்களுக்கே கிடைக்கும் என்பதே இங்குள்ள முக்கிய விடயமாகும். பங்களா சேவை, சுகாதார ஊழியர்கள், தொழிற்சாலையில் வேலை செய்வோர் போன்ற சிறிய எண்ணிக்கையானோருக்கே கிடைக்கும். ஏனைய தொழிலாளர்கள் 450ஃஸ்ரீ அடிப்படை சம்பளத்தினையே பெறுவர். இது விடயத்தில் தொழிலாளர்கள் தெளிவாக இருக்க வேண்டும். புதிய சம்பள ஒப்பந்தப்படி 450ஃஸ்ரீ அடிப்படைச் சம்பளமும், வரவுக்கான கொடுப்பனவு 140ஃஸ்ரீ, நியமக் கொடுப்பனவு 30 ஆகவும் காணப்படுகின்றது. இங்கு அடிப்படைச் சம்பளம் 380 இருந்து 450ஃஸ்ரீ அதிகரிக்கப்பபட்டுள்ளது. அதன்படி பார்த்தால் அடிப்படைச் சம்பளத்தில் 80 ரூபா அதிகரிக்கப்பட்டுள்ளது. மறுபுறமாக 105ஃஸ்ரீவாக இருந்த வரவுக் கொடுப்பனவு 140ஃஸ்ரீ அதிகரிக்கப்பட்டுள்ளது. நியமக் கொடுப்பனவில் மாற்றம் ஏற்படவில்லை. வரவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டமைக்கு முக்கியக் காரணம், அது அனைத்து தொழிலாளர்களாலும் பெற முடிவதில்லை என்பதாகும். வேலை வழங்குகின்ற நாட்களில் (ஞாயிறு தவிர்ந்த) 75மூ வருகை தந்திருந்தால் புதிய ஒப்பந்தப்படி வரவுக்கான கொடுப்பனவாக 140ஃஸ்ரீவை ஒரு நாளைக்கு பெற முடியும். உதாரணமாக 25 நாட்கள் வேலை வழங்கப்பட்டிருந்தால் 19 (76மூ) நாள் வேலைக்கு சமூகமளித்திருத்தல் வேண்டும். அதன்போது வரவு கொடுப்பனவுக்கு ஒரு தொழிலாளி உரித்துடையவராகின்றார். ஆயினும் இது எல்லா தொழிலாளர்கலுக்கும் சாத்தியமாவதில்லை.
புதிய சம்பள ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டு 3 கிழமைகளுக்குப் பின்னர் பதுளை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த பல தொழிலாளர்களைச் சந்திக்கும் வாய்ப்பு கிட்டியது. அவர்களிடம் இந்த புதிய சம்பள அதிகரிப்பு தொடர்பாக பேசும் போது 90மூ மானவர்கள் இந்த சம்பள அதிகரிப்பு திருப்தியற்றது என்ற கருத்தினை வெளிப்படையாகக் குறிப்பிட்டனர். இதனைக் கொணடு 5 பேர் கொண்ட குடும்பத்தை நடாத்துவது மிகவும் கடினம். இன்றுள்ள விலைவாசி, பிள்ளைகளின் கல்வி செலவு, மருத்துவ செலவு, பயணங்கள், திருமணம் மற்றும் ஏனைய சடங்குகள் ஆகிய பல தேவைகளைப் பார்க்கும் போது இந்த சம்பள அதிகரிப்பு நியாயமற்றது என்றனர். இரண்டு பேர் தொழில் செய்யும், மாற்று வருமானங்களை கொண்ட குடும்பங்களுக்கு இச்சம்;பளம் சமாளிக்க கூடியதாக அமையும் என்றனர். நாளுக்கு நாள் மனித தேவைகள் அதிகரித்து வருகின்றன, அவற்றைப் பூர்த்தி செய்ய  இந்த சம்பளம் போதாது என்பது  பெரும்பாலானோரின் கருத்தாகக் காணப்பட்டது. உண்மையில் அடிப்படை சம்பளம் 500ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருந்தால் மகிழ்ச்சியடைந்திருப்போம் என்றனர்.  ஏனைய 10மூ மானோர் இந்த சம்பள அதிகரிப்பை ஓரளவு திருப்திகரமானதாகக் குறிப்பிட்டனர். அவர்களில் பெரும்பாலானோர் இரண்டு பேர் குடும்பத்தில் வேலை செய்பவர்களாகவும், சராசரியாக ஒரு பிள்ளை பாடசாலைக்குச் செல்லும் குடும்பமாகவும்,  வீட்டுத் தோட்டம் செய்பவர்களாகவும் காணப்பட்டனர். இங்கு மாற்று வருமானத்தின் கிடைப்பனவு மற்றும் தங்கிவாழ்வோரின் எண்ணிக்கை மற்றும் பாடசாலைக்கு செல்லும் பிள்ளைகள் போன்ற காரணிகளை அடிப்படையாகக் கொண்டு சம்பள அதிகரிப்பு தொடர்பான தமது கருத்துக்களை வெளியிட்டனர்.
மேலும் வரவு கொடுப்பனவு பற்றி அவர்களிடம் கேட்டப்போது, அது எல்லா தொழிலாளர்களுக்கும் கிடைப்பதில்லை என்பதில் உடன்பட்டார்கள். 75மூ வேலைக்கு சமூகமளிப்பது நடைமுறையில் கடினமான விடயமாக குறிப்பிட்டனர். அத்துடன், 75மூ வேலைக்கு செல்ல முடியாமைக்கு திருமணங்கள,; பாடசாலையில் நடக்கும் கூட்டங்கள், சடங்குகள், தவிர்க்க முடியாத பயணங்கள், அரச காரியாலயங்களுக்கு செல்லுதல், மருத்துவ தேவைகளுக்கு செல்லுதல், ஞாயிற்றுக் கிழமை வேலை செய்வதனால் ஏற்படும் உடல் நோவு போன்ற பல காரணங்களைக் குறிப்பிட்டனர். உண்மையில் இவை தவிர்க்க முடியாத குடும்ப அர்ப்பனிப்புகள். குடும்ப நலன், சமூக உறவு, ஆரோக்கியமான வாழ்க்கை என்பவற்றை உறுதிப்படுத்த மேற்கூறிய விடயங்களுக்கு தொழிலாளர்கள் தமது ஒரு நாள் வேலையை அர்ப்பனிக்க வேண்டிய நிலைக்காணப்படுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டு தொழிலாளர்கள் தேவையற்ற விடயங்களுக்காக விடுமுறை எடுக்கின்றார்கள் எனக்கூறுவது நியாயமற்ற வாதமாகும். மேற்கூறிய காரணங்களால்  தொழிலாளர்களால் 75மூ வேலைக்கு சமூகமளிக்க முடிவதில்லை. இதன் மூலம் தோட்டங்ளுக்கே இலாபம் என்பதனை நாம் பிரிந்து கொள்ள வேண்டும். 100 பேர் தொழில் செய்யும் ஒரு தோட்டத்தில் 75பேருக்கு வரவுக் கொடுப்பனவு கிடைக்காவிடின், அதன் மூலம் தோட்ட முகாமைத்துவத்துக்கு பெருந்தொகை இலாபம் கிட்டும். சில தோட்டங்களில் கை காசுக்காக (ஊயளா Pடரஉமiபெ) ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை வழங்கப்படுகின்றது. பணத் தேவைக்காக பெரும்பாலான தொழிலாளர்கள் ஞாயிறு தினங்களில் வேலைக்கு செல்கின்றார்கள். அத்துடன் மிகவும் உடலை வருத்தி வேலை செய்கின்றார்கள். இதனால் கிழமை நாட்களில் வேலைக்கு செல்ல முடிவதில்லை. இது வரவு கொடுப்பனவை பெற முடியாமைக்கு பிரிதொரு காரணமாகவிருக்கின்றது. இம் முறை 30ஃஸ்ரீ வால் வரவுக் கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது பயனற்றது. இந்த 30ஃஸ்ரீ அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிக்கப்பட்டிருக்குமாயின் தொழிலாளர்கள்  எதிர்பார்ப்பினை ஏதோ ஒரு வகையில் நிறைவு செய்வதாக அமைந்திருக்கும். உண்மையில் எல்லோரினதும் எதிர்பார்ப்பு அடிப்படைச் சம்பளம் 500ஃஸ்ரீ அதிகரிக்கப்பட வேண்டும் என்பதாகக் காணப்பட்டது. இந்த முறை சம்பள அதிகரிப்பு மிகவும் அந்தரங்கமாகவும் தந்திரமாகவும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. 24 பெருந்தோட்டக் கம்பனிகளில் 20 பெருந்தோட்டக் கம்பனிகள் மறுப்பின்றி இம் முறை கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இதன் அர்த்தம் யாதெனில் கம்பனிகள் இலாபத்தில் செல்கின்றன என்பதாகும். இன்னும் இலாபத்தை உழைக்க முடியும் என்பதாகும். பெருந்தோட்ட பயிர்களுக்கு பெரியளவில் கேள்வி உண்டு என்பதனை இது வெளிப்படுத்துகின்றது. பொதுவாக கம்பனிகள் தங்களின் உண்மை இலாபங்களை கணக்கறிக்கைகளில் காட்டுவதில்லை என்ற போதும் 2011ம் ஆண்டு 19 கம்பனிகள் 450 கோடியே 94 இலட்சத்துக்கும் அதிகமாக இலாபம் பெற்றுள்ளன. மறுபுறமாக 2012 ம் ஆண்டு 18 கம்பனிகள் 404 கோடியே 86 இலட்சத்துக்கும் அதிக இலாபத்தை பெற்றுள்ளன என்பது குறிப்பிடதக்கதாகும்.
வெளி அழுத்தங்களுடன் (கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற் சங்கங்கள், சிவில் அமைப்புகள்)சரியான முறையில் பேச்சுவார்த்தை இடம் பெற்றிருந்தால் 500 ரூபா அடிப்படைச் சம்பளத்தை எட்டியிருக்க முடியும். 500ஃஸ்ரீ வாக அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்படாமை தொழிலாளர்கள் மத்தயில் காணப்படும் பெரும் அதிருப்தியாகவும் ஏமாற்றமாகவும் காணப்படுகிறது.  அரசாங்க புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்குகையில் 2013 பெப்ரவரி மாதம் ஆகின்ற போது 4 பேர் கொண்ட குடும்பம் ஒன்று தனது தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கு மாதாந்தம் ரூபா 47600 தேவை என குறிப்பிடுகின்றது. இதற்கு வாழ்க்கை செலவு அதிகரிப்பே காரணமாகும். வாழ்க்கைச் செலவு அதிகரிப்புக்கு ஏற்ற வகையில் சம்பள அதிகரிப்பு கிடைக்காமையினால் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதற்கு  நிதமும் போராட வேண்டிய நிலைக்கு பெருந்தோட்ட மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.  இந்த நிலைமை இம்முறை கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தத்திலும் கவனத்தில் எடுக்கப்படாமை பெரிதும் வருந்ததக்க விடயமாகும்.
உண்மையில் இம் முறை சம்பள அதிகரிப்பை மேற்கொள்ளும் வகையிலும், தொழிலாளர்களின் ஏனைய உரிமைகள் ஃ நலன்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வினைக் காணும் வகையிலும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட வேண்டு;ம் என்ற நோக்கில் பல்வேறு பிரதேசங்களில் சிவில் அமைப்புக்கள், மாணவர் சமூகம், கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்க அமைப்புக்கள், நலன் விரும்பிகள் பல செயற்பாடுகளை மேற்கொள்ளத் தயாரானார்கள். இவை பெரிதும் தனித் தனி செயற்பாடுகளாக அமையாது, கூட்டு செயற்பாடுகளாக அமைந்தமை ஓர் முக்கிய அம்சமாக குறிப்பிட வேண்டும். இவை படிப்படியாக தீவிரத் தன்மையினை எட்டவிருந்தன. உண்மையில் இத்தகைய செயற்பாடுகள் தொழிலாளர் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டுவரும், இம் முறை சகலராலும் எற்றுக்கொள்ளக் கூடிய கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்ற நம்பிக்கையை பெரிதும் வளர்த்தது. மறுபுறமாக இது விடயத்தில் சிவில் அமைப்புக்களும், தொழிற்சங்கங்களும் நல்லதொரு தலையீட்டினை செலுத்த முன் வந்தன. ஆயினும் இதன் பயனை பார்ப்பதற்கு முன்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை பெரும் ஏமாற்றத்தினையும், அதிருப்தியினையும் ஏற்படுத்தியது.  அத்துடன் இதன் தாக்கத்தை முன் கூட்டியே உணர்ந்தோ என்னவோ, மிகவும் அந்தரங்கமாக, பெரியளவிலான ஊடக  செய்திகள் இன்றி கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது எனப் பலரையும் எண்ணத் தோன்றியது. விசெடமாக தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டியதன் தேவை, அதற்கான நியாயம் என்ன, கம்பனிகளின் வருமானம், செலவு ஆகியன தொடர்பான புள்ளிவபரங்களுடன் தொழிலாளர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த சமூக நீதிக்கான மலையக ஒன்றியம் (மலையக புத்திஜீவிகளையும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களையும் கொண்ட தன்னார்வ அமைப்பு) சகல ஏற்பாடுகளையும் மேற்கொண்ட தருனத்தில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமை பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியது. இதிலும் குறிப்பாக கடந்த காலங்களில் கூட்டு ஒப்பந்தம்  முடிவடைந்து குறைந்தது இரண்டு மாதங்கள் கழிந்த பின்னரே ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அது வரையில் பேச்சுவார்த்தைகளும் ஆர்பாட்டங்களும், பேரம் பேசலும் இடம்பெற்றது. அத்தகைய எந்தவொரு செயற்பாடுகளும் இன்றி மிக வேகமாக கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டமையானது பலரின் மத்தியிலும் சந்தேகத்தை கிளப்பியுள்ளதுடன,; இதன் பின்னணியில் வேறு ஏதும் காரணிகள் செல்வாக்கு செலுத்தியுள்ளதா என எண்ணத் தூண்டியுள்ளது. இது குறித்த கருத்துக்களையும் பத்திரிகைகளில் காணமுடிந்தது. மேலும், ஏன் முதலாளிமார் சம்மேளனமும் குறித்த மூன்று தொழிற்சங்கங்களும் இது விடயத்தில் அவசரப்பட்டு செயற்பட்டன என்ற கேள்வியை எழுப்பியது.
எவ்வாறாயினும் இம் முறை கைச்சாத்திடப்பட்ட கூட்டு ஒப்பந்தமும் வழமையில் இருந்து எவ்வகையிலும் மாறவில்லை என்ற முடிவுக்கு வரலாம். மேலும் இது தொழிலாளர்களின் எதிர்பார்ப்பினை முழுமையாக திருப்தி செய்யவில்லை. மக்கள் கருத்துக்களுக்கு இடம் கொடுக்காத ஒரு ஒப்பந்தம், வேதன அதிகரிப்பு முறைகேடானது, அது தொழிலாளர் சமூகத்தின் வாழ்வியலை சமூக, பொருளாதார நிலையை மேம்படுத்த போதுமானதல்ல. தொழிலாளர் மத்தியில் கூட்டு ஒப்பந்தம் தொடர்பான ஓர் எழுச்சியை ஏற்படுத்த முன்னர் அதனை தடுக்கும் வகையில் செய்யப்பட்ட ஓர் ஒப்பந்தம் எனக் கூறலாம். அடிப்படைச் சம்பளம் 500ஃஸ்ரீ வாகவும் வரவுக் கொடுப்பனவு 105ஃஸ்ரீ வாகவும் நியமக் கொடுப்பனவு 30ஃஸ்ரீ வாகவும் காணப்பட்டிருந்தால் அது எற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக அமைந்திருக்கும் என்பதில் எனது உடன்பாடு காணப்படுகின்றது.
எல்லாவற்றுக்கும் அப்பால், இந்த கூட்டு ஒப்பந்தம்  கிழித்தெறியப்பட வேண்டும், சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும், இது முறைகேடான ஒப்பந்தம் என்ற கோசங்களுடன் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு ஆர்பாட்டங்களை நடாத்தி தமது எதிர்ப்பினைக் காட்டின. பாராளுமன்ற உறுப்பினர் ஏ. இராதாகிருஸ்ணனும் இதற்கெதிராக போராட்டத்தை தனித்து நின்று செய்தார். அவை எதுவும் பயனளிக்கவில்லை. இவை காலம் தாழ்த்திய செயற்பாடுகள் என்றே சொல்வேன். இவை மிக தீவிரமான வழிகளில் சரியான தந்திரோபாயத்துடன், ஒப்பந்தம் முடிவடைவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னரேயே மேற்கொள்ளப்பட வேண்டும். தொழிலாளர்கள், சிவில் அமைப்புக்கள், தொழிற்சங்கங்கள்  என்பன இது விடயத்தில் முன்கூட்டியே செயற்பட வேண்டும் என்பதனை இம் முறை கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் தெளிவுப்படுத்தியுள்ளது என்பது பொருத்தமாகும். ‘வரு முன் காப்போம்’ என்ற உபாயத்தினை எதிர்காலத்தில் பின்பற்றுவதன் மூலமே தொழிலாளர்களுக்கு சார்பான கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என்பதனை இம்முறை கைச்சாத்திடப்பட்டள்ள கூட்டு ஒப்பந்தம் எமக்கு கற்பித்துள்ளது.

அமரர் இரா.சிவலிங்கம் அவர்களின் நினைவு பேருரை - தெளிவத்தை ஜோசப்

இரா.சிவலிங்கம்
மலையகம் என்கிற அடையாளத்தையும் உணர்வினையும் உலகெல்லாம் பறைசாற்றி இருக்கச் செய்கின்ற
மலையக இலக்கியம்
 - தெளிவத்தை ஜோசப்

தமிழ் இலக்கியம் என்றும் ஈழத்தமிழ் இலக்கியம் என்றும் பேசப்படுவதுபோல் மலையக இலக்கியம் என்றும் தனியாகப் பேசப்படுகின்ற அளவுக்கு மலையகத்தின் உழைக்கும் மக்கள் பற்றிய இவ்வெழுத்துக்கள் ஈழத்தமிழ் இலக்கியத்தில் குறிப்பாகவும், தமிழ் இலக்கியம், புலம்பெயர் தமிழ் இலக்கியம் ஆகியவற்றில் பொதுவாகவும் ஒரு தாக்கத்தினை ஏற்படுத்தி வந்திருக்கின்றன.

ஈழத்து இலக்கியத்தினை செழுமைப்படுத்தும் ஒரு பிரதான ஆற்றலை இன்று மலையகம் கொண்டிருக்கிறது. (சே.யோகநாதன் 20 நூற்றாண்டு ஈழத்துச் சிறுகதைகள் முன்னுரை)

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் தனித்துவ அடையாளப் பிரக்ஞை வளர்த்தெடுக்கப்பட வேண்டிய பெரும் பணியில் மலையக இலக்கியம் முதலிடம் வகித்தது. (பேராசிரியர் அமரர் கா.சிவத்தம்பி)

பிரதேச வாழ்க்கையை பொருளாய்க்கொண்டு எழுதப்பட்டு வந்துள்ள படைப்புக்களில் பெருந்தோட்டப் பயிர்ச் செய்கைக்குக் களமாக உள்ள மலைநாட்டை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பனவற்றிற்குத் தனி இடமுண்டு (பேராசிரியர் அமரர் க.கைலாசபதி தோட்டக் காட்டினிலே முன்னுரை)

மலையக இலக்கியம் என்னும் இலக்கியத் தொகுதியானது ஈழத்துத் தமிழ் இலக்கிய வளர்ச்சிப் போக்கின் மிக முக்கியமானக் கூராகப் போற்றப்பட்டு வருகின்றது. (லெனின் மதிவாணம் - தமிழகச் சஞ்சிகை உயிர் நிழல் - கட்டுரை)

நமது நாடு பல நூற்றாண்டு கால வரலாற்றினையும், அரசியல் மற்றும் கலாசாரப் பின்னணியையும் கொண்ட ஒரு சிறிய நாடு.

இலங்கையின் ஏடறிந்த வரலாற்றில் ஏறத்தாழ ஒரு இருபத்தைந்து வீதம் அந்நிய ஆதிக்கத்தின் கீழ் குறிப்பாக மேற்கு ஐரோப்பியர்களால் ஆளப்பட்ட சரித்திரத்தையே உள்ளடக்குகிறது. போர்த்துக்கேயரும், ஒல்லாந்தரும் இலங்கையைக் கைப்பற்றி ஆண்டபோதும் பிந்திவந்த பிரித்தானியரே இலங்கையின் வரலாற்றில் - மலையக் பெருந்தோட்ட வரலாற்றில் முக்கிய இடம் கொண்டுள்ளனர்.

பிரித்தானிய ஏகாதிபத்தியம் இதுவரை காலம் இலங்கையில் இருந்து வந்த பொருளாதார அடித்தளத்தை மாற்றி அமைத்தது.

நவீன சந்தைமயமாக்கலை நோக்கமாகக் கொண்ட தங்களது அரசியலுக்கேற்ப ஏற்றுமதியை மையமாகக் கொண்ட முதலாளித்துவ பொருளாதாரத்தை அறிமுகம் செய்தது. இலங்கையின் பொருளியல், சமூகவியல் அமைப்புக்கள் யாவும் நிலப்பிரபுத்துவ முறையை ஆதாரமாகக் கொண்டு பழைய கிராமிய முறையில் கட்டி எழுப்பப்பட்டவை. ஆகவே புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரம் அதன் வரவையும் வளர்ச்சியையும் வரவேற்கின்ற – வளர்த்தெடுக்கின்ற ஒரு அரசியல் - சமூக கட்டுமானத்தை வேண்டி நின்றது.

கிராமிய முறையில் கட்டி எழுப்பப்பட்டிருந்த நிலப்பிரபுத்துவ முறைமையை பலம் குன்றச் செய்யும் விதத்தில் அந்நிய முதலும் அந்திய உழைப்பும் பிரித்தானியரால் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்நிய முதல் ஆங்கிலேயருடையது.

அந்நிய உழைப்பு இந்தியத் தமிழருடையது!

இவ்வாறு ஒரு புதிய பொருளாதார மாற்றத்தினை மையமாகக் கொண்டு ஆரம்பமானதே இன்று இலங்கையில் மலையக மக்கள் என்று அறிமுகம் கொண்டுள்ள – அடையாளப் படுத்தப்படுகின்ற பெருந்தோட்ட தொழிலாளர்கள் வரலாறு.

இந்திய விவசாயத்தில் காலம் தப்பிய மழை வறட்சி ஆகியவையும் ஆங்கில ஆதிக்கத்தின் விளைவான கைத்தொழில் புரட்சியின் செல்வாக்கு விவசாயத்தையே மையமாகக் கொண்டிருந்த நிலமற்ற சாதிப்பிரிவுகளால் கட்டுப்படுத்தப்பட்டிருந்த விவசாயிகளை வேலையற்று பட்டினியால் வாடும் ஒரு மக்கள் கூட்டமாக மாற்றியிருந்தது.

செய்வதற்குத் தொழில் ஏதுமின்றி பட்டினி கிடந்து சாவதைவிட கிடைக்கும் ஏதாவதொரு தொழிலை உயிரைப் பணயம் வைத்தாவது செய்து பார்ப்போம் என்னும் முயற்சியே இவர்களை இலங்கையின் மலைப்பிரதேசத்துக்குக் குடி பெயர வைத்தது.

புலப் பெயர்வுக்கான இரண்டு காரணிகளில் ஒன்று Pரடடiபெ கயஉவழச. மற்றது Pரளாiபெ கயஉவழச. எந்த ஒரு புலப் பெயர்விலும் இந்த இரண்டில் ஏதாவதொரு ஒன்று மற்றதிலும் பார்க்கக்கூடிய அழுத்தம் கொண்டதாக இருக்கும்.

உதாரணத்துக்கு 83 ன் பின்னான ஈழத்தமிழர்களின் மேலை நாடுகளுக்கான புலப்பெயர்வைக் கூறலாம். ஈழத்தின் வசிக்க முடியாத நிலையின் தள்ளுகின்ற – விரட்டுகின்ற காரணியே கூடுதல் அழுத்தம் கொண்டதாக இருந்தது வெளிப்படை.

ஆனால் இந்தியத் தமிழர்களின் இலங்கையின் மலையகத்துக்கான புலப்பெயர்வில் இந்த Pரடடiபெ – Pரளாiபெ ஆகிய இரு காரணிகளுமே சமமாக செயற்பட்டுள்ளதைக் காணலாம்.

தள்ளும் காரணிகளின் செயற்பாடுகளைப் போலவே, கங்காணிமார்களின் பிரச்சாரங்கள் மூலம் இழுக்கும் காரணிகளும் செயற்பட்டுள்ளன.

தென்னிந்தியக் கிராமங்களின் இந்தத்தள்ளும் காரணி பற்றி புதுமைப் பித்தனின் ‘துன்பக்கேணி’யும் இலங்கை மலையகத்தின் இழுக்கும் காரணிபற்றி கோ.நடேசய்யரின் ‘திருராமசாமி சேர்வையின் சரித’மும் மிக அழகாகப் பதிவு செய்கின்றன.

மலையக இலக்கியம் ஒரு உத்வேகத்துடன் 60 களுக்குப் பின்பே எழுந்தாலும் அதற்கான ஒரு தளம் 30களிலிருந்தும் அதற்கு முன்பிருந்தும் போடப்பட்டே வந்துள்ளன என்பதும் மனம் கொள்ளத்தக்கது.

ஆனாலும் 60க்குப் பின் எழுந்த இப்புதுவேகம் அந்தப் பழைய தளத்தின் மேல் தான் எழுந்தது என்று நாம் மயங்கத் தேவையில்லை. அறுபதுகளுக்குப் பின் எழுந்த இந்தப்புது உத்வேகம் மலையகம் என்கின்ற உணர்வுடனும். மலையகச் சமூகம் என்கின்ற உருவாக்கத்துடனும் மேலெழுந்த ஒன்று.

மலையக சமூகத்தின் மூத்த பரம்பரையினர் அல்லது மூத்த பரம்பரையினரின் மிகவும் அதிகமானோர் கல்வி அறிவு குறைந்தவர்கள் அல்லது அற்றவர்கள். எனவே இந்தச் சமூகத்தை உயர்த்துகின்ற, முன்னேற்றுகின்ற, மதிக்கின்ற செயற்பாடுகள் படித்த இளந்தலைமுறையினரையே சார்ந்திருந்திருந்தது.

ஒரு சமூகத்தின் உயர்வும், முன்னேற்றமும் அச்சமூகத்தினர் அதனை மதிக்கும் போதும் தம் சமூகக்குறைபாடுகளை தாங்களே உணர்ந்து அதனைக் களைய முற்படும்போதுமே ஏற்பட முடிகின்றது.

ஆனால் படித்த இளைஞர்கள் தோட்டத்துச் சமூக வாழ்க்கையில் பங்கு பற்றுவதை விலக்கிக் கொள்வதும் ஒதுக்கிக் கொள்வதுமாகவே இருந்த காலம் ஒன்றிருந்தது. படித்த மலையக வாலிபர்கள் தங்களுக்கும் இந்த மக்களுக்குமிடையிலான ஒரு சமூக தூரத்தை – (social distance)ஏற்படுத்திக் கொண்டனர். இதை 50 கள் வரையிலான காலமாக நாம் கொள்ளலாம்.

1931 ல் கோ.நடேசய்யர் எழுதி இருந்த திருராமசாமி சேர்வையின் சரிதம் பற்றி ஆரம்பத்திலேயே குறிப்பிட்டிருந்தேன்.

ஐயரிடம் இருந்தது ஒரு அசைக்க மடியாத இந்திய உணர்வு. தஞ்சாவு+ர்க் காரரான நடேசய்யர் இந்திய வியாபாரிகள் சங்கம் என்னும் தன்னுடைய அமைப்பிற்கு ஒரு கிளைச்சங்கத்தைக் கொழும்பில் அமைத்திருந்தார். அதன் ஆண்டு விழாவுக்காகவும் தன்னுடைய வர்த்தக மித்திரன் பத்திரிகைக்கு சந்தா சேகரிப்பதற்குமாகவே கொழும்பு வந்தவர்.

அவரின் கொழும்பு வருகையை அறிந்திருந்த ‘தஞ்சை ஜில்லா காங்கிரஸ் கமிட்டி’ அய்யரை அணுகி அப்படியே தோட்டப் பகுதிகளுக்கும் சென்று இந்தியத் தொழிலாளர்களின் பொருளாதார நிலைமை பற்றியும் ஆராய்ந்து கொண்டுவரும்படிக் கேட்டிருந்தது.

இந்த அறிக்கை சமர்ப்பிப்பதற்காக ஒரு தொகை வேதனமும் அய்யருக்கு காங்கிரஸ் வழங்கியிருக்கும்.

தன்னுடைய கொழும்பு வேலைகளை முடித்துக் கொண்டு அய்யர் தோட்டப் பகுதிகளுக்கும் விஜயம் செய்தார்.

அத்துமீறல் தடைச்சட்டம் வெளியார் தோட்டங்களுக்குள் பிரவேசிப்பதைத்தடுத்தது.

சேவை ஒப்பந்தக் கட்டளைச் சட்டம் தோட்ட மக்கள் வெளியே செல்வதைத் தடுத்தது.

ஒரு வகையில் ஒவ்வொரு தோட்டமும் ஒரு திறந்தவெளிச் சிறையாகவே இருப்பதையும், போதிய பராமரிப்பின்றி. பாதுகாப்பின்றி, சுகாதார வசதிகளின்றி லாபத்தையே குறிக்கோளாகக் கொண்ட துரைமார்களினதும் கங்காணிகளினதும் அட்டூழியங்களினால் பாதிப்புற்று போதிய வருமானமின்றி அல்லலுறும் தோட்ட மக்கள் பற்றி இந்த முதல் விஜயத்தின்போதே அய்யர் அறிந்துக் கொண்டார். இந்தியா, சென்று மறுபடியும் இலங்கையில் தொடர்ந்து வசிக்கும் எண்ணத்துடன் கொழும்பு வந்த போது கொழும்புவாசிகளான இந்தியர்களுடன் சேர்ந்து இயங்கினார். பத்திரிகைகள் வெளியிட்டார். ஏ.ஈ.குணசிங்கவுடன் இணைந்து தொழிற்சங்கம் நடத்தினார். இப்படியே ஒரு ஆறேழு ஆண்டுகளின் பின் ஏ.ஈ. குணசிங்க அவர்களின் இந்திய எதிர்ப்பு பிரசாரங்களினால் ஆத்திரமடைந்தார். அவருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்யவும் செயற்படவும் துணிந்தார். முப்பதுகளின் காலப்பகுதியில் ஏ.ஈ.குணசிங்க டி.எஸ்.சேனானாயக்கா, சி.டபிள்யு.டபிள்யு கன்னங்கரா போன்றவர்களின் இந்திய எதிர்ப்புப் பிரச்சாரங்கள் பற்றி குமாரி ஜெயவர்தனாவின் நூல் விரிவாகப் பதிவு செய்கின்றது.

வீரகேசரியின் ஆசிரியராக இருந்த எச்.நெல்லையாவின் சோமாவதி அல்லது இலங்கை இந்தியர் நட்பு என்னும் நாவல் சிங்கள அரசியல்வாதிகளின் இந்தியத் துவேஷம் பற்றி யதார்த்த பு+ர்வமாக விமர்சனம் செய்கின்றது. இந்திய உணர்வு மிக்கவரான நடேசய்யர் குணசிங்கவுடன் முரண்பட்டுக் கொண்டார். தொழிற் சங்கத்திலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

ஏ.ஈ குணசிங்கவுடன் ஏற்பட்ட முரண்பாடே இவரை ஹட்டனுக்கு நகர்த்தியது அல்லது தள்ளியது. தோட்ட மக்களை மையமாகக் கொண்டே தான் பலம் பெற வேண்டும் என்னும் நினைவுப்பொறியைப் பற்ற வைத்ததே, கொழும்பையும் கொழும்பை அண்டிய பகுதிகளையும் சேர்ந்த சிங்கள மக்களின் பலத்தால் விஸ்வரூபம் கொண்டு நின்ற ஏ.ஈ.குணசிங்காதான்.

தலைநகர் கொழும்பிலிருந்து மலையகம் நோக்கித் தள்ளப்பட்ட அய்யர் தொப்பித் தோட்டம் என்று பெயர் கொண்ட ஹட்டனைத் தனது செயற் தளமாகக் கொண்டார். இலங்கை இந்தியத் தொழிலாளர் சம்மேளனத்தை உருவாக்கினார். சகோதரி பிரிண்டர்ஸ் என்னும் அச்சுக் கூடத்தை ஆரம்பித்தார்.

தொழிலாளர் மத்தியிலுள்ள அநீதிகளையும், அவர்களுக்கெதிரான அராஜகங்களையும் அச்சமின்றியும் ஊக்கத்துடனும் எடுத்துக் காட்டினார்.

டொனமூர் ஆணைக்குழுவின் செயற்பாடுகள், சர்வஜன வாக்குரிமை போன்ற செயற்பாடுகள் ஒரு அரசியல் விழிப்புணர்வை மலையத்தில் வேண்டி நிற்கின்றது. தோட்ட மக்களின் பலத்துடன் அதை வெகு கரிசனையுடன் பயன்படுத்திக் கொண்டவர் கோ.நடேசய்யர்.

1936 ஆம் ஆண்டு நடந்த இரண்டாவது பொதுத்தேர்தலில் ஹட்டனில் இருந்து கோ.நடேசய்யர் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போரினால் 1941 இன் தேர்தல் பின் போடப்பட்டது. மேலும் ஒரு 5 வருடமாக 10 ஆண்டுகள் சட்டசபை அங்கத்தவராக இருந்தவர் நடேசய்யர்.

1920 க்குப் பின்னர் ஒருகால் நூற்றாண்டு காலம் மலையக எடுத்துலகில் ஒரு பிரதான இடம் வகிப்பவராக கோ.நடேசய்யர் இருந்திருக்கின்றார்.

தமிழிலும் ஆங்கிலத்திலுமாக ஏராளமான பத்திரிகைகள் வெளியிட்டார்.

பத்துக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டார்.

நீ மயங்குவதேன்
வெற்றியுனதே
தொழிலாளர் அந்தரப் பிழைப்பு
தொழிலாளர் சட்டப்புத்தகம்
Pடயவெநச சுயத
வுhந ஊநலடழn ஐனெயைn ஊழபெசநளள போன்றவை குறிப்பிடக் கூடியவை. எல்லா நூல்களுமே கட்டுரை வடிவிலானவையே.

உறங்கிக் கிடக்கும் ஒரு சமூகத்தைத் தட்டி எழுப்பிவிடத்துணியும் அறிவு ஜீவிகளுக்கு எழுத்து, பத்திரிகைத் தொழில், நூல்வெளியீடு ஆகியவற்றுடன் நெருக்கமான தொடர்பு எல்லாக் காலங்களிலுமே இருந்து வந்துள்ளது! எல்லா நாடுகளிலுமே இருந்து வந்தள்ளது! நடேசய்யரும் அதற்கு விதிவிலக்கல்ல.

‘தமிழ் நாட்டு இளைஞர்களை உறக்கத்திலிருந்து தட்டி எழுப்பும் அருமையான நூல் என்னும் முன் அட்டைக் குறிப்புடன் அகவெழுச்சி நூல்களை வெளியிட அய்யர் விரும்பிச் செயற்பட்டார்.

ஒரு மக்கள் கூட்டத்தின் எழுச்சிக்கு, புறநிலைச் செயற்பாடுகள் மட்டும் போதாது. அகநிலை செயற்பாடுகளும் அவசியம் என்பதை அய்யர் உணர்ந்தே இவைகளை வெளியிடத் தொடங்கினார்.

இந்த வரிசையின் முதல் நூல் நீ மயங்குவதேன். 1931 ல் வெளிவந்த நூல் இது.

இரண்டாவது நூல் வெற்றி உனதே.

1947 ல் வெளிவந்தது. இரண்டு நூல்களுமே ஹட்டன் சகோதரி பிரஸ் வெளியீடுகளே. இந்த இரண்டாவது நூல் வெளிவந்த அதே 47 ல் கொழும்பில் அய்யர் அமரர் ஆனார்.

தன்னுடைய இடைவிடாத பிரசன்னத்தால் ஆற்றல் மிகு பேச்சால் துண்டுப்பிரசுரங்களால் மீனாட்சியம்மாளின் பாடல்களால், தொழிற்சங்க நடவடிக்கையால் ஒரு கால் நூற்றாண்டு காலம் மலையகத்தை ஆட்கொண்டிருந்தவர் கோ.நடேசய்யர்.

இவர் எழுதி வெளியிட்ட ‘தோட்ட முதலாளிகளின் ராஜ்யம்’ என்னும் நூல் தோட்ட முதலாளிகளாகிய வௌளைத்தோல் வீரர்களை கூண்டிலேற்றி விசாரணை செய்தது.

இந்த நூல் மக்களிடம் செல்லாமல் தடுப்பதற்காக நூற்றுக்கணக்கான நூல்களை வாங்கி தீயிலிட்டுக் கொழுத்தினார்கள் துரைமார்கள் என்று நடேசய்யரின் சாதனைகள் என்னும் தனது கட்டுரையில் குறிக்கின்றார் சி.வி.வேலுப்பிள்ளை அவர்கள்.

கோ.நடேசய்யரின் பணிகளையும் செயற்பாடுகளையும் பரவலாக வெளிக்கொணர்ந்த – அறிமுகப்படுத்திய பெருமையை நாம் மலையகக் கலை இலக்கிய பேரவைக்கும் அதன் தலைவர் சாரல்நாடனுக்கும், செயலர் அந்தனி ஜீவாவுக்கும் கொடுக்கலாம்.

தேச பக்தன் கோ.நடேசய்யர் பத்திரிகையாளர் கோ.நடேசய்யர் என்னும் இரண்டு வரலாற்று ஆய்வு நூல்களைத் தந்துள்ளார். சாரல் நாடன் அவர்கள்.

பாரதி பற்றி இலக்கிய ரிதியாக ஆய்வு செய்யும் அறிஞர்கள் ‘பிரிதொரு காலகட்டத்தில் பாரதி தோன்றி இருப்பாரேயானால் அவரிடம் இருந்து இலக்கிய உலகு இன்னும் நிறைய பெற்றிருக்கும் என்று கூறுவதுண்டு.

சுதந்திரப் போராட்ட காலமாக பாரதியின் காலமும் இருந்து விட்டதால் ‘உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற பொதிலும் அச்சமில்லை அச்சமில்லை என்றும்… நமக்குத் தொழில் கவிதை – நாட்டுக்குழைத்தல் என்றும் வீராவேசம் பாடும் புரட்சிக்கவியாகவும் பாட்டெழுவதும், ஓடுவதும் ஒளிவதுமாக ஒரு பிறவிக் கலைஞனாக செயற்படமுடியாது போய்விட்டதென்பர்.

இதை நாம் நடேசய்யருக்கும் பொருத்திப் பார்க்கலாம்.

1920 க்குப் பின்னர் எழுத்துலகில் பிரதான இடம் வகிக்கும் அய்யரை நாம் இலக்கியவாதியாகக் கொள்ள முடியாவிட்டாலும் அவர் வெளியிட்ட நமது மக்கள் பற்றிய நூல்கள் சிந்திக்கத் தெரிந்தவர்கள் மத்தியில் பெரும் செல்வாக்கைக் கொண்டிருந்தது’ என்று குறிக்கின்றார் அமரர் கார்மேகம் அவர்கள்.

1931 ல் வெளியிடப்பட்ட நீ மயங்குவதேன் என்னும் நூல் 11 அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. முன் அட்டைக் குறிப்பைப் போலவே உறக்கத்தில் இருக்கும் இளைஞர்களை தட்டி எழுப்புகின்ற பிரச்சாரத்தையே மையமாகக் கொண்ட கட்டுரைகள் இவைகள்.

இதன் கடைசிக் கட்டுரை தான் திரு.ராமசாமி சேர்வையின் சரிதம்.

‘ஒருவன் தன் உழைப்பால் எவ்விதம் உயர்நிலையை அடையலாம் என்பதைப் பற்றி விளக்க ஒரு நண்பரது சரித்திரத்தை சொல்ல விரும்புகிறேன். ஏழ்மையில் பிறந்து ஏழ்மையில் வளர்ந்து கல்வி இல்லாதிருந்தும், பிறர் உதவியின்றி உற்றார் உறவினரை விட்டுப்பிரிந்து அந்நிய நாட்டில் தன் சுயமுயற்சியால் உயர்நிலையை அடைந்த திரு ராமசாமி சேர்வையின் சரிதத்தைக் கேள்….’ என்னும் முன்னுரையுடன் தொடங்குகிறது கதை. அதேபோல் கடைசியில் ஒரு பின்னுரையும் இருக்கிறது.

இக்கட்டுரையில் அய்யர் சேர்த்திருக்கும் முன்னுரை பின்னுரைகளை அகற்றிவிட்டால் இது முழுமை பெற்ற ஒரு அருமையான சிறுகதை.

மு.நித்தியானந்தன் அவர்கள் வீரகேசரியின் தோட்ட மஞ்சரியில் மலையகத்தின் முதல் கதையாக இதைக் கொள்ளலாம் என்ற குறிப்புடன் அந்தக் கடைசிக் கட்டுரையைப் பிரசுரித்திருந்தார். ராமசாமி சேர்வையின் சரிதம் என்னும் தலைப்புடன்.

1996 ஆம் ஆண்டு, மாத்தளைக் காரரும் தலைநகர் கொழும்பில் வசித்தவருமாகிய துரைவிஸ்வநாதன் அவர்கள் துரைவி என்னும் பதிப்பகத்தை டொமினிக் ஜீவா அவர்களின் ஆலோசனையின் பேரில் ஆரம்பித்தார். உருவாக்கினார்.

நூல் வெளியீட்டில் மிகவும் பின் தங்கியுள்ள மலையகத்திலிருந்து மிகுந்த உற்சாகத்துடன் நூல்கள் வெளியிடத் தொடங்கினார். திருவாளர்கள் மாத்தளை கார்த்திகேசு, மாத்தளை சோமு, டொமினிக் ஜீவா ஆகியோருடனான கலந்துரையாடலின் பின் அவர் என்னை அணுகினார். வரச்சொன்னார். மலையகச் சிறுகதைகளை ஒரு தொகுதியாகப் போடப்போவதாகவும், தொகுப்புப் பணிக்கு என்னால் உதவி செய்ய முடியுமா என்று கேட்டார். விஷயம் மகிழ்ச்சியானது தான். அனால் நடக்க வேண்டுமே. 1996 என்றால் ஒரு முப்பது முப்பத்தைந்து வருடம் இந்த எழுத்துலகத்துக்குள் கிடந்தவன் நான். ஒரு ஆர்வத்தடன் இப்படிப் புத்தகம் போடுகிறேன் என்று கிளம்பி, கதைகளுடன் காணாமற் போன எத்தனைப் போரை நான் கண்டிருக்கிறேன். பார்ப்போம் என்று கூறிவிட்டு வந்தேன் ஆனாலும் துரை விஸ்வநாதன் அவர்கள் என்னை விட வில்லை. அவருடைய தொந்தரவு தாங்காமல் கதைகளைத் தேடிச் சேகரித்தேன். நிறைய தடவைகள் அவருடன் கலந்துரையாடினேன். ஒரு தடவை கூறினார் ஆண்டு வாரியாக மலையகத்தின் முதல் சிறுகதையிலிருந்து போடுவோமே என்றார்.

எனக்கும் ஒரு பொறி தட்டியது. மு.நித்தியானந்தன் அவர்கள் மலையகத்தின் முதல் சிறுகதையாக இதைக் கொள்ளலாம் என்று பிரசுரித்திருந்த நடேசய்யரின் சிறுகதையைத் தேடினேன். கிடைக்க மறுத்தது. தேசாபிமானி ஆசிரியர் பி.ராமநாதன் அவர்கள் எனது நண்பர். கே.கணேஷ் அவர்கள் கொழும்பு வரும்போது ராமநாதனுடன் தான் என்னைப் பார்க்க வருவார். நடேசய்யர் கதை பற்றிக் கூறினேன். கவலையேபடாதீர்கள் என்று கூறியவர் நடேசய்யரின் நீ மயங்குவதேன் நூலைக் கொண்டு வந்து கொடுத்தார். 1931 ல் பிரசுரமான கோ.நடேசய்யரின் ராமசாமி சேர்வையின் சரித’த்துக்கு பிறகு 1946 ல் கே.கணேஷ், 54 ல் ரஃபேல் 60 ல் பொ.கிருஸ்ணசாமி 63 ல் நமது இர சிவலிங்கத்தின் முன்னவன் சொத்து – என்று 33 மலையகச் சிறுகதைகளைத் தொகுத்துக் கொடுத்தேன்.

தமிழ்ச் சிறுகதையின் மூலவர்களாக மூவரைக் குறிக்கின்றனர் சிறுகதை வரலாற்றாசிரியர்கள். வ.வே.சு.அய்யர், பாரதி, மாதவையா என்று.

தமிழ் சிறுகதையின் தந்தை என்று போற்றப்படுகின்ற வ.வே.சு அய்யர் எட்டுக் கதைகளே எழுதியிருக்கின்றார். அவைகளில் ஆறு கதைகள் புராணங்களிலிருந்தும் காப்பியங்களிலிருந்தும் எடுத்துக் கையாளப்பட்டவை. லைலி மஜ்னு – அனார்கலி, மங்கையர்க்கரசியின் காதல் போன்றவை. தற்கால நடைமுறைகள் பிரச்சினைகளைக் கருவாகக் கொண்டு இரண்டு கதைகளையே ஆக்கி இருக்கின்றார் ஒன்று குளத்தங்கரை அரசமரம் மற்றது கமல விஜயம்.

அய்யருடைய பெரும்பான்மையான கதைகளுக்கு அவர் ஒரு முன்னுரை கொடுப்பதுண்டு. சூசிகை என்னும் பெயரில். இந்த சூசிகை பற்றி ஐயர் கூறுகையில் ‘ரீதி புதிதென்பதால் சூசிகை சேர்க்கப்படுகின்றது. சூசிகையைப் படிக்காமல் கதையைப் படித்தால் சுவை அதிகமாக உணரப்படும் என்றாலும் கதைப் புரிதலுக்காக சூசிகை சேர்க்கப்படுகிறது. என்கிறார் வ.வே.சு.அய்யர்.

கதையின் சுவை குன்றினாலும் கதைப்புரிதலே முக்கியம் - என்கின்றார் அவர்.

கோ.நடேசய்யரின் ராமசாமிச் சேர்வையின்’ கதைக்கான முன்னுரையும் வ.வே.சு. அய்யரின் சூசிகை போன்றதே என்று என்னுடைய மலையகச் சிறுகதை வரலாற்றில் விளக்கம் செய்திருக்கிறேன்.

ஈழத்துத் தமிழ்ச் சிறுகதையின் மூலவர்களாக மூவர் கொள்ளப்படுகின்றர். சி.வைத்தியலிங்கம் இலங்கையர்க்கோன் சம்பந்தன் ஆகியோரே அந்த மூவர்.

ஈழத்துச் சிறுகதை மூலவர்கள் பற்றி பேராசிரியர் கைலாசபதி குறிக்கும்போது ‘நமது முன்னோடிகள் சிறுகதையின் உருவத்திலும் உரைநடையிலுமே அதிக கவனம் செலுத்தினர். தென்னிந்திய சஞ்சிகைகளிலேயே இவர்கள் கூடுதலாகவும் ஈடுபாட்டுடனும் எழுதியமையால் ஈழம் என்கின்ற இட வரையறைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. இவர்களைப் பொறுத்தவரையில் இலக்கியத்துக்கும் வாழ்வுக்கும் நேரடியான தொடர்பு இருக்கவில்லை. என்றிருக்கிறார்.

இவைகளுக்கு அப்பாற்பட்டவராகவே கோ.நடேசய்யர் இருக்கின்றார். கதை படித்துக் கதை எழுத வந்தவர் அல்ல அவர். வ.வே.சு.ஐயர் பாரதி போல் அவர் ஒரு சீர்த்திருத்தக்காரர். அரசியல் விழிப்புணர்வுக்காகப் பிரச்சாரம் செய்ய தனது எழுத்தைப் பயன்படுத்தியவர். ஆனாலும் நமது ஆய்வாரளர்கள், வரலாற்று ஆசிரியர்கள் அவரைக் கண்டு கொள்ளவில்லை என்றும் எனது மலையக சிறுகதை நூலில் குறிப்பிட்டிருந்தேன்.

மலையகச் சிறுகதைகள் வெளியீட்டு விழாவில் பேசிய திரு வன்னியகுலம் அவர்கள் ஈழத்துத்தமிழ் சிறுகதையின் மூலவர் மூவரா அல்லது நடேசய்யரையும் சேர்த்து நால்வரா என்னும் கேள்வியை இந்த நூல் மூலம் தெளிவத்தை கிளப்புகிறார் என்று கூறினார்.

‘என்னுடைய கட்டுரைகளில் நடேசய்யரைச் சேர்த்து நால்வர் என்றே எழுதியுள்ளேன்’ என்று ஒரு சில பேராசிரியர்கள் கூறத் தொடங்கினர். பல்கலைக்கழங்களிலும் இது பற்றிய பேச்சுக்கள் இடம் பெற்றிருக்கின்றன என்பது தெளிவாகிறது. எழுதப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்ட வரலாறுகள் மீளாய்வு செய்யப்பட வேண்டிய அவசியம் வலியுறுத்தப்பட்டிருக்கிறது.

அய்யரின் காலத்தில் மலையக விழிப்புணர்வுகளுக்கான முயற்சிகள் பெருமளவில் நடந்தன தான் என்றாலும் மலையக இலக்கிய மறுமலர்ச்சி என்பதை அதன் முழு அர்த்தத்துடன் 1960 களிலேயே நாம் கண்டிருக்கிறோம்.

பிந்திய 50 களின் காலம் இர.சிவலிங்கம் அவர்களுடைய காலம். மலையகம், மலைநாடு என்னும் பதங்கள் பிரயோகிக்கப்பட்டு தோட்டக்காடு என்னும் பிரதேசம் பிரபல்யமும் மரியாதையும் கொண்ட காலம். மலையகம் என்னும் ஒரு கோஷத்தை முன்வைத்து இப்பெருந்தோட்ட மக்களுக்கு ஒரு அடையாளத்தைத் தேடித்தர சமூக உணர்வு கொண்ட சிவலிங்கம், செந்தூரன், போன்ற ஒரு சில படித்த மலையக இளைஞர்கள் உத்வேகத்துடன் பங்காற்றிய காலம்.

சமூக மறுமலர்ச்சி இயக்கம் என்பதன் ஒரு துணைவிளைவுதான் இலக்கியம் என்கின்ற உண்மை கல்விமானான அமரர் சிவலிங்கம் அவர்களுக்குள் ஆழமாக நிலை கொண்டிருந்தது. பு+ங்காற்றாய் வீச ஆரம்பித்து அவர் புயலாய் எழுப்பிய கல்வி அலை சிந்திக்கத் தெரிந்த ஒரு படித்த இளைஞர் கூட்டத்தை தோற்றுவித்தது. முப்பதுகளில் நடேசய்யர் காலத்தில் மலையகத்தின் விழிப்புணர்வுகளுக்கான முயற்சிகள் பெருமளவில் நடந்தனதான் என்றாலும் 60 களின் அறிவு ஜீவிகளால் மேற்கொள்ளப்பட்ட சமூக விழிப்புணர்வு முயற்சிகளுக்கும் முன்னையதற்கும் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றன.

இந்திய உணர்வு மிக்க அய்யரின் முயற்சிகள் அரசியல் எழுச்சி சார்ந்தது.

ஏ.ஈ குணசிங்காவின் இந்திய எதிர்ப்புப் பிரசாரத்தால் கோபம் கொண்டே தன்னுடைய பத்திரிகைகளில் குணசிங்கவுக்குக் கெதிரானப் பிரசாரங்களை மேற்கொண்டார்.

இன அகங்காரம் மிகக் கொண்டவரான குணசிங்கவுக்கு கொழும்பிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள சிங்களவர் மத்தியில் பெரும் மதிப்பிருந்தது. சிங்களத் தொழிலாளர்கள் மத்தியில் ஒரு தனிப்பெரும் தலைவராக அவர் திகழ்ந்தார்.

அதேபோல் தானும் ஒரு தனிப்பெரும் தொழிலாளர் தலைவனாகிக் காட்ட வேண்டும் என்னும் வைராக்கியம் மூளைசாலியான நடேசய்யரை முடுக்கிவிட்டது. தனதுபலம் தோட்டத்து மக்களை மையமாகக் கொண்டு வளர வேண்டியது என்பதை உணர்ந்தார். மலையகம் நோக்கிய அய்யரின் நகர்வு மையம் தன்னைப் பலப்படுத்திக் கொள்ள வேண்டும், தன்னை தனது தொழிற்சங்கத்திலிருந்து விரட்டியடித்த ஏ.ஈ.குணசிங்காவுக்கு ஒரு பாடம் புகட்ட வேண்டும் என்பதிலேயே தங்கியிருந்தது.

அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சம்மேளனம் என்னும் தொழிலாளர் சங்கமமைத்து மக்களைத் திரட்டினார்.

1936 ல் நடந்த பொதுத் தேர்தலில் ஹட்டன் தொகுதியில் போட்டியிட்டு வென்று சட்டசபை உறுப்பினரானார்.

பெருந்தோட்ட மக்களைப் பயன்படுத்தித் தங்களை முன்நிலைப் படுத்திக் கொள்ளும் தொழிற்சங்க மய அரசியலை மலையகத்தில் அறிமுகப் படுத்தியவரே அய்யர்தான்.

அவருடைய சகல போராட்டங்களும் அரசியலையும், பொருளாதாரத்தையும் மையமாகக் கொண்டதாகவே இருந்தது.

“1960 – 70 இடைப்பட்ட காலப்பகுதியில் ஐக்கிய நாடுகள் சபையில் அபிவிருத்தித் திட்டமிடல்கள் யாவும் பொருளாதாரத்தை மையமாகக் கொண்டே அமைந்திருந்தன. ஆனால் நடைமுறையில் தென்கிழக்காசிய நாடுகளில் இதன் பிரயோகம் வெற்றியளிக்கவில்லை. எனவே ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு பொருளாதாரம் மட்டும் முக்கிய குறிக்கோள் அல்ல. – சமூக நிலைமைகள், சமூக நிர்வாகம், - சமூக பிரச்சினைகள் என்பனவும் சீர்த்திருத்தப்படும்போதே அது நாட்டில் அபிவிருத்தியை ஈட்டித்தரும் என்பதை உணர்ந்து இன்று சமூக நிலைமைகளில் கவனம் செலுத்தி வருகின்றது.” (ரு.N.ழு ர்யனெ டீழழம.1972) இது ஒரு நாட்டின் அபிவிருத்திக்கு மட்டுமல்ல ஒரு சமூகத்தின் அபிவிருத்திக்கும் பொருத்தமடையது. 1974 இல் வெளிவந்த “இந்திய தோட்டத் தொழிலாளர்” ஒரு சமூகவியல் நோக்கு என்னும் ஆய்வு இதை குறிப்பிடுகிறது. (வுhந Pடயவெயவழைn றுழசமநசள யு ளுழஉழைடழபiஉயட ளுவரனல)

60களுக்குப் பிந்திய செயற்பாடுகள், கல்வி. அபிவிருத்தியை முன்வைத்து இம்மக்களை சமூக ரீதியாகவும் தேசிய ரீதியாகவும் எழுச்சி கொள்ளச் செய்தவை.

அறுபதுகளின் பிந்திய இந்த செயற்பாடுகளின் பிதாமகனாகத் திகழ்ந்தவர் அமரர் இர.சிவலிங்கம் அவர்கள். ஈழத்து இலக்கிய வரலாற்றில் 1956 ஐ தற்கால இலக்கியத்தின் எல்லையாகக் கொள்ளலாம். இந்த ஆண்டு பதவிக்கு வந்த ளு.று.சு.னு பண்டாரநாயக்காவின் அரசாங்கம் கலாசாரத்துறையில் காட்டிய ஆர்வமும் தேசிய மொழிகளை உயர்கல்விக்குரிய போதனாமொழிகளாக்கப்பட்ட பெரு மாற்றமும் அதன் விளை பயன்களுமே அந்த ஆண்டை தற்கால இலக்கியத்தின் எல்லையாகக் கொள்வதற்குக் காரணமாய் ஆகின்றன.

இந்த மாற்றங்களின் விளைச்சல்கள் சிங்களக் கலை இலக்கியத்துறைகளில் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது. வடகிழக்கு மாகாண எழுத்தாளர்களிடையேயும் தொற்றி வளர்ந்தது.

மலையகத்தின் சமூகச் சூழ்நிலை பொருளாதாரத் தாழ்வு அரசியல் அநாதை நிலை ஆகிய மும்முனைத் தாக்குதலால் அழுந்திப் போய்க்கிடந்த மலையகத்தின் கலை இலக்கிய முயற்சிகள், மற்றப் பிராந்தியங்களின் கலைகலாசார முயற்சிகளின் தரத்தை எட்டவில்லை.

இந்த அவலச் சூழ்நிலையிலும் மலைநாட்டவரின் மன அவலங்கள் கவிதைகளாக, கதைகளாக, நாவலாக மலர்ந்தன. ஓர் ஆற்றல் மிகு சமதாயத்தின் குரலாக இவை அமைந்திருந்தன என்றாலும் உரத்து ஒலிக்க முடியவில்லை.

உரத்து ஒலிக்காத இம் மலையக எழுத்து முயற்சிகள் பற்றி யாரும் கதைக்கவில்லை. வாய்திறந்து ஒன்றுமே பேசவில்லை.

இந்த ஆதங்கம், காலம் காலமாக நாங்கள் புறக்கணிக்கப்பட்டவர்கள்தானா என்னும் ஆத்திரம் படித்த மலையக இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டிருந்தது.

இவர்கள் மலையகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துக் கொண்டவர்கள் கூட இல்லை என்றாலும், மேற்கூறிய ஆதங்கமும் ஆத்திரமும் நான்கு வருட கர்ப்பவாசத்தின் பின் ஒரேவிதமான நாடித்துடிப்புடன் சமூக உணர்ச்சிப் பிரவாகம் பொங்க, ஒன்றுபட்ட ஓர் உத்வேகத்துடன் காலத்தின் குரலாக 1960 ஆம் ஆண்டளவில் கிளம்பியது.

இதன் முதற்குரலாக, செந்தூரனின் ‘உரிமை எங்கே’ யைக் கொள்ளலாம். அப்போது மிகப் பிரபலமான பத்திரிகையாக இருந்த ‘கல்கி’ இலங்கைக்கென நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற இந்தக் கதை. மலையகத்தின் எரியும் பிரச்சினையான குடியுரிமைப் பிரச்சினையை மையமாகக் கொண்டதாகும். சமூக. பொருளாதார, அரசியல் ரீதியில் மிகவும் பின் தள்ளப்பட்டிருந்த தோட்டத் தொழிலாளி ஒருவனின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை விளக்குகிறது இச்சிறுகதை.

“பறங்கிமலைத் தோட்டம் ஏழாம் நம்பர் லயம் சுப்பையாவின் காம்பிரா, கொழுந்து கணக்கப் பிள்ளையிடம் கைமாற்றாக வாங்கி வந்திருந்த அலாரம் விடியற்காலை மூன்று மணிக்கக் கணீரென்று ஒலித்தது” என்று ஆரம்பிக்கும் செந்தூரனின் உரிமை எங்கே நேராகவே ஒரு தோட்டத்திலிருந்து, அதிகாலையிலேயே எழுந்து பயணம் மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக, கணக்கப்பிள்ளையிடம் இருந்து அலாரக் கடிகாரத்தை இரவலாக வாங்கி வைத்திருக்கும் அவர்களுடைய வாழ்நிலை விளக்கத்துடன் தொடங்குகிறது.

பறங்கிமலைத் தோட்டத்திலிருந்து பதினாறு மைல் தொலைவில் உள்ள கண்டி பிரஜா உரிமை ஆபீசுக்கு சத்தியப் பிரமாணம் செய்ய வரும்படி அவருக்குக் கடிதம் ஒன்று வந்திருக்கிறது.

இரவு முழுக்க அவருக்குச் சந்தோஷம் நிலைகொள்ளவில்லை. அதிகாலை மூன்று மணிக்கே அலாரம் வைத்து எழுந்து, மனைவியையும் மகளையும் எழுப்பி….

‘இனி யார் என்னைத் கள்ளத்தோணி என்று கூற முடியும்? நாளை முதல் நானும் இந்த நாட்டின் பிரஜை’ என்று மகிழ்ந்து கிடக்கின்றார்.

பிரஜா உரிமை சட்டம் வந்தபோது தானும் எழுதிப்போட்டது. ஆறேழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்கள் தோட்டத்துக்கு வந்து விசாரணை நடத்தியது… கடலே தெரியாத தன்னை கள்ளத்தொணிக் காரனாகவே சந்தேகித்து அவர்கள் கேட்ட கேள்விகள் ‘சரியான ருசு இல்லையே’ என்று கூறிவிட்டுப் போனது.. பிறகு… பிறகும் இரண்டொரு தடவை விசாரணைக்குக் கூப்பிட்டது… ஆகியவை அவருடைய மனதில் எழுகிறது. பிரஜா உரிமை ஆப்பீசுக்குப் போய்ச் சேர்ந்தால்… ‘உன்னை யார் வரச் சொன்னது. உனக்குப் பிரஜா உரிமை இல்லையே. நாங்கள் வரச் சொன்ன சுப்பையாவே வேறு….” என்று சர்வ சாதாரணமாகக் கூறி ‘நீ போ’ என்கின்றனர்.

பிரஜா உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது 1948 இல். அதாவது இலங்கைக்குச் சுதந்திரம் கிடைத்த அதே ஆண்டு. அந்த ஆண்டில்தான் இந்த மக்கள் அரசியல் அநாதைகள் ஆக்கப்பட்டனர்.

இலங்கைப் பிரஜா உரிமைக்காக அப்போதே எழுதிப் போட்ட லட்சக்கணக்காண தோட்டத்து மக்களில் இந்தச் சுப்பையாவும் ஒருவர்.

‘சுப்பையா நாயக்கருக்கு அன்று நிலை கொள்ளவில்லை. இருக்காதா பின்னே… எத்தனை ஆண்டுகள்? ஒன்றா இண்டா? பத்தாண்டுகள்! எழுதிப் போட்டு இத்தனை ஆண்டுகளுக்குப் பின் இப்போது தான் கண்ட்ரோலிரிடமிருந்து கடிதம் வந்திருக்கிறது…’ என்று ஓரிடத்தில் எழுதுகின்றார் செந்தூரன்.

இலங்கைப் பிரஜா உரிமைக்காக விண்ணப்பம் கோரும் ‘இந்திய பாகிஸ்தானிய வதிவிடப் பிரஜா உரிமை சட்டம் 1949 இல் அமுல்படுத்தப்பட்டது.

‘பத்தாண்டுகள் எப்படியோ ஓடி மறைந்து விட்டன’ என்னும் கதையின் கூற்றுப்படி நோக்கினாலும் 1959 வந்து விடுகிறது. இந்தக் கதை பரிசுக் கதையாகக் கல்கியில் பிரசுரம் பெற்ற ஆண்டு 1960. ஆகவேதான் அறுபதுகளில் மலைநாட்டில் நீண்டதொரு நெடுந்துயிலின் பின் சிலிர்த்துக் கொண்டெழுந்த இலக்கியப் புத்துணர்ச்சியின் முதற்குரலாக இச்சிறுகதையைக் கூறலாம் என்று ஆரம்பத்தில் கூறினேன்.

மலைநாட்டில் மந்தமடைந்திருந்த இலக்கிய முயற்சிகள், உயிர்த்துடிப்புடன் செயல்பட ஆரம்பித்துள்ளதற்கான அடையாளங்களை இந்தக் காலப் பகுதியிலேயே பரவலாக நாம் காண்கின்றோம்.

வீரகேசரி ‘தோட்ட மஞ்சரி’ என்னும் பகுதியை ஆரம்பித்து மலையக எழுத்துக்கு ஒரு பகிரங்கக் களம் அமைத்தமை சிறுகதைப் போட்டிகளை மலையக எழுத்தாளர்களுக்காக ஏற்பாடு செய்தமை ‘மலையக மக்கள் மன்றம்’ என்னும் பகுதியை தினகரன் ஆரம்பித்தமை மலைமுரசு, மலைப்பொறி என்று மலையகச் சஞ்சிகைகளின் தோற்றம் ஆகிய அனைத்தும் ஒரு காலகட்டத்தின் விடிவௌளியாக அமைந்தன. இவை அனைத்திற்கும் நேரடியாகவும், மறைமுகமாகவும் காரண கர்த்தாவாக விளங்கியவர் அமரர் இர.சிவலிங்கம் அவர்கள் என்பது முக்கியமாகும்.

ஆகவே மலையகத்தின் இலக்கிய வரலாற்றில் 1960 ஆம் ஆண்டையே தற்கால எல்லையாக நாம் கொள்ளலாம்.

ஒரு மலையகத்துச் சிறுகதைக்கு லட்சங்களில் அழியும் பிரபல பத்திரிகையான கல்கி பரிசளித்துக் கௌரவித்தமை, அப்போதுதான் எழுத்துலகில் ஈடுபடத் தொடங்கிய மலையக எழுத்தாளர்களுக்கு ஒரு முனைப்பான உந்து சக்தியாக அமைந்தது.

மலையகத்தின் இந்த இலக்கிய விழிப்புக்கும் கலாசார மறு மலர்ச்சிக்கும் உருவம் கொடுத்தவைகளாகப் பின்வருபவற்றை நாம் கொள்ளலாம்.

மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் தொற்றம்
வீரகேசரியின் தோட்ட மஞ்சரி
இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் பிரதேச இலக்கிய மற்றும் மண்வாசனைப் பிரசாரத்தின் அழுத்தம்
மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் தோற்றமும் அதன் சிறுகதை போட்டிகளும்
மலையகச் சஞ்சிகைகளின் வரவு

முப்பதுகளின் இந்த இலக்கிய முயற்சிகளுக்கு ஓர் ஐம்பதாண்டு காலத்துக்கு முன்பதாக 1869 இல் மலையகத்தில் இருந்து எழுந்த முதல் நூல் என்னும் பெருடையுடன் வந்திருக்கிறது. ‘கோப்பிகிருஷிக்கும்மி’ என்னும் நூல். இதனை எழுதி வெளியிட்டவர் ஆபிரஹாம் ஜோசப் என்னும் கோப்பித் தோட்டக் கண்டாக்டர். 180 ஆண்டுக்கால மலையக வரலாற்றில் மலையக இலக்கியத்துக்கு 135 ஆண்டுகால சரித்திரத்தைத் தேடிக் கொடுத்த பெருமையும் இந்தக் கோப்பிக்கிருஷிக்கும்மிக்கு உண்டு.

அக்காலத்தில் மலையகத்தில் அச்சுக் கூடங்கள் ஏதும் இல்லாத நிலையில் யாழ்ப்பாணம் ஸ்ட்ராங் அன்ட் ஆஸ்பரி பிரிண்டர்ஸ் என்னும் அச்சகத்தில் இந்நூல் அச்சிடப்பட்டுள்ளது.

‘135 ஆண்டுகளுக்கு முன் எழுந்த மலையகத்தின் முதல் நூல் கோப்பிக்கிருஷிக்கும்மி’ என்னும் தன்னுடைய தொடர் கட்டுரையில் இந்நூலைப் பற்றிய ஒரு விரிவான ஆய்வினைத் தந்துள்ளார் மலையக ஆய்வறிஞர் மு.நித்தியானந்தன் அவர்கள்.

மிக நேர்த்தியாக அச்சிடப்பட்டிருக்கும் இந்நூலின் தலைப்பு யு ஊருஆஆஐ Pழுநுஆ ழுN ஊழுகுகுநுநு PடுயுNவுஐNபு றுஐவுர் வுசுயுNளுடுயுவுஐழுN என்று ஆங்கிலத்தில் அச்சிடப்பட்டுள்ளதாகவும் குpறத்துச் சொல்கின்றார் திரு.நித்தியானந்தன். சமர்ப்பணம்’ என்னும் இந்த நூலுக்கான முன்னுரையும் ஆசிரியர் ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார். ஆங்கிலமும் தமிழும் கலந்தே பிரசுரங்களில் இடம் பெறுவது அக்கால வழக்கம் தான்.

1876 இல் வெளிவந்த தமிழின் முதல் நாவலான ‘பிரதாப முதலியார் சரித்திரத்தி’லும் அதன் முன்னுரையை ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார் வேதநாயகம் பிள்ளை அவர்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் கோப்பித் தோட்டக் குடியேற்றம் பற்றியும் குடியேறிய தென்னிந்தியத் தொழிலாளர்களின் சோகம் மிகுந்த வாழ்வு பற்றியும் ஆதாரபு+ர்வமான மேற்கோள்களுடன் கூறும் ஒரே நூல் டொனோவன் மோல்ட்றிச் (னுழுNயுஏயுN ஆழுடுனுசுஐஊர்) எழுதி வெளியிட்டுள்ள டீஐவுவுநுசு டீநுசுசுலு டீழுNவுயுபுநு என்னும் ஆங்கில நூல்.

‘கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் இலங்கையில் நடத்தப்படும் விதம் வெட்கக் கேடாய் இருக்கிறது என்று டொரிங்டன் தேசாதிபதி கிரே (புசநல) பிரபுவுக்கு எழுதிய அறிக்கையில் தெரிவிக்கின்றார். பலர் பட்டினியால் இறந்துவிட்டிருக்கின்றார்கள் என்று பிரிட்டிஷ் தேசாதிபதியே தெரிவிக்கின்றார்.

‘கஷ்டம் தாங்க முடியாமல் கோப்பித் தோட்டங்களை விட்டு ஓடிய தொழிலாளர்களை, வாரண்டுகள் மூலம் பிடித்து மலை நாட்டின் சிறைக்கூடங்களில் ஆண்கள் பெண்கள் பிள்ளைகள் என்று அடைத்து வைக்கப்பட்டிருப்பதை என் கண்களாலேயே கண்டேன். என்று கண்டி மாவட்ட நீதவான் தோமஸ் பேர்வீக் கூறியதையும் டொனோவன் மொல்ட்றிச் தனது பிட்டர் பெரி பொண்டேஜ் என்னும் நூலில் குறிக்கின்றார்.

சுகமில்லை என்று சாக்குச் சொல்லி திங்கட்கிழமை வேலைக்கு வராமல் நிற்பவர்களை செவ்வாய்க்கிழமை காலை பிரட்டுக்களத்தில் பிடித்து ஜெயிலுக்கு அனுப்பி வைத்தேன். இப்போது ஒழுங்காக வேலைக்கு வருகின்றார்கள் என்று பெருமை பேசுகின்றார். கோப்பித் தோட்டத்துரை ஒருவர்.

கோப்பித் தோட்டத் தொழிலாளர்களின் துயரக்கதைகள் இப்படி இருக்க, கோப்பிக் கிருஷிக்கும்மியில் ஆபிரகாம் ஜோசப் என்ன செய்கின்றார்?

“கோப்பித் தோட்டங்களில் தொழிலாளர்கள் எவ்வளவு சலுகைகளை அனுபவிக்கிறார்கள். எவ்வளவு சந்தோஷமான வாழ்க்கையை அனுபவித்து மகிழ்கின்றார்கள். இங்கு வரும்முன் தம் சொந்தத் தாய்நாட்டில் எவ்வளவு மோசமான வாழ்க்கையை அனுவித்தார்கள். அதனால் இக்கோப்பித் தோட்ட மக்கள் தமது எசமானர்களுக்கு நன்றி விசுவாசம் கொண்டவர்காளய், அவர்களின் முன் பணிவுள்ளவர்களாய் நடந்து கொள்ள வேண்டும். என்று உபதேசிக்கின்றார்.

உடல் உழைப்பில் ஈடுபடும்போதும் ஓய்வின்போதும், அலுப்பை மறந்து உற்சாகம் பெற கோப்பித் தோட்டத் தொழிலாளர்கள் தமக்குள் பாடித் திரியும் பல்வேறு விதமான ஆட்சேபகரமான பாடல்களுக்குப் புதிய மாற்றீடாக இப்பாடல்களை இயற்றியுள்ளேன். இத்துறையில் இந்நூல் முதல் முயற்சி என்றாலும், கோப்பிப் பயிர் செய்கை பற்றிய நடைமுறைபூர்வமான பயன்மிக்க பல தகவல்களை இந்நூல் கொண்டுள்ளது என்பதனையும் பெரு மகிழ்வுடன் கூறிக் கொள்கிறேன். என்றெழுகின்றார் கோப்பிக் கிருஷிக்கும்மி யாத்த ஆபிரகாம் ஜோசப்.

நூலாசிரியரின் இக்கூற்றுக்கள் உண்மைக்குப் புறம்பானவைகளாகவும், நியாயத்தின் பக்கம் நிற்காமல் துரைத்தனத்துக்காரர்கள் பக்கம் நிற்பவைகளாகவும் நாம் காண்கின்றோம். அதேவேளையில் உடல் உழைப்புத் தொழிலாளர்கள் அலுப்புத் தீரப் பாடும் ஆட்சேபகரமான பாடல்களுக்கு ஒரு மாற்றீடாக இப்பாடல்களைப் படைத்திருப்பதாகவும் இவர் முன்னுரையில் குறித்துள்ளார்.

அந்த 1860களில், ஒன்றரை நூற்றாண்டுகளுக்குமுன் கோப்பித் தோட்ட உழைப்பாளர்கள் எந்தவிதமான பாட்டுகளைப் பாடித் திருந்திருப்பார்கள் நாட்டார் பாடல்களைத்தான் பாடியிருப்பார்கள்.

“ஊரான ஊரிழந்தேன் ஒத்தப்பனை தோப்பிழந்தேன்
பேரான கண்டியிலே பெத்ததாய நா மற்தேன்”
என்றும்

‘அடி அளந்து வீடுகட்ட நாம ஆண்டமனை அங்கிருக்க
பஞ்சம் பொழைப்பதற்கு பாற்கடலை தாண்டி வந்தோம்,
பஞ்சம் பொழச்சு நம்ம பட்டணம் போய் சேரலியே”
என்றும்

‘கூனி அடிச்சமலை கோப்பிக்கண்ணு போட்ட மலை
அண்ணனைத் தோத்த மலை அந்தா தெரியுதுடி” என்றும்

“கோணக் கோண மலையேறி கோப்பிப் பழம் பறிக்கையிலே
ஒரு பழம் தப்பிச்சுன்னு ஒதைச்சானையா சின்ன தொரை’ என்றும்

எண்ணிக் குழிவெட்டி இடுப்பொடிஞ்சு நிக்கையிலே
வெட்டு வெட்டு என்கிறானே வேலையத்த கங்காணி” என்றும்

“அந்தானை தோட்டமுன்னு ஆசையாகத்தானிருந்தேன்
ஒரு மூட்டைத் தூக்கச் சொல்லி ஒதைக்கிறானே கண்டாக்கு”
என்றும் பாடியிருப்பார்கள்.

துரை, கண்டக்டர், கங்காணி போன்ற தோட்டத்து நாட்டாண்மைகளை கடிந்து கொள்ளும் இப்பாடல்களும், ஏன் வந்தோம் இந்தக் கண்டிக்கு என்று ஏங்கும் பாடல்களும் ஆட்சேபகரமான பாடல்களாகப் பட்டிருக்கிறது கண்டக்டர் ஆபிரகாம் ஜோசப்புக்கு.

கோப்பித் தோட்டத்துக் கண்டாக்டரான இவருக்கு இம்மக்களின் சோகமயமான வாழ்வும், அவர்கள் மத்தியில் பாடப்பட்ட பாடல்களும் நன்றாகத் தெரிந்த ஒன்றே. இந்தப் பாடல்களை விட்டு விட்டு இவர் இயற்றிய கும்மிப் பாடல்களைத் தான் இந்த மக்கள் பாட வேண்டும் என்பதற்காக சில்லரைக் கங்காணிகளுக்கும் இப்புத்தகங்கள் கொடுக்கப்பட்டன. இந்தப் பாடல்கள் பாடிக் காட்டப்பட்டன.

நாட்டார் பாடல்கள் வரலாற்றுக் காலத்துக்கு முந்தியவை. கூட்டுழைப்போடும் கூட்டு வாழ்வோடும் தொடர்புடையவை. உழைப்பவர்களுக்குச் சொந்தமானவை.

உழைப்பவர்களின் பாடலுடன் முரண்பட்டதால், உழைக்கும் மக்கள் நாட்டார் பாடல்களைப் பாடாதிருக்க வேண்டும் என்னும் நோக்கத்துடன் பாடப்பட்டதால், கோப்பிக்கிருஷிக் கும்பிப் பாடல்களுக்கு உழைக்கும் மக்கள் மத்தியில் வரவேற்பிருக்கவில்லை.

சமூதாய விழிப்புணர்வினாலோ, கலை இலக்கிய எழுச்சியினாலோ, அல்லது அடிமைப்பட்டுப்போய்க் கிடக்கும் இம்மக்களின் அவலங்களை வெளிக்கொணர வேண்டும் என்னும் ஓர் ஆவேசத்தினாலோ எழுதப்படாமையினால் இக்கும்மிப் பாடல்கள் யாத்த ஆபிரஹாம் ஜோசப்பிற்கு ஓர் எழுத்துத் தொடரடச்சியினை அல்லது இயக்கத்தை ஏற்படுத்தும் வலு இருக்கவில்லை.

ஆகவே எதுவித அசைவுமின்றி ஒரு நெடுந்துயிலில் மலையகம் ஆழ்ந்து போய்க் கிடந்ததைப்போலவே இந்த நூலும் கிடந்துவிட்டது.

ஆனாலும் இக்கும்மிப் பாடல்கள் எழுதுவதற்கான நோக்கம் பற்றிய ஆபிரஹாம் ஜோசப்பின் முன்னுரைக் குறிப்பு மலையக நாட்டார் பாடல்களை ‘கோப்பித் தோட்டக் காலப் பாடல்கள்’ தேயிலைதை தோட்டக் காலத்துப் பாடல்கள்’ என்று பிரித்துப் பார்க்கும் ஒரு தேவையை இப்போது உணர்த்துகிறது.

‘கங்காணி காட்டுமேலே
கண்டக்கையா றோட்டு மேலே
பொடியன் பழமெடுக்க – பொல்லாப்பு நேர்ந்ததையா’
என்பது கோப்பித் தோட்டக் காலப் பாடல்

‘ஓடி நெர புடிச்சு
ஒரு கூடைக் கொழுந்தெடுக்க
பாவிக் கணக்கப்புள்ள பத்து றாத்தல் போடுறானே’

என்பது கோப்பிக்குப் பின் எழுந்த தேயிலைத் தோட்டக் காலப் பாடல்.

நாட்டார் பாடல்களுக்கான எதிர் பாடல்கள் கூட இந்த மலையகத்தில் தான் உதித்திருக்கிறன.

கோ.நடேசய்யர் ஒரு கால் நூற்றாண்டு கால தனது மலையகச் சீர்த்திருத்தச் செயற்பாடுகளில் கல்வி பற்றிய எதுவிதமான அக்கறைகளையும் காட்டவில்லை.

அவருடைய ராமசாமி சேர்வையின் சரிதம்கூட ஏழ்மையும், உதவியின்மையும், உறவுகள் ஏதும் இன்றியும், கல்வி இல்லாமலும்உழைத்து முன்னேறியமை பற்றித்தான் பேசுகிறது.

ஆனால் இன முரண்பாடுகளாலும், இன ஒடுக்குமுறைகளாலும் தேசிய கல்வி அபிவிருத்தி என்பது உருக்குiலைந்து போயிருந்த ஒரு காலகட்டத்தில் கல்வி வாய்ப்புகளுக்காகவும் இளைய தலைமுறையினரின் ஆளுமை விருத்திக்காகவும் சிலுவை சுமந்தவர் அமரர் இர.சிவலிங்கம் அவர்கள். மலையகக் கல்வி மரபில் இர.சிவலிங்கம் அவர்களும், செந்தூரன் அவர்களும் உருவாக்கிய ஒரு பரம்பரை மலையகம், மலையகக் கல்வி, மலையகச் சமூகம் பற்றிய சிந்தனைகளுடன் செயற்படுவதனையும் நினைவில் கொள்வது அவசியமாகிறது.

மலையகக்கல்வி பற்றிய ஆய்வுகளின் மையத்துடன் தை. தனராஜ் அவர்கள் எழுதியுள்ள ஒடுக்கப்பட்டோர் கல்வி போன்ற கல்வி சம்பந்தமான

மலையகத் தமிழர் வரலாறு – சாரல்நாடன்
இலங்கை இந்தியர் வரலாறு – சோ.சந்திரசேகரன்
மலையகம் (மலையக அரசியல் வரலாறு) – அ.லோரண்ஸ்
மலையக இந்திய வம்சாவளியினர் இருளும் ஒளியும் - எஸ்.இராமநாதன்
இனத்துவவ முரண்பாடுகளும் மலையக மக்களும் ஒரு பல்பக்கப்பார்வை
போன்ற நூல்களின் வருகைகளும் இவற்றின் அறுவடைகள் தான்.

ஏபிரஹாம் ஜோசப்பின் கோப்பிகிருஷிக்கும்மி காலத்தைப் போலவே, முப்பதுக்கும் அறுபதுகளுக்கும் இடைப்பட்ட காலமும் இருந்திருக்கிறது என்பதுவும் ஒரு வேதனையுடன் உள்வாங்கப்பட வேண்டியதே.

நடேசய்யரின் இம்மக்களின் எழுச்சிக்கான அத்தனை செயற்பாடுகளும் ஒரு தொடர்ச்சியில்லாமல், சோம்பல் முறித்துக் கொண்டு எழுத்தொடங்கி மீண்டும் படுத்துக்கொண்டதாகிவிட்டது.

இலக்கியச் செழுமையற்ற ஒரு சமூகம் உறக்கத்தில் இருக்கும் ஒரு சமூகமாக, நோயுற்றிருக்கும் ஒரு சமூகமாகவே இருக்கும். மலையகமும் அப்படித்தான் இருந்தது.

இலக்கியத்தின் தோற்றம், அதன் மறுமலர்ச்சி, இலக்கியச் செழுமை, ஆகியவை கல்வி, அதன்மூலம் ஏற்படும் சிந்தனைவிரிவு, வாழ்வின் மீதான மதிப்பீடு போன்றவைகளால் ஏற்படுவது.

ஆங்கிலக் கல்வி பெறும் வாய்ப்பும் பட்டிணங்களுக்குச் சென்று கல்வி கற்கும் வசதியும் மலையகத்தின் மேல்மட்டத்தினர் ஒரு சிலருக்குக் கிடைத்திருந்தது.

அப்படிக்கிடைத்த கல்வி மூலம் மலையக மண்ணுக்கு கிடைத்தவர்தான் சி.வி.வேலுப்பிள்ளை.

வட்டக்கொடை சிறுநகரை அண்மித்த மடக்கொம்பரைத் தோட்டத்துப் பெரிய கங்காணியின் மகனான கண்ணப்பன் வேலுசிங்கத்தின் மகனாக 1914 ல் பிறந்தவர் சி.வி.

மடக்கொம்பரை தோட்டப் பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வியைத் தொடங்கி, ஹட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரியில் தொடர்ந்து கொழும்பு நாலந்தாவில் மேட்றிகுலேசன் வரை பயின்றவர்.

முப்பதுகளிலேயே விஸ்மாஜினி என்னும் ஆங்கிலக்கவிதை நூலை வெளியிட்டவர். 1934 ல் தாகூர் இலங்கை வந்திருந்த போது தன்னுடைய ஆங்கில கவிதை நாடக நூலை தாகூரிடம் கையளித்து ஆசீர்வாதம் பெற்றவர் மக்கள் கவிமணி என்று போற்றப்படும் நமது மலையகக் கவிஞர் சி.வி.அவர்கள். அப்போது அவருக்கு வயது 18 மிக இளம் வயதிலேயே – மாணவப் பருவத்திலேயே – சி.வி.எழுத்தில் கொண்டிருந்த ஆர்வம் புலனாகிறது.

பக்கம் 28, 29, 30 இல் சி.வி ஆங்கிலத்தில் என்பதிலிருந்து பக்கம் 44 வரை

நடேசய்யரைத் தொடர்ந்து மலையக எழுத்துலகில் பிரவேசித்து, மலையக இலக்கியம் என்னும் ஒரு மரபுக்கு வித்திட்டவராக நம் முன் எழுந்து நிற்பவர் சி.வி.வேலுப்பிள்ளை. 1931 இல் விஸ்மாஜினி 1948 இல் வழிப்போக்கன் ஆகிய இரண்டு கவிதை நாடக ஆங்கில நூல்களை வெளியிட்டிருந்தாலும் 1950 க்குப் பிறகே மலைநாட்டு மண் வளம் மிக்கதான மலையக மக்களின் விடிவுக்குக் காலாய் அமையும் படைப்புகளைத் தரத் தொடங்கினார்.

முப்பதுகளுக்கு முன்னெழுந்த மலையக இலக்கியம் பற்றிய தன்னுடைய ‘புதுமை இலக்கியம்’ என்னும் கட்டுரையில் சி.வி.யே இப்படி எழுதுகின்றார்.

‘மலைநாட்டில் உள்ளவர்கள் எழுத்தறிவில் குறைந்தவர்களாக இருந்தாலும் பண வசதியுள்ள பெரிய வீட்டுப் பிள்ளைகள் ஆங்கிலமும் தமிழும் படிக்கக்கூடிய வசதி பெற்றவர்களாக இருந்தார்கள்’ என்றும்

‘தாகூர் சரோஜினி போன்ற இந்தியக் கவிஞர்களின் படைப்புகளும் மாட்ர்ன் ரிவியு+. இன்டியன் ரிவியு+ ஆகிய சஞ்சிகைகளும் பெரிய வீட்டுப் பிள்ளைகளை மிகவும் கவர்ந்தன. இந்த உந்துதலில் ஆட்பட்டவர்களான சி.வி.வேலுப்பிள்ளை கே.கணேஷ் ஆகியோர் எழுத்துலகப் பிரவேசம் செய்தனர்’ என்றும்

தமிழ் நாட்டில் இருந்து வரும் புலவர்கள், கவிஞர்கள் ஆகியோர் இப்பெரிய வீடுகளுக்குச் சென்று தங்கி உரையாடிப் போவார்கள். இவர்களின் வருகை இலக்கிய உணர்ச்சியை வளர்த்தது’ என்றும் எழுகின்றார்.

அப்படியான ஒரு பெரிய வீட்டுப் பிள்ளைதான் ஒரு சகாப்தத்தின் குரல் என மலையகத்தில் ஒலித்த அமரர் சி.வி.வேலுப்பிள்ளை என்பதை நம்மால் இலகுவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

‘அறிவாளிகளும், கவிஞர்களும், புலவர்களும் தமிழ் நாட்டிலிருந்து சிவனொளிபாதமலை, கதிர்காமம் யாத்திரையை மேற்கொண்டு இங்கு வருதுண்டு என்று சி.வி கூறியதற்கும் இவர்களின் யாத்திரை வசதிக்காகப் பல நலன்புரிச் சங்கங்கள் தோன்றின. பதுளையில் வி.ஞானபண்டிதன்செட்டியார் நிறுவிய பதுளை சமத்துவ சேவா சங்கம் யாத்ரிகரின் வசதியுடன் பல சமூகப் பணிகளையும் செய்தது’ என்று கே.கணேஷ் கூறுவதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது (கண்டி வளர்த்த தமிழ் அகிலம் கட்டுரை – சித்தார்த்தன்)

இளைஞர் சி.வி.வேலுப்பிள்ளைக்கு கவி தாகூர் மீது அளவற்ற ஈடுபாடு இருந்தது ஒரு பத்திகூட இருந்தது. ஆகவேதான் தனது பதினேழாவது வயதில் தான் யாத்த கவிதை நாடக ஆங்கில நூலை தாகூர் இலங்கை வந்திருந்தபோது அவரிடம் பக்தி சிரத்தையுடன் கையளித்து ஆசி பெற்று மகிழ்ந்திருக்கின்றார்.

சிறுகதை, நாவல், நாடகம், கட்டுரை, கவிதை, பாடல் இறுதியாக ஓவியம் என்று அனைத்துத் துறைகளையும் கையாண்டவர் தாகூர். ஆனால் அவர் சாதனை காட்டியதும் தனி முத்திரை பதித்தததுவும் கவிதையில் தான்!

சி.வி.யும் மக்கள் கவிமணி என்றுதான் போற்றப்பட்டார். ஐn ஊநலடழn வுநய புயசனநளெ என்னும் இவருடைய ஆங்கிலக் கவிதை நூல் பற்றிய மதிப்புரையில் ‘இலங்கை தேசத்தின் தாகூர்’ என்று எழுதியுள்ளது கல்கி. பம்பாய் பாரதஜோதி. சென்னை ஹிந்து இன்டியன் ரிவியு+ போன்றவைகளும் இந்த நூல் பற்றி சிலாகித்து எழுதி இருந்தன.

விஸ்மாஜினிக்குப்பிறகு ‘வழிப்போக்கன்’ (றுயலகயசநச) என்னும் ஆங்கில வசன கவிதை (Pசழளந Pழநஅள) நூலை 1948 இல் வெளியிட்டார். இவருடைய 50க்கு முந்திய எழுத்துக்கள் தாகூர் பாணியிலமைந்த அழகும் உணர்வுப் பெருக்கும் கொண்ட கவிதைகளாகவே இருந்தன.

‘முள்முடியைக் கழற்றி வைத்துவிட்டு வெளியே வந்தேன்’ என்று சுந்தரராமசாமி குறிப்பிட்டுள்ளதுபோல்,


புறக்கணிப்பட்டதும் ஒடுக்கப்பட்டதுமான மலையக சமூகத்தின் அவலநிலைகளைத் தமிழின் எல்லைகளுக்குப்பாலும் கொண்டு சென்றவர் சி.வி.தோட்டத்து மக்களின் பரிதாபரகமான வாழ்க்கையை வெளியுலகிற்கு எடுத்துக்காட்டும் பணியினை இவருடைய 50க்குப் பிந்திய ஆங்கிலப்ப படைப்புகள் மிக அருமையாகச் செய்தன.

1954 இல் வெளிவந்த ‘இலங்கைத் தேயிலைத் தோட்டத்திலே’ என்றும் ஆங்கிலக் கவிதை நூலே இவருக்கு ஏகோபித்த புகழையும், பரவலான அறிமுகத்தையும் ஓர் இலக்கிய அந்தஸ்த்தையும் ஈட்டித் தந்தது. ஆங்கில மூலத்திலிருந்து ரஷ்ய மொழியில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள இந்தக் கவிதை நூல் 1969 இல் ஓவியரும் கவிஞருமான சக்தி அ.பாலையாவினால் தமிழில் மொழி பெயர்த்து வெளியிடப்பட்டது. செய்திப் பதிப்பகம் இப்பணியினைச் செய்துள்ளது.

நன்கு பண்படுத்தப்பட்ட ஓர் இருதயத்தை மலையகம் தன் வரலாற்றில் வருடியபோது இயல்பாய் உருண்ட எழுத்துகள் இவை.

சி.வி ஆங்கிலத்தில் எழுதி அவராலேயே தமிழ்ப்படுத்தப்பட்டு தினகரனில் தொடராக வெளி வந்த நாவல் “வுhந டீழசனநசடயனெ”

நாழிக்கு நாழி வீதியில்
நின்று என
யாழினை எடுத்து கீதத்தை
இசைப்பேன்!....
ஈழத்தின் மானுடர்க்காய்
வயல் புல்
வெளிகளிலும் தேயிலை ரப்பர் தோட்டங்
களிலும் பிறந்திட்ட
மானுடர்க்காய் ….
ஆம் நான் காதலிக்கும்
அவர்களுக்காய்……?

என்பது தேயிலைத் தோட்டத்திலே என்னும் நூலுக்கான சி.வியின் சமர்ப்பண வரிகள்.

தாகூரின்பால் இருவருக்குண்டான மதிப்பை, ஈடுபாட்டை இவை துல்லியமாகக் காட்டுகின்றன.

அமரர் சி.வி.சிறுகதை எழுதவில்லை ஆனால் மலையகத்தின் இலக்கிய விழிப்புணர்ச்சிக்கு இவவர் ஆற்றிய பங்களிப்பு மகத்தானது.

‘நான் ஒரு கவிஞன் அல்ல எழுத்தாளன்கூட அல்ல ஆனால் எழுதுவதற்கு நான் தேர்ந்தெடுத்த கருப்பொருட்களே இன்றைய எனது பெருமைக்குக் காரணம் உழைக்கும் இந்த மலையகத்து மக்களைப் பற்றி எழுத ஆரம்பித்த பிறகே நான் பெருமைப்படுத்தப்பட்டேன்’ என்று பிற்காலத்தில் சி.வி.அடிக்கடி கூறுவதுண்டு.

மஞ்சேரி ஈஸ்வரன் 1935 இல் ளுhழசவ ளுவழசல என்று மாத சஞ்சிகை வெளியிட்டதைப்போல் ‘கதை’ என்றொரு மாத சஞ்சிகையையும் சி.வி.வெளியிட்டார். குயபெலகநைடன – வுயடயபெயஅய என்னும் விலாசத்திலிருந்து ‘கதை’ ஓர் இதழ் மட்டுமே வந்தது. சக்தீ பால ஐயாவின் அட்டை ஓவியத்துடன் நாற்பது சத விலையில் வெளிவந்த இவ்விதழின் தலையங்களத்தில் சி.வி. இப்படி எழுதுகின்றார்.

“தமிழ் நாட்டிலிருந்து பல்வேறு பத்திரிகைகள் வருகின்றன நமது புத்தகசாலைகளை அலங்கரிக்கின்றன நமது கலையையும் கலாசாரத்தையும் நமது பண்பாட்டிற்கேற்பப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

“தமிழ் இலக்கிய ஜீவநதி பெருக்கெடுத்தோட நாம் கொண்டுள்ள பங்கு என்ன? நமது இதயத்தின் துடிப்பிலே சிந்தனையின் ஓட்டத்திலே புதிய பல எழுத்தோவியங்கள் படைக்க வேண்டும். இந்தப் பணியைச் செய்வதே கதையின் நோக்கம் அல்ல. நாட்டிலே கோர நர்த்தனம் புரியும் வறுமையையும் துன்பத்தையும் எடுத்துக்காட்ட கதை முயலும். அத்தோடு நாட்டில் கதை வளர வேண்டும் என்பதே நமது அவா!

‘இலங்கை எழுத்தாளர்களின் இன்பப் படைப்புகளைத் தமிழ் மக்களுக்குக் கதை சமர்ப்பிக்கும் தொழிலாளர்களிடத்திலே தோன்றியுள்ள இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்து, அவர்கள் இலக்கியம் படைக்க ‘கதை’ இதிலிருந்து சி.வி.யின் இலக்கிய நோக்கம் புரிகின்றது.

மலையக இலக்கிய முன்னோடி கே.கணேஷ் மணிக்கொடியில் சிறுகதை எழுதியவர். முக்ராஜ் ஆனந்தின் “ருவெழரஉhயடிடநள” நாவலை தீண்டத்தகாதவன் என்று 1947 இல் மொழி பெயர்த்தவர். கே.கணேஷ் என்றதும் முதலில் மனதில் தோன்றுவது இந்த மொழி பெயர்ப்பு நாவலே. தன்னுடைய கவிதைக்காக ஜப்பான் சக்கரவர்த்தியிடம் பரிசு பெற்றவர் இவர். ஆனால் இவருக்கு ஓரிலக்கிய அந்தஸ்த்தை கொடுப்பது ஜப்பான் சக்கரவர்த்தியிடம் பரிசு பெற்ற ‘மேகம்’ கவிதையல்ல. மணிக்கொடியில் எழுதிய சிறுகதைகள் அல்ல. இரண்டுவருடமாக அவர் வெளியிட்ட பாரதி என்னும் முற்போக்கு சஞ்சிகையல்ல. இவைகள் அனைத்தும் அவருடைய இலக்கிய செயற்பாட்டின் துணை விளைவுகளே.

இவருக்கான இலக்கிய கௌரவத்தினை பெற்றுக் கொடுப்பது இவருடைய மொழிப்பெயர்ப்பு பணிகள். முழ்க்ராஜ் ஆனந்திற்கு பிறகு கே.ஏ.அப்பாஸ், பிரேம்சந்த் ஹோசிமின், லூசுன், பார்பரா, குப்ரியானோவ் என்று இவருடைய மொழிபெயர்பு விரிவடைந்தது. கவிஞர் பத்திரிகையாசிரியர், பத்திரிகை வெளியீட்டாளர், மொழிபெயர்ப்பாளர், கலாசார அமைச்சின் தமிழ் இலக்கிய ஆலோசனை சபையின் முன்னால் உறுப்பினர், எழுத்தாளர் சங்கங்களை உருவாக்கியவர், சிறுகதை எழுத்தாளர் என்று பல சிறப்புகளை கொண்ட மூத்தறிஞராக விளங்குபவர் கே.கணேஷ்.

மாத்தளை கார்த்திகேசு, மாத்தளை சோமு, மாத்தளை செல்வா, மாத்தளை மலரன்பன், மாத்தளை வடிவேலன் என்று 60க்குப் பிந்தியவர்கள் இலக்கியத்தில் மாத்தளையை இடம்பெறச் செய்தனர். இவர்களுக்கு முன்பதாகவே முப்பதுகளில் தன்னுடைய பெயருடன் மாத்தளையை இணைத்துக் கொண்டு எழுதியவர் மாத்தளை அருணேசர்.

கேகாலை சன்னிகிறாப் தோட்டத்தில் பிறந்தவர். இலங்கையிலும் தமிழகத்திலும் கல்வி பயின்றவர். தேயிலைத் தோட்டக் கண்டக்டராகப் பணியாற்றியவர்.

பரலி.சு.நெல்லையப்பர் ஆசிரியராக இருந்து நடத்திய லோகோபகாரி வார இதழிலேயே கட்டுரைகள் எழுத ஆரம்பித்தார். அமிர்த குணபோதினி ஆனந்தபோதினி திங்கள் மஞ்சரி, கலைமகள் போன்ற தமிழகப் பத்திரிகைகளில் இவரது கதை – கட்டுரைகள் வெளிவந்தன. இவைகள் பொதுவான கட்டுரைகளாய் அமைந்தனவேயன்றி மலையகத்துக்கான மண்ணின் மணத்துடன் அமையவில்லை.

கோ.நடேசய்யர் நடத்திய தேசபக்தன், இலங்கை இந்தியன் ஏடுகளிலும், மற்றும் வீரகேசரி, தினபதி சிந்தாமணி போன்ற ஈழத்துச் சஞ்சிகைகளிலும் இவருடைய எழுத்துக்கள் இடம் பெற்றன.

இர.சிவலிங்கம் அவர்கள் இலங்கை வானொலி மூலமாக மலையகத்தின் நிலைமைகளை அறிமுகப்படுத்துவதற்காக மிக சிரமத்துடன் ஆரம்பித்த குன்றின் குரல் வானொலி நிகழ்விற்கு மாத்தளை அருனேசர் அவர்களை எஸ்.டி.சிவநாயகம் அவர்கள் நேர்காணல் செய்த நிகழ்ச்சிப்பற்றிய தகவல்களை சாரல் நாடன் தனது இளைஞர் தளபதி இர.சிவலிங்கம் எனும் நூலில் தருகின்றார்.

50 களில் இலக்கியப் பிரவேசம் செய்தவர் பண்டாரவளையைப் பிறப்பிடமாகக் கொண்ட த.ரஃபேல். ஒரு தோட்டக் கண்டக்டரின் மகன்.

ஒரு புகைப்படக் கiலைஞரான இவர் கூடுதலான வானொலி நாடகம் எழுதியவராகும்.

கேள்விப்பட்டால், சம்பந்தப்பட்ட அந்த உத்தியோகத்தர் முதல் தடவை எச்சரிக்கை. இரண்டாவது தடவை அபராதம், மூன்றாவது தடவை வேலை நீக்கம் என்று நிர்வாக ரீதியாகவும் (தோட்ட உதடதியோகத்தர்கள்) தனிமைப் படுத்தப்பட்டிருந்தனர்.

வெளி உலகத் தொடர்பின்றி, பிற இன மக்களுடன் பேசப் பழக சந்தர்பங்களின்றி, தொட்ட மக்கள் தோட்டங்களுக்குள்ளேயே தனிமைப் படுத்தப்பட்டு அந்நியப்பட்டிருந்ததைப்போல் தோட்ட உத்தியோகத்தர்களும் தோட்ட மக்களிலிருந்து அந்நியப்பட்டே இருந்தனர் அந்நியப்படுத்தப்பட்டே இருந்தனர்.

இது ஐம்பதுகளில் எழுத வந்த கண்டக்டரய்யாவின் மகன் ரஃபேலுக்கு மட்டுமல்ல அறுபதுகளின் பின் எழுத வந்தவர்களுக்கும் பொதுவாக இருந்த ஒரு நிலைமைதான்.

இந்த அந்நியம்தான் ரஃபேலின் கதைகளில் மலையக மண்ணும் வாழ்வும் ஆழமாகப் பதியாமைக்கான காரணம் என்று கொள்வது ஒரு மேலோட்டமான நோக்கேயாகும். ‘துன்கிந்த சாரலில்’ என்னும் தனது கட்டுரையில் ஓரிடத்தில் திரு.நித்தியானந்தன் கூறுகின்றார். என்.எஸ்.எம்.ராமையா தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கு முன்பே எழுத ஆரம்பித்துவிட்ட ஒரு காலப்பகுதியை கருத்திற் கொண்டு ரஃபேலின் கதைகளைப் பார்ப்பது அவசியம் என்று.

எழுத வந்த காலத்தைக் கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது அவசியமானது அல்ல என்றே நான் கருகின்றேன்.

புதுமைப்பித்தனின் ஆளுமை. அவருடைய நடை. அவர் கையாண்ட நாலாவிதமான கருப்பொருட்கள், அவருடைய கிண்டல், இன்ன பிற அத்தனையுடனும் பரிச்சயமாகிக் கொண்டும்கூட அவருக்குப் பின் எழுத வந்தவர்களில் யார் அவரை மீறி உயர்ந்தவர்கள் மேவி நின்றவர்.

மலையகம் என்ற உணர்வு ஏற்படாமையே இவர்களுடைய படைப்புகளில் மலையகம் விலகிப் போய்விடுவதற்கான முக்கியக் காரணமாகும்.

சி.வியின் ‘கதை’ ஏட்டுக்கு எழுதிய ‘திறமை’ என்னும் கதையில் தோட்டத்து ஆபீசும் பெரிய கிளார்க்கும், துரையும், கொழும்பிலிருந்து வரும் ஆடிட்டரும் வருகின்றனர்.

பேராசிரியர் கைலாசபதி என்.எஸ்.எம்.ராமையாவுக்குச் சொன்னது போலவே. மக்கள் கவிமணி சி.வியும் தான் வெளியிடவிருக்கும் சஞ்சிகைக்கு மலையகத்தைக் களமாகக் கொண்ட கதையே வேண்டும் என்று ரஃபேலுக்குச் சொல்லியிருக்கக்கூடும்.

தினகரனுக்காகப் பேராசிரியரிடம் ராமையா கொடுத்த கதை. ஒரு கூடைக் கொழுந்து.

கதைக்காக சி.வியிடம் ரஃபேல் கொடுத்த திறமை.

ஒரு கூடைக் கொழுந்து என்.எஸ்.எம் ராமையா என்னும் அவருடைய பெயரையே மறைத்து ஒரு கூடைக் கொழுந்து ராமையா என்று ஒரு இலக்கியப் பெயரையே அவருக்குச் சூட்டிவிட்டுள்ளது. ‘திறமை’ ரஃபேலை ஒன்றுமே செய்து விடவில்லை.

‘ஒரு கூடைக் கொழுந்து” ராமையாவின் முதல் கதை. அதேபோல் ‘பார்வதி’ மலரன்பனின் முதல் கதை.

மலைநாட்டின் வாழ்க்கையையும், அவர்களுடைய நடைமுறைப் பேச்சு வழக்கத்தையும் கலா முழுமையுடன் தன்னகத்தே கொண்ட கதை ஒரு கூடைக் கொழுந்து. அது ராமையாவின் முதல் கதை. மலரன்பனின் முதற்கதையான பார்வதியும் அந்தக் கதையின் தரத்தை எட்டிப் பிடிக்கின்றது என்றெழுதுகின்றார் எஸ்.பொன்னுத்துரை. (கதைவளம் ஏடு இரண்டு. iகுராமன் தினபதியின் தினமொரு சிறுகதைளின் விமர்சன நூல்)

மலரன்பனைப் பொறுத்தவரை முன்னால் வெட்டப்பட்ட பாதை இருந்தது. வழிகாட்டிகள் சிலர் இருந்தனர். மலையகத்தைப் பற்றிய கதைதான் வேண்டும் என்னும் நிர்பந்தம் இல்லாமலேயே பார்வதியைத் தரும் வாய்ப்பு இருந்தது. அந்த வாய்ப்பு ரஃபேலுக்கு இல்லை என்பது உண்மைதான் என்றாலும், என்எஸ்.எம்.ராமையாவுக்கும், தெளிவத்தை ஜோசப்புக்கும்கூட அந்த வாய்ப்பு இல்லைதான்.

மலைநாட்டு பாத்திரங்களைக் கொண்ட ஒரு கதை வேண்டும் என்று கைலாசபதி அவர்கள் கேட்டபோது, சரி என்று தலையை ஆட்டிவிட்டு வந்தாலும். பிறகுதான் தலையை உடைத்துக் கொண்டு யோசித்தேன். நண்பர் கனகரத்தினத்திடம் இது பற்றிக் கூறினேன். நீண்ட நேரம் கலந்தாலோசித்தோம் என்று என்.எஸ்.எம். கூறுவதிலிருந்து கையில் விசா இருந்தது. போய்ச்சேர வழிதான் தெரியவில்லை என்பது புலனாகிறது. தாங்களே பாதையும் வெட்டிப் பயணமும் போக வேண்டிய நிலை இவர்களுக்கிருந்தது என்று திரு.நித்தியானந்தன் கோடிட்டுக் காட்டுவதும் இதையேதான்.

வழியும் தெரிந்து பயணத்துக்கும் தைர்யத்துடன் தயாரான பிந்தி வந்தவர்களுக்கு விசாதான் கிடைக்க மாட்டேன் என்றிருந்தது வேறு கதை.

ரஃபேலின் ‘திறமை’ என்னும் கதையின் கரு அற்புதமானது. லயத்தின் ஆறடிக் காம்பிராவுக்குள் அடிமையாக வைக்கப்பட்டிருந்த கூலிக்காரரின் மகனான பத்து என்னும் பத்மநாதன், தோட்டத்துரையும், பெரிய கிளார்க்கும் பயத்துடன் எதிர்ப்பார்க்கும் கணக்குப் பரிசோதகராக கொழும்புத் தலைமை அலுவலகத்தில் இருந்து வந்து நிற்கின்றான் என்றால்……

தோட்டத்து ஆபீஸ்களுக்கு அவர்களுடைய கணக்கு வழக்குகளைப் பரிசோதிக்க ஆடிட்டர்கள் வருவது தோட்டப் பாடசாலைகளுக்கு இன்ஸ்பெக்டர் வருவதை விடவும் அச்சத்துடனும் பயபக்தியுடனும் எதிர்பார்த்திருக்கும் ஒரு சடங்கு.

வௌளைக்காரத் துரையிலிருந்து குட்டிக் கிளாக்கர் வரை ஆடிட் வருகிறது. ஆடிட் வருகிறது. ஆடிட் வருகிறது என்று ஆலாய்ப் பறப்பார்கள். எத்தனை நாள் இருக்கப் போகிறார்களோ தெரியவில்லை. எங்கே தங்குவார்கள், நடைமுறை வசதிகள் எப்படி நாம் ஏதாவது வசதிகள் செய்து கொடுத்தால் அதையும் தப்பான அர்த்தத்துடன் எடுத்துக் கொள்வார்களோ தெரியவில்லை என்று தடுமாறித் தத்தளிப்பார் துரை.

அப்பேற்பட்ட சக்தி மிக்க ஆபீசராக ஒரு தோட்டத் தொழிலாளியின் மகன் வந்து நிற்பதென்றால்………..

தொண்ணூறுகளில் அல்ல ஐம்பதுகளில்! ரஃபேல் அவர்களின் எதிர்பார்ப்பு கனமிக்கது. கௌரவத்துக்குரியது.

ரஃபேலின் எழுத்து மிகவும் எளிமையானது வாசிப்பவர்களைத் தொந்தரவு செய்யாதது சிந்திக்கத் தூண்டாதது சப்பென்றும் வாசிக்கலாம் சட்டென்று மறந்தும் விடலாம்.

“பத்திரிகைக் கதைகள் பத்திரிகைக் கதைகள்” என்று கா.நா.சு. தலையால் அடித்துக் கொண்டாரே அந்த ரகக் கதைகள். அடுத்த இதழ் வரும்போது முந்தய இதழுடன் பழசாகிப் போய்விடும் கதைகள்.

‘பத்துவைப் பற்றிய நினைவு அவன் வசித்த லயத்தை நினைவுக்குள் கொண்டு வருகிறது ரஃபேலுக்கு’

‘நான் அலுவலகம் செல்லும் வழியில்தான் பத்துவின் லயம் இருந்தது. அதைக் காணும்போது சிறு வயதில் எங்கள் வீட்டிலிருந்த புறாக் கூண்டுதான் நினைவில் வரும். ஒரு நீண்ட பெட்டியில் துவாரம் துவாரமாக அமைத்து ஒவ்வொரு துவாரத்துக்குள்ளும் இரண்டு புறாக்கள் மட்டுமே இருப்பதற்குப் போதுமான இடம் வைத்து….”

ரஃபேலின் திறமை என்னும் கதையில் தோட்டத் தொழிலாளர்களின் லயம் அறிமுகமாகும் விதம் இது.

ஆனால் இதே ‘லயம்’ என்றும் மனத்தில் நிற்கும் வண்ணம் அறிமுகம் பெறுகிறது பரிபு+ரணனின் தெய்வதரிசனம் என்னும் கதையில். இருட்டுக்குள் பயத்துடன் நடக்கும் ஒருவன் மலைகளை, மரங்களை, அருவியின் ஓலங்களை அந்த இருளின் பயங்கரத்துடன் பார்த்தவாறே விரைகின்றான்.

திடீரென வளைந்து திரும்பிய மலைப்பாதையின் சிறிது தூரத்தில் தொழிலாளர்களின் வீடுகள் தெரிந்தன. இரவில் நடுவழியில் கோச்சி நிற்பது போல் வெளிச்சங்கள் வரிசையாகத் தெரிகின்றன.

இரண்டு புறங்களுக்கு மட்டுமே போதுமான இடம் கொண்ட புறாக்கூண்டு துவாரங்களைவிட குஞ்சும் குழுவானும் பெரியவர்களும் ஆண்களும் பெண்களுமாகத் திமுதிமுக்கும் ரயில் பெட்டி உவமானம் எப்படி உள்ளத்துக்குள் ஊடுறுவிச் செல்கிறது?

சற்றே கண்களை மூடி ‘இரவில் தூரத்தே தெரியும் லயத்தையும் நடுவழியில் நின்றுவிட ரயிலையும்’ மணக்கண்ணால் பாருங்கள். எத்தனை அருமையான உவமானம்!

தோட்டத்தில் கன்டக்டரய்யா என்பவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். துரைக்கு அடுத்த ஸ்தாபனம் அவருடையதுதான். இந்தப் பதவிக்கு வௌளைக்காரன் எடுபட்டால் சின்னதுரை என்னும் அந்தஸ்த்துடன் ஒரு சில வேலைகளைக் குறைத்துக் கொள்வார்கள். நம்மவர்கள் என்றால் கண்டக்டர் என்பார்கள்வேஷ்டியும் வெறும் காலுமாக இருப்பர் என்றால் பெரிய கணக்குப்பிள்ளை என்பார்கள். செய்யும் வேலையும் பதவியின் சக்தியும் ஒன்றுதான் சிறு சிறு வித்தியாசங்களுடன்.

ஒரு கண்டக்டரின் மகனாகப் பிறந்து சொகுசான வாழ்வுடன் சென்ஜோசப்ஸ் போன்ற பெரிய பாடசாலைப் படிப்புடன் மின்சார சபை உத்தியோகத்துடன் ஒரு மேல்மட்ட மனப்பாங்குடன் இருந்து விட்டுப் போகாமல், ஒரு லயத்துச் சிறுவனை பெரிய ஆபீசராக்கிப் பார்க்கும் அந்தப் பெரிய மனம் கொண்டவராக இருந்திருக்கிறாரே iஃபேல் அதைத்தான் போற்றுகின்றோம் அதற்காகத்தான் அவரைப் பற்றியப் பேசுகின்றோம் எழுதுகின்றோம்.

தினகரன், வீரகேசரி, குமுதம், கதை, சரஸ்வதி நவஉதயம் ஆகிய ஏடுகளில் இருபத்தைந்துக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ள ரஃபேல் வானொலி நாடங்களும் மேடை நாடகங்களும்கூட எழுதியிருக்கின்றார். ஒரு காலத்தில் இலங்கை வானொலியின் நாடகப் பகுதி பொறுப்பாளராகவிருந்த கே.எம்.வாசகரின் பேராதரவே தன்னை கூடுதலான வானொலி நாடகங்கள் எழுதத் தூண்டியது என்கின்றார் அவர். சில நாடகங்கள் அட்டனில் மேடையேற்றப்பட்டும் உள்ளன. ஒரு சில கவிதைகளும் எழுதியுள்ள இவர். இலக்கியத்துடன் தன்னை ஓரளவு ஈடுபடுத்திக்கொண்டே இருந்திருக்கின்றார்.

இந்த மக்களின் நிலையை பற்றிய சிந்தனைகள் படித்த மலையக இளைஞர் மத்தியில் ஒரு ஆத்திரம் மிகுந்த குமுறலாகப் புகைந்து கொண்டே இருந்திருக்கிறது.

மலையகம் என்னும் கோஷத்தை முன் வைத்து இவர்களுகக்கு ஒரு அடையாளத்தைக் தேடித்தர படித்த மலையக இளைஞர்கள் ஒன்றிணைந்து உருவாக்கிக் கொண்ட அமைப்பு மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம். அரசியல் மற்றும் சமூக உணர்வுகளை உருவாக்குவதில் இது போன்ற இளைஞர் இயக்கங்கள் பெரும் பங்காற்றியுள்ளன.

மலையகத்தின் தலைநகரான கண்டியை மையமாகக் கொண்டு இயங்கத் தொடங்கிய மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர் இளைஞர் தளபதி என்று போற்றப்பட்ட இர.சிவலிங்கம் அவர்கள்.

பதுளை, அட்டன், நாவலப்பிட்டி மாத்தளை என்று கிளைகள் அமைத்து பணியாற்றிய சங்கம் இது.

மலையகத்தில் உயர் கல்வி பெற்றவர்களாக ஓரிருவர் மட்டுமே இருந்த நாட்கள் அவை.

தோட்டத்தில் பிறந்து தோட்டப்பாடசாலையில் கல்வியை ஆரம்பித்து ஹைலன்சில் கல்வியை தொடர்ந்து சென்னையில் பட்டப்படிப்புப் படித்துத் திரும்பியவர் இர.சிவலிங்கம் அவர்கள்.

தான் கல்வி கற்ற கல்லூரியான ஹைலன்ஸ் கல்லூரியில் ஆசிரியராகப் பின் அதிபராகப் பணியாற்றிய நாட்கள் வரலாறு படைத்தவை.

மலைநாடு மலைநாடு என்று பாடுவோம் மலைமுரசறைந்து மலை மக்கள் வாழ்வுயர்த்துவோம் என்பதையே சுலோகமாகக் கொண்டு 52 காசில் வீதி கண்டி என்னும் முகவரியிலிருந்து வெளிவந்த மலை முரசு மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தின் அதிகாரபு+ர்வமான ஏடாக வெளிவந்தது.

இதன் சிறப்பாசிரியர் ‘மலைநாட்டு எஸ்.நடேசன்’ கூட்டாசிரியர்கள் க.ப.சிவம், கவிஞர் மு.கு.ஈழக்குமார் ஆகியோர்.

க.ப.சிவமும் ஈழக்குமாரும் நடத்திய முத்தமிழ் முழக்கம் என்னும் சஞ்சிகையே மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்துக்காக மலைமுரசாக மாற்றப்பட்டது. படித்த இளைஞர்களின் இயக்கமும் மலைமுரசு எனும் ஏட்டின் இணைவும் மலையக எழுத்துகளுக்கு ஒரு விஸ்தாரமான களத்தையும் வீரியத்தையும் உருவாக்கின.

மணிக்கொடி தமிழகத்தில் செய்ததை மறுமலர்ச்சி யாழ்ப்பாணத்தில் செய்ததை மலைமுரசு மலைப் பிராந்திய எழுத்தாளர்களிடையே செய்தது என்று தன்னுடைய மலையகம் வளர்த்த தமிழ் என்னும் நூலில் குறிக்கின்றார் சாரல் நாடன். தரவளை பசார் டிக்கோயாவிலிருந்து இர.பாலா என்பவரை ஆசிரியராகவும் இர.சிவலிங்கம் அவர்களை ஆலோசகராகவும் கொண்டு வெளிவந்த ஏடு மலைப்பொறி.

உறவுக்கு சிங்களம் உயிருக்கு தமிழ், உலகுக்கு ஆங்கிலம் என்பது மலைமுரசுவின் சஞ்சிகை சுலோகம்.

சொந்த சகோதரர் துன்பத்தில் சாதல் கண்டும்
சிந்தை இரங்காரடி – கிளியே செம்மை மறந்தாரடி’

என்னும் பாரதி பாடல் மலைப்பொறியின் சஞ்சிகை சுலோகம்.
இந்த மக்களிடையே இவைகள் ஏற்படுத்த முயன்ற அரசியல் சமூக உணர்வுகள் முனைப்பானவை. அறுபதுகளின் ஆரம்பத்தில் மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கம் ஏற்பாடு செய்த கலைவிழாக்கள் நாடக விழாக்கள் கல்வி மாநாடுகள் பல புதிய திறமைகளை வெளிக்கொண்டுவர உதவின.

மலைநாட்டு நல்வாழ்வு வாலிபர் சங்கத்தினை தொடர்ந்து மலையக இளைஞர் முன்னணி மலையக வெகுஜன இயக்கம் மலையக மக்கள் இயக்கம் போன்ற இளைஞர் அமைப்புகள் படித்த இளைஞர் என்ற வரையறையிலிருந்து சமூகத்தின் பல தரத்தினரையும் உள்வாங்குகின்ற ஒரு வளர்ச்சிப் போக்கினை முன்னெடுத்திருக்கின்றன.

அவைகளின் செயற்பாடுகள் மூலம் இம்மக்கள் மத்தியில் சமூக விழிப்புணர்வு ஏற்பட தொடங்கியது. இலக்கிய எழுச்சிக்கு சமூக விழிப்பணர்வு அவசியமானது என்னும் நியதிக்கு ஒப்ப மலையக சமூகத்தில் ஏற்படத் தொடங்கிய விழிப்புணர்வு மலையக இலக்கியச் செழுமைக்கு காலாய் அமைந்தது. இந்த எழுச்சிகளுக்கு உந்துதல் தந்தவர்களாக திருவாளர்கள்.இர.சிவலிங்கம், செந்தூரன், பதுளை பாரதி கல்லூரி ராமசாமி, பெரி.கந்தசாமி போன்றவர்களை குறிப்பிட்டுக் கூறலாம்.

எவ்வித வழிகாட்டலுமின்றி அறுபதுகளில் இலக்கிய பிரசேவம் செய்த செந்தூரன். என்.எஸ்.ராமையா, தெளிவத்தை ஜோசப், சாரல் நாடன் போன்றவர்க்குப் பிறகு இவர்கள் மேற்கொண்ட இவ்விலக்கிய பயணம் ஓர் இலக்கிய பரம்பரையையே இவர்களுக்கு பின்னால் இழுத்துக் கொண்டுவரும் சக்தி படைத்ததாக இருந்திருக்கிறது.

எம்.வாமதேவன், மு.நித்தியானந்தன், மு.சிவலிங்கம் மாத்தளை சோமு, மலரன்பன், ராமசுப்பிரமணியம், சீ.பன்னீர் செல்வன், தோ.சிக்கன்ராஜ், பரிபு+ரணன், மல்லிகை சி.குமார். பு+ரணி, நைமா பஷீர், சலமன் ராஜ், நுரளை சன்முகநாதன், கே.கோவிந்தராஜ், அல் அஸுமத் என்று ஒரு சிறுகதை பட்டாளமே கையில் பேனையுடனும் மனதில் மலையகம் என்னும் வைராக்கியத்துடனும் ஊர்வலம் வரத் தொடங்கியதை எந்தச் சக்தியாலும் தடுத்துவிட முடியவில்லை. நிறுத்திவிட முடியவில்லை. இப்படி கிளம்பிய இவ் இலக்கிய பட்டாளத்தில் சிலர் இலக்கியவாதிகளாய் உயர சிலர் பேனை தூக்கிய பாட்டாளத்துக்கூட்டமாகவே இருந்துவிட்டனர். இருக்கின்றனர் என்பது வேறு பிரச்சினை.

இவர்களின் இந்த எழுத்துலக பிரவேசம் ஏற்கனவே இருந்த வீரகேசரி, தினகரன், சிந்தாமணி, ஆகியவற்றின் ஞாயிறு வெளியீடுகளை திணரடித்தன. எழுத்துக்குக் களம் கிடைக்காத நிலையில், மலையக எழுத்தாளர்கள் யாழ்ப்பாணம் மட்டக்களப்பு போன்ற பிற பிரதேச ஏடுகளுக்கும் சிற்றேடுகளுக்கும் எழுதிப்பார்த்தனர். அதுவும் திருப்தியாக அமையாத போது தாங்களே பத்திரிகையும் வெளியிடத் தொடங்கினர்.

அறுபதுகளில் மலையகத்திலிருந்து ஐம்பதுக்கும் மேற்பட்ட சஞ்சிகைகள் வெளி வரத்தொடங்கியிருந்தன. இருபதுகளிலும் மலையகத்திலிருந்து ஏடுகள் வரத்தான் செய்தன. அவைகளின் பெயர்களில் உதாரணத்துக்கு சிலதை பார்ப்போம். ஜனமித்ரன், தேசபக்தன், இந்தியன், தேச ஊழியன், ஜனநேசன், லங்கா விகடன்.

இவைகள் அனைத்தின் ஆசிரியர்கள் மலைநாட்டு தொடர்புடையவர்களாக இருந்தாலும் ஏடுகள் கொழும்பை மையமாகக் கொண்டே வெளிவந்தவை.

30களில் இருந்து 50கள் வரை கண்டி, ஹட்டன், டிக்கோயா, நாவலப்பிட்டி, கம்பளை, பதுளை, பசரை, போன்ற மலையக நகரங்களில் இருந்தும் கொழும்பிலிருந்தும் தமிழ் இதழ்கள் வரத் தொடங்கின. அவற்றின் பெயர்களில் சிலதையும் உதாரணத்துக்காக பார்ப்போம். வீரகேசரி, தினகரன், தினதபால், காந்தி, நேத்தாஜி, இந்திய கேசரி.

நாற்பதுகளில் ஹட்டனிலிருந்து நடேசய்யர் வெளியிட்ட ஏட்டின் பெயர் சுதந்திரபோர். தலாத்து ஓயாவிலிருந்து கே.கணேசும் கே.ராமநாதனும் வெளியிட்ட சஞ்சிகையின் பெயர் பாரதி. கல்ஹின்னையில் இருந்து எஸ்.எம்.ஹனிப்பா, சமுதாயம் என்ற ஏட்டையும் கொழும்பில் இருந்து டி.எம்.பீர்முகமது நவஜீவனையும் வெளியிட்டனர். கம்பளையிலிருந்து தமிழ்ப் பித்தன் ஈழமணியை வெளியிட்டார். கா.ப. சிவமும் மு.கு.ஈழக்குமாரும் கண்டியிலிந்து ஐம்பதுகளில் வெளியிட்ட ஏடு முத்தமிழ் முழக்கம். அறுபதுகளின் ஆரம்பத்தில் சி.வி.வேலுப்பிள்ளை வெளியிட்ட இதழ் “கதை”. பதுளையிலிருந்து முத்தையாப்பிள்ளை வெளியிட்ட இதழ் “கலை ஒளி.” மல்லிகைக் காதலன் வெளியிட்டது மல்லிகை.

இவைகள் ஒரு சில உதாரணங்கள் மட்டுமே, வெளிவந்த அத்தனை ஏடுகளுமல்ல.

இருபதுகளிலிருந்து அறுபது வரையிலான ஏடுகள், இதழ்கள், சஞ்சிகைகள் ஆகியவற்றில் ஒரு தொன்னுhறு வீதம் சரியென்று ஒத்துக்கௌளும் ஒரு பட்டியல் எடுத்தால் ஏறத்தாழ நுhறு பெயர்கள் அடங்கும். அந்த நுhறிலும் “மலைநாடு” என்று பொறித்துக்கொண்டு வந்தவையாக ஒரு இரண்டு அல்லது மூன்றே இருக்கும். கவிஞர் பீ.ஆர்.பெரியசாமி வெளியிட்ட மலைநாடு ஏ.எம்.துரைசாமி வெளியிட்ட எங்கள் மலை நாடு போன்றவை சில உதாரணங்கள்.

ஆனால், அறுபதுக்குப் பின்னெழுந்த அத்தனை ஏடுகளும் ஏதாவது ஒருவிதத்தில் மலையகத்தை பொட்டிட்டுக்கொண்டே வந்திருப்பதனை நாம் காணலாம்.

பெயர்களே தங்கள் பயணத்தின் நோக்கங்களுக்கான சாட்சியங்களாய்த் திகழ்கின்ற முகிழ்வை அறுபதுகளுக்குப் பின்பே காண்கிறோம்.

மலைமுரசு, மலைப்பொறி, மலைமுழக்கம், மலைதேவி, மலைமணி, மலையருவி, மலைககுரல், மலைமடல், மலைக்குருவி, மலைக்கண்ணாடி, குறிஞ்சி, குன்றின்குரல் என்று பட்டியல் நீளும்.

இதைத்தான் அறுபதுக்குப் பிந்தியவர்களின் மலையகம் பற்றிய உணர்வு என்று முன்னர் குறிப்பிட்டேன். இந்த உணர்வை ஏற்படுத்திய மலையக இளைஞர் இயக்கங்களின் பணிகள் போற்றுதலுக்குரியவை.  

சிவலிங்கம் அவர்கள் ஹைலன்ஸ் கல்லூரியின் ஆசிரியராகவும் பிறகு அதிபராக பணியேற்ற காலம் ஈழத்து தமிழ் இலக்கியத்தின் மறுமலர்ச்சிக் காலம். மலையக இலக்கியம் சிலிர்த்துக் கொண்டு எழும்பிய காலம். அறுபதுகளில் அவர் ஏற்பாடு செய்து நடத்திய கல்வாமாநாட்டுக்கு பதுளையிலிருந்து பாரதி கல்லூரி ராமசாமி, சற்குருநாதன், பெரி.கந்தசாமி, ஆகிய நண்பர்களுடன் அப்போதுதான் எழுதத் தொடங்கியிருந்த நானும் கண்டி சென்றேன். சென்றேன் என்பதை விட இழுத்துக் கொண்டு செல்லப்பட்டேன் என்பதே சரி. சிவலிங்கம் அங்கு இருந்தார். என்னுடைய சிறுகதைகள் பற்றி அவர் என்னுடன் சிலாகித்து பேசியது என்னை புல்லரிக்கச்செய்யது.

எங்களுடைய படைப்புக்கள் பற்றி எவருமே எதுவுமே பேசாத நாட்கள் அவை. கருத்துக்கூறாத காலங்கள் அவை. அப்பேர்பட்ட நாட்களில் என்னுடைய கதைகளின் ஓருசில வரிகளைகூட கூறிக்கூறி வியந்தார். என்னால் நம்ப முடியவில்லை. ஒரு கதையை எழுதி பல இன்னல்கள் காத்திருப்புக்களின் பின் அது பத்திரிகையில் வருகிறது அடுத்தடுத்த வாரங்களில் அவை பழைய கதைகளாகி போகிறது என்பது போன்ற என்னுடைய ஆரம்ப கால நினைவுகளுக்கு அவருடைய வார்த்தைகள் மரண அடி கொடுத்தன.

எழுத்தின் வலிமையை அதன் பயனை படைப்பின் போது நிகழ்கின்ற வேதனையை வெளிவந்த பின் கிடைக்கின்ற சுகானுபவத்தை அவருடைய இடைக்கிடையிலான வார்த்தைகள் என்னை உற்சாகப்படுத்தின. கல்வி மாநாட்டுக்கான மேடை ஒழுங்குகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஓடி ஆடி அவைகளை கவனித்தபடியே இடைக்கிடை என்னிடம் வந்து உரையாடுவார். பிறகு ஓடி விடுவார்.

காற்று கடலில் நீல அலைகள் எழுப்புவதைப்போல இந்தத்தேயிலை மலைகளில் பச்சை அலைகளை எழுப்புகிறது.’ என்று ஒரு கதையில் எழுதியிருந்தேன். அந்த வரிகளை அப்படியே கூறினார்.

நானும் அந்த அலையை கண்டிருக்கின்றேன் நின்று அதிசயித்திருக்கின்றேன். ஆனால் அந்த அதிசயத்தை ஒரே ஒரு ஒரு வரியில் எழுதிக் காட்டியது தெளிவத்தை தான் என்றார். நான் சில்லிட்டுப்போயிருந்தேன்.

தெளிவத்தையில் இருந்து கண்டி வந்த களைப்பெல்லாம் மாயமாகப்போய் விட்டது.

இன்னும் கூடுதலாகவும், உற்சாகத்துடனும் எழுத வேண்டும் என்னும் உந்துதலை அவருடைய வார்த்தைகள் எனக்குள் அலை எழுப்பின.
பாட்டி சொன்ன கதைத் தெரிவின் மூலம் ஒரு சிருஷ்டியாளனை கண்டுபிடித்திருக்கின்றோம் என்று நண்பர்களிடம் கூறி மகிழ்ந்தார். கூட்டம் தொடங்க இன்னும் நேரம் கொஞ்சம் இருக்கிறது.

வீட்டுக்குக் கூட்டிச் சென்றார். திருமதி சிவலிங்கம் இன்முகத்துடன் வரவேற்றார். பாரதி ராமசாமி, சற்குரு போன்றவர்கள் சரோஜினி அம்மையாருக்கு ஏலவே பழக்கமானவார்கள் பின்னால் ஒதுங்கி நின்று கொண்டிருந்த நான் புதியவன்.

திஸ் இஸ் தெளிவத்தை என்ற அறிமுகத்தைத் தொடர்ந்து ‘ஓ கோட்’ என்ற குரலுடன், வெல்கம் வெல்கம் என்ற அந்த வரவேற்பின் வசீகரம் என்னைக் கவர்ந்தது.

தேனீர் குடித்துக் கொண்டிருக்கும் போது என்னிடம் கேட்டார்கள் ‘நீங்கள் கேரளமா’ என்று. எனக்குப் புரியவில்லை கேள்வியைத் தொடர்ந்து கேள்விக்கான விளக்கம் வெளிவந்தது.

மலையாள இலக்கியவாதிகள் தான் தங்களுடைய ஊரின் அல்லது கிராமத்தின் பெயரை முன்நிறுத்தி தங்களின் பெயருடன் இணைத்துக் கொள்வார்கள் என்று.

தகழி – வைக்கம் - பொன்குன்னம் என்பது போல்.

ஒரு 40 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விடியம் என்றாலும் நேற்றுப்போல் இருக்கிறது அந்த இனிய நினைவு.

கூட்டம் ஆரம்பமானது.

மலையகக் கல்வி பற்றிய அரசியல்வாதிகளின் கருத்து விரும்பத்தக்கதாக இருக்கவில்லை.

கவ்வாத்து வெட்டப்போகும் ராமசாமிக்கும் கொழுந்தெடுக்கப் போகும் மீனாட்சிக்கும் கல்வியால் என்ன பயன் என்றும் தென் ஆபிரிக்காவில் கறுப்பின மக்களை பஸ்ஸில் ஏறவிடமாட்டார்கள் இங்கு இவர்கள் அப்படியான நடத்தபடுகின்றார்கள். நாங்கள் எவ்வளவு பெருந்தன்மையாக நடந்து கொண்டிருக்கின்றோம்…. என்றெல்லாம் பேசினார்கள்.

சிவா கடைசியாகப் பேசினார். சிரித்த முகமும் சீற்றம் கொண்ட தொனியுமாக அவர்கள் முன் வைத்த அனைத்து கேள்விகளுக்கும் இன்னொரு கேள்வி எழாத வகையில் பதில் கூறினார். கருத்துக்களை முன் வைக்கும் லாவகம் கண்டு சரளமான அவரது ஆங்கிலப் பேச்சு நடை கண்டு பிரமித்துப் போனார்கள் முன்னைய பேச்சாளர்கள்.

நாங்கள் உங்களிடம் எந்த சலுகைகளையும் எதிர்ப்பாக்கவில்லை – எங்கள் உரிமைகள் பற்றியே குரல் கொடுக்கின்றோம் என்று முடித்தார். 

அண்ணாவின் பேச்சை நான் கும்பகோணத்தில் கேட்டிருக்கின்றேன். மேடைப்பேச்சுக்காக அண்ணாவால் போற்றப்பட்ட சிவா அவர்களின் பேச்சு என்னையும் பிரமிக்க வைத்தது. அவருடைய பேச்சைக் கேட்கவே இளைஞர்கள் அவரை சூழ்ந்திருந்தனர் என்பது எத்தனை மகத்தான உண்மை.

மலையக இலக்கியம் பற்றிய அவருடைய நேர்காணல்கள், கட்டுரைகள், எங்கள் எழுத்துக்கள் அநாதைகள் அல்ல என்கின்ற தைர்யத்தைக் கொடுத்தன.

கொழுந்து நிறுத்து முடித்த பெரட்டுக்களத்தில் இங்கொன்று அங்கொன்றாக கொழுந்துகள் சிதறிக் கிடந்தன. மேலே வானத்தில் மின்னித்திரியும் நட்சத்திரங்கள் போல. என்று ஒரு கதையில் எழுதியிருந்தேன்.

இது பற்றியும் இன்னும் சில உவமானங்கள் பற்றியும் மேடைகளில் வியந்து பேசியிருக்கின்றார் சிவா.

சிந்திக்கிடக்கின்ற கொழுந்திலைகளை வானத்து நட்சத்திரங்கள் போல் காணுகின்ற மனம் கொண்ட எழுத்தாளர்களை இந்த மலையகம் கொண்டிருக்கிறது.

நம்மை மதிக்கின்ற மனம் நமக்கும் வேண்டும் அந்த மனம் தெளிவத்தையிடம் இருக்கிறது என்று பேசியிருக்கின்றார்.

சமூகவியலாளர்கள் கூறுகின்றார்கள் ஒரு சமூகம் தன்னைத்தானே மதிக்கும்போதும் தங்களது குறைகளை உணர்ந்து அவைகளை நிவர்த்திக்க முனையும் போதுமே அந்த சமூகத்திற்கான அபிவிருத்தி ஏற்படுகின்றது என்று.

ஒரு எதேட்சையாக நான் எழுதியவற்றைத் தகுதியான இடங்களில் பொருத்திப் பார்க்கின்ற – பொருத்திக் காட்டுகின்ற ஆளுமை அவரிடம் இருந்தது.

80 ஜனவரியில் என்னுடைய நாமிருக்கும் நாடே வெளியீட்டு விழா கொழும்பில் என்.எஸ்.எம் ராமையாவின் தலைமையில் நடைபெற்றது. மலைநாட்டு எழுத்தாளர் மன்றம் ஒழுங்கு செய்திருந்த இந்தக் கூட்டத்தில் பெரியார் சிவா பிரதம பேச்சாளராக வரவழைக்கப்பட்டிருந்தார். திரு.வாமதேவன், கே.கணேசலிங்கம் ஆகியோரும் உரையாற்றினர்.

இர.சிவலிங்கம் அவர்கள் தனதுரையின்போது, ‘மலையகம் என்ற உணர்வுக்கு தனது எழுத்தாற்றலால் உருவம் கொடுத்தவர் தெளிவத்தை ஜோசப்’ என்று பேசினார்.

ஈழத்து விமர்சகர்களால் ஒதுக்கப்பட்டு, பேசப்படாத எழுத்துக்களாகிவிட்ட மலையக இலக்கியம் பற்றி குறிப்பாக எனது எழுத்துக்கள் பற்றிய சிவாவின் கருத்துக்கள் எனக்கு ஒரு சக்தியைக் கொடுத்தன.

செந்தூரனும் அவரும் தாயகம் சென்ற பின் தொலைந்தார்கள் பாவிகள் என்று சந்தோஷித்தவர்கள் உண்டு.

அரசியல் காரணங்களுக்காக அவர் ஹைலன்ஸ்ஸிலிருந்து பதவி நீக்கம் செய்யப்பட்ட போதும் சந்தோஷித்தவர்கள் உண்டு.

மல்லியப்பு நகரில் உயர்கல்வி நிலையம் ஒன்றை அமைத்திருந்தார். பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரும் மாணவர்கள் அவரிடம் கல்வி பயில வந்தனர். வருமானம் போதுமானதாக இருக்கவில்லை தற்காலிகமாக அட்டனை விட்டு வெளியேறினார் என்று குறிக்கின்றார் சாரல் நாடன்.

1991 இல் இதே மல்லியப்பு நகரில் லோயல் கல்வியகத்தை நடத்தியவர் மல்லியப்பு சந்தி திலகர். சமூகத்தின் விழிப்புக்கும் விருத்திக்கும் கல்வி புகட்டுதல் என்ற குறிக்கோளுடன் இயங்கிய லோயல் கல்லூரியில் கணிதவியலாளர் அமரர் கே.ஜீவராஜன் கணிதம் படிப்பித்திருக்கின்றார். இந்தக் கல்லூரியின் 10 ஆது நிறைவு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து சிறப்பித்தவர் திரு.வாமதேவன் அவர்கள் என்பதுவும் ஹைலன்ஸ் கல்லூரியின் தவிர்க்கமுடியாத ஒரு கணிதவியல் ஆசிரியராக கே.ஜீவராஜன் பணியாற்றினார் என்பதுவும் குறிப்பிடக்கூடியதே.

தமிழகம் சென்று திரும்பிய சிவா இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் இணைந்து செயலாற்றினார்.

வாலிபர் சங்கம் அமைத்து செயற்பட்டபோது சங்கடப்பட்டவர்களுக்கும், பதவியிழந்தபோது பரவசம் கொண்டவர்களுக்கும், தாயகம் சென்றபோது ‘படித்தவர்கள் எதைக் கிழித்தார்கள்’ படிக்காத எம் மக்களே எனது பலம் என்று பரிகசித்தவர்களுக்கும் அவர் தேவைப்பட்டார். பலவிதமான விமர்சனங்கள், ஏச்சுப்பேச்சுக்கள் முன்வைக்கப்பட்டன. விளக்கங்கள் அளிக்கப்பட்டன.

என்னைப்பொருத்தவரையில் நோயிருக்கும் இடம்தான் வைத்தியனுக்குரியது என்பது மாத்திரமே.

தமிழகம் சென்று திரும்பிய பின் மூன்று தடவைகள் நான் அவரை சந்தித்துப் பேசியிருக்கின்றேன்.

துரைவியவர்களின் அலுவலகத்தில் அவருடனான சந்திப்புடன் மலையகச் சிறுகதைகள்’ தொகுதியை அவருக்கு கையளித்தோம். அதில் அவர் எழுதிய ஒரே கதையான ‘முன்னவன் சொத்து’ என்ற கதையை சேர்த்திருந்தேன். இதுகுறித்து மிகவும் மகிழ்ந்திருந்தார். ர்ழற னனை லழர பநவ வை என்று ஒரு உற்சாகம் கலந்த களிப்புடன் கூறினார்.

கவிஞர் மலைத்தம்பியின் அகால மரணத்தின் பின் அவரது பு+தவுடல் கலாபவனத்தில் வைக்கப்பட்டிருந்தபோது கலாபவனத்தில் சிவலிங்கம் அவர்களை சந்தித்தேன்.

கவிஞரின் பு+தவுடலை சுட்டிக்காட்டி ‘இவை எல்லாம் நான் கண்ட கனவுகள் ஒன்வொன்று நனவாகிறது’ என்று எனது காதுக்குள் கூறினார்.

மலையகம் என்கின்ற அடையாளம், உழைக்க வந்தவர்கள் என்கின்ற பெருந்தோட்ட மக்கள் குழுமத்தை மையமாகக் கொண்டே வளர்ந்ததன்று.

உழைப்பதற்குப் படிப்புத்தேவையில்லை என்ற ஒரு கருத்து பொதுவாகவே நிலவிவருகிறது.

‘நுனரஉயவழைn ளை னயபெநசழரள றநயிழn வழ வாநளந pடயவெயவழைn றழசமநசள’

என்ற காலனித்துவ ஆட்சியாளர்களின் கருத்து தோட்டங்களை ஆட்சி செய்த வௌளைத் தோல்வீரர்களின் கருத்தாக இருந்து வந்தது. கறுப்புத்தோல் வீரர்களும் அதே கொள்கையுடனும், படிக்காத இந்த மக்களின் ஒற்றுமையே தமது பலம் எனும் புளகாங்கிதத்துடனும் அரச நடைபயின்று கொண்டிருந்த காலத்தில் மலையக கல்வி யுகத்தின் தளபதியாக ஹைலன்ஸ் கல்லூரியை முன்னிறுத்தி சிவலிங்கம் தோன்றியது.

சிவலிங்கம் என்பது இந்துமக்களின் அடையாளம், சிலுவை கிறிஸ்தவமத அடையாளம் என்பதைப்போல.

இந்த அடையாளங்கள் பற்றி ஆராய்பவர்கள் மரணத்தின் அடையாளமான சிலுவையைவிட மனிதவிருத்தியின் அடையாளமான சிவலிங்கம் சிறப்பானது என்கின்றனர். அது நமக்கு இந்த இடத்தில் தேவையற்றது.

ஆனாலும உழைக்கும் மக்களின் கல்விக்காக சிலுவை சுமந்த சிவலிங்கம் கல்வியாளர்களை உருவாக்கினார். அந்த உருவாக்கத்தின் சாட்சிகளாக நீங்கள் ஒவ்வொருவரும் அமர்ந்திருக்கிறீர்கள்.

கல்வியை முன்வைத்த இந்தபோராட்டங்களால் சங்கடப்பட்டவர்களும், எதிர்த்து நின்றவர்களும் மலையகக் கல்வியலுக்குள் உள்வாங்கப்பட்ட கதைகளை வரலாறு சுட்டிக்காட்டுகின்றது.

அண்மையில் மரணித்த ஹைலன்ஸ் கல்லூரியின் கணிதவியல் ஆசிரியரான கே.ஜீவராஜன் அவர்களது நினைவுமலரில் கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்கள் பிரதி ஆணையாளர் லெனின் மதிவாணம் அவர்கள் கூறியுள்ள ஒரு கருத்தை இங்கு மேற்கோள்காட்டலாம் என எண்ணுகிறேன்.

‘மலையகசமூகத்தவர் பலர் இன்று கல்வித்துறையில் முன்னேறிவிட்டார்கள் என்றும் ஆசிரியர்களாக உயர் அதிகாரிகளாக சட்டத்தரணிகளாக வைத்தியர்களாக உள்ளனர் என்று கணிப்பிட்டு மலையகத்தின் ஒட்டுமொத்தமான கல்வி வளர்ச்சியை மதிப்பீடு செய்வது அபத்தமானது. இது சமூக அளவில் மலையக மக்களின் கல்விவளர்ச்சியின் அளவுகோள் இல்லை’ என்கின்றார்.

இவர்கள் தனது சமூக அக்கறையுடன் செயற்படவேண்டும். இந்தச் சமூக அக்கறை என்பது ஏதோ தன்னை இழந்து, மனைவி மக்கள், குடும்பம் என்பதை மறந்து சமூக சேவை ஆற்றுவது என பொருள்படுவது அல்ல.

ஒரு தோட்டத்தொழிலாளி அரசியல் உரிமைபெற்று பொதுவாழ்வில் ஈடுபடலாம். பொருளாதார வசதிகள் பெற்று வாழ்க்கைத்தரத்தை உயர்த்திக்கொள்ளலாம். ஆனால், தன் குடுபத்தை கவனிக்காதபோதும், பிள்ளைகளை சரியாக வளர்க்காதபோதும், அவர்களது கல்வி பற்றிய செயற்பாடுகளில் அக்கறை காட்டாத போதும் அவனுடைய குடும்பத்தின் எதிர்காலம் பிரச்சினைக்குரியதாக மாறிவிடும்.

ஒரு குடும்பத்தலைவனாக அவனுடைய கடமைகளை அவன் செய்வதே ஒரு சமூக அக்கறைதான். தங்களுடைய உடல் நலத்தில் தாங்களே கவனம் எடுத்து நோயின்றி வாழ முயற்சிப்பதும் ஒரு சமூகக்கடமை தான் என்பதைப் போலவே எதிர்காலப் பிரஜைகளான மாணவர்களை உருவாக்குவதும் ஒரு சமூகக்கடமையே ஆகின்றது.

ஆசிரியர்கள் அதிபர்கள் கல்விப்பணிப்பாளர்கள் என்று நம்மவர்கள் நிறையவே இருக்கின்றார்கள். மாதம் முடிந்தால் சம்பளம் என்பதற்காகவன்றி அந்தச் சமபளத்துக்கான உழைப்பை, சேவையைச் சரியாகச் செய்வதே ஒரு சமூகக்கடமைதான்.

அண்மையில் ஒரு மலையகக் கல்லூரியில் சாதாரணதர, உயர்தர மாணவர்களுக்கான சிறுகதைப் பட்டரை ஒன்றுக்கு சென்றிருந்தேன். உடன்வந்திருந்தவர் உரையாற்றியபோது தமிழ்ச்சிறுகதையின் மூலவர்கள் பற்றிக்குறிப்பிட்டபோது வ.வே.சு அய்யர்பற்றி குறிப்பிட்டார்.

கலந்துரையாடலின்போது ஒரு மாணவன் அய்யரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ பற்றிக் கூறினார். வ.வே.சு அய்யர் என்பதில் வ.வே.சு என்பது எதைக்குறிக்கிறது என்று இன்னொரு மாணவர்கேட்டார். எனக்கு மகிழ்வாக இருந்தது.

இந்த மாணவர்களின் ஆசிரியர்களை எண்ணி பெருமைகொண்டேன். ஒரு ஆசிரியரின் கடமைகளை நமது ஆசிரியர்கள் சரியாகச்செய்தாலே போதும். ஒருசிறப்பான மாணவர் சமூகம் உருவாகிவிடும்.


எனக்கு இதேபோல் இன்னொரு அனுபவமும் கிடைத்தது. நாவல் பற்றிபேசுவதற்கு அழைக்கப்பட்டிருந்தேன். கூட்டம் தொடங்க நேரம் இருந்தது. மாணவ மாணவிகள் குழுமியிருந்தனர். மாணவர்களிடம் ஏதாவது கேள்விகேளுங்கள் என்றார்கள்.

பேரிதாக எதையாவது கேட்டு மாணவர்களை திகைக்கவைக்க வேண்டாம் என்று எண்ணியபடி யாராவது ஒரு மலையக எழுத்தாளரின் பெயரைச் சொல்லுங்கள் என்றேன்.
மாணவர்கள் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர். பதிலையே காணவில்லை. அதே கல்லூரியல் உரையாற்ற என்னுடன் வந்திருந்த நண்பர் மெதுவாக என்னிடம் கூறினார் ‘ஆசிரியர்மாருக்கு தெரிந்திருந்தால் தானே மாணவர்களுக்குத் தொரியும்’ என்று.

எத்தனை வருத்தமாக இருந்தது? இவைகளில் இருந்து நாம் விடுபடவேண்டும். வெளியே வரவேண்டும்.

வாசிப்பு என்பது நமது மத்தியில் அரிதாகிவிட்டது. நேரமில்லை என்று ஒரு சாட்டு வைத்திருப்போம்.

தொலைக்காட்சி முன் உட்கார்ந்துகொண்டிருக்க கைத்தொலைபேசியைக் வைத்து நோண்டிக் கொண்டிருக்க, பேசுங்கள், பேசுங்கள் என்று கைத்தொலைபேசியில் பேசிக்கழிக்க நேரமிருக்கிறது. ஆனால் வாசிக்க நமக்கு நேரமிருப்பதில்லை.

‘வாசி’ என்பதைத் திருப்பி போட்டால் சிவா தான் நிற்கின்றார். உலகமயமாதலின் கோளாறுகள் நம்மை நிமிரவிடாமல் கூன வைக்கின்றன. பாரமேற்றப்பட்ட முதுகுபோல் சி.டி, டி.விடி, மொபைல், கேபிள், இன்டர்நெட் என்று எத்தனையோ கோளாறுகள்.

நமக்கு மட்டுமல்ல இந்த பிரச்சினைகள் மேலைநாடுகளுக்கு புலம் பெயர்ந்த ஈழத்தமிர்களும் கூட தங்களது தமிழ் அடையாளங்களைத் தொலைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதற்காக நாமும் நமது அடையாளங்களைத் தொலைத்துவிடத் தேவையில்லை.

இந்தியா எவ்வளவு பெரிய நாடு. அவர்களின் நமக்கு வேண்டும். அது அரசியல் ரீதியானதாக. அதற்காக இலங்கையின் இந்தியத்தமிழர்கள் என்கின்ற அடையாளம் நமக்கு முக்கியம் என்னும் குரல்களும் கேட்கத் தொடங்குகின்றன.

இந்தியத்ததமிழர் என்கின்ற அiடாளம் நமக்கு எந்த நன்மைகளையும் செய்துவிடப் போவதில்லை.

இந்தியாவில் தமிழகத்தில் இருந்து புலம் பெயர்ந்தவர்களை இலங்கையராகவே நாம் கருதுகின்றோம் என்று ஆதியிலிருந்தே கூறியர்கள்தான் அவர்கள்.

இலங்கைத்தமிழர், இலங்கைத்தமிழர் என்று அவர்கள் கண்ணீர் வடிப்பது ஈழத் தமிழர்களுக்காகவும் இல்லை, நமக்காகவும் இல்லை என்பது நமக்கு தெரியாதது அல்ல.

இந்திய தமிழகத்தில் இருந்து சென்று இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் தொழில்புரியும் தமிழர்கள் ‘மலையகம்’ என்றே தங்கள் வாழ்விடங்களை அடையாளப்படுத்துகின்றனர். லயம், பீலிக்கரை, தேயிலைத்தோட்டம், என்பவை மலேஷியாவுக்கு மட்டும் உரித்தானவை அல்ல இலங்கையில் வாழ்கின்ற ஒரு பகுதி தமிழ்மக்களுக்கும் அவை உரித்தானைவைதான் என்று கொலம்பஸ் அமெரிக்காவைக்கண்டு பிடித்தது போல் ஒரு தமிழகப் பல்கலைக்கழகப் பேராசியரியரே வியப்புறும் போது அரசியல்வாதிகள் பற்றி கேட்கவும் வேண்டுமா?

அப்படியான ஒரு நாட்டின் அடையாளம் நமக்கு என்ன செய்துவிடப் போகின்றது? இங்கேயும் காணிபு+மிகள் அங்கேயும் காணிபு+மிகள் என்று ஓஹோ என்றிருப்பவர்களுக்கு இந்த இரட்டைப் பிரஜாவுரிமைகள் அவசியம்தான்.

இலங்கை பிரஜாவுரிமைக்கே பேப்பர் பிரஜையாகித் திரிந்தவர்கள் நாங்கள்.

மலையகத்தவர்கள் என்ற அடிப்படையில் நமக்கான பிரச்சினைகளும் கடமைகளும் மேலும், மேலும் சமூக உணர்வுள்ள நமது இளைஞர்களின் பணிகளை வேண்டி நிற்கின்றன.

குறிப்பாக மலையகம் என்கின்ற அடையாளத்தை இன்று இடையறாது தூக்கி பேசிக்கொண்டிருக்கும் மலையக இலக்கியம் குறித்து நமது இளைய சமுதாயம் முனைப்புடன் செயற்படவேண்டிய தேவையுள்ளது என நினைக்கிறேன். மறுபுறம் அது நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்கிற மன நிறைவும் எனக்குள் எழுகின்றது. சிவனு மனோகரன், மல்லியப்பு சந்தி திலகர், லுணகலை ஸ்ரீ, வே.தினகரன், புனிதகலா, பிரமிளா பிரதீபன், கந்தையா கணேசமூர்த்தி, சிவலிங்கம் சிவகுமார், சசிகலா என இளைஞர் பட்டாளம் ஒன்று மலையக மண்வாசனையோடு படைப்புக்களை எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

மறைந்த பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பி அவர்கள் ஒரு கட்டத்தில் குறிப்பிடுகின்றார். ‘ஈழத்து இலக்கியம் என்கிற நதி யார் விரும்பியும் விரும்பாமலும் பல ஓடைகளின் சங்கமிப்பாக அமைகின்றது. அதற்குள் யாழ்ப்பாணம் வரும், மட்டக்களப்பு வரும், வன்னி வரும், கொழும்பு வரும், இஸ்லாமிய வாழ்க்கை வரும், மலையகம் வரும். நான் நம்புகின்றேன். இந்த எல்லா ஓடைகளின் சங்கமிப்புத்தான் ஈழத்து இலக்கிய நதி என்கிற நதி என்பதன் பிரவாகமாக அமையும் என்று’

எனவே ஈழத்து இலக்கியம் என்கிற நதியின் பிரவாகத்தில் கலந்திருக்கும் மலையக இலக்கியம் தான் மலையகம் என்கிற அடையாளத்தை இலங்கையின் மற்றைய சமூகத்தோடு இணைத்துப்பார்க்கச் செய்யும் பாரிய பங்ளிப்பைச் செய்கின்றது என்பது மறுக்கப்பட முடியாததது.



நேற்றென்பது ஓடிவிட்ட ஒன்று
நாளை என்பது நமக்கில்லை
இன்றென்பதே நிஜம்

என்கின்றனர் ஞானிகள்.

ஆனாலும் நமக்கு சொந்தமில்லாத நாளைகளை நமதாக்கிக் கொள்ளும் தைரியத்தையும், வழிகளையும் நம்பிக்கைகளையும் நமக்கு தந்துவிட்டே சென்றிருக்கின்றனர் நமது முன்னோடிகள்.

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates