Headlines News :
முகப்பு » » பெற்றோலும் அரசியலும் - ஜீவா சதாசிவம்

பெற்றோலும் அரசியலும் - ஜீவா சதாசிவம்

இன்றுடன் ஆறாவது நாளாக தொடரும் பெற்றோல் தட்டுப்பாட்டு பிரச்சினை சாரதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் என பலரையும் இக்கட்டான நிலைமைக்குத் தள்ளிவிட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளில் மிகவும் அவசியமான தொன்றான எரிபொருள் பிரச்சினையால் இன்று மக்கள் குறிப்பாக பாவனையாளர்கள் இக்கட்டான நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர். தொடரும் இப்பிரச்சினைக்கு இப்போதைய ஆளும் அரசு முன்னர் பதவியில் இருந்த அரசின் உறுப்பினர்களும் தங்களது வசதிக்கேற்ப பல சுவாரஸியமான கதைகளை கூறி நாட்களை கடத்திச் செல்கின்றனர். 

உண்மையில் இவ்வாறானதொரு அவலநிலைமைக்கு இப்போதைய அரசாங்கமும் அதன் ஆட்சியாளர்களும் மாத்திரமே காரணம் என்று கூறி விமர்சித்துவிட்டு இருப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதொன்றல்ல. தொடர்ந்து இழுபறியில் இருக்கும்  எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை  பற்றியே ஆராய்கிறது  இவ்வார அலசல்....

பெற்றோல் தட்டுப்பாடு என பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆரம்பித்தாலும் இன்று இது அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளமையை ஆளும், எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் மூலம் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. யார் நாட்டை நிர்வகித்தாலும் மக்களின் தேவையையும் அவர்களின் அவசியத்தையும் உணர்ந்து அதனை நிவர்த்திக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்தையே சாரும்.  

அரசாங்கங்கள் எதுவாக இருந்தாலும் மக்களுக்கான அடிப்படை விடயங்கள் குறித்து அவதானிக்க வேண்டிய தேவை அரசையே சாரும். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமது பொறுப்பை மறந்து செயற்பட முடியாது.

அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக இல்லாது அலட்சியப்போக்குடன் இருந்து வந்துள்ளமையினால் மக்கள் அன்றாட தேவைகளில் அவஸ்தைப் பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கத்திடம் பெற்றோல் பற்றிய முன்கூட்டிய மதிப்பீடு இருந்திருந்தால் இவ்வாறான பின்னடைவு நிலைமை ஏற்பட்டிருக்காது. இவ்வாறான இக்கட்டான நிலைமையில் அரசாங்கத்திடம் ஒரு மாற்று உபாயம் இருந்திருக்க வேண்டும். இந்நிலைமைக்கு யார் பொறுப்பு? வெறுமனே பொது மக்களிடம் சம்பந்தப்பட்ட துறைக்கு பொறுப்பான அமைச்சர் மன்னிப்பு கேட்டுவிடுவதால் எந்தப்பயனும் கிட்டப்போவதில்லை . பற்றாக்குறையான பெற்றோலினால் இப்போது அரசியலும் பற்றி எரிகின்றது. பெற்றோலை வைத்தே இன்று சிலர் அரசியலையும் நடத்துகின்றனர். அக்டோபர் மாதம் முதல்வாரத்தில் வந்த கப்பலை திருப்பி அனுப்பிவைத்த அத்தருணத்தில் முன்கூட்டியே அறிவித்தலை மக்களுக்கு உரிய அமைச்சு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதுபற்றி எந்த அறிவித்தலும் இல்லை. 

பொதுவாக பட்ஜெட் வரவுள்ள காலப்பகுதிகளில் எந்தவொரு பொருளுக்கும் தட்டுப்பாடு, பதுக்கல் நிலைமை இடம்பெறுவது வழமையாகிவிட்ட நிலையில் இந்த எண்ணெய்ப் பிரச்சினைக்கும் இவ்வாறானதொரு பின்னணி இருக்கின்றதா? என்றும் எண்ணத் தோன்றுகிறது. 

 தரம் குறைந்த பெற்றோலை இலங்கைக்கு கொண்டு வந்தபோது அதனை இறக்கக்கோரி எனக்கு அரசியல் அழுத்தம் வந்திருந்த போதிலும் அதனை இறக்காது திருப்பி அனுப்பினோம். ஆனால், அந்த கப்பல் இப்போது திருகோணமலையில் தரித்து வைக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு இறக்கப்பட்டு  அதனை பாவிக்க நேர்ந்தால் வாகனங்களும் பழுதாவதற்கான வாய்ப்புக்களும் அதிகம். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் மேலதிகமான ஒரு பிரச்சினையும் எழுந்திருக்கும். இவ்வாறு அமைச்சர் அர்ஜுனா கூறியது பெற்றோலிலும் ஒரு அரசியல் பின்னணி இருக்கின்றதா? என்றும் எண்ணத் தோன்றுகிறது. 

ஆறு நாட்களாக தொடரும் இந்த பெற்றோல் பிரச்சினை என்பது உடனடியாக ஏற்பட்டதொன்றல்ல. இது அவ்வப்போது அரசாங்கங்கள்  எதிர் கொண்டு வந்த பிரச்சினையாகவே இருக்கின்றது. ஆக, இவ்வாறான நிலையில் ஆளும், எதிர்க்கட்சிகளில் ஆளுக்கொருவர் விமர்சித்து, குறைகூறிக் கொண்டிருப்பதால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை.

தான் அமைச்சராக இருந்த காலத்தில் இவ்வாறு பெற்றோல் தட்டுப்பாட்டு பிரச்சினை ஏற்பட்டது. இருப்பினும் பிரச்சினையை சமாளிக்கக்கூடியதாக இருந்தது என்று அமைச்சர் சம்பிக்க கூறியிருக்கின்றார்.  

நாட்டில் நாௌhன்றுக்கு 2500 தொன் பெற்றோல் தேவை.   எமது சுத்திகரிப்பு நா.ௌhன்றுக்கு 550 தொன் வரையில் காணப்படுகின்றது. கொலன்னாவ , முத்துராஜவலயில் பெற்றோல் களஞ்சிய அளவு 2015 ஆம் ஆண்டில் 60 ஆயிரம் தொன் வரை காணப்பட்டது. 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த எண்ணிக்கையை 90 ஆயிரம் தொன் வரை அதிகரித்ததால் இப்போது எளிதாக 85 ஆயிரம் தொன் பெற்றோலை களஞ்சியப்படுத்த முடியும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். 

இதனடிப்படையில் 2000 தொன் அளவில் மதிப்பீடு செய்தால் 45 நாட்களுக்கு போதுமான பெற்றோலை களஞ்சியப்படுத்த முடியும்.   இந்திய எரிபொருள் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் கப்பல் கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி  வந்தது. குறித்த கப்பலில் கொண்டு வரப்பட்ட எரிபொருள் உரிய தரத்தில் இல்லை என்பது   ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது. 3 ஆம் திகதி வரவிருந்த கப்பலும் 9 ஆம் திகதியே வரப்போகின்றது என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

  நாட்டில் நிலவி வரும் பெற்றோல் தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டுமானால் பெற்றோலிய துறையில் காணப்படும் தனியார் தலையீடுகள்  அனைத்தும் நீக்கப்பட்டு அரச உடைமையாக்கப்பட வேண்டுமென   முன்னிலை சோசலிச கட்சி வலியுறுத்தியுள்ளது. 

 'பெற்றோல் பிரச்சினைக்கு முடிவு காணமுடியாத அரசாங்கம் எப்படி பெடரல் (சமஷ்டி) பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்ற கிண்டல்களும் எழுந்துள்ளது' உண்மையில் அடிப்படை அத்தியாவசியப்பொருள் இன்று அரசியல்வாதிகள் தங்கள் வசதிக்கேற்பதான ஆயுதமாக பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையினால் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்களே! 

ஆனால், மேலைத்தேய நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் நிகழும் போது அதற்குரிய சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற நிலைமையே இருக்கின்றது. ஆனால், இலங்கை போனற தெற்காசிய நாடுகளில் இது வழமையான விடயமாக இருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. 
வருமுன் காப்போம் என்பார்கள். ஆனால், இலங்கையில் வழமையானதொரு நிலைமை இருக்கின்றது. ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் குறிப்பிட்ட அந்த காலத்தில மாத்திரம் அதனை சமாளிப்பதற்கான தற்காலிகமான தீர்வுகளைக் கண்டு விட்டு  அடுத்த கட்ட  வேலைகளுக்குச் சென்று விடும் நிலைமையே இங்குள்ள ஆட்சியில் இருப்பது வழமை. 

இந் நிலைமை மாறி எதிர்வரும் காலங்களில் இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமை ஏற்படாது மக்களின் நிலை அறிந்து அவர்களது தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய பாரிய கடப்பாடு அரசாங்கத்தையே சார்ந்தது என்பதை அதன் தலைவர்கள் உணரவேண்டும்.

இன்றுடன் ஆறாவது நாளாக தொடரும் பெற்றோல் தட்டுப்பாட்டு பிரச்சினை சாரதிகள், அதிகாரிகள், பொதுமக்கள் என பலரையும் இக்கட்டான நிலைமைக்குத் தள்ளிவிட்டுள்ளது. அத்தியாவசியத் தேவைகளில் மிகவும் அவசியமான தொன்றான எரிபொருள் பிரச்சினையால் இன்று மக்கள் குறிப்பாக பாவனையாளர்கள் இக்கட்டான நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர். தொடரும் இப்பிரச்சினைக்கு இப்போதைய ஆளும் அரசு முன்னர் பதவியில் இருந்த அரசின் உறுப்பினர்களும் தங்களது வசதிக்கேற்ப பல சுவாரஸியமான கதைகளை கூறி நாட்களை கடத்திச் செல்கின்றனர். 

உண்மையில் இவ்வாறானதொரு அவலநிலைமைக்கு இப்போதைய அரசாங்கமும் அதன் ஆட்சியாளர்களும் மாத்திரமே காரணம் என்று கூறி விமர்சித்துவிட்டு இருப்பது எவ்விதத்திலும் பொருத்தமானதொன்றல்ல. தொடர்ந்து இழுபறியில் இருக்கும்  எரிபொருள் தட்டுப்பாட்டு நிலைமை  பற்றியே ஆராய்கிறது  இவ்வார அலசல்....

பெற்றோல் தட்டுப்பாடு என பெற்றோலிய கூட்டுத்தாபனம் ஆரம்பித்தாலும் இன்று இது அரசியல் பிரச்சினையாக உருவெடுத்துள்ளமையை ஆளும், எதிர்க்கட்சிகளின் கருத்துக்கள் மூலம் கண்டு கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. யார் நாட்டை நிர்வகித்தாலும் மக்களின் தேவையையும் அவர்களின் அவசியத்தையும் உணர்ந்து அதனை நிவர்த்திக்க வேண்டிய பாரிய பொறுப்பு அரசாங்கத்தையே சாரும்.  

அரசாங்கங்கள் எதுவாக இருந்தாலும் மக்களுக்கான அடிப்படை விடயங்கள் குறித்து அவதானிக்க வேண்டிய தேவை அரசையே சாரும். எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் தமது பொறுப்பை மறந்து செயற்பட முடியாது.

அரசாங்கம் முன்னெச்சரிக்கையாக இல்லாது அலட்சியப்போக்குடன் இருந்து வந்துள்ளமையினால் மக்கள் அன்றாட தேவைகளில் அவஸ்தைப் பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அரசாங்கத்திடம் பெற்றோல் பற்றிய முன்கூட்டிய மதிப்பீடு இருந்திருந்தால் இவ்வாறான பின்னடைவு நிலைமை ஏற்பட்டிருக்காது. இவ்வாறான இக்கட்டான நிலைமையில் அரசாங்கத்திடம் ஒரு மாற்று உபாயம் இருந்திருக்க வேண்டும். இந்நிலைமைக்கு யார் பொறுப்பு? வெறுமனே பொது மக்களிடம் சம்பந்தப்பட்ட துறைக்கு பொறுப்பான அமைச்சர் மன்னிப்பு கேட்டுவிடுவதால் எந்தப்பயனும் கிட்டப்போவதில்லை   பற்றாக்குறையான பெற்றோலினால் இப்போது அரசியலும் பற்றி எரிகின்றது. பெற்றோலை வைத்தே இன்று சிலர் அரசியலையும் நடத்துகின்றனர். அக்டோபர் மாதம் முதல்வாரத்தில் வந்த கப்பலை திருப்பி அனுப்பிவைத்த அத்தருணத்தில் முன்கூட்டியே அறிவித்தலை மக்களுக்கு உரிய அமைச்சு வழங்கியிருக்க வேண்டும். ஆனால், அதுபற்றி எந்த அறிவித்தலும் இல்லை. 

பொதுவாக பட்ஜெட் வரவுள்ள காலப்பகுதிகளில் எந்தவொரு பொருளுக்கும் தட்டுப்பாடு, பதுக்கல் நிலைமை இடம்பெறுவது வழமையாகிவிட்ட நிலையில் இந்த எண்ணெய்ப் பிரச்சினைக்கும் இவ்வாறானதொரு பின்னணி இருக்கின்றதா? என்றும் எண்ணத் தோன்றுகிறது. 

 தரம் குறைந்த பெற்றோலை இலங்கைக்கு கொண்டு வந்தபோது அதனை இறக்கக்கோரி எனக்கு அரசியல் அழுத்தம் வந்திருந்த போதிலும் அதனை இறக்காது திருப்பி அனுப்பினோம். ஆனால், அந்த கப்பல் இப்போது திருகோணமலையில் தரித்து வைக்கப்பட்டுள்ளது.

 அவ்வாறு இறக்கப்பட்டு  அதனை பாவிக்க நேர்ந்தால் வாகனங்களும் பழுதாவதற்கான வாய்ப்புக்களும் அதிகம். அவ்வாறு நிகழ்ந்திருந்தால் மேலதிகமான ஒரு பிரச்சினையும் எழுந்திருக்கும். இவ்வாறு அமைச்சர் அர்ஜுனா கூறியது பெற்றோலிலும் ஒரு அரசியல் பின்னணி இருக்கின்றதா? என்றும் எண்ணத் தோன்றுகிறது. 

ஆறு நாட்களாக தொடரும் இந்த பெற்றோல் பிரச்சினை என்பது உடனடியாக ஏற்பட்டதொன்றல்ல. இது அவ்வப்போது அரசாங்கங்கள்  எதிர் கொண்டு வந்த பிரச்சினையாகவே இருக்கின்றது. ஆக, இவ்வாறான நிலையில் ஆளும், எதிர்க்கட்சிகளில் ஆளுக்கொருவர் விமர்சித்து, குறைகூறிக் கொண்டிருப்பதால் எவ்வித பயனும் ஏற்படப்போவதில்லை.

தான் அமைச்சராக இருந்த காலத்தில் இவ்வாறு பெற்றோல் தட்டுப்பாட்டு பிரச்சினை ஏற்பட்டது. இருப்பினும் பிரச்சினையை சமாளிக்கக்கூடியதாக இருந்தது என்று அமைச்சர் சம்பிக்க கூறியிருக்கின்றார்.  

நாட்டில் நாௌhன்றுக்கு 2500 தொன் பெற்றோல் தேவை.   எமது சுத்திகரிப்பு நா.ௌhன்றுக்கு 550 தொன் வரையில் காணப்படுகின்றது. கொலன்னாவ , முத்துராஜவலயில் பெற்றோல் களஞ்சிய அளவு 2015 ஆம் ஆண்டில் 60 ஆயிரம் தொன் வரை காணப்பட்டது. 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த எண்ணிக்கையை 90 ஆயிரம் தொன் வரை அதிகரித்ததால் இப்போது எளிதாக 85 ஆயிரம் தொன் பெற்றோலை களஞ்சியப்படுத்த முடியும் என்று அமைச்சர் சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார். 

இதனடிப்படையில் 2000 தொன் அளவில் மதிப்பீடு செய்தால் 45 நாட்களுக்கு போதுமான பெற்றோலை களஞ்சியப்படுத்த முடியும்.   இந்திய எரிபொருள் நிறுவனத்திற்கு சொந்தமான எரிபொருள் கப்பல் கடந்த ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி  வந்தது. குறித்த கப்பலில் கொண்டு வரப்பட்ட எரிபொருள் உரிய தரத்தில் இல்லை என்பது   ஒக்டோபர் மாதம் 17 ஆம் திகதி உறுதிப்படுத்தப்பட்டது. 3 ஆம் திகதி வரவிருந்த கப்பலும் 9 ஆம் திகதியே வரப்போகின்றது என்றும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார். 

நாட்டில் நிலவி வரும் பெற்றோல் தட்டுப்பாட்டிற்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டுமானால் பெற்றோலிய துறையில் காணப்படும் தனியார் தலையீடுகள்  அனைத்தும் நீக்கப்பட்டு அரச உடைமையாக்கப்பட வேண்டுமென   முன்னிலை சோசலிச கட்சி வலியுறுத்தியுள்ளது. 

 'பெற்றோல் பிரச்சினைக்கு முடிவு காணமுடியாத அரசாங்கம் எப்படி பெடரல் (சமஷ்டி) பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்ற கிண்டல்களும் எழுந்துள்ளது' உண்மையில் அடிப்படை அத்தியாவசியப்பொருள் இன்று அரசியல்வாதிகள் தங்கள் வசதிக்கேற்பதான ஆயுதமாக பயன்படுத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலைமையினால் பாதிக்கப்படுபவர்கள் பொதுமக்களே! 

ஆனால், மேலைத்தேய நாடுகளில் இது போன்ற சம்பவங்கள் நிகழும் போது அதற்குரிய சம்பந்தப்பட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற நிலைமையே இருக்கின்றது. ஆனால், இலங்கை போனற தெற்காசிய நாடுகளில் இது வழமையான விடயமாக இருக்கின்றது என்பது மறுப்பதற்கில்லை. 

வருமுன் காப்போம் என்பார்கள். ஆனால், இலங்கையில் வழமையானதொரு நிலைமை இருக்கின்றது. ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்தால் குறிப்பிட்ட அந்த காலத்தில மாத்திரம் அதனை சமாளிப்பதற்கான தற்காலிகமான தீர்வுகளைக் கண்டு விட்டு  அடுத்த கட்ட  வேலைகளுக்குச் சென்று விடும் நிலைமையே இங்குள்ள ஆட்சியில் இருப்பது வழமை.

இந் நிலைமை மாறி எதிர்வரும் காலங்களில் இவ்வாறானதொரு இக்கட்டான நிலைமை ஏற்படாது மக்களின் நிலை அறிந்து அவர்களது தேவையை பூர்த்தி செய்ய வேண்டிய பாரிய கடப்பாடு அரசாங்கத்தையே சார்ந்தது என்பதை அதன் தலைவர்கள் உணரவேண்டும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates