Headlines News :
முகப்பு » , » சாதியத்தால் அவதியுறும் மலையகம் - சிலாபம் திண்ணனூரான்

சாதியத்தால் அவதியுறும் மலையகம் - சிலாபம் திண்ணனூரான்


24/6/2018 வாரவெளியீட்டில் 'முற்போக்கு சிந்தனைகளுடன் ஆலயங்கள் இயங்க வேண்டும்' என்ற குறிஞ்சி மகனின் ஆக்கத்தில் தற்போது மலையகத்தின் முக்கியமான இடங்களில் சாதி வேறுபாடுகள் பார்க்கப்படுவதாக தெரிவிக்கப் பட்டிருந்தது. மலையகத்தில் இது புதிதல்ல. 1900 களில் தமிழகத்தில் சாதிக் கட்டுப்பாடு கடுமை யாக்கப்பட்டதன் கொடுமையின் விளைவாகவே அங்கு வாழ்ந்த தமிழ் விவசாயிகள் கூட்டம் கூட் டமாக இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, பர்மா, றியூனியன், மொரிசியஸ், ரினிடாட், அந்தமான், சுமத்ரா, சீசெல்ஸ், தென்னாபிரிக்கா, கிரனடா, பிஜி, நியூகலிடோனியா, தாஷித்தி, குவாட்லோப், சென்ற்வின்சன்ற் எனப்பட்ட தீவுகளுக்கும், நாடுகளுக்கும் ஆங்கிலேயரால் கூலிகளாக அழைத்துச்செல்லப்பட்டனர்.

ஆங்கிலேயர் தமிழகத்திலி ருந்து விவசாய பட்டாளத்தை இலங்கைக்குள் நகர்த்தியதும் சாதியின் அடிப்படையிலேயா கும். இங்கு நிர்மாணிக்கப்பட்ட தோட்ட லயன்களில் சாதி அடிப்படையிலேயே குடியமர்த் தியதுடன் தமிழகத்து கிராம் வீடமைப்பு கட்டமைப்பு முறை யையே கையாண்டனர். 1865 க்குப் பிறகு மாநகர சபைகள் உருவாக்கப்பட்டன. இச்சபை களில் நகரசுத்தி தொழிலாளர்க ளாகக் கடமையாற்றிய இந்தியத் தமிழர்களின் குடியிருப்புக்கு யூ.சி.லயன் என ஐரோப்பியர் நாமம் சூட்டினர்.

வெள்ளைக்காரர்கள் தமிழக விவசாயிகளை இந்நாட்டுக்கு கப்பலில் அழைத்து வருகையில் அவன் சாதியத்தால் பட்ட கஷ் டத்தை "The Planters Association of Ceylon 1854 - 1954” என்ற நூலில் (71 ஆம் பக்கம்) கீழ் கண்ட வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஆணைக்குழுவின் அதிகார எல்லைக்குட்பட்ட பிரதேசங்களிலிருந்து வருகைதரும் தொழிலாளர் களின் நலன்கள் அவர்களுக்கான வசதிகள் மிகக் கவனமாக கையாளப்பட்டன.

தரமான உணவு, தங்குமிடம் போன்றவை எமது. நேரடிக் கண்காணிப்பின் கீழ் வழங்கப்பட்டன. இவ்வாறான நிலையில் உணவு விநியோகம் செய் கைளில் எதிர்கொண்ட முதலாவது பிரச்சினை சாதிப்பிரச்சினையாகும். இவ்வாறு இலங்கைக்கு வருகைதந்த தொழிலாளர்களின் பதிவுகளின்படி வெள்ளாளர், நாடார், பள்ளர், பறையர், இடையன், செட்டி, ரெட்டி, அம்பலக்காரர், வன்னியர், உள் ளிட்ட 37 வகை சாதியினர் வருகை தந்ததாக பதிவு தெரிவிக்கின்றது.

இந்த சாதிப் பிரச்சினை அந்நாட்களில் மிகவும் தீவிரமாகவும் மீள முடியாததாகவும் இருந்தது. சாதித் தடைகளை அகற்றி அனைவரையும் ஒரே ஆசனத்தில் அமர வைக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஒவ்வொரு மாவட்ட தாலுக்கா கிரா மத்தைச் சேர்ந்த பிரிவு வகையிலேயே தோட்டங் களில் இந்திய விவசாயிகள் பதிவு இடம் பெற்றது. இதற்கான காரணம் உறவுகள் பிரிந்து விடாது இருப்பதற்காக மேற்கொண்ட தொழில் இரகசி யமும் சூழ்ச்சியுமாகும்.

தமிழர்கள் எந்த மாவட்ட கிராமத்திலிருந்து இங்கு கொண்டு வரப்பட்டனரோ அந்த பழைய கிராமத்தை ஆங்கிலேயர் கண்டி தேசத்தில் படைத்தனர். சாதிய அடக்குமுறையை ஆங்கி லேயர் மறைமுகமாக வளர்த்தனர். சாதியம் தமிழக விவசாயிகளை அந்திய நாடுகளில் தங்களின் உழைப்புச் சக்தியை விற்பதற்கு தமது கிராம் எல் லைகளைக் கடந்து செல்ல வைத்தது. காலனிய வாதிகள் தமிழகத்திலிருந்து 1817 ஆம் ஆண்டில் தமிழ் கூலிகளை இலங்கையின் நிர்மாணப்பணிகளுக்காக அழைத்து வந்தனர் என தெரிவிக்கிறது "வரலாற்று பின்னணி” என்ற தமிழ் நூல்.

1817 - 1827 ஆம் ஆண்டுகால எல்லையில் இங்கு குடியேறிய தமிழக ஒப்பந்த கூலிகளின் தொகை பத்தாயிரம் ஆகும். தமிழக கிராமங்களில் எவ்வாறு சாதியியல் குடியிருப்புக்களாக பிளவு பட்டிருந்தனவோ அவ்வாறே தீண்டப்படுபவனா கவும் தீண்டப்படாதவனாகவும் பெரும்பான்மை யாக இருந்தனர்.

தோட்ட நிர்வாகம் மூன்று பிரிவுகளாகப் பிரிக் கப்பட்டிருந்தது. ) 1. அலுவலக நிர்வாகம் 2. தொழிற்சாலை நிர்வாகம் 3 தோட்ட மேற்பார்வை நிர்வாகம் தோட்ட மேற்பார்வை நிர்வாகம் பெரியகங் காணி, கணக்கப்பிள்ளையிடம் இருந்தன. தொழி லாளர்கள் அமைப்பு ரீதியாக செயற்பட தடைக் கல்லாக இருந்தவர்கள் இவர்களேயாவர். இவர்கள் தொழிலாளர்களை ஓட ஓட விரட்டி வேலை வாங் கினர். இவர்களின் அடக்குமுறைக்கு சாதிய பிரிவு களைப் பயன்படுத்தும் போக்கு இருந்தது. | 1838 - 1843 ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில்
பெரும் வறட்சி நிலவியது. இவ்வறட்சியே முக் குலத்தோர் மற்றும் வெள்ளாளர், கள்ளர், நாயுடு, தேவர் சமூகத்தையும் இலங்கையை நோக்கி நகர்த்தியது. இப்புலம் பெயர்வில் நிலமற்றவர் களும், நிலமுள்ளவர்களும் இணைந்தே இக்கூட் டத்தில் இடம்பெயர்ந்தனர்.

1843 இல் இலங்கையில் இந்தியத் தமிழரின் எண்ணிக்கையானது 31 ஆயிரத்தை கடந்தி ருந்தது. இந்நிலையில் 1843 இல் இந்நாட்டை விட்டு வெளியேறிய இந்தியத் தமிழர்களின் எண் ணிக்கை 19 ஆயிரத்து 693 ஆக இருந்தது. இவ்வாறான நிலையில் தமிழக கிராமங்களில் நிலவிய அதே சாதிய கட்டமைப்பு மலையகத் தோட்டங்களிலும் நிலவியது. லயன் குடியிருப்புக ளுக்கு சாதியம், தொழில் ரீதியான பெயர்கள் சூட் டப்பட்ட அநியாயங்கள் இடம்பெற்றன. அவ்வநி யாயம் இன்றும் தொடர்கிறது. பெரியகங்காணி லயம், பாபர் லயம், வாத்தியார் லயம், டோபி லயம், வாசல் கூட்டி லயம், பூசாரி லயம், சோசியர் லயம், மருந்து கங்காணி லயம், கொழுந்து கங்காணி லயம், கவ்வாத்து கங்காணி லயம், எழவு சொல்லி லயம் என சாதி, தொழில் பிரிவினைகளுக்கு ஏற்ப பல பிரிவுகளாக லயன் குடியிருப்புகள் அமைந்தி ருந்தன. ) சாதி மாறி காதல் திருமணம் செய்தால் சாதியம் கட்டுப்பாடுகள் வலுவற்று தோற்றுப்போகும். இவர்களுக்கு தோட்டத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதில்லை போன்ற காரணங்களால் இவர்கள் வேறுதோட்டத்தை நாடிச்சென்றனர்.

வர்த்தகர்கள், சிறுநில உரிமையாளர்கள் தோட் டங்களை வைத்திருந்த இந்திய வம்சாவளி மக்கள் மத்தியில் சாதிய கட்டுப்பாடுகள் தளர்ந்து விட்ட தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அன்றும், இன்றும் தோட்டத் தொழிலாளர்கள் வாழ்ந்த, வாழும் உலகம் வேறு. முத லாளி வர்க்கம் வாழ்ந்த உலகம் வேறா கவே இருந்தது. முதலாளி வர்க்கம் பணம் தேடுபவர்களாக இருந்த மையால், அவர்களிடம் சாதி, சமூக அந்தஸ்து கட்டுப்பாடு யாரையும் கட்டுப்படுத்தும் சக்திகளாக நிலை பெற்று வாழ இயலாமல் போயின.

பொருளாதார வாழ்க்கையானது இந் திய கிராமிய கட்டுப்பாட்டு வாழ்க் கையிலிருந்து வேறுபட்டதோர் புதிய கலாசாரத்தை படைத்தது. இவ்வா றான கலாசாரம் 18-03-1954 இல் சேர்.ஜோன் கொத்தலாவல, ஜவ ஹர்லால் நேரு ஒப்பந்தத்தின் பின் மெல்ல வளரத் தொடங்கியது. இத்தி யாவிலிருந்து இலங்கைக்கான போக் குவரத்து கட்டுப்படுத்தப்பட்டது. இலங்கையில் வாழ்ந்த பெருந்தோட்ட பாட்டாளி வர்க்கம் முற்றாக புதியதோர் சமூக சக்திகளாக மாற்றம் பெற்றனர்.

அமரர் கோ.நடேசய்யர் இந்நாட்டின் 1931 இல் அகில இலங்கை தோட்ட தொழிலா ளர்கள் சம்மேளனத்தை ஆரம்பித்தார். இவர் இடது சாரி கொள்கையை கொண்டு இருந்த மையால் சாதி அமைப்பை முற்றும் முழுவதுமாக வெறுத்தார். அமரர் நேருவின் தலைமையில் 1939 ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் திகதி அதிகாலை 1.40 க்கு உதயமான இலங்கை -இந்திய காங்கிரஸ் ஆரம்பத்தில் தோட்டத் தொழிலாளர்களையும் இலங்கை முழுவதும் வாழ்ந்த நகர சுத்தி தொழி லாளர்களையும் சாதியின் பெயரில் ஏற்க மறுத்தது.

பின்னர் கொழும்பு 04. பொன்சேகா பிளேஸ், சீயன்னா என்ற செட்டியார் வீட்டில் அமரர் நேரு தலைமையில் பெரிய விவாதமே இடம் பெற்ற றது. நேருவின் தலையீட்டால் இறுதியில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதற்கான காரணம் அன்று இலங்கையில் வாழும் இந்தியர்களின் மிகப் பெரும் சக்தியாக விளங்கியது தோட்டத் தொழி லாளர்களாக வாழும் இந்திய மக்களே என்பது உணரப்பட்டமையாகும். இன்றும் இந்நாட்டில் இந்திய வம்சாவளியினரின் பெரும்சக்தியாக வாழ் பவர்கள் பெருந்தோட்ட பாட்டாளி வர்க்கமே என் பதை அனைவரும் உணர வேண்டும்.

1977க்குப் பின்னர் இந்நாட்டில் ஏற்பட்ட அர சியல் மாற்றம் மலையக பாட்டாளி வர்க்கத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அம்மாற்றம் இச்சமூகம் மத்தியில் சாதி உணர்வை அரசியல் ரீதியாக ஏற்படுத்தியது. பல கட்சிகள் உதயமாகின. இக் கட்சிகள் இன்று சாதியியல் ரீதியாகவே செயலாற்றுகின்றன.

அனைத்து தேர்தல் காலங்களிலும் "நம்ப ஆள்" என சாதியம் ரீதியாக பேசப்படுவதைக் காணலாம். கட்சிகளின் தலைவர் உள்ளிட்ட ஏனைய பதவிகளும் சாதியம் ரீதியாகவே நியமனமாவதை அவதானிக்கலாம். இதை தட்டிக் கேட்க பாட்டாளி வர்க்கம் பயப்படுகிறது.

என்ன தான் விஞ்ஞான ரீதியாக புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்து விட்டாலும் இந்திய வம்சாவளி மக்கள் மத்தியிலிருந்து சாதியம் அழியவில்லை, பல்வேறு கட்டமைப்பில் சாதியம் வாழ்கிறது. இறைவனின் ஆலயம் கூட சாதியின் பெயரில் இயங்குவதைக் காணலாம்."சாதிக்குப் பின்னால் வாழாதீர்கள் சாதனைக்குப் பின்னால் வாழுங்கள்" என பெரியார் கூறியதை நாம் இங்கு மறந்து விடக்கூடாது.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates