இலங்கையில் வாழுகின்ற சமூகங்களை வகைப்படுத்தினால் அதில் பின்ன-டைவுகளுக்கும் புறக்கணிப்புக்களு க்கும் உட்பட்ட சமூகமாக மலையகத் தமி-ழர்கள் இருக்கின்றார்கள் என்பது காலத் தால் உணரப்பட்ட உண்மை. மலையக மக்களின் வாழ்வியல் பிரதேசங்களை எடுத்துக்கொண்டால் அதில் நுவரெலியா-வுக்கு வெளியில் வாழ்கின்ற தமிழர்கள் மலையக அரசியல் தலைமைகளினால் புறக்கணிக்கப்படுகின்றார்கள் என்பது இன்னொரு கசப்பான உண்மை. அதிலும் குறிப்பாக நுவரெலியாவுக்கு அடுத்ததாகக் கூடுதலாக இந்திய வம்சாவளி மக்-களின் சனத்தொகையினை கொண்ட பதுளை மாவட்டத் தமிழர்கள் மலையக அரசியல் தலைமைகளினால் காலத்திற்கு காலம் புறக்கணிப்புக்களுக்கும் ஏமாற்றங்களுக்கும் உட்படுத்தப்பட்டே வந்துள்ளனர். ஆனால் அண்மைக்கால இலங்கையில் அரசியல் நிலையிலேற்பட்ட மாற்றங்கள் நுவரெலியாவிற்கு அப்பால் மலையக அரசியலைப்பற்றி சிந்திக்க வேண்டியதொரு கட்டாயத்திற்கு தலைமைகளை இட்டுச்சென்றிருக்கின்றது.
இம்முறை பலத்த போட்டிக்கு மத்தி யில் தமிழ் மக்களின் வாக்குகளுடன் ஆளும் கட்சியே வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், எமது சமூகத்தின் வாக்குகளுடன் அமையப்போகின்ற மாகாண ஆட்சியில் எமது பிரதிநிதிகளின் எண்ணிக்கையினையும் அதிகரித்த அளவில் பேணுவதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளன. இதில் தனிப்பட்ட செல்-வாக்குடன் போட்டியிடுகின்ற வேட்பாளர்களை விட வும் அமைப்பு ரீதியாக போட்டியிடுகின்ற வேட்பாளர்களின் தெரிவு விடயத்தில் அமைப்புக்கள் கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. தமது அமைப்பின் வேட்பாளர்கள் வெற்றி பெற்ற பின்னர் அவர்கள் வெறுமனே எண்ணிக்கைக்கு உறுப்பினர்களாக இருக்-கின்ற நிலையன்றி துரித செயற்பாடுகளை மேற்கொள்ளக்கூடியவர்களை வேட்-பாளர்களாக தெரிவு செய்ய வேண்டும்.
ஊவாவின் தமிழர் சனத்தொகையினை பார்க்கின்ற போது குறைந்தது 6 மாகாண சபை உறுப்பினர்களையாவது நாம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் கடந்த காலங்களில் தகுதியான வேட்பாளர்கள் களமிறக்கப்படாமையினால் விருப்பு வாக்கில் ஏற்பட்ட இடைவெளிகள் பலரின் தோல்விக்கு காரணமாயிருந்-தன. கடந்த மாகாண சபைத் தேர்தலில் ஆளும் கட்சியின் பட்டியலில் போட்டி-யிட்ட முன்னாள் உறுப்பினர்கள் இருவர் தமது பிரதிநிதித்துவத்தினை இழந்தி-ருந்தனர். பதுளை மாவட்ட மக்கள் குறிப்பிட்ட இருவருக்கும் 15,000 ற்கு மேற்-பட்ட விருப்பு வாக்குகளை வழங்கியிருந்தனர். துரதிஷ்டவசமாக இவர்கள் இரு-வரும் பெற்ற வாக்குகள் உறுப்பினராக தெரிவு செய்யப்படுவத ற்கு சற்றுக் குறைவானவைகளாக இருந்தன. இவ்வாறானதொரு நிலைமை இந்த மாகாண சபைத் தேர்தலில் இடம்பெறுவதனை தடுக்கின்ற முயற்சிகளை இப்போதிருந்தே மலையகத் தலைமைகள் முன்னெடுக்க வேண்டும். ஒரு கட்சி யாரை வேட்பாள-ராக நிறுத்த வேண்டும் என்பதனை அந்தக் கட்சியின் உயர்மட்டமே தீர்மா-னிக்கும் என்ற போதிலும் வேட்பா ளர்கள் தெரிவு விடயத்தில் பதுளை மாவட்ட மக்களது கருத்துக்களுக்கும் மதிப்பளித்து தெரிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்ற கருத்தும் பரவலாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது.
நுவரெலியா மாவட்டத்தில் நமது அரசி யல் திட்டமிடலுக்கும் நுவரெலி-யாவிற்கு வெளியில் நமது அரசியல் திட்டமிடல்களுக்கும் இடையில் கட்டாய-மாக வேறுபடுத்தப்பட்ட தந்திரோபாயங்கள் பின்பற் றப்பட வேண்டும். நுவரெலி-யாவைப் பொறுத்தவரையில் எத்தனை கட்சிகளில் தமிழர்கள் பிரிந்து போட்டி-யிட்டாலும் மாவட்டத்தின் வாக்காளர்களின் அடிப்படையில் பாராளுமன்றத்திற்கு குறைந்தது 4 உறுப்பினர்களையாவது தமிழர்கள் பெற்றுக்கொள்ளலாம். மாகாண சபையில் கடந்த தேர்தலில் 9 உறுப்பினர் கள் வெற்றி பெற்றிருந்தனர். ஆனால் பதுளையில் ஏதாவது ஒரு கட்சியில் போட்டியிடுகின்றவர்கள் வாக்-கினை சிதறடிக்கின்ற வேலையினை மேற்கொண்டாலும் ஒரு தமிழர் கூட வெற்றி பெற முடியாத நிலைமை தோன்றும். இதனை கடந்த பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் தெளிவாக உணர்த்தியிருக்கின்றன. அதேபோல் கடந்த மாகாண சபைத் தேர்தலில் வேட்பாளர்கள் தொடர்பில் மக்கள் கொண்டிருந்த அதிருப்தியின் காரணமாக தமிழ் பிர திநிதித்துவம் 3 ஆக குறைவடைந்தது.
இன்றைய அரசியல் சூழ்நிலையானது ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்ட மைப் புக்கு மட்டும் சவாலானது அல்ல. இது எமது மலையகத் தலைமை-களுக்கும் சவாலானதொரு காலகட்டமாகும். ஊவா வில் சடுதியான மாற்ற-மொன்று ஏற்பட்டு எதிர்க்கட்சிகளின் தமிழ் வேட்பாளர்கள் வெற்றி பெற்று ஆளும் கட்சி பின்னடைவினை சந்தித்தாலும் அதன் பாதிப்புக்கள் எமது தலை-மைகளுக்கே. அதேபோல் ஆளும் கட்சி அமோக வெற்றி பெற் றும் அதில் தமிழ் பிரதி நிதிகள் பெருமளவில் வெற்றி பெறாத நிலை தோற்றம் பெற்றால் ஊவாவில் மலையகக் கட்சிகளுக்கு செல்வாக்கு இல்லை என்ற கருத்து அர-சாங்க உயர் மட்டத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டு விடும். எனவே அரசா ங்க கட்சியும் வெற்றி பெற வேண்டும். அதேவேளை அதில் போட்டியிடுகின்ற தமிழ் வேட்பாளர்களும் வெற்றி பெற வேண்டும் என்றதொரு சூழ்நிலை இப்போது ஊவாவில் தோற்றம் பெற்றிருக்கின்றது. இந்த இக்கட்டான அரசியல் சூழலில் மலையக தலைமைகள் எடுக்கின்ற முடிவுகள் சமூக நலன் கருதியவைகளாக அமைய வேண்டும்.
பதுளை மாவட்டத்தினை பொறுத்தவரையில் பல்வேறு இடர்களுக்கு மத்-தி யில் கடந்த 5 வருடங்களாக மக்களுக்கு சேவையாற்றியவராக முன்னாள் அமை ச்சர் செந்தில் தொண்டமான் இருக்கிறார். இவரது வழிநடத்தலின் கீழ் கடந்த முறை இழந்த பிரதிநிதித்துவத்தினை இம்முறை தேர்தலில் இ.தொ.கா. பெற்றுக்கொள்ளும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இதனை உறுதிப்படுத்துவதனைப் போலவே ஊவா மாகாண சபை கலைக்கப்பட்ட திகதியிலிருந்து இ.தொ.கா. தலைமைத்துவம் பல்வேறு மட்டத்தவர்களை அழைத்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு வருகின்றது. இதில் கல்வி சார் சமூகம் தோட்ட சேவையாளர்கள், சுயதொழில் புரிவோர், முதலாளிமார் என்று பல தரப்பினரும் அடங்கியுள்ளனர். இது வரவேற்கப்பட வேண்டியதொரு விடய-மாகும். கலந்துரையாடல்களின் போது வேட்பாளர்களின் தெரிவு தொடர்பில் எவ்வித கருத்துக்களும் இதுவரையில் கேட்டறியப்படாத நிலையில் இக்கட்சி செந்தில் தொண்டமானை தலைமை வேட்பாளராகக் கொண்டு மேலும் இரண்டு வேட்பாளர்களை அறிவித்திருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தமிழ்ப் பாட சாலை அதிபர்களுடனான சந்திப்பு இட ம்பெற்ற போது தாம் நிறுத்துகின்ற வேட் பாளர்களை சமூக நன்மை கருதி கல்வி சார் சமூகம் ஆதரிக்க வேண்டும் என்ற கருத்து தலைமைத்துவத்தினால் முன் வைக்கப்பட்டதே தவிர, கல்வி சார் சமூகத்திலிருந்து வேட்பாளரொருவரை நிறுத்துவது தொடர்பில் எதுவித கருத்து பரிமாற்றங்களும் இடம்பெறவில்லை.
இந்த பத்தியின் நோக்கம் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்ட வேட்பாளர்-களை குறை கூறுவதல்ல. ஆனால் பலமுனைப்போட்டியினை சந்திக்கின்ற இன்-றைய அரசியல் சூழலில் தமிழ் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்திக் கொள்வ-தற்கான வாய்ப்பு இ.தொ.கா.விற்கு இருக்கின்றது என்றே குறிப்பிடலாம். இவ்வா-றானதொரு நிலையில் வெற்றிலை சின்னத்திற்குள்ளேயே இ.தொ.கா. இரண்டு விதமான சவால்களை சந்திக்க வேண்டியிருக்கும்.
1.பெரும்பான்மை வேட்பாளர்களின் விருப்பு வாக்குப்போட்டி
2.தமிழ் வேட்பாளர்களின் விருப்பு வாக் குப்போட்டி
இந்த இரு போட்டி சார் சூழலுக்கு அப்பால் எதிர்க்கட்சிகளில் போட்டியிடு-கின்ற தமிழ் வேட்பாளர்களின் போட்டியினையும் சந்தித்தே தமது வேட்பாளர்-களை இ.தொ.கா. வெற்றி பெறச் செய்ய வேண்டும். இவ்வாறானதொரு இக்கட்-டான சூழலில் இ.தொ.கா. வின் வேட்பாளர்கள் 3 விருப்பு வாக்குகளையும் தமது கட்சி சார்பானவர்களுக்கு பெற்றுக்கொள்கின்ற வகையில் வேட்பாளர்களை தெரிவு செய்ய வேண்டும்.
இலங்கையின் இன்றைய அரசியல் நிலையானது இனவாத அரசியலாக்-கப்பட்டிருக்கின்ற நிலையில் எமது மலையக சமூகத்தின் சார்பாக மக்கள் ஓர் அமை ப்பின் கீழ் ஒன்றிணைய வேண்டிய காலத் தின் தேவை உள்ளது. இந்த தேர்தலிலும் எப்போதும் போலவே தனிப்பட்ட நன் மைகளுக்காக போட்டியிடு-கின்ற வேட் பாளர்கள் களமிறங்கும் வாய்ப்புக்கள் அதிகமுள்ள நிலையில் மலையக மக் களை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அமைப் புக்கள் தங்களது பேரம் பேசும் சக்தி யினை பாதுகாத்துக் கொள்வதற்கு அரசி யல் பிரதிநிதித்துவத்தினை உறுதிப் படுத் திக்கொள்ள வேண்டும். இதற்கு வேட் பாளர்கள் தேர்வு விடயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். இந்த விடயத்தில் கட்சியின் தலைமைத்து வத்திற்கே பூரண அதிகாரமுள்ள போதிலும் சமூக நோக் கம் கருதி சில முன்னெடுப்புக்களை மேற் கொள்ள வேண்டியது காலத்தின் தேவை யாகும்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...