நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் அரசாங்கத்தினால் அபிவிருத்திப் பணிகள் துரிதகதியில் முன்னெடுக்கப்படுகின்றன. அதேபோன்று மலையகத்தின் பிரதான மாவட்டங்களிலும் அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் தென்மாகாணத்திலுள்ள மாத்தறை மாவட்டத் தோட்டப்பகுதிகள் அபிவிருத்திப் பணிகளிலிருந்து புறக்கணிக்கப்படுகின்றன. அரசினாலும் மலையக அரசியல் தலைவர்களாலும் மாத்தறை மாவட்ட தோட்ட மக்கள் கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.
மாத்தறை மாவட்டத் தோட்டப்பகுதிக ளில் மிகவும் குறைந்தளவிலான அபிவிருத்தித் திட்டங்களே மேற்கொள்ளப்பட்டுள்ளன. இம்மாவட்டத்தில் என்சல்வத்த, உலந்தாவ, தெனியாய, அணில்கந்த, பெவர்லி மற்றும் செல்வகந்த போன்ற பெருந்தோட்டங்கள் உள்ளன. அதுமட்டு மன்றி சிறிய தனியார் தோட்டங்களும் காணப்படுகின்றன.
பெருந்தோட்டங்களிலும் சரி, சிறிய தோட்டங்களிலும் சரி பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக குடியிருப்பு, போக்குவரத்து, குடிநீர், சுகாதாரம், பாடசாலை மற்றும் பொருளாதாரப் பிரச்சினை என பல்வேறு பிரச்சினைகள் காணப்படுகின்றன. இங்குள்ள மக்கள் மிகவும் பின்தங்கிய நிலையில் எவ்வித முன்னேற்றமுமின்றி வறிய நிலையிலேயே வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
சுகாதாரம்
முன்னரெல்லாம் தோட்டங்களில் வைத்திய நிலையங்கள் சிறப்பான முறை யில் இயங்கி வந்தன. திடீர் வருத்தங்களுக்கு மருந்து பெற்றுக்கொள்வது முதல் சுகாதாரம் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களுக்கான கிளினிக் சேவைகளையும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருந்தது.
ஆனால், இன்று இவ்வாறான தோட்ட வைத்திய நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் தொழிலாளர்களும் கர்ப்பிணித்தாய்மாரும் முதியவர்களும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். சிறிய வருத்தங்களுக்குக்கூட நகரங்களிலுள்ள தனியார் வைத்திய நிலையங்களையும் அரச வைத்தியசாலைகளையும் நோக்கிச் செல்ல வேண்டியதாக இருக்கின்றது. இதற்கென பெருந்தொகைப் பணத்தை செலவிடவேண்டியுள்ளது. வாழ்க்கையை கொண்டு நடத்துவதற்கே வருமானம் போதாத நிலையில் தனியார் மருந்தகங்களுக்கு பெருந்தொகை பணத்தை கொடு த்து வைத்தியம் செய்ய முடியாத நிலையிலேயே இருக்கின்றனர். இதுதவிர, தோட்டங்களில் பொது சுகாதார பிரச்சினைகளும் கவனிப்பாரின்றியே உள்ளன. தொற்றுநோய் தடுப்பு, நுளம்பு ஒழிப்பு போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதில்லை என தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
போக்குவரத்து
கிராமப்புற வீதிகள் அரசாங்கத்தினால் துரிதகதியில் புனரமைக்கப்படுகின்றன. குறிப்பாக மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ் இந்த வீதிகள் புனரமைக்கப்படுகின்ற போதும் தோட்டப்பாதைகள் புனரமைக்கப்படாமல் குன் றும் குழியுமாக காணப்படுகின்றன. எச ல்வத்த, செல்வகந்த தோட்டத்திற்கு செல்லும் வீதி பெரிதும் சேதமடைந்து காணப்படுகின்றது. இவ்வீதியில் பயணம் செய்வோர் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகின்றனர்.
4 கிலோ மீற்றர் தூரம் கால்நடையாக சென்று தமது தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டியுள்ளது. தனி யார் வாகனங்களை வாடகைக்கு அமர்த்தி செல்கின்ற போது பெருந்தொகையான பணத்தையும் செலவு செய்யவேண்டியுள்ளது. தெனியாய நகரிலிருந்து குருலுகல, நார்த்தகல, மத்துகோவை போன்ற தோட்டங்களுக்குச் செல்லும் வீதிகளும் இவ்வாறே காணப்படுகின்றன.
மின்சார வசதி
நாட்டின் அநேகமான தோட்டப்பகுதிகளுக்கும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ள போதிலும் ஒரு சில தனியார் தோட்டங்களுக்கு இன்றுவரை மின்சாரம் வழங்கப்படவில்லை. இதன் காரணமாக பல்வேறு சிரமங்களை தோட்டப்பகுதி மக்கள் எதிர்நோக்க வேண்டியுள்ளது. அத்துடன் பாடசாலை மாணவர்களும் மண்ணெண்ணெய் விளக்குகளை கொண்டு தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நாட்டின் கல்வித்துறை, தொழில்நுட்பத்துறை, பொருளாதாரம் ஆகிய துறைகள் வளர்ச்சிப்பாதையில் சென்று கொண்டிருக்கின்ற நிலையில், இந்த மாத்தறை மாவட்டத்திலுள்ள மக்களுக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்படாதுள்ளமை மிகவும் கவலைக்குரியதாகும். தனியார் தோட்டங்களில் மின்சாரத்தை பெற்றுக்கொள்ளும்போது குடியிருப்பாளர்களின் பெயரால் பெற்றுக்கொள்ள முடியாது. தோட்ட உரிமையாளரின் பெயர்களிலேயே பெற்றுக்கொள்ள வேண்டுமென பல்வேறு நிபந்தனைகளையும் விதிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. மின்சாரமென்பது இன்றைய காலக்கட்டத்தில் எவ்வளவு இன்றியமையாதவொரு விடயமாக உள்ளது.
குடியிருப்பு
மனித வாழ்வின் அத்தியாவசிய தேவைகளுள் குடியிருப்பு வசதி மிக முக்கியமானதாகும். குடியிருப்பு வசதிகளின்றி மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்குகின்றார்கள். அநேகமான வீடுகள் 1930 ஆண்டுகளில் வெள்ளையர் காலத்தில் கட்டப்பட்டவையாகும். பல குடியிருப்புகள் இடிந்து விழும் நிலையில் உள்ளன. இங்குள்ள தொழிலாளர்கள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வாழ்ந்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரே குடியிருப்புக்குள் இரண்டு மூன்று குடும்பங்கள் வாழ்கின்றன. எவ்விதமான முன்னேற்றமுமின்றி மிகவும் பின்தங்கிய நிலையிலேயே இம்மக்கள் வாழ்ந்துக் கொண்டிருக்கின்றனர். இந்திய அரசாங்கத்தின் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களின் மூலம் மலையகத்திலுள்ளவர்களுக்கு வீட்டுத்திட்டங்கள் அமுல்படுத்தப்பட்ட போதிலும் அவை மாத்தறை மாவட்டத் தோட்ட மக்களுக்கு கிடைப்பதில்லை. அரசியல்வாதிகளின் தலையீட்டால் அவை மத்திய மாகாணம், ஊவா மாகாணங்களுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்படுகின்றன. எந்தவொரு மலையக வேலைத்திட்டத்திலும் மாத்தறை மாவட்டத்திலுள்ள பெருந்தோட்டப்பகுதி மக்கள் ஓரங்கட்டப்பட்டவர்களாகவே உள்ளனர்.
இதனால் மாத்தறை மாவட்ட தோட்டப் பகுதி மக்களின் வாழ்க்கை மிகவும் பின்தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது. மழையிலும் வெயிலிலும் கஷ்டப் பட்டு இந்த நாட்டுக்கு அந்நிய செலாவ ணியைப் பெற்றுக்கொடுக்கும் இம்மக்க ளின் நிலை கீழ்மட்டத்திலேயே காணப் படுகின்றது. தமிழ் பேசும் மக்களின் வாழ்க்கை நிலையை வெளிப்படுத்தி இம்மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு பெற்றுக்கொடுக்க மாத்தறை மாவட்டத்தினை பிரதிநிதிப்படுத்தி நாடாளுமன்றத்திலேயோ மாகாண சபை களிலேயோ உள்ளூராட்சி சபையிலேயோ எந்த தமிழ் பேசும் பிரதிநிதியும் இல்லை. பெரும்பான்மை இனத்தவர்களினால் மேற்கொள்ளப்படுகின்ற வேலைத் திட் டங்கள் மாத்திரம் செயற்படுத்தப்படுகின் றன.
மாத்தறை மாவட்டத்திலுள்ள பெருந் தோட்டப் பகுதி மக்களின் பிரச்சினை களை தீர்க்க மலையக தமிழ் அரசியல் தலைவர்கள் முன்வர வேண்டுமென தெனியாய பிரதேசத்திலுள்ள பெருந் தோட்டப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக் கின்றனர்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...