நாட்டில் அபிவிருத்தித் திட்டங்கள் மேற்கொள்ளும்போது அந்த திட்டங்களினால் பாதிக்கப்படுகின்ற மக்களுக்கு உரிய முறையில் நிவாரணம்பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் அக்கறையுடன் செயற்படவேண்டும். 33 ஆண்டுகள் கடந்தும் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தினால்பாதிப்புக்கு உள்ளான கொத்மலை மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்காமை வேதனையளிக்கிறது என தமிழ் முற்போக்கு கூட்டணியின்நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
உமா ஓயா அபிவிருத்தித் திட்டத்தினால் பாதிப்புற்ற மக்களுக்கு உரிய நிவாரணத்தைப் பெற்றுக் கொடுக்கும் யோசனையை முன்வைத்துபதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிரி முன்வைத்த சபை ஒத்திவைப்பு வேளை விவாத்த்தில் கலந்து கொண்டுஉரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
நாட்டில் அபிவிருத்தி திட்டங்கள் முன்னெடுக்கப்படும்போது அந்தப்பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு ஏற்படக்கூடிய நட்ட ஈட்டினைப்பெற்றுக்கொடுத்து நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பாகும். எனினும் கடந்த காலங்களில் இதுமுறையாக முன்னெடுக்கப்படவில்லை. துரித மகாவலி அபிவிருத்தித் திட்டம் இந்த நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பாரிய அபிவிருத்தித்திட்டமாகும். ஆனால் அது நடைபெற்றபோது பாதிப்புற்ற மக்களுக்கு கொத்மலை, நவதிஸ்பன தோட்டக் காணிகள் பகிர்ந்தளிக்கப்பட்டன.இதனால் பரம்பரையாக அந்த தோட்டத்தில் வாழ்ந்த மக்கள் தமது தொழிலை இழந்தனர். 1984 ஆம் ஆண்டு அந்த தோட்டம் பகிர்ந்தளிக்கப்பட்டபோது அங்கு பரம்பரையாக வாழ்ந்துவந்த தோட்ட மக்களின் லயங்களை மட்டும் விட்டு வைத்துவிட்டு ஏனையவற்றை மற்றவர்களுக்கு பகிர்ந்துகொடுத்து விட்டார்கள். இன்று நவதிஸ்பன மொச்சக்கொட்டை மற்றும் கட்டுக்கலைத் தோட்ட மக்கள தமது தொழிலையும் இழந்து, வாழ்விடவசதிகளும் இன்றி மிகுந்த சிரமத்துக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் வருகின்ற விடயம் என்ற வகையில் அதற்கு பொறுப்பான அமைச்சரான ஜனாதிபதியின்கவனத்திற்கு இந்த விடயத்தை பாராளுமன்ற குழு அறையிலே நடைபெற்ற கூட்டத்தில் கடந்த வாரம் முன்வைத்தேன். இப்போது பாராளுமன்றத்மிலும் இந்த விடயத்தை முன்வைக்கிறேன்.
33 வருடங்களுக்கு மேலாக பாதிப்புற்று நிவாரணங்கள் இன்றி தவிக்கும் கொத்மலை,நவதிஸ்பன மக்களுக்கு உரிய நட்ட ஈட்டு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்க இந்த நாடாளுமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனஎனது வேண்டுகோளை முன்வைக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...