பாலியல் வதை முகாம் நடத்தியது உள்ளிட்ட பல்வேறு போர்க்குற்றச்சாட்டுக்கள் சுமத்தபட்டிருக்கும் எதிர்வரும் ஜனாதிபதி வேட்பாளராக களமறங்கவிருக்கும் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்க கலிபோர்னியா நீதிமன்றத்தில் தொடரப்பட்டிருக்கும் வழக்கு முறைப்பாட்டின் தமிழாக்கம் இது.
மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பாதுகாப்புச் செயலாளராக கடமையாற்றிய காலப்பகுதியில் அவரின் பணிப்புரையால் மேற்கொள்ளப்பட்டதும், அவரின் நிர்வாகத்தில் மேற்கொள்ளப்பட்டதுமான மோசகரமான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் அடங்கிய இந்த முறைப்பாட்டின் தமிழாக்கம் 107 பக்கங்களைக் கொண்டது.
இந்த வழக்கைத் தொடர்ந்திருக்கும் பத்துபேரில் மூன்று பெண்கள் உள்ளிட்ட எட்டு தமிழர்கள் அடங்குகின்றனர். எஞ்சிய இருவர் சிங்களவர்.
ஏற்கெனவே இந்தக் குற்றச்சாட்டுக்கள் புலிகளின் சதி என்றும், புகலிடத் தமிழர்களின் (டயஸ்போரா தமிழர்) சதி என்றும் கோத்தபாய பல கூட்டங்களில் தெரிவித்து வந்ததை நாமறிவோம்.
தரவிறக்கம் செய்ய
http://www.itjpsl.com/assets/press/Complete-set-of-Translation-of-Rajapaksa-amended-Complaint-copy.pdf#sinhala
தரவிறக்கம் செய்ய
http://www.itjpsl.com/assets/press/Complete-set-of-Translation-of-Rajapaksa-amended-Complaint-copy.pdf#sinhala
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...