Headlines News :
முகப்பு » , » "தினச்சம்பளமாக 1300 ரூபாவை கம்பனிகளால் கொடுக்க முடியும்!"

"தினச்சம்பளமாக 1300 ரூபாவை கம்பனிகளால் கொடுக்க முடியும்!"


பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் மாநாட்டில் தீர்மானம்

கம்பனிகளின் இலாபங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமைகளை நோக்கும்போது பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நாட்சம்பளத்தை உடனடியாக 1300 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் மக்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச் சம்பள அதிகரிப்பை வழங்கக்கூடிய நிலையில் கம்பனிகளின் நிதி நிலைமை இருக்கின்றமையும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் குறைந்தபட்ச அதிகரிப்பாக அதனை வழங்க வேண்டும் எனவும் இம்மாநாட்டில் தெரிவிக்கப்பட்டிருந்தது. அத்துடன் பெருந்தோட்ட தொழிற்துறையுடன் தொடர்புடைய மேலும் பல தீர்மானங்கள் குறித்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வலியுறுத்திய குறித்த மக்கள் மாநாடு கடந்த 13 ஆம் திகதி ஹட்டனிலுள்ள கிறிஸ்தவ தொழிலாளர் ஒத்துழைப்பு மண்டபத்தில் நடைபெற்றது. பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைக்காக உயர்நீத்த போராளிகளுக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் ஆரம்பமான இம்மாநாட்டிற்கு மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, மலையக சமூக நடவடிக்கை குழுவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் சட்டத்தரணி நேரு கருணாகரன், பெருந்தோட்ட உழைப்புரிமை சங்கத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி சு. விஜயகுமார், மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் நெல்சன் மோகன்ராஜ், பெருவிரல் கலை இலக்கிய இயக்கத்தின் அழைப்பாளர் சுதர்ம மகாராஜன், பொருளியலாளர் கி. ஆனந்தகுமார், கிறிஸ்தவ தொழிலாளர் சங்கத்தின் செயலாளர் பி. மோகன் சுப்பிரமணியம் ஆகியோர் தலைமை வகித்தனர்.

அறிமுக உரையை பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றிய அழைப்பாளர் சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார் நிகழ்த்தினார். பொருளியலாளர் ஆனந்தகுமார் 'பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பை வழங்க இயலாமை மற்றும் வெளிவாரி உற்பத்தி முறையில் உழைப்புச் சுரண்டல்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இந்த உரையின்போது பண வீக்கத்தின் காரணமாக பொருட்களின் விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ள போதும் அதற்கு சமாந்திரமாக பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள அதிகரிப்பு ஏற்படவில்லை என்பதை சுட்டிக்காட்டினார். அத்துடன் கம்பனிகளின் இலாப அதிகரிப்பு தேயிலை விலையின் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதை கம்பனிகளின் ஆண்டறிக்கைகள் மற்றும் மத்திய வங்கியின் ஆண்டறிக்கைகள் மூலம் வெளிப்படுத்தினார். மேலும் வெளியாள் உற்பத்தி முறை கம்பனிகளுக்கு பெற்றுக்குக் கொடுக்கும் அசாதாரணமான இலாபத்தையும் நாட் சம்பளம் மற்றும் வெளியாள் உற்பத்தி முறையில் கொடுக்கப்படும் கொடுப்பனவுகள் மற்றும் கழிவுகள் என்பவற்றை ஒப்பிட்டு எடுத்துரைத்தார்.

பெருந்தோட்ட உழைப்புரிமை ஒன்றியத்தின் அழைப்பாளர் சட்டத்தரணி சுகுமாரன் விஜயகுமார், 'பெருந்தோட்டக் கம்பனிகளின் கணக்கறிக்கைகளும் சம்பள உயர்வை மறுக்கும் பம்மாத்துக்களும்' என்ற தலைப்பில் உரையாற்றினார். கம்பனிகளின் கணக்கறிக்கைகளில் உண்மையான இலாபம் குறிப்பிடப்படுகிறதா என்ற சந்தேகம் இருக்கின்ற நிலையிலும் 2017ஆம் ஆண்டு 17 கம்பனிகளின் நிதி அறிக்கைகளை நோக்கும்போது அவை தேறிய இலாபமாக மொத்தமாக 4644 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாகவும் 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளில் 17 பெருந்தோட்டக் கம்பனிகளிடமிருந்து வருமான வரியாக அரசாங்கம் 2258 மில்லியன் ரூபாவை பெற்றுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

மேலும் தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் குறைந்துள்ளது என்ற வாதம் தொழிலாளர்களின் எண்ணிக்கை வீழ்ச்சி, பயிர் செய்யப்பட்டுள்ள நிலங்களின் வீழ்ச்சி, மீள் நடுகை மற்றும் புதிய நடுகை என்ற விடயங்கள் அனைத்தையும் உள்வாங்கி நோக்கும்போது, தவறானது என்ற முடிவுக்கே வரவேண்டியுள்ளது. மாறாக தொழிலாளர்களின் உற்பத்தித்திறன் அதிகரித்துள்ளமையே உண்மையாகும். எனவே, தோட்டத் தொழிலாளர்களுக்கு நாட் சம்பளத்தை 1300 ரூபாய் வரை அதிகரிக்கும் நிலையிலேயே கம்பனிகள் இருப்பதாக அவர் மேலும் கூறினார்.

மக்கள் ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆர். நெல்சன் மோகன்ராஜ், 'கூட்டு ஒப்பந்த பேரப் பேச்சும் தொழிற்சங்கங்களின் பங்கும்' என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். கூட்டு ஒப்பந்தத்தில் தொழிலாளர் சார்பாக கைச்சாத்திடும் தொழிற்சங்கங்கள் பொது உடன்பாட்டை தங்களுக்குள் எட்டுவதும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாத சங்கங்களுடன் இணைந்து தமது பலத்தை அதிகரித்துக் கொண்டு பேரப்பேச்சில் ஈடுபடுவதன் முக்கியத்துவம் பற்றியும் விளக்கினார். மலையகத்தில் கல்வி வீழ்ச்சியில், மாணவர்களின் போஷாக்கு பிரச்சினை, பெற்றோரின் வருமான குறைவு, ஓய்வின்மை என்பவை பாரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதையும் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

மக்கள் தொழிலாளர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா, 'தொழிலாளர்களின் நியாயமான சம்பள உயர்வை வென்றெடுப்பதில் மக்களின் வகிபாகமும் மாநாட்டின் நோக்கமும்' என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். தற்போதைய பொருளாதார சூழலில் நியாயமான நாட் சம்பளமாக குறைந்தது 1300 ரூபா வழங்கப்பட வேண்டும். அதுவே நியாயமான சம்பளமாக அமையும் என்றார். 1300 ரூபா நாட்சம்பளம் மனத் திருப்திக்காக முன்வைக்கப்படவில்லை, மாறாக விஞ்ஞானபூர்வமாக வந்தடைந்த முடிவாகும்.

இன்று தோட்டத் தொழிலாளர்களுக்கு வாழ்க்கைச் செலவு புள்ளிக்கு ஏற்ப வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு வழங்கப்படுவதில்லை.

தமக்கு விதிக்கப்பட்ட காலக் கெடுவுக்குள் தமது பெயர் கொண்ட கதிரையைத் தேடிக் கண்டு பிடித்ததோடு அதில் கம்பீரமாக அமர்ந்திருக்கும் திசாவையைக் கண்ட ஆங்கிலேயர் வியப்புற்றனர்.

குறிப்பிட்ட தினத்தில் கண்டி அரண்மனைவளாகத்தில் அமைந்துள்ள விஷ்ணு கோவிலில் பூசைகள் ஏற்பாடாகின. அஸ்கிரிய – மல்வத்தை பீடங்களின் பிக்குமார்களும் அங்கு பிரசன்னமாகினர். பெருந்தொகையான பொதுமக்கள் அன்றைய தினம் தேவாலய வளவில் நிரம்பினர்.

ஆங்கிலேய அதிகாரிகளும், சிப்பாய்களும், சிங்கள பிரபுக்களும், பிரதானிக்களும் பொதுமக்களும் தரையில் மண்டியிட்டும், தரையில் வீழ்ந்தும் வழிபாடுகளை மேற்கொண்டனர்.

அந்நிய ஆக்கிரமிப்பாளர்களினால் பௌத்த – இந்து மத வழிபாட்டுத்தலங்கள் கொள்ளையிடப்பட்டும், அவமதிக்கப்பட்டும் வந்த நிலை இச் சம்பவத்தோடு முடிவுக்கு வந்தது.

இச் சவாலையேற்று அங்கு வரும்போது ரத்வத்தை தமது போர்வாளோடு வந்தது; போட்டியில் தோல்விகாண நேர்ந்தால் அந்த அறைக்குள்ளேயே தமது வாளினால் தம்முயிரைப் போக்கிக் கொள்வதென்னும் திடசங்கற்பத்துடனேயாகும்.

அந்தணர்களின் வழித்தோன்றல்களாகிய ரத்வத்தை சந்ததியினர் இன்றும் மகாவிஷ்ணுவின் பக்தர்களாக காணப்படுகின்றனர். சுதேச ஆட்சிக்காலம் முதல் இவர்கள் அரசியலிலும் பொதுவாழ்விலும் குறிப்பிடத்தக்க பங்கு வகிப்பவர்களாகவும், கண்டி பிரதேசத்தில் தும்பறை மற்றும் மகாயாய பிரதேசத்திலும் சப்ரகமுவ மாகாணத்தில் பலாங்கொடை பிரதேசத்திலும், மாத்தளையில் உக்குவளையிலும், கலாவெவ பிரதேசத்திலும் பிரபுத்துவ குடும்பங்களாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

நன்றி - தினகரன்
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates