Headlines News :
முகப்பு » » பேராசிரியர் கைலாசபதியின் பத்திரிகை துறைசார்ந்த பங்களிப்பு – சில அவதானிப்புகள் லெனின் மதிவானம்

பேராசிரியர் கைலாசபதியின் பத்திரிகை துறைசார்ந்த பங்களிப்பு – சில அவதானிப்புகள் லெனின் மதிவானம்


இன்று பேராசிரியர் கைலாசபதியின் 31 வது நினைவுத் தினம்

1957 ஆம் ஆண்டு பேராசிரியர் தமது முதற்கலiமாணி பட்டத்தை முதலாம் வகுப்பில் சித்தியடைந்த பின்னர் தினகரன் பத்திரிகையில் உதவி ஆசிரியராக சேர்ந்தார். அவரரது திறமையின் காரணமாக மிக குறுகி காலத்திலேயே பிரதம ஆசிரியராக நியமிக்கப்பட்டார். அன்றைய சூழலில் யாழ்பாண சமூகத்தில் நிலவிய உத்தியோக மனப்பாங்கு காரணமாக அவர் அரச நிர்வாக பதவியொன்றினைத் தேர்ந்த்தெடுத்திருக்கலாம.; அல்லது தமது உயர்கல்விக்காக வெளிநாடு சென்று வந்திருக்க முடியும். அவரது தந்தையின் எதிபார்ப்பும் அதாக தான் இருந்தது என்பதை சுபைர் இளங்கீரன் தமது பதிவுகளில் குறிப்பிடுகின்றார்.

பத்திரிகை துறையில் பணியாற்றி வருகின்ற பலர் பத்திரிகை என்பது கருத்து களத்தில் முக்கிய சாதனங்களில் ஒன்று என்பதையும் அது மக்களின் சிந்தனையை உருவாக்குவதில் கனிசமான அளவு தாக்கம் செலுத்துகின்றது என்பதையும் உணரத் தவறி விடுகின்றனர். இதன் காரணமாக பத்திரிகை உரிமையாளர் பிற்போக்கு அரசியல்வாதிகள், உயர் பதவியில் உள்ளோர், பணக்காரர்கள் ஆகியோரை திருப்திபடுத்தும் வகையிலும் அவர்களுக்கு புகழ் மலைச்சூட்டும் வகையிலும்; பத்திரிகைத்துறை சார்ந்த பணியமைந்து விடுகின்றது. இவ்வாறான சூழலில் பேராசிரியர் மேற்குறித்த விடயத்தினை சிறப்பாக உணர்ந்துள்ளதுடன் நாகரீக தளத்தில் நின்று தமது பத்திரிகை துறைசார்ந்த பணியினை முன்னெடுத்துள்ளார்.

பேராசிரியர் பத்திரிகை துறையில் காலடி எடுத்து வைத்த காலத்தில் மேனாட்டு மோகம், ஆங்கில மொழியின் அதிகாரம் சார்ந்த பற்று என்பனவற்றுக்கு எதிரான உணர்வு மக்களிடையே பரவியிருந்தது. இதன் தாக்கத்தை இலங்கை அரசியல் வரலாற்றிலும் காண முடிகின்றது. திரு. எஸ். டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கா போன்றவர்கள், கிறிஸ்த்தவ சமயத்திலிருந்து பௌத்த சமயத்திற்கு மாறியதம் மோனாட்டு உடையை விட்டு தேசிய உடையில் காட்சியளித்ததும் யாவற்றுக்கும் மேலாக சிங்களத்தில் உரையாற்ற முனைந்ததையும் இக்காலத்தரில் ஏற்பட்ட மாறதல்களாக காண்கின்ற கைலாசபதி ‘ சிங்கள இலக்கியத்திலும் தமிழ் இலக்கியத்திலும் ஒரு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியது’ என அக்காலத்தின் இலக்கிய போக்கினை மதிப்பீடுகின்றார்.

மறுப்புறத்தில,; சிங்களத்தை அரச கரும மொழியாகக்கியதும் பௌத்த மதமே அரச மதம் என்ற சட்டங்கள் கொண்டு வரப்பட்டதும் இதே காலப்பகுதியில் தான். இதன் விளைவாக தமிழர்கள் தமது இனத்தேசியம் குறித்து சிந்திக்கத் தளைப்பட்டிருந்தனர்.

தேசிய இலக்கியம், இயக்கம் என்பன கோட்பாட்டு ரீதியான போராட்டங்களுடாக முன்னெடக்கப்பட்ட காலமாகும். இந்த சூழலில் இலங்கை தமிழ் இலக்கியத்தின் பாராம் பரியத்தை பின்னோக்கி பார்த்து அதனூடே நமது தேசியத்துவத்தை நிலை நிறுத்த வேண்டிய தேவையேற்பட்டது.

இவ்வாறான சூழலில் இலங்கை தமிழ் இலக்கியத்தின் பாராம்பரியத்தையும் அதன் வளர்ச்சி போக்குகளையும் வெளிக் கொணரும் வகையில் ஆக்க இலக்கியங்களும் அது சார்ந்த கட்டுரைகளும் வெளி வவருவதற்கு களமாக தினகரன் பத்திரிகை அமைந்திருந்தது. இலங்கை தமிழ் இலக்கியத்தின் தனித்துவத்தை வலியுறுத்திய அதே சமயம் பொதுவான தமிழ் இலக்கியத்தின் வளரச்சிபோக்கினையும் கவனத்திலெடுத்து செயற்பட்டமை பேராசிரியரின் தனித்துவமான சிறப்புகளில் ஒன்றாகும்.

தேசிய இலக்கிய செல்நெறி காரணமாக ஒவ்வொரு பிரதேசம் சார்ந்த மண்வாசனையும் மக்களின் சமகால பிரச்சனைகளும் இலக்கியத்தின் பாடுபொருள்கனாயின. அந்தவகையில் வடகிழக்கு மலையகம் சார்ந்து இலக்கிய படைப்புகளை தினகரன் பத்திரிகையின் ஊடாக வெளிக்கொணர்ந்ததில் பேராசியருக்கு முக்கிய பங்குண்டு. பேராசிரியர் தினகரன் வாரப் பத்திரிகையில் பிதம ஆசிசியராக பதவியேற்ற காலத்தில்
அத்துடன் பல தரப்பட்டோரை தன்னோடு இணைத்துக் கொண்டு செயற்படத் தொடங்கினார். தன்னுடன் ஒத்த கருத்துடையவர்களுடன் மாத்திரமன்று மாறுப்பட்ட கருத்துக் கொணடவர்களும் தினகரனில் எழுதுவதற்கான களத்தை அமைத்துக் கொண்டார். அத்தகையவர்களில் செ. கணேசலிங்கன், சில்லையூர் செல்வராசன், அ.ந. கந்தசாமி. சுபைர் இளங்கீரன், என்.எஸ்.எம். இராமையா, சி.வி. வேலுப்பிள்ளை, வரதர், வ.அ. இராசரத்தினம், நந்தி, கனக. செந்திநாதன், சிற்பி தேவன், அ. முத்துலிங்கம், உதயணன், செ. கணேசவிங்கம், என். கே. ரகுநாதன், கே.டானியல், எஸ். பொன்னுதுரை, டொமினிக் ஜீவா, பெனடிக்பாலன், நீர்வை பென்னயன், ஏ. இக்பால், முதலானோர் குறிப்பிடத்தக்கவர்கள். சி.வி.யின் வாழ்வற்ற வாழ்வு, எல்லைப்புறம், பார்வதி, முதலிய நால்கள் தொடர்கதையாக வெளிவந்தன. பேராசிசியர் சி.வி.யின்; எழுத்து முயற்சிகளுக்கு எத்தகைய தூண்டுதலை வழங்கினார் என்பதை பேராசிரியரின் அஞ்சலி உரையில் ‘ அரசியல் அநாதைகளாய் புழுங்கிக் கொண்டிருந்த எங்களை உள்ளங்கனிந்து அன்புடன் நேசித்தவர் கைலாஸ். எங்கள் பெருமகன் அவர்.’ எனக் குறிப்பிடுகின்றார். எனக் கூறும் கவிஞர் தன்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கையை எழுத்தாளர்கள் மத்தியிலே எவ்வாறு வளர்த்திருந்தார் என்பதனையும் தமதுரையில் சுட்டிக் காட்டியிருக்கின்றார். இக்காலத்தில் இலங்கை எழுத்தாளர்களின் படைப்பாளுமையை இனங்கண்டு அவர்களினை எழுதத்தூண்டியது பேராசிரியருக்கு முக்கிய இடமுண்டு அக்காலத்தில் இளம் எழுத்தாளர்களாக உருவாகியவர்களில் பின்னாட்களில் இலங்கையில் புகழ் பெற்ற படைப்பாளினளாகவும் விமர்சகர்களாகவும் தடம் பதித்தவர்கள். யாவற்றுக்கும் மேலாக தினகரனில் வாரகர்களின் கருத்துகளுக்கும் அபிராயங்களுக்கும் முக்கியத்துவம் வழுங்கப்பட்டன. இது தொடர்பில் பேராசிரியர் சி.தில்லைநாதன் பின் வருமாறு கூறுகின்றார்.

‘பல புதிய அம்சங்களும் பரிசோதனைகளும் தினகரனில் இடம் பெற்றன. வசகர்கள் பங்கெடுக்க கூடிய வகையில் திங்கட் கிழமைகளில் திங்கள் விருந்தும் புதன் கிழமைகளில் புதன் மலரும், வெள்ளிக் கிழமைகளில் முஸ்லிம் மஞ்சரியும், சனிக்கிழமைகளில் மாணவர் உலகமும் இடம் பெற்றன. சுவாரிதம்பர், சித்திரகானம், ஆகிய கேலிச்சித்திரங்களும் தினகரனைப் பிரபலப்படுத்துவனவாயின. ஆவற்றை வரைந்த ‘சிரித்திரன்’ சிவஞான சுந்தரம் தமக்கு பல வேலைகளில் கைலாஸ் வழங்கிய பாராட்டுகளையும் ஆலோசனைகளையும் குறித்துப் பல முறை விதந்துறைத்ததுண்டு.’

இக்காலத்தில் இலங்கை பிரச்சினையை மையமாகக் கொண்டு அரசியல், சமூகம், பொருளாதாரம், கலை இலக்கியம், விஞ்ஞான அறிவியல் சார்ந்த கட்டுரைகள் பரவலாக இடம்பெற்றன. அவை வாசகர்கள் இலகுவாக கற்க கூடியவகையில் மிகவும் கவர்ச்சிகரமான எழுத்து நடையில் எழுதப்பட்டிருந்தன. அத்துடன் ஆங்காங்கே இடம்பெற்ற நிகழ்வுகள் குறித்த செய்திகள் உண்மையின் பக்கம் நின்று வெளியாயின.

எவர் ஒருவர் மற்றவர்களுடைய கருத்துக்களை கேட்டும் பக்குவம் உடையவராக இருக்கின்றாரோ அவரே தமது கருத்துக்களை கூறும் உரிமையுடையவர் என்பது மனித நிலைப்பட்ட நாகரிகமாகும். இத்தகைய உயரிய பண்பினை கைலாசபதி இறுதிவரை கடைப்பிடித்தவர் என்பதை அவர் பற்றிய சக எழுத்தாளர்களின் குறிப்புகளிலிருந்துக் காணமுடிகின்றது. பத்திரிகை துறையில் கடமையாற்றிய காலத்தில் நாட்டின் பல தரப்பட்ட எழுத்தாளர்களுடனும் தொடர்பை மேற்கொண்டு அதனூடாகவே தமது பணியினை விசாலப்படுத்தியுள்ளார்.

எடுத்துக்காட்டாக தினகரன் பத்திரிகையில் கடமையாற்றிய காலத்தில் வாரம் ஓருமுறை எழுத்தாளர்களுடன் கலந்துரையாடுவர். காரசாரமான விவாதங்களின் பின் அத்தகைய கலந்துரையாடல்களில் பெற்ற அறிவு அனுபவத்தைக் கொண்டு தமது பணியினை பட்டைத் தீட்டிக் கொள்கின்ற உயரிய நாகரிகம் அவரிடத்தில் இருந்துள்ளது.

பேராசிரியருடன் பத்திரிகை தொடர்பான கலந்தாலோசனைகளில் பங்கு பற்றியவர்களுள் சுபைர் இளங்கீரன், கா.சிவத்தம்பி, எச். எம். பி. முஹியதீன், பி. ராமநாதன், சில்லையூர் செல்வராசன், இ.முருகையன், கே. கணேஷ், அ.ந. கந்தசாமி,முஹமது சமீம் முதலானோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள். அவர்கள் தினகரன் பத்திரிக்கை குறித்த கலந்துரையாடல்களில் பங்கு பற்றியதுடன் தொடர்ந்து அப்பத்திரிகையில் கட்டுரைகளையும் எழுதிவந்தனர்.

பேராசிரியர் தமக்கு கீழ் பணிப்புர்ந்தவர்களுக்கு பத்திரிகை துறைசார்ந்து வழிக் காட்டுவதிலும் நேர்மையுடன் உழைத்தவர்களுக்கு சம்பள உயர்வு, பதவி உயர்வுகளைப் பெற்றுத் தருவதிலும் முன்னின்று உழைத்தவர். மற்றும் எழுத்தானர்களுக்கான கொடுப்பனவுகளும் உரிய முறையில் வழங்கப்பட்டன. இவ்விடத்தில் பிறிதொரு விடயம் குறித்தும் நோக்க வேண்டியுள்ளது. பத்திரிகையில் வெளியாகின்ற செய்திகள், கட்டுரைகள் .ஆக்கங்கள், கேலிசித்திரங்கள் மக்கள் விரோத சக்திகளை ஆந்திரங் கொள்ளச் செய்வது எதிர்பார்க்க கூடியதெர்னறே. அத்தகைய சந்தர்ப்பங்களில் கைலாசபதி பொறுப்புணர்வுடன் நின்று தமக்கு கீழ் பணியாற்றியவர்களைப் பாதுகாத்தார் என்பதையும் பேராசிரியர் பொறுத்து வெளிவந்துள்ள சி. தில்லைநாதன், சுபைர்இளங்கீரன், செ. கணேசலிங்கன் முதலானோரின் நினைவுக் குறிப்புகளில் காணமுடிகின்றன.

பேராசிரியர் பணியாற்றிய காலத்தை தினகரன்; பத்திரிகை வரலாற்றில் பொற்காலம் என வர்ணிப்பர். இக்காலத்தில் தினகரன் பத்திரிக்கை வாசகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படத்தியிருந்தது. அதன் விற்பனையும் முன்னரை விட பல மடங்கான பெருகியிருந்தது.

இவ்வாறு பேராசிரியர் தினகரனில் பெற்ற அனுபவம் பின்னாட்களில் பொதுவுடமைக் கட்சி இதழ்களான தொழிலாளி, தேசாபிமாணி, செம்பகத்தாகை, ரெட்பனர் முதலிய பத்திரிகைகளுக்கு கட்டுரைகளை எழுதுகின்ற போது பெரிதும் உதவியுள்ளது. அவர் ஜனமகன், அபேதன், அம்பலத்தான், உதயணன், அம்பலத்தாடி போன்ற புனைப்பெயர்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார்.

பேராசிரியர் பிரபல்யமான பத்திரிகைகளுக்கு கட்டுரைகள் எழுதி அதனூடாக தனக்கான ஒரு அங்கீகரத்தை தேடியவரல்லர். இலட்சியப ;பீடிப்புடனும் கொள்கைப் பற்றுடனும் வெளிவந்த சிறு சஞ்சிகைகளுக்கு கட்டுரைகள் எழுதுவதிலே முக்கிய கவனம் செலுத்தினார். எடுத்துக் காட்டாக புதுமை இலக்கியம், மரகதம், மல்லிகை, புது வசந்தம், தாயகம், சமர் போன்ற சஞ்சிகைகளில் கட்டுரைகளை எழுதினார்;. இச்சிறுப் பத்திரிகைகளின் தரம் வெளியீடு இலக்கிய கோட்பாடு என்பனவற்றை உற்று நோக்குகின்ற போது நுண்ணிய தத்துவார்த்த வேறுபாடுகள் காணப்பட்ட போதும் மக்கள் சார்பு பண்பு இப்பத்திரிகைகளில் ஏதோ ஒரு வகையிலும் அளவிலும் முனைப்புற்று இருப்பதை காணலாம். பேராசிரியரை பொறுத்தமட்டில் எழுத்தை வெறும் புத்தகவாதச் சிந்தனையாகவோ அல்லது கல்வி நாகரீக போக்காகவோ கொண்டவரல்லர். மாறாக அது மக்களைத் தழுவியதாக அது மக்களின் சமூகமாற்றப்; போராட்டத்தில்; ஆற்றல் வாய்ந்த ஒரு ஆயுதமாக திகழ வேண்டுமென வழியுறுத்தியவர். அந்த வகையில் மக்களை சென்றடையக் கூடிய சஞ்சிகைகள், இதழ்களில் தமது கட்டுரைகளை வெளிவரச் செய்தார்.

பேராசிரியரின் மேற்குறித்த பத்திரிகை துறை சரந்த பங்களிப்பின் காரணமாக இலங்கை பத்திரிகை முன்னோடிகளில் ஒருவராக ஆளுமைச் சுவடுகளை பதித்து சென்றமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

பேராசிரியர் கைலாசபதி; சமூக மாற்றத்திற்றத்திற்கான இயங்காற்றல்
என்ற நூலில் இடம் பெறுகின்ற கட்டுரை
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates