மலையக தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்காக சகலரும் அணிதிரள்வோம் தோழர்களே!
2000ஆம் ஆண்டுக்குப் பின் மலையக அரசியலின் பேரம் பேசும் ஆற்றல் வெகுவாக பலவீனப்பட்டுள்ளது. அரசியல் விமர்சனங்களுக்கு அப்பால் தொண்டமான் காலத்தில் மலையக வாக்கு வங்கிக்கு இருந்த மரியாதையும், பலமும் அதன் பின்னர் இல்லை என்பது கசப்பான உண்மை.
ஈழப் போர் முடிவுக்கு வந்ததன் பின்னர் ஒட்டுமொத்த சிறுபான்மை இனங்களின் பேரம் பேசும் ஆற்றலும் பலவீனமடைந்துபோனது. பேரினவாத அரசு நினைத்ததை நிறைவேற்றும் ஆற்றலை தன்னளவில் அதிகரித்துக்கொண்டது.
ஆளும் வர்க்கம் முதலாளிகளின் நலன்களுக்காக சொந்த உழைக்கும் மக்களின் உரிமைகளைக் காவு கொடுப்பது நாளாந்தம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
தொழிலாளர்களின் பலத்தை நிரூபித்து ஆளும் வர்க்கத்திற்கு மீண்டும் நமது பலத்தைக் காட்ட ஒன்று திரள வேண்டியிருக்கிறது.
இன, மத, மொழி, சாதிய, கட்சி அரசியல் வேறுபாடின்றி பரஸ்பரம் தோள்கொடுத்து இதனை சாத்தியப்படுத்துவதற்கு அனைவரதும் ஒத்துழைப்பையும் ஒன்று குவிப்போம் தோழர்களே.
அணிதிரள்வோம், அணிவகுப்போம் தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளை வென்றெடுக்க ஒன்றுபடுவோம்.
நம்பிக்கைத் துரோகத்துக்கு எதிராக, ஒடுக்குமறைக்கு எதிராக, ஏமாற்றத்துக்கு எதிராக, காலங்கடத்துவதற்கு எதிராக ஒன்று திரள்வோம்.
எதிர்வரும் 24ஆம் திகதி புதன்கிழமை (விடுமுறை தினம்) காலை 10 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட இருக்கிறது.
எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காக முடிந்த வரை கறுப்பு நிறத்தில் அணிந்து வருமாறு கோருகிறோம்.
"நமது மலையகம்"
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...