தமிழ்க் கவி அவர்கள் தனது முகநூலில் இப்போது இந்த சர்ச்சைக்கு பதில் அளித்திருக்கிறார். அந்தக் கட்டுரையை கலாச்சாரப் பேரவைக்கு கொடுத்து பல நாட்கள் ஆகிவிட்டதென்றும். அதில் திருத்தங்கள் செய்வதாயின் தன்னிடம் அது பற்றி தெரிவிக்கும்படியும் கேட்டிருந்ததாகவும் கூறியிருக்கிறார்.
தனக்கு இன்னமும் அதன் பிரதி கூட கிடைக்கவில்லை என்றும் தான் கொடுத்திருந்த கட்டுரைக்கும் வெளியிடப்பட்ட கட்டுரைக்கும் இடையில் வித்தியாசம் இருக்கலாம் என்கிற சந்தேகம் எழுந்திருப்பதாகவும் அவர் தெரிவித்திருப்பது கவனிக்கத்தக்கது. நமக்கு எழும் கேள்வி இதுதான்.
- தமிழ்க்கவி எழுதியவற்றில் எது அகற்றப்பட்டிருக்கிறது?
- எதில் மாற்றங்கள் செய்யப்பட்டிருக்கிறது.
- எது அவரின் அனுமதி இல்லாமல் சேர்க்கப்பட்டிருக்கிறது.
- இவ்வளவு திரிக்கப்பட்டிருந்தால் மலையக மக்களுக்கு எதிராக திரிக்கப்பட்டிருப்பது எது?
- அல்லது தமிழ்க்கவி மலையக மக்கள் பற்றி எழுதியது சரியாகத் தான் வெளியிடப்பட்டு இருக்கிறதா?
இதற்கான பதிலை தமிழ்கவி அவர்கள் தான் வெளியிடவேண்டும். இந்த சர்ச்சைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தார்மீக பொறுப்பு இனி தமிழ்க் கவியிடமே விடப்படுகிறது.
அவரின் கட்டுரையின் உள்ளடக்கம் வன்னி வாழ் மலையக மக்கள் பற்றிய வரலாற்றுக் குறிப்பைப பற்றியதாக இருந்தாலும் சில இடங்களில் மலையகத்தவர் பற்றி கூறிய விதம் சர்ச்சைக்குரியதே. அக்கருத்துக்களுக்கு கண்டனம் தெரிவித்தவர்களில் சிலர் இதை “வஞ்சகப் புகழ்ச்சி” என்றும் எழுதியிருந்ததையும் சரி செய்ய வேண்டிய கடமை அவருக்கு உண்டு.
அதற்கும் அவருக்கும் தொடர்பிருக்கிறதா இல்லையா என்பதை அவர் விளக்க வேண்டிய பொறுப்பு உண்டு. அவர் அப்படித்தான் எழுதியிருந்தார் என்றால் அதற்கான விளக்கத்தை எல்லோரையும் போல நாங்களும் எதிர்பார்க்கிறோம்.
பல இடங்களில் இது மலையகத்தவருக்கும் வடக்கை சேர்ந்தவர்களுக்கும் இடையிலான மனக்கசப்புகளையும், வெறுப்புணர்ச்சியையும் பரஸ்பரம் கக்குகின்ற போக்கை அவதானிக்க முடிகிறது. இது மோசமாக ஆகிவிடக்கூடாது என்கிற நோக்கத்திலேயே இந்த நெருப்பைத் தணிப்பதற்காக; வெளியிடப்பட்ட கட்டுரையின் முழு வடிவத்தையும் வெளியிட்டோம். இந்த 24 மணி நேரத்துக்கும் அந்தத் தீ தணிந்ததே தவிர அணையவில்லை.
இன்றைய சமூக ஊடகங்கள் வெறுந் தணலையும் எரிமலையாக்க முடியும் என்பதை பல தடவைகள் நிரூபித்து இருக்கின்றன. இந்த சர்ச்சை அந்தளவு தூரம் கொண்டு போய் நிறுத்தி விடக்கூடாது. தமிழ்ச் சமூகத்தின் ஒற்றுமைக்கு ஒரு பிரிகோட்டை இது நிகழ்த்தி விடக்கூடாது.
சமூகத்தில் சாதாரணர்கள் எறிந்துவிட்டுச் செல்லும் சுடுசொல்லையும் கடந்து விட்டு போய்விட முடிகிறது. ஆனால் பலரால் அறியப்பட்ட பிரமுகர்கள் என்ன பேசுகிறார்கள், என்ன செய்கிறார்கள் என்பதை உன்னிப்பாகவே சூழ உள்ளவர்கள் கவனித்து வருகிறார்கள்.
ஒரு சமூகம் பற்றிய விடயத்தை தெரிவிக்கையில் தனிப்பட்ட விடயமாகவும் எடுத்துக் கொள்ள மாட்டார்கள். அதைத் தெரிவித்தவரின் சமூகப் பின்புலம் எதுவோ அதன் பிரதிநிதியாகவும், அச்சமூகத்தின் கருத்தாகவும் எடுத்துக் கொள்கிறார்கள். அப்படி கருதுவதற்கான நியாயங்களையும் வரலாறு விட்டுச் சென்றுள்ளது.
எனவே இதனை வைத்து ஒரு வெறுப்புணர்ச்சியை தூண்டுவதற்கு எவரையும் அனுமதிக்காதீர்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். நாம் சேர்ந்து பயணிக்க வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது என்பதை இப்போதைக்கு நினைவில் கொள்வோம் தோழர்களே.
+ comments + 2 comments
தமிழ்க்கவி தனது முதல் கட்ட அறிக்கையை இப்பொழுதுதான் பொதுவெளியில் வைத்திருக்கின்றார். அவரது மூலக்கட்டுரையை அவர் நிட்சயம் வெளியே கொண்டுவருவார் என்றே எண்ணத்தோன்றுகின்றது. இன்றய இலத்திரனியல் வெளியில் ஓர் இணையத்தளத்தையோ இல்லை பத்திரிகைக்குப் பொறுப்பாக இருக்கும் பிரதம ஆசிரியர் ஆனவர் எதுவேண்டுமானாலும் செய்யலாம் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய விடயமாகும். ஒரு சில பத்திகளை மட்டும் எடுத்து கட்டுரையின் போக்கை திசைமாற்றிய தமிழ்வின் இணையத்தளத்தின் செய்தி வியாபாரமும் இதற்கு ஓர் உரைகல் என்றே எண்ணுகின்றேன்.
அவரின் மறுப்பினை வெளியிட்டதை வரவேற்கும் அதே வேளையில் அவர்கள் தனக்கான மறுப்பில் எந்த ஒரு இடத்திலும் தவறு நடந்ததற்கு வறுந்துவதாக தெர்யவில்லை.மற்றும் ஞாயவாதிகள் என்று ஆரம்பதிப்பதே அவர் மீதான ஓர் நம்பிககையினத்தையே ஏற்படுத்துகன்றது.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...