Headlines News :
முகப்பு » » நீடிக்கும் சம்பள பிரச்சினை: நெருங்கும் காலக்கெடு - என்னென்ஸி

நீடிக்கும் சம்பள பிரச்சினை: நெருங்கும் காலக்கெடு - என்னென்ஸி



தோட்டத்தொழிலாளர்களுக்கு எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு முன்னர் சம்பள உயர்வு வழங்கப்படா விட்டால் 25 ஆம் திகதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் விடுத்த காலக்கெடுவுக்கான நாட்கள் நெருங்கிக்கொண்டிருக்கின்றன.

கடந்த முதலாம் திகதி தலவாக்கலையில் நடைபெற்ற தமிழ் முற்போக்கு கூட்டணியின் மே தினத்தின் போது தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் இந்தக் காலக்கெடுவை விதித்தனர். காலக்கெடு விதித்து தற்போது மூன்று வாரங்களாகி விட்டன. இந்தக் காலப்பகுதியில் சம்பள உயர்வைப் பெற்றுக்கொள்வதற்கான நகர்வுகள் எந்தளவில் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன என்பது தொடர்பான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

எவ்வாறெனினும் தமிழ் முற்போக்குக் கூட்டணியினர் இது தொடர்பில் அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுத்து வருவதாகத் தெரிகிறது. மக்களுக்கு வாக்குறுதிகளை வழங்கி விட்டு வெறுமனே நாட்களைக் கடத்தவில்லை என்பதும் புலனாகின்றது.

அரசு அறிவித்த 2500 ரூபா கொடுப்பனவு தொடர்பாக கடந்த 9 ஆம் திகதி தொழிலமைச்சர் டபிள்யு டி.ஜே.செனவிரத்னவுக்கும் முதலாளிமார் சம்மேளனத்துக்குமிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது இரு தரப்பு நியாயங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டன.

எனினும், ஒரு சிறிய தொகையினையேனும் தொழிலாளருக்கு உயர்த்திக்கொடுப்பதற்கு பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் மறுத்துவிட்டது. இறுதியில் அமைச்சருக்கும் முதலாளிமார் சம்மேள னத்திற்கும் இடையிலான பேச்சுவார் த்தை தோல்வியில் முடிவடைந்தது.

வரவு செலவுத்திட்டத்தின் போது தனி யார் துறையினருக்கு 2500 ரூபா கொடுப்பனவு வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது.

அதனையே தோட்டத் தொழிலாளரு க்கும் பெற்றுத்தருவதாக அரசாங்கம் குறிப்பிட்டிருந்தது. அரசு சிபார்சு செய்திருந்த மேற்படி 2500 ரூபா நாளொன்றுக்கு 100 ரூபா வீதம் பிரித்துக்கொடுப்பதற்கு கூட முதலாளிமார் சம்மேளனம் முன்வரவில்லை.

தோட்டத் தொழிலாளருக்கு இது ஒரு பெரும் ஏமாற்றமாகும். அத்துடன் அரசா ங்கத்து க்கும் இது ஒரு தோல்வியாகும். அரசின் சிபாரிசையே நிராகரித்துவிட்ட முதலாளி மார் சம்மேளனத்தின் செயற்பாடு ஒரு தோல்விதானே. இதனைத் தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை பிரதமர் ரணில் தலைமையில் தொழிலமைச்சர் மற்றும் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.

இப்பேச்சுவார்த்தையிலாவது ஒரு தீர்வு எட்டப்பட்டும் என்று எதிர்பார்த்திருந்தபோது அதுவும் தோல்வியில் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது.

எனவே, புதிய பேச்சுவார்த்தை ஒன்று இவ்வாரத்தில் நடைபெறுமெனவும் இதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தொழிலமைச்சர் டபிள்யு.டி.ஜே.செனவிரத்ன, தோட்டத்தொழிற்சங்க பிரதிநிதி கள் மற்றும் முதலாளிமார் சம்மேளன பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொள்வார்களென்று அறிவிப்பு ஒன்று வெளியானது. இந்தப் பேச்சுவார்த்தையின்போது எவ்வாறானதொரு தீர்வு எட்டப்படும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்தப் பேச்சுவார்த்தை ஒரு தீர்க்கமான முடிவினை பெற்றுத்தரும் என்று தொழிற்சங்கங்கள் எதிர்பார்க்கின்றன.

அரசாங்கம் அறிவித்த 2500 ரூபாவைப் பெற்றுக்கொடுப்பதை மட்டுமே குறிக்கோளாகக்கொண்டு தமிழ் முற்போக்குக் கூட்டணி செயற்பட்டுவருகிறது. எனவே 2500 ரூபா பெற்றுக்கொடுப்பதன் மூலம் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரச்சினை முடிவுக்கு வரும் அதேவேளை ஏற்கனவே அறிவிப்புச் செய்த வேலை நிறுத்தப் போராட்டமும் கைவிடப்படும்.

அவ்வாறானால் தமிழ் முற்போக்குக் கூட்டமைப்பின் இலக்கு 2500 ரூபாவை பெற்றுக்கொடுப்பது மட்டுந்தானா? கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டிய சம்பள உயர்வு என்னாவது? அதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி பொறுப்பில்லையா?

இதேவேளை, கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் என்ன செய்கின்றன? கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் சம்பள உயர்வைப் பெற்றுக் கொடு

ப்பதாக பேசி வரும் இந்த சங்கங்கள் மெளனமாக இருப்பதேன்?

எய்தவன் இருக்க அம்பை நோவா னேன் என்பது போல் 1000 ரூபா கோரிக்

கையை முன்வைத்த இலங்கை தொழி லாளர் காங்கிரஸ், அதைப்பற்றி கொஞ் சம்கூட கவலைப்படாமல் இருக்கிறது. ஆனால் 1000 ரூபாவை சம்பள உயர்வைக்

கேட்காத தமிழ் முற்போக்குக் கூட்ட ணியினர் இந்தப் பிரச்சினையில் சிக்கிக் கொண்டுள்ளனர்.

1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து தொழிலாளர்களு க்கு ஆசை காட்டிய இ.தொ.கா. இது தொடர்பில் மேலதிக நடவடிக்கையை எடுக்காமல் இருப்பதாகவே தெரிகிறது. கோரிக்கையை முன்வைத்த சங்கமே அதனை நிறைவேற்றிக்கொடுக்க வேண் டும்.

கூட்டு ஒப்பந்தம் காலாவதியாகி ஏறக்குறைய 15 மாதங்களாகப் போகின்றன. ஆரம்ப காலத்தில் 56 முறைகள் முதலாளிமார் சம்மேளனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தைகளுடன் அதனை நிறுத்திக்கொண்டு விட்டது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான தொழிற்சங்கம் என்ற அடிப்படையிலும் 1000 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை முதலில் முன்வைத்த தொழிற்சங்கம் என்ற ரீதியி லும் இ.தொ.கா. தனது கடமையிலிருந்து எப்போதும் பின்வாங்க முடியாது?

கூட்டு ஒப்பந்த முறைமை அறிமுகப் படுத்தப்பட்ட போது ஒவ்வொரு முறை யும் ஒப்பந்தம் காலாவதியாகும் போதும் அது உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டுமென்றும் கூறப்பட்டுள்ளது.

ஆனால் அந்த விதி தற்போது மீறப்பட்டுள்ளது. சம்பள சபை மூலம் தீர்மானிக்கப்பட்டு வந்த தோட்டத்தொழிலாளரின் சம்பளம் கூட்டு ஒப்பந்தம் மூலம் தீர்மானிக்கப்படும் முறைமையின் கீழ் கொண்டு வரப்பட்டது. குறித்த கூட்டு ஒப்பந்தம் செய்து கொள்ளப்படாததால் அந்த சம்பள உயர்வும் மறுக்கப்பட்டிருக்கிறது.

எனவே, இதுபற்றி இ.தொ.கா.வும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் ஏனைய சங்கங்களும் இதுவரை நடவடிக்கை எடுக்காதிருப்பது ஏன்? இதற்கு இ.தொ.கா. வும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் சங்கங்களும்தான் பொறுப்புக்கூற வேண்டும். ஆனால் இந்த தொழிற்சங்கங்கள் இதுவரை மெளனமாகவே இருக்கின்றன.

தற்போது உலகச்சந்தையில் தேயிலை யின் விலை குறைந்துள்ளது. தேயிலை விலை அதிகரித்ததன் பின்னர் சம்பள உயர்வைப் பெற்றுத்தருவோம் என்று கூறுவது எந்த வகையில் நியாயமானது? ஏற்கனவே 15 மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில் இன்னும் எத்தனை மாதங்கள் காத்திருப்பது? உலகச் சந்தையில் எப்போது தேயிலை விலை உயரும்? எப்போது சம்பள உயர்வு கிடைக்கும்?

தொழிலாளர்களின் சம்பள உயர்வுக்காக போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்த தொழிற்சங்கங்களை ஏளனமாக, இழிவாக பேசுவது ஏற்புடையதல்ல. தாங்களும் சம்பள உயர்வைப் பெற்றுக்கொடுக்கிறார்களில்லை. பெற்றுக்கொடுக்க போராட்டம் செய்பவர்களையும் செய்ய விடாமல் ஏளனம் செய்கிறார்கள்.

தற்போதைய நிலையில் கூட்டு ஒப்பந் தம் செய்யப்படாத நிலைமையே காண ப்படுகின்றது. 2015 மார்ச் மாதத்துடன் காலாவதியாகிவிட்ட 20.13.2015 க்கான கூட்டு ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட வில்லை.

2015 ஏப்ரல் முதலாம் திகதி புதிய கூட்டு ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தி ருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடை

பெறவில்லை. எனவே கூட்டு ஒப்பந்தம் நடைமுறையில் இல்லாத நிலையில் முதலாளிமார் சம்மேளனத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபடுவது சரிதானா?

எவ்வாறெனினும் தொழிற்சங்கங்கள் பிளவுபட்டிருப்பது முதலாளிமார் சம்மே ளனத்துக்கு சாதகமாக அமைந்துள்ளது. தொழிற்சங்கங்கள் ஒன்றுபடாத வரை யில் தொழிலாளர்களுக்கு விமோசனம் இல்லை என்பது மட்டும் உண்மை.


நன்றி - veerakesari
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates