Headlines News :
முகப்பு » » அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மொழியுரிமைகள் - த.மனோகரன்

அரசியலமைப்பில் வழங்கப்பட்டுள்ள மொழியுரிமைகள் - த.மனோகரன்


த.மனோகரன்(உதவிச் செயலாளர் (தொழில் உறவுகள்) தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சு)
நமது நாட்டின் இனங்களுக்கிடையே உறவு சீர்கெடவும் நம்பிக்கையீனம் ஏற்படவும் அதன்மூலம் இனரீதியாகப் பல்வேறு பிரச்சினைகள் தோன்றி இன்று சர்வதேசம் வரை உள்நாட்டுப் பிரச்சினை பகிரங்கமா கவும் வழிவகுத்தது மொழிப்பிரச்சினையே. அதாவது இந்நாட்டின் இரு தேசிய மொழி களில் ஒன்றான தமிழ் மொழியைப் புறந் தள்ளி மற்றைய மொழியான சிங்களத்தை மட்டும் நாட்டின் ஒரே நிர்வாக மொழியாக அரச கருமமொழியாகப் பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவந்து நிறைவேற்றி அதனை நடைமுறைப்படுத்த முயன்ற மையே அதுவாகின்றது.

1956 ஆம் ஆண்டு இனப்பிளவுக்கு வழி வகுத்த குறித்த மொழிச் சட்டம் நாட்டில் பல பிரச்சினைகளை வன்முறைகளை, அழி வுகளை ஏற்படுத்தியதன் தாக்கம் உணரப் பட்டு 1987 இல் அது மீளாய்வு செய்து மாற்றப்பட வேண்டிய கட்டாய நிலை உருவாக்கப்பட்டது. இலங்கைக்குள்ளும் வெளியிலுமிருந்து மேலெழுந்த கோரிக் கைகள் மற்றும் அழுத்தங்களால் பாராளு மன்றத்தால் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் முப்பதாண்டுகளுக்குப் பின் கைவிடும் நிலை ஏற்பட்டது.

ஒரு நாட்டின் உரிமையுள்ள குடிமகனுக்கான அங்கீகாரமாக இருப்பவற்றில் அந்நாட்டில் அவனது தாய் மொழிக்கு ரிய உரிமையும் என்பது குறிப்பிடத்தக் கது. மற்றையது அவனது சமயம். இவ்வாறுள்ள நிலையில் தற்போதுள்ள நாட்டின் அரசியலமைப்பின் விதிகளின் படி தமிழ் மொழிக்கும் நாட்டில் சமத்துவ உரிமை சட்டப்படி வழங்கப்பட்டுள்ளது. 1956 இல் விடப்பட்ட தவறு அல்லது செய்யப்பட்ட குற்றம் முப்பது ஆண்டுகளுக்குப் பின் அதாவது 1987 மற்றும் 1988 களில் திருத் தப்பட்டாலும் கூட மேலும் முப்பது ஆண் டுகள் கடந்துவிட்ட நிலையில் இன்றும் முற்றாகத் திருத்தப்படவில்லை. நடை முறைப்படுத்தப்படவில்லை. அரசியலமைப்பின் கண்டு கொள்ளப்படாதவிடயமாகவேயுள்ளது.

எது எவ்வாறிருந்தபோதிலும் நமது நாட்டில் நமது தாய்மொழிக்கு அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டுள்ள சட்டரீ தியான உரிமைகள் எவையென்பதை நாம் அறிந்து வைத்திருப்பது அவசியமாகும். மொழியுரிமை தொடர்பில் அறிவின் மையும் தமிழ் மொழிப் பயன்பாட்டுக்கு உள்ள தடைகளிலொன்றாகும்.

அரசியலமைப்பின் 4 ஆம் அத்தியாயம் மொழிகள் தொடர்பான அடிப்படைச் சட் டமாக அமைந்துள்ளது. அதிலுள்ள ஏற்பாடுகள் 1987 ஆம் ஆண்டின் 13 ஆவது அரசியலமைப்புத் திருத் தத்தின் மூலமும் 1988 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் 16 ஆவது திருத்தத்தின் மூலமும் திருத்தத்திற்குள்ளாக் கப்பட்டுள்ளது. மொழியுரிமை அடிப்படை உரிமையென்று அரசியலமைப்பின் 3 ஆம் அத்தியாயத்தின் 12(2) ஆம் உறுப்புரையில் கூறப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழான 18(1) மற்றும் 18(2) ஆம் உறுப்பு ரைகளின் படி சிங்களமும் தமிழும் இலங்கையின் அரசகரும மொழிகள் ஆதல் வேண்டுமென்று கூறப்பட்டுள்ளது. அரச கரும மொழிகள் என்னும் போது அது நாட்டின் நிர்வாக மொழியாகச் செயற்படும் உரிமை கொண்டது என்று பொருள்படும். அதாவது ஒரு குடிமகன் தனது அன்றாடக் கடமைகளையும் அரசாங்கத்துடனான தொடர்புகள், பரிமாற்றங்களைத் தான் விரும்பும் நிருவாக மொழியில் எதுவித தயக்கமோ தடையோ, தாமதமோ இன்றி திருப்திகரமாக நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பது பொருளாகும். சட்டம் உள்ளது அதை நடைமுறைப்படுத்த உரிய, உகந்த செயல்திட்டம் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்பதே கசப்பான உண்மையாகும்.

அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தில் 19 ஆம் உறுப்புரையில் இந்நாட்டின் அதாவது இலங்கையின் தேசிய மொழிகள் சிங்களமும், தமிழும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது. இதன்மூலம் குறித்த இரு மொழிகளையும் தாய் மொழியாகக் கொண் டவர்கள் இந்நாட்டின் தேசிய இனத்தவர்கள் என்று அரசியலமைப்பினுடாகத் தெளிவாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த உண்மையை அதாவது நாட்டின் இரு மொழிகளும் தேசிய மொழிகள், அவற்றின் உரித்தாளிகளான இரு இனத்தவர்கள் இந் நாட்டின் தேசிய இனத்தவர்கள் என்பதை இருசாராரும் சரியாகப் புரிந்து கொள்ளாத நிலையே காணப்படுகின்றது.

1978 ஆம் ஆண்டின் தற்போது நடைமு றையிலுள்ள அரசியலமைப்புக்கு 1987 இல் மேற்கொள்ளப்பட்ட மொழியுரிமைகள் பற்றிய திருத்தங்களுக்கு மேலதிகமாக 1988 இல் 16 ஆவது திருத்தம் கொண்டுவரப் பட்டது. அதில் நாடு முழுவதும் அதாவது இலங்கை முழுவதும் சிங்களமும் தமிழும் நிர்வாக மொழிகளாக இருத்தல் வேண்டு மென்று குறிப்பிடப்பட்டுள்ளது. குறித்த 16 ஆவது திருத்தத்தின் 22(1) என்ற உறுப் புரையே அதுவாகும். குறித்த திருத்தத்தின் படி நாடு முழுவதும் நிர்வாக மொழிகளாக ஏற்கப்பட்டிருந்த போதும் வடக்கு கிழக்கு மாகாணங்களிரண்டினதும் முதன்மை நிர்வாக மொழி தமிழாகவும் ஏனைய ஏழு மாகாணங்களினதும் முதன்மை நிர்வாக மொழி சிங்களம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இருந்த போதிலும் முதன்மை நிர்வாக மொழியாகப் பயன்பாட்டிலுள்ள மாகாணங்களில் குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகளில் குறிப்பிட்ட அளவிலான மற்றைய மொழியினர் உள்ளபோது அப்பிரதேச செயலகப் பிரிவுகளை இருமொழி அதாவது சிங்களமும், தமிழும் நிர்வாக மொழியுரிமை கொண்ட இரு மொழிப் பிரதேச செயலகப்பிரிவுகளாக அரசியல மைப்பின் 16 ஆவது திருத்தத்தின் 22(1) உறுப்புரையின் கீழ் ஜனாதிபதி பிரகடனப்படுத்தலாம். அவ்வாறு பிரகடனப்படுத்தப் படும் பிரதேச செயலகப் பிரிவுகளில் நடை முறையில் இருமொழிகளும் சமத்துவம் கொண்ட மொழிகளாகவே கணிக்கப்பட வேண்டும்.

குறித்த அரசியலமைப்பின் 16 ஆவது திருத்தத்தின் 23(3) ஆம் உறுப்புரையின் கீழ் சிங்கள மொழி நிர்வாக மொழியாகப் பயன் படுத்தப்படும் பிரதேசமொன்றில் தமிழில் அல்லது தொடர்பு மொழியான ஆங்கி லத்தில் அரச அலுவலருடன் தொடர்பு கொண்டு தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள ஒருவருக்கு உண்டு.

உரிமையுண்டு. அதே உரிமை தமிழை நிர்வாக மொழி யாகக் கொண்ட மற்றைய மொழியினருக்கும் ஒருவர் ஏதேனும் அலுவலக முறையான இடாப்பை, பதிவேட்டை, வெளியீட்டை அல்லது வேறு ஆவணமொன்றை சட்டப்படி பார்வையிடுவதற்கும் பரிசீலிப்ப தற்கும் பிரதியைப்பெ ற்றுக்கொள்வதற்கும் உரிமை உள்ளபோது அதை சிங்களத்திலோ, தமிழிலோ அல்லது ஆங்கிலத்திலோ பெற் றுக்கொள்ளமுடியும். தேவைப்படும்போது அவற்றின் மொழிபெயர்ப்பைப்பெற்றுக் கொள்ளவும் முடியும்.


இருமொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக இதுவரை நாற்பத்தொரு பிரதேச செய லகப் பிரிவுகள் பெயரிடப்பட்டு அதிவி சேட வர்த்தமானிகள் மூலம் காலத்திற்குக் காலம் ஜனாதிபதிகளால் பிரகடனப்படுத் தப்பட்டுள்ளன. அவைபற்றிய விபரங்களை நாம் தெரிந்து வைத்திருப்பதன் மூலம் தமிழ் மொழிக்கும் நிர்வாக உரிமையுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அப்பாலுள்ள பிரதேச செயலகப் பிரிவுகள் பற்றி அறிந்து கொள்ளலாம்.

அரசியலமைப்பின் 22(1) உறுப்புரையின் கீழ் 1999 நவம்பர் மாதம் 12 ஆந் திகதிய அதிவிசேட வர்த்தமானி மூலம் அன்றைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமா ரணதுங்க பின்வரும் பன்னிரெண்டு (12) பிரதேச செயலகப் பிரிவுகளை இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தியுள்ளார்.

மத்திய மாகாணத்தின் நுவரெலியா மாவட்டத்தின் அனைத்து ஐந்து பிரதேச செயலகப் பிரிவுகளான அம்பேகமுவ, நுவரெலியா, கொத்மலை, ஹங்குரங்கெற்ற, வலப்பனை ஆகியவையும் ஊவா மாகா ணத்தின் பண்டாரவளை, எல்ல, ஹல்தும் முல்லை, ஹாலிஎல, அப்புத்தளை, பசறை, மீகாஹகிவுல ஆகிய ஏழுமே அவையாகும். குறித்த வர்த்தமானி இலக்கம் 1105/25 ஆகும்.

தொடர்ந்து 2001.02.14 ஆந் திகதிய 1171/15 இலக்கம் கொண்ட அதிவிஷேட வர்த்தமானி மூலம் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தின் திம்பிரிகஸ்யாய மற்றும் கொழும்பு ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளை இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக அன்றைய ஜனாதிபதி சந்திரிகா குமாரணதுங்க பிரகடனப் படுத்தியுள்ளார்.

அவ்வாறே 1283/3 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானி மூலம் 2003.04.07 ஆந் திகதி ஊவா மாகாணத்தின் பதுளை மாவட்டத்தின் பதுளை, லுணுகலை, வெலிமடை, சொரண தோட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளும் தென்மா காணத்தின் காலிமாவட்டத்தின் காலி நகர் சூழ் பிரதேச செயலகப் பிரிவும் மேல்மாகா ணத்தின் களுத்துறை மாவட்டத்தின் பேரு வளைப் பிரதேச செயலகப் பிரிவும் மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தின் அக் குறணை, பன்வில, தெல்தோட்டை, பஸ் பாகே, கோறளை, உடபலாத்த ஆகிய ஐந்தும், வடமேல் மாகாணத்தின் புத்தளம் மாவட்டத்தின் முந்தல், கல்பிட்டி, புத் தளம், வண்ணாத்திவில்லு ஆகியவையும் அன்றைய ஜனாதிபதி சந்திரிகாவினால் தமிழ்மொழியும், சிங்கள மொழியும் நிர்வாக உரிமை கொண்ட இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப் படுத்தப்பட்டுள்ளன.

தொடர்ந்து 2012.10.10 ஆந் திகதிய 1776/16 இலக்கம் கொண்ட அதிவிசேட வர்த்தமானியின் மூலம் மேல் மாகாணத்தின் கொழும்பு மாவட்டத்தின் தெஹிவளை கல்கிசை, மத்திய மாகாணத்தின் கண்டி மாவட்டத்தின் கங்கஇஹல, கோறளை, கண்டிநகர் சூழ் பிரதேசம் மற்றும் கங்க வட்ட கோறளை, மாத்தளை மாவட்டத்தின் மாத்தளை பிரதேச செயலகப் பிரிவு ஆகியவையும் வடமத்திய மாகாணத்தின் பொலன்னறுவை மாவட்டத்தின் லங்காபுர, வேலிகந்த ஆகிய இரு பிரதேச செயலகப் பிரிவுகளும் அநுராதபுர மாவட்டத்தின் கெக்கிராவ பிரதேச செயலகப் பிரிவும் சப்ரகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி, பலாங்கொடை மற்றும் கேகாலை மாவட்டத்தின் மாவனெல்லை பிரதேச செயலகப் பிரிவும் இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுக ளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

அவற்றுடன் வடமாகாணத்தின் வவுனியா தெற்கு (சிங்களம்) பிரதேச செயலகப் பிரிவும் கிழக்கு மாகாணத்தின் அம்பாறை மாவட்டத்தின் தெ கியத்த கண்டிய பிரதேச செயலகப் பிரிவும் இருமொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. குறித்த 1776/16 இலக்க வர்த்தமானி மூலம் இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாக அவை பன்னிரெண்டையும் பிரகடனப்படுத்திய வர் அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதுவரை வர்த்த மானி மூலம் பிரகடனப்படுத்தப்படாத போதும் மேலும் முப்பத்தொரு பிரதேச செயலகப் பிரிவுகள் இரு மொழிப் பிரதேச செயலகப் பிரிவுகளாகத் தகைமை கொண்டவையாக இனங் காணப்பட்டுள்ளன என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.


தமிழ் மொழிக்கும் நிர்வாக உரிமை கொண்ட மேற்குறித்த நாற்பத்தொரு பிரதேச செயலகங்களூடாக தமிழ் மொழியிலும் 5 D51 அன்றாடக் கடமைகளை ஆற்றிக் கொள்ளும் உரிமையைப் பெற்று உறுதிப்படுத்திக் கொள்ளும் பொறுப்பு அப்பகுதிகளைச் சேர்ந்த தமிழைத் தாய்மொழியாகக் கொண்டவர்களின் பொறுப்பாகும். அது உரிமையும் கூட அந்த மொழியுரிமையை நிறைவேற்றத் தடையாயுள்ள காரணிகள் ஆராயப்பட்டு அவற்றைக் களைய வழிகாணப்பட வேண்டும். வெறுமனே வாளாவிராது தட்டினால் திறக்கப்படும். கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற வாசகத்தை மனதிலிருத்தி செயற்படுவது மொழியுரிமைக்குக் குரல் கொடுப்பது நமது பொறுப்பாகும்.

நன்றி - வீரகேசரி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates