மஸ்கெலியா மற்றும் அப்கொட் பிரதேச பெருந்தோட்டங்களில் பணிபுரிந்து ஓய்வு பெற்றுள்ள தோட்ட அதிகாரிகள் 'மஸ்கொட்' (MASCOT) என்ற குழுவாக இயங்கி வருகின்றனர் பெருந்தோட்டத்துறை இன்று எதிர்நோக்கியுள்ள மோசமான நிலையை நீக்கி மறு சீரமைக்கவும் அதன் முந்தைய மகத்தான நிலைக்குக் கொணரவும் இவர்கள் ஒரு வேலைத்திட்டத்தை முன் வைத்துள்ளார்கள்.
இவர்களுடைய இந்த வேலைத்திட்டம் போதிய கவனிப்பைப் பெற்றதாகத் தெரி யவில்லை. அவர்களுடைய சிபாரிசுளைக் கவனத்திற் கொண்டு பொருத்தமா னவைகளை நடைமுறைப்படுத்தினால், ஓரளவான மாற்றம் ஏற்படலாம் வேலைத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள் கீழே தரப்படுகின்றன.
தேசிய மயமாக்கலுக்கு முன்பு
நாட்டின் அனைத்துப் பெருந்தோட்டங்களும் ஸ்டேர்லிங் மற்றும் ரூபா கம்பனிகளாக அல்லது தனிப்பட்டவர்களுக்கு, குடும்பங்களுக்கு சொந்தமாக இருந்தன. தோட்டங்கள் முகவர் நிறுவனங்களாலோ அல்லது தனிப்படவர்களாலோ நிர்வகிக்கப்பட்டன. தோட்ட அபிவிருத்தி சம்பந்தமாக உரிமையாளர்கள் எடுக்க அனைத்துத் தீர்மானங்களிலும் தோட்ட அதிகாரிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப் பட்டது.
அதனால் அன்றைய பெருந்தோட்டங் கள் சிறப்பாக இயங்கும் இயந்திரங்களாக மிகத்திறமையாக இயங்கியதுடன், நாட்டின் பிரதான வருவாய்த் துறையாகவும் விளங்கியது.
அத்துடன், நாட்டின் பேரளவிலான நேரடி மற்றும் மறைமுக தொழில் வாய்ப்புக்களை உருவாக்கும் நிறுவனங்களாக வும் விளங்கின.
தேசிய மயமாக்கப்பட்டதன் பின்னரான காலப்பகுதி
1972ஆம் ஆண்டின் காணிச் சீர்த்திருக்கச் சட்டம் முதலாம் கட்டத்துடன் தோட்டங் கள் தேசியமயமாக்கல் ஆரம்பிக்கப்பட்டு தனியாருக்கு உரிமையாயிருந்த பெருந்தோட்டங்கள் தேசிய மயமா க்கப்பட்டன.
ஓரளவான காணிகளின் நிர்வாகம் மலைநாட்டு தோட்ட அபிவிருத்திக் கூட்டுறவுச் சபை (USAWASAMA) மற்றும் ஏனைய மாவட்ட கூட்டுறவுச் சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டன. இப்பெருந்தோட்டத் துறை நிர்வாகம் குறித்து கூட்டுறவுச் சபைகளுக்கு இம்மியளவாவது அறிவிருக்கவில்லை. முன்னர் சிறப்பாக இயங்கி வந்த தோட்டங்களை நிர்வகிக்க நியமிக்க ப்பட்ட புரொஜெக்ட் மனேஜர்கள் தோட்டங்களைச் சீரழித்தனர்.
முகவரமைப்புக்களினால் முகாமைத்துவம் செய்யப்பட்டு வந்த பெருந் தோட்டங்கள் 1975ஆம் ஆண்டின் காணிச்சீர்திருத்த சட்டத்தின் மூலம் தேசிய மயமாக் கப்பட்டன. பின்னர் இத்தோட்டங்கள் அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்திடம் (SLSPC) கையளிக்கப்பட்டன. 1976 ஏப்ரல் மாதமளவில் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை (JEED) உருவாக்கப்பட்டது.
1977இல் ஐ.தே.க. ஆட்சிக்கு வந்த பின் னர் உசவசம மற்றும் பிராந்திய கூட்டுறவுச் சங்கங்களினால் நிர்வகிக்கப்பட்டு வந்த தோட்டங்களும் கூட்டுத்தாபனம் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபையிடம் ஒப்படைக்பப்பட்டன.
அன்றைய ஜனாதிபதி பெருந்தோட்டத்துறையின் முக்கியத்துவத்தையும் அதனுள்ளான அரசியல் தலையீடுகளையும் நன்குணர்ந்திருந்தார். அதனால் அரச பெருந்தோட்ட அமைச்சு, மக்கள் தோட்ட அபிவி ருத்தி அமைச்சு ஆகிய இரு அமைச்சுக் களை உருவாக்கி அவ்விரண்டுக்கும் தானே
அமைச்சராகி அவற்றைத் தனது நேரடி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தார்.
தனியார் மயப்படுத்தல்
பெருந்தோட்டங்கள் அரசுக்கு பெருஞ்சுமை ஆகிப்போயின. அவற்றின் முகாமைத்
துவத்தைத் தனியார் மயப்படுத்த தீர்மானி க்கப்பட்டது. இதற்காக, 1987இல் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் உருவாக்கப்பட்டன. (RPC) இப்பெருந்தோட்டக் கம்பனிகளின் 51 வீதமான பங்குகளைத் தனியார் துறைக்கு விற்றதன் மூலம் பெருந்தோட்டங்களின் குத்தகை உரிமை 53 ஆண்டுகளுக்கு தனியார் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன.
இதன்படி பெருந்தோட்ட மறுசீரமைப்பு அலகினால் (PRU) அரசுடைமையான 22 பெருந்தோட்டக்கம்பனிகள் உருவாக்ப்பட் டன ஆர்வமுடைய நிறுவனங்களிடமிருந்து பெற்ற போட்டி விலைகோரல் மூலம் இக்கம்பனிகளின் முகாமைத்து வம் 1992 ஜுனில் இருந்து ஐந்தாண்டுகளுக்கு வழங்கப்பட்டது 23ஆவது பிராந் திய பெருந்தோட்டக் கம்பனியான எல்கடுவ பிளான்ட்டேஷன் லிமிடெட் 1993 ஜுலையில் உருவாக்கப்பட்டது.
அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம் மற்றும் மக்கள் தோட்ட அபிவிருத்திச் சபைக்குச் சொந்கமான கண்டி மற்றும் மாத்தளை மாவட்டங்களைச் சேர்ந்த திருத்தி அமைக்க முடியாதெமன கருதப்பபட்ட
சில தோட்டங்கள் அந்நிறுவனங்களின் பொறுப்பிலேயே விடப்பட்டன. இக்காணிகள் அரசுடைமையாகவே உள்ளன.
பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் 51 வீதமான பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் 53 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு விட்ட போது தனியார் நிர்வாகத்தின் கீழ் இலாபம் பெற்ற கம்பனிகளே அவ்வாறு குத்தகைக்கு விடப்பபட்டன.
இந்த அடிப்படையில், இலாபம் மாத்திரமே பிரதானமாகக் கருதப்பட்டதேயன்றி அவ்விலாபத்தைப் பெறுவதற்காக உள்ளீடுகளைக் குறைத்தல், சொத்துக்களை அகற்றிவிடுதல், நடைமுறையிலிருந்த சந்தை நிலைவரம் ஆகியவற்றின் பங்களிப்பு குறித்து கவனமெடுக்கப்படவில்லை.
குருணாகல பிளான்டேஷன் லிமிடெட் சிலாபம் பிளான்டேஷன் லிம்டெட் மற் றும் எல்கடுவ பிளான்டேஷன் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் ஆரம்ப முகாமைத்துவ ஒப்பந்தங்கள் காலாவதியானதன் காரணமாக அரசால் மீளபொறுப்பேற்கப்பட்டுள்ளன.
பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்க ளின் பங்குகளை விற்பனை செய்கை யில் அரசு தனக்கென ஒரு பங்கை ஒதுக் கிக் கொண்டது தங்கப் பங்கு எனக் கூறப்பட்ட இப்பங்கு அரசுக்கு பரந்தளவிலான அதிகாரங்ளை வழங்கயிருந்தது. துரதிர்ஷ்டவசமாக இவ்வதிகாரங்கள் தேவையானவிடத்து பிரயோகிக்கப்படாமையைக் காண முடிகின்றது.
முகாமைத்துவ முகவரமைப்புக்கள் ஒரு முகாமைத்துவக் கட்டணத்திற்கு உரித்துடையவையாகும் சில முகவரமைப்புக்களைப் பொருத்தவகையில் இக்கட்டணம் மிகப் பெருந்கொகையாகவிருந்தது. அதே போன்று ,இம்முகவரமைப்புக்கள் முந்தைய நிறுவனங்களின் ஊழியர்களை வேலைக்க மர்த்திக்கொள்ள வேண்டும் என்ற நிபந்தனைக்குட்பட்டும் இருந்தன. இன்னும் சில நிறுவனங்கள் நியாயமற்ற முறையில் இவ்வரப் பிரசாதங்களைத் துஷ்பிரயோகம் செய்தததனால் பெருந்தொகை பான பணம் மேற்படி நிறுவனங்களில்குருந்து செலவிடப்பட்டள்ளது.
இந்த முகவரமைப்புக்கள் நடைமுறை முதலீடுகள் போன்றவற்றிற்காக குத்தகை உரிமையை அடமானம் வைப்பதன் மூலம் நிதியினைப் பெறுவதற்கும், வெளிநாட்டு மற்றும் உள் நாட்டு நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெறுவதற்கும் கடன்களைப் பெறுவதற்காக அந்நிறுவனங்களின் சொத்துக்களைப் பிணைவைப்பதற்கும் அனுமதிக்கப்பட்டிருந்தன. இந்நிறுவனங்களின் வருடாந்த கணக்கு அறிக்கைகளின் பிரமாண்டமான அளவில் கடன்பட்டிருப்பது தெரியவருகின்றது.
இப்படி அனைத்து வரப்பிரசாதங்களும் வழங்கப்பட்டிருக்கின்ற போதும், இன்று இந்த பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் நிறைவேற்று அதிகாரிகள் நிறைவேற்றுப் பணிப்பாளர்களில் அரச உதவியின்றி இந் நிறுவனங்களைக் கொண்டு நடத்த முடியாது என்று முறையிடாதவர்கள் எவரையுமே காணமுடியாதுள்ளது. அதேவேளை அந் நிறுவனங்களை அரசுக்கு மீளக்கையளிக்கவும் முன் வருவதில்லை இலாபங்களை தனியார் மயப்படுத்தல், நட்டங்களைக் தேசிய மயப்படுத்தல் என்னும் கோட்பாட்டினை நடைமுறைப்படுத்தியமையினாலேயே இன்று பெருந் தோட்டங்களுக்கு இந்நிலை நேர்ந்துள்ளது.
பெருந்தோட்டத் தொழிற்றுறைக்குப் புத்துயிரளித்தல்
இன்று 20 பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் தனியார் துறை முகவரமைப்பு நிறுவனங்களினால் முகாமைத்துவம் செய்யப்படுகின்றன மூன்று பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் இலங்கை அரச பெருந் தோட்டக் கூட்டுத்தாபனம் மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை ஆகியன அரசால் முகாமைத்துவம் செய்யப்பட்டு வருகின்றன.
அரச மற்றும் தனியார்துறை பெருந்தோட்ட நிறுவனங்களின் வளர்ச்சியைக் கண்காணிக்கவென பெருந்தோட்ட கண்காணிப்பு முகவரமைப்பு ஒன்று எற்படுத்தப்பட வேண்டும்
முகவரமைப்புக்களினால் நிர்வகிக்கப்படுகின்ற இருபது தனியார் மயப்படுத்தப்பட்ட பிராந்திய பெருந்தோட்ட நிறுவனங்கள் குறித்து மேற் குறிப்பிட்ட கண்காணிப்பு முகவரமைப்பின் மூலமாக அவை மேற்கொள்ள வேண்டிய தொழில் முயற்சி நடவடிக்கைகள் சம்பந்தமாக விரிவாகக் கற்கை செய்யப்பட வேண்டும் இக் கற்கையில் பெருந்தோட்டத்துறையின் நிர்வாகம், சொத்துக்கள் பராமரிப்பு, பண்ணையாளார்கள், நிதி முகாமைத்துவ கடன்கள் பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் போன்ற அனைத்து விடயங்கள் குறித்துப் மதிப்பீடு செய்ய வேண்டும் இவ்வாய்விணை மேற்கொள்கையில் இலாபத்தை மட்டுமே பிரதான அளவீடாகச் கொள்ளல் ஆகாது இலாபம் காட்டியுள்ள பல பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாக அக் கம்பனிகளின் சொத்துக்கள் சீர் கேடுற்றுள்ளன.
இவ்வாய்வின் அடிப்டையில் சிறந்த முறையில் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளை நிர்வகித்த முகவரமைப்பு நிறுவனங்களுக்கு பின்வருவன பரிந்துரை செய்யப்படுகின்றன.
அவர்களுடைய குத்தகை உரிமை 99 ஆண்டுகள் வரை நீடிக்கப்படலாம்
பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளின் சொத்துக்களை மீள் மதிப்பீடு செய்து அதனடிப்படையில் குத்தகைக் கட்டணத்தை மீளமைத்தல்
பிரதந்திய முகவரமைப்புக்களின் உடன்பாட்டுடன் ஒவ்வொரு பிராந்திய பெருந்தோட்டம் கம்பனிகளுக்குமுரிய பணிநிலையாளர்கள் தொகை தீர்மானிக்கப்பட வேண்டும் இதன் மூலம் எல்லாத் தரங்களிலும் அதிகமான பணியாளார்கள் ஈரக்கும் நிலை நீக்கப்பட வேண்டும். தீர்மானிக்கப்பட்ட கிலோ அடிப்படையிலான முகாமைத்துவக் கட்டணம் பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகளினால் முகவரமைப்பு நிறுவனங்களுக்கு வாங்கப்பட வேண்டும்.
குத்தகைக் கட்டணக்கிற்கு மேலதிகமாக இலாபத்தில் பங்கும், பெருந்தோட்ட கண்காணிப்பு முகவரமைப்புச் செலவினங்களுக்காக கிலோ அடிப்படையிலான ஒருகட்டணமும் பெருந்தோட்டக் கம்பனிகளின்பால் அரசுக்கு செலுத்தப்பட வேண்டும்
தற்போது குத்தகை ஒப்பந்தம் மேற்குறிப்பிட்டவற்றையும் வேறு அவசியமானவற்றையும் உள்ளடக்கி மீளமைக்கப்பட வேண்டும்
இவ்வாறான ஆய்வுக்குப்பின் பிராந்திய பெருந்தோட்டக்கம்பனிகளைத் திறமையாக நிர்வகிக்காத முகவரமைப்புக்களின் குத்தகை ஒப்பந்தம் தற்போதுள்ள சிரத்துக்களின் அடிப்படையில் முடிவுக்குக் கொண்டுவரப்பட வேண்டும்.
குத்தகை ஒப்பந்தத்தக்கு மாறாக ஏதேனும் செலவினங்கள் ஏற்பட்டிருந்தால் அவற்றை முகவரமைப்புகளிடமிருந்து அறவிட சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அத்தகைய பிராந்திய பெருந்தோட்டக் கம்பனிகள் புதிய முகவரமைப்புக்களிடம் குத்தகைக்கு விடப்படுதல் வேண்டும்.
பிராந்திய பெருந் தோட்டக் கம்பனிகளின் சொத்துக்களின் ஒரு குறிப்பிட்ட வீதத்தின் பெறுமதிக்கு சமமான திரும்பப் பெறப்பட முடியாத வங்கிப் பிணையொன்றினை முகவரமைப்புக்கள் அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் பெருந்தோட்டக் கம்பனிகள் திறமையாக நிர்வகிக்கப்படாதவிடத்து இப்பினையின் மூலமாக அரச நட்ட ஈட்டினைப் பெற்றுக்கொள்ள இரு சாராரும் உடன்பட வேண்டும்.
இவை ' மஸ்கெலட்' குழுவினர் முன்வைத்துள்ள வேலைத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாகும் இவை தவிரவும் இலங்கை அரசு பெருந் தோட்டக் கூட்டுத் தாபனம், மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை ஆகியவற்றைப் புனரமைக்கவும் சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன பெருந் தோட்டத்தறை குறித்து ஆழமான அறிவும் நீண்ட நாள் அனுபவமும் கொண்டவர்களால் முன்வைக்கப்பட்டுள்ள இவ்வேலைத்திட்டத்தை அசட்டை செய்யாது கரத்தில் கொள்ள வேண்டியது உரியவர்களின் கடமையாகும்.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...