தோட்டத் தொழிலாளர்களின் கடும்
உழைப்பின் மூலம் பெரும் இலாபமீட்டும் தோட்டக்கம்பனிகள் அவர்களுக்கான அடிப்படை
வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் மட்டும் பின்னிற்பதாக தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில் தோட்ட உட்கட்டமைப்புப் பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறுப்பு தோட்டக்
கம்பனிகளிடமே உள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருப்பது
சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
பெருந்தோட்டங்கள் அர
சுடைமையாக்கப்படுவதற்கு முன்னர் தோட்டத் தொழிலாளர்களுக்கான குடியிருப்பு, சுகாதாரம், பொது வசதிகள்,
உணவுப்பொருட்கள் விநியோகம் உள்ளிட்ட
அனைத்தையும் குறித்த தோட்டக் கம்பனிகளே மேற்கொண்டு வந்தன.
எனினும், 1972இல் தோட்டங்கள் அரசுடமையாக்கப்பட்டு மக்கள் பெருந்தோட்ட
அபிவிருத்திச்சபை, அரச பெருந்தோட்டயாக்கம் போன்ற நிறுவனங்களின்
கீழ் கொண்டு வரப்பட்டன. அப்போதும் கூட அந்த நிறுவனங்கள் தொழிலாளருக்கான அடிப்படை
வசதிகளை ஓரளவே னும் செய்து கொடுத்தன.
மீண்டும் தோட்டங்கள் கம்பனிகளுக்கு
நீண்ட காலக் குத்தகைக்கு வழங்கப்பட்ட பின்னர் தோட்ட நிருவாகங்கள் தொழிலாளர்களின்
குடியிருப்பு, சுகாதாரம், பொது வசதிகள் போன்றவை தொடர்பில் கவனம் செலுத்தவில்லை. தொழிலாளருக்கான
அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக்கொடுக்கும் பொறுப்பு தமக்குரியதல்ல எனவும், அரசாங்கத்து க்கே உள்ளது எனவும் தெரிவித்து பிரச்சினைகளிலிருந்து
விடுபட்டு வந்தன. ஆனால், தமது
நிர்வாகத்தின் கீழ் இயங்கி வரும் தோட்டத்தொழிலாளரின் சேமநலன், பொது வசதிகள் என்பவற்றை கவனிப்பதில் தமக்கும் தார்மீக பொறுப்புக்கள்
உள்ளன என்பதை தோட்டக்கம்பனிகள் மறந்துவிட்டன என்றே கூற வேண்டும்.
இது தொடர்பாக தோட்டத்தொழிற்சங்கங்கள்
பல போராட்டங்கள் நடத்தியும் எந்தவிதமான பலனும் கிடைக்கவில்லை. அதேபோன்று அரசியல்
ரீதியான பேச்சுவார்த்தைகள் நடத்தியும் எதுவும் நடைபெறவில்லை.
இன்று பெருந்தோட்டங்களில் வீடில்லாத
பிரச்சினை பெரிதாக உள்ளது. அத்து டன் தோட்ட சுகாதாரம், பொது வசதிகள், குடிநீர்
மற்றும் பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன.
மலையகத்தில் அரசியல் விழிப்புணர்வு
ஏற்பட்டு பாராளுமன்றம், மாகாண சபை கள்,
பிரதேச சபைகள் உள்ளிட்ட உள்ளூராட்சி
மன்றங்களில் தற்போது மலையக பிரதிநிதிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்களின் மூலமே ஓரளவேனும்
பாதையமைப்பு, நீர்விநியோகம் போன்ற பொது வசதிகள்
மேற்கொள்ளப்படுகின்றன.
தோட்டத் தொழிலாளர்களின் கடும்
உழைப்பின் மூலம் பெரும் இலாபமீட் டும் தோட்டக் கம்பனிகள் அவர்களுக்கான அடிப்படை
வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதில் மட்டும் பின்னிற்பதாக தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில் தோட்ட உட்கட்டமை ப்புப்
பிரச்சினைகளைத் தீர்க்கும் பொறு ப்பு தோட்டக் கம்பனிகளிடமே உள்ளது என ஜனாதிபதி
மஹிந்த ராஜபக் ஷ தெரிவித்திருப்பது சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
மாத்தளை மாவட்ட அபிவிருத்தி மீளா
ய்வுக் குழுக்கூட்டம் மாத்தளை மாநகர சபைகேட்போர் கூடத்தில் அண்மையில் நடைபெற்றது.
இந்தக்கூட்டத்தில் உறுப்பினர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே ஜனாதிபதி
இதனைத் தெரிவித்துள்ளார்.
அரச உதவிகள் தோட்டங்களைச் சென்றடைவதில்
உள்ள குறைபாடுகள் பற்றி கவனம் செலுத்தியுள்ளதாகவும் அங்கு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
தோட்டங்களில் தொழிற்றுறைக்குப்புறம்பாக
உட்கட்டமைப்பு விடயங்களான பாதை, குடிநீர்,
சுகாதாரம் போன்ற விடயங்களைச் செய்து தரவேண்டிய
பொறுப்பு தோட்ட நிர்வாகங்களினதும் தோட்டக்கம்பனிகளினதும் பொறுப்பா கும் எனவும்
ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
நலிவடைந்து வரும் பெருந்தோட்டத் துறையை
மீளக்கட்டியெழுப்பி அத் துறையை நம்பிவாழும் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கையை
மேம்படுத்த வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளதுடன், இது தொடர்பாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானுடன் பேச்சுவார்த்தை நடத்தி
வருவதாகவும் இவ்விடயத் தில் நன்மையான தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும்
தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்தக் கருத்துக்கள் மிக
வும் முக்கியமானவையும் தோட்டத்தொழிற்றுறையைச்சார்ந்த நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் அனைத்தும் கவனத் தில் கொள்ளப்பட வேண்டியதாகும்.
முக்கியமாக தோட்டங்களை நிருவகிக் கும்
கம்பனிகள் இது தொடர்பாக கவ னம் செலுத்த வேண்டியது மிகமிக அவ சியமாகும்.
அதேவேளை, இவ்வாறான பிரச்சினை களை ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு வந்த மலையக
மக்களின் பிர திநிதிகளையும் பாராட்ட வேண்டும். அத் துடன் இதனை ஒரு முன்னோடியாகக்
கொண்டு மலையக தொழிற்சங்க, அரசி யல்
தலைவர்கள் தோட்ட மக்களின் பிரச்சினை, தோட்ட
அபிவிருத்தி என் பவை தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடல்களை நடத்தி தீர்வுகளை
ப்பெற்றுக்கொடுக்க முன்வர வேண்டும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...