பெருந்தோட்டத் தொழிற்துறையில் தொழிலாளர்களைப் போலாவே தோட்ட சேவையாளர்களும் பேசப்பட வேண்டிய குழுவினரே. இயக்;க ரீதியாக ஒருமுகப்படுத்தப்படாத காரணத்தினால் இவர்கள் உதிரிகளாக உரிமையற்று இருக்கின்றனர். தோட்டத் தொழிலாளர்களைப் போன்று தொழிற்சங்க கட்டமைப்பும் இவர்களிடத்து பலமானதாக இல்லை. குறிப்பாக பெரும்பான்மை இனத்தவரும் கணிசமான பெருந்தோட்ட சேவையாளர்களாக இருப்பதன் காரணமாக இவர்களிடையே ஒருங்கிணைப்பு இல்லை. அதேப்போல் அண்மைக்காலமாக பெரும்பான்மை இனத்தவர்களின் உள்வருகை அதி-கரித்துள்ளமையும் அவதானிக்க முடிகிறது. தோட்ட சேவையாளர் நலன்புரி சங்கங்கள் முன்னர் தோட்டங்களில் காணப்பட்டாலும் இன்றளவில் அவையும் அருகிவருகின்றமைக்கு சில காரணங்கள் இருப்பதனை பட்டியலிட முடியும். தோட்ட நிர்வாக ரீதியாக இவர்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்.
மலையக அரசியல் கட்சிகளை அடிப்படையாகக் கொண்ட தொழிற்சங்கங்கள் பல தோட்ட சேவையாளர்களுக்காக உறங்கு நிலையில் உள்ளன. இத்தொழிற்சங்கங்களுக்கு இவர்கள் தொழிலாளர்களை போலவே மாதாமாதம் சந்தா செலுத்துகின்றனர். எனினும் இவர்களுக்கான நலன்புரி திட்டமென்று எதுவும் இதுவரை முன்மொழியப்பட்டதாக தெரியவில்லை. இவர்கள் நி-றுவனமயப்படுத்தப்படாத காரணத்தினால் தோட்ட மட்டத்திலும் ஒருங்கிணையை முடியாத அசாத்திய நிலை காணப்படுகின்றது.
குறிப்பாக பயிற்சி நிலைக்கு மலையக இளைஞர் யுவதிகளை இணைத்துக்கொள்ளும் தோட்ட நிர்வாகங்கள் அதிகமாக உழைப்;;பை உறிஞ்சிவிட்டு தொடர்ச்சியாக அவர்களை பயிலுனர்களாகவே வைத்திருக்கின்றன. வெளிக்கள உத்தியோகத்தர், தொழிற்சாலை மேற்பார்வையாளர் அலுவலக உதவியாளர்கள், சாரதிகள் மற்றும் சிறுவர் நிலைய பராமரிப்பாளர்கள் என்றவாறான தொழில் வகைப்பாட்டில் இவர்கள் பணிக்கு இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். எனினும் அவர்கள் தொழில் தேர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கோ பதவிநிலைகளை தரமுயர்த்துவதற்கோ நிர்வாகங்கள் பங்களிப்புச் செய்வது ஒப்பீட்டளவில் குறைவாகவே உள்ளது.
அண்மைக்காலமாக வெளிமாவட்டங்கள் மற்றும் நகரப்பகுதியில் இருந்து பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் தோட்ட சேவையாளர்களாக உள்வாங்கப்படுகின்றனர். சாதாரண தேர்ச்சியுடன் இணைத்துக்
கொள்ளப்படும் இவர்கள் சிறிது காலத்தில் பதவி உயர்வுகளையும், சலுகைக-ளையும் பெற்றுக் கொள்கின்றனர். தோட்ட முகாமைத்துவத்துக்கு நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் மற்றும் பரிந்துரைகள் மூலம் அறிமுகமாகி வருகின்றவர்களை நிர்வாகங்கள் இணைத்துக் கொள்கின்றன. அவர்களுக்கு மொழி தெரியும் போன்ற அற்ப காரணங்களுக்காக உயர்நிலை பதவிகளை வழங்குகின்றனர். விடுதி வசதி, போக்குவரத்து வசதி, உதவியாளர்கள் மற்றும் அவர்களின் அன்றாட பணிகளை நிறைவேற்ற தோட்டத்தில் பணியாளர்களையும் நிர்வாகங்கள் வழங்குகின்றன.
விவசாயம் செய்தல் விறகு பிளத்தல் பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் செல்லல் கால்நடைகளை பராமரித்தல் போன்ற பல்வேறு பணிகளுக்கு தோட்ட கணக்கில் வேலையாட்கள் வழங்கப்படுகின்றது. இவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கலாதலால் தொழிலாளர்களும் சிறுபான்மை தோட்ட சேவையாளர்களும் முறையிட முடியாமல் தவிக்கின்றனர்.
பெருந்தோட்டத்தில் அனைத்து தொழில் பிரிவிலும் பெரும்பான்மை இனத்தவர்கள் உயர்நிலை பதவிகளில் இருக்கின்றனர். எம் இளைஞர் யுவ-திகள் கீழ்நிலை ஊழியர்களாகவும் பயிற்சி நிலையிலும் தொடர்ந்து இருத்தப்படுகின்றனர். பெரும்பான்மை இனத்தவர்கள் செய்யும் தவறுகளுக்கு இவர்கள் பலிகடாவாக
ஆக்கப்படும் சந்தர்ப்பங்களும் ஏற்படுகின்றன. குறிப்பாக சாரதிகள்வெளிக்கள உத்தியோகத்தர்கள் போன்ற ரீதியில் இவர்கள் குறைவான சம்பளத்தில் உழைப்பை உறிஞ்சுகின்றனர்.
பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சு மூலம் இவர்களுக்கான தொழில் பாதுகாப்பு, பயிற்சி, ஊதியம் போன்றவற்றை முறைமைப்படுத்த வேண்டும். அரசியல் ரீதியாகவோ பெருந்தோட்ட ரீதியாகவோ கட்டமைப்புசார் இயக்கம் எதுவும் இவர்களுக்கு இல்லாதக் காரணத்தினால் தொழில் அடிப்படையில் அனாi-தயாக்கப்பட்டுள்ளனர். தனியார் துறை ஊழியர்களுக்கு என்று அரசால் நிர்ணயிக்கப்படும் எவ்வித சட்டத்திட்டங்களும் இவர்களுக்கு ஏற்புடையதாகவோ அபிவிருத்தி அடைய பங்களிப்புச் செய்வதாகவோ இல்லை.
தோட்ட சேவையாளர்களுக்கான கூட்டு ஒப்பந்தம் ஒன்று கடந்த 2013 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் கைச்சாத்திட்டது. (Ceylon Estate Staffs Union - CESU) இதன்போது பல்வேறு விடயங்களுக்கு முதலாளிமார் சம்மேளத்துடன் இணக்கம் காணப்பட்டது. குறிப்பாக சம்பள உயர்வு, மூன்று வருடங்களுக்குள் மட்டுப்படுத்தப்பட்ட கொடுப்பனவு அதிகரிப்பு என்பவற்றுடன் ஓய்வுபெறும் வயதெல்லையை 58 இல் இருந்து 60 ஆக அதிகரிக்கவும் இணக்கம் காணப்பட்டது.
எனினும் அதற்கடுத்து வந்த ஆட்சி மாற்றம், பெருந்தோட்ட கம்பனிகள் என்பன தோட்ட சேவையாளர்களுக்கான நலன்புரி திட்டங்களில் ஆர்வம் காட்டவில்லை. கம்பனிகளின் நட்டத்தைக் காரணம் காட்டியே ஏமாற்றி வந்திருக்கின்றன. உரிமை சார்ந்து போராட்டங்களை மேற்கொண்டு சாதிப்பதற்கு அவர்கள் உதிரிகளாக சிதறிக்கிடந்து பயனில்லை. ஒருசிலர் முகாமைத்துவத்திற்கு விசுவாசமாக இருப்பதன் காரணமாக ஒருங்கிணைந்த வெற்றிகள் சாத்தியமற்று காணப்படுகின்றன.
தோட்ட சேவையாளர் சேமலாப சங்கம் (Ceylon Estate Staffs Union - CESU)சமீப காலத்தில் நிறுவப்பட்ட ஒரு நலன்புரி அமைப்பாகும். ஊழியர் சேமலாப நிதியத்திற்கு புறம்பாக இவ்வமைப்பில் ஊழியர்கள் தமது பங்களிப்பை வைப்புச் செய்வதன் மூலம் பல்வேறு சலுகைகளைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமானதாக அமைந்நது. வீட்டுக்கடன், கல்விக்கடன் போன்ற கடன்திட்டங்கள் மூலம் அவர்கள் நன்மையடையக்கூடிய வகையில் வசதிகள் காணப்பட்டன. எனினும் பங்களிப்பாளர்களின் குறைவு காரணமாக பெயரளவிலான சில கட்டங்களை மட்டுமே இன்றுவரை கடக்க முடிந்துள்ளது.
மலையகத்துக்கான வீட்டுத்திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தோட்ட சேவையாளர்களுக்கும் அவற்றில் இடமளிக்கப்பட வேண்டும். தொழிலிலிருந்து விலகியவுடன் தங்கும் விடுதிகள் அவர்கள் கையளிக்க வேண்டும் என்பது நியதி.
தோட்டம் தொழிலாளர்களைப் போலவே அவர்களும் இத்தொழிற்துறையை கட்டியெழுப்புவதில் கணிசமான பங்களிப்பைச் செய்துள்ளனர் என்பது உணரப்பட வேண்டும். எனவே அவர்களுக்கும் வீட்டுத்திட்டங்களில் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.
அரசியல், சமூக ரீதியாக அனாதையாக்கப்பட்டுள்ள இவர்களை இயக்க ரீதியாக ஒருங்கிணைக்கக்கூடிய வேலைத்திட்டங்கள் முன்மொழியப்பட்டு சாத்தியமாக்கப்பட வேண்டும். பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு பாரிய பொறுப்பு இவர்கள் விடயத்தில் இருக்கின்றது. இன்று பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க அமைச்சும் மலையக பிரதிநிதிகளுக்கு வழங்கப்பட்டு இருக்கின்ற சந்தர்ப்பத்தில் இதனை பேசுபொருளாக்க வேண்டும்.
தொழிற்சார் ஒழுக்க கோவையும், தொழிற் வகைப்பாடுகளுக்கு ஏற்ற சம்பளத்திட்டமும் கம்பனிகளால் முன்வைக்கப்பட வேண்டும். ஆட்சேர்ப்பின் போது தகைமை அடிப்படையில் முறைமைப்படுத்தப்பட்ட நியமம் கடைப்பிடிக்கப்பட வேண்டும். ட்ரஸ்ட் நிறுவனம் மனிதவள அபிவருத்தி சாரந்து தோட்ட சேவையாளர்கள் வலுவூட்டப்படுதலும் அவசியம். முறைசாரா ஒரு தொழிற்துறையாக தோட்ட சேவையாளர்கள் இன்றும் இருப்பது காலத்தின் அவலம். அதனை நிவர்த்திச் செய்ய வேலைத்திட்டம் அவசியம். காரணம் இவர்களும் வாக்களிக்கின்றனர். சந்தா செலுத்துகின்றனர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...