Headlines News :
முகப்பு » » தமிழ்த் தலைமைகளோடு பயணிக்க விரும்புகிறோம் : வடக்கு, கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியத்தின் தலைவர் நடராஜா

தமிழ்த் தலைமைகளோடு பயணிக்க விரும்புகிறோம் : வடக்கு, கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியத்தின் தலைவர் நடராஜா


அக்காலகட்டத்தில் இயக்கங்களின்பால் ஈர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி இளைஞர்கள் அதில் இணைந்தனர். போராளிகளாக தம்மை அடையாளப்படுத்தினர். ஆனால் இப்போதைய சூழ்நிலையில் அரசியல் போராளிகளாக வருவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என்றே கூற வேண்டியுள்ளது. 

பல்வேறு காலகட்டங்களில் இந்திய வம்சாவளி மக்களும் பின்னர் மலையகப்பகுதிகளில் குடியேறிய உழைக்கும் வர்க்கத்தினரும் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு புலச்சிதறலை மேற்கொண்டு அங்கு வாழ்ந்து வருகின்றனர். இவர்களை ஒரே குடையின் கீழ் கொண்டு வர வேண்டியது காலத்தின் தேவையாகும். மேலும் தற்போது தமிழர்தம் குரல்களாக விளங்கி வரும் வடக்கு கிழக்கு வாழ் தமிழ்த் தலைமைகளுடன் ஒன்றிணைந்தே எமது அரசியல் பயணத்தைத் தொடர்வதற்கும் எமது மக்களின் வாழ்வாதார உரிமைகளைப் பெற்றுக்கொள்வதற்கும் விரும்புகிறோம்.அதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை என்கிறார் வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியத்தின் தலைவர் நடராஜா. வடக்கு கிழக்கில் வாழ்ந்து வரும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் மற்றும் அவர்களின் பிரச்சினைகள் பற்றி வீரகேசரி வாரவெளியீட்டுக்கு அவர் வழங்கிய நேர்காணல் வருமாறு.

கேள்வி: வடக்கு கிழக்கு பகுதிகளில் எந்தளவு எண்ணிக்கையான இந்திய வம்சாவளி மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர்?

பதில்: அதிகளவில் வவுனியா மாவட்டத்திலேயே இச்சமூகத்தினர் வாழ்ந்து வருகின்றனர். இங்கு சுமார் 60 ஆயிரம் பேரும்,கிளிநொச்சி மாவட்டத்தில் 40 ஆயிரம் பேரும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுமார் 33 ஆயிரம் பேரும் மன்னார் மாவட்டத்தில் 20 ஆயிரம் வரையிலும் யாழ். மாவட்டத்தில் 10 ஆயிரம் என்ற அளவிலும் இம்மக்கள் செறிந்து வாழ்கின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் பல்வேறு காரணங்களுக்காக தமது வரலாற்று அடையாளங்களை மறைத்து வாழ்கின்றனர் என்பது வேதனையான விடயம்.

கேள்வி: எந்தக் காலகட்டங்களில் இவர்கள் இப்பகுதிகளில் குடியேறினார்கள்?

பதில்: தென்னிந்தியாவிலிருந்து உழைக் கும் வர்க்கமாக 1820 களில் வரும்போது மன்னார் மாவட்டத்திலேயே தங்கி விட்டவர்கள் பலர். அதற்குப் பின்னர் 1958,1977,1981 ஆகிய ஆண்டுகளில் இடம்பெற்ற தமிழர்களுக்கு எதிரான கலவரங்கள் மற்றும் 83 ஜூலை கலவரத்திலும் ஆயிரக்கணக்கானோர் இப்பகுதிகளில் வந்து குடியேறினர். எமது குடும்பத்தினர் 1972 களில் இங்கு வந்தனர். எனது தந்தையார் மஸ்கெலியாவை வசிப்பிடமாகக்கொண்டவர்.

கேள்வி: இங்கு வாழ்ந்து வரும் மக்கள் முகங்கொடுத்துள்ள பிரதான பிரச்சினை என்ன?

பதில்: வாழ்வாதார மற்றும் அரசியல் உரிமைகள் என்று இரண்டாக வகுக்கலாம். வாழ்வாதாரத்தைப்பொறுத்தவரை பெரும்பாலானோர் இன்னும் காணி உறுதியற்ற நிலங்களில் குடியிருப்புகளை அமைத்து வாழ்ந்து வருகின்றனர். அனைவரும் இவ்வாறு வாழ்ந்து வருகின்றனர் எனக்கூற முடியாது. 96 ஆம் ஆண்டளவில் போர்ச்சூழல் காரணமாக யாழ். மாவட்டத்திலிருந்து பலர் இங்கு வந்து குடியேறினர் அச்சந்தர்ப்பத்தில் இங்கு ஏற்கனவே வாழ்ந்து வந்த மக்களுக்கும், இவர்களுக்கும் உறுதிகள் வழங்கப்பட்டன. தொடர்ச்சியாக பிரதேச செயலகங்களை அணுகி எமது மக்கள் காணி உரித்துப் பற்றிக் கேட்டாலும் இழுபறி நிலை தொடர்கிறது.

கேள்வி: அரசியல் உரிமைகள் பற்றிக் கூறினீர்களே?

பதில்: நாம் வடக்கு கிழக்கு வாழ் தமிழ்த்தலைமைகளோடு இணைந்து அவர்களுக்கு ஆதரவளித்து தமிழ்த்தேசிய உணர்வோடும் சிந்தனைகளோடும் வாழத் தீர்மானித்து விட்ட சமூகம். கடந்த காலங்களில் அப்படியான சூழல் தான் இருந்தது. நாம் தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கே எமது ஆதரவுத்தளத்தை வழங்கி வருகிறோம் இனியும் அது தொடரும் என்பதில் ஐயமில்லை எனினும் சிற்சில சம்பவங்களாலும் ஒரு சிலரின் செயற்பாடுகளாலும் எம்மை தனித்து அடையாளப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 2016 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கரைச்சி –கிளிநொச்சி பிரதேச செயலகத்தால் வெளியிடப்பட்ட கரை எழில் என்ற நூலில் தமிழ்க்கவி என்று அழைக்கப்படும் ஒருவர் கிளிநொச்சியும் மலையகத்தமிழர்களும் என்ற தலைப்பில் எழுதியிருந்த கட்டுரை முழு மலையக சமூகத்தையுமே அவமானப்படுத்துவதாக இருந்தது. குறிப்பாக மலையகப்பெண்கள் மிகவும் இழிவாக சித்திரிக்கப்பட்டிருந்தனர். இதற்கு பல்வேறு மட்டங்களிலிருந்து எதிர்ப்பு கிளம்பவே அக்கட்டுரை அந்நூலிலிருந்து மீளப்பெறப்பட்டது. பிரதேச செயலகமும் அதற்கு வருத்தம் தெரிவித்திருந்தது. இவ்வாறான சம்பவங்களே எம்மை சிந்திக்க வைத்தன. எச்சந்தர்ப்பத்திலும் இந்திய வம்சாவளி மலையக மக்கள் எதற்காகவும் தமது கௌரவத்தை இழக்கத்தயாராக இல்லை. அதே நேரம் மற்றவர்களுக்கு இன்னல் தருபவர்களும் அல்லர். எனவே எம்மை வெளிப் படுத்துவதற்காக நாம் வடக்கு கிழக்கு வாழ் மலையக மக்கள் ஒன்றியம் என்ற அமைப்பை உருவாக்கத் தீர்மானித்தோம்.

கேள்வி: அந்த அமைப்பு உருவாவதற்கு முன்பு உங்களின் அரசியல் பிரவேசம் எப்படியானது?

பதில்: உண்மையில் அரசியல் மற்றும் ஏனைய உரிமைகளை பெற்றுக்கொள்வதற்காக ஆரம்பிக்கப்பட்ட அமைப்பு என்றாலும் நாம் தனித்து இயங்குவதற்கு என்றுமே முயற்சி செய்ததில்லை. ஏனெனில் எமது அரசியல் பயணத்திற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பே ஆதரவு வழங்கியது. நாம் அவர்களையே அணுகினோம். எனது தந்தையார் ஆரம்பத்தில் தமிழரசுக்கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். கூட்டங்களுக்கு என்னை அழைத்துச். செல்வார். அதனால் நான் தமிழ்த்தேசிய உணர்வோடு வளர்ந்தவன். எனினும் எமது சமூகத்தினரை ஒன்றிணைத்து கூட்டமைப்புக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் அரசியல் அபிலாஷைகளை பெற்றுக்கொள்ளலாம் என்று நினைத்தோம். அதன் படி 2004 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்றத்தேர்தலில் அதற்கு முயற்சி செய்தோம். ஆனால் வேட்பாளர் தெரிவு முடிந்து விட்டது எனச்சொல்லப்பட்டது. அதையடுத்து 2009 ஆம் ஆண்டு வன்னி தேர்தல் தொகுதியில் எமது சமூகம் சார்பில் ஓர் உறுப்பினரை வேட்பாளராக நிறுத்துவதற்கு கூட்டமைப்பிடம் பேச்சு நடத்தினோம். இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் எமக்கு உதவினார். அதன் படி சமயபுரத்தைச்சேர்ந்த செல்லத்துரை என்பவரை வேட்பாளராக நிறுத்தினோம். எனினும் அத்தேர்தலில் 2,800 வாக்குகள் வரையே பெற முடிந்தது. உறுப்பினராவதற்கு அத்தொகுதியில் 10 ஆயிரம் வாக்குகள் வரை தேவைப்பட்டன. அது எமது முதல் முயற்சியாக அமைந்தது.

கேள்வி: அடுத்த முயற்சி எப்படியாக அமைந்தது?

பதில்: நாம் மனந்தளரவில்லை. 2013 ஆம் ஆண்டு புதிய சூழலில் மாகாண சபைத் தேர்தல் இடம்பெற்றது. அதில் நான் களமிறங்குவதற்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவு நல்கியது. இம்முறையும் சிவசக்தி ஆனந்தனே எமக்கு அந்தச் சந்தர்ப்பத்தைப் பெற்றுத் தந்தார். இந்நிலையில் எனக்காக எமது சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்லாது கல்விச்சமூகத்தைசேர்ந்த அனைவரும் தமிழர்களாக ஒன்றிணைந்து பிரசாரம் செய்தனர். அந்தச் சூழலை எம்மால் மறக்க முடியாது. இந்திய வம்சாவளி மலையக மக்களாக எப்படி நாம் ஒன்றிணைந்தாலும் என்றும் இந்த மக்களோடு மக்களாகவே எமது வாழ்க்கையைக் கொண்டு செல்லும் அதே வேளை தமிழ்த் தேசிய உணர்வோடு எமது பயணத்தைத்தொடர்வதற்கு அன்று தீர்மானித்தோம்.

ஏனென்றால் விரல் விட்டு எண்ணும் ஒரு சில ரைத்தவிர தமிழர் தாயகத்தில் அனைவரும் தமி ழர்கள் என்ற உணர்வுடனேயே இருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம். அவர்கள் என்றுமே எம்மை பிரதேச ரீதியாக பிரித்துப்பார்ப்பது மில்லை பேசுவதுமில்லை. இந்நிலையில் அந்தத் தேர்தலில் எனக்கு 10 ஆயிரம் வாக்குகள் வரை கிடைத்தன. அனைத்துத் தரப்பினரும் எனக்கு ஆதரவளித்திருந்தனர். எனினும் சில ஆயிரம் வாக்குகள் குறைவாக கிடைத்ததால் நான் தெரிவு செய்யப்படவில்லை.

கேள்வி: சுழற்சி முறையில் நீங்கள் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமை குறித்து?

பதில்: அத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்ட மைப்புக்கு 2 போனஸ் ஆசனங்கள் கிடைத்தன. அதில் ஒன்றை எமக்கு தருமாறு கோரிக்கை விடுத்தோம். ஒன்று ஏற்கனவே தெரிவு செய்யப் பட்டு விட்டது. இந்நிலையில் மிகுதி ஓர் ஆச னத்தை சுழற்சி முறையில் தருவதாக மாவை சேனாதிராஜா எம்.பி எமக்கு உறுதி அளித்தார். அதன் படி ஒன்றரை வருடங்களுக்கு வட மாகா ணசபையில் உறுப்பினராக பணியாற்றும் சந் தர்ப்பம் எனக்குக்கிடைத்தது. மிகவும் குறுகிய காலம் என்றாலும் எமது மக்களுக்கான சில வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடிந்தது. எமது காலத்தை சற்று நீடிக்கக் கோரிக்கை விடுத் திருந்தோம் எனினும் அடுத்தவருக்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டும் என்ற காரணத்தினால் எமக்கு அது கிட்டவில்லை .

கேள்வி: இடம்பெற்ற உள்ளூராட்சி சபையில் போட் டியிட்டீர்களா?

பதில்: ஆம் நாம் வவுனியா தெற்கு தமிழ்ப் பிர தேச சபையில் மீன் சின்னத்தில் சுயேச்சையாக போட்டியிட்டோம். அதில் இரண்டு உறுப்பி னர்கள் தெரிவு செய்யப்பட்டனர். சபையில் ஆட் சியமைப்பதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப் புக்கு ஓர் ஆசனம் தேவைப்பட்ட சந்தர்ப்பத்தில் நாம் ஆதரவு வழங்க முன்வந்தோம். இதற்குப்பி ரதான காரணம் நாம் தமிழ்த்தேசியத்தை நேசித் ததாலாகும், அதன் படி அச்சபையைக் கூட்ட மைப்பு கைப்பற்றியது.

கேள்வி: உங்களது அமைப்பில் இளைஞர்கள் இருக் கின்றார்களா? அவர்களின் செயற்பாடுகள் எப்படியா ba? பதில்: போர்ச்சூழலில் இருந்த இளைஞர்க ளுக்கும் இப்போதும் வித்தியாசம் உள்ளது. அக்கா லகட்டத்தில் இயக்கங்களின்பால் ஈர்க்கப்பட்டு ஆயிரக்கணக்கான இந்திய வம்சாவளி இளை ஞர்கள் அதில் இணைந்தனர். போராளிகளாக தம்மை அடையாளப்படுத்தினர். ஆனால் இப் போதைய சூழ்நிலையில் அரசியல் போராளிகளாக வருவதற்கு ஆர்வம் காட்டுவதில்லை என்றே கூற வேண்டியுள்ளது. மேலும் இக்காலகட்டத்தில் இளைஞர்கள் தம்மை இந்திய வம்சாவளியினர் என்று கூறுவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். அது தவறானது என்பதே எனது கருத்து. நாம் தமி ழர்கள் என்ற ஒரே குடையின் கீழ் வாழ்வது பெரு மையே எனினும் எமது வரலாற்று அடையாளம் மிக முக்கியம். அதைக் கூறுவதற்கு வெட்கப்ப டத் தேவையில்லை.

கேள்வி: தனியான ஓர் அமைப்பை உருவாக்கும் போது எதிர்ப்புகள் கிளம்பவில்லையா?

பதில்: பல இடையூறுகள் வந்தன. சில ஊட கங்கள் கூட எம்மை விமர்சித்து தவறான அர்த் தத்தை இங்குள்ள மக்கள் மத்தியில் பரப்ப முனைந்தன. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்களும் அது குறித்து சினேகபூர்வமாக உரையாடினர், நாம் அவர்களுக்கு ஒரு கருத்தை உறுதிபடத் தெரிவித்தோம். வவுனியா ,முல்லைத் தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய மாவட்டங்களில் வாழ்ந்து வரும் இந்திய வம்சா வளி மலையக மக்களை ஒன்றிணைப்பது மட் டுமே எமது அமைப்பின் நோக்கம். அதற்குப்பிறகு எமது அரசியல் பயணம் என்றால் அது நிச்சயமாக கூட்டமைப்புடனே தான். ஏனெனில் நாமும் அந்த தமிழ்த்தேசிய உணர்வுடனும் சிந்தனைகளுடனும் வௗ ந்தவர்கள், எனவே அதில் எந்த சந்தேகங்கள்) கொள்ளத்தேவையில்லை என்றோம். அதில் கூட்டமைப்பின் தலைவர்கள் திருப்தியானார்கள், அதற்கும் அப்பாற்பட்டு எமது கால உரிமைகள் பற்றிப் பேச பிரதேச செயலகங்களுக்கு கதைக்கச்சென்றால் பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. இது குறித்து கூட் அமைப்பினர் கவனம் செலுத்த வேண்டும், அத்துடன் எங்கிருந்தோ வந்து இவர்கள் இங்குள்ள மக்களின் காணிகளை அபகரித்துக்கொண்டார்கள் என்ற தவறான பிரசாரம் சில தீய சக்திகளால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. அதையிட்டு கவலை கொள்கிறோம். இன்று உலகெங்கினும் பல நாடுகளில் தமிழர்கள் பல்வேறு கார் எங்களுக்காக புலம்பெயர்ந்து சென்று வாழ்கின்றனர். அந்தந்த நாடுகளில் வாழ்ந்து வரும் தேசிய இனத்தினர் எவரும் தமிழர்களைத் துரத்தவில்லை. பாகுபாடு காட்டவில்லை ஆனால் ஒரே நாட்டில் ஒரே இனத்தினர் மத்தியில் இவ்வாறு பிரதேச வேறுபாடுகள் காட்டப்படுவது எதிர்கால தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கு ஆரோக்கியமானதல்ல என்பது எமது கருத்து. இன் 5 அனைவரும் ஏற்றுக்கொள்வார்கள் என நம்புகிறேன்.

நன்றி - வீரகேசரி

நேர்காணல்: சிவலிங்கம் சிவகுமாரன் 
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates