(திரு. லெனின் மதிவானம் அவர்களால் சேகரிப்பட்ட கட்டுரை)
காங்கிரஸ் தோன்றுவதற்கு முன், இந்திய இலங்கை அரசியல் அரங்கில் மூவர் ஆதிக்கம் செலுத்தினர். ஆம்மும்மூர்த்திகளுள் திரு. மேத்தாவும் ஒருவர். அவர் திரு. பெரிசுந்தரத்தின் ஆற்றல்படைத்த தளபதியாகவும், திரு. நடேசய்யரின் ஜன்மவிரோதியாகவும் இருந்தார். பெரும்பாலும் அரசியல்வாதிகளிடம் காணப்படும் மனநிதானமோ அல்லது வசிகரமான அங்க அசைவுகளோ அவரிடம் காணப்படவில்லை.
கம்பீரமான தோற்றம்
‘தலைகுனியாதே’ என்ற அவருடைய மனப்பாங்கை காட்டும் பருத்த கம்பீரமான தோற்றமுடையவர் அவர். ஆம்மைத்துழும்புகளைக் கொண்ட அவருடைய முகத்திலே பல்துலக்கும் பிரஷ் போன்ற ஹிட்லர் மீசை; நிமிர்ந்த தலை; நரையாக மாறும் தலைமயிர் ; தவிர்க்க முடியாத முகச்சுளிப்பு; இவை சமரசத்திற்கு இணங்காது, சவால் விடுக்கும் ஒரு தோற்றத்தை அவருக்கு உடன் வழங்கியன.அவரின் தோற்றம் ‘உடை அல்லது உடைபடு’ என்ற அவருடைய சொந்த வார்த்தைகளையே மீண்டும் எடுத்துக் கூறுவதாயிருந்தது.
உண்மையில் காங்கிரஸ் அமைக்கப்பட்ட பின்தான் அவருக்கும் தொழிலாளர்களுக்கும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. தோழிலாளர்களுடைய ‘பாசறை’ வாழ்க்கை நிலைமைகளை அவர் நன்கறிந்திருந்ததும், அவர்களுடைய குணநலன்களை வளரவிடாது தடுத்து வந்த சகல கேடுகளையும் எதிர்த்து அவர் அஞ்சாநெஞ்சத்துடன் நடத்திய வீரப் போராட்டமும் அவருக்குத் தொழிலாளர்களுடைய பேரபிமானத்தையும் பெற்றுக் கொடுத்தன.
தொழிலாளர் பிரதிநிதி
அவர் எமது தொழிலாளர் அமைப்பு முறையில் உள்ள அநீதிகளைக் கண்டித்தபோதே, உரிமைகளைக் கேட்குமுன் அவர்கள் தமது கடமைகளைச் செய்ய வேண்டும் என்று தொழிலாளர்களுக்கு இடித்துரைத்தார். “அவர்கள் நடத்தும் விதம் கடவுளுக்கும் மனிதனுக்கும் ஏற்காது என்பது உண்மையே. ஆனாலும் நீங்கள் உங்கள் முதலாளிகளைக் கொள்ளையடிக்க வேண்டும் என்று அதற்கு அர்த்தமல்ல” வென அவர் கூட்டங்களில் தொழிலாளர்களுக்கு கூறுவார். வாயில்லா பாமர மக்கள் தங்களுடைய மனக்கருத்துக்களைத் தங்கள் சார்பில் எடுத்துரைக்கும் பிரததிநிதியாக அவர் விளங்குவதைக் கண்டு, அவர் சொல்லுக்கு செவிசாய்த்தனர். தான் ஒரு மாபெரும் தலைவனல்லவென்பதை அவர் நன்குணர்திருந்தார் ; அத்துடன், இத்தகைய பிரபலத்தையும் அவர் நாடவில்லை. ஓளி வீசும் மின்வெட்டு வார்த்தைகளுக்குப் பொதப் பிரசங்கங்களிலே தனிமதிப்புண்டெனினும், தொழிலாளர்கள் அவை உண்டாக்கும் பெறுபேறுகளிலே கண்ணுங்கருத்துமாயிரந்தார்கள். பெரும்பாலும் திரு. மேத்தாவின் வெண்கல ஓசை கிராமபோன் ஓசையாக மாறிக் கேட்பவர்களைத் தாலாட்டத் தொடங்கிவிடும். ஆனாலும் தொழிலாளர்கள் தங்கள் தகராறுகளிலும் வாழ்க்கை நிலைமைகள் சம்பளம் ஆகிய பிரச்சiனைகளிலும் அவருடைய உதவியையே முதலில் நாடுவார்கள்.
தலைமைக்குரிய குணசீலங்கள்
கமிட்டி அறையாயிருந்தாலென், பொதுமேடையாயிருந்தாலென், வருடாந்த மகாநாட்டு மேடையாயிருந்தாலென் அவர் தமது நம்பிக்கைகாகவே போராடுவார். அவர் தமது கொள்கைகளை ஒரு போதும் விட்டுக் கொடுத்ததில்லை. அநேக சந்தர்ப்பங்களில் “ நான் உங்களுக்கு உண்மையாக கூறுகிறேன். அந்தப் பிரச்சனையில் தோல்வியடைந்ததால் நான் ஓர் அங்குலம் குறகிப்போவேன் என்று எண்ணவில்லை” என்று அவர் கூறியுள்ளார். உண்மையில் அப்படிபட்டவர் தான் திரு. மேத்தா. தம்மைவிட வயதுக் குறைந்தவர்களின் வியத்தில் அவர் துரைத்தன முறைகளைக் கையாண்டதும் அலட்சியமாயிருந்ததும் உண்மையே. ஆனால் அவர் உண்மையான தலைமை பூணுவதற்கு வேண்டிய குணசீலங்களும் கம்பீரத் தோற்றமும் உடையவராயிருந்தார்.
ஆரம்ப நாட்களில் அவர் காங்கிரஸின் கூட்டு காரியதரிசியாக இருந்தார். அவர் தமது கடமையைத் திறமையாகவும் செம்மையாகவும் செய்தார். தமது செல்வாக்குக்கு ஆபத்து ஏற்படக்கூடுமெனத் தோன்றிய போதும் காங்கிரஸ் அமைப்பில் கட்டுபாட்டையும் ஒழுங்கு முறையையும் நிலைநாட்டினார். ஆதலால் அந்த நாட்களில் காங்கிரஸ் பெருமதிப்பை பெற்ற ஸ்தாபனமாக விளங்கியதில் வியப்பொன்றுமில்லை.
திரு. மேத்தா பல ஆண்டுகளாகத் தட்டாரத் தெருவில் வசித்துவந்தார். பகற்பொழுதில் தமது நியாயதுரந்தரர் தொழிலைச் செய்தார். இராப்பொழுதை காங்கிரஸ் சம்பந்தப்பட்ட வேலைகளுக்கும் நூல்களைப் படிப்பதற்கும் எழுதுவதற்கும் பயன்படுத்தினார். ஆவர் இராப்பொழுதில் சீக்கிரமே உணவுகொண்டபின் தமது தவிர்க்கமுடியாத சுருட்டுடன் உட்கார்ந்து வேலையைத் தொடங்குவார். இரவில் பல மணி நேரம்வரை படித்து, நூல்களின் ஓரப்பகுதிகளில் ஏராளமான குறிப்புகளை எழுதிவைப்பார். அவர் அரசியல் விவகாரங்களைப் பற்றியும் தொழிற்சங்க விவகாரங்களைப் பற்றியும் எழுதியவை தனிச் சிறப்புடையன. முற்றும் நாடுகளில் உள்ள தொழிலாளர் பிரச்சனைகளை அவர் ஆழ்ந்து ஆராய்ச்சி செய்ததால், அவற்றில் ஒரு நிபுணரானார்.
கம்யூனிஸத்தின் விரோதி
அவர் தாம் கம்யூனிஸத்தின் விரோதி என்று அடிக்கடி கூறுவார். ஆனால் தொழிலாளர்களின் இன்னல்களையும் தொல்லைகளையும் தீர்ப்பதற்குப் புரட்சி தான் ஒரே ஒரு வழி என்றால் அதனைத் தாம் ஏற்பதாகவும் கூறினார். அவர் மோசமான சட்டங்களை எதிர்த்து, குறிப்பாக அத்துமீறிப்பரவேசிப்பது குற்றம் எனும் சட்டத்தையும் தோட்டங்களுக்குள் செல்லும் உரிமையைத் தடைசெய்யும் சட்டத்தையும் சங்கம் அமைக்கும் உரிமையை மறுக்கும் சட்டத்தையும் முழுமூச்சாக எதிர்த்துப் போராடினார்.
அவர் 1947-ம் ஆண்டு முதலாவது பாராளுமன்றத் தேர்தலில் பழுத்த தொழிலாளர் தலைவராகிய திரு. நடேசஐயரை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்தியாவிலிருந்து வந்த குடியேறிய ஏழு இலட்சம் மக்களின் ‘குரலாக’ அவர் விளங்கினார். ஆவரது பேச்சுகளைச் சபை மரியாதையோடு கேட்பதுண்டு. காரணம் அவருடைய பேச்சுகளில் தொனித்த துணிவும் சிறப்பும்தான்.அவருடைய பேச்சுகள் எப்போதும் நன்றாகயிருந்தனவெனினும், அடிக்கடி தொழிலாளர்களின் ‘பாசறை’ வாழ்க்கை நிலைமைகளையே சுட்டிக்காட்டுவனவாயிருந்தன. தோழிலாளர்களுடைய துயர வாழ்க்கை அவருடைய மனத்தில் நிரந்தரமாகப் பதிந்துவிட்டது.
கடும் உழைப்பும் ஆழ்ந்த படிப்பும்
திரு. மேத்தாவுடன் நெருங்கிப் பழகியவர்கள் அவர் துணிந்து கருமமாற்றினார் என்பதை ஐயமின்றி ஒப்புக்கொள்வார்கள். அவர் தமது கடம் உழைப்பாலும் ஆழ்ந்த படிப்பாலும் திட்டமிட்ட வாழ்க்கையாலும் தான் அந்த உயர்ந்த நிலையை அடைந்தார்.
திரு. மேத்தாவின் மனைவி அகாலத்தில் இறந்தபடியால் அவருடைய வாழ்க்கை சௌகாரியங்கள் குறைந்தன. அவர் தமது உடல் நலத்தை சரியாகப் பேணாததால் சில காலமாக அவர் கஷ்டப்பட்டார். அவர் செய்து வந்த காங்கிரஸ் சம்பந்தப்பட்ட வேலைகள் அவருடைய உடல் நிலையை மேலும் மோசமாக்கின.
1949-ம் ஆண்டு டிசம்பர் மாதம் எட்டாம் திகதி- அன்றுதான் திரு. மேத்தாவுக்குத் திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. அவருடைய படுக்கறைக்கு அவரது நண்பர்களும் சுற்றத்தினரும் ஓடோடிச் சென்றார்கள். திரு மேத்தாவின் ஒரே ஒரு மகனான கெயித்தன் அழுது புலம்பிக் கொண்டிருந்தார். “மகனே! கவலைப்படாதே! நீ நலம் பெறுவாய்” என்று திரு. மேத்தா தமது வழக்கமான குரலில் கூறினார். அவர் கையில் சிலுவையுடன் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தார். வழக்கனம் போலவே அவர் உயிருக்காக வீரப் போராட்டம் நடத்தினார். முரணத்திலும் அவர் முகத்திலே கண்டிப்பும் கண்ணியமும் காணப்பட்டன. இருட்டியதும் அவர் உயிர் பிரிந்தது.
தீரமிக்க வீரர்: தனித் தலைவர்
தோட்டத் தொழிலாளர்கள் ஒரு நாள் ஹர்த்தால் அனுஷ்டித்தார்கள். வந். பிதா பீட்டர்பிள்ளை ‘கத்தோலிக்கத’ தூதுவன்’ என்னும் பத்திரிகையில் அவருக்கு புகழ் மாலை சூட்டினார். பாராளுமன்றமும் நீதிமன்றங்களும் தொழிற்சங்களும் அவருடைய மறைவுக்குத் துக்கம் தெரிவித்தன.
அவர் விட்டு சென்ற காலி இடத்தை இன்றுவரையும் நிரப்புவார் எவரும் இல்லை. இந்தியாவிலே சாப்ருவுக்கு, ஜெயக்கர் எவ்வாறு இருந்தாரோ அவ்வாறே திரு. பெரிசுந்தரத்திற்குத் திரு. மேத்தா இருந்தார். திரு. மேத்தா ஒரு நல்ல கத்தோலிக்கர், தீரம் பொருந்திய விரர், பண்புநிறைந்த மனிதர். அவர் தமது சொந்த வழியிலே ஒரு தலைவர்.
இலங்கை முழுவதிலும் உள்ள காங்கிரஸ் காரியாலயச் சுவர்களை அலங்கரிக்கும் திரு. மேத்தாவின் படங்கள் தம் மகிமையை இழக்கலாம். ஆனால் அவர் மறைந்து விட்ட போதிலும், அவர் தமது மக்களுக்குச் செய்த தொண்டு என்னென்றும் நிலைத்திருக்மென்பதுதிண்ணம்.
(1958)
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...