Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

“பண்டாரநாயக்க மகா முதலியாரின் துரோகம்” (1915 கண்டி கலகம் –43) - என்.சரவணன்


பிரித்தானிய ஆட்சியின் இராணுவ சட்டம் மேற்கொண்ட அடக்குமுறையை அன்றைய பத்திரிகைகள் போதுமானளவு வெளிக்கொணர்ந்திருந்தன. அதுமட்டுமன்றி அவ்வூடகங்கள் வெளிப்படுத்திய கருத்துக்களும், கண்டனங்களும் கண்டனங்களும் கூர்ந்து கவனிக்கப்பட்டன.

அப்படிப்பட்ட பத்திரிகைகளில் ஒன்றான “The Hindu Organ” என்கிற பத்திரிகை வடக்கு தமிழர்களின் குரலாக வெளிவந்தது. சைவ பரிபாலன சபையால் வெளியிடப்பட்ட இப்பத்திரிகை ஆரம்பத்ததில் தமிழ் மொழியில் “இந்து சாதனம்” என்கிற பெயரில் 1889 இல் இருந்து வெளிவரத் தொடங்கியது. பின்னர் ஆங்கிலத்திலும் வெளியிடப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வெளிவந்த இந்தப் பத்திரிகை 1889-1949 கால இடைவெளிகளில் வெளிவந்தது. அப்பத்திரிகை இராணுவ நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து ஆசிரியர் தலையங்கத்தில் இவ்வாறு வெளியிட்டது.

"கடந்துபோன கலவரத்தைத் தொடர்ந்து சிறைகளில் துன்பம் அனுபவித்துவரும் சிங்களவர்களுக்கு நீதி பெற்றுத்தருவதற்காக அரசாங்க சபையில் நகர்ப்புற ஐரோப்பியர்களை பிரதிநிதித்துவப் படுத்தும் ஹரி கிரிஸ் மேற்கொண்டுவரும் முயற்சிகளுக்கு இலங்கையர்கள் நன்றிக்கடன்பட்டுள்ளார்கள். நம்பத்தகுதியற்ற சாட்சிகளைக் கொண்டு இராணுவ நீதிமன்றத்தினால் அப்பாவிகள் பலர் சிறைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள் என்று இலங்கையர்கள் கருதுகிறார்கள். பெருமளவு பணத்தைக் கட்டி வெளியில் வரக்கூடியவர்கள் மாத்திரம் ஆளுனரால் விடுவிக்கப்பட்டுள்ளனர். இராணுவ நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தந்தைகள் பற்றியும், அதன் பிழையான நடைமுறை பற்றியும் ஆராய்வதற்காகநீதித்துறையில் சிறப்புப் பயிற்சிப்பெற்றவர்களைக் கொண்ட ஒரு குழு உருவாக்கப்படுவது அவசியம். நீதி என்பதானது அதிகாரத்துவத்தால் அலட்சியபடுத்தமுடியாத தூய்மையான ஒன்று.”

அது போல த சிலோன் மோர்னிங் லீடர் பத்திரிகை மீண்டும் மீண்டும் ஒரு விடயத்தை வலியுறுத்தியது. கருணை தேவையில்லை! நீதியின் பெயரால் இராணுவ நீதிமன்ற வழக்குகள் அனைத்தும் மீள விசாரணைக்கு எடுப்பட வேண்டும் என்றது அப்பத்திரிகை. 1915 டிசம்பர் 21 ஆசிரியர் தலையங்கத்தில் இப்படி தெரிவித்தது.

இராணுவ நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட தீர்ப்புகளில் பெரும்பாலானவை பிழையான கணிப்புகளால் செய்யப்பட்ட தீர்ப்புகள். இராணுவச் சட்டம்  அமுலுக்கு வருவதற்கு ஒரு சில தினங்களுக்கு முன்னரும் அது அமுலில் இருந்த காலத்திலும் அரசுக்கு எதிரான சதியில் சிங்களவர்கள் இறங்கியிருக்கிறார்கள் என்று நாடு முழுதும் பரப்பப்பட்ட வதந்தியின் அடிப்படையிலேயே அவை மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. எனவே முடிந்த முன்முடிவுகளில் இருந்தே தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதன் பின்னர் சிங்களவர்கள் அப்படி எந்தவொரு சதியையோ, எழுச்சியையோ கொண்டிருக்கவில்லை என்பது தெளிவானது என்று அப்பத்திரிகை எழுதியிருந்தது. அதன் இறுதியில் இப்படி முடிக்கப்பட்டிருந்தது.

“இங்கு கருணைக்காண அவசியம் எதுவும் இல்ல. இது நியாயம் சம்பந்தப்பட்ட பிரச்சினை. இந்த அதிகாரிகள் இவர்களை குற்றவாளிகள் என்பதை உறுதிசெய்வார்களா? அப்படி உறுதிசெய்ய முடியாதென்றால் இந்த வழக்குகளை மீள விசாரிப்பதற்கு நிராகரிப்பது நியாயமானதா? உண்மை நிலையை இப்போது உணர்ந்த பின்னராவது இந்த யோசனையை எற்றுக்கொள்ளவேண்டுமல்லவா? அன்று அத்தீர்ப்பு சரியென நம்பினார்கள். அத்தீர்ப்புகள் நியாயமானது என இன்றும் நடமுறைப்படுத்திப்படுத்திக் கொண்டிருக்கலாமா? எனவே தான் இது நியாயம் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் என்கிறோம். எனவே தான் எமக்கு ஒருபோதும் கருணை தேவையில்லை, நீதியே தேவை என்கிறோம். ஏற்பட்ட நாசம் விசாலமானது, முழு நாட்டுக்கும் கொடுத்த தீர்ப்பு பயங்கரமானவை. கடந்த காலத்தை விட இப்போது நியாயத்துக்கான வாய்ப்புகள் திறந்துள்ளன.

நீண்ட கால தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டவர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள மோசமான குற்றச்சாட்டு “தேசத்துரோக”க் குற்றச்சாட்டு. பேரரசருக்கு எதிராக போர் தொடுத்தல் என்கிற வெற்றுக் கற்பனை என்பது தெளிவு. இப்படியான தேசத்துரோக கற்பனாபூர்வமான குற்றச்சாட்டுகளுக்கு உயர்ந்தபட்சம் 14 ஆண்டுகாலம் அல்லது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதற்கு முந்திய பிரித்தானிய தீர்ப்பொன்று உதாரணமாக பார்க்கப்படுகிறது. கிறிஸ்டியான் தி வெட்  அரசருக்கு எதிராக போர் தொடுத்த ஒருவர். எதிரிப்படைகளுடன் சேர்ந்து அரசரின் படைகளுக்கு எதிராக போர் தொடுத்த குற்றச்சாட்டில் கிறிஸ்டியன் தி வெட் மற்றும் 118 பேருக்கு எதிராக வழங்கப்பட்ட தீர்ப்பில் ஆறு ஆண்டு கால சிறைத்தண்டனை மட்டுமே வழங்கப்பட்டது. அந்த ஆறு ஆண்டுகால தண்டனை முடிவதற்கு முன்னர் அவர்கள் விடுதலையும் செய்யப்பட்டார்கள். அப்படிப்பார்க்கும் போது இலங்கையில் நிகழ்ந்தது அரசருக்கு எதிரான போர் தொடுத்தலே அல்ல. கிளர்ச்சியாளர்கள் எவரும் அரசரின் படைகளை எதிர்த்து சண்டை பிடிக்கவுமில்லை. ஆனால் கிறிஸ்டியான் தி வெட்டுக்கு வழங்கப்பட்ட தந்தையோடு ஒப்பிடும் போது சிறிய குற்றங்களுக்காக அதிகபட்ச கடும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் வெட் மற்றும் அவரின் படையினருக்கு கருணை வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள். அந்த சந்தர்ப்பம் கூட இலங்கையர்களுக்கு கிடைக்கவில்லை.

சாதாரண நீதிமன்றத்தை விட இந்த இராணுவ நீதிமன்றம் விசேடமாக எதனையும் சாதிக்கவும் இல்லை. இந்த இரண்டு நீதிமன்றங்களும் ஏக காலத்தில் இயங்கவே செய்தன. நீதியை நிலைநாட்டுவதற்குப் பதிலாக இராணுவ நீதிமன்றம் மக்களின் நம்பிக்கையை இழந்தது தான் மிச்சம். குற்றவாளிகளுக்கு தண்டனையை உணர்த்துவதற்குப் பதிலாக அப்பாவிகளை விரக்தி கொள்ளைச் செய்தன.

நாடுமுழுவதும் பரவிய “சிங்களக் கிளர்ச்சி” என்கிற கற்பனாவாத பீதி சிங்களவர்களை சந்தேகமாகவும், முஸ்லிம்களை இரக்கத்துடனும் பார்க்கச் செய்தன. இதுவே ஆட்சியாளர்களின் பிழையான அணுகுமுறைக்கு பின்னணியாக அமைந்தது. அதுவே குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தாம் அப்பாவிகள் என்பதை நிரூபிப்பதற்கான வாய்ப்புகள் அடைக்கப்பட்டன. அதேவேளை பொய்சாட்சிகள் அதிகாரிகளின் நம்பகத்தன்மையை பெற்றன. சட்டத் தேர்ச்சியற்ற இராணுவத்தினரை நீதிபதிகளாகக் கொண்ட தான்தோன்றித்தனமான நீதிமன்றத்தால் இதைத் தான் செய்ய முடிந்தது.”
இந்த ஆசிரியர் தலையங்கத்தை எழுதியவர் சிலோன் மோர்னிங் லீடர் பத்திரிகையின் ஆசிரியராக இருந்த ஆர்மண்ட் டீ சூசா என்பது கவனிக்க வேண்டியது. “இலங்கையில்  இராணுவ சட்டத்தின் கீழ் 100 நாட்கள்” என்கிற நூலை எழுதியவரும் அவர் தான்.
சொலமன் டயஸ் பண்டாரநாயக

சொலமன் டயஸ் பண்டாரநாயக
சேர் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க மகா முதலியார் குறித்து இங்கு குறிப்பிடுவது அவசியம் இவர் பிற்காலத்தில் இலங்கையின் பிரதம மந்திரியாக ஆன S.W.R.D.பண்டார்நாயக்கவின் தகப்பனார். 1915 கலவர காலத்தின் போது பண்டாரநாயக்க கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்த வருடம் அது. ஆனால் அதே வேளை அவரது தகப்பனார் சொலமன் முதலி இலங்கையில் ஆங்கிலேயர்களின் முதன்மையான விசுவாசியாக அறியப்பட்டிருந்தது மட்டுமன்றி கலவரத்தின் போது அப்பாவி சிங்களவர்கள் பலர் தண்டனைக்கு உள்ளாகவும் அவர் காரணமானார். எனவே தான் இன்று வரை சொலமன் முதலியாருக்கு வரலாற்றில் குறிப்பிடத்தக்க இடத்தை சிங்களவர்கள் வழங்கவில்லை என்றே கூறவேண்டும். அவர் ஒரு காட்டிக்கொடுப்பாளராகவும், துரோகியாகவுமே பல இடங்களில் இடம்பிடித்துள்ளார்.

இராணுவ நீதிமன்ற விசாரணைகள் நிகழ்ந்தபோது அந்தந்த பிரதேசங்களைச் சேர்ந்த முதலியார்களின் கருத்துக்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார்கள் எனத் தெரிகிறது. மக்களை தேவையான இடங்களுக்கு கூடச் செய்து பொது விசாரணைக்கு அழைப்பது, போது இடங்களில் தண்டனையளிப்பதை மக்களைக் கூட்டி பார்வயிடச் செய்வது போன்ற காரியங்களையும் இந்த முதலியாயர்களைக் கொண்டே செய்வித்தனர். அத்தகைய முதலியார்களின் தலைமை மகா முதலியார் தான் சொலமன் டயஸ் பண்டாரநாயக்க மகா முதலி.

மகா முதலிகளின் தலைமை முதலியாராக பிரித்தானியா அரசுக்கு சேவகம் செய்தார். பிரித்தானிய ஆட்சியின் போது அவர் ஒரு பலம்பொருந்திய அதிகாரி. பிரித்தானிய விசுவாசத்துக்காக முகாந்திரம் பதவியிலிருந்த அவரை 1882 ஆம் ஆண்டு முதலியார் பதவியைக் கொடுத்தது. அதன் பின்னர் சில வருடங்களில் மகா முதலியார் பதவியும் வழங்கப்பட்டதுடன் அவரது சேவைவைப் பாராட்டி சேர் பட்டமும் இன்னும் பல முக்கிய பதவிகளையும் கொடுத்து கௌரவித்தது. பிரித்தானிய ஆட்சியில் மிகவும் இளம் வயதில் மகாமுதலியார் பதவியை வகித்தவர் சொலமன் டயஸ் பண்டாரநயாக்க. அவர் அப்பதவியை பெற்றபோது அவருக்கு வயது 33.

1915 கலவரத்தின் போது பல தலைவர்கள், பிரமுகர்கள் கைதானதன் பின்னணியில் மகா முதலியாரின் பங்கு கணிசமானது என்று பல ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. சேர் பொன் இராமநாதன் எழுதிய “இலங்கையில் கலவரமும் இராணுவச் சட்டமும் - 1915” என்கிற நூலிலும் இந்தத் தகவல்களை உறுதிபடுத்துகிறார்.

கண்டி, நுவரெலியா மற்றும் இன்னும் பல இடங்களிலும் கலவரத்தை கட்டுப்படுத்தவும் அது குறித்து அறிக்கையிடும் பணியிலும் அவர் ஈடுபட்டார். ஆளுநரின் ஆலோசகராகவும், பிரதான மொழிபெயர்ப்பாளராகவும் அவர் உடனிருந்து கடமையாற்றினார்.

குறிப்பாக சிங்கள அரசியல் தலைவர்களின் கைதின் பின்னணியில் அவர் இருந்தார் என்றும், ஹென்றி பேதிரிஸ் குற்றவாளியாக சித்திரிக்கப்படுவதற்கும் சொலமன் முதலியார் வழங்கிய தகவல்களும் முக்கியமானது என தெரிகிறது. தனது அரசியல், அதிகார, பண்பல செல்வாக்குக்கு போட்டியாக இருந்தவர்களே இவ்வாறு அவரால் பழிவாங்கப்பட்டார் என்கிற குற்றச்சாட்டும் சிங்களத் தரப்பில் இன்றும் முன்வைக்கப்படுகின்றன. ஹென்றி பேதிரிஸ் குறித்த நூல்களிலும் இவரை சாடும் போக்கைக் காண முடிகிறது. ஹென்றி பேதிரிஸ் குறித்து பிழையான தகவல்களை இவர் வழங்கினார் என்கிற பலமான குற்றச்சாட்டு உள்ளது. அப்பாவியான இளைஞர் ஹென்றி பேதிரிஸ் துப்பாக்கியால் சுட்டு மரண தண்டனை வழங்கப்பட்ட கதையை இந்த தொடரில் தனியாக அறிந்தோம்.


இந்த கலவரத்தை ஆராய்பவர்களால் அதிகமாக பேசப்பட்ட அடுத்த விடையன் இழப்பீடு சம்பந்தப்பட்ட விவகாரம். இந்த விடயத்தையும் ஆங்கில அதிகாரிகளால் கையாளப்பட்ட முறைகேடுகள் மேலும் பல அப்பாவிகளை அதிகம் பாதிக்கச் செய்தது. அடுத்த வாரம் விரிவாகப் பார்க்கலாம்.

தொடரும்..
நன்றி - தினக்குரல்


நமது தேவைக்கு 4000 வீடுகள் தீர்வாகுமா? - எஸ். ஜெயபாரதி


உலகில் படைக்கப்பட்ட சகல உயிரினங்களுமே தங்கள் வாழ்க்கைப் பயணத்தில் ஒன்று போராடி வெற்றி பெற்று வாழ வேண்டும். அல்லது இசைவாக்கம் அடைந்து கிடைத்த வாழ்க்கையை வாழ வேண்டும் என்பதுதான் நியதியாக உள்ளது.

ஆனால் இலங்கையில் சுமார் 200 வருட வரலாற்றைக் கொண்டுள்ள மலையக சமூகம் இன்றும் கூட தடைகளை தாண்ட முடியாமலும் இசைவாக்கமும் அடைய முடியாமலும் படிப்படியாகத் தனது அடையாளங்களை இழந்துவரும் சமூகமாகவே வாழ்ந்து வருகின்றது.

வெள்ளையர்கள் எமது முன்னோர்களை நாட்கூலிகளாக அழைத்து வந்த காலத்தில் எம்மவர்களை எட்டு அடி அறைகளில் நெருக்கமான லயன்களில் அடைத்து வைக்கப்பட்டு வேலை வாங்கப்பட்டதை நாம் குறையாகக் கூற முடியாது. ஏனெனில் அவர்கள் எம்மவர்களை இங்கு அழைத்து வந்ததே முற்றும் முழுதாக இலாப நோக்கத்திற்காகவே.

ஆனால் இன்று நிலைமை வேறு. கள்ளத் தோணிகள் என்று கேலி செய்யப்பட்டு நாடற்றவர்களாக சீரழிக்கப்பட்டு இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் ஊடாக உறவுகளையும் நட்புகளையும் பிரிந்து சம்பந்தமில்லாத இனப்பிரச்சினைகளில் உயிர்களையும் உடைமைகளையும் இழந்து இப்போதுதான் ஓரளவு நிம்மதிப் பெருமூச்சு விட்டு வருகிறார்கள்.

80 களில் அமரர் சந்திரசேகரன் மலையகத்தில் ஏற்படுத்திய அரசியல் விழிப்புணர்ச்சி எமக்கு இலங்கையில் வாழும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இலங்கையை தாயகமாக ஏற்கும் பக்குவத்தினை ஏற்படுத்தியது.

எம் சமூகத்தின் கௌரவமான அடையாளத்தை அடித்தளமாகக் கொண்டு இவர் செயற்பட ஆரம்பித்ததன் முதல் படிதான் தனி வீட்டுத் திட்டம்.

ஒரு மனிதன், அதுவும் லயத்துச் சிறைகளில் வாழும் ஒருவன் தனக்கென அமைந்த ஒரு சொந்த வீட்டில் வாழ ஆரம்பிக்கும் போதுதான் அவனுக்கு வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும் சுதந்திர எண்ணங்களும் துளிர்விடும் என்பதுவும் அதனோடு ஒட்டித்தான் அவன் தனக்கெதிரான சமூக நெருக்கடிகளைப் பற்றியும் சிந்திக்க ஆரம்பிக்கின்றான் என்பதும் அவரது சிந்தனையாக இருந்தது.

இதனை அவர் செயற்படுத்தியும் காட்டினார். ஆனால் எம் சமூகத்துக்கே உரிய போட்டி அரசியல் காரணமாக அவரால் இதனை தொடர முடியாமல் போய்விட்டது.

எனினும் மீரியபெத்த மண்சரிவு அவலத்தோடு தனி வீட்டுக்கான அழுத்தம் தொழிற்சங்க பாகுபாடுகளையும் மீறி மக்கள் மத்தியில் வீரியம் பெற்று வெளிவந்தது. முன் எப்போதும் இல்லாத வகையில் தொழிலாளர்கள் லயன் வாழ்க்கை முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தார்கள்.

சந்திரசேகரன் தோட்ட வீடமைப்பு பிரதி அமைச்சராக தனி வீட்டுத் திட்டத்தினை நடைமுறைப்படுத்தியபோது இது சம்பந்தமாக தனது தெளிவான அவதானத்தையும் முன்வைத்தார். அதாவது இந்த வேகத்தில் வீடுகள் கட்டப்பட்டு வந்தால் மலையக வீட்டுப் பிரச்சினைகளைத் தீர்க்க 60 ஆண்டுகள் செல்லும் என்று கூறிய அவர், ஆகவே அரசாங்கம் ஒரு பிரகடனத்தின் ஊடாக தோட்டத் துறையில் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குள் கட்டி முடிக்க வேண்டும் எனவும் கூறினார்.

இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன், அமைச்சர் திகாம்பரம் ஆகியோர் மலையகத்தில் தனி வீட்டுத் திட்டத்தினை அமைப்பதில் முனைப்புடன் செயற்பட்டு வரும் நிலையில், இந்திய அரசாங்கத்தின் அன்பளிப்பாக கிடைக்கவுள்ள 4000 வீடுகள் திட்டம் ஓரளவு ஆறுதலைத் தந்தாலும் கூட இந்த 4000 வீடுகள் எம் சமூகத்தின் வீட்டுத் தேவைக்கு தீர்வாக எவ்வாறு அமையப் போகிறது என்று புரியவில்லை.

ஏனெனில் இந்த 4000 வீடுகள் பற்றிய செய்தி வெளிவந்தவுடனேயே கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்கள் இதில் உள்ளடக்கப்படவில்லை என்ற விமர்சனமும் எழுந்தது.

இலங்கையின் ஏனைய சமூகங்களுடன் ஒப்பிடும்போது பெருந்தோட்டத்துறைத் தொழிலாளர்களின் வாழ்க்கை மட்டம் இன்னுமே அரிச்சுவடியிலேயே உள்ளது என்பதற்கு ஆய்வுகளோ அல்லது புள்ளி விபரங்களோ தேவையில்லை எனுமளவிற்கு இம் மக்களின் வாழ்க்கை மட்டம் பின்தங்கியுள்ளது.

கல்வி, சுகாதாரம், குடிநீர், மருத்துவம், தொழில்வாய்ப்பு, அனர்த்த நிவாரணம், பொருளாதாரம் எல்லாமே எந்த ஒரு உத்தரவாதமும் இல்லாமல் அவ்வப்போது சமாளிக்கப்படும் விடயங்களாகவே உள்ளன.

இந்நிலையில் இந்திய வம்சாவளி மலையக மக்களாக இந்திய கலை, கலாசார, பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்த கலாசாரத்தினைக் கொண்டுள்ள எமது சமூக மேம்பாட்டுக்கு குறிப்பாக எமது சமூக வளர்ச்சிக்கு தடையாக உள்ள லயன் முறையை மாற்றியமைப்பதற்கு இந்தியா எவ்வளவு தூரம் அக்கறை எடுத்து செயற்படுகின்றது என்பது ஆய்வுக்குரியதே.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் வீடமைப்புத் திட்டங்கள் தேசிய வீடமைப்புத் திட்ட அதிகார சபை மற்றும் டர்ஸ்ட் நிறுவனங்களின் ஊடாக கடன் அடிப்படையிலேயே நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன.

குறைந்த வருமானமுடைய தொழிலாளர்கள், ஓய்வடையும் வயதை நெருங்கிய அல்லது ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு இந்த கடனுதவியைப் பெற்றுக் கொள்ள முடியாதாகையால் அவ்வாறானவர்களுக்கு இதில் வீடுகளைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளது.

இதன் காரணமாகவே அமரர் சந்திரசேகரன் கூறியவாறு ஒரு பிரகடனத்தின் ஊடாக இவ் வீடமைப்புத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்துகிறோம்.

ஏனெனில், மேல் கொத்மலை நீர் மின் திட்டம் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்ட பல நீர்த்தேக்கத் திட்டங்களினால் இடம்பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்கள் அக்காலத்தில் வேறு வேறு தோட்டங்களில்தான் குடியேற்றப்பட்டார்கள்.

ஆனால் இந்த நடைமுறையை அமரர் சந்திரசேகரன் மேல் கொத்மலை அபிவிருத்தி திட்டத்தில் அனுமதிக்கவில்லை. இத் திட்டத்தின் கீழ் இடம்பெயரும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் ஏனையவர்களுக்குப் போலவே வீடுகளும் ஏனைய உட்கட்டமைப்பு வசதிகளும் அமைத்துக்கொடுக்கப்பட வேண்டும் என்பதில் அரசாங்கத்துக்கும் மின் திட்ட சம்பந்தப்பட்டவர்களுக்கும் அவர் தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுத்து வந்தார்.

இதன் காரணமாகவே இதில் இடம்பெயர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு தனி வீடுகளும் ஏனைய வசதிகளும் வழங்கப்பட்டன. அல்லது இவர்களும் முன்னையவர்களைப் போலவே வெவ்வேறு தோட்டங்களில் லயன் வாழ்க்கையிலேயே முடக்கப்பட்டிருப்பார்கள்.


நன்றி - veerakesari

மலையகத்தில் மதுபானம்: மக்கள் சீரழிவுக்கு யார் காரணம்?


நகரங்களுக்கு அண்மையிலுள்ள, தோட்டங்களுக்கு அருகிலுள்ள மதுபானசாலைகளை ஒழிப்பதற்கு ஜனாதிபதியூடாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக மலைநாட்டு புதிய கிராமங்கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர் பி.திகாம்பரம் தெரிவித்திருக்கிறார். இது வரவேற்கத்தக்க உடனடியாகச் செய்ய வேண்டிய ஒரு நடவடிக்கையாகும்.

மலையகத்திலுள்ள பெரும்பாலான அரசியல்வாதிகள் மது ஒழிப்புக்கு எதிரானவர்களாகவே காணப்படுகின்றனர். மது ஒழிப்பு பற்றி அவர்கள் வாய்திறப்பதில்லை. அதற்கு அவர்கள் ஒருபோதும் இணக்கம் தெரிவிப்பதுமில்லை. ஏனெனில் அரசியல்வாதிகள் பலர், பல மதுபானசாலைகளின் உரிமையாளர்களாக இருப்பதுதான் காரணம்.

பலர் மதுபானத்தை அடிப்படையாக வைத்துத்தான் தமது அரசியலையே நடத்திக்கொண்டிருக்கின்றனர். மதுபானசாலைகள் மூடப்பட்டால் அல்லது மதுபானம் ஒழிக்கப்பட்டால் அவர்களால் அரசியல் செய்ய முடியாது. மக்களுக்கு மதுபானத்தைக் கொடுத்து தேர்தல்களில் வெற்றிபெற முடியாத நிலையும் ஏற்படும்.

கிராமங்கள் மற்றும் நகரங்களைவிட மலையகத்தில் பெருந்தோட்டப்பகுதிகளிலேயே அதிகளவு மதுபானசாலைகள் காணப்படுகின்றன. பெருந்தோட்ட தமிழ் தொழிலாளர்களை இலக்கு வைத்தே இந்த மதுபானசாலைகள் திறக்கப்பட்டன. பெரும்பான்மை இனத்தவர்களுடன் போட்டி போட்டுக் கொண்டு, அவர்களைவிட அதிக எண்ணிக்கையிலான மதுபானசாலைகளைத் திறப்பதற்கு தமிழ் அரசியல்வாதிகள் காரணமாக இருந்திருக்கின்றனர்.

கடந்த 2530 வருடகாலப்பகுதியில்தான் மலையகத்தில் மதுபானசாலைகள் அதிக எண்ணிக்கையில் திறக்கப்பட்டன. நகரங்களில் மட்டும் இயங்கி வந்த மதுபானசாலைகள், தனியாக 95 வீதமான தொழிலாளர்கள் வாழும் தோட்டங்களின் மத்திய பகுதியிலும் இந்தக் காலப்பகுதியிலேயே ஆரம்பிக்கப்பட்டன.

அதாவது இந்த அரசியல்வாதிகள் தமக்கு வழங்கப்படும் “மதுபான கோட்டா”க்களைப் பெற்று தாமே மதுபானசாலை திறப்பதிலும், அல்லது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் மூலமாக மதுபானசாலைகளைத் திறப்பதிலும் ஈடுபட்டனர். சிலர் நண்பர்களுக்கும் வழங்கினர்.

இந்த அரசியல்வாதிகள் மக்கள் அளித்த வாக்குகளினால் தெரிவு செய்யப்பட்டதென்னவோ மக்களுக்கு சேவை செய்வதற்காகத்தான். ஆனால்,மக்களுக்கு சேவைசெய்வதற்குப் பதிலாக மதுபானசாலைகளுக்கான கோட்டாக்களைப் பெற்று மதுபானசாலைகளை திறப்பதிலேயே அதிகம் ஆர்வம் காட்டினர்.

இதனையே அமைச்சர் பி.திகாம்பரமும் கூட அண்மையில் ஹட்டன் எபோட்ஸ்லி, மார்ல்பரோ டிவிசனில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போது குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, தாம் இதுவரை மதுபானசாலைகளை திறப்பதற்கான எந்தவித முயற்சிகளையும் மேற்கொள்ளவில்லையெனவும், எதிர்காலத்திலும் அவ்வாறு செய்யப் போவதில்லையெனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமூக முன்னோடிகளும், தலைவர்களும் சமூகத்துக்கு முன் மாதிரியாக நடந்து கொள்வதன் மூலமே அதனை சமூக மக்களும் பின்பற்றி செயற்படுவார்கள். எனவே, தலைவர்கள் முன்மாதிரியாக நடந்துகொள்வது அவசியம்.

அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற மதுஒழிப்பு பிரசாரத்தில் போது பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு பேசிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு அடுத்தபடியாக நுவரெலியா மாவட்டத்திலேயே அதிகளவு மதுபானம் நுகரப்படுவதாக தெரிவித்திருந்தார். அதுவும் வருடமொன்றுக்கு 1600 கோடி ரூபாவுக்கான மதுபானம் இம்மாவட்ட மக்களால் அருந்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார்.

மதுபானம் மலையக தோட்டப்புற தமிழ் மக்களின் வாழ்க்கைச் சீரழிவுக்கு காரணமாக அமைந்துள்ளதென்பதை அங்கு கவலையுடனும், அக்கறையுடனும் சுட்டிக்காட்டியிருந்தார்.

ஜனாதிபதிக்கு மலையக மக்கள் மீது இருந்த அக்கறை, இந்த சமூகத்திலுள்ள தலைவர்களுக்கு இல்லாமல் போய் விட்டதாக மக்கள் ஆதங்கப்படுவது உண்மை.

கடந்த காலங்களிலும் சரி, இப்போதும் சரி மலையக மக்கள் அதிகளவில் மது அருந்துவதற்கு மலையக அரசியல்வாதிகளே காரணமாக இருந்திருக்கின்றனர் எனலாம். மதுபானசாலைகள் திறக்கப்படுவதற்கு (கோட்டா பெற்றுக்கொடுத்ததன் மூலம்) ஒரு காரணமாக இருந்தமை ஒருபுறம் இருக்க, தேர்தல் காலத்தில் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதற்காக மதுபானம் (சாராயம்) வழங்கியுள்ளனர்; வழங்குகின்றனர். கட்சி நடவடிக்கைகள், கூட்டம், மேதினம் என்பவற்றை நடத்துவதற்கு ஆள் சேர்ப்பதற்காக சாராயம் வழங்குகின்றனர். ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களில் புதிய உறுப்பினர்களை சேர்த்துக்கொள்வதற்காக அவர்களுக்கு சாராயம் வழங்குகின்றனர்.

இதுபோன்று,தங்களது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளவும், சுயநலத்துக்காகவும் மதுபானங்களைக் கொடுத்து அவர்களை மதுவுக்கு அடிமையாக்கிவிட்டனர். இப்போது அந்தப் பழக்கத்திலிருந்து மீள முடியாத நிலைமைக்குத் தோட்டத்தொழிலாளர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் இவர்கள் உழைக்கும் பணம் முழுவதும் மதுபானத்துக்கே செலவு செய்யப்படுகிறது.

குடும்பத்தைக் கவனிக்க முடியாமலும், பிள்ளைகளைப் படிக்கவைக்க முடியாமலும், அவர்களுக்குத் தேவையான உணவு, உடை உள்ளிட்ட வசதிகளைப்பெற்றுக்கொடுக்க முடியாமலும் ஏழ்மையில் சிக்கித்தவிக்கின்றனர். இந்த நவீன காலத்திலும் இதே நிலைமை தொடரவேண்டுமா?

மனசாட்சியுள்ள, மக்கள் மீது அக்கறையுள்ள எந்தவொரு சமூகத்தலைவனும் இதுபோன்ற கொடிய செயல்களில் ஈடுபடமாட்டார்கள். அவ்வாறு செய்பவர்கள் சமூகத்துக்கு தலைமை கொடுக்கவும் முடியாது. மக்களும் அவ்வாறானவர்களை தங்களது தலைவர்களாக ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.

மலையகத்திலுள்ள பிரதான நகரங்களில் அதிக எண்ணிக்கையிலான மதுபானசாலைகள் காணப்படுகின்றன. இந்த நகரங்களை அண்மித்த பகுதிகளில் அநேக தோட்டங்கள் காணப்படுகின்றன. நகரங்களில் மட்டுமன்றி தோட்டங்களுக்கு மத்தியிலும்,தோட்டங்களை ஊடறுத்துச் செல்லும் பிரதான வீதிகளிலும் அடுத்தடுத்து மதுபானசாலைகள் காணப்படுகின்றன.

இந்நிலையில் நகரங்களை அண்மித்துள்ள தோட்டங்களுக்கு அருகிலமைந்துள்ள மதுபானசாலைகளை மட்டுமன்றி பொருந்தோட்டங்களுக்கு மத்தியில் அமைந்துள்ள மதுபானசாலைகளையும் அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டுமென்பதே மலையக மக்களின் எதிர்பார்ப்பாகும்.

நன்றி - veerakesari

தொழிலாளர் எதிகாலத்தைப் பாதிக்கும் வெளியார் உற்பத்தி முறை - பெ.முத்துலிங்கம்


தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கும்படி-யான கோரிக்கையை முதலாளிமார் சம்மேளனம் முற்றாக நிராகரித்து வரும் வே-ளையில் தோட்டங்கள் முகம் கொடுத்து வரும் நெருக்கடிகளுக்கு தீர்வு காணும் வகையில் இரண்டு மாற்றுத்திட்டங்களை முறையே தோட்டத்துரைமார் சங்கத்தின் தலைவர் ரோசான் இராஜதுரையும் ஜனவசம கூட்டுத்தாபனத்தின் தலைவர் பேரா-சிரியர் கென்னடி குணவர்தனவும் முன்வைத்துள்ளனர். தோட்டத்துரைமார் சங்-கத்தின் தலைவரும் ஜனவசமவின் தலைவரும் தற்போதைய நெருக்கடியிலிருந்து தோட்டங்கள் மீள வேண்டுமாயின் வெளியார் உற்பத்தி முறையை அறிமுகப்படுத்-துதே ஒரே மாற்று வழி என தமது விதந்துரைப்புகளில் குறிப்பிட்டுள்ளதுடன், அதனை நியாயப்படுத்துவதற்கான பல காரணிகளை முன்வைத்துள்ளனர்.

இப்பின்புலத்துடன் ஜனவசம தலைவர் 'அரச ஊழியர்கள் தனியார் பங்க-ளிப்பு முறை' என்ற தலைப்பில் முன்வைத்துள்ள விதந்துரைப்புகளை நோக்குவோ-மாயின் (1) ஜனவசம தோட்டங்களில் 10% வி..பி. தேயிலைகள் காணப்படுகின்றன. இதனை ஜனவசமவின் கீழ் வைத்துக்கொள்ள வேண்டும். (2) இத்தோட்டங்களில் பயிரிட முடியாத இரண்டாம் வகையான காணிகள் இருக்கின்றன. இவற்றில் ஆங்-காங்கே 100 வருட பழைமை வாய்ந்த தேயிலை மரங்கள் காணப்படுகின்றன. இவற்றில் மீண்டும் தேயிலையை பயிரிடுவதற்கோ அல்லது வேறு பயிர்களை பயிரிடுவதற்கோ தனியார் முதலீட்டாளருக்கு குத்தகை அடிப்படையில் வழங்-கலாம் (3)மூன்றாவது பகுதியாகக் காணப்படுவது பயிரிடப்படாத இடங்களாகும். இவற்றினை ஏதோ ஒரு பயிரைப் பயிரிடுவதற்கோ அல்லது பல்வேறு திட்டங்-களை மேற்கொள்வதற்கோ நீண்ட கால குத்தகைக்கோ தனியாருக்கு வழங்கலாம். (4) இன்னுமொரு பகுதி பயிரிடப்படாத இடங்களாகக் காணப்படுகின்றன இவ்விடங்-களை மிகவும் சிறு பகுதிகளாகப் பிரித்து தோட்டங்களில் 20 வருடத்திற்கும் மேலாக வாழும் தொழிலாளர் குடும்பங்களுக்கு சிறு தொகை குத்தகைக்கு காய்கறி அல்லது மாட்டுப் பண்ணை வைத்துக்கொள்ள வழங்கலாம்.

(5) தேவைப்படின் முதலீட்டாளர்களின் தேவைகளுக்கேற்ப முழுத்தோட்டத்-தையும் நீண்டகால குத்தகை அடிப்படையில் வழங்கலாம். (6) ஜனவசமத்திற்கு சொந்தமான சிறு தோட்டங்களையும் குத்தகைக்கு வழங்கலாம் (7) ஜனவசமத்திற்கு சொந்தமான காணிகள் சிலாபம் மற்றும் குருணாகல் கம்பனிகளுக்கு வழங்கப்பட்-டுள்ளன. இவற்றிலிருந்து ஜனவசமவிற்கு வருமானம் கிடைப்பதில்லை அதனால் இவற்றினைப் மீளப்பெற்று லாபம் பெறமுடியும். (8) தேயிலைத் தொழிற்சாலைக-ளையும் பங்களாக்களையும் வாடகைக்கு விடலாம் (9) இத்திட்டங்களை முன்னெ-டுக்கையில் தொழிலாளர்கள் விரும்பின் சுயவிருப்பு அடிப்படையில் நட்ட ஈட்டை வழங்கி வேலையிலிருந்து நீக்கலாம். இவையே ஜனவசம தோட்டங்கள் தொடர்-பாக முன்வைக்கப்பட்டுள்ள மாற்றுத் திட்டங்களாகும்.

கம்பனி தோட்டங்கள் சார்பாக தோட்டத்துரைமார் சங்கத்தலைவர் ரோசான் இராஜதுரை ''உற்பத்தி அடிப்படையிலான வருமான பங்கீடு முறை" என்ற தலைப்பின் கீழ் பின்வரும் விதந்துரைப்புகளை முன்வைத்துள்ளார்.

(1) தோட்டத் தொழிலாளர்களுக்கு மாதத்தில் குறைந்தது 10 நாட்கள் மட்-டுமே தற்போதைய சம்பள அடிப்படையில் வேலை வழங்கப்படல் வேண்டும் (2) ஒவ்வொரு தொழிலாளர் குடும்பத்திற்கும் கலந்த அடிப்படையில் அனைத்து தேயி-லைப்பகுதிகளும் (வி.பி. மற்றும் பழைய மரங்கள்) உள்ளடங்கும் வகையில் கிழ-மையில் மூன்று நாட்கள் வேலை செய்யும் வகையில் தேயிலை மரங்கள் பிரித்து அளிக்கப்படும். (3) தேயிலை மரங்கள் பிரித்துக் கொடுக்கும்போது அதனை பெறும் தொழிலாளிக்கும் தோட்ட முகாமைத்துவத்திற்கும் இடையில் 1 வருட குத்தகை ஒப்பந்தம் கைசாத்திடப்படும். இவ்வொப்பந்தம் ஒவ்வொரு வருடமும் புதிப்பிக்கப்-படும் (4) தோட்டத் தொழிலாளர்கள் இந்நிலத்திற்கான உரிமையை கோரமுடியாது. அக்காணி அரசாங்கத்திற்கும் தோட்டத்திற்கும் சொந்தமானதாகவே இருக்கும். (5) தோட்டத் தொழிலாளர் ஒப்பந்தம் செய்துக்கொண்டதன்படி தேயிலைக் காணியை பராமரிக்காவிடின் 7 நாள் அறிவித்தலுடன் காணியை அரசாங்கம் அல்லது தோட்டம் மீளப்பெற்றுக்கொள்ளும் உரிமையைக் கொண்டிருக்கும்.

(6) தேயிலைக்கான உரம், மருந்து உள்ளிட்ட ஏனைய பொருட்களை தோட்ட முகாமைத்துவம் வழங்குவதுடன் அதற்கான செலவை தேயிலைக்காணியை பரா-மரிக்கும் உற்பத்தியாளரிடமிருந்து மாத இறுதியில் அறவிட்டுக்கொள்ளும். (7) தோட்ட முகாமைத்துவம் கண்காணிப்பு வேலைகளை செய்யும். (8) பறித்துக் கொடுக்கப்படும் பச்சை கொழுந்து கிலோ ஒன்றிற்கு தேயிலை சந்தை விற்பனை விலை அடிப்படையில் அடிப்படையாக 35% வழங்கப்படும். (9) கொழுந்தினை குறிப்-பிட்ட தோட்டத்திற்கே வழங்கவேண்டும் (10) தொழிற் சங்கங்களுக்கு சந்தாப் பணம் அறவிடப்பட்டு அனுப்பப்படும். இவ்வாறு செய்வதன் மூலம் நட்டமடைந்துள்ள தேயிலைத் தொழிற்துறையை லாபகரமானதாக மாற்றலாம் என விதந்துரைத்-துள்ளார்..

இன்று பாரிய தேயிலைத் தோட்டங்கள் முகம் கொடுத்துள்ள நெருக்கடிக்கு மாற்று மூல உபாயமாக வெளியார் உற்பத்தி முறையை அறிமுகப்படுத்த முனை-வதை வரவேற்கத்தக்கதாக கருதினாலும் அம்மாற்று மூலஉபாயம் தோட்டத் தொழிலாளர்களை மறுபடியும் அதளபாதாளத்தில் தள்ளாதிருக்கும் வகையில் மேற்கொள்வது அவசியமாகும். மறுபுறம் இம்மாற்று மூல உபாயத்தைக் கடைபி-டிப்பதன் மூலம் தோட்டத் தொழிலாளர்கள் நாட்டின் ஏனைய தனியார் உற்பத்தியா-ளர்கள்போல் தேயிலை நிலத்திற்கு சொந்தக் காரர்களாக அல்லது நீண்ட கால குத்-தகையாளர்களாக பரிணமிக்கும் வகையிலான தனியார் உற்பத்தி முறையாக இது அமைய வேண்டும். ஆனால் விதந்துரைக்கப்பட்ட தனியார் முறைமை தோட்டத்-தொழிலாளர்கள் நிலையற்ற ஊசலாடும் தனியார் உற்பத்தியாளர்களாக மாறும் தன்மையே காணப்படுகின்றது.

முதலாவது ஜனவசம தலைவர் அறிமுகப்படுத்தியுள்ள முறையை கவனத்-திற்கொள்வோமாயின் தனியாருக்கு தோட்டங்களில் மாற்று தொழிற்துறையை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்படுமாயின் அங்கு தோட்டத் தொழிலாளர்களுக்கான தொழில் வாய்ப்பு இல்லாது போய்விடுவதுடன் மிகச் சிறு பிரிவினருக்கே வேலை-வாய்ப்பு கிடைக்கும். மறுபுறம் தனியார் மேற்கொள்ளும் தொழிற் திட்டங்களின் அடிப்படையில் வெளியாருக்கான வேலை வாய்ப்பு உருவாகலாம். இதனால் ஏற்-படும் தொழிலாளர் எதிர்ப்பினை சமாளிப்பதற்கு தோட்டத்தொழிலாளர்களுக்கு நட்ட ஈட்டுடன் சேவை நீக்கத்தினை விதந்துரைத்துள்ளார். ஆனால் அந்த நட்ட-ஈட்டுத் தொகை எதன் அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்பதை விதந்து-ரைக்கவில்லை. இச்செயற்பாடானது தோட்டத்தொழிலாளர்களை தொழில் உத்தர-வாதமற்ற மற்றும் சமூகப் பாதுகாப்பற்ற பிரிவினராக மாற்றிவிடும். மறுபுறம் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திக்கொள்வதற்கான குத்-தகை அடிப்படையிலான சிறு காணித்துண்டு 20 வருடம் வேலைசெய்தவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுமாயின் தோட்டத்தில் வாழும் பெரும்பாலான குடும்பங்-களைப் பாதிக்கும். இன்றைய சூழலில் ஜனவசம தோட்டங்களில் மிகவும் குறைந்த தொழிலாளர்களே தோட்டங்களில் வேலைசெய்து வருகின்றனர்.

ஜனவசம தோட்டங்களில் வாழ்வோரில் 40 % மானோர் வெளியிடங்களில் வேலை செய்தே தமது வாழ்க்கையை கொண்டு நடத்துகின்றனர். இந்நிலையில் மேற்கூறப்பட்ட திட்டத்தைப் பின்பற்றினால் தோட்டத்தில் வாழும் பெரும் பான்-மையோருக்கு சிறு துண்டு காணிகளைப் பெறமுடியாது போய்விடும். இதன்படி பார்க்கின்றபோது தற்போது இருக்கும் நிலையைவிட மிக மோசமான வாழ்க்கை நிலையையே இத்தோட்டங்களில் வாழும் மக்கள் சந்திப்பர்.

அதேவேளை அறிமுகப்படுத்தப்படும் தொழிற் திட்டங்களுக்கமைய வெளித்-தொழிலாளர்கள் வருகைத்தரின் அத்துடன் அவர்களுக்கான வாழ்விடங்கள் வழங்-கப்படின் இனப்பரம்பல் அடர்த்தியில் மாறுதல் ஏற்படலாம். இது எதிர்காலத்தில் மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். தோட்டத்-தொழிலாளர்களுக்கு சிறு துண்டு காணிவழங்கப்படுமாயின் தோட்டத்தில் வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் வழங்க வேண்டும் இதேவேளை பயிரிடப்பட முடி-யாத காணிகளை தனியாருக்கு வழங்குவதாயின் அம்முதலீட்டாளர்களது தொழிற்-துறையில் தோட்டத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு வேலை வழங்குவதை கட்டாயமாக்க வேண்டும.;

தோட்டத்துறையில் கூட்டுறவு பாற்பண்னைகைளையும் விவசாயப் பண்-னைகளையும் உருவாக்கலாம். அல்லது இத்துறையில் முதலீடு செய்யும் தனியார்-களுக்கு வழங்கலாம். அல்லது தற்போது கொழும்பில் இயங்கும் தேயிலைக்கு பெறுமதி சேர்க்கும் கம்பனிகளை ( எயடரந யனனநன வநய நஒpழசவ உழஅpயn-நைள) குறிப்பி;ட்ட தோட்டங்களில் உருவாக்க ஊக்குவிக்கலாம். அல்லது தோட்ட தொழிற்சாலைகளை கூட்டுறவு தொழிற்சாலைகளாக மாற்றி தோட்டத் தொழிலா-ளர்களையும் வெளியார் உற்பத்தியாளர்களாக மாற்றி அவர்களை கூட்டுறவு தொழிற்சாலைக்கு கொழுந்தை அளிக்கும் பங்காளர்களாக மாற்றலாம். இதற்கு தற்-போது தெனியாயவில் இயங்கும் கொட்டபொல உட்பட ஏனைய கூட்டறவு தேயிலை தொழிற்சாலைகள் நல் உதாரணமாகும். ஆனால் பேராசிரியர் கென்னடி குணவர்தனவின் விதந்துரைப்புகள் நாட்டின் வளர்ச்சிக்காக அர்ப்பணித்த மக்களை மையப்படுத்தியதாக அல்லாது வெறுமனே உடனடி லாபத்தை பெறுவதை மைய-மாக வைத்தே முன்வைக்கப்பட்;டுள்ளது. தோட்டத்துறைக்கான மாற்று மூலஉபாய-மானது தோட்ட மக்களை மையப்படுத்தியதாகவே அமைய வேண்டும்.

இவற்றுடன் பாரிய கம்பனிகளை லாபகரமானதாக மாற்றும் முயற்சிக்கான ரோசன் இராஜதுரையின் விதந்துரைப்புகளை நோக்குவோமாயின், இராஜதுரை தொழிலாளர் அதிகளவு உற்பத்தியை பெற்றுக் கொடுக்காததன் காரணமாகவும், தொழிலாளர்களுக்காக வழங்கப்படும் சம்பள உள்ளிட்ட ஏனைய கொடுப்பனவுகள் காரணமாகவே தோட்டக்கம்பனிகள் நட்டமடைவதாக கூறியுள்ளாh.; இந்த இரண்டு காரணிகளை அடிப்படையாகக் கொண்டே தமது விதந்துரைப்புகளை முன்வைத்-துள்ளார். இதனை நியாயப்படுத்துவதற்காக ஏனைய பிறநாடுகளான இந்தியா மற்றும் கென்யாவை உதாரணத்திற்கு எடுத்துக் கொண்டுள்ளார். 1992 இல் தோட்-டக்கம்பனிகள் தேயிலைத் தோட்டங்களைப் பொறுப்பேற்றதுடன் 1995 ஆண்டு வரை நட்டத்தில் இயங்கியதாகவும் 1996 முதல் 2002 வரையிலான பகுதியில் லாபம் அடைந்ததாகவும், 2003 ஆண்டு முதல் 2015 வரையிலான காலப்பகுதியில் நான்கு வருடங்களைத் தவிர (2004.2007:,2010,2011) ஏனைய வருடங்களில் பாரிய நட்டத்தை அடைந்ததாகவும் மேலும் 2014 ஆம் ஆண்டு மட்டும் தோட்டக்கம்ப-னிகள் 5 பில்லியன் ரூபா நட்டமடைந்துள்ளதாகக் தமது விதந்துரைப்பு கட்டு-ரையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் 70.4 மூ ஊழியர்கள் ஒரு கிழமையில் 40 மணித்தியாளங்கள் வேலை செய்கையில் தோட்டத்தொழிலாளர்களில்; அரைவாசியாக இருக்கும் 50மூ ஆண் தொழிலாளர்கள் கிழமையில் 20-25 மணித்தியாளங்கள் மட்டுமே வேலை செய்கின்றார்கள் எனக்குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஏனைய நாடுகளுடன் ஓப்பிடு-கையில் நமது நாட்டின் கொழுந்து பறிப்போரின் தாக்கமுள்ள கொழுந்து பறிக்கும்; ( நுகநஉவiஎந Pடரஉமiபெ வுiஅந) நேரம் 40மூ மாகவும் ஏனைய நாடுகளில் 80மூ இ இருப்பதாகக் குறிப்பிட்டு இதனால் எமது கொழுந்து பறிப்போர் ஒரு நாளைக்கு 15-18 கிலோ (வி.பி. தேயிலை மலை) உட்பட பறிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். இதே-வேளை தென்னிந்தியாவில் கொழுந்து பறிக்கும் ஒருவர் ஒரு நாளைக்கு 50 கிலோவும் வட இந்தியாவில் 26 கிலோவும் பறிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்-துடன் கென்யா, மாலாவி, ருவன்டா, தன்சானியா போன்ற நாடுகளின் கொழுந்து பறிப்போர் 60-80 கிலோ பறிப்பதாகக் கூறியுள்ளார்.

இவற்றுடன் சம்பள விபரத்தைக் குறிப்பிடுகையில் இலங்கைத் தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு ரூபா 688 வையும், தென்னிந்திய தொழிலாளர்கள் முறையே ரூபா 488 வையும் கென்யா ரூபா 443 ஐ பெறுவதாகக் குறிப்பிட்டுள்ள-துடன் உலக தேயிலை விலை எவ்வித மாற்றமுமின்றி 3 அமெரிக்க டாலராகவே இருக்கின்றது எனக்குறிப்பிட்டுள்ளார். இக்காரணிகளே தோட்டங்கள் நட்டத்தில் இயங்குவதற்கு காரணம் என்கிறார். இதனால் ஏனைய நாடுகளைப்போல் உற்பத்தி-யுடன் தொடர்புடைய சம்பள முறையை அறிமுகப்படுத்தினால் தோட்டங்கள் நட்ட-மடைவதிலிருந்து காப்பாற்றலாம் என அவரது விதந்துரைப்பில் முன்வைத்-துள்ளார்.

இராஜதுரையின் தோட்டங்கள் நட்டமடைவதற்கு தோட்டத் தொழிலாளர் அதிகளவு கொழுந்தினை பறித்துத்தராமை, உற்பத்திக்கு சரிநிகரற்ற தொழிலாளர்-களின் சம்பள உயர்வு என்ற இருவிடயங்களை ஆராய்வோமாயின் 1992 முதல் இதுவரையான காலத்தில் அவரது கூற்றுப்படி ஆறு வருடங்கள் மட்டுமே தோட்-டங்கள் லாபம் அடைந்துள்ளன. இவ்வாறு பெறப்பட்ட லாபம் எவ்வளவு என்று குறிப்பிடவில்லை. கம்பனியொன்று தொடர் நட்டமடைந்தால் அக்கம்பனி நாள-டைவில் மூடப்பட்டுவிடும். ஆனால் அவ்வாறு நடைப்பெற்றதாகத் தரியவில்லை. மறுபுறம் இவ்வாறு பெறப்பட்ட லாபத்தில் எத்தனை விகிதம் மீள் நடுகைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளது? எத்தனை விகிதம் தொழிலாளர்களுக்கு சன்மானமாக வழங்கப்பட்டுள்ளது? என்பதைப்பற்றி அவர் குறிப்பிடவில்லை. தோட்டங்களை கம்-பனிகள் கையேற்கும்போது 389,549 தொழிலாளர்கள் வேலை செய்தனர். தோட்டம் கையேற்கப்பட்ட ஒரு வருடத்தில் ஒருலட்சம் தொழிலாளர்கள் சுய பணிநீக்கத்-திற்கு ஊக்கமளித்து நீக்கப்பட்டனர். இன்று நிரந்தரத் தொழிலாளர்களாக 163.068 வேலைசெய்கின்றனர். தோட்டங்கள் கையேற்கப்பட்டவுடன் தேயிலை ஏற்றமதி வரி நீக்கப்பட்டது. தோட்டங்களின் மரங்கள் வெட்டி காசாக்க அனுமதிக்கப்பட்டது. ஆரம்ப சுகாதாரம் தவிர பிரதான வைத்திய தேவைகள் அரசாங்கத்தினாலேயே வழங்கப்படுகின்றது. கல்வி வசதிகள் அரசாங்கத்தினாலேயே வழங்கப்படுகின்றது. வீட்டுத்திட்டங்கள், திருத்தங்கள், பாதை செப்பனிடல் என்பன அரசாங்கத்தினா-லேயே வழங்கப்படுகின்றன. ஆனால் இவையனைத்தும் முன்னர் தோட்டக் கம்ப-னிகளினாலேயே வழங்கப்பட்டன. சிறுவர் பராமரிப்பு தவிர பெரும்பாலான சமூக சேவைகளை அரசாங்கமே வழங்குகின்றது. இவ்வரப்பிரசாதங்களை கம்பனிகள் பெருவதை இராஜதுரை குறிப்பிடவில்லை. இதனால் தோட்டக் கம்பனிகள் பெறும் லாபத்தைக் குறிப்பிடவில்லை.

தொழிலாளர்களின் வேலை நேரத்தையும் கொழுந்து பறிக்கும் நிறையை ஏனைய நாடுகளுடன் ஒப்பீடும் இவர், அந்நாடுகளில் வழங்கும் ஊக்குவிப்பபை; குறிப்பிடவி;ல்லை. இந்தியாவிலும் தோட்டங்களில் ஆண் தொழிலாளர்கள் தமக்கு அளிக்கும் வேலைகளை முடித்தவுடன் வீடு திரும்பிவிடுகின்றனர். சில வேலை-களில் மேலதிக காசுக்காக கொழுந்து பறிக்கின்றனர். கென்யாவிலும் இவ்வாறான முறையே காணப்படுகின்றது. பெண்கள் ஒரு நாளைக்கு பறிக்கும் கொழுந்தினை ஏனைய நாடுகளுடன் ஒப்பிடும் இவா,; ஒரு உண்மையை மறைத்துள்ளார். தென் இந்தியாவில் கொழுந்து பறிக்கும் தொழிலாளர்கள் கத்தரிக்கொண்டே கொழுந்-தினை பறிக்கின்றனர். மேலும் இவர்கள் நாளொன்று பறிக்கும் கொழுந்தின் அள-விற்கேற்ப மேலதிக கொடுப்பனவு வழங்கப்படுகின்றது. தென்னிந்திய தொழிலாளர்-களது அடிப்படை நாள் சம்பளம் ரூபா 238 வாகும். அவர் குறிப்பிட்டுள்ளது போல் 488 ரூபாவல்ல. கொழுந்து இருக்கும் போது ஒரு நாள் சம்பளத்திற்காக 20 25 கிலோ பறிக்க வேண்டும் கொழுந்து இல்லாதபோது 5 - 10 கிலோ பறித்தாலும் 238 ரூபா சம்பளம் வழங்கப்படும். அதேவேளை கொழுந்து இருக்கும் போது ஒரு நாளைக்கு 26 30 கிலோ பறித்தால் ஒரு கிலோவிற்கு மேலதிகமாக 50 சதம் வழங்கப்டும். 30-40 இடையி;ல் ஒரு கிலோவிற்கு 1 ரூபா வழங்கப்படும். 40- 50 இடையில் ஒரு கிலோவிற்கு 3ரூபா வழங்கப்படும். இம்மேலதிக கொடுப்பனவிற்கு ஊ.சே.நி. வழங்கப்படுகின்றது. மேலும் இங்கு பெரும்பாலும் சி.டி.சி தேயிலையே உற்பத்தி செய்யப்படுவதுடன் தொழிலாளர்கள் கத்தரி கொண்டே கொழுந்து பறிக்-கின்றனர். இதனாலேயே அத்தொழிலாளர்கள் 40- 50 கிலோ பறிக்கின்றார்கள். மேலும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் வி.பி. மீள்நடுகையை மேற்கொண்டமை-யினால் அங்கு கொழுந்து அதிகமாகக் காணப்படுகின்றது. இக்காரணிகளினாலேயே அங்கு கொழுந்து பறிப்போரின் தாக்கமுள்ள கொழுந்து பறிக்கும்; ( நுகநஉவiஎந Pடரஉமiபெ வுiஅந) நேரம் 80மூ மாக இருக்கின்றதுடன் நமது நாட்டில் 40மூ இருக்-கின்றது. அதேவேளை கவ்வாத்து வெட்டும் போது பழைய மரமாகின் மேலதிக கொடு;ப்பனவு தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றது. பெண்களுக்கு பிரசவ சகாயப் பணம் 94 நாட்களுக்கு வழங்கப்படுகின்றது. நமது நாட்டில் 84 நாட்களுக்கே வழங்கப்படுகின்றது. இந்தியாவில் இனமாக கம்பளி வழங்கப்படுகின்றது.(ஆகக் குறைந்த கம்பளியின் விலை 300 ரூபாவாகும்) மலையில் வேலைசெய்யும் போது காலையில் பால் தேநீர் கட்டாயமாக வழங்கப்படுகின்றது. சில தோட்டங்களில் மாலையிலும் வழங்கப்படுகின்றது. மாதாமொன்றிற்கு 20 கிலோ அரிசி இனாமாக வழங்கப்படுகின்றது. (தொழிலாளர் உண்ணும் அரிசியின் ஒரு கிலோ விலை 17 ரூபாவாகும்.). 5ஆம் வகுப்பு வரையிலான பாடசாலையை தோட்ட நிர்வாகம் 5 ஆசிரியர்களைக் கொண்டு நடாத்துகின்றது. ஆரம்ப மருத்துவ வசிதி அளிக்கப்படு-கின்றது. இவ்வசதியினை வேலை செய்பவர் மட்டுமல்லாம் குடும்பத்திலுள்ள வயோதிபர் மற்றும் 18 வயதிற்கு குறைந்தோருக்கும் வழங்குகின்றது. இது மட்டு-மில்லாமல் அவர்கள் ஒய்வுபெறும்; போது ஊழியர் சேமலாபநிதியுடன் மாதா மாதம் பென்சனும் வழங்கப்படுகின்றது. இதற்காக வருடத்தில் ஒரு முறை ஊழியர் சேமலாப நிதியிலிருந்து 8.33 மூ அறவிடுப்படுகின்றது. இத்தனை சலுகை-களுடன் ஒப்பீட்டால் இலங்கை தொழிலாளருக்காக இலங்கை கம்பனிகள் வழங்கும் கொடுப்பனவுகள் சலுகைகளும் குறைவு என்றே கூறவேண்டும். இவ்வ-கையில் இலங்கை நாட்டை விட ஏனைய நாடுகளின் தோட்டத் தொழிலாளர்க-ளுக்கு குறைந்த சம்பளம் வழங்கப்பட்ட போதிலும் அவர்களுக்கு ஊக்குவிப்பு தொகை அதிகமாக வழங்கப்படுகின்றது. எனவே இந்த தர்க்கத்தை வைத்துக்-கொண்டு இலங்கைத் தொழிலாளர்களின் கொழுந்து பறித்தல் அளவினை ஒப்பிட்டு பார்த்தல் பிழையாகும்.

இதேவேளை இலங்கையில் 4,25,000 வெளியார் உற்பத்தியாளர் இருப்பதா-கவும் அவர்கள் இரண்டு தசாப்தங்களில் தங்களது கொழுந்து உற்பத்தியை இரண்-டரை மடங்கு அதிகரித்தாகக் கூறியுள்ளார். அத்துடன் அவர்கள் ஒரு கிலோவிற்கு 60-65 ரூபாவை பெற்றுக்கொள்வதுடன் ஏனைய கொடுப்பனவுகளான ஊ.சே.நி. ஊ.ந.நி.(நு.P.கு.இ நு.வு.கு.) சேவைக்காலப்பணம் உள்ளிட்ட ஏனைய சேவைகள் வழங்கப்படாத போதிலும் அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்ததாக இருக்கின்றது எனக்குறிப்பிட்;டுள்ளார். இருபது வருடங்களுக்குள் வெளியார் உற்பத்தி இரண்டரை மடங்காக அதிகரிப்பதற்கு காரணம் அவர்கள் புதிய நிலத்தில் வி.பி. கன்றுகளை நாட்டியுள்ளதுடன் அரசாங்கம் அவர்களுக்கு மானிய முறையில் உரத்தையும் தேயிலைக் கன்றுகளையும் வழங்கியுள்ளது. மேலும் புதிய நிலமாக இருப்பதனால் மேல்மண் (வழி ளழடை) கழுவிச்செல்லாமையினாலும் விளைச்சல் அதிகமாகக் காணப்படுகின்றது. ஆனால் பெருந்தோட்டங்களில் 150 வருடங்கள் பயிரி;ட்டு மேல் மண் கரைந்து சென்றுள்ளது. புதிய வி.பி. தேயிலைகள் கம்பனி தோட்டங்களில் பாரிய அளவில் இல்லை என்பது ஒருபுறமிருக்க மறுபுறம் பெரும்பாலான தோட்-டங்களில் போதியளவு பசளையிடுவதில்லை இதுவே விளைச்சல் இன்மைக்கான பிரதானக்காரணம். மேலும் வெளி உற்பத்தியாளர்கள் வெறுமனே தேயிலைக் கொழுந்தினை 60-65 ரூபாவிற்கு விற்பதனால் மட்டும் அவர்களது வாழ்க்கைத்தரம் உயர்ந்து விடவில்லை.வெளி உற்பத்தியாளர்கள் குடும்பம் ஒவ்வொன்றும் காய்கறி பயிர்ச்செய்கையில் ஈடுபட்டு வருமானத்;தைப் பெறுகின்றன. குடும்பத்தில் குறைந்-தது ஒருவராவது அரச தொழிலிலோ தனியார் தொழிலிலோ ஈடுபட்டுவருகின்-றனர். இவையே அவர்களது பிரதான வருமான மார்கமாக இருக்கின்றதுடன் மற்றும் சமுர்தி உள்ளிட்;ட அரசாங்கம் வழங்கும் பல சமூக சேவைகளையும் பெறுகின்றனர். இதனால் அவர்கள் சிறப்பான வாழ்க்கைத்தரத்தை கொண்டிருக்கின-றனர். ஆனால் தோட்டத் தொழிலாளர் முழுமையக தங்களது குறைந்த சம்பளத்தி-லேயே தங்கியிருக்கின்றனர். இதனால் அவர்களது வாழ்க்கைத்தரம் குறைவாகவே உள்ளது. இவ்வுண்மையை திரு. இராஜதுரை சுட்டிக்காட்டவில்லை.

மேலும் தொழிலாளர்களின் கொழுந்து பறித்தலை மட்டும் சுட்டிக்காட்டி-யுள்ள இராஜதுரை தோட்ட முகாமைத்துவ செலவு மற்றும் கொழும்பு பணிமனை செலவு எவ்வளவு என்பதை மறைத்துள்ளார். தோட்ட முகாமையானருக்கு வழங்கும் மேலதிக கொடுப்பனவுகள் மற்றும் கொழும்பு பணிமனை முகாமையாள-ருக்கு வழங்கும் ஊக்குவிப்புகளை சுட்டிக்காட்டாது மறைத்துள்ளார்.

இராஜதுரையின் ஆங்கிலக் கட்டுரையை வாசிக்கும் ஒருவர் தொழிலாளர்-களே தோட்டக்கம்பனிகள் நட்டமடையக் காரணம் எனும் முடிவுக்கு வருவர். இது ஒரு தப்பான எடுத்துக்காட்டலாகும.; இன்றைய நிலையில் மாற்றுத் திட்டமொன்-றினை அடையாளம் காணுதல் அவசியம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடி-யாது ஆனால் அதனை நியாயப்படுத்துவதற்காக தோட்டத் தொழிலாளர் மீது பலியைப் போட்டு தோட்ட முகாமைத்துவம் தப்பிக்கலாது.

வெளியார் உற்பத்தியே மாற்றுத்திட்டமாக கருதினால் அத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களும் சமனான அல்லது ஏற்றுக்கொள்ளும் வகையிலான பயனைப் பெறவேண்டும் வெறுமனே கம்பனிகள் மட்டும் உச்ச பயனை (லாபத்தை) அடைவதாக இருக்கக் கூடாது. இவ்வகையில் இராஜதுரை கூறியுள்ள விதந்துரைப்-புகளை நோக்கும் போது அது பெருமளவு முதலாளிமார் சாhந்ததாக இருப்பதை அடையாளம் காண முடிகின்றது. அவரது கருத்துப்படி தொழிலாளர்களுக்கு தோட்-டத்தில் பத்து நாட்களே வேலை வழங்க வேண்டும் அதற்கே ஊ.சே.நி. உள்ளிட்ட ஏனைய கொழுப்பனவுகள் வழங்குவர். இதன்படி இன்றைய சம்பளத்தின் படி பார்த்தால் மாதம் 6200 ரூபாவாகவே அமையும். இன்று நாட்டின் தேசிய குறைந்த-பட்ச மாத அடிப்படை சம்பளம் 10,000 ரூபாவாகும். இன்று தோட்டத் தொழிலாளர் குறைந்த பட்ச மாதந்த சம்பளமாகப் 25 நாட்கள் வேலை செய்தால் பெறுவது 620 ஒ 25 ஸ்ரீ15இ500இ இதன்படி பார்க்கின்றபோது தற்போதைய சம்பளத்தில் சுமார் 1ஃ3 பகுதியாக மாற்ற முனைகின்றார். விலைவாசியைக் கருத்திற் கொண்டு இன்றைய நாட்சம்பளத்தை 1000 ரூபாவாக கேட்கும் வேளையில் இருக்கும் சம்பளத்தை மூன்றில் ஒரு பகுதியாக குறைக்கும படி கூறியுள்ளார். எனவே இதனை குறைக்க இடமளிக்காலாது. மாறாக 20 நாட்களுக்கு வேலை தரும் கோரலாம். அப்படி-யாயின் தொழிலாளர்கள் குறைந்தது 20ஒ620 ஸ்ரீ 12இ400 ரூபா சம்பளமாக பெறலாம். மிகுதி 5 நாட்களோ 10 நாட்களோ குத்தகைக்கு வழங்கிய காணியில் வேலைசெய்யலாம். நாட்டின் தேசிய அடிப்படை சம்பளத்தை விட குறைந்த சம்பளம் வழங்கவது நியாயமற்றதும் நீதியற்றதுமாகும்

மேலும் தோட்டக் காணிகளைப் பகிர்ந்தளித்து ஒரு கிலோ கொழுந்திற்கு 35 மூ சந்தை விலையின் அடிப்படையில் கொடு;க்கலாம் என விதந்துரைத்துள்ளார். இவ்விடயத்திலும் தந்திரோபாயத்தினை கையாண்டுள்ளார். தற்போது வெளியார் உற்பத்தியாளருக்கு சந்தைவிலையில் 68மூ வழங்கப்படுகின்றது. அதாவாது இலங்கை தேயிலைச் சந்தையில் குறிப்பிட்ட தோட்ட தொழிற்சாலையின் தேயிலை ஒரு கிலோவிற்கு 100 ரூபா நிர்ணயிக்கப்பட்டால் வெளிஉற்பத்தியாளருக்கு 68 ரூபா வழங்க வேண்டும மிகுதி 32 ரூபாவையே குறிப்பிட்ட தொழிற்சாலை உரிமையாளர் எடுத்துக்கொள்ள வேண்டும். இவரோ 35மூ கொடுப்பனவை விதந்துரைத்துள்ளார்.. தற்போது வெளி; உற்பத்தியாளருக்கு வழங்குவதில் அரைவாசி தொகையையே சிபாரிசு செய்துள்ளார். மறுபுறம் அவரது அடுத்த விதந்துரைப்பின்படி தேயிலைக்கான உரம், மருந்து, என்பவற்றுடன் கொழுந்து பறித்தலுக்கும் குறிப்பிட்ட தொழிலாளி தனது முதலீட்டையே பயன்படுத்த வேண்டும். தோட்ட முகாமைத்துவம் அதற்கான கடனை அளித்து அதனை மாத இறுதியில் கொழுந்திற்கு வழங்கும் பணத்தில் கழித்துக் கொள்ளும். உற்பத்திக்கான முழு முதலீட்டையும் மேற்கொள்ளும் தொழிலாளர்களுக்கு 68மூ கொடுப்பனவையே வழங்கவேண்டும். அதேவேளை கொழுந்து விலையேற்றத்திற்கேற்ப பேரம் பேசும் உரிமையை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

இவற்றுடன் தோட்டங்களைப் பகிர்ந்தளிக்கும் விதந்துரைப்பினை நோக்குவோமாயின் தேயிலை மரங்கள் ஒரு வருட குத்தகைக்கே வழங்கப்படும். அதேவேளை தோட்ட முகாமைத்துவம் விரும்பினால் ஏழு நாள் அறிவித்தலுடன் அதனை மீண்டும் பெற்றுக்கொள்ள முடியும். இது தொழிலாளர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தும் முறையாவதுடன் தொழிலாளர் முழுமையாக ஈடுபட ஒருபோதும் ஊக்குவிக்காது. வெளியார் உற்பத்தியை அறிமுகப்படுத்த விரும்பினால் அத்தொழிலாளர்களுக்கு நம்பிக்கைய10ட்டும் வகையில் அவர்களுக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் தேயிலைக்காணிகளை வழங்க வேண்டும். இல்லாவிடின் ஆகக்குறைந்து 3-5 வருடத்திற்காவது வழங்கவேண்டும். மேலும் தேயிலை மரங்களை வழங்குவதாயின் புதிய மற்றும் பழைய மலைகளை இணைத்தே வழங்க வேண்டும். வெறுமனே இரண்டு ஏக்கர் தேயிலைக்காணிகளை என வழங்கலாகாது.

இத்திட்டம் தொடர்பாக அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளும் தொழிற்சங்கங்கள் இவற்றினைக் கருத்திற் கொண்டு பேரம் பேசலை மேற்கொள்ளவேண்டும். நாங்கள் பயிரி;ட்ட காணிகளையே தொழிலாளர்களுக்கு வழங்குகின்றோம் என்று கம்பனிகள் கூறலாம் ஆனால் அக்காணிகளில் தொழிலாளரின் உழைப்பு மூலதனமும் உண்டு என்பதை முன்வைத்து தொழிற்சங்கங்கள் தமது பேரம் பேசுதலை முன்னெடுக்க வேண்டும்.

நன்றி - veerakesari

“தேசத் துரோகம்!” (1915 கண்டி கலகம் –42) - என்.சரவணன்

ஆர்மண்ட் டீ சூசா - Armand De Aouza
தேசத்துரோகம் என்பது ஒரு மிகப்பெரும் குற்றச்சாட்டு. உலகளவில் இன்றுவரை தனிநபர்களுக்கு எதிராகவும், அமைப்புகளுக்கு எதிராகவும் அதிகளவில் பயன்படுத்தப்பட்டு வரும் பதம் இது. இந்த குற்றச்சாட்டுக்கு பயம்கொல்லாத எவரும் இலர். தப்பித்தவறியும் தனக்கு எதிராக எவரும் இப்படி ஒரு குற்றச்சாட்டை எவரும் முன்வைத்துவிடக்கூடாது என்று எவரும் பயப்படுவது போலவே. மறுபுறம் ஒரு அரசியல் எதிரியை வீழ்த்துவதற்கான மாபெரும் கருவியாக இந்த “பதம்” அவதூற்றுச் சொல்லாக வெகுஜன அரசியலில் உறுதிபெற்றுள்ளது.

அப்பேர்பட்ட உச்சபட்ச குற்றச்சாட்டுக்கு நியாயமான வரைவிலக்கணத்தை ஆங்கில காலனித்துவ காலத்திலும் கூட கொண்டிருக்கவில்லை. எந்தவொரு குற்றச்சாட்டையும் பிரித்தானிய ராஜ்யத்துக்கும், அரசருக்கும் எதிரான ராஜதுரோக குற்றச்சாட்டாக இலகுவில் நிறுவிவிடும் போக்கு காணப்பட்டது. அதுவும் ஒரு இராணுவச் சட்டத்தின் கீழ் கூறவா வேண்டும்.

1915 ஆம் ஆண்டு கலவரத்தின் போது கடை உடைத்தல், களவு புரிதல், கலவரத்தில் ஈடுபடுதல், போன்ற சாதாரண குற்றங்கள் அனைத்தும் கூட தேசத்துரோக குற்றச்சாட்டு என்கிற வரைவிலக்கணத்துக்குள் கொண்டுவரப்பட்டது. “எமது பேரரசுக்கு எதிராக போர் பிரகடனம்” என்றே அவர்கள் அழைத்தார்கள். பிரபல “ப்லாண்டிங் கெசட்” என்கிற பத்திரிகை “இந்த மக்கள் எழுச்சி “ஐரோப்பிய எதிர்ப்பு” கலவரம் அல்ல இது என்று அறிவித்தது. முஸ்லிம்களுக்கு எதிராக சிங்களவர்கள் கொண்டிருந்த மனநிலையின் வெளிப்பாடே இந்த கலவரம் என்று “ப்லாண்டிங் கெசட்” பத்திரிகை தொடர்ந்து எழுதியது.

இந்தியாவில் உள்நாட்டு எழுச்சியையும், கலகங்களையும் அதிகம் ஆராய்ந்த ஒருவர் நோர்டன். அவர் இப்படி கூறினார். “சாதாரண பொதுமக்களுக்கு எதிரான “தேசத்துரோக” குற்றச்சாட்டை நிரூபிப்பதற்கு இராணுவநீதிமன்றம் தோல்வியடைந்தது” என்று கூறியது. நீதிமன்றத்தில் நடந்த எந்த வழக்கும் ராஜதுரோக குற்றத்துக்கு உட்பட்டதல்ல. கொள்ளையடித்தவர்களோ, கலவரக்காரர்களோ, மோசமான வன்முறைக்காரர்களோ ஜோர்ஜ் அரசருக்கு எதிராக எழுச்சி கொள்ளவேண்டும் என்கிற எண்ணம் கிஞ்சித்தும் இருக்க வாய்பில்லை. ஹரி க்ரீசி (Harry Creasy (1852-1922)) கூறுவதைப்போல பிரித்தானிய சாம்ராஜ்யத்தின் கீழ் உள்ளவர்களிலேயே பிரித்தானிய ராஜ்யத்தின் மீது அதிக நேர்மையும் பக்தியும் கொண்ட மக்கள் அரசருக்கு எதிராக யுத்தம் பிரகடனம் செய்தார்கள் என்பது கட்டுக்கதை”

ஹரி க்ரீசி (Harry Creasy (1852-1922))
இந்தக் கலவரம் பற்றி ஆராய்ந்து நூல்லாக வெளியிட்ட பிரபல பத்திரிகையாளர் ஆர்மண்ட் டீ சூசா எழுதியவற்றை இங்கிலாந்துக்கு அனுப்பிய சில நாட்களின் பின்னர் ஆளுநர் சேர் ஜோன் அண்டர்சன் அவர்களுடன் ஒரு நேர்காணலை மேற்கொண்டார். இந்த நேர்காணலின் அடிப்படை நோக்கம் இராணுவ நீதிமன்றத்தின் குற்றங்கள் குறித்து ஆளுநர் மேற்கொண்ட திருத்தங்கள் தொடர்பிலானது.

இலங்கை சட்ட சபையில் ஐரோப்பிய பிரதிநிதியாக இருந்த ஹரி க்ரீசி (Harry Creasy) போன்றோர் கலவரம் விடயத்தில் பிரித்தானிய ஆட்சியின் செயலுக்கு எதிரான நிலைபாட்டை எடுத்தவர்கள். இலங்கையில் அனைத்து சமூகங்களின் நன்மதிப்பை பெற்றவர் அவர். அவர் சட்டசபையில் இது குறித்து ஒரு யோசனையை முன்மொழிந்தார். கலவரம் தொடர்பில் தண்டனை பெற்று சிறையில் இருப்பவர்கள் குறித்து மீண்டும் விசாரணை செய்வதற்காக ஒரு குழுவை நியமிக்க வேண்டும் என்று கோரினார். அதற்கு பதிலளித்த அரசாங்கம்  அதனை விசாரிப்பதற்கு ஒரு குழுவை அமர்த்தத் தேவையில்லை என்றும் ஆளுநர் தனிப்பட்ட முறையில் சகல வழக்குகளையும் ஆராய்வார் என்றும் பதிலளிக்கப்பட்டது.

இப்படி ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டதால் பல முறையீடுகள் ஆளுநருக்கு அனுப்பப்பட்டது. இந்த முறைப்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள சந்தார்ப்பம் கிடைக்கபெற்ற ஆர்மண்ட் டீ சூசா ஆளுநரிடம் இரண்டு காரணங்களின் அடிப்படையில் உரையாட விளைந்தார். (1) தேசத்துரோகம் என்பது சட்டத்தின் புனைவு (2) குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்கள் குறித்து அதிகாரிகளால் முன்வைக்கப்பட்ட கருத்துகளின் அடிப்படையில் மீண்டும் பரிசீலிப்பது உகந்ததல்ல.

ஆளுனரால் தனிப்பட்ட ரீதியில் மீள்பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் வழக்குகளானது மேன்முரஈட்டுக்கு சமம் என்று சூசா கருதினார். இராணுவ நீதிமன்றத்தின் தீர்ப்புகள் குறித்து மேன்முறையீடு செய்யமுடியாது என்கிற நிலை இருந்ததால் ஆளுனர் மேற்கொள்கின்ற விசாரணை மேன்முறையீட்டுக்கு இணையானதாகவே கருத முடிந்தது.

மேன்முறையீட்டு நீதிமன்றங்களில் முன்னைய சாட்சியங்கள் மீதே மீள் விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் புதிய சாட்சிகள்  கணக்கில் எடுக்கப்படாது என்பதாலும் ஆளுநரின் விசாரணையிலாவது புதிய சாட்சிகளை கருத்தில் கொள்ள வேண்டும் என்று சூசா கேட்டுக்கொண்டார். அவர் அப்படி கேட்டுக்கொண்டதற்கான காரணம் இராணுவ நீதிமன்ற தீர்ப்புகள் குறித்து உறுதிசெய்வதற்காக அதிகாரிகள் அப்போது மேலதிக தகவல்களை சேகரிக்கத் தொடங்கியிருந்தார்கள். ஆனாலும் அந்த தகவல் சேகரிப்புகள் போதுமான அளவு அதிகாரிகளால் செய்யப்படவில்லை.

இராணுவ நீதிமன்ற விசாரணைகளின் போது ஆளுநரின் தனிப்பட்ட அறிதலுக்காக அந்த வழக்குகள் குறித்த அறிக்கையை அனுப்பும் வாய்ப்பு கிராம அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. அவர்களோ தமது விருப்பு வெறுப்புகளுக்கு உட்பட்டே அந்த அறிக்கையை அனுப்பினார்கள். அவர்கள் கொடுத்த விபரங்கள் ஆளுநரின் முடிவுகளுக்கு வழிகோலியது. எனவே மீள விசாரணைகள் ஆரம்பமான போது அந்த கிராம அதிகாரிகள் தாம் முன்னர் வழங்கிய தகவல்களுக்கு அப்பால் எதுவும் முன்வைக்கவில்லை. ஏற்கெனவே வாங்கிய தீர்ப்புகள் அப்படி இருப்பதையே அவர்கள் விரும்பினார்கள். அவர்கள் தெரிவித்திருந்த தகவல்கள் பொய்யென்று நிரூபிக்கப்பட்டு, அதனடிப்படியில் சிலர் விடுவிக்கப்பட்ட போது அந்த அதிகாரிகள் தமக்கு ஏற்பட்ட அவமானமாகக் கருதினார்கள்.

சிறையிலிருப்பவர்கள் குற்றவாளிகளானாலும், நிரபராதிகளானாலும் அவர்களுக்கு தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருந்தால் அதனை தாம் எப்படியும் குறைப்பதாக ஆளுநர் ஜோன் அண்டர்சன் வாகுறுதியளித்தார்.

வீடுகளுக்கும், கடைகளுக்கும் சேதம் விளைவித்தோருக்கு கடூழியத்துடன் 20 வருட, 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது. பொதுவில் இத்தகைய குற்றங்களுக்கு 4 அல்லது 5 ஆண்டுகள் சாதாரண சிறைத்தண்டனையே கூடியபட்சம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால் தேசத்துரோக குற்றச்சாட்டும் இத்துடன் சேர்த்துக்கொள்ளப்பட்டதால் இந்த அளவு தண்டனை வழங்கப்பட்டது. இது அநீதி என்று சூசா ஆளுநருக்கு விளக்கினார். அவை குறைக்கப்படும் என்றும் அண்டர்சன் உறுதியளித்தார். உறுதியளித்தது போலவே நிறைவேற்றினார்.
ஆளுனர் ஜோன் அண்டர்சன் - John Anderson

மோசமான குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி தண்டனை பெற்றவர்கள் இவ்வாறு குற்றச்சாட்டும் தண்டனையும் குறைக்கப்பட்ட சந்தர்ப்பத்தை காலனித்துவ ஆட்சியில் காண்பதரிது. அதுவும் பலருக்கு. பலர் விடுதலை பெற்றார்கள். தேசத்துரோகம் மற்றும் முஸ்லிம் பள்ளிவாசல்களுக்கு சேதமிழைத்ததாகவும் குற்றங்களுக்கு ஆளாகிய மூவரை அவர் விடுதலை செய்ததுடன் பொய் சாட்சி கூறியவர்களுக்கு எதிராக செப்டம்பர் மாதம் வழக்கு ஆரம்பமானது.

ஆளுநர் இலங்கையிலிருந்து வெளியேறுவதற்கு சில தினங்களுக்கு முன்னர் அதாவது டெசம்பர் முதல் வாரம் தேசத்துரோகம், கலவரமிழைத்தல், கடையுடைத்தல் போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஆயுள்தண்டனை பெற்ற ஏ.ஜீ.குணதிலக்க என்பவரை விடுதலை செய்யப்பட்டார். அவர் அதுவரை 5 மாத கடூழிய சிறைத்தண்டையை அனுபவித்து வந்தார். அவர் சிறையை விட்டு வெளியேறியபோது உடல்நிலை மோசமாகி இருந்தது. அவரை விடுவிக்க உத்தரவு பிறப்பித்த ஆளுநர் “மிகப்பெரிய அநீதி” என்றார். ஆனால் அதே வழக்கில் அதேயளவு தண்டனைப் பெற்ற மற்றுமொருவர் தொடர்ந்து சிறைத்தண்டையை அனுபவித்தார். குணதிலக்க குற்றமற்றவர் என்றால் அவரும் குற்றமற்றவரே.

தேசத்துரோகம், கலவரமிழைத்தல், கடயுடைத்தல் ஆகிய குற்றச்சாட்டின் பேரில் மூவர் களுத்துறை சிறைச்சாலையில் கடூழிய ஆயுள் தண்டனை பெற்று வந்தார்கள். அவர்களில் ஒருவர் டைனமைட் கொண்டு தாக்குதல் நடத்தினார் என்பது குற்றச்சாட்டு. ஒருவர் 5000 பவுன்களை கொடுத்து ஒக்டோபரில் விடுதலையானார். மற்றுமிருவரும் அதேயளவு பணத்தைக் கொடுத்து டிசம்பரில் விடுதலையானார்கள். இவ்வாறு இராணுவ நீதிமன்றத்தினால் தண்டனை வழங்கப்பட்டவர்கள் பலர் நிபந்தனையுடனோ, அன்றியோ விடுதலையானார்கள். அதேவேளை மேலும் பல அப்பாவிகளுக்கு அந்த நீதி கிடைக்கவில்லை.

வழக்குகளை செய்தியிடுவதற்கு தொடர்ச்சியாக தடங்கல்களை ஏற்படுத்தியவண்ணம் இருந்தது அரசு. அதுபோல சம்பத்தப்பட்ட நபர்கள், குற்றச்சாட்டுக்கள், விசாரணை போன்றவை குறித்த விபரங்களை ஊடகங்களுக்கு வழங்குவதற்கு மறுத்தது. மக்களுக்கு இந்த செய்திகள் சென்றடைவதை தவிர்த்தது.

1915 ஓகஸ்ட் மாதம் அன்றைய பறங்கி இனத்து சட்டசபை உறுப்பினர் இராணுவ நீதிமன்ற விசாரணை குறித்த விபரங்கள் அனைத்தும் வெளியிடப்பட வேண்டும் என்று சட்டசபையில் கோரிக்கை விடுத்தார். சிங்கள அப்பாவி விவசாயிகள் பலர் அநியாயமாக சிறையனுபவிக்கிறார்கள் என்றார் அவர். அதுவரை 10,000 அளவில் மக்கள் சிறைத் தண்டனை அனுபிவிப்பதாக தெரிவித்த அவர் இராணுவ நீதிமன்றத்தின் விசாரணைகள் பற்றிய எண்ணிக்கை புள்ளிவிபர அறிக்கைகளில் சேர்க்கப்படும் வகையில் சட்ட திருத்த யோசனையை முன்வைத்தார். ஆனால் இந்த யோசனை அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டது.

ஹரி க்றிஸ் 1915 ஒக்டோபர் 20 அன்று வெளியான பத்திரிகையில் தனது கருத்தை இப்படி தெரிவித்தார்

“சாதாரண அப்பாவிகள் பலர் மரண தண்டிக்கும், சிறைத்தண்டக்கும் ஆளாகி துன்பம் அனுபவித்து வருவதை என்னால் கண்ணை மூடிக்கொண்டு சகித்துக்கொண்டிருக்க முடியவில்லை. இந்த அப்பாவிகளுக்கு நேர்ந்துள்ள அநீதிக்கு நியாயம் கிடைப்பதற்காக என்னால் முடிந்த அனைத்தையும் நான் செய்வேன்” என்றார்.

ஜனவரி 31 அன்று அவர் சட்டசபையில் முன்வைத்த கோரிக்கை இது..

“இராணுவ நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட்ட வழக்குகள் அனைத்தும் மீள விசாரணைக்கு எடுக்கப்பட்டு, மீள் விசாரணைக்குட்படுத்தி, ஏலவே வழங்கப்பட்ட தீர்ப்புகள் திருத்தப்படவேண்டும். சில வழக்குகளுக்கு மீண்டும் சாட்சிகள் வரவழைக்கப்படவேண்டுமெனில் அதனைச் செய்ய அதிகாரம் வழக்கப்படவேண்டும், சிறைத்தண்டனை அனுபவித்து வருபவர்கள் தமக்கான வழக்கறிஞர்களை அமர்த்திக்கொள்ள கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும், இவை ஒழுங்குற மேற்கொள்வதற்கான ஒரு குழு நியமிக்கப்பட வேண்டும் என்றார்.

இந்த யோசனை 1916 ஜூன் 9 அன்று சட்டசபையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் அடிப்படையிலேயே கிடைக்கபெற்ற முறைப்பாடுகளை ஆளுநர் தனிப்பட்ட ரீதியில் ஆராய்ந்து தீர்ப்புகளில் திருத்தம் செய்து தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின் பேரில் பலரை விடுவித்தார்.

தொடரும்..
தொடரும் குளவித் தாக்குதலிலிருந்து தொழி-லாளர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் இ.சதீஸ்


தோட்டத் தொழிலாளர்கள் மழை, வெயில்பாராமல் தங்களுடைய வருமானத்திற்காக ஒவ்வொரு நாளும் தொழில் செய்யும் இடத்தில் பல இடர்களை சந்தித்து வருகின்றனர்.

மலையக தோட்டங்களில் தொடர்ச்சியாக குளவி கொட்டுக்கு இலக்காகும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது.

இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகி வரும் தொழிலாளர்கள் வைத்திய-சாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையின் பின்னர் வீடு திரும்புவது மட்டு மின்றி வருமான ரீதியா கவும் பாதிக்கப் படுகின்றனர். இவ்வாறு பாதிக்கப்படும் தொழிலாளர்களுக்கு தோட்ட

நிர்வாகத்தால் முறையான சலுகைகள் வழங்கப்படுவதில்லை.

மாறாக அன்றைய தினம் மாத்திரமே சம்பளத்தை வழங்கும் தோட்ட நிர்-வாகத் தினர், தொழிலாளர்கள் 2 அல்லது 3 நாட்கள் தொடர் ச்சியாக வைத்தியசா-லையில் தங்கி சிகிச்சை பெரும் பட்சத்தில் அவர்களுக்கான எந்த

சலுகைகளும் வழங்குவதில்லை என தொழிலாளர்கள் கவலை தெரிவிக்-கின்றனர்.

தேயிலை செடிகளுக்கிடையில் குளவி கள் கூடு கட்டியுள்ளதால், தொழிலா-ளர்கள் கொழுந்து பறிக்கும் பொழுது நிம்மதியற்ற நிலையில் அச்சத்தில் தொழில் செய்யவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

அத்தோடு பல்வேறு நோய்க்குள்ளான தொழி லாளர்களும் தோட்ட வேலை செய்கின்றனர். இவர்களை குளவிகள் துரத்தும் போது தப்பித்து ஓட முடியாத அள-விற்கு பல்வேறுபட்ட இடர்களை சந்திப்பதாகவும், இதனால் சிலர் உயிரிழக்க வேண்டிய சந்தர்ப்பங்கள் இடம்பெறுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் உள்ள தோட்டங்களில் தேயிலை மலைக ளில் குளவிகளை அப்புறப்படுத்துவதற்கு அல்லது அதில் இருந்து தொழி-லாளர்கள் காப்பாற்றப்படுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்ற போதிலும் அந்த நடவடி க்கைகள் வெற்றியளிப்பதாக இல்லை. தவிர இதற்குப் பொறுப்பான-வர்கள் கூடிய அக்கறை காட்டுவதில்லை எனவும் தொழிலாளர்கள் விசனம் தெரி-விக்கின்றனர்.

எனவே, தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தை மாத்திரம் நோக்காக கொண்டு

செயற்படும் அதிகாரிகள் தொழிலாளர்க ளின் பாதுக்காப்பில் கூடிய அக்-கறை செலு த்துவது கட்டாயமாகும்.

நாட்டில் பல்வேறுப்பட்ட தொழில்களை மேற்கொள்ளும் தொழிலாளர்க-ளுக்கு பாதுக்காப்புத் திட்டங்கள், காப்புறுதித் திட்டங்கள் இருக்கின்ற பொழுதிலும் மிகவும் ஆபத்தான தொழிலை மேற்கொள்ளும் தோட்டத் தொழிலாளர்களுக்கு எவ்-வித மான பாதுகாப்புத் திட்டங்களும் மேற்கொ ள்ளப்படுவதில்லை.

இதனால் தோட்டத் தொழிலாளர்கள் தங்களுடைய தொழிலை மேற்கொள்-வதில் பாரிய இன்னல்களுக்கு முகங்கொடுக்கின்றனர்.

இவ்வாறு குளவித்தாக்குதலிருந்து மக்களை பாதுகாக்க பேராதனை பல்க-லைக்கழக மாணவர்கள் சில வருடங்களு க்கு முன்னர் ஆய்வுகள் மேற்கொண்ட-தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆனால் அந்த ஆய்வுகளின் பெறுபேறுகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா என்பது பற்றிய தகவல் எதுவும் வெளிவரவில்லை.

சில மாதங்களுக்கு முன்னர். ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் வெலிங்டன் தோட்ட பகுதியில் ஏப்ரல் மாதம் வேலை செய்துகொண்டிருந்தபோது குளவிக் கொட்டுக்கு இலக்கான 55 வயதுடைய மேற்படி தோட்டத்தை சேர்ந்த பத்-மநாதன் என்பவர் உயிரிழந்தார்.

கடந்த 06.06.2016 அன்று அக்கரப்பத்தனை ஹோம்மூட் தோட்டத்தில் தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டியிருந்த 13 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி அக்கரபத்தனை பிரதேச வைத்தியசாலையில் அனு-மதிக்கபட்ட னர். பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் 04 ஆண்கள், 09 பெண்கள் எனவும் தெரிவிக்கப்பட்டது.

லிந்துலை மவுஸ்ஸாஎல்ல மேற்பிரிவு தோட்டத்தில் கடந்த 02.06.2016 அன்று தேயிலைக் கொழுந்து பறிக்கும் தொழிலில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் 07 பேர் குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். இலக்காகியவர்களில் 07 பேர் பெண் தொழிலாளர்களாவர்.

கடந்த மாதம் 15ஆம் திகதி காலை வட்ட கொடை மடக்கும்புர மேற்பிரிவு தோட்ட த்தில் தேயிலைக் கொழுந்து பறிப்பதில் ஈடுபட்டிருந்த ஈடுபட்டிருந்த தொழிலாளர்களை குளவி கொட்டியதினால் 05 பெண்களும் 5 ஆண்களுமாக 10 பேர் லிந்துலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மலையகத்தில் மட்டு-மின்றி வெளிமாவட்டங்களிலும் குளவிகளின் தாக்குதல் அதிகமாக காணப்படுகின்-றது.

கடந்த பொசன் காலத்தை முன்னிட்டு அதி கமான யாத்திரிகர்கள் அனுராத-புரம் மற்றும் மிஹிந்தலை புனித பிரதேசங்களுக்கு செல்வதால் அவர்களின் நன்மை கருதி அனுராதபுரம் வனஜீராசிகள் திணைக்கள அதிகாரி கள் அங்கு கற்கு-கைகள், கற்பாறைகளில் உள்ள குளவிக் கூடுகளை அகற்றும் போது மரத்தில் கூடு கட்டியிருந்த குளவிகள் திடீ ரென கலைந்து அவர்களை தாக்கின. இதன் போது இரண்டு அதிகாரிகள் வைத்தி யசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும் பினர்

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் டிசெம்பர் மாதம் வரையில் 564 பேர் குளவிக் கொட்டினால் பாதிக்கப்பட்டதாகவும் மூவர் உயிரிழந்ததாகவும் தகவல் ஒன்று தெரி விக் கின்றது.

இவ்வாண்டிலும் ஜனவரி முதலாம் திகதி முதல் இது நாள் வரையில் 350இற்கும் மேட் பட்டவர்கள் குளவிக்கொட்டுக்கு இலக்கா கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில், தோட்டத் தொழிலாளர் கள் தொழிலுக்குச் செல்வதற்கே அஞ்சு கின்றனர். மேலும் அச்சத்துடன் தொழில் செய்ய முடியாதெனவும் சுட்டிக் காட்டுகின் றனர்.

குளவிக் கூடுகளை அகற்றுவதற்கோ, அல்லது அழிப்பதற்கோ விரிவான நடவடி க்கைகள் எடுக்கப்பட வேண்டும். அப்போது தான் தொழிலாளர்கள் நிம்மதியாக தொழில் செய்ய முடியும்.

நன்றி - வீரகேசரி

மலையக இலக்கிய, ஊடகத்துறையில் ஒரு சகாப்தம் சீ.எஸ்.காந்தி - சுப்பையா இராஜசேகரன்


இந்தியாவிலிருந்து தோட்டத் தொழிலாளர்களாக இலங்கை வந்த இந்தியர்கள் படுகின்ற அவலங்களை ஆங்கிலத்தில் தம் கவிநயத்தினால் உலகோருக்கு எடுத்தி யம்பிய பாவலன் சி.வி.வேலுப்பிள்ளையின் பரம்பரையில் வந்துதித்தவர்தான் சி.எஸ்.காந்தி என அழைக்கப்பட்ட காந்திநேசன்.

1868ஆம் ஆண்டு புசல்லாவ ‘சோகம’ தோட்டத்திற்கு வந்து குமரன் குடியேறினார். அங்குதான் குமரனுக்கும் அழகம்மாளுக்கும் திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். மூத்தவர் தெய்வானை. இரண்டாவது சுப்பிரமணியம். மூன்றாவது சின்னையா. இதில் ஆண்பிள்ளைகளான சுப்பிரமணியம், சின்னையா இருவரும் ‘கண்டி திரித்துவக்’ கல்லூரியில் கல்வி கற்றுள்ளார்கள்.

‘ஈஸ்ட்டன் புரட்டியூஸ்ட்’ கம்பனிக்கு சொந்தமான ‘புசல்லாவ சோகம’ தோட்டத் தைப் போன்று நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்டேசன் வட்டகொடை நகரத்திற்கு அருகாமையில் இருக்கிறது ‘மடக்கும்பரை’ தோட்டம். அத்தோட்டத்திற்கு 1911ஆம் ஆண்டு குமரன் பெரியகங்காணி தனது குடும்பம் உட்பட, தமது ஆளுகைக்கு உட்பட்ட தொழிளார்களையும் அழைத்துக் கொண்டு வந்தார்.

குமரன் கங்காணியின் இரண்டாவது பையனான சுப்பிரமணியத்திற்கு, கண்டி பள்ளேகலை புதுத் தோட்டத்தின் பெரியகங்காணியாரின் மகளான செல்லாச்சி அம்மையாரை திருமணம் செய்து வைத்தார்கள். அவர்களுக்கு ‘நிஷ்கலானி’என அழைக்கப்பட்ட இராஜேந்திரன் என்ற மகன் இருந்தார். இவர் சிறிது காலம் வட்டகொடை தபால் நிலையத்தில் உப அதிபராக கடமையாற்றினார்.

அடுத்தது பெண், பெயர் ‘சரசு’ என்று அழைக்கப்பட்ட சாரதம்பாள். அடுத்தவர் கவிக் குயிலோன் ‘சி.எஸ். காந்தி’, அடுத்து ரவீந்திரன் இவர் மெக்கானிக்காக கடமையாற்றினார்.

கடைசிப் பிள்ளை இராஜேஸ்வரன். இவர் வீரகேசரி நிறுவனத்தில் பதிப்பு பகுதியில் கடமையாற்றினார், அவரும் காலமானார். குமரன் பெரியகங்காணியாக இருந்தபோது, அவரது இரண்டாவது மகனான சுப்பிரமணியம் கண்டி ‘டிரிண்டி’ கல்லூரியில் படித்தமையினாலும், ஆங்கிலத்தில் பேசுவதிலும், எழுதுவதிலும் திறமையாக இருந்தபடியினாலும் அவருக்கு மடக்கும்பரைத் தோட்டத்திலே ‘கண்டக்டர்’ பதவி தரப்பட்டது. சி.சுப்ரமணியம் கவிப் புனைவதில் கெட்டிக்காரர்.

இவரது ஆக்கங்கள் அக்காலத்தில் ‘சுதேசமித்திரன், விகடதூதன், ஆனந்தபோதனி’ போன்ற இந்திய சஞ்சிகைகளில் வெளிவந்துள்ளன. அதுமட்டுமல்ல, இலங்கையில் பிரசித்தமாக வெளிவந்து கொண்டிருந்த ‘வீரகேசரி’வார இதழிலும் வெளியாகியுள்ளது. இவர் தம் சொந்தப் பெயரிலும்,‘ஜெயவீரன்’ என்ற புனைபெயரிலும் ஆக்கங்களை எழுதியுள்ளார்.

மலையக மக்களிடையே தோன்றிய கவிவானர்களில் ஒருவரான ‘சி.சுப்பிரமணியத்தின் பெயர் பாடநூல்களில்கூட வந்துள்ளது.

இவரது கவியின் ஆளுமையில் ஊறித் தோய்ந்தபடியினால்தான் அம்மானைப் போலவே மருமகனும் கவிஞரானார். சி.சுப்பிரமணியம் முன்பு ஒருதடவை முன்னாள் பாரதப் பிரதமர் ‘இந்திராகாந்தி அம்மையாரைப்போற்றி யாத்த செய்யுளை பார்ப்போம்.

இந்திரா காந்தி

சீர்மேவு ஜெயசீலி !

யொளிர்கருணை

தியங்கமணி கமலவேணி

தார்மேவு சமதர்மம்

நடுவுநிலை புரந்தருளும்

சாந்தமயமான சொரூபி !

பார்மேவு புண்ணியை!

புகழேந்துத் திண்ணியை

பாரத்திபன் நேருவின் புத்திரி !

கார்மேவு பூத்தமலர் தாரகை

இந்திரா காந்தி

காசினியில் வாழி ! சதாவாழி !! வாழி !!!

என ஆரம்பமாகும் இந்திரா காந்தி அம்மையாரைப் பற்றிய நீண்ட கவிதையை அவர் படைத்திருந்தார். இந்த செய்யுள் நடையினை தற்கால கவிவாணர்கள் எழுத மலைத்து விடுவார்கள். என்று மட்டும் நன்கு புரிகின்றது.

வட்டகொடை மடக்கும்பரை மேற்பிரிவு தோட்டத்தி பெரிய கங்காணியாரான குமரன் கங்காணியின் இரண்டாவது புதல்வாரன சுப்பிரமணியத்திற்கும் செல்லாச்சியம்மைக்கும் மூன்றாவது பிள்ளையாக, 1933ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30ஆம் திகதி (30.06.1933) மகனாக பிறந்தார். அவரது ஆரம்பப் பாடசாலை மடக்கும்பரை தொங்க கணக்கு தோட்டப் பாடசாலை யாகும். அதன் பிறகு, தலவாக்கலை சுமண மகாவித்தியாலயம் தமிழ் பிரிவிலும், ஹட்டன் ஹைலன்ட்ஸ் கல்லூரியிலும் கல் வியை தொடர்ந்தார்.

குமரன் பெரிய கங்காணியாரின் ‘பெரிய வீட்டில்’ (கங்காணியார் வீட்டை இங்கு ள்ள மக்கள் இப்படித்தான் அழைப்பார்கள்) மூத்த மகள் தெய்வானையும், அவரது மூன்று பிள்ளைகளும், இரண்டாவது மகன் சுப்பிரமணியம் அவரது குடும்பம், மூன்றாவது மகனான சின்னையா அவரது குடும்பத்தார் அனைவரும் ஒரே இல்லத்திலே, ஒன்றுபட்டு அனைவரும் வியக்கும் வண்ணம் வாழ்ந்தவர்கள்.

சி.வி.வேலுப்பிள்ளையின் குடும்பத்தார்களுக்கு மரியாதையும் மதிப்பும் எப்போதுமே இருந்துவந்தது. அதனால், மாமனாரது பிள்ளைகளுக்கு அவர்தான் ஆங்கில ‘டியூசன் ஆசிரியர்’ அவரைக்கண்டதும் அவரது தாய்மாமன் பிள்ளைகள் பெட்டிப் பாம்பாய் ஆகிவிடுவார்கள். அதிலும், காந்தி அவர்களுக்கு, அவர் மீது பயத்துடனும், பெரிய மரியாதையும் அதிகமிருந்தது.

கவிதை எழுதக் கற்றுக் கொடுத்த கவி

ஒருதடவை சி.வி.அவர்கள் எப்போதும் தன்னை மதித்து தன்னுடனே இருக்கும் தனது அம்மான் மகன் சி.எஸ்.காந்தியிடம் “பெரியவனானதும் என்ன தொழில் செய்ய விருப்பம்…?” எனக் கேட்டார். அதற்கு அவர் “ஆசிரியர் தொழில்..!” என்றார் பெருமிதமாக.

“நீ ஏன் கவிதை எழுதக் கூடாது…?”

“எனக்குத்தான் கவிதை எழுதத் தெரியாதே….!” என தயங்கித் தயங்கிக் காந்தி கூறியதும் சி.வி. சிரித்து விட்டார். பின்பு, “உன் பாடப் புத்தகம் ஒன்றை எடுத்துவா…” எனப் பணித்தார். அவரிடம் பாலபோதனி கொடுக்கப்பட்டது. அதில் உள்ள பாடல் ஒன்றை சுட்டிக்காட்டி அதனை அவர் வாசித் தும் காட்டினார்.

“காலை எழுந்தவுடன் படிப்பு பின்பு

கனிவு கொடுக்கும் நல்ல பாட்டு

மாலை முழுவதும் விளையாட்டு —

என்று

வழக்கப் படுத்திக் கொள்ளுப் பாப்பா”

வாசித்து முடிந்ததும் “கவிதையை நன்றாகப் பார்..” என்றார். அதனை விரலை வைத்தே விளக்கினார். “இதில் முதல் அடி ‘காலை’ என ஆரம்பமாகின்றது. மூன்றாம் அடி ‘மாலை’ எனத் தொடங்குவதைப் பார். இதில், காலை, மாலை என்பன எதுகை மோனை.” என்றார்.

மேலும் நன்றாக கவனி…! முதல் அடி ‘காலை’ என ஆரம்பமாகின்றது. இரண்டாவது அடியோ ‘கனிவு’ எனத் தொடங்குகின்றது. இதில், முதலெழுத்து ‘க’ வாகும். இரண்டாவது அடியின் முதலெழுத்து ‘க..,கா..,கி’ ஒரே எழுத்துக்கள். இப்படித்தான் கவிதை அமைய வேண்டும்.” என்றார் கவி சி.வி.வேலுப்பிள்ளை. இதன் பிறகு தெளிவு பெற் றார் கவிஞர் சி.எஸ்.காந்தி.

‘கவிதை ஒன்றை எழுதிக் காட்டு’ என சி.வி. அவர்கள் பணித்ததும் அறைக்குள் சென்றார் காந்தி. சிறிது நேரத்தின் பின் வந்தவர் ஒரு தாளை அவரிடம் நீட்டினார். ஆச்சரியப்பட் டார். உரத்தக் குரலில் கவிதை நடையில் வாசித்தார்.

காந்தியின் இலக்கிய பணியினைப் கௌரவிக்கும் முகமாக, 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 13ஆம் திகதி கொட்டகலையில் நடைபெற்ற நுவரெலிய பிரதேச தமிழ் சாகித்திய விழாவில் அவருக்கு பொன்னாடை போர்த்தப்பட்டு, கேடயமும் பரிசாக அளிக்கப்பட்டது. அத்தோடு, இந்து சமய பண்பாட்டு அமைச்சினால் ‘தமிழ் மணி’எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

இவரது ஆங்கிலப் புலமையையும், மொழி பெயர்ப்பு ஆற்றலையும் அறிந்திருந்த மலைய இளைஞர் பேரவையின் பொதுச் செயலாளர் வி.எல். பெரைரா, தமது ஸ்தாபணத்தின் மாத வெளியீடான ‘தாக்கம்’ பத்தி ரிக்கையின் ஆசிரியராகவும் அத்தோடு, இவ்வமைப்பின் தொழிற்சங்கமாகிய ‘விவசாய தொழிலாளர் சங்கத்தின்’ பிரதான பிரசார பீரங்கியாகவும் கடமை புரிந்தார்.

ஹட்டனில் நடைபெற்ற ஒரு புத்தக வெளியீட்டு விழாவிற்கு தலைமை தாங்கியவர் “மலையகம் இலக்கியத்தில் ஒரு பாலைவ னம்.” என்று கூறியதற்கு கடுமையாக அதனை ஆட்சேபித்து உரையாற்றினார்.

பின்னர், தலைமைப் பீடத்துடன் ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் அதலிருந்து விலகினார். பின்பு, மீண்டும் 2002ஆம் ஆண்டு வீரகேசரியில் இணைந்தார். வெளிநாட்டு செய்தி மொழி பெயர்ப்பாளராகவும் கடமையாற்றினார். சில ஆண்டுகளின் பின் அதிலிருந்து விலகி மீண்டும் மடக்கும்பரை வந்துவிட்டார்.

காந்தி தமது மனைவி மக்களுடன் வந்தார். அவரது துணைவியார் சரளமாக தமிழ், சிங்களம், ஆங்கிலம் மொழிகளில் உரையாடுவார். இதன் காரணமாக பலர் அவர் தமிழர் என்றே நினைத்தார்கள். அனால், அவர் சிங்கள கிருஸ்தவ சமூகத் தைச் சேர்ந்தவர். ஆனால், அவரது பிள்ளைகளின் பெயர்கள்:

மகள்: ஏன் கவிதா, வீட்டில் செல்ல பெயர் ‘டோட்டி’

மகன்: அரவிந். என்னதான் மனைவி சிங்கள சமூகத்தினராகவும், கிருஸ்துவராக இருந்தாலும் தமது பிள்ளைகளின் பெயர்களை தமிழிலே வைத்தார்.

மடக்கும்பரையிலுள்ள தமது இல்லத்தில் ஆங்கில பிரத்தியோக வகுப்பினை நடாத்தினார். அவரிடம் ஆங்கிலம் பயின்ற மாணவர்களில் இப்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் எம்.திலகராஜூ ஒருவராகும். நாளாவட்டத்தில், அவர்களது பரம்பரை இல்லத்தை தோட்ட நிர்வாகம் கையகப்படுத்திவிட்டது. அதன்பின்பே காந்தி தமது குடும்பத்தாரோடு கொழும்பில் குடியேறிவிட்டார். சுடரொளி பத்திரிக்கையில் இணைந்தார்.

இப்பத்திரிக்கையின் வார இதழில் தமது எழுதி வைத்திருந்த கவிதைப் படைப்புகளை வெளியிட்டு தமது ஆசைகளை நிறைவேற்றிக் கொண்டார். இவர் தனது இறுதி காலம்வரையில் வத்தளையில் வாழ்ந்து வந்தார்.

“கவிஞன் ஒரு குடிகாரன்” என்ற கண்ணதாசனின் எழுத்தினைப்போல் சற்று மதுவிற்கு அடிமையானார். இதன் காரணமாகவே இறுதியில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில்; 26.06.2016 அன்று காலை 9மணியளவில் மகரகம புற்றுநோய் வைத்திய சாலையில் அவரது உயிர் பிரிந்தது. அவரது உடல் மகரகமயில், தெகிவளை வீதியி ல் அமைந்திருக்கும் கூட்டுறவு மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது.

மூத்த எழுத்தாளர் அந்தனி ஜீவா தலைமையில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், மடக்கம்பரை மண்ணின் மக்கள் சார்பாக மட்டுமின்றி, தனது அரம்பகால ஆங்கில ஆசானுக்கு நன்றி தெரிவிக்கும் முகமாகவும் எழுத்தாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.திலகராஜ் அஞ்சலி உரையாற்றினார்.

இறுதிக் கிரியைகள் 27.06.2016 திங்கட்கிழமை எந்தவித மத அனுஷ்ட்டான ங்களும் இல்லாது மிகவும் எளிமையாக நடைபெற்று, மகரகம மாநகரசபை பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. அச்சர சுத்தமாக தமிழும், சிங்களமும் ஆங்கிலமும் பேசுவதில் வள்ளவரும், அமைதியும், ஆழ்ந்த நோக்கும் கொண்ட மலையகத்தின் கவி இளவள் சி.எஸ்.காந்தியின் உடல் தீயில் கருகிப் போனாலும், அவரது புகழுடம்பு என்றும் அவரை நினைவு படுத்திக் கொண்டே இருக்கும்.

தனது மகளின் திருமணத்தில் மருமகன், மனைவி, மகனுடன்

தந்தையுடன் தாயின் மடியில் குழந்தையாக சி.எஸ்.காந்தி

பரம்பரை பெரிய கங்காணியார் வீடு இப்போதைய நிலை.


நன்றி - வீரகேசரி

போதைப்பொருள் பாவனையில் சீரழியும் மலையகம் - புவியரசன்


உலக நாடுகள் துறைசார் ரீதியாக பெரிய அளவில் அபிவிருத்தி அடைந்து வருகின்றன. எனினும் அபிவிருத்தி அடைந்து வரும் ஆசிய நாடுகள் தொடர்ந்தேர்ச்சியாக பல்வேறு சமூக விரோத பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்து அபிவிருத்தியில் பின்னடைவைக் கண்டு வருகின்றன. உள்நாட்டு யுத்தம், போதைப்பொருள் கடத்தல், பாலியல், துஷ்பிரயோகம், இயற்கை வளங்கள் சட்ட விரோதமாக சூறையாடப்படல் என்பன அவற்றுள் சிலவாகும்.

தெற்காசிய நாடுகளை பொறுத்தவரையில் போதைப்பொருள் கடத்தல், பாவனை என்பன நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட பாரிய போதைப்பொருள் கடத்தல், முயற்சிகள் அண்மையில் பாதுகாப்பு துறையினரின் சாதுரியத்தால் முறியடிக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வருடமும் ஜுன் மாதம் 26 ஆம் திகதியை சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினமாக உலக நாடுகள் அனுஷ்டித்து வருகின்றன. இக்காலப்பகுதியில் போதைப்பொருள் பாவனையின் தீமை குறித்து அனைத்து மட்டங்களிலும் பல்வேறு விழிப்புணர்வு செயற்றிடங்களை அரசாங்கம் முன்னெடுத்து வருகின்றது. எனினும், போதைப்பொருள் பாவனையாளர்களின் மனநிலையிலும் எண்ணிக்கையிலும் எவ்வாறான நேர்மாற்றத்தை ஏற்படுத்துகின்றதென்பது கேள்விக்குறியே.

நம் நாட்டில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் போதைப்பொருள் பாவனை அதிகரித்து காணப்படுவதாக அரசாங்க புள்ளிவிபரங்கள் சுட்டி நிற்கின்றன. அண்மையில் நுவரெலியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்க அனுமதி பெற்ற மதுபான விற்பனை நிலையங்களில் நுகரப்படும் போதைப்பொருளின் அளவிற்கு ஏற்ப யாழ்ப்பாண மாவட்டம் முதலிடத்திலும் நுவரெலியா மாவட்டம் இரண்டாமிடத்திலும் மூன்றாவது இடத்தில் மட்டக்களப்பு மாவட்டமும் உள்ளதாக குறிப்பிட்டதோடு போதைப்பொருள் வர்த்தகத்தோடு அரசியல்வாதிகளுக்கும் தொடர்பிருப்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டியிருந்தார்.

யுத்தத்திற்கு பின்னராக வடகிழக்குப் பிரதேசங்களில் இயல்பு வாழ்க்கை ஏற்பட்டாலும் சமூக, கலாசார சீரழிவுகளால் தம் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதை அப்பகுதியிலுள்ள அரசியல் பிரமுகர்கள் நிச்சயம் ஜீரணித்து கொள்ளமாட்டார்கள். போதைப்பொருள் பாவனையை இல்லாதொழிப்பது குறித்து வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உட்பட அங்குள்ள அனைத்து அரசியல் தலைவர்களும் பகிரங்கமாகவே பொது மேடைகளில் பேசி வருகின்றனர்.

மலையகம் கொடிய யுத்தத்திற்கு முகங்கொடுக்காத போதும் பொருளாதார யுத்தத்திற்கு முகங்கொடுத்துள்ள ஒரு சமூகமாகும். மலையக மக்களின் தொழில்முறையும் வாழ்க்கை முறையும் அவர்களை இயல்பாகவே போதைப்பொருள் பாவனைக்கு பழக்கப்படுத்தியுள்ளன. இந்நிலையில் மலையகத்தில் அரசாங்க அங்கீகாரம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படும் சாராயம், கள்ளு, பியர் என்பவை தாராளமாக விற்றுத் தீர்க்கப்படுகின்றன.

தவிர மதுபானங்களின் விலைகளை அரசாங்கம் அதிகரித்துள்ளதால் சில மாவட்டங்களில் காய்ச்சி வடிகட்டிய சாராயத்தை மலையக மக்கள் அதிகளவில் அருந்துவதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளன. மலையக மக்கள் மிக அதிகமாக வாழும் நுவரெலியா மாவட்டம் அகில இலங்கை ரீதியாக போதை தரும் மதுபாவனையில் இரண்டாமிடத்தில் உள்ளதென்பது எமது சமூகத்தின் எதிர்கால வளர்ச்சிப் பாதைக்கு போதை வடிவில் இடப்பட்டுள்ள கடிவளம் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மதுபான விற்பனை மூலம் அரசாங்கத்திற்கு கிடைக்கும் வருமான புள்ளிவிபரங்களை அடிப்படையாகக் கொண்டே தரவுகளை வெளியிட்டிருந்தார்.

இம் மூன்று மாவட்டங்களிலும் சட்டவிரோத மதுபான விற்பனை இடம்பெறுவதோடு, அவற்றை நுகருவோர் அதிகளவில் உள்ளனர் என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அவ்வாறு நோக்கும் போது தமிழ் பேசும் மக்கள் அதிகமாக வாழும் மாவட்டங்களில் மதுபான நுகர்வு மிக அதிகமாக உள்ளதென்பதை தெளிவாக அறியமுடியும்.

மலையகத்தில் காய்ச்சி வடிக்கப்படும் சட்டவிரோத சாராயமான கசிப்பு விற்பனை சப்ரகமுவ மாகாணத்திலும் ஊவா மாகாணத்திலும் அதிகமாக உள்ளது. சட்டவிரோத மதுபாவனையால் சிறுநீரக நோய், மாரடைப்பு, புற்றுநோய் போன்ற கொடிய நோய்களால் மலையகத்தில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகின்றன. எனினும் இவ்வாறு உயிரிழப்புகள் ஏற்பட்டாலும் அவற்றை நுகர்வோரின் எண்ணிக்கை குறைவதாக தெரியவில்லை.

தோட்டப்புறங்களை இலக்கு வைத்து சந்திக்கு சந்தி திறக்கப்பட்டுள்ள அரச அங்கீகாரம் பெற்ற மதுபான விற்பனை நிலையங்கள் மலையக மக்களை தொடர்ந்தும் மதுவுக்கு அடிமையாக்கி கட்டிப்போட்டுள்ளன.

மதுபாவனைக்கு வயது வித்தியாசமின்றி இளைய தலைமுறையினரும் அடிமையாகி வருவது கவலைக்குரிய விடயமாகவே பார்க்கப்படவேண்டும்.
பாடசாலைகளில் கல்வி கற்றுவரும் மாணவர்களும் மதுபாவனையிலும் புகைத்தலிலும் ஈடுபட்டு வருகின்றனர். பாடசாலை பருவத்தில் மதுவுக்கு அடிமையாகும் மாணவர்கள் குறித்த சில நாட்களில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகுவதுடன் சமூக சீரழிவு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் இவர்கள் காலப்போக்கில் சமூக விரோதிகளாக மாறி குற்றச் செயல்களில் ஈடுபடுவது மலையகத்தில் அதிகரித்துள்ளது.

நவநாகரிக மோகம் காரணமாக இளைஞர்கள் அதிக விலை கொடுத்து டின்களில் அடைக்கப்பட்ட பியரை பருகுகின்றனர். தோட்டங்களுக்கு செல்லும் பாதைகளில் பியர் டின்கள் அதிகளவில் கிடக்கின்றன. மலையக மக்கள் இயற்கை தெய்வ வணக்கங்களில் ஈடுபடும்போது மதுபானத்தையும் சேர்த்து கொள்வது வழக்கத்தில் உள்ளது.

இதை சாட்டாக வைத்துக் கொண்டு இளைய தலைமுறையினர் மது பாவனைக்குரிய அங்கீகாரத்தை தமது குடும்பங்களில் பெற்றுக் கொள்வதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

மலையக பெண்கள் அதிகமாக வெற்றிலையோடு சேர்த்து புகையிலை உண்ணும் பழக்கத்தை வழக்கமாக்கி கொண்டுள்ளனர்.

மலையகத்தில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களில் அதிகமானோர் வாய்ப்புற்று நோய்க்கே இலக்காகி வருகின்றனர். புற்றுநோயால் தாக்கப்பட்டு மரணமடையும் பெண்களின் எண்ணிக்கை தோட்டப்பகுதிகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக குறுகிய கால இடைவெளிக்குள் அதிகரித்து வருகின்றது.

கடந்த 20 வருட காலப்பகுதியினுள் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை இலக்கு வைத்து அதிகளவு மதுபான நிலையங்கள் திறக்கப்பட்டதன் பின்னணியில் யார் இருக்கின்றார்கள். இது தமிழ் பேசும் மக்களின் வளர்ச்சியை கட்டுபடுத்த நீண்டகால நோக்குடன் முன்னெடுக்கப்பட்டுள்ள சதி முயற்சியா என்பவை குறித்து தெளிவான ஆய்வுகள் மலையக தன்னார்வ அமைப்புகளால் மேற்கொள்ளப்படவேண்டியது அவசியமாகும்.
கல்வியை மூலதனமாக கொண்டுள்ள தமிழ் பேசும் சமூக மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருட்கள் குளிசை, இனிப்பு வடிவங்களில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள பிரதேச செயலாளர்களும் வைத்தியர்களும் தெரிவித்திருப்பதை ஊடகங்களில் காணக்கூடியதாக உள்ளது. இந்நிலைமை மலையகத்திற்கும் பொருந்தும் என்பதை நாம் உணரவேண்டும்.

தமது தோட்டங்களுக்கு அண்மையில் அமைந்துள்ள மதுபானசாலைகளை மூடிவிடுமாறு தோட்ட மக்கள் மேற்கொண்டுவரும் போராட்டங்கள் அதிகளவில் வெற்றி பெறவில்லை. இப்போராட்டங்கள் சில சந்தர்ப்பங்களில் இனமுறுகலை ஏற்படுத்தியிருந்தன.

ஆண், பெண், இளைய தலைமுறையினர் என அனைவரும் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையாகி வருவது எமது சமூகத்தின் குடும்ப கட்டமைப்பை சீரழித்து, சமூக வளர்ச்சியை வீழ்ச்சியடையச் செய்யும் என்பதில் சந்தேகமில்லை.

மதுவிற்கு புறம்பாக கஞ்சா, ஹெரோயின் உட்பட பல புதிய போதைப்பொருட்களும் தமிழர் பிரதேசங்களில் புழக்கத்தில் உள்ளன. இவற்றை அடியோடு இல்லாதொழிக்க மக்கள் பிரதிநிதிகள் முன்வரவேண்டும். மலையகப் பகுதிகளில் அதிகரித்துள்ள மதுபானசாலைகளை குறைக்கவும் புதிய மதுபானசாலைகளை திறக்காமலிருக்கவும் சட்டவிரோத மது உற்பத்தியை தடுக்கவும் கீழ் மட்டத்திலிருந்து வேலைத்திட்டங்கள் மலையகத்தில் முன்னெடுக்கப்படுவது அவசியமாகும். இதற்கான பொறுப்பு மலையக மக்கள் பிரதிநிதிகளுக்கு மட்டுமன்றி சமூகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவருக்கும் உண்டு. அப்போதுதான் மதுவற்ற சமூகத்தை எதிர்காலத்திலாவது கட்டியெழுப்ப முடியும்.

நன்றி - veerakesari

ஆளுநர் மன்னிப்பு கேட்டார்! (1915 கண்டி கலகம் –41) - என்.சரவணன்


எட்மன்ட் ஹேவாவிதாரணவின் மரணம் பிரிட்டிஷாரின் அநீதியால் விளைந்த கொலை என்பதை சென்ற வாரம் கண்டோம். கலகக்காரர்களை கடுமையாக அடக்குவது, குற்றவாளிகள் தப்பிவிடக்கூடாது என்கிற நோக்கத்திலேயே இராணுவ நீதிமன்றம் உருவாக்கப்பட்டது. ஆனால் அந்த இரண்டும் நிறைவேறவில்லை. அடக்கப்பட்டது கலகக்காரர்கள் அல்ல. நிரபராதிகள் குற்றவாளிகள் ஆக்கப்பட்டார்கள். குற்றவாளிகள் எப்போதோ தப்பிப் போய்விட்டார்கள். தண்டனையளிக்கப்பட்டவர்களில் கலகக்காரர்கள் இருக்கவில்லை. அதுவும் அவர்கள் பல சமூகங்களாலும் அந்தஸ்தும் அங்கீகாரமும் பெற்றவர்கள். மேன்முறையீடுகள் கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை. குற்றவாளிகளை இலகுவாக தப்பவிட்டார்கள். குறைந்தபட்சம் குற்றவாளிகள் விசாரணைக்கு கூட உட்படுத்தப்படவில்லை.

இதனை விசாரிப்பதற்கு ஒரு இராணுவ நீதிமன்றமே தேவைப்பட்டிருக்கவில்லை. சாதாரண நீதிமன்றமே போதியதாக இருந்தது. கலவரத்தில் ஈடுபட்டமை, கடைகளை உடைத்தமை, கொள்ளயடித்தமை போன்ற குற்றச்சாட்டுக்கள் சிவில் நீதிமன்றத்தில் விசாரிக்கும் வழக்குகளைவிட பெரியவை அல்ல. விசேடமாக “தேசத்துரோகக்” குற்றச்சாட்டு ஒன்று தான் புதிதாக இருந்தது. ஆனால் அப்படிப்பட்ட தேசத்துரோக குற்றங்களுக்கு கூட அதற்கு முன்னர் 4 அல்லது 5 ஆண்டுகள் தான் தண்டனையளிக்கப்பட்டுள்ளது. மிஞ்சினால் வதந்தி பரப்புதல், சட்டம் ஒழுங்கை சீர்குலைத்தல் போன்ற குற்றங்களுக்காக 10 வருட தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

காலங்கடந்த மன்னிப்பு
எட்மன்ட் மிகுந்த நோய்வாய்ப்பட்டு யாழ் சிறையில் இறந்த பின்னர், அவரது மரணச் சடங்கை நிறுத்தும் தைரியம் அதிகாரிகளுக்கு இருக்கவில்லை. ஆனால் அது பெரிய சடங்காக மாறாமல் இருக்க தாளவாத்தியங்களை இசைக்கத் தடை விதித்தனர். ஆனால் அதையும் மீறி ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்ட மரணச் சடங்காக ஆனது அது. நாட்டின் பிரபலஸ்தர்கள் பலர் அதில் கலந்துகொண்டார்கள். அரசாங்க அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், மக்களவை உறுப்பினர்கள், தொழில் அதிபர்கள் சமூகத் தலைவர்கள் என பலரும் குழுமினர். கலந்து கொண்டவர்கள் பற்றிய பெரிய பட்டியலை ஆர்மண்ட் டீ சூசா தனது நூலில் தந்துள்ளார் (கலந்து கொண்டவர்களில் சூசாவும் ஒருவர்). அவர்களில் சீ.நமசிவாயம் (அன்றைய அரச நிர்வாகச் சபை, ஆணைக்குழு என்பவற்றின் உறுப்பினர்), நகர சபை உறுப்பினர் டொக்டர் ரத்தினம், எச்.ஏ.பி.சந்திரசேகர், பொலிஸ் அதிகாரி ஏ.எஸ்.இளையதம்பி போன்ற தமிழர்களும் அடங்குவர். ஒரு “தேசத்துரோகி”யின் இறுதிச் சடங்கில் இத்தனை பெரிய கூட்டம் கலந்துகொண்டது எங்கனம் என்கிற கேள்வி எழுகிறது. தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு உள்ளான ஒருவருக்கு இறுதி மரியாதை செலுத்த அரசாங்கத்துக்கு விசுவாசமானவர்கள் கலந்துகொண்டதை நாம் கவனத்தில் எடுக்க வேண்டும். 

இறுதி நிகழ்வில் கலந்துகொள்ள முடியாமல் போன பல கனவான்கள் தமது இரங்கல் செய்தியை அனுப்பிவைத்தனர். அவர்களது பட்டியலும் அந்த நூலில் அடங்குகிறது. இந்த நிகழ்வுக்கு சில தினங்களுக்கு முன்னர் இதே தேசத்துரோக குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட நிலையில், அதே யாழ் சிறையில், அதே நோய்க்கு இலக்காகி மரணமான எஸ்.ஏ.விஜேசேகரவின் இறுதிச் சடங்கும் ஏறத்தாள இதுபோலத்தான் நடந்தது.

“டைம்ஸ் ஒப் சிலோன்” (Times of Ceylon) என்கிற சுதேசிகளுக்கு எதிரான, ஆங்கிலேய ஆதரவு பத்திரிகை “தேசத்துரோக குற்றமிழைத்தவருக்கு மாபெரும் மரியாதையளிப்பு” என்று தலைப்பிட்டது. அதனை பலர் பகிரங்கமாக கண்டித்தனர்.

எட்மன்ட் நவம்பர் மாதம் மரணமானதன பின்னர் ஆளநராக வந்த ஜோன் எண்டர்சன் இந்தக் கலவரத்தின்போது போலீசார் நடந்துகொண்டமுறை குறித்து விசாரணை நடத்த நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையை ஆளுநர் உடனடி கவனத்துக்கு உள்ளாக்கவில்லை. இந்த விசாரணைகுழு விசாரித்த பலரில் முக்கியமானவர்கள் இருவர் காலனித்துவ செயலகத்தைச் சேர்ந்த எச்.எச்..எம்.முவர், ஈ.பீ.சூட்டர் ஆகியோர். கலவரம் நிகழ்ந்தபோது சூட்டர் பொலிஸ் மஜிஸ்ட்ரேட் ஆக கடமையாற்றினார். ஆணையாளர்களாக சத்தியபிரமாணம் செய்துகொண்ட இந்த இருவரும் கலவரம் நிகழ்ந்த இடங்களுக்கு அன்றைய தினம் காரில் ஒன்றாகப் பயணம் செய்து விசாரித்தவர்கள்.

எச்.எச்..எம்.முவர் இப்படி தெரிவித்தார்.
“நாங்கள் இருவரும் அன்றைய தினம் கெய்சர் வீதியின் இறுதிவரை சென்றோம். நாங்கள் சென்றிருந்த வேளை கொள்ளையடிப்பு முடிந்திருந்தது. பலர் பொல்லுகளுடன்  அந்த வீதியில் முனைக்கு ஓடிக்கொண்டிருந்தார்கள். நாங்கள் பார்த்துகொண்டிருக்கும் போதே அவர்கள் வேகமாக மாயமானார்கள். களைந்து செல்லுங்கள் என்று கூறுவதற்கு தேவையிருக்கவில்லை. சுடுவதற்கும் எந்த நியாயமான தேவையும் இருக்கவில்லை. நாங்கள் கிறிஸ்டல் பெலசுக்குச் சென்ற போது அங்கு ஏற்கெனவே கொள்ளையடிக்கப்பட்ட நிலையில் தான் இருந்தது. அங்கு பெரிய இரும்புக் கம்பியுடன் ஒரு சிறுவனைப் பார்த்தேன். அவன் எஞ்சியதையும் உடைத்துக்கொண்டிருந்தான்."

கம்பர்ளேன்ட் (விசாரணையாளர்): தொன் கரோலிஸ் கடையிலிருந்து கிறிஸ்டல் பேலஸ் கடை எவ்வளவு தூரத்தில் இருந்தது?

முவர் : 30 இலிருந்து 40 யார் தூரமளவில் இருக்கும்.

ஈ.பீ.சூட்டர் தனது சாட்சியில் தாம் சென்றிருந்த நேரத்தைப் பற்றிக் குறிப்பிட்டார்.
“மதியம் 12க்கு முன்னர் கொள்ளையடிப்பு முடிந்ததிருந்தது. நாங்கள் சென்றிருந்தவேளை கிறிஸ்டல் பேலஸ் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததைப் பார்த்தோம். 12 அளவில் அங்காங்கு சிறு சிறு அளவில் கொள்ளைகள் நிகழ்ந்துகொண்டிருந்ததைக் கண்டோம். ஆனால் அது கலவரத்தைப் போல இருக்கவில்லை. சிறுவர்கள் சிலர் ஆங்காங்கு கிறிஸ்டல் பேலஸ் போன்ற கடைகளுக்கு சிறு சிறு சேதங்களை விளைவித்துக்கொண்டிருந்தார்கள்....”
கிறிஸ்டல் பேலஸ் மதியத்துக்கு முன்னரே தாக்கப்பட்டிருக்கிறது என்பது பல வகையிலும் நிரூபிக்கப்பட்டே இருந்தது. ஒரு மணிக்கு எட்மன்ட் அங்கு வந்து கிறிஸ்டல் பெலசை தாக்கத் தொடங்கினார் என்று கூறப்பட்டது பொய் என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று.

இந்த சாட்சியங்கள் அடங்கிய ஆணைக்குழு அறிக்கையை புதிய ஆளுநர் வாசித்தறிகிற பொது சூட்டர் இறந்து போயிருந்தார். எச்.எச்..எம்.முவர் ஐரோப்பாவுக்கு யுத்த களத்துக்குச் சென்றிருந்தார். 1916 ஆம் ஆண்டு நடுப்பகுதி அளவில் பொலிஸ் விசாரணை அறிக்கை அனுப்பபட்டிருந்தது. ஆனால் 1917 ஜூலை வரை ஆளுநர் சேர் ஜோன் அண்டர்சன் இந்த அறிக்கையை வாசித்து முடித்திருக்கவில்லை. அந்த அறிக்கையை வாசித்தறிந்தபோது எட்மன்ட் ஹேவவிதாரண நிரபராதி எனும் முடிவுக்கு வந்திருந்தார். ஒரு அப்பாவிக்கு இழைக்கப்பட்ட அநீதி மரணத்துக்கு தள்ளியிருப்பதை அறிந்ததும் தான் எடுக்க வேண்டிய முடிவை எடுத்திருந்தார். எட்மன்ட் ஹேவாவிதாரணவின் சகோதரர் டொக்டர் சீ.ஏ.ஹேவாவிதாரணவுக்கு இப்படி ஒரு கடிதத்தை ஆளுநர் தனது செயலாளருக்கு ஊடாக அனுப்பிவைத்தார்.

இராணி மாளிகை, கொழும்பு
18 ஜூலை 1917
“அன்புடையீர்!
இந்தக் கடிதத்தை உங்களிடம் சேர்ப்பிக்கும்படி மாண்புமிகு ஆளுநர் எனக்கு அறிவுறுத்தியுள்ளார். இறந்துபோன உங்கள் சகோதரர் குறித்து பொலிஸ் விசாரணை ஆணைக்குழு இதுவரை விசாரித்தரியாத தகவல்கள் ஏதும் உண்டா என்பதை அவர் ஆராய்து பார்த்தார். சிவில் உத்தியோகத்தர்கள் இருவர் 1915 ஒக்டோபர் மாதம் ஆணைக்குழுவின் முன்னாள் அளித்த வாக்குமூலங்களில்; ஜூன் 1ஆம் திகதி புறக்கோட்டைப் பகுதியில் நடந்த கலவரம் குறித்து குறிப்படப்பட்டுள்ளது. அன்றைய தினம் கிறிஸ்டல் பேலஸில் நடந்த கலவரம் குறித்து அளிக்கப்பட்ட சாட்சியங்களும் உங்கள் சகோதரர் அளித்த வாக்குமூலமும் பொருந்துகின்றன. இருவரின் வாக்குமூலமும் இதனை உறுதி செய்கின்றன. அந்த அதிகாரிகளில் ஒருவர் இறந்து போனார். இன்னொருவர் யுத்தகளத்தில் இருக்கிறார். அதனால் மீண்டும் அவர்களை விசாரிப்பது வாய்ப்பற்றது. இருந்தாலும் இந்த சாட்சிகள் இரண்டும் அன்று இராணுவ நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டிருந்தால் உங்கள் சகோதரர் அன்றே விடுவிக்கப்பட்டிருக்கக் கூடும் என்பதை உறுதியாக நம்புகிறேன்.
மேற்படி காரணங்களால் உங்களுக்கும், இறந்துபோன உங்கள் சகோதரர் ஹேவாவிதாரணவின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் மன்னிப்பையும் இத்தால் வெளிப்படுத்த விரும்புகிறேன்.”
இங்ஙனம்
உங்கள் சேவகர்
ஆர்.எச்.வைட்ஹோண்
ஆளுநரின் தனிப்பட்ட செயலாளர்

(டொக்டர் சீ.ஏ.ஹேவாவிதாரண, ஸ்ரீ நகர், கொள்ளுபிட்டி, கொழும்பு)
இதன் மூலம் எட்மன்ட் மீதான களங்கம் அவரது அநீதியான மரணத்துக்குப் பின்னர் துடைக்கப்பட்டது.


“மரக்கல” என்கிற அடையாளம் ஏன்?
1915 கலவரத்தை ஆங்கிலத்தில் ‘கம்பளை பெரஹர வழக்கு” (“Gampola Perehara Case”) என்றே அழைகின்றனர். குறிப்பாக அன்றைய அரசாங்க ஆவணங்கள் கூட இந்த தலைப்பிலேயே குறிக்கின்றன. தேசிய சுவடிகூடத்தில் இது குறித்த ஆவணங்கள் அனைத்தும் அப்படித் தான் தேட முடியும். தமிழில் “சிங்கள-முஸ்லிம் கலவரம்” என்று அழைக்கின்றனர். ஆனால் சிங்களத்தில் “சிங்கள-மரக்கல” கலவரம்” (சிங்கள மரக்கல கோலாஹலய) என்று தான் அழைகின்றனர். இன்றுவரை ஊடகங்களிலும் அப்படியான ஒரு பதத்தையே வெகுஜன மட்டத்தில் நிலையுருத்தியிருக்கின்றனர்.

இதற்கான முக்கிய காரணம் இந்த கலவரம் குறித்து ஆர்மண்ட் டீ சூசா எழுதிய “Hundred days in Ceylon under the martial law – 1915” என்கிற நூலை ஜீ.எஸ்.பீ.சேனநாயக்க 1988இலும், யஹாபால வனசிங்க 2009இலும் (යසපාල වනසිංහ) மொழிபெயர்த்திருக்கின்றனர். இவர்கள் தமது மொழிபெயர்ப்பில் அந்த நூலின் பெயரைக் கூட “சிங்கள-மரக்கல கோலாஹலய” என்று தலைப்பிட்டிருகிறார்கள். மூல நூலில் உள்ளபடி “இராணுவச் சட்டத்தின் கீழ் இலங்கை - 1915” என்று ஏன் அவர்களால் தலைப்பிட முடியாமல் போயிற்று? மூல நூலை எழுதியவர் இட்ட தலைப்பை மாற்றியது என்ன அறம் என்கிற கேள்விகள் எழுகின்றன. ஆங்கிலத்தில் வெளிவந்த மூல நூலை இன்று ஆங்கிலத்தில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு இல்லை. அதேவேளை அதன் சிங்கள மொழிபெயர்ப்பு பல பதிப்புகளை வெவ்வேறு பதிப்பாளர்களால் வெளியிடப்பட்டு இருக்கின்றன.

இந்த நூல் ஏற்படுத்திய பாதிப்பும் இந்த பதத்தை சமூகமயாக்கிதற்கு காரணமாக ஆகியிருக்கலாம். “சிங்கள-மரக்கல” என்று அடையாளப்படுத்தும்போது அதிலுள்ள “மரக்கல” என்கிற பதம் இன்று முஸ்லிம்களுக்கு எதிராகவும், முஸ்லிம்களை இழிவுபடுத்தும் பதமாகவுமே பேச்சு வழக்கில் இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. சிங்கள ஊடகங்களிலும், சிங்களத்தில் வெளிவந்துள்ள பல்வேறு ஆய்வுகளிலும் கூட இப்படி “மரக்கல” என்று விழிப்பதையே காணக்கூடியதாக உள்ளது.

தொடரும்

நன்றி - தினக்குரல்

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates