ஒரு மக்களினத்தை அடையாளப்படுத்தும் மிக முக்கியமான ஈராக- மரபுரிமைகள், அமைகின்றன. அவ்வகையில் நீண்ட நெடிய பாரம்பரியமும் பண்பாடும் மொழியியல், அறிவியல், வாழ்வியல், வரலாறு கொண்ட தமிழினம் - சிந்துவெளி, வைகை சமவெளி, தாமிரபரனி சமவெளி, கீழனி ஆய்வுகள், எகிப்திய, வியட்னாம், லாவோ - கம்போடியா, பாலித்தீவுகள், சீனம், மலையாளம், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா என பரந்து விரிந்த குமரிக்கண்டத்தின் உயர்சிறப்புமிக்க நாகரிகமுடைய மக்களினம் என ஆய்வாளர்களால் மானிடவியல், தொல்லியல், மொழியியல் அறிஞர்களால் விஞ்ஞானபூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. தமிழ்மொழி உலகில் செம்மொழியாகவும், மூலச்சிறப்புமிக்க பழமைமிக்க வாழும் செம்மொழியாகவும் - மொழியியல் கருக்கொள்ளப்பட்டுள்ளது. நிப்பாசன முறைகள் கட்டிடக்கலை, ஓவியக்கலை, சிற்பக்கலை, மட்பாண்ட தொழில், நகர நாகரிகம், அரசாட்சி பொருள் வளம் கொண்ட துறைமுகங்கள் பாதைகள், குடியிருப்புகள், கோவில்கள், தொழில்துறைகள், வாணிபம் செழித்து வாழ்க! - மக்களினத்தின் மொழியும், இலக்கியங்களும் மிக புராதானமானதொரு - நாகரீகதை பரைசாற்றுகின்றன.
இத்தகைய பண்பாட்டு சிறப்புமிக்க பண்பாடும் வரலாறும் நாகரிகமும் கொண்ட மக்களினத்தின் ஒரு பிரிவினராக மலையக தமிழர்கள் அமைகின்றார்கள். 18-ம் நூற்றாண்டின் 1818-2018 வரையிலான இரு நாற்றாண்டுகளில் பிரித்தானியர் ஆட்சியில் இலங்கையில் குடியேறி, துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள், விதிகள், கொக்கோ கோப்பி, தேயிலை, இறப்பர், தென்னம் தோட்டங்களை உருவாக்கி இலங்கையின் அரசியல், பொருளாதார, சமூக தோற்றப்பாட்டுக்கு, புதிய முகவரியை கொடுத்தவர்கள் இந்திய வம்சாவளியினரான இன்றைய - மலையகத் தமிழர்கள்.
மலையகத்தில் செறிவாகவும் நாட்டின் சகல மாவட்டங்களிலும் - குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலும் வாழும் 1.5 மில்லியன் சனத்தொகை கொண்ட மலையக தமிழராகிய எமது மொழி, பண்பாடு, வழக்காறுகள். வழிபாடுகள். தொன்மங்கள், ஆடல், பாடல், இசை. நடன, நாடக கோலங்கள், நம்பிக்கைகள், பேச்சு வழக்குகள், உணவு பழக்கம், உடண வகைகள், ஆடைகள், ஆபரணங்கள், பாவனைப் பொருட்கள், விளையாட்டுக்கள், பாடுபொருள். தொழில்கள், தொழில்சார் கருவிகள், வாழ்வு முறைகள், வழிபாட்டு முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், வர்க்க நிலைபட்ட வாழ்வியல், வழிபாட்டியல், பண்பாட்டியல் கோலங்கள் இன. வர்க்க, தேசிய உணர்வுகள், கலை இலக்கிய அமைப்பாக்க, செயலாக்க முறைகள், போராட்ட வழிமுறைகள், ஆக்க இலக்கிய படைப்பாகக பதிவிடல் முறைகள், கற்கள், செதுக்கல்கள், மர வேலைகள், கட்டுமானங்கள், காதல், நோய், பிணிகள், மருத்துவ முறைகள். ' என நாடு செல்லும் மலையக தமிழர்களின் மரபுரிமைகளை பாதுகாத்து பேணவும் அடுத்த தலைமுறைக்கு எமது பாரம்பரியங்களை கொண்டு செல்லவும் முன்வருமாறு மலையக தமிழர் மரபுரிமை பாதுகாப்பு ஆண்டில் அறைகூவல் விடுக்கின்றோம்.
மலையக தமிழர்களின் மரபுரிமைகளை பாதுகாப்பு அமைப்பு,
மலையகம், இலங்கை .
பொன், பிரபாகரன் தலைவர் - 716095718கூ.தவச்செல்வன் பொதுச்செயலாளர் - 071328042114.01.2019
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...