இலங்கையில் சமீபகாலமாக இன, மத நல்லிணக்கம் குறித்து மிகவும் காத்திரமான முற்போக்கு பாத்திரத்தை வரும் பௌத்தத் துறவி இவர். கல்கந்தே தம்மானந்த தேரோ. இலங்கையின் மோசமான இனவாத வரலாற்றைக் கொண்ட பிரதேசமான களனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் வரலாற்றுத்துறையில் விரிவுரையாளர். அதுமட்டுமல்ல யாழ் பல்கலைக்கழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த சிங்கள-தமிழ் மாணவர்களுக்கு இடையில் நிகழ்ந்த சண்டை குறித்தும் அவர் எழுதிய கட்டுரை பல இடங்களிலும் பதிவானது. அதில் அவர் தமிழ்த் தரப்புக்கு ஆதரவாக கருத்துக்களை வெளியிட்டுவிட்டார் என்று ஏற்கெனவே சிங்களப் பேரினவாதத் தரப்பில் கொதித்துக்கொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இந்த கருத்து...
வடக்கில் உள்ள புத்த சிலைகளை ஒரு ஆக்கிரமிப்பு சிலைதான் என்று கூறும் துணிச்சல் இதுவரை எந்த பௌத்த பிக்குவும் இதற்கு முன்னர் கூறியதாக அறிந்ததில்லை. அவர் கூறியவற்றின் சாராம்சம்.
(22:30 இலிருந்து ஐந்து நிமிடங்கள் சிங்களத்தில் அவர் கூறியவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது.)
(22:30 இலிருந்து ஐந்து நிமிடங்கள் சிங்களத்தில் அவர் கூறியவற்றிலிருந்து தொகுக்கப்பட்டது.)
• தமிழ் மக்கள் தமக்கு இன்னல் கொடுத்த இராணுவம் தமது முகாம்களில் வைத்திருந்த சிலையாகத் தான் புத்தரையும் பார்க்கப் பழகியிருக்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
• 30 வருடத்துக்கு முன்னர் 10 வயதாக இருந்த ஒரு சிறு பிள்ளை இன்று 40 வயதாக இருக்குமானால் இந்த 30 வருடமும் புத்தர் சிலைகள இராணுவ ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட வந்த ஒன்றாகவே பார்க்கிறார்கள். ஆக்கிரமப்பின் இன்னொரு வடிவமாகவே புத்தர் சிலைகளைக் காண்கிறார்கள்.
• முகாம்கள் அகற்றப்படும் போது இந்த சிலைகளுக்கு என்ன அங்கு வேலை. அவற்றை பராமரிக்கவாவது முடியுமா. அந்த சிலை நாளை பராமரிப்பற்று சிதையும் போது அதை சகிக்கத் தான் முடியுமா? பின்னர் ஏன் முகாம்கள் அகற்றப்படுபோது கூடவே புத்த சிலைகளையும் இடம்பெயர்த்து செல்லக்கூடாது. இதனை அரசின் ஒரு கொள்கையாக பின்பற்ற வேண்டும்.
• தமிழர்களைப் பொறுத்தளவில் யுத்தத்தில் வெற்றி பெற்ற தரப்பில் புத்தர் இருக்கிறார். தம்மை தோற்கடித்த தரப்பில் இருக்கிறார்.
• புத்தர் கூறுகிறார் அசுத்தமடைந்த நீர் நிலையில் தொடர்ச்சியாக நன்னீரை ஊற்றுங்கள் அப்போதுதான் ஒரு கட்டத்தில் முழுவதும் தூய்மையாகும் என்கிறார். அதுபோல பொறுமையோடும், அர்ப்பணிப்போடும் இது விடயத்தில் பணிபுரியுங்கள்.
• புத்தர் சிலையை நீங்கள் நிறுவி, அதனை அழகுபடுத்திப் பார்க்கலாம் எப்போதெனில்; அதனை வணங்கி பேணுவதற்கான ஒரு சமூகக் கூட்டம் இருக்குமாயிருந்தால் மாத்திரம் தான்.
• இன்னொரு மதத்தை பின்பற்றும் சமூகக் கூட்டம் இருக்கும் இடத்தில் மிகக் குறைந்த தேவையே உடைய இன்னொரு மதக் கூட்டம் மற்றவரின் மத ஸ்தலங்களை விட அதிக பொருட்செலவில் விசாலமாக கட்டுவதன மூலம் அவர்களை சிறுமையாக ஆக்குவது சரியானதா. தம்மீதான ஆக்கிரமிப்பு அதிகாரத்துவத்தை விளம்பரப்படுத்தவே இதனை மேற்கொள்கிறார்கள் என்று அம்மக்கள் நினைக்கத் தானே செய்வார்கள்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...