Headlines News :
முகப்பு » , , » "தமிழ் மக்களிலிருந்து விடுதலைப்புலிகளைப் பிரிக்கமுடியாது" - 92' இல் தொண்டமான் வழங்கிய பேட்டி

"தமிழ் மக்களிலிருந்து விடுதலைப்புலிகளைப் பிரிக்கமுடியாது" - 92' இல் தொண்டமான் வழங்கிய பேட்டி


சண்டே டைம்ஸ் பத்திரிகையில் (Sunday Times 22-3-92) வெளியான இந்த நேர்காணல் அதன் பின்னர் 05.05.1992 அன்று வெளியான "தேர்ந்த கட்டுரைகள்" என்கிற விடுதலைப் புலிகளின் சஞ்சிகையில் வெளியாகியிருக்கிறது. "தேர்ந்த கட்டுரைகள்" சஞ்சிகையில் இப்படி பல முக்கிய நல்ல கட்டுரைகள் அப்போது மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருகிறது.
இந்த வாரம் தென்னாபிரிக்காவின் வெள்ளைக்கார அரசு தனது கொள்கைகளை மாற்றி கறுப்பின மக்களுடன் செயலுரிமை பரவலாக்கலுக்கு ஒத்துக்கொண்டது போல் இலங்கையும் தனது கண்களைத் திறந்து இயல்பு நிலையை உணர்ந்து இனப்பிரச்சினை தொடர்பான விடயங்களில் நல்ல முடிவுக்கு வர வேண்டுமென அமைச்சரும், இலங்கைத் தொழிலாளர் காங்கிரசு தலைவருமான திரு. சௌ.தொண்டமான் தனது நீண்டகால வாளாமையை (மௌனம்) கலைத்துக்கொண்டு கூறினார். தமிழ் மக்களிலிருந்து விடுதலைப் புலிகளைப் பிரிக்கமுடியாது எனத் திரு. தொண்டமான் வலியுறுத்திக் கூறினார்.
பத்திரிகையாளரின் நேர்காணலில் சில பகுதிகள் 
(1) கேள்வி:- நீங்கள் தற்போது வாளாமையாக இருப்பதனால் பல ஊகங்கள் வெளிவருகின்றனவே. இதற்கு யாதேனும் காரணங்கள் உண்டா ? 
பதில் : எனது இணக்க கருத்துக்களைப் பற்றி வெளியில் பேசவேண்டாமெனப் பாராளுமன்றத் தெரிவுக் குழுவிலிருந்து ஒரு கடிதம் அனுப்பப்பட்ட தனால் நான் எனது இணக்கக் கருத்துக்களைப் பற்றி இப்போது பேசுவதில்லை. அதனால் நான் வாளாமையாக இருக்கின்றேன் என்று பொருள் கொள்ளப்படாது. நானும் பாராளுமன்றத்தெரி - வுக்குழுவில் அங்கம் வகிப்பதால் பேசாமல் இருக்கின்றேன். 

(2) கேள்வி : விடுதலைப் புலிகளுடன் எதுவித பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதையும் இந்தியா எதிர்ப்பது போல் தெரிகிறதே? அத்துடன் விடுதலைப்புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் அவர்களையும் நாடுகடத்தும்படி கோருகின்றது. இந்த நிலையை நீங்கள் எப்படி நோக்குகின்றீர்கள்? 

பதில்:- எங்கள் நாடு ஒரு சுதந்திரநாடு. எங்கள் நாட்டு எங்கள் நாட்டு நலன்களைப் பாதுகாக்கும் வகையிலேயே நாம் எங்கள் சிக்கல்களை பார்க்கவேண்டும். மற்றைய நலன்களெல்லாம் இரண்டாவதாக இருக்க வேண்டும். இந்தியாவுடன் நல்லுறவைப் பேண வேண்டும். ஆனால் எங்கள் தேசிய நலன்களே மிக முக்கியமானவை. 
(3) கேள்வி:- பேச்சுவார்த்தைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் விடுதலைப் புலிகளைப் போரில் தோற்கடிக்க வேண்டும் அல்லது அவர்களின் வலிமையை அடக்கவேண்டுமென ஒரு சாரார் கருதுகின்றனரே? இதுபற்றி உங்கள் கருத்து என்ன? 
பதில் - நீங்கள் எண்ணுவது போல் விடுதலைப்புலிகளைத் தோற்கடிப்பது என்பது வடக்குக் கிழக்கு மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு , தமிழரையும் தோற்கடிப்பதற்கு இணையாகும் என்பது எமது கருத்தாகும். ஒன்று வெட்ட வெளிச்சமாகத் தெரிகின்றது. அனைத்துத் தமிழ் மக்களிலிருந்தும் விடுதலைப் புலிகளைப் பிரிக்க முடியாது. விடுதலைப் புலிகளை அழிப்தென்பது தமிழர்களை அழிப்பதற்கு ஒப்பாகும். தமிழ் மக்கள் இருக்கும் வரை விடுதலைப் புலிகளைப் போன்று கடும் போக்காளர்களும் இருக்கத்தான் செய்வார்கள். விடுதலைப் புலிகள் சரியாகவோ அல்லது வேறு வகையிலோ தமிழர்களின் வேட்கை ளை பிரதி பலிக்கிறார்கள் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். 
(4) கேள்வி: அதிகமான தமிழர்கள் மட்டுமல்லாது தமிழ் அரசியல் கட்சிகளும் விடுதலைப் புலிகளைத் தமிழர்களின் தலைவர்களென ஏற்க மறுக்கின்றனவே? இதை எப்படி விளக்குவீர்கள்?
தமிழர்களின் பிரச்சினைகளில் இறுதியாக விடுதலைப் புலிகள் மாத்திரம்தான் முன் நிற்பார்கள். 
(5) கேள்வி: அவர்கள் தவறுகளைப் பற்றி?
அவர்கள் தவறு செய்கிறார்கள். யார் தான் தவறு செம்யவில்லை? விரும்பியோ விரும்பாமலோ புலிகள் விடுதலைப் போராளிகளாக வளர்ச்சி பெற்றுள்ளனர். அவர்கள் தங்கள் குறிக்கோளில் தடுமாற்றம் இல்லாத போராளிகளாக இருக்கின்றார்கள். மற்றைய தமிழ்க் கட்சிகள் சண்டையில் களைப்புற்றோ அல்லது கொள்கை நடைமுறைகளில் உறுதியற்றோ இருப்பதுமல்லாமல் தாங்கள் எதற்காகக் கட்சியைத் தோற்றுவித்தார்களோ அந்த இலட்சியத்தை அடையுமுன்பே களைத்து விட்டார்கள்.

விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதைப் பற்றிக் கேட்டீர்கள். முதலாவதாக இந்தப் போருக்கான சரியான காரணத்தை ஆராயவேண்டும். 
(6) கேள்வி:- அவர்களுடைய ஈழக்கோரிக்கை சிங்களப் பெரும்பான்மையினரால் ஏற்கக்கூடியதல்லவே? 
பதில்:- ஈழம் என்றோ , தமிழர்களின் வேணவா என்றோ அல்லது வேறு எந்தப் பெயரிலும் நீங்கள் அழைத்தாலும் அது தான் அவர்களின் இலட்சியமாகும். அரசியல் யாப்புக்கமைய அவர்களுடைய வேட்கைகளை முழுமை செய்வதற்கு நாங்கள் வழிவகைகளைக் கண்டறிதல் வேண்டும். தற்போது அதைத்தான் செய்வதற்கு நாம் எத்தனிக்கிறோம். 

தென்னாபிரிக்காகூட நல்ல வழிமுறைகளைக் கடைப்பிடிக்கத் தொடங்கிவிட்டது. நீண்டகாலப் பாரம்பரியமும், நாகரிகமும், பண்பாடுமுள்ள நாம் எங்கள் அறிவுக் கண்களைத் திறந்து பார்க்கவில்லை. இது சோகமானது. எல்லோருக்கும் சமாதானம் தேவைப்படுகின்றது. ஆனால் ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வை எவரும் முன்வைக்கிறார்களில்லை. பாராளுமன்றத் தெரிவுக்குழு நல்ல ஒரு தீர்வை முன்வைக்கும் எனவும் எல்லாம் நல்லபடியாக நடக்கும் எனவும் நம்புவோமாக, 
(7) கேள்வி- உங்கள் நடவடிக்கைகள் மேல் சிங்கள மக்கள் ஐயம் கொள்கிறார்கள். இந்த ஐயத்தை நிவர்த்தி செய்ய உங்களின் செயல்பாடுகள் என்ன? 
பதில்:- சிங்கள மக்களைப் பொறுத்த வரையில் அவர்களுக்கு என் மேல் ஐயமில்லை என்பதை நான் தங்களுக்குக் கூற விரும்புகிறேன். இவர்களில் சிலர் எங்கள் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசில் அங்கம் வகிக்கின்றனர். ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக நான் தொழிலாளர்களின் நலன்களுக்காகப் பாடுபடுவதால் இந்த நாட்டுக்கு எது உகந்தது என் பது அதிகமான சிகிகள மக்களுக்குத் தெரியும் என்பதை நான் கண்டுள்ளேன். 

உள நிறைவற்ற சில சிங்கள அரசியல்வாதிகளும், பக்கம் சார்ந்த சில பத்திரிகைகளுமே என் மீது ஐயம் கொள்கின்றன. பாரம்பரியங்களாலும், குடும்பப் பின்னணியினாலும் சில பௌத்த மதத் தலைவர்கள் துரதிர்ஷ்டவசமாக இவர்களை ஆதரிச் கின்றனர். 

திரு. காமினி ஜெயசூரியாவைப் பாருங்கள். அவர் என்னு டைய உற்ற நண்பன் அத்தோடு நல்லநோக்கங்களைக் கொண் டவர். இந்திய இலங்கை இணக்க ஒப்பந்தத்தை எதிர்த்து அவர் பாராளுமன்றத்தில் இருந்து விலகிய போதும் அவருக்கு நாட்டில் ஆதரவு கிடைக்கவில்லை . அவர் அவசரப்பட்டுப் பதவியிலிருந்து விலகினார் என நான் நினைக்கிறேன்.
(8) கேள்வி - பதுளையையும் மத்திய மாகாணத்தையும் உங்கள் உரிமைப்பாட்டுள் கொண்டுவரும் வழிமுறைகளில் நீங்கள் இறங்கியுள்ளீர்கள் எனப் பயப்படுகிறார்களே? இதையிட்டு உங்கள் கருத்து என்ன? 
பதில்:- முதலில் எனக்கு இதைச் சொல்லுங்கள். தொடர்ச்சியாகப் பதவிக்கு வந்த சிங்கள அரசாங்கங்கள் இந்தப்பகுதியிலுள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கும் மற்றவர்களுக்கும் சென்ற 50 ஆண்டுகளாக என்ன செய்துள்ளன? சிங்கள மக்களில் ஆதிக்கம் செலுத்தவோ அல்லது அப்படிப்பட்ட ஆசைகளோ எனக்கு இருக்கின்றதென்று திரு. ஜெயசூரியா போன்றவர்கள் நினைப்பது சரியல்ல. ஐந்து சதவீத இந்திய வம்சாவளி மக்களைக் கொண்ட என்னால் எப்படி அப்படிச் செய்ய முடியும் சிங்கள மக்களைப் பாதுகாப்பதாகப் போட்டி போட்டுக்கொண்டு செயல்படுகின்ற சிறி லங்கா சுதந்திரக் கட்சியாலோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியானோ சிங்கள மக்களின் மேல் உரிமைப்பாட்டை செலுத்த முடியாதிருக்கிறது நான் தனிமனிதனாக இருந்து கொண்டு உரி மைப்பாடு செலுத்துவதென்று நினைப்பது மடத் தனம். என் சொல்லைக் கேட்டு நடக்கச் சிங்கள மக்கள் மடத்தனமானவர்கள் அல்லர். 
(9) கேள்வி முஸ்லிம் கட்சிகள், சிங்கள ஆரக்சக சங்விதானய போன்ற இனவாரியான கட்சிகளைத் தடை செய்வது நல்வது என நினைக்கிறீர்களா? 
பதில்:- கட்டாய தேவைகளினால் இக்கட்சிகள் எழுச்சி பெறுகின்றன. இவைகளின் குறைகளை களைந்தால் இக்கட்சிகள் வளரமாட்டா. இக்கட்சிகளும் விடுதலைப்புலிகள் போன்றவையேயாகும். இக் கட்சிகளை உருவாக்குவதற்கு இருக்கும் காரணிகளைக் கண்டறிந்து தீர்த்து வைக்கவேண்டும். 
(10) கேள்வி:- இந்தியத் தமிழர்களை மீண்டும் நசுக்க நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன என்று கூறிச் சில நாட்களுக்கு முன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் கூட்டத்தில் கண்ணீர் வடித்தீர்ளே? ஏன்? 
பதில்: நான் இதை ஏன் கூறினேன் என்றால் அரசாங்கத்திற்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரசுக்கும் இடையேயுள்ள ஒற்றுமையைச் சீர்குலைக்கத் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது சிலர் இந்த ஒற்றுமையைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள். 

50 வருடங்களாக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் ஒதுக்கப்பட்ட நிலையிலேயே இருந்தது. இன வெறுப்பைத் தூண்டக் கூடிய பிரசாரத்துக்கு அஞ்ச அரசாங்கம் இந்தியத் தமிழர்களுக்கு உதவுவதைத் தவிர்த்துக் கொண்டு வந்தமையால் அண்மைக் காலம் வரை இந்தியத் தமிழர்கள் நாடற்றவர்களாகவே இருந்தனர். 

தற்போது அரசாங்கம் இந்தியத் தமிழர்களுக்கு உதவியதுடன் அவர்களை இலங்கைக் குடிமக்களாகவும் மற்றவர்களுக்கு இணையாகவும் ஆக்கியுள்ளது என்பதை ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் இது மட்டும் போதாது அவர்களை மேம்படுத்த துரித நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை இன வெறுப்பைப் தூண்டுவோர் இந்தியத் தமிழர்களால் ஏற்படப் போகும் அச்சுறுத்தல்கள் என்ற ஒரு மாயையை உருவாக்கி அதை வைத்தே இப்போது அரசியல் இலாபம் தேட முனைகின்றார்கள்.

இந்தியத் தமிழர்களைப் பொறுத்த வரை அரசாங்கம் இன்னமும் அவ்வளவு அக்கறை காட்டவில்லை. எனக்குப் பின் இவர்களுக்காகப் போராடுபவர் யார்? ஜனாதிபதி எங்கள் பிரச்சினகைளைப் பற்றி நன்கு அறிந்துள்ளதுடன், அவர் தன்னாலானவற்றைக் தீர்த்து வைத்திருந்தும், இன்னும் பல பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன. மூன்று மாதங்களாகப் போராடி இந்தியத் தமிழர்களது வருவாயை அதிகரிக்கச் செய்துள்ளேன். இந்தியத் தமிழர்களுக்கு வருவாயை அதிகாரித்த போது, இந்த அதிகரிப்பு தெனியாய, காலி ஆகிய இடங்களிலுள்ள சிங்களத் தொழிலார்களுக்கும் கிடைத்துள்ளன என்பதை ஏன் இந்த மக்கள் உணர்கிறார்களில்லை. 

இந்தியத் தமிழர்களின் நிலைமையை முன்னேற்ற அரசாங்கம் தன்னிச்சையாக எந்த நடவடிக்கைகளிலும் இறகாவிலை. ஜனாதிபதி எங்கள் சிக்கல்களை நன்கு அறிந்துள்ளதோடு அவற் றைத் தீர்ப்பதற்கு அவர் எடுக்கும் முயற்சிகளை முறி படிப்பதற்கு ஒரு குழு அவருக்கெதிராக இயங்குகின்றது. கடந்த நாற்பதாண்டுகளாக இருந்து வரும் இச்சிக்கல்களுக்கு மும் கொடுக்கும் தலைவர்களில் எங்கள் ஜனாதிபதி மாத்திரம் ஒருவர் அல்ல. இந்தியத் தமிழர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த எடுத்த நட வடிக்கைகளுக்கு இனக்காழ்ப்பாளர்கள் தடங்கல் ஏற்படுத்தியுள்ளனர். இந்தியத் தமிழர்களின் பிரச்சினைகள் தேசியப் பிரச்சினைகளாகக் கருதி அவற்றைத் தீர்க்கத்தக்க வகையில் நடவடி க்கைகள் மேற்கொள்ளப்படவில்லை இன்னல்களுக்கு நடுவில் போராடிப் படிப்படியாக முன்னேறியுள்ளேன்.
(11) கேள்வி - மத்திய மாகாணசபை அரசாங்கத்தில் மகன் அமைச்சராக இருக்கிறாரே இது உங்களுக்கு உதவுவதாகக் தெரியவில்லையா?
பதில்:- இதில் என்ன சிறப்பு இருக்கிறது அவர் ஒரு குடிமகன் மற்றையோரைப் போல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றதன் மூலம் அவருக்குக் கிடைக்க வேண்டியதைப் பெற்றுக் கொண்டார். அதில் ஒரு சிறப்பும் இல்லை.

தமிழ்நாடு சங்ககாலத்தில் மக்கள் ஒழுக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஐந்து நிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. கடற்கரையை சார்ந்த நெய்தல் நிலத்தில் உள்ளவர் பரதர் எனப்பட்டனர். மலைகளிலும், மலைசார்ந்த நிலமாகிய குறிஞ்சியில் வாழ்ந்தவர் குறவர் எனப்பட்டனர். காட்டு நிலமாகிய முல்லையில் வாழ்ந்தவர் ஆயர் எனப்பட்டனர். அவர்கள் இடையர்கள். ஆற்றோரங்களைக் கொண்ட மருத நிலத்தில் உழுதுண்டு வாழ்பவர் உழவர். பாலைவனப் பகுதிகளில் வேட்டையாடியும், கொள்ளையடித்தும் வாழ்ந்து வந்தவர் என்றனர்.

(சண்டே ரைம்ஸ் 22.3.92) 
நன்றி – தமிழர் சார்பு
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates