"ஓற்றை ஆட்சிதான், பௌத்தத்திற்க முன்னுரிமைதான. ஏன முன்முடிவுகள் எடுத்துக்கொண்டு எவ்வாறு பதிய அரசியலமைப்பு குறித்து திறந்த மனதுடன் பேசமுடியும்" என கேள்வி எழுப்பும் நுவரேலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ், "இந்த முறைசாரா முறைமைக்குள் ஜனாதிபதி இயல்பாகவே உள்வாங்கப்பட்டுவிட்டார். அதேநேரம் அவர் தான் தெரிவு செய்யப்பட் நிலைமை, மக்களின் நடத்தை என்பதை புரிந்துகொண்டவராக நேர்மையுடன் செயற்படவும் எத்தணிக்கின்றார். ஆனால் ஒரு சமநிலையில் இயங்கும் நிலைமையில் இங்கிக்கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது. குறிப்பாக சிறுபான்மை சமூகம் அவர் மீது வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றவேண்டிய பொறுப்பு இருக்கிறது" எனவும் வலியுறுத்துகின்றார்.
அரசியலமைப்புச் சீர்திருத்த முயற்சிகளில் உருவாகியிருக்கும் நெருக்கடிகள் மற்றும் சமகால அரசியல் நிலைமைகள் குறித்து ஞாயிறு தினக்குரலுக்கு அளித்துள்ள நோர்காணல் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்திருக்கின்றார். அவரது நோர்காணலின் முழுவிபரம்:
இலங்கை அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள தளம்பல் போக்கு குறித்து நேரடி வானொலி நிகழ்ச்சி ஒன்றில் திலகர் எம்பி தெரிவித்த கருத்துக்களின் முக்கியத்துவம் கருதி அவருடன் இடம்பெற்ற விரிவான நேர்காணல் தினக்குரல் வாகர்களுக்காக….
தற்போதைய அரசாங்கத்தை கவிழ்த்து புதிய ஆட்சியை அமைக்கப்போவதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்திருக்கும் கருத்துகள் பற்றி ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினராக என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எதிர்கட்சியில் இருக்கும் போது எவரும் சொல்லக்கூடிய ஒரு கருத்தைத்தான் முன்னாள் ஜனாதிபதி தெரிவித்திருக்கிறார் என நினைக்கிறேன். தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சித் தலைவராக இருக்கும்போது பல தடவை இவ்வாறு சொன்னார். ஆனால் 2015 ல் நாங்கள் ஆட்சியை பிடிப்போம் என தூரநோக்கான ஓர் இலக்கினை அவர் முன்வைத்தார். அது சாத்தியமுமம் ஆனது. ஆனால் மகிந்த ராஜபக்ஷ தற்போதைய அரசாங்கத்தின் பொருளாதார திகில் நிலை (ஊசளைளை) அடிப்படையில் தோன்றியிருக்கக் கூடிய அரசியல் தளம்பல் அடிப்படையில் குழம்பிய குட்டையில் மீனைப்பிடிக்கலாம் என சொல்வது போலவே தோன்றுகிறது.
காரணம், அவரின் ஆட்சி நிறைவுறுத்தப்பட்டு இப்போதுதான் இரண்டு வருடங்கள் ஆகியிருக்கின்றன. அதற்குள் மக்களின் தேர்தல் நடத்தையில் மாற்றம் ஒன்று வருமா என்கின்ற கேள்வியை நாம் முன்வைக்க வேண்டியுள்ளது. உண்மையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலை மைத்திரிபால சிரிசேனவோ அல்லது மக்களோ கூட கோரவில்லை.அதனை முன்வைத்தது மகிந்த ராஜபக்ஷவேதான். அவரே முன்வைத்த தேர்தலில் அவரே தோல்வி கண்டார். அதற்கு மைத்தரி தரப்பினர் முன்வைத்த ‘நல்லாட்சி’ வரவேண்டும் என்பதை விட நடைபெற்றுக்கொண்டிருந்த சர்வாதிகார குடும்ப ஆட்சி முடிவக்கு கொண்டு வரப்படல் வேண்டும் என்ற மனஎண்ணம் தான் காரணம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். எனவே அந்த மக்களின் மன எண்ணத்தை புரிந்துகொண்டு செய்ற்பட்ட சிவில் சமூக அமைப்புகள் முன்வைத்த நல்லாட்சி பிரசாரம் உருவானதே தவிர நல்லாட்சியை உருவாக்கிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் ஜனாதிபதி தேர்தல் மக்கள் முன்னிடத்தில் வைக்கப்படவில்லை.
உண்மையில் நடந்ததது என்னவெனில் ஏற்கனவே இரண்டு முறை ஜனாதிபதியாக இருந்தவர் தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி தான் தவணை நிபந்தனைகள் அற்றவகையில் நிரந்தரமாக ஜனாதிபதியாக இருந்து ஆட்சி நடத்திவிடவேண்டும் எனும் எண்ணத்தில் தான் இந்த தேர்தல் முன்வைக்கப்படுகின்றது. என்னதான் பாராளுமன்ற அனுமதி பெற்று 18 வது திருத்ததின் ஊடாக அரசியல் அமைப்பில் மாற்றத்தைக் கொண்டு வந்து தான் தேர்தலை நடாத்த முன்வந்தபோதும் கூட மக்கள் அந்த ஜனாதிபதி தேர்தலை ஒரு சர்வஜன வாக்கெடுப்பு போல மாற்றிக் காட்டினார்கள். இதுதான் மக்கள் சக்தி. அதாவது மகிந்தவை மாத்திரம் அவர்கள் நிராகரிக்கவில்லை. இரண்டு தடவைக்கு மேற்பட்ட சந்தர்ப்பங்களில் ஒருவரே ஜனாதிபதியாக இருந்துவிட வேண்டும் எனும் பாராளுமன்ற தீர்மானத்தையே மக்கள் தமது வாக்கு பலத்தால் மாற்றிபோட்டார்கள். இதுதான் மக்களின் தேர்தல் (நுடநஉவழைn டீநாயஎழைச) நடத்தை என்கிறேன். தேர்தல் முறை எத்தகைய விஞ்ஞான பூர்வமானது என்றாலும் மக்களின் நடத்தையிலும் ஒர் உளவியலும் சமூக விஞ்ஞானமும் இருக்கின்றது என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனவே மகிந்த அறிவித்துவிட்டார் என்பதற்காக ஆட்சி மாற்றம் ஒன்றிற்கான சூழல் உடனடியாக இல்லை.
அப்படியெனில் இப்போதைய திகில் நிலை யின் ஊடாக மக்கள் மன எண்ணம் எவ்வாறானது என கணிக்கின்றீர்கள்?
நல்ல கேள்வி. இப்போது மக்களின் மன் எண்ணத்தில் மாற்றம் ஏற்பட்டிருக்கின்றது. அவர்களது முதலாவது மண எண்ணத்தை தேர்தல் நடத்தையின் ஊடாக வெளிப்படுத்தி ஆட்சியை மாற்றிவிட்டார்கள். மக்கள் வெற்றியும் பெற்றுவிட்டார்கள். எனவே மக்கள் தொடர்ந்தும் அதே மனநிலையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இப்போது அவர்களது மன எண்ணம் மாற்றப்பட்ட அரசாங்கத்தில் அதாவது தாங்கள் விரும்பாத ஆட்சியை மாற்றுவதற்கு முன்வைக்கப்பட்ட ‘நல்லாட்சி’ எனும் கோஷத்துக்கு கீழான அரசாங்கத்தில் எத்தகைய அபிவிருத்தி தங்களை நோக்கி வருகின்றது என்பதான எததிர்பார்ப்பினை மக்கள் இப்போது வெளிப்படுத்துகின்றார்கள். அது அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வதாக அமையாத விடத்;;திலேயே இப்போதைய திகில் நிலை ஒன்று தோற்றம் பெறுகின்றது. இதனை அரசாங்கம் புரிந்துகொள்ளவேண்டும். ஆனால் தனது தோல்வி தாக்கத்தில் இருந்து மீளாத மகிந்த ராஜப்கஷ இந்த திகில் நிலையை தனக்கு சாதகமாக்கி ஆட்சியை மாற்றுவோம் என்கிறார். இப்போது மக்களின் மனஎண்ணம் ஆட்சி மாற்றத்துக்கானதல்ல. அபிவிருத்தியினை எதிர்பார்ப்பாகக் கொண்டது. எனவே அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை முன்வைத்து, முதலீடுகளை உள்வாங்கி விலை குறைப்புகளைச் செய்து பணப்புழக்கத்தை அதிகரிக்கும் திட்டங்களைச் செய்யும் போது மக்களின் மனநிலை சரி செய்யப்படலாம். இதற்கு பொதுத்தேர்தல் ஒனறின் அவசியம் இல்லை. பொதுத் தேர்தல் ஒன்றிற்கு செல்லாமல் மகிந்தவுக்கு ஆட்சியை மாற்றவும் முடியாது.
அப்படியானால் கடந்த இரண்டு வருட காலத்தில் நல்லாட்சி அரசாங்கத்தில் அபிவிருத்தி நடவடிக்கைககள் இடமபெறவில்லை என்ற கருத்து மக்கள் தரப்பில் இருந்து முன்வைக்கப்டுகின்றது என்பதை ஏற்றுக்கொள்கிறீர்களா?
நிச்சயமாக. இது வெளிப்படையாக மக்கள் பேசிக்கொள்கின்ற விடயமாக மாறியிருக்கின்றது என்பதை மறைக்காமல் சொல்லவேண்டும். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கான மனநிலையை மக்கள் இப்போது சிந்த்திக்க வேண்டியவர்களாகவும் உள்ளார்கள். காரணம் , நிறைவேற்று அதிகார ஜனாதிபதிமுறையை கையில் வத்துக்கொண்டு எதேச்சதிகாரமாக செயற்பட்ட ஆட்சி 19 வது அரசியலமைப்பின் ஊடாக மாற்றப்பட்டு;ளளது. ஜனநாயகத்தை வலுப்படுத்தும் 17வது திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதனை நடைமுறைப்படுத்தாத முன்னைய ஆட்சி 18வது திருதத்ததை கொண்டு வந்து தனது தனிப்பட்ட அதிகாரங்களை அதிகரித்துக்கொண்டமையையே செய்திருந்தது என்பதையும் மக்கள் மற்நதுவிடக்கூடாது. ஆனால் இந்த இரண்டும் இப்போது மாற்றம் கண்டிருக்கிறது. நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையில் தளர்வுகள் செய்யப்பட்டு பாராளுமன்றத்துக்க அதிகாரம் பகிரப்பட்டிருக்கின்றது. அதேபோல 17 வது திருத்ததின்படி சுயாதீன ஆணைக்குழுக்கள் நியமக்கப்பட்டு இப்போது பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இவை அரசாங்கம் மேற்கொண்ட ‘பண்புசார்’ (ஞரயடவையவiஎந ) மாற்றம்.
ஆனால் மக்கள் இந்த பண்புசார் மாற்றங்களை கட்புலன் ரீதியாக உணர முடியாத நிலையிலேயே அபிவிருத்தி எனும் எதிர்பார்ப்பைக் கொண்டு இன்றைய அதிரு;பதி நிலையை வெளிப்படுத்திநிற்கிறார்கள். அவர்களுக்கு இப்Nபோது கண்ணுக்கு புலப்படக்கூடியதான (ஏளைiடிடந) அபிவிருத்திப்பணிகளைக் காணக்கிடைக்கவில்லை. பாதைகள் போடுவது பாலங்கள் கட்டுவது விமான நிலையம் அமைப்பது என கடந்த ஆட்சி காலத்தில் இடம்பெற்றதுபோன்ற ஓர் எதிர்பார்ப்பு மக்களிடத்தில் தோன்றியுள்ளது. வெள்ளைவேன் கலாசாரத்திற்கு உட்பட்ட அல்லது அந்த அச்சத்தை எதிர்கொண்ட மக்கள் கூட்டம் உண்மையில் இந்த அபிவிருத்தி மாற்றங்களைக் காட்டிலும் அந்த பண்புசார் மாற்றங்களை அவதானித்து திருப்தி கொண்டுள்ளனர். ஆனால் அபிவிருத்தியை எதிர்பார்ப்போர் மகிந்த ஆட்சியின் காலத்தில் அதாவது 2005 முதல் 2014 வரை மேற்கொள்ளப்பட்டது போன்ற 9 வருடகால அபிவிருத்தியை 2 வருடகாலத்தில் எதிர்பாரப்பதும் தவறாகிவிடும். ஆனால் அத்தகைய அபிவிருத்தி நோக்கிய அறிகுறிகளை அரசாங்கம் வழங்காதிருப்பதும் அரசாங்கத்தின் மீதான அதிருப்திக்கு காரணம் என்பதையும் மறுப்பதற்கு இல்லை.
அப்படியெனில் இந்த கண்ணுக்கு புலனாகும் அபிவருத்தியை முன்னெடுப்பதில் உள்ள சிக்கல்கள் என்னவென நினைக்கிறீர்கள்?
தேசிய அரசாங்கம் தான். உண்மையில் ஜனாதிபதி தேர்தலில் மக்களின் மன எண்ணம் என்பது ஆட்சியை மாற்றுவது. பொதுத் தேரதலில் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட மன எண்ணம் என்பது ‘நல்லாட்சியை’ அமைப்பது. இந்த இரண்டாவது தொடர்பில் மக்களுக்கு பாரிய எதிர்பார்ப்பை உருவாக்கிவிட்டு அவற்றை நடைமுறைப்படுத்த விழையும்போது அதற்க தடையாக தேசிய அரசாங்க உறவில் நிலவும் சுமூகமற்ற தன்மை குழப்பகரமான தோற்றப்பட்டை வெளியே காட்டுகின்றது. ஜனாதிபதி தேர்தலில் மகிந்த அணியில் நின்ற பலர் பொதுத் தேர்தல் முடிந்த அடுத்த நாளே மைத்திரி அணியினர் ஆகின்றனர். அதேநேரம் பொதுத் தேர்தலில் போது மைத்திரி அணியில் சேர்ந்துகொண்டே மகிந்தவடன் இணைந்து வாக்கு கேட்டு வெற்றிபெற்று ஆட்சியில் பங்காளி ஆகின்றனர். எனவே இத்தகைய தேசிய அரசாங்க இணைவு மக்கள் எதிர்பாராத இணைவு. இதுதான் இப்போது உள்ள பிரச்சினை. மகிந்த மாற்றணியாக தோன்றினாலும் மகிந்தவின் அணியினர் மாறவில்லை. அவர்கள் கூட்டு எதிர்கட்சியில் மாத்திரம் இல்லை என்பதை பரிந்துகொள்ள வேண்டும். இதுதான் இன்றைய சிக்கலான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது.
இந்த நிலை வராமல் தடுத்திருக்க என்ன செய்திருக்கலாம்?
மீண்டும் மக்களின் நடத்தை பற்றியே பேசியாகவே;ணடியிருக்கின்றது. மைத்திரிபால சிரிசேன பொதுவேட்பாளராக களமிறங்கியபோது அவர் மகிந்தவின் கொள்கையையும் அதனை ஆதரிக்கும் கூட்டத்தினரையும் முழுமையாக எதிர்ப்பவராகவம் எண்ணி பொது வேட்பாளராக நினைத்து வாக்களித்தார்களே அன்றி ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி தலைவராக வருவார் என்ற எதிர்பார்ப்பு வாக்களித்த எவருக்கும் இருக்கவில்லை. ஆனால் வெற்றிபெற்றவுடன் அவர் ஒரு கட்சியின் தலைவரானதும் அவருக்கு இரட்டைச்சுமை தாங்கவேண்டிய கட்டாயம் வந்தது. எனவே குருவித் தலையில் பாரங்கல்லாக புதிய பொறுப்பு பதிய சூழல் பழமையான அழுத்தங்கள் என அவரில் ஒரு தடுமாற்றத்தை உருவாக்கியது. இந்த சமநிலையை பேணுவதற்கு எடுக்கின்ற பிரயத்தனங்களில் அவர் அதிக நேரத்தை செலவிட வேண்டி ஏற்பட்டதால் குழுமனப்பான்மை கொண்ட ஒரு அரசாங்த்துக்கு அவர் தலைமை ஏற்கவேண்டி வந்தது. உண்மையில் அவர் எடுத்திருக்க வேண்டிய நிலைப்பாடு என மக்கள் எதிர்பார்த்தது வேறு. இவர் பொது ஜனாதிபதியாகவே இருப்பார். பொதுத் தேர்தலில் அதிக ஆசனங்களை உறுதிப்படுத்தும் கட்சியை ஆட்சியமைக்க சபாநாயகர் கோரியிருப்பார். ஜனாதிபதி நடு நிலையில் இருந்து ‘நல்லாட்சியை’ உருவாக்கும் நோக்கிலான பண்புசார் மாற்றங்களை செய்வதில் மாத்திரம் கவனம் செலுத்தி தனது பதவி கால முடிவின்போது ஜனாநாயகத்தை உறுதிப்படுத்தும் ஆட்சி முறை ஒன்றை இலங்கைக்கு விட்டுச்செல்வார். அது இந்த ஐந்து ஆண்டுகளில் இடம்பெற்றுவிடும் என்ற எதிர்பார்ப்பு இப்போது அவ்வாறானதாக இல்லை.
ஒரு கட்சியின் தலைவர் என பொறுப்பேற்றதுமே அது சார்ந்தும் சிந்திக்க வேண்டிய நிலை அவருக்கு உருவாகியிருக்கிறது. சில நேரம் தேர்தலுக்கு முன்பே இத்தகைய கருத்து மக்களுக்கு தெரிந்திருந்தால் மக்களின் நடத்தை மாறி அமைந்திருக்கலாம். குறிப்பாக சிறுபான்மை மக்களின் தேர்தல் நடத்தை குறித்து வந்திருந்த ஒரு திரட்சியில் மாற்றம் வந்திருக்கும். ஆனால் சிறுபான்மை மக்களின் மனதில் எவ்வாறு மகிந்தவை ஜனாதிபதி பதவியில் இருந்து மாற்றிவிட வேண்டும் என எண்ணம் இருந்ததோ அதுபோலN ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி யின் சில முக்கிய ஆளுமைகளின் நிகழ்ச்சி நிரலில் மகிந்தவை ஜனாதிபதி பதவியில் இருந்து மாத்திரமல்ல கட்சியின் தலைவர் பதவியில் இருந்தும் நீ;க்கிவிட வேண்டும் எனும் உள்கட்சி நிகழ்ச்சிநிரல் இருந்திருப்பது மக்களுக்கு தெரியாது.
எனவே இன்றைய திகில் நிலை தோன்றாமல் இருந்திருக்க மைத்திரிபால ‘பொது ஜனாதிபதி’ ஒருவராகவே இருந்திருக்க வேண்டும் என்பதே எனது எண்ணம். அப்படி இருந்திருந்தால் யார் எந்த முன்மொழிவைச் செய்தாலும் அது அபிவிருத்தி மாற்றமாக இருக்கட்டும் அல்லது அரசியலமைப்பு மாற்றமாக இருக்கட்டும் மக்கள் வழங்கிய ஆணைப்படி ஒரு பொதுநிலையில் அவரால் செயற்பட்டிருக்க முடியும். ஆனால் இப்போது மறைமுகமாக இயங்கும் கொள்கைவகுப்பாளர்களின் பிடியில் இருந்து நழுவிச்செல்ல முடியாதவராக அவர் கட்டுண்டு நிற்கிறார்போல தெரிகிறது.
யார் அந்த கொள்கை வகுப்பாளர்கள் என நினைக்கின்றீர்கள்?
மேலைத்தேய நாடுகளில் குறிப்பாக அமெரிக்க போன்ற நாடுகளில் ‘முறைசார்ந்த’ வகையிலான நிரந்தர கொள்கை வகுப்பாளர்கள் இருக்கிறார்கள். ஆட்சி மாற்றம் ஏற்பட்டாலும் ஆள் மாற்றம் ஏற்பட்டாலும் அந்த கொள்கை வகுப்பாளர்களின் நிலைப்பாடுகளில் இருந்து பாரிய மாற்றத்துடன் அரசாங்கமோ ஜனாபதியோ இயங்க முடியாது என்பதாக பரவலாக பேசப்படுவதுண்டு. அது போன்ற முறைமைகள் தென்னாசிய நாடுகளில் இல்லை என்பாக கூறப்படுவதுண்டு. என்னைப் பொறுத்தவரை இங்கும் அப்படியான கொள்கை வகுப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ‘முறைசாராத’ வகையில் இயங்குகிறார்கள் என்பதாகவே நான் பார்க்கிறேன்.
பொது சனாதிபதியாக தெரிவுசெய்யபபட்டவர் கட்சி தலைவர் ஆவதும், புதிய அரசியலமைப்பு மாற்றத்ததை மேற்கொள்ள குறித்த ஒரு மதம் சார்ந்த பெரியவர்களிடம் அனுமதிபெறவேண்டும் என்பதோ, பௌத்தர் ஒருவரே ஜனாதிபதியாக அல்லது நாட்டை ஆள்பவராக இருக்க வேண்டும் என்பதோ எங்கும் முறைசார்ந்து எழுதப்படாத போதும் அத்தகைய செயற்பாடுகள் இடம்பெறுவதை தவிர்க்க முடியாது உள்ளது. இது முறைசாராத வகையில் முறைமைப்படுத்தப்பட்டுள்ளது. பதிய அரசியலமைப்பு மாற்றம் என சொல்லிவிட்டு பழையதில் இன்ன..இன்ன விடயங்களை மாற்ற முடியாது என அறிவிப்பதே ஏதோ ஒரு முறைமை இருக்க வேண்டும் என்று முறைசாரா தீர்மானம் ஒன்று இருப்பதால் தானே. ஓற்றை ஆட்சிதான், பௌத்தத்திற்க முன்னுரிமைதான. ஏன முன்முடிவுகள் எடுத்துக்கொண்டு எவ்வாறு பதிய அரசியலமைப்பு குறித்து திறந்த மனதுடன் பேசமுடியும். இந்த முறைசாரா முறைமைக்குள் ஜனாதிபதி இயல்பாகவே உள்வாங்கப்பட்டுவிட்டார் அதேநேரம் அவர் தான் தெரிவு செய்யப்பட் நிலைமை, மக்களின் நடத்தை என்பதை புரிந்துகொண்டவராக நேர்மையுடன் செயற்படவும் எத்தணிக்கின்றார் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் ஒரு சமநிலையில் இயங்கும் நிலைமையில் இங்கிக்கொண்டிருக்கிறார் என்பது புரிகிறது. குறிப்பாக சிறுபான்மை சமூகம் அவர் மீது வைத்த நம்பிக்கையை அவர் காப்பாற்றவேண்டிய பொறுப்பு இருக்கிறது.
ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் தமிழ் முற்போக்கு கூடடணியும் முஸ்லிம் கட்சிகளும் அரசாங்க மீது சில அதிருப்திகளை வெளிப்படுத்தியிருக்கின்றன. அதேநேரம் எதிர்கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு தொடர்ச்சியாக அரசுக்கு ஆதரவாக வாக்கு அளித்து வருகின்றது. உண்மையில் சிறுபான்மை கட்சிகளின் இன்றைய நிலைமைதான் என்ன?
இந்த சிறுபான்மை கட்சிகள் ஒவ்வொரு விடயத்தில் ஒவ்வnhரு மாதிரி இயங்குகின்றன. அது அவரவர்களின் அரசியல் செயற்பாட்டு எல்லையடன் தொடர்படையாதாக இருக்கின்றது. இது பற்றி விரிவாக தனியாகவே பேச நேரிடும். பொதுவாக சொன்னால் இந்த நாட்டில் ஆட்சியாளர்களாக சிறுபான்மை சமூகத்தினர் அமரும் சாத்தியம் மிகமிக குறைவு. ஆதற்கு அவர்களுக்கு திறமையோ அர்ப்பணிப்போ இல்லாமலில்லை. மக்களின் மன எண்ணம் மாறி அத்தகைய ஒரு சூழ்நிலை வந்தாலும் கூட நான் மேலே சொன்ன அந்த முiறாசாராத முறைமை அதனை செய்ய விடாது. அதனால்தான் ஆளுகின்ற எந்த தரப்ப ஆயினும் சிறுபான்மை கட்சிகள் அமைகின்ற ஆட்சிக்கு தமது ஆதரவை நேரடியாகவோ மறைமுகமாகவே வழங்கி தமது கோரிக்கைகளை வென்றெடுக்கும் ஒரு அரசியல் கலாசாரத்தை பின்பற்ற வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகின்றார்கள். இது காலாகாலமாக நடைபெற்று வந்துள்ளது. ஆரம்ப கால்களில் வடகிழக்கு தமிழ் தரப்பினரின் பிரதான பகுதியினர் அமைச்சுப்பதவிகளை வகித்த வரலாறு இருக்கிறது. பின்னர் அதுவே அங்குள்ள சிறு கட்சிகளின் தந்திரோபாயமாக மாத்திரம் மட்டுப்பட்டது. ஆனால் தேர்தல் காலங்களில் வாக்களிப்பதன் மூலமும் வாக்களிக்காமல் விடுவதன் மூலமும் கூட ஆட்சியாளர்களை தீர்மானிக்கும் அரசிலை அவர்கள் செய்திருக்கிறார்கள். 2005 ல் வாக்களிக்காமல் மகிந்தவை ஜனாதிபதி ஆக்கியதும், 2009 ல் மகிந்தவின் தளபதியாக இருந்த சரத் பொன் சேக்காவுக்க ஆதரவாக வாக்களித்து மகிந்தவை மாற்ற முயற்சித்து தோல்வி அடைந்தாலும் மீண்டும் பொறுமையாக விருந்து மகிந்தவை தலைவராகக் கொண்ட கட்சியின் செயலாருக்கு வாக்களித்து மகிந்தவை வீழ்த்தி அவரது கட்சி செயலாளரான மைத்திரியை ஆட்சியல் அமர்த்துவதிலும அவர்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள். அதேபோல தற்போது பாராளுமன்றிலே வரவு செலவுதிட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்து பிரதமருக்கும் தமது அதரவ கரத்தை நீட்டுகின்றனர்.
மலையகக் கட்சிகளும் முஸ்லிம் கட்சிகளும் இந்த மாறுதல் நிலைப்பாடுகளை எடுத்திருக்கின்றன. அதனை தெளிவாக விளக்கும் தேவை இல்லை. ஆனால் ஒட்டுமொத்தமாக இந்த சிறுபான்மை சமூகத்தின் மன எண்ண வெளிப்படுத்துகையை ஆளும் பெருந்தேசிய அரசாங்கங்கள் சரியாக புரிந்துகொள்கிறார்கள் இல்லை என்பதுதான் (அது எந்த கட்சி தலைமையிலான அரசாங்கம் ஆயினும் ) இந்த நாட்டில் சிறுபான்மை சமூகம் தொடர்பில் நிலவுகின்ற பாரிய பிரச்சினையாக இருக்கின்றது. சிறுபான்மைச் சமூகம் செய்யும் கொடைமுனைவை (ழுககநச) ஏற்பு செய்யும் (யுஉஉநிவயnஉந) மனப்பக்குவம் பெரும்பான்மை சமூகத்திலும் கட்சிகளிடத்திலும் சரியாக வரவில்லை. இந்த நாடு இன்னோரன்ன விளைவுகளைச் சந்தித்தும் பெரும்பாம்யிடத்தில் இந்த மனமாற்றம் ஏற்படாதது பெரும் மனக்குறையே.
நேர்காணல்:பி.பார்த்திபன்
நன்றி - தினக்குரல்
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...