'எங்கள் கடைகளில் பாம் ஒயிலில் தயாரித்த பொருட்கள் எதுவும் விற்பனைக்கு இல்லை'
கடந்த வாரம் முதல் 'பாம் ஒயில்' உற்பத்தி சம்பந்தமான தகவல்கள் அடங்கியதாக ஒரு புதிய தொடரை ஆரம்பித்ததே மலையக மக்களின் வாழ்வாதார தொழில்களான 'பெருந்தோட்டக் கைத்தொழில்' நிலைமைகள் நமது நாட்டில் தளம்பலுடன் வீழ்ச்சிப் போக்கில் சென்று கொண்டிருப்பது தொடர்பாகவும் கவனத்தை ஈர்ப்பதும்இ அதனூடாகப் இப்போதைக்கு நமது கைவசம் உள்ள தேயிலை றப்பர் கைத்தொழில்களைப் பாதுகாப்பதற்கான வழிவகைகள் குறித்து ஆராய்தல் மற்றும் தேயிலைக்கு மாற்றீடாக முள்ளுத்தேங்காய் எண்ணெய் (பாம் ஒயில் ) உற்பத்தி நடைபெறும் நாடுகளில் அது எவ்வாறு மேற்கொள்ளப்படுகின்றது அங்கு வாழும் தொழிலாளர்களின் நிலை என்னவாக இருக்கின்றது என்பது தொடர்பாகவும் நாம் முன்கூட்டிய படிப்பினைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. எனவே இந்த தொடர் தனியே வாசகர்களுக்குத் தகவல் தரும் இரசணைக் குறிப்பாக மாத்திரம் கொள்ளத்தக்கது அல்ல. இந்த கட்டுரைத் தொடர் நோக்கி வரும் பதிற்குறிகளையும் இணைத்துக்கொண்டு ஒரு விவாத தொடராக அமைவது பொருந்தமானது.
இந்த தொடர் குறித்த புதிர் ஒன்றை நான் முநூலில் ஆரம்பித்ததும் அதற்கு 'நமதுமலையகம்.கொம்' இணையத்தள ஆசிரியர் என்.சரவணன் எழுதியிருந்த குறிப்பை முதலாவது கவனகுவிப்பைக் குவிப்பாக நாம் கொள்ளவேண்டியுள்ளது.
'பாம் ஒயில் குறித்து என்ன கூறப்போகிறீர்கள் என்று அறிவதில் ஆவல். குறிப்பாக பாம் ஒயிலுக்கு எதிரான வெகுஜன செயற்பாட்டு இயக்கங்கள் உலக அளவில் தோன்றியிருக்கின்றன. நோர்வேயில் பிரபல கடைகளில் 'எங்கள் கடைகளில் பாம் ஒயிலில் தயாரித்த பொருட்கள் எதுவும் விற்பனைக்கு இல்லை' என்பதை தமது விழிப்புணர்வைக் வெளிக்காட்டும் விளம்பரமாகவே வைத்துள்ளார்கள். இது குறித்த விழிப்புணர்வு இலங்கை மக்களிடம் இல்லை. மக்களின் அந்த அறியாமை தான் முதலாளிகளின் பெரு முதலீடு. உங்கள் அரசியல் நிகழ்ச்சிநிரலில் இது குறித்த அரசியல் பிரக்ஞையும் உள்ளடக்கிக் கொண்டால் மகிழ்ச்சியளிக்கும்' (முகநூல் - 4 · January 17).சரவணன் கொழும்பைப்பிறப்பிடமாகக் கொண்ட மலையக வம்சாவளியினரான அனுபவமிக்க ஊடகவியலாளர். 2000ம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 'தமிழ் இனி' மாநாட்டுக்கு இவர் சம்ர்ப்பித்த கட்டுரை மிகுந்த முக்கியத்துவமுடையது. இப்போது நோர்வேயை தளமாக்க் கொண்டு செயற்பட்டாலும் மலையகம் குறித்த தொடர் கவனத்தையும் பதிவுகளையும் செய்துவருபவர். சர்வதேச தளத்தில் ஊடகத் தொடர்புகளையும் கொண்டிருப்பவர். நமது இலங்கையில் பாம் உற்பத்தி தொடர்பாக நான் ஆராய முற்பட்டிருக்கும் வேளை 'நோர்வே' யில் கடைகளில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் கூறும் அந்த விளம்பரம் உணர்த்தும் பின்னணிக்குரல் என்ன என்பது தொடர்பாக ஆராயவேண்டியுள்ளது.
இந்த 'பாம் ஒயில்' உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதாலா அல்லது இந்த பாம் ஒயில் உற்பத்தியில் ஈடுபடும் உழைப்பாளர்களின் மனித உரிமைகள் மீறப்பட்டு அடிமைகள் போல் நாடாத்தப்படுவதனை எதிர்க்கும் முகமாக அந்த விளம்பரம் அமைந்திருந்தது என்று கொள்ளலாமா என்பதுதான் இங்கிருக்கின்ற கேள்வி. இங்கு உற்பத்தி செய்யப்படும் பெருந்தோட்ட உற்பத்திப் பொருட்கள் எல்லாமே வெளிநாட்டு சந்தையை இலக்காக கொண்டவை. எனவே வெளிநாடுகள் இந்த மனித உரிமைக் கண்ணோட்டத்தில் பொருட்களை இறக்குமதி செய்யவோ விற்பனை செய்யவோ தயங்கினால் நமது ஏற்றுமதிகளுக்கு என்ன நடக்கும். இதனை பாம் ஒயிலுடன் மாத்திரமல்லாது தேயிலையுடனும் ஒப்பிட்டுக் பார்த்தால்இ தேயிலை ஏற்றுமதி குறைந்து செல்லுவதற்கு உள்நாட்டு 'அரசியல்' நிகழ்ச்சி நிரலுக்கு அப்பால் வெளிநாடுகளும் மனித உரிமைக் கண்ணோட்டத்தில் செயற்பட தொடங்கினால் நமது மக்களின் வாழ்வாதார நிலை என்ன? எனும் பெரும் கேள்வியை நாம் எதிர் கொள்ள வேண்டியுள்ளது.
இந்த கட்டத்தில் மஸ்கெலியாவை பிறப்பிடமாகக் கொண்ட வேலு சந்திரசேகரன் எனும் விவசாய விஞ்ஞான பட்டதாரியான நம்மவர் இது குறித்து இட்டிருக்கும் பதிவையும் வாசிப்போம்.
Veloo Chandrasegaran - இலங்கையில் தேயிலைக்கான மாற்று பொருளாதார பயிர் விளைச்சல் எனும் பதம் பல்வேறு கோணங்களில் நோக்கப்படவேண்டும். சூழல்இ வர்த்தகம்இ மண்வளக்குறைவுஇ முகாமைத்துவமின்மைஇ இதற்கும் அப்பால் நாம் அறியாமல் ஊடுருவும் சில அரசியல் நாய் நகர்த்தல்கள். சர்வதேச ரீதியில் பேசப்படுகின்ற காலநிலை மாற்றம்இ பூலோக வெப்பமுயர்வுஇ நீர்வளப் பற்றாக்குறைஇ காபன் வர்த்தகம் என்பவற்றை அடிப்படையாகக்கொண்டு ஐ.நா வின் செயற்றிட்டங்களும் இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதில் முக்கியமாக இலங்கையின் காடு போர்வையை அடுத்த 5 - 10 வருடங்களில் 32 சதவீதமாக உயர்த்தும் பிரதான இலக்கும் காணப்படுகின்றது. அவ்வகையில் அதற்ககான ஒரு வழிமுறையாக இறப்பர் தோட்டங்கள் மலையகத்தில் ஊடுருவதை இப்போது பார்க்கின்றோம். அத்துடன் உயர்நிலத் தேயிலை உற்பத்தி படிப்படியாக தாழ்நிலத்திற்கு மாற்றப்பட்டு வருவதையும் தேயிலை சபையின் ஒட்டுமொத்த கவனமும் அணுசரணையும் இப்பிரதேசங்களை நோக்கி நகர்ந்து சென்று பெருந்தோட்டங்களுக்கு பதிலாக சிறு தோட்ட தேயிலை பயிர்ச்செய்கை உரிமையாளர்கள் எனும் எண்ணக்கரு முன்னெடுக்கப்படுவது பெரும்பாலானவர்கள் அறியாதது. சில கசியும் தகவல்கள் உயர்நில தேயிலை தாழ்நில பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு விளைவிக்கப்பட்டதாக சந்தைப்படுத்தப்படுவதன் மூலம் உயர்நில தேயிலை உற்பத்தியின் வீழ்ச்சியை காட்டவும் முனைவதாக தெரிகின்றது. உங்களுடைய ஆய்வுக்கு இச்சிறிய துளிகளும் உதவும் என நினைக்கின்றேன். புதிய முயற்சி வெற்றியடைவீர்கள் என்பதாக எழுதிச் செல்கிறார்.
இவர் கூறும் 'உயர் நிலத்தில் இருந்து தான் நிலம் நோக்கி தேயிலை உற்பத்தியைக் கடத்திச்' சென்று கால்நூற்றாண்டுகள் கடந்துவிட்டது. இப்போது இலங்கையின் தேயிலை ஏற்றுமதியில் 72 சதவீதத்தை தாழ்நில சிறுதேயிலை உற்பத்தியாளர்களிடம் இருந்தே பெறப்படுகின்றது. இதனை 'ஹிரு' தொலைக்காட்சியில் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரும் இ தொழில் ராஜாங்க அமைச்சரும் கலந்து கொண்டிருந்த நேரலை விவாத நிகழ்ச்சியில் நான் போட்டுடைத்திருந்தேன். அந்த நிகழ்ச்சியை நடாத்திய சிங்கள மொழி ஊடகவியலாளரான சுதேவ என்னுடைய இந்த கருத்தின் முக்கியத்துவம் குறித்தே நாம் இனிவரும் காலங்களில் அவதானமும் செலுத்த வேண்டியுள்ளது என்பதை நினைவுறுத்தியே நிகழ்ச்சியை நிறைவு செய்தார். இந்த கட்டத்தில் வேலு சந்திரசேகர் முன்வைக்கும் மேலதிக விடயங்கள் குறித்தும் நாம் விவாதிக்க வேண்டியவர்களாகவுள்ளோம்.
ஆக நமது நாட்டிற்கு நாம் வந்து 200 வருடங்களில் பூர்த்தியாகியுள்ள நிலையில் தேயிலை வந்து 150 வருடங்கள் கடந்து விட்ட நிலையில் அதனைக் கொண்டாட நாட்டின் ஜனாதிபதி தலவாக்கலைக்கு வந்து சென்றுள்ள நிலையில் அந்த தேயிலை ஆராய்ச்சி நிலைய ஆய்வுகளும்இ அபிவிருத்திகளும் எந்த தேயிலையை முன்னேற்றிக் கொண்டிருக்கின்றனஇ நிலைபேண் அபிவிருத்தி இலக்கு நிகழ்ச்சி நிரலில் நாம் வகிக்கும் வகிபாகம் என்ன என்பது பற்றியெல்லாம் நாம் சிந்திக்க வேண்டியவர்களாக உள்ளோம். கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற (Sustainable Development Goals) நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகள் சம்பந்தமான செயலமர்விலும் கலந்துகொண்டு மலையகப் பகுதிகளில் காடாக்கல் குறித்த செயற்பாடுகளில் எமது மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கக்கூடாது என எனது வாத்த்தை முன்வைத்திருந்தேன் (சிங்கள மொழியில்). எனது அருகில் இருந்தவர் சிரேஷ்ட அரசியல்வாதி தினேஷ் குணவர்தன. வருகை தந்திருந்த நாடு தழுவிய உள்ளூராட்சிமன்ற பிரதிநிதிகளில் பதுளையைச் சேர்ந்த முன்னாள் பிரதேச சபை உறுப்பினரான சச்சிதானந்தன் சுரேன்கண்ணாவை மாத்திரமே என்னால் நம்மவராக அடையாளம் காண முடிந்தது. ஏனையோர் இந்த உரையாடல் குறித்து கவனம் பெற வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.
'ஜல்லிக்கட்டு' அலை போராட்டத்தில் அள்ளுண்டு போய்கிடக்கும் இளைஞர் கூட்டத்திடையே நாம் அள்ளுண்டு போகும் அபாயத்தை முன்வைக்கிறேன். இதற்காகவும் போராடவும் சிந்திக்கவும் தலைப்படுங்கள். தமிழன் என விரைப்போடு 'மல்லியப்புசந்தியில்' எழுவதில் வியப்பில்லை. ஆனால் அந்த வீரத்தைக் கொண்டாட அதே தமிழனின் 'இருப்பு' முக்கியமல்லவா?. எனவே நமது இருப்பு கேள்விக்குள்ளாகிவரும் நிலையில் நாம் நமது வரலாறுகளை மீட்டிப்பார்க்கும் தேவையுள்ளது...
அதற்கு தலைப்பை மீண்டும் வாசிக்க
நன்றி - சூரியகாந்தி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...