கூட்டு ஒப்பந்தம் குறித்து தமிழ் முற்போக்கு கூட்டணியின் போக்கை சாடி சமீபத்தில் மக்கள் தொழிலாளர் சங்கம் விடுத்திருந்த அறிக்கைக்கு த.மு.கூ சார்பில் சண் பிரபாகரன் பதிலளித்திருந்தார். அந்த பதிலுக்கு எதிர்வினையாற்றியிருக்கிறது மக்கள் தொழிலாளர் சங்கம். மேலும் "பொறுக்கிய ஓட்டுகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கோ தொழிற்சங்கங்களில்
அங்கத்தவர்கள் சேர்க்கும் காலத்தில் போராட்டங்கள் என்ற பெயரில்
எடுக்கப்படும் போலி நடவடிக்கைகளை எமது சங்கம் முற்றாக நிராகரித்து
அம்பலப்படுத்தும்." என்று எச்சரிக்கை விடுத்துள்ளது அச்சங்கம்.
முழுமையான அறிக்கை
கூட்டு ஒப்பந்தத்தை நேரடியாக மட்டுமல்ல மறைமுகமாக காட்டிக் கொடுப்பவர்களை நாம் சாடாமல் இருக்க முடியாது.
எம். புண்ணியசீலன் (மக்கள் தொழிலாளர் சங்க - தொழில் உறவு உத்தியோகத்தர்)
சண் பிரபாகருக்கு பதில்
மாக்சிஸ்ட்டுகளும் இடதுசாரிகளும் முன்னெடுக்கின்ற அல்லது ஆதரவு வழங்குகின்ற போராட்டங்கள் எப்போதும் மக்களுக்கு சார்பானதாகவே இருக்கும். அந்த போரட்டங்கள் தோல்வியடைந்தாலோ அவற்றுக்கு பின்னடைவு ஏற்பட்டாலோ அவற்றின் பெறுமதி குறைவதில்லை. மக்கள் தொழிலாளர் சங்கம் கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சம்பள உயர்வை பெற்றுக் கொள்வதற்காக எடுத்த நடவடிக்கைகள் பற்றி விபரமாக தெரிந்து கொள்வதற்கு எங்களது காரியாலயத்துடன் தொடர்பு கொள்ளவும். அதைவிட கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக ஊடாக தர்மத்தை மதிக்கும் ஊடகங்கள் எங்களின் நடவடிக்கைகள் பற்றி வெளிப்படுத்தி இருக்கும் செய்திகளை குறிப்பிட்ட ஊடக காரியாலயங்களில் அல்லது அரசாங்க சுவடிகள் திணைக்களத்தில் பார்த்துக் கொள்ளலாம். நாங்கள் கூட்டு ஒப்பந்தத்தில் சம்பந்தப்பட்ட தரப்பினராக இல்லை. அத்துடன் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டு ஒப்பந்தத்தின் அடிப்படையிலோ அதற்கு வெளியிலோ சம்பளத்தை பெற்றுக் கொடுப்போம் என எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை. மக்களை ஏமாற்றி மக்களை பலிகடாவாக்கி ஓட்டுகளை பெறுக்குவதற்கோ, பொறுக்கிய ஓட்டுகளைத் தக்கவைத்துக் கொள்வதற்கோ தொழிற்சங்கங்களில் அங்கத்தவர்கள் சேர்க்கும் காலத்தில் போராட்டங்கள் என்ற பெயரில் எடுக்கப்படும் போலி நடவடிக்கைகளை எமது சங்கம் முற்றாக நிராகரித்து அம்பலப்படுத்தும்.
தமிழ் முற்போக்கு கூட்டணி முன்னெடுக்க இருப்பதாக கூறப்படும் போராட்டத்தின் நியாயம் தொடர்பில் எங்கள் சங்கம் வெளியிட்ட கருத்துக்களுக்கு பதில் சொல்லுவதை விடுத்து இயலாமையின் காரணமாக எம்மை தனிப்பட்டத் தாக்குதல்களுக்கு அழைத்துச் செல்வதை நாம் எதிர்த்து நிராகரிக்கின்றோம். தமிழ் முற்போக்கு கூட்டணி அங்க வகிக்கும்அரசாங்கமும் சம்பந்தப்பட்ட அமைச்சர்களும் ஏன் பிரதமரும் ஜனாதிபதியும் கூட பெருந்தோட்டக் கம்பனிகளுடான அவர்களது அக்கறையை குறைத்துக் கொள்ள மாட்டார்கள். தொழிலாளர்கள் சம்பள உயர்வின்றி உழைப்பது அவர்களுக்கு பொருட்டல்ல. இந் நிலையில் மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்தில் உள்ளிருப்போரும் வெளியில் இருப்போரும் ஒருவர் மீது ஒருவர் சம்பளத்தை வென்றெடுப்பதற்கான போராட்ட வடிவம் தொடர்பாக எதேட்சையதிகாரமாக முடிவுகளை எடுத்து மக்கள் மீது திணித்து,மக்களை பிழையாக வழிநடத்தி மக்களின் உரிமை போராட்ட உணர்வுளை மழுங்கடிப்பதை ஏற்க முடியாது. சம்பள உயர்வை வென்றெடுப்பதற்கான நேர்மையான போராட்டங்களுக்கு நாம் எப்போதும் எதிரானவர்கள் அல்ல. அரசியல் தலைவர்கள் தங்களின் இயலாமைய மறைக்க மக்களின் மீது பிழையான கருத்துக்களையும் போராட்டங்கள் என சொல்பவற்றையும் திணிக்காமல் எல்லோருடைய கருத்துக்களையும் கேட்டு ஒரு வேலைத்திட்டத்தை வகுத்துக் கொள்வதே அவசியம் என்பதையே நாம் தொடர்ந்து வலியுறுத்தி இருக்கின்றோம். இரவில் உண்ணா விரதம் பின்னர் வேலை நிறுத்தம் பின்னர் அதற்கு எதிராக உண்ணா விரதம் தொடங்கி 2016ஆம் ஆண்டு நிவாரணக் கொடுப்பனவு அடிப்படையில்பெற முடியாத சம்பளத்தை பெற்றுத் தருவோம், கூட்டு ஒப்பந்தம் அமுலில் இருக்கும் போது இடைக்கால சம்பளத்தைப் பெற்றுத் தருவோம் எனடபது வரை மக்களை போராட்டத்திற்கு அழைக்கும் கபடத் தனத்தையே நாம் அம்பலப்படுத்தி நிராகரிக்கின்றோம்.
கூட்டு ஒப்பந்தத்தை ஒப்பந்தத்தை நேரடியாக மட்டுமல்ல மறைமுகமாக காட்டிக் கொடுப்பவர்களையும் நாம் சாடாமல் இருக்க முடியாது. பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான 1000 சம்பள உயர்வு கோரிக்கை மிகவும் நியாயமானதாக இருக்கின்ற நிலையில் அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக சம்பள கோரிக்கையை பயன்படுத்தி போராட்டம் என்ற பெயரில் மக்களின் போராட்ட உணர்வை மழுங்கடிக்கும் நடடிக்கைகளுக்கு மாக்சிஸ்ட்டுகள் எச்சந்தர்ப்பத்திலும் இடம்கொடுக்கமாட்டார்கள். தொழிலாளர்களின் உரிமை போராட்டங்களில் வேலை நிறுத்தப் போராட்டம் எத்தனை முதன்மையானது அதனை எப்போது பயன்டுத்த வேண்டும் என்பது தொடர்பாக மாக்சிஸ்ட்டுகளாகிய நாங்கள் பாராளுமன்ற ஓட்டுப் பொறுக்கிகளுக்கு பாடம் எடுக்கவேண்டிய தேவையில்லை.
ஏற்கெனவே தமிழ் முற்போக்கு கூட்டணி விடுத்திருந்த பதில்
ஒரு மூத்த தொழிற்சங்கவாதியும் இடதுசாரி அரசியல் செயற்பட்டாளருமான தோழர் தம்பையாவுக்கு இந்த அரசியல் கூட்டு ஒப்பந்தம் பற்றிய சட்டத்தெளிவு எம்மை விட அதிகம் என்பது மறுப்பதற்கில்லை மேலும் இந்த கூட்டு ஒப்பந்தத்தை காட்டிகொடுப்பதும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு துணைபோவது யாரென்பதும் அவர் அறியாத உண்மையுமில்லை தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதி செயலாளர் என சண் . பிரபாகரன் கூறுகிறார்
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்
ரூபா 100 நாளாந்த சம்பள அதிகரிப்பு என்பது தற்காலிக நடவடிக்கையே இருந்தும் அதை கொடுப்பதற்கு கம்பனிகள் மறுக்கின்றன அத்தோடு ரூபா 1000 என்ற சம்பளத்தை பெறுவதற்கு பேரம் பேசும் தொழிட்சங்கங்களுக்கு முடியவில்லை ஒப்பந்தத்தை மீறி அரசும் ஏதும் செய்யாத / செய்யமுடியாத நிலையில் உள்ளது அதை பற்றி நாம் தீவரமாக ஆராய்ந்துவருகின்றோம் மாற்றுத்திட்டங்களும் பரிசீலிக்கப்படுகின்றன. தொடர்ந்து இவர்களது இயலாமையை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்க நாம் தயாரில்லை அரசிற்கும் பெருந்தோட்ட கம்பனிகளுக்கும் அழுத்தம்கொடுக்கவே இந்த வேலைநிறுத்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
ஒப்பந்தம் முடிவடைந்து ஒரு வருடகாலத்தில் இவருடைய தொழிற்சங்கம் இந்த பிரச்சினையை தீர்ப்பதற்க்கு முன்னெடுத்த செயற்பாடுகள் என்ன என்பதை மக்களுக்கு விளக்கவேண்டும் மேலும் தோட்ட கம்பனிகள் எந்த வேதன அதிகரிப்பையும் தரமறுக்கும் போது அதற்கான மாற்றுதிட்டத்தினை இவர்கள் முன்வைக்கவேண்டும் .
தொழிலாளர்களின் உரிமைகளையும் சலுகைகளையும் போராட்டங்களின் மூலமே வெற்றிக்கொள்ளவேண்டும் என்பதே மார்க்சிய சிந்தனையாகும் அது அவ்வாறிருக்க ஒரு இடதுசாரி செயட்பாட்டளர் போராட்டத்தை கேலிக்கூத்து என விமர்சிப்பது எத்தனை பொருத்தமென்பது எமக்கு புரியவில்லை .
சண் . பிரபாகரன்
பிரதி செயலாளர் - தமிழ் முற்போக்கு கூட்டணி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...