Headlines News :
முகப்பு » » தலைமைத்துவத்தை தேடும் தலைநகர தமிழ் வர்த்தக சமூகம்

தலைமைத்துவத்தை தேடும் தலைநகர தமிழ் வர்த்தக சமூகம்இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் தமக்கான நிலையான அரசியல் தலைமைத்துவங்களை இது வரை பெறவில்லை. காலத்திற்கு காலம் தமது இருப்பு தொடர்பான கேள்விகள் எழும்போதெல்லாம் தேர்தலில் எந்த வித எதிர்ப்பார்ப்புகளும் இல்லாது எவரையாவது தெரிவு செய்தால் போதும் என்ற ரீதியிலேயே வாக்குகளை அளித்து வருகின்றனர் தமிழர்கள்.

இந்நிலையில் கடந்த வாரம் தலைநகரில் தமிழ் வர்த்தக சமூகத்தினருக்கு இடம்பெற்ற ஒரு சம்பவம் குறித்து ஆளும் தரப்பிலுள்ள எந்த தமிழ் அரசியல் பிரதிநிதிகளும் வாய் திறக்காதது ஆச்சரியத்தை அளிக்கின்றது. தலைநகர தமி-ழர்கள் மட்டுமன்றி நான் முழுத்தீவுக்குமான அரசியல்வாதி என்று கூறும் அமைச்சர் மனோ கணேசன் உட்பட அமைச்சர் திகாம்பரம், இராஜாங்க அமைச்சர் ராதாகிருஷ்ணன், மற்றும் நல்லாட்சிக்கான அரசாங்கத்தின் தமிழ் எம்.பி.க்கள் எதிர்கட்சி தலைவராக இருக்கும் சம்பந்தன் எவருமே இந்த சம்-பவம் குறித்து அலட்டிக்கொள்ளவில்லை.

என்ன நடந்தது?

கடந்த வாரம் தலைநகர் கொழும்பில் சில தமிழ் வர்த்தகர்களின் கடைகள் சுங்கத்திணைக்களத்தினால் திடீர் சோதனைக்குட்படுத்தப்பட்டதோடு கடை-களும் அதன் விசேட பிரிவுகளும் சீல் வைக்கப்பட்டன. இச்சம்பவங்கள் வர்த்த-கர்களை அதிர்ச்சியடைய செய்திருந்தன. குறிப்பாக ஆடையகங்கள் மற்றும் பிரிவுகளே இவ்வாறு சீல் வைக்கப்பட்டன.தாம் இறக்குமதி வரி சரியாக செலுத்தியிருந்த போதிலும் இவ்வாறு அதிகாரிகள் நடந்து கொண்டமை அவர்-களை விசனத்தில் ஆழ்த்தியிருந்தது. மேலும் இத்துறையில் பல வருடகால அனுபவத்தை கொண்ட வர்த்தக ஸ்தாபனங்களும் இவ்வாறு சீல் வைக்கப்பட்-டிருந்தமையானது தமக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்ததாக அவர்கள் தெரி-வித்தனர்.

சட்டரீதியாக வரிகளை செலுத்தியிருந்தும் அதிகாரிகள் இவ்வாறு நடந்து கொண்டதை ஏற்றுக்கொள்ள முடியாது அப்படி ஏதாவது தவறுகள் இருப்பில் அதிகாரிகள் எம்மீது வழக்கு போட்டிருக்கலாமே எதற்கு சீல் வைத்தார்கள் என வர்த்தகர்கள் கேள்வி எழுப்பியிருந்தனர்.

இதே வேளை,கடந்த காலங்களில் இவ்வாறு இறக்குமதி வரிகள் செலுத்தாத பெரும்பான்மை இன வர்த்தக ஸ்தாபனங்கள் சோதனையிடப்பட்டபோது அவர்-களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது மட்டுமன்றி அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கைகளே மேற்கொ்ள்ளப்பட்டிருந்தன. ஆனால் எக்காரணம் கொண்டும் கடைகளுக்கு சீல் வைக்கப்படவில்லை என தமிழ் வர்த்தகர்கள் சுட்டிக்காட்-டினர்.

தமிழர்களே பிரதான வர்த்தகர்கள்

தலைநகரை பொறுத்தவரை ஆடையகம், தங்கம்,இரும்புப்பொருட்கள்,கட்டிட கட்டுமானப்பொருள் உணவுப்பொருட்கள் வர்த்தகத்தில் தமிழர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். பிரதான வீதி,செட்டியார் வீதி,கதிரேசன் வீதி, கொட்டாஞ்-சேனை ஆகிய பகுதிகளில் பெருமளவான தமிழ் வர்த்தகர்களே இருக்கின்-றனர். மட்டுமன்றி இவர்களின் வர்த்தக ஸ்தாபனங்களில் சுமார் ஒரு இலட்சத்-திற்கும் அதிகமான மலையக இளைஞர் யுவதிகள் கடமையாற்றி வருகின்-றனர். இவ்வாறான நிலைமையில் தமிழ் வர்த்தக ஸ்தாபனங்களை முடக்குவதால் உரிமையாளர்கள் மட்டுமன்றி அதில் கடமையாற்றும் பலரின் நிலை கேள்விக்குறியாகலாம்.

என்ன காரணம்?

தமிழ் வர்த்தகர்கள் சிலரின் கடைகள் சீல் வைக்கப்பட்டமைக்கு தனிப்பட்ட பழிவாங்கல் காரணம் எனஇப்போது தகவல்கள் கசிந்துள்ளன.அதாவது கடந்த மாதம் பெறுமதி சேர் வரிக்கு (வற்) எதிராக தலைநகரில் பல வர்த்தகர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். இதை தடுப்பதற்கு சில தமிழ் அரசியல் பிர-முர்கர்கள் முயன்றும் அது வெற்றியளிக்கவில்லை. இந்நிலையில் குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வர்த்தகர்களை பழிவாங்கும் நோக்கில் இவ்வாறான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக வர்த்தக சமூகத்தினர் தெரிவிக்கின்றனர்.இதற்கு பின்புலமாக தமிழ் அரசியல் பிரதிகள் கூட இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

வாய் திறக்காத தமிழ் அரசியல்வாதிகள்

தமிழர்களின் வர்த்தக கேந்திரமாக இருக்கும் தலைநகரில் தமிழ் வர்த்தகர்க-ளுக்கு எதிராக இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் எந்த ஒரு தமிழ் அரசியல் பிரமுகர்களும் வாய் திறக்கவில்லை.நல்லாட்சி அரசாங்கத்தை உருவாக்-கினோம் இந்த அரசாங்கத்தில் தமிழர்களுக்கு விடிவு காலம் என முழங்கி வருபவர்களும் இச்சம்பவம் குறித்து எவ்வித கருத்துக்களையும் தெரிவிக்க-வில்லை. இத்தனைக்கும் தலைநகர் கொழும்பை பிரதிநிதித்துவப்படுத்தும் சிறுபான்மை இன அமைச்சர் ஒருவரும் எம்.பிக்கள் முஸ்லிம்கள்) இருவரும் இருக்கின்றனர்.

தலைமைத்துவம் இல்லையா?

தமிழ் வர்த்தகர்களுக்கு ஏற்பட்ட இக்கதியை பற்றி எவருமே கதைக்க முடி-யாத நிலை இருக்கும் போது எதிர்காலத்தில் தமது வர்த்தக செயற்பாடுகளை எங்ஙனம் இடையூறின்றி கொண்டு செல்வது என்ற கேள்வி இப்போது தலை-நகர் வாழ் வர்த்தகர்களுக்கு ஏற்பட்டுள்ளது.இது ஒரு வித அச்ச நிலைமை என்றும் கூறலாம். மலையகத்தைப்பொறுத்தவரை அதிகாரம் இருந்த காலத்தில் தமிழ் வர்த்தகர்களுக்கு எந்த பிரச்சினை ஏற்பட்டாலும் அங்கு இ.தொ.கா. செயலாளர் ஆறுமுகனின் பிரசன்னம் நிச்சயம் இருக்கும். சம்பவ இடத்திற்கு வருதல் , அதிரடியாக முடிவுகளை எடுத்தல், உயர்பீடத்திடம் நேரடி-யாக தொடர்புகளை ஏற்படுத்தி தீர்வுகளை பெற்றுத்தரல் போன்றவற்றில் அவரின் இடத்தை எவரும் நிரப்ப முடியாது தான். ஆனால் தலைநகர் கொழும்பில் இ.தொ.காவின் செல்வாக்கு இல்லாத காலகட்டத்திலும் சில பிரச்-சினைகளை ஆறுமுகன் எந்த பிரதிஉபகாரமும் பாராது தீர்த்து வைத்திருந்தார். ஆனால் இப்போது அந்த வெற்றிடத்தை நிரப்ப பல பேர் முயன்றும் முடியாத நிலைமையே உள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் வரிசையாக அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சரும்,எம்.பி.க்களும் இருந்தாலும் அவர்களின் வர்த்தக செயற்பாடுகளும் தலைநகரில் இடம்பெற்றுக்கொண்டிருந்தாலும் இவ்விட-யத்தில் அவர்களால் கைக்கட்டி வாய் பொத்தி இருக்க வேண்டிய நிலைமையே தோன்றியுள்ளது.

சிந்திக்கும் வர்த்தகர்கள்

இப்போது தலைநகர் வாழ் தமிழ் வர்த்தகர்கள் சிந்திக்க ஆரம்பித்திருகின்றனர். நாளை ஏனையோரும் இவ்வாறு தனிப்பட்ட பழிவாங்கல்களுக்கு முகங்கொ-டுக்கலாம் என யோசிக்கும் அவர்கள் இச்சம்பவத்தின் பின்னணி என்ன என்பது தொடர்பாக தகவல்களை திரட்டத்தொடங்கியுள்ளனர்.இதற்காக அவர்கள் ஊட-கங்களையும் அணுகியுள்ளனர். தலைநகர் தமிழ் வர்த்தகர்கள் தமது வர்த்தக சாம்ராஜ்யத்தை அங்கு நிலை நிறுத்தி வந்தாலும் இலட்சத்திற்கும் மேற்பட்-டோருக்கு தொழில் வாய்ப்பினை வழங்கிக்கொண்டிருக்கின்றனர்.அவர்களின் குடும்பங்களை வாழ வைத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்கள் அனைவருமே மலையகத்தை சேர்ந்தவர்கள்.தேர்தல் காலத்தில் தமிழ் வர்த்தகர்களின் ஆலோசணைப்படி தமது இருப்பிடம் வந்து தமிழ் பிரதிநிதிகளுக்கு வாக்களித்த இளைஞர் யுவதிகளும் இப்போது சில உண்மைகளை உணரத்தொடங்கியுள்ளனர் எனலாம்.தாம் வாக்களித்த பிரதிநிதிகள் தமது வாழ்வாதாரத்திற்கு துணையாக இருப்போருக்கு ஏற்பட்ட இடையூறுகள் தொடர்பில் வாய் திறக்காமலிருக்கின்றார்களே என்ற வேதனையும் இல்லாமலில்லை. எது எப்படியோ பிரச்சினை நேரத்தில் அவ்விடத்திற்கு வந்து அதை அதிரடியாக தீர்த்து வைக்கும் ஒரு தலைமையை இப்போது தலைநகர் வாழ் தமிழர்கள் எதிர்ப்பார்த்துள்ளனர். அவர் யார் எப்போது வருவார் அவரை எப்படி வர வைப்பது என்ற சிந்தனையே அவர்களின் மத்தியில் இப்போதைக்கு இருக்கின்றது.

தலைவர் வருவாரா?

சி.சி.என்

நன்றி  சூரியகாந்தி
Share this post :

Post a Comment

இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...

 
Support : Copyright © 2013. நமது மலையகம் - All Rights Reserved
Template Created by Creating Website Published by Mas Template
Proudly powered by Blogger |2012 Templates