தொழிலாளர்களுக்கு மாதத்தின் 12 நாட்களுக்கு தற்போதிருக்கும் நடைமுறையின் அடிப்படையிலும் மற்றும் ஏனைய வேலை நாட்களுக்கு உற்பத்தி யின் அடிப்படையிலும் ஊதியம் செலுத் தும் யோசனையை பெருந்தோட்ட கம்ப னிகள் முன்வைக்கின்றன.
இதுதொடர்பாக பெருந்தோட்ட முதலாளிமார் சம்மேளனம் அனுப்பியுள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்ப ட்டுள்ளதாவது, மாகாண பெருந்தோட் டக் கம்பனிகள் (RPCs) தோட்ட / பெருந் தோட்டத்துறைத் தொழிலாளர்களுக் கான ஊதியம் தொடர்பில் திருத்திய ஒரு யோசனையை முன்வைத்துள்ளது.
இது இப்போதைய ஊதியம் பற்றிய சுற்றுப்பேச்சுவார்த்தைகளின் ஆரம்பத்திலிருந்தே தொழிற்சங்கங்கள் விடுத்து வரும் கோரிக்கைகளுக்கு உற்பத்தித்திறன் முன்னேற்றத்தை வலியுறுத்தும் மாகாணப் பெருந்தோட்டக் கம்பனிகளுக்குமிடையேயுள்ள (RPCs) இடைவெளியை நிரப்பும் கலப்புத் தீர்வு (Hybrid) முயற்சியாகும்.
இதன் பிரகாரம் திருத்திய செயற்றிட்ட யோசனையானது மாதத்தின் 12 நாட்களுக்கான ஊதியம் தற்போது நடைமுறையிலுள்ள வரவு பதிவு அடிப்படையிலும் மற்றும் ஏனைய வேலைநாட்களுக்கான ஊதியம், உற்பத்தித் திறன் அடிப்படையிலான வருமானப்பகிர்வு அடிப்படையிலும் செலுத்தும் யோசனையாகும்.
இந்த உற்பத்தித் திறன் பெரும்பாலான நின்று நிலைக்கும் முற்போக்கான தேயிலைப் பொருளாதாரங்களில் பின்பற்றப்படுவதுடன் மற்றும் தொழிலாளர்களின் ஈடுபாட்டை மேம்படுத்தி அதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு அதிகரித்த சம்பாதியத்தை பெற்றுக்கொடுக்கிறது.
மாதத்தின் 12 நாட்களுக்கு விண்ணப்பிக்ககூடிய ஊதியம் தற்போதைய சகல நடைமுறைகளுடனும், மோசமான நிதி நிலைமைக்கிடையிலும் தொழிலாளர்களின் எதிர்பார்ப்பைக் கவனத்தில் எடுத்து மாகாண பெருந்தோட்ட கம்பனிகள் நாளாந்த ஊதியப் பொதியை 100 ரூபா ஆல் அதிகரித்து 720விற்கு உயர்த்துகிறது. ஏனைய நாட்களுக்கான ஊதியம் (உற்பத்தித்திறன் அடிப்படையிலான வருமானப் பகிர்வு முறையில் விண்ணப்பிக்கத்தக்கது).
முன்கூட்டியே மாகாண பெருந்தோட்டக் கம்பனிகளால் (RPCs) முன்மொழியப்படும் கிலோ ஒன்றிற்கான வீதத்தில் செலுத்தப்படும். இந்த வீதம் சிறு தேயிலைத் தோட்ட துறையிலுள்ள 75% தேசிய பச்சை இலை உற்பத்திக்குப் பொறுப்பான தேயிலை பறிப்பவர்களுக்கு தற்போது செலுத்தப்படும் கிலோ ஒன்றிற்கான கொடுப்பனவு வீதத்தை விட குறிப்பிடத்தக்களவிற்கு கூடுதலானதாகும்.
தொழிலாளர் பங்களிப்பின் மூலம் கூடுதலான உற்பத்தித்திறனை ஊக்குவிக்க முடியுமென மாகாண பெருந்தோட்ட கம்பனிகள் நம்பிகையுடன் உள்ளன. இந்த விடயத்தில் இலங்கை சகல ஏனைய தேயிலை உற்பத்தி நாடுகளின் வரிசையில் குறிப்பிடத்தக்களவு பின் தங்கி நிலையிலேயேயுள்ளன. இந்த புதிய முன்மொழிவு தொழிலாளர்கள் தற்போது பெற்று வரும் சம்பாத்தியத்திற்கு மேலாக ஓரளவு அதிகரித்த வருமானத்தைப் பெற வழிவகுக்கிறது.
ஊதியத்தை தனியே வரவுப் பதிவின் அடிப்படையில் செலுத்துவதற்குப் பதிலாக, உற்பத்தியுடன் இணைத்ததன் மூலம் உற்பத்தித்திறனை முடிந்தளவு 50 வீதத்திற்கு முன்னேற்ற முடிவடைவதுடன் அதே அளவிற்கு தொழிலாளர்களின் வருமானத்தையும் அதிகரிக்க முடியுமென்ற நிலைப்பாட்டிலேயே மாகாண பெருந்தோட்டக் கம்பனிகள் உள்ளன.
உலகம் பூராகவுமுள்ள பெரும்பாலான தேயிலை, இறப்பர் உற்பத்தி நாடுகளில் உள்ளது போன்று ஊதியத்தை முழுமை யாகவே உற்பத்தியுடன் இணைப்ப தையே மாகாண பெருந்தோட்டக் கம்பனிகள் வலுவாக விரும்பும் அதேவேளை,
நாங்கள் எங்களால் முடிந்த அளவிற்கு தொழிற்சங்கங்களும், தொழிலாளர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆகக்குறைந்தளவிற்காவது தற்காலிக தீர்வை கண்டுள் ளோம் என மாகாண பெருந்தோட்டக் கம்பனிகளை (RPCs) பிரதிநிதித்துவப்படுத்தும். இலங்கை தோட்ட சங்கங்க ளின் தலைவர், றோஷான் இராஜதுரை கூறினார்.
“இனி வருங்காலத்தில் ஊதியம் / சம்பாதிப்பு ஆகியன உற்பத்தி அடிப்படையில் செலுத்துவதற்காக நாட்டும் அடிக்கல்லாக இதை நாம் எதிர்பார்க்கிறோம். இது இக்கைத்தொழிலில் உள்ள பாத்தியதாரர்கள் அனைவருக்கும் நன்மை பயக்குமென நம்புவதாகம் முக்கியமான மிகவும் வெற்றிகரமான முறையில் வருமான பகிர்வு முறையை பல மாகாண பெருந்தோட்டக் கம்பனிகள் பின்பற்றுவதைக் கவனிக்கும் போது தெரிகிறது”.
தற்போது மாகாண பெருந்தோட்டக் கம்பனிகளால் (RPCs) தேயிலை மற் றும் இறப்பர் தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு அவர்களின் துறை யை அல்லது உற்பத்தியை அல்லது வேறு எதாவதைக் கவனத்தில் எடுக்காது கட்டாயமாக 300 நாட்களுக்கு வேலை வழங்கி அவர்களுக்கு தொன்மையான வரவுப் பதிவு அடிப்படையில் ஊதியம் வழங்குவது தற்போது நடைமுறையிலுள்ளதாகும். இந்நிலை குறிப்பிடத்தக்களவு குறைந்த உற்பத்தித்திறனிற்கு மற்றும் அதிகரித்த ஆகு செலவிற்கு வழிவகுத்து இக்கைத்தொழிலை ஸ்திரமற்ற நிலைக்கு இட்டுச் சென்றது.
பூகோள ரீதியில் தேயிலை மற்றும் இறப்பருக்கான விலை மோசமாக வீழ்ச்சியடைய இந்த நீண்ட நாள் ஊதிய மற் றும் உற்பத்தி திறன் பிரச்சனைகள் தீவிரமடைந்து தேயிலை மற்றும் இறப்பர் ஆகியவை மோசமான நட்டத்திற்க்கு ஆளாகியது.
கடந்த ஆண்டுகளில் இறப்பரின் விலைகள் பெரும்பாலும் 50 வீதம் வீழ்ச்சி யடைந்த அதே காலப்பகுதியில் நாளாந்த தொழிலாளர் ஊதியம் தோட்டத் துறை யில் 20% வீதம் அதிகரித்தது.
அதேபோல தேயிலையிலும், உற்பத்தி ஆகு செலவு (RPCs) மற்றும் விற்பனைச் சராசரி 2005இல் சமனாக இருந்தது. அனால் அதன் பின்னர் நாளாந்த ஊதியம் வியக்கதக்களவு அதிகரித்து விற்பனைச் சராசரியைக் கிட்டத்தட்ட 63 சதவீதத்தால் விஞ்சியது.
ஆகவே 2015 முடிவில் மாகாண பெருந்தோட்டக் கம்பனிகள் உற்பத்தி செய்யப்பட்ட ஒரு கிலோ தேயிலைக்கு அண்ணளவாக 72ரூபா நட்டமும் மற் றும் ஒரு கிலோ இறப்பருக்கு 82 ரூபா நட்டமும் அடைந்தன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...