Headlines News :

காணொளி

ஜனாதிபதி விருது

ஜனாதிபதி விருது
நமது மலையகத்துக்கு

சுவடி

மகாவம்சம் : தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகளின் வரலாறு | என்.சரவணன்

ஐந்தாம் நூற்றாண்டில் வெளிவந்த முதலாவது மகாவம்சம் கி.மு 483 தொடக்கம் கி.பி 362 வரையான  சுமார் 845 ஆண்டுகால இலங்கையின் சரித்திரத்தைக் கூறுகிறது. இவ்வாறு உலகிலேயே தொடர்ச்சியாக தன் வரலாற்றை எழுதிவரும் நாடாக இலங்கை திகழ்கிறது. பாளி மொழியில் மகாவம்சம் முதலில் எழுதப்பட்டது.

உலகிலேயே தொடர்ச்சியாக சுமார் 2600 ஆண்டுகால சரித்திரத்தை எழுதிவருகிற ஒரே நாடாக இலங்கை திகழ்கிறது. அதன் மீதான விமர்சனங்கள்,  சரிபிழைகளுக்கு அப்பால் அது வரலாற்று மூலதாரங்களுக்கு துணை செய்திருக்கிறது என்பது உண்மை.

அதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் அப்படி ஒரு வரலாற்று புனித நூல் இருப்பதை உலகின் கவனத்துக்கு கொண்டுவந்தார்கள் ஆங்கிலேய அறிஞர்கள்.

அதிலிருந்து பலர் பாளி மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு செய்ய முயற்சித்து இருக்கிறார்கள். முதன் முதலில் 1837 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தபோதும் அதன் பின்னர் அதில் உள்ள குறைகளின் காரணமாக இன்னும் சிலரால் வெவ்வேறு காலங்களில் அதன் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. இறுதியில் 1908 ஆம் ஆண்டு வில்ஹெம் கைகர் மொழிபெயர்த்த ஜேர்மன் மொழிபெயர்ப்பு பின்னர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு 1912 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த மொழிபெயர்ப்பே இன்றுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதியாக உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவே இலங்கை அரசால் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதியும் கூட.

1877 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் சிங்களத்தில் வெளிவந்தது. 1872 இல் புதிய தேசாதிபதியாக நியமனமான கிரகெரி டர்னரின் மகாவம்சப் பிரதியைப் பார்த்து வியந்ததுடன் அதனை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் பணியை 1874 இல் ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரரிடமும், பட்டுவந்துடாவே ஸ்ரீ தேவ ரக்சித்த பண்டிதரிடமும் ஒப்படைத்தார். ஆனால் டேர்னரின் பிரதி எவ்வாறு பொதுவில் எற்றுக்கொள்ளப்படவில்லையோ அதுபோலவே அதை ஆதாரமாகக் கொண்ட இவர்களின் பிரதியும் பொதுவில் சிங்கள வரலாற்று அறிஞர்களால் மூலாதாரமாகப் பயன்படுத்தப்படுவதில்லை.

ஆனால் மிகச் எனது தேடல்களில் போது புதுத் தகவல் ஒன்றை சமீபத்தில் கொண்டுபிடிக்க முடிந்தது. அதாவது முதன்முதலில் மகாவம்சம் மொழிபெயர்க்கப்பட்டது இலங்கையிலோ இலங்கை மொழியிலோ இல்லை. தாய்லாந்தில் சியாமிஸ் மொழியிலேயே மொழிபெயர்க்கபட்டிருக்கிறது என்கிற தகவல் தான் அது. அதை தனியான கட்டுரையாக பின்னர் தருகிறேன்.

இந்த வரிசையில் தமிழில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன என்பது தான் இக்கட்டுரையின் அடிபட்டை நோக்கம்.

மகாவம்சத்தின் முதலாவது தொகுதியைத் தவிர வேறெந்தத் தொகுதியும் தமிழில் மிகச் சமீபகாலம் வரை வெளிக்கொணரப்பட்டதில்லை. அந்த முதலாவது தொகுதியை மாத்திரம் ஐந்து வெவ்வேறு நபர்களால் கொணரப்பட்டிருக்கிற போதும் அவை எதுவும் முழுமையானவை அல்ல. அவையும் கூட உள்ளதை உள்ளபடி மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகள் அல்ல. சுருக்கிய பொழிப்புரையாகவோ, அல்லது சொந்த விளக்கவுரையாகவோ, புதினக் கதைகளாகவோ அமைந்துள்ளவை.

தமிழில் வெளியான எந்த மகாவம்ச வெளியீடுகளும் மூல நூலுக்கு நியாயம் செய்ததில்லை. அவரவர் அவரவருக்கு புரிந்த விளக்கவுரைகளையே வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். 

அவ்வாறு இதுவரை தமிழில் வெளிவந்த நூல்களை இனி பார்க்கலாம்.

மகாவம்சம் – சங்கரன்  – 1962

இன்று நம்மிடையே தமிழில் காணக்கிடைக்கிற முதல் பிரதி 1962 ஆம் ஆண்டு “மகாவம்சம்” இலங்கைத் தீவின் புராதன வரலாறு என்கிற தலைப்பில் சங்கரன் வெளிக்கொணர்ந்த நூல் பிரதியே. சென்னையில், மல்லிகை வெளியீடாக 410 பக்கங்களில் இது வெளிவந்திருக்கிறது.  இப்பிரதியில் மகாவம்சத்தின் மொத்த விபரங்களும் வெளியாகவில்லை. ஆனால் சுருக்கிய விபரங்கள் இதில் அந்தந தன இலக்கங்களின் பிரகாரம் வெளியாகியுள்ளதைக் காணலாம். தனக்கு பாளி மொழி தெரியாது என்றும், இலங்கை சர்க்காரால் அதிகாரபூர்வ நூலாக வெளியிடப்பட்ட வில்ஹெம் கைகர் மொழிபெயர்த்த ஆங்கிலப் பிரதியிலிருந்தே தமிழ்படுத்தியுள்ளேன் என்று சங்கரன் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார்.

ஈழத்தின் கதை – கே.வி.எஸ்.வாஸ் – 1959

1956 ஆம் ஆண்டு இலங்கையில் சிங்கள பௌத்தம் மீழெழுச்சி கொண்ட காலத்தில் மீண்டும் மகாவம்சக் கதையாடல் களத்துக்கு வந்த காலம். அதே காலத்தில் தமிழகத்தில் இருந்து ஆனந்தவிகடனில் கே.எஸ்.வாஸ். ஈழத்தின் கதை என்கிற தலைப்பில் தொடராக ஒரு புதினத்தை எழுதிவந்தார். மகாவம்சம், ராஜாவலிய போன்றவற்றை அடிப்படியாகக் கொண்டு அது எழுதப்பட்டதாக அதில் கூறப்பட்ட போதும் அது மகாவம்ச சாரத்தை அடியொற்றி ஜனரஞ்சகப்படுத்தி எழுதப்பட்ட புதினக்கதை என்று கூறிவிடலாம். 1959இல் இது 260 பக்கங்களில் நவலட்சுமி புத்தகசாலையின் வெளியீடாக வெளிவந்தது. முதலாவது அத்தியாயத்தின் தலைப்பே “சிங்கன் பிறந்தான்” என்று தொடங்கும். அதேவேளை கல்கி கிர்ஷ்ணமூர்த்தி எழுதிய அணிந்துரையின் அடியில் அது 1950 இல் எழுதப்பட்டதாக காணபடுகிறது. இந்நூல் அதன் பின்னர் பல்வேறு பதிப்புகளைக் கொண்டிருக்கிறது.


மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் – கலாநிதி க.குணராசா – 2003

செங்கை ஆழியான் என்கிற பெயரில் ஏராளமான நூல்களை எழுதிய எழுத்தாளர் க.குணராசா அவரது சொந்த பதிப்பகமான கமலா பதிப்பகத்தின் மூலம் 2003 ஆம் ஆண்டு வெளிக்கொணர்ந்த 150 பக்கங்களைக் கொண்ட நூல் இது. அந்த நூல் மகாவம்சத்தின் உள்ளடக்கங்களை சுருக்கமாக தன்நுணர்தலின் அடிப்படையில் சுவாரசியமாக தர முயற்சிக்கப்பட்ட நூல் எனலாம். புனைகதைத் துறையிலும் அவருக்கிருந்த அனுபவத்தாலும் ஆளுமையாலும் மகாவம்சத்தையும் சுருங்க சுவாரசியமாக தர முற்பட்டிருக்கிறார். அந்நூலின் ஆரம்பத்திலேயே அவர் தந்திருக்கிற உசாத்துணை நூல்களின் பட்டியலைப் பார்க்கும்போது அது மகாவம்சத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட நூல் இல்லை என்பது இன்னும் ஊர்ஜிதமாகும். பதிப்புரையிலேயே ஒப்புக்கொண்டதுபோல  போல அது “இலங்கை சரித்திரம் குறித்து சுருக்கமாகவும், விளக்கமாகவும் கூறும் நூல்”. 

இதைவிட அவர் மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியான சூளவம்சத்தையும் தமிழில் தந்திருக்கிறார். அவரின் “சூளவம்சம்” 2008 ஆம் ஆண்டு வெளியானது கைகர் (Geiger) ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த “சூளவம்சம்” இரு தொகுதிகளைக் கொண்டது. ஆங்கில சிறிய எழுத்துக்களில் மொத்தம் 730 பக்கங்களுக்கும் மேற்பட்டது அது. ஆனால் செங்கை ஆழியானின் சுருக்கப்பட்ட தமிழ் பிரதி, பெரிய எழுத்துக்களில் 170 பக்கங்களுக்குள் மாத்திரம் உள்ளடங்கிவிட்டது. கி.பி 362 இலிருந்து 1815 வரையான காலப்பகுதியை பதிவு செய்கிறது. குணராசா இதையும் தன்முனைப்பில் மிகச் சுருக்கிய அறிமுகத்தையே செய்திருக்கிறார். ஆனாலும் இது மட்டுமே தமிழ் மொழியில் எஞ்சியிருக்கிறது. சிங்களத்தில் சூளவம்சத்தின் பல விளக்கவுரைகளைக் காண முடிகிறது. வெவ்வேறு மொழிபெயர்ப்புப் பிரதிகள் கூட புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன.

சூளவம்சம் என்கிற பேரை அதை முதன் முதலில் தொகுத்த கைகர் வைத்த பெயரேயோழிய அப்படியொன்று இருந்ததில்லை. மகாவம்சத்தை அவர் தொகுத்து முடித்த பின்னர், எஞ்சிய காலத்தை பின் வந்த காலப்பகுதியில் பல்வேறு பௌத்த பிக்குமார்களால் எழுதிமுடிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளைத் தொகுத்து ஒன்றாக்கிய பொது அவர் வைத்த பெயரே சூளவம்சம். இந்தப் பிரதியை தவிர மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியானது வேறெவரும் வெளிக்கொணர்ந்ததில்லை.


மகாவம்சம் – உதயணன்  – 200?

உதயணன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஜனரஞ்சக வரலாற்று புனைகதை எழுத்தாளர் எனலாம். அவ்வாறு ஏராளமான ஏராளமான அவர் எழுதியிருக்கிறார். மகாவம்சத்தில் உள்ள கதைகளையும் அவர் தன்னார்வத்தில் சுவைபட புதினக் கதையாக எழுதிருக்கிறார். அதுவும் இரண்டு தொகுதிகளாக கிடைக்கின்றன. முதலாவது தொகுதி 438 பக்கங்களிளும் இரண்டாவது தொகுதி 402 பக்கங்களிலும் சேர்த்து  மொத்தம் 90 அத்தியாயங்களாக வெளியிட்டிருக்கிற போதும் மூல மகாவம்சத்தின் அத்தியாயங்களுக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது. அவர் மூல மகாவம்சத்தின் உள்ளடக்கத்தையும் முழுமையாக புரிந்துகொண்டவராகத் தெரியவில்லை. உதாரணத்துக்கு அந்நூலின் முன்னுரையில் “வட பாரதத்தினனான விஜயன் தமிழ் மன்னனான பாண்டியன் மகளை மணந்து வம்சத்தை துவக்குகிறான். இவ்வாறு வட இந்திய மண்ணுக்கும் தென்னிந்திய மன்னனுக்கும் மணவினை ஏற்பட்டு அதில் உருவாகிய வாரிசுகளே சிங்களவர்” என்கிறார். ஆனால் மகாவம்சத்தின்படி விஜயன் மணமுடித்த பாண்டிய இளவரசிக்கு எந்த வாரிசுகளும் பிறக்கவில்லை என்கிறது. இப்படியான அடிப்படையான தகவல்களில் அவர் தவறிழைத்திருக்கிறார் என்பதை அவரின் முன்னுரை விளக்கத்தில் இருந்து நம்மால் அறிந்துகொள்ள முடியும்.

இதைத்தவிர அவர் மகாவம்சத்தின் கதைகளில் இருந்து துட்டகைமுனுவின் தாயாரை கதாநாயகியாகக் கொண்டு “விகாரமகாதேவி” என்கிற 1028 பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலையும் 2015ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். மேலும் அவர் “சிங்களத்துப் புயல்” எனும் 200 பக்க நாவலொன்றையும் 2012 இல் வெளியிட்டிருக்கிறார். வரலாற்றில் ஒரு தடவை இலங்கை அரசனின் படையெடுப்பில் பாண்டிய நாடு கைப்பற்றப்பட்டதாக பதிவுண்டு. 1166 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த நிகழ்வோடு ஒட்டிய தகவல்களைக் கொண்டு அவர் ஒரு புனைகதையை ஆக்கியிருக்கிறார். இக்காலப்பகுதியானது மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியான சூலவம்சமே பதிவு செய்திருக்கிறது. அதேவேளை தனது முன்னுரையில் பேராசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரிகள், சதாசிவ பண்டாரத்தார் ஆகியோரின் நூல்களில் இருந்த தகவல்கள் இந்நூலுக்குப் பயன்பட்டதாக குறிப்பிடுகிறார் அவர். 

மகாவம்சம் – ஆர்.பி.சாரதி – 2007

ஆர்.பி.சாரதி பல நூல்களை மொழிபெயர்த்தவர். கொடோவே பலரின் வாழ்க்கை சரிதங்களையும் சிறுகதைத் தொகுதிகளையும் எழுதி வெளியிட்ட ஒரு எழுத்தாளர். அவர் 2007 ஆம் ஆண்டு கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட நூலே இந்த “மகாவம்சம்”. ஆனால் இந்த நூலும் மகாவம்சத்தை சுருக்கமாக 238 பக்கங்களில் விளக்கமுயன்ற  ஒரு சாராம்ச நூலே. மூல நூலின் அதே 37 அத்தியாயங்களைக் கொண்டிருந்தாலும் இந்த சாராம்ச சுருக்க நூலில் செய்யுள் இலக்கங்கள் எதுவுமின்றி நிறைவடைந்துவிடுகின்றன.

மகாவம்சம் : ஸ்ரீலங்கா வரலாறு – சாந்திபிரியா – 2008

இந்த நூலை எழுதியவரின் உண்மைப் பெயர் ஜெயராமன். ஒரு ஓய்வு பெற்ற அரச ஊழியர். பவந்த பெரேரா என்கிற ஒரு சிங்கள நண்பரின் வேண்டுகோளை ஏற்று அவர் இந்த நூலை எழுதி முடித்ததாக அந்நூலில் குறிப்பிடுகிறார். மூல மகாவ்மசத்தின் அதே 37 தொகுதிகளைக் கொண்ட 344 பக்க நூலாக இது காணப்படுகிறது. நூல் வடிவில் அமைந்திருந்தாலும் ஒரு மின்னூல் (ebk) வடிவித்திலேயே இது கிடைத்திருக்கிறது. அச்சில் பதிக்கப்பட்டதற்கான சான்றுகளைக் காணவில்லை. எவ்வாறாயினும் இதுவும் ஏனையவற்றைப் போல மிக சாரம்சப்படுத்தப்பட்ட ஒரு பிரதியாகவே காணப்படுகிறது. அதுமட்டுமன்றி அதன் மொழிபெயர்ப்பைப் பார்க்கும் போது இயந்திர மொழிபெயர்ப்பின் வாடை தெரிகிறது. பல சிங்கள கலைச்சொற்களை கூகிள் மொழிபெயர்ப்புகளின் போது தருகிற பிழைகளை அப்படியே காணமுடிகிறது. விகாராக்கள், தடுசேனா (Dhatusena), தூபவம்சா (Thupavamsa), ததுவம்சா, (Dhatuvamsa), வில்ஹம் கீஜர் (Wilheml Geiger), யக்கா இனத்தினர் போன்ற சொற்களை உதாரணத்துக்குக் குர்பஈடலாம்.

மகாவம்சம்- சிங்களர் கதை – எஸ்.பொ, 2009

ஆக தமிழில் இதுவரை முழுமையான எந்த மகாவம்சத் தொகுதியும் வெளிவந்ததில்லை என்பதே உண்மை. சிங்கள ஆங்கிலப் பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்தவர்கள் எவருக்கும் புரியும். அந்த ஐந்து தமிழ் பிரதிகளில் ஓரளவு தேறிய பிரதி என்றால் அது எஸ்.பொ. அவர்களின் “சிங்களர் கதை” என்கிற பிரதி எனலாம். அதில் உள்ள சாதகமான அம்சம் என்னவென்றால் குறைந்தபட்சம் மகாவம்ச மூலப்பிரதியிலுள்ள செய்யுள்களின் அதே இலக்கத்தொடர்களுடன் அது ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதே. அதேவேளை அவரின் சொந்த அரசியல் நம்பிக்கைகளை அதில் புகுத்தியிருப்பது அதன் பாதகங்களில் ஒன்று. அதன்படி மகாவம்சத்தின் மீது வினையாற்றுபவர்கள் ஈற்றில் எஸ்.பொவுக்குத் தான் வினையாற்ற நேரிடும். மூல மகாவம்சத்தின் மீது வினையாற்றுவதற்கான வாய்ப்பு அற்றுப் போய் விடுகிறது. மேலும் மூல மகாவம்ச பிரதியுடன் பார்த்தால் இதுவும் சாரம்சப்படுத்தப்பட்ட பிரதியே.

இதுவரை எந்தப் பிரதியும் பாளி, சிங்களம், ஆங்கிலம் என எந்த மொழியிலிருந்தும் தமிழ் மொழிக்கு முழுமையான உள்ளடக்கத்தை வெளிக்கொணர்ந்ததில்லை. மேற்படி பிரதிகளும் கூட கைகரின் ஆங்கில நூலை ஆதாரமாகக் கொண்டவை.

ஈற்றில் தமிழில் வெளியான எந்த மகாவம்ச வெளியீடுகளும் மூல நூலுக்கு நியாயம் செய்ததில்லை. அவரவர் அவரவருக்கு புரிந்த விளக்கவுரைகளையே வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். ஆக தமிழில் இதுவரை முழுமையான எந்த மகாவம்சத் தொகுதியும் வெளிவந்ததில்லை என்பதே உண்மை.

இதைவிட தமிழில் வெளிவந்த மகாவம்சத்தோடு தொடர்புடைய சில நூல்களையும் இங்கே குறிப்பிட முடியும்.

  • “சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத் தன்மை”, வில்ஹெம் கைகரின் மகாவம்சத்தின் முன்னுரை விரிவான ஒன்று. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தன் அதனை மொழிபெயர்த்து 2002இல் வெளியிட்டார்.
  • “எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்” என்கிற நூலை கலாநிதி ஜேம்ஸ் டீ இரத்தினம் ஆற்றிய உரையொன்றை எ.ஜே.கனகரட்னா தமிழில் மொழிபெயர்த்து 1981 இல் ஒரு நூலை வெளிக்கொணர்ந்தார். மகாவம்சத்தில் கூறப்படுகிற எல்லாளனின் சமாதியை துட்டகைமுனுவின் சமாதியாக மாற்றுகிற மோசடியை எதிர்த்து ஆதாரங்களுடன் தர்க்கிக்கிற முக்கிய நூல்.
  • “கமுனுவின் காதலி” என்கிற ஒரு நாவலை மு கனகராசன் எழுதி 1970 இல் வெளியிட்டார். மகாவம்சத்தில் துட்டகைமுனு பிரதான கதாநாயகன். பிரதான வில்லனாக எல்லாளனை சித்திரித்திருப்பார்கள். வயதான எல்லாளனுடன் போர்புரிந்து துட்டகைமுனு வென்றாதாக அது கூறுகிறது. அந்த எல்லாளனின் மகளை துட்டகைமுனு காதலித்ததாக ஒரு வாய்மொழி வரலாறு உண்டு. அதையே கனகராசன் ஒரு நாடகமாக எழுதி அதை நூலாக வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

மகாவம்சத்தின் முதல் இரு தொகுதிகளைத் தவிர அடுத்த மூன்று பாகங்கள் எதுவுமே தமிழில் இதுவரை வெளிவந்ததில்லை.

என்.சரவணனின் - 6வது தொகுதி

முதற்தடவை உள்ளதை உள்ளபடி அப்படியே மொழிபெயர்க்கப்பட்டது என்.சரவணனால் மொழிபெயர்க்கப்பட்ட 6வது “மகாவம்சம்” தொகுதியாகும். 1978-2010 காலப்பகுதியைக் கொண்டிருக்கிற இந்த மொழிபெயர்ப்பானது மகாவம்ச வரலாற்றில் உள்ளது உள்ளபடி எந்தவித மேலதிக உட்புகுத்துகையின்றி அப்படியே கொண்டுவரப்பட்ட முதல் மகாவம்சப் பிரதி எனலாம். அதுபோல வரலாற்றில் மூலமொழியில் எழுதப்பட்ட பிரதியிலிருந்து தமிழுக்கு கொண்டுவரப்பட்ட முதல் தொகுதியும் இதுவேயாகும். கலாசார திணைக்களத்தின் கீழ் இயங்கும் மகாவம்சக் குழுவினால் 2012 ஆம் ஆண்டு இறுதி பாகங்களாக வெளியிடப்பட்ட இந்த நூலின் மொழிபெயர்ப்பு தமிழன் பத்திரிகையில் தொடராக கடந்த ஆண்டு வெளியானது. பின்னர் குமரன் பதிப்பகம் சென்ற ஆண்டு மொத்தம் 700 பக்கங்களில் பெரிய நூலாக வெளியிட்டது.

இதற்கு முன்னர் தமிழில் கொணரப்பட்ட மேற்படி மகாவம்சத்தின் முதலாவது தொகுதியின் மொழிபெயர்ப்புகள் ஆங்கில மொழியிலான வில்ஹெம் கைகரின் நூலை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும்.

சிங்களத்தையும் தமிழையும் அரச மொழியாக அரசியலமைப்பு ரீதியில் அதிகாரபூர்வமாகக் கொண்ட அரசு; இலங்கையின் வரலாற்று நூலை தமிழில் இதுவரை வெளியிட்டதில்லை என்பதை கவனிக்குக. தற்போது கலாசார திணைக்களம் தொடங்கியிருக்கும் மொழிபெயர்ப்பு முயற்சியும் முதலாவது தொகுதியைத் தான் செய்யத் தொடங்கியிருக்கிறது. அது முடியவே இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம். அதன் பின்னர் அடுத்து ஐந்து தொகுதிகளும் எமது வாழ்நாளுக்குள் வெளிவருமோ என்னவோ.

மேற்படி தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் ஒவ்வொன்றும் விரிவாக ஒப்பிட்டு ஆராயப்படவேண்டியவை. இங்கே அதற்கான அறிமுகத்தை மட்டுமே செய்திருக்கிறேன்.

இதுவரை எந்தெந்த  மொழிகளில் முதன் முதலில் மகாவம்சம் வெளியானது என்று சேகரித்த பட்டியல் இது.

  • மொழி ஆண்டு
  • சியாமிஸ் (தாய்லாந்து) 1796
  • லத்தீன் 1826
  • ஆங்கிலம் 1837
  • சிங்களம் 1877
  • ஜேர்மன் 1905
  • இந்தி 1942
  • நேப்பாளி 1950
  • தமிழில் 1962
  • பெங்காலி 1963
  • சமஸ்கிருதம் 1971

நன்றி - தினகரன் - சாளரம் - 12.10.2025



මහාවංශය මෙතෙක් දෙමළ බසට පරිවර්තනය නොවීම පුදුමයක් - මහාවංශයේ VI වන වෙළුම දෙමළ භාෂාවට නැඟූ නඩරාසා සරවනන් කියයි

සරවනන් දශක තුනක් තිස්සේ පුවත්පත් කලාවේ සහ පර්යේෂණයේ යෙදී සිටින ගත් කතුවරයකු වන අතර දැනට නෝර්වේහි ජීවත් වේ. හෙතෙම එහි ජීවත් වුවද වර්න් වර ලංකාවට පැමිණ බොහෝ දේශපාලන හා ඓතිහාසික පර්යේෂණවල නියැළෙයි. මේ වන විට දෙමළ භාෂාවෙන් රචිත ඔහුගේ ඓතිහාසික කෘති දහය දෙමල පාඨකයන් තුළ ඉතිහාස විෂය කෙරෙහි මහත් උනන්දුවක් ඇති කර තිබේ. මෙම කෘති සඳහා සාහිත්‍ය සම්මාන හිමිවී ඇති අතර ඉන්දියානු රජයෙන් ද හොඳම කෘති ලෙස ත්‍යාග දිනා ඇත. ඒවා ජාතිකවාදය, මාක්ස්වාදය, ස්ත්‍රීවාදය, දලිත්වාදය, උඩරට කුල ප්‍රශ්නය සහ ස්වෝත්තමවාදය මත පදනම්ව රචනා වූ ඒවා වේ.

නඩරාසා සරවනන් මේ වන විට මහාවංශයේ VI වන වෙළුම (1978 සිට 2010) දෙමළ බසට නඟා තිබේ. කුමාරන් ප්‍රකාශනයක් ලෙස ප්‍රකාශයට පත් මෙම කෘතිය පිටු 800 කට අධිකය. එය දෙමළ භාෂාවෙන් ප්‍රකාශයට පත් කිරීමේ වැදගත්කම සහ එහි ඓතිහාසික කාර්යභාරය පිළිබඳව නඩරාසා සරවනන් සමඟ සිළුමිණ කළ කතාබහකින් සැකසුනකි.

මා දන්නා ආකාරයට ලෝකේ වෙනත් කිසිම රටක මේ තරම් කාලයක් තමන්ගේම වූ ඓතිහාසික ලේඛනයක් සටහන් තබා නැහැ. වසර 2550 කට අධික කාලයක් තිස්සේ අඛණ්ඩව මෙවැනි ස්වයං ඓතිහාසික ලේඛනයක් ලියන එකම රට බවට ශ්‍රී ලංකාවට හිමිවන්නේ සුවිශේෂ ස්ථානයක්.

විවිධ කාලවල මේ රට පාලනය කළ පාලකයන්ගේ පාලන සමයේ සිදු වූ සිදුවීම්, සමාජ, ආගමික, ආර්ථික හා සංස්කෘතික වර්ධනයන් සහ මුහුණදුන් දුෂ්කරතා ඒ තුළ සටහන්ව තිබෙනවා.

එසේම පුරාවිද්‍යාත්මක සාක්ෂි මඟින් සනාථ කර නොමැති බොහෝ මිථ්‍යාවන් සහ ජනප්‍රවාද ද එහි අඩංගු වෙනවා. මෙහි ඇති අඩුපාඩු පිළිබඳ පසුකාලීනව මෙරට පුරාවිද්‍යාඥයන් සිය පර්යේෂණ මඟින් මනාව පෙන්වා දී තිබෙනවා. එසේම ලංකාවේ ඉතිහාසය සිංහල බෞද්ධ පූජනීය ඉතිහාසයක් ලෙස ගොඩනැඟීමට මහාවංශය විශාල කාර්ය භාරයක් ඉටු කරනවා.

මහාවංශය මේ වන විට වෙළුම් VIක් ප්‍රකාශයට පත් කර තිබෙනවා. ක්‍රි.පූ. 483 සිට ක්‍රි.ව. 301 දක්වා කාලය මහානාම හිමියන් විසින් රචිත “මහාවංශය” ත්, එහි තවත් සංස්කරණයක් ලෙස “චූලවංශය”ත් දැක්විය හැකියි. මහාවංශයේ II වෙළුම ක්‍රි.ව. 301 සිට ක්‍රි.ව. 1815 දක්වා කාලයත් ආවරණය කරණ අතර III වන වෙළුම 1815 සිට 1936 දක්වා කාලය ආවරණය කර තිබෙනවා. 1936 – 1956 කාල පරිච්ඡේදය IV වන වෙළුම ලෙසත්, 1956 – 1977 කාල පරිච්ඡේදය Vවන වෙළුම ලෙසත් , 1978 – 2010 VI වනවෙළුම ලෙසත් සංග්‍රහා වී තිබෙනවා.

මේ අතුරින් මහාවංශයේ I වෙළුම පමණක් දෙමළ භාෂාවෙන් පරිවර්තනය කර ප්‍රකාශයට පත් කර තිබුණත් එය සම්පූර්ණ පරිවර්තනයක් නෙමෙයි. සංක්ෂිප්ත පරිවර්තනයක්. මූලාශ්‍රය හා සසඳන විට ඒවා අසම්පූර්ණ වෙළුම් සේ සැලකිය හැකියි. ‘සෙන්ගයි ආලියාන්’ විසින් මෙහි දෙවන වෙළුමද සංක්ෂිප්තව පරිවර්තනය කර තිබෙනවා. එයින් අදහස් වන්නේ එය පරිපූර්ණ පරිවර්තනයක් මේ දක්වා සිදු කර නොමැති බවයි. ඒ අර්ථයෙන් ගත් කල, මා විසින් පරිවර්තනය කරන ලද VI වන වෙළුම පරිපුර්ණ පරිවර්තනයක්. එනිසා මෙම පරිවර්තනය ලක් ඉතිහාසයේ ප්‍රථම වතාවට මහවංශයේ එක් වෙළුමක පූර්ණ දෙමළ පරිවර්තනය ලෙස දැක්විය හැකියි.

මෙම කෘති මෙතෙක් දෙමළ බසට පරිවර්තනය කිරීමට සංස්කෘතික දෙපාර්තමේන්තුව කටයුතු නොකරන්නේ ඇයි දැයි මා සංස්කෘතික දෙපාර්තමේන්තුවෙන් විමසූ විට එම ක්‍රියාව ආරම්භ කිරීමට කටයුතු කරමින් ඇති බවත් එය අවසන් කිරීමට කාලය ගතවනු ඇති බවත් දැනගන්නට ලැබුණා. වසර ගණනාවක් ගතවී ඇතත් ඉංග්‍රීසි බසට පරිවර්තනය වුවද මෙරට අනෙක් ප්‍රධාන භාෂාව වන දෙමළ බසට මේ මාහැඟි කෘති පරිවර්තනය නොවීම විමතියට මෙන්ම සංවේගය දනවන කාරණයක්.

මෙහි පළමු වෙළුම හෝ මේ දක්වා පරිවර්තනය නොවූ පසුබිමක මෙම වෙළුම් 6 පරිවර්තනය වීමට තවත් කොපමණ කාලයක් යාවිද යන්න ගැන මට සැකයක් මතු වුණා. එනිසා මා මෙහි ඇති වැදගත්කම සලකා මගේ පර්යේෂණ කටයුතු තාවකාලිකව නවතා මෙහි හයවන වෙළුම සම්පූර්ණයෙන්ම පරිවර්තනය කර අවසන් කළා.

හයවැනි වෙළුම තුළ මෙරට ඉතිහාසය වර්ෂ 1978 සිට 2010 කාලය පිළිබඳ ලියැවී තිබෙනවා. ඒ තුළ සිංහල බෞද්ධ ජනප්‍රජාව පිළිබඳ සමාජ ආර්ථික දේශපාලන සංස්කෘතික කාරණා ගැබ්වී පැවතුණ ද අවාසනාවකට ඒ තුළ දෙමළ, මුස්ලිම් හෝ අනෙකුත් ජන ප්‍රජාවන් පිළිබඳ සඳහන් නොවීම විමතියට කරුණක්. හරියට ඔවුන් මෙහි ජීවත් නොවන ප්‍රජාවක් ගාණයි.

මහානාම හිමියන් විසින් රචිත ප්‍රථම මහාවංශය අප බොහෝදෙනා දැන සිටියත් 1956 න් පසු මෙම කාර්යය රජයට පවරා ගැනීමත් සමඟ මහාවංශ ඉදිරියට රචනා කිරීම සඳහා වෙනම කමිටුවක් සංස්කෘතික දෙපාර්තමේන්තුව යටතේ ඇති කළා. ඒ සඳහා මෙරට ඉතිහාස විෂය සම්බන්ධ ප්‍රාමාණික විද්වතුන් 100 කට අධික සංඛ්‍යාවකගේ සහාය ලබාගෙන තිබුණත් ඒ සඳහා දෙමළ ඉතිහාසඥයන්ගේ සහය විධිමත් ලෙස යොදාගත් බවක් පෙනෙන්නට නැහැ.

අවාසනාවට ලංකා ආණ්ඩුව ඒ යුතුකම ඉටු කිරීමට අසමත් වී තිබෙනවා. මෙතෙක් කිසිදු මැතිවරණ කොට්ඨාසයකට මහාවංශය මුළුමනින්ම දැන ගැනීමට අවස්ථාව ලැබී නැහැ. ආණ්ඩුව කවදාවත් එහෙම කරන්න උත්සාහ කරලත් නැහැ. මුලදී පාලි භාෂාවෙන් සිංහලට පරිවර්තනය කිරීමේ සම්ප්‍රදායක් පැවතුණා. අවසාන වෙළුම් තුන සිංහලෙන් ලියා පාලි භාෂාවට පරිවර්තනය කර ප්‍රකාශයට පත් කර තිබෙනවා. මහාවංශයේ සමහර වෙළුම් ඉංග්‍රීසි භාෂාවටද පරිවර්තනය වී තිබෙනවා. එහෙත් ලංකා ආණ්ඩුව එය දෙමළට පරිවර්තනය කිරීමට අපොහෝසත් වී තිබෙනවා.

මේ වන විට මේ සම්බන්ධයෙන් කටයුතු ආරම්භ වෙමින් පවතිනවා. නමුත් පළමු වෙළුම දැන් ආරම්භ වී ඇති බවත්, එය තවත් වසර කිහිපයක් ගත වනු ඇති බවත් දැනගත් විට, මෙම සියලු වෙළුම් පරිවර්තනය කර කිරීමට තවත් වසර ගණනාවක් ගතවනු ඇතැයි මා සිතනවා. එනිසා 6 වන වෙළුමේ කොටස් දෙක එහි වැදගත්කම සැලකිල්ලට ගනිමින් පරිවර්තනය කිරීමේ කාර්යය මා මටම භාර කර ගත්තා.

මේ සඳහා විශේෂයෙන් 1978-2010 කාලපරිච්ඡේදය ගැන ලියැවුණු මේ කොටස මා තෝරා ගත්තේ විශේෂ කාරණයක් නිසා. ඒ තමයි මේ කාල පරිච්ඡේදය තුළ සිවිල් යුද්ධය ආරම්භ වී අවසන් වීම. දෙමළ ජනතාවගේ අරගලය, දෙමළ ජනතාවගේ දේශපාලනය ඇතුළත් මෙම මැතිවරණ කොට්ඨාශයේ, සංස්කෘතික අභිලාෂයන් සටහන් වන ආකාරය අදාළ පුද්ගලයන් දැන ගැනීම වැදගත්ය. රජය එසේ නොකරන්නේ නම් එම යුතුකම ඉටු කිරීමේ වගකීම නැවත අප වැනි අයට පැවරෙනවා.

මෙම VI වන වෙළුම ලිවීම සඳහා සහභාගි වූයේ එක් දෙමළ ජාතිකයෙක් පමණයි. ඔහු මහාචාර්ය සී. පත්මනාදන්. මා ඔහු සමඟ සම්මුඛ සාකච්ඡාවක් කළා, එහිදී ඔහු කියා සිටියේ මහාවංශය නිර්මාණය කිරීම හෝ එම කණ්ඩායම සමඟ ඔහුගේ කිසිදු සම්බන්ධයක් නොතිබූ බවයි. ඔහු හුදෙක් මෙම කාල පරිච්ඡේදය තුළ ශෛවවාදයේ තත්ත්වය පිළිබඳ ලිපියක් පමණක් ඒ සඳහා ලියා දුන් බවයි. ඒ වගේම ඔහු පමණයි එය ලියා ඇත්තේ. ඒ නිසා මේ වන විට මහාවංශ වෙළුම් ලියැවී ඇත්තේ මේ දිවයිනේ සිංහල නොවන බෞද්ධයන් එහි නිර්මාණ කටයුතුවලින් පමණක් නොව ඓතිහාසික වාර්තාවෙන් ද ඉවත් කරලා. වෙනත් විදියකින් කිවුවොත් මහාවංශය යනු ශ්‍රී ලංකාවේ විවිධත්වය ආරක්ෂා නොකරන ග්‍රන්ථයක් බවයි මගේ විවේචනය.

පසුගිය වසර කිහිපය තුළ මම මහාවංශ වෙළුම් පිළිබඳ මගේ විවේචනාත්මක නිබන්ධන විවිධ සඟරාවල ලියනවා. එම රචනා එකතුවක් ලබන මාසයේදී පොතක් ලෙස ප්‍රකාශයට පත් කිරීමට නියමිතයි. ඒ කෙසේ වුවත් මම කවදාවත් මගේම අදහස්වලට මම කළ මහාවංශ කෘතියේ පරිවර්තනයට බලපෑම් කරන්න ඉඩ දුන්නේ නැහැ. එය ආචාර ධාර්මිකව එහි තිබෙන අයුරින්ම පරිවර්තන කිරීමට මා කටයුතු කළා.

සෑම පාලකයකු යටතේම ඒ ඒ කාලවල පැවති දේශපාලනය, සමාජය, අධ්‍යාපනය, සංස්කෘතිය, ආර්ථිකය, පරිසර විද්‍යාව,වෛද්‍ය විද්‍යාව සහ ත්‍රස්තවාදය ආදී මාතෘකා ඔස්සේ මෙය සම්පාදනය වී තිබෙනවා. ඒවාට වගකිව යුතු කමිටු එය වෙන වෙනම ලියා තිබෙනවා. ඒවා ඉතාම විමසිලිමත්ව පරිවර්තනය කිරීම අභියෝගාත්මක කාර්යයක්. සංස්කෘතික ක්ෂේත්‍රය ඉන් විශේෂයි. සමහර ස්ථානවල, ඇතැම් පද්‍ය පිටු භාගයක් දක්වා විහිදී තිබුණා. ඉන් බොහොමයක් පදවලට බෙදිය හැකිව තිබුණා. පාඨකයන්ට මෙය කියැවීමේදී එය කියවා අවසන් වන විට ඔවුන් ආරම්භ කළ ස්ථානය අමතක වේ යැයි කියා මා තුළ බියක් ඇති වුණා. සමස්ත මහාවංශ ශෛලිය තුළ කොමාව අනුගමනය කිරීම බොහෝ පදවල ප්‍රවණතාවක් බවට පත්ව තිබෙනවා. එය පාඨකයන් වෙහෙසට පත් කරන කාරණයක්. මා මෙය පරිවර්තනයේදී මේ ගැටලුවට මුහුණ දුන්නා.

මීට අමතරව, ශ්‍රී ලංකාවේ “ත්‍රස්තවාදය” යන ශීර්ෂය යටතේ සටහන් කර ඇති පරිච්ඡේදවල, සිංහලකරණය වූ බැවින් ස්ථාන සහ පුද්ගලයන්ගේ නම් නැවත දෙමළ භාෂාවෙන් හඳුනා ගැනීම දුෂ්කර වුණා. මා හමුදා මෙහෙයුම් පරිවර්තනය කරන විට, කිහිප වතාවක් ගූගල් සිතියම් විවෘත කර එම ස්ථානවල නම් නිවැරදි කළා. සමහර ස්ථානවල නම් සම්බන්ධ කර ගනු ලැබුවේ යුද සමයේ එම ප්‍රදේශවල ජීවත් වූ අය සම්බන්ධ කර ගනිමින්.

මීට අමතරව, ආර්ථික විද්‍යාව, වෛද්‍ය විද්‍යාව සහ පුරාවිද්‍යාව යන පාරිභාෂික වචන සනාථ කිරීම සඳහා විවිධ ක්ෂේත්‍රවල විද්වතුන්ගේ දායකත්වය ලබා ගැනීමට මට සිදු වුණා. මේ පිළිබඳ සමාජ මාධ්‍ය තුළ කුඩා සටහන් පවා මා පළ කළා.

මහාවංශයේ සියලු කාණ්ඩවල දෙමළ- සිංහල පරිවර්තන මාලාවක අවශ්‍යතාව ඉතාම වැදගත් බව මා මෙහිදී අවධාරණය කරන්න කැමතියි. මේ වන විට ශ්‍රී ලංකාවේ ප්‍රකාශයට පත් කර ඇති දේශපාලන, ඓතිහාසික, ජනවාර්ගික, සංස්කෘතික, පුරාවිද්‍යාත්මක හා උරුම පිළිබඳ අධ්‍යයන ගැන මට සැකයක් තිබෙනවා.

දෙමළ භාෂාවෙන් ප්‍රකාශයට පත් කරන ඕනෑම පර්යේෂණයක් සිංහල භාෂාවෙන් පවතින මූලාශ්‍ර එකතු නොකර සම්පූර්ණ කළ හැකිද. එසේ ම දෙමළ භාෂාවෙන් පවතින මූලාශ්‍ර භාවිත නොකර සිංහල අධ්‍යයන කටයුතු සම්පූර්ණ කළ හැකිද? කියන ප්‍රශ්නය මට තිබෙනවා. සිංහලෙන් ලියන අය සිංහල හා ඉංග්‍රීසි භාෂාවෙන් එකතු කරන ආකාරයටම ශ්‍රී ලංකාවේ පර්යේෂණ ක්ෂේත්‍රයේ දෙමළ හා ඉංග්‍රීසි භාෂාවෙන් පමණක් සාක්ෂි රැස් කිරීමේ ප්‍රවණතාවක් තිබෙනවා. සිංහලෙන් සිදු වන්නේ කුමක් දැයි දෙමළ ජනයා නොදනිති. එමෙන්ම දෙමළ භාෂාවෙන් සිදු වන්නේ කුමක් දැයි සිංහලයන් නොදනිති. මෙය ජනවර්ග දෙකෙහිම ධ්‍රැවීකර වූ ප්‍රවණතාවට කදිම නිදසුනක්.

දෙමළ සන්දර්භය තුළ මගේ ලේඛන කෙරෙහි අවධානය යොමු වීමට ප්‍රධාන හේතුව වන්නේ මගේ පර්යේෂණවලදී සිංහල මූලාශ්‍ර භාවිත කර තිබීමයි.

මේ ආකාරයට මහාවංශය VI වන වෙළුම දෙමළ භාෂාවෙන් පරිපූර්ණ පරිවර්තනයක් කිරීමේ ඓතිහාසික කාර්යයක් සම්පූර්ණ කිරීමට ලැබීම ගැන මට විශාල තෘප්තියත් තිබෙනවා. මෙතැන් සිට දෙමළ භාෂාව කතා කරන ජනතාවට මෙම අත්පිටපත පිළිබඳ අදහස් ප්‍රකාශ කිරීමට අවස්ථාවක් විවර වේවි. ඒ ගැන මට නිහතමානී ආඩම්බරයක් තිබෙනවා.

මහාවංශය දෙමළ භාෂාවට පරිවර්තනය නොවීම පිළිබඳව මහාවංශයේ ප්‍රධාන සංස්කාරකවරිය ලෙස කටයුතු කරන මහාචාර්ය මාලනී ඇදගමගෙන් සිළුමිණ කළ විමසීමේදී එතුමිය ප්‍රකාශ කර සිටියේ “මේ වසරේ ලබාදුන් කැබිනට් අනුමැතිය පරිදී මහාවංශය පිළිබඳ ප්‍රාමාණික දෙමළ විද්වතුන් දෙදෙනකු යොදාගෙන මහාවංශයේ පළමු වෙළුම දෙමළ භාෂාවට පරිවර්තනය කරමින් ඇති බවය. එය ලබන වසරේ ජනවාරි පෙබරවාරි වන විට අවසන් කර දෙමළ පාඨක ප්‍රජාව වෙත ලබාදිමට කටයුතු කරන බවය.

රසික කොටුදුරගේ

October 5, 2024

இலங்கையின் காந்தி - நடேசய்யரும் சுதந்திரனும் | என்.சரவணன்

நடேசய்யர் (14.01.1887 - 07.11.1947) முதன் முதலில் 1919 இல் இலங்கை வந்தார். இன்னும் ஓரிரு வருடங்களில் நூற்றாண்டைக் கிட்டுகிறது.

இலங்கை வந்த போது இந்திய வம்சாவளியினர் செரிவாக வாழ்ந்த பெருந்தோட்டப் பகுதிகளுக்கு சென்று பணி புரிந்தது மட்டுமன்றி அவர் இலங்கையில் தங்கி பணிபுரிய வேண்டும் என்பதை திட்டமிட்டபோது அவர் அதிகமாக வாழ்ந்தது பெருந்தோட்ட சூழலில் அல்ல. அவர் பெருந்தோட்டங்களுக்கு வெளியில் அதிகமான இந்திய வம்சாவளியினர் வாழ்ந்த கொழும்பில் இயங்கினார். அங்கு வாழ்ந்த பல இந்திய வம்சாவழித் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடினார். தலைமை கொடுத்தார்.

சேர் பொன் அருணாச்சலம், எ.ஈ.குணசிங்க போன்ற தலைவர்களுடன் தொழிற்சங்கப் பணியாற்றினார். கொழும்பிலேயே அவரின் அலுவலகத்தையும் அமைத்துக் கொண்டார். அங்கேயே தனது தொழிற்சங்கங்களையும் அவரின் பத்திரிகைகளையும் கூட நடத்தினார். தலைநகர் என்பதால் கொழும்பிலேயே உத்தியோகபூர்வமான பணிகளில் அவர் ஈடுபட வாய்ப்பானது.

இலங்கையின் முதலாவது தினசரி பத்திரிகை “தேசநேசன்” ஆகும். அப்பத்திரிகையை அவர் 1921 இல் ஆரம்பித்தது கொழும்பில் தான்.

நடேசய்யர் அதிகமாக இந்திய செய்திகளை சுதந்திரனில் எழுதியதற்கு காரணம் அவர் ஏற்கனவே நடத்திய பத்திரிகைகளிலும் இந்திய செய்திகளை அதிகமாக வெளியிட்டு வந்த அனுபவமும் காரணமாக இருக்கலாம்.

சுதந்திரனின் முதலாவது ஆசிரியர்


1924ஆம் ஆண்டு அவர் சட்டநிரூபன சபைக்குத் தெரிவாவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் செப்டம்பர் 3 அன்று அவர் “தேசபக்தன்” பத்திரிகையை ஆரம்பித்தார். அரசியல் கருத்துப் பரப்புரைக்கு ஊடகங்களின் செல்வாக்கு எத்தகையது என்பதை அவர் அறிந்தே வைத்திருந்தார். தேசபக்தன் பத்திரிகையை 1929 இல் தினசரியாக வெளியிடத் தொடங்கினார். ஆனால் பெரு மூலதனத்துடன் வீரகேசரி, தினகரன் போன்ற பத்திரிகைகளின் வருகையால் 1931 இல் தேசபக்தனை அவர் நிறுத்த வேண்டியதாயிற்று. அவரால் அந்த வர்த்தகப் போட்டியை அப்போது தாக்குப்பிடிக்க முடியவில்லை.

பின்னர் வெளியிட்ட சுதந்திரன் கூட தினசரி பத்திரிகை தான்.

நடேசய்யர் இலங்கை வருமுன் தஞ்சாவூரில் நடத்திய ‘வர்த்தக மித்திரன்’ என்கிற பத்திரிகை அதன் பின்பு அங்கே “சுதந்திரன்” என்று பெயர் மாற்றம் செய்து நடத்தப்பட்டிருக்கிறது. எனவே இலங்கையில் தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்; தமிழ் மொழியில் ஒரு பத்திரிகையை நடத்த வேண்டும் என்று திட்டமிட்டபோது அதற்கான பெயராக “சுதந்திரன்” எனும் பெயரை இடுவதில் கோ.நடேசய்யரின் பரிந்துரை இருந்திருக்கலாம். அப்பத்திரிகையின் பிரதம ஆசிரியர் பொறுப்பும் நடேசய்யரிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஆம்! சுதந்திரன் பத்திரிகையின் முதலாவது ஆசிரியர் கோ.நடேசய்யர்.

1947 மே 18 அன்று ‘தோட்டத் தொழிலாளி’ பத்திரிகையை அவர் ஆரம்பித்திருந்த நிலையில் அன்று தமிழ் மக்களின் தலைவர்களாக அறியப்பட்ட தமிழ் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரான எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்கள் புதிய பத்திரிகையொன்றை ஆரம்பிப்பதற்கான பேச்சுவார்த்தையை நடத்தினார். அதற்கடுத்த இரண்டே வாரத்தில் அதாவது யூன் முதலாம் திகதியிலிருந்து சுதந்திரன் வெளியானது.

நடேசய்யரே தமது பத்திரிகையை நடத்துவதற்கான சிறந்த அறிஞர் என்று தெரிவு செய்தமை தற்செயல் நிகழ்வல்ல. அரசியல் சமூக பிரக்ஞையும், அரசியல் அனுபவமும், குறிப்பாக பத்திரிகை – எழுத்துத் துறையில் அவருக்கு இருந்த அனுபவத் தேர்ச்சி எல்லாமே அவரைத் தெரிவு செய்வதற்கான பிரதான காரணிகளாக அமைந்தன.

கோ.நடேசய்யர் நடத்திய வர்த்தக மித்திரன், தி சிட்டிஷன்,  ஃபோர்வர்ட், தேசபக்தன், வீரன், தோட்டத் தொழிலாளி போன்ற பத்திரிகைகளின் வரிசையில் இறுதியாக அவர் ஆரம்பித்து வழிநடத்திய பத்திரிகை தான் “சுதந்திரன்”.

தேர்தல் தோல்விக்கு சுதந்திரன் காரணமா?


1947 பொதுத்தேர்தலுக்கான பரப்புரைக்கு சுதந்திரன் முக்கிய பங்காற்றியது. அரசாங்க சபையின் உறுப்பினராக இருந்துகொண்டே பத்திரிகைப் பணியையும் அவர் ஆற்றியிருந்தார். இலங்கையின் முதலாவது பாராளுமன்றத் தேர்தல் செப்டம்பரில் நடந்திருக்கிறது. 1924 இலிருந்து 1947 வரை 23 ஆண்டுகளாக நாடாளுமன்ற பிரதிநிதியாக பணியாற்றிய அவர் சுதந்திரன் பத்திரிகையையும் தோட்டத் தொழிலாளி பத்திரிகையையும் தீவிரமாக நடத்திக்கொண்டிருக்கும் நிலையில்  1947 செப்டம்பர் தேர்தலில் மஸ்கெலிய தொகுதியில் போட்டியிட்டார். ஆனால் அவரால் வெல்ல முடியவில்லை. அவர் அப்போது கொழும்பில் தமிழ் காங்கிரஸ் தரபினரோடு சேர்ந்து பத்திரிகை விடயங்களில் தீவிரமாக உழைக்கத் தொடங்கியதில் தான் போட்டியிட்ட மஸ்கெலிய தொகுதியில் தேர்தல் பணிகளை முன்னெடுப்பதற்கான வாய்ப்புகளையும், சக்தியையும் இழந்தாரா என்கிற சந்தேகம் எழவே செய்கிறது.

நடேசய்யர் 07.11.1947 இலேயே இறந்து விடுகிறார். ஆகவே அவர் சுதந்திரனில் ஆசிரியராக கடமையாற்றியது அந்த ஐந்து மாதங்கள் என்று கணிக்க முடிகிறது.

ஆனால் பிற்காலத்தில் மாதமிருமுறை வெளிவந்த பத்திரிகை எனும்போது சுமார் 98 பத்திரிகைகள் ஆண்டொன்றுக்கு வந்திருக்கின்றன. 

நடேசய்யர் தினசரி பத்திரிகைக்கு ஆசிரியராக இருந்த அந்த ஐந்து மாதங்களையும் சேர்த்து பார்த்தால் அவர் சுமார் 150 நாட்களாக வெளிவந்த பத்திரிகைக்கு  ஆசிரியராக இருந்திருக்க வேண்டும் என்று கணிக்கலாம்.

தட்டாரத் தெருவில் வீடும் அலுவலகமும்

கொழும்பு, தட்டாரத் தெரு 196 ஆம் இலக்க வீடு நடேசய்யரின் முகவரியாகப் பதிவு செய்யப்பட்டிருந்திருக்கிறது. அதே வீட்டில் தான் நோய்வாய்ப்பட்டு அவர் காலமானார். அவரது இறுதிக் கிரியையைகளையும் தந்தை செல்வாவே முன்னின்று நடத்தி வைத்தார். ‘தட்டாரத் தெரு’ என்கிற பெயரே பின்னர் ‘பண்டாரநாயக்க மாவத்தை’ என்று மாற்றப்பட்டது. அதே தெருவின் 194-ஏ என்கிற இலக்கத்தில் இருந்து தான் சுதந்திரன் பத்திரிகையின் அச்சுக்கூடம் இயங்கியது. எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அந்த அச்சகத்தை வாங்கி சுதந்திரன் அச்சகம் என்று பெயரிட்டு “சுதந்திரன்” பத்திரிகையை இயக்கினார். பிற காலத்தில் சுதந்திரன் பதிப்பகத்தின் ஏராளமான தமிழ் தேசிய நூல்கள் வெளிவந்தன.

தமிழரசுக் கட்சியின் கொழும்பு காரியாலயமாகவும் அது அப்போது இயங்கியது. நடேசய்யரின் “தோட்டத் தொழிலாளி” பத்திரிகையும் சுதந்திரன் அச்சுக் கூடத்திலிருந்தே ஏக காலத்தில் வெளியானது. இவ்விரண்டு பத்திரிகையையும் ஏக காலத்தில் நடத்தி வந்தார்.

அவர் நடத்திய பத்திரிகைகளில் எல்லாம் இந்திய செய்திகள், விமர்சனங்கள், பார்வைகள் கணிசமான அளவு இடம்பெற்றிருக்கும். ஆரம்ப சுதந்திரனிலும் இந்திய செய்திகளின் முக்கியத்துவம் பெற்றிருப்பதைக் கவனிக்க முடிகிறது. அதேவேளை வழமையான அவரின் பத்திரிகைக்கும் சுதந்திரனுக்கும் இடையில் வித்தியாசம் காணப்படுகிறது. சுதந்திரம் கிடப்பதற்கு முன்னரே தமிழர்களும், இந்திய வம்சாவளியினரும் எந்தளவு பாரபட்சங்களுக்கும், அநீதிகளுக்கும் இலக்காகிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை கச்சிதமாகப் பதிவு செய்த வேறு தமிழ் பத்திரிகைகள் இக்காலத்தில் இருக்கவில்லை. அதில் பதிவாகியுள்ள செய்திகளும், விபரங்களும் கூடவே நடேசய்யர் எழுதியிருக்கிற ஆசிரியர் தலையங்கங்களும் இதற்கு சிறந்த ஆதாரங்கள்.

இன்னும் சொல்லப்போனால் அன்றைய பெரும்போக்குப் பத்திரிகைகளின் மத்தியில் அதுவொரு மாற்றுப் பத்திரிகையாக இருந்தது. அதன் செய்தித் தலைப்புக்கள் வழமையான பெரும்போக்கு தினசரிகளின் இடும் தலைப்புகள் அல்ல.

இந்திய வம்சாவளி மக்கள் பற்றி மட்டுமல்லாமல் இலங்கையின் அனைத்து தமிழ் மக்களுக்குமான பத்திரிகையாக சுதந்திரன் பத்திரிகையை நடத்திக் காட்டினார். அவரின் மறைவுக்குப் பின்னர் இந்திய வம்சாவளியினரின் பிரச்சினைகளை வெளிக்கொணரக்கூடிய ஒரே பத்திரிகையாகவும் சுதந்திரன் இருந்தது என்றால் அது மிகையாகாது.


சுதந்திரன் – கட்சிப் பின்னணி

1948 குடியுரிமைப் பறிப்பு, வாக்குரிமைப் பறிப்பு போன்றவற்றின் காரணமாக இந்தியப் பிரதிநிதித்துவம் பாரிய அளவில் குறைக்கப்பட்டபோது பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியே இந்திய வம்சாவளியினரின் தீவிரக் குரலாக இருந்து வந்தது.

ஜி.ஜி.பொன்னம்பலம் இந்தியத் தமிழர்களுக்கு இழைத்த துரோகத்தின் காரணமாக தமிழ் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய எஸ்.ஜே.வி.செல்வநாயகம் தமிழரசுக் கட்சியை ஸ்தாபித்தார். சுதந்திரன் பத்திரிகையும் எஸ்.ஜே.வி.செல்வநாயகத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததால். அது அப்படியே தமிழரசுக் கட்சியின் பத்திரிகையாக ஆனது. அதில் இந்திய மக்களின் நலன்கள் தொடர்ச்சியாகவும், தீவிரமாகவும் எதிரொலித்தன.

ஆனால் சுதந்திரன் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து அதில் எங்கேயும் எந்தவொரு அரசியல் கட்சியினதும் ஒரு பத்திரிகையாக ‘சுதந்திரன்’ குறிப்பிடப்பட்டதில்லை. கொழும்பில் இருந்து 1983 இல் அது யாழ்ப்பாணத்துக்கு கொண்டுசெல்லப்படபோதும், அதன் பின்னரும் இடைவெளிவிட்டு இப்போது மீண்டும் புதிய சுதந்திரன் என்கிற பெயரில் வெளியிடபட்டுவருகிறபோதும் அது தமிழரசுக் கட்சியின் பத்திரிகையாக எங்கும் குறிப்புகளைக் காணக் கிடைக்காது. ஆனால் 2018 ஆம் ஆண்டு அதன் மீள்தொடக்க விழாவில் உரையாற்றிய அன்றைய பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தமிழரசுக் கட்சியின் உத்தியோகபூர்வ விபரங்களை அறிய விரும்பினால் அதற்குத தான் இந்தப் பத்திரிகை என்றார். ஆனால் அப்போதும் அப்பத்திரிகையில் அது தமிழரசுக் கட்சியின் பத்திரிகை என்கிற எந்தக் குறிப்புகளும் காணக் கிடைக்காது.


நடேசய்யரின் மறைவு செல்வநாயகம், ஜி.ஜிபொன்னம்பலம் ஆகிய தலைவர்களுக்கு பெரிய இழப்பையும், ஏமாற்றத்தையும் தந்த நிகழ்வு. அடுத்த ஆண்டே பிரஜாவுரிமை சட்டம் கொண்டுவரப்பட்ட போது அதற்கு எதிராக குரல்கொடுத்த முக்கிய தலைவராக எஸ்.ஜே.வி.செல்வநாயகம் இருந்தார். 

அப்போது நடேசய்யரும் உயிருடன் இருந்திருந்தால் அவருக்கு பாராளுமன்றத்தில் ஒரு அரசியல் தோழனாக மட்டுமன்றி அதற்கெதிரான பிரச்சாரத்தை முன்னெடுக்கும் ஊடகப்பீரங்கியாகவும் நடேசய்யர் இருந்திருப்பார். 

சுதந்திரன் எங்கே?

சுதந்திரன் பத்திரிகையின் ஆரம்ப இதழ்கள் இலங்கையின் பிரதான ஆவணக் காப்பகமான சுவடிகூடத் திணைக்களத்தில் இன்று இல்லை. 1947 ஒக்டோபர் முதலாம் திகதியிலிருந்து தான் அங்கிருந்து பெற முடிகிறது. அதற்கு முந்திய நான்கு மாத பத்திரிகைகள் அங்கே இல்லை என்கிறார்கள். 1947 யூன் தொடக்கம் செப்டம்பர் வரையான சுதந்திரன் இதழ்கள் மாத்திரம் இல்லாமல் போனதன் மர்மத்தை அறியமுடியவில்லை.

1998 இல் சாரல் நாடன் வெளியிட்ட “பத்திரிகையாளர் நடேசய்யர்” என்கிற நூலில் சில மேற்கோள்களைக் காட்டுகிறார். அவர் ஆரம்ப ‘சுதந்திரன்’ இதழ்களை சுவடிகூடத் திணைக்களத்தில் இருந்து பார்வையிட்டதாக அதில் குறிப்பிடுகிறார். அப்படியாயின் இப்போது மட்டும் இல்லை என்றால் அவற்றுக்கு நேர்ந்த கதி என்ன?

சுதந்திரன் பத்திரிகையின் தோற்றத்திலும் அதனை சவால் மிகுந்த இக்கட்டான சூழலில் வளர்த்தெடுத்ததிலும் நடேசய்யரின் வகிபாகம் பெரியது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக தமிழர் போராட்ட வரலாற்று பதிவுகளில் நடேசய்யரின் பெயர் இருட்டடிப்பு செய்யப்பட்டே வந்திருக்கிறது.

நடேசய்யர் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை வாழவில்லை. அவர் அதற்கு முன்னர் மறைந்துவிட்டார். ஆனால் அவர் ஒரு சுதந்திரத்துக்கான சுதந்திரனாக வாழ்ந்து மடிந்தார்.

சுதந்திரனை அறிந்தவர்கள் நடேசய்யரை மறவாதிருப்பார்களாக.


திரு. நடேசய்யரின் மறைவு குறித்து 1947 நவம்பர்  8 - சுதந்திரன் பத்திரிகையின் ஆசிரியர் தலையங்கத்தில் அவரின் மறைவு பற்றி எழுதப்பட்டிருந்த குறிப்பு இது

இலங்கையில் எட்டு லடசம் இந்தியர்கள் இருக்கிறார்கள். இவர்களில் எட்டில் ஏழு பங்கினர் தோட்டத் தொழிலாளர்கள் இத்தோட்டத் தொழிலாளர்களுக்குப் போதிய படிப்பில்லை. போதிய வருமானம் கிடையாது. அதுவுமல்லாமல் திரு. நடேசய்யர் இலங்கைக்கு வந்த காலத்தில், தக்க காரணம் இல்லாமல் ஒரு தோட்டத் தொழிலாளி வேலைக்குப் போகாமல் இருந்தால் அது கிரிமினல் குற்றம். அதற்கு இரண்டு மாதச் சிறைத்தண்டனை கூட உண்டு தோட்டம் விட்டுத் தப்பி ஓடினால் தண்டனை. தப்பி ஓடிய தொழிலாளிக்குச் சோறுபோட்டு வீட்டில் வைத்திருந்தால் அதுவும் குற்றம் அதற்கும் தணடனை, முதலாளிமார்கள் இந்தியத் தொழிலாளர்களை ஆடுமாடுகள் போல துண்டு மூலம் விற்று வாங்கி அடித்துத் துன்புறுத்தி வேலை வாங்கினார்கள். இது ஒரு நூற்றாண்டு வரையில நடந்துவந்த சம்பவமாகும் திரு. நடேசய்யர் இதை நிவர்த்திக்கும் பணியில் ஈடுபட்டார். தோட்டத் தொழிலாளியும் மனிதர்தான் என்பதை அவர்களுக்கு உணர்த்தினார். அவர்களிடம் அடிமைப்புத்தி அகல வேண்டும் என்று பிரசாரஞ் செய்தார். அரசாங்கத்துடனும் வாதாடினார். இதன்பயனாக தோட்டத் தொழிலாளர்களுக்கு பல சலுகைகள் செய்யப்பட்டன. இத்தொழிலாளர் சார்பாக அவர் செய்துள்ள சேவைபை மதிப்பிடுவது எளிதல்ல. அவர்கள் இவரை ''காந்தி' நடேசய்யர் என்று அழைப்பார்கள். அப்பெயர் ஒன்றே இவரின் சேவா பக்குவத்தை வெளிப்படுத்துகின்றது. 

கரந்தி நடேசய்யரின் பொது ஜனசேவை அத்துடன் நின்றுவிடவில்லை அரசியலிலும் தமிழ் மக்களுக்காக உழைத்திருக்கிறார். சட்டசபை, அரசாங்க சபையாகியவற்றிலும் இருந்து தொண்டுகள் ஆற்றியிருக்கிறார். சமீபத்தில் சோல்பரித்திட்டப்படி வழக்கப்பட்ட வெள்ளையறிக்கையானது அரசாங்க சபையில் விவாதிக்கப்பட்டபோது, தமிழன் ஆண்மை உடையவன், அடிமையாக இருக்க விரும்பான் என்பதை வெளிப்படையாகக் காட்டியவர் இலங்கைக் காந்திதான். தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் யாவரும் தேனீர் விருந்தருந்தி திரு. சேனநாயக்காவுக்கு அடிமையானார்கள். ஒரு இந்திய நியமன அங்கத்தவர் சபைக் கூட்டம் நடைபெறும்வரைக்கும் மதில் மேல் பூனையாக இருந்தார். அவ்வங்கத்தவரையும் வெள்ளையறிக்கைக்கு விரோதமாக தன் கொள்கையை நிலைநாட்டுவண்ணம் வாக்களிப்பித்தவர் திரு. நடேசய்யரே!

இலங்கையில் முதன்முதலாக தினசரி தமிழ்ப்பத்திரிகை ஒன்றை வெளியிட்டவரும் இவரே. இன்று இலக்கையிலும், இந்தியாவிலும் அவரிடம் பத்திரிகைத்தொழில் பயின்றவர்கள் அநேகருண்டு. இலங்கையிலுள்ள தமிழருக்கென ஒரு பத்திரிகை இல்லாததையிட்டு வருந்தி எங்கள் "சுதந்திரன்' பத்திரிகையை தமிழ்ப் பெரியார்களைக் கொண்டு வெளிவரச் செய்த முக்கியகர்தாவு திரு. நடைசய்யர் தான்.

காந்தி நடேசய்யர் இலங்கைத் தமிழரின் ஜீவநாதியாகவுள்ளவர். அவர் இதயத்தில் தமிழ்குருதி துள்ளிக் குதித்தோடியது. ஆண்மமையிலும், அறிவிலும் முதிர்ந்த பெரியார். விழிப்புள்ள வர். விடாமுயற்சி மிகுந்தவர். சேவா பக்குவம் பெற்றவர் ஏழை எளியோரிடம் பரிவும், பாசமும் கொண்டவர். தோட்டத் தொழிலாளர் நலனையே கனவிலும் கருதி உழைத்த பெரியார். தமிழன் என்றால் ஆண்மையுடன் முன்னேறு' என்பதை இலட்சியமாகக் கொண்டவர். இத்தகைய பெரியார் நேற்று அதிகாலையில் இவ்வுலக வாழ்வை நீத்து அவ்வுலகவாழ்வை எய்தியுள்ளார். இலங்கையிலுள்ள எல்லாத் தமிழ் மக்களுக்கும் ஓர் நெருக்கடியான காலத்தில் அவரை இழக்க நேரிட்டது துர்லபம். அளப்பரும் நஷ்டமுமாகும் மண்ணிற் பிறந்தவர் இறப்பது திண்ணம்; நாமென் செய்வது அவரது பிரிவாற்றால் வருந்தும் மனைவியாருக்கும், சுற்றமித்திரருக்கும் எமது அநுதாபம் உரித்தாகுக. அவரது ஆன்மா சாந்தியடைக.

நன்றி - தினகரன் சாளரம். 21.09.25


தலதா புனித தாதுப்பல் கோவாவில் அழிக்கப்பட்டுவிட்டதா? - என்.சரவணன்

புத்தரின் அடையாளச் சின்னங்களென இலங்கையில் குறிக்கப்பட்ட அத்தனையும் இலங்கையின் தன்மையை வடிவமைப்பதில் பெரும் பங்கு வகித்துள்ளன.

பௌதீக நினைவுச்சின்னங்கள், பயன்பாட்டு நினைவுச்சின்னங்கள், அழகியல் நினைவுச்சின்னங்கள் என வகுக்க முடியும். புத்தரின் அஸ்தியில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் பகுதிகள், புத்தர் பயன்படுத்திய பொருட்கள், புத்தர் சிலைகள், அரச மரங்கள், பௌத்த தூபிகள், புத்தரின் அட்சய பாத்திரம், அவரின் தர்ம நூல்கள் என அடுக்கிக் கொண்டு போகலாம். இவற்றில் தலையாய அடையாளமாக கருதப்படுவது தான். கண்டி தலதா மாளிகையில் காணப்படும் புனித தாதுப்பல்.

1561 ஏப்ரல் மாதம் போர்த்துகேயரால் கோவாவில் வைத்து அப்புனிதப்பல் அழிக்கப்பட்டுவிட்டதாக ஒரு பிரபல கதையுண்டு. அதைப் பற்றிய ஆய்வுகளின் மீதான ஒரு பார்வையே இது.

இதைப் பற்றி பல ஆங்கில ஆய்வுகள் உள்ளன. இறுதியில் The Buddha’s Tooth: Western Tales of a Sri Lankan Relic என்கிற நூலில் ஜோன் ஸ்ட்ரோங் அந்த சம்பவத்தை மறுக்கிறார்.

போர்த்துக்கேயரால் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் கதையின் தொடக்கம் எது என்று ஆராய்ந்து கொண்டு போனால் Diogo Do Couto 17-18 ஆம் நூற்றாண்டுகளில் இல் போர்த்துக்கேய மொழியில் எழுதிய “Da Asia de João de Barros e de Diogo de Couto” என்கிற நூல் தொகுதிகள் வரை பின் செல்கின்றது.

அவரோ பல நூற்றுக் கணக்கான பக்கங்களைக் கொண்ட 12 தொகுதிகளாக போர்த்துகேய நூல்களை எழுதி வைத்திருக்கிறார். சில தொகுதிகள் பாகங்கள் 1,2,3, என நீள்கின்றன. அத்தொகுதிகள் அனைத்தையும் தேடி எடுத்துக் கொண்டேன். இதில் எந்த நூலில் இதைப் பற்றி எழுதி இருக்கக் கூடும் என்பதை அறிவதில் கடும் சிக்கலை எதிர்கொள்ள நேரிட்டது. இதை ஆதாரம் காட்டி எழுதிய பல ஆங்கில ஆய்வுகளும் கூட எத்தனையாவது தொகுதியில் என்பதை கூறவுமில்லை. அந்த செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் என்னிடம் இதைப்பற்றி உள்ள ஆய்வு நூல்கள், ஆவணங்கள் அனைத்தையும் கொடுத்து பதில் கேட்டேன். அங்கே இவற்றை அறிய முற்பட்டபோது ஏழாவது தொகுதியில் இத்தகவல்கள் இருபதாகக் கூறியது. ஆனால் போர்த்துகேய மொழியில் தான் Sexta, Setima, Ottava, Nona என்கிற வரிசையில் இத்தொகுதியின் இலக்கங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.  அதை மொழிபெயர்த்து அது Setima (ஏழாவது தொகுதி) என்பதை அறிந்து கொண்டு எத்தனையாவது பக்கம் என்பதை கேட்டறிந்தேன். 316-318 பக்கங்களில் உள்ளதாகவும் வேறு சில இடங்களிலும் இதைப் பற்றிய விபரங்கள் உள்ளதையும் அப்பதில்களில் இருந்து அறிந்துகொண்டேன்.

இறுதியில் அப்பக்கங்களை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து அதில் உள்ள எழுத்துக்களை தனியாக பிரித்து எடுத்து தோராயமாக மொழிபெயர்த்து அப்பகுதிகளை கண்டு பிடித்தேன்.

தியோகோ டோ கூட்டோ (1542 - 1616) ஒரு போர்த்துகேய வரலாற்றாசிரியர். 1559 இல் அவர் போர்த்துகேயரின் கட்டுப்பாட்டில் இருந்த இந்தியப் பகுதிக்கு சென்று ஒரு படை சிப்பாயாக பணியாற்றியிருக்கிறார். 

1561 ஆம் ஆண்டு இலங்கைத் தீவின் வடக்கு முனையில் உள்ள யாழ்ப்பாணத்தில் ஒரு மதஸ்தலத்தில் வைத்து புனித தாதுப்பல் நினைவுச்சின்னம் கைப்பற்றப்பட்டதாக கூட்டோ கூறுகிறார். யாழ்ப்பாண இராச்சியத்தைக் கைப்பற்றிய பின்னர் போர்த்துக்கேய வைஸ்ராய் டோம் கொன்ஸ்டன்டினோ டா பிராகன்சாவின் (Don Constantino de Braganza) படையெடுப்பின் போது இச்சம்பவம் நிகழ்ந்தது என்கிறார் அவர்.

போர்த்துக்கேயரால் அத்தாதுப்பல் கைப்பற்றப்பட்டது என்பதைப் பற்றி வெளிப்படையாகக் கூறிய முதல் மேற்கத்திய ஆதாரம் கூடோவின் நூலாகும். அவர் "பூர்வீகவாசிகளிடமிருந்து" அறிந்தகொண்டவற்றின் அடிப்படையில் புத்தரின் வாழ்க்கைக் கதையையும் விவரிக்கிறார். கூட்டோ தொகுத்துள்ள இலங்கை பற்றிய குறிப்பின்படி, புத்தர் இறப்பதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கும் ‘பெகு’வுக்கும்  விஜயம் செய்ததாகவும் அவரின் இறப்புக்குப் பின்னர் அஸ்தியில் இருந்து ஒரு பல்லை எடுத்து இலங்கைக்கு அனுப்பப்பட்டதையும் விபரிக்கிறார்.

இந்த காலப் பகுதியில் கோட்டே மன்னர் தொன் ஜுவான் தர்மபாலவும் (1551-1581)  1567 ஆம் ஆண்டில் பர்மாவுக்கு அனுப்பிய தூதுக்குழுவிடம் புனிதப் பல்லை கொடுத்து அனுப்பியதாக சில பர்மிய நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.  ஆனால் இதே காலப்பகுதியில் சபரகமுவவின் உள்ள விகாரையொன்றில் அது வைக்கப்பட்டிருந்ததை சூளவம்சம் தெளிவாகக் கூறுவதால்,  பர்மிய ஆதாரங்களில் உள்ள விளக்கத்தை நம்புவது கடினம் என்பது தெளிவாகிறது.

மேலும், இக்காலப்பகுதியில் முதலாம் இராஜசிங்க மன்னனினதும் போர்த்துக்கேயரதும் தாக்குதல்களின் காரணமாக வீதிய பண்டார புனிதப்பல்லுடன் யாழ்ப்பாணத்திற்குத் தப்பிச் சென்றதாக சில நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அக்காலத்தில் யாழ்ப்பாணத் தமிழ் மன்னன் வீதிய பண்டாரவுக்கு உதவ இணங்கியதாகவும், அதற்காக நல்லூர் கோவிலில் ஒரு விசேட வைபவத்தை நடத்தியதாகவும் இக்கதைகளில் குறிப்பிடுகின்றன. ஆனால் அங்கே நிகழ்ந்த சில எதிர்பாராத சம்பவங்களால் வீதிய பண்டார கொள்ளப்பட்டுவிட்டதால் வீதிய பண்டாரவின் வசம் இருந்த புனிதப் பல்லும், பொக்கிசங்களும் யாழ்ப்பாண அரசர் வசம் சென்று விட்டதாக வரலாற்றாசிரியர் கொட்ரிங்க்டன் கூறுகிறார். 


கி.பி. 1560 ஆம் ஆண்டு  போர்த்துக்கேயர் யாழ்ப்பாணம் மீது படையெடுத்த போது மன்னனின் அரண்மனைக்கு தீயிடப்பட்டதாகவும் போர்த்துக்கேயர் அங்கிருந்த வீதிய பண்டாரவின் உடைமைகளைக் கைப்பற்றியதாகவும் கூறப்படுகிறது. அதன்  போது கண்டெடுக்கப்பட்ட புத்தரின் புனிதப்பல் போர்ச்சுக்கேய படையினரால் காப்பாற்றப்பட்டு டொன் அகோஸ்டினோ நொரேக்ஞோவிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டது என்றும், போர்த்துக்கேய பாதிரிமார் அதைக் கோரிய போதும் அவர்களிடம் அது கொடுக்கப்படவில்லை என்றும் பின்னர் சிறைபிடிக்கப்பட்ட யாழ்ப்பான மன்னருடன் சேர்த்து கோவாவுக்கு அனுப்பப்பட்டதாகவும் கொட்றிங்டன் குறிப்பிடுகிறார். 

இந்தச் சம்பவம் பர்மா அரசனுக்குத் தெரிய வந்ததும் அவன் கோவாவுக்கு ஒரு தூதுக் குழுவை அனுப்பி அப்புனிதப் பல்லை சுமார் 300,000–400,000 குரோசோடோவுக்கு   கேட்டிருக்கிறார். அதை பர்மிய அரசனுக்குக் கொடுப்பதை கோவாவிலிருந்த அதிகாரிகளும் பாதிரிமாரும் கடுமையாக எதிர்த்ததால், டொன் அகோஸ்டினோ நொரேக்ஞோ இறுதியில் அப்பல்லை கோவாவின் பேராயரிடம் அதை ஒப்படைத்தார். 

கோவாவில், நினைவுச்சின்னத்தை என்ன செய்வது என்பது குறித்து பேராயருக்கும் பிற இறையியலாளர்களுக்கும் இடையில் ஆலோசனை நடத்தப்பட்டது என்றும், இறுதியில் அது ஒரு அந்நிய மத அடையாளம் என்றும் பிசாசின் நினைவுச் சின்னம் (reliquia do demonio) என்றும் அதை வைத்திருப்பது கடவுளை அவமதிப்பதாகும் என்றும் வாதிட்டனர். இறுதியில் அதை அழிக்க வேண்டும் என்றும் அவர்கள் முடிவு செய்தனர்.  

டோம் கொன்ஸ்டான்டினோவின் செயல்களுக்கு ஆதரவாகவும், எதிராகவும் எதிர்வினைகள் இருந்ததாக கூட்டோ குறிப்பிடுகிறார். சிலர் விக்கிரகாராதனைக்கு எதிராக நின்றதற்காக அவரைப் பாராட்டினர், மற்றவர்கள் போர்த்துக்கேய சாம்ராஜ்யத்திற்கு சாதகமான செயலை ஆற்றியதாகவும், பௌத்தர்கள் வழிபடுவதற்கான மற்றொரு பொருளை உருவாக்கிக் கொள்வார்கள் என்றும் கருத்துக்கள் கூறப்பட்டன.


பேராயர் டொன் காஸ்பர் (Don Gaspar) தலைமையில் அன்றைய வைசிராய் கொன்ஸ்டண்டைன் கோவாவில் மண்டோவின் ஆற்றோரத்தில் பகிரங்கமாக அனைவரிடமும் காண்பித்து அப்பல்லை ஒரு உரலில் நசுக்கி, சிதைத்து பொடியானதை எடுத்து எரிந்துகொண்டிருந்த தீயில் போட்டு எரித்து, அதன் மீதான வணக்கத்தைத் முற்றாகத் தடுக்க அதன் சாம்பலை அங்கிருந்த ஆற்றில் எறிந்து அழித்ததாகவும் கூட்டோ கூறுகிறார்.

கொந்தளிப்பான காலகட்டத்தில் தலதாவை ஆக்கிரமித்த போர்த்துகீசியர்கள் அதை அழித்ததாகவும் குவைரோஸ் குறிப்பிடுகிறார். 

ரிபைரோவும் இதே போன்றே விபரித்திருப்பதாகத் தெரிகிறது. அவரின் கூற்றுப்படி யாழ்ப்பாணத்தில் அப்பல் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, பெகு (பர்மா) மன்னன் அதைப் பற்றி அறிந்து, அதை எப்படியாவது தன்னிடம் கொடுக்குமாறு கேட்டதாக அவர் கூறுகிறார். இதற்காக கோவாவுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பிய மன்னர் அப்புனிதப்பல்லை பெறுவதற்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலுத்துமாறு கோவாவுக்கு ஒரு தூதுக்குழுவை அனுப்பினார்.   அவர்கள் இதற்காக போர்த்துக்கல்லுடன் ஒரு நிரந்தர ஒப்பந்தம் ஒன்றை செய்து கொள்ளவும், மலாக்காவில் உள்ள போர்த்துகேய கோட்டைகளுக்குத் தேவையான அனைத்தையும் வழங்கவும் ஒப்புக் கொண்டதைக் காண முடிகிறது.  அப்போது கோவாவில் இருந்த போர்த்துக்கேய அதிகாரிகள் அப்பல்லை மன்னரிடம் ஒப்படைக்கவும் தயாராக இருந்தனர், ஆனால் பாதிரிமாரும், பேராயரும் அதை எதிர்த்ததுடன் கடவுளின் நற்பெயருக்கு அவமானம் என்று அறிவித்து அழிக்கப்பட்டு கடலில் வீசப்பட்டன  என்று ரிபெய்ரோ குறிப்பிடுகிறார்.


எவ்வாறாயினும், தங்கத்தால் அலங்கரிக்கப்பட்ட ஒரு குரங்கின் பல் யாழ்ப்பாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டதென்றும் ரிபைய்ரோ குறிப்பாக குறிப்பிடுகிறார், எனவே இலங்கையர்கள் ஒரு குரங்குப் பல்லை வணங்குகிறார்கள் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார். புனிதப் பல் என்று நம்பப்பட்ட வேறொன்றைத் தான் போர்த்துகேயர் அழித்தார்கள் என்று பிற்கால ஆய்வாளர்கள் பலர் சுட்டிக்காட்டியுமுளனர். பிரபல வரலாற்றாசிரியர் எமர்சன் டெனன்ட் இந்த சம்பவத்தை சற்று வித்தியாசமான வேறு வழியில் விளக்க்கிறார், போர்த்துக்கேயர் யாழ்ப்பாணத்தில் ஒரு குரங்கு பல்லை கைப்பற்றியதாகவும், ஆனால் அது ஒரு தங்கப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்ததாகவும், அது ஹனுமனை வணங்குவதற்கான அடையாளமாக பொதுமக்களால் அது பேணப்பட்டு வந்ததாகவும் விளக்குகிறார். அதுவே கோவாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு அழிக்கப்பட்டதாகவும் டெனன்ட் விவரிக்கிறார். 

பின்னர்  "உண்மையான" தாதுப்பல் இரகசியமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாகவும், பின்னர் கோட்டே மன்னர் யுவான் தர்மபால அதனை பெகுவின்  (பர்மா) மன்னருக்கு  விற்றதாகவும் கூட்டோ மேலும் விவரிக்கிறார். அதனைத் தொடர்ந்து, கண்டி மன்னன் விமலதர்மசூரிய இதற்கு முரணாக, உண்மையான புத்தரின் பல் நினைவுச்சின்னம் தன்னிடம் இருப்பதாக தெரிவித்திருக்கிறார். மனனர் தர்மபால போலிப்பல்லையே அவ்வாறு பர்மா மன்னருக்கு விற்றார் என்கிறார்.  

கூட்டோவின் பதிவுகளில் உள்ள உண்மைத்தன்மையை பகுப்பாய்வு செய்வதற்கு, மேற்கத்திய மற்றும் சுதேச ஆதாரங்களில் இருந்தும் வரலாற்றுப் பின்னணியிலிருந்தும் அதைப் பரிசீலிக்க வேண்டும்.

"புத்தரின் பல்..." மேற்கத்திய ஆதாரங்கள் குறிப்பிடத்தக்க மாறுபட்ட கருத்துக்களை பதிவு செய்துள்ளன. சில டச்சு ஆதாரங்கள் 1554 ஆம் ஆண்டில் ஆதாமின் சிகரத்திற்கு அருகில் அப்பல் எடுக்கப்பட்டதாகக் கூறுகின்றன, இன்னும் சிலர் இது காலிக்கு அருகில் கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறுகின்றன. கூட்டோவுக்கு முன்பு, மேற்கத்திய நூல்களில் பொதுவாக அவ்வாறு கைப்பற்றப்பட்ட பொருள் புத்தரின் பல்லே அல்ல என்றும் குரங்கின் பல் என்றும் குறிப்பிட்டன. 


இதைப் பற்றிய முன்னைய பல ஆய்வுகளை மறு ஆய்வுக்கு உட்படுத்தி “புத்தரின் பல்: இலங்கை நினைவுச்சின்னம் பற்றிய மேற்கத்திய கதையாடல்கள்” (The Buddha's Tooth: Western Tales of a Sri Lankan Relic) என்கிற நூலை எழுதியவர் ஜோன் எஸ்.ஸ்ட்ரோங் (John S.Strong). இதைப் அப்ற்றிய முதற் தகவல்களைக் கூறியவர் கூட்டோ என்கிறார் அவர்.

பிற்கால போர்த்துகீசிய வரலாற்றாசிரியர்கள், குவைறோ மற்றும் டி சூசா போன்றவர்கள், இது புத்தரின் பல் என்பதை அதிகளவில் உறுதிப்படுத்தினர். பிரான்சிஸ்கோ டி சூசா (1710) இது புத்தரின் பல் தான் என்று திட்டவட்டமாகக் கூறினார். 

இலங்கை மக்கள் "புத்தரின் பல்லை" போர்த்துக்கேயர்கள் கைப்பற்றியதையும், அதை அழித்ததையும்  ஏற்க மறுத்தனர். யாழ்ப்பாணத்தில் அது கிடைத்திருக்க வாய்ப்பில்லை என்றும், அவர்கள் அழித்தது இராமாயணக் கதைகளில் வரும் குரங்குத் தெய்வமான ஹனுமானின் பல்லாக இருக்கக் கூடும் என்றும் கூறினர். இன்னும் சிலர் அது அதிர்ஷ்டவசமாக தப்பி இருக்கிறது என்றும். தாதா வம்சத்தின் பிரகாரம் அது அளிக்கப்பட முடியாதது என்றும் கூறினார். அதற்கேற்றாற் போல தொன் ஜூவான் தர்மபால, கொனப்பு பண்டார போன்றவர்கள் தம்மிடம் அப்பால் பத்திரமாக இருக்கிறது என்று தெரிவித்த கருத்துக்களும் மக்களின் நம்பிக்கைக்கு சாதகமாக அமைந்தன.

தாதாவம்ச காப்பியமானது இலங்கையின் புனித தாதுப்பல் நினைவுச்சின்னத்தின் வரலாற்றை விரிவாக விளக்குகிறது. தாதவம்சம் போன்ற 12 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட சுதேசிய பாலி மொழி வம்ச காப்பியங்கள் அதற்கு முந்தைய சிங்கள இலக்கியங்களை அடிப்படையாகக் கொண்டது. கிபி 4 ஆம் நூற்றாண்டில் புத்தரின் தகனத்திலிருந்து; அஸ்தி இலங்கைக்கு வரும் வரையிலான புனிதப்பல் வந்து சேர்ந்த வழித்தடத்தை விவரிக்கிறது. ஆனால் ஸ்ட்ரோங் அதில் உள்ள பல விவரங்களின் வரலாற்றுத் தன்மையையும் கேள்விக்குள்ளாக்குகிறார். பிற மத மற்றும் இலக்கியப் படைப்புகளிலிருந்து எடுத்தாண்டு புனையப்பட்ட பல கதைகளும் அதில் உள்ளதாக குறிப்பிடுகிறார் ஸ்ட்ரோங். 4 -15 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் இலங்கையில் புனித தாதுப்பல் ஏற்படுத்தியிருந்த அரசியல் முக்கியத்துவத்தை இக்காப்பியம் விளக்குகிறபோதும்  16 ஆம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்தை எப்படி சேர்ந்தது என்கிற விபரங்களை அது சொல்லவில்லை.

இலங்கையில் பௌத்த மத நினைவுச் சின்னங்கள் இலங்கையின் அரசியல் அதிகார மையங்கள் நிலை கொண்டிருந்த பிரதேசங்களோடு தொடர்புடையவை. மாறாக 16 ஆம் நூற்றாண்டுகளில் யாழ்ப்பாணத்துடன் தொடர்புபடுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்கிறார் அன்ன பிலேக்பெர்ன். 

கூட்டோவின் பதிவுகள் எச்சரிக்கையுடன் கையாளப்பட வேண்டும் என்கிறார் ஸ்ட்ரோங். அவர் அன்றைய கால பல விவரிப்புகளை வழங்கினாலும், கைப்பற்றப்பட்ட பல்லின் அமைவிடம் மற்றும் ஆரம்ப அடையாளம் போன்ற தகவல்களை வழங்கும் பொது  மற்ற மேற்கத்திய ஆதாரங்களுடன் முரண்படுகிறது. சுதேச நூல்களோ அல்லது வேறு இலக்கியங்களோ இந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணத்தில் அத்தகைய ஒரு நினைவுச்சின்னம் இருந்ததை உறுதிப்படுத்தியதில்லை.

கண்டி ராஜ்ஜிய காலத்தில் எழுதப்பட்ட “சிறு ராஜாவலிய”, “சிறு பூஜாவலிய” போன்ற   நூல்களில் இத்தாதுப்பல் எங்கெல்லாம் பாதுகாக்கப்பட்டு இறுதியில் கண்டி தலதா மாளிகையில் நிலைகொண்டது என்பது பற்றிய விபரங்களைத் தருகிறது.1693 இல் எழுதப்பட்ட “தலதா புவத்” என்கிற காவிய நூலிலும் இதைப் பற்றிய விபரங்களை பதிவு செய்திருக்கிறது. 

நினைவுச் சின்னங்களின் நம்பகத் தன்மை

புத்தரின் அஸ்தியில் இருந்து எடுக்கப்பட்ட பகுதிகளை தாங்கள் வைத்திருப்பதாகக் கூறும் நாடுகள் பல உள்ளன. இலங்கை, இந்தியா, ஆப்கானிஸ்தான், பர்மா, சிங்கப்பூர், சீனா, அமெரிக்கா, யப்பான், தென் கொரியா, மேலேசியா, கம்போடியா, தாய்வான்,  நேபாள், பங்களாதேஷ், திபெத், போன்ற நாடுகளில் இத்தகைய புத்தரின் நினைவுச் சின்னங்கள் இருப்பதை காண முடியும்.

ஆனால் இவற்றில் பல நம்ப முடியாத அளவுக்கு புனைவுகளைக் கொண்டிருக்கிறதா என்கிற கேள்வி நமக்கு எழும். உதாரணத்திற்கு சீனாவில் இருபது இடங்களில் புத்தரின் உடற்பாகங்களினாலான நினைவுச் சின்னங்கள் உள்ளதாகக் குறிப்பிடுகிறார்கள்.

சீனாவில் பீஜிங் நகரில் உள்ளதாக இன்றும் நம்பப்படும் புத்தரின் தாதுப் பல்லின் அளவு மூன்று அங்குலமாகும்.

சிங்கப்பூரில் சைனா டவுனில் புத்த விகாரையும், அதனோடு இணைந்த நூதனசாலையொன்றும் உள்ளது அங்கிருப்பதாக சொல்லப்படும் புத்தரின் புனிதத் தாதுப் பல் விகாரையின் நான்காம் தளத்தில் 350 கிலோ தூபியின் உள்ளே வைக்கப்பட்டிருகிறது. இந்தப் பல் 7.5 சென்றிமீற்றர் நீளமானது என்றால் இதன் உண்மைத் தன்மையை நீங்களே புரிந்துகொள்ளலாம். சிங்கப்பூர் சுற்றுலாத்துறைக்கு இதனால் ஏராளமான வருமானம் வருகிறது. அந்த விகாரைக்கு மட்டும் வருடாந்தம் சராசரியாக 75 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானம் ஈட்டப்படுகிறது. சுமார் 3.6 மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இதைப் பார்ப்பதற்காக மட்டும் வருகிறார்கள்.

உலகம் முழுவதும் உள்ளதாகச் சொல்லப்படும் இந்த எந்தவொரு நினைவுச் சின்னங்களும் புத்தரது தான் என்று தொல்லியல் ரீதியில் நிறுவப்பட்டதில்லை.

இலங்கையில் காணப்படுவதாகக் கூறப்படும் புத்தரின் எந்தவொரு அஸ்தி தொடர்பான நினைவுச் சின்னங்கள் பற்றிய கதைகள் இலங்கையில் உள்ள இலக்கியங்கள் மட்டுமே குறிப்பிடுகின்றனவே ஒழிய எந்தவொரு இந்திய நூல்களோ அல்லது புத்தர் பற்றி இலங்கைக்கு வெளியில் எழுதப்பட்ட பண்டைய திரிபீடகம் உள்ளிட்ட எந்தவொரு நூல்களிலும் குறிப்பிடப்பட்டதில்லை. அதே திரிபீடக நூல்கள் எதுவும் இலங்கைக்கு புத்தர் மூன்று முறை விஜயம் செய்ததையோ, ஐயாயிரம் வருடங்களுக்கு பௌத்தத்தை பாதுகாக்கும் பணி இலங்கைக்கு ஒப்படைக்கப்பட்டதையோ பற்றி கூட குறிப்பிட்டதில்லை என்பதையும் நினைவிற் கொள்வோம்.

நன்றி காக்கை சிறகினிலே! - யூன் 2025

உசாத்துணை:

  1. பெகு என்றால் பர்மா என்று அறியமுடிகிறது.
  2. මූර්ති, ලංකාව සහ බුරුමය, මියුරෝ පොත් ප්‍රකාශකයෝ, 2005,
  3. Culavamsa, tr. W. Geiger, Ceylon Government Information, Department, Colombo, 1953, Vol. II, 5
  4. Codrington H. W, A Short History Of Ceylon, Macmillan and Co., Limited, 1926
  5. கொட்ரிங்டன் (Humphry William Codrington) இலங்கையில் ஒரு சிவில் அதிகாரியாக 1903 ஆம் ஆண்டிலிருந்து சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் இலங்கையில் கடமையாற்றியவர். பல மாவட்டங்களில் அரசாங்க அதிபராக பணியாற்றியதுடன், இலங்கை பற்றிய பல வரலாற்று ஆய்வுகளை செய்திருக்கிறார். செனரத் பரணவிதான போன்ற தொல்லியல் அறிஞர்களால் கொண்டாடப்பட்டவர். பிற்காலத்தில் ஜோன் டொயிலியின் நாட்குறிப்பை தொகுத்துவெளியிட்டதும் அவர் தான்.
  6. Cruzados என்பது 15-17 ஆம் நூற்றாண்டுகளில் போர்த்துக்கேயர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த நாணயம்
  7. Harvey GE, History of Burma, Longman Green and co, London, 1925
  8. Strong, John S., ‘The Devil was in that Little Bone’: The Portuguese Capture and Destruction of the Buddha’s Tooth-Relic, Goa, 1561. Past & Present, Volume 206, Issue suppl - 5, 2010, Pages 184–198.
  9. Fernao De Queyroz, The Temporal and Spiritual conquest of Ceylon, tr. SG Perera, Government Printer, Colombo, Vol.II, 1930
  10. ප්‍රතිකාල් ජාතික රෙබෙයිරෝගේ ලංකා ඉතිහාසය, පරි. ටී කේ රුබේරු, ඇස් ගොඩගේ සහ සහෝදරයෝ, කොළඹ, 2003
  11. J Emmeron Tennent, Ceylon, Longman, London, Vol.2, 1859
  12. “Pegu” என்று அன்று அழைக்கப்பட்டது எதனை என்று தேடித் பார்த்தபோது பர்மா என்று அறியக்கிடைகிறது. அதாவது பர்மா அரசருக்கு விலைக்கு விற்றுவிட்டதாக அந்நூலில் குறிப்பிடுகிறார்.
  13. Cruzados என்பது 15-17 ஆம் நூற்றாண்டுகளில் போர்த்துக்கேயர்களால் பயன்படுத்தப்பட்டு வந்த நாணயம்
  14. João de Barros, Da Asia de João de Barros e de Diogo de Couto, Volume VII ( 1616), IX ( 1736)
  15. John S. Strong, The Buddha's Tooth: Western Tales of a Sri Lankan Relic (Buddhism and Modernity) 2021 
  16. De Sousa, Francisco. Oriente Conquistado a Jesu Christo pelos padres da Companhia de Jesu da Provincia de Goa. Lisbon: Valentim da Costa Deslandes, 1710.
  17. Anne M. Blackburn, Buddha-Relics in the Lives of Southern Asian Polities, Vol. 57, No. 3/4, Relics in Comparative Perspective (2010)


தலதா புனிதத் தாதுப்பல் கோவாவில் அழிக்கப்பட்டுவிட்டதா? என்.சரவணன் by SarawananNadarasa on Scribd

1816 - இலங்கையில் அடிமையொழிப்பும் ஹன்னா மூரின் வகிபாகமும் - என்.சரவணன்


ஹன்னா மூர் (Hannah More) இந்தப் பெயர் நமக்கு நினைவுக்கு வராமல் போகலாம். ஆனால் ஆங்கில இலக்கிய, அரசியல் உலகில் மிகப் பெரும் ஆளுமையாக கொண்டாடப்படுகிறார்.

இலங்கைக்கும் ஹன்னா மூருக்கும் உள்ள இலக்கிய அரசியல் தொடர்பு பற்றியதே இக்கட்டுரை.

இலங்கையின் முதலாவது நாவலாக கொண்டாடப்படுகிற காவலப்பன் கதை என்கிற நாவலின் மூல ஆசிரியர் இவர் தான். அது மட்டுமன்றி இக்கட்டுரையை எழுதத் தூண்டியது அவர் இலங்கையைப் பற்றி எழுதிய ஒரு கவிதையே.

இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் நிலவிய அடிமை முறைமையை எதிர்த்து அவர் எழுதிய “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” என்கிற கவிதை அப்போதே பெரும் பிரபலம் பெற்ற ஒரு படைப்பு. தற்செயலாகக் கண்ட அந்தக் கவிதை என்னை உலுக்கியது மட்டுமன்றி. அப்படியொரு கவிதை குறித்து இலங்கை இலக்கியங்களில் பேசப்பட்டதாக அறிந்ததுமில்லை.

இலங்கையில் அடிமைகள்

இலங்கையில் அடிமைமுறையை ஒழிக்கப் போராடியவர் அன்றைய தலைமை நீதிபதியாக இருந்த அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன். இலங்கையில் வாழ்ந்த காலத்தில் அவர் இலங்கையின் நலன்களில் அக்கறையெடுத்த ஆங்கிலேய முன்னோடி என்று கூறலாம்.

அடிமை முறையை இலங்கையில் ஒரே தடவையில் ஒழிக்க இயலவில்லை. சமூக அளவில் அந்தளவு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அடிமை முறை சாதியத்தோடு பிணைந்து இருந்தது. சாதியம் இலங்கையின் பண்பாட்டு வழக்கங்களோடு இணைந்திருந்தது.

யாழ்ப்பாண சமூகத்தில் கோவியர், நளவர், பள்ளர் ஆகிய சாதியினர் அடிமைகளாக வைக்கப்பட்டிருந்தனர். இதைப் பற்றிய பல ஆய்வுகளும், அன்றைய காலனித்துவகால அறிக்கைகளும், சட்டங்களும் உள்ளன.

ஒருபுறம் யாழ்ப்பாண சமூகத்திலும், மறுபுறம் தென்னிலங்கை சிங்கள மக்கள் மத்தியில் குறிப்பாக கண்டிய ராஜ்ஜிய பகுதிகளிலும். மறுபுறம் டச்சு காலத்தில் விட்டுச் சென்ற கணிசமான நீக்ரோ அடிமைகளும் நாட்டில் இருந்தனர்.

அடிமை முறைக்கு எதிராக உள்நாட்டிலிருந்து குரல்கள் எழவில்லை. மாறாக இந்த அடிமைமுறையை நேரில் கண்ட தாராளவாத எண்ணம் கொண்ட அரச அதிகாரிகள் இதற்கு எதிராக குரல் கொடுத்தனர். அவர்களில் முக்கியமானவர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன். அதனைத் தொடர்ந்து இலங்கையில் 1816 ஆம் ஆண்டு அடிமைமுறை ஒழிப்பு பற்றிய ஆணை பிறப்பிக்கப்பட்டன. ஆனால் அது முழுமையான ஒழிப்பு அல்ல. இலங்கையில் அடிமைமுறை மூன்று கட்டங்களாக ஒழிக்கப்பட்டன. 1816 இல் வீடுகளில் அடிமைகளாக வேலை வாங்குவதைத் தடை செய்கிற சட்டமே கொண்டு வரப்பட்டது.

முக்கியமாக 1816 ஓகஸ்ட் 12 ஆம் திகதிக்குப் பின்னர் அடிமைப் பெண்களுக்குப் பிறக்கின்ற குழந்தைகள் அடிமை நிலையிலிருந்து விடுவிக்கப்பட்டவர்களாக பிரகடனப்படுத்தப்பட்டது. 

இந்தத் திகதி தெரிவு செய்யப்பதற்கு ஒரு காரணம் உண்டு. அன்றைய மூன்றாம் ஜோர்ஜ் மன்னரின் பிறந்த நாள் அது. ஆனால் அவரின் உண்மையான பிறந்த நாள் யூன் 4 ஆம் திகதியாகும். ஆனால் அரசவை அவரின் உத்தியோகபூர்வ பிறந்தநாள் கொண்டாட்டங்களை ஓகஸ்ட் 12 அன்றே மேற்கொள்ளும் வழக்கத்தைக் கையாண்டது. எனவே அவரின் அந்த பிறந்த நாளிலேயே அரசரின் பெயரால் இந்த அடிமைமீட்பு பிரகடனம் செய்யப்பட்டது.

பிரித்தானிய முடி அடிமைகளுக்கு சுதந்திரம் வழங்குவதன் குறியீடாக இந்த பிரகடனத்தைக் பிரபலப்படுத்திய போதும் முழுமையாக இந்த அடிமையொழிப்பு நடைமுறைக்கு வரவில்லை. அடிமைப் பெண்ணுக்குப் புதிதாகப் பிறக்கின்ற குழந்தைகள் தான் அடிமை முறையில் இருந்து தப்பினார்களே தவிர அதுவரை இருந்த அடிமைகள் அடிமைகளாகவே தொடரப்பட்டனர். அதுமட்டுமன்றி அக்குறிப்பிட்ட திகதிக்கு முதல் நாள்வரை பிறந்த குழந்தைகள் கூட அடிமைகள் தான்.


பிரித்தானியாவில் முதன்முறையாக அடிமை முறை 28.08.1833இல் ஒழிக்கப்பட்டதைத் தொடர்ந்து (Slavery Abolition Act 1833) அதன் கீழ் இருந்த பல காலனித்துவ நாடுகளில் படிப்படியாக அடிமை முறை ஒழிக்கப்பட்டன. பிரித்தானியாவின் காலனி நாடுகளுக்கும் செல்லுபடியாகும் வகையில் அச்சட்டம் கொண்டுவரப்பட்டாலும், இரண்டு நாடுகள் விதிவிலக்கு. இலங்கையில் ஒழிக்கப்பட சற்று தாமதமாக்கப்பட்டது. இலங்கையும், செயின்ட் ஹெலேனா என்கிற தீவுகளும் விதிவிலக்கு என்கிற ஒரு சரத்து அந்தச் சட்டத்தில் உண்டு. (Section LXIV). 

இந்த காலப்பகுதியில் பிரித்தானிய காலனித்துவத்தின் கீழ் உலகம் முழுவதும் 60 க்கும் மேற்பட்ட நாடுகள் இருந்தன. இந்த நாடுகளில் அடிமைநிலை காலனி நாடுகளாக கரீபியன் தீவுகளான பார்படோஸ், ஜமைகா, அன்டிகுவா உள்ளிட்ட பல நாடுகள் இருந்தன. அவை நேரடியாக பிரித்தானியா அடிமை முறையை  மோசமாக நடைமுறைப்படுத்தி வந்த நாடுகள் எனலாம். ஆனால் அந்த தரத்தில் இலங்கை போன்ற நாடுகள் கையாளப்படவில்லை. அதுமட்டுமன்றி ஒருவகை அரை அடிமைநிலையை இலங்கையில் பின்பற்றியவர்கள் சுதேசிய மக்களே. இன்னும் சொல்லபோனால் சுதேசிகளே சுதேசிகளை அடிமைகளாக வைத்திருந்தார்கள். சாதிய வர்ண நிலை மரபை சாதகமாக ஆக்கிக்கொண்டு அடிமைமுறையை நடாத்தி வந்த ஒரு சமூகம் இங்கே இருந்தது. அவர்களிடம் இருந்து அடிமைகளை விடுவிக்கும் தரப்பாக பிரித்தானிய தரப்பு இருந்தது தான் இங்கே வேடிக்கை.


தமக்குக் கீழ் இருந்த சுமார் 20 நாடுகளில் படிப்படியாக அடிமையொழிப்பை செய்ததன் பின்னர் தான் இலங்கையில் செய்தார்கள். அதற்கான காரணம் இந்தியத் தொழிலாளர்களை கையாளவும் இந்த அடிமைமுறை அவர்களுக்கு சாதகமாக இருக்குமா என்கிற எதிர்பார்ப்பும் தான். இங்கிலாந்தில் அடிமை முறை ஒழிக்கப்பட்ட அதே 1833 ஆம் ஆண்டு இராஜகாரிய முறையை  இலங்கையில் ஒழிப்பதன் மூலம் சமாளிக்கப் பார்த்தார்கள். ஆனால் அடிமைமுறையை ஒழிக்கவில்லை. இறுதியில் பல அரசியல் அழுத்தங்களின் பின்னர் 1844 இல் இலங்கையில் அடிமையொழிப்பு சட்டத்தை கொண்டுவந்தார்கள்.

சூரியன் மறையாத சாம்ராஜ்யம் என்று சொல்லும் அளவுக்கு உலகம் பூராவும் நாடுகளைக் கைப்பற்றி வைத்திருந்தது பிரித்தானியா. அந்நாடுகளை சுரண்டுவதற்கான இலவச ஊழியர்களாக ஆபிரிக்க அடிமைகளை பல நாடுகளுக்கும் கொண்டு போய் சேர்த்தார்கள். அடிமைகளை விற்பதும் வாங்குவதும் பெரும் வர்த்தகமாகவே குறிப்பாக 17, 18, ஆம் நூற்றாண்டுகளில் காணப்பட்டன. 1562 to 1807 காலப்பகுதிக்குள் மூன்று மில்லியன் அடிமைகளை ஆபிரிக்காவிலிருந்து கரிபியன் வழியாக கடத்திச் சென்றது பிரித்தானியா.

ஈற்றில் அடிமைமுறையின் கொடுமைகளை எதிர்த்து பிரித்தானியாவில் எழுந்த கிளர்ச்சிகளின் விளைவாக அடிமைமுறையை ஒழிக்கும் நிலைக்கு பிரித்தானியா தள்ளப்பட்டது. சகல நாடுகளிலும் அடிமைமுறையை வரிசையாக ஒழித்தபோதும் இறுதியாக அடிமைமுறை ஒழிக்கப்பட்ட நாடே இலங்கை என்பதை இங்கே முக்கியமாக சுட்டிக் காட்ட வேண்டும்.

இச்சட்டத்தின் விளைவாக வடக்கில் உள்ள தமிழர்கள் மத்தியில் அடிமைத்துவம் அவ்வளவு பெரிதாக தளரவில்லை. காரணாம் சாதியத்தொடு அவ்வடிமை முறை பிணைந்திருந்தது. எனவே அடிமை முறை மாற காலம் எடுத்தது. ஆனால் தெற்கில் குறிப்பாக அடிமைப்படுத்தல் வீடுகளில் நிலவிய கண்டி ராஜ்ஜிய பரப்பில் வடக்கை விட வேகமான மாற்றம் நிகழ்ந்ததை நீரா விக்ரமசிங்க தனது நூலில் விளக்குகிறார். 


அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன்

இலங்கையில் அடிமை முறையை ஒழிப்பதற்கான ஆரம்பக் குரல்கல்களின் முன்னோடியாக அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனை நாம் கொண்டாட வேண்டும். இலங்கையின் நீதித்துறைக்கு மட்டுமன்றி, சமூக விடுதலை, வரலாற்று மீள் கண்டுபிடிப்பு என்பவற்றுக்கும் கூட அவரின் தனித்துவமான பாத்திரம் விரிவாக பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்று. மகாவம்சத்தை முதன் முதலில் மீட்டு எடுத்து அதனை வெளிக்கொணரக் காரணமாக இருந்தவரும் அவரே. இலங்கையின் சுதேச மொழிகளான சிங்களத்தையும், தமிழையும் கூட அவர் கற்றார்.

கிறிஸ்தவ நம்பிக்கையாளரான ஜோன்ஸ்டன் தமிழ் சிங்கள சமூகத்தில் கிறிஸ்தவ மதத்துக்கு ஊடாக விழிப்புனர்ச்சியையும் சமூக விடுதலைக் கருத்துக்களையும் பரப்பலாம் என நம்பினார். பைபிளை தமிழிலும், சிங்களத்திலும் மொழிபெயர்த்து வெளியிடுவதில் அவர் மிகுந்த ஆர்வம் காட்டியிருந்தார். மேலும் “வெஸ்லியன் மிஷன்” என்கிற பிரபல மிஷனரி அமைப்பை நிறுவிய நிறுவனர்களில் ஒருவர் ஜோன்ஸ்டன். 

இலங்கையில் அப்போது யாழ்ப்பாண சமூகத்தில் நிலவிய அடிமை முறையைப் போலவே சிங்கள சமூகத்திலும் அடிமைமுறை இருந்தது. குறிப்பாக கண்டி ராஜ்ஜியத்தில் அடிமைமுறை எவ்வாறு இருந்தது என்பது பற்றிய பல பதிவுகள் உள்ளன.

அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் இதனை ஒழிப்பதற்காக கடுமையாக பாடுபட்டவர்களில் ஒருவர். அவர் இங்கிலாந்தில் உள்ள உயரதிகாரிகள் வரை இலங்கையில் அடிமைமுறையை ஒழிக்க வேண்டும் என்கிற முறைப்பாடுகளை செய்து கொண்டே இருந்தார்.

அதைப் பற்றிய பல கடிந்தங்கள், அறிக்கைகள், பத்திரிகை செய்திகள் என்பன பரவலாக வெளியாகின. 1800 களின் ஆரம்பத்தில் இங்கிலாந்தில் அடிமையொழிப்புக்கான இயக்கம் தீவிரமாக இயங்கத் தொடங்கின. பிரித்தானியாவில் மாத்திரமன்றி அதன் குடியேற்ற நாடுகளிலும் அடிமை முறையை ஒழித்தாகவேண்டும் என்கிற கோஷம் தீவிரமாக ஒலிக்கத் தொடங்கிய காலம் அது.

இங்கிலாந்தில் அடிமைமுறைக்கு எதிரான விவாதங்கள் வலுப்பெற்ற இந்தக் காலப்பகுதியில் அடிமைமுறைக்கு எதிராக இயங்கிய பெண் தான் ஹன்னா மூர் (Hannah More 2.2.1745 – 7.09.1833) அவர் ஒரு கல்வியியலாளர், கவிஞர். இறையியல் செயற்பாட்டாளர். 

அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனின் செயற்பாடுகளை அறிந்த ஹன்னா அவருடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார்.

ஹன்னா மூரின் வாழ்க்கைக் குறிப்புகளையும், அவரின் கடிதங்களையும் தொகுத்து 1835 ஆம் ஆண்டு வில்ல்லியம் ரொபர்ட்ஸ் இருண்டு தொகுதிகளைக் கொண்ட நூலொன்றை வெளியிட்டார். அதன் இரண்டாவது தொகுதியில் ஜோன்ஸ்டனுக்கும் ஹன்னா மூருக்கும் இடையில் நிகழ்ந்த கடிதப் பரிமாற்றங்களும் உள்ளன.  இக்கடிதங்களின் ஆரம்பம் 1818 இல் ஆரம்பித்துள்ளதை கவனிக்க முடிகிறது. அக்கடிதங்களின் சாரத்தை இப்படிக் கூறலாம்.

ஹன்னா – ஜோன்ஸ்டன் கடிதத் தொடர்புகளின் சாரம்

பலராலும் நன்கு அறியப்பட்ட சுவிசேஷ எழுத்தாளரும் தார்மீக சீர்திருத்தவாதியுமான ஹன்னா மூர், இலங்கையின் தலைமை நீதிபதியான சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனுடன் கல்வி, கிறிஸ்தவ விழுமியங்கள் மற்றும் அடிமைத்தனத்தை ஒழித்தல் ஆகியவை பற்றி பகிர்ந்து கொண்டதன் மூலம் குறிப்பிடத்தக்க தொடர்பை வளர்த்துக் கொண்டார். இலங்கையில் புதிய நிர்வாக சீர்திருத்தங்களில் அக்கறை கொண்டவராக அறியப்பட்ட ஜோன்ஸ்டன், சிங்கள மற்றும் தமிழ் சமூகங்கள் உட்பட இலங்கை மக்களின் அரசியல் - சமூக நிலைமைகளை மேம்படுத்த முயன்றார். 1816ஆம் ஆண்டு ஓகஸ்ட் 12க்குப் பின்னர் அடிமைகளுக்குப் பிறக்கும் அனைத்து குழந்தைகளும் சுதந்திரமாக இருப்பார்கள் என்ற தீர்மானத்தால் குறிக்கப்பட்ட  வீட்டு அடிமைத்தனத்தை படிப்படியாக ஒழித்தது அவரது மிகவும் குறிப்பிடத்தக்க சாதனைகளில் ஒன்றாகும்.

இந்த வரலாற்று தருணத்தை நினைவுகூரும் வகையில், ஜோன்ஸ்டன்  ஹன்னா மூரிடம் பகிரங்கமாக கொண்டாடப்படக்கூடியதும் அறிவூட்டுவதற்குமான பயன்படுத்தக்கூடிய ஒரு கவிதையை இயற்றுமாறு கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த மூரே, "ஓகஸ்ட் பன்னிரண்டாம் தேதி; அல்லது, சுதந்திரகே கொண்டாட்டம் " என்ற குறுநாடகக் கவிதையை எளிமையான, உரையாடல் அடிப்படையிலான பாணியில் எழுதினார். குறிப்பாக இலங்கை மக்களால் எங்கும் நிகழ்த்துகை செய்யக்கூடிய வகையில் இது இயற்றப்பட்டது. அதன் பின்னர் ஜோன்ஸ்டன்  இங்கிலாந்துக்கு அழைத்து வந்த இரண்டு பௌத்த குருக்களால் இந்த படைப்பு சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்படுவதை உறுதி செய்தார். அவரது கவிதை மட்டுமல்ல, அவரது பல சுவிசேஷ நாடகங்களும் நீதிக் கட்டுரைகளும் இந்தியா, இலங்கை முழுவதும் பரவலாக விநியோகிக்கப்படுவதை நோக்கமாகக் கொண்டு சிங்களம், தமிழ் ஆகிய இரண்டிலும் மொழிபெயர்க்கப்பட்டு வருவதாகவும் ஜோன்ஸ்டன் மூரேயிடம் தெரிவித்தார்.

ஜோன்ஸ்டன்  மூரேயின் மொழிபெயர்க்கப்பட்ட நாடகங்களில் ஒன்றின் ஒரு பிரதியை வழங்கினார். அது பனை ஓலைகளில் சிங்கள மொழியில் பொறிக்கப்பட்டு, நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்ட மரப்பெட்டியில் மூடப்பட்டிருந்தது. இது இதயப்பூர்வமாகவும் ஆழமாகவும் அவரை நெகிழ வைத்தது. மூரே தனது கடிதங்களில் இதைக் குறிப்பிட்டுள்ளார், தனது எழுத்துக்கள்  தொலைதூர நாடுகளில் ஆன்மீகக் கல்வி மற்றும் சமூக சீர்திருத்தத்தின் கருவிகளாகப் பயன்படுத்தப்படுகின்றன என்று நன்றியையும் ஆச்சரியத்தையும் வெளிப்படுத்தினார்.

கவிதைக்கு அப்பால், மூரேயின் கிறிஸ்தவ தார்மீக இலக்கியம் ஐரோப்பிய இலட்சியங்களுக்கும் இலங்கையின் உள்ளூர் மரபுகளுக்கும் இடையிலான ஒரு பாலமாக மாறும் என்று ஜோன்ஸ்டன் கருதினார்.  நாடகங்கள் மற்றும் உருவகங்கள் ஏற்கனவே இந்து மற்றும் பௌத்த சமூகங்களில் மரபாக கதைசொல்லலின் பிரபலமான வடிவங்களாக உள்ளன என்றும், மூரேவின் படைப்புகளை மொழிபெயர்ப்பதன் மூலம், அதே வடிவங்களை கிறிஸ்தவ விழுமியங்களையும் சுதந்திரத்தின் செய்தியையும் மேம்படுத்த மாற்றியமைக்க முடியும் என்றும் ஜோன்ஸ்டன் குறிப்பிட்டார். மூரேவின் எழுத்துக்கள் உற்சாகத்துடன் வரவேற்கப்படுவதாகவும், பள்ளிகள் மற்றும் மத மையங்களில் நிகழ்ச்சிளில் கற்பிப்பதற்காக தயாராகி வருகிற செய்தியையும் ஜோன்ஸ்டன் தனது கடிதங்களில் பகிர்ந்து கொண்டார்.

பின்னர், சுதந்திரத்தின் கொண்டாட்டம் என்ற கவிதை  இசையமைப்பாளர் சார்லஸ் வெஸ்லி, எஸ்க். என்பவரால் இசையமைக்கப்பட்டது. அத்துடன் ஏழை ஐரிஷ் குழந்தைகளின் கல்விக்காக நிதி திரட்டுவதற்காக இசை பதிப்பின் பிரதிகள் விற்கப்பட்டன. எனவே இந்த முயற்சிகளை மூரே தொடர்ந்து ஆர்வத்துடன் ஆதரித்தார். சீர்திருத்தங்களின் முன்னேற்றத்தையும் அவரது இலக்கியப் படைப்புகளின் தாக்கம் உட்பட இலங்கையின் முன்னேற்றங்கள் குறித்து ஜோன்ஸ்டன் தொடர்ந்து ஹன்னா மூரேவுக்கு  அறிவித்து வந்தார். மேலும் இதுபோன்ற படைப்புகள் வெளிவரவேண்டும் என்று நம்பிக்கை தெரிவித்தார். தனது வயது மற்றும் உடல்நிலை காரணமாக அவரால் தொடர்ந்து அவ்வாறு செய்ய முடியாவிட்டாலும், இலங்கை மக்களின் தார்மீக மற்றும் அரசியல் முன்னேற்றத்திற்கு தனது எழுத்து அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்கியதையிட்டு அவர் பெருமிதத்தையும் நன்றியையும் தெரிவித்தார்.

ஜோன்ஸ்டனுக்கும் மூரேக்கும் இடையேயான இந்த இலக்கிய கூட்டு 19 ஆம் நூற்றாண்டின் ஆரம்பகால கலாச்சார ஒத்துழைப்பின் ஒரு தனித்துவமான உதாரணத்தை எடுத்துக்காட்டியது. அங்கு சிங்களம், தமிழ் இரண்டிலும் மொழிபெயர்க்கப்பட்ட கிறிஸ்தவ சீர்திருத்த இலக்கியங்கள், பிரிட்டிஷ் காலனியில் உள்ளூர் விடுதலை, கல்வி போன்ற முயற்சிகளை ஆதரிப்பதில் கணிடமான பங்கை ஆற்றியிருந்தது. மூரேயின் குரல், இலங்கையில் ஒருபோதும் நேரடியாக இருந்ததில்லை என்றாலும், சிங்கள, தமிழ் சமூகங்களிடையே அவரது படைப்புகளின் மொழிபெயர்ப்புகள், நிகழ்ச்சிகள் மற்றும் கல்விப் பயன்பாடு ஆகியவற்றின் மூலம் அனுபவிக்கக் கூடியதாகவும், அவை செல்வாக்கு செலுத்தக்கூடியதாகவும் ஆக்கப்பட்டது. சுதந்திரத்தின் கொண்டாட்டம் என்ற கவிதை  இலங்கையின் சுதேச மக்களின் சமத்துவத்துக்கான தொடக்கத்தின் அடையாள இலக்கிய நினைவுச்சின்னமாக இருந்தது எனலாம்.


ஹன்னா மூர் : வரலாற்று வகிபாகம்

ஹன்னா மூர் பிரபல ஆங்கில எழுத்தாளராக அறியப்பட்டவர்,  கல்வியாளர், ஒரு இறையியல் செயற்பாட்டளரும் கூட, 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலும் 19 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் தார்மீக சீர்திருத்த, அடிமை ஒழிப்பியக்கத்தில் செல்வாக்கு செலுத்தியவராகவும் அறியப்பட்டவர்.

பிப்ரவரி 2, 1745 அன்று இங்கிலாந்தின் குளூசெஸ்டர்ஷையரில் உள்ள ஸ்டேபிள்டனில் பிறந்த ஹன்னா மூர், கல்விப் பின்னணியையுடைய ஒரு குடும்பத்தில் ஐந்து மகள்களில் நான்காவது மகளாவார். பள்ளி ஆசிரியரான இவரது தந்தை ஜேக்கப் மூர், மகளையும் லத்தீன் மொழியிலும் இலக்கியத்திலும் வலுவான அடித்தளத்தை ஹன்னாவுக்கு வழங்கினார். 1758 ஆம் ஆண்டில், ஜேக்கப் பிரிஸ்டலில் ஒரு பெண்கள் விடுதிப் பள்ளியை நிறுவினார், அதை ஹன்னாவும் அவரது சகோதரிகளும் பின்னர் நிர்வகித்தனர். இந்த காலகட்டத்தில், ஹன்னா தனது 17 வது வயதிலேயே ‘த சேர்ச்  ஆப்டர் ஹேப்பினஸ்’ (1762) உள்ளிட்ட நாடகங்களை எழுதத் தொடங்கினார், இது இளம் பெண் பார்வையாளர்களிடையே பிரபலமடைந்தது. இந்த நாடகப் பிரதி அபோதே 10,000 பிரதிகளை விற்றுத் தீர்த்து.

1770 களில், ஹன்னா லண்டனின் இலக்கிய வட்டங்களுடன் தொடர்பு கொண்டார், சாமுவேல் ஜோன்சன், ஜோசுவா ரெனால்ட்ஸ் மற்றும் எட்மண்ட் பேர்க் போன்ற பிரபல இலக்கியவாதிகளுடன் தொடர்புகளை உருவாக்கினார். அறிவார்ந்த பெண்களின் சமூகமான புளூஸ்டாக்கிங் குழுவின் முக்கிய உறுப்பினராகவும் அவர் இருந்தார். த இன்ஃப்ளெக்ஸிபிள் கேப்டிவ் (1775) மற்றும் பெர்சி (1777) போன்ற அவரது நாடகங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றன.

1779 இல் ஹன்னாவின் வழிகாட்டியாகவும், அவரின் நாடகங்களை அரங்கேற்றுவதில் பெரும் பங்களிப்பை வழங்கிவந்த கேரிக்கின் மரணத்திற்குப் பிறகு, ஹன்னாவின் கவனம் மத மற்றும் சமூக தார்மீக பிரச்சினைகளை நோக்கி கவனம் மாறியது. வில்லியம் வில்பர்ஃபோர்ஸ் மற்றும் பெய்ல்பி போர்டியஸ் போன்ற கிறிஸ்தவ சுவிசேஷிகளால் ஈர்க்கப்பட்ட அவர் சமூக சீர்திருத்தத்திற்காக போராடுபவராக ஆனார். பொதுச் சமூகத்தின் உயர் நடத்தைகளின் முக்கியத்துவம் பற்றிய சிந்தனைகள் (1788), நாகரீக உலகில் மதத்தின் மதிப்பீடு (1790) போன்ற அவரின் அவரது நூல்கள், உயர் வகுப்பினரிடையே தார்மீக ஒருமைப்பாட்டின் அவசியத்தை வலியுறுத்தின.

ஒரு உறுதியான அடிமையொழிப்புவாதியான ஹன்னா, 1788ல் அடிமைத்தனம் (Slavery a Poem) என்ற கவிதை நூலை வெளியிட்டார். அட்லாண்டிக் அடிமை வர்த்தகத்தை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான இயக்கத்துடனும் தன்னை இணைத்துக் கொண்டார். அப்போது இங்கிலாந்தில் இயங்கிவந்த அடிமையொழிப்பு முன்னணி செயற்ப்பாட்டாளர்களுடன் சேர்ந்து இயங்கினார். அடிமைத்தனத்தின் மனிதாபிமானமற்ற தன்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த தனது இலக்கிய திறன்களைப் பயன்படுத்தினார். தனது இலக்கியத்தை உச்ச அளவில் அடிமையொழிப்புக்காகப் பயன்படுத்தத் தொடங்கினார்.

1790 களில், ஹன்னாவும் அவரது சகோதரி மார்த்தாவும் கிராமப்புறங்களில் இருந்த வசந்தகால விடுதிகளில் ஞாயிறு பள்ளிகளை நிறுவினர். ஏழைகளுக்கு அடிப்படைக் கல்வியை வழங்கும் நோக்கில். அவர் மலிவான வெளியீட்டுப் பணிகளையும் ஆரம்பித்து (1795-1798) சிறு நூல்களை வெளியிட்டார். கிறிஸ்தவ விழுமியங்களை ஊக்குவிக்கிற வகையிலும் தவறான அரசியலை எதிர்க்கும் வகையிலும் மலிவு விலையில் கிடைக்கக்கூடிய வகையில் சஞ்சிகைத் தொடரை வெளியிட்டார். தொடராகும். பிரெஞ்சு புரட்சி பற்றிய அரசியல் விவாதங்களை அதில் தொடர்ந்தார். இந்த துண்டுப்பிரதிகள் பரவலாக விநியோகிக்கப்பட்டன, மில்லியன் கணக்கான பிரதிகள் விற்கப்பட்டன, இது பொதுமக்களின் வெகுஜன மனநிலையில் கணிசமான பாதிப்பை ஏற்படுத்தியது.

ஹன்னாவின் “பெண் கல்வியின் நவீன அமைப்புமுறை (1799) பெண்களுக்கு வழங்கப்படும் மேலோட்டமான கல்வியை விமர்சித்து, தார்மீக மற்றும் மத போதனைகளை வலியுறுத்தும் ஒரு பாடத்திட்டத்தை வலியுறுத்துகிற நூலாக இருந்தது.

தனது இறுதிக் காலத்திலும் ஹன்னா தனது சமூகப் பணிகளைத் தொடர்ந்தபடி இறையியல் செயப்பாடுகளிலும் தீவிரமாக இயங்கினார். சர்வதேச அளவில் பிரித்தானியாவின் அடிமைத்துவ நடத்தைக்கு எதிராக இயங்கிய ஹன்னா மூர் செப்டம்பர் 7, 1833 அன்று பிரிஸ்டலின் கிளிப்டனில் காலமானார். 1833 ஆம் ஆண்டு ஓகஸ்ட் 28 திகதி காலமானார். அதற்கடுத்த மாதம் 1833 செப்டம்பர் 7 ஆம் திகதி பிரித்தானிய பாராளுமன்றத்தில் அடிமையொழிப்பு சட்டம் நிறைவேற்றைப்பட்ட போது அதைக் காண அவர் உயிருடன் இருக்கவில்லை.

ஆங்கிலேய இலக்கியப் பங்களிப்பில் ஹன்னாவின் பங்கு முக்கியமானது. கல்வி, தார்மீக சீர்திருத்தம் மற்றும் அடிமை ஒழிப்பியக்கம் ஆகியவற்றில் அவரது பங்களிப்புகள் பிரிட்டிஷ் சமூகத்தில் நீடித்தத் தாக்கத்தை ஏற்படுத்தின. அவர் எழுதிய நாடகங்கள், கட்டுரைகள், விமர்சனங்கள், இறையியல் பிரச்சார வெளியீடுகள், நூல்கள், கவிதைகள் என்பன காலத்தால் அழியாதவை.

அடிமைத்துவம், காலனித்துவம், நிறவாதம், வர்க்க பேதம், வதையியல் என்பவற்றுக்கு எதிரான குரலை அவரின் படைப்புகளில் காணலாம்.

அவர் எழுதிய யம்பாவின் துயரங்கள்; - நீக்ரோ பெண்ணின் புலம்பல் (The Sorrows of Yamba; or, The Negro Woman’s Lament (1795)) என்கிற அவரின் நூல் ஆபிரிக்க அடிமைப் பெண்களின் துயரத்தை பதிவு செய்த ஆரம்ப முன்னோடி நூலாக கொள்ளப்படுகிறது.

ஹன்னாவின் நூல்கள் பல இன்றும் பல பதிப்புகளை கடக்கின்றன. அவரின் எழுத்துக்கள் இன்றும் பலரால் திறனாய்வுக்கு உட்படுத்தபடுகின்றன. அடிமையொழிப்பைப் பற்றி பேசுவோர் அவரை தவிர்த்து பேச முடிவதில்லை.

அந்த வரிசையில் அபிரிக்க அடிமைகளுக்கு அப்பால் அவர் அடிமைத்துவம் பற்றிய பேசிய இன்னொரு நாடென்றால் அது இலங்கை. 

ஹன்னாவின் “சுதந்திரத்தின் கொண்டாட்டம்”

அவர் எழுதிய கவிதை நூல்களில் பிரபலமான நூலாக கொண்டாடப்படுகிற “அடிமைத்துவம்” பற்றிய கவிதைத் தொகுப்பு 1788 இலேயே வெளிவந்துவிட்டது. அதன் பின்னர் அவர் அடிமைத்துவத்தை எதிர்த்து எழுதிய கவிதைகளில் முக்கியமான கவிதை இலங்கையைப் பற்றிய கவிதை.

ஹன்னா மூரின் படைப்புகள் பல தொகுப்புகளாக வெளிவந்துள்ளன.  ஆவற்றில் 1853 இல் வெளிவந்த பதினோராவது (XI)  தொகுப்பு நூலில்தான் இலங்கையின் அடிமைத்துவம் பற்றிய கவிதை தொகுக்கப்பட்டிருக்கிறது.

இக்கவிதையை அவர் எழுத உந்திய நபர் தான் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன். ஹன்னா மூரின் நண்பரான ஜோன்ஸ்டன் 1816 ஆம் ஆண்டு அடிமைக் குழந்தைகள் விடுதலை பெற்றது தொடர்பாக எழுதும்படி விடுத்த கோரிக்கையைத் தொடர்ந்து மிகுந்த ஆர்வத்துடன் அந்த நெடுங்கவிதையை ஒரு உரையாடல் பாணியில் ஹன்னா அழுத்தி முடித்தார்.

இக்கவிதை முதன் முதலில் 1819இல் எழுதப்பட்டிருப்பதாக சில குறிப்புகளைக் காண முடிகிற போதும் முதன் முதலில் அது 1827 இல் வெளிவந்ததாக அவரின் XIவது தொகுப்பு நூலில் ஒரு குறிப்பு காணப்படுகிறது. அதன் பின்னர் அவரின் பல தொகுப்புகளிலும் அது இடம்பெற்றிருக்கிறது.  அதே வேளை காரின் ஸ்வலோ (Karen Swallow Prior) ஹன்னா பற்றிய தனது நூலில் 1819 இலேயே “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” என்கிற இந்தக் கவிதையை எழுதியிருப்பதாக உறுதியாகக் கூறுகிறார்.  அது சரியாகவும் இருக்கலாம். ஜோன்ஸ்டனின் கோரிக்கை 1818 இல் விடுக்கப்பட்டிருப்பதைப் பார்க்கும் போது 1819 சரியாக இருக்கலாம்.

அடிமை ஒழிப்பில் ஹன்னா கொண்டிருந்த ஈடுபாடு அடிமையொழிப்பில் தீவிரம் கொண்ட ஆதரவு வலைப்பின்னலை அவருக்கு ஏற்படுத்தியிருந்தது. ஓகஸ்ட் பன்னிரண்டாம்; அல்லது 1816 ஆகஸ்ட் 12 க்குப் பிறகு பிறந்த இலங்கையில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் சுதேசிய அடிமைத்துவதிலிருந்து விலக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில் “ஓகஸ்ட் பன்னிரண்டாம் நாள்” என்றே முதலில் அந்த கவிதைக்கு தலைபிட்டிருந்தார். ஆனால் அந்த நாளானது அரசரின் பிறந்த நாள் வைபவத்துக்குரிய நாளென்பதால் பிழையான வரைவிலக்கணத்தை கொடுத்து விடும் என்று அவர் கருதினார்.  இறுதியில் அக்கவிதைக்கு “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” என்று தலைப்பிட்டார். ஆனால் அவரின் வெளியீடுகளில் “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” அல்லது “ஓகஸ்ட் பன்னிரண்டாம் நாள்” (The Feast of Freedom ; or The Twelfth of August) என்று சேர்த்தே தலைப்பிட்டார்.


1827 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட இக்கவிதை நூலில் வேறு பல கவிதைகள் உள்ளடங்கியிருந்தாலும் அந்தக் கவிதை நூலுக்கு தலைப்பாக இலங்கைப் பற்றிய கவிதையின் தலைப்பையே இட்டிருந்தார். “சுதந்திரத்தின் கொண்டாட்டம் அல்லது இலங்கையின் சுதேசிய அடிமையொழிப்பு” (The Feast Of Freedom ; Or, The Abolition Of Domestic Slavery In Ceylon) என்று அந்த நூலுக்கு தலைப்பிடப்பட்டிருக்கிறது. 

இந்த உரையாடல் பாணியிலான கவிதையில் சபாத் என்கிற பாத்திரம் ஆரம்பத்தில் சிங்களப் பெயரான சில்வா என்றே பெயரிடப்பட்டிருந்திருக்கிறது.  

ஜோன்ஸ்டனிடமிருந்து அவர் பெற்ற மிகவும் மதிப்புமிக்க பரிசாக இந்த சந்தர்ப்பத்தை ஹன்னா கருதினார்.

இந்தக் கவிதை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு பனை ஓலைகளில் எழுதப்பட்டு அலங்கார மரப்பெட்டியில் மூடிவைக்கப்பட்டதைப் பற்றி ஜோன்ஸ்டன் தன்னிடம் கூறியதாக ஹன்னா குறிப்பிடுகிறார். புச்சான் என்கிற தனது நண்பிக்கு எழுதிய கடிதமொன்றில் "எனது எல்லா நாடகங்களும் இப்போது மொழிபெயர்க்கப்படுகின்றன, அத்துடன் எனது பிற எழுத்துக்கள் சிங்களம் தமிழ் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன, அவை இந்தியா முழுவதும் விநியோகிக்கப்பட உள்ளன." என்று குறிப்பிட்டிருக்கிறார். 

இக்கவிதை  குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமாக ஆனது. பிரபல இசையமைப்பாளர் சார்லஸ் வெஸ்லி (Charles Wesley) 1820 களில் “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” கவிதைக்கு இசையமைத்தார். அந்த இலங்கை அடிமைத்துவ விடுதலை பற்றிய கவிதைக்கான இசைக் குறியீடு (Music Notes) மேற்படி “சுதந்திரத்தின் கொண்டாட்டம்” என்கிற நூலில் நான்கு பக்கங்களில் வெளியாகியிருகிறது.

சார்ல்ஸ் ஓகில்வி (Reverend Charles Ogilvie) என்கிற பாதிரியார் இந்தப் இசையின் விநியோகப் பொறுப்பை வகித்திருக்கிறார். இந்த விற்பனையில் கிடைத்த பணம் ஏழை ஐரிஷ் மக்களுக்கு ஹன்னா மூருக்கு ஊடாக செலவிடப்பட்டிருக்கிறது. 

சுதந்திரத்தின் கொண்டாட்டம் என்கிற அந்த நூலின் முன்னுரையில் இலங்கை பற்றிய குறிப்புகளை அவர் இவ்வாறு எழுதியிருக்கிறார்.

“இந்த குறு நாடகம் இந்து சமுத்திரத்தில் உள்ள இலங்கைத் தீவில் உள்நாட்டு அடிமைத்தனம் முடிவுக்கு வந்ததை நினைவுகூரும் வகையில் எழுதப்பட்டது  . அந்த நேரத்தில், சேர் அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன்  இலங்கை மன்னர் சபையின் தலைவராக இருந்தார்.

இலங்கை மக்களின் அரசியல், தார்மீக மற்றும் அறிவுசார் வாழ்க்கையை மேம்படுத்த அவர் நேர்மையாகவும் அறிவுபூர்வமாகவும் பணியாற்றினார். அவரது முக்கியமான நடவடிக்கைகளில் ஒன்று; பிரித்தானிய முடியரசிடமிருந்து  உத்தியோகபூர்வ அனுமதியை (ஒரு சாசனம்) பெற்று, இலங்கையில் உள்ள அனைத்து உள்ளூர் மக்களும் நீதிமன்றத்தில் ஜூரி உறுப்பினர்களாக பணியாற்ற அனுமதித்தது - இந்த உரிமை மற்ற ஆசிய நாடுகளில் உள்ளவர்களுக்கு இல்லை.

அத்தோடு சேர் அலெக்சாண்டர் பல ஆண்டுகளாக உள்நாட்டு அடிமைத்தன முறையை மெதுவாகவும் அமைதியாகவும் முடிவுக்குக் கொண்டுவர உள்ளூர் மக்களை ஊக்குவித்தார். அவரது வேண்டுகோளின் காரணமாக அடிமைகளின் உரிமையாளர்கள் ஆகஸ்ட் 12, 1816 க்குப் பிறகு பிறந்த அனைத்து குழந்தைகளும் விடுதலை வழங்க  ஒப்புக்கொண்டனர். இந்த முடிவு இலங்கையில் சுமார் 300 ஆண்டுகளாக நிலவி வந்த உள்நாட்டு அடிமைத்தனத்தை முடிவுக்குக் கொண்டு வந்தது.

இந்தப் புதிய சுதந்திர காலத்தைத் தொடங்க ஓகஸ்ட் 12 ஐ சர் அலெக்சாண்டர் தேர்ந்தெடுத்தார். இந்த திகதி இளவரசரின் (பின்னர் மன்னர்) பிறந்த நாளாகும். மக்கள் தங்கள் சுதந்திரத்தை நினைவில் கொள்ள வேண்டும் என்று அவர் விரும்பினார், பிரிட்டிஷ் கிரீடத்தின் மீதான மரியாதை, அது சாத்தியமாக்க உதவியது.

இந்த நாடகம் ஏற்கனவே பல இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. சேர்  அலெக்சாண்டர் ஜோன்ஸ்டன் அவர்களுடன் பிரித்தானியாவுக்கு விஜயம் செய்த பௌத்த மதகுருமார்களால் சிங்களத்தில் முதலாவதாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது.

தற்போது இந்த நாடகம் விசேடமாக வெளியாகிறது. பிரபல இசைக்கலைஞர் சார்லஸ் வெஸ்லி சமீபத்தில் அதை ஒரு இசைப் பாடலாக மாற்றினார். அந்த மகிழ்ச்சியில் கவிதையின் ஆசிரியர் ஹன்னா அதை மீண்டும் ஆங்கிலத்தில் வெளியிட முடிவு செய்தார். சில கூடுதல் சிறிய பகுதிகளைச் சேர்த்திருக்கிறார். இந்த சிறு நூலை விற்பதன் மூலம் கிடைக்கும் பணம் ஏழை ஐரிஷ் குழந்தைகளின் கல்விக்கு நன்கொடையாக வழங்கப்படும்.”

இதன் மூலம் அந்தக் கவிதை குறுநாடக வடிவில் மாற்றப்பட்டிருப்பதை அறிய முடிகிறது. அது மட்டுமன்றி இந்த கவிதை பல இந்திய மொழிகளில் வெளியிடப்பட்டிருக்கிறது என்கிற தகவலின் படி நிச்சயம் சிங்களத்திலும், தமிழிலும் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். இதுவரை அதைப் பற்றி நாம் அறிந்ததில்லை. மேலும் இக்கவிதை நாடகத்தின் விற்பனையிந மூலம் பெறப்பட்ட பணம் பல ஐரிஷ் குழந்தைகளின் கல்விக்காக அன்று செலவிடப்பட்டிருக்கிறது என்கிற தகவலும் நமக்குப் பேருவகையைத் தருகிறது.”

இலங்கையின் முதலாவது தமிழ் நாவல் ஹன்னாவினுடையதா?

அலெக்சாண்டர் ஜோன்ஸ்டனின் குறிப்புகளின் படி ஹன்னாவின் பல படைப்புகள் இலங்கை இந்திய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

இன்றும் இலங்கையில் வெளியான முதலாவது நாவல் என கூறப்படும் “காவலப்பன் கதை” நூலின் மூல ஆசிரியர் ஹன்னா மூர் என்றால் வியப்பாக இருக்கும்.

இலங்கையில் வெளியான முதலாவது நாவல் எது என்கிற கேள்வி பல இடங்களிலும் சர்சைக்குள்ளானதாகவே இருப்பதை அவதானிக்க முடிகிறது.

வேதநாயகம் பிள்ளையின் "பிரதாப முதலியார் சரித்திரம்" தான் தமிழ் மொழியில் முதலாவதாக வெளிவந்த நாவல் என்று குறிப்பிட முடியும். அது வெளிவந்த ஆண்டு 1879 ஆகும். அதுவரை செய்யுளையே பிரதான இலக்கிய வகையாகக் கொண்டிருந்த தமிழுக்கு உரைநடையிலிருந்த புனைகதை இலக்கிய வடிவம் இந்நூலுக்கூடாகவே அறிமுகமானது. ஆனால் இந்த நூல் தமிழகத்தில் வந்தது.

அப்படிப்பார்க்கும் போது சித்திலெவ்வை மரைக்கார்' இயற்றி 1885 இல் வெளிவந்த “அசன்பே சரித்திரம்” இலங்கை நாவல் இலக்கியத்தின்  முதலாவது நாவல் என்று கூறலாம்.

ஈழத் தமிழ் நாவலிலக்கியப் பாரம்பரியத்தில் தி. த. சரவணமுத்துப்பிள்ளை எழுதி 1895 இல் வெளியான ‘மோகனாங்கி’ நாவலை இலங்கையின் முதலாவது சரித்திர நாவல் என்று குறிப்பிட முடியும். இதன் கதைக் களமும் வெளியிடப்பட்ட இடமும் தமிழகமாக இருந்தபோதும் இதை எழுதிய சரவணமுத்துப்பிள்ளை இலங்கையின் திருகோணமலையைச் சேர்ந்தவர்.

நாவலிலக்கிய வரலாற்றைப் பற்றி எழுதியுள்ளவர்கள் சிலர் இந்த வரலாற்றுத் தகவல்களோடு “காவலப்பன் கதை”யைக் குழப்பியுள்ளதைக் காண முடிகிறது.  "காவலப்பன் கதை" தான் ஈழத்தின் முதலாவது நாவல் என்று அடித்துச் சொல்பவர்கள் இன்றும் உள்ளார்கள்.

"காவலப்பன் கதை" முதலாவது மொழிபெயர்ப்பு நாவல் யாழ்ப்பாணத்தில் 1856ம் ஆண்டில் வெளியிடப்பட்டிருப்பதாகக் குறிப்பிடப்படுகிற போதும் அப்படிப்பட்ட ஒரு நாவலை கண்ட எவரும் இப்போது இருப்பதாகத் தெரியவில்லை.

இதைப்பற்றி மு.கணபதிப்பிள்ளை சில்லையூர் செல்வராசனின் நூலில் எழுதியிருக்கிறார்.  ஆனால் கணபதிப்பிள்ளையோ பின்வந்தவர்களோ அந்த நாவல் குறித்த விபரங்களை சரிவர நிறுவவில்லை. மேலும் இந்த நூல்களில் பிரதிகளும் கூட கிடைக்கவில்லை. இந்நிலையில் “கைக்குக் கிடைக்காத நூல் ஒன்றினை நாவலா நாவலில்லையா என்று எப்படிக் கூறலாம்” என்று பேராசிரியர் அ. சண்முகதாஸ் எழுதிய ‘சித்திலெவ்வை மரைக்காரின் அஸன்பே சரித்திரம்” தனது கட்டுரையொன்றில் எழுதுகிறார்.  


“காவலப்பன் கதை”யானது ஹன்னா மூர் 1796 இல் இயற்றிய "Parley the Porter" என்னும் நாவலின் மொழிபெயர்ப்பு என்றே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதன் மூலப் பிரதியை இக்கட்டுரைக்காகத் தேடி எடுத்தபோது அந்த நூலானது அட்டையோடு சேர்த்து 12 பக்கங்களை மட்டுமே கொண்ட சிறு நூல் என்பதை காண முடிந்தது. 1856ஆம் ஆண்டு ஹன்னா மூர் எழுதிய படைப்புகள் அனைத்தும் மீண்டும் ஒரே நூலாக தொகுக்கப்பட்டபோது அந்த நூலில் இந்தக் கதை வெறும் நான்கே பக்கங்களுக்குள் அடங்கிவிட்டன.   இன்னும் சொல்லப்போனால் மொத்தமே சுமார் 4500 சொற்களை மட்டுமே கொண்ட கதை. அதை ஒரு சிறு கதை என்று வேண்டுமென்றால் கூறலாமேயொழிய ஒரு நாவலாக எப்படி தமிழில் அடையாப்படுத்தினார்கள் என்று தெரியவில்லை. ஆங்கில உலகில் எங்குமே இக்கதையை ஒரு நாவலாக அடையாளப்படுத்தியதில்லை. குறைந்த பட்சம் ஒரு குறுநாவல் உள்ளடக்கத்தைக் கூட இது கொண்டதில்லை.

ஆகவே “காவலப்பன் கதை” என்கிற நூல் வெளிவந்திருந்தாலும் கூட அது நாவலாக இருக்க வாய்ப்பே இல்லை என்பது தெளிவாகிறது.

பார்னெட் (L.D.Barnett), போப் (G.U.Pope) ஆகியோர் தொகுத்த A Catalogue of the Tamil books of the British Museum என்கிற நூலில் "Parley the Porter" என்கிற நூலைப் பற்றிய குறிப்புகளைக் காண முடிகிறது. பிரிட்டிஷ் மியூசியம் 1909 ஆம் ஆண்டு வெளியிட்டுள்ள இந்த நூல் பட்டியல்களை இன்றும் பலரும் ஒரு முக்கிய மூலாதார நூலாக பயன்படுத்தி வருகின்றனர். இந்த நூலில் 177 ஆம் பக்கத்தில் உள்ள குறிப்பு இது தான்.

MORE (HANNAH).  “Parley the Porter” காவலப்பன் கதை. [Translated into Tamil] pp. 36. Jaffna, 1856. 16°. 14170. a. 33.(3.) No. 1 of the New Series of the Jaffna Religious Tract Society.

மேலும் இந்த நூலில் கிறிஸ்தவ மதம் சம்பந்தப்பட்ட நூல்களின் கீழ் 584 ஆம் பக்கம் “காவலப்பன் கதை” பட்டியலிடப்பட்டு வகைப்படுத்தப்பட்டுள்ளதையும் காண்கிறோம். இது “யாழ்ப்பாண சன்மார்க்க புத்தக சங்கத்தால்” (J.R.T.S - Jaffna Religious Tract Society)  வெளியிடப்பட்டிருக்கிறது.

நா. சுப்பிரமணியம் எழுதிய “ஈழத்துத் தமிழ் நாவல் இலக்கியம்” (1978) என்கிற நூலில் இந்த நூலைப் பற்றி குறிப்பிடும் போது“இந்நூல் பார்லே என்ற சுமைதூக்கி (1869), பார்லே என்னும் சுமையாளியின் கதை (1876) ஆகிய தலைப்புக்களுடன் தமிழ் நாட்டில் வெளிவந்துள்ளது. இந் நூற் பிரதிகள் கிடைக்கவில்லை. இதனை 'நாவல்' என்று கொள்ளலாமா என்பது ஆய்வுக்குரியது.” என்றும் அவர் குறிப்பிடுகிறார். மேலும்

“பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழில் ஐநூற்றுக்கும் மேற்பட்ட கதை நூல்கள் வெளிவந்துள்ளன. இதிகாச புராணக் கதைகள், நாடோடிக் கதைகள், பிறமொழிக் கதைகள், மேலைநாட்டுச் சமயக் கதைகள் முதலிய பல்வேறு வகைகளிலும் அமைந்த இக் கதைகளை நாவல் எனக் கொள்வதில்லை. காவலப்பன் கதை மேலை நாட்டுச் சமயக் கதைகளிலொன்றாகவிருக்கலாம்.” என்கிறார்.

அவரின் அந்த ஐயம் மிகவும் சரியானதே என்கிற கருத்தை அந்த கதையின் மூல ஆங்கிலப் பிரதியை நோக்கும்போது உறுதி செய்துகொள்ள முடிகிறது. கூகிள் தனது Google Books இல் இதை வகைப்படுத்தும்போது “சிறுவர்களுக்கான கதையாக” (Children's stories) வகைப்படுத்தியிருக்கிறது.

இந்த நூலை “Chapbook” என்றும் மேற்கில் வகைப்படுத்துகிறார்கள். மிகக் குறைந்த அளவிலான பக்கங்களைக் கொண்ட கதைகளுடன் பிரசுரிக்கப்படுகின்ற பிரசுரங்களையே “Chapbook” என்று அழைத்தார்கள். பல்லாண்டுகளுக்கு முன்னர் ஐரோப்பாவில் தெரு இலக்கிய  (street literature) கலாசாரத்தின் அங்கமாக இந்த வகை இலக்கிய வெளியீடுகள் காணப்பட்டன. மலிவு விலையில் எளிமையான நூல்கள் தெருக்களில் விற்கப்பட்ட கலாசாரம் அது. அச்சுப் பண்பாட்டின் தொடக்கக் காலப்பகுதியில் குறிப்பாக பதினைந்தாம் நூற்றாண்டு தொடக்கம் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை ஐரோப்பிய நாடுகளில் பிரபலமாக இருந்த வாசிப்பு கலாசாரம் இது.

இந்தக் கதை இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னரே மேற்கு நாடுகளில் சிறுவர்களுக்காக நடத்தப்படும் கிறிஸ்தவ ஞாயிறு பாடசாலைகளில் வாசிக்கப்பட்டிருக்கிறது.  

மூல நூலை இங்கிலாந்தில் அன்றே வெவ்வேறு பதிப்பாளர்கள் பதிப்பிட்டிருக்கிற போதும் அமெரிக்க சமார்க்க புத்தக சங்கமும் (American Tract Society) 1825 ஆம் ஆண்டு ஆங்கிலப் பிரதியை வெளியிட்டிருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும். ஹன்னா மூரின் சுமார் 50 கதைகளை அச்சங்கம் பதிப்பித்துள்ளது.

பார்லி என்பவன் தான் பிரதான கதா பாத்திரம். Parley the Porter என்பதை நேரடியாக தமிழ்ப்படுத்தினால் “பார்லி என்கிற சுமைதூக்கி” என்று கூறலாம். ஆனால் “காவலப்பன்” என்று இலக்கிய சுவையுடன் அந்த தலைப்பை இட்டிருக்கிறார்கள்.

ஒரு காட்டிக்கொடுப்பாளனின் உதவியின்றி கொள்ளையர்கள் எப்படி ஒரு வீட்டிற்குள் நுழைய முடியாது என்பதை உணர்த்தும் கதை. 

“காவலப்பன் கதை”யை நமது கதைசொல்லி இலக்கிய வரலாற்று மரபில் இருந்து நீக்கிவிட முடியாது என்பது உண்மை. அதே வேளை அதை நாவலிலக்கியத்தின் தொடக்கம் என்று பதிவு செய்ய முனைகின்ற முயற்சி வரலாற்றுத் திரிபாகிவிடும்.

இலங்கையின் இலக்கியத்தில் கணிசமான பாத்திரத்தை ஆற்றிய முன்னோடிகளில் ஒருவராக ஹன்னா இருந்தும் இதுவரை ஹன்னா பற்றி தமிழில் எதுவும் வெளிவராதது வியப்பளிக்கிறது. ஹன்னா இலங்கைக்கு ஆற்றியது வெறும் இலக்கிய வகிபாகம் மட்டுமல்ல. மாறாக சமூக விடுதலை சார்ந்த பணிகளுக்கு அவரின் இலக்கிய படைப்புகள் கணிசமான பாத்திரத்தை ஆற்றியிருக்கிறது என்பதை நமது இலக்கிய பரப்பில் மறந்து விடக் கூடாது.

விடுதலையின் பண்டிகை (அல்லது) ஓகஸ்ட் 12


காட்சி: சிலோன்

சபாத். (Sabat),  து(D)மால் (Dumal), சிங்களவர்கள் Etc. 

முதல் மூன்று பல்லவிகளும் பாடப்படும்


துமால்

மகிழ்வோம் பாடுவோம், ஆடுவோம் ! 

இன்று விடுதலையின் விடுமுறை நாள்!


சபாத்

எமது மீட்பின் ஆனந்த நாளை ஆசீர்வதிப்பாராக!

விடுதலையின் விடியலே வாழ்க!

எம் பிள்ளைகளின் பிள்ளைகள் ஒன்றுகூடப் போகிறார்கள்

நீதியான விடுதலையின் பிறப்பைக் கொண்டாடும் நாள்!


துமால்

ஆசீர்வாதத்தை எங்கெங்கும் பரப்புங்கள், 

அக்கறையும் கண்காணிப்பும் ஒருபுறம் இருக்க

ஒன்றுகூடி புசித்துக் குடித்து எக்காளத்தொனி 

பள்ளத்தாக்குகளில் முழங்க ஆடுவோம். பாடுவோம்


கோரஸ் (கூட்டுப் பாட்டு)

ஆடுவோம், பாடுவோம்

விடுதலையின் விடுமுறை இந்நாள்! (பாட்டு இங்கு முடிகின்றது)


சபாத்

ஆனால் எல்லா களியாட்டமும் தொடங்குமுன் 

எம் சுதந்திர வேட்கையை எண்ணுவோம்.

பாட்டுப் பாடி களிக்க மட்டுமல்ல

குடித்து புசிப்பதற்குமான சுதந்திரம்


துமால்

ஓம். தென்னை மரத்தினை போற்றுவோம்!

அது தரும் அத்தனை மகிமையோடும் 

சிரித்து மகிழுகின்ற சுதந்திரம்

எமது மனதில் நித்தம் உயிர் பெறுகிறது,


சபாத்

இந்தக் கொடைகளை வீணடிக்க வேண்டாம்

ஆதிகாரத்தை வீணில் வணங்கவேண்டாம்

குடிபோதை அல்ல எமது மீட்பு இன்று

அளவுக்கடந்த ஆசையும் அல்ல எமது விடிவு


கறுவாக் காடுகள் எமது பொக்கிஸம்

வேறு எத்தீவிலும் காண்பது அரிது.

அவற்றின் சுகந்தம் ஆகாயத்தின் விட்டத்தினை எட்டும்

அவற்றின் இனிமை எமது உழைப்பினை மெச்சும். 


ஆனாலும் எல்லாம் சிறந்த வல்ல மூலிகை

எமக்கு உன்னதமான ஆறுதல் தரும்

எமது ஆத்மாவினை வருடிச் செல்லும்

மேன்மை மிக்க இங்கிலாந்து 

விடுதலை வேட்கையின் சிறந்த நண்பன்

புனிதக் கனியினை காட்டுகிறது


எல்லா விருட்சங்களுக்கும் மேலாக

ஒரு இறைமைமிக்க விருட்சம் ஒங்கி வளரும்

அது தோன்றும் எங்கும் ஆனந்தமும் அமைதியும் விளங்கும்.

உடைந்த மனதுகளை ஆற்றி மீட்கும் கொடையே அது.


அதன் கிளைகள் ஆழமாகப் படியும்

அதன் கிளைகள் பரந்து நிற்கும்

அறிவினைப் பரப்பும்

அதன் நிழலில் பாவிகள் ஒதுங்குவர், பதுங்குவர்

அதன் உச்சி ஆகாயத்தை தழுவும்.


அதன் இலைகளில் பின்னிய நூல்

மடிந்துகொண்டிருக்கும் தேசத்தை மீட்கக் கூடும்

அதனை விசுவாசத்துடன் விரும்பிப் பெறுபவன்

தனது சுய இரட்சிப்பை உறுதி செய்வான்


துமால்

அப்படியா? இந்த நட்பின் விருட்சத்தை

தந்திடுக எமக்கு - நீவிர்

அதன் பயனை எமக்கு காண்பித்தால் 

உமது மகிமையை நாம் துதிப்போம்.


சபாத்

தென்னை மரத்தின் செறிந்த பானம்

எண்ணற்ற உயிர்களைத் தரும் பானம்.

எத்தனையோ உடைந்த மனங்களை ஆற்றி மீட்கும்

வல்லைமை பெற்றது இப் பானம்.


துமால்

குழப்புகிற புதிர்கள் இனி வேண்டாம் 

உமது கருத்தினை எடுத்துரைக

அந்த விருட்சம் எது அந்த வேதமெது?

உமது அறிவுக்கு எட்டியிருக்குமென நம்புகிறேன்.


சபாத்

உமது மரத்தின் இனிய பானம்

அதிகம் உட்கொள்ளின்

குரோதமும், சண்டையும் உண்டாகும்.

ஆனால் நான் எடுத்துக் கூறும் விருட்சம்

எல்லாவற்றுக்கும் மேன்மையான ஒன்று

ஒரு உன்னத படைப்பு. அதுதான்

வாழ்க்கை அளிக்கும் கற்பகத் தரு


மூளையைக் குழப்பும் தேங்காய் பானம்

உம்மை அலைய வைக்கும், அதனை நாடி

ஆனால் இம்மாபெரும் மரத்தின் 

பானத்தை அருந்துவோர்

தமது தாகத்தினை என்றென்றென்றுக்கும் தீர்ப்பர்.

(சபாத் பைபிளை நீட்டுவார் இத்தருணத்தில்)


இங்கிலாந்து அளிக்கும் கொடை இதுதான்

பாவத்தின் சங்கிலித் தொடரை அறுக்கும்

நறுமணம் கமழும் சோலைகளில் பரிமாறிக்கொள்ளும் 

தேனினய பானம்.

சொர்க்கத்தின் தெய்வீக பண்ட பரிமாற்றம்.


இந்தப் பரிமாற்றம் உன்னதமானது.

மற்றைய பண்டமாற்றம் போலல்லாது 

ஒரு சில வருட கவனிப்பும் கண்காணிப்பும் தான்

பின்னர், முடிவிலாத நிறைந்த ஆனந்தப் பிரவாகம்

உமக்கு உரித்தாகும்


இது எப்படி பயன்படுத்த வேண்டும் என்ற சுதந்திரத்தை நமக்கு காட்டுகிறது, 

நம் அன்றாட உழைப்பை நேசிப்பதும்; _ 

அல்லது பக்கத்து வீட்டுக்காரனுடன் கலவரம் செய்யாமல்

சோம்பேறித்தனத்தில் நம் நேரத்தை இழக்க விடாமல் தடுப்போம்


விடுதலை பெற்ற சுதந்திர மனிதனே

தனது உழைப்பை செவ்வனே செய்வான்

எஜமானருக்கு இது தெரியட்டும்.

கண்ணும் கருத்துமாக ஆண்டவருக்கு சேவை செய்பவனே

எஜமானருக்கும் நல்வழியில் ஊழியம் செய்வான்.


உடலும் உள்ளமும் விடுதலையடைந்தால்

நாட்களும் மாதங்களும் சுருக்கென கழியும்.

புகலில் சூரியனின் எம்நல் உழைப்பின் மேல் கண்கள் பதிக்க

இரவில் நாம் பிரார்த்தனையில் மூழ்கி நிதானத்தில் அமைதியாவோம்.


கூட்டாக சிங்களவர்கள் கோரஸ்

சபாத்தின் அரிய விருட்சம் எமக்கு தந்திடுவீர்

ஏகோபித்த குரலில் கேட்டு நிற்போம்

எமது தேவனை நாம் வேண்டி நிற்பதால்

நாம் சுதந்திரம் அடைந்ததை நிரூபித்து காட்டுடிவோம்.


ஆனந்தம் நிறைந்த உள்ளங்களுடன் 

அப் புனித நூலை வாசிப்போம்.

அப்போது நாம் எடுத்துக் காட்டுவோம்

எங்கு பார்த்தாலும் தோன்றும் காட்சி

தேவனின் கனிவில் சுதந்திரம் பெற்றவர்

சுயமாகவே திகழுகிறார்கள்.


சபாத்

ஒகஸ்ட் 12

அன்றைய நாளை மறக்க வேண்டாம்.

அன்றிலிருந்து எமக்கு விடுதலை.

சுதந்திரம். சுதந்திரம். சுதந்திரம் எமதே

என்றென்றும்!


கூட்டாக

எங்களை விடுவிக்கும் நாளை ஆசீர்வதிப்பாராக! 

வாழ்க விடுதலை!

முடிவு

(இக்கவிதையை இக்கட்டுரைக்காக மொழிபெயர்த்துத் தந்த சுமதி சிவமோகன்அவர்களுக்கு நன்றிகள்)

நன்றி - தாய்வீடு

இலங்கையில் அடிமையோழிப்பும் ஹன்னா மூரின் வகிபாகமும், என்.சரவணன் by SarawananNadarasa

 

இணைந்திருங்கள்


Followers

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates