பெருந்தோட்ட பாடசாலை மாணவர்களின் நிலை கவலைக்குரியதே
இலங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ. நடராஜனுடன் ஒரு திறந்த உரையாடல்
இந்தியாவிற்கும் மலையக மக்களுக்குமிடையில் தொப்புள்கொடி உறவு இருந்து வருவதன் காரணமாகவே 1923ஆம் ஆண்டில் கண்டி யில் இந்திய உதவி உயர்ஸ்தானிகராலயம் நிறுவப் பட்டது. கண்டியில் ஏன் ஒரு தூதுவராலயம்? அது என்ன செய்கிறது? இந்திய விஸா வழங்குவதைத் தவிர அதற்கும் இந்திய வம்சாவளித் தமிழ்ச் சமூகத்துக்கும் இடையே நிலவும் உறவு, வெறும் கத வடைப்பு என்பதைத் தவிர, வேறென்ன?
இவ்வாறான கேள்விகள் நீண்டகாலமாகவே எழுப் பப்பட்டு வந்துள்ளன. அவற்றில் உண்மை இருக்கவும் செய்தது. விஸா வழங்குவதைத் தவிர வேறெதுவும் செய்ததாக எவரும் எதையும் அறிந்திருக்கவில்லை. வந்த உதவித் தூதுவர்களும் தோட்டத் துரைமார் மாதிரியே சமூக தொடர்பின்றி இருந்துவிட்டுச் சென்றார்கள். இந்த மனப்பான்மையில் சமீபகாலமாக உதவித் தூதராக வந்த சிலரே இப் பாறாங்கல்லில் வெடிப்பை ஏற்படுத்தி துளைபோட்டு, இந்திய உதவித் தூதரகத்துக்கும் இந்திய வம்சாவளியினருக்கும் இடையே கீழ்மட்ட ரீதியில் உறவுகளை ஏற்படுத்த ஆரம்பித்தனர். அவர்களில் இவர் முக்கியமானவர். ஏனெனில் அதன் தற்போதைய இந்திய உதவி உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜனின் நேரடித் தலையீட்டின் காரணமாக இலங்கை மக்களுக்கு குறிப்பாக மலையக மக்களுக்கு காத்திரமான பல பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட முடிந்திருக்கிறது.
இந்தியத் தூதரகத்திற்கும் இலங்கை மக்களுக்கு மிடையே நெருங்கிய நட்பை பேணி வருவதன் மூலம் சிறந்த சேவையை வழங்க முடியும் என்பதை மிக உறுதியாக நம்பும் ஏ.நடராஜன் அதற்கான பல செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகிறார்.
மலையகப் பகுதியில் நடைபெறும் கலை கலாசார நிகழ்ச்சிகள், பாடசாலைகளில் கலை நிகழ்வுகளில் முக்கிய பிரமுகராக இவர் கலந்து சிறப்பிப்பதை ஊட கங்களில் பார்க்க முடிகிறது. இந்திய அரசாங் கத்தின் முக்கிய பிரதிநிதி ஒருவர் பின்தங்கிய தோட்டப்பகுதிகளுக்கு சென்று தோட்டத் தொழிலாளர் களை நேரில் சந்தித்து வாழ்வாதாரப் பிரச்சினை களையும் எதிர்கால சந்ததியான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை நேரில் ஆராய்ந்து தமது அலுவலகத்தினூடாக உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.
இவரை அண்மையில் சந்தித்து பல விடயங்கள் குறித்து பேசினோம். கண்டி ராமனும் உடனிருந்தார்.
“உங்களை நிஜமான மகிழ்ச்சியுடனேயே வரவேற் கிறேன். உதவி இந்தியத் தூதுவரை சந்திக்கப் போகிறேன் என்ற நிலையில் உங்களிடம் ஒரு எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்யும். அதில் நான் மண்ணைப்போட முடியாது. நான் உங்களிடம் நடிக்க முடியாது. நடித்தால் அது நடிப்பு என்பது தெரியவ ராமலா போகும்?” என்று வித்தியாசமான முறையில் வரவேற்று அமரச் செய்து உபசரித்தபோது ஆச்சரி யமும் திகைப்புமாக இருந்தது.
இலங்கைக்கு வந்து 2011 டிசம்பர் 26இல் பொறுப் பேற்று 2012 இலிருந்தே பணிகளை ஆரம்பித்தேன். பல நாடுகளில் பணிபுரிந்திருக்கிறேன். ஆனால் இலங்கையில் அதுவும் மலையகத்தில் பணிபுரி வதற்கு கொடுத்து வைத்திருக்க வேண்டும். நான் வந்த முதல் நாளிலிருந்தே எனது ஒரே குறிக்கோள் ஒரு நல்ல நட்புறவை ஏற்படுத்த வேண்டும் என்பதே.
பணிப்பொறுப்பு கிடைத்ததுமே மலையகத்தில் உதவி உயர்ஸ்தானிகராக வந்தமை இந்தியாவுக்கும் மலையகத்திற்கும் இடையில் ஒரு நல்ல நட்புறவை ஏற்படுத்த வேண்டும். சிங்கள, தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவர் என யாராக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் உறவை வலுப்படுத்துவது எனது கடமை யும் கூட என நினைத்தேன்.
இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழும் தமிழ் மக்களை தெரிந்து வைத்திருக்கும் அளவிற்கு மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளில் வாழும் இந்திய வம்சாவளி மக்களைப் பற்றி இந்தியாவி லுள்ள 90 வீதமானோருக்கு தெரியாது. இங்கு வந்து ஒரு குறுகிய காலப்பகுதிக்குள் நான் செய்ததெல்லாம் ஒரு துளியளவுதான். இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. எனக்குப் பின்னர் இந்தப் பதவியை பொறுப்பேற்கும் அதிகாரி இப்பணியை தொடர்வார் என்ற நம்பிக்கையிருக்கிறது” என்று எம்முடன் பேச ஆரம்பித்தார் உதவி உயர்ஸ்தானிகர் நடராஜன்.
“கண்டி உயர்ஸ்தானிகரகத்தின் சேவை எல்லைக்குள் மத்திய, ஊவா, சப்ரகமுவ, வயம்ப ஆகிய மாகாணங் கள் வருகின்றன. உதவித் தூதுவராக பொறுப் பேற்றதும் முதல் வேலையாக மாகாண ஆளுநர்கள், முதலமைச்சர்கள், குறிப்பிட்ட மாகாணங்களில் இருக்கும் அரச உயர் அதிகாரிகள், மேயர்கள் மற்றும் பிரதேச செயலாளர்கள் என அனைத்து தரப்பினரையும் சந்தித்து நல்ல உறவுகளை வளர்த்துக் கொண்டிருக்கிறேன். இவ்விடயத்தில் அரசியல் வாதிகளின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். அவர்களுடனும் வலுவான உறவுகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியது எமது கடமையாகும். மல்வத்த, அஸ்கிரிய, மெனிக்கின்ன, கெட்டம்பே, பெல்மதுளை, தம்புள்ளை ஆகிய மகாநாயக்க தேரர்களுடன் நல்லதொரு நட்புறவை வளர்த்துக்கொண்டிருக்கிறேன்.
அதுபோல் அவர்களும் என்னை நன்கு அறிந்து வைத்திருப்பதால் எங்கு சென்றாலும் உடனடியாக சந்திக்கக் கூடியதாக இருப்பதுடன் வேலைகளையும் இலகுவாக செய்ய முடிகிறது. இதனை நான் பெருமையாகவும் நினைக்கின்றேன்.
பெருந்தோட்டப்பகுதி மாணவர்களின் கல்விக்கு முக்கியத்துவமளிக்கும் நோக்குடன் மேற்குறிப்பிட்ட நான்கு மாகாணங்களிலுமுள்ள பெருந்தோட்ட பாடசாலைகளுக்கு என்னால் செல்ல முடிந்திருக்கிறது. பெருந்தோட்டப்பகுதிகளில் பின்தங்கிய பகுதிகள் எங்கெங்கு இருக்கின்றதோ அங்கெல்லாம் சென்றி ருக்கிறேன். சில பாடசாலைகளில் விஞ்ஞான ஆய்வுகூட, கணனி, கட்டட வசதி மற்றும் போக்குவரத்து வசதிகள் இல்லாமல் பின்தங்கிய நிலையில் இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.
இந்த இரண்டரை ஆண்டு காலப் பகுதியில் பெருந்தோட்டங்களிலுள்ள 22 பாடசாலைகளுக்கு உதைபந்தாட் டத்திற்கு தேவையான காலணிகள், காலுறைகள், வலை, டீசேர்ட்ஸ் முதல் அனைத்து உபகரணங்களையும் இரு அணிகளுக்கும் வழங்கியுள்ளோம். அதுபோல் 11 பாடசாலைகளுக்கு கிரிக் கெட் விளையாட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வழங்கினோம்.
இன்னும் 11 பாடசாலைகளுக்கு கர்நாடக இசைக்கான கருவி களையும் வழங்கியிருக்கிறோம். கட்டடம், அத்தியாவசிய தேவைகள் நிறைய இருக்கு. போக்குவரத்து, போட்டோ கொப்பி இயந்திரம், விஞ்ஞான ஆய்வு கூட உதவி என நிறைய தேவைகள் இருக்கின்றன. இந்திய அரசு பெரிதும் உதவி வருகிறது. அனைத்து பாடசாலைகளிலும் ஒரே நேரத்தில் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியாது. எனினும் எம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறோம்.” என்று நடராஜன் மேலும் தொடர்ந்தார்.
நாம் செய்ததெல்லாம் ஒரு சிறு துளியளவே. இன்னும் நிறைய செய்ய வேண்டுமென்ற ஆசை யிருக்கு. கடந்த 2013 மார்ச் மாதத்தில் இரு நாள் கல்விக் கண்காட்சியை முதற் தடவையாக நடத்தி னோம். இந்திய பல்கலைக்கழகங்களிலிருந்து வந்த உயரதிகாரிகள் கலந்துகொண்ட இந்த கண்காட்சி மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது. சுமார் 10 ஆயிரத்திற்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். பெற்றோர், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் தேவையான தகவல்களைப் பெற்றுக் கொண்டார்கள். இவ்வாண்டு அதனை நடத்த முடியாமல் போனாலும் எதிர்வரும் காலங்களில் ஆண்டுதோறும் இவ்வாறான கண்காட்சிகளை மலையகத்தில் நடத்த உத்தேசித்திருக்கிறோம்.
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் பாடசாலை மாணவர்களுக்காக இந்திய உயர்ஸ்தானிகராலயம் விலீylon ரிstatலீ தீorkலீrs ரினீuணீational ஹிrust எனும் புலமைப்பரிசில் திட்டத்தை முன்னெடுத்து வருகிறது. பல் கலைக்கழகம் செல்ல தகுதி யுள்ள மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப பயிற்சிகளை மேற்கொள்ளவுள்ள மாணவர்கள் இந்திய அரசினால் முன்னெடுக் கப்படும் இந்த புலமைப் பரிசில் திட்டத்தில் இணைந்து கொள் ளலாம். வருட மொன்றிற்கு 350 மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் இந்த புலமைப்பரிசில் திட்டத் தின் கீழ் சுமார் இரண்டு வருடங்கள் பயிற்சி நெறியை தொடரும் மாணவர்களுக்கு 20,000 ரூபாவும், மூன்று வருடங்கள் கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கு வருடத்திற்கு 30,000 ரூபாவும் வழங்கப்படுகிறது. இந்த உதவியின் மூலம் தாம் பெரிதும் பயனடை வதாக மாணவர்கள் தெரிவிக்கின்றனர். எதிர்வரும் காலங்களிலும் இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக் கப்படும்.
சில தோட்டப் பாடசாலைகளுக்கு நானே நேரில் சென்று பிள்ளைகளை சந்தித்து நேர்முகப்பரீட்சைகள் நடத்தினேன். பெருந்தோட்டப் பிள்ளைகள் எந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை நான் நேரில் பார்த்தபோது மிகவும் கவலையாக இருந்தது. பல மாணவர்களின் பெற்றோர் குறிப்பாக தந்தைமார் வேலைக்குச் செல்வதில்லையெனவும் வருத்தங்கள், நோய் என நொண்டிச் சாட்டுக்களைக் கூறி வீட்டிலேயே முடங்கி விடுகின்றனர் என்பதை அறிந்து கவலையடைந்தேன்.
பெரும்பாலான வீடுகளில் பெண்கள் மட்டுமே வேலைக்குச் செல்கின்றனர். நிறைய குழந்தைகளுக்கு அப்பா அல்லது அம்மா இல்லை. சில பிள்ளைகளின் பெற்றோர் வெளிநாடுகளுக்கு வேலைவாயப்பை பெற்றுச் சென்றுள்ள நிலையில் அவர்கள் உரிய முறையில் கவனிக்கப்படாத நிலை காணப்படுகிறது.
எதிர்வரும் காலங்களில் மாகாண மட்டத்தில் இவ்வாறான நேர்முகப் பரீட்சைகளை நடத்த இருக்கிறோம். ஆறு நாட்கள் ஹட்டனிலும் 2 நாட்கள் நுவரெலியாவிலும் 2 நாட்கள் கண்டியிலும் இவ்வாறான நேர்முகப்பரீட்சைகளை நடத்தினோம். பதுளைக்கு கொழும்பிலிருந்து அதிகாரிகள் சென்றிருந்தார்கள். உண்மையில் எனக்கு சந்தோஷமான நாட்கள் அவை.
நான் சந்தித்த ஒவ்வொரு குழந்தைகளிடமும் ஏதாவதொரு திறமையை நான் பார்க்கின்றேன். அங்கு வந்திருந்த ஒரு மாணவன் மிகவும் அமைதியாக இருந்தான். வாயைத்திறந்து பேசவே தயக்கம் காட்டிய அவனைப்பார்த்து பேசுவதற்கு என்ன பயமா? பேசுங்களேன் என்றேன்.
பெற்றோரிடம் பேசுவேன் புதிதாக யாரையும் பார்த்தால் எனக்கு பேச வராது சேர் என்ற அவனிடம், சுமார் 20 நிமிடம் வரையில் உரையாடினேன். கடைசியாகப் பார்த்தால் அவன்தான் வகுப்பில் முதலாம் பிள்ளை! கவிதை, கட்டுரை, சிறுகதைகள் என எழுதியிருக்கிறான். மாணவர் தலைவனான அவனுக்கு நன்றாக வீணையும் வாசிக்கத் தெரிந்தி ருந்தது. பரதநாட்டியம் ஆடிக்காட்டினான். நன்றாக பாடி தனது திறமையை வெளிப்படுத்தினான். திருக்குறள் 1330 தெரியும். ஆனால் அந்த சிறுவனைப் பார்த்தால் மிகவும் சாதாரணமாக இருக்கிறான். ஆரம்பத்தில் இவன் எங்கே படிக்கப்போகிறான் என்று நினைத்தேன். ஆனால் அவனிடம்தான் எல்லாத் திறமைகளும் இருக்கின்றன. அவ்வாறான பிள்ளைகள் நிறைய பேரைச் சந்திக்க முடிந்தது. நிறைய பேரிடம் திருக்குறளை எப்படிக் கேட்டாலும் சொல்ல முடிகிறது. இவ்வளவு திறமை இம் மாணவர் களிடம் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை. இந்த புலமைப்பரிசில் அவர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். உண்மையில் அவர்களுக்கு இன்னும் நிறைய செய்ய வேண்டும்.
கிட்டத்தட்ட 600இற்கு மேற்பட்ட மாணவர்களை சந்தித்ததில் 590 பேர் மிகவும் திறமைசாலிகள் என்பதைக் கண்டறிந்தேன். 10 பேருக்கு மட்டுமே படிப்பு நன்றாக வரவில்லை. அதற்கு காரணங்கள் இருக்கு. அவ்வாறானதொரு சூழ்நிலையில் தான் வாழ்கிறார்கள். அதனால் அவர்களால் படிக்க முடியவில்லை.
பெருந்தோட்டப்பகுதியைச் சேர்ந்த மாணவிகள் மிகவும் பொறுப்புடன் இருக்கிறார்கள். இரவு 8 மணியிலிருந்து 12 வரை படிக்கிறார்கள். அதிகாலை 4 மணிக்கு எழுந்து 6 மணிவரை படிக்கிறார்கள். பின்னர் வீட்டு வேலைகள் அனைத்தையும் செய் கிறார்கள். தம்பி, தங்கைகளை பார்த்துக்கொள்கிறார்கள். அவர்களே இவற்றைச் சொல்லும்போது எனக்கே கண்ணீர் வருகிறமாதிரி இருந்தது. நான் எதையும் கேட்பதற்கு முன் அவர்களே சொல்கிறார்கள்.
அப்பா அம்மா தோட்டத்தில் வேலைக்கு போகி றார்கள். 4 மணிக்கு எழும்புகிறார்கள். எனக்கு வேறு எதுவும் தேவையில்லை. நன்றாக படித்து எனக்கு ஒரு வேலை கிடைத்து அப்பா அம்மாவை வீட்டில் இருக்கவைத்து அவர்களுக்கு எனது சம்பாத்தியத்தில் சாப்பாடு போட வேண்டும் என்ற அவர்களின் ஏக்கத்தை புரிந்து கொள்ள முடிகிறது.
ஆண்டுதோறும் இந்திய அரசாங்கம் புலமைப் பரிசில் வழங்கி வருகிறது. இது தொடர்பான தக வல்கள் கடந்த காலங்களில் பெருந்தோட்ட மக்க ளைச் சென்றடைவதில்லை என கூறப்பட்டது. தற்போது நாம் பெருந்தோட்ட பாடசாலை அதிபர் களுடன் நேரடியாக தொடர்புகொள்வதால் மாணவர்கள் இலகுவாக விண்ணப்பிக்கக்கூடியதாக இருக்கிறது. தகுதியுள்ள மாணவர்களுக்கு உயர்தரத்தில் பொறியியல்துறையில் கற்பதற்காக 100 வீத இலவசக் கல்வி.
இலங்கையிலுள்ள தகுதியுள்ள மாணவர்கள் கல்வி அமைச்சின் ஊடாக விண்ணப்பித்தால் எமது தூதரகம் உரிய நடவடிக்கைகளை எடுக்கும். இதில் மருத்துவ கற்கைநெறியைத் தவிர கலை, விவசாய விஞ்ஞானம், கம்பியூட்டர் விஞ்ஞானம் பரதநாட்டியம், கர்நாடக இசை, வடநாட்டு இசை அனைத்து பாடங்களுக்கும் இலசமாகவே மாணவர்களை அனுப்புகிறோம். நிறைய விண்ணப்பங்கள் வருகின்றன. மலைய கத்திலிருந்து வருடாவருடம் குறைந்தது மூன்று பேராவது செல்ல வேண்டும் என்பதில் நாம் உறுதி யாக இருக்கிறோம்.
கலைத்துறையைப் பொறுத்தவரையில் எமது அலுவலகத்தில் பாரதியார் கலாகேந்திரா மையம் இயங்கி வருகின்றது. நான் வருவதற்கு முன்னர் ஹிந்தி மொழி, கத்தக், பரதநாட்டியம் ஆகிய வகுப்புக்கள் மட்டுமே நடைபெற்றன. தற்போது கர் நாடக சங்கீதம், தபேலா, கத்தக், மிருதங்கம், வீணை வகுப்புகளும் நடத்தப்படுகின்றன. 270 மாணவர்கள் கற்கின்றனர்.
யிஹிரிவி (யிnனீian ஹிலீணீhniணீal anனீ ரிணீonoசீiணீ விorporation) இந்திய வெளியுறவுத்துறை அமைச்சி னால் வழங்கப்படும் தலைமைத் துவப் பயிற்சிகள் வழங்கப் படுகின்றன. இலங்கையிலுள்ள அரச துறையில் பணியாற்றும் ஊழியர்களுக்கென நடத்தப் படுகிறது.
அரச சேவையிலுள்ள எவரும் கலந்துகொள்ளலாம். முற்றிலும் இலவசமாகவே வழங்கப்படுகிறது. குறுகிய கால பயிற்சிகள் 45 நாட்கள் தொடக்கம் ஒரு வருடம் வரையில் கற்கலாம். குடிசைத் தொழில் auனீiting, aணீணீounting, ணீoசீputing, wலீbsitலீ என எல்லா பாடங் களையும் கற்றுக்கொள்ள முடியும். இந்த பயிற்சிக்க ளுக்காக செல்லும் மாணவர்களுக்கென இலவச மாகவே பயணச்சீட்டு, தங்குமிட வசதிகள், புத்தக அலவன்ஸ், கைச்செலவுகளுக்கும் நிதியுதவியை இந்திய அரசாங்கம் வழங்குகிறது.
ஒவ்வொரு வருடமும் 30 அரச துறைசார்ந்த அதிகாரிகள் செல்கின்றனர். அங்கு சென்று வந்த வர்கள் இதனை ஒரு பெருமையாக கருதுகின்றனர். www.ahணீikanனீy.org என்ற இணையத்தளத்தை பார்த்து விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவின் பிரபல ஓவியர் சங்கரின் நினைவாக கடந்த ஆண்டில் கிaன்ஹில் சர்வதேச பாடசாலையில் ஓவியப்போட்டியை அறிமுகப்படுத்தினோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
எதிர்வரும் காலங்களிலும் ஓவியப்போட்டியை நடத்துவதற்கு தீர்மானித் திருக்கிறோம். போட்டியில் கலந்துகொள்ளும் மாணவர்களின் ஓவியங்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டு சிறந்த ஓவியங்கள் அங்கேயே தெரிவு செய்யப்படுகின்றன. அவற்றுக்கு பரிசுகளை வழங்குகிறோம்.
இலங்கையில் வாழும் இந்தியர்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் இருக்குமானால் அவர்களை அழைத்து மூன்று மாதத்திற்கொரு தடவை ஒன்றுகூடல் நடத்துகிறோம். இதில் குறைந்தது 10 பேராவது வந்து கலந்து கொள்வார்கள்.
இந்திய விசா பெறுவதற்காக வெளியிடங்களி லிருந்தும் தொலைதூரங்களிலிருந்தெல்லாம் வரு கிறார்கள். முன்னர் அவர்கள் விசா பெறுவதற்காக காத்திருக்க வேண்டியிருந்தது. தற்போது இங்கு நேரில் வந்து ஒரு பத்துநிமிட இடைவெளிக்குள் பெற்றுக்கொள்ளலாம்.
இந்திய அரசாங்கத்தின் உதவியில் டிக்கோயா கிளங்கனில் 150 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனையின் கட்டட நிர்மாணப்பணிகள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளது.
இந்த மருத்துவமனைக்கு தேவையான மருத்துவ சாதனங்களைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மருத்துவமனைக்கு தேவையான வைத்தியர்கள், நிர்வாக நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கமே மேற்கொள்ளும்.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மாத்தளையில் மகாத்மா காந்தி சர்வதேச நிலையத்தின் கட்டுமானப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அப்பணிகள் பூர்த்தியடைந்தால் எதிர்வரும் ஒக்டோபரில் காந்தி யின் பிறந்த தினத்தன்று சிலையை திறந்த எண்ணியுள்ளோம்.
இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நுவரெலியா மாவட்டத்தில் 2000 வீடுகளும் பதுளை மாவட்டத்தில் 200 வீடுகளும் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறு கண்டி இந்திய உதவி உயர் ஸ்தானிகரா லயத்தின் பணிகளையும் சமூக பிரக்ஞை கொண்ட சேவைகளையும் பற்றி விரிவாக எடுத்துச் சொன்னார் உதவி உயர்ஸ்தானிகர் நடராஜன்.
மிகுந்த மன நிறைவுடன் அவரிடம் விடைபெற்றோம்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...