தி ஐலன்ட் பத்திரிகையில் (Island 26-1-92) வெளியான இக்கட்டுரை அதன் பின்னர் 02.04.1992 அன்று வெளியான "தேர்ந்த கட்டுரைகள்" என்கிற விடுதலைப் புலிகளின் சஞ்சிகையில் வெளியாகியிருக்கிறது. "தேர்ந்த கட்டுரைகள்" சஞ்சிகையில் இப்படி பல முக்கிய நல்ல கட்டுரைகள் அப்போது மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டிருகிறது.
1962 ம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ம் திகதி வெள்ளிக்கிழமை காலை தன்னைச் சந்திக்கும்படி உதவிக் காவல்துறை மா அதிபரான திரு. சி. சி. திசநாயக்கா, கொழும்புக் காவல்துறை அதிபரான திரு. ஸ்ரான்லி சேனநாயக்கா அவர்களைக் கேட்டுக் கொண்டார். தனக்கு எதிராக நடாத்தப்பட்ட வழக்கின் விசா ரணையின் போது நாட்டில் உறுதிப்பாட்டை உருவாக்குவதற்கு ஏதுவாக முக்கியமான அரசியல் வாதிகள் பலரைக் கைது செய்யும்படி மேலிடத்திலிருந்து தனக்கு உத்தரவு கிடைத்திருந் ததாக திரு. ஜங்கின் திசநாயக்கா கூறியுள்ளார்.
இலங்கை கவசப்படையணியைச் சேர்ந்த மேஜர் வீரசேன ராசபக்சவும், மேஜர் விக்டர் யோசப்பும், இலங்கைப் பீரங்கிப் படையைச் சேர்ந்த மில்ரன் வைற்றும் உதவிக் காவல்துறை அதிபர் கொலின் வன் றீசனும், தொண்டர் படைத் துணைத் தளபதி எப்.சீ.த. சேரத்தின் இல்லத்தில் தங்கள் அன்றைய இரவு உணவை வைத்துக்கொண்டனர். அதன் பின் இவர்கள் பம்பலப்பிட்டியிலுள்ள மெல்போர்ண் சாலையூடாகக் கடற்கரைக்குச் சென்றனர். திருமதி, சிறிமாவோ பண்டாரநாயக்காவின் சிறிலங்கா சுதந்திரக்கட்சி அரசாங்கத்தைக் கவிழ்க்க வேண்டுமென அங்கு கூடியிருந்தவர்களுக்குத் திரு. டெறித் த சேரம் கூறினார்.
இதேவேளை கொழும்பிலுள்ள மூன்று தொலைபேசி பரிவர்த் தனை நிலையங்களை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நடவடிக்கைகளுக்குப் பொறுப் பாகவிருந்த இலங்கைப் படைத்துறை இரகசிய செய்திப்பரிவர்த்தனை (தொண்டர்படை) அறிவிக்கும் குழுவின் தளபதி கேணல் பசில் யேசுதாசன் மருதானையிலுள்ள மத்திய தொலைத் தொடர்பு பரிவர்த்தனை நிலையத்திற்கும், கவ்லொக்ரவுணில் உள்ள தொலைபேசி பரிவர்த்தனை நிலையத்திற்கும் சென்று பார்வை இட்டார்.
27 ம் திகதி காலை 9.15 மணிக்குக் காவல்துறைத் தலை மையகத்திற்கு உதவிக் காவல்துறை அதிபர் பெடே யோன் பிள்ளை அவர்களை அழைத்த திரு. ஜங்கின் திசநாயக்கா, தான் அன்று அரசாங்கத்தைக் கைப்பற்ற இருப்பதாகவும், காவல்துறை வானொலி தொடர்பு வாகனங்களையும், ஆயுதம் தாங்கியவர்களைக் கொண்ட, உந்துருளிகளையும், காவல்துறைப் போக்கு வரத்துப் பகுதி செயலகத்தில் அன்றிரவு 11.00 மணிக்கு ஆயத் தமாக வைத்திருக்கும்படி பணித்தார்.
முன்னாள் கடற்படைத்தளபதி றியர் அட்மிரல் றொயிஸ் த மெல், படைத்தளபதி கேணல் மொறிஸ் த மெல், மூன்றாவது பீரங்கிப்படைத் தளபதி கேணல் டபிள்யூ எஸ். ஆபிரகாம்ஸ், மேஜர் பசில் லோயலா. மின்னியல், இயந்திரவியல் பொறியிய லாளர் பகுதியைச் சேர்ந்த தளபதி நோயல் மத்தியூஸ், மேஜர் ராசபக்ச, கப்டன் வைத், கப்டன் ஜே. ஏ. ஆர். பீலிக்ஸ் ஆகி யோர் அன்று மாலை பம்பலப்பிட்டியிலுள்ள எலிபாங் வீதியிலுள்ள திரு பசில் பேசுதாசனுடைய வீட்டில் சந்தித்ததன் பின்னர், கின்றோஸ் சாலைக் கடற்கரைக்குச் சென்று, சதித்திட்டத்தைப் பற்றிய பேச்சுக்களின் போது சங்கேத மொழியாக “யத்துற" என்னும் வார்த்தையை உபயோகிக்கவேண்டும் எனவும். சதித்திட் டத்தின் பெயர் கோல்ட் வாச்டு' என இருக்குமெனவும் தீர் மானித்தார்கள்.
28 ம் திகதி ஞாயிறு காலை 1-00 மணிக்கு சதி ஆரம்பிக்கு மெனவும் இலங்கைத் தொலைபேசி பரிவர்த்தனைச் செயலகத்தை லெப்டினன்ட் கேணல் மத்தியூஸ் கண்காணிப்பாரெனவும், இராணி மாளிகையையும், கிரிலப்பனைப் பாலத்தையும் கவனிப்பதற் காகத் தலா நான்கு கவசவாகனங்களை மேஜர் ராசபக்ச அனுப்ப வேண்டுமெனவும் ஏரிக்கரைப் பத்திரிகைக்காரியாலயத்தை கப்டன் பீலிக்ஸ் கண்காணிப்பார் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
இந்த ஒழுங்குகள் நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், சதியில் சம்பத்தப்பட்ட மற்றவர்களுக்குத் தெரியாமல் அம்பலாங் கொடை சுதந்திரக்கட்சி பாராளுமன்ற உறுப்பினரும் தனது மாமனாருமான திரு. பீ. த. எஸ் குலரத்தினாவுடன் திரு. ஸ்ரான்லி சேனநாயக்கா அன்று காலை தொடர்பு கொண்டதன் காரணமாக, திரு. பீ. த, எஸ் குலரத்தினா அன்று மாலை 3.00 மணிக்கு கொழும்பு வந்து சேர்ந்தார். திரு. ஸ்ரான்லி சேன நாயக்கா கூறிய யாவற்றையும் கேட்டறிந்து கொண்ட திரு குல ரத்தினா அன்று மாலை 5.00 மணிக்கு ஒறியன் கிளப் (Orion Club) புக்குள் சென்று அன்றைய காவல்துறை மா அதிபரான திரு. மொறிஸ் அபயக்கோனிடம் இச் சதிபற்றித் தெரியப் படுத்திய பின், அன்றைய பாதுகாப்பு அமைச்சின் பாராளுமன்றச் செயலாளரான திரு. பீலிக்ஸ்டயஸ் பண்டாரநாயக்காவுக்கும் இதைத் தெரியப்படுத்தச் சொன்னார். அன்று மாலை 7.15 மணிக்கு அலரிமாளிகைக்கு அழைக்கப்பட்ட காவல்துறை மா அதிபர் வழமைக்கு மாறானவர்களிடமிருந்து வரும் கட்டளைகளை ஏற்கக்கூடாதென எல்லா காவல்துறை நிலையங்களுக்கும் பணிப் புரை வழங்கினார். அலரி மாளிகையைப் பாதுகாக்க மூன்று கவ சவாகனங்களை அனுப்பும்படி மேஜர் ராசபக்சாவுக்கு காவல் படையின் தளபதி கேணல் சேபால ஆட்டிகலை அன்று நடு இர வில் பணித்தபின், 2-ந் திகதி அதிகாலை 1. 0 மணிக்கு பிறென் துப்பாக்கிகள் ஏந்திய 300 துருப்புக்கள் திரு. ஜங்கின் திசநாயக்கா வசிக்கும் லோங்டன் சாலையிலுள்ள அவர் வீட் ஓடச் சுற்றிவளைக்க ஏற்பாடு செய்தார். இப்படியே கோல்ட் வாச்டு' என்ற சதி நடவடிக்கை முறியடிக்கப்பட்டது.
அரசிற்கு எதிராகப் போர் தொடுத்தார்கள் எனக் குற்றஞ் சுமத்தப்பட்ட 24 பேர்களுள் 10 பேர் குற்றவாளிகளாகக் காணப்பட்டார்கள். இக்குற்றவாளிகளான நிர்வாக சேவையைச் சேர்ந்த டக்கிளஸ் லியனகே, மற்றும் கேணல் மொறிஸ் தமெல், கேணல் டெறிக் த சேரம், ஜங்கின் திசநாயக்கா. முன்னாள் துணைகாவல் துறை மா அதிபர் சிட்னி த சொயிசா றோயிஸ் தமெல், லெப் ரினன்ட் கேணல் நோயல் மத்தியூஸ், கேணல் பசில் யேசுதாசன், உதவிக் காவல்துறை அதிகாரிகளான ரோணி விஜயசிங்க மற்றும் லயனல் ஜெரசிங்க காவல்துறை அதிபர் எல் ஸ்ரர் பெரேரா ஆகியோருக்கு பத்து வருடச் சிறைத்தண்டனையையும், அவர்கள் சொத்துக்கள் யாவற்றையும் பறிமுதல் செய்யும்படியும் நீதிமன் றம் உத்தரவிட்டது.
வெற்றிபெறாத ஒரு வெறும் இராணுவ சதி நடவடிக்கையாக 'கோஸ்ட் வாச்டு' சதி நடவடிக்கையைக் கருதமுடியாது இலங்கையின் அண்மைக்காலச் சரித்திரத்தில் அது பெரும் நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டிருந்த வேளையில் நடாத்தப்பட்ட அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்ச்சியாகவே இதைக் கொள்ள வேண்டும்.
சமய சார்பற்ற அரசமுறை
தன்னாட்சி அதிகாரங்கொண்ட ஒரு அரசை உருவாக்க வேண்டுமென்று விருப்புக்கொண்ட திரு. டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையிலுள்ள எல்லாச் சமூகங்களையும் பிரதிபலிக்கத்தக்கதான அரசியல் முறை ஒன்றை உருவாக்க விரும்பினார். லங்கா சமசமாசக்கட்சி போன்ற எதிர்க்கட்சிகள் தீவிர மதச்சார்பற்ற, பக்கச்சார்பற்ற கொள்கையைக் கடைப்பிடித்தமையாலேயே ஐக் கிய தேசியக்கட்சி தன்னை ஒரு தேசிய மதச்சார்பற்ற, அமைப்பாக அதன் முதல் பத்து ஆண்டுகால வரலாற்றில் காட்டிக் கொள்ள முடிந்தது. இலங்கையிலுள்ள இந்தியப் பூர்வீக மக்களாகிய தோட்டத் தொழிலாளர்களுடைய வாக்குரிமையை இல்லாது செய்தது போன்ற சிறுபான்மையினருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொண்ட போதெல்லாம் ஐக்கிய தேசியக் கட்சி அதை ஒரு இனத்தின் பிரச்சினையாகக் காட்டிக்கொள்ளாது ஒரு வர்க்கத்தின் பிரச்சினையாகவே காட்டிக்கொண்டது.
நிருவாகத்தில் மேல்மட்டத்தினருக்கும் மத்தியதரத்தினருக்கு மிடையே தொடர்ச்சியான ஒற்றுமை 1956 வரை நீடித்துக் கொண்டிருந்தது. அதே நேரத்தில் மேல் நாட்டுப் பண்பாட்டை பின்பற்றிய ஆங்கிலம் கற்ற நகரப்புற மக்களுக்கும், கிராமப்புறங் களில் வசித்த சிங்களம் அல்லது தமிழ் மாத்திரம் கற்ற மக்களுக்கு மிடையே விரிசல் ஏற்பட்டுக்கொண்டு வந்தது. பாடசாலைகளில் ஒன்றாக கல்விகற்றதன் காரணமாக இனத்துவேசமற்ற மதச் சார்பற்ற சூழ்நிலை காரணமாகவும் 50ம் ஆண்டுக்கு பிற்பகுதியில் தோன்றிய இனவாத உணர்வுகள் அப்போது தோன்றவில்லை.
சமய சார்பற்ற எல்லோருக்கும் இலங்கையரென்ற தேசிய வாதம் வளர்ந்துகொண்டிருந்த அதேவேளையில் மதக் கோட்பாட்டை முன்னெடுத்துச் செல்லும் ஒரு அரசியலும் உருவாகிக் கொண்டு வந்தது. இந்தச் சமயவாதிகளுக்கு 1873ம் ஆண்டு வண. மிக்கெற்றுவத்த குணானந்த அவர்களால் பாணந்துறையில் நடாத்தப்பட்ட கலந்துரையாடல் உந்துகோளாக அமைந் தது. அத்துடன் 1880ம் ஆண்டில் கேணல் ஹென்றி ஒல்கொட் அவர்களின் வருகையும், திரு. தர்மபாலா அவர்களின் மதுவுக்கு எதிரான பிரச்சாரங்களும் உத்வேகம் கொடுத்தது.
இந்திய சுதந்திரப் போராட்டத்தால் உத்வேகம் அடைத் திருந்தவர்களும், 1940 களில் சாந்திநிகேதனில் கல்விகற்றவர்களுமான வணக்கத்துக்குரிய வல்பொல ராகுல மற்றும் உடகென் தவல சரணங்கார போன்றோர் 1947ம் ஆண்டு இலங்கையில் நடாத்தப்பட்ட முதலாவது பொதுத்தேர்தல் காலத்தில் வித்தி யாலங்காரப் பிரிவேனாவுக்கு வந்து சேர்ந்தனர்.
1950ம் ஆண்டு டிசம்பர் மாத ஆரம்பக் காலத்தில் தன்னைச் சிந்தித்த புத்த பிக்குகளின் தூதுக்குழுக்களிடம் அரசாங்கம் சமய சம்பந்தமான விடயங்களில் தலையிடாதென திரு. டீ. எஸ். சேனனாயக்கா கூறியுள்ளார். பௌத்த சாசன ஆணைக்குழு வொன்றை அமைக்கும்படியும், புத்த சமயத்துக்கு அரசாங்கம் ஆதரவு வழங்க வேண்டும் எனவும் அகில இலங்கை பௌத்த காங்கிரஸில் இது நடந்த அடுத்தவருடமே அரசாங்கத்துக்கு நெருக்குதல் கொடுத்தது. இந்த இரு கோரிக்கையும் ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் நிறைவேற்றவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த மூத்த நிருவாக சேவை அதிகாரியான திரு. என். கியூ. டயஸ் அவர்களும், வண. கென்பிற்றிகெதற ஞான சீக அவர்களும் கிராமங்கள் தோறும் பௌத்த சாசன சபைகளை உருவாக்கி பொதுமக்களின் உணர்ச்சியைத் தூண்டக்கூடிய விடயங் களான புத்த சமயத்தவர்களால் நடாத்தப்படும் பாடசாலைகளின் நிலை போன்ற விடயங்களை இவை மூலம் எழுப்பிவந்தனர். அத்துடன் மருத்துவமனைகளில் கடமையாற்றி வந்த கத்தோலிக்கக் கன்னியாஸ்திரிகளுக்கு எதிராகவும், அரச மொழி சம்பந்தமாகவும் அரசாங்கத்துக்கெதிராகப் பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்த னர். அத்துடன் திரு. எல். எச். மேத்தானந்தா அவர்களால் உரு வாக்கப்பட்ட தேர்தல் தொகுதி வாரியான அமைப்புக்களான சங்க சபைகளின் ஒத்துழைப்புடன் 1956 ம் ஆண்டு எக்சத்பிக்கு பெரமுன என்ற முன்னணியை அவர்கள் உருவாக்கினார்கள்.
புத்தசமய முற்போக்காளர்களின் அரசியல் வேட்கைகளை நிறைவேற்றத் திரு. எஸ். டபிள்யூ. ஆர் டி. பண்டாரநாயக்கா எண்ணியிருந்தாராயினும் 1956 ம் ஆண்டில் எக்சத் பிக்கு பெர முனவின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்ள அவர் சம்மதித் தார். மகாஜன எக்சத் பெரமுன அரசாங்கம் பதவியிலிருந்த வேளையில் எல்லோருக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்ற பண்டாரநாயக்காவின் நோக்கம் அக்கட்சிக்குள் இருந்த மத சார்புடைய வலதுசாரி அணி ஒன்றினால் முறியடிக்கப்பட் டது. இந்த நெருக்கடி வேளையில் திரு. பண்டாரநாயக்கா கொலை செய்யப்பட்டார். நெருக்கடி மிக்க அரசியல்
1956 ம் ஆண்டுக்குப்பின் மேற்கொள்ளப்பட்ட ஒவ்வொரு அரசியல் நடவடிக்கைகளும் நாட்டின் உறுதிப்பாட்டைச் சீர் குலைப்பனவாக இருப்பதாக முற்போக்கு அரசியலாளர்கள் கருதினர். 1960 ம் ஆண்டு திருமதி. சிறிமாவோ பண்டார நாயக்கா பதவி ஏற்றதன் பின்பே இந்த நிலை தீவிரம டைந்த தாகவும் அவர்கள் கருதினர். சமூகங்களுக்கிடையே அரசகரும் மொழிக்கொள்கையின் காரணமாக உருவாக்கப்பட்ட வேறுபாடு களும், 1956 ம், 1958 ம் ஆண்டுகளில் சிறுபான்மையினரான தமிழ் மக்களுக்கெதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்செயல் களும், 1961 ம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரை உபயோகப்படுத்தியதும், புத்தபிக்குகளின் தீவிரவாத அரசியல் பங்களிப்பும், சமய சார்புடைய பாடசாலைகளை அரசு எடுத்த தும், தங்கள் தீய நோக்கங்களை நிறைவேற்றப் பொதுமக்களுக்கு கட்டுப்பாடு சட்டம், ஒழுங்கு ஆகியவற்றைச் சீர்குலைக்க இடம் கொடுத்ததும் தொழிற்சங்கங்களுக்கிடையே ஏற்பட்ட அதிருப்தி காரணமாக அவைகளால் நடாத்தப்பட்ட வேலை நிறுத்தங்களும், தொழிற்சங்கங்களின் நடவடிக்கை மூலம் மார்க்சீச வாதிகள் அரசாங்கத்தைக் கைப்பற்றி விடுவார்களென எழுந்த அச்சமும், இடது சாரிக்கட்சிகளுடன் அன்றைய அரசாங்கம் கூட்டுச் சேர்ந் ததும், தேசியமயமாக்கக் காரணமாகத் தனியார் துறைக்கு எழுந்த பாதுகாப்பின்மையும், நெருக்கடி காலச் சட்டத்தை கால வரையின்றி நீடித்ததன் காரணமாக ஜனநாயகத்துக்கு விடுக்கப் பட்ட அச்சுறுத்தலும் அத்தியாவசிய சேவைகளை மேற்கொள்ள இராணுவத்தைப் பயன்படுத்தியதும், பத்திரிகைகளை தனது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவர முயன்றதும், திரு. பீலிக்ஸ் டயஸ் பண் டாரநாயக்கா அவர்களின் எதேச்சாதிகாரப் போக்கும் ஆகிய இவைகளே அரசாங்கத்தைக்கைப்பற்ற சதிப்புரட்சியில் ஈடுபட்ட வர்களுக்குத் தூண்டுகோலாக அமைந்தது.
அரசாங்கம் கடைப்பிடித்து வந்த தவறான கொள்கை களால் ஏற்படவிருக்கும் பயங்கரமான விளைவுகளை இராணு வத்தினரும், காவல்துறை பிரிவினரும் நன்கறிந்திருந்தனர். வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு வெளியேயுள்ள தமிழர்களைச் சிங்களக் குண்டர்களிடமிருந்து பாதுகாக்க மகாதேசாதிபதி அவர்கள் இராணுவத்தை 1958 ம் ஆண்டு அழைக்க வேண்டி யிருந்தது. திரு. தார்சி வித்தாச்சி தான் எழுதிய 'எமர்சென்சி 58" என்ற நூலில் (நெருக்கடி காலச்சட்டம் 58) மேஜர் டெறிக் தசேரம் இரத்மலானையிலுள்ள இலங்கைப் போக்குவரத்துச் சபைத் தொழிலாளர்களை எப்படிச் சமாளிக்க வேண்டியிருந் தது என்றும், நீர்ப்பாசன இலாகாத் தொழிலாளர் களையும், பதவிய குடியேற்ற வாசிகளையும் மேஜர் எம். ஓ. குணரத்தினா எப்படி அடித்து விரட்டினார். என்றும் எழுதியிருந்தார். இச் சக்திப்புரட்சியில் ஈடுபட்டவர்களில் ஒருவர் பதினைந்து நிமிடங்கள் பிந்திவந்தமையால், பாணந்துறையில் உயிருடன் எரிக்கப் பட்ட இரண்டு இந்துமதக்குருக்கள்களை அவரால் காப்பாற்ற
முடியவில்லை. இப்படியான சம்பவங்கள் தொடருவதை விரை விலே நிறுத்தவேண்டுமென இச்சம்பவம் அவருக்கு உணர்த்தியது.
இப்படியான குழப்பக்காரக் கும்பல்களை வழிநடத்திய புத்த பிக்குகள் விடயத்தில் கவனமாக இருக்கவேண்டுமென இவர்களுக்கு 1956-ம் ஆண்டு அறிவுறுத்தப்பட்டதாக இந்தச்சதியில் சம்பந்தப்பட்ட இன்னொருவர் கூறினார். அரசாங்கம் மதச்சார்பற்ற ஒன்றாக இருக்கவேண்டும் என்பதையே அவர் கொள்கையாகக் கொண்டிருந்தார்.
மதத் தலைவர்களால் வழிநடத்தப்படும் அரசாங்கம் ஒன் றின் பகுதியாக தாங்கள் மாறி வருவதாகக் காவல்படை மற்றும் இராணுவத்திலுள்ள அதிகாரிகள் அஞ்சினர். துணைக் காவல் துறை மா அதிபரான திரு. ஜங்கின் திசநாயக்காவை பார்த்த பண்டா “ஜங்கின் ஜல்கின் நீ மட்டும் புத்தசமயத்தைச் சார்ந்த ஒருவராக இருந்திருந்தால் உன்னை காவல்துறை மா அதிபராக ஆக்கியிருக்கலாம் எனக் கூறினார்'' கொயகம புத்த சமயத்தவர் ஒருவர் காவல்துறை மா அதிபராக இருப்பதையே மக்கள் விரும் புகிறார்கள் எனவும் திரு. பண்டாரநாயக்கா அவருக்குக் கூறி யிருந்தார்.
சகிக்க முடியாத ஒரு காலகட்டத்துக்கு தாங்கள் வந்துள் ளதை அதிகாரிகள் 1961ல் உணர்ந்தனர் மதசார்பான பாட சாலை களை அரசாங்கம் பொறுப்பேற்றதை றோமன் கத்தோலிக்கத் தேவாலயங்கள் எதிர்த்தபோது அதையடக்க முதன் முதலாக இராணுவம் பயன்படுத்தப்பட்டது. சிங்கள மொழியை, அரசகரும மொழியாக்கியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் தமிழரசுக்கட்சியால் வடக்கில் நடாத்தப்பட்ட சத்தியாக்கிரகத்தின் போது இதன் பின் இராணுவம் பயன்படுத்தப்பட்டது.
வடக்குக்கு இந்தச் சத்தியாக்கிரகத்தின் போது கடமைக்கு அனுப்பப்பட்டவரும் இந்தச்சதியில் சம்பந்தப்பட்டவருமான ஒரு அதிகாரி சத்தியாக்கிரகம் அமைதியாக நடந்து கொண்டிருந்த தைக் கண்டதும், அரசாங்கம் வன்முறையைக் கையாள்வதைத் தவிர்க்க வேண்டுமென்று ஆலோசனை கூறினார். ஆனால் மந்திரிசபைக் கூட்டமொன்றில் இவர் கலந்து கொண்டபோது, தமிழ் மக்களுக்கு ஒரு பாடம் படிப்பிக்க வேண்டும் என அதில் பங்குபற்றியவர்கள் வலியுறுத்தியதைக் கண்டார். அவர்கள் வலி யுறுத்தியதற்கு அமைய 3 வது பீரங்கிப்படை அணியை யாழ்ப்பாணத்துக்கு அனுப்ப அரசாங்கம் பணித்தது. இந்தப்படை அணியின் தளபதி கேணல் ஆபிரகாமும், அவரது உதவியாளர் மேஜர் லோயவாவும் இந்தப்படையணியுடன் கோட்டைப் புகையிரத நிலையத்தில் இருந்து பயணத்தை மேற்கொள்ளவிருந்த வேளையில் தமிழர்கள் என்ற காரணத்தால் இவர்கள் பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. இவர்களுக்குப் பதிலாக காலாட்படை அணியின் தளபதியும், தீவிர சிங்கள பௌத்தரு மான கேணல் றிச்சாட் உடுகம் அனுப்பப்பட்டார். -
இராணுவத்தினரிடையே பௌத்த சித்தாந்தத்தை உருவாக்குபவர் எனக்கருதப்பட்ட கேணல் உடுகம் ஒரு பௌத்த சங் கத்தை இராணுவத்தில் உருவாக்குவதில் ஈடுபட்டிருந்தார். இவருடைய சங்கத்தில் சேர விரும்பாத அதிகாரிகள் இவரை வெறுத்தனர். இவருடைய இனத்துவேசப் போக்கைக் கண்ட அவர்கள் இவரை இழிசொற்களால் பேசி வந்தனர். அதே நேரத்தில் இராணுவத் தளபதி பதவிக்கு இவர் உருவாக்கப்பட்டு வந்ததால் அவர்கள் அச்சமுமுற்றிருந்தனர் யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய நடவடிக்கைகளைச் சரிவரச் செய்து முடிக் கவும், நடவடிக்கை எடுக்கப்பின் நிற்கும் அதிகாரிகளை கண்டிக்கவும் பாதுகாப்பு அமைச்சின் அன்றைய நிரந்தரச் செயலாளர் என். கியூ. டயஸ் இவர்களுடன் சென்றது மட்டுமல்ல பல வேளை களில் இவரே கட்டளைகளைப் பிறப்பித்தார்.
சிங்கள பௌத்த எழுச்சிக்குத் தலைமை தாங்குபவர்களில் ஒருவராக திரு. பீலிக்சுடயசு இருந்தார். திரு. பீலிக்சுடயசு அவர்களுடைய சர்வாதிகாரப் போக்கின் காரணமாகவே தாங்கள் அரசாங்கத்தைக் கைப்பற்ற இருந்ததாக இவர்கள் நீதி விசாரணையின் போது கூறியுள்ளார்கள். படையணிகளைத் தான் நினைத்தது போல் நகர்த்துமளவுக்கு அவர் இராணுவ விடயங் களில் தலையிட்டிருந்தார்.
திரு. பீலிக்சுடயசு பண்டாரநாயக்கா மீது இராணுவ அதி காரிகள் கடும் வெறுப்புற்றிருந்ததாக இந்தச் சதியைப் பற்றிய தனது ஆய்வில் திரு. டோனால்ட் கொறோவிற்ஸ் எழுதியுள் ளார். இவரைப் போல் ஒருவரைத்தாங்கள் முன்னெப்பொழுதும் சந்தித்திருக்கவில்லையென்றும், கொடூரமானவன், இழிவானவன், வீண் பெருமை கொண்டவன், வஞ்சம் தீர்ப்பவன், தற்புகழ்ச்சிக்காரன், இரக்கமற்றவன், நேர்மையற்றவன், பைத்தியக்காரன் என இவருடைய குணாதிசயத்தைப் பற்றி அதிகாரிகள் வர்ணித் துள்ளதர்கவும் அவர் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
சதித்திட்டம்
கள்ளக்குடியேற்றத்திற்கெதிராகவும் தமிழ் மக்களால் நடாத் தப்பட்ட சத்தியாக்கிரகத்துக்கு எதிராகவும் நடவடிக்கையை மேற்கொள்ள இராணுவத்தினரை அனுப்பிய பகுதியிலேயே சதிப் புரட்சிக்கான எண்ணம் உருவாகியது. மன்னாரில் அரச அதிகாரப் பதவி வகித்த காலத்தில் திரு டக்ளஸ் லியனகே அவர்கள் மட்டக் சளப்பு, திருகோணமலைப் பகுதிகளில் பீரங்கிப் படையணியைச் சேர்ந்த அதிகாரிகளுடனும், கவசப்படையணியைச் சேர்ந்த அதிகாரிகளுடனும், தொடர்பு கொண்டிருந்தும் 1962ம் ஆண்டு டிசெம்பர் மாதம் காவல்துறை பயிற்சிக்கலாசாலையைச் சேர்ந்த உதவி காவல் துறை அதிபர் திரு. வி. கே. ஆறு முகம் போன்ற அதிகாரிகளுக்கு நாடு எதிர் கொள்ள விருக்கும் அபாயம்பற்றி அவர் கூறிவந்துள்ளார்.
இராணுவத்தில் இச்சதித்திட்டம் பீரங்கிப்படைப் பிரிவில் உருவாகி பணிட புரை ஒழுங்கு கீழ்க்காணும் வகையில் சென்றது.
கேணல் த சேரம் அவர்கள் கேணல் த மெல் அவர்களுக்கு வழங் கும்பணிப்புரை கேணல் ஆபிரகாம்ஸ் அவர்களுக்கு கேணல் த மெல் அவர்களால் வழங்கப்பட்டு அதன்பின் மற்றைய இராணுவ அதி காரிகளுக்கு கேணல் ஆபிரகாம்ஸ் அவர்களால் வழங்கப்பட்டது. கொழும்பு மாநகர காவல்துறைப் படைப்பிரிவு திரு. ஜங்கின் திசநாயக்கா தலைமையிலும், மாகாணங்களிலுள்ள காவல்துறை அதிகாரிகளுக்குத் திரு சிட்னி சொயிசாவின் தலைமையிலும் கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டன.
மேல் மட்டத்திலுள்ள சிங்களக் குடும்பத்தைச் சேர்ந்தவரும், அக்ஸ்பர்ட் பல்கலைக் கழக துடுப்பெடுத்தாட்ட விளையாட்டு வீரரும், வழக்கறிஞரும், புத்தசமயத்தவருமான திரு டெரிக் த சேரம் அவர்கள் இனபேதம் அற்றவராக இருந்ததுடன் இராணுவத்தில் உயர்வாக மதிக்கப்பட்ட ஒருவராயும் இருந்ததுடன் நம்பிக்கைக்குரியவராகவும் இருந்தார். கைதிகளை சிறை வைக்கவிருக்கும் காலிமுகத்திடலுக்கு இலங்கை இராணுவத்தைச் சேர்ந்த லெப்டினன்ட் கேணல் டீ எபரி அபேசிங்க போன்ற முக் கிய அதிகாரிகளை இவர் 1961ம் ஆண்டு ஜனவரிமாதம் அழைத்து வந்தார். அச்சதிசம்பந்தமாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகளின் பொறுப்புகள் பம்பலப்பிட்டியில் நடாத்தப்பட்ட கூட்டங்களில் ஒவ்வொரு அதிகாரிகளுக்கும் ஒப்படைக்கப்பட்டன.
திரு ஜங்கின் திசநாயக்கா காவல் துறை சேவையில் ஒரு மூத்த அதிகாரியாக இருந்தது மாத்திரமன்றி, அந்தச் சேவைக்கு உள்ளேயும் வெளியேயும் பெரிதும் மதிக்கப்பட்டிருந்தார். கொழுபிலுள்ள பல முக்கிய காவல்துறை அதிகாரிகள் இவர் மூலம் இந்தச்சதித் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். உதவிக் காவல்துறை அதிபர் கொலின் வன்றிசன் அவர்களுடன் குற்றப்பிரிவு காவல் துறை அதிகாரி டபிள்யூ. எல். ஜெபநேசன், எம். பி. டெடிகம, காவல்துறை அதிபர் சி. பி ஆன்ட். உதவிக் காவல்துறை அதிபர் செறி விஜேசிங்க, உதவிக் காவல்துறை அதிபர் ஜம்போ ஜய திலக, உதவி காவல் துறை அதிபர் பி. ஆர். செனவிரத்தினா ஆகியோர் 1961ம் ஆண்டு ஜனவரி மாதம் 13 ம் திகதி அரசி யல் வாதிகளைத் தடுத்து வைத்திருப்பது பற்றியும், காவல்துறை வானொலிக் கட்டுப்பாட்டு நிலையம், மற்றும் புதிய தலைமைச் செயலகம், நாரண்பிட்டியிலுள்ள வானொலி ஆய்வுகூடம் ஆகி யனவற்றைப் பாதுகாப்பது பற்றியும், அறிவுறுத்தப்பட்டனர்.
முன்னாள் உதவிக் காவல்துறை மா அதிபரான திரு சிட்னி த சொயிசா ஒரு சிலரைத் தவிர மற்ற முக்கியமான காவல்து எற உத்தியோகத்தர்களின் ஆதரவைப் பெற்றிருந்தார். 25ம் திகதி இவர் மாகாணங்களிலுள்ள காவல்து உற நிலையங்களுக்குச் சென்று, மாத்தறை காவல்துறை அதிபர் டேவிட் தம்பையா, காவல் துறை அதிபர் புனோசியர், உதவிக் காவல்துறை அதிபர் ஓற் கழுத்துறைக் காவல்துறை பயிற்சிக் கல்லூரியைச் சேர்ந்த உதவிக் காவல்துறை அதியா திரு. வீ கே. ஆறுமுகம் ஆகியோரைச் சந்தித்தார்,
பிரதம மந்திரி திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்காவும். பாராளுமன்றக்காரியதரிசி திரு. பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக் காவும் நாட்டில் சர்வாதிகார ஆட்சியை உருவாக்குவதற்கு வழி வகுக்கிறார்கள் எனக் கருதியமையாலேயே இவர்களுக்கு எதிரா கச் சதிப்புரட்சியை நடாத்த திட்டமிடப்பட்டது. திரு பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க வெளிப்படையாகவே சிறு அளவு ஆகுதல் சர்வாதிகாரம் இருக்கவேண்டுமெனக் கூறியுள்ளார். நாட்டில் அன்று நிலவிய நெருக்கடிகளின் காரணமாக இடதுசாரியினர் சர்வாதிகார ஆட்சியொன்றை அமைக்கும் சாத்தியக் கூறுகள் இருந்தமையால் இடதுசாரிகளை மையமாக வைத்தும் சதிப்புரட்சியாளர்கள் புரட்சியை நடாத்தத் திட்டமிட்டனர். இதன் காரணமாகவே திருவாளர்கள் என். எம். பெரேரா, கொல்வின் ஆர். டி. சில்வா , பீற்றர் கெனமன், எம். ஜீ. மெண்டிஸ், எஸ். பி. அமரசிங்கம் போன்ற இடதுசாரிகளையும் கைது செய்யக்கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
குற்றவாளிகளாகக் காணப்பட்டவர்கள் பிரிவுக் கவுன்சிலுக்கு மேன்முறையீடு செய்தபோது அவர்கள் குற்றவாளிகள் அல்லர் எனத் தீர்ப்பளிக்கப்பட்டதுடன் இந்த வழக்கும் முடிவுற்றது.
முப்பது வருடங்களுக்கு முன்னர் என்ன சூழ்நிலையில் இந்தச் சதிப்புரட்சியை நடாத்தத் திட்டமிடப்பட்டதோ அதே நெருக்கடியான சூழ்நிலை தற்பொழுதும் நிலவுவதுடன், அடுத்த சந்ததியினரும் இதனால் பாதிக்கப்படவிருக்கின்றனர்.
இந்த நாட்டில் பல சமூகங்களைக் கொண்ட மதச்சார்பற்ற அரசாங்கமா? அல்லது இனரீதியான மதச்சார்புள்ள ஆரசாங் கமா? அமையவேண்டுமென்பதே முக்கியமானதாகவிருக்கின்றது. இராணுவத்தின் இயல்பும், அமைப்பும் அரசாங்க விவகாரங்ககளில் அவர்கள் வகிக்கும் பங்கும், அரசாங்கத்துக்கு எதிராகவுள்ள சட்டரீதியான தீவிரவாத அணியினரை இவர்கள் கையாளும்முறையும் இரண்டாவது பிரிவினையாகவிருக்கின்றது.
ஒப்பரேசன் கோல்டுவாச்டு' என்ற சதிப்புரட்சியில் ஈடுபட்டதன் மூலம் தங்களுடைய உயிர்களுக்கும், பதவிகளுக்கும் ஆபத்தைத் தேடிக்கொண்டவர்களின் தற்கொடை உணர்வை எவரும் எக்காலத்திலும் கணக்கில் எடுக்கவில்லை. இருப்பினும் அவர்கள் எழுபதுகளிலும், எண்பதுகளிலும் புதுப்பொலிவு பெற்று உன்னத நிலைக்கு உயர்ந்துள்ளனர்.
- C. C. Dissanayake - Deputy Inspector General of Police
- Stanley Senanayake - Superintendent of police Colombo
- Major Weerasena Rajapakse - Ceylon Armoured Corp
- Major Victor Joseph – CAC
- Major Wilton White - Ceylon Artillery
- Colin Vandendriesan - Assistant Superintendent of Police
- Colonel F.C, de Saram - Deputy Commandant Ceylon Volunteer Force.
- Colonel Basil Jesudason - Commander Ceylon Signa Corp (Volunteers)
- Bede Jobopulle - ASP to police Head quarters
- Rear Adm Royce de mel - Former Navy Commander
- Colonel Maurice de Mel - Chief of Staff of the Army
- Colonel W. S. Abraham - Commander 3rd Field Artillery Regiment.
- Major Basil Loyala -CA
- Lt. Col. Noel Mathysz - Commander Ceylon Electrical and Mechanical Engineers
- Colonel Sepala Attygalle - Commander Ceylon Armoured Corp
- Lt, ColonelD.F.T.Abeysinghe - Ceylon Army ordinance Corp
"தேர்ந்த கட்டுரைகள்" - சஞ்சிகையில் (02.04.1992) வெளியான மொழிபெயர்ப்புக் கட்டுரை இது
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...