மத்திய மாகாணத்தில் 550 பட்டதாரிஆசிரியர்கள் நியமனத்தில் தமிழர்களில் இரண்டு பேரேநியமனம் பெற்றுள்ளனர். இஸ்லாமியர்களில் 50 பேர் நியமனம் பெற்றுள்ளதோடு மிகுதி அனைவரும் பெரும்பாண்மை சமூகத்தை சேர்ந்தவர்களாவார்கள். இது இனவாதத்தைக்காட்டுவதாக மேலோட்டமாக தோன்றினாலும் எமக்கு கிடைத்த தகவல் வேறுமாதிரியாக உள்ளது.இது தொடர்பில் மலையக ஆசிரியர் முன்னணியின் ஆலோசகரும் மத்தியமாகாணசபை உறுப்பினருமான திரு.இராஜாராமை தொடர்புகொண்டு வினவியபோது எமக்கு கிடைத்த தகவல்கள் விசனத்தை ஏற்படுத்தியுள்ளன.
மத்திய மாகாண தமிழ் கல்வி பிரிவு சமூக கடமைகளை தட்டிக்கழிக்கின்றதா என எண்ணத்தோன்றுகின்றது.ஏனெனில் உண்மை நிலைமைகளை அறிய திரு.இராஜாராம் மத்தியாமாகாண ஆளுநரையும்,மாகாண செயலாளரையும் தொடர்புகொண்டப்போது அவர்கள் பின்வரும் விபரங்களை தெளிவு படுத்தியுள்ளனர் “எமக்கு கிடைத்த விண்ணப்பங்களுக்கு அமைவாகவே நாம் ஆசிரிய நியமனங்களை வழங்கியுள்ளோம் போதிய அளவிற்கான விண்ணப்பங்கள் கிடைக்க வில்லை.தமிழ் பிரிவு ஒன்று ஏற்படுத்தி அதற்கு உதவிசெயலாளர் ஒருவரையும் மேலதிக மாகாணபணிப்பாளர் ஒருவரையும் நியமித்துள்ளோம்.
ஆகவே இதற்கான பொறுப்புகளை இவர்களே ஏற்க்க வேண்டும்” என்ற ரீதியில் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.தமிழ் கல்வி பிரிவு சரியான முறையில் இயங்க முடியாமைக்கான காரணங்களை கண்டு அவற்றைக்களையாதவரை எமது கல்வி சமூகம் வளர்ச்சியுறுவது கடினமே.ஆளுநரினதும்,செயலாளரினதும் கவனத்திற்கு கொண்டுவந்த வகையில் போதிய தமிழ் பட்டதாரி ஆசிரியர்களை இணைத்துக்கொள்ள இணக்கம் எட்டப்பட்டுள்ளது, இதனடிப்படையில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டு டிசம்பர் மாத இறுதியில் நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.மத்திய மாகாண பட்டதாரிகள் விழிப்பாக இருந்து இந்நியமனத்தினை பெற்றுக்கொண்டு மலையக சமூகத்தை சிறந்த கல்வி சமூகமாக மாற்ற முன்வரவேண்டும்.
”கல்வியால் இணைவோம்,சமூகத்தைக் கடைத்தேற்றுவோம்”
சி.இரவிந்திரன்.
பொதுச்செயலாளர்.
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...