Headlines News :
முகப்பு » » மலையகமும் அமைச்சுப்பதவிகளும் - மலையகன்

மலையகமும் அமைச்சுப்பதவிகளும் - மலையகன்


நடைமுறை நாட்களில் மலையகத்திற்கு மேலும் அமைச்சுப்பதவிகள் எனும் கதையாடல் மிகுந்த கவனத்தைப்பெற்றிருக்கிறது. அரசாங்கம் அழைத்து தங்களுக்கு அமைச்சுப்பதவி வழங்குவதாகவும் தான் அமைச்சுப்பதவிக்கு பின்னால் செல்லவில்லை என்று ஒரு சாராரும் அப்படி இலகுவாக அமைச்சுப்பதவி கிடைக்கவிடமாட்டோம் ஆறா? இரண்டா என அரசாங்கம் தீர்மானிக்கட்டும் என்ற அறிவிப்பு ஒரு புறமுமாக மலையகத்திற்கான அமைச்சர்கள் குறித்து பரபரப்பாக பேசப்பட்டுக்கொண்டிருக்கினறது. தினமும் அமைச்சுப்பதவிகளையும் அமைச்சர்களையம் குறை சொல்லும் ஊடகம் சார்ந்தவர்கள கூட ‘ஆறுமுகனுக்கு அமைச்சு கொடுப்பதை ஏன் திகாம்பரம் எதிர்க்க வேண்டும்’ என கேள்வி எழுப்புவதும் ஆச்சரியமளிப்பதாகவே உள்ளது.

எது எவ்வாறாயினும் இன்றைய சூழல் மலையகம் சார் அரசியல் பிரதிநிதிகள்  இதுவரை வகித்த  அமைச்சுப்பதவிகள் (துறை) அதன் காலம், அதனை வகித்த கட்சி அப்போதிருந்த ஆட்சி அந்தந்த அமைச்சுக்களின் கீழ் அந்த துறைகளில் மலையகம் கண்ட வளர்ச்சி போன்றவற்றை அலசி ஆராய்வதற்கான வாய்ப்பினை உருவாக்கியுள்ளது.

1930 களின் பின்னர் இலங்கை அரசவையில் மலையக மக்கள் சாந்த பிரதிகள் சார்பில் அங்கம் வகிக்க தொடங்கிய பிரதிநிதிகளில் முதல் அமைச்சராக தெரிவானாவர் பெரி.சுந்தரம். 1947 ல் மலையக மக்கள் சார்பில் 7 பேர் நாடாளமன்றில் இருந்தும் 1948ல் வாக்குரிமை பறிப்புக்கு பின்னர் அமைச்சுப்பதவியல்ல பாராளுமன்ற பிரதிநிதியைக்கூட தெரிவு செய்யமுடியாத நிலைக்கு மலையக மக்கள் தள்ளப்பட்டனர். அதன் பின்னர் 1977 வரை நியமன எம்பி முறையில் அவ்வப்போது அரசாங்கத்தனால் வழங்கப்பட்ட பிரதிநிதி மூலம் மலையக மக்களின் அசியல் அடையாளம் பேணப்பட்டு வந்தது. அதில் சௌமியமூர்த்தி தொண்டமான், ஏ.எ.அஸீஸ், வி.அண்ணாமலை என கிடைக்கப்பெற்றாலும். இதில் இ.தொ.காவில் முதல் பிளவை உருவாக்கிக்கொண்டு ஜனயாநயக தொழிலாளர் காங்கிரஸை உருவாக்கியவர்  என்றவகையில் அந்தப்பதவிக்குரியவராக ஏ.ஏ.அஸீஸ் அவர்கள் முக்கியத்துவம் பெற,  அடுத்த கட்டத்தில் அப்போதைய இ.தொ.கா செயலாளராகவிருந்த வி.கே.வெள்ளையனுக்கு 1965 ஆம் சென்றிருக்க வேண்டிய நியமன எம்பி பதவி அவருக்கு வழங்கப்படாமல் அண்ணாமலைக்கு வழங்கப்பட வி.கே.வெள்ளையன் வலகிச்சென்று தொழிலாளர் தேசிய சங்கத்தை உருவாக்க நேர்ந்தது.

எனினும் 1977 ம் ஆண்டு மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இ.தொ.காவுடன் எதிர் கருத்து கொண்டிருந்தவர்கள் கூட மலையக மக்களுக்கு மக்களால் தெரிவசெய்யப்பட்ட பிரதிநிதியின் அவசியத்தை வலியுறுத்தி மேற்கொண்ட வாக்களிப்பின் ஊடாக நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகதியில் சூன்று அங்கத்தவர்களில் ஒருவராக காமினி திசாநாயக்கா, அனுர பண்டாரநயக்கா ஆகியோருக்கு அடுத்த நிலையில் சௌமியமூர்த்தி தொண்டமான் தெரிவு செய்யப்பட்டார். ஸ்ரீமா ஆட்சியை இல்லாமல் ஆக்க யாருடனும் கைகேபார்க்க காத்திருந்த ஜே.ஆர். ஜயவர்தன இ.தொ.காவை தன்வசம் வைத்திருக்க 1978 ஆம் ஒரு நாள் செயற்றிட்ட அமைச்சராகவும் அதற்கடுத்ததாக கிராமிய கைத்தொழில் அமைச்சராகவம் இ.தொ.கா தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானை நியமித்திருந்தார். தொடர்;சியாக தமது மரணம் வரை அமைச்சராகவே இருந்து காலமான சௌமியமூர்த்தி தொண்டமான் தான் வகித்த 20 வருட கால அமைச்சுப்பதவியில் 17 வருடகாலம் கிராமிய அபிவிருத்தி அமைச்சராக இருந்துள்ளார். அதற்கு மேலதிகமாக புடவைக்கைத்தொழில் அமைச்சினை 1 வருடமும் சுற்றுலாத்துறை அமைச்சினை 4 வருடமும் காலந்டை அபிவிருத்தி அமைச்சினை 4 வருடகாலமும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை 2 வருடகாலமும் தனதாகக் கொண்டிருந்தார்.

அவருக்குப்பின்னர் இ.தொ.காவின் செயலாளராக விளங்கிய எம்.எஸ்.செல்லசாமி 4 வருடம் கைத்தொழில் ராஜாங்க அமைச்சராகவம் ஒரு வருடம் போக்குவரத்து ராஜாங்க அமைச்சராகவும் 3 வருடத்திக்கு அண்மிக்கும் அளவில் தபால் துறை பிரதி அமைச்சராகவம் இருந்தார். பின்னளில் தோட்டத்துறை வீடமைப்பு உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் பிரதி அமைச்சராகவும் செயற்பட்டுள்ளார். மொதத்தில் அவரது அரசியல் காலத்தில் 15 ஆண்டுகள் அமைச்சராக பதவி வகித்துள்ளார்.

இ.தொ.காவின் தற்போதைய தலைவர் முத்து சிவலிங்கம் 2002 ஆம் ஆண்டில் இருந்து 2015 வரை 13 வருடகாலம் தொடரச்சியாக வெவ்வேறு துகைளில் அமைச்சராகவும் பிரதி அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். விவாசயம் கால்நடை ஆகிய துறைகளோடு தோட்ட உட்கட்டமைப்பு மற்றும் பொருளாதார அபிவிருத்தி ஆகிய துறைகளில் இவர் அமைச்சு பதவியினை வகித்துள்ளார்.

இ.தொ.காவின் தற்போதைய செயலாளார் ஆறுமுகம் தொண்டமான் 1999 இலிருந்து 2015 வரையான 15 ஆண்டுகாலப்பகுதியில் இடைவிட்ட காலப்பகதியில் மொத்தமாக 6 ஆண்டுகாலம் கால்நடை அபவிருத்தி அமைச்சுப்பதவியினை வகித்துள்ளார். அதுதவிர தேசிய வீடமைப்பு அமைச்சராக கூட 2 வருடங்கள் பதவிவகித்துள்ள நிலையில் தேசிய நீர்வழங்கல்கூட அவரது பொறுப்பினல் இருந்துள்ளது. மேலும் தோட்ட உட்கட்டமைப்பு என்கின்ற பெயரிலும் கிராமி சமுதாய அபிவருத்தி என்ற பெயரிலும் மொத்தமாக 8 வருடங்கள் தோட்ட சமூகத்துக்கு பணியாற்றக்கூடிய அமைச்சுபதவி வகித்துள்ளார். இளைஞர் வலுவூட்டல் சமூக பொருளாதார அபிவிருத்தி அமைச்சினை 3 வருடகாலஙட்கள் வகித்துள்ளார்.

இவர்கள் தவிர இ.தொ.கா சார்பில் பி.பிதேவராஜ் ஐந்தரை வருடங்கள் இந்து சமய கலாசார அலுவல்கள் அமைச்சராகவும் எம்.ச்சிதிhனந்தன் பிரதிக்கல்வி அமைச்சராக மூன்று வருடங்களும் வகித்திருக்கிறார்.  (இவர் பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் பதவியினையும் 2 ஆண்டுகள் வகித்திருந்தார்.) எஸ்.ஜெகதீஸ்வரன் தேசிய நல்லிணக்கத்துக்கான பிரதி அமை;சசராக 6 மாத காலம் பதவி வகித்துள்ளார்.

இ.தொ.கா வினூடாக பாராளமன்றத்துக்கு நுழைந்து பிற்கு அதனோடு முரண்பட்டு அதேநேரம் இ.தொ.கா அங்கம் வகித்த அதே அரசாங்கத்தில் அமைச்சுப்பதவி பெற்ற இருவர் வடிவேல் சுரேஷ், மற்றும் வி.பத்திரசிகாமணி. இவர்கள் முறையே சுகாதாரம் மற்றும் நீதி சட்ட மறுசீரமைப்பு ஆகிய துறைகளில் பிரதி அமைச்சர்களாக பதவி வகித்துள்ளனர்.

இ.தொகா அல்லாத மலையக கட்சி என்ற வகையில் மலையக மக்கள் முன்னணி 1994 ஆண்டு முதல் 2010 வரை அமைச்சுபதவிகளை வகித்துள்ளது. இதில் மறைந்த அக்கட்சியின் தலைவர் பெ.சந்திரசேகரன் வர்த்தக வாணிப பிரதி அமைச்pசராக ஆரம்பித்து அமைச்சராகவும் பிரதி அமைச்சராகவும் தோட்டப்பகுதி வீடமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு 7 ஆண்டுகள் அமைச்சராக பதவி வகித்துள்ளார். அதுதவிர சமுதாய அபிவிருத்தி , நீர்ப்பாசனம், நீர் முகாமைத்துவம் மற்றும் சமூக அநீதி ஒழிப்பு அமைச்சு என இறக்கும்வரையில் 14 வருடகாலம் அமைச்சராக இருந்துள்ளார். அவரோடு அந்த கட்சியில் பெ.இராதாகிருஷ்ணன் தொழிற்பயிற்சி பிரதி அமைச்சராக 2 ஆண்டுகள் வரை பதவி வகித்துள்ளார்.

அதேபோல இ.தொ.கா அல்லாத மலையக கட்சிகள் சார்பில் அமைச்சுப்பதவிகள் பெற்றவர்கள் என்றவகையில் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பர்  2014 ஆண்டு ஆறுமாதத்திற்கும் குறைந்த அளவில் தேசிய ஒருமைப்பாடு மற்றும்  அரசகரும மொழிகள் பிரதி அமைச்சராகவும் 2015 ல் 8 மாதங்ள் அளவில் பெருந்தோடட்ட உட்கட்மைப்பு அமைச்சராகவம் 2015 செப்தெம்பரில் இருந்து இன்றைய நாள் வரை 9 மதங்களாக ‘மலைநாட்டு பதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சராக பதவிவகிக்கின்றார். ஒட்டுமொத்தமாக பாரத்தால் அவரது அமைச்சுப்பதவி காலம் என்பது இன்னும் 2 வருடங்களை எட்டவில்லை.

இ.தொ.காவில் இருக்கும்போது மாகாண சபை கல்வலி அமைச்சராக புகழ்பெற்றிருந்த வே.இராதாகிருஸ்ணன் இ.தொகாவினூடாகவே பாராளமன்றம் வந்து அமைச்சுப்பதவி எதனையும் பெறாத நிலையில் இ.தொ.காவில் இருந்து விலகி மலையக மக்கள் முன்னணி தலைவராக பொறுப்பேற்றதன் பின்னர் 2014 5 மாதமளவில் பொழுதுபோக்கு துறை சார் பிரதி அமைச்சராகவும் பின்னர் 2015 சனவரி முதல் இன்றுவரை ஏறக்குறைய ஒன்றரை வருடங்களாக கல்வி ராஜாங்க அமைச்சராக பதவிவகின்கின்றார். இவரும் ன்னும் மொத்தமாக பாராளுமன்றில் அமைச்சராக இரண்டு வருடங்களை எட்டவில்லை.

ஆஸீஸ் ஆரம்பித்த ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸின் தொடர்ச்சியாக தனது தந்தையார் அங்கம் வகித்த அந்த கட்சியனை லே;மாகாண, மேலக, ஜனநாயக மக்கள் முன்னணி என தனித்துவமான கட்சியாக வளர்த்தெடுத்த மனோகணேசன் இதற்கு முன்னரும் பாராளுமன்றில் அங்கம் வகித்த போதும் கூட முதன் முறையாக அமைச்சு பொறுப்பினை ஏற்று இப்போது ஒன்பது மாதங்கள் ஆகின்றன. அரச கரும மொழிகள் மற்றும் தேசிய கலந்துரையாடல்களுக்கான அமைச்சராக பொறுப்பேற்றிருக்கிறார்.

மேற்சொன்ன பாராளுமன்ற நிலை தவிர்ந்ததாக மாகாண சபை மட்டத்தில் ஊவா மற்றும் மத்திய மாகாண சபைகளிலும் மலையகத்திற்கான அமைச்சுப்பதவிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இதில் மத்திய மாகாண கல்வி அமைச்சராக எஸ்.சதாசிவம், இராமநாதன் தொண்டமான் (சௌமியமூர்த்தி மகன் ஆறுமுகத்தின் தந்தை) வே.ராதாகிருஷ்ணன், வீ.புத்திரசிகாமணி, எஸ்.அருள்சாமி ஆகியோர் இருந்துள்ளனர். இதில் முதல் மூவரும் இ.தொ.கா. அருள்சாமி இப்போதும் முன்பும் இ.தொ.கா உறுப்ப்pனர் என்றாலம் கல்வி அமைச்சராக பதவி வகித்த காலத்தில் மலையக மக்கள் முன்னணியில் இருந்து பிரிந்து மாகாண சபை உறுப்பினராக இருந்த பழனி திகாம்பரத்துடன் இணைந்து தொழிலாளர் விடுதலை முன்னணியாக செயற்பட்ட காலத்தில் கிடைத்த பதவி. வீ.பத்திரசிகாமணி ஐக்கிய தேசிய கட்சியின் முக்கிய தூணாக விளங்கிய நாட்களில் வகித்த பதவி. இவர்கள் தவிர்ந்த ராமசாமி (இ.தொ.காவில் பதவி பெற்று அமைச்சு பதவி இல்லாமல் போனதும் அதிலிருந்து விலகியவர்), இரமேஷ்வரன் (இப்போதும் இருப்பவர்) ஆகியோர் விவாசாயம் உள்ளிட்ட சில துறைகளுக்கு பொறுப்பான அமைச்சர்கள். ஊவாவில் தமிழ் கல்வி அமைச்சராக இ.தொ.கா உறுப்பினராக எம்.சச்சிதானந்தன் இருந்துள்ளதோடு இப்போது செந்தில் தொண்டமான் இ.தொ.கா சார்பில் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக உள்ளார். வடிவேல் சுரேஷ் சிறிதுகாலம் தமிழ் கல்வி அமைச்சராக செயற்பட்டார் (இது அவர் இ.தொ.காவில் இல்லாதபோது).

இந்த ஒட்டுமொத்த அமைச்சுப்பதவிகளை பார்க்கின்றபோது இ.தொ.கா சார்பிலான பிரதிநிதிகள் அமைச்சுப்பதவிகளையும் அதிக துறைகளையும் கொணடிருக்கின்றமையை அவதானிக்கலாம். இதுவரை காலம் பாராளுமன்றில் அங்கம் வகித்த அமைச்சர்கள் 14 பேரில் 7 பேர் இ.தொ.கா உறுப்பினராகவும் 2பேர் இ.தொ.கா ஊடாக சென்று பின்னர் தனித்து அமைச்சு பதவி வகிததவர்களிகாவும் மூன்றுபேர் மலையக மக்கள் முன்னணி ஊடாகவும் ஒருவர் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஊடாகவும் ஒருவர் ஜனநாயக மக்கள் முன்னணி ஊடாகவும் பதவிகளை வகித்து வந்துள்ளனர். வீதாசார ரீதயாக 50மூ இ.தொ.கா, சார்ந்தவர்களாகவும், மலையக மக்கள் முன்னண சார்பாக 21.5 சதவீதமானவர்களம், 14.3மூ இ.தொ.காடாக பாராளுமன்றம் சென்று அமைச்சர்களாக தனித்து செயற்பட்டவர்கள், தொழிலாளர் தேசிய சங்கம் மற்றும் ஜனநாயக மக்கள் முனன்ணி ஆகியன தலா 7 சதவீத அளவினை பெறுகின்றனர் (பிரபா கணேசன் சில மாதங்கள் தொலைத்தொடர்புகள் அமைச்சராக இருந்த போதும் அதனை மலையகம் சாரந்து நோக்கும் ஏதுக்கள் இருப்பதாக தெரியவில்லை)

துறை ரீதியாக பார்க்கின்றபோது கிராமிய கைத்தொழில் அபிவிருத்தி, கால்நடை அபிவிருத்தி, தோட்ட உட்கட்டமைப்பு,  தோட்ட வீடமைப்பு, சுற்றுலா, புடவைக்கைத்தொழில், போக்குவரத்து, தபால், சுகாதாரம், நீதி, கல்வி(பிரதி, ராஜாங்க), இந்துகலாசாரம், கைததொழில் பயிற்சி விவசாயம், இளைஞர் வலுவூட்டல், தேசிய நல்லிணக்கம், சமூக அபிவிருத்தி, வர்த்தக வாணிபம், சமூக அநீதி, ஒழிப்பு, அரச கரும மொழிகள் (பிரதி மற்றும் அமைச்சரவை)  என ஏறக்குறைய 20 துகைளில் இததனை நாளும் அமைச்சுப்பதவிகளை வகித்துள்ளது

இதிலும் குறப்பாக கிராமிய கைததொழில் அதிக காலம் மலையக வசம் இருந்த (18 வருடங்கள்) காலநடை அபிவிருத்தி (16 வருடங்கள்) தோட்ட உட்கட்டமைப்பு (13 வருடங்கள்) தோட்ட வீடமைப்பு ஏறக்குறைய 6 வருடஙகள் இருந்து வந்துள்ளது. ஏனைய துறைசார் அமைச்சுகளில் சராசரியாக 3 வருடகால ஆயள்காலத்தைக் கொண்டதாக இருந்துளளன.

இவை தவிர மாகாண அமைச்சிலும் தமிழ் கல்வி அமைச்சு அதிக காலத்தையும் ஏனைய உட்கட்டமைப்பு, விவாசயம் போன்றன இதர அமைச்சுகளாகவும் இருந்துள்ளன.

இந்த ஆய்வை நோக்கும் போது மலையகம் அமைச்சு விடயத்தில் கிட்டத்திட்ட 38 வது ஆண்டு பூர்த்தியை கொண்டாhடத்தயாராகிறது எனலாம்.இந்த 38 வருட காலப்பகுதியில் மலையகம் குறித்த அமைச்சு சார் துறைகளில் அடைந்த இலக்குகள் என்ன? எனும் கேள்வி எழுகிறது. ஆனால் இனைறைய ஊடகங்களை எடுத்தால் எந்த நேரமும் மலையகம் அனைத்து துறைகளிலும் பின்தங்கி இருக்கின்றது எனும் முன்வைப்பும் அரசியல்வாதிகள் ஒன்றும் செய்யவில்லை எனும் குற்றஞ்சாட்டலும் தொடரந்துகொண்டே இருக்கின்றது. துறை சார்ந்து சில கேள்விகளை முன்வைத்தால் அது இவ்வாறு அமையக் கூடும்.

குpராமிய கைத்தொழில் அபிவிருத்தி - இப்படி ஒரு அமைச்சு மலையக தலைவர்கள் வசம் 17 வருடங்களுக்கு மேல் இருந்தும் மலையக மக்கள் பயனடையும் ஒரு ழகத்தொழில் ஏனும் அவர்களிடத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறதா?;

 புடவைக் கைத்தொழில் - இப்போதைக்கு மலையகத்தில் எத்தனை பேருக்கு புடவைக்கைத்தொழி;ல் புரிவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருககினறது.

சுற்றுலா கைத்தொழில் - எத்தனை மலையக இளைஞர் யுவதிகள் சுற்றுலாத்துறைகளில் முறையான வகையில் தொழில் வாய்ப்பை பெற்றுள்ளனர்

கால்நடை அபிவிருத்தி – மலையக மக்களின் தேயிலைத் தொழிற்றுறை நட்டத்தை தரும் துறையாக மாற்றமடையும் வேளை அதற்க மாற்றுத் தொழிலாக அமையக்கூடிதான கால்நடை அபிவிருத்தி அமைச்சின் மூலமாக எத்தனை ‘கால்நடைப் பண்ணைகள்’ மலையகத்தில் நிறுவப்பட்டிருக்கின்றன? எத்தனை மலையகம் சார் இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்பை பெற்றுள்ளனர்.

தோட்ட உட்கட்டமைப்பு - அமைச்சின் தோட்டப் பகுதிகளில் பாதை, மின்சாரம், போன்ற கட்டுமானப்பணிகள் எந்த மட்த்தில் பூரத்தியாகியுள்ளன?

தோட்ட வீடமைப்பு – தோட்டப்பகுதி வீடமைப்பில் மலையக மக்களி முன்னணி முன்னாள தலைவர பெ.சந்திரசேகரன் முன்னெடுத்த முயற்சியை தொடர்ந்து கொண்டு செல்ல ஏற்படுத்தப்பட்ட தடைகள் என்ன? அவரது தனிவீட்டு; திட்டத்தை தொடரந்து செல்லாமல் ‘மாடி லயங்களை’ அறிமுகப்படுத்தியது யார்? 1993 ஆம் ஆண்டில் இருந்து 2014 வரையான 20 வருடகாலப்பகுதியில் 25000 ‘அலகுகள்’ (மாடிலயத்தின் ஒவ்வnhரு வீடும் ஒரு அலகு) மலையகத்தின் வீட்டுததேவைக்கு போதுமான வேகமாக அமைந்ததா?

சுகாதாரம் - மலையக தோட்ட வைத்தியசாலைகளை அரச (மாகாண கிராம வைததியசாலைகளாக) மாற்றுவதற்கு மேந்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்ந்து கொண்டு செல்லப்படாமல் போனதற்கான காரணம் என்ன? அல்லது யார்?

கல்வி – மத்தியிலும் மாகாணத்திலும் பல சந்தரப்பங்களில் கல்வி அமைச்சு கிடைக்கப்பெற்ற போதும் மலையகப்பல்கலைக்கழகம் ஒன்றை தாபிப்பதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதா? சுpல மாதங்கள் டிலான் பேரேரா தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சராக பதவி வகித்த போது அவர் மலையக பல்கலைக்கழகம் ஒன்றை அமைப்பதற்காக அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சமர்ப்பிதற்கு எடுத்த முயற்சியின் அளவைததானும் மலையக தமிழ் மக்களின் தலைவர்களால் முன்வைக்க முடிந்ததா?

போக்குவரத்து - இந்த அமைச்சை பெற்றிருந்த காலத்தில் குறை;நதபட்சம் இ.போ.ச பஸ்களில் நடத்துனர்களாக ஓட்டுனர்களாகவேனும் மலையகம சர்ரந்தவர்களுக்கு  வேலை வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டுள்ளதா?

தொழில் பயிற்சி – எததனை மலையக இளைஞர்கள் யுவதகள் பயிற்றப்பட்ட தொழில் துறைக்குள் அனுப்பபட்டிருக்கிறாரகள்?

தேசிய அரச கரும மொழிகள் - மலையக மக்கள் வாழும் பகுதிகளில் தமிழ் மொழியை அமுல் படுத்துவதில் காட்டப்பட்டுள்ள செயற்பாடுகள் அக்கறைகள் என்ன?

தபால் - இந்த அமைச்சின் ஊடாக நூறு தபால் காரர்களை தொட்டப்பகுதிக்கு நியமித்தது  தவிர்ந்து  வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதா?

இப்படி ஒவ்வnhரு துறை சார்ந்தும் கேள்விகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இந்த இடத்தில் ஒப்பீட்டுத்தேவைக்காக ஸ்ரீ லங்கா முஸலிம் காங்கிரஸ் தலைவர் 1990 களுக்குப்பிறகு அரசியல் கட்சியை கட்டியெழுப்பி அமைச்சுப்பதவிகளையும் பெற்று அந்த சமூகத்திற்குரிய அடையாளமாக விட்டுச்சென்றிருக்கும் ‘ஒலுவில்’ துறைமுகம், தென்கிழக்கு பல்கலைக்கழகம், கல்முனை அஷரப் தேசிய வைத்தியசாலை, துறைமுகங்களில் முஸ்லிம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு போன்ற ஏதேனும் குறிப்பிடும் படியாக மலையகத்தில் எம்மால் அடையாளப்படுத்த முடிகின்றதா?

மலையகத்திற்கு வெளிநாடுகளின் உதவியூடாக கிடைக்கப்பெற்ற கல்வியில் கல்லூரி?, தொழிற்பயிற்சி கல்லூரி போன்றவற்றை அரசியல் சார்பின்றி சுயாதீனமாக செய்றபடுத்த எத்தணிக்கப்பட்டுள்ளதா? ‘தொண்டமான்’ எனும் பெயர் தவிரந்த வேறு அரசியல் மலையக அரசியல் தலைவர்க் பெயரில் ஏதேனும் கருத்திட்டம் முன்னர் முன்வைக்கப்ட்டுள்ளதா?

தோட்டங்களை மாற்றி கிராமங்களாக மாற்றும் முயற்சி ‘கிராம அபிவிருத்தி அமைச்சுகளை’ வைத்திருந்த பல காலங்களில் சாத்தியமான ஒன்றாக மாறி இருந்ததா? அண்மைய ஒரு வருட காலத்தற்குள் அமைச்சர் திகாம்பரம் முன்னெடுத்துச் செல்லும் ‘மலைநாட்டு புதிய கிராமங்கள்’ எனும் வேலைத்திட்டத்தை மலையக ஆளுமைகளின் பெயர்களை சூட்டி ஒரு கருத்தட்டமாக முன்னர் முன்னெடுக்கப்பட்டிருக்கிறதா?

கடந்த ஒரு வருடகாலமாக அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள ‘பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திக்கான ஐந்தாண்டுத்திட்டம்’, ‘புதிய கிராமங்களை அமைப்பதற்கான அதிகார சபை’ போன்ற நீண்டகால அடிப்படையிலான ஒழுங்கமைத்த வேலைததட்டங்கள் அதற்க முன்னர் இடம்பெற்றுள்ளனவா?

மலையகம்; சார்ந்த அமைச்சு மட்ட செயற்பாடுகளில் மலையக மக்களினதும் மலையகம் சார் புத்தஜீவிகளினதும் பங்களிப்பு, வெளிப்படைததன்மை, ஜனநாயக கலந்துரையாடல் கடந்த ஓராண்டுக்கு முன்னர் போன்று இடம்பெற்றிருக்கின்றது என்பதை உறுதிப்படுத்தக் கூடியாதாக உள்ளதா?

1994ல் பெ.சந்திரசேகரன் அமைச்சுப்பொறுப்பினை ஏற்று செயற்பட முனைந்தபோதும், 1999 ல் எஸ்.சதாசிவம மாற்று அணியாக தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சினை பொறுப்பேற்க முயன்ற போதும், 2006 ல் அப்போதைய மாகாண சபை உறப்பினர் பழனி திகாம்பரத்தை ஐ.நா பொதுச்சபை கூட்டத்திற்கு அழைத்துச்செல்ல அப்போதைய ஜனாதபதி மகிந்த ராஜபக்ஸ அழைத்துச் செல்ல முயற்சித்தபோதும் இ.தொ.கா அவற்றிற்கு தடையாக இருக்கவில்லையா? 2010 ஆம் ஆண்டு திகாம்பரம் அரசுக்கு ஆதரவு வழங்கியும் பலமுறை மகிந்த அவருக்கு அமைச்சுப்பதவி கொடுக்க முனைந்தபோதும் அதனை தடுக்க இ.தொ.கா முயற்சி மேற்கொள்ளவில்லையா? அப்போதெல்லாம் மலையகத்தில் வெட்டுக்குத்துக்கள், பொறாமை, காட்டிக்கொடுப்பபுகள் நடைபெறவில்லை என்பதை உறுதிப்படுத்த முடியுமா?

இவற்றையெல்லாம் தாண்டி மேலே விபரிக்கப்பட்ட மலையகம் சார் அமைச்சு செயற்பாடுகளில் பெரும்பங்கு வகித்துள்ள இ.தொ.கா தன்னை சுயவிமர்சனம் இதுவரை காலம் தாங்கள் வகித்த அமைச்சுப்பதவிகளுக்கு மேலதிகமாக, அடுத்து தாங்கள் அமைச்சுப்பதவிகளை முன்னெடுத்து மலையகத்திற்கான முன்வைக்கப்படப்போகும் வேலைத்திட்டம் என்ன என்பதையும் அந்த இலக்கினை அடைய ‘எந்த துறைசார்’ அமைச்சினை அவர்கள் கோருகின்றார்கள் என்பதையும் அவர்களால் அமைச்சுப் பதவி பெறுவதற்கு முன்பதாக மக்களிடம் முன்வைக்க முடியுமா?

மலையக அமைச்சு வரலாற்றில் 2004-2010 காலப்பகுதி பாராளுமன்றில் மலையகம் அதிக பாராளுமன்ற உறுப்பினர்களையும் அதிக அமைச்சர்களையும் கொண்டிருந்த காலம். ஆப்போது அங்கம் வகித்த ஆறுமுகம், முத்துசிவலிங்கம், ஜெகதீஷ்வரன், சச்சிதானந்தன், எம்.எஸ். சேல்லசாமி,  வடிவேல் சுரேஷ், புத்திரசிகாமணி, பெ.சந்திரசேகரன், பெ.ராதாகிருஷ்ணன் என ஒன்பது பேர் ஒருசேர அமைச்சர்களாக இருந்துள்ளார்கள்.  அப்போது எதிர்கட்சி வரிசையில் இருந்த மனோ கணேசன் அவர்களும் மக்கள் விடுதலை முன்னணி சார்பில் அங்கம் வகித்த ராமலிங்கம் சந்திரசேகரன் ஆகிய இருவர் மாத்திரமே அமைச்சுப்பதவி இல்லாது பாராளுமன்ற உறுப்பினர்களாக மாத்திரம் இருந்நதார்கள்.

எனவே, மலையகத்திற்கு தேவையான அமைச்சுப்பதவிகள் என்பது ஆள்கணக்கு எண்ணிக்கை அடிப்படையிலும், வாகனங்கள் ஓடும் வரிசைகளின் எண்ணிக்கை அடிப்படையிலும் அமைய வேண்டிய ஒன்று அல்ல. அது மலையக மக்களுக்கான வேலைத்திட்டங்களை அடிப்படையாகக் கொண்டது. அண்மைய ஓராண்டு காலமாக பாராளுமன்றில் மலையகம் சார்ந்தவர்கள் வகிக்கும் அமைச்சப்பதவிகளிலும், செயற்பாடுகளில் அரப்பணிப்புணர்வும், வெளிப்படைத்தன்மையும், ஜனநாயக கலந்துரையாடலும், ஒரு தூரநோக்கும், வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றமை அவதானிக்கப்பட்டுள்ளது. இந்த கலாசார செல்நெறியை குலைக்காதவகையில் இனிவரப்போகும் அமைச்சர்கள் யாராயினும் செயற்படுவார்களாயின் அதுவே மலையக மக்களுக்கு செய்யும் மிகப்பெரும் நன்மையாக அமையும். 

நன்றி - தினக்குரல்
Share this post :

+ comments + 1 comments

10:42 AM

மக்களை முன்னேற்றவா மந்திரிப்பதவி? மக்களை ஏமாற்றவும் இருக்கலாமல்லவா?

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates