Headlines News :
முகப்பு » , » சட்டம்பிகளே தூர விலகுங்கள்! – என்.சரவணன்

சட்டம்பிகளே தூர விலகுங்கள்! – என்.சரவணன்


வம்பிழுப்புகளில் இருந்து விலகியே இருந்துவந்திருக்கிறேன்.

என் பயணத்தில் யாரிலும் தங்கியிராது, “கூட்டு”, “குழுவாதம்” என்பதற்குள் அகப்படாது தனித்தே எனது பயணத்தை மேற்கொண்டு வருகிறேன். இந்தப் பயணத்தில் எதிர்கொண்டுவந்த நெருக்கடிகளின் அரசியலையும், இலக்கு வைப்புகளின் நுணுக்கமான அரசியலையும் நான் கற்று கடந்தே வந்திருக்கிறேன். அந்த அனுபவத்தில் இருந்து தான் எனது அணுகுமுறையையும் தீர்மானிக்கிறேன். இதில் எவரோடும், எந்த சக்திகளோடும் சமரசம் செய்து கொள்வதில்லை. காயப்படுத்தியவர்களை ஒருபோதும் துரத்திச் சென்று பழிவாங்க எண்ணியது கூட கிடையாது. தூர விலகிவிடுவேன். அல்லது தூர விலக்கிவிடுவேன். அது மட்டுமே எனது வழி.

இந்த அனுபவ அணுகுமுறைகளில் இருந்து தான் என்னை சீண்டுபவர்களையும் எதிர்கொள்கிறேன். அப்படி எழுதிய எனது முக நூல் பதிவில் (கட்டுரையில் இறுதியில் இணைத்திருக்கிறேன்) நான் யாரைக் குறிப்பிட்டேன் என்பதை இப்போதே வெளியிடவேண்டும் என்று சிலர் நிர்பந்திக்கிறார்கள். முதல் பதிவிலேயே “யார் என்று கேட்காதீர்கள்” என்று தெளிவாகவே இட்டபின்னரும் அதே கேள்வியை திரும்பத் திரும்ப கேட்டபோதும் கூட சளைக்காமல் இருந்தேன்.

ஆனால் மு.நித்தியானந்தன் முகநூலில் சில தடவைகள் வந்து அதே கேள்வியை கேட்டுவிட்டு நான் பதில் அளிக்காத நிலையில் முகநூல் உட்பெட்டியில் நேற்று இரவு (20.05.2020 நோர்வே நேரப்படி இரவு 11.28க்கு) வந்து கடுமையாக எழுதியிருந்தார். இப்போதும் நான் மூலக்கேள்விக்கு பதில் சொல்லப்போவதில்லை என்பதை சொல்லிகொள்கிறேன். அதேவேளை நித்தியின் இந்த அணுகுமுறைக்கு நான் பதில் சொல்லியாகவேண்டும். அவர் எழுதிய கீழ்வரும் பதிவும். அவருக்கு நான் எழுதியதும் இங்கே வெளியிடுகிறேன்.
சரவணன், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்? Rodiya சமூகம் , மகாவம்சம் என்பதெல்லாம் இப்போ பெரிய பிரச்னை இல்லை.என் மீது அநியாயமான ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன. உங்களுக்கு இதில் எந்த moral பிரச்னையும் இல்லையா? நீங்கள் யாரையோ நினைத்துக்கொண்டு எழுதப்போய், உங்களுக்கு ஒழுங்காய் எழுதத்தெரியாமல், இப்போது என்னை எல்லோரும் சந்தேகப்படும் நிலைக்குத்தள்ளியிருக்கிறீர்கள்.இதற்கு நியாயம் செய்யவேண்டும் என்று உங்களுக்கு த்தெரியவில்லையா?ஒரு அப்பாவி மனிதனின் மீது உங்களுடைய பொறுப்பற்ற முகநூல் பாய்ச்சல் மூலம் சேறு வீசப்படுகின்றது என்பது உங்களுக்குப் புரியவில்லையா?உங்களுடைய Rodiya சமூகம் பற்றிய ஆய்வுகளை நிறுத்துங்கள்.அதனை விட சமூகத்தில் அநியாயமாக ஒருவனுக்கு அநியாயம் உங்களால் இழைக்கப்படுகிறது என்பது உங்களுக்கு புரிகிறதா?பதில் சொல்லுங்கள். நீங்கள் இப்போது அமசடக்கியாக இருக்கப்பழகாதீர்கள்  . முதலில் உங்களால் ஒருவர் மீது அநியாயம் இழைக்கப்படுகிறது   எனபது மிக மிக வெளிப்படையாக தெரிகின்றபோது நீங்கள் காக்கின்ற மெளனம் அசிங்கமாக இருக்கிறது.எழுத்து என்பது புனிதமான ஒன்று.
மீண்டும் மையைப் பூசுகின்றேன்!
இதெல்லாம் இப்போது பெரிய பிரச்னை இல்லை.இதற்கெல்லாம் அவசர-அவசியமாக like போடவேண்டியதில்லை. என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.
இனி என் பதில்...
இதில் உங்களுக்கு என்ன அநியாயம் நடந்தது... ஏன் நீங்கள் கொதிக்கிறீர்கள். ஏன் என்னோடு நேரடியாக இந்த வன்மம். //Rodiya சமூகம் , மகாவம்சம் என்பதெல்லாம் இப்போ பெரிய பிரச்சினை இல்லை.... Rodiya சமூகம் பற்றிய ஆய்வுகளை நிறுத்துங்கள்.// போன்ற ஆணைகளை நான் ஏன் ஏற்கவேண்டும். அந்தப் பணிகளுக்கு முன்னாள் இந்தக் கேள்விகள் எனக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. இப்படி நிறுத்த ஆணையிடும் அதிகாரியாக எப்போது ஆனீர்கள்? எனது பணிகளை கட்டுப்படுத்தும் அதிகாரி எவரும் இதுவரை இல்லை என்பதையும் சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.

உங்களை ஏன் எல்லோரும் சந்தேகப்படுகிறார்கள். நான் அதற்கு ஏன் பொறுப்பாக வேண்டும்? இதுவரை என்னோடு தனிப்பட தொடர்புகொண்டு விசாரித்த எவரிடமும் நான் எவரின் பெயரையும் குறிப்பிட்டதில்லை. அவரவர் அனுமானங்களுக்கு நான் ஏன் பொறுப்பாக வேண்டும். சம்பந்தப்பட்டவர்களுக்கு என் செய்தி போய் சேர வேண்டும் என்பது மட்டும் தான் எனது நோக்கம். யாரையும் காயப்படுத்துவது அம்பலப்படுத்துவது எனது நோக்கம் இல்லை. அதனால் தான் முதல் பதிவிலேயே "யார் என்று கேட்காதீர்கள்" என்று பதிவுசெய்தேன். நான் கட்டாயம் பெயரை சொல்லியாகவேண்டும் என்றும் அதை இப்போதே சொல்லியாகவேண்டும் என்கிற சட்டம்பித்தனங்களுக்கு நான் பலியாகத் தேவையில்லை என்கிற தெளிவில் இருக்கிறேன்.

அவரவர் இடையில் வந்து அவரவர் அரசியலை செய்துவிட்டுப் போவார்கள். அந்த வம்புக்குள் வீணாக எனது உழைப்பையும், சக்தியையும் நேரத்தையும் செலவிட நான் தயாரில்லை. எனவே தான் அந்த சட்டம்பிகள் தமது பதிவை இட்டு அதற்கு கூட்டொப்பாறி செய்வதற்காக பலரையும் tag செய்த போதும் நான் அவை எனது பார்வைக்கு கிட்ட கூட வரக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தேன். அவை நேரடியாக எனது பெயரைப் பயன்படுத்தி அவதூறு செய்யும் கைங்கரியம். அந்தக் "கூட்டு" ஏன் இப்படி செய்கிறது என்பதை நான் தெளிவாக அறிந்தே வைத்திருக்கிறேன். அவர்களுக்கான பதிலை எப்படி, எந்த நேரத்தில் முன்வைக்கவேண்டும் என்பதை நான் தான் தீர்மானிக்க வேண்டும். அந்த எனது தெரிவை வேறு எவருக்கும் தாரை வார்த்துவிடவில்லை.

இதுவரை நேரடியாக தொடர்பு கொண்டு விசாரித்த எவரிடமும் நான் பெயரைக் குறிப்பிட மறுத்தேன். ஏன் மறுத்தேன் என்பதற்கு எனக்கான சுய தெளிவு உண்டு. அந்த எவருமே என்னை நிர்பந்திக்கவில்லை. நாகரிகமாக நிறுத்திக்கொண்டார்கள். அத்தோழர்களில் பலர் இவற்றுக்கெல்லாம் பதில் அளித்து உங்களை விரயப்படுத்திக்கொள்ளாதீர்கள் என்றே எனக்கு ஆலோசனையும் வழங்கினார்கள். நானும் அதையே பின்பற்றிவருவதாக அவர்களுக்கு பதிலளித்தேன்.

நான் எவருக்கு சேறு பூசினேன்?  யாருக்கு அநியாயம் இழைத்தேன்? இழைக்கப்பட்டவர் வந்து என்னிடம் கேள்வி கேட்கட்டும்?

//அசிங்கமாக இருக்கிறது.எழுத்து என்பது புனிதமான ஒன்று.//  என்று கூறும் நித்தியிடம் நான் ஒன்றைக் கேட்கிறேன். “Rodiya சமூகம் , மகாவம்சம் என்பதெல்லாம் இப்போ பெரிய பிரச்சினை இல்லை.... Rodiya சமூகம் பற்றிய ஆய்வுகளை நிறுத்துங்கள்.” என்று நீங்கள் சொல்வது அசிங்கமா? ஒருவரை நேரடியாக பெயர் கூறி அம்பலப்படுத்தாமல், காயப்படுத்தாமல் நான் கேள்வி கேட்டது அசிங்கமா?

இன்னொருவர் எதை எழுதவேண்டும் எதை எழுதக் கூடாது என்பதை கட்டளையிடுவது அசிங்கமா? வம்புக்கு போகாமல் அமைதிகாப்பது அசிங்கமா?

நித்தி! “எழுத்து என்பது புனிதமான ஒன்று.” அல்லவா.

மே 10 ஆம் திகதி நான் முகநூலில் பதிவு செய்த பதிவு

புலமைத்துவ செருக்கில்லா பேராசிரியர் சிவத்தம்பி அவர்களிடம் லண்டன் திறனாய்வாளர் கற்றுக்கொள்ள வேண்டியவை.


இன்று பேராசிரியர் சிவத்தம்பி அவர்களின் பிறந்த நாள்

“புதிய தலைமுறை எங்கள் தோள்களில் ஏறி நின்று உலகத்தைப் பார்க்கும்”

என்றார் சிவத்தம்பி சேர். அந்தளவு அவர் தனக்கடுத்த தலைமுறையை உருவாக்குவதில் பேரவா கொண்டவர். அவரிடம் நாங்கள் ஒரு விடயத்தை அறிவதற்காக சென்று சந்தித்தால் அவர் இன்னும் பல கதவுகளையும் எமக்கு திறந்து காட்டி வெளிச்சங்களுக்கு வழிவிடுவார்.

நான் எழுதும் எழுத்து சிங்களத்தில் இருந்து பிரதிபண்ணியவை என்று லண்டனில் உள்ள ஒரு திறனாய்வாளர் பரவலாக புறம்கூறித்திரிவதாக அறிந்தேன். சுருக்கமாக அவருக்கு சொல்ல வேண்டியது என்னவென்றால்
  • என்னை நன்றாக அறிந்தவர் அவர். உரிமையுடன் அந்தக் கேள்வியை எழுப்புவதற்கு தடையாக எமக்கிடையில் எந்த இடைவெளியும் கிடையாதே. அதை என்னிடமே நேரடியாக வினவியிருக்கலாம். அதை செய்யாத நிலையில் அவரின் இழித்தனமான சிறுமை என்றே நான் இனி அவரைக் கணிக்க முடியும்.
  • இதுவரை நான் எழுதியதில் ஒரு கட்டுரையையாவது அது சிங்களக் கட்டுரையின் “கொப்பி” என்று உறுதிபடுத்தினால் நான் இனி எழுதுவதை நிறுத்திவிடுவேன். எனவே அவரின் முதுகெலும்புக்கு இதை ஒரு சவாலாக எடுத்துக்கொள்ளலாம்.
  • சிங்கள மொழியறிவு எனது எழுத்துக்களுக்கு ஒரு உந்துதல் என்பதை நான் சகல இடங்களிலும் பகிரங்கமாகவே சொல்லித் திரிவதன் மூலம் ஏனைய எழுத்தாளர்களும் அம்மொழியைக் கற்று தமது ஆய்வுகளை விரிக்கவைக்கவே விரும்புகிறேன்.
  • சிங்கள படைப்புகள் என்னை சில சந்தர்ப்பங்களில் தமிழில் எழுதுவதற்கான தலைப்புகளையும் திட்டங்களையும், தூண்டல்களையும், ஆதாரங்களையும் தந்திருக்கின்றன என்பது உண்மை. ஆனால் ஒருபோதும் எந்தக் கட்டுரையும் பிரதிசெய்வதாக இருந்ததில்லை.
  • பெரும்பாலான எனது ஆய்வுக் கட்டுரைகளுக்கு எங்கெங்கிருந்தெல்லாம் ஆதாரங்களைப் பெற்றிருக்கிறேன் என்பதற்கான அடிக்குறிப்புகளையும், இறுதிக்குறிப்புகளையும் (Footnote & Endnote) தந்தே இருக்கிறேன். அக்கட்டுரைகளின் ஆய்வுப் பெறுமதியை அது பறைசாற்றும் என்பதோடு அவை ஏனைய ஆய்வாளர்களுக்கும் அதனை விரிக்க உதவும். அந்த ஆய்வு நெறியுடன் அணுகுகையில் இவர் மட்டும் எங்கிருந்து இதைக் கண்டு பிடித்திருக்கிறார் என்பதை அறிய விரும்புகிறேன்.
  • நான் நடத்தும் நமதுமலையகம் இணையத்தளத்தில் கூட இதுவரை சகல கட்டுரைகளும் எங்கெங்கு இருந்து பெறப்பட்டவை என்பதை நன்றியுடன் ஆதாரம் கொடுப்பது ஒரு ஊடக அறவொழுக்கமாகவே கடைபிடித்துவருகிறேன். அப்படி இருக்கும் போது இந்த அபாண்டத்தை அவர் சொல்லித் திரிவதன் உள்நோக்கத்தை அறிந்துகொள்ள விரும்புகிறேன்.
தயவு செய்து யாரென்று வினவாதீர்கள்? இப்படி ஒரு சந்தேகம் என் குறித்து எவருக்கு வந்தாலும் அந்த சந்தேகத்துக்கான பதிலாக இது இருக்கட்டும் என்பதற்காகவும் இந்தக் குறிப்பை பதிவு செய்கிறேன். கூடவே சம்பந்தப்பட்டவர் என்னை சில வருடங்களாக அணுகும் விதத்தில் எனக்கு இருந்த சந்தேகத்தை உறுதிசெய்துகொண்டேன் என்கிற செய்தியை அறிவிப்பதற்காக்கவுமே இந்தப் பதிவு.

எனவே தான் சொல்கிறேன். “புதியதலைமுறை எங்கள் தோள்களில் ஏறி நின்று உலகத்தைப் பார்க்கும்” என்று புதியவர்களை உருவாக்கிய பேராசியர் சிவத்தம்பி போன்றோர் எங்கே. இந்த சின்னத்தனமான காழ்ப்பு ஆசாமி எங்கே.
Share this post :

+ comments + 5 comments

2:43 PM

சட்டம்பிகளே !தூர விலகுங்கள் ! என்ற சரவணனின் கட்டுரையைப்பார்த்தேன்.என் மீது வீணான சந்தேகங்கள் எழுப்பப்பட்டுவருகின்றன , இந்த கட்டுரைகளை எழுவதை இப்போது நிறுத்திவைத்துவிட்டு, எனக்கு முதலில் பதில் சொல்லுங்கள்,என்று நான் கேட்டதை திசை திருப்பி, ஏதோ உங்கள் Rodia சமூகம், மகாவம்சம் பற்றிய ஆராய்ச்சியையே நிறுத்திவிடுங்கள், என்னென்ன பற்றி நீங்கள் ஆராயவேண்டும் என்று நான் லிஸ்ட் போட்டுத்தருகிறேன் என்று நான் சொன்ன மாதிரி பெரிய build up கொடுத்து கட்டுரை எழுதி, மிகப்பெரிய சட்டம்பி மார்களின் தடைகளை எல்லாம் மீறி நீங்கள் பயணம் செய்துகொண்டிருப்பதான தளுக்கு காட்டப்பார்த்திருக்கிறீர்கள்.என் மீது ஒரு சிறிய அன்பு இருந்திருந்தால், என் மீது இப்படி ஐயங்கள் எழுகின்றன என்று நான் உங்களுக்கு கூறியபோது , நான் உங்களை சொல்லவில்லை என்று சொல்லியிருந்தால் கூட நான் சமாதானம் அடைந்திருப்பேன்.உங்கள் மீது ஏன் எல்லோரும் சந்தேகப்படுகிறார்கள்?அதற்கு நான் ஏன் பொறுப்புக்கூறவேண்டும் என்று கேட்கிறீர்கள்? பிரச்னையை எழுப்பியவரே நீங்கள்தான்.அவ்வாறு சொன்னவர் யார் என்று சொல்ல நெஞ்சுரம் இல்லாமல் , அதை சொல்ல ஒரு வேளை வருமாம், அந்தக்காலம் வரும் நேரம்வரை காத்திரு ராசா, எப்போது சொல்லவேண்டும் என்பதை நானே தீர்மானிப்பேன் என்றெல்லாம் சவுண்ட் விடுவது அவசியமில்லாதது. என்னால் ஒருவர் மீது வீண் பழி ஏற்படுமானால், அதனை தீர்ப்பது என் முன்னால் உள்ள முதல் தார்மீகப்பிரச்னை அது.அதனை விட எனக்கு என் எழுத்து, ஆராய்ச்சி, கத்தரிக்காய் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமானது.என்னால் ஒருவர் மீது பழி நேர்கிறது என்றால், அதைத்துடைக்கும் மாண்பு எனக்குப்பெரியது.மனிதனை மதிக்கும் சால்பு அது.எனக்கு என்ன வந்தது என்று அது கேட்காது.நான் ஆராய்ச்சி செய்யப்போகிறேன் என்று சொல்லாது.எனக்கு பதில் சொல் என்று என்னைக்கேட்க நீ யார் என்று அது கேட்காது.அந்த உயர் தார்மீகநெறியினை நம்புபவன் நான்.நீங்கள் லண்டனில் உள்ள ஒருவர் என்று சொல்லப்போக, உங்களுக்கு இப்படியெல்லாம் பதில் எழுதிக்கொண்டிருக்கும் அவலம் நேர்ந்திருக்கிறது.லண்டன் என்று சொல்லத்தெரிந்தவருக்கு எந்த county என்றும் சொல்லியிருந்தால் கொஞ்சம் வசதியாய் போயிருக்கும்.
Rodiya சமூகம், மகாவம்சம் என்பதெல்லாம் இப்போ பெரிய பிரச்னை இல்லை.முதலில் என் மீது வந்துள்ள பழி யைத்துடையுங்கள் என்று கேட்டதை , ஏதோ இவர் ஆராய்ச்சியையே நிறுத்தச்சொன்னமாதிரியும் , சட்டம்பித்தனம் பண்ண வந்து விட்டமாதிரியும் பண்ணிய பில்டப் இருக்கிறதே!அபாரம்.Goebbels உங்களிடம் பிச்சை வாங்கவேண்டும்.
'மீண்டும் மையைப்பூசுகிறேன்' என்று ஒரு முகநூல் குறிப்பிற்கு சரவணன் like போட்டிருக்கிறார்.அந்த லைக் இப்போது பெரிய பிரச்னை இல்லை , முதலில் எனக்கு பதிலை சொல்லுங்கள் என்றும் நான் கேட்டிருக்கிறேன்.அவ்வளவுதான்.இப்போதைக்கு இதை எல்லாம் ஒரு பக்கம் வைத்துவிட்டு எனக்கு பதில் சொல்லுங்கள் என்பதுதான் சாரம். இதை எப்படி எல்லாம் விஸ்தரித்து கதைபண்ணலாம் என்பதற்கு சரவணனின் பதிவு நல்ல உதாரணம்.எப்படி- சட்டம்பிகளே தூர விலகுங்கள்.அடடா, இயேசுவின் வாசகம் மாதிரி இருக்கிறது சமத்து! .
கீழே வருவது சரவணனுக்கு நான் இட்ட பதிவு.
சரவணன், என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள்?Rodiya சமூகம் , மகாவம்சம் என்பதெல்லாம் இப்போ பெரிய பிரச்னை இல்லை.என் மீது அநியாயமான ஐயங்கள் எழுப்பப்பட்டு வருகின்றன.உங்களுக்கு இதில் எந்த moral பிரச்னையும் இல்லையா?நீங்கள் யாரையோ நினைத்துக்கொண்டு எழுதப்போய், உங்களுக்கு ஒழுங்காய் எழுதத்தெரியாமல், இப்போது என்னை எல்லோரும் சந்தேகப்படும் நிலைக்குத்தள்ளியிருக்கிறீர்கள்.இதற்கு நியாயம் செய்யவேண்டும் என்று உங்களுக்கு த்தெரியவில்லையா?ஒரு அப்பாவி மனிதனின் மீது உங்களுடைய பொறுப்பற்ற முகநூல் பாய்ச்சல் மூலம் சேறு வீசப்படுகின்றது என்பது உங்களுக்குப்புரியவில்லையா?உங்களுடைய Rodiya சமூகம் பற்றிய ஆய்வுகளை நிறுத்துங்கள்.அதனை விட சமூகத்தில் அநியாயமாக ஒருவனுக்கு அநியாயம் உங்களால் இழைக்கப்படுகிறது என்பது உங்களுக்கு புரிகிறதா?பதில் சொல்லுங்கள். நீங்கள் இப்போது அமசடக்கியாக இருக்கப்பழகாதீர்கள் . முதலில் உங்களால் ஒருவர் மீது அநியாயம் இழைக்கப்படுகிறது எனபது மிக மிக வெளிப்படையாக தெரிகின்றபோது நீங்கள் காக்கின்ற மெளனம் அசிங்கமாக இருக்கிறது.எழுத்து என்பது புனிதமான ஒன்று.
மீண்டும் மையைப் பூசுகின்றேன்!(இது ஒரு முகநூல் குறிப்பு)
இதெல்லாம் இப்போது பெரிய பிரச்னை இல்லை.இதற்கெல்லாம் அவசர-அவசியமாக like போடவேண்டியதில்லை.என்னுடைய கேள்விக்கு பதில் சொல்லுங்கள்.

2:44 PM

Enter my name in the comment I made before.
Nithianandan

3:15 PM

முதலில் அந்த "திறனாய்வாளர்" யார் என்பார்கள். சொல்லியே ஆகவேண்டும் என்று சட்டம்பித்தனம் பண்ணுவார்கள். சொல்லிவிட்டால் கொஞ்சநாளைக்கு அதைவைத்து ஆளாளுக்கு ஓட்டுவார்கள். அதோடு விடுவார்களா? அப்படி சொன்னது யார் என்றும் சொல்லித்தான் ஆகவேண்டும் என்பார்கள். அதை வைத்து அடுத்த சில வாரங்களுக்கு ஓட்டுவார்கள். எனக்கு இவர்களை Entertain பண்ண நேரத்தையும், சக்தியையும், உழைப்பையும் செலுத்தமுடியாது. ஏற்கெனவே சொன்னதைப் போல எனது நோக்கம் சம்பந்தப்பட்டவரை அம்பலப்படுத்துவதோ, காயப்படுத்துவதோ அல்ல. அவருக்கும் அதே கேள்வி எழுகிற மற்றவர்களுக்கும் எனது பதிலைத் தெரியப்படுத்துவதே. இதற்குள் ஆளாளுக்கு வந்து அது நானா, நானில்லையா என்கிற குடைச்சல் எதற்கு. நிர்ப்பந்தம் எதற்கு.

3:15 PM

மீண்டும் நித்தியாநாதன் தனக்குத் தானே லண்டனில் உள்ள ஒரே ஒரு திறனாய்வாளர் என்கிற தினாவெட்டு பில்டப்பின் விளைவாக ஒரு பதிவை இட்டிருப்பதைக் காண முடிகிறது. //Rodiya சமூகம் , மகாவம்சம் என்பதெல்லாம் இப்போ பெரிய பிரச்சினை இல்லை.... Rodiya சமூகம் பற்றிய ஆய்வுகளை நிறுத்துங்கள்.// என்றெல்லாம் நானா சொன்னேன். அவரின் அழிச்சாட்டியத்துக்கு அவராலேயே பொறுப்பு கூற முடியவில்லை. மாறாக இப்போது வேறு பக்கம் தளுக்கு காட்டி திசை திருப்ப முயல்வதை அவதானிக்க முடிகிறது. நான் அவரைச சொன்னதாக அவரே ஒரு முடிவை எடுத்துக்கொண்டு அவரே அவருக்கு முடியையும் சூட்டிக்கொண்டு நான் அவருக்கு கேட்கும் போது பதில் அளிக்கவேண்டுமாம். இல்லையென்றால் நித்தியானந்த ராசா சவுண்டு விட்டு அழிச்சாட்டியம் பண்ணுவாராம். அடச்சே மனுசனின் பாணியிலேயே வாயில வருது. மீண்டும் மீண்டும் அநியாயம் இழைத்துவிட்டேன் என்கிற பில்டப்புக்கு திருப்பியும் நான் கேட்பது நான் எவருக்கு சேறு பூசினேன்? யாருக்கு அநியாயம் இழைத்தேன்? இழைக்கப்பட்டவர் வந்து என்னிடம் கேள்வி கேட்கட்டும்? உங்களுக்கேன் எரிகிறது.

5:15 PM

நான் விவாதத்தை தொடக்கவில்லை. கருத்தை உரியவருக்கு போய் சேருவதற்காக முன்வைத்திருக்கிறேன். அதை விவாதமாகவும் விதண்டாவாதமாகவும் கொண்டிழுப்பவர் யார்?அவரவர் தனக்குள் ஏற்படுத்திக்கொள்ளும் சந்தேகத்துக்கு நான் எப்படி பொறுப்பாக முடியும் என்று தான் நானும் கேட்கிறேன். என்னிடம் கேள்வி கேட்ட நூற்றுக்கணக்கானோருக்கு எப்படி நான் பதில் தரமுடியாது. என்றேனோ அதையே தான் நித்திக்கும் அளித்திருக்கிறேன். அதையே தான் முதல் பதிவிலும் கூறியிருந்தேன். எதை சொல்லவேண்டும், எப்படி சொல்லவேண்டும், எப்போது சொல்ல வேண்டும் என்பது எனது உரிமை என்பதையும், மற்றவர்கள் திணித்து நிர்பந்தித்து சாதிக்க முடியாது என்கிறேன்.


அதற்கு “Rodiya சமூகம் , மகாவம்சம் என்பதெல்லாம் இப்போ பெரிய பிரச்சினை இல்லை.... Rodiya சமூகம் பற்றிய ஆய்வுகளை நிறுத்துங்கள்.” எனக்கு பதில் சொல் என்கிறார். "அதனை விட எனக்கு என் எழுத்து, ஆராய்ச்சி, கத்தரிக்காய் என்பதெல்லாம் இரண்டாம் பட்சமானது." என்று கேலி செய்கிறார். இது தான் ஜனநாயகமா? இது தான் நீங்கள் பேசும் மனிதமா? இது தான் மனித உரிமையா? என்று கேட்கிறேன்.


அதற்கு மீண்டும் ஆயிரம் தடவை கூறுவேன். "யார்” என்கிற கேள்விக்கு பதில் அளிக்க வேண்டிய தேவை எனக்கு இல்லை. எனது நோக்கம் சம்பந்தப்பட்டவரை அம்பலப்படுத்துவதோ, காயப்படுத்துவதோ அல்ல. சம்பந்தப்பட்டருக்கும், அதே கேள்வி எழுகிற மற்றவர்களுக்கும் எனது பதிலைத் தெரியப்படுத்துவதே. இதற்குள் ஆளாளுக்கு வந்து அது நானா, நானில்லையா என்கிற குடைச்சல் எதற்கு. நிர்ப்பந்தம் எதற்கு...."

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates