Headlines News :
முகப்பு » » "உன்னஸ்கிரிய" போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவோம்

"உன்னஸ்கிரிய" போராட்டத்திற்கு ஆதரவு வழங்குவோம்


கண்டி, உன்னஸ்கிரிய,ஹெயார் பார்க் தோட்டத் தொழிலாளர்களின் முன்னெடுத்துவரும் போராட்டம் இன்று நான்காவதுவது நாளாகவும் தொடர்கின்றது.
பல்வேறு கட்சிகளும், தொழிற்சங்கங்களும், ஜனநாயக அமைப்புகளும் ஆதரவை அழித்து வருகின்றன.
இந்நிலையில், மேற்படி மக்கள் பேராட்டத்துக்கு சிலர் அரசியல் சாயம் பூசி கொச்சைப் படுத்த முற்படுகின்றனர் என செங்கொடிச் சங்கத்தின் பிரதி பொதுச் செயலாளர் எஸ்.ஆர். ஸ்டீபன் தெரிவித்தார்.

உன்னஸ்கிரிய ஹெயார் பார்க் தோட்ட மக்கள் பேராட்டம் இன்னும் தொடர்கிறது. பொது அமைப்புக்கள் பல ஆதரவுதெரிவித்து களத்தில் இறங்கி வருகின்றன.

நான்காவது நாளாக அவர்கள் மேற்கொண்ட பேராட்டத்தை ஆதரித்து புதுத்தாகப் பலரும் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

அதே நேரம் தொழிற் திணைக்கள அதிகாரிகளுடன்தொழிலாளர்கள் பிரதி நிதிகள் கலந்ரையாடல்ளைமேறகொண்டுள்ளனர்.

மேற்படி அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான காணியை தனியார் ஒருவருக்கு ஹோட்டல் நிர்மாணிப்பதற்கு வழங்கப்பட உள்ளதாகவும் இதனால் தாம் தொழிலை இழக்கும் அபாயம் உள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

காணியில் தேயிலைச் செய்கை மேற்கொள்ள முடியாத நிலை காணப்படின் அது பரம்பறையாக வாழ்ந்து வரும் தொழிலாளர் குடும்பங்களுக்கு வழங்கப்படவேண்டும் என்றும் அவர்கள் வேண்டகோள் விடுத்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் பல்வேறு தொழிற் சங்க உரிமைகளையும் வலியுறுத்தி வருகின்றர்.

முற்று முழுதாக தொழிலாளர்கள் தமது முயற்சியில் ஊண் உறக்கமின்றி போராட்டம் நடத்தும் போது சிலர் இது தமது போராட்டம் என்று காட்டும் வகையில் அறிக்கைகளை வெளியிட்டு வருவதாகவும் அப்படி இதில் அரசியல் கலப்படம் இல்லை எனவும் பிரதிப்பொதுச் செயலாளெர் குறிப்பிடுகின்றார்.

போராட்டத்துக்கு போதிய ஆதரவை வழங்குவது நமது கடமை. களத்திற்கு வருபவர்கள் உங்களால்  முடிந்தளவு மருந்து பொருட்கள்  உணவு பொருட்கள் குளிர்கால ஆடை. குறைந்த பட்சம் இரண்டு பெனடோல்  ஆக கொண்டுவந்தூலும் பெரும் உதவியாக இருக்கும் என்று அங்கிருப்பவர்கள்கோரிக்கை விடுத்துள்ளார்கள். தமிழ் இளைஞர்களின் ஒற்றுமை பலத்தை .மலையக இளைஞர்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை. உன்னஸ்கிரியவில் எழுச்சி படுத்துவோம்.

செங்கொடி சங்கம் சந்திப்பு
தோட்டங்களிலுள்ள தொழிற்சங்கங்களின் அனுமதி இல்லாமல் அரச தோட்ட காணியை தனியாருக்கு வழங்கப்போவதில்லை என்ற உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளதே தவிர மக்கள் போராட்டத்தின் மூலம் முன்வைத்த கோரிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடப்படவில்லை  அந்த பேச்சுகளுக்கான திகதியும் அரசாங்கம் அறிவிக்கவில்லை என செங்கொடி சங்கத்தின் செயலாளர் மேனகா கந்தசாமி தெரிவித்தார்.

கண்டி உன்னஸ்கிரிய ஏயார்பார்க் தோட்ட மக்கள் கடந்த மாத இறுதியில் ஆரம்பித்து கடந்த மூன்று நாட்களாக நடாத்தி வரும் சத்தியாகிரக போராட்டத்தை தொடர்ந்து கண்டி மாவட்ட தொழில் திணைக்கள ஆணையாளர் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார். அதன் படி நேற்று கொழும்பிலுள்ள அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சு அலுவலகத்தில் அமைச்சர் பிரதிநிதி ஒருவருக்கும், இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனத்துக்கும் ஆர்ப்பாட்டகாரர்களின் பிரதிநிதிகளுக்குமிடையில் நேற்று நடைபெற்றது.

அதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதிநிதிகளாக கலந்துகொண்ட இலங்கை செங்கோடி சங்கம் மற்றும் கூட்டு தொழிற்சங்கங்களின் சம்மேளனம் ஆகியன கலந்து கொண்டிருந்தன. தொழிலாளர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம், அவர்கள் முன்வைத்துள்ள கோரிக்கைகள் தொடர்பில் செங்கொடிச் சங்கப் பிரதிநிதிகள் இதன்போது விளக்கமளித்தனர்.இதையடுத்து,தொழிற்சங்கங்களின்  அனுமதி இல்லாமல் மற்றும் அதோடு சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்து பேசாமல் , தோட்டக் காணிகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படாது என்ற உத்தரவாதம் அரச அதிகாரிகளால் எழுத்து மூலம் வழங்கப்பட்டுள்ளது. செங்கொடி சங்கம் எழுத்துமூலம் கேட்டுக்கொண்டதுக்கிணங்கவே இக்கடிதம் வழங்கப்பட்டது.

மேலும் இரண்டு வாரங்களுக்குள் அமைச்சருடன் பேச்சுவார்த்தை நடத்த திகதி வழங்கப்படும் என சந்திப்பின்போது அறிவிக்கப்பட்டாலும் கடிதத்தில் அந்த விடயம் குறிப்பிடப்படவில்லை என செங்கொடி சங்கத்தின் செயலாளர் மேனகா கந்தசாமி தெரிவித்தார்.

மேலும் எயாபார்க் தோட்டத்தில்  சகல தொழிலாள குடும்பங்களுக்கும் ஆக குறைந்தது 2 ஏக்கர் நிலத்தினை குத்தகைக்கு பிரித்து வழங்க வேண்டும், அரசு இக் காணிகளில,; தொழிலாளர்கள் தேயிலை செய்வதற்கான முன் உதவிகளை (உரம், மருந்து, கன்றுகள் மற்றும் விதைகள்) குறிப்பிட்ட காலம் வரை மானியமாக வழங்க வேண்டும்,இக் காணிகளில் தொழிலாளர்கள் பறிக்கும் கொழுந்தினை அத் தோட்டத்திற்கே சென்று அரசு அல்லது அரச கம்பனிகள் கொள்வனவு செய்ய வேண்டும்,தேயிலை செழிப்பற்ற காலங்களில் மாற்று பயிர்களில் பயன் பெறுமாறு, திட்டம் தயாரிக்கப்பட வேண்டும், குறிப்பிட்ட காலத்திற்குள் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய அனைத்து கொடுப்பனவுகளும் கொடுக்க வேண்டும் போன்ற ஆர்ப்பாட்டக்காரர்கள் கோரிக்கை பற்றி இந்த சந்திப்பில் தெரிவிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும் இந்த மக்கள் போராட்டத்தை தொடர்ந்து நடத்துவதா இல்லையா என மக்களே முடிவெடுக்கவேண்டும் என தெரிவித்தார். இது தொடர்பாக ஆர்ப்பாட்டக்காரர்களிடம் கேட்டபோது நாங்கள் தீர்வின்றி இந்த இடத்தை விட்டு அகலமாட்டோமென தெரிவித்தனர்

Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates