இஸ்லாமிய தீவிரவாத இயக்கமான ISIS இயக்கம் இலங்கையில் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதலுக்கு உரிமை கோரியிருக்கிறது. இந்தச் செய்தியை முதலில் சர்வதேச ரொய்ட்டர் செய்தி நிறுவனம் அமாக் AMAQ செய்தி நிறுவனத்தை ஆதாரம் காட்டி வெளியிட்டிருந்தது.
அமாக் (AMAQ NEWS AGENCY - IS) செய்தி நிறுவனமானது ISIS இயக்கத்தின் மறைமுக செய்தி நிறுவனமாக கருத்தப்படுகிறது. ISIS இயக்கம் பற்றிய செய்திகள், தகவல்களைப் பெறுவதற்கு இந்த அமாக் செய்திச் சேவையையே சர்வதேசம் முழுவதும் உன்னிப்பாக கவனித்து வருவது வழமை. ஏறத்தாழ அச்செய்திகள் மறைமுக உத்தியோகபூர்வ செய்திகளாக நம்பப்படுகிறது.
அவர்கள் இன்று வெளியிட்டிருக்கிற செய்தியில் இலங்கையில் 310 பேருக்கும் மேற்பட்டவர்களை பலியெடுத்து 600பேருக்கும் மேற்பட்டவர்களை படுகாயமடையச்செய்த கோர வெடிகுண்டுப் படுகொலைகளை தாமே மேற்கொண்டதாக உரிமை கோரியிருக்கிறார்கள். இது ஒரு உடனடி அறிவிப்பு என்கிற விததத்தில் மேலதிக விபரங்கள் வெளியிடப்படாத போதும் விரைவில் மேலதிக விளக்கங்களை தருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேவாலய குண்டு வெடிப்புகள்கொச்சிக்கடை - அபு ஹம்சா, நீர்கொழும்பு - அபி கலீல், மட்டக்களப்பு - அபு முஹம்மத்,இறுதியாக சிரியாவில் நடந்துகொண்டிருக்கும் போரில் சுருங்கிக்கொண்டிருந்த ISIS இயக்கத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் அவர்களை பலவீனப்படுத்தியிருந்தாலும் அவர்களை முழுமையாக அழித்துவிட முடியாது என்று சர்வதேச பாதுகாப்பு நிபுணர்கள் பலரும் ஒத்துக் கொள்கின்றனர். காரணம் அவர்கள் மரபு இராணுவத்தையோ, கட்டுப்பாட்டுப் பிரதேசத்தையோ நம்பியிருக்கும் இயக்கமல்ல. மாறாக சர்வதேச அளவில் சித்தாந்த ரீதியில் இஸ்லாமியர்கள் மத்தியில் மத அடிப்படைவாத கருத்துக்களை ஆழ ஊன்றவைத்திருக்கிறது. அவர்களின் sleeping cells உலகளாவிய ரீதியில் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு தயார் நிலையிலேயே இருக்கின்றன என்பதே சர்வதேச கணிப்பு.
ஹோட்டல்கள்அபு உபாய்தா (சஹாறான் ஹசீம்), அபு அல் பாரா, அபு முக்தார் ஆகியோர் ஷங்க்ரிலா, சினமன் கிராண்ட், கிங்க்ஸ்பரி
தெமட்டகொட பொலிஸ் சோதனையின்போது வெடிக்கவைத்து இறந்த கொலையாளி அபு அப்துல்லா
இலங்கை அரசாங்கமும் எடுத்த எடுப்பில் இந்த சம்பவத்தை ISIS இயக்கத்தை குற்றம் சுமத்துவதை தவித்து வந்தததையும் உள்ளூரில் "தேசிய தவ்ஜீத் ஜமாஅத்" இயக்கத்தையே குற்றம்சாட்டி வந்த நிலையில் இப்போது நேரடியாக ISIS இயக்கத்தின் திட்டமிடலின் பேரிலேயே "தேசிய தவ்ஜீத் ஜமாஅத்" இயக்கமும் இதில் தொடர்புபடுத்தப்பட்டிருக்கிறது என்று தெரியவருகிறது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...