மா.பா.சி. கேட்டவை (தினக்குரல் பதிவுகள்)" எனும் நூலை புதிய பண்பாட்டுத்தளம் வெளியிடுகிறது.இந் நூல் வெளியீடும் நூலாய்வும் கொழும்பு தமிழ்ச் சங்கம், சங்கரப்பிள்ளை மண்டபத்தில், 17.04.2016 மாலை 4.30 மணியளவில் நடைபெறவுள்ளது. வேறுபட்ட பல அமைப்புகளது பரிமாணங்களை இந்நூலில் தரிசிக்க இயலுகிறது. கூட்ட உரைகளின் விவரணம், பத்திரிகைத் தமிழ், இலக்கிய ரசனைப்பாங்கு என்பவற்றின் சங்கமிப்போடு கூடிய இந்த நூலின் நடையியல் தமிழுக்குப் புதிது; 2007 - 2014 ஆகிய ஆண்டுகளுக்கு இடைப்பட்டதான காலகட்டத்தின் எமது கலை - இலக்கிய - சமூக அரங்குகளின் இயங்காற்றல் - செல்நெறிப் பரிணமிப்புகளை வெளிப்படுத்தும் வடிவத்தினாலும், புதிய பாணி நடையியல் வீச்சுக் காரணமாயும் இந்த நூல் பெரும் கவனிப்புக்குரியது. இலங்கையிலுள்ள 844 ஆளுமைகளின் விவரிப்புகள் இந்நூலின் பெயர்ச்சுட்டியில் இடம்பெறுவது தனிச் சிறப்பு.
தலைமை: பேராசிரியர் சபா ஜெயராசா, வெளியீட்டுரை நீர்வை பொன்னையன் (ஆசிரியர் குழு, புதிய தளம்) நூலறிமுகம்: எம்.மதன்ராஜ் (சமூக செயற்பாட்டாளர்) நூலாய்வு: வ.செல்வராசா (உப பீடாதிபதி, ஶ்ரீ பாத கல்வியியல் கல்லூரி) கருத்துரை: ந.இரவீந்திரன் (பதிப்பாசிரியர்) வீ.தனபாலசிங்கம் ('தினக்குரல்' முன்னாள் ஆசிரியர்) ஏற்புரை: மா.பாலசிங்கம் (நூலாசிரியர்) நன்றியுரை: ஜெ.லெனின் மதிவானம்.
அனைவரும் வருக!
* 500 பக்கங்களுக்கு மேற்பட்ட இப் புத்தகத்தின் விலை 900/-
Post a Comment
இங்கே உங்கள் கருத்தை பகிரலாம்...