மலையக இலக்கியத் தூண்களில் ஒருவரான திரு. சாரல்நாடன் சுமார்
அரை நூற்றாண்டு காலமாக எழுத்துத் துறையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். ஹைலண்ஸ்
கல்லூரியின் பழைய மாணவரான இவர் படைப்பாளி, ஆய்வாளர், பதிப்பாசிரியர் என பல்துறை ஆளுமைகளைக்
கொண்டவர். திருவாளர்கள். இர. சிவலிங்கம், திருச்செந்தூரன் முதலிய ஆளுமைகளின் செல்வாக்கால்
தன்னை பட்டை தீட்டிக் கொண்டவர். அவரது அத்தகைய ஆளுமை வளர்ச்சிக்கு ஹைலண்ஸ் கல்லூரி
தளமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சாரல்நாடனைத் தவிர்த்துவிட்டு மலையக இலக்கியத்தை
ஆய்வு செய்ய முடியாது என்ற அளவுக்கு அவ் இலக்கியத் தொகுதிக்கு காத்திரமான பங்களிப்பை
நல்கியவர். தான் இறக்கும் வரையில் தமிழ் இலக்கியத்திற்காக குறிப்பாக மலையக இலக்கியத்திற்காக
தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர். அவரது இழப்பு மலையக இலக்கியத்தில் ஈடுசெய்ய முடியாத
ஒன்றாகும். சாரல்நாடன் பயணித்த இந்தப் பாதையில் நேர்மையுடன் பயணிப்பதே அவருக்காய் செலுத்தும்
உண்மையான அஞ்சலியாகும். ஹைலண்ஸ் கல்லூரியின் பழைய மாணவர்கள் என்ற வகையில் எங்களது அஞ்சலியைத்
தெரிவித்துக்கொள்கின்றோம்.
முகப்பு »
» சாரல்நாடனுக்கு ஹைலண்ஸ் கல்லூரி பழைய மாணவர் ஒன்றியத்தின் அஞ்சலி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...