Headlines News :
முகப்பு » , » மனோவுக்கு உப்பு.. புளிப்போடு கொடுத்திருக்கிறேன் என்கிறார் ஞானசாரர் (வீடியோவுடன்) - ஆனந்தன்

மனோவுக்கு உப்பு.. புளிப்போடு கொடுத்திருக்கிறேன் என்கிறார் ஞானசாரர் (வீடியோவுடன்) - ஆனந்தன்


மனோ கணேசன் தனது முகநூல் குறிப்பில் ஏதோ ஞானசார தேரர் கூறியதை எதிர்த்து மறுப்பு கூறியதைப் போல கதை விட்டுள்ளார். அவரது முகநூலில்
“எனக்கு சிங்கள மக்களை பற்றி எவரும் எடுத்து கூற அவசியமில்லை; மும்மொழி சடம்மும், கொள்கையும் இந்நாட்டு மொழிச்சட்டம், மொழிக்கொள்கை; சிங்களமும், தமிழும் ஆட்சி மொழிகள், தேசிய மொழிகள், ஆங்கிலம் இணைப்பு மொழி; அதுதான் அரசியலமைப்பு சட்டம்; அதை எவரும் நினைத்த மாதிரி மாற்ற முடியாது; சட்டத்தை மாற்ற மக்கள் வரமும், வாக்குகளும், தேர்தலில் வெற்றியும் பெற வேண்டும் எனக்கூறினார்.” என்கிறார்.
மேற்படி சம்பவத்தை ஞானசார ஆதரவாளர்கள் 24 நிமிட வீடியோவையும் மனோ கணேசனின் முகநூலில் 28 நிமிட வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்கள். இதில் எங்கேயும் மனோ கணேசனின் மேற்படி வீரமறுப்பைக் காண முடியவில்லை. ஞானசாரருக்கு அடங்கிப் போன நூற்றில் ஒன்று தான் மனோ கணேசன் என்பதை அவர் மறைக்கலாம். எங்களால் மறைக்க முடியாது.

அதேவேளை கட்டடத்துக்கு வெளியில் காத்திருந்த ஊடகவியலாளர்களில் ஒருவர் மனோ கணேசனிடம்
“நீங்கள் இந்த பதவிக்கு தகுதியற்றவர் என்று ஞானசாரர் தேரர் கூறியிருக்கிறாரே” என்று கேட்டபோது, அதற்கு மனோ கணேசன்..
“அவர் அப்படியொரு கருத்துடன் வந்திருக்கக் கூடும் ஆனால் போகும்போது அந்த கருத்தை மாற்றிக்கொண்டிருக்கக் கூடும்” என்கிறார். 


இந்த வீடியோ பதிவைப் பார்த்தால் தெரியும்; மனோ கணேசன் ஒரு இடத்தில் நீங்கள் என்னை இந்தப் பதவிக்கு தகுதியற்றவர் என்று கூறியிருக்கிறீர்கள் என்று கூறியபோது. (1:15 நிமிடத்தில் இருந்து காணவும்)

ஞானசார தேரர் உடனடியாகவே எகத்தாளமாக “தாய் மேல் ஆணையாக அப்படித்தான்” என்கிறார். அருகில் இருக்கும் பிக்குமாரும் அதைக் கேட்டு நகைக்கிறார்கள்.  நடந்ததை திரிக்க அமைச்சர் மேற்கொள்ளும் முயற்சிகளை எவரும் ஆராயமாட்டார்கள் என்று நம்புகிறார் போலும்.

ஞானசார தேரர் இன்று இன நல்லிணக்கத்துக்கு மிகப் பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருபவர்களில் முதன்மையானவர். அப்பேர்பட்டவரே நேரடியாக வந்து "சகவாழ்வு - நல்லிணக்கத்துக்கு" அதுவும் சம்பந்தப்பட்ட அமைச்சரிடமே அச்சுறுத்தல் விடுக்கிறார். சில இடங்களில் ஞானசார தேரர் முஸ்லிம்கள் குறித்து குற்றம் சாட்டுகின்ற இடங்களில் அவற்றைக் கவனிப்பதாகக் கூறுகிறார். ஆனால் இதுவரை அப்பேர்பட்ட ஆயிரக்கணக்கான குற்றச்சாட்டுகளுக்கு உரிய ஒருவரை "சகவாழ்வு - நல்லிணக்க" அமைச்சரால் ஒன்றும் பண்ணமுடியவில்லை  என்பதை இங்கு நினைவில் கொள்ளவேண்டும். சிங்கள பௌத்த பேரினவாதத்துக்கு அடிபணிந்ததை ஒத்துக்கொள்ளாவிட்டாலும் பரவாயில்லை. அதனைத் தான் வீரத்தனமாக எதிர்கொண்டது போல காட்டும் பொய்மையை அமைச்சர் தவிர்க்கலாம்.  

மேற்படி சந்திப்பை நடத்திவிட்டு அந்த அமைச்சுக் காரியாலயத்தின் வெளியே காத்திருந்த ஊடகவியாளர்களிடம் ஞானசார தேரர் உள்ளே நிகழ்ந்ததை விளக்கிய போது..
“இன்று மனோ கணேசனுக்கு உப்பு, புளிப்போடு நன்றாக கொடுத்து விட்டுத் தான் வந்தேன்” என்று நக்கலடித்தார்.
உண்மையில் அது தான் நடந்தது.
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates