தோட்டங்கள் யாவும் கம்பனிகளுக்கு தாரை வார்த்து சுமார் 24 வருடங்களுக்கு மேலாகின்றன.
கம்பனிகள் பொறுப்பேற்கும் போது இதுவரை காலமும் தொழிலாளர்களுக்கு என்னென்ன சலுகைகள் இருந்தனவோ அவற்றில் எவ்விதமான மாற்றங்களும் இருக்காது என்று தெரிவித்த தொழிற்சங்க தலைமைகள், இன்று என்ன சலுகை கள் இருக்கின்றன என்பது பற்றி அறிந்திருக்கின்றனவா?
பதுளை பகுதியில் ஒரு கம்பனிக்குச் சொந்தமான தோட்டங்களில் தொழில் புரிந்து ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த தேயிலை தூள் கடந்த பெப்ரவரி மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
2015 டிசம்பர் மாதம் வரை வழங்கப்பட்ட தேயிலைத்தூள் 2016 ஜனவரி மாதம் புதிதாக பொறுப்பேற்ற தோட்ட முகாமையாளரால் நிறுத்தப்பட்டுள்ளது.
அதற்கு அவர் கூறும் காரணம், தொழிலாளர் ஒருவர் ஓய்வு பெறும்போது இருபாலாரும் 60 வயதை பூர்த்தி செய்திருக்க வேண்டும்.
இல்லாவிடில் தேயிலை தூள் வழங்க வேண்டாம் எனக்கம்பனிகளால் உத்தரவுக்கடிதம் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
2015 டிசம்பர் வரை தேயிலை தூள் வழங்கப்பட்டமை கம்பனிகளுக்கு அல்லது புதிய முகாமையாளர்க்கு தோட்டக் காரியாலயத்தில் உள்ள விபரங்கள் தெரியாதா?
இதில் வேடிக்கை என்னவென்றால் அரசாங்கத்தால் தோட்டங்கள் நடத்தப்பட்ட போதும், கம்பனிகள் பொறுப்பேற்ற போதும் தோட்ட நிர்வாகத்தால் ஓய்வு வழங்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அப்போது 60 வயது பூர்த்தியாகவில்லை என்று இப்போது தேயிலைத்தூள் கிடையாது என்று சொல்வது வேடிக்கை மட்டும் அல்ல விநோதமாகவும் உள்ளது.
இத்தனைக்கும் வருடத்திற்கு இரண்டு முறை 6ஆவது மாதம், 12ஆவது மாதம் நடக்க முடியாமலும் கண் தெரியாமலும் நாங்கள் இன்னும் இறக்கவில்லை என்று அடையாள அட்டையைக் காட்டி பதிவு செய்தே இதுவரை காலமும் தேயிலைத் தூள் பெற்று வந்தார்கள் அல்லது தோட்ட வைத்தியரால் சுகவீனத்தில் இருப்பதாக கடிதம் கொடுக்க வேண்டும். இவர்களுக்கே இன்று இந்த நிலைமை.
தடுக்கி விழுந்தால் சங்கத்தின் மேல் தான் விழ வேண்டும் என்ற அளவிற்கு தொழிற்சங்கங்கள் பெருகிவிட்டன. கேட்கத்தான் யாருக்கும் தைரியம் இல்லை.
இத்தனைக்கும் இவர்கள் தொழில் செய்யும்போது தொழிற்சங்கத்திற்கு சந்தா செலுத்தியவர்களே! அதே நேரம் பதுளை தொழிற்றிணைக்களத்தில் ஆண் 55 வயது, பெண் 50 வயதில் ஓய்வு பெற தகுதி உடையவர்கள் என்ற அறிவுறுத்தல் இன்றும் பார்வைக்கு இருக்கின்றதே!
ஆனால், தோட்டத்தில் பெண் தொழிலாளி ஆயுள் உள்ள வரை வேலை செய்ய லாம். ஆண் தொழிலாளி 60 வயதில் நின்று விடலாம் என்ற புதிய நடைமுறையே தற்போது உள்ளது.
வருடா வருடம் ஓய்வு பெற்றவர்களுக்குப்பதிலாக புதியவர்களை எடுக்கும் நடைமுறையே இல்லை. ஆட்கள் குறை யக்குறைய ஒவ்வொரு மலையாக மூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஓய்வு பெற்றவர்களை வைத்து குறைந்த சம்பளத்தில் வேலை வாங்குவது இதுவே இன்றைய நிலைமை.
ஓய்வுபெற்ற தொழிலாளியின் தேயிலை த்தூளை நிறுத்தி அதனால் கிடைக்கும் இலாபத்தில் தோட்டத்தில் என்ன அபிவி ருத்தி நடக்கின்றது? ஒன்றுமே இல்லையே.
ஒரு தொழிலாளி தோட்டத்தில் வேலை செய்து ஓய்வுபெற்று சாகும் வரைக்குமான ஆதாரம் இந்த தேயிலைத்தூள். அது வும் இல்லை என்றால் இறக்கும் போது பெட்டிக்காசு (பெரிய பணம் 2500)இல்லை. குழிவெட்ட ஆளும் இல்லை. தோட்டத்தில் இடமும் இல்லை.
எனவே, தொழிற்சங்க தலைமைகள் நடைமுறைக்கு வராத மே தின தீர்மானங் களை விடுத்து ஓய்வூதியம் பெற்ற தொழி லாளர்களுக்கு 2016 பெப்ரவரி மாதம் முதல் அவர்களுக்கு உரிய தேயிலைத் தூளை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுப்பீர்களாக.
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...