Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

வெந்து தணிந்தது காலம் சிறுகதை நூல் வெளியீடு


மு.சிவலிங்கத்தின்

வெந்து தணிந்தது காலம்

சிறுகதை நூல் வெளியீடு

மலைநாட்டு எழுத்தாளர் மன்றத்தின் அழைப்பிதல்

காலம் : 16.03.2014
நேரம் : பி.ப 4.30
இடம் : கொழும்பு தமிழ் சங்கம்

நாம் பேசுவோம் ; நமக்கான விடுதலை குரலை ...!


எழுத்து சான்றுகளிலிருந்து வரலாறு தோன்றினாலும் நமக்கு உழைப்புதான் நமக்கான வரலாறாக கட்டியம் கூறி நிற்கிறது.

சாதியம் நின்று கொல்ல, வறுமை போக்க புதிய இடம் தேடினோம். கங்காணிகளிடம் அகப்பட்டு அடி மாடுகளை போல மலைகளை நோக்கி ஒட்டி செல்லப்பட்டோம்;

கடல் கடந்தோம்; நமக்கான பாதைகளை நாமே கண்டோம் ; நடந்தோம் ; பல்லாயிரம் உயிர்களை பறிகொடுத்தோம் ;

எஞ்சிய உயிரை கொண்டு மலைகளை பொன்விளையும் பூமியாக காப்பி ,தேயிலை பயிர்களால் மாற்றினோம்.

உழைப்பை சுரண்ட தெரிந்த வெள்ளையனுக்கு உழைக்கும் கைகள் வேண்டும் என்பதால் உடலில் உயிரை தேக்கி வைக்கும் அளவிற்கே 'படியளந்தான் ' என்பதை நாம் அறிவோம் .

ஒன்றரை நூற்றாண்டு இலங்கையின் எல்லா இன மக்களுக்கும் ( பூர்வீக இலங்கைத்தமிழர் ,சிங்களவர் ,இஸ்லாமியர் ) எதோ ஒரு வகையில் நம் உழைப்புதான் உதவியிருக்கிறது .ஆனாலும் அடக்குமுறை சட்டங்களாலும் . துரோக உடன்படிக்கைகளாலும் நாம் சிதறடிக்கப்பட்டோம். உள்நாட்டிலேயே புலம் பெயர்ந்தோம் . 'காடையர்களின் ' வன்முறையில் உறவுகளை இழந்தோம். தாய் நிலத்தை நோக்கி விரட்டப்பட்டோம் . புதிய சூழலும் உறவை பணமாக பார்த்த சொந்தங்களும் தேயிலை காடுகளையே தேடும் நிலைக்கு தாய் தமிழகத்தில் ஆளானோம். தேயிலை தோட்ட வாழ்வின் இருநூறு ஆண்டு காலங்களை நிறைவு செய்ய போகிறோம் . நம்மை கடலின் இருகரைகளில் தத்தளிக்க செய்த துரோக உடன்படிக்கையான சிறிமாவோ பண்டாரன நாயக்க - லால்பகதூர் சாஸ்திரி (1964) ன் ஐம்பது ஆண்டு காலம் 2014 உடன் நிறைவுறுகிறது. இலங்கை ,இந்தியா என இரு நிலங்களிலும் நம் வாழ்வு சில மாற்றங்களுடன் அதே கொத்தடிமை முறை தொடர்கிறது. தொண்ணூறுகளுக்கு பின் அமுலான உலக மயம் , அதன் தொழில் முதலீடுகள் , நில ஆக்கிரமிப்புகள் எஞ்சிய வாழ்வையும் சிதறடித்து ' சுதந்திர அடிமையாக ' மாற்றுகிறது . இலங்கையில் தொழிற்சங்கவாதம் . வாக்கு சீட்டு அரசியல் , குழு மனப்பான்மை , போன்ற எல்லைகளுக்குள் நம் அரசியல் முன்னெடுப்புகள் முடங்கிபோகிறது . ஓரளவு கல்வியும் , சமூக விழிப்புணர்வும் உள்ள பலர் தங்கள் 'அடையாளத்தை ' மறைப்பதில் விழிப்பாக உள்ளனர். இங்கே தொன்று தொட்டு பேசி வருகிற ஈழ விடுதலை அரசியலின் பெருத்த ஓசையில் நம் குரல் காணாமலே போகிறது . இருக்கும் ஓரிரு தலைமைகளும் தன் பிழைப்புவாத வாழ்க்கைக்கு தொழிலாளிகளை வாக்கு வங்கி அரசியலுக்கு மடை மாற்றி பேரம் பேசுவதிலும் , அவர்கள் விழிப்பு அடைந்து விடாத படியும் கவனமாக 'பார்த்து'கொள்கின்றனர்.

ஆக நமக்கு அரசியல் வரலாறு துரோகத்தாலும், துரோக தலைமைகளாலும் நம் வாழ்வு மூழ்கடிக்கபட்டிருக்கின்றன. இது இரு நாடுகளிலும் பொருந்தும் என எண்ணுகிறேன்.

இப்படியான சூழலில்தான் " பச்சைரத்தம்" ஆவணப்படம் உருவானது. தேயிலை தோட்ட தொழிலாளியின் மகனான எனக்கு மேற்கண்ட வாழ்வின் உண்மைகளும் , நண்பர்கள் , சமூக ஆர்வலர்களின் உதவிகளும் இப்படம் உருவாக காரணமாக இருந்தது. பல முறை படப் பிடிப்புகள் . நிதி போராட்டங்களுக்கு பிறகு முழுப்படம் உருவானது .பல ஊர்களுக்கு சென்று நண்பர்களின் உதவியோடு இதுவரை இருபது இடங்களுக்கு மேல் திரையிடபட்டுள்ளது.இணையத்தின் மூலம் நூற்றுகணக்கான நண்பர்கள் பார்த்துள்ளனர். இரண்டாயிரம் குறுந்தகடுகள் விநியோகம் செய்யப்பட்டுள்ளன. தமிழின் முன்னணி இதழ்கள் , அரசியல் ஏடுகள் . தொலைக்காட்சிகள் போன்றவற்றில் இப்பட செய்திகள் நேர்காணல்கள் இடம் பெற்றுள்ளது. தமிழின் முக்கிய ஆளுமைகள், அரசியல் ஆய்வாளர்கள், அரசியல் தலைமைகள் , திரைப்பட இயக்குனர்கள் போன்றோரிடம் நல்ல வரவேற்பை பெற்றன. பொதுவெளியில் விவாத பொருளாக இலங்கை -தமிழகம் தேயிலை தோட்ட தொழிலாளிகளின் வாழ்வு பேசு பொருளாக மாறி இருக்கிறது என்பதில் இப்படத்திற்கும் சிறு பங்கு உண்டு என்பதை மகிழ்வோடு சொல்லிகொள்கிறேன் . இதன் தொடர்ச்சியாக எழுத்தாளர் தமிழ்மகன் அவர்களின் 'வனசாட்சி ' நாவலும் , பத்திரிக்கையாளர் இரா . வினோத் அவர்களின் 'தோட்டகாட்டி ' கவிதை தொகுப்பு .இந்த வேளையில் தமிழக தேயிலை தோட்ட வாழ்வியலை அடிப்படையாக கொண்டு டேனியல் அவர்களால் ஆங்கிலத்தில் red tea என எழுதப்பட்டு தமிழில் மொழிபெயர்ப்பான 'எரியும் பனிக்காடு ' என்கிற நாவல் . இந்த நாவலின் காட்சி ஊடகமாக திரைப்படமான திரு பாலா அவர்களின் 'பரதேசி ' என எல்லாமே தேயிலை தோட்ட வாழ்வியலை அடிப்படையாக கொண்டவை. நமக்கு இப்படைப்புகளின் மீது சில விமர்சனங்கள் இருப்பினும் அதை தவிர்த்து பொதுவெளியில் நம் வாழ்வை நமக்காக பேசியவை என்பதையும் மகிழ்வோடு எண்ணி அவர்களுக்கு நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளோம்.

இப்போது இலங்கையின் இன்னொரு விடயமான மலையகம் பற்றியும், அதன் விடுதலை, மக்களின் எதிர்காலம் பற்றியும் பேசுவதை காண முடிகிறது .இணையதளங்களிலும், வலைப்பூ , முக நூல்களிலும் குறைந்த பட்ச உரையாடல்கள் , செய்திகள் , காண முடிகிறது. சர்வதேச அளவிலான ஒத்த கருத்துடைய நண்பர்களை இனம் காணவும், ஜனநாயக பூர்வமான உரையாடல்களை தொடரவும் முடிகிறது. நம் வாழ்வின் அரசியல் , கலை ,கல்வி , ஜனநாயக கோரிக்கைகள் போன்றவை குறித்து ஆழ்ந்து பேசுவோர் இரு நாடுகளிலும் குறைவாக இருப்பினும் நம்மிடம் உள்ள சில முரண்பாடுகளை களைந்து கூடி முன்னெடுப்புகளை மேற்கொண்டால்தான் நிறைவாக சில பணிகளை செய்ய முடியும் என எண்ணுகிறேன் . நமக்காக நாம் பேசுவோம் ; அனைத்து ஜனநாயக சக்திகளையும் குறுகிய இனம் ,மதம் , மொழி கடந்து நமக்காக ஒருங்கிணைப்போம்; பிற மக்களின் விடுதலை கோரிக்கைக்கும் குரல் கொடுப்போம் ; அணியமாவோம்.

இதே வேளையில்" பச்சை ரத்தம்" படத்தின் ஆங்கில மொழியாக்கம் செய்யவும், அதன் இரண்டாம் பாகம் தொடரவும் பெரும் நிதி தேவை படுகிறது. தங்களால் முடிந்த நிதி உதவியை செய்தால் சிறப்பாக இருக்கும். மேலும் படம் பற்றிய நேர்காணல்கள்,கட்டுரைகள் ,முழுப்படம் காண கீழ்கண்ட இணைப்பை கிளிக் செய்யவும்.நன்றி.

http://thavamuthalvan.wordpress.com/

சிவனு மனோகரனின் கோடாங்கி சிறு கதைத் தொகுப்பு விமர்சனம் - சை. கிங்ஸ்லி கோமஸ்


மக்கள் இலக்கியங்களில் தோன்றும் வாழ்வியல் சார்ந்த அழகுணர்வை மக்கள் மத்தியில் இருந்து தோற்றம் பெரும் படைப்புக்களே எடுத்துக் காட்டுகின்றன. அவையே மக்களை இலகுவில் சென்றடைந்து வெற்ற, பெற்ற, மக்கள் இலக்கியங்களாகவும் நாம் கண்டுள்ளோம். இதனூடாக இலக்கியங்கள் மக்களிடம் இருந்து அந்நியப்பட்டு போகாமல் மக்களுடன் சங்கமிக்குமானால் அதுவே படைப்பின் வெற்றியாகும்.

மலையகத்தின் அண்மைய கால படைப்புகளில் சிலவற்றை நோக்கும் போது மக்கள் எதுவுமே அறியாதவர்கள் என்னும் கருத்தினை போலவும் படைப்பாளி யாவும் அறிந்த ஞானி என்னும் சிந்தனையைய் ஏற்படுத்தும் வகையில் அமைந்திருப்பதனையும்பல படைப்புக்களில் தர்சிக்கக் கூடியதாய் உள்ளது. படைக்கப்பட்ட இலக்கியங்கள் எந்த அளவிற்கு மக்களுக்கு பிரயோசனமாக படைக்கப்பட்டது என்பதனைக் கருத்தில் கொண்டு சிவனு மனோகரனின் கோடாங்கி சிறுகதைத் தொகுப்புக்கான விமர்சனத்தினை செய்வது சிறப்பானதாகும் என எண்ணுகிறேன்.

கோடாங்கி படைப்பாளியின் இரண்டாவது சிறுகதைத் தொகுப்பாகும். இவரின் முன்னைய தொகுப்பான ஒரு மணல் வீடும் சில எருமை மாடுகளும் என்ற தொகுப்பில் காணப்பட்ட குறைப்பாடுகளை நிவர்த்தி செய்திருப்பதுடன் விமர்சகர்களின் விமர்சனங்களையும் கருத்தில் கொண்டிருப்பது வரவேற்கக் கூடிய விடயம் மாத்திரம் அன்றி படைப்பாளியின் அனுபவ முதிர்ச்சியினையும் பறை சாற்றி நிற்கின்றது.

தொகுப்பின் மொத்த கதைகள் 17 இல் 08 கதைகள் பெண்ணியம் சார்ந்த கருத்தக்களை ஏந்தி வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது சக்தி கரகம், நிமிர்வு, பாப்பா புள்ள, மட்டத்து கத்தி, ஒரு அந்த புரத்தின் அந்த ரங்கம், அம்மாயி, விட்டில்கள் ஆகிய கதைகளே பெண்ணிய கருத்தியல்களை அடிநாதமாக கொண்ட கதைகளாகும்.

விட்டில்கள்
மலையகத்தின் மாறாதிருக்கும் வறுமையும் பல கலாச்சார சீரழிவுகளும் மூட நம்பிக்கைகளும் ஆண்டாண்டு காலமாய் தலை முறை தலை முறையாய் மலையக மக்களின் எதிர்காலத்தை கேள்வி குறியாக்கியுள்ளது என்பது படைப்பாளி வாசகனின் சிந்தனைக்குக்கு கொண்டு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது’இங்கப் பாரு இந்த சனியன் கொஞ்ச நாளைக்கு கொழும்பில போய் இருக்கட்டும் வேல கூடப் பேசிட்டேன்’ என்னும் வார்த்தைகள் பல வருட காலமாக ஏமாற்றப்பட்டு காட்டி கொடுக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களின் கீழ் மட்ட பொருளாதார நிலைமையும் வாழ்க்கை செலவுப் புள்ளியை விட மட்டமான சம்பள உயர்வுகளும் கல்வி கற்க வேண்டிய பிள்ளைகளை தலைநகரின் பணக்கார வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பப் படுவதும் இது வறுமைக்கான விமோசனம் என்று எண்ணிய போதும் வீட்டு வேலைக்கு அனுப்பப் பட்டவர்களின் மர்மமான மரணங்கள் தொடர்ந்துக் கொண்டிருப்பதும் இது தொடர்பான மலையக தொழிற்சங்கங்களின் பாராமுகமான போக்கினையும் அடையாளப்படுத்துகின்றது விட்டில்கள்-பழமைத் தகர்ப்பு.

நிமிர்வு
அண்மைய காலங்களில் எழுத்தாளன் வாழும் பிரதேசங்களில் இனவாத அரசியல் பிரச்சாரங்களின் விளைவாக மனித நேயமற்ற தாக்குதல்கள் இடம் பெற்றதுவும் தினமும் பதட்டமான சூழ்நிலை தோன்றியிருப்பதுவும்; துரதிஸ்ட வசமான விடயமாகும் நடந்து முடிந்த உள்ளுராட்சி தேர்தல் காலத்தில் சிலரின் சுய நலத்திற்காய் விதைக்கப்பட்ட இன வாத நச்சு விதைகள் இன்று சிறப்பாக வளர்க்கப்பட்டு வருகின்றது வழமையாக விதைத்தவன் நெருப்பு எரியும் போது நாட்டை விட்டு ஓடி போய் வேறு ஒரு நாட்டில் பதுங்கிக் கொள்வான். சாதாரண பண்டாவும் பாலாவும் அன்வரும் பழியாகிப் போவார்கள்.மக்கள் இதனை உணர வேண்டும் என்ற பிரக்ஞையினால் எழுதப்பட்ட நிமிர்வு என்னும் கதை சிறப்பாக படைக்கப் பட்டுள்ளது. இனம், மதம், சாதி, வர்க்கம் என்பவற்றிற்கப்பால் மனிதம் விதைக்கப் படைக்கப் பட்ட கதை என்ற வகையில் சிறப்பானது. படைப்பாளியின் மத்திய தர சிந்தனை அங்கங்கே தலை நிமிர்த்துவது தவிர்க்கப் பட்டிருக்கலாம். நிமிர்வு- காலத்தின் தேவை.

ஒரு அந்தப் புரத்தின் அந்தரங்கம்
கதையின் கரு கதை சொல்லும் பானி கதாப்பாத்திரப் படைப்பு அனைத்துமே பின் நவீனத்துவ வாதியும் அண்மைய காலங்களில் அதிகமானவர்களால் விமர்சிக்கப் படுபவருமான ஜெய மோகனின் பாணியில் படைக்கப் பட்டிருப்பது விமர்சனத்துள்ளாகின்றது. சிவனு மனோகரனின் அனேகமான கதைகளிலே காணக் கூடியதான இவ்விடயம் இவரின் எதிர்கால எழுத்துக்கள் தொடர்பான சந்தேகத்தினை ஏற்படுத்தக் கூடியதாக உள்ளது இது சாதிய சாக்கடைகளை அகற்றவா?ஆளப்படுத்தவா?ஒரு அந்தப் புரத்தின் அந்தரங்கம் – விசம் , ஆணாதிக்கம்.

கோடாங்கி
கதை வாசகனுக்கா? எழுத்தாளனுக்கா?
கார்ட்டுன் தொடரைப் போன்ற கதை பூசாரியன் பிற் போக்குத்தனத்தை விட எழுத்தாளனின் சிதைவுற்ற சிந்தனைகள் சீர்த்திருத்தம் என்னும் பெயரில் சீரழிவு, பின்நவீனததுதவ போக்கினை பறைசாற்றும் மற்றுமொரு படைப்பு கோடாங்கி- யதார்த்தத்திற்கு அப்பால்
கூட்டாஞ்சோறு
மலையக அரசியலையம் வாழ்வியலையம் விமர்சிக்கும் சிறப்பான கதை மக்கள் ஐக்கியத்தை சீரழிக்கும் கொடூர மனப்பாங்கினை எடுத்துக்காட்டும் உவமைக் கதையாக காணப்படுகின்றது கூட்டாஞ்சோறு- தோல்வி, விரக்தி.
சக்தி கரகம்-பெண்  விடுதலை கேள்வி.
படர்த்தாமரை- விரக்தியின் உச்சம்.

பாப்பா புள்ள
மலையக மக்களின் வறுமையின் ரணங்களும் ஏமாற்றுத் தலைமைகளின் பொய்யான தம்பட்டங்களும் வாக்குறுதிகளும் அம்பலம் பாப்பா புள்ள- திரும்பிப் பார்க்க வைக்கும் சலனங்கள்.

மட்டக் கத்தி
ஆயுதத்தைத் தூக்கி எறிவதனூடாக படைப்பாளி எதைக் கூற முனைகின்றார் என்பது கேள்விக் குறி. மலையக மக்களின் இருப்பு இன்றும் நிலைத்திருப்பது உழைப்பிற்காய் நாம் கையில் ஏந்தும் ஆயுதங்களால் தான். உழைப்பாளர்களின் உலக அடையாளமே அறுவாள் சம்மட்டி என்பது குறிப்பிடத்தக்கது இந்த அடையாளத்தை எவறாளும் தூக்கி எறிய முடியாது. அது போலவே மட்டக்கத்தி மட்டக்கத்தி –பேதமை

புள்ளையார் பந்து
கதை எம்மை ஆடுகளத்திற்கே அழைத்து செல்வது சிறப்பம்சமாகும் வாசிக்கப்பட வேண்டிய கதை.
புள்ளையார் பந்து-புதுமை நம்பிக்கை

லயத்து குருவிகள்
வழமைக்கு மாறான கதையோடட்ம் முட்டைப்பாண்டி, தோட்டத்து தலைவர், அம்மா, அப்பா, கதை சொல்பவன் என்னும் கதாப்பாத்திரங்கள் சிறப்பான முறையில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதுடன் லயத்து குருவிகளின் வாழ்வியலுடன் மலையக பிற்போக்கு அரசிலுக்கான விமர்சனமும் புகுத்தப்பட்டுள்ளமை ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களுள் ஒருவரான எஸ் அகஸ்தியர் எழுதிய ஒரு கோடீஸ்வரப் பிரபுவுடன் ஒரு சந்திப்பு என்னும் கதையை ஞாபகபடுத்கின்றது லயத்து குருவிகள்-அனுபவப் பகிர்வு

காவி நிறத்தினிலே
தாயகம் சஞ்சிகையிலே பிரசுரிக்கப்பட்ட சிறந்த கதை அனைவராலும் வாசிக்கப் பட வேண்டிய கதை இது அனைத்து துறவிகளுக்கும் புதிதாக வரும் காலான் சமயங்களுக்கும் புதிய புதிய சாமியார்களுக்கும் விமர்சனமாய் அமைந்த கதை.காவி நிறத்தினிலே-தூற்றப் படும் துறவு.
தவலைகள் உலகம்

தவலைகளுடனும் நண்டுகளுடனும் மாத்திரம் கதை புனையப்பட்டு முடிவுற்று இருக்குமானால் சிறப்பாக அமைந்திருக்கும். கதை சொல்பவனாய் வரும் கதாபாத்திரமானது யதார்த்தமற்ற நிலையில் காணப்படுகின்றது. முற்றும் முழுதும் ஜெய மோகன் பாணியிலான கதை. மக்களுக்கு விளங்காதகதை போக்கு.தவலைகள் உலகம்-வாசகனின் விமர்சனத்திற்காய்
பச்ச பங்களா-யதார்த்தம், சினிமாத்தனம்.
கருவுலகம்-பெண்மை, பாசம, வேதனை.

அம்மாயி
சிறப்பான கதை வாசகர்களை தேயிலைத் தோட்டத்து தொழிலாளர் வாசஸ் தலமான லயத்திற்கு அழைத்து சென்றிருக்கும் கதை . படைப்பாளியின் வர்க்கக் குணாம்சம் அப்பட்டமாக வெளிப்படுத்தப்பட்டிருககின்றது வெறுமனே பக்கத்து வீட்டில் இருந்த பழகிய எனக்கே இப்படித் துடிக்கும்போது என்னும் வார்த்தைகள் தோடட்த் தொழிலாளர்களின் வாழ்வியளில் இருந்து தன்னை அந்நியப் படுத்தி காட்ட முனையும் நிலைமையினைவெளிக்காட்டுகின்றது. எழுத்தாளன் தன்னை அம்மாயியிளுன் பேரன் என்று யாரும் எண்ணி விடக் கூடாது என்பதில் அக்கறை செலுத்தும் அளவுக்கு கதையின் கருத்தியலில் அக்கறை செலுத்த வில்லை என்பது பல உண்மைகளை கூறி நிற்கின்றது. அம்மாயி-கழட்டப்பட்ட முகத்திரை.

இந்திர லோகத்தில் தோட்ட காட்டான்-வாசகர்களின் என்னத்திற்கும் விமர்சனத்திற்கும் தோட்ட காட்டான் என்னும் வார்த்தைபயன் படுத்துவது தவிர்க்கப் படல் வேண்டும்
இலக்கியம் என்பது மனித வாழ்வு சார்ந்தது என்னும் அடிப்படையில் சகல கதைகளுக்குமான ஓவியங்கள் சற்று சிந்தனையை ஸ்தம்பிதம் அடைய செய்திருக்கின்றது. பச்ச பங்களா என்னும் கதைக்காய் வரையப்பட்ட ஓவியம் வர்க்க ஏற்ற இறக்கங்களை எடுத்து காட்டும் வகையில் வரையப்பட்டுள்ளது ஓவியர் என்.எம். தங்கேஸ்வரன் பாராட்டப் பட வேண்டியவராவார் அவசரம் இல்லாமல் ஓவியங்கள் வரையப்பட்டிருந்தால்; உயிரோட்டம் நிறைந்த ஓவியங்களை பிரசவித்திருக்கலாம.

கோடாங்கி மலையக வாழ்வியலை ஆவணப்படுத்தியிருக்கும் மற்றும் ஒரு படைப்பாகும். மக்களோடு உறவாட துணிந்துள்ள படைப்பாளி மக்களின் வாழ்வியலை பேசத் துணிந்த அளவு மக்களின் விடுதலை நோக்கி அல்லது மானிட வாழ்வியல் மாற்றங்கள் தொடர்பாக பேசத்துணியாதது மக்கள் இலக்கியம் என்பது வெறுமனே ஆவணப்படுத்தவா?

அல்லது மனித மனங்களில் ஆள ஊடுருவி குறைந்தப்பட்ச விடுதலை விதைகளையாவது விதைக்கச் செய்யவா? என்னும் கேள்விகளுடன் சில கதைகளைத்தவிர மற்றய கதைகள் வாசிக்கப் பட வேண்டும் விமர்சனத்துக்குள்ளாக்கப் படவும் வேண்டும்.

மலையக எழுத்தாளர்களில் அனேகமானவர்கள் தங்களின் நடுத்தரவ வர்க்க சிந்தனைகளையும் தங்களின் படைப்புக்களில் தங்களை அறியாமலே அடையாளம் காட்டி யிருப்பதனை காணலாம்.

படைப்பாளியின் கதைகளிலும் இவ்வாரான வர்க்க குணாம்சம் அங்காங்கே தலை காட்டீயிருப்பதனை படைபபுக்களில் அவதானிக்கக் கூடியதாய் உள்ளது அப்போது முட்டைப்பாண்டியின் மறைவிற்காய் தோட்டமே கூடி நின்று அழுது புலம்பியது என்னால் அவனுக்காய் அழ முடியவில்லை என்னும் வார்த்தைகள் மக்களில் இருந்து படைப்பாளி அந்நியப்பட்டவன் என்பதனை முன்னிருத்தி நிற்க்கின்றது இந்நிலைமையானது குண்டுகளைப் போட்டு லட்சக்கணக்கான மக்களை கொன்று குவித்தப்பின் தெரு நாய்களை கொள்ளக் கூடாது என்னும் தர்மப் போதனைக்கு ஒத்ததாக காணப் படுகின்றது .

அட்டைப்படத்தில் மலையக பூசாரிக்கும் சித்தர்களுக்குமான வித்தியாசம் மிகவும் குறிப்பிடத்தக்கது வர்ணாசிரமத்திற்கு எதிராக இயங்கியவர்கள் சித்தர்கள் மலையக பூசாரிகள் பம்மாத்து வித்தைகள் செய்பவர்கள்.
எதிர்காலத்தில் சிவனு மனோகரனின் படைப்புகள், மனித நேயத்தை அடிநாதமாக கொண்ட படைப்புக்களாகவும் படைப்பாளியும் படைப்புக்களும் மக்களில் இருந்து அந்நியப்படாத மக்கள் இலக்கிய பண்புகளையும் வெளிப்பாடுகளையும் கொண்டமைய வாழ்த்துக்கள்.
நன்றி - இனியொரு

மலையக மக்களும் எதிர்காலமும் - புதிய ஜனநாயக கட்சி (1992)


மலையக மக்களும் - எதிர்காலமும்

• பிரசாவுரிமையில் இரண்டாம் தரமற்ற நிலை
• மாதச் சம்பளமும் சம்பள உயர்வும்.
• குல்வி, சேலைவாய்ப்பில் பாகுபாடற்ற முறை
• காணியும், வீடும்
• தேசிய சிறுபான்மை இன் அடிப்படையில் சுயாட்சி உள்ளமைப்பு.

கடந்த 265-12-1991 அன்று புதிய ஜனநாயகக் கட்சியின் மலையகப் பிரதேச 2-ஆவது மாநாடு ராகலையில் நடைபெற்றது. மேற்படி மாநாடு மலையகத்தின் தற்போதைய நிலைமைகள் பற்றி விரிவாக ஆராய்ந்தது. இன்றைய சூழலில் நாடும் மக்களும் எதிர்நோக்கி நிற்கும் பல்வேறு பிரச்சினைகள் மத்தியில் மலையக மக்களின் பிரச்சினைகளையும் அவற்iறை தீர்ப்பதற்கான அரசியல் மார்க்கத்தினையும் அரசியல் அறிக்கை ஸ்தாபன அறிக்கைகள் மூலம் மாநாடு தெளிவுபடுத்தியது.

மேற்படி பிரதேச மாநாட்டில் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் சி.கா.செந்திவேல், தேசிய அமைப்பாளர் தோழர் இ. தம்பையா ஆகியோர் மத்தியகுழு சார்பாக கலந்துகொண்டு உரையாற்றினர். முழுநாள் நடைபெற்ற இம்மாநாடு முடிவில் மலையகப் பிரதேசக் கமிட்டியையும் தெரிவு செய்தது, இவ்அரசியல் அறிக்கையின் முக்கியத்துவம் கருதி அதனை நூலாகா வெளியிடுகின்றோம்.

றாகலை
25-12-1991

புதிய - ஜனநாயக கட்சி
மலையகப் பிரதேசக் கமிட்டி.

மலையக மக்களும் - எதிர்காலமும்

(புதிய - ஜனநாயக கட்சியின் மலையக பிரதேசத்திற்கான இரண்டாவது பிரதேச மாநாட்டின் அரசியல் அறிக்கை)

எமது புதிய - ஜனநாயக கட்சியின் 2-வது தேசிய மாநாடு கடந்த மே மாதம் 4-ஆம். 5-ஆம் தேதிகளில் நடைபெற்றபின் இம்மலையகப் பிதேசப் மாநாடு நடைபெறகிறது. இம்மாநாட்டின் மூலம் மலையகப் பிரதேசத்தின் நிலைமைகளை ஆராய்ந்து, எமது அரசியல் வெகுஜன வேலைகளையும் ஸ்தாபன வேலைகளையும் முன்னெடுப்பது இன்றைய தேவையாகும். இதன் அடிப்படையிலேயே இவ்வரசியல் அறிக்கையை முன்வைக்கின்றோம்.

தோழர்களே! 

இன்றைய நிலையில் நமது நாடு தேசிய, சர்வதேசிய, ஏகபோக முதலாளிவர்க்கத்தின் கோரப் பிடிக்குள்ளகப்பட்டு அரசியல், பொருளாதார, சமூக கலாச்சார, பண்பாட்டு அடிப்படைகளில் பெரும் சீரழிவினை எதிர் நோக்கியுள்ளது. எப்பகுதியிலும் மக்கள் நிம்மதியாக வாழக் கூடிய சூழல் இல்லை. கடந்த சுமார் பதினைந்து வருட கால யூ.என்.பி. ஆட்சியின் கீழ் தேசிய பொருளாதாரம் பெரும் சீரழிவுக்குட்பட்டுள்ளது. பல்தேசிய நிறுவனங்களின் சுரண்டல், திறந்த சந்தை, ஏகாதிபத்திய ஊடுருவல் போன்ற அம்சங்களை உள்ளடக்கிய நவகாலனித்துவ முறைக்குள் எமது நாடு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த முதலாளித்துவ பொருளாதார முறையினை தொடர்ந்து பேணிக்கொள்ள பாசிச யூ.என்.பி. அரசாங்கத்தினால் பல அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அடிப்படை ஜனநாயக - தொழிற்சங்க - மனித உரிமைகள் யாவும் பறிக்கப்பட்டு மக்கள் மோசமாக அடக்கப்படுகின்றனர்.

தற்போதைய நிலையில் எமது நாடு நவகாலனித்துவ, பிரபுத்துவ, பெருமுதலாளித்துவ அமைப்பாக காணப்படுகின்றது. இதை உடைத்தெறிவதற்கும், மக்களைக் காப்பாற்றவும் இந்நாட்டிலுள்ள சகல முற்போக்கு சக்திகளும் ஐக்கியப்படவேண்டியது அவசியமாகும். இதன் மூலம் புதிய ஜனநாயக அமைப்பையும், அத்துடன் இணைந்த சோஷலிஸ அமைப்பையும், அத்துடன் இணைந்த சோஷலிஸ அமைப்பையும் வென்றெடுத்து நிலைநிறுத்த முடியும்.

எமது மலையகப் பிரதேசத்தை பிரதேச hPதியாக எடுத்து நோக்கும்போது மேற்கூறப்பட்ட அரசியல், பொருளாதார, சமூக பிரச்சினைகளால் மட்டுமன்றி நீண்ட காலமாகவே புரையோடிப்போயுள்ள பிரச்சினைகளாலும் மலையக மக்கள் பெருந்துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். இதனால் தேசிய hPதியாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை தீர்த்து வெற்றி பெற நாம் ஏனைய மக்களோடு கரத்தினை இறுகப் பற்றிக்கொள்வதோடு எமது பிரதேசத்துக்கே உரித்தான பிரச்சினைகளை இணங்கண்டு அவை பற்றிய தெளிவான கண்ணோட்டத்தை செலுத்தி உறுதியுடன் செயற்பட்டு மிகப்பெறிய மக்கள் சக்தியை கட்டியெழுப்ப வேண்டியது அவசியமாகும்.

ஆங்கிலேயர் எம்மை வெறுங் கூலிகளாக கொண்டு வந்ததிலிருந்து நாம் இந்நாட்டில் பல பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றோம். மன்னார் துறையில் இறங்கி கால் நடையாக மத்திய மலைநாட்டுப் பகுதிக்கு வந்த வழியிலேயே பலர் இறந்து விட்டனர். அடர்ந்த மலையக காட்டுப் பகுதியை பசுஞ்சோலைகளாக மாற்ற கடுமையாக உழைத்தபோது பலர் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்து உயிரிழந்தனர். அன்று முதல் இன்றுவரை உழைப்பதைத் தவிர வேறெந்த உரிமையுமில்லாத மக்கள் கூட்டமாக வாழ்ந்து வருகின்றோம்.

காலனித்துவ ஆட்சியாளராகவிருந்த ஆங்கிலேயர் இலங்கையிலுள்ள எல்லா மக்களுக்கும் வாக்குரிமை கொடுத்தனர். எனினும் எமது மக்களை ஒதுக்கி வைக்கும் நோக்கத்துடன், இனவாத யூ.என்;.பி. அரசாங்கம் 1948-ஆம் ஆண்டில் எமது மக்களின் குடியுரிமையை பறித்தது. அன்றிலிருந்து நாம் இந்நாட்டில் இரண்டாந்தர பிரஜைகளாகவே கணிக்கப்பட்டு வருகின்றோம். இந்த நாட்டின் தேசிய நீரோட்டத்திலிருந்து திட்டமிட்ட வகையில் விலக்கி வைக்கப்பட்டு வருகின்றோம். எம்மக்களின் வாழ்க்கையில் எல்லா அம்சங்களிலும் இந்த ‘குடியுரிமை பறிப்பு’ பெருந்த தாக்கத்தினை ஏற்படுத்தி வருவதைக் காணலாம்.

மாறி மாறி பதவிக்கு வந்த யூ.என்.பி. சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கங்களினாலும் இந்த குடியுரிமை பிரச்சினை பூரணமாக தீர்க்கப்பட வில்லை. சிறிமாசாஸ்திரி ஒப்பந்தம். சிறிமா - இந்திரா ஒப்பந்தம், ஜே.ஆர்- ராஜீவ் இலங்கை இந்திய சமாதான ஒப்பந்தம் போன்ற ஒப்பந்தங்கள் அவ்வப்போது செய்யப்பட்டாலும் குடியுரிமைப் பிரச்சினை பூரணமாக தீர்க்கப்படாத ஒன்றாகவே காணப்படுகின்றது. கடந்த பதினைந்து ஆண்டு காலமாக பிரசா உரிமை தொடர்பாக பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் இந்த பாசிச. யூ.என்.பி அரசினால் அவை பூசிமெழுகப்பட்டு வந்துள்ளமையை நாம் அறிவோம். தொண்ணு}றாயிரம் பேருக்கு பிரசா உரிமை வழங்கப்படும் என்றும், இலங்கை பிரசா உரிமைக்கு விண்ணப்பித்துள்ளவர்களுக்கும், விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும், இந்தியாவுக்கு விணண்ப்பித்து விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டவர்களுக்கும் இலங்கை பிரசாவுரிமை வழங்கப்படுமென்றும் வாய்ப்பேச்சாக கூறப்பட்டதேயன்றி அது தொடர்பாக எந்தவித நடவடிக்கையும் உறுதியாக மேற்கொள்ளப்படவில்லை. இலங்கை பிரசாவுரிமைக்கான சான்று பாத்திரம் நாற்பது நாட்களுக்குள் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது. ஆனால் விண்ணப்பித்த எவருக்கும் அத்தகைய சான்று பத்திரம் வழங்;கப்பட வில்லை. இதனால் கல்வி கற்ற இளைஞர்கள், யுவதிகள் விரக்தியடைந்துள்ளனர். வேலை வாய்ப்பு போன்ற விடயங்களில் இன்றும் இலங்கை பிரசாவுரிமைக்கான சான்று பத்திரம் கேட்கப்படுகின்றது. இதனால் எம்மத்தியிலுள்ள தொழிலற்றவர்கள் நிர்க்கதியான நிலைக்கு ஆளாகியுள்ளனர். நாம் பிறந்த மண்ணிலேயே உரிமையுடன் வாழ முடியாமல் இருக்கின்றோம். ஒன்றுக்கு மேற்பட்ட சட்டங்கள் ஆக்கப்பட்டதன் மூலம் அண்மையில் எமக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் பிரசா உரிமை கூட எழுத்து வடிவத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் பழைய நிலையே நீடித்து வருகின்றது.

1948-ஆம் ஆண்டு குடியுரிமை பறிக்கப்பட்டதைத் தொடர்ந்து 1956-ஆம் ஆண்டு இனக்கலவரத்தில் மலையக மக்கள் எக்காரணமுமின்றி தாக்கப்பட்டார்கள். 1970-இல் பதவிக்கு வந்த ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் பொருளாதார கொள்கையின் தவறான நடைமுறைகள் காரணமாக எம்மக்கள் பெருந்துன்பத்தை அனுபவித்தனர். தோட்டத் தொழிலாளர்கள் சார்ந்திருந்த உற்பத்தி முறைக்கு ஏற்றதாக அவர்களது உணவு உற்பத்திக்கான நடைமுறைகள் அமையாததே இதற்கு அடிப்படை காரணமாகும். இதனால் தோட்டத் தொழிலாளர்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்க வேண்டியிருந்தது.

1977-ஆம் ஆண்டு பதவிக்கு வந்த யூ.என்.பி. அரசாங்கத்தின் ஆட்சியில் மலையக மக்கள் எண்ணிலடங்கா பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியிருந்தது. அக்கட்சி பதவிக்கு வந்தவுடனேயே இந்நாட்டில் பெரும் இனவன்முறை கட்டவிழ்த்த விடப்பட்டது. அந்த இனவன்முறையில் மலையக மக்கள் உயிர் உடமைகளை இழக்க நேரிட்டது. இதைத் தொடர்ந்து 1983-ஆம் ஆண்டு மிகப்பெரிய இனவன்செயல்- இனப்படுகொலை நடைபெற்றது. இவ்வினவன்செயலில் தோட்டத் தொழிலாளர்கள் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டனர். லயங்கள் அடித்து நொறுக்கப்பட்டு தீயூட்டப்பட்டது. பெண்கள் கற்பழிக்கப்பட்டனர். குழந்தைகள் உயிருடன் எரிக்கப்பட்டார்கள். உயிர் வாழ்வதற்கென வைத்திருந்த ஓரிரு உடமைகளும் கொள்ளையடிக்கப்பட்டன. எண்ணிப்பார்க்க முடியாத அளவிற்கு தொழிலாளர்கள் சித்திரவதை செய்யப்பட்டனர். இதனைத் தொடர்ந்து வருடா வருடம் திட்டமிட்டவைகயில் இனப்படுகொலைகள் நடைபெற்றன. அண்மையில் கூட மொனராகலை பகுதியில் லயன்கள் அடித்து நொறுக்கப்பட்டன. தொழிலாளர்கள் கொலை செய்யப்பட்டனர். லயன்களை கொள்ளையடிப்பது, தொழிலாளர்களைத் தாக்குவது என்பது தற்போது பதுளை, மொனராகலை, களுத்துறை, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை போன்ற பகுதிகளில் அடிக்கடி நடைபெற்று வருகின்றது. இப்பகுதிகளிலிருந்து தோட்டத் தொழிலாளர்களை வெளியேற்றும் நோக்கத்துடனேயே இவை நடைபெற்று வருகின்றன.

அண்மைக் காலத்தில் புதுவிதமான இன அடக்குமுறை எம்மக்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது. போலீஸ் பாதுகாப்புப் படை எனக் கூறிக் கொண்டு லயன்களில் பயங்கரவாதிகள் இருப்பதாக கூறி தோட்டத் தொழிலாளர்களின் லயன்களை பரிசோதிப்பதாக கூறிக் கொண்டு தோட்டத் தொழிலாளர்களிடமுள்ள அற்ப சொற்ப சொத்துக்களையும் கொள்ளையடித்துக்கொண்டு செல்லும் நிலை காணப்படுகின்றது. இது தோட்டப் பகுதியில் அடிக்கடி நிகழும் ஒரு தொடர் நிகழ்ச்சியாக உள்ளது. இத்தகைய தாக்குதல்கள் மீண்டும் நிகழாமலிருப்பதற்கு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வில்லை.

தோட்டப் பகுதியில் இளைஞர்கள் எவ்வித காரணமுமின்றி கைது செய்யப்படுகின்றனர். இச்செயல் அண்மைக் காலத்தில் உக்கிரமடைந்து வருவதை நீங்கள் அறிவீர்கள். இம்மாதம் பதுளை பகுதியில் பெருந்தொகையான தோட்டப்புற இளைஞர்கள் கைது செய்யப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஒருசில இளைஞர்கள் தீவிரமான அரசியல் ஈடுபடவும் ஆயுதக் கவர்ச்சியில் ஈர்க்கப்படுவதற்கும் காரணமான சூழ்நிலைகளை ஆராயாது, எவ்வித அரசியலிலும் ஈடுபடாத அப்பாவி இளைஞர்கள் கைது செய்யப்படுவதை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்.

எமது பெருந்தோட்டப்பகுதியை அழிக்கவென புறப்பட்டடுள்ள இன்னொரு நோய் திட்டமிட்ட இனவாத செயற்பாடுகளும் இனவாத குடியேற்றத்தை நோக்கமாகக் கெண்டனவுமாகும். மாத்தளை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி, பதுளை, மொனராகலை, பண்டாரவளை, வெலிமடை, கலகா, கம்பளை போன்ற பகுதிகளில் எல்லாம் தோட்டங்கள் மூடப்பட்டு, தோட்டத் தொழிலாளர்கள் வெளியேற்றப்படுகின்றனர். இப்பகுதியில் இனவாத குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இப்பகுதியில் மட்டுமின்றி தற்போது அட்டன், மஸ்கெலியா, தலவாக்கெல்லை, பூண்டுலோயா, நுவரெலியா, இராகலை போன்ற பகுதிகளிலும் பெருந்தொகையான இனவாத குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. திட்டமிட்ட வகையில் பெருந்தோட்டங்களை நட்டமடையச் செய்து தோட்டங்களை மூடி குடியேற்றங்கள் செய்யப்படுகின்றன. கலகா, கேகாலை, பதுளை போன்றபகுதிகளில் எந்தவித முன்னெறிவித்தலுமின்றி தோட்டங்கள் மூடப்பட்டு தொழிலாளர்களுக்கான கொடுப்பனவுகளைகூட கொடுக்காமல் அவர்கள் வெளியேற்றப்படுகின்றனர். இவ்வாறு வெளியேற்றப்பட்ட பெருந்தொகையான தொழிலாளர்கள் நிர்க்கதியான நிலைக்கு ஆளாகியுள்ளனர். ஒரு புறம் தொழிலாளர்கள் தோட்டங்களிலிருந்த பலவந்தமாக வெளியேற்றப்படுகின்ற அதே ஆவேளையில் மறுபுறம் வேறு தோட்டங்களில் புதிய தொழிலாளர்களை சேர்த்துக்கொள்ளும், வயதடைந்தவர்களை தொழிலாளர்களாக பதியும் நிலைமைகள் காணப்படவில்லை. இதனால் தோட்டங்களிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ள தொழிலாளர்கள் பெருந்துன்பங்களை எதிர்நோக்கி வருகின்றனர். இந்திய கடவுச்சீட்டு பெற்ற தொழிலாளர்கள் திடீரென கப்பல் சேவை நிறுத்தப்பட்டதால் இரண்டுங்கெட்ட நிலைக்காளாகியுள்ளனர். பல தோட்டங்களில் இவ்வாறான தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சில தோட்டங்களில், சலுரக ஏதுமில்லாத தற்காலிக தொழிலாளர்கள் பலர் உழைத்து வருகின்றனர்.

தொழிலாளர்கள் நீண்டகாலமாக மரக்கறி செய்கைப் பண்ணி வரும் காய்கறி தோட்டங்கள்கூட அண்மைக்காலத்தில் ‘மர நடுகை’ என்னும் போர்வையில் தொழிலாளர்களிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. தலவாக்கொல்லை, பணியஸ்கல்பா, நானுஓயா தோட்டத்திலும், பூண்டுலோயா, வடக்கு பூண்டு லோயா தோட்;டத்திலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு உரித்தாகவிருந்த காய்கறித் தோட்டங்கள் மரக்கறிசேனைகள் மேற்கூறப்பட்ட வகையில் பறிக்க முற்பட்ட போது எமது கட்சியும், வாலிபர் இயக்கமும் அதில் தலையிட்டு தொழிலாளர்களையும் பலமாகக் கொண்டு அத்திட்டத்தை கைவிடச் செய்தமை இவ்வேளை நினைவு சொள்ளத்தக்கதாகும்.

எமது மக்கள் இலங்கைக்கு வந்தது முதல் இன்று வரை எதிர்நோக்கிவரும் இன்னொரு முக்கியப்பிரச்சினை சம்பளப் பிரச்சினையாகும். மிகக் கோரத்தனமாக சுரண்டப்பட்டு வரும் ஒரு மக்கள் கூட்டமாக எமது மக்கள் இருந்து வருவதை தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பளம் என்னும் அம்சம் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றது. தோட்டத் தொழிலாளருக்கு அவ்வப்போது வழங்கப்பட்ட சம்பளத்தின் அளவையும் அவ்வக்காலங்களில் அத்தியாவசியப் பொருட்களுக்கு இருந்த விலையையும் ஒப்பிட்டுப் பார்த்தால் தொழிலாளர்களுக்கு மிகச் சாதாரணமான உணவுத் தேவையைக் கூட பூர்த்தி செய்ய அச்சம்பளம் போதாமையாக இருந்து உள்ளமையைக் காண முடியும். இந்த யூ.என்.பி. அரசாங்கம் பதவிக்கு வந்த கடந்த பதினான்கு வருட காலப்பகுதியில் பொருட்களின் விலைகள் வானளவ உயர்ந்தளள்மையினால் இந்நாட்டிலுள்ள பெரும்பான்மையான சாதாரண உழகை;கும் மக்கள் கடும் வாழ்க்கைக் கஷ்டத்தை எதிர்நோக்கி உள்ளமையை நீங்கள் அறிவீர்கள். இந்நிலைமையை மூடிமறைக்க அரசாங்க ஊழியர்களுக்கு அவ்வப்போது சம்பள உயர்வுகள் வழங்கப்பட்டது. 1989-ல் ரூபா 75-ம், 1990-ல் 200 ரூபாவும் 1991 - ல் ரூபா 300-ம் 1992-ல் 100 இவ்வாறு வழங்கப்பட்டது. அனால் இந்த சம்பள உயர்வில் தோட்டத் தொழிலாளர்கள் புறக்கணிக்கப்பட்டனர். இந்த விடயத்தில் யூ.என்.பி. அரசாங்கத்தின் நரித்தன விளையாட்டையும் நாம் அவதானிக்க முடிந்தது. அதாவது இலங்கையில் பொதுவேலை நிறுத்தங்கள் நடைபெறும் போது பெருந்தோட்டத்துறையும் அரசாங்கத்துறையாகக் கருதப்பட்டு வேலை நிறுத்தம் சட்டவிரோதமானது என்று அரசாங்கத்தால் கூறப்படும்.

ஆனால் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படும் போது பெருந்தோட்டத்துறை தொழிலாளர்கள் அந்த வரையறைக்குள் அடக்கப்பட மாட்டார்கள். யூ.என்.பி. அரசாங்கத் தலைவர்களும் அதனைச் சார்ந்து நிற்போரும் தோட்டத்தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் என அடிக்கடி வாய் கிழிய கத்திய போதிலும் அது நடைமுறை சாத்தியமில்லாத விடயமாகவே இருந்து வருகின்றது. நீண்டகாலமாக தொழிலாளர்கள் தொடர்ந்து போராடியதன் விளைவாக இன்று ஆண்-பெண் சம சம்பளம் வழங்கப்படுகின்றது. மேலும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி, உயிர்வாழ்வதற்குப் போதுமான அளவு மாத சம்பளத்தினை வென்றெடுக்க வேண்டும்.

எமது மக்கள் எதிர்நோக்கும் இன்னொரு முக்கியப் பிரச்சினை வேலை நாட்களோடு தொடர்புடையதாகும். பெரும்பாலான தோட்டங்களில் அதிலும் சிறப்பாக தனியார் தோட்டங்களில் வாரத்தில் வேலை வழங்கும் நாட்களின் எண்ணிக்கை சில வேளை இரண்டு நாட்களாக இருப்பதுண்டு. இதனால் சம்பளம் குறைந்து தொழிலாளர்கள் பட்டினிச் சாவை எதிர்நோக்கியுள்ளனர். தொழிலாளர்களை தோட்டங்களில் இருந்து வெளியேற்றுவதை நோக்கமாகக் கொண்டு பல தோட்டங்களில் இத்தகையை வேலை குறைப்பு நடைபெற்று வருகின்றது. அத்தோடு சம்பளம் வழங்குவதிலும் தனியார் தோட்டங்களுக்கும், அரசாங்க தோட்டங்களுக்கும் இடையே பலத்த வேறுபாடு காணப்படுகின்றது. தனியார் தோட்டங்களில் வேலை நாட்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பதோடு சம்பளத்திலும் வேறுபாடு காணப்படுவதால் தொழிலாளர்கள் பெருந் துன்பத்தினை அனுபவித்து வருகின்றனர்.

இந்த சம்பள விடயத்தில் நாம் உறுதியான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். ஏனெனில் எமது மக்களின் வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும் இது தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றது. தோட்டத் தொழிலாளர்களை அரசாங்க ஊழியர்களாக அங்கீகரிக்க கோரியும், உயர்ந்த மாத சம்பளத் திட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரியும் நாம் உறுதியான மக்கள் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமானதாக உள்ளது.

அண்மைக் காலங்களில் இலங்கை சர்வதேச hPதியான தேயிலை ஏற்றுமதியில் முதலாவது இடத்தை வகிக்கின்றது. கடந்த வருடம் 2000 கோடி ரூபாவுக்குமேல் தேயிலை ஏற்றுமதி வருமானமாக இலங்கை பெற்றுக் கொண்டது. ஆனால் இதனால் தோட்டத் தொழிலாளருக்கு எவ்வித நன்மையும் கிட்டவில்லை. இலங்கையின் ஏனைய பகுதிகளோடு ஒப்பிடும் போது மலையகத்தில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை உயர்வாகவே உள்ளது. தோட்டங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் அமைக்கப்பட வில்லை. இதனால் நாட்டில் எந்தமூலையிலாவது ஒரு சிறு பிரச்சினை ஏற்பட்டாலும் இங்கு பல மடங்கு விலை உயர்ந்து விடுகின்றது. அதேவேளை இராகலை, கந்தப்பளை, வெளிமடை, பண்டாரவளை போன்ற பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் மரக்கறி வகைகளுக்கு மிகக் குறைவான விலையே தரப்படுகின்றது. உள்@ர் தரகர்களும் கொழும்பு முதலாளிகளுமே மரக்கறியின் விலையினைத் தீர்மானிக்கின்றனர். கொள்வனவு விலை மிக மிகக் குறைவானதாகவே உள்ளது. பெரும்பாலும் கொழும்பு விலையை விட இப்பகுதியில் கொள்வனவு செய்யப்படும் மரக்கறியின் விலை அரைவாசியாக அல்லது கால்வாசியாக இருப்பதுண்டு. ஏற்றுமதி அபிவிருத்தி கிராமம் போன்ற திட்டங்கள் நாட்டில் உள்ளதாக கூறப்பட்ட போதிலும் அவை மலையகத்தில் அமுல் செய்யப்படவில்லை.

ஆடு, மாடு போன்றவற்றை வளர்க்கும் தொழிலாளர்கள் கூட அண்மைக்காலங்களில் பெருஞ்சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். மலையத்தின் எல்லைப்புற தோட்டங்களில் வாழும் தொழிலாளர்கள் இக்கால்நடை உற்பத்தியிலேயே பெருமளவு தங்கியிருந்தனர். இப்பகுதியில் வேலை நாட்கள் குறைவாக இருப்பதாலும், சம்பள வேறுபாடு காணப்படுவதாலும் ஆடு, மாடு வளர்ப்பதன் மூலமே மக்கள் தமது வாழ்க்கையை ஓட்டி வந்தனர். இவ்வாறான பகுதிகளில் இனவாதக் குடியேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டு வருவதால் தொழிலாளர்கள் புல் தீவனத்தைப் பெற முடியாத நிலையில் உள்ளனர். லயன்களைச் சுற்றி ‘கொலனிகள்’ அமைக்கப்படுவதால் தொழிலாளர்கள் இருப்பிடத்தை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளனர்.

பெருமுதலாளித்துவ பாசிச யூ.என்.பி. அரசாங்கம் அண்மைக் காலத்தில் சகல அரச துறைகளையும் தனியார் மயப்படுத்தி வருவதை நீங்கள் அறிவீர்கள். இப்போது தோட்டங்களை தனியார் மயப்படுத்தும் ஏற்பாடுகளைச் தமக்குள் பங்கு போட்டுக் கொள்வதற்காக உள்@ர், வெளியூர் பண முதலைகள் தமக்குள் போட்டிப் போட்டுக் கொண்டுள்ளனர். தோட்டங்களைத் தனியாருக்கு கையளிக்கும் இந்தத் திட்டத்தினால் நமது மக்களின் வாழ்க்கையில், எதிர் காலத்தில் பெருந்தாக்கம் ஏற்படப்போகின்றது. தற்போது அரச தோட்டங்களில் நாம் அனுபவித்து வரும் ஒருசில உரிமைகள்கூட இல்லாமல் போய்விடும். தோட்டங்கள் முன்னர் வெளிநாட்டுத் தனியார் கொம்பனிகளிடம் இருந்த போது நாம் பட்ட துன்பங்களை யாரும் மறந்துவிட முடியாது. தொழிற்சங்க உரிமை மறுக்கப்பட்டதோடு, தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக நடத்தப்பட்ட அந்த வரலாற்றினை யாரும் மறக்க முடியாது.

நட்டத்தில் இயங்கும் தோட்டங்களை இலாபத்தில் இயங்கச் செய்ய நிருவாக hPதியாக மாற்றம் தேவை என்றும், தோட்டங்களைத் தனியாருக்கு ஒப்படைப்பதால் தொழிலாளரகு;க ‘எவ்வித பாதிப்பும் ஏற்படாது’ என்றும் ‘தொழிலாளர்களின் தலைவர்கள்’ என்போர் கூறி வருகின்றனர். நிர்வாக மாற்றம் என்பது குறைபாடுகளைக் கலைத்து மேலும் மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டமாக இருக்க வேண்டுமேயன்றி நயவஞ்சகமாக பணமுதலைகளுக்குத் தோட்டங்களையும், அங்குள்ள தோட்ட மக்களையும் தீனி போடுவதாக அமையக் கூடாது. அரசாங்கத்தின் இந்தக் கபட நாடகத்தை நாம் அனுமதிக்கக் கூடாது’ தனியார் நிறுவனங்களுக்கு தோட்டங்களின் நிர்வாகம் மட்டுமே கையளிக்கப்படவிருப்பதாக கூறினாலும் நாளடைவில் தோட்டங்களை தனியார் நிறுவனங்களே சொந்தமாக்கிக் கொள்ளும் நிலையே ஏற்படும்.

1977- ஆம் ஆண்டு தோட்டங்களை கூறுபோட நினைத்த போது நாம் அணி திரண்டு, சிவனு இலட்சுமணனின் இறப்போடு வலிமைமிக்க போராட்டத்தை நடாத்தியது போன்று மேலும் ஒருபடி முன்னே சென்று ஸ்தாபன hPதியாக தொழிலாளர்களை அணிதிரட்டி உறுதிமிக்க போராட்டத்தை முன்னெடுக்க வேண்டியது அவசியமாகும். முக்கள் சக்தியை அடிப்படையாகக் கொண்டு தோட்டங்களை தனியார் முதலாளிகளுக்கு ஒப்படைக்கும் யூ.என்.பி. யின் திட்டத்தை எதிர்த்து முறியடிக்க வேண்டும்.

நூம் இந்த நாட்டுக்கு வந்து நான்கு தலைமுறைகள் கழிந்த பின்னரும் கூட நமக்கு வீட்டுரிமை வழங்கப்படவில்லை. அன்று ஆங்கிலேயரால் அமைக்கப்பட்ட மனித வாழ்க்கைக்கு ஒவ்வாத “எட்டடிக் காம்பிராக்களிலேயே” இன்றும் வாழ்ந்து வருகின்றோம். ‘பத்து இலட்சம் வீடமைப்புத் திட்டம்’, ‘பதினைந்து இலட்சம் வீடமைப்புத் திட்டம்’ போன்ற திட்டங்கள் நாட்டில் இருப்பதாக கூறப்படுகின்றது. ஆனால் மலையக தோட்டப்பகுதிகள் இவற்றிவிருந்து ஒதுக்கப்பட்ட நிலையிலேயே காணப்படுகின்றது. முனித வாழ்க்கைக்கு உதவாத இந்த லயன்களின் வாழும் மக்கள் பல்வேறு உடலியல், உளவியல் தாக்கங்களுக்கு உட்பட்டுள்ளனா. புல லயன்கள் இடிந்து விழக்கூடிய நிலையில் காணப்படுகின்றன. மழைக்காலங்களில் ஏற்படும் மண் சரிவின் காரணமாக பலர் உயிரிழக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எண்ணிக்கை கூடிய குடும்ப உறுப்பினர்கள் இருக்கும் குடும்பங்களில் வீட்டுப் பிரச்சினை மிக மோசமானதாகக் காணப்படுகின்றது. பெரும்பாலான லயன்கள் நு}ற்றைம்பது வருடங்களுக்கு மேலாகப் பழுது பார்க்கப்படாத நிலையிலேயே உள்ளன. தொழிலாளர்கள் தங்களது அற்ப சொற்ப வசதிக்காக மிகச் சிறிய ‘குசினிகளை’ கூட அமைக்க அனுமதிக்காத நிலையிலேயே உள்ளனர். அண்மையில் இராகலை பகுதியில் தற்காலிக சிறு குசினிக் குடிசையை அமைத்த தொழிலாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதோடு அவர்கள் அமைத்த இந்தக் குடிசைகள் ஒரே நாளில் தகர்தெறியப்பட்டன. இது முழு மலையகம் முழுவதிலும் இடம்பெற்று வரும் ஒரு நிகழ்வாக உள்ளது.


தோட்டத் தொழிலாளர்கள் வாழும் லயன் அறைமுறை மாற்றியமைக்கப்படுவதோடு அவர்களுக்கான சராசரி வசதிகளைக் கொண்ட வீடுகளையாவது அமைத்துக் கொடுப்பதோடு அவற்றை அவர்களுக்கு உரிமையாக்க வேண்டும். அத்தகைய வீடுகளைச்சுற்றியுள்ள நிலமும் அவர்களுக்குச் சொந்தமாக்கப்பட வேண்டும். தோட்டங்கைள தனியாருக்கு கையளிக்கும் அதே வேளையில் அவர்கள் வாழும் லயன்களைக்கூட ‘சமாஜம்’ என்ற அடிப்படையில் யாருக்காவது கொடுக்கும் யோசரனயும் உள்ளதுபோல் தெரிகின்றது. இதை நாம் அனுமதிக்கக் கூடாது.

தற்காலத்தில் நாடு முழுவதும் மின்சார மயமாக்கப்பட்டு வருகின்றது. ஆனால் பெருந்தோட்டத்துறை இதிலிருந்து ஒதுக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகின்றது. ஒரு சில தோட்டங்களில் இதை நடைமுறைப்படுத்துவதற்காக தொழிலாளரிடமிருந்து ரூபா 15,000 - க்கு மேற்பட்டத் தொகை அறவிடப்பட்டுள்ளது. தொழிலாளர்களினால் இவ்வளவு பெரிய தொகையினைத் தாங்கிக் கொள்ள முடியுமா? நாட்டில் ஏனைய பகுதிகளுக்கு மின்சாரம் வழங்கப்படும்போது இவ்வாறுதான் அங்குளள்வர்களிடமிருந்து அறவிடப்படுகின்றதா? ஏன் இத்தகைய பாகுபாடு?

அடுத்து கல்வி, மற்றும் தமிழ்மொழி அமுலாக்கல் தொடர்பான பிரச்சினைகளை எடுத்துக் கொள்வோம். “சகலருக்கும் கல்வி” “கல்வியில் சமவாய்ப்பு” என்றெல்லாம் பேசப்படுகின்றது. ஆனால் இது எந்தளவிற்கு நடைமுறையில் உள்ளது என்பது கேள்வியாகவே உள்ளது. மலையகத்திலுள்ள பெரும்பாலான ‘பாடசாலைகள்’ ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டவையாகும். அவர்களால் அமைக்கப்பட்ட ‘பாடசாலைகள்’ தோட்டத் தொழிலாளர்களின் குழந்தைகளை அடைத்துவைக்கும் நோக்குடனேயே அமைக்கப்பட்டன. அன்று அந்நோக்கத்தோடு அமைக்கப்பட்ட கட்டிடங்களே இன்றும் மலையக பாடசாலைகளாக இருந்து வருகின்றன. எவ்வித வசதிகளுமின்றி காணப்படும் இப் பாடசாலைகள் கல்வி கற்க வரும் குழந்தைகளின் உள வளர்ச்சியில் பாதகமான தாக்கங்களை ஏற்படுத்துவதை பல கல்வி உளவியலாளர்கள் எடுத்துக் காட்டியுள்ளனர்.

மலையகத்தில் கல்வியோடு தொடர்புள்ள இன்னொரு பிரச்சினை அரசியல் - தொழிற்சங்கதலையீடாகும். குல்வியின் மகத்துவம் புறக்கணிக்கப்பட்டு, மலையகக் கல்வியின் சகல மகத்துவம் புறக்கணிக்கப்பட்டு, மலையகக் கல்வியின் அம்சங்களிலும் அரசியலே செல்வாக்குடையதாகக் காணப்படுகின்றது. ஆசிரியர் நியமனம், பதவியுயர்வு, இடமாற்றம் தங்குமிடம் வழங்கல், வெளிநாட்டு உதவி நிறுவனங்களின் பணத்தினை செலவு செய்தல், பாடசாலைக் கட்டிடங்களுக்கான செலவு ஒதுக்கீடு போன்ற இன்னோரன்ன விடயங்களில் அரசியல் தலையிடுவதால் மலையகப் பாடசாலைகளுக்குள்ளேயே தர வேறுபாடு காணப்படுகின்றது. அதிபர் நியமனம், கல்வியதிகாரிகளின் நியமனம் போன்ற நடவடிக்கைகளில் பூரணமாக அரசியல் தலையிடுவதால் பாடசாலைகளில் கல்வித்தரம் குறைவதற்கான சந்தர்ப்பம் ஏற்படுகின்றது. முலையகக் கல்வியை பெருமளவு சீரழித்துள்ள தொழிற்சங்க- அரசியலிலிருந்து விடுபட்ட சுதந்திரமான கல்வி முன்னேற்றத்திற்கான வழிமுறைகளை நாம் காண வேண்டும். கல்வி வளர்ச்சியில் தடையினை ஏற்படுத்தக்கூடிய அரசியலிலிருந்து விடுபட்ட கல்விக் குழு மலையகக் கல்வியின் சகல அம்சங்களையும் தீர்மானிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

மலையகத்தில் தமிழ் மொழி மூலம் ‘மத்திய மகாவித்தியாலயம்’ என்ற தரத்துக்கு இதுவரை ஒரு பாடசாலையும் உருவாக்கப்படவில்லை. அதிலும் சிறப்பாக நுவரெலியா மாவட்டத்தில் நாம் செறிந்து வாழும் பகுதியில் சுமார் நான்கு மத்திய மகா வித்தியாலயங்கள் சிங்கள மொழி மூலம் அமைந்துள்ள அதே வேளை தமிழ் மொழி மூலம் கற்றல் நடைபெறும் பாடசாலை ஒன்றுகூட அவ்வாறு இன்றுவரை அமையாதது வேதனைக்குரிய விடயமாகும்.

மலையகத்தில் அமைந்துள்ள ஒரேயொரு தமிழ்மொழி மூலம் ஆசிரியர் பயிற்சி கல்லு}ரி எவ்வித வசதியுமற்ற நிலையில் காணப்படுகின்றது. போக்குவரத்து, சுகாதாரம், வதிவிடம், விளையாட்டு மைதானம் போன்ற அடிப்படைத் தேவைகள் அங்கு பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது. பழைய தேயிலைத் தொழிற்சாலையைத்தான் மலையகத்தில் ஆசிரியர் பயிற்சி கல்லு}ரியாக்க வேண்டும் என்பது நியதி போலமைந்து விட்டது. ஆண்மையில் செளிநாட்டு நிதியுதவியுடன் ஆரம்பிக்கப்பட்ட சிறிபாத கல்விக் கல்லு}ரியிலும் இன hPதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றன. நுவரெலியா தொழில்நுட்பக் கல்லு}ரியிலும் இந் நிலைமையே காணப்படுகின்றது.

அடுத்து மலையகத்தில் தமிழ்மொழி அமுலாக்கல் எந்தளவு மோசமான நிலையில் உள்ளது என்பதை எடுத்து நோக்குவோம். மலையகத்திலுள்ள எந்த அரச நிறுவனங்களோடும் தமிழ்மொழி மூலம் தொடர்பு கொள்ள முடியாது. சிறப்பாக கிராம சேவை, பிறப்பு இறப்புப் பதிவு, தபாற் கந்தோர், பொலிஸ், வங்கி, கல்விக்கந்தோர் போன்ற முக்கியமான இடங்களில் நாம் தமிழ்மொழி மூலம் தொடர்பு கொள்ள முடியாது. சகல தொடர்புகளையும் சிங்கள மொழி மூலமே மேற்கொள்ள வேண்டிய இக்கட்டான நிலைக்கு எமது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இவ்விடத்தில் நாம் இன்னொரு விடயத்தையும் கவனிக்க முடியும். “அரச நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படும்போது மலையகத் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். வேலை வாய்ப்புகளில் இன விகிதாச்சாரம் பேணப்படுவதில்லை. இதனால் எமது இளைஞர்கள் விரக்தியடைந்துள்ளனர்.

நமது வறுமை, வாழ்க்கை வசதி குறைவு, கல்வியறிவில் மந்த நிலையிருத்தல் போன்றவற்றைச் சாதகமாகக் கொண்டு தற்போது புற்றீசல்கள் போல் வந்துள்ள அந்நிய மத சமூக நிறுவனங்கள் நமது மக்களை மதம் மாற்றும் “புனிதப்பணியில்” ஈடுபட்டுள்ளனர். இவர்களின் பின்னணியில் யார் உள்ளனர்? போன்ற விடயங்களை நாம் விரிவாக ஆராய வேண்டும். இச்சக்திகளின் பிரதான நோக்கம் எமது மக்களின் உண்மையான விடுதலைச் சிந்தனையை மழுங்கடித்து அவர்களை “வேறொரு உலகத்துக்குக்” கொண்டு செல்ல முயல்வதாகும். இவ்விடயத்திலும் நாம் விழிப்பாக இருப்பது அவசியமாகும்.

நூட்டு மக்களை சிறப்பாக இளஞ் சந்ததியினரை அழிவுப் பாதைக்கு இட்டுச் செல்லும் போதைப் பொருட்கள், பாலியற் படங்கள் போன்றன நம் நாட்டை ஆக்கிரமித்துள்ளன. மலையகத்தில் சாராயம், மினி சினிமா போன்ற வடிவங்களில் இக்கலாசார சீரழிவு அம்சங்கள் புகுந்துள்ளன. அண்மைக்காலங்களில் இவை எமது இளஞ்சந்ததியினரின் வாழ்வில் பெருந்தாக்கத்தினை ஏற்படுத்தி வருகின்றன. அன்றாட வாழ்க்கை, சிந்தனை, போராட்ட உணர்வு, செயற்பாடு, மனித நேயம் போன்றவற்றில் இந்த கலாசார சீரழிவு அம்சங்கள் பெரும் பாதிப்பினை ஏற்படுத்தி வருகின்றன. வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் கூட எமது இளஞ் சந்ததியினரின் கவனத்தை திசை திருப்பி வருகின்றன. இவர்களை சரியான மார்க்கத்தில் அணிதிரட்டி, முன்கொண்டு செல்லுதல் எமது உடனடிக் கடமையாக உள்ளது.

எமது மலையக சமூகத்தில் பெண்ணடக்கு முறை மிக மோசமானதாகக் காணப்படுகின்றது. தொழிலாளர்களைப் பொறுத்த மட்டில் ஆண்களைவிட பெண்களே அதிகமாக உழைக்கின்றனர். இலங்கையில் உடலால் மிக நீண்ட நேரம் உழைக்கின்ற ஒர் வர்க்கமாக எமது மலையகப் பெண்கள் காணப்படுகின்றனர். இவர்களின் நாளாந்த உழைப்பின் பெறுமதி மிகக் கூடியதாகும். ஆரசியல் சமூக விழிப்பின்றி வாழ்ந்து வரும் இவர்களை ஸ்தாபனப்படுத்தி கல்வியறிவூட்டி வளர்த்தெடுக்க வேண்டியது நமது கடமையாகும். முலையகப் பெண்கள் போராட்டத்தில் பழக்கப்பட்டவர்கள். குடும்பச் சூழல் சமுதாயச் சூழல் சாரணமாக அவர்கள் அடக்கப்பட்டிருக்கின்றனர். இதனை நாம் தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.

இதுவரை மலையக மக்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறுபட்ப பிரச்சினைகளை நாம் நோக்கினோம். இனி இப்பிரச்சினைகளை தீர்ப்பதற்கான சரியான அரசியல் மார்க்கம் பற்றி ஆராய்வோம்.

தோழர்களே! மலையகத்தின் அரசியல் நிலைமைகளை விளங்கிக்கொள்வதன் மூலமே நமது பாதையினை தெளிவுப்படுத்திக் கொள்ள முடியும். நமது பகுதியின் அரசியல் வரலாற்றை எடுத்துக் கொண்டால் அது மூன்று முக்கிய காலப் பகுதியினு}டாக வளர்ந்து வந்துள்ளமையை காணலாம்.

1. தோட்டத் தொழிலாளர்கள் இந்தியாவிலிருந்து இலங்கை வந்தது முதல் 1948-ம் ஆண்டு குடியுரிமைப் பறிக்கப்பட்ட வரையுள்ள காலப்பகுதி.

2. 1948-ம் ஆண்டு முதல் 1977-ம் ஆண்டு வரையுள்ள காலப்பகுதி.

3. 1977-ம் ஆண்டு முதல் யூ.என்.பி. அரசாங்கத்தின் ஆட்சியின் கீழான காலப்பகுதி.

ஆங்கிலேயர் ஆட்சியின் போது இலங்கை வந்த தோட்டத் தொழிலாளர்கள் ஆரம்ப காலத்தில் பெருந்துன்பங்களை அனுபவித்தனர். அவர்கள் அடிமைகள் போல் நடத்தப்பட்டனர். தொழிற்சங்க உரிமைகள் மறுக்கப்பட்டிருந்தன. தொழிற்சங்க வேலைகளில் ஈடுபட முயன்றவர்கள் தோட்ட நிர்வாகங்களால் தண்டிக்கப்பட்டனர். 1935 - ம் ஆண்டுக்கு பின்னரே அவர்கள் தொழிற்சங்க போராட்டங்களை ஆரம்பித்தனர். இலங்கை - இந்தியன் காங்கிரசும், இடதுசாரி கட்சிகளும் இந்த தொழிற்சங்கப் போராட்டங்களை ஆரம்பிப்பதில் பெரும் பங்கு வகித்தனர். வேலைத் தளங்களில் தொழிலாளருக்கு இழைக்கப்பட்ட அநீதிகள், மருத்துவம் போன்ற விடயங்களில் காட்டப்பட்ட அநீதிகள் தொழிற்சங்க உரிமைகள் பறிக்கப்பட்டிருந்தமை போன்றவற்றிற்கு எதிராக தொழிலாளர்கள் உறுதிமிக்க போராட்டங்களை நடத்தினர். இக்காலப் பகுதியில் நான்முல்லோயா தோட்டத்தில் தொழிலாளி கோவிந்தன் சுட்டுக் கொல்லப்பட்டார். அக்காலப்பகுதியில் தொழிலாளர்கள் பெரும்பாலும் தொழில் தொடர்பான விடயங்களிலும் தொழிற்சங்க உரிமைகளைக் கோரியுமே போராட்டங்களை முன்னெடுத்தனர். 1935 - ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட லங்கா சமசமாஜக் கட்சியின் தொழிற்சங்கத்திலும் அதன் பின் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கத்திலும் அணிதிரண்டனர்.

1931 இல் ஆங்கிலேயர் இலங்கையிலுள்ள எல்லா வயது வந்த பிரஜைகளுக்கும் வாக்களிக்கும் உரிமை வழங்கிய போது பெரும் வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் தோட்டத் தொழிலாளருக்கும் வாக்களிக்கும் உரிமை கிடைத்தது. இதன்படி நடைபெற்ற தேர்தலில் இந்திய வம்சாவளி மக்கள் சார்பாக ஏழு உறுப்பினர்கள் பாராளு மன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்கள். தோட்டத் தொழிலாளர்கள் மீது இனவெறிப் பார்வையைக் கொண்டிருந்த ஏ. ஈ. குணசிங்கா, டி.எஸ். சேனநாயக்கா போன்றோருக்கு இவ்விடயம் பெரும் மனத்தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்திய வம்சாவழி தோட்டத் தொழிலாளர்கள் இந்த நாட்டுக்கு விசுவாசமானவர்கள் அல்லர் என்ற கருத்தை முன் வைத்து தோட்டத் தொழிலாளருக்கு வழங்கப்பட்ட வாக்குரிமையையும், குடியுரிமையையும் பறிப்பதற்கு திட்டம் போட்டனர். இக்குடியுரிமைப் பறிப்புக்கு வர்க்க, இன அடிப்படைகளே பிரதான காரணிகளாகும். இதன்படி 1948- ஆம் ஆண்டு யூ.என்.பி. அரசாங்கம் பதவியிலிருந்த போது குடியுரிமை, வாக்குரிமை பறிக்கப்பட்டது. இந்த ஈனச் செயலுக்கு தமிழ் எம்.பிக்களில் ஒரு சாரார் உடந்தையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

1948 முதல் 1977 வரை தோட்டத் தொழிலாளர்கள் தமது சார்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரையாவது தெரிவு செய்ய முடியாத நிலையிலிருந்தனர். குடியுரிமை பறிக்கப்பட்டதன் காரணமாக எந்தவொரு அரசியல் நடவடிக்கையிலும் ஈடுபட முடியாதவாறு தடுக்கப்பட்டனர். இக்காலப்பகுதியில் நாடற்றோர் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக சிறிமா-சாஸ்திரி, சிறிமா- இந்திரா போன்ற ஒப்பத்தங்கள் செய்யப்பட்டன. இவ் ஒப்பந்தங்கள் மூலம் தோட்டத் தொழிலாளர்களில் குறைந்த தொகையில் பெறக்கூடிய சந்தர்ப்பம் ஏற்பட்டது.

எனினும் நாடற்றோர் பிரச்சினை பூரணமாக தீர்க்கப்படவில்லை. ஆரம்ப காலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் வாக்கையும், சந்தாவையும் நாடி நின்ற பாராளுமன்ற சந்தர்ப்பவாத இடது சாரிகளும் தோட்டத் தொழிலாளர்களை கைவிட்டனர். பிற்காலத்தில் மலையக மக்களை மட்டும் மையமாகக் கொண்டு ‘அரசியல் செய்ய’ முனைந்த ‘முன்னணி’ அமைப்பாளர்களும் காலப்போக்கில் சேர்வடைந்து விட்டனர். இவர்களுள் பலர் பிற்காலத்தில் இந்தியா சென்று விட்டனர். இக்காலப்பகுதியிலும் தோட்டத் தொழிலாளர்கள் பல உறுதியான போராட்டங்கழளை நடத்தினர். பதுளை பகுதியில் நடைபெற்ற இத்தகைய போராட்டமொன்றில் இரு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இக்காலப்பகுதியில் அதிதீவிரவாத இடது சாரிகளும் அவர்களது பிழையான நடைமுறை காரணமாக மலையக மக்கள் மத்தியில் செல்வாக்கிழந்தனர்.

1977-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஏற்கனவே பெற்ற வாக்குரிமையைப் பயன்படுத்தி நீண்ட காலத்துக்குப் பின்னர் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு உறுப்பினரை தமது பிரதிநிதியாகத் தெரிவு செய்தனர். அவர் யூ.எனி.பி. அரசுடன் இணைந்து அமைச்சர் பதவியையும் பெற்றுக் கொண்டார். இக்காலப் பகுதியில் மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் மட்டுமின்றி நாட்டிலுள்ள சகல மக்களும் பெருந்துன்பத்தை அனுபவித்து வந்தனர். இன்று மனித உயிர்கொலை என்பது நாட்டில் எப்பகுதியிலும் நடைபெறும் ஒரு சாதாரண நிகழ்வாகி விட்டது. துpறந்த தாராளச்சந்தை முறை காரணமாக அந்நிய சக்திகள் எமது நாட்டில் ஊடுருவி விட்டன. பொருட்களின் விலைகள் பன்மடங்கு உயர்ந்து விட்டன. அடக்குமுறைச் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. மனித உரிமைகள் மீறல் சாதாரணமாக நிகழ்ந்து வருகின்றன. இனப்பிரச்சினை தீர்க்கப்படாது வடக்கு கிழக்கு பகுதியில் நாள்தோறும் பல நு}ற்றுக்கணக்கான மக்கள் கொலை செய்யப்படுகின்றனர். ஜனநாயக உரிமைகள் யாவும் குழிதோண்டிப் புதைக்கப்பட்டுள்ளன. அதேவேளை மலையக மக்கள் அடிப்படை ஜீவாதார உரிமைகள்கூட மறுக்கப்பட்ட நிலையில் பெருந்துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.


1977-ஆம் ஆண்டு இனக்கலவரத்திற்குப் பின்னர் மலையக மக்களின் பெரும்பாலானோர் இந்தியா சென்று விடவேண்டும் என்ற எண்ணத்தைக் கொண்டிருந்தனர். இதற்கு தொழிற்சங்கத் தலைவர்களும் ஊக்கமளித்தனர். சிலர் வன்னிப் பகுதியில் சென்று குடியேற முயற்சி செய்தனர்.


ஆனால் 1983-ஆம் ஆண்டு இனப்படுகொலையின் பின்னர் அனைவரும் இந்தியா சென்றுவிடவேண்டும் என்ற எண்ணம் எல்லோரிடமும் உருவாகியது. இதற்கு முன்னர் நடைபெற்ற இன வன்முறைகளை விட இந்த இனவன்முறையில் தோட்டத் தொழிலாளர்கள் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டதும் இதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. எனினும் இந்தியா அதனது கப்பல் சேவையை திடீரென நிறுத்தியமை, இலங்கையிலிருந்து ஏற்கனவே இந்தியா சென்றவர்கள் பட்ட துன்பம் போன்றவற்றால் படிப்படியாக தொழிலாளர்களிடையே மனமாற்றம் ஏற்பட்டது. முலையகம் நாம் உருவாக்கிய பிரதேசம், பரம்பரையாக நாம் இங்குதான் வாழ்கிறோம் என்ற எண்ணம் உறுதியாக மனோநிலையாக மாறியது.

பிரதேச நலன்களை அடிப்படையாகக் கொண்ட ஒருவகை தேசிய இன உணர்வு காரணமாக நாம் எப்படியும் இலங்கையில் தான் வாழவேண்டும் என்ற எண்ணம் தோட்டத் தொழிலாளர்களிடையே வேர் ஊன்றி வளரலாயிற்று. இந்நிலை உருவாக எமது கட்சியும் ஏனைய முற்போக்கு எண்ணம் கொண்ட சக்திகளும் தமது பங்களிப்பை வழங்கின.

பெருந்தோட்டப் பகுதிகளை உருவாக்கியவர்கள் நாங்கள். நூட் இந்நாட்டுக்காக உழைத்தவர்கள், நாம் இதைவிட்டுப் போக முடியாது என்ற நியாயபூர்வமான பிரதேச உணர்வு நமது மக்களிடையே தோன்றியது. இது வட பகுதியில் தோன்றிய குறுந்தேசியவாத உணர்வு போலல்லாது தேசிய ஓட்டத்தோடு, தேசிய ஐக்கியத்தோடு இணைந்த ஒன்றாகவே காணப்பட்டது. பிரதேச வெறியாக அல்லாமல் நியாயமான உரிமைகளுக்கான உணர்வாக மனித வாழ்வுக்கு தேவையான உணர்வாகவும் உள்ளது. இதனை மலையகத்தில் சில குறுகிய அரசியல் லாப நோக்கு கொண்ட சக்திகள் பிரதேசவெறியாக மாற்றவும் முயன்று வருகின்றன. என்பது கவனத்திற்குரிய தொன்றாகும்.


மலையகத்தில் நாம் ஒரு சிறுபான்மை இனமாக சமூக, பொருளாதார கலாசார, பண்பாட்டு, தனித்துவங்களையும், தன்னடையாளங்களையும் கொண்டு காணப்படுகின்றோம். முலையகத்தில் மத்திய, ஊவா, சப்பிரகமுவா, மாகாணங்களில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களாகிய நாம் நீண்ட காலமாக செறிந்து வாழ்கிறோம். கொழும்பு, வன்னி மாவட்டம், கிழக்கு மாகாணத்தில் சில இடங்களிலும் நமது மக்கள் வாழ்கின்றனர். நாம் ஒரு தேசிய சிறுபான்மை இனம் என்ற hPதியில் எமது பிரச்சினைகள் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் தீர்க்கப்பட வேண்டும். இவ்வாறு வாழும் எம் மக்களிடையே காணப்படும் தேசிய உணர்வோடு இணைந்த பிரதேச நலன் சார்ந்த உணர்வினை அரசியல் hPதியாக இரண்டு முக்கிய பாதைகளில் து}ண்டி முன் தள்ள முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.

1. பிரதேச அடிப்படையில் மலையக மக்களைத் தனிமைப்படுத்திப் பிரதிநிதித்துவப்படுத்தக்கூடிய அரசியல் அம்சங்களை முன்னெடுத்தல், அதன் மூலம் ஒருவகை பிரதேசவெறி உணர்வை ஊட்ட முயல்வதாகும்.

2. அதி தீவிரப் போக்கு ஆயுதக் கவர்ச்சியில் ஈர்த்து அதனோடு தொடர்புள்ள நடவடிக்கைகளில் இளைஞர்களை ஈடுபடுத்த முயற்சித்தல்.

தோழர்களே! இவ்விரண்டு அம்சங்களையும் நாம் நிதானமாக ஆராய வேண்டியது அவசியமாகும். ஏனெனில் இத்தகைய அணுகுமுறையின் கீழ் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் எமக்கு நல்ல படிப்பினைகளைத் தந்துள்ளன. மேற்குறித்த வழிகளில் முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் மக்களுக்கு எந்தவிதமான நன்மையையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதே நாம் அறிவோம்.

மலையக மக்கள் ஒரு தனித்தேசிய சிறுபான்மை இனமாக வாழ்கின்றனர் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் “மலையகம்” என்ற வரையறைக்குள் மட்டுமே நின்று அங்கு வாழும் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியுமா என்பது கேள்விக்குறியே. முலையக மக்களின் பெரும்பாலான பிரச்சினைகள் தேசிய பிரச்சினைகளோடு இணைந்ததேயாகும். எனவே தேசிய நீரோட்டத்தோடு இணைந்த வகையிலேயே எம்மக்களின் பிரச்சினைகளை முன்னெடுப்பது அவசியமாகின்றது. 

இரண்டாவது ஆயுதக் கவர்ச்சியுடன் கூடிய அதிதீவிர போக்காகும். கடந்த காலத்தில் இடம்பெற்ற இனவன் செயல்களும் தற்காலத்தில் தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் இன அடக்குமுறை நிகழ்வுகளும் இளைஞர்களை தீவிரவாத போக்கிற்கு இழுத்துச் சென்றுள்ளது. நீண்ட காலமாகவே இளைஞர்களுக்கு உகந்த அவர்களின் உணர்ச்சிகளுக்கு மதிப்பளிக்கக் கூடிய தலைமையினை கொடுக்காததும் இதற்கு காரணமாக அமைந்துள்ளது. எவ்வாறாயினும் மக்களைச் சார்ந்திராத, மக்களை பலமாகக் கொள்ளாத எந்த ஒரு ஆயுதப் போராட்டமும் வென்றதில்லை என்பதை இலங்கையில் நடைபெற்ற, நடைபெற்றுவரும் போராட்டங்கள் எடுத்துக் காட்டுகின்றன. அத்துடன் எந்தப் போராட்டமும் சரியான கொள்கை வழிகாட்டலுக்கு உட்படாது விட்டால் தோல்வியைத்தான் தழுவ நேரிடும் என்பதும் நிரூபணமாகியுள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

1935-ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து மலையகத்தில் தொழிற்சங்க நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. ஆனால் இவற்றால் மலையக மக்களுக்கு சரியான அரசியல் தலைமை கொடுக்கப்படதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. தொழிற்சங்கம் இவர்களுக்குச் சரியான அரசியல் கல்வியைய10ட்டி, பொருத்தமான அரசியல் பாதையில் வழி நடத்திச் சென்றதா என்பதுவும் ஆராயப்பட வேண்டிய விடயமாக உள்ளது. தொழிற்சங்கங்கள் பல தங்களது சந்தாதாரரை கூட்டிக்கொள்வதற்கும், சங்கப்பகைமையை தொழிலாளர்களிடையே ஊட்டி, அவர்களை முட்டி மோதிக்கொளள் வைப்பதற்கும் முயன்றனவேயல்லாமல் வேறு எதனையும் அரசியல் hPதியாக சாதித்துவிடவில்லை. தோட்டத்தில் வேலையில்லாவிடின் எவரும் தோட்டத்தில் வசிக்க முடியாத அதாவது தோட்டத் தொழிலாளர்களும் அவரது பரம்பரையினரும் நிரந்தர வசிப்பிடமில்லாதவர்கள் என்ற நிலையிலேயே தொடர்ந்து வாழும் துர்ப்பாக்கிய நிலைமையே இன்றும் காணப்படுகிறது. இரண்டிற்கு மேற்பட்டோர் தோட்டத்தில் வேலை செய்தால்தான் ஒரு லயன். ஆறையில் ஒரு குடும்பத்தினர் வசிக்க அனுமதிகக்ப்படுவர். ஒரு குடும்பத்தில் ஒருவரும், தோட்டத்தில் வேலை செய்யாதவிடத்து அந்த தொழிலாளர் குடும்பம் இருப்பிடமில்லாமல் நடு வீதியில் விடப்படுகின்ற நிலையே இன்றும் காணப்படுகின்றது என்பது மிகவும் கவலையுடன் நினைவில் நிறுத்தப்பட வேண்டியதாகும். இன்று நம் முன்னே உள்ள பாரிய பணிகளில் ஒன்று மலையக மக்களை சரியான அரசியல் பாதையில் அணிதிரட்டிச் செல்வதாகும். புhட்டாளி வர்க்க தலைமையிலான அரசியலை மக்களிடையே முன்னெடுக்க வேண்டும். இதற்காக நாம் கடுமையாக உழைக்க வேண்டும்.

கடந்த பதிமூன்று வருடகால அனுபவத்தில் கடுமையாக வேலை செய்வதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களை அரசியல் hPதியாக வென்றெடுத்து அவர்களை ஸ்தாபன வடிவத்தில் அணிதிரட்டலாம் என்பதை நாம் கற்றுக்கொண்டுள்ளோம். எமது கட்சியின் தலைமைக் குழு இப்பணிக்கு சரியான வழிகாட்டலை மேற்கொள்கின்றது. இந்த வழிகாட்டலின் அடிப்படையில் நாம் மிகப் பெரிய மக்கள் சக்தியினை வர்க்க உணர்வுடன் கட்டி வளர்க்க வேண்டியவர்களாக உள்ளோம். அதேவேளையில் மலையக மக்களின் ஆகக் குறைந்தளவு கோரிக்கைகளையாவது வென்றெடுக்கத் தயாராக இருக்கின்ற சகல சக்திகளுடனும் இணைந்து பரந்துபட்ட ஐக்கிய முன்னணி வேலைகளில் ஈடுபட வேண்டியவர்களாகவும் உள்ளோம். பல்வேறு முனைகளிலும் இப் பரந்த ஐக்கியம் கட்டி எழுப்பப்படுவது தோட்டத் தொழிலாளர்களின் விடுதலைக்கான பாதையில் மிக முக்கியமானதாகும்.

முலையக மக்கள் இன்றைய நிலையில் பெரும் அரசியல், பொருளாதார, சமூக கலாசாரப் பிரச்சினை எதிர் நோக்கியுள்ளனர். இதனால் மலையக மக்களின் விடுதலையின் அக்கறையுடைய சக்திகளும் ஐக்கியப்பட்ட வேலைத் திட்டத்தின் அடிப்படையில் ஒன்றிணைய வேண்டியதும் அவசியமாக உள்ளது. இதன் மூலமே மலையக மக்களின் “மக்கள் விரோத சக்திகளை” மக்களுக்கு அடையாளம் காட்டி மக்களை அணிதிரட்ட முடியும்.

இதே வேளை வடக்கின் பல மாவட்டங்களிலும் கிழக்கில் சில இடங்களிலும் குடியேறியுள்ள இந்திய வம்சாவளி மக்களின் பிரச்சினைகளையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அங்குள்ள மக்களில் பலர் இன்று அகதிகளாக இந்தியா சென்று விட்டனர். அவர்களின் வீடுகள் உடைத்தெறியப்பட்டு எரியூட்டப்பட்டுள்ளது. அவர்களின் நியாயபூர்வமான பிரச்சினைகளை அடையாளம் கண்டு அப்பகுதியிலும் எமது வேலைத் திட்டத்தை மேலும் விரிவுபடுத்த வேண்டியது அவசியமானதாகும்.

இந்திய வம்சாவளி பரம்பரையைச் சேர்ந்த பலர் கொழும்பு போன்ற இடங்களில் தொழில் புரிந்து வருகின்றனர். வியாபாரிகளாகவும், கற்று வெளியேறி தொழில் நிமித்தமும் அப்பகுதியில் கணிசமான மலையகத்தவர் வாழ்கின்றனர். அவர்கள் மலையகத்துடன் தொடர்புடையவர்களாகவே இருக்கின்றனர். இதனையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மலையக மக்களில் அவர்களும் ஒர் அங்கமே என்பதை மேலும் அவர்களுக்கு வலியுறுத்தி அரசியல் போராட்டத்தில் அவர்களின் பங்களிப்பினையும் ஊக்குவிக்க வேண்டும். அதேவேளை அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணக் கூடிய நடவடிக்கைகளை நாம் முன்னெடுக்க வேண்டும்.

மலையகப் பகுதிகளில் நீண்ட காலமாகவே வாழ்ந்து வரும் சிங்கள, முஸ்லீம் மக்களின் நலன்களையும் மேம்படுத்துவது அவசியமாகும். இனவாத அடிப்படையில் அல்லாது பரஸ்பரம், நன்னம்பிக்கை அடிப்படையில் திட்டங்கள்முன் வைக்கப்படுவது அவசியமாகும்.

முலையக மக்கள் தொழிற்சங்கங்களுக்கு சந்தா செலுத்துபவர்களாக, இன்று வாக்குரிமை கிடைத்தபின் வாக்களிப்பவர்களாகவும் மட்டுமே இருக்க வேண்டும் என சில தலைமைகள் விரும்புகின்றன. இதனை மாற்றி மலையக மக்கள் தமது வர்க்க அரசியலை விளக்கி அதன் அடிப்படையில் அணிதிரண்டு பரந்த வெகுஜன அரசியல் போராட்டங்களை முன்னெடுக்கும் தலைமை சக்தியாக மாறுவதையே எமது கட்சி இலக்காகக் கொண்டு செயல்படுகிறது.

முலையக மக்களின் விடுதலை உணர்வினை மழுங்கடிக்கவும், மக்கள் விடுதலையை நாடி நிற்கும் தாபனங்களை முறையிலேயே கிள்ளியெறியவும் பல சக்திகள் முயன்று வருகின்றன. இவற்றையெல்லாம் சரியாக அடையாளங்கண்டு மலையக மக்களை புரட்சிகர வெகுஜன மார்க்கத்தில் அணிதிரட்டி மக்கள் சக்தியுடன் நாம் நீண்டகால தொழிலாளி வர்க்க அரசியல் பாதையில் துணிவுடன் முன்னேற வேண்டியவர்களாகவும் உள்ளோம். தொடர்ந்து போராடுவோம். இறுதியில் மக்களே வெற்றி பெறுவார்கள்.

மாக்சிசம் லெனினிசம் மாஓ - சேதுங்
சிந்தனை வாழ்க்!
பாட்டாளி வர்க்க சர்வதேசிய
போராட்டாங்கள் வெல்க!
புதிய - ஜனநாயக கட்சி நீடுழி வாழ்க!


தீர்மானங்கள்
புதிய - ஜனநாயக கட்சியின் மலையகப் பிரதேசத்திற்கான இரண்டாவது பிரதேச மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:

றாகலை

25-12-1991

1. இந்திய வம்சாவளி மக்களுக்கு சட்டப்படி வழங்கப்பட்டதாக கூறப்படும் பிரசாவுரிமையும், வாக்குரிமையும் எழுத்தில் மட்டுமே இருக்கும் நிலையை மாற்றி பொதுப் பிரகடனத்தின் மூலம் நடைமுறையிலும் உறுதி செய்யப்பட வேண்டும்.

2. மலையக தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கையான மாதச் சம்பளமும், சம்பள உயர்வும் உடனடியாக வழங்கப்பட வேண்டும்.


3. பெருந்தோட்டங்களை பல்தேசிய கம்பெனிகளிடம் ஒப்படைத்து தோட்டத் தொழிலாளர்களை மீண்டும் கடுமையாக சுரண்டல்களுக்கும் அடக்கு முறைகளுக்கும் உள்ளாக்கும் அரசாங்கத்தின் புதிய திட்டத்தை நாம் வன்மையாக எதிர்ப்பதுடன், அதனை கைவிடும்படியும் கோருகிறோம்.

4. நீண்டகாலமாக மலையகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி அடைத்தும், தடுத்தும் வைக்கப்பட்டுள்ள இளைஞர்கள், யுவதிகள் அனைவரையும் நீதி விசாரணைக்குட்படுத்த வேண்டும். அல்லது விடுதலை செய்ய வேண்டும். அவசரகாலச்சட்டம், பயங்கரவாத தடைசட்டம் என்பன உடனடியாக ரத்து செய்யப்படவேண்டும்.

5. மலையகத்தில் எக்காரணமின்றியும் அரசியல் தொழிற்சங்க, தனிப்பட்ட பழிவாங்கல்களுக்காக கைது செய்யப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

6. மலையக மக்கள் சுயநிர்ணய உரிமை அடிப்படையில் ஒரு தேசிய சிறுபான்மை இனமாக அங்கீகரிக்கப்பட்டு அவர்களது தனித்துவங்களும், தன்னடையாளங்களும் பாதுகாக்கப்பட வேண்டும். அவர்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் மத்திய, ஊவா, சப்பிரகமுவ மாகாணங்களில் மலையக மக்கள் செறிவாக வாழும் பகுதிகளை இணைந்து ஒரு பலமான சுயாட்சி உள்ளமைப்புகள் ஏற்படுத்தப்ட வேண்டும். இதற்கு வெளியிலும், வடக்கு கிழக்கிலும் வாழும் இந்திய வம்சாவளி மக்களின் உரிமைகளை உறுதி செய்யும் வகையில் சுயாட்சி உப உள்ளமைப்புகள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

7. மலையகத்தில் பெருகி வரும் வேலையில்லாத இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பை உறுதி செய்யும் வழிவகைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மலையகத்தில் வழங்கப்படும் வேலைவாய்ப்பில் பாகுபாடற்ற விதத்தில் மலையக இளைஞர் யுவதிகளுக்கு வாய்ப்பளிக்க வேண்டும்.

8. தமிழ்மொழியும் ஆட்சிமொழி என்ற hPதியில்; மலையகத்திலும் நிர்வாக நடைமுறை hPதியில் தமிழ்மொழியை பிரயோகிக்க உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

9. வேலைநிறுத்த உரிமை உட்பட சகல தொழிற்சங்க உரிமைகளுக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட வேண்டும். மலையக மக்கள் அரசியலில் ஈடுபடுவதற்கு தடையாக இருக்கும் சகல தடைகளும் நீக்கப்பட்டு அவர்களின் அரசியல் உரிமைக்கு உத்தரவாதம் வழங்கப்படவேண்டும்.

10. தோட்டப்பகுதி சுகாதாரம் தேசிய சுகாதார சேவையுடன் இணைக்கப்பட வேண்டும். மோசாமான நிலையில் உள்ள தோட்டப்பகுதி சுகாதார விருத்தி செய்யப்பட வேண்டும்.

11. (அ) மலையக கல்வியில் எந்தவிதமான தொழிற்சங்க - அரசியல் தலையீடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் இடமளிக்கப்படக்கூடாது. கற்றவர்களைக் கொண்ட ‘கல்விக்குழு’ ஒன்று ஏற்படுத்தப்பட்டு அதன் மூலம் மலையக கல்வி அபிவிருத்திக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.


(ஆ) மலையக தமிழ் பாடசாலைகளின் தரம் உயர்த்தப்பட்டு முன்னேறிய விஞ்ஞான தொழில்நுட்ப, உயர்கல்வி வாhய்ப்பை ஏற்படுத்தி பரவலாக்க வேண்டும். மலையகத்தில் இதுவரை தமிழ் மத்திய மகா வித்தியாலயம் ஒன்றுகூட இல்லை என்ற நிலைமையை மாற்றி பல தமிழ் மத்திய மகா வித்தியாலயங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும்.

12. (அ) நீண்டகாலமாக இந்நாட்டின் வளத்துக்காக உழைத்த மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு இதுவரை சிறுதுண்டு காணி கூட வழங்கப்படவில்லை. இந்த அவர நிலையை மாற்றி அவர்களுக்கு அவ்வப்பிரதேசங்களிலேயே காணி வழங்கப்படவேண்டும்.

(ஆ) அவ்வாறு காணிகள் வழங்கப்பட்டு அக்காணிகளில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படவேண்டும். தோட்டத் தொழிலாளர்களுக்கென தனியான வீட்டுத் திட்டம் ஏற்படுத்தப்படும் என நீண்ட காலமாகக் கூறி வரப்படுவது நநடைமுறையில் சாத்தியமாக்கப்படவேண்டும்.

(இ) மலையத்திலிருக்கும் சிங்கள மக்களின் நிலங்கள் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தினால் பறிக்கப்பட்டன. அதேவேளை தமிழ் தோட்டத் தொழிலாளர்கள் கூலிகளாக அடிமையாக்கப்பட்டார்கள். இன்றும் இந்த நிலைமை புதுப்புது வடிவங்களில் தொடரத்தான் செய்கிறது. ஆகவே மலையகத்திலுள்ள காணியற்ற சிங்கள மக்களுக்கு மலையகத்தில் காணி வழங்கப்பட வேண்டும். ஆனால் மலையக தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி வழங்குவதை மறுக்கும் அல்லது இனவாத அடிப்படையிலான திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மலையகத்தில் ஏற்படுத்தக் கூடாது.

13. மலையகத்தில் பின் தங்கிய நிலையில் தொழிலாளர்களாக, விவசாயிகளாக மற்றும் உழைப்பாளர்களாக, வாழும் சிங்கள மக்களின் உரிமைகள் உரியமுறையில் உறுதி செய்யப்பட வேண்டும்.

14. மலையகப் பகுதிகளில் வாழும் முஸ்லீம் மக்களின் உரிமைகளை உறுதிசெய்யும் வகையில் உப உள்ளமைப்பு hPதியிலான ஏற்பாடுகள் தகுந்த வழிகளில் செய்யப்பட வேண்டும்.


15. அ) இலங்கை நாட்டின் சுதந்திரம், சுயாதிபத்தியம், இறைமை என்பவற்றுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் இனப்பிரச்சினைக்கு தமிழ் பேசும் மக்களின் சுயநிர்ணய உரிமையை உறுதிசெய்யும் அடிப்படையில் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும்.

ஆ) இலங்கையில் சிதைக்கப்பட்டுள்ள நிலையிலுள்ள அடிப்படை ஜனநாயக- தொழிற்சங்க - மனித உரிமைகளை மீட்டெடுக்கவும், மறுக்கப்படும் சுய நிர்ணய உரிமையை வென்றெடுக்குவும் சகல முற்போக்கு ஜனநாயக தெசபக்த சக்திகளின் பரந்த ஐக்கியத்தின் மூலமாக போராட்டத்திற்கு இப்பிரதேச மாநாடு முழு ஒத்துழைப்பையும் வழங்குகின்றது.

புதிய பூமி வெளியீட்டகத்துடன் இணைந்து சவுத் ஏசியன் புக்ஸ் 1992இல் வெளியிடப்பட்டது

பூண்டுலோயா நகரில் 31 கடைகள் தீயில் எரிந்து நாசம்


(க.கிஷாந்தன், அட்டன் கிளை காரியாலயம் - நன்றி வீரகேசரி)

பூண்டுலோயா பிரதான நகரத்தில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் 31 கடைகள் எரிந்து நசமாகியுள்ளன.

இதில் சில குடியிருப்புகளும் அடங்கும். இன்று விடியற்காலை 2 மணியளவில் ஏற்பட்ட இந்த தீ விபத்தில் உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

டயர் கடை மற்றும் சில்லறை கடைகள் உட்பட பல கடைகள் எரிந்து நசமாகியுள்ளன.சடுதியாக பரவிய தீயை கட்டுப்படுத்துவதற்காக நுவரெலியா மாநகர சபை, கொத்மலை பிரதேச சபை ஆகிய தீயணைப்புப்பிரிவின் உதவிகள் பெற்றுக்கொள்ளப்பட்டதோடு பூண்டுலோயா பொலிஸார், இராணுவம் உட்பட பொதுமக்கள் ஆகியோர் இணைந்து தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

எனினும் தீ ஏற்பட்டதுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளை பூண்டுலோயா பொலிஸார் கொண்டு வருகின்றனர்.








இலங்கையில் இடதுசாரி இயக்க வரலாறு -லெனின் மதிவானம்

புதிய பண்பாட்டுக்கான வெகுசன அமைப்பு சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருந்த வேளையில் எனக்கு அறிமுகமானவர் தோழர் நடராஜா ஜனகன். அவர் நவ சமசமாஜக் கட்சியில் நீண்டகாலம் சமூக செயற்பாட்டாளராக இருந்து வருகின்றவர். தமது தேடல்களில் கிடைக்கப்பெற்ற தகவல்களையும் அனுபவங்களையும் கொண்டு History of Left Movement in Sri Lanka  என்ற நூலை எழுதியிருக்கின்றார். இந்நூல் வெளியீடு கடந்த வாரம் (30 ஜனவரி) கொழும்புத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. ஏதோ மறதியின் காரணமாக எனக்கு அழைப்பிதழ் அனுப்ப மறந்திருக்க கூடும்;. நண்பர் மல்லியப்பு சந்தி திலகர் தான் இது பற்றிய பத்திரிகை செய்தியை எனக்கு அறிவித்ததுடன் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.
 
 நிகழ்வு சரியாக மாலை 5 மணிக்கு தொடங்கிவிட்டது. முதலாவது உரையினை  கலாநிதி நிர்மல் ரஞ்சித் தேவசிறி; வழங்கினார். இடதுசாரி இயக்கத்தின் தோற்றம், வளர்ச்சி, ஒவ்வொரு காலகட்டத்திலும் அவை எடுத்துக்கொண்ட முயற்சி என்பன குறித்து உரையாற்றிய அவர் - இன்று ஏற்பட்டுள்ள சமூக மாற்றங்கள் - அத்தகைய மாற்றங்களின் பின்னணியில் இடதுசாரி இயக்கங்கள் தன்னை எவ்வாறு புனரமைத்துக்கொள்ள வேண்டும் என்பது பற்றி  கூறிய அவர்,மிக முக்கியமாக இடதுசாரி இயக்கங்கள் பற்றிய பல விடயங்களை பேசுகின்ற இந்நூல் இன்று ஏற்பட்டுள்ள சவால்களை எவ்வாறு எதிர்கொள்வது பற்றியும் கூறியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும் எனவும் குறிப்பிட்டார்.
 
தொடர்ந்து தமிழ் மொழிகள் பற்றி உரையாற்றிய எஸ். ஜோதிலிங்கம்(திரு சிவகுருநாதன் சிங்கள மொழியில் மொழிமாற்றம் செய்தார். இன முரண்பாட்டை தீர்ப்பதில் இடதுசாரி இயக்கங்கள் வகித்த பங்கு குறித்துக் குறிப்பிட்டார். தமிழ் இளைஞர் இயக்கங்கள் எவ்வாறு இடதுசாரிப் போக்கிலிருந்து அந்நியப்பட்டதாக மாறியிருந்தது என்பன குறித்து உரையாற்றிய அவர் இலங்கை இடதுசாரி இயக்க வரலாற்றில் நவ சமசமாஜக்கட்சி ஒன்றே நேர்மையுடனும் உறுதியுடனும் செயற்படுகிற ஒரே கட்சி  எனவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன மட்டுமே ஒரே ஒரு இடதுசாரித் தலைவர் எனவும் குறிப்பிட்டார். இக் கூற்று விமர்சனத்திற்குரியதாக சபையை அதிர்ச்சிக் கொள்ளச் செய்தது. திரு ஜோதிலிங்கத்துடன்   தொலைபேசியில் கதைத்தபோது இனமுரண்பாடுகள் குறித்தும் இன்று வரையில் பேரினவாத செயற்பாடுகள் எல்லையை தாண்டி எவ்வாறு முன் நிறுத்தப்;பட்டு வருகின்றது என்பன குறித்த உங்களின் பார்வை முக்கியமானது என்றும் குறிபிட்டேன்.  மேலும்; நவ சமசமாஜக் கட்சி பற்றியும் தோழர் விக்கிரமபாகு  பற்றியதுமான  உங்களது பார்வை அகவயமானது எனக்கு குறிப்பிட்டபோது அவ்விமர்சனத்துடன்  உடன்படுவதாகவே   குறிப்பிட்டார்.
 
இந்நிகழ்வில் இறுதியாக உரையாற்றிய விக்கிரமபாகு  கருணாரத்ண தமதுரையில்  இலங்கை சமூகத்தில் இருந்த ஒடுக்குமுறைகளும், அடக்குமுறைகளும் இடதுசாரி இயக்கங்கள் தோன்றுவதற்கு ஏதுவான காரணியாக அமைந்திருந்தன. இடதுசாரி இயக்கத்தின் தாக்கத்தினால், செல்வாக்கினால் தான் இந்நாட்டில் அடக்கியொடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டன என்பதையும் குறிப்பிட்டார். இந்நாட்டில் குமிழ்விட்டு மேற்கிளம்பிய இனவாதமானது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமையை நசுக்குவதாக அமைந்திருந்தது. எனவே இதற்கு எதிராக தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.  இவ்வகையில் தமிழர்களினதும் இந்நாட்டில் வாழ்கின்ற அடக்கியொடுக்கப்பட்ட மக்களினதும் உரிமைகளுக்கு எதிராக செயற்படுகின்ற ஆதிக்க சக்திகளுக்கு எதிராக போர் குணம் கொண்டுள்ள யாவருடனும் நாங்கள் ஐக்கியப்பட்டு போராட்டங்களை நடத்த தயாராக உள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.
 
தோழர் விக்கிரமபாகு கருணாரத்ன அவர்களின்  கருத்துக்களை  தொடர்ந்து அவதானித்து வருகின்றவன் தமிழர்களின் சுயநிர்ணய உரிமைத் தொடர்பில் முக்கியமான விடயம் ஒன்றினை இவ்விடத்தில் குறித்துக்காட்டுவது அவசியமானதொன்றாகின்றது. அதாவது தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக்காக தீவிர குரல் கொடுத்து வருகின்ற அவர் - அதனை சிங்கள மக்களில் இருந்து அந்நியப்பட்ட கருத்தாகவே கூறி வருகின்றார். பெரும்பாலான சிங்கள மக்கள் இனவாத்திற்குள் (தமிழர்களும் இதற்கு விதிவிலக்கானவர்கள் அல்லர்) மூழ்கி வருகின்ற இன்றைய சூழலில் தமிழர்களின் நியாயமான உரிமைகள் குறித்து சிங்கள மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டியது சிங்கள புத்திஜீவிகளின் கடமையாகும். இந்த வரலாற்றுப் பணி எந்தளவு நிறைவேறுகிறது என்பது முக்கியமான கேள்விதான். தோழர் விக்கிரமபாகுவும் இது விடயத்தில் போதிய அக்கறையெடுத்திருப்பதாக தெரியவில்லை.
 
இந்நூல் நவ சமசமாஜ கட்சி குறித்தும் அதன் தலைவர்கள் குறித்துமான தகவல்களை வெளிக் கொணர்வதாக அமைந்திருக்கின்றது. இலங்கையில் இடதுசாரி இயக்கத்தின் பொதுவான போக்கு மார்க்சிய அரசியலாக இருந்து வந்துள்ளது என்ற போதினும் இயக்க தன்மையில் இருவிதமான போக்குகள் இருந்து வந்துள்ளதை அவதானிக்கலாம். ஒன்று ட்ரெக்ஸிச தத்துவத்தை பின்பற்றிய போக்கு மற்றொன்று, மார்க்சிய லெனினிசத்தின் பின்னணியில் அதன் வளர்ச்சிப் போக்கினை பின்பற்றியதாக பிரகடனப்படுத்திக் கொண்ட கம்ய+னிஸ்ட் இயக்கம். இந்நிலையில் இந்நூலாசிரியர் நவ சமசமாஜக்கட்சியை மட்டும் இடதுசாரி இயக்கமாக கருதியதாலோ என்னவோ இந்நூலுக்கும் ~இலங்கையில் இடதுசாரி இயக்க வரலாறு| என தலைப்பிட்டிருக்கின்றார். நூல் செய்திகளை ஆதாரமாகக் கொண்டு நோக்கினால் இலங்கையில் நவ சமசமாஜக் கட்சி வரலாறு என தலைப்பிட்டிருப்பின் பொருத்தமானதாக அமைந்திருக்கும் என சொல்லத் தோன்றுகின்றது. இந்நூலில் இழையோடுகின்ற தகவல்கள் நூலாசிரியரின் அகச் சார்பான பார்வைகளுக்கு அப்பால் இடதுசாரித் தலைவர்கள் குறித்த பல செய்திகளை வெளிக்கொணர்கின்றது. அவ்வகையில் இந்நூல் கவனிப்பிற்குரியதொன்றாகும்.
 
இவ்விடத்தில் முக்கியமானதொரு செய்தியைக் கூற வேண்டியுள்ளது. இடதுசாரி இயக்கம் குறித்த ஆய்வுகளை ஒட்டுமொத்தமாக நோக்குகின்றபோது அது மூன்று பெரும் பிரிவுகளுக்குள் அடக்கப்பட்டுள்ளதைக் காணலாம். ஒன்று இடதுசாரிக்கு எதிரானவர்கள் இவ்வியக்கங்கள் குறித்த பல அவதூறுகளை பரப்பி வருவதைக் காணலாம். இடதுசாரி இயக்க வரலாற்றில் ஏற்பட்ட சிறு சிறு தவறுகளை மிகைப்படுத்தியும் இவ்வியக்க வரலாற்றை சிறுமைப்படுத்த முனைந்துள்ளனர்.  இன்றைய உலக மயமாதல் சூழலில் பழைய இடதுசாரிகளைக் கொண்டும் அல்லது சிலர் இடதுசாரிகள் போன்று பாசாங்கு செய்தும் அவ்வரலாற்றைப் பிழையாகக் காட்டுவதிலும் அவ்வியக்கம் காலாவதியாகிவிட்டது எனக் காட்டுவதிலும் முனைந்துள்ளனர். இவர்களின் பின்னணியில் ஏகபோக முதலாளித்துவ நிறுவனங்கள் உள்ளன. இரண்டாவதாக இடதுசாரி இயக்க வரலாற்றை தமது அணி சார்ந்து அல்லது தான் சார்ந்து எழுத முனைகின்றபோக்கு. தங்களை தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களாகவும், புரட்சியின் புனிதர்களாகவும் காட்ட முனைகின்ற போக்கு இடதுசாரி இயக்கத்தின் செயற்பாடுகளை பின்னடையச் செய்துள்ளன. சாதனைகள் மிகுந்த கடந்த காலத்தை புகழ்ந்து எதிர்காலம் குறித்த குழப்பமான சிந்தனைகளை வெளியிடுவதாகவும் இவ்வாய்வுகள் ஆய்வுகள் காணப்படுகின்றன. மூத்த சில இடதுசாரி தோழர்களில் கூட இந்த பலவீனம் காணப்படுகின்றது. மூன்றாவதாக இடதுசாரி இயக்கத்தின் வளர்ச்சி குறித்து விமர்சனம் சுய விமர்சனத்தின் அடிப்படையில் நோக்கி எதிர்காலவியலை உருவாக்க முனைதல். இலங்கையில் இடதுசாரி இயக்கம் தற்காலிக பின்னடைவை அடைந்துள்ள சூழலில் அதனை மீண்டும் புணரமைப்பதற்கான தருணத்தை நோக்கிய ஆய்வுகளாக அவை காணப்படுகின்றமை பலமான அம்சமாகும்.
 
பரந்துபட்ட அடிப்படையில் இடதுசாரிக் கட்சிகள், குழுக்கள், இயக்கங்கள், தனி நபர்கள் என்பவர் குறித்த உருவாக்கம், குறிக்கோள், வளர்ச்சி, பலம், பலவீனம், வெற்றி, தோல்வி என்பன குறித்த காத்திரமான ஆய்வுகள் வெளிவரNவுண்டியது காலத்தின் தேவையாகும். யாவற்றிற்கும் மேலாக, நமது சூழலில் ஐரோப்பிய மார்க்சிய சிந்தனைகளை அப்படியே நகலெடுப்பதற்கு பதிலாக நமது பண்பாட்டு சூழலுக்கு ஏற்ற வகையில் மார்க்சியத்தை பிரயோகிப்பதற்கான ஆய்வுகள் அவசியமானவையாகின்றன. இவ்வாய்வுகள்; எண்ணிக்கையில் குறைவுற்றிருந்தாலும் அவை நமது சிந்தனைகளில் காத்திரமான தாக்கத்தினை ஏற்படுத்துவனவாக அமைந்திருக்கின்றன.
 
இத்தகைய ஆய்வுகளே இன்றைய தேவையாகவுள்ளது.

வெளியீடு:- Oswin Workers' School
   143, Kew Road, Colombo - 02. 
தொலைபேசி - 0112430621

‘அறுவடைக் கனவுகள் ‘நாவல் மீதான எனது வாசிப்பு மனநிலை - அசுரா

நேர்காணல் :மா.பாலசிங்கம் (மா.பா.சி)


16-02-2014 அன்று ‘வாசிப்பு மனநிலை விவாதம்-10′ இல் ஆற்றிய உரையின் கட்டுரை வடிவம்.

வாசிப்பிற்கான ஆர்வம் என்பது பன்மைத்துவம் கொண்ட ஒரு அனுபவமாகவே இருக்கும். அதாவது ஒரு படைப்பின் மீதான ஆர்வம் என்பது வாசகனின் மனநிலை சார்ந்தே இயங்குகின்றது. வாசிப்பு மனநிலை என்பது ஒரு படைப்பின் அழகியலை மையமாகக் கொண்டு இயங்கலாம். கருத்தியல் இலட்சியவாதத் தீர்வுகாணும் மனநிலையில் இருந்து இயங்கலாம். யதார்த்த விருப்பு நிலையில் இருந்து இயங்கலாம். புனைவுத் தளங்களுக்கு வசப்படும் மன நிலையிலிருந்து இயங்கலாம். பிறிதொரு சமூக பண்பாட்டு கலாசார விழுமியங்களை அறியும் ஆவலுடனும் இயங்கலாம். இவ்வாறாக வாசிப்பு மனநிலை என்பது பன்முகத் தன்மைகளில் இயங்கக்கூடிய வெளிகளைக் கொண்டதாக இருந்து வருகின்றது.

ஒரு தேர்ந்த படைப்பாளி என்பவன் தனது படைப்பிற்காக பல்வேறு உத்திகளை (Technic) கையாள்வது போலவே வாசகப் பயிற்சிக்கும் பல்வேறு உத்திகளை கையாள வேண்டும் என்பது எனது அனுபவமாக இருக்கின்றது. அல் அஸூமத்  அவர்களின் ‘அறுவடைக் கனவுகள்’ எனும் நாவலை வாசிக்கும் போது எமக்கு அந்நியமான ஒரு சமூகத்தையும், அதன் பண்பாட்டுப் பொருளாதார அம்சங்களை அறியும் ஆவலின் ஊடாகவுமே இந்த நாவலை நாம் முழுமையாக உள்வாங்கமுடியும். அதுமட்டுமல்லாது இந்த நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ள மொழியை புரிந்து கொள்வதற்கும் வாசிப்பிற்குரிய சில உத்திகள் அவசியமானது என்றே நான் கருதுகின்றேன். தேயிலைத் தோட்டத்து தொழிலாளர்கள் பேசுகின்ற தொழில் சார்ந்த  மொழிகள் அதிகமாக ஆங்கில சொற்களை மலையகத் தமிழ் மொழியில் உச்சரித்து அதுவே தமிழ் மொழியாகவும் பழகிப்போன இயல்பைக் காணலாம். இந்த நாவலின் வாசிப்பு உத்தி குறித்து இந் நாவலுக்கு அணிந்துரை எழுதிய தெளிவத்தை ஜோசப் அவரகள் இவ்வாறு கூறுகின்றார். “வாசித்துக்கொண்டே போகவும், பிறகு நிறுத்திவிட்டு அல் அஸீமத் என்ன சொல்ல முனைகின்றார் என்று யோசிக்கவும், மெய்மறந்து சிரிக்கவும் என்று தொடர்வது இந்த வாசிப்பு” இவ்வாறு மலையக எழுத்தாளரான தெளிவத்தை ஜோசப் அவர்களுக்கே இந்த நாவலுக்கான வாசிப்புத் ‘தரிப்பு உத்திகள்’ தேவைப்படும்போது. அச் சமூகத்தைப்பற்றி அறியும் ஆவலுடன் வாசிக்கும் ஒரு வாசகனுக்கு சில மேலதிக வாசிப்பு உத்திகள் தேவைப்படுது இயல்பானதே. அதில் பிரதானமானதாக நான் கருதுவது எவ்விதமான முன் அனுமானக் கருத்தியல் ‘அபிலாசைகளுடன்’ ஒரு பிரதிக்குள் நுழையாது, பிரதிக்குள் நுழைந்த பிற்பாடு எவ்வாறு எமது எண்ணங்களை, இரசனைகளை மாற்றிக்கொள்வது என்பதுவும் ஒரு அவசியமான வாசிப்பு உத்தியாகவே நான் கருதுகின்றேன்.

உதாரணத்திற்கு அண்மையில் தனது ‘தங்கரேகை’ எனும் சிறுகதைக்கு ஷோபாசக்தி பயன்படுத்திய உத்தியை அக்கதையின் முடிவில் அவதானித்திருப்பீர்கள். சொற்களை சிக்காக்கி இறுக்கப்பட்ட சில முடிச்சுகளாக அமைந்திருக்கும் இறுதிப்பந்தி. இந்த சிக்குகளை குலைத்து முடிச்சுகளை அவிழ்ப்பதற்கு வாசகர்களால் முடியும். குலைத்து அவிழ்க்க முடியாது போனாலும். சிக்குகளை அறுத்தும் அவிழ்க்க முடியும். புலி ஆதரவாளர், புலி எதிர்ப்பாளர் போன்ற  அடையாளத்துடனோ, அல்லது ஷோபாசக்த்தியின் அரசியல் மீதான விமர்சனங்களுடனோ கதைக்குள் நுழைந்தால் முடிச்சை அவிழ்க்கமுடியாது. ‘தங்கரேகையின்’ கதை மாந்தர்களான வேலும் மயிலும், பமு, புனிதவதி, கல்கி, அத்துடன் சிந்தாமணி பேக்கரி என அனைத்தையும் நேர் கோட்டில் இழுத்து வைத்து நிதானிக்கும்போது வாசகனின் போக்கில் முடிச்சு அவிழும். முடியாது போனால் அறுத்தும் கதையை முடியலாம். இதைத்தான வாசகனுக்குரிய உத்தியாக நான் கருதுவது. ஷோபாசக்திக்கு உகந்த வகையில்தான் நாம் முடிச்சை அவிழ்க்க வேண்டும் என்றில்லை. எமக்கு வளமான போக்கில் சிக்கலை குலைக்க முடியும். இதைத்தான் வாசக உத்தி என நான் கூறுவது.

ஆரம்பத்தில் அல் அஸூமத் அவர்கள் ஒரு கவிஞனாகவே அறியப்பட்டிருக்கின்றார். அவர் பல சிங்கள கவிதைகளை தமிழில் மொழி பெயர்த்தவராகவும் நான் அறிந்து கொண்டேன். மேலும் அவர் குறித்த மேலதிகமான அறிமுகத்தை தனது அணிந்துரையில் தெளிவத்தை ஜோசப் அவர்கள் பதிவு செய்திருக்கின்றார்.

இந்த நாவல் மீதான எனது வாசிப்பு ஆர்வம் என்பது அழகியல், உருவகம், புனைவு போன்ற கலைத்துவப் படைப்பாற்றல் பண்புகளால் ஆனது அல்ல. மலையக சமூகத்தின் வாழ்வியலை, அவர்களின் பண்பாட்டு கலாசார அம்சங்களை அறிந்து கொள்ளவேண்டும் எனும் ஆவலினால் மேலெழுந்த ஒன்றாகும்.

“1984ஆம் ஆண்டில் தினகரன் நாளிதழில் தொடராக வெளிவந்த ‘அறுவடைக் கனவுகள்’ செப்பனிடப்பட்டு இப்போது நூலாகி உங்கள் கரங்களில் மிளிர்கிறது. இது கதை அல்ல. ஒரு வரலாற்றுச் சம்பவம். மலைநாட்டுத் தேயிலைத் தோட்டங்களில் 20ஆம் நூற்றாண்டு நடுப்பகுதியின் முன்னும் பின்னும் நடந்த வரலாற்றின் ஒரு துளியாகும். இதைப் படித்து முடித்தவுடன் ‘நல்ல கதை’ என்று சொல்வீர்களோ, ‘பரவாயில்லை’ என்று சொல்வீர்களோ அஃதல்ல இங்கே முக்கியம்.இதை வரலாறுதான் என்று எண்ணி ஒரு பெருமூச்சு விட்டீர்களானால் அதுவே இந்நூலின் வெற்றியாகும்.” என்பதாக இந் நூலாசிரியர் வாசகர்களிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கின்றார்.

இந்த நாவலின் பிரதானமான உள்ளடக்கம் என்பது தேயிலைத் தோட்டத்தில் வேலைசெய்யும் சுப்பர்வைசர் எனும் மேற்பார்வையாளரின் தோட்டத்து வாழ்க்கை முறையை மையமாகவும், தேயிலைத் தோட்டத்து வேலை முறைகள், தொழிலாளர்கள், உத்தியோகத்தர்கள், மேலதிகாரிகள் போன்ற தொழில் நிர்வாக முறைகளை ஆழமான புரிதலுக்கு உட்படுத்தும் வகையிலும் சித்தரிக்கப்பட்ட ஒரு நாவலாகும்.

-கதைச் சுருக்கம்-

மாத்தளையிலுள்ள ‘சுதுகங்க’ எனும் எஸ்டேட்டில் வசிக்கும் கேரளத்து நாயர் வம்சத்துக் குடும்பத்தின் மூத்த புதல்வனான வேலாயுதம் என்பவரே இந்நாவலின் கதைசொல்லியும் பிரதான பாத்திரமும் ஆகும். றப்பர் தோட்டத்துக் கூலியாக வந்தவர் இவரது தகப்பனார். கேரளத்தைச் சேர்ந்தவர்கள் கல்வியில் அக்கறைகொண்டவர்களாக இருப்பதன் காரணமாக வேலாயுதம் அவர்களும் கல்விபெறும் வாய்ப்பை அடைகின்றார். இவர் ஒரு முற்போக்கு சிந்தனை கொண்டவராகவும் எழுத்தாளராகவும் சித்தரிக்கப்பட்டிருக்கின்றார். இருப்பினும் நிரந்தரமான வேலையற்றவராகவும் தனியார் கல்வி நிலையங்களில் ஆசிரியராகவும் சிறுதுகாலம் பணியாற்றிய அனுபவமும் உள்ளவர்.

இருந்தபோதும் நிரந்தரமான வேலை இல்லாத காரணத்தால் வேலாயுதத்திற்கும் அவரது தந்தையாருக்கும் இடையில் முரண்பாடு முற்றுகின்றது. வேலாயுதத்தின் கல்வியில் அக்கறையாக இருந்த றப்பர் தோட்டத்து கணக்குப்பிள்ளை ‘பாட்டா’ என்பவரின் மகனான செல்வமணியின் செல்வாக்கை பயன்படுத்தி வேலை பெறுவதற்காக அவரது ஊருக்கு வருகின்றார்.

செல்வமணியின் உதவியூடாக பல்வேறு சிபாரிசுகளுடன் மலையக தோட்டத்து ஆசிரிய வேலைக்கான நேர்முகப் பரீட்சைக்கு சென்றபோது பிரஜாஉரிமை இல்லாத காரணத்தைக் கூறி அவ்வேலைக்கு தகுதியற்றவராக கணிக்கப்படுகின்றார். செல்வமணி என்பவர் தோட்டத்துக் கண்டாக்டர். கண்டாக்டர் என்னும் பதவியே ஆரம்பத்தில் பல்வேறு அதிகாரங்களையும் கொண்ட ஒரு பதவியாக இருந்திருக்கின்றது. தோட்டத்தின் வெள்ளைக்கார முகாமையாளருக்கு அடுத்த நிலையில் இருப்பவர் கண்டாக்டர் எனப்படுபவர்.

இந்தக் கண்டாக்டர் செல்வமணியின் நண்பராக இருப்பவர் பாறைக்காட்டு தோட்டத்திற்கு முகாமையாளராக இருக்கும் ஆஸ்ரேலியாவைச் சேர்ந்த ‘வைட்’ எனும் வெள்ளைக்காரத் துரை. செல்வமணி அவர்களே வைட் எனும் வெள்ளைக்காரருக்கும் தேயிலைத் தோட்டத்து வேலைகளை பயிற்றுவித்தவர். எனவே வேலை தெரியாதவர்களாக இருப்பினும் செல்வமணியினால் உத்தியோகத்திற்கான சிபாரிசில் வரும் அனைவரையும் வைட் துரை வேலையில் நியமிப்பதுவும் வழமையாக இருந்து வந்தது.

நாவலின் பிரதான பாத்திரமான வேலாயுதம் ஆறுமாதமாக வேலைக்காக செல்வமணியின் வீட்டில் தங்கியிருந்த போது ஒரு நாள் வைட் துரையிடமிருந்து செல்வமணிக்கு தொலைபேசி அழைப்பு வருகின்றது. அவரது நிர்வாகத்திலுள்ள பாறைக்காட்டு தோட்டத்து சிங்கமலை டிவிசனுக்கு ஒரு சுப்பர்வைசர் தேவைப்படுவதாக அவ்வுரையாடலில் தெரிவிக்கப்படுகின்றது. தன்னிடம் ஒரு படித்த ஆங்கிலம் பேசக்கூடிய நேர்மையான ஒருவர் இருப்பதாகவும், அவரை அந்த வேலைக்கு தான் அனுப்புவதாகவும் வேலாயுதத்தை மனதில் வைத்து வெள்ளைக்காரத்துரையிடம் செல்வமணி அவர்கள் கூறினார். சிறுவயதில் பாடசாலைக்கு போவதற்கு முன்பாக தனது தகப்பன் வேலைசெய்த றப்பர் தோட்டத்தில் பால்வெட்டிய அனுபவம் மட்டுமே இருந்தது. அதனால் வேலாயுதம் முதலில் தயங்கினார். தனக்கு தேயிலைத் தோட்டத்து வேலை எதுவும் தெரியாதே நான் எப்படி மேற்பார்வையாளனாக பணியாற்றுவதென்று. “அதெல்லெம் பயப்படத்தேவையில்லை நான் அனுப்பிய சோமையா என்பவரே அங்கு கணக்குப்பிள்ளையாக இருக்கின்றார். அவர் வேலை பழக்குவார். அவருக்கும் வைட் துரைக்கும் கடிதம் தருகின்றேன் நீ பயப்படாமல் போ” என அனுப்பிவைக்கின்றார். ஊரிலிருந்து  புறப்பட்டு தலாவாக்கொல்லைக்கு வந்து, அங்கிருந்து ஹட்டனுக்கு வந்து, அங்கிருந்து சாஞ்சி மலையில் வந்திறங்கி, சில மைல் தூரம் கால்நடையாக வந்து…, தான் வேலையில் சேரப்போகும் சிங்கமலை டிவிசனுக்கு வந்து சேர்ந்தார் வேலாயுதம்.

வைட் எனும் வெள்ளைக்காரத் துரையின் மேற்பார்வையிலுள்ள தேயிலைத் தோட்டமானது பாறைக்காட்டு டிவிசன், அல்குல்தென்னை டிவிசன், சிங்கமலை டிவிசன் என மூன்று டிவிசன்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றது. வைட் துரை வருவதற்கு முன்பாக இந்த மூன்று டிவிசன்களும் மிகவும் நஸ்டத்திலேயே இயங்கி வந்திருக்கின்றது.  வைட்  இன் நிர்வாகமும், நேர்மையும்,கண்டிப்பும் அத்துடன் அவரது கருணையும் காரணமாக தோட்டம் மிக இலாபத்தில் இயங்கி வருகின்றது. சிங்கமலையில் சுப்பர்வைசராக நியமிக்கப்பட்டு, சோமையா என்ற கணக்குப்பிள்ளையின் உதவியாலும், தாண்டவராயன் எனும் சுப்பர்வைசரின் உதவியாலும் வேலை பழகி வெள்ளைக்காரத் துரையின் நம்பிக்கைக்கு உள்ளானவராகவும், பதவி உயர்வும், சம்பள உயர்வும் பெறுகின்றார் வேலாயுதம் எனும் மேற்பார்வையாளர்.

இடும்பன் என்ற கண்டாக்டர் எனும் பாத்திரம் எதிர்மறையான பாத்திரமாக இந்த நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கின்றது. இந்த இடும்பன் சுயநலவாதியாகவும், அதிகார துஸ்பிரயோகம் செய்பவராகவும் இருந்து வருகின்றார். இடும்பனுக்கு ஆதரவாக சில கங்காணிமாரும், சுப்பர்வைசர் சிலரும் செயல்பட்டும் வருகின்றார்கள். அதில் ஒருவர் தொழிற்சங்கத் தலைவராகவும் இருக்கின்றார். அதன் காரணமாக அவர்கள் மீது மிக கண்டிப்புடன் செயல்படுகின்றார் வெள்ளைக்காரத் துரை அவர்கள். அல்குல்தென்னை எனும் டிவிசனில் வேலை செய்பவர்கள்தான் மேற்படியான எதிர்மறைப் பாத்திரங்கள். இந்த நாவலில் வெள்ளைக்காரத் துரைக்கும் இடும்பனுக்குமான உறவு மிக சுவையான சித்தரிப்பு. இந்த எதிர் மறைப் பாத்திரங்களால்  வைட் இற்கு எதிரான கொலை முயற்சிகளும் மேற்கொள்ப்பட்டிருக்கின்றது. தொல்லை தாங்காது இடும்பனை தனது தோட்டத்தில் வேலைசெய்யாது வேறு தோட்டத்திற்கு போகுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார். இடும்பனும் தான் வேறு தோட்டத்திற்கு போகின்றேன் அங்கு சேர்வதற்கான சிபாரிசுக் கடிதங்கள் தரவேண்டுமென கேட்டபோது, இவன் போய்த்தொலைந்தால் போதும் என்ற நோக்கத்தில் இடும்பனைப்பற்றிய நற்சான்றிதழ்கள் பலவற்றை கொடுத்திருக்கின்றார். அவற்றை பெற்றுக்கொண்ட இடும்பன் வேலைதேடிப் போகவில்லை. இவரால் அவனை வேலையை விட்டும் நீக்கமுடியவில்லை. தானே நற்சான்று வழங்கிய ஒருவனை எப்படி வேலையை விட்டு நீக்குவது என்ற சிக்கலால் இடும்பனை வேலையை விட்டு நீக்க முடியாது போனாலும் நீ வேலையே செய்ய வேண்டாம் என்று தடுத்துவிட்டார். இடும்பன் மோட்டார் சையிக்கிளில் சுற்றித்திரிவதும் தனக்கு சாதகமானவர்களுடன் சேர்ந்து தீங்கு இழைப்பவனாகவும் இருக்கின்றான்.

வைட் துரையின் நிர்வாகத்தின்கீழ்  கடைமை உணர்வோடு வேலைசெய்பவர்களாக சில நேர்மறைப்பாத்திரங்களும், இடும்பனின் அதிகாரதுஸ்பிரயோகங்களுக்கு சாதகமானவர்களாக சில எதிர்மறைப் பாத்திரங்களும் சித்திரிக்ப்படுகின்றது. வைட் நிர்வாகத்தின் விசுவாசத்திற்கு உகந்த பாத்திரமான வேலாயுதம் எனும் சுப்பர்வைசரின் அவலத்தை வெளிப்படுத்தும் நோக்கமே இந்நாவலின் பிரதான நோக்கமாகும்.

வேலாயுதத்தின் தம்பி குட்டப்பனும் சிங்கமலையில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றார். சுப்பர்வைசரான வேலாயுதம் இடும்பனுக்கு சாதகமான தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுத்துவருவதால் கந்தையா (தொழிற்சங்கத் தலைவர்) மற்றும் கங்காணிகளான தங்கையா, கணபதி போன்றவர்களால் வேலாயுதமும் தாண்டவராயனும் பல்வேறு தொல்லைகளுக்கு உள்ளாகின்றனர். அவர்களது குவாட்டர்சில் தராசு, படி போன்றவற்றை களவெடுப்பது. இரவு நேரம் அவர்களது குவாட்டர்சிற்கு கல்லெறிந்து கொலை மிரட்டல்களும் மேற்கொள்ளப்படுகின்றது.

சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தத்தின் அடிப்படையில் பிரஜா உரிமைச் சட்டம் அமுல்படுத்தியபோது வேலாயுதத்திற்கு விருப்பம் இல்லாதுவிட்டாலும் தகப்பனின் விருப்பத்திற்காக வேலாயுதமும் அவர்களது குடும்பமும் இந்தியாவிற்கு திரும்புவதற்கு பதிவு செய்கின்றார்கள். தாண்டவராயன் இலங்கைப் பிரஜா உரிமைக்காக பதிவு செய்கின்றார்.

வைட் துரையின் கண்காணிப்பில் பாறைக்காட்டு குறூப் தோட்டம் நல்ல இலாபத்தில் இயங்குவதால் நஸ்டத்துடன் இயங்கும் வேறு ஒரு தோட்டத்தை பொறுப்பேற்கும்படி  தோட்டக் கெம்பனி நிர்வாகம் கேட்டபோது. அதை மறுத்து வைட் துரை இலங்கையைவிட்டு ஆஸ்ரேலியாவிற்கு திரும்புகின்றார். அவருக்கு மாற்றாக அயர்லாந்தைச் சேர்ந்த ஜேம்ஸ் மேசன் என்பவர் புதிய துரையாக வருகின்றார். அவர் ஒரு அதிகார துஸ்பிரயோகியாகவும், இடும்பனின் செல்வாக்கு தோட்டத்தில் மேலோங்குவதாகவும் நிலமை மாற்றமடைகின்றது. தோட்டத்தில் கொழுந்துகள் அற்றுப்போவதும், தொழிலாளர்களுக்கான வேலைகள் குறைந்து போவதுமாக நிறைவை நெருங்குகின்றது நாவல். வேலாயுதம் தோட்ட வேலையில் சேர்ந்து இரண்டு வருடங்களின் பின்பு இந்தியா திரும்புவதற்கான ஏற்பாடுகள் நிறைவேறியபோது. தனது வேலையை இராஜினமா செய்கின்றார். இடும்பனும் கொல்லப்படுகின்றான். இறுதியாக சுப்பர்வைசர் வேலாயுதம் இந்தியா செல்வதற்காக தோட்டத்திலுள்ளவர்களிடம் மனம் உருகி விடைபெற்று செல்வதோடு நாவல் நிறைவடைகின்றது.

இப்போது இந்த நாவலூடாக நான் பெற்ற அனுபவத்தையும் எனது சில எதிர்பார்ப்புகளையும் உங்களோடு பகிர்ந்து கொள்ளலாம்.

வெள்ளைக்காரத் துரையாக வரும் வைட் என்பவர்  பேசுவது தமிழ். ஆங்கிலம் தெரிந்தவர்களையும் தமிழில் பேசுமாறே வற்புறுத்துவார். அவர் பேசும் தமிழை தோட்டத்தில் வேலை செய்பவர்களால் மட்டுமே தெளிவாக புரிந்து கொள்ள முடியும். தோட்டத்து வாழ்வோடு அனுபவம் இல்லாதவர்களுக்கு அது மிக சிரமமாகவே இருக்கும். “அவன் வெரட்… தேய்லே கன் வீஸ்னான்! குலி பாத் போட இல்லை. மேலே பாத் குலி வீஸ்னான்! என்டே கன் நசாம்! வெரட் போட்! ஒம்பது மனி! கேஸ் போட்! கன்க்குபுல்லேக்கி சொல்!” ‘அவன விரட்டு, குழியிக்குள் போட்டு புதைப்பதற்கில்லை. தேயிலைக் கண்டு வைச்சனான் குழியிக்குள்ள நடுவதற்கு. என்ர கண்டு நாசம். ஒன்பது மணிக்கு விரட்டியது என்று கேஸ் போட்டதாக கணக்குப்பிள்ளையிடம் சொல்லு’ என்பதுதான் வெள்ளைக்காரத் துரை பேசிய தமிழின் அர்த்தமாக நான் புரிந்துகொண்டேன். இதுபோன்ற தருணங்களில் எமக்கு நிதானமான வாசிப்பின் தேவை இருப்பதாகவே நான் கருதுகின்றேன்.

இவ்வாறு வெள்ளைக்காரத் துரை தமிழ் பேசினாலும் மலையக மக்களுக்கு எந்தவித சிரமும் இருப்பதில்லை. தோட்டங்களுக்கு நியமிக்கப்படும் துரைமார்கள் இலங்கையர்களாகத்தான் இருக்கவேண்டும் என்ற நிலை மாறியபோது, எமது யாழ்ப்பாணத்து தமிழர்களும் தேயிலைத் தோட்டங்களுக்கு துரைமார்களாக  நியமிக்கப்பட்டனர்!!

“அம்மா என்று தமிழ்த் துரையின் மகன் கூறிவிட, பதறிப் போன துரை தத்தக்கா புத்தக்கா என்று நடக்கமுடியாத அந்த சிசுவைக் கூட்டிக்கொண்டு நடைபயின்றார். பிள்ளை மடுவத்தை தாண்டுகையில், பால் குடித்துக்கொண்டிருந்த சிசுவைப் ‘பரக்’ என்று இழுத்துப் போட்டுவிட்டு, ரவிக்கை விளிம்பில் அலுப்பினாத்தியைக் குத்தியபடி மலையை நோக்கி ஓடும் அந்தத் தாயைப் பார்த்து ‘அம்மா’ என்று அழுத குழந்தையை துரை (யபழ்ப்பாணத் துரை-அசுரா) தன்னுடைய சிசுவிற்குச் சுட்டிக்காட்டி’ you see it is their language. Thesse laboures language. You must say mummy.” இவை ‘மனம் வெளுக்க’ எனும் தெளிவத்தை யோசப் ஐயாவின் குறுநாவலில் வருகின்ற ஒரு சம்பவம். பின்பு வரும் யாழ்ப்பாணத் தமிழ்த் துரைக்கு மலையகத் தமிழ், கூலிகளின் தீண்டாமை மொழியாக இருந்திருக்கின்றது.  ‘அறுவடைக் கனவுகள்’ நாவலில் வரும் வைட் துரை பேசிய தமிழ் மொழியை மலையக மக்கள் புரிந்து கொள்வதோடு அதைக்கொண்டாடியும் இருப்பார்கள்.

இந்த ‘அறுவடைக் கனவுகள்’  நாவலில் வரும் தொழிற்சங்க செயல்பாடுகள் குறித்த தகவல்கள் எனது ‘தற்போதைய’ கருத்தியல் நிலைப்பாட்டிற்கு வலுச்சேர்க்கும் சம்பவமாக கருதுகின்றேன். தொழிற்சங்கங்கள் மற்றும் ஒடுக்கப்படும் மக்களுக்கான சிந்தனைகள், கோட்பாடுகள் யாவும் நிறுவனங்களாகவும், அமைப்பாக்க முறைமைகளாகவும் செயல்படக்கூடிய தன்மையைக் கொண்டிருக்கின்றது. இவை தனிமனித ஆற்றல்களையோ, தனிமனித அதிகார உறவுகளையோ (கணவன் மனைவிக்கிடையில், சகோதர உறவக்கிடையில், நட்புக்கிடையில்,சமூக கலாசார உறவுகளுக்கிடையில், பதவி-பொருள்-புகழ்  etc…etc. ) சார்ந்து இயங்குபவை அல்ல. இப்படிக் கூறுவதால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான கருத்தியல் சிந்தனைகள், கோட்பாடுகள், நிறுவனங்கள் அவசியம் அற்றது என்ற முடிவுக்கு நான் வந்ததாக கருதவேண்டாம். அவை மிக அவசியமானதாகவும் உள்ளது. இருப்பினும் அவைகளை ஒரு புனிதப் பொருளாக கொண்டாடும் போது ஏற்படும் விளைவுகளையே நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

இந்த நாவலில் வெள்ளைக்காரத் துரைக்கு ஆதரவாக செயல்படும் உத்தியோகத்தவர்களுக்கும். தீயவனாகவும், அதிகார துஸ்பிரயோகம் செய்யும் இடும்பன் என்ற பாத்திரத்திற்கு ஆதரவாக செயல்படும் தொழிலாளர்களுக்கும் இடையில் தொழிற்சங்கத்தின் நிலைப்பாடு கேள்விக்குறியாக அமைந்திருக்கின்றது. வெள்ளைக்காரத் துரை மிகவும் நல்லவராகவும், தொழிலாளர்களுக்கு தொடந்து வேலைவாய்ப்பு அளிக்கக்கூடிய வகையிலான நல்ல திட்டங்களை மேற்கொள்பராக சித்தரிக்கப்படுகின்றார்.

“சோம்பேறித்தனமாக ஆட்சி செய்து கொண்டிருந்த தொழிலாளர்களுக்கு, வைட் துரையின் கண்டிப்பும் சுறுசுறுப்பும் பிடிக்கவில்லை.

தொழிலாளர்களுக்குப் பிடிக்காமல் போனதால் தொழிற்சங்களுக்கும் பிடிக்கவில்லை! அபாண்டங்கள், கோஷங்கள், துவே ஷப் பெட்டிஷன்கள், வேலைநிறுத்தங்கள், தாக்குதல்கள், கொலை முயற்சிகள் போன்ற தொழிலாளர்களின் அல்லது தொழிற் சங்கங்களின் பலதரப்பட்ட ஆயுதங்கள் மழுங்கிப் போயின. வைட்டின் இடமாற்றங்களுக்கும் விரட்டல்களுக்கும் கடின வேலைகளுக்கும் கருவறுத்தல்களுக்கும் முன்னால்! சாணைக் கற்களுக்கு முன்னால் என்று கூடச் சொல்லலாம்!

சோம்பேறிகளும் பொய்யர்களும் களவாணிகளும் பந்தக்காரர்களும் ஆயுள் தண்டனை அடைந்தார்கள்! தொழிலாளியாக இருந்தாலும் உத்தியோகத்தனாக இருந்தாலும் தண்டனை தண்டனைதான!

அதே நேரம், உழைப்பாளிகளும் நேர்மையாளிகளும் அவரால் நேசிக்கப்பட்டார்கள். வைட்டின் நிர்வாக இரகசியம் அதுவாகத்தான் இருந்தது.” (54)

என்பதாக தொழிற்சங்கம் மீதான குற்றச்சாட்டுக்கள் விபரிக்கப்பட்டிருக்கின்றது. இதில் தொழிற் சங்கத்தை குறை கூறுவதற்கில்லை. தொழிற் சங்கம் என்பது தொழிலாளர்கள் எனும் தொகுப்பை, அதன் நலன்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நிர்மாணிக்கப்பட்ட ஒரு நிறுவனம். அதற்கு இடும்பன் எனும் தனிமனிதனின் இயல்புகள், அவனது மனநிலை குறித்தெல்லாம் அக்கறை இல்லை. அவினிடம் இருக்கும் ஆதாரங்களின் அடிப்படையில் செயல்படுகின்றது. தொழிற்சங்கத்திற்கு மனித ஆன்மா இல்லை, அன்பு-கருணை இல்லை. வைட் துரை இடும்பனுக்கு கொடுத்த நற்சான்றுப் பத்திரங்களின் அடிப்படையில் தொழிற்சங்கம் செயல்படுவதையும் நாவல் விபரித்திருக்கின்றது.

வெள்ளைக்காரத் துரை என்பவர்கள் எல்லோரும் நல்லவராக இருப்பார்கள் என்றும் இல்லை.

“ஒரு ராஜா போன்றவர் தோட்டத்துக்குத் துரை!

வேலைக்காரர்களின் சிற்றறைகளையும் குசுனி குளியல் அறைகளையும் சேர்க்காமல் பதினெட்டு அறைகள் கொண்டது அந்த பங்களா!

வசிப்பவர்கள் துரையும் அவருடைய மனைவியுமே. பிள்ளைகள் லண்டனில் படிக்கின்றனர்.

பங்களாவின் பூந்தோட்டத்தில் எல்லாவிதமான பூஞ்செடிகளும் இருக்கின்றன. கண்டிப் பூந்தோட்டத்துக்குக் கூட தன் பங்களாவில் இருந்து பூங்கன்றுகள் அனுப்பியுள்ளார் துரை.” (‘ஞாயிறு வந்தது’ குறுநாவல்-தெளிவத்தை ஜோசப்)

இவ்வாறுதான் துரைமார்களின் நிலை இருந்திருக்கின்றது. வைட் துரை என்பவர் விதிவிலக்காக அமைந்திருக்கலாம்.

இந்நாவலின் பிரதான நோக்கமாக இருப்பது தேயிலைத் தோட்டத்தில் உத்தியோகத்தர்களாக பணிபுரியும் சுப்பர்வைசர் என்பவர்கள் மீதான அனுதாபத்தை வாசகர்களிடம் எதிர்பார்ப்பதாகவே நான் உணருகின்றேன். “ஒரு அப்பாவிப் பரம்பரைதான் இந்த சுப்பர்வைசர் பரம்பரை. அப்பாவிகள் என்று ஏன் சொன்னேன்? எஸ்டேட் ஸ்டாஃப்ப்ஸ் என்னும் தோட்ட உத்தியோகத்தர் பட்டியலுக்குள்ளும் வர முடியாத, தங்களில் ஒருவர் என்று தொழிலாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு இரண்டுங்கெட்டான் உத்தியோகம் இது.” என இந்நாவலுக்கான அணிந்துரையில் தெளிவத்தை ஜோசப் பதிவு செய்திருக்கின்றார். இந்த நாவலின் அனுபவத்தால் மட்டுமல்ல தெளிவத்தை ஜோசப் ஐயா அவர்களின் சில நாவல்களை வாசித்த அனுபத்தாலும். தோட்டத்து உத்தியோகத்தவர்கள் துரை மார் அனைவரும் கொழுந்து பறிக்கும் அடிமட்ட மக்களின் நலன்களில் அக்கறை அற்றவர்களாகவே இருந்திருப்பார்கள் எனும் தீர்மானத்திற்கே நாம் வரக்கூடியதாக இருக்கும். இந்த நாவலில் வரும்  வைட் துரை குறித்த சம்பவம் உண்மையாக இருப்பினும் இது ஒரு விதிவிலக்கான சம்பவமாகத்தான் என்னால் கருத முடிகின்றது.

இந்த ‘அறுவடைக் கனவுகள்’ நாவலில் வரும் பாத்திரமான ஒரு கொழுந்து பறிக்கும் பெண்தொழிலாளி தனது கதையை எழுதுவாரேயாயின் இந்த நாவலில் வரும் வேலாயுதத்தின் கதி என்னவாகும்! இந்த நாவலில் வரும் சம்பவங்களில் இருந்து வேலாயுதத்தையும் தொழிலாளர்களான கொழுந்து பறிக்கும் பெண்பாத்திரங்களையும் சிந்திக்கின்றபோது. வேலாயுதம் எனும் சுப்பர்வைசரின் மீது எனக்கு எந்த அனுதாபமும் எழவில்லை.

வேலாயுதத்திற்கு பதவி, சம்பளம் போன்ற தகுதிகளைவிட மிகப்பெரிய தகுதி என்ன தெரியமா!! அவர் உயர்ந்த சாதி என்பதே. “நாங்கள் உயர்ந்த சாதியாம். லயத்திலோ தோட்டத்திலோ எங்கே இருந்தாலும் சரி தாழ்ந்த ஜாதிக்காரப் பிள்ளைகளுடன் நாங்கள் விளையாடக் கூடாது! அவர்களோடு குளிக்கப் போக கூடாது! பாடசாலைக்கும் ஒன்றாகப் போய்விடக் கூடாது! யார் வீட்டுக்கும் போய்விடக் கூடாது!” (36) என கதை சொல்லியான வேலாயுதம் அவர்களே சாதியத்தைக் கேள்விக்குட்படுத்தியபோதும் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் அவர் மிகப்பெரிய தகுதிக்குடையவராகவே பார்க்கப்படுகின்றார்.

“ஸ்டாஃப்மாருக மேஜாதியாக இருந்தாத்தான் லேபஃர்ஸ அடக்க முடியும். இது இன்னைக்கி நேத்து வந்த பழக்கமில்லையே” (42) எனும் விதிமுறை கடைப்பிடிக்கப்படும்போது வேலாயுதத்தை நல்வராகக் காட்டுவது வேடிக்கையாகவும் இருக்கின்றது. உயர்சாதியினரை உத்தியோகத்தில் நியமிப்பது தொழிலாளர்களை அடக்கவும், தொழிலாளர்கள் அடங்கி ஒடுங்குவதற்குமான ஒரு தோட்ட சிஸ்ரமாக சாதியம் முன்னரங்கில் நிற்கும்போது. வேலாயுதம் சாதிய ஒடுக்குமுறையை கேள்விக்குள்ளாக்குபவர் எனும் அடையாளமானது கொழுந்து பறிக்கும் தொழிலாளர்களுக்கு எந்தவகையில் பயன் உள்ளதாக அமையும். அவர் தொழலாளர்கள் குறித்து அக்கறைகொண்டவராக இருப்பினும்.

வோலாயுதத்திற்கு மாதச் சம்பளம், வேலையில் சேர்ந்து சில மாதங்களிலேயே சமபள உயர்வு, பதிவி உயர்வு! போன்ற சலுகைகள் இருக்கின்றது. செல்லம்மா எனும் தொழிலாளி நேரம் பிந்தி வந்ததால் அவரை லயத்திற்கு திரும்பும்படி விரட்டுகின்றார். அந்த பெண் வேலை தரும் படி இறைஞ்சும்போது “இந்த மல நல்லா இருந்தா நானா கட்டிக்கிட்டுப் போகப் போறன்?… நீங்கதான் சம்பாதிச்சுக் கை நெறய வாங்கப் போறீங்க! நல்ல சம்பளத்தில வேறெங்காய்ச்சும் ஒரு வேல கெடச்சிச்சின்னா நான் பேய்றுவேன்! சரியா..” என்பதாக சுப்பர்வைசரின் வாழ்வாதாரத்திற்குரிய பலமான உரையாடல்களை நாம் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. ஆனால் கொழுந்து பறிக்கும் பெண் தொழிலாளர்களுக்கோ வாழ்வாதாரத்திற்கான நம்பிக்கை என்பது தேயிலைக் கொழுந்து மட்டுமே! ‘கை நெறய’ அவங்களால சம்பாதிக்க எப்படி முடியும். கொழுந்து பறிப்பதில் அவர்கள் படும் பாட்டையும் அவர்கள் எதிர்நோக்கும் அவலங்களையும் அஸூமத் அவர்கள் மிக விரிவா சித்தரித்திருக்கின்றார். கொழுந்து பறிக்கும்போது முத்திய இலைகளை தவிர்க்கவேண்டும். இலைகளை பாதியாக பிக்கக்கூடாது. நெறுக்கும்போது கொழுந்து ஈரமாக இருந்தாலும், கொழுந்து துப்பரவாக இல்லை என கருதினாலும் நிறையை வெட்டுவார்கள். இதுபோன்ற பல்வேறு நெருக்கடிகளுடனும் உத்தரவாதமற்ற நிலையிலும் உள்ள தொழிலாளர்களாக இருப்பவர்கள், இந்த கொழுந்து பறிக்கும் பெண் தொழிலாளர்கள். தெளிவத்தை ஜோசப் அவர்கள் எழுதிய ‘ஞாயிறு வந்தது’ எனும் குறுநாவலில் வரும் காத்தாயி எனும் பாத்திரத்தினூடாக மலையக பெண்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சனைகளை நாம் தெரிந்து கொள்ளலாம். தோட்டத் துரை மார்கள், உத்தியோகத்தர்கள், கங்காணி மார்களோடு படும் அவஸ்ததைகளோடு தமது கணவர்களோடு படும் அவஸ்தை மிகக்கொடூரமானதாக இருக்கும்.

இப்படியான எனது அபிப்பிராயத்தை இந்நாவல் மீதான எனது எதிர்மறையான விமர்சனமாக நீங்கள் கருதிவிடவேண்டாம். இக்கதை மாந்தர்களும் சம்பங்களும் ஒரு உண்மை நிகழ்வாக இருக்கலாம். அவற்றை அறிந்து கொள்வதும், அல் அஸூமத் அவர்களின் உரைநடைகளூடான வாசிப்பு அனுபவமும் மிகவும் ஒரு சுவையாகவே இருக்கின்றது. இந்த நாவலூடாக தேயிலைத் தோட்டத்து வாழ்க்கையும் தோட்டத்தொழில் துறைசார்ந்த ஒரு முழுமையான சித்திரத்தையும் பதிவு செய்திருக்கின்றார் அஸூமத் அவர்கள். தேயிலைத் தோட்டத்துறை சார்ந்த முழுமையான சித்தரிப்பை நான் உள்வாங்குகின்றபோது தோட்டத் துறை உத்தியோகத்தவர்கள் மீதான உணர்வு பூர்மான கருசனையோ, அனுதாபமோ தோன்றவில்லை என்பதுதான் எனது அனுபவமாக இருக்கின்றது.  இந்நாவலின் கதைசொல்லியாகவும், பிரதான பாத்திரமாகவும் வரும் தேயிலைத்தோட்டத்து உத்தியோகத்தரான வேலாயுதத்திற்கு மாறாக…, கொழுந்து பறிக்கும் ஒரு ‘காத்தாயி’ கதை சொல்லியாகவும் பிரதான பாத்திரமாகவும் சித்தரிக்கும் வகையில் கதை கூறப்பட்டிருப்பின் எப்படியிருக்கும் என்ற எனது கற்பனையின் வெளிப்பாடுதான் இது. இந்த உண்மையை அஸூமத் அவர்களின் ‘அறுவடைக் கனவுள்’ ஊடாகவே நான் வந்தடைந்திருக்கின்றேன். இதுவே நாவலின் மிகபெரிய வெற்றியாகவும் நான் கருதுகின்றேன்.

நான் அண்மையில் இலங்கை சென்று நண்பன் மல்லியப்பு சந்தி திலகருடன் கண்டி, நுவெரெலியா போன்ற தோட்டத்துறை சார்ந்த பிரதேசங்களூடாக பயணித்தேன். அப்போது தேயிலைத்தோட்டங்களும் அதில் வேலைசெய்யும் தொழிலாளர்களும் எனக்கு அழகிய பச்சைப் பசுமையான தோற்றமாகவும், பரவசமான  ஒரு காட்சியாகவுமே தோன்றியது. இந்த ‘அறுவடைக் கனவுகள்’ இன் வாசிப்பு அனுபவத்தின் பிற்பாடுதான் தவமுதல்வன் சொல்வதுபோல் இது பச்சைப் பசுமை அல்ல ’பச்சை இரத்தம்’என்பதை இந்த நாவல் எனக்குணர்த்தியது. இந்த நாவலில் வரும் தொழிற்சொற்கள் சிலவற்றின் அர்த்தம் சரியாக புரியாததால் மல்லியப்பு சந்தி திலகருடன் தொடர்பு கொண்டு உரையாடினேன். அப்போது நான் அடிக்கடி தேயிலைச் செடி என்ற வார்த்தையை உபயோகித்தபோது, “மச்சி நீ முதலில் தேயிலை செடி என்று சொல்வதை நிப்பாட்டு! அதுசெடி அல்ல அது மிகப் பெரிய நீண்ட நெடிய மரம். அதனது சக்தியும், அதனது சுயமும், அதனது வீரியமும் திட்டமிட்டு அழிக்கப்பட்டது. தொடர்ந்தும் அழிக்கப்பட்டும் வருகின்றது. தேயிலைக் கொழுந்து எடுப்பதற்காக செடியாக குறுக்கப்பட்டது. கொழுந்து பறிக்கப்படாது விட்டால் நீண்ட நெடிய மரமாக வளரக்கூடிய ஒரு மரம் அது. இதோடு வேறொரு உண்மையையும் நீ தெரிந்து கொள்ள வேண்டும். எவ்வாறு தேயிலை மரத்தை வளரவிடாது அதனது சுயமான வலிமையை வெளிக்காட்ட முடியாது செடியாக குறுக்கி வைத்திருக்கின்றார்களோ! அதேபோன்றுதான் மலையக மக்களின் வாழ்க்கையையும் திட்டமிட்டு குறுக்கி வைத்தார்கள். அவர்களது வாழ்வும் வளவும் செழிப்பின்றி அடக்கி ஒடுக்கப்பட்டது.” என்று அவர் சொன்ன ஓர் உண்மையையும் நான் தெரிந்து கொண்டேன்.

இறுதியாக இந்நாவலில் பதிவாகியிருக்கும் குறிப்புகள் (Reference) சம்பந்தமாக இங்குள்ள படைப்பாளிகளிடம் நான் கேட்க விரும்பவது,  இது சரியா…? தவறா…? இதனால் இந்நாவலின் மதிப்பும், தரமும் தாழ்ந்து போவதற்கு வாய்ப்புள்ளதா…? என்பதே. இருபதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியின் முன்னும் பின்னும் நடந்த வரலாற்றின் ஒரு துளியாகும் என்று இந்நாவலின் ஆசிரியரால் கூறப்பட்டிருக்கின்றது. தேயிலைத்தோட்டத்தில் சரியாக இரண்டு வருடத்திற்குள் நடந்து முடிந்த வரலாற்று சம்பவம் பதிவு செய்யப்பட்டிருக்கின்றது. சரியாக நாம் வரலாற்றுக்காலத்தை அறிந்து கொள்வதற்கு சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் நிகழ்ந்த சம்பவமானது கதை ஆரம்பமாகி இரண்டு மூன்று மாதங்களுக்குள் நிகழ்ந்ததாகவும் அனுமானிக்கக்கூடியதாக இருக்கின்றது. அதையும் தவிர்த்து சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் நடந்த காலத்திலிருந்தே கதை தொடங்குவதாக கருதிக்கொண்டாலும். சிறீமா-சாஸ்திரி ஒப்பந்தம் நிகழ்ந்தது 1964 ஒக்டோபர் 30 இல். அதிலிருந்து இரண்டு வருடம் என கணித்தாலும்…, 1966 ஒக்டோபர் மாதத்துடன் இதிலுள்ள வரலாற்றுச் சம்பவம் நிறைவடைகின்றது என நாம் திடமாக நம்புவதற்கான ஆதாரமாக உள்ளது. ஆனால் கதை கூறப்படும் ஆரம்பத்திலேயே…’யாழ்ப்பாணத்தைப் போல் சிதிலமாகியிருந்த ஸ்வெட்டெரில்.’(27) என ஒரு குறிப்பு வருகின்றது. 1983 இன் பிற்பாடுதானே யாழ்ப்பாணம் சிதிலமடையத் தொடங்கியது. மேலும் ’பாதாள பைரவி’ ’சித்தி’ ‘அவள் ஒரு தொடர்கதை’ போன்ற திரைப்படங்கள் சம்பந்தமான குறிப்புகள். ‘பாதாள பைரவி’1951இல் வெளிவந்திருக்கின்றது. ‘சித்தி’ 1966இல் வெளிவந்திருக்கின்றது. ஆனால் ‘அவள் ஒரு தொடர்கதை’ 13 நவொம்பர் 1974 இல் வெளிவந்தது. ‘அவள் ஒரு தொடர் கதை சினிமாவில் சுஜாதா வீட்டில் இருக்கும்போது வீட்டிலுள்ள அனைவரும் இயங்கிக் கொண்டிருப்பார்களே, அப்படியொரு இயக்கம் அது!’(71) என்பதாக ஒரு குறிப்பும் வருகின்றது. இவைகளை ஒதிக்கி, ஓரங்கட்டி நகர்ந்தபோதும்…, ‘வெளிப்புறம் வந்து பார்த்தேன். விளம்பரப் பலகை நாணிக் கொண்டிருக்க, ஒரு பின் நவீனத்துவப் பிட்டிஷன் அதில் நிர்வாணமாய்க் கிடந்தது’(199) பின் நவீனச் சொல்லாடல் தமிழில் பழக்கத்திற்குள்ளான காலம் எப்போது? இந்நாவலுக்கு அணிந்துரை எழுதிய தெளிவத்தை ஜோசப் ஐயா இவற்றை என்ன புரிதலோடு உள்வாங்கிக் கொண்டார்? என்பதையே நான் உங்களிடம் கேட்க விரும்புகின்றேன்.

//நாவலில் கதை சொல்லியே பிரதான பாத்திரமாக இருப்பதால் இது நாவலுக்கு மிகப்பெரிய பலவீனம் என்பதே வாசிப்பு மனநிலை விவாதத்தில் கலந்துகொண்ட  அனைவரின் கருத்தாக இருந்தது.//

இவ்வாறான ஒரு பார்வைக்கு அப்பால் வேறொரு தளத்தில் வைத்து உரையாடுவதற்கான பல விடயங்களை இந்நாவலில் நான் சுவைத்திருக்கின்றேன். அது குறித்தும் விரிவாகக் கூறலாம் . இதுவே மிக அதிகமாகிப்போனதால் அவற்றை தவிர்த்துள்ளேன்.  குறிப்பாக அஸூமத் அவர்களின் நகைச்சுவையான உரைநடை. மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலார்களின் இறைநம்பிக்கையும், திருவிழாச் சடங்கு சம்பிரதாயங்கள் என்பன மிக யதார்த்தமானதாகவும், அறிந்து கொள்ளவேண்டியதுமான மிக முக்கியமான தகவல்காளாகவும் நான் கருதுகின்றேன்.

நகைச்சுவை ததும்பும் உரையாடல்கள் ஊடாக, தோட்டத் தொழிலாளர்கள், உத்தியோகத்தவர்களின் வாழ்க்கை வரலாற்றை அறிந்து கொள்வதற்கான வாய்ப்பை இந்நாவலூடாக எமக்கு வழங்கிய அல் அஸூமத் அவர்களுக்கு நாம் நன்றி சொல்ல கடமைப்பட்டவர்கள்.

நன்றி - தூ
 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates