தேங்காய் எண்ணையில் இருந்து முள்ளுத்தேங்காய் எண்ணைக்கு - பாகம் - 22)
அவுட்குரோவர் முறை பற்றிய ஆய்வுகள் அவசியமாகின்றன. ஆனாலும் ஆய்வுகள் பற்றிய ஆய்வுகளில்காட்டப்படுகின்ற அக்கறை அளவுக்கு மக்களிடத்திற்குச் சென்று அவர்களின் அனுபவங் களை, ஆலோசனைக் கேட்டுஅவற்றுக்கு பொருத்தமான முறைமை ஒன்றை நோக்கிய ஆய்வுகளுக்கு நம்மவர்கள் இன்னும் தயாரில்லாத சூழ்நிலைகளே தென்படுகின்றன.
2016 பெப்ரவரி மாதமளவில் 'வீரகேசரி' பத்திரிகை சார்பில் ஒரு செயலமர்வு லக்ஷ்மன்; கதிர்காமர் ஆய்வு மையத்தில்இடம்பெற்றது. 'வெரிட்டே ரீசேர்ச்' --Verite Research எனப்படும் துறைசார் ஆய்வு நிறுவனம் தோட்டத் தொழிலாளர்களின்சம்பளம், பெருந்தோட்டங்களின் போக்கு குறித்த ஒரு ஆய்வறிக்கையை கலாநிதி நிஷாந்த டி மெல் சமர்ப்பித்தார்.
இதன்போது, அவர் குறிப்பிட்டிருந்த மிக முக்கியமான விடயம் ஒன்று 'தோட்டத் தொழிலாளர்கள் வெறுமனேசம்பளத்தை மாத்திரமின்றி தமக்கான கௌரவத்தையும் எதிர்பார்க்கின்றனர். அந்த கௌரவம் கிடைக்காத போதுஅவர்கள் இந்தத் தொழிற்துறையில் இருந்து மாறி வேறு தொழில் துறைகளை நாடுகின்றனர்' என்பதாகும்.
கடந்த காலங்களில் தோட்டத் தொழிலாளர்களின் எண்ணிக்கைக் குறைவடைந்து கொண்டு செல்வதற்கு இதுவும் ஒருகாரணமாகும். எனினும், இவ்வாறு கௌரவத்தை நாடி தோட்டத் தொழிலை விட்டு வேறு துறைக்கு செல்லும் சமூகப்பிரிவினர் அந்த கௌரவத்தை பெறுகின்றனரா? எனும் கேள்வி பலமாக எழுகின்றது.
அத்தகைய சமூகப் பிரிவினர்தெரிவும் தொழில்கள் என்ன என்பதை வரிசைப்படுத்தி நோக்கினால் பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்கு போதல்,தலைநகர் நோக்கி வீட்டுக்கு வேலைக்குச் செல்லுதல், ஆண்கள் 'ஆட்டோ' ஓட்டுதல், கொழும்பில் கட்டடவேலையாட்களாக தொழில் செய்தல், கடைச்சிப் பந்திகளாக, வேலை செய்தல் எனும் தொடருக்குள் செல்கிறார்கள்.
பாடசாலை கல்வியை முடித்து வெளியேறுவோர் உரிய தொழில் கல்வியை பெற்றுக்கொள்ளும் வாய்ப்புகள்குறைவாகவே உள்ளன. ஹட்டனில் அமைந்துள்ள தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையம், நோர்வூட் நிவ்வெளியில்அமைந்துள்ள தொழில் பயிற்சி நிலையம் தவிர்ந்த ஏனைய தொழிற்பயிற்சி நிலையம் தவிர்ந்த ஏனையதொழிற்பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழியில் கற்கும் வாய்ப்புகள் இல்லை.
மாவட்டங்கள் தோறும் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. மலையகத் தமிழர்கள் அதிகமாக இருக்கும் மாவட்டமானநுவரெலியா தொழில்நுட்பக் கல்லூரியிலேயே 'வீட்டுப் பாவணை இலக்ரோனிக்' பொருட்களின் திருத்த வேலைகள்பாடநெறியில் மாத்திரம் வெறும் 15 மாணவர்கள் தமிழ் மொழியில் கல்வி கற்கிறார்கள். ஆனால், அங்கு (National Certificate in Accounting Technology - NCAT) எனும் கணக்கியல் கார் தொழில் கல்வி முதல் மோட்டார் வாகனம் திருத்துதல்வரை பல பாடநெறிகள் உள்ளன. இதனால் தொழில் கல்வியையும் புதிய அரசாங்கம் இலவசக் கல்வியாகவேஅறிவித்துள்ளது. வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள் என ஆவணங்களைச்சமர்ப்பித்தால் அவற்றுக்கு மாதாந்தம் சிறு கொடுப்பனவுகளையும் செய்வதற்கான ஏற்பாடுகள் உள்ளன.
இந்த வாய்ப்பு வசதிகளை எல்லாம் தமிழ்மொழி மொழிமூல மாணவர்கள் பெற்றுக்கொள்ள முதலில் 'தொழில்நுட்பகல்லூரிகளில்' தமிழ் மொழியில் பாடநெறிகள் ஆரம்பிக்கப்பட வேண்டும். ஆனால், தமிழ் மொழியில் தங்களது பாடநெறிகளை போதிப்பதற்கு 'தகுதியான போதனா ஆசிரியர்கள்' இல்லை என்றே நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.மலையகப் பாடசாலைகளில் கணித, விஞ்ஞான பாடங்களுக்கான ஆசிரியர்களுக்கான பற்றாக்குறை தொடர்பிலேயேபல்வெறு வாதப் பிரதிவாதங்கள் நடைபெற்றுக்கொண்டு இருக்கும் நிலையில் தொழில்கல்வி போதனா ஆசிரியர்களின்பற்றாக்குறை குறித்தும் நாம் சிந்திக்க வேண்டியுள்ளது.
ஹற்றன் தொண்டமான் தொழில்நுட்ப பயிற்சிக் கல்லூரியில் இந்திய அரசின் அனுசரணையில் சிலபாடநெறிகளுக்சிகு போதனாசிரியர்கள் கடந்த ஆண்டுகளில் சேவையாற்றியுள்ளனர். அவர்களைத் தொடர்ந்தும்நீடிப்பதிலும் இப்போது எழுந்துள்ளது. ஏனெனில் அவர்களுக்கான கொடுப்பனவுகளையும் இந்திய அரசே வழங்கிவந்துள்ளது. தொடர்ச்சியாக நாம் அவர்களிடம் தங்கியிராமல் அவர்களிடம் கற்றவர்கள் போதனா ஆசிரியர்களாகமாறும் உரிய தகுதியினைப் பெற்றுக்கொள்வதே நமது இளைஞர்களிடத்தில் இருக்க வேண்டிய பண்பு.
எனவே, புதிய ஆய்வுகள் என்பது இருக்கின்ற தோட்டத் தொழிலாளர்களுக்கு பொருத்தமான தீர்வு ஒன்றைப்பெற்றுக்கொடுப்பதோடு, கௌரவம் நாடும் புதிய தலைமுறையினருக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்கும் ஏற்பாடுகளைச் செய்வதாகும்.
(உருகும்)
நன்றி - வீரகேசரி
நன்றி - வீரகேசரி
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...